Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இவன் என் ராவணன்

Messages
7
Reaction score
5
Points
1
"இவன் என் ராவணன்"

பவி எங்கடி இருக்க நேத்துல இருந்து உனக்கு அழைப்பு கொடுக்கறேன். நீ எடுக்கவே இல்ல. உன் கைபேசிய எங்க வச்சிருந்த என்று அந்த பக்கம் புலம்பிக்கொண்டு இருந்தாள் சூர்யா. இரு இரு மா என்னை பேசவிடு. நான் இப்போ இலங்கைல இருக்கேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஒருமுறை தனியா சுத்தி பார்க்கணும் போல இருந்துச்சு, இலங்கைக்கு வரணும்னு நிறைய ஆசை. உன்கிட்ட சொன்னா நானும் வரேன்னு சொல்லுவ. அதான் நான் மட்டும் வந்தேன். இப்போ நான் ராவணன் நீர்வீழ்ச்சின்னு ஒன்னு இருக்கு அங்க இருக்கேன். ரொம்ப அழகா டி. இந்த காத்து, தண்ணியோட சத்தம் அதோட அழகு அப்பா, அப்படியே இங்கயே இருந்துடனும் போல இருக்கு என்று மகிழ்ச்சியுடன் தோழியிடம் பேசியபடியே நடந்தவளின் கால்களில் ஏதோ உறுத்தியது. எடுத்துப்பார்த்தாள். அது ஒரு ஆண்கள் உபயோகிக்கும் பணப்பை. அவளை சுற்றிலும் அருகில் யாரும் இல்லை. சிறிது தூரத்தில் ஒரு சிலர் இருந்தார்கள். அழைப்பை துண்டித்துவிட்டு அதை திறந்து பார்த்தாள். ஒரு சிறு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இருந்தது. பெயரை படித்தாள்.

இ-ல-ங்-கே-ஸ்-வ-ர-ன்..​
 

New Threads

Top Bottom