Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஊஞ்சல்

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 30



அனிதா தன் கையையே உற்று பார்த்து கொண்டிருக்கும் தாசின் கண்களை பார்த்து புரியாமல் "என்னாச்சு ? " என்றாள்.



" இதைப் பாரேன்" என்று அனிதாவின் உள்ளங்கையை அவளிடமே காட்டினான் தாஸ்.



தன் கையில் அழுத்தமாக பதிந்திருந்த சிவப்பு நிற சிலுவை சின்னத்தை பார்த்த அனிதா "ஓ! மை காட்" என்றாள்.



"இது எப்படி உன்னோட கையில் வந்துச்சுன்னு தெரியுதா?" என்றான் தாசு.



" தெரியலையே?" என்றாள் அனிதா குழப்பத்துடன் .



"நல்லா யோசிச்சு பாரு அனிதா. இந்த முள்கம்பியில் இருக்கும் முள்முடிச் சைத்தான் இவ்வளவு நேரம் நீ இறுக்கமாக பிடித்திருந்தாய். அதோட அச்சு தான் உன்னோட கையில் சிலுவை மாதிரி விழுந்திருக்கு. இதே மாதிரி தான் தேவியோட கையிலும் சிலுவை தடம் வந்திருக்கனும். இந்த நாலடி வேலியில் தேவி ஏறி நின்றதால் அவளுடைய காலிலும் சிலுவை குறி தோன்றியிருக்கலாம்" என்றான் தாஸ்



"நீ சொல்றது லாஜிக் படி சரியா இருக்கு. உண்மையாகவே நீ சொன்னபடி கூட நடந்திருக்கலாம்." என்றாள் அனிதா.



"அப்ப தற்செயலா நடந்த எல்லா விசயங்களும் ஓன்றாக சேர்ந்து அமானுஷ்யமான ஒரு உருவத்தை கொடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன்.”



"இருங்க. இதை நான் அக்காவிடம் சொல்கிறேன்" என்ற அனிதா வீட்டினுள் சென்றாள்.



சற்று நேரத்தில் டாக்டரும்லீலாவும் மோகனும் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர்.



தாசின் யூகத்தை கேட்ட மோகன் "நீ சொல்ற மாதிரி கூட இருந்திருக்கலாம்" என்றான்.



"அன்னைக்கு ஒரு நாள் ஊஞ்சலில் ஆடணும்னு இவ அடம் பிடித்த போது நான் தோட்டத்தில் போய் விளையாடுன்னு அனுப்பினேன். அன்னைக்கு நீ சொன்னது போல் நடந்திருக்கலாம்" என்றாள் லீலா.



"இந்த மாதிரி நாம யோசிக்க வேஇல்லையே?" என்றார் டாக்டர் .



"இப்ப அனிதாவிடம் பேசும் போது தான் தற்செயலாக இதை கண்டுபிடித்தேன்" என்றான் தாஸ்.



"இன்னைக்கு நாம் டாக்டர் தணிகாசலத்தை சந்திக்க போகிறோம். நீங்களும் வர்ரீங்களா டாக்டர்?" என்றாள் அனிதா.



"இல்லைம்மா. டிஸ் பென்சரியில் கொஞ்சம் வேலை. என்னால் வரமுடியாது. ஐ ஆம் ஸாரி " என்றார் டாக்டர் .



"ஓகே’ பரவாயில்லை டாக்டர் " என்றான் தாஸ்



காலை பத்து மணி.

டாக்டர் தணிகாசலத்தின் முன்னால் உட்கார்ந்திருந்தனர் அனிதாவும், தாசும்.



அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி தன் முன்னால் உட் கார்ந்திருந்தவர்களை பார்த்த டாக்டர் தணிகாசலம் "சொல்லுங்க. உடம்புக்கு என்ன பண்ணுது?" என்றார்.



"உடம்புக்கு ஒன்னுமில்லைடாக்டர் .இந்த பே சண்டை பத்தி சில விசயங்கள் தெரியனும் " என்றபடி தேவியின் மெடிக்கல் ரிப்போர்டை நீட்டினான்.



"நீங்க பேசண்ட்டுக்கு?" என்று கேள்வி குறியோடு நிறுத்தினார் டாக்டர் தணிகாசலம்



"தாய் மாமா முறையாகுது" என்றான் தாஸ்.



"ஓ ! இந்த குட்டி பொண்ணா? இவள் அப் நார்மலாபிஹேவ் பண்றதா இவங்க பேரண்ட்ஸ் சொன்னாங்க . என்னோட எக்ஸா மின்ல இவங்க இங்க நார்மலாத்தான் இருந்தாங்க.”



"இங்க வித்தியாசமா ஏதும் நடக்கலையாடாக்டர் .?”



"நோ! சீ இஸ்பர்பெக்ட்லி ஆல்ரைட். இதைத் தான் நான் அந்த பொண்ணோட தாத்தாவிடம் கூறினேனே?”



"அவரும் ஒரு டாக்டர் தான் டாக்டர் .”



"இஸிட் ,! இதை அவர் என்னிடம் சொல்ல வே இல்லையே?" என்ற தணிகாசலம் "அவர் எங்கே வேலை செய்கிறார்?" என்றார்.



"வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சின்னதா ஒரு டிஸ் பென்சரிவைச்சிருக்கார்”



" என்னோட நாலேஜிக்கு இப்படி ஒரு டிஸ் பென்சரி இருப்பதே தெரியலை." என்றார் வியப்புடன்.



"நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க டாக்டர் .தேவி வீட்டில் படுக்கையிலிருந்து மிதந்ததா எல்லோரும் சொல்வாங்க. அதை வீடீயோ எடுத்த போது அப்படி அவள் மிதக்க வேயில்லை. ஆனால் எங்க கண்களுக்கு மட்டும் மிதப்பது போல் தெரிகிறது. இது எப்படி டாக்டர் சாத்தியம்?”



"வாட்? நீங்க என்ன சொல்றீங்க? நீங்க சொல்ற விசயத்தை என்னால் நம்ப வே முடியலையே?" என்றார் அதிர்ச்சியுடன் தணிகாசலம்.



" இந்த வீடீயோவை பார்த்தா நீங்களே நம்புவீங்க டாக்டர் " என்ற தாஸ் தன் செல்போனில் இருந்த வீடியோவை பிளே செய்தான்.



முழு வீடியோவையும் இரண்டு முறை ஓட விட்டு பார்த்த டாக்டர் தணிகாசலம் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.



"அந்த வீடியோவில் இருப்பவர்களின் கண்களை மட்டும் பாருங்கள் டாக்டர் . கட்டிலிலிருந்து அரை அடி தூரத்தில் வேறு எதையோ பார்ப்பது போல் இருக்கிறது" என்றாள் அனிதா.



"செல்லில் இருப்பதும் உண்மை. நீங்கள் பார்த்ததும் உண்மை" என்றார் டாக்டர் தணிகாசலம்.



"இது எப்படி சாத்தியம் டாக்டர்?" என்றான்தாசு பதட்டத்துடன் .



சாத்தியம் " என்றார் டாக்டர் தணிகாசலம் அமைதியாக .​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 31



டாக்டர் தணிகாசலம் சொன்னதை அதிர்ச்சியுடன் ஏறிட்ட தாஸ் "டாக்டர்! நீங்க என்ன சொல்றீங்க?" என்றான்.



அமைதியாக தாசை பார்த்த டாக்டர் "நான் சொல்ற விசயத்தை கவனமாக கேளுங்கள். உங்களால் நான் சொல்வதை நம்ப முடியாமல் கூட போகலாம். நீங்கள் பார்த்த போது தேவி மிதந்ததும், செல்போன் வீடியோவில் அப்படி மிதப்பது போல் எந்த காட்சியும் பதிவாக ததும் உண்மை என்றால் என்னோட யூகமும் உண்மையாக இருக்க சாத்தியம் உண்டு”



"உங்களோட யூகத்தை சொல்லுங்கள் டாக்டர் .நான் நம்ப முயற்சி பண்றேன்." என்றான் தாஸ்.



"நான் சொல்கிற விசயம் நான் படித்த கேள்விப்பட்ட மருத்துவ அறிவை வைத்து யூகமாக சொல்வது. அது அப்படியே உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மனித உடலை குணமாக்க எத்தனையோ மருந்துகள் உள்ளன. அதில் பல பிரிவுகளும் இருக்கின்றன. அப்படி ஓரு பிரிவு தான் ஹாலுசினேசன் டிரக் .இதை எதற்கு பயன்படுத்துவோம்னா கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் மனநோயாளிகளை கட்டுப்படுத்த தனிமையில் வைக்க பயன்படுத்துவோம்.இந்த மருந்தோட விசேசம் என்னன்னா இதை எடுத்துக் கிட்டதும் பொய்யான பிரமையான தோற்றங்கள் அவனை சுற்றி ஏற்பட்டு உண்மை எது?பொய் எது?ன்னு அவனால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பி விட்டு விடும். இந்த மருந்தோட தாக்கத்தால் நோயாளிக்கு மனக் கிளர்ச்சி ஏற்பட்டு அவனே பறப்பது போலவும் பொருள்கள் தலைகீழாக மிதப்பது போலவும் தோணும். அப்படி ஏதோ ஒரு ஹலுசினேசன் டிரக் உங்களுக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதோட விளைவாகதேவி பறப்பது போன்ற பிரம்மையான தோற்றம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம்.”



"ஆனா இதெல்லாம் மருத்துவம் படிச்சவர்களால் தானே செய்ய முடியும்? அதுவும் ஒரு சின்ன குழந்தை பறப்பது போல் எங்களுக்கு காட்டுவதால் யாருக்கு என்ன நன்மை “



"சரியான கேள்வி தான். எனக்கென்னவோ தேவியோட தாத்தா அந்த டாக்டர் மேலதான் டவுட்டா இருக்கு “



" ஆனால் அவரும் தானே தேவி மிதப்பதை பார்த்திருக்கிறார்?”



" அப்பவேற யாராவது இதையெல்லாம் செய்திருக்கலாம் ஆனா எதற்காக ஏன் செய்தார்கள் என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.”



"ஓகே டாக்டர் “



"எதுக்கும் டாக்டர் மேல் ஓரு கண் இருக்கட்டும். என்னோட நாலேஜிக்கு அவரோடடிஸ் பென்சரிவரவேயில்லை. நானும் என்னோட சாக்கியால்அவரைப் பற்றி விசாரித்து பார்க்கிறேன். உங்க நம்பரை கொடுத்துட்டு போங்க” என்றார் தணிகாசலம்.



போன் நம்பரை கொடுத்து விட்டு கார்டரில் நடக்கும் போது “ டாக்டர் ஓரு வேளை போலி டாக்டரா இருப்பாரோ?" என்றாள் அனிதா.



" இந்த சின்ன கிராமத்துல டி ஸ்பென்சரிவைச்சு என்ன பண்ண போறாருன்னு பல தடவை யோசிச்சிருக்கேன்." என்றான்தாசு.



"ஆனா அவரோட பூர்வீகத்தை பற்றி உங்க யாருக்கும் ஒன்னும் தெரியலையே?”



"அது அவரோட பர்சனல் அதை கேட்டது நாகரீக மல்ல. தேவியை அவரோட சொந்த பேத்தி மாதிரின்னு பல முறை சொல்லியிருக்கிறார். அவரை வில்லனா நினைக்க வே என்னால் முடியவில்லை.”



"இந்த பிரச்சனையில் என்னோட பீரியட் பிராபளத்தை மறந்து விட்டேன். நீ சொன்னது போல் நாளைக்கு ஒரு நாள் வெயிட் பண்ணி பார்ப்போம்." என்றாள் அனிதா.



"ஓகே.வா. எதிர்த்த பேக்கரியில் ஒரு டீயை போட்டுவிட்டு அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிப்போம்”



இருவரும் ஹாஸ்பிடல் எதிரே இருந்த பேக்கரியில் நுழைந்தனர். "என்ன சாப்பிடறீங்க?" என்ற பையனிடம் "இரண்டு டீ" என்றான் தாஸ்.

"எப்படியோ தேவி மிதந்ததுக்கு காரணம் தெரிந்து விட்டது." என்றாள் அனிதா..



" அந்த மருந்தை வீட்டுக்கு உள்ளே இருக்கும் யாராவது தான் நமக்கு கொடுத்திருக்க வேண்டும்”



"அப்படி நாம சந்தேகப்படும்படி யாரும் இல்லையே? ஒரு வேளை நாம் தினமும் பயன்படுத்தும் பொருள் ஏதாவதில் அந்த டிரக் கை கலந்திருப்பார்களோ?”



"நீ நினைப்பது போலவும் இருக்கலாம். அந்த பொருள் நாம தினமும் இரவு சாப்பிடுகிற பொருளாகத்தான் இருக்கணும். அதனால் தான் இரவில் தேவி மிதப்பது போல் நமக்கு தோணியிருக்கு.”



"அது என்ன பொருள் னு இனி தான் யோசிக்கனும்”



வந்த டீLம்ளரை எடுத்து கொண்டு உறிஞ்சிய தாஸ் "அந்த பத்திரிக்கை நிருபர் சிவநேசனுக்கு எப்படி தேவியோட நியூஸ் போச்சுன்னு தெரியணும்.”



"ஆமாம். அதை நான் மறந்து விட்டேன்.”



கடைக்குள் யாரோ "இன்னைக்கு என்ன தேதி?" என்றார்கள். கடைகாரன் "மன்த்லி காலண்டரை பாருங்க" என்றான்.



ஏதேச்சையாக கேட்ட சம் பாசணையில் ஈர்க்கப்பட்ட. தாஸ் மாதகாலண்டரை பார்த்தான்.



காலண்டரின் முகப்பை பார்த்தவனின் முகம் மலர்ந்தது.



"அனிதா!அங்கே பார்! உன் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது" என்று சிரித்தான் தாஸ்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 32



தாசின் உற்சாக குரலைக் கேட்ட அனிதாவிற்கு ஓன்றும் புரியவில்லை. காலண்டரில் எதைப் பார்த்து தாஸ் இப்படி சந்தோஷ குரலை வெளிப்படுத்துகிறான் என்று அவளுக்கு சுத்தமாக ப் புரியவில்லை.



"தாஸ்! நீ சொல்வது எனக்கு புரியவில்லை," என்றாள் அனிதா.



"இந்த காலண்டரோட மேற்பகுதியை கவனி அனிதா. இது பெருந்துறை பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக அச்சடிக்கப்பட்ட காலண்டர் இது. இதோட மேல் பாகத்துல தலைவர், செயலாளர் னு எல்லோருடைய பதவியும் பேரும், போன் நம்பரும் இருக்கு. அதில் சிவநேசனின் பேன்சி போன் நம்பரும் இருக்கு. இந்த சங்கத்துல அவன்பொருளாளர் பதவியில் இருப்பது போல் தெரியுது. இந்த பேன்சி போன் நம்பரை எங்கியோ பார்த்தது போல் இருக்கேன்னு நினைச்சேன்" என்ற தாசுதன்மணி பர்வின் வைத்திருந்த சிவநேசனின் விசிட்டிங் கார்டை தூக்கி போட்டான்.



அதை எடுத்து காலண்டர் நம் பரோடு ஓப்பிட்டு பார்த்த அனிதா தாஸ் சொல்வது உன்மை என்று உணர்ந்து கொண்டாள்.



"இது மூலமா நீ என்ன சொல்ல வருகிறாய்?" என்றாள் அனிதா,



"எனக்கென்னமோ ஆஸ்பிட்டல்ல இருக்கிற யாரோ இந்த காலண்டர் ல இருக்கிற சிவநேசனுடைய எண்ணுக்கு போன் பண்ணி தேவி விசயத்தை சொல்லி இருப்பாங்கன்னு தோணுது." என்றான் தாஸ.



" அது யாருன்னு நீ நினைக்கிறாய்?”



"டாக்டர்னு டக்குன்னு சொல்லி விடலாம். அதனால் அவருக்கு என்ன கிடைக்கப் போகுதுன்னு தான் தெரியலை. ஆனால் இந்த விசயம் பேப்பரில் வரணும்னு யாரோ நினைத்திருக்கிறார்கள். அதற்கு சிவநேசனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.இந்த நியூஸ் பேப்பரில் வந்து கண்டரவர்சியாவதன் மூலம் யாரோ எதையோ சாதிக்க முயற்சி பண்ணியிருக்காங்க " என்றான் தாசு.



"நீ சொல்வது உண்மையென்றே வைத்து கொள்ளலாம். பேப்பரில் நியூஸ் வர வைத்தது டாக்டர் என்றே வைத்து கொள்ளலாம்.அந்த நியூஸ் மூலமாக டாக்டர் என்ன விதமான பலனை அடைந்து விடப் போகிறார்? எனக்கு புரியலை " என்றாள் அனிதா.



"இப்போதைக்கு உன்னுடைய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் ரொம்ப சீக்கிரமாகவே உன்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்துவிடும். என்னுடைய இந்த செல்போன் நம்பர் கண்டுபிடிப்பு கூட வெறும் யூகமாக போய்விட வாய்ப்பு அதிகம். தண்ணீரில் மிதக்கும் ஐஸ் க்யூப் பின் மேல் முனையைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீருக்கு உள்ளே முழுகியிருக்கும் முக்கால் பாக ஐஸ்கியூப்பை பற்றி நமக்கு ஒன்று மே தெரியாது என்பது தான் உண்மை. நமக்கு கிடைக்கும் ஆதாரங்களையும் யூகங்களையும் வைத்து நாமாக ஓரு உருவம் செய்து கொண்டிருக்கிறோம். அது பிள்ளையாரா குரங்கான்னு இனிமேல் தான் தெரியும். " என்றான்தாசு யோசித்தபடி.



அதே நேரம் ஒரு வயதான பெரியவர் ஹாஸ்பிடல் ரோட்டை கடந்து பேக்கரியில் நுழைந்தார். "என்னா வெய்யிலு? அப்பா ஆளை கொன்றும் போல ! மாஸ்டர் ஒரு டீ" என்றபடி அனிதாவிற்கு எதிரே இருந்த சேரில் உட்கார்ந்தார். அவரது முகம் தாசிற்கு ரொம்ப பரிச்சயமான பழகிய முகமாக தெரிந்தது.தாஸ் தன் மூளையை கசக்தி கொண்டிருந்த போது

தாசை அடையாளம் கண்டுகொண்டதன் அடையாளமாக சிநேகமாக சிரித்த பெரியவர்" என்ன தம்பி? சௌக்கியமா? என்னை ஞாபகம் இருக்கா?" என்றார்.



"எங்கியோ பாத்த மாதிரி இருக்கு. சரியா ஞாபகம் வரலை. மன்னிச்சுருங்க பெரியவரே.!" என்றான் தாஸ்.



" உங்க அக்கா வீடு கட்டும் போது அந்த பில்டிங் முடியற வரைக்கும் நான் தான் வாட்ச்மேனா இருந்தேன். அக்காவும் மாமாவும் செளக்கியமா தம்பி?." என்று புன்னகைத்த பெரியவரை



"அய்யய்யோ நாராயணன் தானே நீங்க? வயசானதால சரியா அடையாளம் தெரியலை" என்றான் தாசு.



"எனக்கு மே உங்களை அடையாளம் தெரியலைதம்பி . கொஞ்சம் குண்டாயிட்டீங்க" என்றார் நாராயணன்.



"இது அனிதா, நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு" என்று அளிதாவை அறிமுகம் செய்தான்தாசு.



"மகராசியா இரும்மா. தம்பி மாதிரி நல்ல பிள்ளைய இந்த காலத்துல பாக்குறது ரொம்ப கஷ்டம்மா" என்றார் நாராயணன்.



" கேட்டுக்க" என்று காலரை நிமிர்த்திய தாசு "எங்கே இந்த பக்கம்?" என்றான்.



"பேரனுக்கு தீக்காயம் தம்பி. அதான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கேன்.”



தாஸ் சட்டென்று நிமிர்ந்தான்.



“ தீக்காயமா? எப்போது நடந்தது?”



"நேத்து நைட்டு தம்பி”



"நாராயணன் நான் ஒரு கேள்வி கேட்பேன். மறைக்காமல் உண்மையை சொல்லனும்”



" கேளுங்க தம்பி”



தாஸ் நள்ளிரவில் வரும் லைட் வெளிச்சத்தை விவரிக்க ஆரம்பித்தான். அதைக் கேட்க கேட்க நாராயணனின் முகம் இருளடைய ஆரம்பித்தது.



"இன்னுமா அந்த வெளிச்சம் வருது?" என்றார் நாராயணன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 33



சக்ரவர்த்தி சமையல்காரன் குஞ்சப்பன் இல்லாத வெறுமையை மாளிகையின் தனிமையில் உணர்ந்து கொண்டிருந்தார்.மகேந்திரனின் மனைவி செம்பாவிற்கு கணிசமான பணத்தை கொடுத்து அனுப்பினாலும் அவரது உள் மனம் மகேந்திரன் குணமடைந்து வந்து விடக் கூடாது என்று வேண்டிய படி இருந்தது. நல்ல நிலையில் இருந்த போதே ஓரு ஓட்டுண்ணியாக சக்ரவர்த்தியை அவன் உறிஞ்சி கொளுத்திருந்தான்.



தன்னை மிரட்டி மிரட்டி பறித்த அத்தனை பணமும் எங்கே தான் போய் தொலைந்திருக்கும் என்று சில நேரம் சக்ரவர்த்திக்கு ஆச்சரியமாக இருக்கும். அத்தனை பணமும் பெண்கள், சீட்டாட்டம் என்றே ம கேந்திரன் கரைத் திருப்பான் என்று மகேந்திரனின் குணத்தை அறிந்த ஆழ் மனது சொன்னது.



தான் செய்த தவறுக்கு ஓரே சாட்சியாக இருக்கும் மகேந்திரன் செத்துத் தொலைந்து விட்டால் எஞ்சிய நாட்கள் நிம்மதியாக கழியும் என்று சக்ரவர்த்தி நம்பினார். டாக்டரால் திறக்க முடியாத தன் மனதிற்கு தான் போட்டு வைத்திருக்கும் மனப்பூட்டுமகேந்திரனின் மரணத்தின் மூலம் திறந்து கொள்ளும் என்பது சக்ரவர்த்தியின் திடமான நம்பிக்கை.மகேந்திரன் மிரட்டி மிரட்டி பணம் பறித்ததாலேயே டாக்டரும் தன்னிடம் அது போல் பணம்பறித்து விடுவாரோ என்று பயந்து போன சக்ரவர்த்தி தன் மன ரகசியத்தை இன்னும் ஆழமாக புதைத்து கொண்டு விட்டார்.



சமையல்கார குஞ்சப்பன் தன் தம்பியின் கல்யாணத்திற்கு கிளம்பி போனபின் ஸ் விக்கியில் தனக்கு விருப்பப் Uட்டதை ஆர்டர் செய்து ஐந்து mட்சத்திரங்களை அள்ளி வழங்கி கொண்டிருந்தார் சக்ரவர்த்தி .



அன்றைய நாள் ரொம்பவும் போரடித்ததால் ரீடிங் ௹மிற்குள் நுழைந்தார் சக்ரவர்த்தி அவர் எப்போதும் அந்த பக்கம் வந்ததில்லை.அது அவருடைய அண்ணன் விநோத் சக்ரவர்த்தியின் உருவாக்கம் .அவன் ஒரு புத்தகப் புழு. முகப்பில் தொங்கி கொண்டிருந்த பிரேம் செய்யப்பட்டதன் அண்ணனின் புகைப்படத்தை நின்று நிதானமாக பார்த்தார் சக்ரவர்த்தி வசீகரமான புன்னகையுடன் பெண்களை ஓரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகில் இருந்தான் வினோத் சக்ரவர்த்தி .



பெயரும் புகழும் கொண்ட பரம்பரையின் இரண்டு வாரிசுகள் வினோத் சக்ரவர்த்தியும், ராகுல் சக்ரவர்த்தியும். அண்ணன் வினோத் சக்ரவர்த்தி நல்ல படிப்பாளி. பெண்களை வீழ்த்துவதில் மன்னன். பிளேபாயாக இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் சாமர்த்தியமாக நல்லவன் வேடம் போட்டு ஏமாற்ற தெரிந்தவன். ராகுல் சக்ரவர்த்திக்கு வினோத் மீது எப்போதும் எல்லா இடங்களிலும் முதல் மரியாதை அவனுக்கே கிடைக்கிறதே என்ற பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் உண்டு. அதை மறைக்க பெரும்பாடுபட்டு கொண்டிருந்தார்.வினோத் சக்ரவர்த்தி இல்லாமல் போய் விட்டால் அவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதைகளும், மகுடங்களும் தனக்கே சூட்டப்படும் என்பது சக்ரவர்த்தியின் தீர்மானமான எண்ணம். யாரையாவது காதலித்து இழுத்து கொண்டு வந்து தன் குலப் பெருமைக்கு அண்ணன் இழுக்கை தேடி தருவான் என்று சக்ரவர்த்தி வெகு ஆவலாக காத்திருந்தார்.



ஆனால் வினோத் சக்ரவர்த்தி பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி இருந்தாலும் சுவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்து எப்படியோ செட்டில் செய்து பிரச்சனையை முடித்து விடுவான்.



இலவு காத்த கிளியாக காத்திருந்த சக்ரவர்த்திக்கு ஜாக்பாட் டாக கிடைத்தது ஒரு வாய்ப்பு . ஓரு முறை கொடைகானலுக்கு டூர் போய் விட்டு வந்த வினோத் சக்ரவர்த்தி காய்ச்சல் வந்து படுத்த படுக்கையானான்.சக்ரவர்த்திக்கு உள்ளிருந்த மிருகம் இது தான் அண்ணனை வீழ்த்த சரியான தருணம் என்று உணர்ந்து இரை தேட கிளம்பியது.



தனக்கு தோதான சில டாக்டர்களை விலைக்கு வாங்கிய சக்ரவர்த்தி ஆரோக்கியமான தன் அண்ணனுக்கு பிளட் கேன்ஸர் என்று சொல்ல வைத்தான். வினோத் சக்ரவர்த்தி தலையில் இடிவிழந்ததைப் போல் உணர்ந்தான். தான் செய்த பாவமே தன்னை தண்டிப்பதாக குற்றவுணர்வில் தவிக்க ஆரம்பித்தான். கொஞ்சம் கூட மனசாட்சியில்லாத சக்ரவர்த்தி பிளட் கேன்சருக்கான மருந்துகளையும், மாத்திரைகளையும், ஊசிகளையும், போட வைத்து சிகிச்சையை துவக்கினான்.



சக்ரவர்த்தி ஹோமியோபதியை பற்றியும், அதை கண்டுபிடித்த சார்லஸ் ஹனி மேனனப் பற்றியும் படித்து தெரிந்து வைத்திருந்தார். அதை நேர் எதிராக நோயே இல்லாத ஓருவனுக்கு பரீட்சை செய்து கொண்டிருந்தார்.



ஆரோக்கியமான வினோத் சக்ரவர்த்தி வீரியமான மருந்துகளை தொடர்ந்து எடுத்து கொண்டதால் உடல் நலிவடைய தொடங்கி மரணத்தை நோக்கி பயணமாக ஆரம்பித்தான். அண்ணனை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற பாச போர்வையில் எமனது பாச கயிறுக்கு அருகே அண்ணனை கொண்டு போய் நிறுத்தி கொண்டிருந்தார் சக்ரவர்த்தி .



சாகும் தருவாயில் வினோத் சக்ரவர்த்தி ஒரு ஆப்பை ராகுல் சக்ரவர்த்திக்கு வைத்து விட்டு போனதில் தான் சக்ரவர்த்தி சிக்கி கொண்டார். அதிலிருந்து மீண்டு திரண்ட சொத்துகளை தன் வசம் கொண்டு வர இரண்டாவதாக இன்னொரு கொலையை செய்தார் சக்ரவர்த்தி



தன் அண்ணனின் புகைப்படத்தின் மீது எச்சிலை துப்பிய சக்ரவர்த்தி "அந்த கொலைக்கு காரணமே நீ தாண்டா?" என்றார் ரௌத்ரமாக .​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 34



தன் அண்ணனின் புகைப்படத்தில் துப்பிவிட்டு ரீடிங் ரூமிற்குள் நுழைந்தார் சக்ரவர்த்தி . ஓவ்வொரு செல்பிலும் துறைவாரியாக பிரித்து அடுக்கப்பட்ட அந்த சிறிய நூலகம் அவரை வரவேற்றது. மேஜைமேல் கிடந்த புத்தகம் ஒன்றை கையில் எடுத்து கொண்டு அதன் தலைப்பை பார்த்தார் சக்ரவர்த்தி . "இறந்தவன் இன்னும் இருக்கிறான்" என்றது தலைப்பு.



புத்தகத்தை தூக்கி ஒரு மூலையில் வீசினார் சக்ரவர்த்தி .அவரால் அந்த புத்தகத்தின் தலைப்பு தரும் பீதியிலிருந்து வெளியே வர முடியவில்லை. அவருடைய மூடிற்கு எந்த புத்தகத்தை படித்தாலும் அவருடைய குற்ற உணர்வு உறுத்தத்தான் செய்யும். புத்தகத்தில் இருக்கும் எதாவது ஒரு வாக்கியம் அவரை குறிப்பதாக அவர் மறக்க நினைப்பதை நினைவூட்டுவதாக அவருக்கு தோன்றும் என்பதால் எந்த புத்தகத்தையும் படிக்க விரும்பாமல் மெளனமாக வெளியே வந்தார்.



ஹாலில் இருந்த சோபாவில் தனியாக நெடுநேரம் அமர்ந்திருந்தவர் கடிகாரத்தின் ஓசையை கேட்டு நிமிர்ந்தார்.மணி மதியம் இரண்டு மணி . ஸ் விக்கியில் உணவு ஆர்டர் செய்ய செல்போனை எடுக்க திரும்பினார்.



அவர் வழக்கமாக வைக்கும் டீப்பாயின் மீது செல்போனை காணவில்லை. எங்கே வைத்து தொலைந்திருப்போம் என்று நியூஸ் பேப்பரை யெல்லாம் எடுத்து விட்டு தேட ஆரம்பித்தார். மேஜை டிராயரை திறந்தவரின் கண்களில் அகப்பட்டது அந்த சின்ன பெட்டி .அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் சக்ரவர்த்திக்கு உண்டானது. அதே நேரம் அந்த சின்ன பெட்டியை எங்கேயோ பார்த்தது போலவும் அவருக்கு தோன்றியது.



தன் நடுங்கும் கரங்களால் அந்த பெட்டியை மெதுவாகத் திறந்தார் சக்ரவர்த்தி பெட்டியின் உள்ளே வெல்வெட் பரப்பில் கச்சிதமாக உட்கார்ந்திருந்தது அந்த மோதிரம். பார்க்கவே வித்தியாசமாக கண்களை கவரும் அழகுடன் இருந்த அந்த மோதிரத்தை விழிகள் விரிய வெறித்துப் பார்த்தார் சக்ரவர்த்தி .



"இது அவனுடைய து .இது எப்படி இங்கே வந்தது?" சக்ரவர்த்தியின் தலை கிறுகிறுவென சுழல ஆரம்பித்தது. அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்து கொண்டவர் தன் உடைகளை நனைத்து கொண்டு சோபாவில் விழுந்தார்.



அவரது மனம் பின்னோக்கி ஒரு கால எந்திரமாக பயணம் செய்தது. வினோத் சக்ரவர்த்தி மரணப்படுக்கையில் கிடந்த போது தனியறையில் டாக்டரும் சக்ரவர்த்தியும் தனித்திருந்தார், .



"ஸாரி! மிஸ்டர் சக்ரவர்த்தி .உங்க அண்ணன் இறந்து அரை மணி நேரமாகுது. நடக்க வேண்டிய காரியங்களை பாருங்க.” என்றார் டாக்டர் .



"நேத்தே சொந்தக்காரர்களுக்கு தகவல் சொல்லி விட்டேன் டாக்டர் “



"ஓகே. தயவு செய்து பாடியை புதைத்து விடாதீர்கள். நாளைக்கு யாராவது தோண்டி எடுத்தால் நாம் இருவருமே மாட்டிக் கொள்வோம். அப்புறம் என்னோட ஷேர்?”



"சீக்கிரமாகவே உங்களுக்கு வேணும்கிறதை செட்டில் பண்ணிடுறேன் டாக்டர் “



"குட். இந்த விசயம் நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது. அப்புறம் வினோத்தோட பாடியில் இருக்கும் செயின், மோதிரம், பிரஸ்லெட் எல்லாத்தையும் கழட்டிக்குங்க”



"நான் அதைப் பார்த்து கொள்கிறேன் டாக்டர் “



அதற்கு பின்னால் வெளியே வந்த சக்ரவர்த்தி அண்ணனுக்காக போலியாக அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது கழற்றிய மோதிரத்தை செயினை பிரஸ் லெட்டை டிராவில் வைத்து பூட்டியது அவருக்கு மெல்லியதாக நினைவுக் கு வந்தது.



அவர் முணுமுணுத்தார். "இனி இது இங்கு இருக்கக் கூடாது”



அவர் மனம் நினைத்தது.இந்த சனியன்கள் கொஞ்ச நாட்கள் முன்பாக கிடைத்திருந்தால் செம்பாவிட மோ இல்லை குஞ்சப்பனிட மோ கொடுத்து தலைமுழுகியிருக்கலாம்.



இனி இது இங்கிருக்கும் வரை அவனுடைய நினைவுகள் தொடர்ந்து வந்து நிம்மதியை குலைக்கும். இதை யாரிடமாவது கொடுத்து தலைமுழுக வேண்டும். யாரிடம் கொடுப்பது?



சக்ரவர்த்திக்கு ஏனோ டாக்டரின் முகம் நினைவுக் கு வந்தது. பாவம் அவர். நமக்கு எவ்வளவோ செய்திருக்கிறார். நாம் அவரை இதுவரை மிரட்டி மீன் பிடித்திருக்கிறோம். சிகிக்சை கட்டணம் என்று எதையும் இதுவரை அவருக்கு தந்ததில்லை.



பேசாமல் இதை கட்டணமாக அவருக்கு கொடுத்து திக்குமுக்காட வைத்து விடலாம் என்று சக்ரவர்த்திக்கு தோன்றியது.



டாக்டரைப் பற்றிய எல்லா ரகசியங்களும் சக்ரவர்த்திக்கு தெரியும். அதை வெளியிடாமல் இருக்க வே எந்த கட்டணமும் வாங்காமல் தனக்கு சிகிச்சையளிக்கிறார் என்பதையும் இந்த நகைகளை ஒரு பொருட்டாக அவர் மதிக்கப்போவதில்லை என்பதையும் சக்ரவர்த்தி அறிந்திருந்தார்.



தான் எப்படி மகேந்திரனிடம் மாட்டி கொண்டு தவிக்கிறோமோ அதே போல் தன்னிடம் சிக்கி கொண்டு டாக்டர் தவிப்பதையும் சக்ரவர்த்தி நன்றாகவே அறிவார். தன் மனப் பூட்டை டாக்டர் உடைத்து விட்டால் தான் டாக்டரிடம் மாட்டிக் கொள்வோம் என்பதும் சக்ரவர்த்திக்கு தெளிவாகவே தெரியும்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 35


நாராயணன் "இன்னுமா அந்த வெளிச்சம் வருது?" என்று கேள்விக்குறியோடு கேட்டதும் தாசிடம் பரபரப்புதொற்றிக் கொண்டது.



" என்ன சொல்றீங்க நாராயணன்? அப்ப நம்ம வீடு கட்டும் போதிருந்து அந்த வெளிச்சம் வருதா? நீங்க அதை பார்த்திருக்கிறீர்களா?" என்றான் படபடப்புடன் தாசு.



"நம்ம வீட்டுக்கு பவுண்டேசன் போட்டதிலிருந்து அந்த வெளிச்சம் வருவதை நான் பார்த்திருக்கிறேன் தம்பி .அது இனிமேல் வராதுன்னு நினைச்சேன். நீங்க சொல்வதைப் பார்த்தால் எனக்கு ஒரு சந்தேகம் வருது." என்றார் நாராயணன்.



"அந்த வெளிச்சம் எங்கிருந்து வருது? நைட் டார்ச் சோட நம்ம வீட்டுக்கு வருபவனின் நோக்கம் என்ன? அவனுடைய நோக்கம் என்ன?" என்றான் தாஸ்.



" என் பின்னாடியே வாங்க தம்பி. உங்களோட எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும்." என்றார் நாராயணன்.



"எங்கே போகப் போகிறோம்?”



" ஆஸ்பத்திரிக்கு .தம்பி எனக்கு ஓரு சத்தியம் பண்ணிக் கொடுங்கள். அங்கே நடக்கிற எந்த விசயத்தையும் தயவு செய்து வெளியே சொல்ல மாட்டேன்னு "



" என்னமோ புதிர் போடுறீங்களே நாராயணன்?”



" எல்லாமே காரணமாத்தான் கேக்கிறேன் தம்பி”



"சரி. அங்கே என்ன நடந்தாலும் நாங்க இரண்டு பேரும் வெளியே மூச்சு விட மாட்டேன். என்னை நம்புங்கள்" என்றான் தாஸ்.



"நம்புறேன் தம்பி" என்ற நாராயணன் இருவரையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தார்.



ஏற்கனவே பழக்கப்பட்ட காரி டரில் நடந்து ஒரு அறைக்குள் நுழைந்தார். "வாங்க தம்பி" என்றார்.



இருவரும் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி உள்ளே தாழிட்டவர் படுக்கையில் படுத்தபடி எதுவும் புரியாமல் விழித்தவனை காட்டி"நேத்து உங்க வீட்டுக்கு வந்து தீவைத்தது இவன் தானான்னு பார்த்து சொல்லுங்க" என்றார்.



கை கருகிப் போய் படுத்திருந்தவனை பார்த்த. தாசு " இவனை மாதிரி தான் தெரியுது" என்றான்.



நாராயணன் கோபமாக "நீ இன்னும் திருந்தலையா?" என்றார் கோபமாக .



அவன் தலையை குனிந்து கொண்டான். தாசு குழப்பத்துடன் .. "இங்கே என்னதான் நடக்குது" என்றான்.



"நான் சொல்றேன் தம்பி . இவன் என் மகன். அம்மா இல்லாத பிள்ளை நான் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்து தறுதலையாகிட்டான். சாராயம் காய்ச் சுறது, பவுடர் விக்கிறதுன்னு வழி தவறி போயிட்டான். உங்க வீட்டு வேலை நடக்கும் போது எனக்கு உடம்பு சரியில்லாத போது இவனை அனுப்புவேன்.இவன் அங்கே எங்கியோ பவுடர் பொட்டலத்தை ஒளித்து வைத்து விட்டு நைட் எடுத்துட்டு போவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான். கொஞ்ச நாளில் நான் அதை கண்டுபிடித்து இவனை கண்டித்தேன். உங்க வீட்டு வேலை முடிந்து கிரகப்பிரவேசம் நடக்கும் போது ஒரு அடிதடி பிரச்சனையில் ஒருத்தனை கத்தியில் குத்திட்டு ஜெயிலுக்கு போயிட்டான்.. இப்பத்தான் ஒரு மாசம் முன்னாடி வெளிய வந்தான். இதை வெளிய சொல்லிடாதீங்க தம்பி" என்றார் நாராயணன்.



"இது தானா விசயம் " என்றான்தாசு ஏமாற்றத்துடன் .



"ஆமாம். அப்பா அங்கே இல்லாதது எனக்கு வசதியாக போய்விட்டது. நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்னாடி அங்கே ஓளித்து வைத்திருந்த மீதி சரக்கை எடுத்து விற்க ஆரம்பிச்சிட்டேன். கடைசியா இருந்த கொஞ்சம் சரக்கை எடுக்க வந்த போது தான் உங்க கிட்ட மாட்டினேன். அப்படி மாட்டாம தப்பிக்கும் போது தான் கோரைப் புல்லிற்கு தீ வைத்தேன். அதில் எனக்கும் காயமாகி விட்டது" என்றான் நாராயணனின் மகன்.



" என் பேரை கெடுக்கவே வந்து பொறந்தியா?" என்று அழ ஆரம்பித்தார் நாராயணன்.



"இனிமேல் தப்பு பண்ண மாட்டேன். என்னை நம்புப்பா" என்றான் அவன்.



"நீ பண்ணிய வேலையால் எங்களுக்கு எவ்வளவு குழப்பம் தலைவலி தெரியுமா?" என்ற தாஸ் வீட்டில் நடந்தவற்றை விவரித்தான்.



"என்னது குழந்தை மிதக்குதா?" என்று பீதியடைந்தவன்" அந்த பொண்ணு பேரு என்ன?”



"தேவி”

"இல்லை. ஊஞ்சலில் செத்துப் போச்சே அந்த பொண்ணு பேரு?”



"மாயா”



"அந்த பொண்ணு சாகலை. அவளை ஒருத்தன் ஊஞ்சல் கயிறால் கழுத்தை நெரித்து கொன்றான். அதை நான் என் கண்ணால பார்த்தேன்" என்றான்.



" என்ன சொல்கிறாய்?" என்றான் தாசு உடலில் உள்ள அட்ரீனல் எகிற .



"ஆமா. நான் சொல்வது உண்மை. ஒரு நாள் பவுடரை எடுக்க வந்த நான் போதை அதிகமாகி புதருக்குள்ளயே படுத்து தூங்கிட்டேன். காலைல தூங்கி எந்திரிக்கும் போது அந்த பொண்ணு ஊஞ்சலில் ஆடுவதை பார்த்து கொண்டிருந்தேன் - அப்போதுதான் அந்த டாக்டர் வாக்கிங் போனார். அவர் போன பின்னால் அவன் அங்கே வந்தான். அந்த குட்டி பொண்ணை கயித்தை இறுக்கி கொன்றான்.”



"யார் அது?”



" அவன் பேர் தெரியாது. ஆனா அவனை இந்த ஆஸ்பிட்டலில் நேத்து பார்த்தேன்.”



"நீ ஏன் இதை வெளியே சொல்லவில்லை.”



"நானொரு அக்யு ஸ்ட். என்னை யாரும் நம்ப மாட்டாங்க. மேலும் அவனுக்கு செல்வாக்கு அதிகம். அவனை எனக்கு தெரியும் “



"யாரு அது?”



"ரும் நெம்பர் 12ல் அவனையும் அவன் மனைவியையும் நேற்று பார்த்தேன்”



"தாங்க்ஸ்" என்ற தாசு புயலாக வெளியேறினான்.

 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 36


நாராயணனிடம் சொல்லிகொள்ளாமல் வெகு வேகமாக வெளியேறியதாசு 12ம் எண் அறையை நோக்கி விரைந்தான். அவனுக்கு பின்னால் அரக்க பரக்க ஓடி வந்தாள் அனிதா.



"இப்ப நாம் எங்கே போகிறோம்?" என்றாள் அனிதா.



"நாராயணனின் மகன் சொன்ன அந்த 12ம் நம்பர் பே சண்டை பார்க்க “



"பார்த்து நாராயணின் மகன் சொன்னதெல்லாம் உண்மையான்னு கேக்க போறியா?" என்றாள் அனிதா.



"ஆமாம்”



"தாஸ். நிலமை உனக்கு புரியுதா? நாராயணனின் மகன் ஒரு அக்யு ஸ்ட். அவன் சொன்னதை யாரும் நம்ப மாட்டாங்க. கோர்ட்டுக்கு போனா கூட நம்பத்தகுந்த சாட்சியல்லன்னு இவனுடைய சாட்சியை ஒரு திறமையான வக்கீலால் தள்ளுபடி செய்ய வைக்க முடியும்.”



"எனக்கு புரியுது அனிதா. நான் வீசப் போவது வெறும் கல்தான். விழுந்தா மாங்காய் இல்லைன்னா வெறும் கல்தான் எனக்கென்னவோ அந்த பத்திரிக்கை நிருபர் சிவநேசனுக்கு இந்த விசயத்தை சொன்னது 12ம் நெம்பர் நோயாளியாக கூட இருக்கலாம். ஆனால் இவனுக்கு ஏதாவது பெரிய லாபம் கிடைத்திருக்கலாம். இதெல்லாம் அவனிடம் நாம் பேசினால் தான் தெளிவாகும்." என்றான் தாஸ்.



போகும் வழியில் ஸ்டுல்மேல் யாரோ வைத்திருந்த பழம், பிஸ்கட் அடங்கிய கேரி பேக்கை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்த பின் எடுத்துக் கொண்டான்.



" பட்டப்பகலிலேயே திருட்டா?" என்றாள் அனிதா.



"கம் முன்னு வா”

என்ற தாசு 12ம் ரூம் கதவை தட்டினான். வெளியே இரண்டு ஜோடி செருப்புகள் மட்டுமே கிடப்பதை அவன் கண்கள் கவனித்தன.



கதவை திறந்த செம்பா" யாரு?" என்றாள்.



"நல்லாயிருக்கானா ? நான் அவனோட ப்ரண்ட் " என்ற தாசு பழ பையை நீட்டினான்.



" உங்களை நான் இதுக்கு முன்னால் பார்த்ததேயில்லையே?" என்றாள் செம்பா தயக்கமாக .



"நான் ஆந்திராவுலருந்து வருகிறேன். என்னோட பால்ய தோஸ்த் இவன். பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு பசங்க கிட்ட விசாரிச்சேன். அப்பத்தான் இவனோட நிலமையை பத்தி சொன்னாங்க. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன். இப்ப எப்படி இருக்கான்?" என்றான் தாஸ்.



தாஸின் சரளமான பொய்யை கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனிதா.



"இது யாரு? உங்க பொஞ்சாதியா?" என்றாள் செம்பா



"ஆமாம். லவ் மேரேஜ் “



"நல்லாயிரும் மா! இவருக்கு பக்கவாதம் வந்து கை கால் இழுத்து கிச்சு. பேச்சு சுத்தமா வரலை. அவங்க முதலாளி ஏதோ பணம் கொடுத்து உதவுறாரு. இல்லைன்னா பொழப்பு நாறிபோயிருக்கும்..”



"முதலாளியா? இவன் யாருகிட்ட வேலைக்கு போகிறான்.? சொன்னால் அவருக்கு நன்றி சொல்லிட்டு போவேன். உடம்பு சரியில்லைன்னாலும் அக்கறையா பார்த்து கொள்கிற முதலாளி கிடைப்பது அபூர்வம்.”



"பெரிய வீட்டு சக்ரவர்த்தி இருக்காரே? அவரு தான் முதலாளி. யாயாரைக் கேட்டாலும் அவரோட வீட்டை காட்டுவாங்க. நேத்து கூட ஒருபேப்பரை கொண்டு போய் காட்ட சொன்னாரு. அதுல என்ன இருந்து தோ தெரியலைவேர்த்து விறுவிறுத்து போய் பணம் கத்தையா கொடுத்தாரு.”



தாசுக்கு அந்த பேப்பர் கட்டிங் என்னவென்று புரிந்தது. அது சிவநேசன் எழுதிய பத்திரிக்கை செய்தியாகத்தான் இருக்கும் என்று அவனுக்கு தெளிவானது.



"அந்த பேப்பர் கூட இங்க தான் எங்கேயோ கிடந்தது. " என்றாள் சம்பா.



"சரி. நாங்க கிளம்புறோம்.”



"சிறேக்தம்னு சொல்றீங்க.. ஆந்திராவுல இருந்து வந்துட்டு பேசாம போறீங்களே? நான் வேணா அவரை எழுப்பவா?" என்றாள் செம் பா.



"இல்லை - வேணாம். அவனை தொந்தரவு பண்ண வேணாம்" என்று தாசு சொல்லும் முன்பாகவே செம்பா மகேந்திரனின் தோளை உலுக்கினாள்.



"இந்தா ! எந்திரி ! உன்னை பாக்க உன்னோட ப்ரண்டு வந்திருக்காரு" என்ற சம்பாவின் குலுக்கலில் மகேந்திரனின் தலை ஓருக்களித்து விழுந்தது.



"அய்யய்யோ! என்னை விட்டுட்டு போயிட்டியே ராசா " என்றபடி செம்பா அழத் தொடங்கினாள்.



தாசு செய்வதறியாது திகைத்தான். அனிதா திகைப்போடு தா சைப் பார்த்தாள்.



தன் பட்டன் போனை எடுத்த செம்பா" அவரோட முதலாளிக்கு தகவல் சொல்லுங்க" என்றாள்.



தாஸ் கால் லிஸ்டைப் பார்த்தான்.



"கடைசியா 450 னு முடியுமே அந்த நம்பர் " என்றாள் செம்பர்



தாசு அந்த எண்ணை கண்டுபிடித்து டையல் செய்தான்.



மிக நீண்ட ரிங் ஓன்று போய் யாரும் எடுக்காமல் கட்டானது.



"போனை யாரும் எடுக்கவில்லை," என்றான் தாஸ்​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 37



பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சக்ரவர்த்தி தன் செல்போன் ஓலி எழுப்பி அணைவதை பார்த்தார். யாரா இருக்கும் என்று நினைத்தவர் அதிலிருந்த மிஸ்டு கால் எண்ணை பார்த்து சலித்து கொண்டார். அதில் இருந்தது செம்பாவின் போன் எண்கள் .என்னவாக இருக்கும்? எதற்காக தனக்கு போன் பண்ணி யிருப்பாள்? ஒரு வேளை கொடுத்த பணம் போதவில்லை என்று மேலும் பணம் கேட்க போன் செய்திருப்பாளோ? என்று பலவாறாக நினைத்து குழம்பியவர்

அந்த எண்ணை திரும்ப அழைத்தார்.



போனை எடுத்த செம்பா அழுகுரலோடு "முதலாளி" என்றாள்.



"என்னாச்சும்மா?" என்றார் சக்ரவர்த்தி .



"அவரு போயிட்டாருங்க" என்ற செம்பாவின் குரல் விம்மியது.



“அடக்கடவுளே! எப்போது?" என்ற சக்ரவர்த்தியின் மனம் மகிழ்ச்சி யில் துள்ளியது. எப்படியோ ஒரு பிரச்சனை முடிந்தது என்ற நிம்மதி பெருமூச்சு அவரிடம் பிறந்தது.



" இப்பத்தாங்க" என்றாள் செம்பா



“செலவுக்கு பணம் ஏதாவது இருக்கா? இல்லை யாரிடமாவது கொடுத்து அனுப்பட்டுமா?"



I"பணம் நீங்க கொடுத்ததே மீதமா இருக்குங்க.”



"கோபப்படாதே செம்பா என்னால இப்போ வர முடியாத சூழ்நிலை. எல்லா காரியத்தையும் பார்த்துட்டு என்னை வந்து பாரு. உனக்கு என்ன செய்யனுமோ அதை நான் நிச்சயம் செய்வேன். சொன்னது புரியுதா?" என்றார் சக்ரவர்த்தி .



"புரியுதுங்கய்யா"



"அப்போது ஆக வேண்டிய காரியங்களை கவனி. “



"சரிங்கய்யா" என்றாள் செம்பா



மனதில் நிம்மதி பெருமூச்சு விட்டபடி போனை அணைத்த சக்ரவர்த்தி நகை பெட்டியை எடுத்து கொண்டு மாளிகை கதவை பூட்டி விட்டு தெருவில் இறங்கி "டாக்சி " என்றார்.



தனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சக்ரவர்த்தியை கண் இமைக்காமல் பார்த்தார் டாக்டர் ஹரிபிரசாத்.



"இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருப்பீர்கள் போல தோணுது. வழக்கமா ஓரு களைப்பு உங்களிடம் எப்பவுமே இருக்கும். இந்த முறை அந்த களைப்பு மிஸ்ஸிங். என்னாச்சு மிஸ்டர் சக்ரவர்த்தி “



"ரொம்ப நாளாக இருந்த ஒரு பிரச்சனை இன்னையோட ஓரு முடிவுக்கு வந்துருச்சு டாக்டர் .என் மன குழப்பத்துக்கு இனி எந்த காரணமும் இல்லை. நான் இனி பர்பெக்ட் ஆல்ரைட் டாக்டர் .”



"ஹலோ மிஸ்டர். நீங்க ஆல்ரைட்டுன்னு நான் தான் சொல்லனும்.தீர்மானிக்கனும்.”



" உண்மை தான் டாக்டர் .நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். உங்களோட மனோவியல் சோதனைகள் கூட இனி எனக்கு தேவைப்படாது." என்றார் சக்ரவர்த்தி .



"அப்படி இதை திடுதிப்புன்னு பாதியில் நிறுத்திவிட முடியாது சக்ரவர்த்தி .எல்லாத்தையும் முறைப்படி தான் செய்யணும் “



"ஓகே டாக்டர் .நீங்க முறைப்படியே எல்லாத்தையும் பண்ணுங்க. அதுக்கு முன்னால் என்னோட சின்ன கிப்டை ஏற்று கொள்ளுங்கள்.”



சக்ரவர்த்தி தன்கோட் பாக்கெட்டிலிருந்து அந்த நகை பெட்டியை எடுத்து நீட்டினார்.



"இதெல்லாம் எதுக்கு?" என்றார் டாக்டர் தயக்கமாக .



"எனக்கு நீங்க எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். நான் உங்களுக்கு எதுவும் செய்ததில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. பதில் மரியாதை செய்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள் டாக்டர் " என்றார் சக்ரவர்த்தி .



"நான் இங்கே என்ன மாதிரியான நிலையில் இருக்கிறேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். இப்போது இது தேவையா?”



"உங்களோட நிலமை எனக்கு நல்லாவே தெரியும் டாக்டர் .எந்த நிலைமையிலும் நான் உங்களை காட்டி கொடுக்க மாட்டேன். இது என்னுடைய அன்பு பரிசு. தயவு செய்து வேண்டாம்னு சொல்லி என் மனதை புண்படுத்தி விடாதீர்கள்.”



"ஓகே'! உங்களுக்காக நான் இதை வாங்கி கொள்கிறேன். இதில்அப்படி என்னதான் வைத்திருக்கிறீர்கள்?”



"திறந்து பாருங்கள் டாக்டர் .உங்களுக்கே தெரியும் " என்றார் சக்ரவர்த்தி .



டாக்டர் நகை பெட்டியை திறந்தார். உள்ளிருந்து செயினையும், பிரஸ்லெட்டையும் எடுத்தார்.



"வாவ்! சூப்பர். இது உங்களுடையதா?”



"இல்லை. என் அண்ணனுடையது. உள்ளே ஒரு மோதிரம் இருக்கும். அதை பார்த்தா அசந்து போயிருவீங்க. அப்படி ஒரு டிசைனை நீங்க பார்த்திருக்க வே முடியாது.”



டாக்டர் பெட்டியின் ஓரத்தில் கிடந்த அந்த மோதிரத்தை கையில் எடுத்தார்.அதன் முகப்பை பார்த்தவரின் முகத்தில் புன்னகை நின்றது. இது அவரால் அதை நம்ப முடியவில்லை. இந்த மோதிரத்தை எங்கெங்கோ தேடி களைத்து போயிருந்தார் - அது தேடும் போது கிடைக்காமல் இப்போது தேடாமல் கையில் வந்து உட்கார்ந்திருந்தது..



டாக்டரின் உடம்பில் அட்ரினல் நதி ஓட ஆரம்பித்தது.. தன் டிராவை காவி போட்டு திறந்தவர் அதிலிருந்த சின்ன பெட்டியை திறந்து பார்த்தார். அதனுள் சக்ரவர்த்தி கொடுத்த மோதிரத்தை போல் இன்னொரு மோதிரம் இருந்தது.



இரண்டும் ஒன்று தான் என்று முணுமுணுத்த டாக்டர் .



"சக்ரவர்த்தி .உங்க வீட்டுக்கு என்னை நீங்க இதுவரை அழைச்சுட்டு போனதேயில்லை. இன்னைக்கு அழைச்சுட்டு போறீங்க. அங்கே நான் சிகிச்சை தரலாமா?" என்றார்.



"ஸாரி டாக்டர் . என்னோட வீட்டிற்கு உங்களை இதுவரை அழைக்காததற்கு. வாங்க போகலாம். அங்கே நீங்க என்னை என்ன வேணா பண்ணுங்க" என்றார் சக்ரவர்த்தி -



" வாங்க போகலாம்" என்ற டாக்டர் தன் மெடிக்கல் கிட்டை எடுத்து கொண்டார்.



அவர் மனம் இதற்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன் என்றது .​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 38


செம்பா சக்ரவர்த்தியிடம் போனில் பேசும் வரை அருகில் இருந்தான் தாஸ்.செம்பாவிடம் கையிலி௹ந்த கணிசமான பணத்தை அவள் மறுக்க மறுக்க கையில் திணித்தவன் அவளுடைய உறவுக்காரர்கள் வரும் வரை காத்திருந்தான்.



தலையை ஒருக்களித்து படுத்திருந்த மகேந்திரனின் முகத்தை பார்த்தவன் முகத்தில் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது. யார் இவன்? இவனுக்கும் தேவிக்கும் என்ன.சம்மந்தம்? செத்துப் போன மாயாவின் பத்திரிக்கை செய்தியை வைத்து இவன் சாதித்தது என்ன? விடை தெரியாத பல கேள்விகளால் தாசின் தலை கிறுகிறுக்க தொடங்கியது.



செம்பாவின் உறவுக்காரர்கள் ஓவ்வொரு வராக அறையை தேடி வர துவங்கிய போது தா ஸஅனிதாவோடு வெளியேறினான்.



"இப்போது நாம் எங்கே போகிறோம்?" என்றாள் அனிதா.



"அந்த சக்ரவர்த்தி யோட வீட்டுக்கு .ஊர்லயே பெரிய மனுசன் போல தெரியுது. அதனால் அவருடைய வீட்டை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்காதுன்னு நினைக்கிறேன்." என்றான் தாசு.



அவனும் அனிதாவும் ரிசப்சனை தாண்டி வெளியே வந்த போது கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த டாக்டர் தணிகாசலம் இவர்களைப் பார்த்து அகலமாக புன்னகைத்து" மை குட்னெஸ்! நீங்க இன்னும் இங்கே தான் இருக்கீங்களா?" என்றார்.



" உறவுக்காரர் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை. இங்கேதான் அட்மிட் ஆயிருக்காரு. அதான் பார்த்துட்டு வந்தோம் “



"யாரு அது?”



"மகேந்திரன்னு அவர் பெயர் “



"அவர் பக்கவாத பேசண்ட் ஆச்சே?”



"ஆமாம். ஆனால் இப்போது அவர் உயிரோடு இல்லை. உயிர் போய் 15 நிமிசமாச்சு”



" எதிர்பார்த்தது தான் " என்ற தணிகாசலம் "நீங்க சொன்ன அந்த டாக்டர் ஹரிபிரசாத் ? “



"சொல்லுங்க சார்”



"அவரைப் பற்றி எனக்கு தெரிந்த சர்க்கிளில் நன்றாக விசாரித்து விட்டேன். அப்படி ஒரு டாக்டர் இருப்பதை பற்றியோ ஒரு டிஸ்பென்சரி இருப்பதைப் பற்றியோ யாருக்கும் எதுவும் தெரியலை. என்னிடம் வரும் மெடிக்கல் சேல்ஸ்மேன்களுக்கு கூட அவர் அதிகமாக எந்த ஆர்டரும் கொடுத்ததில்லையாம். சின்ன சின்ன கேஸ் தான் அவர் அதிகமாக டீல் பண்ணியிருக்காரு. மாத்திரை, மருந்து இது எதையும் அதிகமாக யூஸ் பண்ணாம வித்தியாசமாக ஏதோ சிகிச்சை கொடுப்பதாக கேள்வி. எனக்கென்னமோ அந்த டாக்டர் மேல டவுட்டா இருக்கு. சம் திங் ராங்.அவர் கிட்ட ஏதோ ஒரு விசயம் தப்பா இருக்கு" என்றார் தணிகாசலம்.



" ஆனால் எங்களிடம் அவருடைய ஆக்டிவிட்டி தப்பாகவே இல்லையே டாக்டர்?”



" என்னிடம் அவர் குழந்தையோட தாத்தா மாதிரி தான் பேசினார். தான் ஒரு டாக்டர் னு ஒரு இடத்துல கூட அவர் வெளிக்காட்டி கொள்ளவே இல்லை. ஏன் தானொரு டாக்டர் என்பதை என்னிடம் மறைத்தார் என்று தான் எனக்கு புரியவில்லை.”



"அதுதான் எனக்கும் குழப்பமாக இருக்கிறது”



"எதற்கும் அவர் மேல் கொஞ்சம் கவனமாக இருங்கள். நான் வீட்டிற்கு கிளம்புகிறேன். நாம் மறுபடியும் பார்க்கலாம். " என்ற டாக்டர் தணிகாசலம் தன் காரைக் கிளப்பினார்.



"இப்ப நாம முதலில் யாரைப் பார்க்கணும்! டாக்டரையா? இல்லை சக்ரவர்த்தியையா?" என்றாள் அனிதா..



"சக்ரவர்த்தியை " என்றான் தாஸ்.



இருவரும் வெளியே வந்து ஓரு ஆட்டோவை பிடித்தனர்.



பெரிய வீடு என்று சொன்னது மே ஆட்டோ டிரைவர் எந்த கேள்வியும் கேட்காமல் " ஏறுங்க" என்றான்.



அரை மணி நேர ஆட்டோ பயணத்திற்கு பின் வண்டி நின்றது.



"இது தான் நீங்க கேட்ட பெரிய வீடு" என்ற ஆட்டோ டிரைவரிடம் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு நடந்தனர் இருவரும் .



"காலிங் பெல் அடி என்றாள் அனிதா.



காலிங் பெல்லை அடித்த. தாஸ் ஏமாற்றமாக உதட்டை பிதுக்கினான். " சத்தமே வரலை. கரண்ட் கட்டுன்னு நினைக்கிறேன்" என்றான்.



இருவரும் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். கார்டனை தாண்டி நடந்து தேக்கு கதவை தொட்டதும் அது தானாகவே திறந்து கொண்டது.



"மிஸ்டர் சக்ரவர்த்தி " என்றவன் தாஸ்.



" அவன் இப்போது உயிருடன் இல்லை" என்றது இருட்டில் இருந்து ஒரு குரல்.



குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தான் தாஸ்.



ஹாலில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு வாயில் சிகரெட்டோடு உட்கார்ந்திருந்தார் டாக்டர் ஹரிபிரசாத். அவரை வாயில் சிகரெட்டோடு பார்ப்பது தாசிற்கு இதுவே முதல் முறை.



சிகரெட்டின் சிவப்பு முனை மட்டுமே தெரிந்த நிலையில் கரண்ட் திடிரென வர ஹாலின் அனைத்து விளக்குகளும் எரிய ஆரம்பித்தன.



"நீ தேடி வந்த ஆளை பார்க்கிறியா? " டாக்டரின் கைகள் பெட்ரூமின் கண்ணாடி கதவை காட்டின. உள்ளே சக்ரவர்த்தியின் கால்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.



"தற்கொலை பண்ணிக்கிட்டான். இல்லை. நான் அவனை பண்ண வைத்தேன். யெஸ்.ஐ ஆம் எ கில்லர்" என்றார் டாக்டர் வெறி பிடித்த உன்மத்த நிலையில்.



அமைதியான டாக்டர் காணாமல் போய் வேறோரு நபராக மாறி நிற்கும் டாக்டர் ஹரிபிரசாத்தை இருவரும் பயத்துடன் பார்த்தனர்.

 

Latest posts

New Threads

Top Bottom