Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஊஞ்சல்

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்


அத்தியாயம் 10




தன் அங்கம் எதிலும் பொட்டு தங்கம் இல்லாமல் ஏழ்மையை அடையாளமாக போர்த்தி தன் எதிரே நின்றிருந்த செண்பாவை நிமிர்ந்து பார்த்தார் சக்ரவர்த்தி .



அடக்கி வைத்த அழுகையை அணை உடைந்த வெள்ளமாக கண்களில் பெருக விட்ட செண்பா " ஐயா ! என் புருசன் கை கால் விளங்காம கட்டிலே கதின்னு படுத்த படுக்கையாகிடக்காரு. பீமூத்திரமெல்லாம் நான் தான் அள்ளறேன். குடும்பம் கஷ்ட ஜீவனமா இருக்குங்கய்யா. ஐயா பாத்து ஏதாவது பண்ணனும்." என்றாள் கண்களில் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இழையோட.



"இங்க என்ன கொட்டியாகிடக்குது. வந்து கேட்கிறவங்களுக்கு எல்லாம் அள்ளி தர " என்றார் சக்ரவர்த்தி வெற்று சுவரை வெறித்தபடி.



"உங்களுக்காக எம் புருசன் எவ்வளவோ பண்ணியிருக்காரு. அதையெல்லாம் கொஞ்சம் நினைச்சு பாருங்க" என்றாள் செண்பர். அந்த எவ்வளவோ என்ற வார்த்தை பிரயோகம் சற்று அழுத்தமாக உச்சரிக்கப்பட்டதாக சக்ரவர்த்திக்கு தோன்றியது. இல்லைவெற்று பிரம்மையோ என்று கூட அவருக்கு தோன்றியது.



"சரி. அழுவாத! அவன் ஒன்னும் சும்மா எதையும் செய்யலை. எல்லாத்துக்கும் பணம் வாங்கிட்டுத்தான் செய்தான். சிலதுக்கு பேசுனதுக்கு மேலயே கொடுத்திருக்கேன். பிஸ்கட் போடுற கையை நாய் கடிச்ச மாதிரி அவனும் சில சமயம் என்கிட்ட ருந்து மிரட்டிபிடுங்கி இருக்கான்" என்றார் சக்ரவர்த்தி .



"இப்ப எதுனா கொடுங்கள் புண்ணியமா போகும் "



"இந்தா! இப்போதைக்கு இவ்வளவுதான் இருக்கு. வாங்கிட்டு போ. அப்புறம் குஞ்சப்பனிடம் கொடுத்து விடுகிறேன்." என்ற சக்ரவர்த்தி கோட் பாக்கெட்டிலிருந்த பணத்தை கத்தையாக எடுத்து நீட்டினார். அவர் கண்களுக்கு மதிப்பில்லா வெற்று பேப்பர் தான் அது. செண்பாவுக்கோ அது மதிப்பு மிகுந்த பொருள். பணம் தான் ஒருவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது.? குபேரனின் வாகனம் மனிதனாம். வாகனத்தை மாற்றிக் கொண்டே இருப்பது அவனுடைய இயல்பு. அவர் கையிலிருந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவள் வெளியேறினாள்.



அவள் வெளியே போவதை உறுதி செய்து கொண்டவர் "குஞ்சப்பா " என்றார்.



"அய்யா" என்றபடி வந்து நின்றவளிடம் "இனிமே இவளை உள்ளே விடாதே. நான் ஊருல இல்லைன்னு சொல்லி அனுப்பி விடு. சாப்பாட்டை மாடிக்கு கொண்டு வா" என்றார். பேப்பரை படித்து முடித்தவர் அதை மடித்து டீப்பாயில் வைத்து விட்டு மாடிப்படி ஏறி மேலே அவர் அறைக்கு சென்றார்.



பேஸ்டை பிதுக்கி பிரஸ்ஸில் வைத்து பல் விளக்கியவர் வாஷ் பேசினில் நுரையைதுப் பி விட்டு நிமிர்ந்த போது அவர் பின்னால் அவன் நின்று கொண்டிருந்தான். அதே நிர்சலனமற்ற விழிகளோடு அவரை பார்த்து மெல்ல சிரித்தான்.



அவருக்கு குபீரென வியர்த்தது. இரண்டு நாள் நிம்மதியாக இருந்தார். எங்கோ காணாமல் போயிருந்தவன் இப்போது திரும்பவும் வந்து விட்டான். அதுவும் பட்டபகலில்.



அவர் " குஞ்சப்பா! அவன் திரும்ப வந்துட்டான்!”என்று அலறினார். அவர் கையிலிருந்த பிரஷ் நழுவி விழுந்தது.



தடதடவென மாடிப்படி ஏறி ஓடி வந்த குஞ்சப்பன் அவரைத் தவிர அறையில் யாரையும் காணாமல் திகைத்து நின்றான்.



அவனைப் போலவே அவரும் திகைப்போடு தான் நின்று கொண்டிருந்தார்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 11


அது ஒரு வெள்ளி கிழமை. டாக்டரும் மோகனும் டிவியை மெளனமாக்கிவிட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தனர். டாக்டர் பேப்பரை கவனமின்றி புரட்டி கொண்டிருந்தார். தேவியின் உடல்நிலை சீர்கெட துவங்கியதும் வீட்டில் இயல்பு நிலை காணாமல் போய் டிவி பார்க்கும் நினைவு கூட யாருக்கும் வருவதில்லை. வீட்டை சுற்றிலும் வீட்டுக்கு வெளியேயும் நிலவிய மயான அமைதியை குலைத்த படி ஒலித்தது ஒரு ஹார்ன் சத்தம்.வீட்டுக்கு வெளியே கார் நிற்கும் ஓசையை கேட்டு மோகனும் டாக்டர் ஹரிபிரசாத்தும் எட்டி பார்த்தனர். வெளியே பாஸ்டர் லாரன்ஸ் தன்னுடைய சுப்ரீரியருடன் இறங்கி கொண்டிருந்தார்.பாஸ்டர் லாரன்ஸ் டிரைவரிடம் " காரை அப்படி ஓரமா நிறுத்துப்பா" என்று வீட்டின் அருகே இருந்த காலி இடத்தை காட்டினார்.



டிரைவர் காலி இடத்தை நோக்கி காரைநகர்த்தி செல்ல ஆரம்பித்தான். எட்டி பார்த்த இருவரையும் பார்த்து சினேகமாக லாரன்ஸ் "இவர்தான் என்னோட சுப்பிரியர் சேவியர் .புனித கரங்கள் கிறிஸ்தவ சபையின் செக்ரட்டரி. இந்த மாதிரி நிறைய கேசை டீல் பண்ணியிருக்கார்." என்றார்.



"ஹாலோ" என்று கையை இருவரின் கையையும் குறுக்கினார் சேவியர் . " உள்ளே வாங்க" என்றான் மோகன். சேவியர் கறுத்த தலைமுடியும் வெளுத்த தாடியுமாக உயரத்திலும் சாயலிலும் அமிதாப்பை லேசாக நினைவுபடுத்தினார்.



இருவரும் ஹாலில் இருந்த சோபாவிற்கு உடம்பை கொடுத்தனர். எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தனர் டாக்டரும் மோகனும்.



"லீலா!" என்று குரல் கொடுத்தான் மோகன். பெட்ரூமின் உள்ளேயிருந்து வெளியே வந்த லீலாவின் கண்கள் சிவந்திருந்தன. தலை முடி கலைந்து ஓப்பனையின்றி சாயம் போன ஓவியமாக காட்சியளித்தாள் லீலா.



"பாதர்.! எப்படியாவது என் மகளை காப்பாத்துங்க பாதர் " என்று சேவியரின் காலில் விழுந்து அழ ஆரம்பித்தாள் லீலா.



தன் காலில் விழுந்து அழும்லீலாவை தர்மசங்கடத்துடன் பார்த்தார் சேவியர் . " கர்த்தர் உன்னையும் உன் மகளையும் காப்பாற்றுவார் மகளே!" என்றபடி தன் கண்ணாடியை கழட்டி கையில் வைத்து கொண்டார்.



"எந்திரிலீலா! அவங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வா" என்று அவளை தூக்கினான் மோகன்.



"டீயா ? காபியா? என்ன வேணும்பாதர் " என்றார் டாக்டர் .



" டீ சுகர் கொஞ்சம் கம்மியா" என்றார் சேவியர் .



லீலா தலையசைத்து விட்டு கிசசனுக்குள் நுழைந்தாள்.



அவள் உள்ளே நுழைந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட சேவியர் தன் தொண்டையை செருமிக்கொண்டு "நடந்த எல்லா விசயத்தையும் லாரன்ஸ் சொன்னார். இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க டாக்டர் .? தேவியோட உடல், மற்றும் மனநிலையை பற்றி எனக்கு தெரியணும்." என்றார்.



" அவளோட உடலில் எந்த கோளாறும் பிரச்சனையும் இல்லை. நல்ல தரமான தனியார் ஹாஸ்பிட்டல்ல நான் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்துட்டேன். எல்லாமே நார்மலாத்தான் இருக்கு. மனசுல எந்த பாதிப்பும் இருப்பது போல் எனக்கு தெரியலை. அவளும் நானும் பெட் இவங்க இரண்டு பேரும் வெளியே ஏதாவது விசேசத்துக்கு போனா என்னை நம்பித்தான் தேவியை விட்டுட்டுப் போவாங்க. அவ என்னோட சொந்த பேத்தி மாதிரி. இது என்னோட குடும்பம். சந்தோஷமான எங்களோட குடும்பத்துல இப்ப மாயாவால புயல் வீசுது. இதை நீங்கதான் எப்படியாவது சரி பண்ணனும்.” என்றார் டாக்டர் .



"யார் அந்த மாயா?" என்றார் சேவியர் வெள்ளை உடையில் கண்ணாடியை துடைத்தபடி.



"தேவி மாதிரி அவளும் ஒரு குழந்தை தான். ஆறு வயசுல ஒரு விபத்துல இறந்து விட்டாள். இப்போது தேவியோட உடம்பில் வந்து அது கொலை ன்னு சொல்கிறாள். அவளுக்கு சுத்தமாக தெரியாத இந்தியில் பேசுகிறாள். நைட் படுக்கையிலிருந்து மிதக்கிறாள்." என்றார் டாக்டர் .



" பெட்டிலிருந்து மிதக்கிறாளா?" என்றார் சேவியர் கண்ணாடியை அணிந்தபடி.



"நாங்க மூணு பேரும் எங்க கண்ணால பார்த்தோம். அவ மிதப்பதை." என்றான் மோகன்.



" என்னால் இதை நம்ப முடியவில்லை." என்றார் சேவியர் .



"இந்தாங்க டீ" என்று லீலா டீ டம்ளரை நீட்டினாள். நால்வரும் ஆளுக்கொரு டம்ளரை எடுத்து கொண்டனர்.



டீயை குடித்துவிட்டு Lம்ளரை டீப்பாயில் வைத்த சேவியர் மற்றவர்கள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தார்.



"தேவியை பார்க்கலாமா?" என்றார் சேவியர் .



" வாங்க" என்றாள் லீலா.



நால்வரும் லீலாவினை பின்பற்றி பெட்ரூமிற்குள் நுழைந்தனர். உள்ளே வாடிப் போன கீரையாக துவண்டு கிடந்தாள் தேவி. "தேவி ம்மா " என்று அவளை உலுக்கினாள் லீலா.கண்களை திறந்த தேவி நால்வரையும் பார்க்காமல் வெற்று சுவரை வெறித்துக் கொண்டிருந்தாள்.



அவளது கைகள் மெல்ல திறந்து கொண்டன. அதில் ரத்த சிகப்பான சிலுவை தலைகீழாக தெரிந்தது.



"அந்து கிறிஸ்தவனின் சின்னம்" என்றார் சேவியர் மெல்லிய குரலில்.

 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 12



" அந்தி கிறிஸ்துவின் சின்னம் இது " என்று சேவியர் சொன்னதும் மூவரும் அவரைப் பார்த்தனர்.



"அப்ப இது மாயாவோட ஆவி இல்லையா?" என்றார் டாக்டர் .



"இறந்து போனவர்களின் ஆத்மா வேறு யாராவது உடம்பில் புகுந்தால் அதை விரட்டுவது எளிது.அப்படி நான் நிறைய ஆவிகளை விரட்டியிருக்கிறேன். ஆனால் இந்த சின்னம் புதுசு. ஏசுவோட 12 சீடர்களில் 11 பேர் கொலை செய்யப்பட்டுத் தான் மரணமடைந்தனர். அதில் ஓருவரை சிலுவையில் அறையும் போது என்னை நேராக வைத்து சிலுவையில் அறையாதீர்கள். நான் ஏசுவுக்கு சமமாகி விடுவேன். அதனால் என்னை தலைகீழாக அறையுங்கள்னு சொன்னார். தலை கீழான சிலுவை சாத்தானின் சின்னம். இப்போது தேவி மேல் வந்திருப்பது மாயாவா? இல்லை சாத்தானான்னு குழப்பமாக இருக்கிறது." என்றார் சேவியர் தாடியை சொறிந்தபடி.



"இந்த சிலுவை சின்னத்தை மறந்து விடுங்கள் பாதர். இது மாயாவோட வேலைன்னு நினைச்சு நீங்க ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள்." என்றார் டாக்டர் .



"டாக்டர் .நீங்க இந்த பேய் ஒட்டுறதையெல்லாம் நம்புறீங்களா?" என்றான் மோகன்.



"நமக்கு வேற வழியில்லைமோகன். அறிவியல்பூர்வமாக அவளுக்கு என்ன நடந்ததுன்னு என்னால சொல்ல முடியலை. எனக்கு நடக்கிற விசயமெல்லாம் சுத்தமா புரியலை. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நாம் இருக்கிறோம். இப்போது நாம் இருக்கும் நிலையில் எதையாவது நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போதைக்கு இதை நம்புவோம்." என்றார் டாக்டர் .



"இதுவும் பெயிலியராயிட்டா?" என்றான் மோகன் கேள்விகுறியோடு.



"இது வரை சுப்பிரியர் எதிலும் தோற்றதில்லை. அவரை நம்புங்கள்" என்றார் லாரன்ஸ் உறுதியான குரலில்.



"எங்களுக்கு இப்போதைக்கு உங்களை நம்புவதை தவிர வேறு வழியில்லை. நீங்க என்ன செய்யணுமோ செய்ங்க'’ என்றார் டாக்டர் .



"ஓகே! எல்லோரும் முதலில் இந்த அறையை விட்டு வெளியே போய் ஹாலில் வெயிட் பண்ணுங்கள். லாரன்ஸ் .! நீ போய் டிரைவர் சாம்சனிடம் என்னுடைய பெட்டி ஓன்று இருக்கும். அதை வாங்கி வா" என்றார்.



லாரன்ஸ் வேக நடை போட்டு வெளியேறினார். மூவரும் ஹாலுக்கு வந்து நின்றனர்.



" என்ன பண்ண போறாங்கதேவியை?" என்றாள் லீலா பொங்கி வரும் கண்ணீரை அடக்கியபடி.



"தெரியலைம்மா" என்றார் டாக்டர் செய்வதறியாமல்



சற்று நேரத்தில் டிரைவரும் லாரன்கம் ஒரு சின்ன பெட்டியுடன் நுழைந்தனர்.ஹால் டீப்பாயில் வைத்து அந்த பெட்டியை திறந்த லாரன்ஸ் அதிலிருந்து ஒரு ஜெபமாலையையும் புனித நீர் அடங்கிய ஒரு பாட்டிலையும் எடுத்தார்.



"இந்த ஜெபமாலையை உருட்டிட்டு பைபிள் வாசகத்தை சொல்லிட்டு இந்த புனித நீரை தெளித்தால் போதும். எந்த பேயும் ஓடி விடும்" என்றார் லாரன்ஸ் .



"இந்து பேய், முஸ்லீம் பேய்னு எல்லாத்துக்கும் இந்த முறை அப்ளையாகுமா?" என்றான் மோகன்.



" உசுரோட இருக்கிற வரைதான் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் எல்லாமே ! செத்த பின்னாடி எல்லாருமே பேய் தான் " என்ற லாரன்ஸ் அறைக்குள் டிரைவருடன் நுழைந்தார்.



" தொழில் கத்துக்க டிரைவரையும் கூடவே கூட்டி வந்திருப்பாங்க போல தெரியுது" என்றான் மோகன்.



"போதும் மோகன்! அவங்க என்னமோ பண்ணட்டும். நமக்கு தேவி குணமானாப் போதும்." என்றார் டாக்டர் .



"கொஞ்சம் கிண்டல் பண்ணாம சும்மா தான் இருங்களேன்" என்றாள் லீலா கோபமாக .



"ஸாரிம்மா" என்றான் மோகன்.



சாத்திய அறைக்குள் இருந்து " பர மண்டலத்திலிருக்கும் என் பிதாவே,!" என்று மெல்லிய குரலில் சேவியரின் குரல் கேட்க ஆரம்பித்தது.



கொஞ்சம் கொஞ்சமாக சேவியரின் குரலில் டெசிபல் ஏற ஆரம்பித்தது.



"போசாத்தானே! போய் விடு" என்று உரத்த குரலில் சேவியர் கத்துவது வெளியே நின்றவர்களின் காதுகளில் தெளிவாக விழுந்தது. தேவியின் கரடு முரடான குரல் ஓங்காரமாக இந்தியில் ஓலிக்க ஆரம்பித்தது.



" இதை என்னால கேட்க முடியவில்லை. நான் வெளியே போகிறேன்" என்றார் டாக்டர் .



"நானும் வருகிறேன் டாக்டர் " என்றான் மோகன்.



இருவரும் வீட்டிற்கு வெளியே வந்தனர்.



தற்செயலாக திரும்பி பார்த்த டாக்டர் "மோகன்!அங்கே பார்" என்றார்.



மோகன் டாக்டர் காட்டியதிசையில் பார்த்த போது மரத்தடியில் தொங்கி கொண்டிருந்த ஊஞ்சல் படு வேகமாக மேலும் கீழும் ஆட தொடங்கியிருந்தது.



அதே நேரம் அறையின் உள்ளேயிருந்து "மே ரா நாம் மாயா" என்று தேவியின் குரல் வீறிட்டது.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 13



கேஎம்சிஎஹச் மருத்துவமனை பெரும் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே வெண்ணிற ஆடையணிந்த நர்ஸ்கள் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு வேக நடை போட்டு கொண்டிருந்தார்கள். ரிசப்சனில் இருந்த 40 இன்ஞ் டிவியில் கமலும் அம்பிகாவும் மெளனமான பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தார்கள்.மிதிக்காமல் நடந்து போங்க என்றபடி ஓரு வயதான ஆயா டைல்ஸ் தரைக்கு மாப் போட்டு கொண்டிருந்தாள்.



ICU என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்ணாடி கதவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர் மோகனும்லீலாவும். அழுது கொண்டிருந்த லீலா "எம் பொண்ணுக்கு என்னங்க ஆச்சு?" என்றாள் கண்ணீருடன் . வட்ட கண்ணாடியில் உள்ளே படுத்திருந்த தேவியை கவலையாக பார்த்துக் கொண்டிடுந்த மோகன்லீலாவின் குரல் கேட்டு திரும்பினான்.



" ரூமுக்குள்ள என்ன நடந்தது என்று தெரியவில்லை லீலா. லாரன்சும் சேவியரும் பதறி போய் கதவை திறந்த போது தேவிக்கு வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து நான் பயந்து போயிட்டேன். உங்க பிராத்தனையெல்லாம் போதும்னு சொல்லிவிட்டு நான் தான் அவளை ஹாஸ்பிடலுக்கு கார்ல கொண்டு வந்தேன்." என்ற மோகனின் முகம் கவலையில் மாறியிருந்தது.



"நல்லா சந்தோஷமாத்தானே வீட்டுல விளையாடிட்டு இருந்தாள்? எந்த பாவி கண்ணுபட்டுதுன்னு தெரியலையே? எம் புள்ளை இப்படி சீரழியுதே?" என்ற லீலாவை தோளில் சாய்த்து கொண்ட மோகன்" நாம் யாருக்கும் எந்ததுரோகமும் தீங்கும் செய்யலை லீலா. ஏதோ கெட்ட நேரம் . இப்படியெல்லாம் நடக்குது. கவலைப்படாதே! தேவி சீக்கிரமாக குணமாகி விடுவாள்" என்றான்.



" ஆமாம். டாக்டரும் பாதர் ரெண்டு பேரும் எங்கே போனாங்க?" என்றாள் லீலா.



" கீழே கார் பார்க்கிங்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்றான் மோகன்.



ஹாஸ்பிடலின் கீழே அண்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் டிரைவரும் டாக்டரும் லாரன்சும் சேவியரும் நின்று கொண்டிருந்தனர்.



"பாதர்.! உள்ளே என்ன தான் நடந்தது? " என்றார் டாக்டர்



"நீ சொல்லுலாரன்ஸ் ? " என்றார் சேவியர் .



தொண்டையை செருமிக் கொண்ட லாரன்ஸ்" இந்தி சுத்தமா தெரியாத தேவி திடீர்னு இந்தியில் பேசுகிறாள். அது எப்படின்னு தெரியனும்னு நான் அவளிடம் இந்தியில் பேச ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல பேச்சு கொடுத்து அவளை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி செய்தேன். அவளுடைய அப்பா பெயர், அம்மா பெயர்னு எல்லாத்தையும் தெளிவாகவே சொன்னாள். அது எனக்கு குழப்பமாகவே இருந்தது. அவளை ஊஞ்சலில் வைத்து கொலை செய்தது யாரு? அவன் பெயர் என்ன? ஆள் எப்படி இருப்பான்னு கேட்க ஆரம்பிச்சேன். அதை நான் திரும்ப திரும்ப கேட்க ஆரம்பிச்ச போது தான் அவருக்கு வலிப்பு வந்து வாயில் நுரை வர ஆரம்பித்து விட்டது. அதைப் பார்த்து பயந்து போய் தான் நான் கதவை திறந்துவிட்டு விட்டு உங்களை கூப்பிட்டேன்" என்றார்.



"அந்த கேள்விக்கு மட்டும் ஏன் தேவி பதில் சொல்லாமல் வலிப்பு வந்து விழனும்?" என்றார் டாக்டர் .



" ஒரு வேளை அவளை கொன்ன கொலைகாரனோட பேரு தேவிக்கு தெரியாமல் இருக்கலாம். இல்லை அவன் இந்த ஏரியாவுக்கே புதுசா இருக்கலாம்”



"எத்தனை லாம்கள். ஆனால் உங்களின் எல்லா முயற்சிகளும் வீணாகி விட்டனவே?”



"ஆனா ஒரு விசயத்தை உறுதியாக சொல்வேன். செத்துப் போன மாயா தான் திரும்ப தேவியோட உடம்புல வந்திருக்கா. அவ அந்த கொலைகாரனை கொல்லாமல் தேவியோட உடம்பிலிருந்து வெளியே போக மாட்டாள். எனக்கு புரியாத ஒரே விசயம் அவளுடைய கையிலும் காலிலும் இருந்த தலைகீழ் சிலுவை சின்னம் எப்படி வந்திருக்கும் என்பது தான். நானே ஆண்டி கிறிஸ்டியன் திரும்ப வந்து விட்டானோவென்று பயந்து விட்டேன்." என்றார் சேவியர் .



"தேவி குணமானதும் நாங்க வந்து பார்க்கிறோம். அவளுக்கு உடல் ரீதியான வேறு பிரச்சனைகள் இருக்கிறதா என்று டாக்டரிடம் கேட்டு பாருங்கள்.”



"எனக்கு தெரிந்து அப்படி எந்த பிரச்சனையும் அவளுக்கு இருப்பதாக தெரியவில்லை. எல்லோருக்கும் ஓரே கருத்து இருக்க வேண்டியதில்லை. பார்ப்போம்.இந்த ஹாஸ்பிடல் டாக்டர் என்ன சொல்கிறார்னு" என்றார் டாக்டர் .



"நாங்க தேவிக்கு இப்படி வலிப்பு வரும்னு எதிர்பார்க்கலை. எங்களோட முயற்சி வெற்றியா தோல்வியான்னு கூட எங்களுக்கு புரியலை." என்றார் லாரன்ஸ் .



"அறிவியல்பூர்வமான விசயங்களை மட்டுமே நம்பனும்னு என்னோட மூளை சொல்லுது. ஆனா மனசு தேவி எப்படியோ குணமானால் போதும்னு சொல்லுது. அதற்காக நான் பேய் பிசாசு கடவுள்னு கண்ணுல பார்க்காத எதையும் நம்ப தயாரா இருக்கேன்" என்றார் டாக்டர் .



"நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும்" என்ற சேவியரும் லாரன்சும் காரில் ஏறிக் கொண்டனர். கார் டிரைவர் காரைக் கிளப்பினான்.புகையை பார்த்தபடி திக் பிரமை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார் டாக்டர் .

 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 14



தலையில் புதிதாக வாங்கிய தொப்பியை அணிந்து கொண்டு ஐசியு இருந்த பகுதிக்கு வந்தார் டாக்டர் .நாற்காலியில் அமர்ந்திருந்த மோகன்" என்ன டாக்டர் தொப்பி யெல்லாம் " என்றான்.



"வெளியே வெய்யில் அதிகம். என்னால தாங்க முடியலை. அதான் ஒரு தொப்பியை வாங்கி மாட்டிகிட்டேன்" என்றவர் அருகே அழுது கொண்டிருந்த லீலாவை பார்த்து " டோண்ட் ஒர்ரிம்மா.தேவிக்கு ஒன்னும் ஆகாது. மனசை தளர விட்டுட வேண்டாம்" என்றார்.



"டாக்டர் .பாதர் சேவியர் என்ன சொன்னார்?" என்றாள் லீலா.



" தேவிக்கு திடீர்னு வலிப்பு வந்ததுல அவர் ரொம்ப பயந்து குழம்பி போயிட்டாரு. தேவிக்கு உடல் ரீதியாக எதாவது பிரச்சனை இருக்குமோன்னு அவர் நினைக்கிறார். அப்படி எதுவும் இல்லைன்னு முதலில் தெளிவு பண்ணிக்கலாம். அப்படி ஏதாவது பிராப்ளம் இருந்தாலும் டின்ட்மெண்ட்டுல சரி பண்ணி விடலாம். சரி. டாக்டர் ஏதாவது சொன்னாரா?”



"இல்லை. அவர் எதுவும் சொல்லலை." என்றான் மோகன்.



"சரி. நீங்க இங்கேயே இருங்க. நான் போய் டாக்டரை பார்த்து விவரம் கேட்டுட்டு வர்ரேன்." என்றபடி அந்த பக்கம் சென்ற நர்சை வழிமறித்தவர் " என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக முடியுமா? நான் தேவியோட தாத்தா’" என்றார்.



" வாங்க சார்!" என்று நடந்தவளை பின்தொடர்ந்தார் டாக்டர் .



நீண்டகாரி டரில் நடந்தவள் "இந்த அறை தான் சார்" என்றாள்.



வெளியே கதவில் ஓட்டப் பட்டிருந்த டாக்டர் தணிகாசலம் என்ற பிளாஸ்டிக் எழுத்துக்களை பார்த்து பெருமூச்சு விட்டவர் கை விரல்களை மடக்கி கதவை தட்டி" மே ஐகம் இன்" என்றார்.



உள்ளே ஒரு பேசண்டின் பைலை புரட்டிக் கொண்டிருந்த டாக்டர் தணிகாசலம் பைலை மூடி வைத்துவிட்டு "எஸ்கமின்!" என்றார்.



உள்ளே நுழைந்த டாக்டர் ஹரிபிரசாத் "நான் தேவியோட தாத்தா " என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.



"உட்காருங்க!" என்று எதிரில் இருந்த காலி நாற்காலியை காட்டினார் டாக்டர் தணிகாசலம்



காலி நாற்காலியில் தன்னை நிரப்பிக் கொண்ட ஹரிபிரசாத் "தேவியோட நிலைமை இப்ப எப்படி இருக்கு?" என்றார்.



"எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தாச்சு, சீ ஈஸ்பர்பெக்ட்லி ஆல்ரைட். அவ உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை. மனசுல ஏதாவது பிரச்சனை இருந்தா இந்த மாதிரி வலிப்பு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.”



" என்ன டாக்டர் சொல்றீங்க?”



"நான் சொல்ற விசயத்தை நம்ப மாட்டீங்க. ஆனா நடந்த விசயம் உண்மை. போன வாரம் ஒரு பையன் அட்மிட் ஆனான்.13 வயசு இருக்கும். நல்லாத்தான் இருந்தான். திடீர்னு ஒரு கையும காலும் வலிப்பு வந்து இழுத்து கிச்சு. இதே மாதிரி ஸ்கேன் எடுத்து பார்த்து எல்லாமே நார்மல் னு ரிசல்ட் வருது. அப்புறம் பையனிடம் உட்கார்ந்து மனசு விட்டு பேசினேன். அப்புறம் தான் விசயமே தெரியுது”



" என்ன காரணம் டாக்டர்?”



"பையன் வகுப்பு லயே கொஞ்சம் உயரம் குறைவு .மத்த பசங்க அதை வைச்சு இவனை குள்ள யா குள்ள யான்னு கிண்டல், கேலி பண்ணி சிரிச்சிருக்காங்க. அது மனசுல பெரிய டிப்ரசனாகி பள்ளிக்கே போகாம இருக்கனும்னு அடிக்கடி லீவ் போட்டுட்டு இருந்திருக்கான். டெஸ்டுன்னு சொல்லி கட்டாயமாக போயே தீரனும்கிற நிலைமை வந்தபோது டீ ப்ரசன் அதிகமாகி அவனுடைய ஓருகையும் காலும் வலிப்பு வந்து பாதிப்படைந்து விட்டது. இப்ப ஸ்கூலை மாற்றிவிடலாம்னு சொல்லி டீன் ட்மெண்ட் கொடுத்து இப்ப சரியாயிட்டான். அந்த மாதிரி ஏதாவது வெளிப்புற பாதிப்பு இருக்கான்னு பாருங்க.”



"தேவி ஸ்கூலுக்கே போகலையே டாக்டர் “



"இப்ப அவளுக்கு என்ன வயசு?”



"அஞ்சு வயசு “



"அவ பிறந்ததும் அவளை யார் வளர்த்தாங்கன்னு பாருங்க.லீலா வோட அம்மா கூட மாட இருந்திருக்கலாம். இல்லை.மோகனோட அம்மா ஓத்தாசைக்கு இருந்து அளவுக்கு அதிகமான அன்பை பாசத்தை தேவிகிட்ட காட்டியிருக்கலாம். இல்லை கூட்டு குடித்தனமாக இருந்திருக்கலாம். வாடகைக்கு குடியிருந்த இடத்துல அவளுக்கு விளையாட நிறைய நண்பர்கள் இருந்து இப்போது யாரும் இல்லாமல் தனியாக இருக்கலாம். உயிரையே வைச்சிருந்த நாய் செத்து போயிருக்கலாம். சம்திங் ஏதாவது ஒன்னு அவளை சுத்தி நடந்திருக்கலாம்." என்றார் டாக்டர் தணிகாசலம்.



"நீங்க சொன்ன மாதிரி கூட ஏதாவது மனதை பாதிப்பது போல் நடந்திருக்க வாய்ப்பு இருக்கு டாக்டர் “



"அந்த பாதிப்பு என்னன்னு கண்டுபிடியுங்கள்”



"அந்த கோணத்திலும் யோசிக்கிறேன் டாக்டர் .ஆனால் இந்த பிரச்சனைவேறு “



" என்ன சொல்றீங்க?”



"உங்களுக்கு பேய், பிசாசுல நம்பிக்கை உண்டா டாக்டர்?”



" எதுக்கு கேக்குறீங்க?”



"மா யான்னு ஓரு பொண்ணு செத்து போய் ஆவியா வந்து தேவியோட உடம்புல இருக்கா டாக்டர் . தேவிக்கு சுத்தமா தெரியாத இந்தியில் இப்ப அவள் பேசுகிறாள். “



"வாட்? இது என்ன புது பிரச்சனை?" என்றபடி அதிர்ச்சியோடு தன் கண்ணாடியை கழட்டினார் தணிகாசலம்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 15



டாக்டர் தணிகாசலம் நர்ஸ் நளினாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். " அந்த தேவி பொண்ணுக்கு பிசிக்கலா எந்த பிராபளமும் இல்லை. உடல் நிலை நல்லா ஆரோக்யமாகத் தான் இருக்கு. அந்த பொண்ணோட அப்பா அம்மாவும் தாத்தாவும் அவளுக்கு மாயா ன்னு ஒரு பேய் பிடிச்சிருப்பதாக சொல்றாங்க. இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டில் இப்படியும் சில பேர் இருக்காங்கன்றதே எனக்கு அதிர்ச்சியா இருக்கு. இத்தனைக்கும் மூணு பேரும் வெல் எஜுகேட்ட ட் பர்சன். இதையெல்லாம் எப்படி நம்புறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு”



"நைட் 12 மணி சுமாருக்கு அந்த பொண்ணு இந்தியில் பேசிட்டு பெட்லருந்து மிதப்பதா வேற சொல்லி பீதியக் கிளப்புறாங்க டாக்டர் .இன்னைக்கு அந்த பொண்ணு இருக்கிற வார்டுக்கு நான் தான் இன்சார்ஜ்" என்றாள் நளினா பயத்துடன் .



"ஓன்னும் பயப்பட தேவையில்லை. அப்படி ஏதாவது விபரீதமா நடந்தா உன்னோட செல்போனில் அதை வீடியோ எடுத்து வை. மொபைலில் சார்ஜ்புல்லா இருக்குது தானே?" என்றார் தணிகாசலம் குறு குறுக்கும் ஆர்வத்துடன் .இது ஒரு வித்தியாசமான கேஸ் என்ற ஆர்வ குறுகுறுப்பு அவரிடம் நிரம்பி வழிந்தது.



"சார்ஜ் புல்லா இருக்கு டாக்டர் .அப்படி ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் உங்களுக்கு போன் செய்யவா?”



"அப்படி எதுவும் நடக்காதுன்னு நினைக்கிறேன். எது நடந்தாலும் நீ என்னை தாராளமாக கூப்பிடலாம்" என்றார் தணிகாசலம். இன்றைய இரவு சிவராத்திரியாக இருந்து விடுமோ என்ற மெல்லிய பயம் அவரது மனதிற்குள் எழுந்தது. அன்றைய வேலைகளை முடித்துவிட்டு தணிகாசலம் வீட்டிற்கு கிளம்பினார்.



அதே நேரம் ஐசியூவிலிருந்து சாதாரண வார்டிற்கு தேவி மாற்றப்பட்டிருந்தாள். அவளுக்கென ஓதுக்கப்பட்டிருந்த தனி அறையில் தேவி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள். அவளுக்கு அருகே உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் லீலா.



அருகே இருந்த நீள நாற்காலியின் ஓரத்தில் உட்கார்ந்திருந்த டாக்டர் ஹரிபிரசாத் "மோகன்.! நான் உங்க இரண்டு பேரிடமும் சில விசயங்கள் பேசணும். ஒளிச்சு மறைச்சு பேசாம உண்மையை பேசனும் " என்றார்.



" கேளுங்க டாக்டர் " என்றான் மோகன். அவனுடைய முகம் குழப்பத்தில் இருண்டு கிடந்தது.



“உங்க மூணு பேரையும் எனக்கு இந்த வீடு கட்டும் போது தான் பழக்கம். அதுக்கு முன்னாடி நீங்க எங்க குடியிருந்தீங்க?”



"ஒரு அப்பார்ட்மெண்டுல வாடகைக்கு இருந்தேன்.”



"அங்கே தேவி தனியாத்தான் எப்பவுமே இருப்பாளா? இல்லை கூட விளையாட அவளுக்கு ப்ரண்ட்ஸ் யாராவது இருந்தாங்களா?”



"இப்ப சம்மந்தமில்லாம இதை ஏன் டாக்டர் கேட்கறீங்க?”



தன் நெற்றியை தேய்த்து கொண்ட டாக்டர் ஹரிபிரசாத் டாக்டர் தணிகாசலம் சொன்னதை அவருடைய சந்தேகத்தை எடுத்துக் கூறினார்.



"அவரு கேட்டது சரிதான். ஆனா அப்படி எதுவும் நடக்கலை. அந்த அப்பார்ட்மெண்ட்ல தேவி எல்லோருக்கும் பெட். நாங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ்.லீலாவுக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தான். அதனால எங்க ரெண்டு பேரைத் தவிர வேறு யாரும் அவளை பாதிக்க முடியாது.”



"ஓ! அப்படியா?" என்றபடி டாக்டர் யோசிக்க ஆரம்பித்தார்.



" அப்படியே ஏதாவது பாதிப்பு தேவிக்கு இருந்தாலும் அவள் ஏன் செத்துப் போன மாயாவை போல இந்தி பேசனும்? லாஜிக்கா சரியா வரலையே?" என்றான் மோகன்.



"நீ சொல்வதும் சரிதான். இன்னைக்கு நைட் 12 மணிக்கு நம்ம தேவி இந்தியில பேசி பெட்லருந்து மிதக்கிறாளான்னு பார்ப்போம்." என்றார் டாக்டர் ஹரிபிரசாத்.



"அப்படி இந்தி பேசிதேவி மிதந்தால் நாம என்ன செய்யப் போறோம்?" என்றான் மோகன்.



"இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியலை." என்றார் டாக்டர் ஹரிபிரசாத் பரிதாபமாக .


மருத்துவமனைக்கு வெளியே இருளும் அமைதியும் கவிய ஆரம்பித்தது. நேரம் மெல்ல மெல்ல நள்ளிரவை நோக்கி நகர ஆரம்பித்தது. தேவியின் அருகே இருந்த மூவரும் மெல்ல தூங்கி விழ ஆரம்பித்தனர்.



அறைக்கு வெளியே இருந்த வராண்டாவில் நடந்து வந்த நர்ஸ் நளினா தேவி இருந்த அறையை நெருங்கினாள். லேசாக திறந்திருந்த கதவை சத்தமின்றி தள்ளி திறந்து பார்த்தாள். ஹால் கடிகாரம் 12 மணிக்கு அடையாளமாக ஒலிக்க ஆரம்பித்தது. அதன் டிங் டாங் என்ற சீரான ஒலி 12 முறை ஓலித்து அடங்கியது. மீண்டும் பழைய அமைதியே அங்கு நிலவ ஆரம்பித்தது.

கடைசி டிங் டாங் ஒலித்து முடித்ததும் தேவி தன் கண்களை சட்டென்று திறந்தாள்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 16


நான்கு நாட்களுக்கு பிறகு தேவிடிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். டாக்டர் தணிகாசலத்தின் தீவிர கண்காணிப்பில் தேவி மிக விரைவாகவே தன்னுடைய பழைய கலகலப்பான நிலையினை எட்டி விட்டாள். அன்று இரவு 12 மணி ஒலித்ததுமே அறையில் இருந்த மூவரும் சட்டென்று விழித்துக் கொண்டனர். வீட்டில் நடந்தது போன்ற ஒரு விபரிதத்தை மூவருமே எதிர்பார்த்து திகிலோடு தேவியை பார்த்துக் கொண்டிருந்தனர்.



இவர்கள் மூவரும் சொன்ன பேய் கதை உண்மையா பொய்யா? இன்று கண்ணால் பார்த்து தெரிந்து கொள்வோம் என்று அறைக்கு வெளியே அடக்க முடியாத ஆவலுடன் நர்ஸ் நளினாவும் நின்று கொண்டிருந்தாள்..



இவர்களை ஏமாற்ற விரும்பாதவள் போல் தேவி சட்டென்று தன் கண்களை திறந்ததும் மூவரையும் பயம் பிடித்து கொண்டது. கண் திறந்த தேவியோ "அம்மா! ரொம்ப தாகமா இருக்கு! தண்ணீர் கொடு!" என்றாள்.லீலா பயந்தபடியே வாட்டர் பாட்டிலை கொடுத்தாள். மிகுந்த களைப்புடன் அதை வாங்கி வாயில் கவிழ்த்து கொண்டவள் வாயைத் துடைத்து கொண்டாள். வாட்டர் பாட்டிலை வாங்கி கொண்ட லீலா "வேற ஏதாவது வேணுமாம்மா?" என்றாள்.



"வேணாம்" என்று தலையசைத்து மறுத்தவள் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.



அவள் தூங்கும் வரை பார்த்து கொண்டிருந்த டாக்டர் " இதை என்னால நம்பமுடியலை" என்றார் ஆயாசத்துடன் .



"எம் பொண்ணு குணமாயிட்டா பழனிக்கு வந்து பூ முடி தர்ரேன் கடவுளே!" என்றாள் லீலா ஆனந்த கண்ணீருடன் .



"என்னம்மா டக்குன்னு கடவுளை மாத்திட்ட?" என்றான் மோகன்.



"எனக்கு கடவுள் முக்கியமில்லை. என் மகள் தான் முக்கியம்" என்றாள் லீலா.



“சரி! தூங்கு மோகன். காலையில் பேசிக்கலாம்" என்றார் டாக்டர் .



எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்காததால் ஏமாற்றமடைந்த நர்ஸ் நளினா தன்னுடைய இடத்தை நோக்கி சலிப்புடன் நந்தாள்.



விளையாடிக் கொண்டிருந்த தேவியை பார்த்தபடி சோபாவில் உட்கார்ந்தபடி காபி குடித்து கொண்டிருந்தனர் டாக்டரும் மோகனும்.



"லாரன்சும், சேவியரும் பண்ணிய ஆவி விரட்டும் சடங்கினால் தான் தேவியோட உடல் நிலை மோசமாச்சுன்னு நான் நினைக்கிறேன். டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க?" என்றான் மோகன்.



"மே பீ! இருக்கலாம். தேவிக்கு அவங்க ரெண்டு பேருமே முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவங்க. அவங்க உள்ளே என்ன செய்தார்கள்னு நாம யாரும் பார்க்கலை. அவர்களோட செயல்பாடு தேவியை பயமுறுத்தி இருக்கலாம்." என்றார் டாக்டர் .



"இது மாதிரி இன்னும் எத்தனை குழந்தைகளை பயமுறுத்த போறாங்களோ? என் பொண்ணுக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்க கூடாது.”



" என்ன செய்யப் போகிறாய் மோகன் ? “



"அவர்கள் இருவரின் மேலும் வழக்கு போடப் போகிறேன். பேய் ஓட்டுகிறேன்னு சொல்லி என் மகளை கொல்ல பார்த்ததாக கேஸ் போடப் போகிறேன்”



" உளறாதே மோகன். இதெல்லாம் கோர்ட்டில் நிற்காது. நாம தான் தேவியை குணப்படுத்த சேவியரை கூப்பிட்டோம்.”



"நான் அதை இல்லைன்னு சொல்லவேயில்லை. ஆனால் தேவியை அவரால் குணப்படுத்த முடியவில்லை. அதை கூட விட்டு விடலாம்.உடல் நிலை மோசமாகுமளவிற்கு எதையோ பண்ணி வைச்சிருக்காரே? டாக்டர் தணிகாசலம் தானே என் பொண்ணை குணப்படுத்தினார்.?”



"மோகன் ஓரு விசயத்தை புரிந்து கொள். பேய்கள் ஆவிகளை விரட்டும் சடங்கு என்பது எல்லா மதத்திலும் பொதுவாக காணப்படும் ஓரு விசயம். கடவுளுக்கு எதிராக சாத்தான் என்ற தீய சக்தி இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சட்டம் இதை எல்லாம் நம்பாது. ஆனால் மக்களோட நம்பிக்கையில் இந்த சட்டம் தலையிட முடியாது. இப்ப நீ சொல்வது போல கேஸ் போட்டால் நாடு இருக்கிற நிலைமையில் பெரிய கண்டராவாசியாகும். உன் பொண்ணோட பேர் எல்லா பேப்பர்லயும் வரும். அவளுடைய எதிர்காலம் என்னாகும்? ஸ்டைல்ல மற்ற குழந்தைகள் பேய் பிடித்த குழந்தைன்னு உன் குழந்தையை தள்ளி வைப்பார்கள். இதையெல்லாம் நல்லா யோசிச்சு பார்த்து விட்டு முடிவெடு" என்றார் டாக்டர் கோபத்துடன் .



" ஸாரி டாக்டர் .! நான் இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன்" என்றான் மோகன் கம்மிய குரலில்.



அதே நேரம் வீட்டின் வெளியே ஒரு பைக் வந்து நிற்கும் ஓசை கேட்டது.



இருவரும் வந்தது யார் என்று பார்க்க வீட்டிற்கு வெளியே வந்தனர். பைக்கை சைடு ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு வந்தவன் தன் கையை நீட்டினான்.மோகன் அவன் கையை குலுக்கினான்.



"ஹலோ சார்! என் பேர் சிவநேசன். தினமுரசு பத்திரிக்கை நிருபர்." என்றான் சிவநேசன்.



"சொல்லுங்க! உங்களுக்கு என்ன வேணும்?" என்றான் மோகன்.



"இது தேவியோட வீடு தானே?" என்றான் சிவநேசன்.



டாக்டரும் மோகனும் ஒருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 17


சக்ரவர்த்தி தனக்கு எதிரே நின்றிருந்த குஞ்சப்பனை ஏறிட்டு பார்த்தார். அவரது பார்வையை எதிர்கொண்டதும் குஞ்சப்பன் தன் தலையை வரட் வரட் என்று சொறிந்து கொண்டான். அதற்கு நான் எவ்வளவோ யோசித்து பார்த்து விட்டேன். இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று அர்த்தம்.



இந்த நிகழ்வு குஞ்சப்பனுக்கும் சக்ரவர்த்திக்கும் இடையேஅடிக்கடி நிகழக்கூடிய ஓன்று தான். அதன் உள்ளர்த்தம் சக்ரவர்த்திக்கு மிக நன்றாகவே தெரியும்.



"சொல்லு! குஞ்சப்பா! இப்ப எவ்வளவு கேட்க போகிறாய்?" என்றார் சக்ரவர்த்தி தன் தாடையை தடவியபடி. இவனை விட்டாலும் தன்னுடன் இந்த மாளிகையில் வாழவேறு யாருமே இல்லை என்ற நிதர்சனமான உண்மையை சக்ரவர்த்தி நன்றாகவே உணர்ந்திருந்தார். அவரை விட குஞ்சப்பன் அதை தெளிவாகவே உணர்ந்திருந்தான்.



"தம்பிக்கு கல்யாணம். முதலாளி மனசு வைச்சு ஏதாவது செய்தால் நல்லாயிருக்கும். அண்ணனா நானும் சபையில பெருமையா ஜபர்தஸ்தா இருக்க முடியும் " என்றான் குஞ்சப்பன் திடுதிப்பென்று வரவழைத்த பணிவுடன் .அது பணம் கிடைக்கப்போவதால் வந்த காரியப் பணிவு.



"பொண்ணு சொந்தமா? இல்லை வெளி ய வா?” என்றார் சக்ரவர்த்தி வரவழைத்த செயற்கையான உற்சாகத்துடன் .



" சொந்தம் தான் முதலாளி. அத்தை மகள்" என்றான் குஞ்சப்பன் முகமெல்லாம் பல்லாக .



"கல்யாணம் எப்போ?”



"இன்னும் ஓரு மாசம் இருக்குது. மார்ச் 26ந் தேதி . எனக்கு ஒரு வாரம் லீவு வேணும்.”



"அப்ப ஒரு வாரம் நான் தனியாத்தான் இருக்கனுமா?" என்றார் சக்ரவர்த்தி ஆயாசத்துடன் .



"ஆமாம். எப்படியாவது மேனேஜ் பண்ணுங்க. முடிஞ்சவரை சீக்கிரமாக வர முயற்சி செய்கிறேன்..”



" ஒன்னும் அவசரமில்லை. நீ பொறுமையாகவே வா. நான் இங்கு சமாளித்துக் கொள்கிறேன். ஊருக்கு போகும் போது சொல். பணம் தருகிறேன்.”



"நன்றி முதலாளி. " குஞ்சப்பன் சந்தோஷப் பெருக் கோடு தன் உதடுகளை மூட வில்லை. அதற்குள் கேட்டிலிருந்த காலிங் பெல் ஒலித்தது.



"யாருன்னு பாரு" என்றார் சக்ரவர்த்தி . "இதோ" என்றபடி ஏறக்குறைய ஓடினான்குஞ்சப்பன்.



வெளியே போய் விட்டு பத்து நிமிடம் கழித்து உள்ளே வந்த குஞ்சப்பன் சற்றே தயங்கி நின்றான்.



"யாரு வாசலில்?" என்றார் சக்ரவர்த்தி கேள்விக்குறியோடு.



"மகேந்திரனோட சம்சாரம் திரும்பவும் வந்திருக்குதுங்க. என்ன சொன்னாலும் போகமாட்டேன்னு அடம் பிடிக்குதுங்க. உங்கள பாத்தே ஆகணும்னு ஒத்த காலில் நிற்குதுங்க.” என்றபடி கையைப் பிசைந்தான் குந்சப்பன்.



"என்னவாம்?" என்றார் சக்ரவர்த்தி சலிப்பான குரலில்.



"வேற என்ன கேக்க போவுதுங்க ? பணம் தான் " என்றான் குஞ்சப்பன்.



"பணத்துக்காக நான் நிறைய இழந்துட்டேன். சரி செண்பாவை வர சொல் " என்றார் சக்ரவர்த்தி .



சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த செண்பா"அய்யா'.எம் புருசன் கேஎம்சி ஹேச்ல ரொம்ப சீரியசா படுத்திருக்காருங்க. நீங்க தான் எப்படியாவது அவரை காப்பாத்தனும்" என்று கதற ஆரம்பித்தாள்.



தன் காலில் விழுந்தவளை தூக்கிய சக்ரவர்த்தி " நான் அவனுக்கு எவ்வளவோ செஞ்சுட்டேன். இன்னும் நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கிறாய்?" என்றார்.



"கடைசியா இந்த ஓரு முறை மட்டும் என் தாலிய காப்பாத்தி விட்ருங்கய்யா. உங்களுக்கு புண்ணியமா போகும். கடனை உடனை வாங்கி அவரை பெட்ல சேர்த்திருக்கேன் " என்றவள் " இதை உங்க கிட்ட காட்ட சொன்னாருங்க" என்று ஓரு நியூஸ் பேப்பரையும் ஒரு கடிதத்தையும் நீட்டினாள். அதை வாங்கியசக்ரவர்த்தி நியூஸ் பேப்பரின் வட்டமிட்ட பகுதியினில் கண்களை மேயவிட்டார்.



"இறந்து திரும்பி வந்த சிறுமி " என்ற தலைப்பில் சிவநேசன் எழுதிய பெட்டி செய்தி கண்ணில் பட்டது. அதில் தேவியின் பெயர் மாற்றி வேறு பெயரில் எழுதப்பட்டிருந்தது அந்த சிறிய கட்டுரை .



நடுங்கும் கரங்களில் கடிதத்தை பிரித்தார் சக்ரவர்த்தி . உள்ளே முடக்குவாத கைகளால் மகேந்திரன் கோழி கிறுக்கலாக எழுதியிருந்த வார்த்தைகள் கண்ணில் பட்டது.



"அவள் திரும்ப வந்து விட்டாள். “



சக்ரவர்த்தியின் கண்களில் பூச்சி பறக்க ஆரம்பித்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 18




காலையில் வீட்டு வாசலில் வந்து விழுந்த நியூஸ் பேப்பரை பிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்த டாக்டர் ஹரிபிரசாத் அந்த நியூ சை பார்த்ததும் அதிர்ந்தார். "மோகன் !இந்த செய்தியை பார்" என்றார் பரபரப்புடன்.



அப்போதுதான் காலை கடனை முடித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்து தன் டூத் பிரஸ் சில் பேஸ்டை பிதுக்கி கொண்டிருந்த மோகன்" என்ன நியூஸ் அது?" என்றபடி அசுவராஸ்யமாக டாக்டரை நெருங்கினான்.



மோகனுடைய வீட்டில் தேவிக்கு நடந்த அத்தனை விபரீத சம்பவங்களும் விலாவாரியாக பேரை மாற்றி எழுதப்பட்டிருந்தன.. இறந்து திரும்ப வந்த சிறுமி என்ற கவர்ச்சிகரமான தலைப்பின் கீழ் அத்தனையும் இடம் பெற்றிருந்தன. வீட்டின் முகவரியையும் மோகனின் செல்போன் நம்பரையும் மட்டும் தான் அந்த சிவநேசன் விட்டு வைத்திருந்தான்.



"நாம் அவ்வளவு தூரம் விளக்கமாக சொல்லியும் அந்த நிருபர் செய்தியை பேப்பரில் போட்டுட்டானே ?அவனை அவனோட பொய் வாக்குறுதியை நம்பி நாம எந்த உண்மையையும் சொல்லியிருக்க வே கூடாது டாக்டர் .அந்த பாவி பய இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை" என்றான் கோபத்துடன் மோகன்.



"விஜயகாந்த் இவனுகளை பார்த்து காறி துப்பியதில் கொஞ்சம் கூட தப்பேயில்லை.சிவநேசன்னு அழகா பக்தி பழமா பேர் வைச்சுகிட்டு இப்படி ஒரு வேலைய செஞ்சுட்டான் படுபாவி பயல். இந்த நியூ சைபடிச்சுட்டு இனி ஓவ்வொருத்தனா நம்ம வீட்டை நோக்கி படையெடுப்பானுகன்னு நினைச்சாத்தான் பயமா இருக்கு" என்றார் டாக்டர் .



"இந்த விசயம் இவனுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும் டாக்டர்?”



"இதென்ன பெரிய விசயமா ? ஹாஸ்பிடல் முழுக்க தெரிஞ்ச விசயம் தானே இது? அங்கே இருந்த யாராவது சிவநேசனுக்கு வேண்டப்பட்ட ஆளா இருந்து விசயம் அவனுக்கு கன்வே ஆயிருக்க வாய்ப்பு இருக்கு”



"இப்ப என்ன டாக்டர் பண்றது?”



" எதுவும் பண்ண வேணாம்.தேவி இப்போது பூரணமாக குணமாகி விட்டாள். அதனால் நாம் பயப்படவோ மறைக்கவோ ஒன்னுமில்லை. அதெல்லாம் யாரோ கிளப்பி விட்ட வதந்தின்னு சொல்லி விடலாம். நீ எதுக்கும் பயப்பட வேண்டாம்." என்று டாக்டர் ஹரிபிரசாத் தைரியம் கூறினார்.



மூவரும் வழக்கமான அவரவர் வேலைகளில் மூழ்கினர். மூவரும் பயந்தது போல யாரும் தேவியை தேடி வர வில்லை. தேவி தன்னுடைய இயல்பான சுட்டி தனத்திற்கு திரும்பி இருந்தாள்.அவள் அடிக்கடி ஊஞ்சலில் விளையாட வேண்டும் என்று அடம் பிடிக்கும் போதெல்லாம்லீலாவின் நிலமை மோசமானது.திட்டியோ கடிந்து பேசியோ அந்த ஊஞ்சலின் பக்கம் தேவி போகாமல் பார்த்துக் கொள்வதே லீலாவின் பிரதான வேலையாக இருந்தது.



எந்த சலனமும் இன்றி பகல் பொழுது கடந்து சென்றது. அன்று இரவு டாக்டர் தன் இரவு உணவை டைனிங் டேபிளில் முடித்துக் கொண்டு தேவி இருந்த அறையை திறந்து பார்த்தார். பாலை குடித்துவிட்டு தேவி அப்போதுதான் அயர்ந்து தூங்க தொடங்கியிருந்தாள். டாக்டரின் உதட்டில் ஒரு திருப்தி புன்னகை மலர்ந்தது.



" எப்படியோ தேவி பழைய நிலைக்கு திரும்பி விட்டாள். அது போதும் நமக்கு " என்றவர் "குட் நைட்" என்றபடி மாடியிலிருந்த தன் அறையை நோக்கி நடந்தார். சாப்பிட்டு விட்டு லீலா பாத்திரங்களை கழுவத் எதாடங்கினாள்.



மோகன் மெயின் கேட்டை உட்புறமாக தாழிட்டு பூட்டை போட்டு பூட்டினான்.



படுக்கையை விரித்து போட்டுவிட்டு லீலாவின் வருகைக்காக காத்திருந்தான்.



சற்று நேரத்தில் வந்து சேர்ந்தாள் லீலா.



"தேவிக்கு நல்லாயிருச்சு தானே? இனி என் பொண்ணு நிம்மதியா இருப்பா தானே?" என்றாள் லீலா



"ஏய் லூசு!அவளோட கெட்ட நேரம் என்னென்னமோ நடந்துருச்சு. இப்ப நல்லாத்தானே இருக்கிறாள்.?இனி அவளுக்கு எதுவும் நடக்காது" என்றான் மோகன்லீலாவின் தோளில் ஆதரவாக கை வைத்தபடி.மோகனின் ஆறுதல் மொழிகளை கேட்டபடி லீலா படுத்து கொண்டாள்.



சரியாக நள்ளிரவு 12 மணி. மரத்தடியில் இருந்த ஊஞ்சல் மெல்ல ஆடத் துவங்கியது.கடிகாரத்தின் விண்டர்ஸ்பிரிங் ஓசையை கேட்டு கண் விழித்த மோகன் உள்ளுணர்வால் உந்தப்பட்டான். தேவி இருந்த அறையை திறந்து பார்த்தவன் அதிர்ந்தான். தேவி படுக்கையிலிருந்து மிதந்து கொண்டிருந்தாள். "டாக்டர் " என்று அலறினான் மோகன்.



அவனது அலறல் சத்தம் கேட்டு எழுந்த டாக்டர் தன் மூக்கு கண்ணாடியை தேடி எடுத்து அணிந்து கொண்டான். ஏதேச்சையாக சன்னலை பார்த்தார் டாக்டர் .வெளியே பரந்த புல்வெளியின் நடுவே ஓரு வெளிச்சப்புள்ளி தத்தி தத்தி நகர ஆரம்பித்தது. டாக்டரின் முகத்தில் ஒரு வியர்வை கோடு உற்பத்தியானது.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 19


தன் அறை சன்னலுக்கு வெளியே தெரிந்த வெளிச்சப் பொட்டு என்னவென்று தெரியாமல் திகைத்த டாக்டர் ஹரிபிரசாத் அவசர அவசரமாக டேபிளில் இருந்த தன் மூக்கு கண்ணாடியை தேடி எடுத்தார். அதை அணந்து கொண்டவர் வெளியே தெரிந்த வெளிச்சப்புள்ளியை கவனமாக பார்க்க ஆரம்பித்தார். வீட்டின் முள்வேலி கம்பியை தாண்டி ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்த கோரை புல்களின் நடுவே அந்த வெளிச்சம் தத்தி தத்தி முன்னேற ஆரம்பித்தது. அந்த வெளிச்சப் புள்ளி என்னவாக இருக்கும் என்று டாக்டர் யோசித்து கொண்டிருக்கும் போதே அவருடைய அறை கதவு தட்டப்பட்டது. வெளியே மோகன்" டாக்டர்! பிளீஸ் தயவு செஞ்சு கதவை திறங்கள் !" என்று கத்தியதுடன் கதவை தட்டவும் செய்தான்.



டாக்டர் கதவை அகலத் திறந்தார். உள்ளே பதட்டமாக நுழைந்த மோகன்" டாக்டர்! கீழே வந்து பாருங்கள்.தேவி பழையபடி மீண்டும் மிதக்க ஆரம்பித்து விட்டாள் " என்றான். அவனது கைகள் நடுங்கி உடல் வேர்க்க ஆரம்பித்திருந்தது.



"மோகன்! உள்ளே வந்து சன்னல் வழியாக வெளியே தெரிவதை பார்" என்றார் டாக்டர் .அவரது ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக சன்னலை நோக்கி நீண்டது.சன்னலை நோக்கி எட்டி பார்த்த மோகன் ஏமாற்றத்துடன் உதட்டை பிதுக்கினான். " வெளியே ஓன்னும் தெரியலையே டாக்டர் " என்றான் மோகன்.



டாக்டர் மறுபடியும் வெளியே எட்டி பார்த்த போது அந்த வெளிச்சப்புள்ளி காணாமல் போயிருந்தது. கோரைப்புற்கள் காற்றில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தன. வீட்டை சுற்றி காரிருள் சூழ்ந்து கொண்டிருந்தது. மரத்தின் கிளையில் தொங்கி கொண்டிருந்த ஊஞ்சல் மட்டும் தன் வேகத்தை குறைத்துக் கொண்டு மெதுவாக ஆடத் தொடங்கியிருந்தது. சற்று முன் தான் பார்த்த வெளிச்சப்புள்ளி இப்போது காணாமல் போயிருந்தது டாக்டருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.



"இப்போது இங்கே ஒரு வெளிச்சப் பொட்டு ஓன்னை நான் பார்த்தேன்" என்றார் மோவாயை தேய்த்தபடி.



"தூக்கத்திலிருந்து திடீர்னு எழுந்தா கூட ஓரு கருப்பு வட்டம் தற்காலிகமாக கொஞ்ச நேரம் தெரியும் டாக்டர் .அந்த மாதிரி ஏதாவது பிரமை தோற்றத்தை நீங்க பார்த்திருப்பீங்க. அது இப்போது முக்கியமில்லை . தேவியை முதலில் பார்ப்போம்" என்றான் மோகன் படபடப்புடன்.



“அதுவும் சரிதான் “ என்றபடி டாக்டர் மோகனுடன் கிளம்பினார். இருவரும் மாடிப்படிகளில் தடதடத்து இறங்கினார்கள்.



இருவரும் பதட்டத்தோடு உள்ளே நுழைந்த போது எதிர் பட்ட லீலா " இப்ப அந்த மாதிரி எதுவும் நடக்கலை. அவ மறுபடியும் தூங்க ஆரம்பித்து விட்டாள் " என்றாள்.



" மறுபடியும் தேவி பழைய மாதிரி மிதந்ததை நீங்க ரெண்டு பேரும் பாத்தீங்களா?”



"ஷயூர் டாக்டர் . என்னோட ரெண்டு கண்ணாலயும் அவள் மிதப்பதை நான் பார்த்தேன்." என்றான் மோகன்



"நானும் தான் " என்றாள் லீலா.



"இந்த வீட்டுல ஏதோ பிரச்சனை இருக்குன்னு நினைக்கிறேன்." என்றார் டாக்டர் .



" என்ன டாக்டர் சொல்றீங்க?" என்றனர் லீலாவும் மோகனும் ஏக காலத்தில் .



"நல்லா யோசிச்சு பாரு மோகன். தேவி நாலு நாளா தணிகாசலத்தோட கண்காணிப்பில் பிரைவேட் நர்சிங் ஹோமில் இருந்த போது எந்த அசம்பாவிதமும் நடக்கலை. தேவி நார்மலாத்தான் இருந்தாள். இன்னைக்கு காலைல தான் அவளை வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்தோம். வீட்டுக்கு வந்த முதல் நாள் ராத்திரியே தேவி பழையபடி அப் நார்மலா மாறிட்டாள். “



"ஆமா டாக்டர் .நீங்க சொல்றது உண்மை தான் " என்றான் மோகன்.



"அப்பகாலம் முழுக்க என் மகள் ஹாஸ்பிடல்ல யே இருக்க வேண்டியதுதானா?" என்றாள் லீலா.



"நான் அப்படி சொல்லவேயில்லையேம்மா? இந்த வீட்டில் ஏதோ தீய சக்தி இருந்து அவளை ஆட்டிபடைப்பது போல் எனக்கு தோணுது.”



"அதை நாம விரட்டுவோம் டாக்டர் . ஏகப்பட்ட லோன் வாங்கி இந்த வீட்டை கட்டியிருக்கேன். அப்படி திடீர்னு அப்படியே விட்டுட்டு போயிர முடியாது. எனக்கென்னமோ நீங்க சன்னல் வழியா பார்த்த வெளிச்ச புள்ளிக்கும் தேவிக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குமோன்னு தோணுது." என்றான் மோகன்.



"நான் வேணா வெளிய போய் அது என்னன்னு பார்த்துட்டு வரவா?" என்ற டாக்டர் செல் பிலிருந்த டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டார். அதன் பட்டனை தட்டியதும் வெளிச்சம் நேர்கோடாக பாய்ந்தது.



"நோ! வேணாம் டாக்டர்" என்றான் மோகன்.



உள்ளே இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போதே கோரை புற்களின் நடுவிலிருந்து அந்த வெளிச்சப்புள்ளி உற்பத்தியானது.

 

Latest posts

New Threads

Top Bottom