Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன்னை எதிர் பார்த்தேன்

Bharathi Kannan

New member
Messages
1
Reaction score
0
Points
1
வணக்கம் நண்பர்களே,

இது எனது முதல் கதையாகும்.தவறுகள் இருந்தால் திருத்த உதவுங்கள்.

"ஏய் ஓடாத பாரு நில்லு" கண்ணில் துணியை கட்டிக் கொண்டு தேடினான் கார்த்திக் தன் ஒரே தங்கையான பார்கவியை. "அண்ணே இங்கே இங்கே" என்றவாறு அவனை சுற்றி சுற்றி ஓடியது எட்டு வயதேயான சின்ன சிட்டு. "பார்கவி அடியே எங்க போன? கிளம்பு. உங்க அப்பா ஃபோன் பண்ணிட்டாருடி. கிளம்பனும்". "ம்ம்ம்" என்று தன் தமையணைப் பார்த்து " அண்ணே நான் கிளம்புரேன். அம்மா கூப்பிடுராங்க. கவி அடுத்த விடுமுறை நாட்களில் சீக்கிரம் வந்துருவியா?". தன் தங்கையைப் பார்த்து பாசமாக கேட்டான். "ம்ம்ம்" என்று தன் அன்னையை நோக்கி ஓடினாள் பார்கவி. கார்த்திக் மற்றும் பார்கவி இருவரும் தேன்மொழி மற்றும் ராஜன் தம்பதியரின் குழந்தைகள். தேன்மொழியின் அக்கா பரவதத்திற்கு குழந்தை இல்லாத காரணத்தால் தனது முதல் குழந்தையான கார்த்திக்கை பிறந்த 3 நாட்களில் தனது கணவரின் சம்மதத்துடன் தத்து கொடுத்து விட்டார்.

.............................................................................

சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் ஆஃபீஸில் வந்து நின்றது அந்த பேருந்து. அதில் இருந்து இறங்கிய ஆறாடி இரண்டு அங்குலம், நல்ல சிவந்த நிறம், கூரான பார்வை, டிப்டாப்பான உடை, பார்த்ததும் மரியாதை தரும் வகையில் இருபத்தைந்து வயதான இளைஞன் அந்த கலெக்டர் அலுகத்தினுள் நுழைந்தான். அங்கே ஒரே பரபரப்பை சிரித்து கொண்டே அங்கு உள்ள டவாலியிடம் "என்ன ஆச்சு ஏன் ஆஃபிஸே அஹல்லோலப் படுது. என்ன விஷயம் என்று வினவ " அதை ஏன் கேட்கிறீங்க. இன்னைக்கு புதுசா கலெக்டர் வருவார். அது தான் எல்லோரும் அவரை பார்க்க காத்திருக்கிறோம். "ஓஹோ" என்றவாறு அவன் அலுவலகத்தினுள் சென்றான். " ஹே நில்லு நீ.......நீங்க யாரு? எதுவுமே சொல்லாம உள்ளே போரிங்க?". அவன் பார்த்த கூர்மையான பார்வையில் டவாலியின் வாய் " புதுசா வந்த அதிகாரி" என்று முனுமுனுக்க " மிஸ்டர். சிவகுமார்" என்று கூற அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் "சார்......." என்று இழுக்க " நான் சார்ஜ் எடுக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் உங்கள் வேலையை பார்க்க போரீங்களா?" என்று கூறி டவாலியிடம் பார்வையைத் திருப்பினான். "சார். என் பெயர் முத்து கிருஷ்ணன். இங்கு இரண்டு வருஷமாக டவாலியா இருக்கிறேன்" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான். "சரி வாங்க வேலையை பார்க்கலாம்" என்று கூறிக்கொண்டே தனது அறையை நோக்கிச் சென்றான். தனது மேஜையில் உள்ள கோப்புகளில் கவனத்தை செலுத்திக் கொண்டு இருந்தவனிடம் " சார்......" என்று தன் தலையை சொரிந்து கொண்டே " எனக்கு ஒரு சந்தேகம் சார் " என்க சிரித்து கொண்டே "கேளுங்க" என்றான். " சார் கவர்மெண்ட் வண்டி இருக்கும்போது ஏன் பேருந்து வந்தீங்கனு....". "தெரியனுமா"என்க ஆம் என்று சொல்லும் வகையில் தலையை ஆட்டினான். " உங்கள் எல்லோரைப் பற்றி தெரிந்து கொள்ள தான். தெரிந்தும் கொண்டேன்" என்று கூற டவாலிக்கு வேர்த்தது.​
 

New Threads

Top Bottom