Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன்னை எழுதிய பின்பே

MANI EZHILAN

New member
Messages
11
Reaction score
3
Points
1
என்னை எங்கிருந்தோ
இயக்குபவளே

கண்மூடிப் படுத்திருந்தால்
கனவாய் வந்து
என்னை உறங்கவிடாமல்
செய்பவளே

ஐம்புலன்களை
அடக்கி ஆளும்
வித்தையைக்
கற்றுக்கொடுத்து
ஐம்பூதங்களையும்
கவிதைக்குள்
அடக்கும் மந்திரத்தைச்
சொல்லிக்கொடுத்து

என்னை அசைக்கமுடியா
கவியரசனாக மாற்றிய
மங்கையே

முகத்தில் புகம் புதைத்து
கண்ணீர் வழிய கவிழும்
என் தலையின் பின்புறத்தை
தட்டி எழுப்பி
நீதானடா என் தலைமகன்
தலை கவிழக்கூடாது
தலைநிமிர்ந்து செல்
என்று தன்னம்பிக்கை
கொடுப்பவளே

எடுத்த எடுப்பிலே
என்னை உயரத்திற்கு
அனுப்பிவிட்டு
அன்னாந்து பார்த்து
என்னழகை ரசிப்பவளே

என் கருத்தை
எதிர்மறை இன்றி
ஏற்றுக்கொள்ளும்
ஆண்கள் விரும்பும்
நன்பனாய் என்னை
உருவாக்கியவளே

கன்னியரின்
கடைவிழியை
மட்டும் பார்
கழுத்தின் கீழே
கவிதையாக மட்டும் பார்
பழகும் விதத்தில்
தோழனாக இரு
பாதுகாப்பில்
தகப்பனாக மாறு
என என்னை
தன் பிள்ளையாய்
பெருமையோடு
ஏற்றுக்கொண்ட
தமிழன்னையே

ஒவ்வொரு நாளும்
என் தொடக்கமும்
என் முடிவும்
உன்னை எழுதியபின்பே
நிறைவடைகிறது...

கவிஞர் க.மணிஎழிலன்
 

MANI EZHILAN

New member
Messages
11
Reaction score
3
Points
1
நான் இதை
நம்பிக்கைத் துரோகம்
என்கிறேன்
நீங்கள் இதை
ராஜதந்திரம் என்கிறீர்கள்

நான் இதை
தற்பெருமை
என்கிறேன்
நீங்கள் இதை
வியாபார யுக்தி
என்கிறீர்கள்

நான் இதை
தலைக்கணம்
என்கிறேன்
நீங்கள் இதை
மோதாவித்தனம்
என்கிறீர்கள்

நான் இதை
பச்சோந்தி
என்கிறேன்
நீங்கள் இதை
சமயோசிதபுத்தி
என்கிறீர்கள்

நான் இதை
குழப்பவாதம்
என்கிறேன்
நீங்கள் இதை
அரசியல்வாதம்
என்கிறீர்கள்

நல்லதை கெட்டதாகவும்
கெட்டதை நல்லதாகவும்
நம்மை முட்டாளாக்கும்
முரண்பாடுகளுள் மூழ்கி
தொலைந்துபோகும்
இந்த உலகத்திடம்
எடுத்துக் கூறுங்கள்

மாற்றுச் சிந்தனையில்
மட்டுமே மாற்றம்
நிகழும் என்பதை....
 

New Threads

Top Bottom