Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் திமிரும் கூடும் உன்னாலே...

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
"எனக்கு மருதாணி வைக்கணும்னு ஆசையா இருக்குங்க" என்ற மனைவியை முறைத்தவன்.

"சரி கோன் வாங்கிட்டு வரேன்" என்றான் சலிப்பாய்.

"ஹம் எனக்கு கோன் லாம் வேண்டாம்" என்றாள் முகத்தை சுருக்கி.

அழகிய முகம் சுருங்கினாலும் அதை. பொலிவு கூடுவதை கண்டு ரசித்தவன்.

"கோன் வேணாம்னா?" என்றான் வேண்டுமென்றே.

"யோவ் மாமா!" என்ற மனைவியை விழிகள் விரிய பார்த்தவன்.

"என்னடி புருஷனை மரியாதை இல்லாம யோவ் சொல்ற?" என்றான் பொய் கோபத்துடன்.

"ஹம். மாசமா இருக்க பொண்டாட்டி அந்த நிலாவையே கேட்டாலும் கொண்டு வந்து கொடுக்கணும். நீ என்னடான்னா ஒரு மறுதானிக்கு இப்படி சலிக்குற? எனக்கு மருதாணியும் வேணாம் ஒன்னும் வேணாம் போ" என்று சிறுபிள்ளை போல் கோபித்துக்கொண்டு படுத்த மனைவியை புன்னகையோடு பார்த்தான்.

'நான் இப்போ என்ன சொன்னேன்? ஒண்ணுமே சொல்லையே? அதுக்கு இவ்ளோ பேச்சு பேசுறா?' என்று தன்னையே கேட்டுக்கொண்டவன்.

"எல்லாம் உள்ள இருக்க அந்த வாலு பண்ற வேலை. சும்மா சும்மா மூக்கு நுனில கோபத்தை வச்சிருக்கா?" என்று தலையாட்டி சிரித்தவன்.

"இப்போ மணி பத்து எங்க போய் மருதாணி இலையை எடுத்துட்டு வர முடியும்? குழந்தை பிறக்கட்டும் அப்புறம் இருக்குடி உனக்கு" என்று வெளியே சென்றவன் அரைமணி நேரம் தேடி அலைந்து ஒரு வீட்டின் காம்பௌண்ட் வெளியே இருந்த கிளைகளை திருட்டு தனமாய் உடைத்துக்கொண்டு வந்தான்.

இது எதுவும் தெரியாமல் அவனிடம் சண்டை போட்டுகொண்டு உறங்கியிருந்ததாள் அவன் மனைவி.

புளி சேர்த்து மருதாணி இலைகளை அரைத்தவன் அவளை எழுப்ப மனமில்லாமல் உறங்குபவளின் விரல்களுக்கு அழகாய் மருதாணி வைத்துவிட்டான்.

'சின்ன குழந்தை மாதிரி அழிச்சிக்கிட்டா என்ன பண்றது?' யோசித்தவன் வேகமாய் சென்று டேபல் பேனை எடுத்து வந்து விரல்களை காட்டி சற்று காட்டி ஆரவைத்தான்.

அப்படியே உறங்கியும் விட்டான்.

விடிந்ததும் தன் விரல்களில் இருந்த மருதாணியை கண்டவள் ஆச்சர்யத்தில் மூழ்கி தன் கணவனின் கைகளை பார்க்க, அரைத்ததால் அவனின் வலக்கரத்தில் சிவந்திருக்க, அவனின் அன்பில் மேலும் மேலும் எழ முடியாமல் மூழ்கினாள்.

உறங்கும் கணவனின் முன் நெற்றியில் காற்றில் அசைந்தாடும் முடியை ஒதுக்கி விட்டவள் அவனின் இதழ்களை லேசாக ஒற்றி.

"இதுக்கு தான் எனக்கு திமிர் அதிகமாகுதுடா செல்லம்" என்றாள் காதலுடன்.​
 

New Threads

Top Bottom