Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
ஊஞ்சல்
அத்தியாயம் 30
அனிதா தன் கையையே உற்று பார்த்து கொண்டிருக்கும் தாசின் கண்களை பார்த்து புரியாமல் "என்னாச்சு ? " என்றாள்.
" இதைப் பாரேன்" என்று அனிதாவின் உள்ளங்கையை அவளிடமே காட்டினான் தாஸ்.
தன் கையில் அழுத்தமாக பதிந்திருந்த சிவப்பு நிற சிலுவை சின்னத்தை பார்த்த அனிதா "ஓ! மை காட்" என்றாள்.
"இது எப்படி உன்னோட கையில் வந்துச்சுன்னு தெரியுதா?" என்றான் தாசு.
" தெரியலையே?" என்றாள் அனிதா குழப்பத்துடன் .
"நல்லா யோசிச்சு பாரு அனிதா. இந்த முள்கம்பியில் இருக்கும் முள்முடிச் சைத்தான் இவ்வளவு நேரம் நீ இறுக்கமாக பிடித்திருந்தாய். அதோட அச்சு தான் உன்னோட கையில் சிலுவை மாதிரி விழுந்திருக்கு. இதே மாதிரி தான் தேவியோட கையிலும் சிலுவை தடம் வந்திருக்கனும். இந்த நாலடி வேலியில் தேவி ஏறி நின்றதால் அவளுடைய காலிலும் சிலுவை குறி தோன்றியிருக்கலாம்" என்றான் தாஸ்
"நீ சொல்றது லாஜிக் படி சரியா இருக்கு. உண்மையாகவே நீ சொன்னபடி கூட நடந்திருக்கலாம்." என்றாள் அனிதா.
"அப்ப தற்செயலா நடந்த எல்லா விசயங்களும் ஓன்றாக சேர்ந்து அமானுஷ்யமான ஒரு உருவத்தை கொடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன்.”
"இருங்க. இதை நான் அக்காவிடம் சொல்கிறேன்" என்ற அனிதா வீட்டினுள் சென்றாள்.
சற்று நேரத்தில் டாக்டரும்லீலாவும் மோகனும் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர்.
தாசின் யூகத்தை கேட்ட மோகன் "நீ சொல்ற மாதிரி கூட இருந்திருக்கலாம்" என்றான்.
"அன்னைக்கு ஒரு நாள் ஊஞ்சலில் ஆடணும்னு இவ அடம் பிடித்த போது நான் தோட்டத்தில் போய் விளையாடுன்னு அனுப்பினேன். அன்னைக்கு நீ சொன்னது போல் நடந்திருக்கலாம்" என்றாள் லீலா.
"இந்த மாதிரி நாம யோசிக்க வேஇல்லையே?" என்றார் டாக்டர் .
"இப்ப அனிதாவிடம் பேசும் போது தான் தற்செயலாக இதை கண்டுபிடித்தேன்" என்றான் தாஸ்.
"இன்னைக்கு நாம் டாக்டர் தணிகாசலத்தை சந்திக்க போகிறோம். நீங்களும் வர்ரீங்களா டாக்டர்?" என்றாள் அனிதா.
"இல்லைம்மா. டிஸ் பென்சரியில் கொஞ்சம் வேலை. என்னால் வரமுடியாது. ஐ ஆம் ஸாரி " என்றார் டாக்டர் .
"ஓகே’ பரவாயில்லை டாக்டர் " என்றான் தாஸ்
காலை பத்து மணி.
டாக்டர் தணிகாசலத்தின் முன்னால் உட்கார்ந்திருந்தனர் அனிதாவும், தாசும்.
அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி தன் முன்னால் உட் கார்ந்திருந்தவர்களை பார்த்த டாக்டர் தணிகாசலம் "சொல்லுங்க. உடம்புக்கு என்ன பண்ணுது?" என்றார்.
"உடம்புக்கு ஒன்னுமில்லைடாக்டர் .இந்த பே சண்டை பத்தி சில விசயங்கள் தெரியனும் " என்றபடி தேவியின் மெடிக்கல் ரிப்போர்டை நீட்டினான்.
"நீங்க பேசண்ட்டுக்கு?" என்று கேள்வி குறியோடு நிறுத்தினார் டாக்டர் தணிகாசலம்
"தாய் மாமா முறையாகுது" என்றான் தாஸ்.
"ஓ ! இந்த குட்டி பொண்ணா? இவள் அப் நார்மலாபிஹேவ் பண்றதா இவங்க பேரண்ட்ஸ் சொன்னாங்க . என்னோட எக்ஸா மின்ல இவங்க இங்க நார்மலாத்தான் இருந்தாங்க.”
"இங்க வித்தியாசமா ஏதும் நடக்கலையாடாக்டர் .?”
"நோ! சீ இஸ்பர்பெக்ட்லி ஆல்ரைட். இதைத் தான் நான் அந்த பொண்ணோட தாத்தாவிடம் கூறினேனே?”
"அவரும் ஒரு டாக்டர் தான் டாக்டர் .”
"இஸிட் ,! இதை அவர் என்னிடம் சொல்ல வே இல்லையே?" என்ற தணிகாசலம் "அவர் எங்கே வேலை செய்கிறார்?" என்றார்.
"வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சின்னதா ஒரு டிஸ் பென்சரிவைச்சிருக்கார்”
" என்னோட நாலேஜிக்கு இப்படி ஒரு டிஸ் பென்சரி இருப்பதே தெரியலை." என்றார் வியப்புடன்.
"நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க டாக்டர் .தேவி வீட்டில் படுக்கையிலிருந்து மிதந்ததா எல்லோரும் சொல்வாங்க. அதை வீடீயோ எடுத்த போது அப்படி அவள் மிதக்க வேயில்லை. ஆனால் எங்க கண்களுக்கு மட்டும் மிதப்பது போல் தெரிகிறது. இது எப்படி டாக்டர் சாத்தியம்?”
"வாட்? நீங்க என்ன சொல்றீங்க? நீங்க சொல்ற விசயத்தை என்னால் நம்ப வே முடியலையே?" என்றார் அதிர்ச்சியுடன் தணிகாசலம்.
" இந்த வீடீயோவை பார்த்தா நீங்களே நம்புவீங்க டாக்டர் " என்ற தாஸ் தன் செல்போனில் இருந்த வீடியோவை பிளே செய்தான்.
முழு வீடியோவையும் இரண்டு முறை ஓட விட்டு பார்த்த டாக்டர் தணிகாசலம் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.
"அந்த வீடியோவில் இருப்பவர்களின் கண்களை மட்டும் பாருங்கள் டாக்டர் . கட்டிலிலிருந்து அரை அடி தூரத்தில் வேறு எதையோ பார்ப்பது போல் இருக்கிறது" என்றாள் அனிதா.
"செல்லில் இருப்பதும் உண்மை. நீங்கள் பார்த்ததும் உண்மை" என்றார் டாக்டர் தணிகாசலம்.
"இது எப்படி சாத்தியம் டாக்டர்?" என்றான்தாசு பதட்டத்துடன் .
சாத்தியம் " என்றார் டாக்டர் தணிகாசலம் அமைதியாக .