Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


"என்ன மறந்தப் பொழுதும் நா உன்ன மறக்கவில்லையே"

sowndharyacheliyan

New member
Messages
2
Reaction score
1
Points
1
வணக்கம் நண்பர்களே,

இது என்னுடைய இரண்டாவது கதை

"என்ன மறந்தப் பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே "

முழுக் கதையும் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். ,





ஹலோ,ஹாய்,வந்தனம்,வணக்கம், நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது கொடைக்கானல் எப்.எம் 100.5 ல் நேயர்களின் விருப்பம் இது நம்ம ஊரு சேனல்,

இதோ அடுத்த ஒரு நேயரின் விருப்பப் பாடல் இத்தோடு நிகழ்ச்சி முடிவடைகிறது மீண்டும் நாளை உங்களை சந்திக்க வருகிறேன் உங்கள் ஆர்.ஜே நிஷா இப்பொழுது பாடலைக் கேட்டு மகிழவும்,

" என்ன மறந்தப் பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே "

என்ற வரிகள் வானொலியில் ஒலித்த சமயம்,தன்னுடைய பேக்கில் பள்ளி செல்வதற்காக தேவையான பொருட்களை எடுத்துக் வைத்து கொண்டிருந்த இதயாவின் கைகள் அந்தரத்தில் நினறு விட்டன.

பாடலின் வரிகள் இவளது செவிகளை வந்தடைய ,கல்லென சமைந்து விட்டாள்.

எத்தனை உண்மையான வரிகள் அவள் மனதில் உள்ளவற்றையல்லவா இப்பாடல் உணர்த்துகிறது. அடுத்த அடுத்த வரிகள் வர வர கரங்கள் உணர்ச்சி வேகத்தில் நடுங்க ஆரம்பிக்க,நிற்க முடியாமல் தள்ளாடி தடுமாறி கட்டிலில் அமர்ந்தவள் தலைகளை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டாள்.

"கண்ணு உறங்கும் பொழுதும் உன் எண்ணம் உறங்கவில்லையே"

அவள் நிம்மதியாக உறங்கி தான் எத்தனை நாட்கள் ஆகின்றது,பகல் முழுவதும் தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொள்பவள் இரவில் கண் மூடி உறங்க முயற்ச்சித்தால் அவனது நினைவுகள் வந்து தூக்கத்தையல்லவா விரட்டு அடித்து விடுகிறது,

அவனின் நினைவுகளை மறக்க முடியாமல் கற்பனை உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேனே,கனவு நனவாகாதுு என்று தெரிந்தும் ஏன் என்னுள் இத்தனை போராட்டங்கள்.

இப்பொழுதே வீட்டினில் வரன்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்களே,அவர்களிடம் சொல்ல முடியுமா?? நான் கற்பனையில் ஒருவனோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்று தாங்குவார்களா????????இந்த சமுதாயம் தான் ஏற்றுக் கொள்ளுமா?????

"உன்மேல ஆசைவச்சு உள்ளுக்குள்ள பாசம்வச்சு ஆளான அன்னக்கிளி நான்"

"பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு போடாமா காத்திருக்கேன் நான்"

அவனிற்காகதானே காத்துக் கொண்டிருக்கிறேன்,பூமாலை என்ன என் உயிரையே அவனிடம் தருவதற்காக மாலையாக என் மனதில் கோர்த்து வைத்திருக்கின்றேனே,

"வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல

ஏங்காம ஏங்கி நின்னேன் நான்"

தன் இஷ்ட தெய்வமான முருகனிடம் எத்தனை முறை வேண்டியிருப்பால் அவன் வர வேண்டும் என்று,இதோ இப்பொழுது கூட ஏங்கிக் கொண்டிருக்கிறேனே,என்னால் வேறு என்ன செய்ய முடியும் பெற்றவர்களை மீறி அவனை தேடிச் செல்ல முடியுமா??,இல்லை தன் மனதில் உள்ள காதலை தான் சொல்ல முடியாமா??இல்லையே!!!!!

"என் ராசாத்தி பக்கம் இருந்தால் இனி வேறெதும் தேவையில்லையே"

வருவானா??என்னைத் தேடி மீண்டும் வருவானா!!!வந்தவனை தான் என் வார்த்தைகளால் குத்தி கிழித்து விட்டேனே பின் எப்படி வருவான்.

தியா ரெடி ஆகிட்டியா ஸ்கூலுக்கு லேட் ஆகிடுச்சு தாயின் குரலில் நடப்புக்கு வந்தவள்,

தன் கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு "த்தோ வரேன் ம்மா" என குரல் கொடுத்தவள்,

கண்ணாடி முன் நின்று அழுத விழிகளை மறைப்பதற்காக கொஞ்சம் பவுடர் பூசிக் கொண்டவள் முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டாள்.

இல்லையென்றால் அவளது தாய் பத்மா கண்டுககொள்வாரோ!!

தியா என தாய் இருமுறை அழைக்க அவசரமாக அறையை விட்டு வந்தவள்,அவனின் நினைவுகளை ஒதுக்கி விட்டு சாப்பாட்டு மேஜை நோக்கி சென்றாள்.

சாப்பிட அமர்ந்தவளின் முன் சுட சுட அவளுக்கு பிடித்த நூடூல்ஸ்ஸூம்,பாஸ்தாவும் பரிமாற பட,

ம்மா என்னம்மா உனக்கு தான் இதுப் பிடிக்காதே சமைக்கவும் தெரியாதே பின்ன எப்புடி?????

உனக்குப் பிடிக்குமே அதான் பண்ணேண் யூ-டியூப் எதுக்கு இருக்கு அதுல பாத்து பண்ணேண் சரி நீ சாப்பிடு ஆறிடப் போகுது

ம்ம்ம் அம்மா,அப்பா எங்கம்மா

வந்துட்டேன் தியாம்மா பத்மா சீக்கிரம் எனக்கும் டிபன் எடுத்து வை மழை வர மாரி இருக்கு நான் தியாவ ஸ்கூல்ல விடுடு வரேன்,

ப்பா அதன் ஸ்கூட்டி இருக்குல

போற வழியில மழை வந்துருச்சுன்ன என பண்ணணுவ அப்பா கொண்டு வந்து விடுறேன்,

தந்தையின் பதிலில் ஜன்னல் வழியே வெளயே பார்க்க வானம் இருண்டிருந்தது மழை எந்நேரமும் பிடித்துக் கொள்ளும் என எண்ணியவள்,அமைதியாக சாப்பிட்டாள் ஆனாலும் அரை மணி நேர பயணத்தில் இருக்கும் பள்ளிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என எண்ணியவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

விரைவாக சாப்பிட்டு முடித்தவள்,

ம்மா லன்ச் பேக் எங்கம்மா குடுங்க லேட் ஆகிடுச்சு

தியா நீ கிளம்பு அப்பா மதியம் கொண்டு வந்து தருவாரு

ஏன்ம்மா???

மதியம் பிரியாணி செஞ்சு சூடா கொடுத்துவிடுறேன் இப்ப கிளம்பு,

ஆனாலும்மா ஸ்கூல் இங்கன் இருக்கறதாலா நீயும் அப்பாவும் பண்ணுற அலும்பு தாங்கல

ஏன்ம்மா கஷ்டப்படுத்துகிறீங்க,அப்பா வேற அலையனும்,

போடி போக்கிரி இதுல என்ன கஷ்டம் உனக்கு புடிச்ச டிஸ்ஸூ சூடா இருந்த ஒரு வாய் அதிகமா சாப்பிடுவா,போ அப்பா வெயிட் பண்ணுறாரு

என்னம்மோ போங்க Lkg பிள்ள மாதிரி நடத்துறீங்க என்றவள் வெளியே வந்த செப்பலை தேட,

தியாம்மா இங்க இருக்குப் பாரு அப்பா எடுத்து வச்சிருக்கேன் என்று அவர் காட்டிய திசையில் காலணிகள் கழுவி வைக்கப்பட்டிருக்க,

ப்ப்ப்பபாாா.....,என சிணுங்கியவள் வண்டியில் அமர,பள்ளியை நோக்கி வண்டியை செலுத்தினார் வாசு.

வாசு-பத்மா ஆகியோரின் செல்லப் புதல்வி இதயா.வாசு கவர்மென்ட் பணியில் இருந்து தற்போது ரிடையர்மென்ட்டில் இருப்பவர்,பத்மா இல்லத் தலைவி அளவான அன்பான அழகான குடும்பம்,

வாசுவின் உடன் பிறப்புகள் சென்னையில் இருக்க,இவர் மட்டும் வேலையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் செட்டில் ஆகி விட்டார்.

இதயாவின் விரும்பம் படி இங்கயே தங்கி விட்டனர்.

பயணம் செய்து கொண்டிருந்த இதயாவுக்கு சற்று முன் வீட்டில் நடந்தவை நினைவு வர உதடுகளில் தானாக முறுவல்,

இவையாவும் அவள் மேல் உள்ள அன்பில் வெளிப்படல்லா,தனக்காக மட்டுமே இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தனக்கு காய்ச்ல் வந்தால் தன்னை விட இவரகள் அல்லவா துடித்துப் போய் விடுகின்றனர்.என்னோடு சேர்ந்து மூன்று நாட்கள்இவர்களும் உண்ணாமல் வெறும் கஞ்சி மட்டும் குடித்தார்களே,

ஏன்??என்று கேட்டதற்கு தவமிருந்து பெற்ற பிள்ளை காய்ச்சலில் படுத்திருக்கும் போது தாங்கள் எப்படி வாய்க்கு ருசியாக சாப்பிடுவது என கேட்டவர்கள் தானே இவர்கள்,

பெற்றவர்களை இழந்து வாழும் குழந்தைகளின் மத்தியில் எனக்கு கிடைத்திருப்பது பொக்கிஷம் அல்லவா??

அவர்கள் தன்னிடம் கேட்டது ஒன்றே ஒன்று தானே அவர்கள் மாப்பிள்ளை பார்த்து ஊர் மெச்ச கல்யாணம் செய்ய வேண்டும் என்பது தானே அதுதானே அனைத்து பெற்றவர்களின் ஆசையும் கூட,

பார்க்கும் மாப்பிள்ளை தனக்கு பிடித்தால் மட்டுமே மேற்கொண்டு எல்லாம் என சொல்லுபவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி வேதனைப்படுத்த முடியுமா???

காதலா??பாசாமா??? எனப் பார்க்கும் போது பாசத்தின் பக்கம் தானே மனது சாய்கிறது,எனவே சரி என்று விட்டாள்.

நினைவுகளில் இருந்தவளை கலைந்தது வாசுவின் குரல் அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தவள்,பள்ளி வந்தவிட,இறங்கினாள்.

சரிடா,போயிட்டு வா அப்பா மதியம் வரேன் என்றுவிட்டு கிளம்பினர்.

பள்ளி வளாகத்தில் நுழைந்தவளை மாணவர்கள் விஷ் செய்ய பதிலுக்கு விஷ் செய்தவள் ஸ்டாப் ரூம் சென்றாள்.

இதயா,உனக்க பஸ்ட்ட் ப்பீரியட்(first period)3rd கிளாஸ் A செக்ஷன் இருக்கு என்ற மயூரிய பார்த்து சிரித்தவள் தாங்க்ஸ் சொல்லிவிட்டு,

தேவையான புத்தகங்கள் எடுத்துக் கொண்டு தனது வகுப்பு நோக்கி நடந்தாள்.

இதயா இப்பள்ளியிள் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது,சக ஆசிரியைகளிடம் நன்றாக பேசினாலும் இவள் வயதுடைய மயூரியுடன் கொஞ்சம் நெருக்கம் அதிகம்.

"டிரிங் டிரிங்" மத்திய உணவுக்கான பள்ளி மணி அடிக்க,தான் எடுத்துக் கொண்டிருந்த வகுப்பை முடித்தவள்,

ஓகே,ஸ்டூடன்ஸ் மீதிய மண்ட்(Monday)பாக்கலாம் டூ டேஸ் லீவ் நல்லா என்ஜாய் பண்ணுங்க ,

தாங்க் யூ மிஸ்,

தாஙக் யூ என்று விட்டு வெளியே வந்தவள் எதிர்ப்பபட்ட பிஃயூனை,அழைத்தாள்

கந்தச்சாமி அண்ணா,அப்பா லன்ஜ் கொண்டு வந்திருப்பாரு கொஞ்சம் வாங்கிட்டு வரீங்களா எனத் தயங்கி கேட்க,

அட எதுக்கு மிஸ் தயங்குறீங்க,நான் போய் வாங்கிட்டு வரேன் நீங்க போங்க,

தாங்க்ஸ் அண்ணா என்றுரைத்துவிட்டு நடந்தாள்.

அவளுக்குமே இஷ்டமில்லை அவரை வேலை வாங்க வேறு வழி இருக்கவில்லை,காலையிலிருந்து தொடர்ச்சியாக வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கிறாள்.

சக ஆசிரியை அவசர விடுப்பு என்பதால் இவளின் ப்பீரி ப்பீரியட்டும் கட்டாகியது இன்னும் மதியம் நான்கு வகுப்புகள் இருந்தன,நினைக்க நினைக்க மலைப்பாய் இருந்தது.

பிஃயூன் கொண்டு வந்த உணவை வாங்கிக் கொண்டவள் மயூரியுடன் சாப்பிட.அமர,

ம்ம்ம்ம கொடுத்து வச்சவதான் நீ மழைக்கு சூடா பிரியாணி என்ற மயூரி அதனை வாசம் பிடிக்க

உன்னோட பாக்ஸ்ஸ மூடி வை உனக்கும் சேர்த்து தான் அம்மா குடுத்துவிட்டுருக்காங்க,

அப்பச் சரி என்ற மயூரி பிரியாணி யை ஒரு பிடி பிடித்தாள்.பேச்சும் சிரிப்புமாக லன்ஜ் பிரேக் முடிந்து அடுத்தடுத்த வகுப்புகளுக்கு நிற்க நேரமின்றி சிட்டாக பறந்திருந்தினர்.

ஒரு வழியாக பள்ளி முடித்தும் மாணவர்கள் சந்தோஷமாக வெளியேற,அவர்களுக்கு குறையாத சந்தோஷத்துடன் மயூரியும்,இதயாவும் வந்தனர்.

தந்தை கண்ட இதயா மயூரியிடம் விடைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு பயணமானால்.

சற்றே இதமான மனநிலையுடன் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளின் பட்டது அப்பெயர்ப் பலகை,

"ஜெகதீஸ்வரன் மோட்டார்ஸ்"

அதனை கண்டவளின் பார்வை நிலைகுத்த,அத்தனை நேரம் இருந்த இதமான மனநிலை மாறியது.

"ஜெகதீஸ்"என்று முணுமுணுத்தவளின் கண்கள் குபுக்கென கண்ணீரை பொழிய,தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவளின் மனம் முழுவதும் வேதனை நிரம்பியது.

குழப்பமான மனநிலையுடன் வீட்டிற்குள் நுழைந்தவளை கண்ட பத்மா,

என்னாச்சு டி ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கா,அன்னையின் கேள்வியில் சுதாரித்துக் கொண்டவள்,

ஆங்ங்ங்ங்.......ஒன்னும் இல்லம்மா கால் வலிக்குது இன்னைக்கு புல்லா கிளாஸ் போனேன் மா அதான் வேற ஒன்னுமில்ல,

சரி நீ போய் பிரஸ் ஆகிட்டு வா

சரி ம்மா என்றவள் அறைக்குள் புகுந்துக் கொண்டு பிரஸ்ஸாகி வந்தவளிடம்,பத்மா டீ யை நீட்ட

அதனை வாங்கியவள் அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து டீபாயில் காலை துக்கி வைத்தவள் ஒரு மிடறு பருக,

சற்று முன் பார்த்த பெயர்ப் பலகையும்,அதனை தொடர்ந்து அதன் நினைவுகளும் வர,அதற்கு மேல் டீயை குடிக்காமல் வைத்தவள்,

ஷோபாவில் தலை சாய அதற்காகவே காத்திருந்தது போல் அவளது கண்ணங்களில் கண்ணீர் வழிந்தோடியது,

ஏன் முருகா!எனக்கு இந்த சோதனை ஆசைப்பட்டத மறக்கவும் முடியல வெளிய சொல்லவும் முடியல உள்ளுக்குள்ளயே வச்சி மருகிறேனே,என புலம்பிக் கொண்டிருந்தவளின் பாதத்தில் ஏதோ படும் உணர்வு தோன்ற நிமிர்ந்து பார்த்தாள்,

வாசு தனது மகளின் பாதத்திற்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார்,மகள் கால் வலி என சொல்லியதை கேட்டவர் அவள் பிரஸ்ஸாகி வரும் வரை காத்திருந்து ஒத்தடன் கொடுக்கலானார்.

அவரது கரிசனத்தில் மனம் வெதும்ப,

ப்பா நீங்க ஏன்ப்பா இதெல்லாம் பண்ணுறீங்க,விடுங்க

காலை ஆட்டதடா கொஞ்சம் நேரம் வலி குறஞ்சிடுமும் என்றவர் அவளைப் பார்க்க,

அவளின் கண்ணீரை கண்டு பதறியவர்,என்னாச்சு டா ரொம்ப வலிக்குது,

ஆமாப்பா ரொம்ப வலிக்குது என அவள் மனதின் வலியைக் கூற,

பத்மா அந்த தைலத்த கொஞ்சம் சீக்கிரம் எடுத்துட்டு வாயேன் என சப்தமிட,

என்னாச்சு ஏன் இப்புடி சத்தம் போடுறீங்க கிச்சன்ல தான இருக்கேன் என்றவர்,மகளிற்கு கொடுத்த டீ அப்படியோ இருக்கவும்

ஏண்டி டீ குடிக்கல பாரு ஆறிப் போயிடுச்சு என்றவர் அவளது அழுத விழிகளை கண்டு விட்டு,

ஏண் தியா அழுகுற,என அவளது கண்ணீரை தன் புடவையால் துடைத்தப்படி கேட்க,

கால் வலி அதிகமாகிடுச்சுப் போல அந்த தைலத்த கொடு என வாங்கியவர் அவளது பாதம் முழுவதும் நன்றாக மசாஜ் செய்து விட கால் வலி மட்டுமல்ல மன வலியும் சற்றி குறைவதுப் போல் இருந்தது.

இப்புடி பார்த்து பார்த்து செய்பவர்களிடம் தன் காதலை சொல்லி வேதனைப்படுத்த முடியுமா??

அவளுக்கு தனிமை தேவைப்பட,

ப்பா நா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிறேன் ப்பா,

கொஞ்ச நேரம் இரேன் டி நைட்டு சாப்பிட்டு படுப்ப,

இல்லம்மா எனக்கு ஏதும் வேண்டாம்,

வெறும் வயித்தோட படுப்பிய,

பத்மா அவ தான் வேண்டாம்னு சொல்லுறால விடு,நீ போய் ரெஸ்ட் எடுடா அதுக்கு முன்னாடி ஒரு கிளாஸ் பால் குடிச்சிட்டு படு

சரிப்பா..........



பாலை அருந்திவிட்டு கட்டிலில் வந்து விழுந்தவளின் கண்கள் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டின,

மனதின் ஓரத்தில் காலையிலிருந்து வலுக்கட்டாயமாக மறைத்து வைத்திருந்த அவனது நினைவுகள் மெல்ல மேழெம்ப அதனை காண பிடிக்காத அவள் திரும்ப மனதின் ஆழத்தில் புதைக்கப் பார்க்க,உன் பேச்சை கேட்பேனா என மனம் அடம்பிடிக்க,

மனதுடன் போராடியவள் தாங்க முடியாத வேதனையில் விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து தன் அம்மா கேட்பதற்காக தனது செல்லில் பதிந்துவைத்திருந்த 80's,90's பாடல்களை ஒலிக்க விட்டவள் ஹெட் போனுடன் கட்டிலில் அமர்ந்து கண் மூட,

அடுத்தடுத்த கேட்ட பாடல்களில் மனம் சற்றே இளைப்பாறியது,இளையராஜா பாடல்கள் இரவின் தனிமையில் கேட்பது சுகமல்லவா!!!

பாடல்களைக் கேட்டுக் கொண்டே கண்யரப் போனவளின் தூக்கம் அடுத்த பாடலில் பறந்தோடிற்று,

"கான கருங் குயிலே காதல் ஓர் பாவமடி

காதல் களத்தினிலே கண்ணீர் தான் லாபமடி

ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது"................



எதிரேயிருந்த சுவற்றை வெறித்தவளின் மனம் கடந்த கால நினைவுகளை அசைப் போட்டது அவளின் அனுமதியின்றி.


அந்த இருபாலர் படிக்கும் பள்ளியின் முன் தந்நையுடன் இறங்கினாள் பதின் வயது இதயா,இன்று அவளிற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, தேர்வு எழுதுவதற்காக இங்கே வந்திருந்தாள்.

இதுவரை பெண்கள் பள்ளியில் மட்டுமே படித்தவளுக்கு இங்க வந்திருப்பது சற்பே படபடப்பாக இருந்தது,மனம் பட்டாம்பூச்சியை அடித்துக் கொண்டது,அடுத்து தந்தை உறுதியாக சொல்லி விட்டார் மேற்படிப்புக்கு இஙகு தான் சேர வேண்டும் என்று, அவளின் கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக எடுத்த முடிவு இது.

தியாம்மா எக்ஸாம் நல்லப்படியா எழுதனும் ஆல் த பெஸ்ட் தந்நையின் வாழ்த்தில் மகிழ்ந்தவள்,

தாங்கஸ்ப்பா என்றுவிட்டு தனது தோழிகள் கூட்டத்தை நோக்கி சென்றவள் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டாள்.

அன்றைய தினத்தை தொடர்ந்து வந்த தேர்வை நன்றாக எழுத இதோ அதோ என்று கடைசி தேர்வும் வந்தது,

எப்போதும் போல் ஹாலில் சென்றமர்ந்தவளுக்கு தன்னை யாரோ உற்று நோக்குவது போல் இருக்க சட்டென்று பக்கவாட்டில் திரும்ப,

அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் திரும்பியதும் டக்கென திரும்பி கொண்டாள்,

என்னடா இது என்பது போல் புருவங்களை சுருக்கியவள் பின் சூப்பர்வைசர் வரவும் இதனை மறந்துவிட்டு தேர்வு எழுத ஆரம்பித்தாள்.

ஒரு வழி தேர்வை எழுதி முடித்து வெளியே வந்தவள் தன்னுடைய பொருட்களை சேகரித்துக் கொண்டு தன் தோழிகளை நோக்கி செல்ல,

மீண்டும் அதே துளைக்கும் உணர்வு,திரும்பி பார்த்தவள் திகைத்தாள், அங்கே சற்று முன் ஹாலில் கண்டவன் இவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அதனை அசட்டை செய்தவள் மேலும் அதைப் பற்றி சிந்திக்காது சென்றுவிட்டாள்.

பத்து நாட்கள் கழித்து ஊர் தி்ருவிழா வர வாசுவின் உடன் பிறப்புகள் ஊரிலிருந்து வந்திருந்தனர்,தன் அக்கா தங்கைகைகளுடன் நன்றாக ஊர் சுற்றியவள் அன்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவள் எதேர்ச்சையாக திரும்ப,

மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தாள்,ஏனெனில் அங்கு ஒருவன் இவளையே பார்த்துக் கொண்டிருக்க யாரென்று தெரியாது புருவங்களை சுருக்கியவள் பின் டக்கென திரும்பிக் கொண்டாள்.

இவன் ஸ்கூல்ல பார்த்தவனாச்சே இங்க வந்திருக்கான் இந்த ஊரா,இவன் என்னைய தான் பாக்குறானா இல்ல வேற யாரையாச்சுமா என யோசித்தவள் சற்றே தன்னை மறைத்தவாறு அமர்ந்துக் கொண்டு அவனைப் பார்க்க அவன் பார்வையில் மாற்றமில்லை,

மனம் படபடக்க திரும்பி கொண்டவளுக்கு உறுதியாயிற்று அவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்று,

இதயம் படபடவென அடித்துக் கொள்ள இனம் புரியா உணர்வு ஒன்று ஏற்பட்டது.அவனை ஓரக்கண்ணால் பார்க்க விடாது இவளை பார்த்துக் கொண்டிருக்க,

இவள் கன்னங்கள் செம்மையை பூசிக் கொண்டன,தந்தையின் குரலில் நடப்பு உலகுக்கு வந்தவள் அதிர்ந்து விட்டாள்.

என்ன காரியம் செய்துக் கொண்டிருக்கிறேன் நான்,இன்னும் நான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவை எவ்வளோ இருக்க அதற்குள் இத்தகைய உணர்ச்சிகளுக்கு நான் அடிபணியலாமா என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் சடுதியில் அந்த உணர்வுகளஇல் இருன்து வெளிவந்தவள் அதற்கு பிறகு அவன் இருக்கும் திசைபக்கம் திரும்பவில்லை,

தேர்வு முடிவுகள் வெளியாகி இதயா அப்பள்ளியில் பையாலஜி குரூப் எடுத்து சேர்ந்து விட்டாள்,முதல் நாள் பள்ளியில் மாணவர்களை அவரவர் குரூப் வாரியாக பிரிக்க அப்பொழுது அறிந்துக் கொண்டாள்,

அவனின் பெயர் "ஜெகதீஸ்வரன்" கம்பூயூட்டர் சைன்ஸ் குரூப் எடுத்திருக்கான் என்று,

அதன் பின் வாழ்க்கை பள்ளி வீடு என சென்றது,இதற்கிடையில் அவனின் காதல் பார்வைகளும் தொடர அதனை அசட்டை செய்து விட்டாள்.

பள்ளி இறுதி ஆண்டில் இருக்கும் பொழுது அவனது நண்பர்கள் அவனின் காதலுக்கு தூது வர,

அவர்களிடம் தனக்கு இதில் விருப்பம் இல்லை தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என அடித்துக் கூறிவிட்டாள்,அதன் பின்னும் அவனது காதல் பார்வைகள் தொடர அலட்சியம் செய்தவள் தன் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

முகத்தில் பட்ட வெளிச்சத்தில் பண் விழித்த இதயா மணி பார்க்க எட்டு,விடுமுறை தினம் என்பதால் சற்று தாமதமாகவே எழுந்து சோம்பல் முறிந்தவள்,மொபைலை பார்க்க அது தன் உயிரை விட்டிருந்தது,

அப்பொழுது தான் நேற்று இரவு பாடலை கேட்டுக் கொண்டு நினைவுகளினஎ தாக்கத்தில் உறங்கியது புரிந்தது,

புத்துணர்ச்சியுடன் விடியலை எதிர்க் கொண்டவள் மொபைலை ஜார்ஜ் போட்டுவிட்டு குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து வெளியே வந்தவளை எதிர்க் கொண்ட வாசு,

இப்ப எப்படி இருக்குமா கால்வலி,

ம்ம்ம்ம் பரவாயில்லப்பா

சமையலையிருந்து வெளிப்பட்ட பத்மா இவளிடம் டீயை கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

தந்தையிடமிருந்து ரிமோட்டைக் கைப்பற்றியவள் பாட்டுத் சேனலுக்கு தாவ,

சிறு சிரிப்புடன் அவளிடம் ரிமோட்டை விட்டுக்கொடுத்தவர் அன்றைய தினசரியில் மூழ்கி விட்டார்.

கல்லூரி பாடல்கள் என ஒரு பாட்டு சேனல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தது.அந்நிகழ்ச்சியில் நேயர்கள் தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

அதைக் கேட்டவளின் மும் மென்னையுற தனது கல்லூரி காலத்தை அசைப்போட்டாள் அங்குதானே அவனை இரண்டாவது முறையாக சந்தித்தாள்.

மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் B.A(English)ஆங்கிலம் தேர்வு செய்திருந்தாள்.

புதுத் தோழிகளின் நட்சு கல்லூரி காலட்டாக்கள் என இனிமையாக நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன,

கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தசமயம்,இவர்களது துறை சார்பில் கல்ச்சரல் இவன்ட் நடத்தப்பட்டது,

அனைத்து கல்லூரி மாணவர்களும் வந்து கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சி அன்று தோழிகள் கூட்டம் ஓரே மாதிரியான புடவை உடுத்தி வந்திருக்க,

இவளுக்கு பெயர்களை ரிஜிஸ்டர் செய்யும் கமிட்டியில் வேலை,வரிசையில் நின்ற மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் கல்லூரி பெயர்களை குறித்துக் கொண்டிருந்தாள், எழுதுவதற்கு தோதாக சற்று குனிந்து அமர்ந்திருந்தவள்,

அடுத்து வரிசையில் நின்ற மாணவனிடம்,

உங்க நேம் சொல்லுங்க, என்க

"ஜெகதீஸ்வரன் பிஃரம் ஜே.கே காலேஜ்"

என்ற பெயரை கேட்ட நொடி உடல் தூக்கி வரி போட, இது இது அவனுடைய பெயராச்சே வந்துருக்குறது அவனா???என அதிர்ந்தவள்,

நிமிர்ந்து பாரக்க,தன் இரு கைகளையும் போன்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு இவளை விழிகளில் கூர்மையுடன் ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

பார்த்த நொடி நெஞ்சம் படபடக்க,தலையை குனிந்துக் கொண்டவள் நடுங்கும் விரல்களை கட்டுக்குள் கொண்டு வந்து அவனின் பெயரை எழுதி முடித்தவள்,அதனை அவனிடம் நீட்ட,

அதனை பெற்றுக் கொள்ள முயன்றப் போது இருவரது விரல்களும் ஒரு நொடி உரச,மின்சாரம் தாக்கியது போல் தன் கைகளை விருட்டென்று உருவிக் கொண்டாள்,

அவளை உறுத்து விழித்தவன்,தன் நண்பர்களுடன் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

நிகழ்ச்சியை இவள் தொகுத்து வழங்க விழா இனிதே ஆரம்பித்தது.இவளர செல்லும் இடமெல்லாம் அவன் பார்வைகள் தொடர,ஒருகட்டத்தில் தாங்க முடியாதவள் அவன் கண்களில் படாமல் மறைந்துக் கொள்ள,

அதுவரை இவளை பார்த்துக் கொண்டிருந்தவன் இவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் சுவரசியமாகி அவளை கண்களால் தேட ஆரம்பித்தான்.

அவனது தேடலை கண்டு கொண்டவளுக்கு வெட்கம் மேலிட உதடுகளில் வெட்கப் புன்னகை .

நிகழ்ச்சியில் இடையில் மாணவர்களுக்கு பிரேக் கொடுக்கப்பட,அவனின் கண்களில் சிக்காமல் நழுவி தனது தோழிகளுடன் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள்.தன்னை பிரஸ் செய்து விட்டு வெளஇயே வந்தவள் தோழிகளுக்காக காத்திருந்த சமயம்,

ஹேய், மது என்ன டி ஜெகதீஸ் உன்ன இப்புடி விழுந்து விழுந்து கவனிக்கிறான்,என்ன ரெண்டுப் பேரும் லவ்வ செல்லிக்கிட்டிங்களா,

ம்ப்ச் நீ வேற ஏண்டி அவன் இன்னும் ஏன்ட சொல்லவேயில்ல ஆனா பாத்து பாத்து கவனிக்கிறான்,

அவன் சொல்லலனா என்ன நீ சொல்ல வேண்டியது தான,

சொல்லலாம் தான் பட் அவன் ஏற்கனவே ஸ்கூல்ல ஒன்சைட் லவ் இருந்துச்சுன்னு சொன்னான்ல நான் சொல்லி அவன் வேண்டாம் னு சொல்லிட்டான என்னால தாண்க முடியுமா???

அடியே மது அது சும்மா அட்ராக்சன் டி அவள எல்லாம் அவன் லவ் பண்ணியிருக்க மாட்டான் இப்ப அவன் மைன்ட்ல அவள் இருக்க மாட்டாள்,

நீ தான் அவனுக்கு ஏத்த ஜோடி முத உன் லவ்வ சொல்லு அக்சப்ட் பண்ணாம இருந்த நாங்க விட்டுடுவோமா அவன் உன்ன கேர் பண்றதுலயே தெரியலையே அவனுக்கம் உன் மேல் லவ் இருக்கான்னு,நீ கட்டதயும் பத்தி யோசிக்காமா வாப் போகலாம் என அவரகள் இதயாவை தாண்டிச் செல்ல,
 

sowndharyacheliyan

New member
Messages
2
Reaction score
1
Points
1
இவளோ திக்பிரம்மை பிடித்து நின்றிருந்தாள்,அந்த மது என்பவளை அவனுடனஎ பார்த்தாளே அப்போது இவரகள் பேசியவை உண்மையா,

இல்லை இருக்காது சற்று முன் அவன் தன்னைத் தேடியது பொய் இல்லையே,ஆனால் இவரகள்.அவனது நண்பர்கள் ஆகிற்றே,இல்லாத ஒன்றைப் பேச அவரகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையே,

அவன் இவளிடம் நெருக்கி பழக போய்தானே இவர்கள் இவ்வாறு கூறிகிறார்கள்,பின் அவள் எப்படி அவ்வளவு உறுதியாக சொல்லுவாள்,

அப்பொழுது அவனுக்கு நான் ஜஸ்ட் ஒரு எண்டர்டெயிண்மென்ட் தானா,என அவள் தனக்குள் குழம்பி போயிருக்க,



இதயா இதயாயாயாயா என அவள் தோழி உரத்து அழைக்க,

ஆங்ங்ங்ங.....என்ன டி?

வாடி போகலாம் அங்க ஷோ ஸ்டார்ட் ஆகிடுச்சு,

நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றவள்,அவனின் கண்களில் படாதவாறு அமர்ந்துக் கொண்டவள் அவர்களை கவனிக்கலானாள்.

அவர்கள் பேசியது போல் இவன் மதுவிடம் அதிக நெருக்கம் காட்டி பேசிக் கொண்டிருந்தான் அவளுக்கு தேவையான பொருட்களை பார்த்து பார்த்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்,அப்பொழுது தான் கவனித்தாள் அவன் தன்னை தேடவில்லை என்பதை,

ஓ ஓ ஓ அப்ப சும்மா நூல் விட்டுப் பாத்துறுப்பான் போல எனக்கு பொறுக்கி என முணுமுணுத்தவளின் கண்கள் கலங்கியது,

அவன் காதல் உண்மை என்றுு தன்னை நம்ப வைத்து தன்னையும் ஆசைப்பட வைத்து விட்டானே,என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்,இவன் பார்த்ததும் நான் அவனிடம் மயங்கி விடுவேன் என்ற,அத்தனை சீப்பாக என்னை எடைப் போட்டு விட்டானா,

சற்று முன் தான் அப்படி அவனை தேடினேன் என்பதை சலுகையாக மறந்துவிட்டாள்,அவனைப் பார்க்க பார்க்க தான் எதிலோ தோற்றுவிட்ட உணர்வு வர அவனைப் பார்க்க பிடிக்காது திரும்பிக் கொண்டாள்.

அவள் அறியாத ஒன்று இவள் உள்ளே நுழையும் போதே ஜெகதீஸ் கண்டுவிட்டான்,அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து வேண்டுமென்றே மதுவிடம் சிரித்தி பேசி இவளது பொறாமா தூண்டி விட்டு அவள் முக மாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்தான் என்பதை,

அவள் திரும்பி அமர்ந்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டவன் நிகழ்ச்சியை பார்க்கலானான்.



தியா தியா என யாரோ அவள் தோள்களை உலுக்க,விழித்தவள்

என்ன ம்மா என்க,

எவ்ளோ நேரம் டி கூப்புடுறது சாப்பிட வா,

வரேன் மா

மூவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க,

தியாம்மா தந்தையின் அழைப்பில் நிமிர்ந்தவள்,

என்னப்பா என்க,

உனக்கு ஒரு வரன் வந்துருக்கு பையன் இன்ஜீனியரா இருக்காரு வர புதன் கிழமை பொண்ணு பார்க்க வரட்டுமான்னு கேக்குறாங்க,நீ என்னடாமா சொல்லுற,

சொல்லிவிடலாமா இவர்களிடம் தனக்கு இது வேண்டாம் என்று என அவள் யோசிக்க,

தியா பையன ஒரு தடவ நேர்ல பாத்துட்டு அப்றமா ஏதுனாலும் முடிவு எடு சரியா,உனக்கு புடிச்சாதான் மத்தது எல்லாமே,

சரிப்பா..........

அப்ப அவுங்க கிட்ட பொண்ணு பாக்க வரச் சொல்லிடட்டா ஆவலாக கேட்கும் தாயை மறுத்தப் பேச தோன்றாது,

சரிம்மா என மனமேயில்லாமல் தலையாட்டி வைத்தாள்.சரியென்று சொல்லிவிட்டால தவிர மனதிற்குள் ஏதோ தவிப்பாக உணர்ந்தாள்.மனம் அமைதியில்லாபஷமல் தவிக்க ஆரம்பித்தது.

ஏனோ கோவிலுக்கு செல்ல வேண்டும் என தோன்ற,

ம்மா நா கொஞ்சம் கோயில் வர போயிட்டு வரேன் மா,

மகளின் முகம் தெளிவில்லாமல் இருப்பதை உணர்ந்தவர்,

ம்ம்ம் சரி போயிட்டு வா அப்புடியே சாமி பேருக்கு அர்ச்சனை பண்ணிடு,


கருவறையில் வீற்றிருந்த முருகனை காண காண மனதில் உள்ள சஞ்சலங்கள் யாவும் விலகு அந்த இடத்தில் அமைதி குடிக் கொண்டது,

ஐயர் கொடுத்த அர்சசனா தட்டை வாங்கியவள் தன் நெற்றியில் விபூதியை இட்டுக் கொண்டு சந்நிதானாத்தை விட்டு வெளியே வந்தவள் அங்கிருந்த பிரஹாரத்தில் கண் மூடி அமர்ந்து விட்டாள்,



மூடிய கண்களில் அவனுடனான கடைசி சந்திப்பு நிழலாக படர்ந்தது



இதயா தனது இளநிலை கல்லுரியை முடித்து விட்டு E.Ed ல் சேர்ந்திருந்த சமயம்,தனது தோழிகளுடன் புதிதாக திறந்திருந்த ரெஸ்டாரன்டிற்கு வந்திருந்தாள்.

கடையில் கூட்டம் அலை மோத தேடிப் பிடித்து ஒரு டேபிளில் அமர்ந்து விட்டனர்,

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளிற்கு பின்புறம் பெண்கள்,ஆண்கள் என நான்கு பேர் அமர்ந்திருக்க,அதில் ஒருத்தி,

ஏய்,பயப்பாடாம இரு டி டென்ஷன் ஆகாது இன்னைக்கு.உன் லவ்வ சொல்லியே ஆகுற என பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் ஆறுதல் கூறிக் ளொண்டிருந்தாள்.

ஏதோ லவ் ப்பிரோபசல் போல என நினைத்தவள், தங்களுக்கு தேவையான ஆர்டரை கொடுக்க ஆரம்பித்தனர்,

உணவுப் பதார்த்தங்கள் வந்ததும் அனைவரும் உண்ண ஆரம்பிக்க,

ஹேய் அவன் வந்துட்டான் டி நார்மல இரு இல்லன அவன் கண்டுப்புடிச்சிடுவான்,என திரும்ப அப்பெண்ணிண் குரல்,

இதயா யாரேன நிமிர்ந்து பாரக்க,அங்கே ஜெகதீஸ் வந்து கொண்டிருக்க,அதிர்ந்தவள் அப்ப பின்னாடி உக்காந்திருக்குறது யாரு அவளா????

அதற்குள் அவன் இவர்கள் டேபிளை நெருங்கி விட இதயா சுவரை ஒட்டி அமர்ந்திருந்ததால் இவளை பார்க்காது தாண்டி சென்றுவிட்டான்.

அங்கிருந்த சேரில் அமர போனவனை,ஜெகா வெயிட் இங்க மதுக்கிட்ட வந்து உக்காரு என அவள் எழுந்துக் கொள்ள,

இது வழக்கமாக நடக்கும் ஒன்று என்பதால் அவன் ஏதும் பேசாது சென்று அமர்ந்து விட்டான்,நண்பர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை சொல்ல,நகர்ந்த வெயிட்டரை திரும்ப அழைத்த நண்பர்கள் குழு,

அண்ணா ஒரு பிளாக் பாரஸ்ட் கேக் கடைசியா கொண்டு வாங்க,

அதனைப் பார்த்த ஜெகதீஸ் எதுக்குடா கேக் என்க,

ம்ம்ம செலிப்ரேஷன்காக

எனக்கு தெரியாம என்ன செலிப்ரேஷன் யாருக்கும் பர்த்டே கூட.இல்லையே,

இது பர்த்டே செலிப்ரெஷன் இல்ல லவ் செலிப்ரெஷன்,

பாருடா அது யாரு எனக்கு தெரியாம,

அதற்குள் ஆர்டர் செய்திருந்த உணவுகள் வர அதனை வாங்கியவாறே,

உன்னோட லவ் செலிப்ரேஷன் எப்புடி உனக்கே தெரியும் என்று ஒருவன் கூற,

நண்பர்கள் ஏதோ தன்னை வைத்து பிளான் பண்ணுகிறார்கள் என நினைத்தவன்,அவர்களினின் போக்குக்கே தானும் சென்றான்.



அதில் ஒருத்தி,ஏன் ஜெகதீஸ் நீ நம்ம மதுவ பத்தி என்ன நினைக்கிற என்க,

அவளுக்கு என்ன அழகான அன்பான பொண்ணு,

ஓஓஓஓஓ........... அவ லவ் கிடைக்க குடுத்து வச்சிருக்கனும்ல,

கண்டிப்பா இந்த தேவதையோட லவ் கிடச்சவன் புண்ணியம் பண்ணவன்

அந்த புண்ணியம் பண்ணவன் ஏன் நீயா இருக்க கூடாது நண்பர்களின் கூற்றில் அதிர்நதவன் திரும்பி மதுவைப் பார்க்க,

அவளோ வெட்கச் சிரிப்பில் அமர்ந்திருந்தாள்,இது நங்பர்கள் தன்னை கேலி செய்வதற்காக இப்பசி ஒரு டிராமா ஆடுகின்றனர்,என நினைத்தான்,

ஏனெனில் அவர்களது குழுவில் இது மாதிரி கேலி செய்வது வழக்கம் எனவே நண்பர்களுக்கு கேலியாகவே பதில் அளித்தான் அதனால் வரும் விளைவுகளை அறியாது.



அதுக்கென்ன இருந்துட்டாப் போச்சு,

அவனின் சம்மதத்தை கண்டு மகிழ்ந்த மது,அப்ப நீ ஸ்கூல் லவ் இருக்குன்னு சொன்ன என அவனிடம் கேட்க,

அவளா என் மது செல்லத்துக்கு ஈடாவாள,அதையெல்லாம் நான் எப்பவோ மறந்திட்டேன்,நீ சொல்லு நம்ம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் என கள்ளச் சிரிப்புடன் கேட்க,

அவனின் கேள்வியில் மகிழ்ச்சி அடைந்தவன் தன் இதழ்களை அவனது கன்னத்தில் பதிக்க,இதைஎதிர்பார்க்காதவன் அதிர்ந்து விழிக்க,னண்பர்கள் மத்தியில் ஒரே கூச்சல்,

அதுவரை அவன் சொன்னவைகளை கேட்டுக் கொண்டிருந்த இதயா,அதற்கு மேலும் முடியாமல் எழுந்திரிக்க அவள் எழுந்த வேகத்தில் டேபிளில் சத்தம் எழ,

அந்த சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க ஜெகதீஸ்ஸூம் திரும்ப,மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தான்,

கண்கள் முழுவதும் நீரில் மிதக்க இவனை குற்றம்சாட்டிய பார்வை பார்த்த இதயா,தோழிகளின் கேள்வியான பார்வையில்இல்ல அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லி மெசேஜ் அனுப்பியிருக்காரு நான் கிளம்புறேன் நீங்க அப்றம் வாண்க என்பவள் தோழிகளின் பதிலைக் கூட பெறாது விடுவிடென்று நகர்ந்து விட்டாள்.

அதுவரை அவளது பார்வையில் விக்கித்திருந்தவன் அவள் செல்லவும் உயிர் பெற்றவனாக ,

ஷிட் எல்லாத்தையும் கேட்டுட்டாளா,என நினைத்தவன் ,காய்ஸ் ஒரு நிமிஷம் என தன் நண்பர்களிடம் கூறியவன் அவள் பின்னால் ஓடினான்,

வெளியே வந்தவன் அவளை தேட பார்க்கிங்கில் இருந்த தண் வண்டியை எடுத்துக் கொண்டிருந்தவளின் முன் சென்றவன்,

இதயாயாயாயாயா.........என தனது குரலில் ஒட்டு மொத்த காதலையும் தேக்கி அழைக்க,

ஹான்,அங்க அப்புடி பேசிட்டு என்னப் பார்த்ததும் எப்புடி குழைகிறான்,என நினைத்தவள்,

என்ன என்பது போல் உணர்ச்சி துடைத்த முகத்தோடு கேட்க,

இல்ல அங்க பேசினதும் எல்லா சும்மா விளையாட்டுக்கு அவுங்க என்ன வச்சு சும்மா விளையாட்டாங்க


வெயிட், அத எதுக்கு ஏன்ட சொல்லுற,நான் உன்ட ஏதாச்சும் கேட்டேன,

முதல்ல யாரு நீ வழிய விடு மொதல்ல,என அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய,

அவளது வண்டியில் கை வைத்து தடுத்தவன், என்ன யாருன்னு தெரியாதா உனக்கு,என அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவாறே கேட்க,

அவனின் பார்வையை எதிர்க் கொண்டவள் ,தெரியாது என அழுத்தமாக சொல்ல,

இவளிடம் பேசி பயனில்லை எனத் தெரிந்தவன்,சரி விடு உனக்கு என்ன தெரியாமையே இருக்கட்டும்.

உங்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு சொல்லனும்னு நினச்சுக்கிட்டே இருந்தேன்,இத விட்டா எனக்கு நல்ல சந்தர்பம் அமையாது,

தன் காதலை அவள் கண்களுக்குள் கடத்த முயன்று அவள் கண்களை உற்று நோக்கியவன்,தனது வழக்கமான ஆழ்ந்தக் குரலில்,

இதயா.......ஐ லவ் யூ என் மனசு முழுக்க நீதான் இருக்க,

டேய், ஜெகதீஸ்........அதுவரை ஒரு வித மோன நிலையில் இருந்த இதயா மதுவின் குரலில் நிகழ்காலம் உறைக்க,அவனை உறுத்து விழித்தாள்.

அதற்குள் அவனது அருகில் வந்த மது டேய் இங்க என்னட பண்ணுற,இந்தப் பொண்ணு யாரு உனக்கு தெரிஞ்சவங்கள,

அதான் உன் லவ்வர் கேட்கிறாள சொல்லு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உன்ன லவ்வ பண்ணுறேன்னு சொன்னா இவன்,ஆனா இப்ப ஏன்ட வந்து நா உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லுறான் என்ன்ன்னு நீயே கேளு என இதயா கூற,

அவளது பதிலில் அதிர்ந்தவன்,இதயா நான் தான் சொன்னேன்ல அது சும்மா பசங்க விளையாட்டுக்கு.வம்பிழத்தாங்க,

மது நீ சொல்லு நம்ம பசங்க எல்லாம் சும்மா கேலிக்காக தான பண்ணங்க,நீயும் நடிச்சதான சொல்லு,

என்ன நடிச்சேன,இல்லடா நான் உன்ன உண்மையாவே லவ் பண்ணுறேன் என கலங்கிய குரலில் கூற

மதூதூதூதூதூ.............என அதிர்ந்து கூவியவன்,அவசரமா இதயாவை பார்க்க,

இல்ல இதயா....என பேசப் போனவனை தடுத்தவள் நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டே,

உனக்கு எல்லாம் வெக்கமாவே இல்ல ச்சீ தூதூத எத்தன பேருக்கிட்ட இப்புடி லவ்வ சொல்லிட்டு திரியிற நான் எத்தனவாது உனக்கு,

இந்தப் பொழப்பு பொழைக்கிறது பிச்சை எடுக்கலாம் பொறுக்கி நாயே என காதல் தந்த ஏமாற்றத்தில் வார்த்தைகளை அமிலமேன இதயா வீச,

ஏய்ய்ய்ய்ய் அதுவரை அவள் பேசியதை கேட்டவன் அவளின் பொறுக்கி,பிச்சை என்ற வார்த்தையில் வெகுண்டவனாக கரஜிக்க,அரண்டுப் போனாள்.

என்ன டி விட்ட ஓவரப் பேசுற நான் அப்புடி எத்தன பேர ஏமாத்துனது நீ பாத்த இல்ல பாக்குற எல்லார்க்கிட்டையும் பொறுக்கிக்கிட்டு திரிச்சேனா,

உன்னப் போய் இத்தன வருஷம் லவ் பண்ணதுக்கு நல்ல பலன் எனக்கு நாக்கு டி அது இப்புடி தோள் விஷத்த கொட்டுற மாதிரி வார்த்தையால கொல்லுற,

என் கேரக்டர தீர்மானிக்க நீ யாரு டி இனி என்னப் பத்தி பேச உனக்கு எந்த அருகதையும்.இல்ல,இனி ஜென்மத்துக்கும் உன் முகத்துல முழிக்கவே மாட்டேன்,

அதிர்ச்சியில் உறைந்து நின்றிருத்த இதயாவை உறுத்து விழித்தவன்,அருகிலிருந்த மதூவிடம்,பிரண்ட்டுன்ற பாசத்துல உன்ச பழகுனதுக்கு நல்ல கைமாறியம் செஞ்ச என்றவன் இருப் பெண்களையும் திரும்பி பார்க்காது சென்றுவிட்டான்.


கோவிலில் கேட்ட மணி ஓசையில் நேரம்ஆகிவிட்டதை உணர்ந்தவள்,மீண்டும் ஒருமுறை இறைவனை தரிசித்து விட்டு வீட்டிற்கு பயணமானாள்.

அன்று சென்றவன் தான் அதன் பிறகு அவனை காணவில்லை,அவனின் கோவத்தில் தான் பேசியது சற்றே அதிகப்படியோ என இவள் நினைத்து வருந்தது நாள் இல்லை,நாட்கள் அதன் போக்கில் நகர,

ஒரு நாள் பள்ளியில் இருந்தவளை யாரோ பார்க்க வந்திருக்கிறார்கள் என பிஃயூன் அழைக்க,

யாராக இருக்கும் என யோசித்தவள்,விசிட்டர் அறைக்கு செல்ல வந்திருப்பவரை கண்டு சற்றே திகைத்தவள் தன்னை சமாளித்துக் கொண்டு,

சொல்லுங்க எதுக்கு என்ன பாக்க வந்திங்க என எதிரிலிருந்த மதுவிடம் கேட்க,

ஐயம் சாரி முதல என்ன மன்னிச்சிடு,என்னால தான் உங்க ரெண்டுப் பேருக்குள்ள சண்ட வந்திருச்சு நீ.அவன தப்பா புரிஞ்சிக்க நான் காரணமாகிட்டேன்,

புரியல நீங்க என்ன சொல்லுறீங்க,

அன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல நடந்தது எல்லாமே சும்மா விளையாட்டுக்குன்னு தான் அவன் நினச்சான் ஆனா அது உண்மையின்னு அவனுக்கு தெரியாது,

ஏன்னா எங்க குரூப் ல இந்த மாதிரி பசங்க அப்ப அப்ப பிளான் போட்டு டீஸ் பண்ணுவாங்க,அதனால அவன் அத அப்புடி எடுத்துக்கிட்டான்,

உன்கிட்ட கோபம பேசிட்டு போனதுக்கப்றம் நான அவன தேடிப் போனேன் என் காதல அவன் கிட்ட சொன்னேன் பட் அவன் அத ஒத்துக்கல,

எப்பவுமே நீ எனக்கு ஒரு நல்ல பிரண்ட் உம் மேல பாசம் இருக்கு ஆனா காதல்இல்லன்னுு சொல்லிட்டான்.

நான் கூட கேட்டேன் இதயா தான் உன்ன வேண்டாம்னு சொல்லிட்டாளே நீ ஏன் என் லவ் ஒத்துக்க கூடாதுன்னு

அவதான் புரியாம என் காதல தூக்கி எறிஞ்சான்ன என்னாலயும் அவள தூக்கி எறிய முடியாது,என் மனசுல எப்பவும் அவளக்குு மட்டும் தான் இடம்,ன்னு சொன்னவன் அதுக்கப்றம் இங்க இருக்க புடிக்காமா கம்பனில கிடச்ச பாரின் ஆபர ஒத்துக்கிட்டு அங்க போயிட்டான்,

ஆனா அவன் போகும் போது சொன்னது ஒன்னு தான் என்னைக்காவது ஒரு நாள் நீ அவனப் புரிஞ்சுக்கும்போதும் காலம் கடந்திருக்கும் அப்ப கண்டிப்பா நீ வருத்தப்படுவ அதனால உனக்கு எந்த உண்மையும் தெரிய.வேண்டாம் னு சொன்னான்.

எனக்கு இத அப்டியே விட மனசில்ல அதான் அவன் கோபபட்டாலும் பராவாயில்லன்னு உன்கிட்ட உண்னைய சொல்லிட்டேனர நீ அவன் காதல இழந்திடக் கூடாதுன்னு தான் நான் இத சொன்னது,

ரொம்ப லேட்டா வந்திட்டிங்க,இப்ப தெரிஞ்சதுக்கு எனக்கு இந்த உண்மை தெரியாமலே இருந்திருக்கலாம்,என்றாள் கண்களில் நீர் நிரம்ப,

எனக்கு வீட்டுல மாப்பிள்ள பாத்துட்டாங்க,நாளைக்கு பொண்ணு பாக்க வராங்க நானும் ஒத்துகிட்டேன் இப்ப போய் என்னால எங்கப்பா கிட்ட சொல்ல முடியுமா,

சொன்ன கண்டிப்பா அவுங்க வருத்தப்படுவாங்க பொண்ணு மனசுல இப்புடி ஒரு ஆசை இருக்குன்னு தெரியாம நம்ம இருந்திட்டோம்னு பீல் பண்ணுவாங்க,

வேண்டாம் முடிச்சது முடிச்சதாவே இருக்கட்டும் இனி இதப் பத்தி நான் பேச விரும்பல உங்க பிரண்கிட்டயும் நீங்க இங்க வந்து போசினத சொல்ல வேண்டாம்,

சரி இது உங்க வாழ்க்கை இதுல நான் தலையிட்ட நல்லா இருக்காது இருந்தாலும் நீங்க மனசு மாறினிங்கன்ன இது அவனோட பாரின்ல யுஸ் பண்ற நம்பர் இதுக்கு கால் பண்ணுங்க நான் வரேன் என்று சென்றுவிட்டாள்.அன்று அவள் அழுத அழகை சொல்லி அடங்காது.

அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது,பத்மா வாசு இருவரும் பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தனர்,

ஏங்க மாப்பிள்ள வீட்டுக்காரங்களுக்கு போன் போட்டு கிளம்பிட்டாங்களான்னு கேளுங்க,எத்தன மணிக்கு இங்க வருவாங்கன்னு கேளுங்க,

கேட்டாச்சு பத்மா கியம்பிட்டாங்கள இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்களாம்

தியா ரெடியாகிட்டாளா

குளித்து முடித்து லவண்டர் கலரில் உடல் முழுவதும் கொடி டிசைன் இருக்க தங்க ஜரிகை இருபுறமும் உடுத்தி தலை நிறைய மல்லி சூடி அதனை தோள்களில் ஒருபுறம் வழிய விட்டு பதுமையென அமர்ந்திருந்தவளை காண காண பத்மாவிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை,

இதயாவிற்கு ஏதோ தவறு செய்தது போல் ஓர் உணர்வு,அவனின் நம்பரை கையில் எடுத்தவள்,

கூப்பிடலாமா ??அப்பா கிட்ட சொல்லிடலாமா இது எனக்கு வேண்டாம்னு ஜெகதீஸ் பத்தி சொல்லிடலாமா என அவள் யோசித்த நிமிடம்,

பத்மா மாப்பிள்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க என தந்தையின் குரல் கேட்க,

இல்ல வேண்டாம் அவனுக்கு நான் ஒத்து வரமாட்டேன் அவனுக்கு நா வேண்டாம்,முடிச்சது முடிச்சதாவே.இருக்கட்டும் இனி இது இருந்து என்ன பயன் என நம்பரை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாள்,

"கண்கள் திறக்கும் எந்தன் மனமே எங்கு நீ தூக்கி கிடத்தாய்,

காதல் பிறக்கும் இந்த நொடியே எங்கு நீ தூக்கிகிடந்தாய்,"

"உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கின்றேன் தவறை உணர்ந்தேனே நீ இன்றி இனி வாழ்வில்லை"



தியா வா எல்லாரும் வந்துட்டாங் இந்த காபிய கொண்டுப் போய் குடு,

காபி தட்டை கைகளில் வாண்கிக் கொண்டு நகர்ந்தவளின் கண்களில் மெல்லிய நீர் படலம் அவர்களை நெருங்க நெருங்க ஏனோ அழுகை அதிகமாகியது,அனைவருக்கும் காபி கொடுத்தவள் மாப்பிள்ளையின் அருகில் வர ஏனோ கால்கள் நகர மறுத்தன்

தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மாப்பிள்ளையை பார்க்காது குனிந்தவாறே காபிதட்டை நீட்ட,

தியா மாப்பிள்ளைய பாரும்ம என தாயின் குரலில் நிமிர்ந்துு பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது,

ஏனெனில் அங்க அமர்ந்திருந்தவன் ஜெகதீஸ்வரன். அவளையும் அறியாது அவளது கண்ணிர் இவனது விரல்களில் விழுக,அதனைப் பார்த்தவனின் முகம் இறுகியது.

இரு வீட்டுக்களுக்கும் இந்த சம்பந்தம் பிடித்து விட தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்க,

நா கொஞ்சம் பொண்ணுக்கிட்ட தனியா பேசணும்,

தியா போ நம்வீட்டுக்கு பின்னாடி இருக்குற பால்கனிக்கு கூட்டிட்டு போ

சரிப்பா.....,

கைகளை கட்டிக் கொண்டு கம்பியில் சாய்ந்துக் இவளை பார்த்திருந்தவன்,தன் திருவாயைத் திறந்தான்.

ஷோ உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல அப்டிதானே,

அவனின் கேள்வியில் அதிர்ந்தவள் இல்லை என மறுக்க போக,

அதனை தடுத்தவன் வெயிட் நான் பேசி முடிச்சிடுறேன்,அப்றம் என்னால உன்னோட வார்த்தையை தாங்க முடியாது அன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல பேசுனியே,

நீ அவ்ளோ அசிங்கப்படுத்தியும் நான் திரும்ப வந்திருக்கிறேன்ன அதுக்கு என்னோட காதல் தான் காரணம் என்னால உன்ன மறக்க முடியும் னு தோணல,உனக்கு என் காதல் புரிஞ்சிருக்கும் இல்லன்னா நா சொல்லி புரிய வச்சிடலஆன்ற நம்பிக்கையில தான் வந்தேன் ஆனா உன்னோட அழுகையிலேயே தெரிஞ்சிடுச்சு உனக்கு இதுல விருப்பம் இல்லன்ன,

ஆனால் மானங் கெட்டமனசுக்குு அத புரியல உன்னையே தான் திரும்ப திரும்ப நினைக்குது, எப்புடியும் நீ விருப்பம் இல்லன்னு தான் சொல்லப் போற அதுக்கு முதல் நானே சொல்லிடுறேன்,என நகர்ந்தவன் பின் திரும்பி நின்று,

கொஞ்சம் கூட நான் உன்ன பாதிக்கலையை இதயா என குரல் கரகரக்க கேட்க,

அடுத்த நிமிடம் "பளார்" என்று அறையும் சத்தம் கேட்டது,ஜெகதீஸ் கன்னத்தை பிடித்துக் கொண்டு அதிர்ந்து அவளைப் பார்க்க,

என்ன பெரிய இவனா நீ என்ன பேசவிட்டியா முதல நீயா வந்த நீயா பேசின இப்ப கல்யாணம் வேண்டாம்னு போற,நான் சொன்னேன எனக்கு இதுல விருப்பம் இல்லன்னு,

அப்றம் எதுக்கு டி அழுத என அவள் அடித்ததில் சீற,

இதுக்கு எதுக்கான அழுகை தெரியுமா

உன்ன மனசுல நினச்சுகிட்டு இன்னொருத்தன் முன்னாடி நிற்கப் போறேனேனு வந்த அழுகை,
என் காதல அடியோட மனசுக்குள்ள புதச்சிக்கிட்டேனே அதுக்கான அழுகை,காதலுக்கும் பாசத்துக்கும் நடுவுல தவிச்சுக்கிட்டு இருக்கேனே அதுக்கான அழுகை,போதுமா இல்ல இன்னும் விளக்கவுன் வேணுமா??

நீ என்ன சொல்ற என அவன் புரியாது கேட்க,

அவளை கண்ட நாள் முதல் அவளின் துடிப்புகளை சொல்லத் தொடங்கினாள்,அவனை எண்ணி ஒவ்வொரு நாளும் யாருக்கும் தெரியாமல் விடும் கண்ணீரை கூறினாள்.பெற்றவர்களுக்கும் காதலுக்கும் இடையில் தவித்த தவிப்பை கூறினாள்,மது வந்தது னுதல் சற்றே நேரம் முன்வரை தான் இருந்த மனநிலையை கூறியவள் கடைசியாக
அவனுடனான கற்பனை வாழ்வை கூற,

அவளை இழுத்து தன்னுடன் அணைத்திருந்தான்,அவள் உடல் அழுகையில் குலுங்க,

சாரி டி நீ இவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன்னு தொரியாது,டி சரி விடு இனிமே எல்லாம் சரியாயிடும் இனி நான் உன்ன விடமாட்டேன்,

சிறிது நேரம் அழுதவள் பின் தன்னை சமாளித்துக் கொண்டவள் அவனிடமிருந்து பிரிந்து,

போதும் உள்ளப் போகலாம் ரொம்ப நேரம் ஆச்சு நம்மள தேடுவாங்க வா,என அவள் நகர முற்பட,

போகலாம் போகலாம் அதுக்கு முன்னாடி நான் அன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல பிரபோஸ் பண்ணதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல சொல்லு நம்ம போகலாம் இல்லன்ன நா இந்த இடத்த விட்டு நகர மாட்டேன் என அழுத்தமாக உரைத்தவன் அவளைப் பார்க்க,

சிவந்து விட்டு தனது கன்னங்களை அவனது மார்பில் புதைந்து மறைத்தவள் நாணம் மேலிட ஒரு வழியாக சொல்லி விட்டாள்,

"ஐ லவ் யு டூ ஜெகதீஸ்"

ஹோய் என அவளை தூக்கி சுற்றியவன்,அவள் என்ன ஏது என்று உணரும் முன்பு அவளது இதழ்களை சிறைப்பிடித்திருந்தான்.
அதிர்ச்சியில் அவளது கண்கள் விரிந்து பின் மூடிக் கொண்டது..

சில நொடிகள் நீடித்த இதழ் யுத்தத்தை மனமே இல்லாமல் முடித்து வைத்தவன்,சிவந்திருந்த அவளது முகத்தை ஒரு முறை ரசித்தவன்,பின் வீட்டினுள் அழைத்து சென்றான்.

பிள்ளைகளின் சம்மதம் கிடைத்ததும் மடமசவென கல்யாண ஏற்பாடுகள் நடக்க,இதயாவிற்கு பெற்றவர்களை ஏமாற்றுகிறோமா என உறுத்த ,
ஜெகதீஸ்ஸீடம் புலம்பி தவித்தாள்.

அவள் குற்ற உணர்வை தாங்க இயலாதவன்,இதயாவின் பெற்றவர்களிடம் அனைத்து உண்மையையும் சொல்லியழன் அவள் குற்ற உணர்ச்சியையும் சொல்லி விட்டான்.

தங்கள் பெண் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாளா என திகைத்தவர்கள் அவளிடம் தங்களுக்கு உண்மைகள் அனைத்தும் தெரியும் தங்களுக்கு எந்த விதமான வருதமும் இல்லை என்று கூறியவர்கள் இத் திருமணம் நடப்பதில் முழுச் சம்மதம் சொல்லி அவளின் குற்ற உணர்ச்சியைப் போக்கினர்.

ஒரு நல்ல சுபயோக சுப தினத்தில் ஜெகதீஸ் இதயாவை மங்கலநாண் அணிவித்து தனது சரிபாதியாக்கி கொண்டான்.

அன்றைய இரவு இதயாவின் வருகைக்கு ஆவலாக காத்திருந்தவன் அவளின் குழம்பிய முகத்தை கண்டு கடுப்படைத்து விட்டான்,

என்னத்தான் டி உனக்கு பிரச்சனை?இன்னும் மூஞ்சிய இப்புடி.வச்சிருக்க,எல்லாத்தையும் தான் நான் சரிப்பண்ணிட்டேனே உங்க அப்பாம்மாக்கு எல்லா உண்மையும் சொல்லி அவுங்களே முழுமனசா ஒத்துகிட்டாங்க இன்னும் என்ன டி

அவனின் முகத்தைப் பார்த்து சிரித்தவள் இரண்டே இரண்டு டவுட் அத மட்டும் கிளியர் பண்ணிடு,

சொல்லித்தொலை எங்க வந்து டவுட்டு கிளியர் பண்ணச் சொல்லுறப் பாரு

எப்புடி நீ கரக்ட்டா மாப்பிள்ளைய வந்த உன் பிரண்ட்ஸ்கெல்லாம் தெரியாத நீ என்னப் பாக்க வரது

இது ஒரு டவுட் டா டி, நாபாரின் போனாலும் இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஆள் இருத்துச்சு அப்பதான் உங்கப்பா உனக்கு.வரன் பாக்க சொல்லி தரகர் கிட்ட ஜாதகம் கொடுத்திருக்காரு,சரின்னு நானும் அத யூஸ் பண்ணிக்கிட்டேன் ஏற்கனவே அம்மா என்னோட ஜாதகத்த அந்த தரகர்கிட்டயே கொடுத்திருந்தாங்க சோ என் வேலை ஈசியா முடிச்சிருச்சு,நெக்ஸ்ட் என்னோட பிரண்ட்ஸ்க்கு யாருக்கும் ஏதும் தஎரியாது எல்லா முடிவாகட்டும் அப்றம் சொல்லிக்கலாம்னு இருந்தேன் அதான் மேரேஜ்க்கு எல்லா வந்தாங்கள,

ம்ம்ம் அடுத்ததது,நீ ஏன் ஜெகதீஸ் என்ன லவ் பண்ண எத வச்சு என் மேல உனக்கு லவ் வந்துச்சு,

அவன் முகம் மென்மையுற அவளை இழுத்தணைத்தவன்,தெரியல டி அததான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன் பர்ஸ்ட் டைம் உன்னப் பாத்தப்ப பிடிச்சிருந்திச்சு அதான் உன் பின்னாடி.வந்தேன் நீ உனக்கு.விருப்பம் இல்லன்னு சொல்லிட்ட,

அபறம் காலேஜ் போயிட்டேம் நானும் ஜஸ்ட் ஒரு ஈர்ப்புன்னு தான் நெனச்சேன் மறந்திடுவேன்னும் நினச்சேன் ஆனா காலேஜ்ல உன்ன திரும்ப சேரில பாத்தப்பாதான் உன்ன விட முடியாது மறக்கவும் முடியாதுன்னு தோணுச்சு,அப்றம் நீ என் கண்ணுல படக்கூடாதுன்னு மறச்சு மறச்சுப் போனது எல்லாத்தையும் நான் பாத்திட்டுதான் இருந்தேன்,உன் பொறாமைய தூண்டனும்முதான் வேணும்னே மது கிட்ட நெருக்கமா இருக்கஇற மாதிரி உன்கிட்ட காட்டிக்கிட்டேன்,

இதயா ரெஸ்ட ரூம்மில் அவர்கள் பேசியதை சொல்ல,

அது அவளுக்கு அப்ப ஒரு பீலிங் இருந்துச்சு இப்ப இல்ல நான் கிளியர் பண்ணிட்டேன்.

அப்றம் ரெஸ்டாரண்ட்ல சத்தியமா அப்புடி ஒரு நிலமையில உன்ன பாப்போன்னு நினைக்கல இருந்தாலும் அந்த சான்ஸ்ஸ விட மனசில்லாமல் பிரோபஸ் பண்ணிட்டேன் அப்றம் நடந்தது தான் உனக்கே தெரியுமே,ஆனா ஒன்னு மட்டும் உண்மை உன்ன யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியும் னு தோணல அதான் விடமா துரத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல நீ என்ன பாத்திய கண்ணுல தண்ணியோட அப்ப இந்த கண்ணுல நா காதல பாத்தேன் ஏன்டா என்ன ஏமாத்துன அப்டின்னு கேள்வி கேட்டுச்சு அப்றம் என்ட சண்ட போட்டப்பயும் இதுல வலிய பாத்தேன் அதுக்கபறமும் உன் விட்டுட்டு போக நான் முட்டாளா அதான் உனக்கு பிடிக்காட்டியும் பரவாயில்ல கைய கால கட்டியாச்சு கல்யாணம் பண்ணும்னு நினச்சேன் ஆனா விட்டிய ஒரு அறை அப்ப புரிஞ்சிடுச்சு எல்லாம்.

ஷப்பா அவ்ளோ தான டி இன்னும் இருக்க,
இன்னும் நிறைய இருக்கு என கள்ளச்சிரிப்புடன் அவள் கூற அதை உணர்ந்துக் கொண்டவன் அவளை பேச விடாது இதழ்களை சிறை செய்தவன் கட்டிலில் அவளை சரித்து அசுத்த கட்டத்திற்கு முன்னேறினான்,அழகான இனிமையான கூடல் அவர்களிடையே அரங்கேறியது.இனி அவர்கள் வாழ்வில் இனிமை மட்டுமே.........

தன் காதலில் ஜெயித்தது மட்டுமல்லாது பெற்றவர்களுக்காக தனது காதலை புதைத்த இதயாவின் காதலையும் தோண்டி எடுத்து ஜெயித்தவன் அவள் விருப்பப் படி அவர்கள் மனம் வேதனையில் சிக்காமலும் காப்பாத்திவிட்டான் ஆக மொத்தம் அனைவரது மனங்களையும் தனது காதலுக்காக, இதயாவிற்காக ஜெயித்து அவளை மணந்தும் கொண்டான்.

பெற்றவர்கள் மனதை நோகடிக்க விரும்பாத இத்தகைய காதலர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் இவ்வுலகில்..............

சுபம்......

நன்றி........

.Sowndharyacheliyan.
 

Latest posts

New Threads

Top Bottom