Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 10 :

அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த நித்திலாவை....வெறுமையான டேபிளே வரவேற்றது.
"குட் மார்னிங் நித்தி....!என்னப்பா இங்க வந்திருக்கிற...?இனி உன் இடம் அதுதான்...",என சுமித்ரா ஆதித்யனின் அறையைக் கை காட்ட,
"தெரியும்...!நீ வாய மூடிட்டு உன் வேலையைப் பாரு...",என எரிந்து விழுந்தாள் நித்திலா.
"ஹே...கூல் டா...!எதுக்கு இப்ப இவ்ளோ கோபப்படற....?"
"உனக்கென்ன....நீ ஜாலியா இங்க உட்கார்ந்துகிட்டு....எல்லார்கிட்டேயும் அரட்டை அடிச்சிக்கிட்டு வொர்க் பண்ணுவ...நான்தான் அங்க தனியா மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்கணும்....",
"டோன்ட் வொரி டி....!லன்ச் டைம் அண்ட் பிரேக் டைம்ல மீட் பண்ணிக்கலாம்....ஒகே வா...?",என சமாதானப்படுத்த முயல,
"வேற வழி....!சரி ஒகே....நான் கிளம்பறேன்...!",என்றவள் ஆதித்யனின் அறையை அடைந்து கதவை ஒரு விரலால் தட்டி அனுமதிக் கேட்க,
உள்ளிருந்து "கம் இன் நித்திலா....",என்ற ஆதித்யனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.கதவைத் திறந்து உள்ளே சென்றவள்,"குட் மார்னிங் சார்....!",என்று புன்னகைக்க,
"வெரி குட் மார்னிங் நித்திலா....!இனி நீ இங்கேதான வொர்க் பண்ணப் போற....ஸோ...ஒவ்வொரு முறையும் உள்ளே வர்ரதுக்கு என்கிட்டே பெர்மிஷன் கேட்க வேண்டாம்....ஃபீல் லைக் யுவர் கேபின்...",எனக் கூறி 'பளிச்' என்று புன்னகைக்க....அந்தப் புன்னகையில் அவளது கோபம் மறைந்து மாயமாய் போனது என்னவோ உண்மைதான்....!
"ஒகே நித்திலா....உன் டேபிள் ரெடி...!",என்றபடி அவனது டேபிளுக்கு அருகில் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த டேபிளைக் காட்டினான்.அவள் வேலை செய்வதற்கு ஏதுவாக அந்த டேபிள் வடிவமைக்கப்பட்டிருந்தது.அவளுக்குத் தேவையானப் பொருட்கள் அனைத்தும் நேர்த்தியுடன் அதில் அடுக்கப்பட்டிருந்தன.அவளுடைய வசதிக்காக ஒவ்வொன்றையும்...பார்த்துப் பார்த்து செய்திருந்தான்.
"வாவ்...!எல்லாத்தையும் யோசிச்சுப் பண்ணியிருப்பீங்க போல....இனி ஃபைல் எடுக்கறதுக்கு எழுந்திருக்க வேண்டியதில்ல....உட்கார்ந்த இடத்தில இருந்தே கை நீட்டி எடுக்கற மாதிரி கப்போர்ட் செட் பண்ணியிருக்கீங்க....சூப்பர் சார்...!",எனக் குதூகலமாய் கூறியவளைப் பார்த்தவன்,
"யெஸ் நித்திலா....!அப்புறம்....என் செக்ரெட்டரியுடைய வசதி எனக்கு ரொம்ப முக்கியம்ல.....",எனக் கூறிப் புன்னகைத்தான்.
எதுவும் கூறாமல் சிறு புன்னகையை மட்டும் சிந்தியவளைக் கண்டவன்,"வெல் நித்திலா....!உன் வொர்க்கை ஸ்டார்ட் பண்ணிடு...!ஃபர்ஸ்ட் முக்கியமான மெய்ல்ஸ்க்கு எல்லாம் ரிப்ளை பண்ணிடு...",என்க,அதன் பிறகு இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கினர்.
ஊடும் பாடும் அவளைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வது ஆதித்யனுக்குப் பிடித்திருந்தது.அவளது விரல்கள் கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒரு வித லாவகத்துடன் விளையாடுவதையும்.....அவள் வேலை செய்யும் போது முன் நெற்றியில் வந்து விழும் கற்றைக் கூந்தலை....ஒரு விரலைக் கொண்டு ஒதுக்கி...அதைக் காதிற்குப் பின்னால் செருகிக் கொள்ளும் அழகையும்....அவளுக்குத் தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
இருவரும் தங்களுடைய அலுவலில் ஆழ்ந்திருக்க நித்திலாவின் போன் அலறியது.சுமித்ராதான் மதிய உணவிற்காக அழைத்திருந்தாள்.தனது சிஸ்டமை ஆஃப் செய்து விட்டு எழுந்தவளைக் கண்டு ஆதித்யன் கேள்வியாக நோக்க,
"லன்ச் டைம் சார்...நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்....!",என்றவளுக்கு,
"அதுக்குள்ள லன்ச் டைம் வந்துடுச்சா...?நேரம் போனதே தெரியல....ஒகே நித்திலா...!யூ கோ...!",என அனுமதியளித்தான்.
இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பாலாவும் வந்து சேர்ந்து கொண்டான்.
சுமித்ராதான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்."அப்புறம் நித்தி...!ஃபர்ஸ்ட் டே எப்படி இருந்துச்சு...?",எனக் கேள்வி எழுப்ப,
"என்ன பர்ஸ்ட் டே வா...?அவ வந்து ஜாயின் பண்ணி ஒரு மாசத்துக்கு மேலே இருக்குமே...?",என்றான் பாலா.
"நான் அதைக் கேட்கல....அவ ஆதித்யன் சார் கூட வொர்க் பண்றதுல இன்னைக்குத்தான் முதல் நாள்..அதைக் கேட்டேன்...!",
"என்னங்க சுமித்ரா சொல்றீங்க...?எனக்குப் புரியல...?",என பாலா விழிக்க,
"ப்ச்....பாலா...!ஆதி சார் இன்னையில இருந்து என்னை...அவரோட கேபினிலேயே வொர்க் பண்ண சொல்லிட்டாரு....அவ அதைத்தான் சொல்றா...",சாப்பாட்டை விழுங்கியபடி நித்திலா விளக்க,
""வாட்...?பட்...ஏன்...?",அவன் விடாமல் கேள்வி கேட்க....சற்று எரிச்சலடைந்த நித்திலா,
"அய்யோ...!அதெல்லாம் பழைய கதை....விட்டுத் தள்ளு....இப்போதைய மேட்டருக்கு வா....நீ என்ன சாப்பாடு...?",என்றபடி அவனது டிபன் பாக்ஸை தன் பக்கம் இழுத்தாள்.
அவள் கூறியதில் பாலாவின் முகம் யோசனைக்கு மாறியது.'ஆதி சார் அவரோட கேபின்க்கு ஒரு பொண்ணை அலோவ் பண்ராருன்னா....யோசனையா இருக்கே....!அவரு அப்படியெல்லாம் ஒரு பொண்ணு கூட க்ளோஸா பழகர ஆள் இல்லையே....?நித்திலா கூட மட்டும் பழகறார்னா....ஒரு வேளை....',அதற்கு மேல் யோசிக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ....அவ்வளவு சீக்கிரம் தன்னுடையக் காதலை நித்திலாவிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்ற உறுதியான முடிவு அவனுக்குள் எழுந்தது.
இவ்வாறாக இருவரும் தங்களது காதலை தன்னவளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்க....அந்தக் காதலுக்கு உரியவளோ....'காதல்' என்ற சொல்லையே தன்னிடம் நெருங்க விடாது நெருப்பாய் எரிந்துக் கொண்டிருந்தாள்.

............................................................................................

நாட்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறக்க...காவ்யாவின் திருமண நாளும் வந்தது.அதிகாலையிலேயே முகூர்த்தம் என்பதால்...முழு நாள் விடுமுறை எடுக்காமல்... இரண்டு மணி நேரம் மட்டும் பெர்மிஷன் கேட்டிருந்தாள் நித்திலா.அந்த இரண்டு மணி நேரம் பெர்மிஷன் வாங்குவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது நித்திலாவிற்கு.
அவளைத் தினமும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்...அவளுக்கு விடுமுறை அளிப்பதையே மறுத்தான் ஆதித்யன்.
ரமேஷின் வீட்டில் காவ்யாவை ஏற்றுக் கொண்டதால்....இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து அவளை அழைத்துச் சென்று விட்டனர்.தோழிகள் அனைவரும் பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டுத் தயாராகினர்.
நித்திலாவும் அழகிய இளம்பச்சை நிற பட்டுப்புடவையில்....அதற்குத் தோதாக முத்துக்கள் பதித்த நகை செட் அணிந்து கொண்டு....தளரப் பின்னியக் கூந்தலுடன்....தோளின் இருபுறமும் வழியுமாறு வைத்துக் கொண்ட மல்லிகைப் பூவுடனும்....அழகியத் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
நந்தினி கூட கிண்டல் செய்தாள்."வாவ்....!அழகா இருக்க நித்தி...!இப்ப மட்டும் எவனாவது உன்னைப் பார்த்தான்....அப்படியே தூக்கிட்டுப் போயிடுவான்...",என்க,
சிறு வெட்கப் புன்னைகையைப் பதிலாகத் தந்தவள்,"போகலாம் டி....நேரமாச்சு...!",என்றாள் நாணத்துடன்.
அனைவரும் ஒரு டாக்சி பிடித்துக் கோவிலுக்குச் சென்றனர்.கண்களில் கனவுகளுடனும்....செம்மைப் பூசியக் கன்னங்களுடனும்....ஒரு மணப்பெண்ணிற்குரிய சர்வ லட்சணங்களுடன் காணப்பட்டாள் காவ்யா,
இவர்களைப் பார்த்ததும் ஆவலுடன் வரவேற்றவளை....கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்லினர் தோழிகள்.நண்பர்களின் கேலியுடனும்...பெரியவர்களின் ஆசியோடும்....இனிதே நடந்தேறியது காவ்யா-ரமேஷின் திருமணம்.
திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை ரமேஷின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.எனவே....தோழிகள் அனைவரும் தாங்கள் வாங்கி வந்தப் பரிசை மணமக்களுக்குக் கொடுத்து விட்டு....சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர்.
நித்திலா அலுவலகத்தை அடைந்த போது மணி பதினொன்று ஆகியிருந்தது. லேசாகக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை நிமிர்ந்து பார்த்தவன்.....கண்ணிமைக்கவும் மறந்து போனான்.இதுவரை சுடிதாரில் மட்டுமே அவளைப் பார்த்திருந்தவன்....முதன் முதலாக அவளைப் புடவையில் பார்க்கிறான்.
அதுவும் தழையத் தழையப் பட்டுப்புடவைக் கட்டி....அதற்குத் தோதான அணிகலன்கள் அணிந்து கொண்டு....அழகாக இருந்தவளைக் கண்டவனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
குறு குறுவென்று தன்னையேப் பின்தொடர்ந்த ஆதித்யனின் பார்வையை உணர்ந்தவளுக்குப் படபடப்பாக வந்தது.
'என்ன இவர் இப்படி பார்க்கிறாரு....?',என்று மனதில் நினைத்தவள் அமைதியாகத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.மறந்தும் அவன் பக்கம் அவள் பார்வையைத் திருப்பவில்லை.
சிறு ஏக்கப் பெருமூச்சுடன் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தவனுக்கு...தன் மனம் தன் வசம் இல்லை என்பது புரிந்தது.அடிக்கடி அவளைப் பார்வையிட்டவாறு வேலை செய்து கொண்டிருந்தவனை அவள் கண்டு கொண்டாள்.ஒருமுறை அவள் புறம் திரும்பிய....அவனது விழிகளை தனது விழிகளால் சிறையிட்டு நிறுத்தினாள் நித்திலா.
அங்கு....நான்கு விழிகளின் சங்கமம் நிகழ்ந்து...ஒரு புதுக் கவிதை மிக அழகாகப் பிறந்து கொண்டிருந்தது....!அவன் விழிகளுடன் கலந்த தன் விழிகளைப் பிரித்தெடுக்க முடியாமல்....தத்தளித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.'வேறு பக்கம் பார்வையைத் திருப்பு...!',என்று அவளது மூளை கட்டளையிட....அவளது மனமோ....மூளையின் கோரிக்கையை நிராகரித்துக் கொண்டிருந்தது.
தன் உள்ளத்துக் காதல் மொத்தத்தையும் தன் விழிகள் வழியாக....அவள் இதயத்துக்குள் பாய்ச்சி விட வேண்டும் என்ற வேகத்துடன்....தன் விழிகளை அவள் விழிகளோடுப் பிணைத்திருந்தான் ஆதித்யன்...!
எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனரோ..... தெரியவில்லை...?நித்திலாதான் முதலில் சுய உணர்வை அடைந்து தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
"எ...என்ன சார்...?",அவள் தடுமாற,
தனக்குத் தானேப் புன்னைகைத்துக் கொண்டவன்,"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்...?புடவையெல்லாம் கட்டியிருக்க...?",அவள் தடுமாற்றத்தை ரசித்தபடி கேட்க,
"அதுதான் நேற்றே சொன்னேனே சார்....என் பிரெண்ட் மேரேஜ்ன்னு...அங்க போய்ட்டு அப்படியே வந்துட்டேன்...",
"ஓ...நைஸ்...!ரொம்ப அழகாயிருக்க...!",இடக்கையால் தன் முடியைக் கோதியவாறு சொன்னவன்....அவனுக்கேப் புதிதாகத் தெரிந்தான்.ஏதோ டீனேஜ் பையனைப் போன்று இந்த குறுகுறுப்பும்....மனதுக்குள் வரும் படபடப்பும் அவனுக்குப் புதிது.
ஏன் என்று தெரியாமலேயே கன்னம் சிவந்தவள்....அவனை ஏறிட்டும் பார்க்காமல்."தே...தேங்க் யூ...",என்று விட்டுத் தன் முகத்தை.... பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் புதைத்துக் கொண்டாள்.
இதழோரங்கள் புன்னைகையில் விரிய...தலையைக் குலுக்கிக் கொண்டவன்...லேப்டாப்பின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு....,"நித்திலா...!",என்று அவன் அழைக்க,"சார்...!",என்றபடி நோட்பேடும்...பேனாவுமாக அவன் முன் வந்து நின்றாள்.
"நமக்கு வந்திருக்கிற ஒரு கம்பெனியோட ப்ரொஜெக்ட்டுக்கு கொட்டேஷன் ரெடி பண்ண வேண்டி இருக்கு...நான் சொல்றதை நோட் பண்ணிக்க...!",என்றபடி மளமளவென்று விபரங்களைக் கூற ஆரம்பித்தான்.
அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி...அனைத்தையும் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டாள் நித்திலா.
"இதைக் கொஞ்சம் ஃபார்மலா ரெடி பண்ணனும்...",என்றபடி நிமிர்ந்தவனின் பார்வையில்...அவளது புடவை மறைக்காத இடுப்பு பிரதேசம் விழுந்தது. வளவளவென்று....பளபளப்பாக இருந்த அந்தப் பகுதியிலிருந்து விழிகளைப் பிரித்தெடுக்க முடியாமல்....கண்களை ஓட விட்டவனின் பார்வையில்....அவள் இடையில் இருந்த கரு மச்சம் வந்து விழுந்தது.
'எங்க எல்லாம் மச்சத்தை வைச்சிருக்கறா பாரு....?',என்று எண்ணியவனின் இதழ்களில் ரகசியப் புன்னகை ஒன்று குடிவந்தது.
அவன் எதுவும் கூறாமல் இருக்கவும்...அவனைக் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தாள் நித்திலா.அவன் ஒரு மார்க்கமாக சிரித்துக் கொண்டிருக்கவும்,"என்னாச்சு சார்...?ஏன் சிரிக்கிறீங்க...?",என்றாள் அப்பாவியாக அவன் பார்வையை உணராது.
அவளது கேள்வியில் தன்னை சுதாரித்துக் கொண்டவன், "ஹ...ஒண்ணுமில்ல... நீ போய் கொட்டேஷன் ரெடி பண்ணு...!",என்றபடி திரும்பிக் கொண்டான்.
மதிய உணவின் போது அவளைப் பார்த்த பாலாவும் மெய் மறந்துதான் போனான்...!
"ஹேய்...என்னப்பா....இங்கே ஏதாவது பட்டுப்புடவை விளம்பரம் எடுக்கறாங்களா....?",என்றபடி சுற்றும் முற்றும் தேடுவதைப் போல் பாவனை செய்தவனின் கையில் 'நறுக்'கென்று கிள்ளியவள்,
"ஏய்...கிண்டல் பண்ணாதப்பா...",என்று சிணுங்கினாள்.
அவளது சிணுங்களில் தன்னைத் தொலைத்தவன்,"ச்ச்சும்மா டா...!பட்...ரியலி யூ ஆர் லுக்கிங் வெரி பியூட்டிஃபுல்...!",என்றவனின் விழிகள் இதமாக அவளை வருட....குரலும் குழைந்து இனிமையாக வந்தது.
ஆனால்....அவனிடம் நிகழ்ந்த எந்த மாற்றத்தையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை...!தனக்கு மிகவும் பிடித்த பனீர் பிரைட் ரைஸை உள்ளே தள்ளியபடி, "அதெல்லாம் எனக்கே தெரியும்....!நீ ஒண்ணும் சொல்ல வேண்டியதில்ல....",என்று பழிப்புக் காட்டினாள்.
பாலாவுடன் இருக்கும் போது...நித்திலாவின் அத்தனைக் குறும்புத் தனங்களும் வெளிவந்து விடும்...அவன் தோழமையுடன் பழகுவதாலோ...என்னவோ....அவனுடன் அவளால் இயல்பாக ஒன்ற முடிந்தது.ஆனால்...அந்த உணர்வில் நட்பு என்பதைத் தவிர வேறு எந்த உணர்வும் இல்லை என்பதுதான் உண்மை....!
அவள் கூறிய விதத்தை ரசித்துச் சிரித்தவன்...தன் உணவை சாப்பிட ஆரம்பித்தான்.
"ஏண்டி நித்தி...உன் பிரெண்ட் காவ்யா லவ் மேரேஜ்தான...?",என சுமித்ரா கேட்க,
"ம்ம்...ஆமாம்...",
"அப்ப நீயும் லவ் மேரேஜ்தான் பண்ணிக்க போறயா...?",சுமித்ரா ஆர்வத்துடன் கேட்க,
"செருப்பு பிஞ்சிடும்....",அவளைப் பார்த்து முறைத்தபடி கூறினாள் நித்திலா.
"ஏன் நித்தி...?காதலிச்சு கல்யாணம் பண்றதுல நம்பிக்கை இல்லையா...?",முகம் இருள கேட்டான் பாலா.
"நம்பிக்கை இல்லைன்னு இல்ல....பட்...பிடிக்காது...!",
"ஏன்...?",
"ஏன்னா....அந்தப் பொறுப்பை நான் என் அப்பா அம்மாகிட்ட கொடுத்துட்டேன்...!"
"ஹ்ம்ம்...வெரி நைஸ்...!",ரசித்துக் கூறினாள் சுமித்ரா.
அதைக் கேட்ட பாலாவிற்குத்தான் முகம் வாடிப் போனது.மூவரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் வரை....அவன் முகம் குழப்பத்துடன்தான் இருந்தது.
மதியத்திற்கு மேல் ஆதித்யனை அலுவலகத்தில் பார்க்க முடியவில்லை.ஏதோ வேலையாக வெளியே சென்றிருப்பதாக...நித்திலாவிற்கு தகவல் மட்டும் வந்தது.அவன் இல்லாத அறையில் வேலை செய்வது...ஏனோ வெறுமையாக இருந்தது அவளுக்கு.

....................................................................................................................

சுமித்ராவிற்கு வேலையில் ஏதோ சந்தேகம் வரவும்....அதை கௌதமிடம் கேட்டுத் தீர்த்துக் கொள்வதற்காக....அவனுடைய அறைக்குச் சென்றாள்.இருமுறை கதவைத் தட்டியும் உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாதலால்....அவளே கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
கௌதமின் அறையை ஒட்டி இன்னொரு சிறிய அறை இருக்கும்.முக்கியமான ஃபைல்கள் எல்லாம் அங்குதான் அடுக்கப்பட்டிருக்கும்.
அவன் அங்குதான் இருப்பான் என்ற எண்ணத்தில்...அந்த அறையின் கதவைத் தள்ள...மிகச் சரியாக அதே நேரத்தில்...உள்ளிருந்து கெளதம் வெளியே வருவதற்காக கதவை இழுக்க...அவன் இழுத்த வேகத்தில் இவள் தடுமாறினாள்.
கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்தான் கெளதம்.அவனது ஒரு கரம் அவளது இடையை அழுந்தப் பற்றியிருக்க....இன்னொரு கரம் அவளது தோளைத் தழுவியிருந்தது. அவளும்...'எங்கே...கீழே விழுந்து விடுவோமோ....?',என்ற பயத்தில் அவனது சட்டைக் காலரை இறுகப் பற்றியபடி...விழிகளை அழுந்த மூடியிருந்தாள்.
துடிக்கும் இதழ்களுடன்....தன் மீது சாய்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு....காதல் போதை தலைக்கேற...அவள் அதரங்களை சிறை செய்யும் நோக்கத்துடன்....அவளது இதழ்களை நோக்கி மெல்ல குனிந்தான்.
அவனது சூடான மூச்சுக்காற்று தன் முகத்தின் மேல் படவும்....மெல்ல விழியுயர்த்திப் பார்த்தவளின் வெகு அருகில் தெரிந்தது அவன் முகம்....!அவன் முகத்தில்....இதுவரை அவள் பார்த்திராத உணர்வுகள் குடி கொண்டிருந்தன.
முத்தமிடும் நோக்கத்துடன்....அவள் இதழ்களை நெருங்கியவன்...அவள் விழி திறந்துப் பார்க்கவும்...சட்டென்று தன் உணர்வுக்கு வந்தான்.அதுவரை அவனைச் சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழுந்தது.
அவள் மீதிருந்த தன் கைகளை விலக்கியவன்....தன் சட்டையைப் பற்றியிருந்த அவளது கரங்களை முரட்டுத்தனமாகத் தள்ளி விட்டான்.அவன் தள்ளிய வேகத்தில் கீழே விழப் போனவள்...அருகிலிருந்த கதவைப் பிடித்து சமாளித்து நின்றாள்.
அனல் கக்கும் பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"பார்த்து வர தெரியாதா...?இப்படித்தான் மேலே வந்து மோதுவியா...?",என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
"இல்ல சார்...!நீங்க இந்த ரூம்லதான் இருப்பீங்கன்னு...நான் கதவைத் திறந்தேன்...அதுக்குள்ள...",
"வாயை மூடு...!முதல்ல இப்படி எதிர்த்து பேசறதை நிறுத்து....எதைக் கேட்டாலும்....ஒரு பதில் வைச்சிருப்பியே...?",அவன் அரட்டிய அரட்டலில் அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்று கொண்டாள்.
"உள்ளே வர்றதுக்கு முன்னாடி கதவைத் தட்டிட்டு வரணும்ங்கிற பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா...?",அவன் பாட்டுக்கு அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க...அவள் உடல் வெடுவெடுக்க நின்று கொண்டிருந்தாள்.
அவள் அமைதியைக் கண்டு அவனுக்கு இன்னும் கோபம்தான் வந்தது."வாயைத் திறந்து பேசு....இங்க ஒருத்தன் காட்டுக் கத்தல்லா கத்திக்கிட்டு இருக்கேன்...!நீ பாட்டுக்கு 'யாருக்கு வந்த விருந்தோ'ன்னு நின்னுக்கிட்டு இருக்க....?பேசிக்கிட்டு இருக்கற நான் என்ன பைத்தியமா....?",என்று எரிந்து விழ,
அவள் பேசினாலும்,'எதிர்த்து பேசறயா...?',என்று கத்தினான்....அதைக் கேட்டு அவள் அமைதியாய் இருந்தாலும்,'பேச மாட்டயா...?' என்று குதறினான்.மொத்தத்தில் தன் நிலைமை என்ன என்று தெரியாமல்...அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
"சாரி சார்...!என் மேல தான் தப்பு....ரூம் கதவை நாக் பண்ணாம வந்தது...என் தப்புதான்...!ஸாரி...!",
அவள் இப்பொழுதெல்லாம் இப்படித்தான் மாறிவிட்டாள்.முதலில் தான் கெளதம் திட்டுவதற்கு பயந்து கொண்டு அழுது விடுவாள்.போகப் போக...அவன்...அவள் மீது எரிந்து விழுந்துக் கொண்டே இருந்ததாலோ...என்னவோ....அவள்...அவளது கோபத்திற்குப் பழகி விட்டாள்.தவறு அவள் மீது இல்லையென்றாலும் மன்னிப்புக் கேட்டு...விட்டுக் கொடுத்து விடுவாள்.
அவள் எதற்காக...அவனது கோபத்தைத் தாங்கிக் கொண்டு....பொறுத்துப் போகிறாள் என்று அவளும் எண்ணிப் பார்க்கவில்லை.அவன் எதற்காக...அவள் மீது உரிமையுடன் கோபித்துக் கொள்கிறான்...என்பதை அவனும் யோசிக்கவில்லை...!
அவள் மன்னிப்புக் கேட்கவும்...அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.'ச்சே...இப்ப யார் மேலேயும் தப்பில்லை...!நான் எதுக்கு தேவையில்லாம ரியாக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்....?',என்று எண்ணியவன்,"சரி....இப்போ எதுக்கு இங்க வந்த...?",என்று கேட்டபடி தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.
பிறகு அவள் தன் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டு ஒரு "நன்றி"யுடன் வெளியேறி விட்டாள்.அவள் சென்ற பிறகு யோசனையில் ஆழ்ந்தவனின் மனதில்,'இன்னும் கொஞ்ச நேரம்....அவ கண்ணைத் திறக்கலைன்னா...நான் அவளை கிஸ் பண்ணியிருப்பேன்...!கடவுளே...!என்ன காரியம் செய்ய இருந்தேன்...?', என்று எண்ணமிட்டவனின் முகத்தில் அவளை முத்தமிட முடியாத ஏமாற்றம் படிந்தது என்னவோ உண்மைதான்...!
அவளை முத்தமிட முடியாத ஏக்கத்தில்தான் அவன்...அவளைக் கண்டபடித் திட்டியது என்ற உண்மையை அவனது மனசாட்சி அவனுக்கு வெட்ட வெளிச்சமாக்க.... ஆனால்....அவனது மூளையோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்து சண்டித்தனம் செய்தது.
பார்ப்போம்....!காதலுக்கு முன் எந்த மனிதனின் மூளையும் வேலை செய்யாது....!காதல் தேவனின் முன்...காதல் கொண்ட மனது மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும்...என்பதை அவனது அறிவே அவனுக்கு உணர்த்தும் காலம் வரும்....!

அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 11:

அன்று ஞாயிற்றுக்கிழமை.....

காலையிலேயே எழுந்து ஜாகிங் போய்விட்டு வந்து...தனது அறையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஆதித்யன்.அவனது அறையே ஒரு மாளிகையைப் போல் பிரம்மாண்டமாக இருக்கும்....உள்ளே நுழைந்ததுமே வரவேற்பறை இருக்கும்...அதற்கு அடுத்தது அவனுடைய அலுவலக அறை.இரவு நேரங்களில்...நீண்ட நேரம் வேலைப் பார்க்க வேண்டிய சமயங்களில் அவன் அங்குதான் அமர்ந்து வேலை பார்ப்பான்.அங்கிருந்து உள்ளே நுழைந்தால் படுக்கையறை...மற்ற இரண்டு அறைகளை விடவும் பெரிது...!

இடது பக்கம் குளியலறையுடன் உடை மாற்றும் அறையும் இருக்க...மேலே அறையில் இருந்தபடியே..கீழே இருக்கும் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களைப் பார்த்து ரசிக்கும் படி...பால்கனி அமைக்கப்பட்டிருக்கும்...!

படுக்கை அறையிலிருந்து இன்னொரு அறைக்கு ஒரு கதவு போகும்...அந்த அறையில் அவன் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக...உடற்பயிற்சி சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

அந்த அறையில்...வியர்க்க...விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனை அவனது தாத்தா...பாட்டியின் குரல் கலைத்தது.

"குட் மார்னிங் மை பாய்...!",உற்சாகமாக அழைத்துக் கொண்டு வந்தார் அவனுடைய தாத்தா.

ஆதித்யனுக்கு அவனுடைய தாத்தா...பாட்டி என்றால் மிகவும் பிரியம்...!இந்த வயதிலும் உற்சாகமாக...ஆர்ப்பரிப்புடன் வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்வதை அவன் மிகவும் ரசிப்பான்.

அவர்களிடத்தில் அவனை ஈர்த்த மற்றொரு விஷயம்...அவர்களுடைய காதல்...!முதுமை அடைந்து...நரைகள் எய்தியிருந்தாலும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காதலைப் பொழிந்து கொண்டிருப்பர்...!இருவரையும் ஒரு கண நேரம் கூடத் தனியாகப் பார்க்க முடியாது.காதல் பறவைகளைப் போல்...எப்போதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருப்பர்...!

'தன்னுடைய தாத்தா...பாட்டியைப் போல்...தானும் தன் மனைவியும் வாழ வேண்டும்...!தன்னவளை காதல் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து...வாழ்நாள் முழுவதும் கீழே இறக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும்...'என்ற எண்ணம் அவனது மனதில் வேரூன்றியிருந்தது.

அன்றும்..இருவரும் ஜோடிப் போட்டுக் கொண்டுதான் அவனுடைய அறைக்கு வந்திருந்தனர்.

"குட் மார்னிங் மை டியர்ஸ்...!எப்பப் பார்த்தாலும்...இரண்டு காதல் கிளிகளும் ஒண்ணாத்தான் சிறகடிச்சிட்டு இருப்பீங்களா....?" ஆதித்யன் கிண்டலாகக் கேட்க,

"நல்லா கேளுப்பா உன் தாத்தாவை....எப்ப பாரு ஒட்டுப்புல் மாதிரி...என் கூட ஓட்டிகிட்டே திரியறாரு...",என்று அவன் பாட்டி பொய்யாக அழுத்துக் கொள்ள,

"கமலு...!என் செல்லம்...!நீயே இப்படி சொல்லலாமா...?",என்று வருத்தப்படுவதைப் போல் நடித்தவர்,
"உன்னை நீங்கி நான்
எங்கே செல்வது...?",என்று பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டார்.

"ஐயோ..தாத்தா...!போதும்...போதும்...!உங்க ரொமான்ஸை ஓட்டறதுக்கு வேற இடமே கிடைக்கலையா...?ஏன் காலையிலேயே இங்க வந்து...என் காதுல ரத்தம் வர வைக்கறீங்க...?",தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டபடி...பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் ஆதி.

"விஷயம் இல்லாம இந்த சுந்தரம் எங்கேயும் வர மாட்டான் டா...இங்க வந்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு...!",மர்மமாகப் புன்னகைத்தபடியே பேரனின் முகத்தை அளவிட்டார் பெரியவர்.

"அப்படி என்றால் தாங்கள் வந்ததின் காரணம் என்னவோ..?",ஆதித்யன் கேலியாக வினவ,

ஒன்றும் பேசாமல் தன் பேரனைப் பார்த்துப் புன்னகைத்தவர், "இப்பொழுதெல்லாம்... என் பேரனின் முகத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிகிறதே...அதன் காரணம் என்னவோ...?",என்று அவனைப் போலவே திருப்பிக் கேட்டார்.

தாத்தாவின் பேச்சில் ஒரு நொடி தடுமாறியவன்...பிறகு,"ஒளிவட்டமா...?அதெல்லாம் ஒண்ணுமில்ல...நான் குளிக்கப் போறேன்...!",என்றபடி டவலை எடுத்துக் கொண்டு நழுவியவனை,

"இருடா பேராண்டி....!உன் கிட்ட பேசணும்...",என்ற அவனுடைய பாட்டியின் குரல் இழுத்துப் பிடித்தது.

"பாட்டி...!நீங்களுமா...?சரி...சொல்லுங்க...?என்ன பேசணும்...?",என்றவாறு பொறுமையாக நடந்து சென்று தனது கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

கணவனும் மனைவியும் அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தனர்.அவனுடைய தாத்தாதான் ஆரம்பித்தார்.

"நீ முன்ன மாதிரி இல்லையே....?முதல்ல எப்போ பாரு முகத்தை...கடுகடுன்னு வைச்சிருப்ப....தொழில்...தொழில்னு பிசினஸ் மேலேதான் உன் முழு கவனமும் இருந்துச்சு...",அவர் கூறி முடிப்பதற்குள்ளேயே அவரை இடை மறித்தவன்,

"இப்ப என்ன சொல்ல வர்றீங்க...?நான் என் தொழிலை கவனிக்கிறது இல்லைன்னு சொல்றீங்களா...?",என்றான் சற்று கோபமாக.

"சே...சே...!நான் அப்படி சொல்லுவேனாப்பா....?தொழில்ல உன்னை யாரும் அசைக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்...!",

"தென் வாட்...?",என்றபடி தோளைக் குலுக்கியவனிடம்,

"ஆனால்...உன் மனச யாரோ அசைச்சிட்டாங்களோன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு....",அவனையே குறுகுறுவென்று பார்த்தபடி கூறினார் சுந்தரம்.

"அப்படி அசைச்சாதான் என்ன தப்பு...?",ஒற்றைக் கண்ணைச் சிமிட்டியபடிக் கேட்ட பேரனின் தோளைத் தட்டியவர்,

"அப்படி வாடா வழிக்கு....!ஸோ...உன் மனசில ஒரு குட்டிப் புயல் மையம் கொண்டிருக்கிறது....உண்மைதான்...இல்லையா...?",என்று ஆரவாரமாகக் கேட்க,

"படவா...ராஸ்கல்...!கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னுட்டு...நீயே ஒரு பொண்ண பார்த்திட்டாயா...?",என்று செல்லமாக பேரனின் காதைப் பிடித்துத் திருகினார் கமலாம்பாள்.

"ஹைய்யோ...பாட்டி விடுங்க....!அதுதான் ரெண்டு பேரும் உளவு பார்த்துக் கண்டுபிடிச்சிட்டடீங்களே ...?",என்று போலியாய் அலறினான் ஆதித்யன்.

"உளவு பார்க்கிறதா...?அது என்ன தேவைக்கு...?அதுதான் உன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கே.....!",

"அந்த அளவுக்கா இருந்திருக்கேன்....?",

"ஆமாண்டா பேராண்டி....!அப்பப்ப எதையாவது நினைச்சு சிரிக்கிற....அதுவும் இல்லாம...முதல்ல எல்லாம் உனக்கு ரொம்பக் கோபம் வரும்....இப்பவெல்லாம் நீ அவ்ளோக்கா கோபப்படறது இல்ல...தோட்டத்துல ஜாகிங் போகும் போது பூக்களைப் பார்த்து ரசிச்சிக்கிட்டு நிற்கிற.....",அவன் பாட்டி அடுக்கிக் கொண்டே போக,

"ஹ்ம்ம்....போதும்...போதும்....!",என்றவன் நித்திலாவைப் பற்றி அவர்களிடம் கூறினான்.சிறு முறுவலுடன் கூறியப் பேரனைப் பார்த்தவரின் மனம் கனிந்தது.

"சரிப்பா...மத்த விஷயங்களை விடு....!நீ அந்தப் பொண்ண உண்மையாகத்தான லவ் பண்ற...?",கேட்ட சுந்தரத்தின் குரல் தீவிர பாவத்துக்கு மாறியிருந்தது.

அவர் கூறியதைக் கேட்டவனின் முகம் யோசனைக்குத் தாவியது."என்ன தாத்தா...இப்படி கேட்கிறீங்க...?இனி என் வாழ்க்கையில மனைவின்னு ஒருத்தி வர்றதுன்னா...அது அவ மட்டும்தான்....!",அழுத்தத்துடன் கூறினான் ஆதித்யன்.

"ம்ம்...குட்....!அந்தப் பொண்ணுக்கிட்ட உன் காதலை சொல்லிட்டியா...?அவ என்ன சொன்னா...?",அவர் ஆவலுடன் கேட்க,

அவனோ,"இன்னும் சொல்லல....",என்றான் முணுமுணுப்பாக.

"ஓ....!",என்றபடி சிறிது நேரம் எதையோ யோசித்தவர்,பிறகு,"நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத ஆதி....ஒருவேளை....அந்தப் பொண்ணு உன் காதலை ஏத்துக்கலைன்னா...?",என்று கேள்வியுடன் அவனை ஏறிட,

ஒரு வித தீவிரத்துடன் தனது தாத்தாவை நோக்கியவன், "ஏத்துக்குவா..... ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்....நான் இதுவரைக்கும் தோல்வியை சந்திச்சதே இல்லைன்னு...உங்களுக்கு நல்லாவே தெரியும்....!",கர்வத்துடன் கூறியவனைக் கண்டவருக்கு...மனதில் சிறு பயம் எழுந்தது.

"சரிதான்....!இதுவரைக்கும் நீ தோல்வியை சந்திச்சது இல்லைதான்.... ஆனால்....தொழில் வேற....வாழ்க்கை வேறப்பா....",அவர் அவனுக்கு எடுத்துக் கூற முயல,

அவனோ,"ம்ம்...நானும் அதைத்தான் சொல்ல வர்றேன்....!தொழில்லயே விட்டுக் கொடுக்காதவன்....வாழ்க்கையிலையா விட்டுக் கொடுக்கப் போறேன்....?அவளை வேற எவனுக்கும் விட்டுத் தர நான் தயாரா இல்ல....",என்று சொன்னவனின் கண்களில் தீவிரம் குடி கொண்டிருந்தது.

"நீ சொல்றது எனக்குப் புரியுதுப்பா....ஆனால்....அந்தப் பொண்ணும் தன் முடிவுல உறுதியா இருந்தா...?",

ஒரு முடிவோடு அவரை நோக்கியவன்,"அவ என்னைக் காதலிச்சுத்தான் ஆகணும்....!அவளுக்குப் பிடிச்சிருந்தாலும் சரி....பிடிக்கலைன்னாலும் சரி....அவளை அவளுக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல...!",இரையைத் தேடும் வேங்கையின் சீற்றத்தோடு இரைந்து விட்டுக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் கண்களில் தெரிந்த உறுதியில்....சுந்தரத்திற்கு பயம் வந்தது.கவலையுடன் அமர்ந்திருந்தவரின் தோளைத் தொட்ட கமலாம்பாள்,"இப்ப எதுக்கு இவ்வளவு வருத்தப்படறீங்க....?அவன் ஒண்ணும் சின்னக் குழந்தையில்ல....எல்லாத்தையும் அவனே பார்த்துப்பான்....",என்றார் ஆறுதலாக.

"என் பயமே அதுதான் கமலா....இதுவரைக்கும் இவன் நினைச்சதை அடையாம விட்டதில்ல....!அந்தளவுக்குப் பிடிவாதமும்....அழுத்தமும் அதிகம்...!",

"இப்ப நீங்க இதுல இவ்ளோ வருத்தப்படறதுக்கு அவசியமே இல்ல....அந்தப் பொண்ணு இவனை வேண்டாம்ன்னு சொன்னாத்தான பிரச்சினை....நம்ம ஆதியை எந்தப் பொண்ணும் நிராகரிக்க மாட்ட...",என்று கூறியவரின் குரலில் பேரனைக் குறித்த பெருமை பொங்கி வழிந்தது.

ஆனால்...அப்படிப்பட்டவனையும் ஒருத்தி வேண்டாம் என்று கூறுவாள்....என்பதை அவர் அப்பொழுது அறிந்திருக்கவில்லை...!

"நீ நினைக்கிற மாதிரியே எல்லாம் நடந்துறாது கமலா....இவன் முரட்டுத்தனமா எல்லா காரியத்தையும் செய்யறவன்....அந்தப் பொண்ண நினைச்சா...எனக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு...!",

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே....ஆதித்யன் குளியலறையிலிருந்து வந்து விட்டான்.அவர்கள் இருவரும் இன்னும் தன் அறையிலேயே இருப்பதைக் கவனித்தவன்,

"என்ன தாத்தா...?இன்னும் என்ன பிரச்சனை....?ஒருவேளை....அவ என்கிட்டே வேலை செய்யறவதானான்னு யோசிக்கிறீங்களா...?",கேட்கும் போதே அவன் குரல் கடுமையாகத்தான் வந்தது.
"சே...சே...!அப்படி எல்லாம் இல்லப்பா....நானும் உங்க பாட்டியும் சரி....உன் அம்மா அப்பாவும் ஆகட்டும்....காதலை எதிர்க்கிறவங்க இல்லைன்னு உனக்கு நல்லாவேத் தெரியும்....அதே மாதிரி,பணம் ஒரு பிரச்சனையே இல்ல....நம்மகிட்ட இல்லாததா...?",என்று அவசரமாக மறுத்தார்.

"தென்....வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் தாத்தா...?"

"உன் கோபமும்...பிடிவாதமும் தான் பிரச்சனையே....தொழில்ல முரட்டுத்தனமா முடிவெடுக்கற மாதிரி....நீ உன் வாழ்க்கையிலும் எடுக்கக் கூடாது....அந்தப் பொண்ணுக்கு விருப்பமில்லைன்னாலும்....நீ பொறுமையாகத்தான் ஹேண்டில் பண்ணனும்...",

"ஹ்ம்ம்....ஒகே...!அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்....இப்ப நீங்க ரெண்டு பேரும் போய் சமர்த்தா.....கொள்ளுப் பேரன் பேத்தியைப் பத்திக் கனவு காண்பீங்களாம்....சரியா...?",தன் பாட்டியின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவாறுக் கூறியவனைப் பெரியவர்கள் இருவரும் வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டனர்.

"சந்தோஷம் கண்ணா....!எல்லாம் நல்லதாவே நடக்கும்....",என்று வாழ்த்துக் கூறியபடி இருவரும் வெளியேறினர்.

...................................................................................................................

ஆதித்யா கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் -

காலை நேர பரபரப்பில் இயந்திர கதியாக இயங்கிக் கொண்டிருந்தது.நான்கு ஆண்கள் பின்தொடர.....அவர்களுக்கு மளமளவென்று கட்டளைகளைப் பிறப்பித்தவாறு....கம்பீரமாக உள்ளே நுழைந்தான் ஆதித்யன்.அவன் நுழைந்ததும் அலுவலகத்தில் சட்டென்று நிசப்தம் நிலவியது.அனைவரும் கூறிய 'குட் மார்னிங்கை' சிறு தலையசைப்புடன் ஏற்றவாறு தனது அறைக்குள் நுழைந்தான்.

இதை அனைத்தையும்....சுமித்ராவின் அருகிலமர்ந்து பேசிக் கொண்டிருந்த நித்திலா இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.'என்ன கம்பீரம்....!' என்று மனதிற்குள் அவளை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால்....அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுமித்ராவிடம்,"அடடா....!அப்படியே 'பாட்ஷா....!பாட்ஷா.....!'ன்னு தீம் மியூசிக் போடலாம் போல இருக்கு.....",என்று கிண்டலடித்தாள்.

"ஏய்...!கிண்டல் பண்ணாதடி....அவரு நடந்து வர்றது எவ்வளவு கம்பீரமா இருக்குத் தெரியுமா....?",என்று சுமித்ரா அவள் கூறியதை மறுக்க....அவளை சந்தேகமாகப் பார்த்தவள்,

"என்னடி.....ட்ரெயின் ட்ராக் மாறுது....?",என்றாள் கேள்வியாக,

"என்ன ட்ரெயின்.....?என்ன ட்ராக்....?",சுமித்ரா புரியாமல் வினவ,

"ஹ்ம்ம்....சுமித்ராங்கிற ட்ரெயின்....கௌதம்ங்கிற ட்ராக்கில் இருந்து மாறுது.... அதைக் கேட்டேன்....?",

"அடிச்சீ....வாய மூடு....!எனக்கும் கெளதம் சாருக்கும் இடையில எம்ப்ளாயர் அண்ட் எம்ப்ளாயீங்கிற ரிலேஷன்ஷிப்பைத் தவிர வேற எதுவும் இல்ல....முதல்ல இடத்தைக் காலி பண்ணு....!உன் பாஸ் வந்தாச்சு....!", என அவளை விரட்டினாள்.தோழிகளுக்குள் இந்தக் கிண்டல் பேச்சு சகஜம் என்பதால்....அவள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"அட....ஆமாம்ல.....!உன்கிட்ட உட்கார்ந்து வாயடிச்சுக்கிட்டு இருக்கேன் பாரு....",தன் தலையில் தானேக் கொட்டியபடி ஆதித்யனின் கேபினை நோக்கி ஓடினாள்.

தினமும் காலையில் அறைக்குள் நுழைந்ததுமே....சிறு முறுவலுடன் நித்திலா கூறும் 'குட் மார்னிங்கை' ஏற்றுப் பழகியவனுக்கு....அன்று....அவள் அறையில் இல்லாதது சிறு எரிச்சலைக் கிளப்பியது.'காலையிலேயே எங்க போனா....?' என்று எண்ணமிட்டபடி அவன் தன் இருக்கையில் அமரவும்.....நித்திலா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"குட் மார்னிங் சார்.....!" என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் முறைக்க ஆரம்பித்தான்."வேலையைப் பார்க்காம எங்க போயிருந்த.....?",சிறு முகச்சுளிப்புடன் கேட்க,

"சாரி சார்....!வொர்க் எதுவும் அதிகமா இல்ல....அதுவும் நீங்களும் இல்லாததுனால....வெளியே போய்ட்டேன்....!சாரி சார்....!",தலைகுனிந்தபடி பதிலளித்தவளைப் பார்த்தவன்,
"லுக் நித்திலா.....வொர்க் குறைவா இருக்கோ...இல்ல...அதிகமா இருக்கோ....அது மேட்டர் இல்ல....வொர்க்கிங் ஹவர்ஸ்ல நீ என் கேபின்லதான் இருந்தாகணும்....!புரியுதா...?", காலையில் கண் விழித்ததுமே ஆதித்யனுக்கு அவள் முகம்தான் மனதில் தோன்றும்.அவளைப் பார்க்கும் ஆசையில் ஆவலுடன் கிளம்பி வருபவனை....அவள் இல்லாத வெறுமையான அறை வரவேற்றால் அவனுக்கு எப்படி இருக்கும்...?அது தந்த கடுப்பில்தான் அவளிடம் உத்தரவுப் போட்டுக் கொண்டிருந்தான்.

அவனின் நிபந்தனையில் அவளுக்கு சிறு கோபம் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.'ஆமா...வேலை இல்லைன்னாலும் நான் இந்த ரூமுக்குள்ள தனியா கொட்டு...கொட்டுன்னு உட்கார்ந்திருக்கணும்....சொல்றதுக்கு என்ன..?என்ன வேணும்னாலும் சொல்லலாம்....',என்று மனதுக்குள் கரித்துக் கொட்டியவள் வெளியே,

"ஒகே சார்....!இனி பிரேக் டைம் தவிர மத்த டைம்ல வெளியே போக மாட்டேன்....!",தனது உதட்டை சுழித்தபடி சிறு கடுப்புடன் கூறிவிட்டு தனது இருகைக்குச் சென்று அமர்ந்தாள்.

அவள் கூறிய விதத்திலிருந்தே அவள் கோபமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன்,மனதிற்குள் 'பார்டா....!என் பேபிக்கு எவ்ளோ கோபம் வருதுன்னு....இருடி...!எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்....நான் என் லவ்வ சொன்னதுக்கு அப்புறம்...இப்படி கோபத்துல உதட்டை சுழிச்சுட்டுப் போ...அப்ப வைச்சுகிறேன்....!',என்று அவளைச் செல்லமாகத் திட்டிக் கொண்டான்.

அதன் பிறகு....இருவரும் மௌனமாகவே தங்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆதித்யனின் மொபைல் அடிக்கவும்...அதை எடுத்துப் பேசிக் கொண்டிருந்தான்.போனில் பேசியபடியே அவன் அடிக்கடி தன் சிகையைக் கோதிக் கொள்வதையும்...சில சமயம்....ஒற்றை விரலால் தன் இடது புருவத்தை நிமிண்டியபடி அவன் யோசிப்பதையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்....இல்லை இல்லை....ரசித்துக் கொண்டிருந்தாள்....!

இவன் ஏதோ கூறவும்....அதற்கு மறுமுனையில் என்னக் கூறப்பட்டதோ தெரியவில்லை....இவன் கடகடவென்று சிரித்தான்.வாய்விட்டு பல் வரிசை தெரியப் புன்னகைத்தவனைப் பார்த்தவளின் மனம் அவளையும் மீறி அவன்பால் மயங்கியது....!

'ஒரு ஆண் மகனால் இவ்வளவு அழகா சிரிக்க முடியுமா....?அசடு வழியாமல்...அதே சமயம் கம்பீரமான சிரிப்பு....!'நீயும் என் கூட சேர்ந்து சிரியேன்...!' என்று எதிரில் இருப்பவர்களையும் மயக்கும் வசீகரமான சிரிப்பு....!',மனதிற்குள் எண்ணமிட்டபடி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் இமை கொட்டாமல் தன்னையேப் பார்ப்பதைக் கண்டு கொண்டவன்....போனை அணைத்துவிட்டு....அவளைப் பார்த்து தன் ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி "என்ன...?" என்று கேட்க...அவன் செய்கையில் சுய நினைவுக்கு வந்தவள்,"ஓ...ஒண்ணுமில்ல....!",என்று தடுமாறியபடி திரும்பிக் கொண்டாள்.

நித்திலா ஒன்றும் ஆண்களை ஏறெடுத்தும் பார்காதவளில்லை....அழகான ஆண்களைப் பார்த்தால் சைட் அடிப்பதுண்டு....!ஆனால்...அதையும் ஒரு எல்லைக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வாள்.அதில் எந்த ஒரு ஆணும் இதுவரை அவளைப் பாதித்ததில்லை....தோழிகளுடன் சேர்ந்து சைட் அடித்த மறு நிமிடமே அதை மறந்தும் போய் விடுவாள்.

ஆனால்....ஆதித்யனைப் பார்க்கும் போது வரும் இந்தத் தடுமாற்றம் புதிது....!அவனை நேருக்கு நேர்....கண்ணைப் பார்த்து பேச முடியாமல் தவிக்கும் தவிப்பு புதிது....!அன்று புடவைக் கட்டிக் கொண்டு வந்த நாளன்று...அவன் பார்த்த பார்வைக்கு 'என்ன அர்த்தம்...?' என்று அவள்...அதன் பிறகு வந்த பல இரவுகளில் யோசித்திருக்கிறாள்.

இதோ...இப்பொழுது கூட ஏற்படும் இந்த தயக்கமும்....தடுமாற்றமும் எதனால்...?என்ற கேள்வியும் அவள் மனதில் எழாமல் இல்லை....ஆனால்....அவை அனைத்தும் 'அவனுடன் ஒரே அறையில் வேலை செய்வதால் இருக்கும்...கொஞ்சம் பழகினால் சரியாகி விடும்....!' என்று தவறாகக் காரணத்தை ஊகித்துக் கொண்டாள்.

அவள் படக்கென்று திரும்பிக் கொண்டதில்....வாய் விட்டு சத்தமாக சிரித்தவன்,"ஸோ.....என்ன மார்க்...?",என்று கேட்க,

"எ...என்ன...?என்ன மார்க்....?எனக்குப் புரியல...?",அவள் தடுமாற,

"இவ்வளவு நேரம் என்னை வைச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்தியே....அதான்...எனக்கு என்ன மார்க் போட்டாய்ன்னு கேட்டேன்....?எப்படி....பாஸ் ஆகிட்டேனா....?",இதழ்கள் புன்னைகையில் விரிய.... கண்ணோரங்களை செல்லமாக சுருக்கியபடி கேட்டவனைப் பார்த்தவள்...அவளையும் அறியாமல் வாயை விட்டாள்.

"ஓ...அதெல்லாம்.... ",என்றபடி ஏதோ சொல்ல வந்தவள்....பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு...."நான் ஒண்ணும் வேணும்னே பார்க்கல....நீங்க கூப்பிட்ட மாதிரி இருந்துச்சுன்னுதான் பார்த்தேன்....!",பொய் என்று தெரிந்தும் அசால்ட்டாகக் கூறினாள்.

"அப்படியா....?நம்பிட்டேன்....!",அவன் உதடுகள் கேலியாக வளைந்த விதமே அவன்....அவள் கூறியதை நம்பவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தது.இருந்தும் அவனை கண்டு கொள்ளாமல்...வேலை செய்வது போல் திரும்பிக் கொண்டாள்.

மதியம் மூவரும் சாப்பாடு கொண்டுவரவில்லை.கேன்டீனில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பேசி வைத்திருந்தனர்.பாலா...வேலை காரணமாகஅவனுடைய பிரிவிலிருந்து வருவதற்கு லேட் ஆகிவிட்டது.

வரும் போதே...."சாரி பிரெண்ட்ஸ்....கொஞ்சம் லேட் ஆகிடுச்சு....!",என்று மன்னிப்பு கேட்டபடியே வந்தான்.

"உனக்காக எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது....?",நித்திலா கோபத்துடன் முறைக்க,

"சரி....சரி...!கோபப்படாத....கொஞ்சம் வொர்க்....!அதுதான் லேட் ஆகிடுச்சு...",என்று சமாதானப் படுத்திக் கொண்டிருக்க,

"அட....உங்க சண்டையை அப்புறம் வைச்சுக்கோங்க....!இப்ப எனக்கு பசிக்குதுப்பா....என்ன ஆர்டர் பண்ணலாம்ன்னு சொல்லுங்க.....!",சுமித்ரா இடையே புகுந்து கேள்வி கேட்கவும்தான் இருவரும் அமைதியாகினர்.

"இங்க நம்ம கேன்டீன்ல வேண்டாம் சுமித்ரா....பக்கத்துல ஒரு ரெஸ்ட்டாரண்ட் இருக்கு...அங்க போய் சாப்பிடலாம்....",என்று பாலா யோசனை கூற,

"அதெல்லாம் வேண்டாம்....!ஏற்கனவே....அரை மணி நேரம் ஓடிடுச்சு....இதுல வெளிய போய்ட்டு வந்தோம்ன்னா...இன்னும் ஒரு மணி நேரம் ஓடிடும்....ரொம்ப லேட் ஆகிடும்...!இங்கேயே ஏதாச்சும் சாப்பிடுவோம்...!",என்று நித்திலா மறுத்தாள்.

"ப்ச்....காமான் நித்தி...!என்ன...ஒரு அரை மணி நேரம் அதிகமா ஆகும்....ஆதி சார்கிட்ட சாப்பிட போனேன்னு சொல்லிக்க....!ஒன்னும் சொல்ல மாட்டாரு....!",,பாலா அவளை சரிகட்ட முனைய,

சுமித்ராவும்,"ஆமாண்டி....போய்ட்டு வந்திடலாம்...!நானும் அந்த ரெஸ்ட்டாரண்டுக்கு போகணும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன்...."என்று வற்புறுத்த,

"நோ...நான் வரமாட்டேன்....இன்னைக்கு காலையிலதான் ஆதி சார்கிட்ட திட்டு வாங்கினேன்.... மறுபடியும் வாங்கிக் கட்டிக்க நான் தயாரா இல்லப்பா....இன்னொரு நாளைக்குப் போய்க்கலாம்....இன்னைக்கு இங்கேயே சாப்பிடலாம்....!",என்று உறுதியாக மறுத்தாள்.

பாலா எவ்வளவோ வற்புறுத்தியும்...பிடிவாதமாக மறுத்து விட்டாள் நித்திலா. அவளுடைய பிடிவாதத்தில் அவனுக்கு சிறு ஏமாற்றம் வந்தது.அவளை அந்த ரெஸ்ட்டாரண்டிற்கு அழைத்துச் சென்று...சிறிது நேரம் அவளுடன் தனியாகப் பேசிக் கொண்டிருக்கலாம்....என்று நினைத்து வந்தவனுக்கு...அவள் மறுத்தது ஏமாற்றத்தைத் தந்தது.

'சரி....!இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்....' என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டான்.அதன் பிறகு மூவரும் அங்கேயே சாப்பிட்டு விட்டுக் கிளம்பிச் சென்றனர்.
.........................................................................................................................................

மாலை நந்தினி அறைக்குள் நுழையும் போது....நித்திலா படுத்தபடி கையில் ஒரு நாவலை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி....இது!உலக மகா அதிசயமா இருக்கு....?வழக்கமா நான் ஆபிஸ்ல இருந்து வரும் போது நீ உங்க அம்மா அப்பாகிட்ட....போன்ல கொஞ்சிக்கிட்டு இருப்ப....இன்னைக்கு என்ன...புக் படிச்சுக்கிட்டு இருக்க...?",என்று கிண்டலடித்தாள் நந்தினி.

"அம்மாவுக்கு கால் பண்ணினேன்...ஃபுல் ரிங் போய் கட் ஆகிடுச்சு....அதுதான்...புக் எடுத்து வைச்சு உட்கார்ந்திட்டேன்...",

"அதுதான பார்த்தேன்....பாய் பிரெண்டோட கடலை போட வேண்டிய வயசில....அம்மா அப்பாவோட மணிக்கணக்கா போன்ல கொஞ்சிக்கிட்டு இருக்கற ஆள் நீயாகத்தான் இருப்ப....",

"நான் என்னடி பண்ணட்டும்....!இன்னைக்கு நாள் எப்படி போச்சுன்னு அம்மாகிட்ட சொன்னாத்தான் எனக்குத் தூக்கமே வருது....! ",இருகைகளையும் விரித்து தோளைக் குலுக்கியபடி சொன்னவளைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டவள்,

"உன்னையெல்லாம் திருத்தவே முடியாது டி...!",என்றபடி படுக்கையில் விழுந்தாள்.

"ஏய்...பிசாசே...!எத்தனை முறை சொல்லியிருக்கேன்....?வெளிய போயிட்டு வந்தவுடனே இப்படி....பெட்ல படுக்காதான்னு....உன் மேல இருக்கற அழுக்கெல்லாம் என் பெட்ல ஒட்டிக்கும்....!எழுந்திருடி....!",அவள் கையைப் பிடித்து இழுத்தபடியே கத்திக் கொண்டிருந்தாள்.

"குரங்கே...!ஒரு மனுஷிய கொஞ்ச நேரம் படுக்க விடறியா....?இப்பவே உனக்கு ஒரு சாபம் தர்றேன்....உனக்கு வரப் போற புருஷன்....தினமும் ஆபிஸ்ல இருந்து வந்தவுடனே....குளிக்காம...டிரெஸ் கூட சேன்ஜ் பண்ணாம...உன்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும்....!",அவள் தலையில் ஆசிர்வதிப்பது போல் கை வைத்தபடி நந்தினி கூற,

அவள் செய்கையைப் பார்த்து தன் தலையிலேயே அடித்துக் கொண்ட நித்திலா,"அதெல்லாம் நடக்கறப்ப பார்த்துக்கலாம்....இப்ப நீ போய் குளிச்சுத் தொலை....",அவள் முதுகில் கை வைத்து...பாத்ரூமிற்குள் தள்ளி விட்டாள்.

எதையோ முணுமுணுத்தபடியே நந்தினி உள்ளே செல்ல....நித்திலாவின் போன் அலறியது.அவளுடைய அம்மாதான் அழைத்திருந்தார்.போனை எடுத்தவுடனேயே,
"எங்கேம்மா போயிருந்தீங்க....?எத்தனை டைம் தான் போன் பண்றது....?",என்று கடிந்து கொண்டாள்.

"கோவிலுக்குப் போயிருந்தேன் டா....!அப்புறம்....இன்னைக்கு நாள் எப்படி போச்சு...?",

"எப்பவும் போல நல்லாதான்ம்மா போச்சு....",என்று ஆரம்பித்தவள்...அன்று கேன்டீனில் சாப்பிடதில் இருந்து....மாலை எந்த பஸ்ஸில் வந்தாள் என்பது வரை கூறிவிட்டுத்தான் ஓய்ந்தாள்.அதன் பிறகும்...அவள் இல்லாத போது பக்கத்து வீட்டில் என்ன நடந்தது....அப்பா என்ன செய்கிறார்....?என்பது வரை கேட்டு விட்டுத்தான் போனை வைத்தாள்.

இதை அனைத்தையும் கூறியவள்...ஆதித்யனின் பார்வையைப் பற்றியோ....அந்தப் பார்வையால் தனக்குள் ஏற்ப்பட்ட தடுமாற்றத்தைப் பற்றியோ கூற மறந்துவிட்டாள்....மறந்துவிட்டாளோ.....?இல்லை....மறுத்துவிட்டாளோ....?தெரியவில்லை.....!அதை ஏன் தன் அம்மாவிடம் கூறவில்லை என்பதை அவள் ஒரு கணம் யோசித்திருந்தாலும் போதும்....தன் மனதைப் பற்றி அவள் தெரிந்து கொண்டிருக்கலாம்....!

ஒரு சில மென்மையான விஷயங்களைத் தாயிடம் கூட பகிர்ந்து கொள்ள மனம் வராது....அப்படிப்பட்ட விஷயங்களில்....இந்த விஷயமும் ஒன்று...என்பதை வசதியாய் மறந்து போனாள் அந்தப் பேதை...!!


அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 12 :

அன்று காலை....எப்பொழுதும் போல் தனது அறையில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.அப்பொழுது....வேகமாக உள்ளே நுழைந்த ஆதித்யன்...நுழைந்த வேகத்திலேயே,"நித்திலா....!கமான்....வெளியே போக வேண்டியிருக்கு.....",என்று அவளை அழைக்க,

"எங்கே சார்...?",என்றபடியே எழுந்தவளைப் பார்த்தவன்,

"சைட்க்குப் போகணும்....லோட் வந்திருக்கு....!",என்க,

"திரும்பி வர்றதுக்கு எவ்வளவு மணி நேரம் ஆகும்....?",அவளுக்கு அவள் பிரச்சனை.மதியமும் அங்கேயே இருக்க நேர்ந்தால் கையோடு லன்ச்சை எடுத்துப் போய் விடலாம் என்று அவள் நினைத்தாள்.

"ஹப்பா....!உனக்கு இப்ப என்ன பிரச்சனை....?திரும்பி வர்துறக்கு ஈவ்னிங் கூட ஆகலாம்....மதியம் லன்ச்சை ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்....இப்ப நீ மட்டும் கிளம்பி வந்தா போதும்.....!வர்றியா....?"

"இதோ வரேன் சார்...!",என்றபடி நோட் பேடையும்....பேனாவையும் கையிலெடுத்தவளைப் பார்த்தவன்,

"ஏய்...ஏய்...!அதெல்லாம் எதுக்கு எடுத்து வைக்கிற....?",என்று கத்தினான்.

அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்,"சார்....சைட்க்குப் போறோம்....நீங்க ஏதாச்சும் சொன்னா....நான் நோட் பண்ணிக்க வேண்டாமா...?",என்று வினவ,

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன்...'சரி' என்பது போல் தலையாட்ட....மனதிற்குள்ளோ....'ஆனாலும் பேபி...!நீ இவ்வளவு பொறுப்பா இருக்கக் கூடாது....நானே....உன்கூட சேர்ந்து வெளியே சுத்தலாம்ங்கிற நினைப்பிலதான்....உன்னை சைட்க்கு கூட்டிட்டுப் போறேன்...இதுல நோட் பேட் வேற...?',என்று நமட்டுச் சிரிப்புடன் நினைத்துக் கொண்டான்.

கௌதமிற்கு போன் பண்ணி....ஆபீஸைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியவன்....அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.இவனைப் பார்த்ததும்....கார் டிரைவர் ஓடி வர,அவரை வேண்டாம் என்று மறுத்தவன்....தானே காரை எடுத்தான்.

பின் சீட்டில் அமரப் போனவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன்,"முன்னாடி வந்து உட்காரு....!",என்க,

"இல்ல சார்....!நான் பின்னாடியே உட்கார்ந்துக்கிறேன்...",என்று மறுத்தாள்.அவளுக்கோ....ஒரு அந்நிய ஆடவனின் அருகில் அமர்ந்து செல்ல விருப்பமில்லை.அவனுக்கோ....அவளுக்கு மட்டுமே உரிமையான இடத்தில் அவள் அமராமல்....யாரோ போல் பின்னாடி போய் அமருவது பிடிக்கவில்லை.

அவள் மறுத்ததில் கோபமுற்றவன்,"நான் ஒண்ணும் உனக்கு டிரைவர் கிடையாது....முன்னாடி வந்து உட்காருன்னு சொன்னா....வந்து உட்காரு...!",என்று கத்த,

'ஷப்பா....!ஒரு விஷயத்தை வேண்டாம்ன்னு மறுத்தறக் கூடாது...உடனே....மூக்குக்கு மேல கோபம் வந்திடும்....' என்று முணுமுணுத்தபடியே முன்னாள் ஏறி அமர்ந்தாள்.'இதை முன்னாடியே செய்வதற்கு என்ன....?' என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தவன் காரைக் கிளப்பினான்.

கார் ஊர்ந்து சென்று சென்னை டிராஃபிக்கில் நீந்தியது.

அவள் புறம் திரும்பியவன்,"அப்புறம் நித்திலா....!உன்னைப் பத்தி சொல்லேன்....",என்று பேச்சை வளர்க்க,

"என்ன...?",என்று விழி விரித்தவளைப் பார்த்தவன்,"எப்படியும் நாம போக வேண்டிய இடத்துக்குப் போய் சேர்றதுக்கு...ஒரு மணி நேரமாவது ஆகும்.....அதுதான்,சும்மாவே வர்றதுக்கு ஏதாவது பேசலாமேன்னு கேட்டேன்....",என்று சமாளித்தாள்.

"ஓ...!",என்று உதட்டை சுழித்தவள் ,"என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு சார்....?என் ஃபேமிலியைப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே....?உங்க பேமிலியைப் பத்தி சொல்லுங்க...?",என்று கேள்வியைத் திருப்பினாள்.

"ஹ்ம்ம்....என் தாத்தா,பாட்டி,அம்மா, அப்பா அண்ட் இவங்களோட ஒரே வாரிசான நான்....இதுதான் என் பேமிலி....!",என்றவன் 'அப்புறம் நீயும் என் பேமிலிதான்....' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

"நைஸ்....!தாத்தா...பாட்டிக் கூட இருக்கறது ஜாலியா இருக்கும்ல...",என்று ஆர்வாமாகக் கேட்டவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

"ம்...ஆமா!என் அம்மா அப்பாவை விட....நான் அதிகமா பழகறது என் தாத்தா பாட்டிக்கூடத்தான்....ஸச் அ வொண்டர்ஃபுல் கப்புள்....!",என்று ரசித்துச் சொன்னான்.

"உனக்கு ஹாஸ்டல் லைஃப் எப்படி போகுது....?",என்று மேலும் பேச்சை வளர்க்க,

"ம்ம்....நல்லா போகுது....பிரெண்ட்ஸ் கூட ஜாலியா ஷாப்பிங்....அரட்டை... விளையாட்டுன்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன்....பட்...அம்மா அப்பாவைத்தான் ரொம்ப மிஸ் பண்றேன்...!",அவளது வருத்தத்தைக் கண்டவன்,

"உன் பேரண்ட்ஸை உனக்கு ரொம்ப பிடிக்குமோ...?",குரலில் பொறாமை வழியக் கேட்டான்.

"ம்....அவங்களைப் பிடிக்காம இருக்குமா...? இதுதான் பர்ஸ்ட் தடவை...அவங்கள பிரிஞ்சு இருக்கறது...",

அவள் கூறியது ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை.அவளுக்குத் தன்னை மட்டும்தான் பிடிக்க வேண்டும்....தான் மட்டும்தான் அவளுக்கு முதன்மையானவனாகவும்....முக்கியமானவனாகவும் இருக்க வேண்டும்..என்று அவன் காதல் மனம் நினைத்தது.

அவளைப் பெற்றவர்களாக இருந்தாலும் சரி....தனக்குப் பின்தான் அவளுக்கு.... அனைவரும் என்று சுயநலமாக எண்ணினான் அவன்....!

"நீ இங்க வந்து ஜாயின் பண்ணினத்துக்கு அப்புறம்...உன் அம்மா அப்பாவை பார்க்கப் போகலையா....?",

"ம்ஹீம்....போகல சார்...!எங்கே....நீங்க லீவ் கொடுத்தாத்தானே போறதுக்கு...?சனிக்கிழமை கூட விடாம ஆபிஸ்க்கு வரச் சொன்னா...என்னை மாதிரி இருக்கிறவங்க என்ன பண்றது....?",இதுதான் வாய்ப்பென்று அவன் விடுமுறை அளிக்காததைப் பற்றிக் கூற,

அதைப் புரிந்து கொண்டவன் சிரித்தபடியே,"அதுதான் மன்த்லி ஒன் சாட்டர் டே லீவ்தான....?அப்ப போயிட்டு வந்திருக்கலாம்ல....?",என்க,

"அந்த சனிக்கிழமையும் பிரெண்ட் மேரேஜ்ன்னு ஓடிப் போச்சு...இந்த வாரம்தான் போகணும்....!"

"பார்த்தயா...உன் மேல தப்ப வைச்சுக்கிட்டு....என் கம்பெனி மேல பழியத் தூக்கிப் போடற....",அவன் கேலியாக வினவ,

சிறிது நேரம் என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்தவள் பிறகு ஏதோ ஞாபகம் வரவும்,"ஹ....நான் ஒண்ணும் உங்க மேல பழி போடல...இப்ப நான் லீவ் கேட்டா கொடுத்திருவீங்களா...?",என்று அவள் விடுமுறை கேட்கும் போதெல்லாம் அவன் மறுத்தது ஞாபகம் வரவும் அவனிடம் அவ்வாறு கேட்டாள்.

"லுக் நித்திலா....!வேலைக்குன்னு வந்துட்டா மற்றதையெல்லாம் மறந்திடணும்....அதிலேயும் நீ என் செக்ரெட்டரி....!உனக்கு அடிக்கடி லீவ் எல்லாம் தர முடியாது....அதிலேயும்....ஊருக்குப் போகணும்ங்கிற சின்ன விஷயத்துக்கெல்லாம் லீவ் தர முடியாது....அண்டர்ஸ்டாண்ட்....?",என்று நீளமாக விளக்கமளித்தான்.

அவனுக்கு என்ன எண்ணமென்றால்....அவளுக்கு அடிக்கடி விடுமுறை அளித்தால்...அவள் ஊருக்குச் சென்று விடுவாள்.பிறகு....பெற்றவர்களின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே சுற்றுவாள்.அவளை...அவர்களிடம் இருந்து பிரித்து வைத்தால்தான்...தன்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பிப்பாள் என்று முரட்டுத்தனமாகக் கணக்குப் போட்டது அவனது காதல் இதயம்...!

காதலின் மறு உருவமே சுயநலம்தானே...!தன் இணை தன்னை மட்டும்தான் உயிராக நேசிக்க வேண்டும் என்று காதல் கொண்ட மனது துடிப்பது இயற்கையல்லவா....?

அதற்குள் சைட் வந்துவிட...காரை ஒரு மரநிழலில் நிறுத்த....இருவரும் இறங்கி நடந்து சென்றனர்.'ஆதித்யன் கன்ஸ்ரட்க்க்ஷன்' என்ற பெயர்ப் பலகை அவர்களை வரவேற்க,வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

ஆங்காங்கு சிறு சிறு கட்டிடங்கள் எழும்பியிருக்க....வேலையாட்கள் அனைவரும் ஒரு ஒழுங்குடன் வேலை செய்து கொண்டிருந்தனர்.இவர்களைக் கண்டதும் மேனேஜர் மூர்த்தி ஓடி வந்து வணக்கம் தெரிவித்தார்.

அவரைப் பார்த்து தலையசைத்தவன்,"மூர்த்தி....!எல்லா வேலையும் ஒழுங்கா நடந்துட்டு இருக்கா....?",என்று விசாரிக்க,

"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார்....நல்லா போய்க்கிட்டு இருக்கு...",என்று பணிவுடன் கூறினார் மூர்த்தி.அவருக்கு எப்படியும் வயது 40 இருக்கும்....அவ்வளவு வயதானவரே....ஆதித்யனிடம் பணிந்து பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்தவளுக்கு,'இவன் யாரையுமே ஒரு எல்லைக்கு மேல் நெருங்க விட மாட்டான்....!'என்பது தெளிவாகப் புரிந்தது.

"குட்....!லோட் எல்லாம் இறக்கியாச்சா...?",என்று விசாரித்துக் கொண்டே அவன் நடக்க,அவனைப் பின்தொடர்ந்தாள் நித்திலா.

"இன்னைக்கு காலையிலதான் மணல்,செங்கல்...ஜல்லி எல்லாம் வந்துச்சு சார்....இறக்கிட்டு இருக்காங்க...",

"ஹ்ம்ம்....சீக்கிரம் வொர்க்க முடிக்கப் பாருங்க மூர்த்தி....!இன்னும் மூணு மாசத்துல இந்தப் ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் பண்ணனும்....ஞாபகம் இருக்கு இல்லையா....?",

"கண்டிப்பா சார்....முடிச்சிடலாம்....!அல்மோஸ்ட் எல்லா வொர்க்கும் கம்ப்ளீட் ஆகிடுச்சு....இன்னும் கொஞ்சம்தான் இருக்கு....வாங்க மேலே போய் பார்க்கலாம்....!",என்று அவர்களை அழைத்துச் சென்றார்.

அவர்கள் செல்லும் வழியில் 15 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருக்க,அதைக் கவனித்த ஆதித்யனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.
மேனேஜரிடம் திரும்பியவன்,"என்ன மூர்த்தி இது...?சின்ன பசங்கள வேலைக்கு எடுக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்குது....தெரியுமில்ல...?",என்று அதட்டியவன் அந்த சிறுவனை அழைத்தான்.

"நீ எதுக்குப்பா இங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருக்க...?படிக்கப் போகலையா...?",என்று கேட்க,

அந்த சிறுவனோ,"மேனேஜர் சார்தான் வேலைக்கு எடுத்தாரு சார்....எங்க அம்மாவும் இங்கேதான் வேலை செய்யறாங்க....ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா கொடுக்கறேன்னு சொல்லவும்...என் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு வர சொல்லிட்டாங்க....",கல்வியின் அருமை தெரியாமல் அப்பாவியாகக் கூறினான்.

மேனேஜரைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன்,"என்ன தைரியமிருந்தா என் இடத்திலேயே....இப்படி ஒரு வேலையைப் பார்த்திருப்பீங்க....இது இல்லீகல்ன்னு தெரியாது...?இன்னும் எத்தனைப் பேரை இப்படி வேலைக்கு எடுத்திருக்கீங்க....?இப்பவே எல்லாப் பசங்களையும் வேலையை விட்டு அனுப்புங்க அண்ட் நீங்களும் உங்க ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துட்டுக் கிளம்புங்க....",அவன் கத்திய கத்தலில் வேலை செய்பவர்கள் அனைவரும் அங்கே கூடி விட்டனர்.

முதன் முதலாக அவனை இப்படியொரு கோபத்தில் பார்த்த நித்திலாவும் அரண்டு போய் நின்றுவிட்டாள்.

"சார்...சாரி சார்....!சின்னப் பசங்களை வேலைக்கு எடுத்தா கூலி குறைவா கொடுக்கலாம்ன்னுதான் சேர்த்துக்கிட்டேன்....அதுவும் இல்லாம இவங்க பேரெண்ட்சும் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க....",அவரை மேலும் பேச விடாமல் கை நீட்டித் தடுத்தவன்,

"போதும் நிறுத்துங்க....!யாரை ஏமாத்தப் பார்க்கறீங்க....?சம்பளம் கொடுக்கறது என் வேலை...அதை பத்தி நான்தான் கவலைப்படணும்....சின்னப் பசங்களை வேலைக்கு எடுத்தா அதன் மூலமா....நீங்க ஒரு கமிஷன் அடிக்கலாம்ன்னு பிளான் போட்டு இருக்கீங்க...",தாடை இறுகியிருக்க...கோபத்தில் அவன் கண்கள் சிவந்திருந்தது.

"சாரி சார்...!பொண்ணுக்கு மேரேஜ் வைச்சிருக்கேன் சார்....இப்ப போய் வேலையை விட்டுத் தூக்கிடாதீங்க சார்...இனி இப்படி ஒரு தப்பை பண்ண மாட்டேன்...."தன் வயதுக்கு மீறி கெஞ்சிக் கொண்டிருந்தவரைப் பார்த்த நித்திலாவிற்கு பாவமாக இருந்தது.

"ஐ டோன்ட் நீட் எனி மோர் எக்ஸ்ப்ளனேஷன்ஸ்....ஆபிஸ்க்கு வந்து உங்க செட்டில்மெண்ட்டை வாங்கிட்டுக் கிளம்புங்க...",சற்றும் மனம் இளகாமல் அவரைப் பார்த்துக் கத்தியவன்,

சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து,"எல்லாரும் போய் வேலையைப் பாருங்க....",என்று ஒரு அதட்டல் போட அனைவரும் துண்டைக் காணோம்... துணியைக் காணோம் என்று ஓடி விட்டனர்.மேஸ்திரியை அழைத்து,இன்று மட்டும் அனைத்தையும் மேற்பார்வை செய்யும்படி கூறியவன்....நாளையே ஒரு புது மேனேஜரை அப்பாய்ண்ட் பண்ணுவதாகக் கூறி அனுப்பி வைத்தான்.

நித்திலாவைத் திரும்பிப் பார்த்துத் தன் பின்னால் வருமாறு கண்ணசைத்துவிட்டு.... மேல் தளத்திற்கு செல்லும் படிகளில் ஏறத் தொடங்கினான்.இன்னும் கோபம் குறையாமல் தன் முன்னால் சென்றவனைப் பார்த்தவள்,"சார்....!அவரு பாவம்....ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டாரு....அதுக்காக....வேலையை விட்டுத் தூக்கியிருக்க வேண்டாம்...",என்று தயங்கித் தயங்கிக் கூற,

விசுக்கென்று திரும்பியவன்,"என்ன சொன்ன....?தெரியாம தப்பு பண்ணிட்டாரா....?அந்த ஆளு பண்ணினதுக்குப் பேரு தப்பு இல்ல...நம்பிக்கைத் துரோகம்....!அந்த ஆள நம்பித்தானே இந்த வேலையை அவரு கையில கொடுத்தேன்...?",அவளையே கூர்மையாகப் பார்த்தபடி கேட்டவனைக் கண்டு....பயத்தில் கையைப் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

அவளது செய்கையில் அவன் மனம் சிறிது அமைதியடைந்தது."இங்க பாரு நித்திலா....!பிசினஸ்ல இப்படித்தான் கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டியதாக இருக்கும்....அதுவும் இல்லாம....எனக்குப் பொய் சொல்றதும்....நம்பிக்கைத் துரோகமும் சுத்தமா பிடிக்காது....!இப்படி தப்பு பண்றவங்களுக்கு எல்லாம் பாவம் பார்த்துட்டு இருந்தா....நம்ம கதி அதோகதிதான்...!",என்று பொறுமையாக எடுத்துக் கூறியவன்,

"சரி...வா!நாம மேலே போகலாம்...!",என்றபடி அவளை அழைத்துக் கொண்டு மேல்தளத்திற்குச் சென்றான்.கட்டிடத்தின் உச்சியில் நின்று கொண்டு மேஸ்த்திரியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சுற்றிலும் கைப்பிடிச் சுவர் இன்னும் கட்டாமல் இருக்க....ஓரத்தில் நின்றபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.மேஸ்த்திரியிடம் பேசிக் கொண்டே திரும்பியவன்,சுவரின் ஓரத்தில் நின்றபடி கீழே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து விட்டான்.

"ஏய்...நித்திலா...!அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...?இன்னும் கைப்பிடிச் சுவர் கட்டல....கீழே எல்லாம் எட்டிப் பார்க்காத...!",என்று நின்ற இடத்திலிருந்தே அதட்டினான்.அவன் கூறியதைக் கேட்டவள் சற்று உள்ளே தள்ளி நின்று கொண்டாள்.

அவன் இங்கிருந்தபடியே படபடத்ததைக் கண்ட மேஸ்திரி புன்னகைத்தவாறே,"என்ன சார்...!நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணா....?நீங்க என்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாலும்...அவங்க பாதுகாப்பா நிற்கிறாங்களான்னு பார்க்கறதுலதான உங்க கவனம் முழுசும் இருக்கு....",என்று கேட்க,

அதற்கு எந்தப் பதிலையும் கூறாது...சிறு புன்னகையை மட்டும் சிந்தியவன்...திரும்பி,"வா...நித்திலா!கிளம்பலாம்...!",என்று சற்று தள்ளி நின்றிருந்தவளை அழைத்தான்.

இன்னும் இரண்டு இடங்களில் இதே போல் கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்க...இருவரும் அங்கே சென்று பார்த்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கார் அந்த உயர்ரக நட்சத்திர ஹோட்டலின் முன் நின்றது.தன் சீட் பெல்ட்டை விடுவித்துக் கொண்டே,"இறங்கு....!",என்றான்.

"எங்கே சார்....?",அந்த ஹோட்டலையே ஆச்சரியமாகப் பார்த்தபடி கேட்டாள்.

"மணி ரெண்டாச்சு....சாப்பிட வேண்டாமா...?"

"இல்ல...என் லன்ச் ஆபிஸ்ல இருக்கு...நான் அங்க போயே சாப்பிட்டுக்கிறேன்....!"

"இனி ஆபிஸ்க்கு போய் சாப்பிடறதுன்னா லேட் ஆகிடும்....இங்கேயே லன்ச்ச முடிச்சிட்டுக் கிளம்பலாம்....இறங்கு!",

"இல்ல....நான் வரல....நீங்க போய் சாப்பிட்டு வாங்க...நான் இங்கேயே வெயிட் பண்றேன்...!",அவள் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்க,அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

"ப்ச்....இப்ப என்னதான் பிரச்சனை உனக்கு...?என்னை நம்பி நீ வரலாம்....நான் ஒன்னும் உன்னை கடிச்சு முழுங்கிட மாட்டேன்...என் மேல இவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்....!",என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,

"ஐயோ...!நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க சார்....உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல...எங்க சித்தி ஊரும் இதுதான்...உங்களோட என்னைப் பார்த்தா...தப்பா நினைச்சுக்குவாங்களோன்னுதான் நான் மறுத்தேன்....!",அவசரமாக அவனுக்கு விளக்கம் கூறினாள் நித்திலா.

"ஸோ வாட்....?",என்று தோளைக் குலுக்கியவன்,குழப்பம் தெளியாத அவள் முகத்தைக் கண்டு...ஒரு சீறலான மூச்சுடன்,"இங்க பாரு நித்திலா....!நீ என் செக்ரெட்டரி...!என் கூட மீட்டிங்க்கு வர வேண்டி இருக்கும்....பிசினெஸ் டின்னெர்க்கு வர வேண்டியிருக்கும்....இவ்வளவு ஏன்...சம் டைம்ஸ்...என் கூட வெளியூருக்கு வர வேண்டியிருக்கும்...இதுல....என் கூட சேர்ந்து சாப்பிட மாட்டேன்னு சொன்னால் என்ன அர்த்தம்....?",முடிந்த அளவு பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

அவளோ...அவன் பொறுமையை சோதிக்கும் விதமாக,"என்னது....?வெளியூரா....?வெளியூர்க்கெல்லாம் நான் வர மாட்டேன்....!",என்று தலையை ஆட்டி மறுக்க,

ஒரு கணம் கண்களை இறுக மூடித் திறந்து....பறக்க இருந்த பொறுமையை இழுத்துப் பிடித்தவன்,"சரிம்மா தாயே....!அதை அப்ப பார்த்துக்கலாம்...இப்ப கீழே இறங்கி வர்றியா....?",என்று கேட்க,

"ம்ம்....",என்று அரைகுறையாய் தலையசைத்தபடி இறங்கியவளைப் பார்த்தவனின் மனதிற்குள்,'கடவுளே....!கூட சேர்ந்து சாப்பிட வைக்கிறதுக்கே நாக்கு வரள கத்த வேண்டியதா இருக்கு....இதுல,நான் எப்ப இவகிட்ட காதல சொல்லி...கல்யாணம் பண்ணி....குடும்பம் நடத்தப் போறேனோ தெரியல.....?',என்று பெருமூச்சுவிட்டான்.

உள்ளே இருவர் மட்டும் அமருமாறு ஒரு தனி கேபின் இவர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.மெல்லிய விளக்கொளியில்.....இனிமையான இசை கசிய....சூழல் மிக ரம்மியமாக இருந்தது.சுற்றிலும் ரசித்தபடி வந்தவளை....தங்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்த கேபினுக்கு அழைத்துச் சென்றான்.

நடுவே உணவு மேசை போட்டிருக்க...எதிரெதிரே சோபாக்கள் போடப்பட்டிருந்தன.போடப்பட்டிருந்த சோபாவில் ஒரு புறம் சென்று அமர்ந்தவள்....எதேச்சையாக நிமிர்ந்து ஆதித்யனைப் பார்க்க....அவன் அவள்புறம்தான் வந்து கொண்டிருந்தான்.

'எங்கே அவன் வந்து தன்னருகில் அமர்ந்து விடுவானோ....?' என்ற பயத்தில்....சுவர் ஓரமாக இருந்த அவளது கைப்பையை அவசர அவசரமாக எடுத்து....அவளுக்கு மறுபுறம் வைத்துக் கொண்டாள்.

'பார்டா....!இது இருந்தா நான் வந்து உன் பக்கத்தில உட்கார மாட்டேனா பேபி....?' என்று மனதிற்குள் நினைத்தவன் அவள் அருகில் வந்து அமர்ந்ததோடல்லாமல்.....இருவருக்கும் இடையில் இருந்த கைப்பையை தூக்கி தனக்கு மறுபுறம் வைத்துக் கொண்டான்.

"பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு....?",என்று அவள் கைப்பையை சுட்டிக் காட்டியபடி புருவத்தை உயர்த்தியவனைப் பார்த்து அசடு வழிய சிரித்தாள்.

"ஒகே....என்ன சாப்படறேன்னு சொல்லு....?",என்று அவள் பக்கம் மெனுகார்டை தள்ள,

"இல்ல....நீங்களே ஆர்டர் பண்ணுங்க...!",என்றபடி திரும்பவும் அவன் பக்கமே தள்ளி விட்டாள்.

"ஷ்...நித்திலா...!ஒவ்வொரு முறையும் உனக்குப் பாடம் நடத்திட்டே இருக்கணுமா....?அப்போத்தான் நான் சொல்றதைக் கேட்பியா...?",ஆழ்ந்து ஒலித்த அவன் குரலில் எதைக் கண்டாளோ....அருகில் நின்றிருந்த பேரரிடம் தனக்குப் பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்தாள்.ஆதித்யனும் தனக்குப் பிடித்தத்தைச் சொல்ல....பேரர் அதைக் குறித்துக் கொண்டு அங்கிருந்து நகன்றார்.

ஆதித்யனுடன் ஒரே அறையில் வேலை செய்தாலும்....அவனை இவ்வளவு அருகில் பார்ப்பது இதுதான் முதல் முறை....!அவனிடமிருந்து வரும் ஆஃப்டர் ஷேவ் லோஷனின் நறுமணமும்....அவனுக்கே உரிய பிரத்யேக வாசனையும்...அவளை என்னவோ செய்தது.

'இவன் எதிர்ல இருக்கற சோபாவில போய் உட்கார்ந்தால்தான் என்ன....?' என்று மனதிற்குள் பல்லைக் கடித்துக் கொண்டாள்.அவனை விட்டு சற்று நகர்ந்து சுவர் ஓரமாக தள்ளி அமர்ந்து கொண்டாள்.அவனும்....அவளிடம் எதையோ பேசியபடியே தள்ளி அமர்ந்து....இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்துக் கொண்டான்.அதற்கு மேல் நகர்ந்து உட்கார முடியாமல்...நித்திலாவை சுவர் தடுக்க....வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்து விட்டாள்.

இருவருக்கும் இடையில் எந்தப் பேச்சு வார்தையுமின்றி மௌனமாகக் கழிந்தது.ஆதித்யனும் எதையோ யோசித்தபடி அமைதியாக இருந்தான்.அதற்குள்....அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகள் வர....இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

இடையில் எதையோக் கேட்பதற்காக ஆதித்யனின் முகத்தைப் பார்த்தவள்....அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கவும்...அதைக் கேட்காமல் விட்டுவிட்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடிக்கவும்....பேரரை அழைத்து பில்லை செட்டில் செய்தவன்..அனைத்தையும் எடுத்துப் போகச் சொன்னான்.அதன் பிறகும்,அவன் கிளம்பாமல் அமர்ந்தே இருக்கவும்....நித்திலா "சார்...போகலாமா....?",என்றாள் மெதுவாக.

"ஹ்ம்ம்...போகலாம்...போகலாம்...!அதுக்கு முன்னாடி நான் உன்கிட்டப் பேசணும்...!",என்றான் ஆழ்ந்த குரலில்.

"என்ன சார்...?",என்று கேட்டவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தவன்...அவள் வலது கரத்தை..தன் இரு கைகளுக்கும் இடையில் சிறை வைத்தபடி,"நீயும் நானும் கல்யாணம் பணிக்கலாமா நிலா...?",என்று மென்குரலில் கேட்டான்.

அவன் கேட்டதில் அதிர்ச்சியடைந்தவள் ,"எ...என்ன...?",என்றபடி தன் கைகளை அவன் பிடியிலிருந்து உருவிக் கொள்ள முயல....அவள் கையை விடாமல் இறுகப் பற்றியவன்,

"எனக்கு சினிமா டயலாக் எல்லாம் பேசத் தெரியாது...என் மனசில தோணறதை சொல்றேன்...!எனக்கு நீ வேணும்....!என் வாழ்க்கை முழுக்க...என் விரல் பிடிச்சு என் கூட நடக்க...நீ வேணும்...!கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும்...யாரவது என்கிட்டே வந்து...'நீ ஒரு பொண்ணு மேல பைத்தியமா இருக்கப் போறேன்னு' சொல்லியிருந்தா நான் நம்பியிருக்க மாட்டேன்....ஆனால்...உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் எல்லாம் தலைகீழா மாறிப் போச்சு....!சரி...சொல்லு!நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்...?",இம்மியளவும் அவள் விழிகளை விட்டுத் தன் பார்வையை அகற்றாமல்...அவள் முகத்தையே கூர்மையாகப் பார்த்தபடி ஆழ்ந்த குரலில் அவன் வினவ,

அவன் கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்டிருந்தவளாய்....இமைக்கவும் மறந்து அவனைப் பார்த்திருந்தால் நித்திலா.சிறு முறுவலுடன் அவள் கையை விடுவித்தவன்....தான் மறைத்து வைத்திருந்த நகைப் பெட்டியை எடுத்தான்.

அதற்குள் அழகிய மோதிரம் ஒன்று....இரு மயில்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும்படியும்...அதன் தோகையிலும்...கண்களிலும் வைரங்கள் பொடிக் கற்களாய் பதிக்கப்பட்டு...ஒளி வீசும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது...!

அவளது வலது கையை மெல்லப் பற்றியவன்...அவளது விரலில் அந்த மோதிரத்தை அணிவிக்க முயல....சட்டென்று தன் நிலையை உணர்ந்தவள்...அவனிடமிருந்து தன் கைகளை உருவிக் கொண்டாள்.

"எனக்கு இதெல்லாம் பிடிக்காது சார்...!வழியை விடுங்க...நான் போகணும்...!",என்றபடி எழுந்தவளைப் பார்த்தவன்,

"உட்கார் நித்திலா...!நான் உன்கிட்ட பேச வேண்டியது இருக்கு...",அழுத்தமாகக் கூறினான்.

அதற்கும் அசையாமல் அப்படியே நின்றிருந்தவளைப் பார்த்தவன்,"அப்படியே நிற்கறதுன்னா...நின்னுக்கிட்டே இரு...!எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல....நான் பேசி முடிக்கற வரைக்கும்....ரெண்டு பேரும் இங்கிருந்து போக முடியாது...!",அசால்ட்டாகக் கூறியவன் கால்களை நீட்டி சௌகரியமாக அமர்ந்து கொண்டான்.

வேறு வழியில்லாமல் அமர்ந்தவள்...ஒரு முடிவோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
"இங்கே பாருங்க சார்...!எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வர காதல் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல....அதுவும் இல்லாம....நான் என் பேரண்ட்ஸ் பார்த்து வைக்கிற பையனை மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்....!",

"எல்லாம் சரிதான்...!நான் உன்கிட்ட என் காதலை சொல்றதுக்கு முன்னாடி வரைக்கும்....நீ அந்த கொள்கையோடு இருந்த ஒகே....பட்....நான்தான் இப்ப என் லவ்வ சொல்லிட்டேனே...!அதையும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கலாம்ல...?",அவன் தன்மையாகவே கேட்டான்.

அவள்தான் முகத்தில் அடித்த மாதிரி,"எல்லாம் யோசிச்சுப் பார்த்துட்டேன்...எனக்குப் பிடிக்கல...!",என்றாள் பட்டென்று.

"எது பிடிக்கல...?என்னையா...?காதலையா....?",அவள் விழிகளுக்குள் ஊடுருவியபடி ஆழ்ந்த குரலில் வினவினான்.

அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தவள்...அவன் கேட்ட கேள்விக்குப் பதில் கூறமால்,"இனிமேல் இந்த எண்ணத்தோட என் கூட பழகாதீங்க சார்...!",என்றாள்.

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.....?ஏன்...வாய் வார்த்தையாகக் கூட என்னைப் பிடிக்கலைன்னு சொல்ல முடியலையா....?",சிறு புன்னகையுடன் கேட்டவனை ஆழ்ந்து நோக்கியவள்,

"இப்ப உங்களுக்கு என்ன வேணும் சார்...?உங்களைப் பிடிக்கல்லைன்னு சொல்லணும்....அவ்வளவுதான...?சரி....சொல்றேன்...கேட்டுக்கோங்க...!எனக்கு உங்களைப் பிடிக்கல....போதுமா...?",அழுத்தந் திருத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

அவள் கூறியதைக் கேட்டவனின் முகம் கடும் பாறையாய் இறுகியது....அவன் தன் கை முஷ்டியை இறுக மூடியதில்....நரம்புகள் தெறித்து விழும்படி புடைத்துக் கொண்டிருந்தன...!ஒரு கணம் கண்களை அழுந்த மூடித் திறந்தவன் அவளைப் பார்த்து,

"நான் இதுவரைக்கும் தோல்வியை சந்திச்சதே இல்ல....நான் தொட்டதெல்லாம் வெற்றிதான்....!",அவன் மேலும் என்ன கூறியிருப்பானோ....அதற்குள் இவள் இடையில் புகுந்து,

"அது பிஸ்னஸ்லயா இருக்கலாம்....!பட்....இது என்னுடைய வாழ்க்கை...!",என்றாள் உக்கிரமாக.

"எப்ப நான் உன்னை லவ் பண்ண ஆரம்பித்தேனோ....அப்பவே அது என் வாழ்க்கையா மாறிடுச்சு....!என் வாழ்க்கையில எந்த முடிவையும் நான் மட்டும்தான் எடுப்பேன்.....!",

"என் வாழ்க்கையில முடிவு எடுக்கும் உரிமையை நான் யாருக்கும் கொடுக்கல.....",

"நீ யாருக்கும் கொடுக்க வேண்டாம்....!அந்த உரிமையை நானே எடுத்துக்கிட்டேன்...!",அசால்ட்டாகக் கூறியவனைப் பார்த்தவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.

வந்த ஆத்திரத்தில்,"நான்தான் உங்களைப் பிடிக்கலைன்னு சொல்றேன்ல....?",என்று கத்தினாள்.

ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவள் முகத்தையேப் பார்த்தவன்,"பிடிக்கலைன்னாலும் பரவாயில்ல.....!என்னைப் பிடிக்கற மாதிரி உன் மனச மாத்திக்கோ.....!",என்றான் அசட்டையாக.

"நான் எதுக்கு மாத்திக்கணும்....?நான் மாத்திக்க மாட்டேன்...!",

"நீ மாத்திக்கலைன்னா...நான் உன்னை மாத்திக்க வைப்பேன்....!",நம்பிக்கையுடன் கூறியவளைப் பார்த்துப் பல்லைக் கடித்தவள்,

"அதையும் பார்க்கலாம்...!",என்று சவால் விட்டாள்.

"வீணா என்கிட்ட சவால் விடாத...கண்டிப்பா நீ தோத்து போய்டுவ....!"

"அதையும் பார்க்கத்தானே போறேன்....!",என்று கத்தியபடி முகம் திருப்பிக் கொண்டாள்.

"ஒகே பேபி...!எதுக்கு இப்படி கத்தற....?நான் எவ்வளவு மெதுவா உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்...ம்..?",என்று பேசிக்கொண்டே...அவள் கைகளை பற்றி...அவள் எதிர்பார்க்காத நேரத்தில் தான் வாங்கி வந்திருந்த மோதிரத்தை அணிவித்து விட்டான்.

"ஏய்...!என்ன பண்றீங்க...?",என்றபடி மோதிரத்தை கழட்டப் போனவளைத் தடுத்தவன்,அது எந்த விரலுக்கும் பொருந்துமாறு....அட்ஜஸ்ட் பண்ணும்படி வடிவமைக்கப்பட்டிருக்க...அவள் விரலைக் கவ்விப் பிடிக்கும் படி நன்றாக அழுத்தி விட்டான்.

அதைக் கழட்ட முயன்று தோற்றவள்,"எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க...?",என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

"நீ இப்படி முரண்டு பிடிச்சா நான் என்ன பண்ணட்டும் பேபி....?உனக்காக நான் வாங்கிட்டு வந்த முதல் கிஃப்ட்.....அதுதான்....இப்படிக் கட்டாயப்படுத்தி போட்டு விட்டேன்...!",என்றபடி எழுந்து முன்னே நடந்தான்.

ஒன்றும் பேசாமல் அவனைப் பின்தொடர்ந்தாள் அவள்.
காரில் போகும் போது அந்த மோதிரத்தைக் கழட்ட முயற்சி செய்து கொண்டே வந்தவளைப் பார்த்தவன்,"உன்னால அதைக் கழட்ட முடியாது பேபி....!ரொம்ப டைட்டா இருக்கும்....தேவையில்லாம ட்ரை பண்ணாத...!",என்றான்.

இயலாமையில் அவளுக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.அதை அவன் அறியாமல் இருக்க....முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.அலுவலகத்தில் அவளை இறக்கி விட்டவன்....காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.அவனுக்கும் தனிமை தேவைப்பட்டது...!

தொழிலில் பல முடிவுகளை முரட்டுத்தனமாக எடுத்த அந்த தொழிலதிபன்....காதலிலும் அதே முரட்டுத்தனத்தைக் கடை பிடித்தான்....!

காதல்...மிக மிக மென்மையானது...!எப்படி ஒரு பூ சூரியனைக் கண்டதும் ஒவ்வொரு மடலாக அவிழ்ந்து....மலர்ந்து மணம் பரப்புகிறதோ....அதைப் போல....காதலும்....தன்னவனைப் பார்த்ததும்....மெதுவாக...மிக மெதுவாக மலர்ந்து....சுகந்தத்தை அள்ளித் தெளிக்க வேண்டும்...!!

ஆனால்....சில சமயங்களில் காதலில் காட்டப்படும் வன்மையும் அழகுதான்....!
இந்தக் காதல் தீவிரவாதியின் காதல்....அந்த மென்மையானப் பெண்ணவளை....ஈர்த்து தனக்குள் அடக்குமா....?

அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 13 :





மகாபலிபுரத்தில் இருந்த அந்த பீச் கெஸ்ட் ஹவுசின் மாடியறையில் அமைந்திருந்த பால்கனியில் நின்றபடி கடலையே வெறித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.



மன அமைதிக்காகவும்....ஓய்வு எடுப்பதற்காகவும் அவன் அடிக்கடி வரும் இடம் இதுதான்.சில நேரங்களில் அலுவலகத்தில் தொடர்ந்து வேலை செய்து களைப்படையும் போது...ஓய்வு எடுப்பதற்காக கிளம்பி இங்கே வந்து விடுவான்.இரண்டு நாட்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் தனிமையில் கழித்து விட்டு....கடலில் வேண்டுமளவிற்கு நீந்தி விட்டுத் திரும்பும் போது மனது புத்துணர்ச்சியாக இருக்கும்.



மார்புக்கு குறுக்கே இரண்டு கைகளையும் கட்டியபடி பொங்கி வரும் கடலலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் முழுக்க நித்திலாதான் நிறைந்திருந்தாள்.முகம் கசங்க....கண்ணீரை அடக்கியபடி இருந்த அவளது தோற்றம்தான் மனதில் வந்து வந்து போனது.



'ஏண்டி...!இப்படி உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தற....?நீ என் உயிர் டி...!நீ இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கையே இல்ல....என்னால எப்படி உன்னை விட்டுத் தர முடியும்...?நீ வேண்டாம்ன்னு சொன்னாலும் என்னால உன்னை விட்டு விலகிப் போக முடியாது டி....என்னைப் புரிஞ்சுக்க...!'என்று அவன் மனதிற்குள் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.



ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவன் இறுதியில் விறைப்பாய் நிமிர்ந்தான்....'யெஸ்....நான் எடுத்த முடிவு சரியானதுதான்.... பிடிவாதத்தால மட்டும்தான் உன்னை என்கிட்ட இழுக்க முடியும்...என் காதல் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு....!அது கண்டிப்பா உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடும்....!',என்ற எண்ணம் அவனுள் உறுதியாய் எழுந்தது.



நித்திலாவின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை....பேயறைந்தபடி நடந்து வந்தவளைப் பார்த்த சுமித்ரா,"என்னாச்சு நித்தி....?ஏன் முகம் டல்லா இருக்கு....?",என்று அக்கறையாக விசாரிக்க,



அவளைப் பார்த்து மலங்க மலங்க விழித்தவள்,"அ...அது தலைவலியா இருக்கு....அதுதான்...",என்று சமாளித்தாள்.



"ஓ...வெயில்ல அலைஞ்சிட்டு வந்ததல்ல....அதனாலேயே இருக்கும்...டேப்லெட் போடறயா....?",



"இல்ல....அதெல்லாம் வேண்டாம்....!நான் என் டேபிளுக்கு போறேன்....",என்றபடி ஆதித்யனின் அறைக்குள் வந்துவிட்டாள்.



அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் இனம் புரியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மைதான்....!அவள் மனதில் அவளை ஊருக்கு அனுப்பும் போது....அவள் பெரியம்மாவிடம்....தனது தந்தை கூறிய 'என் மகளின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கு...' என்ற வார்த்தைதான் ஒலித்துக் கொண்டிருந்தது.



'இல்லை....இதை வளர விடக் கூடாது....நாளைக்கு அவர்கிட்ட பேசி இந்த விஷயத்தை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்....!' என்று முடிவெடுத்தாள்.



அவள் விரலில் அவன் அணிவித்த மோதிரம் அவளைப் பார்த்து அழகாக சிரித்துக் கொண்டிருந்தது.பிடிவாதத்தினால் இருவரும் தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றிருக்க....காதலோ....தனது பிடிவாதத்தைக் காட்ட வேண்டிய நேரம் தொடங்கி விட்டது என்று எண்ணி....அவர்களைப் பார்த்து சிரித்தது....!



அன்று மாலை தன் தாயிடம் பேசும் போது கூட....நித்திலா ஆதித்யனைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.படிக்கும் காலங்களில் யாரேனும் அவளிடம் காதலை சொல்லியிருந்தால்...அதை விளையாட்டாக வந்து தாயிடம் பகிர்ந்திருக்கிறாள்.ஆனால்...ஆதித்யன் விஷயத்தை அவள் விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.அவள் தாயிடம் அதைப் பற்றி கூற விடாமல் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.



எதையோ யோசித்தபடியே இருந்த நித்திலாவைப் பார்த்த நந்தினியும்...தன் பங்குக்கு விசாரித்தாள்.அவள் 'தலைவலி' என்று முணுமுணுக்கவும் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டுச் சென்றாள்.



............................................................................................................................



காலை....வெகு உற்சாகமாக தனது அறைக்குள் நுழைந்த ஆதித்யனை வெறுமையான நித்திலாவின் முகமே வரவேற்றது.எப்பொழுதும் புன்னகையுடன் தன்னை எதிர்கொள்பவள் இன்று அமைதியாக இருக்கவும்....அவனே வலியச் சென்று,"குட் மார்னிங் நிலா....!", என்றான்.



அவனது 'நிலா' என்ற அழைப்பில் முகத்தைச் சுளித்தவள்,"என் பெயர் நித்திலா...!", என்றாள் அழுத்தமாக.



அசால்ட்டாக தோளைக் குலுக்கியவன்,"அது மத்தவங்களுக்கு.....ஆனால்...எனக்கு நீ 'நிலா' தான் பேபி.... !",என்றான்.

"ப்ச்....இப்படி எல்லாம் என்னைக் கூப்பிடாதீங்க சார்...!"



"நீயும் என்னை இப்படி 'சார்....சார்...!'ன்னு கூப்பிடாத....",



"உங்களுக்கும் எனக்கும் இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப்....ஒரு எம்ப்ளாயர் அண்ட் எம்ப்ளாயிக்கு இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப்தான்....ஸோ....நான் உங்களை 'சார்'னுதான் கூப்பிடுவேன்....!"



'அப்படியா...!' என்பது போல் தனது புருவத்தை உயர்த்தியவன்,"அப்ப சரி....!நான் உன்னை என் மனைவியாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்....என் பொண்டாட்டியை நான் செல்லமா 'பேபி....!நிலா...!டார்லிங்....!' அப்படின்னுதான் கூப்பிடுவேன்....",என்றவன் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டான்.



கோபத்தில் முகம் சிவந்தவள்...ஒரு லெட்டரை எடுத்துக் கொண்டு ஆதித்யனின் முன் சென்று நீட்டினாள்.



அவளை நிமிர்ந்து பார்த்தவன்....அந்த லெட்டரை கையில் வாங்காமலேயே,"என்ன இது...?",என்க,



"என் ராஜினாமா லெட்டர்....!நான் இந்த வேலையை ரிசைன் பண்றேன்....",என்றபடி அந்த லெட்டரை அவன் டேபிளின் மீது வைத்தாள்.



அவள் முகத்தையே சிறிது நேரம் அழுத்தமாகப் பார்த்தவன்,"நினைச்சேன் டி....!நீ இந்த மாதிரி கிறுக்குத்தனமா ஏதாச்சும் பண்ணுவேன்னு நினைச்சேன்....அது மாதிரியே பண்ணியிருக்க...!இதெல்லாம் தெரிஞ்சுதான் நான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன்....",என்றபடி ஒரு ஃபைலைத் தூக்கி அவள் முன்பு போட்டான்.



இப்போது,"என்ன இது....?",என்று கேட்பது அவளின் முறையாயிற்று.



"ம்...படிச்சுப் பாரு தெரியும்...!",என்றவன் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

அதைப் படித்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்.அது அவளுடைய வேலைக்கான ஒப்பந்தம்.அவள் அந்த அலுவலகத்தில் இரண்டு வருடங்கள் கட்டாயமாக வேலை செய்தாக வேண்டும்.தவறினால்....அவள் மீது நடவடிக்கை எடுக்க....ஆதித்யனுக்கு உரிமை உண்டு.



அவள் வேலைக்கு சேர்ந்த அன்றே...ஆதித்யன் இந்த ஒப்பந்தத்தில் அவளிடம் கையெழுத்து வாங்கிவிட்டான்.அப்பொழுது பெரிதாகத் தெரியாத விஷயம்....இப்பொழுது அவளுக்கே பிரச்சனையாக வந்திருந்தது.



அதிர்ச்சியடைந்து நின்றிருந்தவளைப் பார்த்தவன்,"என்ன...ஃபைலை பார்த்திட்டயா...?இப்ப போய் உன் வேலையைப் பார்க்கிறயா....?" கேலியாக வினவியவன்,அவளுடைய ராஜினாமா கடிதத்தை எடுத்துக் கிழித்துப் போட்டான்.



"இல்ல....இதை நான் ஒத்துக்க மாட்டேன்....!நாளையில் இருந்து நான் வேலைக்கு வர மாட்டேன்....",பிடிவாதம் பிடித்தவளைக் கூர்மையாக நோக்கியவன்,



"அவ்வளவு பயமா....?",என்க,



"எ...என்ன பயம்...?",



"எங்கே நீ...இங்கேயே இருந்தா உன் மனச நான் மாத்திடுவேனோங்கிற பயத்துலதான உன் ஊருக்கு ஓடற...?",அவனது உதட்டோரங்கள் ஏளனமாய் வளைந்தன.



"சேச்சே....!எனக்கு ஓண்ணும் பயமில்லை...என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு....!",என்றாள் உறுதியாக.



"அப்படின்னா....இங்கேயே இருக்க வேண்டியதுதான....?",அவன் அவளை மடக்கி விட...அவள் குழப்பத்துடன் முழித்தாள்.



அவள் யோசிப்பதைக் கண்டவன்,"உனக்குப் பயம்...!எங்கே இவன்கிட்ட மயங்கிடுவோமோன்னு உனக்குப் பயம்....",அவன் மேலும் ஏற்றிவிட,அவள் பெண் புலியாய் சிலிர்த்தாள்.



"ஆமா....இவரு பெரிய மன்மதன்...!நான் அப்படியே இவரு அழகுல மயக்கம் போட்டு விழறேன்....!ரெண்டு வருஷம் இல்ல...இன்னும் நாலு வருஷம் ஆனாலும்...அது நடக்காது....!"



"நாலு வருஷம் வேண்டியதில்லைம்மா....எனக்கு ஒரு வருஷம் போதும்...உன்னை மயக்கறதுக்கு...!"



"ஒரு வருஷம் என்ன...?இன்னும் ரெண்டு வருஷம் உங்க அக்ரிமெண்ட் படி...இங்கேயே தான் வொர்க் பண்ணப் போறேன்....என்ன நடக்குதுன்னு பார்த்திடலாம்...?",அவள் தன்மானத்தை சீண்டி விட்டு....அவனுக்குத் தேவையானப் பதிலை அவள் வாயாலேயே சொல்ல வைத்து விட்டான் அந்தக் காதல்காரன்.



பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி,"அப்புறம் என்ன பேபி....?போ!போய் வேலையைப் பாரு....!",என்றவன் அடுக்கி வைத்திருந்த ஃபைலை பார்க்க ஆரம்பித்தான்.



கோபத்துடன் தனது இருக்கைக்குத் திரும்பியவள் அதே கோபத்துடன் வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தாள்.என்னதான் அவன் அவளைக் காதலித்தாலும்...வேலை என்று வரும் போது அவன் ஒரு பக்கா தொழிலதிபனாகத்தான் இருந்தான்.



இடையிடையே கிடைத்த இடைவெளியில் அவளை சீண்டிக் கொண்டிருந்தானே ஒழிய...வேலை விஷயமாக பேசும் போது...அவளைக் காதலனாக ஒரு பார்வைக் கூடப் பார்த்தானில்லை.


எனவே...அவனுடன் வேலை செய்வது அவளுக்கு எளிதாகத்தான் இருந்தது.அவன் சீண்டும் போதுதான் அவளுக்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது.



மதிய உணவு இடைவேளை நெருங்கவும்,தனது சிஸ்டமை ஆஃப் செய்தவள்...கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் போனாள்.



"சாப்பிடப் போறயா பேபி...?",அவன் குரல் ஒலிக்கவும்,



"இல்ல...விளையாடப் போறேன்....!",என்றாள் நக்கலாக.



"அப்படின்னா சரி....நானும் உன்கூட விளையாட வர்றேன்...!",என்று அவனும் கேலியாக கூறியபடி எழவும்,



"இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்....?நான் சாப்பிடப் போறேன்....அட்லீஸ்ட் சாப்பிடும் போதாவது....என்னை நிம்மதியா இருக்க விடுங்க...!",அவள் படபடவென்று பொரிந்து தள்ளவும்,இவன் முகம் வாடியது.



"சரி...போ...!",என்றபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.அவள் சென்ற வழியையே பார்த்தவனுக்கு மனதில் வலித்தது.'என் கூட இருக்கறது உனக்கு அவ்வளவு கஷ்டமாவா இருக்கு...?உன் விருப்பத்துக்கு எதிரா நான் நடக்கும் போது...உனக்கு வலிக்கறதை விட ஆயிரம் மடங்கு அதிகமா....எனக்குத்தாண்டி வலிக்குது...!', என்று மனதிற்குள் அரற்றியவன் அதற்கு மேல் வேலை செய்யப் பிடிக்காமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.



இங்கு நித்திலாவோ...உணவை சாப்பிடாமல் கைகளால் அளைந்து கொண்டு இருந்தாள்.இவள் சுள்ளென்று எரிந்து விழவும்....அவன் முகம் வாடியதைக் கண்டவளுக்கு மனதிற்கு வருத்தமாக இருந்தது.



கோபம்...கம்பீரம்...கர்வம் போன்ற உணர்வுகளை மட்டுமே அவன் முகத்தில் பார்த்துப் பழகியவளுக்கு.....அவன் கண்களில் தெரிந்த அடிபட்ட வலி அவளுக்கு வேதனையைத் தந்தது.இன்னொரு மனமோ,'அவனுக்கு நல்லா வேணும்...!' என்று கறுவிக் கொண்டிருந்தது.



இதை எதையும் அறியாமல்...தான் கொண்டு வந்திருந்த உருளைக் கிழங்கு வறுவலை நித்திலாவின் தட்டில் வைத்தபடி...அவளைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான் பாலா.அவள் "எனக்கு வேண்டாம்...!", என்று மறுத்தும் கேளாமல் தொடர்ந்து வற்புறுத்தியவனைப் பார்த்தவள்,"அதுதான் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்ல....?",என்று கத்தி விட்டாள்.



திகைத்துப் போய் தன்னைப் பார்த்தவனைக் கண்டவளுக்குத் தன் தவறு புரிந்தது.அதற்குள் சுமித்ராவும்,"எதுக்கு டி இப்படி கத்தற...?மெதுவா சொல்ல முடியாதா...?", என்று கண்டிக்கவும்,



குற்ற உணர்ச்சி பெருக பாலாவைப் பார்த்தவள்,"சாரி பாலா...!நான் ஏதோ நினைப்புல...உன்னைப் பேசிட்டேன்...சாரி...!",என்று மன்னிப்பு வேண்டினாள்.



அவளைப் பார்த்து புன்னகைத்த பாலா,"இட்ஸ் ஒகே நித்தி....!நான் ஒண்ணும் தப்பா எடுத்துக்கல....",என்றான் மெல்லிய குரலில்.



"அதுதான....எருமை மாட்டுக்கெல்லாம் கோபம் வராது....!",நித்திலா கிண்டல் செய்யவும் சூழ்நிலை இலகுவானது.



"நித்தி அண்ட் சுமித்ரா....!நாம அன்னைக்கு ரெஸ்ட்டாரண்டுக்கு போகலாம்ன்னு பிளான் போட்டு இருந்தோம்ல....?அது கூட கேன்சல் ஆகிடுச்சே....வர்ற திங்கக்கிழமை போய் அடுத்த திங்கள் அங்க போலாமா....?",ஆர்வத்துடன் பாலா கேட்க,



"ஏன் அடுத்த திங்கக்கிழமை....?அப்போ என்ன ஸ்பெஷல்....?",நித்திலா வினவ,



"அன்னைக்கு ஐயா பிறந்தநாளாக்கும்....!",என்று பாலா தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான்.



"ஹை....சூப்பர்...!அப்ப அது உன்னுடைய ட்ரீட்....நானும் சுமியும் செலவு பண்ண வேண்டியதில்ல....என்ன சுமி போகலாமா...?",நித்திலாவும் சந்தோஷத்துடன் கேட்க,



"நான் அந்த மண்டே லீவ்ப்பா....!நீங்க ரெண்டு பேரும் போயிடு வாங்க....!",என்று சுமித்ரா கூறிவிட,பாலாவின் முகம் மலர்ந்தது.'நித்தி கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு நல்ல சான்ஸ்....', என்று அவன் மனம் துள்ளியது.



'நாம் மட்டும் தனியாக செல்ல வேண்டுமா...?' என்று நித்திலாவிற்கு தயக்கமாக இருந்தாலும்,'பாவம்...அன்னைக்கு அவனுடைய பிறந்தநாள் வேற...ஸோ..போய்ட்டு வருவோம்....!', என்று முடிவெடுத்தாள்.



அவள் எடுத்த முடிவின் பலனாக....அவள் ஆதித்யனின் இன்னொரு முகத்தைப் பார்க்கப் போகிறாள் என்பதை அவள் அப்போது அறியவில்லை....!அவன் நினைத்ததை அடைய....அவன் எந்த எல்லைக்கும் செல்லுவான்...என்பதை அவனுடைய அந்த இன்னொரு முகம் அவளுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது...!!



மதிய உணவு நேரம் முடிந்து வெகு நேரமாகியும் ஆதித்யனைக் காணவில்லை.அடிக்கடி அறையின் வாசலையேப் பார்த்தபடி வேலை செய்து கொண்டிருந்தாள் நித்திலா.



மதியம் மூன்று மணியளவில் அலுவலகத்திற்கு வந்த ஆதித்யனின் முகம் சோர்ந்து தெரிந்தது.அவளிடம் எதுவும் பேசாமல் வந்து தன் இருக்கையில் அமர்ந்தவன் தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.இருவரும் வேலை நிமித்தமாக மட்டுமே பேசிக் கொண்டனர்.



மாலையானதும் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவள்,கதவு வரை சென்றதும் ஒருநிமிடம் நின்று அவன் முகத்தை எறிட்டுப் பார்க்க....அவனும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.அழுத்தமாக அளவிட்ட அவனது விழிகளோடு ஒரு நொடி தனது விழிகளைக் கலந்தவள்....மறு கணமே வெளியேறிவிட்டாள்.



அவளுடைய செயலில் தனது பின்னந்தலையை தட்டியபடி சிரித்துக் கொண்டான் ஆதித்யன்.அதுவரை அவன் மனதில் கவிழ்ந்திருந்த வெறுமை....அவளுடைய அந்த ஒற்றைப் பார்வையில் கரைந்து காணாமல் போனது.மலர்ந்த புன்னைகையுடன் ஃபைலை பார்த்துக் கொண்டிருந்தவனை கௌதமின் வருகை தடைப் போட்டது.



வந்தவன் எதுவும் பேசாமல்...ஆதித்யன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவனையே குறுகுறுவென பார்க்க ஆரம்பித்தான்.

"என்னடா புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிற...?",



"நீதான் பழைய ஆதித்யனாக இல்லையே....புது ஆதித்யனா மாறிட்ட போல....?",



"சும்மா ஏதாவது உளறாதேடா...",என்று ஆதித்யன் நழுவப் பார்க்க,



"நான் உளரறேனா...?",கெளதம் கேலியாக உதட்டை மடித்தபடி கேட்க,



"பின்ன இல்லையா....?சரி...என்கிட்ட மாற்றம் தெரியற அளவுக்கு நீ என்னத்த கண்ட....?",ஆதித்யன் வினவ,



"நிறைய இருக்கு....!முதல் விஷயம் இது...!",என்றபடி நித்திலாவிற்காகப் போடப்பட்டிருந்த மேசையை சுட்டிக் காட்டியவன்,"நார்மலா நீ பொண்ணுககிட்ட வழியற ரகம் கிடையாது...ஏன்...?பொண்ணுக வந்து பேசினாக் கூட நின்னு பேசற ஆள் நீ இல்ல....அப்படிப்பட்டவன்,உன் ரூம்லயே ஒரு பொண்ணக் கூட்டிட்டு வந்து உட்கார வைச்சிருக்கிற அப்படின்னா....எனக்கு ஏதோ இடிக்குதே....!",அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி தன் தாடையைத் தடவினான் கெளதம்.



"டேய்....!நான் என் செக்ரெட்டரியத்தான்டா என் ரூம்ல உட்கார வைச்சிருக்கிறேன்....அவ என் பக்கத்திலேயே இருந்தா....வேலை செய்யறதுக்கு எனக்கு ஈசியா இருக்கும்..."



"அப்படியா டா ராஜா....?அப்ப இவ்வளவு நாள் லீலான்னு ஒரு பொண்ணு உன்கிட்ட செக்ரெட்டரியா வொர்க் பண்ணுனாங்களே....?அவங்கள எங்க உட்கார வைச்சிருந்த...?",என்று இழுத்தவனைப் பார்த்து 'இவன் நம்மள தோண்டித் துருவாம விட மாட்டான் போல இருக்கே....!' என்று மனதிற்குள் நினைத்தபடி அவனைப் பார்த்து முறைத்தவன்,

"நித்திலாவுக்கும் லீலாவுக்கும் வித்தியாசம் இல்லையா டா....?நித்திலா ஃப்ரஷ் கேண்டிடேட்....பட்...லீலாக்கு ஆல்ரெடி எக்ஸ்பீரியன்ஸ் இருந்துச்சு.... அதனால....லீலாவ கூடவே உட்கார வைச்சுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்ல....!போதுமா....?",என்று சமாளித்தான்.



"சரிப்பா....!அந்த மேட்டர விடு....எப்பவுமே நீ சைட்க்குப் போகும் போது....என்னைத்தானே கூட்டிட்டுப் போவ....பட்....நேத்து நீ நித்திலாவைக் கூட்டிட்டுப் போனதா கேள்விப் பட்டேனே.....?",அவன் சந்தேகமாய் வினவ,ஆதித்யன் கொலைவெறியானான்.



"அப்பா....!கௌதமா....!உனக்கு என்னதான்டா பிரச்சனை....?உன்னைக் கூட்டிட்டுப் போகாம...நித்திலாவைக் கூட்டிட்டுப் போய்ட்டேன்னு அவ மேல பொறாமைப் படறியா....?",



"ச்சீ....!உனக்காகப் பொறாமைப் பட்டு என்ன பண்ணட்டும்....?எனக்காகன்னு ஒருத்தி வருவா பாரு....அவ மேலதான் பொஸஸிவ்...லவ் எல்லாம்....!",கண்களில் கனவு மிதக்க கூறியவனைப் பார்த்தவன்,



"அப்படி ஒருத்தி வந்துட்டா போல இருக்கே....?",நண்பனை ஆழப் பார்வை பார்த்தபடி ஆதித்யன் வினவ,



திடுக்கிட்டு நிமிர்ந்த கெளதம்,"என்னடா உளறிக்கிட்டு இருக்க....?",என்றான் பதட்டக் குரலில்.அவனது மனதில் சுமித்ராவின் முகம் மின்னி மறைந்தது.



நண்பனின் பதட்டத்தைக் கவனித்தபடியே,"உளறலடா...உண்மையைச் சொல்றேன்....!ஒரு வாரத்துக்கு முன்னாடி எதேச்சையா....சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்தேனா...அதுல...ஒரு லைவ் லவ் ஷோ ஓடிக்கிட்டு இருந்துச்சு....!தெரியுமா....?",ஒன்றும் அறியாதவனைப் போல் ஆதித்யன் கேட்க,



"என்ன லவ் ஷோவா....?",என்று முழித்தவனுக்குப் பிறகுதான் ஞாபகம் வந்தது...அன்று பைல் ரூமில் நடந்ததைத்தான் ஆதித்யன் கூறுகிறான் என்று....!



முக்கியமான ஃபைல்கள் அடுக்கப்பட்டிருப்பதால் அந்த அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது.அதுவும் கௌதமின் அறையில் கேமரா இல்லை...அந்த ரூமில் மட்டும்தான் இருக்கும்....அதைப் பார்த்து விட்டுத்தான் ஆதித்யன் அவனைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.



"என்னடா....?ட்ரீம்க்கு போய்ட்டயா....?பதிலைக் காணோம்....?",



"ட்ரீமும் இல்ல...லவ்வும் இல்ல....!அவ கீழே விழ போனா...நான் பிடிச்சு நிறுத்தினேன்....அவ்வளவுதான்....!",கெளதம் சமாளிக்க,



"கீழே விழ போனதுனால ஹெல்ப் பண்ணுன சரி....ஆனால்...அதுக்கு அப்புறமும்...அந்தப் பொண்ண விடாம குறுகுறுன்னு பார்த்துட்டு இருந்தயே....அது ஏன் டா....?",அறியாப் பிள்ளை போல் வேண்டுமென்றே இமைகளைக் கொட்டியபடி ஆதித்யன் வினவ,



கெளதம் தடுமாறினான்.'என்னவென்று சொல்லுவான்....?அவளை கிஸ் பண்றதுக்காகத்தான் அவளை நெருங்கினேன்னா சொல்ல முடியும்....கிராதகா....!நேரம் பார்த்து பழி வாங்குறான்...!',மனதிற்குள் அவனை அர்ச்சித்தவன்,வெளியே,



"ஏதேதோ பேசி டாபிக்கை மாத்தாத....இங்கே என்ன நடக்குதுன்னு சொல்லு....?",என்று கெளதம் அவனை திசை திருப்ப,



வாய் விட்டுச் சிரித்தவன்,"அங்கே என்ன நடக்குதோ....அதுதான் இங்கேயும் நடக்குது....!",என்க,



"அங்கே எதுவும் நடக்கல...",கெளதம் வேகமாக பதில் சொல்ல,



"அப்ப...இங்கேயும் ஒன்னும் நடக்கல....!",என்று அமைதியாக சொன்னான் ஆதித்யன்.



நண்பனைப் பார்த்து முறைத்தவன்,"கல்லுளிமங்கா....!இருடா...கூடிய சீக்கிரமே கண்டு பிடிக்கறேன்....!",என்று கறுவியபடியே எழுந்து சென்றுவிட்டான்.



"ஆல் தி பெஸ்ட்...!",என்ற ஆதித்யனின் சிரிப்பு அவனைத் தொடர்ந்தது.





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 14 :



அந்த வார விடுமுறையில் சந்தோஷமாக தன் ஊருக்குக் கிளம்பினாள் நித்திலா.இவள் வருகிறாள் என்று அவளுடைய அக்காவும் அதிதி குட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தாள்.தன் முதல் மாத சம்பளத்தில் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தாள் நித்திலா.



மகள் வருகிறாள் என்று அவளுக்குப் பிடித்த குலோப்ஜாமூனும்....முறுக்கும் வீட்டிலேயே தயாரித்திருந்தார் மீனாட்சி.பல நாட்கள் பிரிவுக்குப் பிறகு வீட்டினரை சந்திப்பதால் மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருந்தாள் நித்திலா.அதிதி குட்டியும் தன் பங்கிற்கு,"த்தி....த்தி...!",என்று பின்னாலேயே அலைந்தது.



சனிக்கிழமை மாலை....தன் தாயில் மடியில் சொகுசாக தலை வைத்துப் படுத்தபடி...குலோப்ஜாமூனை சுவைத்துக் கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தீபிகா...நித்திலா அணிந்திருந்த மோதிரத்தைப் பார்த்துவிட்டாள்.



"மோதிரம் புதுசா இருக்கு...?எப்படி வாங்கின....?",அந்த மோதிரத்தை ரசனையுடன் தடவியபடி தீபிகா கேட்க...நித்திலாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.'அடக் கடவுளே....!இதை எப்படி மறந்தேன்...?', என் மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டாள்.



"இங்கே காட்டு...!", என்றபடி அவள் அம்மாவும் பார்த்து விட்டு,"எனக்குத் தெரியாம எப்ப வாங்கின....?வைரம் மாதிரி ஜொலிக்குது....பார்க்கறதுக்கு தங்க மோதிரம் மாதிரி தெரியலையே...?",என்று அவரும் கேள்வி கேட்க,



"முதல் மாசம் ச...சம்பளத்துல வா...வாங்கினது ம்மா...!தங்கமும் இல்ல...வைரமும் இல்ல...ஏதோ..புது மெட்டல்ன்னு சொன்னாங்க...!",முதல் முறையாக அவள் மனதறிந்து தன் தாயிடம் பொய் கூறினாள்.அவர் கண்களைப் பார்த்துப் பேசவே இவளால் முடியவில்லை.



"ஹோ....அப்படியா....!என்ன மெட்டல்ன்னு விசாரிச்சு எனக்கும் வாங்கிட்டு வா டி....!அப்படியே வைரக் கல் மாதிரி ஜொலிக்குது....!டிசைன்னும் ரொம்ப அழகா இருக்கு...!",தீபிகா ஆசையுடன் கூற,"சரி....!",என்று முணுமுணுத்துவிட்டு தன் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள் நித்திலா.



தன்னறையில் அமர்ந்து அந்த மோதிரத்தையே வெறித்துக் கொண்டு இருந்தவளுக்கு....ஆதித்யனின் மேல் கோபம் கோபமாக வந்தது.'என் அம்மாகிட்டயே பொய் சொல்ல வைச்சுட்டானே....பாவி...!' என்று மனதிற்குள் பொருமிக் கொண்டாள்.சென்னை சென்றதும் முதல் வேலையாக...நகைக் கடைக்குச் சென்று இந்த மோதிரத்தை கழட்டி விடச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.



அன்று இரவு....சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...அவளது தந்தை வேலையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.



"உனக்குப் பிடிச்ச மாதிரி வேலை இருக்குதா நித்தி மா....?",என்று அவர் கேட்க,அவளுக்கு ஒரு கணம் ஆதித்யனின் முகம் மனதில் வந்து போனது.



"ம்....பிடிச்சிருக்குப் ப்பா...!",தனக்குப் பிடித்த இடியாப்பத்தை தேங்காய் பாலுடன் சேர்த்து உள்ளே தள்ளியபடி கூறினாள்.



"ஹாஸ்டல்ல எல்லா வசதியும் இருக்கா....?",



"அதெல்லாம்...எல்லா வசதியும் இருக்குது...!பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஜாலியா இருக்கேன்....பட்...என்ன இருந்தாலும் நம்ம வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன் ப்பா...!",



"நீ இல்லாம எங்களுக்கும் என்னவோ மாதிரிதான் இருக்கு மா...!",அவள் தந்தையும் வருத்தத்துடன் கூற,



"இதுக்கே வருத்தப்பட்டா எப்படி ப்பா....!இன்னும் ஒரு வருஷத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணி...வேற வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்...ஞாபகம் இருக்கல்ல...?".என்று தீபிகா கேட்க,



"ஹ்ம்ம்...அவளுக்கும் உன்னை மாதிரியே உள்ளூர்லேயே மாப்பிள்ளை பார்த்துக் கட்டி கொடுத்திட வேண்டியதுதான்....!",தன் மூத்த மகளிடம் கிருஷ்ணன் கூற,நித்திலாவின் மனதில் மட்டும், 'இதை மட்டும் ஆதித்தன் கேட்டால் அவன் முகம் எப்படி மாறும்...?' என்ற கற்பனை ஓடியது.



அம்மாவுடன் கொஞ்சல்....அக்காவுடன் அரட்டை....அதிதி குட்டியுடன் விளையாட்டு என மீதி நேரமும் பறந்து விட....இதோ இப்பொழுது சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தாள்.இனி இவர்களை வந்து பார்க்க இரண்டு வாராமேனும் ஆகும் என்ற நினைவில் அவள் மனதில் ஒரு ஆயாசப் பெருமூச்சு எழுந்தது.

.........................................................................................................



இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு....இன்று தன்னவளைக் காணப் போகும் சந்தோஷத்தில் அலுவலகத்திற்கு வந்தான் ஆதித்யன்.



பேபி பிங்க் வண்ண சுடிதாரில்....கூந்தலை தளர பின்னி....நெருக்கமாகத் தொடுத்த மல்லிகைப் பூவை சூடியபடி வேலை செய்து கொண்டிருந்தவளின் அழகு அவனை பித்தனாக்கியது.உள்ளே நுழைந்ததுமே மல்லிகைப் பூவின் வாசம் ஆளை அசரடித்தது.அவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் போல் தோன்றிய ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.



"உங்க அம்மா அப்பாவை போய் பார்த்திட்டு வந்துட்டயா....?முகம் அப்படியே லைட் போட்ட மாதிரி பிரகாசமா இருக்குது....?",என்று அவன் கிண்டலடிக்க,அவனைத் திரும்பிப் பார்த்தவள் ஒன்றும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.



"உன் பாஸ்ங்கிற மரியாதை கொஞ்சமாவது இருக்கா...?",அவன் இலகுவாக வினவ,



"இப்ப என்ன மரியாதை தரல உங்களுக்கு....?",என்று அவள் திருப்பிக் கேட்டாள்.



"ஒரு M.D உள்ளே வரும் போது இப்படியா....'குட் மார்னிங்!' கூட சொல்லாம....எனக்கென்னன்னு உட்கார்ந்திருப்ப....?",



"குட் மா.....ர்னிங் சா.....ர்....!"அவள் வேண்டுமென்றே இழுத்துச் சொல்ல,



அவளது குறும்பை ரசித்துச் சிரித்தவன்,"ஹ்ம்ம்....குட் மார்னிங் மை டியர்...!இதையெல்லாம் கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு....!",என்று சலித்துக் கொண்டான்.



அதன் பிறகு வேலையில் நிமிடங்கள் கரைய....தன் அருகில் மல்லிகைப் பூவின் மணம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.நித்திலாதான் நின்று கொண்டிருந்தாள்.அவன் அணிவித்த மோதிரத்தை எடுத்து...அவனைப் பார்த்துக் கொண்டே டேபிளின் மீது வைத்தாள்.



"என்ன இது....?",அவன் குரலில் புயலை உள்ளடக்கிய அமைதி தெரிந்தது.



"உங்களுடைய மோதிரம்....!",என்றாள் சுருக்கமாக.



"அது தெரியுது....உன்னை யார் கழட்ட சொன்னது....?"



"யார் சொல்லணும்....?",என்று அவள் அசால்ட்டாக வினவ,



"நான் சொல்லணும்....",என்று கத்தியவன் தன் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்தான்.



அவன் அவளுக்காக அளித்த முதல் பரிசு அந்த மோதிரம்.அதை அவள் நிராகரித்ததில்....அவனுக்கு எதிலோ தோற்றுப் போன உணர்வு வந்தது.'இல்லை...நான் தோற்க மாட்டேன்....!' என்று சிலிர்த்து நிமிர்ந்தவன்....அவள் அருகில் நெருங்கி வந்தான்.



தன்னருகில் வந்தவனை நிமிர்ந்து பார்த்தவள்,"நீங்க சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இல்ல....எனக்கு அந்த மோதிரம் வேண்டாம்....!",உறுதியாகக் கூறியவள்...திரும்பிச் செல்வதற்காக ஒரு அடி எடுத்து வைத்தாள்.அவள் கரத்தை இறுகப் பற்றி அவளைப் போக விடாமல் தடுத்தவன்....,"அந்த மோதிரத்தை எடுத்து உன் விரலில் போடு.....!",என்றான் அமைதியான குரலில்.



"முடியாது....!கையை விடுங்க....",என்று பல்லைக் கடித்தாள் அவள்.அவனிடமிருந்து கையை உருவ முடியவில்லை.அவ்வளவு இறுக்கமாகப் பிடித்திருந்தான்.



"அப்ப....நீ அந்த மோதிரத்தை போட மாட்ட....?",ஒரு மாதிரிக் குரலில் அவன் கேட்க,



"மாட்டேன்....!போட மாட்டேன்....!",உறுதியாகக் கூறினாள்.



பற்றியிருந்த அவள் கரத்தைப் பிடித்து சுண்டியிழுக்க....அவன் மேலேயே வந்து விழுந்தாள் அவள்.தன் மேல் விழுந்தவளை விலக விடாமல்...இறுக அணைத்தவன்....அவள் தோள் வளைவில் முகம் புதைத்தான்.



"ச்சீ....!என்ன பண்றீங்க...?விடுங்க என்னை.....",என்று அவள் திமிற முயற்சி செய்தாள்.அவளால் முயற்சி செய்ய மட்டும்தான் முடிந்தது.இம்மியளவு கூட அவளால் அவனிடமிருந்து விலக முடியவில்லை.



அவளது எதிர்ப்புகளை சுலபமாகத் தடுத்தபடி....அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லைகைப் பூவின் வாசத்தை ஆழ மூச்செடுத்து சுவாசித்தவன்.....,"ம்ஹா....!மயக்கற டி....!", என்றான் கிறக்கக் குரலில்.



அவள் அறிந்த ஆண்மகனின் முதல் ஸ்பரிசம்....அவள் உடலைத் தடுமாறச் செய்தது....!கழுத்து வளைவில் உரசிச் சென்ற அவனது உதடுகள்....அவளது உணர்ச்சிகளையும் உரசிச் சென்றது....!!



அவனுடைய உதடுகளை அங்கிருந்து அகற்றாமலேயே,"ஸோ....மோதிரத்தை போட மாட்ட....?",என்று கேள்வியெழுப்ப....அவனது உதடுகள் அந்த இடத்தில் நடத்திய ஊர்வலத்தில்....அவளது மேனி கூசிச் சிலிர்த்தது.



கண நேரத்தில் தன்னை சுதாரித்தவள்....அவன் தலையை தன் தோளிலிருந்து பிடித்துத் தள்ளி விட்டபடி ,"முடியாது....!இப்ப நீங்க என்னை விடறீங்களா....?இல்ல...கத்தி எல்லோரையும் கூப்பிடட்டுமா....?",உடல் நடுங்க கேட்டவளைப் பார்த்தவன்,



"கூல் பேபி....!எதுக்கு உன் உடம்பு இப்படி நடுங்குது....?",என்று ஒன்றும் அறியாதது போல் வினவியவன்,அவளை மெல்ல விடுவித்தான்.அவன் விட்டதுதான் தாமதம்....இரண்டடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள்.



"ஏன் நடுங்கறேன்னு உங்களுக்குத் தெரியாதா....?",அவள் முறைத்த முறைப்பில் அவள் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால்....அவனை எரித்திருப்பாள்.



குறும்பாக ஒற்றைக் கண்ணை மட்டும் சிமிட்டியபடி,"தெரியலையே....!",என்று உதட்டைப் பிதுக்கியவன்....அவளை நோக்கி அழுத்தமான காலடிகளோடு முன்னேறினான்.அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டவள்....பின்னால் நகர்ந்தாள்.அவன் முன்னேற....இவள் பின் நகர....அதற்கு மேல் நகர முடியாமல் அங்கிருந்த சுவர் அவளைத் தடுத்தது.



பேந்த பேந்த விழித்தபடி....சுவரோடு ஒன்றி நின்றிருந்தவளின் அருகே நெருக்கமாக....மிக நெருக்கமாக வந்து நின்றான் ஆதித்யன்.தனது இரு கைகளையும் அவளுக்குப் பக்கவாட்டில் ஊன்றியபடி...அவளை விலக விடாமல் தடுத்தவன்....அவள் நெற்றியில் புரண்டு....விழிகளை மறைத்த கற்றைக் கூந்தலை,கைகளால் விலக்காமல்....உதடு குவித்து "உஃப்" என்று ஊதி....அதை விலக்க,

அவனது சூடான மூச்சுக்காற்று தன் மேல் படவும்....கண்களை இறுக மூடிக் கொண்டாள் நித்திலா.நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் அரும்பியிருக்க....உதடு துடிக்க...விழிகளை மூடி நின்ற அவள் கோலம்...அவன் மனதை மயக்கியது.



மென்மையான புன்னகையுடன்,"சரி....இப்ப சொல்லு...!அந்த மோதிரத்தைப் போட்டுக்கறயா....?",என்று மென்குரலில் வினவ,



பட்டென்று கண்களைத் திறந்தவள்,"ம்ஹீம்....மு..முடியாது....!",இம்முறை வெகு பலவீனமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.



அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தவன்,அவள் வலது கையைப் பற்றி....ஒவ்வொரு விரலாக முத்தமிட ஆரம்பித்தான்.



"எ...என்ன பண்றீங்க....?",இந்த வார்த்தைகளைக் கேட்பதற்குள்ளேயே....அவளுக்கு மூச்சு வாங்கியது.அவன் மீசை முடிகள்...தன் விரலில் ஏற்படுத்திய குறுகுறுப்பில்....அவள் உச்சந்தலையில் இருந்து...உள்ளங்கால் வரை அந்தி வானமாய் சிவந்து போனது....!



"பனிஷ்மெண்ட் பேபி....!நீ அந்த மோதிரத்தைப் போட்டுக்கற வரைக்கும் இப்படித்தான்....உன் விரல்களுக்கு பனிஷ்மெண்ட் கொடுப்பேன்....!",என்றவன் தன் முத்தமிடுதலைத் தொடர்ந்தான்.



அந்த அராஜகக்காரன் பிடியிலிருந்து தன் கைகளை உருவ முயன்று தோற்றவள்,"ஹய்யோ....!போதும் வி..விடுங்க....!நான்....நான் அந்த மோதிரத்தைப் போட்டுகிறேன்....",திக்கித் திணறி ஒருவாறு கூறி முடித்தாள்.



அவனோ,"எனக்கு அது போதாதே....!",என்றான் அசைட்டையாக.அப்பொழுதும் அவன் இதழ்கள் அவள் விரல்களில்தான் புதைந்திருந்தன.



"இன்னும் என்ன....?",அவள் முறைப்பாகக் கேட்க,



"நீ அதைக் கழட்டவே கூடாது....!",என்றவனின் இதழ்கள் அவள் விரல்களில் இன்னும் அழுத்தமாகப் புதைந்தன.



"ச..சரி...!நான் அதைப் போட மாட்டேன்....ச்சீ...!சாரி....க...கழட்ட மாட்டேன்...!",என்று தடுமாறினாள்.



"ஹ்ம்ம்....குட்....!",என்றவன் ஒரு அழுத்தமான முத்தத்தை....அவள் உள்ளங்கைக்கு கொடுத்து விட்டே விலகினான்.



அவன் விலகியதும்.அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டவள்....ஓடிச் சென்று டேபிளின் மீது அவள் வைத்த மோதிரத்தை எடுத்து அணிந்து கொண்டாள்.



அவள் வேகத்தைப் பார்த்து சிரித்தவன்,"ம்....வெரி குட் பேபி....!என்னையோ....நான் கொடுக்கற பொருளையோ....விலக்கி வைக்கலாம்ன்னு இனிமேல் நினைக்காதே....!நான் அதுக்கு அனுமதிக்கவும் மாட்டேன்....!இந்த முறை....உன் விரலுக்குத் தண்டனை கொடுத்ததோட முடிஞ்சு போச்சு....அடுத்த முறை....எங்கே கொடுப்பேனோ...எனக்குத் தெரியாது....!",என்றவனின் பார்வை சிறிதும் வெட்கமில்லாமல் அவள் இதழ்களையே மொய்த்தது.



அவனது பார்வை ஏற்படுத்திய தடுமாற்றத்தை மறைப்பதற்காக...தன் இதழ்களை மடித்து அழுந்தக் கடித்துக் கொண்டாள்.அவளுடைய செய்கையில்....அவனது பார்வை இன்னும் அதிகமாக அவள் இதழ்களை மொய்த்து வைத்தது...!



அவனுடைய பார்வையின் வேகத்தைத் தாங்க முடியாமல்,"நா...நான் ரெஸ்ட் ரூம்....",என்று உளறியபடி வெளியே ஓடிவிட்டாள்.அவனுடைய சிரிப்பு அவளைப் பின் தொடர்ந்தது.

அன்று முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போல் சுற்றிக் கொண்டிருந்தாள் நித்திலா.



மதிய உணவு இடைவேளையின் போது....சுமித்ரா ஏதோ அவளிடம் கேட்டு,அவள் பதில் சொல்லாது இருக்கவும்...."என்ன யோசனையில் இருக்க...?",என்றபடி அவள் தோளைத் தொட,



அவ்வளவுதான்...."ஆ....!",என்ற அலறலுடன் துள்ளிக் குதித்து எழுந்தவள்,"எதுக்கு டி என்னைத் தொடற....?",என்று சீறினாள்.



"நான் கேட்டத்துக்கு நீ பதில் சொல்லவே இல்ல டி....!அதனாலதான் உன் தோளைத் தொட்டேன்....",என்று சுமித்ரா விளக்கமளிக்க,



"என்னமோ ஒண்ணு....இனிமேல் என்னைத் தொட்டுப் பேசாத....!",என்று கத்திவிட்டு சென்று விட்டாள்.அவளையே வித்தியாசமாய் பார்த்தபடி....சுமித்ராவும் அமைதியாக இருந்து விட்டாள்.



ஆதித்யனின் முகத்தையே ஏறிட்டுப் பார்க்காமல்...கருமமே கண்ணாக வேலை செய்து கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பாக வந்தது.



"என்ன பேபி....?என் முகத்தையே பார்க்க மாட்டிங்கற....?அவ்வளவு வெட்கமா....?",குறுநகையுடன் ஆதித்யன் கேட்க....அவ்வளவுதான் நித்திலா பொங்கி விட்டாள்.



"ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல....!உங்க மனசில நீங்க என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க....?உங்ககிட்ட வேலை பார்க்கிற பொண்ணுக்கிட்ட இப்படித்தான் நடந்துக்குவீங்களா.....?இனி இந்த மாதிரி என்கிட்ட பழகாதீங்க...!",பெண் புலியாய் கர்ஜித்துக் கொண்டிருந்தாள்.



அவனோ...அவள் கோபத்தை ரசித்தவாறு,"ட்ரை பண்றேன்....!",என்றான் அசால்ட்டாக.



பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கியபடி....எதுவும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.மாலை கூட அவன் முகத்தைப் பார்க்காமல் கூறிவிட்டு கிளம்பி விட்டாள்.



அன்று இரவு....ஆதித்யன்....நித்திலா இருவருக்குமே தூங்கா இரவாகிப் போனது.ஆதித்யனோ....தான் உணர்ந்த முதல் பெண்மையின் மென்மையில் கரைந்தவனாய்....தூக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தான்.அவள் அறிமுகப்படுத்திய உணர்வுகள்....அவன் தூக்கத்தைப் பறித்துக் கொண்டு பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன.



'உன்னையெல்லாம் இப்படித்தான் டி டீல் பண்ணனும்....!',என்று செல்லமாக திட்டியவன்....என்னவோ அவளே அருகில் இருப்பது போல் தலையணையை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.அந்த தலையணைதான் பாவம்....விடியும் வரை அவனிடம் படாத பாடு பட்டது.



இருளிலும் அந்த மோதிரத்தையே வெறித்துக் கொண்டு படுத்திருந்த நித்திலாவிற்கு....அப்பொழுதும் அவன் மீசையின் குறுகுறுப்பை தன் விரல்களில் உணர்வது போல் இருந்தது.'என்ன தைரியம்....!இனிமேல் என்கிட்ட அந்த மாதிரி நெருங்கட்டும்....பேசிக்கறேன்.....!',என்று ஆதித்யனை திட்டிக் கொண்டிருந்தாள்.



மறுநொடியே.....அவன் கிறக்கத்துடன் தன் தோளில் முகம் புதைத்தது ஞாபகம் வர....அவளையுமறியாமல்....அவள் முகம் சூடாகிச் சிவந்தது.அடி வயிற்றில் தோன்றிய சிலீரென்ற உணர்வு....பரபரவென்று நெஞ்சுக்குழி வரை பரவ....தன் இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டாள்.



கண்ணை மூடினாலும்....குறுகுறு பார்வையுடன் அவன் தன்னை முத்தமிட்ட காட்சிதான் தோன்றியது....!அவளது தோள்வளைவில் அவள் உணர்ந்த அவனது வெம்மை.....அவள் உயிர்வரை சென்று தாக்கி ஆட்டம் காணச் செய்தது.



பிடிவாதமாக அனைத்தையும் ஒதுக்கித் தள்ளியவள்....தூங்க முயற்சி செய்தாள்.அந்தோ பரிதாபம்....!அந்த தூக்கம் அவளை விட்டுத் தூரச் சென்று நின்றபடி....அவளைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தது.



இருவரின் தூக்கத்தையும் பறித்துக் கொண்ட காதலோ....இருவரின் இதயத்திலும் உறைந்து....சுகமாய் நித்திரை கொள்ள ஆரம்பித்தது....!!





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 15 :



காலையிலேயே கௌதமை தன் அறைக்கு அழைத்த ஆதித்யன்,"கெளதம்....! J.P கம்பெனீஸ்க்கு ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணனும்....இது கொஞ்சம் கான்பிடன்ஷியலா இருக்க வேண்டிய விஷயம்....ஸோ...நீ உன்னோட லாகின் ஐடியை மட்டும் யூஸ் பண்ணி அதை ரெடி பண்ணு...!அதுமட்டுமில்லாம....அது ரிலேட்டடா ஒரு சம்மரியும் வேணும்....உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு வேணும்ன்னா சுமித்ராவைக் கூப்பிட்டுக்கோ....!",கடைசி வார்த்தையை....அவனைப் பார்த்துக் குறும்புடன் கண்சிமிட்டியபடி கூறினான்.



"டேய்....!",ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தவன்,கண் ஜாடையால் நித்திலாவை காட்டி சைகை செய்துவிட்டு வெளியேறினான்.



"கூப்பிட்டிங்களா சார்....?",என்றபடி கெளதம் முன் வந்து நின்றாள் சுமித்ரா.



"ம்ம்....யெஸ் சுமித்ரா!கான்பிடன்ஷியல் வொர்க் ஒன்னு பண்ணனும்....என் சிஸ்டமையே யூஸ் பண்ணிக்க....!",என்றபடி தன் இருக்கையை விட்டு எழுந்தவன்,அதற்கு நேர் எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் லேப்டாப் சகிதத்தோடு அமர்ந்து கொண்டான்.



"உங்க சிஸ்டமா...?ஏன் சார்....?"



"இந்த வொர்க்குக்கு என் லாகின் ஐடியை யூஸ் பண்ண சொல்லி ஆதித்யன் சொல்லியிருக்கான்....",



"ஓ....அப்ப உங்க ஐடி சொல்லுங்க....!நான் என் சிஸ்டமிலேயே வொர்க் பண்ணிக்கிறேன்....",அவளுக்கு அவன் இருக்கையில் அமர்ந்து வேலை செய்வதற்கு என்னவோ போல் இருந்தது.



"ஷ்....சுமித்ரா....!உனக்கு இதுல நிறைய சந்தேகம் வரலாம்....அண்ட் அப்பப்ப நானும் தேவையான இன்ஃபர்மேஷன் கொடுக்க வேண்டி இருக்கும்....என் சிஸ்டமிலேயே வொர்க் பண்ணு....!",என்றுவிட,



அவளும் அதற்கு மேல் வாதாடாமல் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.இருவரும் தத்தம் அலுவலில் மூழ்கியிருக்க,எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த கௌதமின் விழிகளில்....அந்த நாற்காலிக்கு சற்றும் பொருந்தாமல்....பூனைக்குட்டி போல் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த சுமித்ரா விழுந்தாள்.



அவள் அமர்ந்திருந்த விதத்தைக் கண்டு தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டவன்,"நல்லா உட்காரலாமே....?ஏன் கீழே விழற மாதிரி உட்கார்ந்திருக்க....?",எனவும்,சிறு தயக்கத்துடன் தள்ளி அமர்ந்து கொண்டாள்.



அவளுக்கு வேலையில் ஒரு சந்தேகம் வரவும்....அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"சார்....!இந்த அமௌன்ட் எங்கேயோ இடிக்குது....ஏதோ தப்புன்னு நினைக்கிறேன்....!",என்க,



தன் லேப்டாப்பை டேபிளின் மீது வைத்துவிட்டு எழுந்தவன்....அவளருகில் வந்து நின்றபடி அவளது சிஸ்டமை ஆராய்ந்து கொண்டிருந்தான்.அவன்....அவளருகில் ஒட்டியபடி நின்று கொண்டிருந்ததால்....அவளால் எழுந்திருக்கவும் முடியவில்லை.எழுந்தால் நிச்சயம் அவன் மீது இடித்து விடும்....அவஸ்தையாக நெளிந்தபடியே அமர்ந்திருந்தாள்.



அவனுக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை போலும்....!சிஸ்டமையே பார்த்தபடி,"என்ன தவறு....?', என்று கண்டுபிடிப்பதிலேயே அவனது முழு கவனமும் இருந்தது.



"ம்...காட் இட்....!",என்றவன் அதை சரி செய்யும் நோக்கத்துடன்....மவுசை கையில் பிடித்தான்.அவளுக்கு அந்தப் பக்கம் மவுஸ் இருக்கவும்....அவளை இன்னும் சற்று நெருங்கியவாறுதான் அதை பிடிக்க முடிந்தது.



இதை எதையும் அறியாமல்....அவன் பாட்டுக்கு....அவளை எட்டி அந்த மவுஸைப் பிடிக்க....அவனுடைய சட்டை அவளை உரசிச் சென்றது.அதற்கு மேல் தாள முடியாமல்....சட்டென்று மூச்சை உள்ளிழுத்தவள்....இருக்கையோடு இன்னும் ஒட்டி அமர்ந்து கொண்டாள்.



அவள் அமர்ந்திருக்கும் நிலையில் ஏதோ வித்தியாசம் தெரியவும்,'என்ன....?', என்பது போல் கேள்வியாக அவளை நிமிர்ந்து நோக்கினான் கெளதம்.



மருண்ட விழிகளோடு....பசை போட்டு ஒட்டியதைப் போல் இருக்கையோடு ஒட்டி அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும்தான் அவனுக்கு உறைத்தது.விருட்டென்று அவளை விட்டு விலகியவன்,"ஸாரி....!நான் கவனிக்கல.....!",தடுமாற்றத்துடன் அவன் தன் சிகையைக் கோதிக் கொள்ள,



அவளோ,"ம்ம்....",என்றபடி தலையைக் குனிந்து கொண்டாள்.



சிறிது நேரம் அங்கு சங்கடமான அமைதி நிலவ....முதலில் சுதாரித்துக் கொண்டவன்...கவனமாக அவளை விட்டுத் தள்ளி நின்றபடி,அவளது தவறை சுட்டிக் காட்ட...அவன் கூற கூற....அதை சரி செய்து கொண்டாள் அவள்.



தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தவன்....அதன் பிறகு மும்முரமாக தன் லேப்டாப்பை பார்வையிட ஆரம்பித்தான்.வேலையில் நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது.அந்த சின்ன இருக்கையில் அமர்ந்து வேலை செய்வது அவனுக்கு சற்று சிரமமாக இருந்தது போலும்....!இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தவன்,"தலை வலிக்கிற மாதிரி இருக்கு....!",என்று முணுமுணுக்க,



அவன் அந்த இருக்கையில் சற்று கஷ்டப்பட்டு அமர்ந்திருப்பது சுமித்ராவிற்கும் தெரிந்தது.எனவே,"இங்கே வந்து உட்கார்ந்துக்கிறீங்களா....?",என அமைதியாக வினவினாள்.



'எங்க உன் மடியிலயா....?', என்று வாய்வரை வந்த வார்த்தையை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளியவன்....அவளை ஒரு மாதிரி பார்க்க...அவன் மனதில் நினைத்தது....அவன் முகத்தில் பிரதிபலித்ததோ என்னவோ.....அவள் அவசரமாக,"இல்ல....நான் எழுந்துக்கிறேன்....!நீங்க உட்கார்ந்துக்கோங்க.....!நான் வேணா உங்க லேப்டாப்ல வொர்க் பண்றேன்....",என்றாள்.



அவள் அவசரத்தைக் கவனித்தவனுக்கு சிரிப்பாக வந்தது.'இப்ப அவ மடியில போய் உட்கார்ந்தா...என்ன பண்ணுவா....?',கற்பனையில் பறக்க இருந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தியவன்,"இல்ல...அதெல்லாம் வேண்டாம்...!காபி குடிச்சா சரியாயிடும்....உனக்கும் ஆர்டர் பண்ணட்டுமா....?",என்று வினவினான்.



"இல்லை....எனக்கு வேண்டாம்....!",என்று மறுத்தவளை,"ப்ச்...!அப்புறம் நான் குடிக்கும் போது என் வாயைப் பார்த்துட்டு இருப்பியா....?பேசாம குடி....!",என்று அவளை வற்புறுத்தியவன்,பியூனை அழைத்து காபி கொண்டு வரச் சொன்னான்.



'நான் காபி குடிக்கணும்ன்னு....ஏற்கனவே உங்க மனசுல நினைச்சாச்சு....இதுல,'காபி குடிக்கறயான்னு ....?' என்னைப் பார்த்து கேள்வி வேற....!', என்று நினைத்துக் கொண்டவளின் மனதில் நிச்சயமாக கோபம் இல்லை.அவன் ஆளுமையையும்....கோபத்தையும் அவள் மனது...அவளையும் அறியாமல் விரும்பத்தான் செய்தது.



அதற்குள் பியூன் ப்ளாஸ்க்கில் காபி கொண்டு வந்து வைத்து விட்டுச் செல்லவும்,இரு கப்பில் ஊற்றியவன்,ஒரு கப்பை அவள் பக்கம் நகர்த்தினான்.



"தேங்க்ஸ்....!",என்றபடி காபியை எடுத்துப் பருக ஆரம்பித்தாள் அவள்.கெளதம் ஒரு காபி பிரியன்....!வேலையின் நடுவில் அடிக்கடி காபி பருகுவான்.காபியை ருசித்தபடி தளர்வாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன்,இரு கால்களையும் வசதியாக நீட்ட....அது சென்று,டேபிளுக்கு அடியில் இருந்த சுமித்ராவின் காலை இடறியது.



அவன் கால்கள் தனது பாதங்களை வருடவும்....குடித்துக் கொண்டிருந்த காபி புரையேறியது அவளுக்கு.



"ஸாரி....ஸாரி....!நான் தெரியாம....",என்று அவன் வார்த்தைகளைத் தேட,இவள்,"ம்....பரவாயில்லை....!",என்றபடி கால்களை உள்ளிழுத்துக் கொண்டாள்.



சிறிது நேர அமைதிக்குப் பிறகு முதலில் கௌதம்தான் பேச்சை ஆரம்பித்தான்.



"உன்கிட்ட 'ஸாரி' கேட்டுட்டே இருக்கேன்ல....!ஐ திங்க் நாம ரெண்டு பேரும் இன்னைக்குத்தான் சண்டை போடாம இருக்கோம்....",என்றான் இலகுவாக.



அவனது இலகு பேச்சில் சற்று தைரியமடைந்தவளாய்,"நான் உங்ககூட சண்டை போட மாட்டேன் சார்....!",என்றாள் காபியை உறிஞ்சிக்கொண்டே.



சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன்,"உண்மைதான்....!இதுவரைக்கும் நான்தான் உன்கூட சண்டை போட்டிருக்கேன்.....ஏதோ கோபத்துல....உன்னைத் திட்டி....எல்லாத்துக்கும் ஸாரி.....!",காபி கப்பின் விளிம்பை தடவியவாறே அமைதியான குரலில் மன்னிப்பு கேட்டான்.



"இட்ஸ் ஒகே சார்....!",என்று மென்மையாகப் புன்னகைத்தவளைக் கண்டவன்,



"உனக்கு கோபமே வராதா....?", என்றவனின் விழிகள் அவளையே வருடியது.



"ஹ்ம்ம்.....வரும்...!ஆனால்....நீங்க திட்டும் போது....ஏதோ வொர்க் டென்ஷன்ல திட்டறீங்கன்னு நினைச்சுக்குவேன்....",குழந்தை போல் கூறியவளைப் பார்த்தவனுக்கு குற்ற உணர்ச்சி பெருகியது.



"ஸாரி....!உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன்.....!சரி....உன் ஃபேமிலியைப் பத்தி சொல்லு....?"



"என் அம்மா...அப்பா...நான் அண்ட் தம்பி.....இதுதான் எங்க பேமிலி.அப்பா மளிகை கடை வைச்சிருக்காரு...அம்மா ஹவுஸ் வைஃப்....அண்ட் தம்பி இப்பத்தான் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருக்கான்....",



"ஹ்ம்ம்....நைஸ் பேமிலி....!",



"நைஸ் பேமிலிதான்....பட்....எங்க அப்பாக்கு ரொம்ப கோபம் வரும்....ரொம்ப கண்டிப்பானவரும் கூட...!",



"அப்புறம் எப்படி உன்னை வேலைக்கு அனுப்பினாங்க....?",



"வேற வழி....?குடும்ப சூழ்நிலை....அதனால ஒத்துக்கிட்டாங்க.....!",தயக்கமின்றி தன் குடும்பத்தைப் பற்றி அவனுடன் பகிர்ந்து கொண்டிருந்தாள்.அவனைப் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று சுமித்ராவிற்குத் தோன்றினாலும்....அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்று கேட்காமல் விட்டுவிட்டாள்.



ஆனால்....கௌதமே அவனைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்.



"என்னைப் பத்தி கேட்க மாட்டியா....?",என்று அவன் ஆவலுடன் கேட்க,



அவள் அவனை வித்தியாசமாகப் பார்த்தபடி,"சொல்லுங்க....!நானும் கேட்கணும்ன்னுதான் நினைச்சேன்...!",தனது தயக்கத்தையும் மீறி ஆவலுடன் கேட்டாள்.



"என் வீட்ல நானும்...என் தங்கையும் மட்டும்தான்....!அம்மா அப்பா இறந்துட்டாங்க....",அவனது பெற்றோரின் நினைவில் அவன் முகம் வாடியது.



ஏனோ அவனை மார்போடு அணைத்து ஆறுதல் கூற வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.அவள் மனதில் தோன்றிய உணர்வை நினைத்து அவளே ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டாள்.தலையை குலுக்கி அதிலிருந்து வெளிவந்தவள்,"ஓ...ஸாரி...!எனக்குத் தெரியாது...!",வருத்தத்துடன் அவள் கூற,



அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,"இட்ஸ் ஓகே....!சரி அதை விடு....நாம இந்த வொர்க்கை முடிச்சாகனும்....",எனவும் இருவரும் தங்களது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.



மதிய உணவின் போது,"வேலை இருக்கிறது....!",என்று கூறி விட்டு அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஓடி விட்டாள் சுமித்ரா.பாலாவும் நித்திலாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.



"சரி பாலா...!நான் கிளம்பறேன்....!",என்றபடி நித்திலா எழ,



"இரு...நானும் வரேன்....!ஆதி சார் கூட பிஸினஸ் விஷயமா கொஞ்சம் பேசணும்....",என்றபடி அவளுடன் இணைந்து நடந்தான் பாலா.



ஆதித்யன் வெளியே சென்றிருந்ததால்,இருவரும் வெளியே சற்றுத் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.உணவு நேரம் முடிய....இன்னும் சிறிது நேரம் இருந்ததால் நித்திலாவும் அவனுடன் அரட்டை அடித்துக் கொண்டு நின்றாள்.



பாலா ஏதோ கூறவும்...இவள் வாய் விட்டு சிரித்தபடி....அவன் தோளில் ஒரு அடி போட....சரியாக அந்த நேரம் பார்த்து....ஆதித்யன் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.நுழைந்த உடனேயே,நித்திலாவிடம் குனிந்தபடி எதையோ பேசிக் கொண்டிருந்த பாலாவும்....அதற்கு வாய்விட்டு சிரித்தபடி நின்ற நித்திலாவும்தான் கண்ணில் பட்டனர்.



பார்த்தவனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.அவள் சிரித்துக் கொண்டிருந்தது வேறு....அவன் கோபத்திற்கு தீ மூட்டியது.அவளைப் பார்த்து முறைத்தபடியே அறைக்குள் நுழைந்தான்.



ஆதித்யன் வந்ததையோ...இல்லை....தன்னைப் பார்த்து முறைத்ததையோ நித்திலா கவனிக்கவில்லை.ஆனால்....பாலா கவனித்து விட்டான்.'இவர் எதுக்கு நித்திலாவை இப்படி முறைக்கிறார்.....?', என்று நினைத்தவன் அதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்காமல் விட்டு விட்டான்.



"ஆதி சார் வந்துட்டாரு....!நீ போ நித்தி....!நான் ஒரு 5 நிமிஷம் கழிச்சு வர்றேன்....",என்றபடி அவளை உள்ளே போகச் சொன்னான்.



உள்ளே நுழைந்தவளை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.அவன் பார்வை அவளைக் கூர்மையாக அளவிட்டது.அவள் முகத்தில் எதையோ தீவிரமாக ஆராய்ந்தன....அவனுடைய கழுகு கண்கள்.



'எதுக்கு இப்படி முறைக்கிறார்....?ஒருவேளை...லன்ச் டைம் ஓவர் ஆகிடுச்சா...?',என்று நினைத்தபடி தன் மணிக்கட்டில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தாள்.'இல்லையே....!இன்னும் 5 நிமிஷம் இருக்கே...!',என்று நினைத்தபடியே அவன் பார்வையை அலட்சியம் செய்தவளாய்....சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.



அவளிடம் எதையோ பேச அவன் வாயைத் திறக்கவும்....பாலா,"எக்ஸ்க்யூஸ் மீ...!", என்றபடி கதவைத் தட்டவும் சரியாக இருந்தது."கம் இன்....!",என்று ஆதித்யன் குரல் கொடுக்கவும்....உள்ளே நுழைந்தவனைப் பார்த்தவனுக்கு மேலும் கோபம் பெருகியது.



சுழித்த முகத்துடனேயே,"என்ன விஷயம்.....?",என்று கேட்க,அவன் தான் வந்த காரணத்தைக் கூறினான்.அவன் கூறிய விபரங்களைக் கேட்டவன்,தன் கோபத்தை ஒதுக்கி விட்டு....ஒரு பிஸினெஸ்மேனாய் பேச ஆரம்பித்தான்.



தான் கொண்டு வந்த பிரச்சனைக்கு,எளிதில் தீர்வு சொன்ன ஆதித்யனை நினைத்து பாலாவுக்குள் சிறு வியப்பு தோன்றியது.'இந்தப் புத்திக்கூர்மையால்தான் இவரால்....இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள முடிகிறது...',என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.



"இந்த விஷயத்தை நான் சொன்ன மாதிரி டீல் பண்ணுங்க பாலா....!",என்று அவன் அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க,



"தேங்க் யூ சார்...!",என்றவன் வெளியேறுவதற்கு முன் ஒருமுறை நித்திலாவைப் பார்த்து....தலையசைப்பில் விடைபெற்று விட்டுத்தான் கிளம்பினான்.பதிலுக்கு அவளும் தலையசைத்தாள்.



இதைப் பார்த்து ஆதித்யன் மீண்டும் மலை ஏறினான்.அவளை ஆத்திரமாக முறைத்தவன்,"உனக்கு எப்படி அவனைத் தெரியும்....?",என்று மொட்டையாகக் கேட்க,



"யாரை...?",அவள் புரியாமல் வினவ,



"அதுதான்.....இப்ப வந்துட்டு போனானே....பாலா....அவனை எப்படித் தெரியும்...?",அவனது வார்த்தைகளில் அனல் தெறித்தது.



"என் பிரெண்ட்....!",அவள் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.



"பிரெண்ட்ன்னா.....?",அவனது பார்வை அவளை அக்கு வேறு ஆணி வேராக அலசியது.



"பிரெண்ட்ன்னா பிரெண்ட்....!",அவளும் அவனைப் போலவே கூறினாள்.



பொறுமையின்றி சீறலான மூச்சை வெளியிட்டவன்,"இனி....நீ அவன் கூட பழகக் கூடாது.....!",அமைதியாக அதே சமயம் அழுத்தமாக வந்தன வார்த்தைகள்.



அவன் கூறியதைக் கேட்டு,"என்ன.....?",என்று அதிர்ந்தவள்,"நான் இங்கே வந்து ஜாயின் பண்ணுனதுல இருந்து...அவன் கூட பழகிட்டுத்தான் இருக்கேன்....!நீங்க சொல்றதுக்காக எல்லாம் விட முடியாது....",அவளும் அழுத்தமாகக் கூறினாள்.



"விடணும்....விட்டுத்தான் ஆகணும்....!",அவன் அடிக்குரலில் உறுமினான்.



"முடியாது.....!",அவள் உறுதியாகக் கூற,



ஒரு கணம் விழிகளை அழுந்த மூடித் திறந்தவன்,"லுக் நித்திலா.....!எனக்கு பொறுமை ரொம்பவுமே குறைவு....என்னைக் கோபப்படுத்தி பார்க்கணும்ன்னு நினைக்காத.....!அது உனக்கு நல்லதில்ல....நான் ஏதாவது சொன்னால்....கேட்டுப்பழகு....!நீ அவன் கூட இனி பேசக் கூடாது....அவ்வளவுதான்....!"



அவனது வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவளுக்குப் பயத்தைக் கொடுத்தாலும்,'என் சுதந்திரத்தில் தலையிடும் உரிமையை இவனுக்கு யார் கொடுத்தது....?',என்ற கோபமும் எழுந்தது.



"எல்லா விஷயத்திலேயும் என்னைக் கட்டுப்படுத்தலாம்ன்னு நினைக்காதீங்க...!அது உங்களால முடியாது....!",



"ஏன்....?அந்த மோதிரம் விஷயத்தை மறந்திட்டயா....?அது இன்னும் உன் விரலில் இருக்கிறதா...எனக்கு ஞாபகம்...!",சிறு நக்கல் இருந்தது அவன் குரலில்.



அதைக் கேட்டு ஆத்திரமடைந்தவளாய் "அதே மாதிரி....இதையும் சாதிச்சிடலாம்ன்னு நினைக்காதீங்க....!இனி நீங்க கிட்ட வந்தாலே....நான் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்....!",சுட்டு விரலை நீட்டி எச்சரித்தவளைப் பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.



"அப்படியா....!அப்ப....ஒரு ட்ரையல் பார்க்கலாமா....?",என்றபடி அவன் தன் இருக்கையில் இருந்து எழுவது போல் நடிக்க,



"இல்லல்ல....வேண்டாம்....!",என்று பதறினாள் அவள்.



அவளது பதற்றத்தைக் கண்டு வாய்விட்டு சிரித்தவன்,"டோன்ட் வொர்ரி பேபி....!நான் அந்த மூட்ல இல்ல....அந்த பாலா கூட சிரிச்சு பேசி என் கோபத்தை ஏத்தி விட்டுருக்க....சரி....!அதையெல்லாம் விடு....இனி அவன் கூட பழகாத....ஒகே....?",குழந்தைக்கு சொல்வது போல் அவன் சொல்ல,அவளுக்கு ஆத்திரமாக வந்தது.



"முடியாதுன்னு சொன்னா....என்ன பண்ணுவீங்க....?",அவள் எகத்தாளமாய் கேட்க,



"என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்....!",அவனுடைய பார்வையில் அவளுடைய முதுகுத்தண்டு வரை ஜில்லிட்டது.



இறுதியில் அவளது பயத்தை...கோபம் வென்று விட,இதுக்காகவாவது....அவனோட பழகறேன்னா....இல்லையான்னு பாரு....!',என்று மனதிற்குள் கறுவிக் கொண்டாள்.





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 16 :

அடுத்து வந்த இரண்டு நாட்களும்....கௌதமும் சுமித்ராவும் ஒன்றாகவே வேலை செய்ய வேண்டி இருந்தது.அவனும் தன் கோபத்தை ஒழித்து அவளுடன் பழக....அவளும் தன் தயக்கத்தை உதறி அவனிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்.

அவள் தன் அருகில் இருக்கும் போது....அந்த வானத்தையே வசப்படுத்திய உணர்வுடன் குதூகலிப்பவன்....அவள் மாலையில் விடைப்பெற்றுச் செல்லும் போது...எதையோ இழந்தது போல் தவிப்பான்.

'ஒருவேளை...நான் அவளைக் காதலிக்கிறேனா.....?',என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்பவன்,அந்தக் கேள்விக்கானப் பதிலை மட்டும் ஆராய மாட்டான்.அவள் அருகாமையை ரசித்து அனுபவிப்பவன்....அதற்கான காரணத்தை அறிய முற்படவில்லை.

அவனுடைய அருகாமை....சுமித்ராவிற்குள்ளும் ஒரு மாற்றத்தை விளைவித்திருந்தது என்னவோ உண்மைதான்....!அதிலும்,சில சமயங்களில்....இவள் வேலை செய்து கொண்டிருக்கும் போது....தன்னையே வட்டமிடும் அவனது பார்வைகளை அவள் உணர்ந்திருக்கிறாள்.ஏன்....!இவளே சில சந்தர்ப்பங்களில் அவனை ரசித்திருக்கிறாள்.அப்பொழுதெல்லாம்....ஆயிரம் கோடி பட்டாம்பூச்சிகளின் படபடப்பை....அவள் இதயத்திற்குள் உணர்ந்திருக்கிறாள்.

'எதனால் இந்த படபடப்பு....?',என்று யோசிக்க அவள் பயந்தாள்.அவள் மனதைக் கேள்வி கேட்டு....அது தரும் பதிலை ஏற்றுக் கொள்வதற்கு அவள் தயாராக இல்லை....!மனம் செல்லும் வழியில் போக விடாமல்....அதை கயிறு கட்டி இழுத்து வைத்தாள்.

இருவருமே....ஒவ்வொரு காரணத்திற்காக தங்களது மனதை கேள்வி கேட்கத் தயங்கினர்.இருவரின் இதயத்துடிப்பும்....இருவரின் பெயரைக் கூறி ஒலிப்பதை....இருவருமே அறிய முற்படவில்லை.

இருதயத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் போது....மூளையின் வைராக்யம் பணிந்து விடும்....!இதுதான் இயற்கை....!காதல்...தன் இருப்பை நிலை நிறுத்தும் பொழுது...ஓடி ஒளிந்து கொள்ள முடியுமா....?இல்லை....காதல்தான் ஓடி ஒளிந்து கொள்ள அனுமதித்து விடுமா....?

.........................................................................................................

காற்றென மாறி நாட்கள் விரைந்து சென்றது.

தன் செல்போனில் பேசியபடி அறைக்குள் நுழைந்தான் ஆதித்யன்.

"யெஸ் மிஸ்டர்.ராகவன்....!கொஞ்சம் சீக்கிரம் ஏற்பாடு பண்ணுன்னா நல்லாயிருக்கும்....!",

".........",

"யா...!",

"..........",

"ஒகே மிஸ்டர்....!நான் என் மேனேஜர்கிட்டப் பேசிட்டு சொல்றேன்....!",செல்போனில் பேசிக் கொண்டிருந்தாலும்,உள்ளே நுழைந்ததும் நித்திலாவைப் பார்த்துப் புன்னைகைக்கத் தவறவில்லை.

மொபைலில் பேசியபடியே தன் நாற்காலியில் வந்து அமர்ந்தவன்....ஸ்டைலாக சுழன்றபடி நித்திலாவைப் பார்த்துக் கண்ணடிக்க,

அவளோ,'முதல்ல போன்ல இருக்கறவங்ககிட்ட பேசுங்க....!',என சைகை செய்தாள்.

'பேச முடியாது....உன்கிட்ட தான் பேசுவேன்....!',என்று அவன் சைகை செய்ய,

'பேசாட்டி போங்க....!எனக்கென்ன வந்துச்சு....?',என்று அவள் உதட்டை சுழிக்க,அவன் விழிகள் அவளது சுழித்த உதடுகளையே ரசனையுடன் அளவிட்டது.பிறகு உதட்டைக் குவித்து....ஒரு பறக்கும் முத்தத்தை அவளுக்கு அனுப்ப....முதலில் திகைத்தவள்....பிறகு அவனை முறைத்து விட்டுத் திரும்பிக் கொண்டாள்.

சிரித்தபடி போனில் பேசி முடித்தவன்...அதை அணைத்துவிட்டு நித்திலாவின் புறம் திரும்பினான்.

"பேபி....!உனக்கு யாரவது எதையாவது கொடுத்தால்....அதை திருப்பி கொடுத்துடணும்ன்னு...உங்க அம்மா சொல்லித் தரலையா....?",உதடுகளுடன் கண்களும் சேர்ந்து சிரித்தபடி அவன் கேட்க,

அவன் கேட்டது முதலில் அவளுக்குப் புரியவில்லை.பிறகுதான்...அவன் முத்தத்தைப் பற்றி பேசுகிறான் என்பது புரிந்தது.அவன் பாணியிலேயே அவனுக்குப் பதிலளிக்க விரும்பியவள்,

"ஓ...சொல்லிக் கொடுத்து இருக்காங்களே....!அது மட்டுமில்ல....அதைவிட அதிகமா திருப்பிக் கொடுக்கணும்ன்னு சொல்லியிருக்காங்க....!",விழிகளை உருட்டியபடியும்....கைகளை ஆட்டியபடியும் அவள் கூறிய விதத்திலிருந்தே,'அவள் ஏதோ எக்குத்தப்பாக செய்யப் போகிறாள்' என்பது அவனுக்குப் புரிந்தது.

இருந்தும் 'அவள் அப்படி என்னதான் செய்வாள்....?' என்று அறியும் ஆவல் பொங்க,

"வெரிகுட்....!வெரிகுட்....!எங்கே கொடு பார்க்கலாம்....!",என்றபடி அவள் அருகில் சென்று தன் கன்னத்தை நீட்டினான்.

நித்திலா எப்பொழுதுமே தன் கைப்பையில் பெப்பர் ஸ்பிரே வைத்திருப்பாள்.இவன் வந்து தன் கன்னத்தைக் காண்பிக்கவும்....நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி அந்த பெப்பர் ஸ்பிரேயை எடுத்து அவன் முகத்தில் அடித்து விட்டாள்.

ஒரு நிமிடம்....அவனுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.சுள்ளென்று எரிச்சல் தன் முகத்தில் பரவவும் தான்....எதையோ காரமாகத் தன் முகத்தில் அடித்துவிட்டாள் என்பதே புரிந்தது.மிளகு தூளின் நெடி வேறு....அவன் மூக்கில் ஏறி தும்மலை வரவழைக்க....அதன் எரிச்சலால் கண்கள் சிவந்து நீர் வந்தது.

"அடிப்பாவி....!என்னடி பண்ணின....?இப்படி எரியுது....?",என்று அவன் அலற,

"ஹா ஹா....பெப்பர் ஸ்பிரே....!எப்படி....?நீங்க கொடுத்ததை விட அதிகமா கொடுத்திட்டேனா....?",அவன் அலறியது அவளுக்கு விளையாட்டாய் இருந்தது போலும்....வாய் விட்டு சிரித்தபடியே கேட்டாள்.

"ராட்சசி....!கண்ணெல்லாம் எரியுது டி....ஏதாவது பண்ணு....",என்று கத்த ஆரம்பித்தான்.

நிற்க முடியாமல்....எரிச்சலில் அவன் தவிக்க ஆரம்பித்த போதுதான் தான் செய்த செயலின் தீவிரம் நித்திலாவிற்கு புரிந்தது.'ஐயோ....!நிறைய அடிச்சிட்டோம் போலவே....!பாவம்.....இப்படி முகம் சிவந்து போச்சு...',என்று நினைத்தபடி தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள்.

இவனால் கண்ணை விழிக்கவும் முடியவில்லை.அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவும்....கைகளால் துளாவியபடி,"ஏய்....!இருக்கிறயா....?இல்லையா டி....?",என்று கத்த,

"அய்யோ....!கத்தாதீங்க....!வெளியே கேட்டு யாரவது வந்துடப் போறாங்க....!",அவளுக்கு அவள் கவலை.

"வரட்டும்....அவங்க M.D யை நீ எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தறேன்னு....வந்து பார்த்து தெரிஞ்சுக்கிட்டும்....!",அந்த நிலையிலும் அவன் கேலி பேச,

அவளுக்குக் கோபம் வந்தது."இப்ப உங்களுக்கு இந்த எரிச்சல் போகணுமா....?வேண்டாமா....?",அவள் கறாராக கேட்க,

"அதைத்தாண்டி அப்போ இருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்....ஏதாவது பண்ணு....!",என்று அவன் பல்லைக் கடித்தான்.

அவன் அவசரப்படுத்த....இவள் பதட்டமாகி....தன் கைக்குட்டையால் அவன் முகத்தைத் துடைக்க ஆரம்பித்தாள்.இவள் துடைத்ததில்....முகத்தில் அங்கங்கு ஒட்டியிருந்த மிளகுப்பொடி....எல்லாப் பக்கமும் பரவி இன்னும் அதிகமாகத் தன் வேலையைக் காட்டத் துவங்கியது.

"அய்யோ...!என்னத்த பண்ணித் தொலைஞ்ச டி....?ரொம்ப எரியுதே....!அம்மா....உங்க மகனை இவ கொலை பண்ண பார்க்கறா....ராட்சசி....!ராட்சசி....!",என்று உச்சஸ்தாயியில் கத்த ஆரம்பித்தான்.

"இல்ல....நான் ஒண்ணும் பண்ணல....கர்ச்சீஃப்ல தான் துடைச்சேன்....!",என்று விளக்கமளித்தபடி மேலும் துடைக்கப் போக,

"நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்.....போ....!",என்று அவள் கைகளைப் பிடித்துத் தள்ளி விட்டான்.

"சாரி....!சாரி....!முகம் கழுவினா சரியாப் போயிடும்ன்னு நினைக்கிறேன்....போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க....!",கைகளைப் பிசைந்தபடி கூறினாள்.

"எங்கே டி போறது....?கண்ணை முழிக்கவே முடியல....!",கைகளால் துளாவியபடி ஒரு அடி எடுத்து வைத்தவன்....அவள் மேலேயே மோதி நின்றான்.

அவனைத் தாங்கிப் பிடித்தவள்,"சரி....சரி....!நானே கூட்டிட்டுப் போறேன்....வாங்க....!",அவன் கைகளைப் பிடித்து ஓய்வு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

ஆதித்யனின் அலுவலக அறைக்குள்....மேலும் இரண்டு அறைகள் உள்ளன.இடது பக்கம் இருப்பது சாப்பாட்டு அறை...உணவு மேசை போடப்பட்டு இருக்கும்.மதியம் வீட்டிலிருந்து அவனுக்கு வரும் உணவை அவன் அங்கு அமர்ந்துதான் சாப்பிடுவான்.

வலது பக்கம் இருப்பது அவனுடைய ஓய்வு அறை.கட்டில்....மெத்தை...சிறிய மேசை....நாற்காலி....ஃபிரிட்ஜ் என அனைத்தும் நிறைந்த மினி பெட் ரூம்.மேலும்...ஒரு கப்போர்டில் மிக முக்கியமான பைல்கள் அடுக்கப்பட்டிருக்கும்.

அவன் கையைப் பிடித்தபடி அந்த அறைக்குள் இருந்த பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றவள்....வாஷ் பேசின் அருகில் அவனைக் கொண்டு போய் நிறுத்தி முகம் கழுவச் சொன்னாள்.

குளிர்ந்த நீர் முகத்தில் படவும்....சிறிது எரிச்சல் அடங்கியது போல் இருந்தது.நீரை வாரி வாரி முகத்தில் அடித்துக் கொண்டவன்....கண்களையும் நன்றாகக் கழுவினான்.இருந்தும் முகத்தில் முழுதாக எரிச்சல் குறையவில்லை.முகம் சிவந்து போய் நின்றிருந்தவனைப் பார்த்தவளுக்குப் பரிதாபமாக இருந்தது.

"ஸாரி....நான் கொஞ்சமா அடிக்கலாம்ன்னு தான் நினைச்சேன்....பட்....தெரியாம....ஸாரி....!",என்று திணறியபடி மன்னிப்பு கேட்க,

அவளது திணறலை ரசித்தவன்,'இருடி....!இதை வைச்சே உன்னை கவனிச்சுக்கிறேன்....',என்று மனதிற்குள் நினைத்தவன்,"போடி....ராட்சசி....!",என்று முணுமுணுத்துவிட்டு வெளியே சென்று கட்டிலில் அமர்ந்தான்.

"ஸாரி சார்....!நான் தெரியாம தான் பண்ணினேன்....ஐஸ் க்யூப் வைச்சா...மீதி இருக்கற எரிச்சலும் போயிடும்....",என்றவள் அந்த அறையிலிருந்த ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து....ஒரு துணியில் சுற்றி அவனிடம் நீட்டினாள்.

"நீதான ஸ்பிரே அடிச்ச....?ஸோ.....நீதான் ஒத்தடம் கொடுக்கணும்....!",என்றவன் கைகளை கட்டியபடி....கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அவள் தயங்கியபடியே நிற்கவும்,"உனக்கு விருப்பமில்லைன்னா....வெளியே போ....!நான் இப்படியே இந்த எரிச்சலைத் தாங்கிட்டு இருந்துக்கிறேன்....!",அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற....அதற்கு மேல் அவள் தாமதிக்கவில்லை.

அவள் கையில் இருந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டு மெதுவாக அவன் முகத்தில் ஒற்றியெடுக்க ஆரம்பித்தாள்.முகத்தை அண்ணாந்து அவளைப் பார்த்தபடி அவன் கட்டிலில் அமர்ந்திருக்க....அவளோ....அவன் அருகில் நின்றபடி அவன் முகத்திற்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் முகத்தையே பார்த்தபடி அவன்,"பேபி....!",என்றழைக்க,

"ப்ச்....நான் ஒண்ணும் பேபியல்ல....!",என்று மறுத்தாள் அவள்.

"அதுதான் பார்த்தாலே தெரியுதே....!",அவளை மேலும் கீழும் ஒரு மார்க்கமாக ஆராய்ந்தபடி....ஒரு மாதிரிக் குரலில் அவன் கூற,

அந்தக் கள்வனின் பார்வை மேய்ந்த இடத்தை அறியாதவளாய் ,"என்ன.....?",என்க,

"இல்ல....உன் மனசு பேபி மாதிரின்னு சொன்னேன்....!",என்று மழுப்பினான் அவன்.

சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் அழைத்தான்.

"பேபி....!",

"ப்ச்....அப்படிக் கூப்பிடாதீங்க....!",

"பேபி....!",அவன் மீண்டும் அழுத்தமாக அழைக்க,

"......",இவள் மௌனித்தாள்.

"பேபி....!",அவன் பிடிவாதமாக மீண்டும் அழைத்தான்.

'இவன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான்....அவ்வளவு அழுத்தம்....!',என்று மனதில் நினைத்தவள்....அவள் பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தாள்.

"என்ன....?",வாய் ஒற்றை வார்த்தையை உதிர்க்க....கைகள் அதன் பாட்டில் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தது.

"இதுக்கெல்லாம் அவசியமே இல்ல....ஒரு மருந்து இருக்கு....!அதைப் போட்டால் போதும்....எரிச்சல் எல்லாம் பறந்து போயிடும்....!",சீரியஸான குரலில் அவன் உரைக்க....அவளும் உண்மை என்று நம்பினாள்.

"அப்படியா....?அது என்ன மருந்துன்னு சொல்லுங்க....?நான் யாரையாவது அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்றேன்....",அவள் ஆர்வமாக விசாரிக்க,

"மஹீம்....!யாரையும் அனுப்ப முடியாது....!அந்த மருந்து உன்கிட்ட மட்டும்தான் இருக்கு....!",அவன் கண்களில் வழிந்த குறும்பில் இருந்தே....'அவன் ஏதோ வில்லங்கமாக கேட்கப் போகிறான்....' என்பது அவளுக்குப் புரிந்தது.

இருந்தும் அனிச்சை செயலாக அவளது வாய்,"என்ன....?",என்ற வார்த்தையை உதிர்த்தது.

"உன் முத்தம்....!நீ மட்டும் ஒரு முத்தம் இங்கே கொடுத்துப் பாரு....",என்று அவன் தன் உதட்டைத் தொட்டுக் காண்பிக்க...அவள் முறைக்கவும்,"சரி....சரி...!அங்கே வேண்டாம்....!இதோ....இங்கே கொடு....போதும்....!",என்று தன் கன்னத்தை சுட்டிக் காட்டினான்.

"உங்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே அடிச்சது தப்பே இல்ல....!",என்று பல்லைக் கடித்தவள்...தன் கையிலிருந்த ஐஸ் க்யூபை கட்டிலில் எறிந்து விட்டு வெளியேறி விட்டாள்.

"என் செல்ல பேபி....!",என்று மனதிற்குள் கொஞ்சியவன்....அவள் ஒத்தடம் கொடுத்த தன் முகத்தை தடவிப் பார்த்துக் கொண்டான்.

............................................................................................
ஆதித்யன் கொடுத்திருந்த வேலையை ஒரு முறை சரி பார்த்த கெளதம் அதை எடுத்துக் கொண்டு அவனை சந்திக்கச் சென்றான்.

"ஆதி....!அந்த கொட்டேஷன் ரெடி ஆகிடுச்சு....நீ ஒரு முறை செக் பண்ணிட்டு சைன் பண்ணிடு....!",என்றவன் அப்பொழுதுதான் அவன் முகம் சிவந்து இருப்பதை கவனித்தான்.

"என்னடா....முகமெல்லாம் சிவந்து இருக்கு....?என்னாச்சு....?",பதட்டமாக விசாரிக்க,நித்திலாவிற்கு படபடவென இருந்தது.'அய்யய்யோ....!உண்மையை சொல்லிடுவானோ....?',பயந்து கொண்டே ஆதித்யனைப் பார்க்க....அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்....'என்ன சொல்லட்டுமா....?',என்று கண்களால் வினவ வேறு செய்தான்.

'வேண்டாம்....!',என்று அவசர அவசரமாக மறுத்தவளைக் கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்,கௌதமிடம்,"அது....ஒரு காட்டுத் தேனீ கொட்டிருச்சு டா....!",அவளையே ஒரக் கண்ணால் பார்த்தபடி கூறினான்.

"என்ன....?தேனீயா....?எங்கேடா.....?",

"இங்கேதான்....என் பக்கத்துலேயே இருக்கு....!",நித்திலாவையே பார்த்தபடி கூற....அதைக் கவனித்த கௌதமிற்கு....அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ நடந்திருப்பது புரிந்தது.

"அப்படியா.....?பார்த்து டா....அதுகிட்ட ரொம்ப வாலாட்டி....வேற எங்காவது கொட்டு வங்கிக்காத....!",கெளதம் நமட்டுச் சிரிப்புடன் கூற,

"அந்த அழகான தேனீ....எங்க கொட்டினாலும் எனக்கு சம்மதம்தான்....!அது ஒரு சுகமான வலி....!",நாற்காலியில் சாய்ந்தபடி மென்னைகையுடன் நித்திலாவைப் பார்த்தபடி கூறியவன்....பிறகு....கௌதமிடம் திரும்பி,"பட்...என்ன....அந்த தேனீதான் என்னை சீண்டவே மாட்டேங்குது.....!",என்றான்.

"அது சரி....!அந்த தேனீயை அப்புறமா பார்த்துக்க....!இப்ப இந்த பைலை பாரு....!",என்றவன் சிரிப்புடனேயே வெளியேறி விட்டான்.

அவன் வெளியேறியதுதான் தாமதம்....!இங்கே நித்திலா ஆரம்பித்து விட்டாள்.

"அவர் முன்னாடி எதுக்கு இப்படியெல்லாம் பேசறீங்க....?அவர் என்னைப் பத்தி என்ன நினைச்சுக்குவார்....?",

"நான் உன் பெயரை அவன்கிட்ட இழுக்கவே இல்லையே.....?நல்லா யோசிச்சுப் பாரு....எங்கேயாவது 'நித்திலா'ன்னு உன் பெயரை யூஸ் பண்ணினேன்னா....?",

"என் பெயரை யூஸ் பண்ணல....ஆனால்....தேனீன்னு என்னைத்தான சொன்னீங்க.....?எனக்குத் தெரியும்....!",

"இல்லையே....!",

"பொய் சொல்லாதீங்க.....நீங்க தேனீன்னு சொல்லவே இல்ல....?",

"இல்லை....நான் தேனீன்னு சொல்லவே இல்ல.....",அவள் முறைக்கவும்,"அழகான தேனீன்னு தான் சொன்னேன்....!",என்று கண் சிமிட்டினான்.

"யரைச் சொன்னீங்க....?",

"பேபி....!என் மேல உனக்கு இவ்வளவு பொஸஸிவ்னெஸ்ஸா டா...?நான் வேற ஏதோ பொண்ணை அப்படி சொல்லியிருப்பேன்னுதானே கோபப்படற....?",அவன் குறும்புடன் கேட்க,

"யூ....யூ....!ச்சீ....உங்களோட பேசவே முடியாது.....!",என்று அவனைக் கடிந்தபடி திரும்பிக் கொண்டாள்.

"தேங்க் யூ....!",சிரித்தபடியே கூறினான் அவன்.

ஃபேக்டரியில் ஒரு புது இயந்திரம் வாங்கியிருந்ததால்....அதைப் பொருத்தும் வேலையில் ஈடுப்பட்டிருந்ததால்.....பாலாவால் அந்த ஒரு வாரம் வர முடியவில்லை.மதிய நேரத்தில் நித்திலாவும்....சுமித்ராவும் மட்டுமே இருந்தனர்.இந்தக் காரணத்தால்....பாலாவிடம் பேசும் வாய்ப்பே நித்திலாவிற்கு கிடைக்கவில்லை.ஆதித்யனின் பேச்சை மீறும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.



அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 17 :

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்....வீட்டிற்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் வந்திருந்தாள் சுமித்ரா.தேவையானப் பொருட்களை எடுத்து கூடையில் போட்டபடி அதை தள்ளிக் கொண்டு வந்தவள்....அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டுக் கொண்டு...எதிரில் வந்தவனை கவனிக்க மறந்தாள்.அதன் விளைவு....எதிரே
வந்தவன் தள்ளிக் கொண்டு வந்த கூடையின் மீது நச்சென்று தனது கூடையை மோதிவிட்டாள்.

"ஷ்....ஸாரி....!நான் தெரியாம.....",மன்னிப்பு கேட்டபடியே நிமிர்ந்தவள்....எதிரே புன்னகைத்தபடி கெளதம் நிற்கவும்,"சார்....!நீங்களா....?நான் கூட யாரோன்னு நினைச்சேன்....!",என்றாள் இலகுவாக.

"ம்....நானேதான்.....!ஏன்....நானா இருந்தா சாரி கேட்க மாட்டியா....?",புருவத்தை உயர்த்தியபடி அவன் வினவவும்,

"இல்ல....நான் அந்த அர்த்தத்துல சொல்லல....சரி....!நீங்க என்ன இந்தப் பக்கம்....?",,

"ஏன்....?நான் இந்தப் பக்கமெல்லாம் வரக் கூடாதா....?",

"பொதுவா....வீட்டு சாமானம் வாங்கற வேலையை பொண்ணுங்கதான பார்ப்பாங்க....!அதனால கேட்டேன்....!",



"சில சமயங்களில் ஆண்களும் பார்க்கலாம்.....!நீ உன் பர்ச்சேஸ் முடிச்சிட்டயா....?இல்ல....இன்னும் இருக்கா....?",



"ம்....முடிஞ்சுது சார்....!",



"சரி...வா....!பில் போட போகலாம்.....!",என்றபடி பில் கவுண்டர்க்கு சென்றவர்கள்,பணத்தை செலுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.



"ஒகே சார்....!நான் அப்படியே கிளம்பறேன்....",தன் கையிலிருந்த பையை தூக்க முடியாமல் தூக்கியபடி சுமித்ரா விடைபெற,



"இப்ப நீ ஃப்ரீதானே....?இல்ல....வேற ஏதாவது வேலை இருக்கா....?",அவன் கேட்க,



"வேலையெல்லாம் இல்ல சார்....பட்....வீட்டுக்குப் போகணும்....!",என்றாள்.



"போகலாம்....!போகலாம்....!என் கூட ஒரு கப் காபி சாப்பிட்டுட்டு போகலாம்.....!",என்றவன் அவள் கையிலிருந்த பையை வாங்க முற்பட....அதை அவனிடம் கொடுக்காது,



"இல்லை சார்....நான் கிளம்பறேன்.....!லேட் ஆகிடும்....",என்று தயங்க,



"லேட்டெல்லாம் ஆகாது....!ஜஸ்ட் ஒன் கப் ஆஃப் காபி தான....?",அவன் விடாமல் வற்புறுத்தினான்.



'அவனுடன் சிறிது நேரம் செலவழிக்கலாம்....!',என்று அவள் மனதில் தோன்றிய ஆசையை....'யாரேனும் பார்த்து விட்டால் வம்பு....',என்ற பயம் எழுந்து தடுத்தது.



"வேண்டாம் சார்....!தெரிஞ்சவங்க பார்த்தால்....தப்பா நினைச்சுக்குவாங்க....!",



"அதுதான் உன் பயமா....?அப்படின்னா....ட்ரைவ் இன் ஹோட்டலுக்கு போகலாம்...!",என்று அவன் ஐடியா சொல்ல,



"ஏன்....?அங்க போனா மட்டும் மாட்டிக்க மாட்டோமா....?",என்று அவள் எதிர்க் கேள்வி கேட்டாள்.



காதல் வந்து விட்டால் மட்டும்தான்....இந்தக் கள்ளத்தனமும்....திருட்டுத்தனமும் வந்து ஒட்டிக் கொள்ளும்....!அவள்....அவளையும் அறியாமல்,'மாட்டிக் கொள்ள மாட்டோமா....?',என்று கேட்க,அவன்....அவனையும் அறியாமல்....அவளுக்கு கள்ளத்தனம் கற்றுக் கொடுத்தான்.



"ம்ஹீம்.....!அந்த ஹோட்டல்ல நாம காருக்குள்ளேயே இருந்துக்கலாம்.....!நம்ம இருக்கற இடத்துக்கு....ஆர்டர் பண்ண .ஃபுட் வரும்....!",என்று அவன் கூற....அவளும் அரை மனதுடன் சம்மதித்தாள்.



அவன் மீண்டும் அவள் கையில் இருந்த பையை வாங்க வர....அவள்,"வேண்டாம் சார்....!நானே கொண்டு வர்றேன்....!",என்று மறுக்க,



"பரவாயில்ல....கொடு....!நீதான் தூக்க முடியாம....தூக்கிட்டு வர்றியே....!",என்றபடி விடாப்பிடியாய் வாங்கிக் கொண்டான்.



தன் கையிலிருந்த இரு பைகளையும் காரின் பின் சீட்டில் வைத்தவன்....முன் பக்க கதவை சுமித்ராவிற்காக திறந்து விட்டான்.



கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.உள்ளே மனதை மயக்கும் மெல்லிய இசை ஓடிக் கொண்டிருந்தது.



" ரோஜா ஒன்று
முத்தம் கேட்கும் நேரம்....!
வானும் மண்ணும் ஒன்றாய்
இங்கு சேரும்....!
மயக்கத்தில் தோய்ந்து....
மடியின் மீது சாய்ந்து....!"


என்று பாடல் ஓடிக் கொண்டிருக்க....பாடலுக்கேற்றவாறு மெலிதாக விசிலடித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கெளதம்.



"நைஸ் சாங் ல...?",அவன் திடீரென கேட்கவும்,



"ம்ம்...ஆமா....!",என்று தயங்கியவள் பிறகு,"ரொம்ப அமைதியான பாடல்....!",என்றாள் ரசனையுடன்.



"இளையராஜா மியூசிக் பிடிக்குமா...?",



"என்ன கேள்வி இது....?இசைஞானியை பிடிக்காதவங்க யாரவது இருப்பாங்களா....?",



"உண்மைதான்....!அவருடைய பாட்டுல ஒரு அமைதி இருக்கும்....மென்மை இருக்கும்....!",என்று அவன் கூற....அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் ஒற்றுமையை நினைத்து வியந்தாள்.



"ம்....நானும் அதைத்தான் நினைப்பேன்....!அவரு பாட்டுல இருக்கற மென்மை....இந்தக் காலத்து பாட்டுல இருக்கறது இல்ல....!",அவள் கூறி முடிக்கவும்....ஹோட்டல் வரவும் சரியாக இருந்தது.



உள்ளே சென்று ஒரு இடத்தில் காரை நிறுத்தவும்....ஆர்டர் எடுப்பதற்காக சர்வர் வந்தான்.



"உனக்கு என்ன வேணும்....?",அவளிடம் கேட்க,



"காபி மட்டும் போதும்....",என்றாள்.



"கோல்ட் காபி ட்ரை பண்ணிப் பாரு....இங்க சூப்பரா இருக்கும்....!",என்றவன் சர்வரிடம் திரும்பி,



"கோல்ட் காஃபி அண்ட் ஃபிரென்ச் ஃப்ரைஸ்....ரெண்டு கொண்டு வாங்க....!",என்றான்.



"பிடிச்சிருக்கா....?",அவன் ஆழ்ந்த குரலில் கேட்கவும்....திடுக்கிட்டுத் திரும்பியவள்,



"எ....எதை....?",என்று தடுமாறினாள்.



"இந்த இடத்தைத்தான் கேட்டேன்....!ஏன்....?நீ என்னன்னு நினைச்ச....?",குறும்புடன் அவன் வினவ,



"நா...நான் எதையும் நினைக்கலையே.....",சொல்வதற்குள்ளேயே அவளுக்கு முகம் சிவந்து போனது.



"பொய் சொல்ற....!நீ....பொய் சொல்றேன்னு உன் சிவந்த முகமே காட்டிக் கொடுக்குது....!",செந்தாமரையாய் விகசித்திருந்த அவள் முகத்தையே ரசனையாய் பார்த்தபடி அவன் கூற....'என்ன கூறுவது....?' என்று அவள் விழித்துக் கொண்டிருக்கும் போதே....சர்வர் உணவைக் கொண்டு வந்தான்.



அவள் பக்கம் ஒரு தட்டை நகர்த்தியவன்.....தன் கையில் இருந்த கோல்ட் காஃபியை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தான்.



"உங்களுக்கு காஃபின்னா ரொம்ப பிடிக்குமா....?",அவள் கேட்க,



"ம்....பிடிக்கும்....!ஏன் கேட்கற...?",



"அன்னைக்கு வேலை செய்யும் போது அடிக்கடி காஃபி குடிச்சீங்க....இப்பவும் ஆசையா குடிக்கறீங்களேன்னு கேட்டேன்....",



"ஹ்ம்ம்...அப்படியே பழகிடுச்சு.....!",



"ஆனால்....அதிகமாவும் காஃபி குடிக்க கூடாது....!உடம்புக்கு கெடுதல்...!",



"உண்மைதான்....!பழக்கத்தை மாத்திக்க முடியல....அம்மா இருந்த வரைக்கும்....அடிக்கடி காஃபி குடிச்சா திட்டுவாங்க....இப்ப அவங்களும் இல்ல....!",வருத்தத்துடன் தன் மனதில் இருந்ததைக் கூறினான்.



"டோன்ட் வொர்ரி சார்....!தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்லுவாங்க....கூடிய சீக்கிரமே....உங்களுக்குன்னு ஒரு மனைவி வந்திட்டா....அவங்க எல்லாத்தையும் பார்த்துக்குங்க....!",இதைக் கூறும் போதே அவளுக்கு மனம் வலிப்பது போன்று இருந்தது.ஏனோ....வேறு யாரோ ஒரு பெண்ணை அவனுக்கு மனைவியாக நினைக்கும் போதே....அவள் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் இருந்தது.



அவளையே ஒரு கணம் அமைதியாகப் பார்த்தவன்,"ஹ்ம்ம்....பார்க்கலாம்....!",என்றான் ஆழ்ந்த குரலில்.



இருவரும் சாப்பிட்டு முடிக்கவும்,"சுமித்ரா....!இந்த ஹோட்டலுக்குப் பின்னாடி ஒரு பார்க் இருக்கு....!ரொம்ப அழகா மெயின்டெயின் பண்ணியிருப்பாங்க....அங்கே போகலாமா....?",அவன் குரலில் இருந்த ஆர்வத்தைப் பார்த்தவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.



"ஒகே....போகலாம்....!",எனவும் இருவரும் காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.



புல் தரை சீராக வெட்டப்பட்டு....ஆங்காங்கு வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குமாறு செடி அமைக்கப்பட்டு மிக அழகாக இருந்தது அந்த பார்க்.உள்ளே நுழைந்ததுமே....சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோதியது.



"வாவ்....!உண்மையிலேயே சூப்பரா இருக்கு சார்.....!பிறந்ததுல இருந்து சென்னையில தான் இருக்கேன்...இதுவரைக்கும் இங்கே வந்ததில்லை....ரியலி சூப்பர் பிளேஸ்....!",



"ஹ்ம்ம்....இன்னும் ஈவ்னிங் டைம்ல நிறைய குழந்தைங்க விளையாட வருவாங்க....பார்க்கறதுக்கே அழகா இருக்கும்....!",



இருவரும் பேசியபடி நடந்து செல்ல....எதிரே ஒரு இளைஞர் பட்டாளம் வந்தது.அதில் ஒருவன் சுமித்ராவை இடிப்பது போல் வர....அவள் அதைக் கவனிக்கவில்லை.ஆனால்....கெளதம் கவனித்து விட்டான்.இயல்பாக அவன் கை உயர்ந்து....அவள் தோளைப் பற்றி அவளைத் தள்ளி நிறுத்தியது.



இதற்குள் அவர்களை கடந்து சென்று விட்ட அந்தப் பட்டாளம் இவர்களைத் திரும்பிப் பார்த்து....தங்களுக்குள் எதையோ பேசி சிரித்தபடி சென்றது.



"இடியட்ஸ்....!இதுக்குன்னே வருவானுக....!",என்று கெளதம் பல்லைக் கடிக்க....அவள் 'என்ன பேசுவது....?' என்று தெரியாமல் விழித்தாள்.



"சார்....கிளம்பலாமா....?லேட் ஆகிடுச்சு....",அவள் மெதுவாகக் கேட்டாள்.



"ம்....கிளம்பலாம்....அதுக்கு முன்னாடி....நீ இப்படி என்னை 'சார்'ன்னு கூப்பிடறதை நிறுத்து....!",



"இல்ல....அது நல்லா இருக்காது சார்....!ஆபிஸ்ல எல்லாத்துக்கும் முன்னாடி நான் உங்களை பேர் சொல்லிக் கூப்பிடறது....சரியா வராது....!",



"ஒகே...ஆபிஸ்ல கூப்பிட வேண்டாம்....!வெளியே இருக்கும் போது 'கெளதம்'ன்னு கூப்பிடலாமே.....!",



"ம்ஹீம்....!நான் எப்படி உங்களை 'கெளதம்' ன்னு கூப்பிடறது....?",அவள் தலையை ஆட்ட....அவள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கியும் சேர்ந்து ஆடியது.



"இப்ப கூப்பிடயே....அதே மாதிரிதான்....!",அவன் சொன்ன பிறகுதான் அவன் பெயரைக் கூறியது அவளுக்கு உரைத்தது.



தன் நாக்கை கடித்துக் கொண்டவள்,"அது....ஏதோ எதேச்சையா வந்துடுச்சு....!என்னால அப்படி கூப்பிட முடியாது சார்....!",அவள் மறுத்தாள்.



"எப்படி.....?",



"அதுதான்....கௌ....சார்.....!",என்றபடி அவனைப் போலியாய் முறைத்தவள், "என்ன....?போட்டு வாங்கறீங்களா....?",அழகாக புருவத்தை சுருக்கியபடி அவள் சிணுங்க....அவன் மயங்கித்தான் போனான்.



"ஹா...ஹா...!மூணே எழுத்து....!கௌ....த....ம்....அதை உன்னால சொல்ல முடியலையா....?",அவன் சிரிக்க,



"சார்....ப்ளீஸ்....!என்னால முடியாது....!",அவள் மறுக்கவும் அதற்கு மேல் அவனும் அவளை வற்புறுத்தவில்லை.



இருவரும் காரில் திரும்பும் போது பல விஷயங்களைப் பற்றி பேசியபடி வந்தனர்.இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய நெருக்கம் இழையோடியது.



பஸ் ஸ்டாப் வரவும்,"சார்....!நான் இங்கேயே இறங்கிக்கிறேன்....காரை நிறுத்துங்க....!",என்க,



"உன் வீட்டு அட்ரஸ் சொல்லு....நானே ட்ராப் பண்ணிடறேன்....!",காரின் வேகத்தைக் குறைத்தபடி கேட்டான்.



"ஐயோ....வேண்டாம்....!வீட்டுக்கெல்லாம் வேண்டாம்....எங்க அப்பா மட்டும் பார்த்தால்....அவ்வளவுதான்....!",என்று பதற,



"ஹே....எதுக்கு இப்படி பதட்டப்படற....?அவங்க ஏதாவது கேட்டால்....நான் பார்த்துக்கிறேன்....!",என்று சமாதானப்படுத்தினான்.



"வேற வினையே வேணாம்....!எங்க அப்பாவை பத்தி உங்களுக்குத் தெரியாது....!உங்களோட நான் கார்ல போய் இறங்கினேன்னு வைச்சுக்கோங்க....என்னை வெட்டியே போட்டுருவாரு....!",



"அவ்வளவு கோபக்காரரா....?",அவன் பாட்டுக்கு நிறுத்தாமல் காரை ஓட்டிக் கொண்டே பேச்சை வளர்க்க,



"ஆமாம்....காரை நிறுத்துங்க....!பஸ் ஸ்டாப் தாண்டி போய்ட்டு இருக்கோம்....",என்று கத்த,



"சரி....சரி....!கத்தாதே....!நிறுத்தறேன்....!",அவளுடைய கத்தலில் யூ டர்ன் அடித்துக் காரைத் திருப்பி நிறுத்தினான்.



"ஒகே சார்....பை....!நான் வர்றேன்....!",



"ஹ்ம்ம்....பை....!ஆபிஸ்ல பார்க்கலாம்....!",என்று கையசைத்தான்.

........................................................................................



அன்று இரவு....படுக்கையில் படுத்தபடி.....விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த சுமித்ராவின் மனம் முழுவதும் கௌதமே நிறைந்திருந்தான்.'ஒரு கையால் காரை ஓட்டியபடி....மறு கையால் தன் முடியை கோதிக் கொண்ட கெளதம்....!தன்னை வற்புறுத்தி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற கெளதம்....!அந்நிய ஆடவனின் மோதலில் இருந்து தன்னை விலக்கி நிறுத்திய கெளதம்....!' என கௌதமின் முகம் மட்டுமே....அவள் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.



என்னதான் மனதை அதட்டி அடக்கி வைத்தாலும்....அது காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய்....அவனையே சுற்றிய வந்தது. தன் இதயம் என்னும் வீணையில்....அவன் பெயரே ராகமாய் இசைத்துக் கொண்டிருப்பதை அவள் அறிந்து கொண்டாள்.இதுவரை....யாரும் தட்டாத தன் மனக்கதவை....அவன் தட்டி விட்டு உள்ளே நுழைந்துவிட்டான் என்பது புரிந்தது.



அவள் மனம் என்னும் வீட்டில்....அவன் உரிமையாய்....அழுத்தமாய் அமர்ந்து விட்டான்.அவள்....அமர வைத்து விட்டாள்.



'முதல்ல இருந்தே அவரு கோபப்படும் போதெல்லாம்....நான் அமைதியா பொறுத்துப் போனதுக்கு காரணம்....அவர் மேல இருந்த காதல்தான்....!அவர் என்னைப் பத்திக் கேட்கும் போது....தயக்கமில்லாம எல்லாத்தையும் சொன்னேனே....!இன்னைக்கு ஹோட்டலுக்கு கூப்பிடும் போது கூட....பெருசா மறுக்காம...அவர் கூட போயிட்டேனே.....!முதல்ல இருந்தே....அவர் என் மனசுக்கு நெருக்கமா இருந்திருக்காரு....நான்தான் அதை உணரல....!',முதன் முதலில் தன் மனதில் அரும்பியிருந்த காதலை எண்ணி....எண்ணி....மகிழ்ந்து கொண்டிருந்தாள்.



புதிதாக தன் மனதில் மொட்டு விட்டு....மலர்ந்து....மணம் பரப்பிக் கொண்டிருந்த காதலின் சுகந்தத்தில் முகிழ்த்திருந்தவள்....திடீரென்று....பூச்சி கடித்தது போல் விசுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.



காதலன்....காதல் ஊர்வலம் நடத்திய அவளது மனதில்....இப்பொழுது....அவள் தந்தையின் கோப முகம் தோன்றியது.



'ஐயோ....!கடவுளே.....!இதை எப்படி மறந்தேன்....?அப்பாவுக்கு மட்டும் தெரிந்தால்....என்னைக் கொன்னு போட்டுருவாரு....அதோட....அவரையும் ஏதாவது செய்யத் தயங்க மாட்டாரு....இல்லை....!இது நடக்க கூடாது.....!',என மனதிற்குள் பதறினாள்.



அவர்களது உறவுக்காரப் பெண் ஒருத்தி வேற்று ஜாதிப் பையனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள்.இவளது சொந்த பந்தங்கள் அனைவரும் கூடி....அந்தப் பையனிடமிருந்து பெண்ணைப் பிரித்தும் இல்லாமல்....அவனை ஆள் வைத்து அடித்துப் போட்டு விட்டார்கள்.அவன் சுயநினைவே இல்லாமல்....தற்போது நடைபிணமாக வாழ்வது அவளது நினைவுக்கு வந்தது.



'இல்ல....அப்படி ஒரு நிலைமை என் கௌதமுக்கு வரக் கூடாது....நான் வர விட மாட்டேன்....இந்த உணர்வுகளை வளர விடக் கூடாது....என் காதல் சரியானது இல்ல....என் காதல் அவரை வாழ விடாது....!',என மனதுக்குள் முடிவெடுத்தவள்....தன் முதல் காதலை மனதின் ஆழத்தில் புதைத்தாள்.அழகிய சித்திரமாய் சற்று முன் தன் மனதில் வரைந்து வைத்திருந்த....அவன் உருவத்தை....இதயம் வலிக்க....வலிக்க....அழிக்க நினைத்தாள்.



எவ்வளவுதான் உலகம் நாகரீகத்தில் முன்னேறி இருந்தாலும்....இது போன்ற ஜாதி வெறிகள் இருக்கத்தான் செய்கின்றன.காதல் திருமணத்திற்கான எதிர்ப்புகள் இன்னும் பல குடும்பங்களில் இருந்து கிளம்பத்தான் செய்கிறது.....!சுமித்ராவின் குடும்பமும் அப்படிப்பட்டதுதான்.பணம்...காசை விட....ஏன் குணத்தை விடவே....ஜாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.



இப்படிப்பட்டக் குடும்பத்தில் பிறந்தவளுக்கு வந்த காதலை....என்னவென்று சொல்வது....?விதியின் சதி என்றா....?இல்லை....காதலின் விளையாட்டு என்றா....?



தன் முதல் காதலுக்கு சமாதி கட்ட வேண்டி வந்த தன் நிலைமையை எண்ணி....இரவு முழுவதும் கண்ணீரால் தலையணையை நனைத்தாள்.அந்தக் காதலுக்கும்....கண்ணீருக்கும் உரியவனோ....அன்று....சுமித்ராவுடன் செலவிட்ட நேரங்களை எண்ணி மனதுக்குள் சுகித்தபடி.....சுகமாக உறங்கிப் போனான்....!



காலையில் கண் விழித்த சுமித்ராவிற்கு கண்ணெல்லாம் தீயாய் எரிந்தது.இரவு முழுவதும் தூங்காததால் தலை 'விண்'னென்று தெறித்தது.அவள் அம்மா கூட 'என்ன...?ஏது....?' என்று விசாரித்தார்.அவரிடம் எதையோ கூறி சமாளித்தவள்....ஒருவாறாக ஆபிஸ் கிளம்பி வந்துவிட்டாள்.



ஆபிசில் தன் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.கௌதமை சந்திப்பதற்கே பயந்தாள்.'எங்கே தன் முகம் எதையாவது வெளிக்காட்டி விடுமோ...?',என்ற அச்சம் எழுந்தது.



மனம் முழுக்க காதலை சுமந்து கொண்டு....அவன் முன்பு சாதாரணமாக நடமாட வேண்டும் என்ற நினைப்பே.....அவளுக்கு வேதனையைத் தந்தது.



கண்களில் மீண்டும் கண்ணீர் அணை உடைக்க காத்திருக்க....தன்னை நோக்கி நித்திலா வருவது தெரியவும்....அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.



"ஹாய் சுமி....!குட் மார்னிங்....!",அன்று பூத்த மலரைப் போல் வந்து நின்றாள் நித்திலா.



"குட் மார்னிங்....!",இரவு முழுவதும் அழுததில் சுமித்ராவின் குரலே மாறியிருந்தது.



"என்னடி....?குரல் ஒரு மாதிரியிருக்கு....சளி பிடிச்சிருக்கா....?",



"ம்ம்...ஆமா....சரி...!அதை விடு....!நேத்து சண்டே ஊருக்குப் போனயா....?",என்று அவள் முயன்று புன்னகைத்தபடி கேட்க,



"ஒரு நாள் லீவ்ல எப்படி டி ஊருக்குப் போய்ட்டு வர முடியும்....?அடுத்த வாரம் தான் போகணும்....!உனக்கு என்ன ஆச்சு....?ஏன் கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு....?",அக்கறையுடன் நித்திலா விசாரிக்க,



"அது....காய்ச்சல் வர மாதிரி இருக்கு....அதனாலேயே இருக்கும்....!",



"ஓ....ரொம்ப முடியலைன்னா....லீவ் போட்டுட்டு வீட்டுக்குப் போ டி....உடம்பு சரியில்லாம உட்கார்ந்திருக்காத....!",என்று தோழிக்கு அறிவுறுத்திக் கொண்டு இருந்தவள்....இவளைப் பார்த்தபடியே ஆதித்யன் தனது அறைக்குள் நுழையவும்,"சரி டி....உடம்பை பார்த்துக்கோ.....!அவரு வந்துட்டாரு.....!",என்று அவசர அவசரமாக கூறி விட்டு ஓடினாள்.



"குட் மார்னிங் சார்.....!",என்றபடியே தன் இடத்திற்கு சென்று சிஸ்டமை ஆன் செய்தாள்.



"தினமும் உன் பிரெண்ட் கூட அரட்டை அடிக்கலைன்னா....உனக்குப் பொழுதே விடியாதா....?",என்று கிண்டலடிக்க,



"ம்ஹீம்.....விடியாது.....!",அவள் வம்பாகத் தலையாட்டினாள்.



"தினமும் உன்னைப் பார்க்கறதுக்காக....ஆசையா....உன் மாமா ஓடி வர்றானே.....அவனைக் கவனிக்கலாம்ன்னு இல்ல....எப்ப பாரு உன் பிரெண்ட் கூட பேச்சுதான்....!நான் வந்து ஒரு பார்வை பார்த்தாதான்....கேபினுக்கு ஓடி வர்றது....!",

"மாமா வா...?அது யாரு....?",

"என்னைத் தவிர வேற யாரு உனக்கு மாமாவா இருக்க முடியும்.....?",அவன் உறுதியாகக் கூற...ஏனோ அவனை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது நித்திலாவிற்கு.



"ஏன்....?வேற யாரும் எனக்கு மாமாவா இருக்க முடியாதா....?",



"முடியாது....!",



"இல்லையே....!",



"என்ன....இல்லையே....?",



"எனக்கு நிறைய மாமா பசங்க....அத்தைப் பசங்க இருக்காங்க....அவங்க எல்லாரும் எனக்கு 'மாமா' முறைதான் ஆகணும்....வருண் மாமா....பரணி மாமா....பிரபு மாமா....அப்படின்னு நிறையப் பேர் இருக்காங்க.....!",கண்களை அகல விரித்துக் கதை போல் சொல்லிக் கொண்டிருந்தாள் நித்திலா.



"இருக்கலாம்.....!ஆனால்....அதுல யாருமே எனக்கு சமமாக முடியாது.....!",தோளைக் குலுக்கியபடி அசால்ட்டாகக் கூறியவனைப் பார்த்தவளுக்கு எரிச்சலாக வந்தது.



'என்ன திமிர்....!இருடா....உன் நினைப்புக்கு ஆப்பு வைக்கிறேன்....!',என்று மனதிற்குள் கறுவியவள்....வெளியே சிரித்தபடி,



"அதுதான் இல்லையே....!அதிலேயும் எங்க வருண் மாமா இருக்கிறாங்க பாருங்க....அவ்வளவு அழகு....!உங்களை விட வெள்ளையா இருப்பாங்க....இங்கேதான் சென்னையில ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றாரு.....!இருங்க....என்கிட்ட அவரு ஃபோட்டோ இருக்கு....காண்பிக்கிறேன்....!",என்றபடி மொபைலைத் தூக்கிக் கொண்டு அவனருகே வந்தாள்.



அவன் அவளைப் பார்க்காமல்...எதிரே இருந்த சுவரை வெறித்தபடி கடுப்புடன் அமர்ந்திருக்கவும்....அவனருகில் சென்று வேண்டுமென்றே தன் மொபைலை அவன் முகத்தின் முன் நீட்டினாள்.



அதோடும் வாயை வைத்துக் கொண்டு சும்மாவும் இருக்காமல்,"பாருங்க....!எவ்வளவு ஹேண்ட்ஸம்ல.....?அதிலேயும் உங்கள விட கலர்ல....?",என்று ரசித்துச் சொல்ல,



இழுத்துப் பிடித்திருந்த பொறுமை ஜெட் வேகத்தில் எகிற....அந்த மொபைலை அவளிடம் இருந்து பிடுங்கி ஏறியப் போனான்.சட்டென்று அவன் கையில் இருந்து தன் மொபைலை பறித்துக் கொண்டவள்,



"புது மொபைல் சார்.....! நீங்க பாட்டுக்கு தூக்கி எறிஞ்சு உடைச்சிட்டா....எங்க அப்பாவுக்கு யார் பதில் சொல்றது....?இல்ல....இதை உடைச்சிட்டா....உங்கள விட...எங்க வருண் மாமாதான் கலர்ங்கிறது மாறிடுமா...என்ன....?",ஆதித்யன் சற்று மாநிறமாகத்தான் இருப்பான்....அதை வைத்து அவனை மேலும் மேலும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.



அந்த ஃபோட்டோவில் இருந்தவன் ஆதித்யனை விட கலராகத்தான் இருந்தான்.ஆனால்....ஆதித்யனிடம் இருந்த கம்பீரம் அவன் முகத்தில் அவ்வளவாக இல்லை. இதை நித்திலாவும் உணர்ந்துதான் இருந்தாள்.இருந்தும்....அவனைக் கடுப்பேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.



"வேண்டாம் டி....!என் பொறுமையை ரொம்பவும் சோதிக்கற....!



"ஏன்....?உண்மையை சொன்னா கசக்குதாக்கும்....!",அவள் விடாமல் சீண்டிக் கொண்டிருந்தாள்.



அவளையே சில கணம் இமைக்காது பார்த்தவன்,"இருடி....!ஒருநாள் இல்ல ஒருநாள் என்கிட்ட வசமா மாட்டுவ....அப்ப....வச்சுக்கிறேன் உன்னை....",பல்லைக் கடித்தபடி அவன் கூற,



"பார்க்கலாம்.....!",அசைட்டையாய் உதட்டைச் சுழித்தாள் அவள்.



அவன் பார்வை அவள் இதழ்களில் நிலைத்தது."எனக்கு முன்னாடி இப்படி உதட்டை சுழிச்சுட்டே இரு....ஒருநாள் இல்ல...ஒருநாள் அதை என்ன பண்ணறேன்னு பாரு....!அப்புறம்...என்னை குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை....!",அவள் இதழ்களையே வெறித்தபடி அவன் கூற....அவள் அவனை நோக்கி ஒரு தீப்பார்வையை வீசி விட்டு நகர்ந்தாள்.



அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 18 :



சிஸ்டமை பார்த்தபடி வேலை செய்து கொண்டிருந்த சுமித்ராவை....அவளது டேபிளில் இருந்த போன் அலறி அவள் சிந்தனையை கலைத்தது.



"சுமித்ரா....!கம் டூ மை ரூம்....!",கௌதம்தான் அழைத்திருந்தான்.



தன் முன் வந்து நின்றவளைப் பார்த்தவுடனேயே....அவள் முகம் சோர்ந்து கிடந்ததை தெரிந்து கொண்டான்.



"சுமித்ரா....!ஆர் யூ ஆல்ரைட்....?ஏன் முகம் டல்லா தெரியுது.....?",அக்கறையாக அவன் விசாரிக்க....தன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரை அடக்க பெரும்பாடுபட்டாள் சுமித்ரா.



என்னதான் மனதிற்குள்,'அவனை மறந்து விடு....!',என உருப் போட்டுக் கொண்டிருந்தாலும்....தன் முன் அமர்ந்திருப்பவனைப் பார்க்கும் போது அவளையும் அறியாமல்....காதல் பெருகத்தான் செய்தது.இருந்தும்....தன் குடும்பத்தால் அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற நினைப்பில்....தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள்.



"காய்ச்சல் அடிக்கற மாதிரி இருக்குது சார்....!அதனாலேயே இருக்கும்....!",என்று கூற,



"வாட்....?உடம்பு சரியில்லைன்னா எதுக்கு ஆபிஸ்க்கு வர்ற....?லீவ் போட்டுட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே....?சரி....இப்ப கிளம்பு....!நான் லீவ் சொல்லிக்கிறேன்....",



"இல்ல சார்....வேண்டாம்....!ஐ கேன் மேனேஜ்.....",



"நோ சுமித்ரா....!நீ கிளம்பு....!",அவன் உறுதியாக கூறிவிட....இருக்கும் மனநிலையில் அவளுக்கும் தனிமை தேவைப்பட்டது.எனவே....'சரி' என்று விட்டாள்.



"நான் வேணா....உன்னை டிராப் பண்ணட்டுமா....?வீடு வரைக்கும் வரலை....!உங்க வீட்டுக்குக் கொஞ்சம் முன்னாடியே இறக்கி விட்டுர்றேன்....",



அந்த நிலையிலும் அவள் அவசர அவசரமாக மறுத்தாள்."இல்லல்ல....வேண்டாம்....!நானே போய்க்கறேன் சார்....!",



"உன் முகமே சரியில்ல....ரொம்ப சோர்வா தெரியற....உன்னைத் தனியா அனுப்பி வைச்சு....என்ன பண்றது....?கமான்....!நானே ட்ராப் பண்ணிடறேன்....",என்றபடி அவன் எழ...அவள் உறுதியாக மறுத்து விட்டாள்.அப்படி இருந்தும்....அவன்....அவளைத் தனியாக அனுப்பவில்லை.ஒரு டாக்சியை அழைத்து அதில்தான் அவளை அனுப்பி வைத்தான்.



டாக்சியில் சென்று கொண்டிருந்தவளுக்கு....நித்திலாவிடம் கூறாதது ஞாபகம் வர...உடனே அவளுக்கு அழைத்தாள்.



"என்னடி...?இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க....?",



"நித்தி....!நான் உடம்புக்கு முடியலைன்னு லீவ் போட்டுட்டேன்....இப்ப வீட்டுக்குப் போய்ட்டு இருக்கேன் டி....உன்கிட்ட சொல்றதுக்குத்தான் போன் பண்ணினேன்....",



"ஒகே....ஒகே டி....!டேப்லெட் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு....!",



"ஹ்ம்ம்....அப்புறம் நித்தி....!இன்னைக்குத்தான பாலாவுக்கு பிறந்தநாள்....?நான் மறந்தே போய்ட்டேன்....நீ விஷ் பண்ணிட்டயா....?",



"ஓ காட்....!நீ சொல்லித்தான் எனக்கும் ஞாபகம் வருது...நான் பேசிக்கிறேன்....இன்னைக்கு ரெஸ்ட்டாரண்டுக்கு போலாம்ன்னு ப்ளான் போட்டிருந்தோம்ல....சுத்தமா மறந்துட்டேன்.....!ஆமா...நீ இன்னைக்கு லீவ்ன்னு போன வாரம் சொல்லிட்டு இருந்தல்ல....?",



"ஆமா டி....!ஃபேமிலியோட கோவிலுக்குப் போகலாம்ன்னு இருந்தோம்....திடீர்ன்னு கேன்சல் ஆகிடுச்சு....அதனாலதான் ஆபிஸ்க்கு வந்தேன்....பட்....லீவ் போடற மாதிரியே ஆகிடுச்சு....!",



"ஒகே டி....! பை.....!டேக் கேர்.....!",என்றபடி போனை அணைத்தாள்.நல்லவேளை....இவள் போன் பேசும் போது ஆதித்யன் அறையில் இல்லை.....அதனால் அவள் தப்பித்தாள்.இல்லையென்றால்....'ஆபீஸ் டைம்ல போன் பேசக் கூடாது....',என்று அதற்கு ஒரு ஆடு ஆடியிருப்பான்.



அதன் பிறகு....பாலாவிற்கு வாழ்த்து சொல்வதற்காக அழைத்தால்....அவன் எடுக்கவில்லை.ஒரு மெசேஜ் மட்டும் வந்தது.தான் மீட்டிங்கில் இருப்பதாகவும்....மதியம் ஒரு மணிக்கு அவனே வந்து....ரெஸ்ட்டாரண்டிற்கு அழைத்துச் செல்வதாக அனுப்பியிருந்தான்.



'ஓகே....!',என்று பதில் அனுப்பியவளுக்கு மனதில் குறுகுறுப்பாக இருந்தது.அன்று....'இனி...நீ பாலாவிடம் பேசக் கூடாது....!',என்று ஆதித்யன் இட்டக் கட்டளையும்....இதயத்தைக் கிழிக்கும் அவன் பார்வையும் நினைவுக்கு வந்தது.அலட்சியமாக அதை ஒதுக்கித் தள்ளியவள்....வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.



மணி 12.30 ஆகவும்....இப்பொழுது கிளம்பினால்தான் பாலாவிற்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிவிட்டு செல்வதற்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது.ஆனால்....இவனிடம் பெர்மிஷன் கேட்க வேண்டுமே....!அவனைத் திரும்பிப் பார்த்தாள்....அவன் மும்முரமாக ஏதோ ஒரு பைலை பார்த்துக் கொண்டிருந்தான்.



தயங்கித் தயங்கி "சார்....!",என்று அழைத்தாள்.



பார்த்துக் கொண்டிருந்த பைலில் இருந்து கண்ணை எடுக்காமலேயே,"என்ன....?",என்றான்.



"நான் லன்ச்சுக்கு கிளம்பட்டா.....?",என்றாள் தயங்கியவாறு.



தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தவன்,"மணி 12.30 தானே ஆகுது....?",என்றான்.



"கொஞ்சம் பர்சனல் வொர்க் இருக்குது....இன்னைக்கு மட்டும்தான்....ப்ளீஸ் சார்....!பெர்மிஷன் கொடுங்க....!",



அவளைப் பார்த்தவன்,"ஒகே....போய்ட்டு வா....!பட்....இந்த வெயில்ல எங்க போற....?",என்று கேள்வியெழுப்ப,



"இங்கே....பக்கத்துலதான்.....!",என்று முணுமுணுத்தவள்....அவனிடம் சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டாள்..



பாலாவிற்கு பரிசளிப்பதற்காக....மூன்று குழந்தைகள் தவழ்ந்து கொண்டு இருக்கும் படியாக....ஒரு சிலையைத் தேர்வு செய்திருந்தாள்.அதற்கு கீழே 'பிரெண்ட்ஷிப்' என்று எழுதியிருந்தது.கிறிஸ்ட்டலில்....அழகான வண்ணத்தில் கண்ணைக் கவரும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த சிலை.



அதை பேக் செய்து வாங்கியபடி....அலுவலகத்தின் வாசலில் வந்து நிற்கவும்....பைக்கில் பாலா வரவும் சரியாக இருந்தது.



அவனைப் பார்த்து சிரித்தபடியே,"பிறந்த நாள் வாழ்த்துக்கள் பர்த்டே பாய்.....!",என்று வாழ்த்து கூற,



"தேங்க் யூ....!சரி வா.....!வண்டில ஏறு....போகலாம்....!",என்று அவசரப்படுத்தினான் அவன்.



"பைக்லயா....?",என்று அவள் தயங்கவும்,



"பின்னே....நடந்தா போக முடியும்.....?எவ்வளவு வெயிலா இருக்கு பாரு....கமான்....கமான்....!இதுலயே லேட் ஆகிடப் போகுது....",பைக்கின் ஆக்சிலேட்டரை முறுக்கியபடியே அவசரப்படுத்த,



சிறிது தயங்கினாலும்,'சரி....பிரெண்ட்தானே....!',என்ற நினைப்பில் மிகக் கவனமாக இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள்.பாலாவின் மனமோ....ராக்கெட்டில் பறந்து கொண்டிருந்தது.தன் மனதைக் கவர்ந்தவளுடனான பயணத்தை மிகவும் ரசித்தான்.



ரெஸ்ட்டாரண்ட் வாசலில் சென்று வண்டியை நிறுத்திவிட்டு....அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.இருவரும் ஒரு டேபிளில் அமரவும்....பேரர் வந்து உணவு வகைகளை குறிப்பெடுத்துச் சென்றான்.



பட்டர் நாண்....பனீர் பட்டர் மசாலா....கோபி மஞ்சூரியன்....ஃபிரைட் ரைஸ்....பேபிகார்ன் சில்லி....சூப் என பல வகைகள் டேபிளின் மீது பரப்பப்பட்டிருந்தது.நித்திலா நான்-வெஜ் சாப்பிட மாட்டாள் என்பதால்....அவனும் ஆர்டர் செய்து கொள்ளவில்லை.



"பாலா....!உனக்கு வேணும்ன்னா நான்-வெஜ் ஆர்டர் பண்ணிக்கோ....எனக்கு நோ பிராப்ளம்....",என்று கூற,



"இல்ல நித்தி....பிறந்த நாள் அன்னைக்கு வேண்டாம்.....!",என மறுத்து விட்டான்.



"அப்புறம்....பார்த்தே ரொம்ப நாளாச்சு.....?மதியம் லன்ச்சுக்கு கூட வந்து ஜாயின் பண்ணிக்கறது இல்ல....?",நித்திலா சாப்பிட்டுக் கொண்டே வினவ,



"ஹ்ம்ம்....கொஞ்சம் பிஸி நித்தி....!ஒரு புது மெஷின் இன்ஸ்டால் பண்ணுனாங்களா.....அதைக் கவனிக்கறதுலேயே நேரம் ஓடிடுச்சு....",வேண்டிய உணவுத் தட்டை அவள் பக்கமாக நகர்த்தியவாறே கூறினான்.



"வேலை முடிஞ்சுதா....?இல்ல....இன்னும் பிஸிதானா....?",



"இல்லல்ல....ஃபினிஷ்டு....!உன் வொர்க்கெல்லாம் எப்படி போய்ட்டு இருக்குது....?",



"ம்ம்....குட்....!அப்படியே போகுது...!",



இருவரும் பேசியபடியே சாப்பிட்டு முடிக்க....தான் வாங்கி வந்திருந்த கிஃப்ட்டை அவனிடம் நீட்டினாள் நித்திலா.



"மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே....!",என்று வாழ்த்தியபடி கிஃப்ட்டை அவனிடம் நீட்ட,



"ஹோ.....கிஃப்டெல்லாம் வாங்கியிருக்கியா.....!சூப்பர்....!சூப்பர்....!தேங்க் யூ....!",சிரித்தபடியே ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டான் பாலா.



இந்தக் காட்சியை ஒரு ஜோடிக் கண்கள்....அனலுடன் பார்த்துக் கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை..அந்தக் கண்களுக்கு சொந்தக்காரன் வேறு யாருமல்ல....ஆதித்யனேதான்.....!இவர்களுக்கு பின்புறம் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்திருந்தவன்....இவர்கள் வந்ததில் இருந்து நடந்தவை அனைத்தையும் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.நித்திலா கிளம்பிப் போன பிறகு....ஒரு கிளையண்ட்டோடு இந்த ரெஸ்ட்டாரண்டிற்கு சாப்பிட வந்திருந்தான்.



அந்த கிஃப்ட்டை ஆசையாக வாங்கிப் பிரித்துப் பார்த்த பாலாவின் முகம் சட்டென்று கூம்பி போனது.அதிலிருந்த 'பிரெண்ட்ஷிப்' என்ற வார்த்தையைப் பார்த்தவனுக்கு....மனதுக்குள் எதுவோ குத்துவது போல் இருந்தது.'இவள் தன்னை ஒரு நண்பனாக மட்டும்தான் பார்க்கிறாள்....' என்ற உணர்வே அவனுக்கு வேதனையைத் தந்தது.



இப்படி முழுக்க முழுக்க தோழமையோடு மட்டுமே தன்னுடன் பழகுபவளிடம் சென்று,'நான் உன்னைக் காதலிக்கிறேன்....!', என்று சொல்வது தவறாகாதா.....?என்று அவன் மனம் இடித்துரைத்தது.அவள் மனதில் நட்பையும் மீறி தன் முகம் பதியப்பட வேண்டும்....!அதன் பிறகுதான் தன் காதலை சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.



"என்னப்பா....கிஃப்ட் நல்லாயிருக்கா....?உனக்குப் பிடிச்சிருக்கா....?",என்று ஆர்வத்துடன் கேட்டவளிடம்,



"ம்....வெரி நைஸ்....!ரொம்ப அழகா இருக்கு.....",அவன் குரலில் ஏமாற்றத்தின் வலி நன்கு புலப்பட்டது.



ஆனால்....அதைக் கவனிக்கும் மனநிலையில் நித்திலா இல்லை."ஹ்ம்ம்....பின்னே யாருடைய செலெக்க்ஷன்.....!மேடமுடைய செலெக்க்ஷனாச்சே.....!",சிரித்தபடியே நிமிர்ந்தவள்....கண்களில் தீ ஜீவாலை பறக்கத் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த ஆதித்யனைப் பார்த்துவிட்டாள்.



ஒரு கணம் நித்திலாவிற்குள் பயப்பந்து உருண்டோடியது.அதிலும் அவனது இப்பொழுதைய பார்வை....இதுவரை அவள் பார்க்காதது....!அவளிடம் கோபமாகக் கத்தியிருக்கிறான்தான்....!ஆனால்....அப்பொழுதெல்லாம் அவன் கண்களில் தெரியாத ஆத்திரம்....வெறி....இப்பொழுது தெரிந்தது.தனக்கு இரையாக நிர்ணயிக்கப்பட்ட சிறு புள்ளி மானை....சீற்றம் கொண்ட புலி பார்க்குமே ஒரு பார்வை....அந்தப் பார்வை அவன் கண்களில் தெரிந்தது.



இவள் பார்க்கிறாள் என்று தெரிந்தாலும்....அவன் பார்வை இம்மியளவு கூட அவளை விட்டு அகலவில்லை.



எச்சிலைக் கூட்டி விழுங்கியவள்,"சரி பாலா.....!நாம கிளம்பலாமா....?",என்க,



"ம்....லெட்ஸ் கோ....!",என்றபடி அவனும் எழுந்தான்.



வெளியேறும் போது....ஒரு முறை ஆதித்யனைத் திரும்பிப் பார்க்க....அப்பொழுதும் அவனது வெறித்தனமான பார்வை....அவளைத்தான் வெறித்துக் கொண்டிருந்தது.உள்ளுக்குள் பயந்தபடியே பாலாவுடன் சென்றாள்.



இவர்களுக்கு முன்பே ஆதித்யன் அலுவலகத்திற்கு வந்திருந்தான்.இவளுடைய வருகைக்காக காத்திருப்பது போல்....கதவையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.அவள் உள்ளே நுழைந்தது முதல் அவளையேதான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனது பார்வையில் உருவம் தெரியாத பயப்பந்து ஒன்று....வயிற்றிலிருந்து கிளம்பி தொண்டைக் குழியில் வந்து அடைக்க....மெதுவாக நடந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்து சிஸ்டமை ஆன் செய்தாள் நித்திலா..



தனது நாற்காலியை இவள் பக்கம் திருப்பி....மெதுவாக சுழற்றியபடி அதே பார்வையைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.அவன் பார்வையில் இருந்து அவளால் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.திட்டினால் கூட அவனை எதிர்த்து வாதாடலாம்....இப்படியே பார்த்துக் கொண்டிருப்பவனை என்ன செய்வது....?



சில கணம் பொறுத்துப் பார்த்தவள்....அதற்கு மேல் முடியாமல்,"எ...எதுக்கு இப்படி பார்க்கறீங்க....?",என்று கேட்டே விட்டாள்.



அதன் பிறகும் எதுவும் பேசாமல் அவளையே ஆழமாகப் பார்த்தவன்,"ஸோ.....நான் சொன்னதை நீ கேட்கலை....?அப்படித்தானே....?",நிதானமாக....வெகு நிதானமாக கேட்டான்.



அவன் எதைப் பற்றிக் கேட்கிறான் என்பது அவளுக்கும் புரிந்தது.அவனது நிதானமான குரல் அவளைப் பயமுறுத்தினாலும்....தைரியமாகவே,"இங்கே பாருங்க....!அவன் என் பிரெண்ட்.....!நீங்க சொல்றதுக்காக எல்லாம்....என்னால என் பிரெண்ட்ஷிப்பை விட முடியாது....",என்னதான் முயன்றாலும் அவள் குரலில் தெரிந்த தடுமாற்றத்தை அவளால் தடுக்க முடியவில்லை.



அவளையே கூர்மையாக அளவிட்டவன்,"ஒகே....!நான் உன்கிட்ட பொறுமையா சொன்னேன்....நீ கேட்கல....நோ பிராப்ளம்....!இனி இதை எப்படி டீல் பண்ணனும்ன்னு இந்த ஆதித்யனுக்குத் தெரியும்.....!",அமைதியான...அதே சமயம் அழுத்தமான குரலில் கூறியவன் தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.



அவனுடைய இந்த அமைதி....அவளுடைய முதுகுத்தண்டில் ஜில்லிப்பை ஏற்படுத்தியது.புயலுக்கு முன் வருமே ஒரு நிசப்தமான அமைதி....அந்த அமைதி குடி கொண்டிருந்தது ஆதித்யனுடைய முகத்தில்.ஆனால்....அந்த அமைதிக்கு பிறகு வரும் புயலானது....அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு....அந்த இடத்தையே ஆட்டிப் படைத்து விடும்....!



அந்தப் புயல் எப்பொழுது கரையைக் கடக்குமோ....?என்று அவளுக்கு அச்சம் எழத்தான் செய்தது.ஒரு மனது இப்படி நினைக்க....இன்னொரு மனமோ....'இவன் ஏதாவது கோபப்பட்டுக் கத்துவான்....!',என்று எண்ணி வந்தவளுக்கு....அவனுடைய அமைதி....மனதின் ஓரம் சிறு ஏமாற்றத்தை தந்தது.



'தான் என்ன நினைக்கிறோம்...?' என்பதே அவளுக்குப் புரியவில்லை.'தான் பாலாவிடம் பழகுவதைப் பார்த்து ஆதித்யன் பொறாமைப் பட வேண்டும்....!',என்று நினைக்கிறோமா....?இல்லை....அந்தப் பொறாமையின் விளைவாகத் தன் மனதில் எழும் ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை திருட்டுத் தனமாக ரசிக்கிறோமா....?என்று எதையுமே அவளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.



ஆனால்....அவனுடைய ஆழ்கடலின் அமைதி....அவளுக்குள் உதறலைக் கொண்டு வந்தது என்பதுதான் உண்மை....!

..........................................................................................................................................



அன்று நித்திலாவினுடைய அம்மா அப்பாவிற்குத் திருமண நாள்.காலையிலேயே அழைத்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு....சிறிது நேரம் கொஞ்சி விட்டுத்தான் போனை வைத்தாள்.



அலுவலக அறைக்குள் நுழையும் போதே....ஆதித்யன் யாருடனேயோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.அவனுக்கு ஒரு சிறு 'குட் மார்னிங்'கை உரைத்து விட்டு....மெயில்களைப் பார்வையிட ஆரம்பித்தவள் காதில் அவன் பேசியது விழுந்தது.



"சுபம் எலக்ட்ரானிக்ஸ்....?ஆதித்யன் ஹியர்....",என்று இவன் ஆரம்பிக்க எதிர்முனையில் என்ன கூறப்பட்டதோ,இவன்,"கேன் ஐ ஸ்பீக் வித் யுவர் பாஸ் மிஸ்டர்.ராஜசேகர்....?",என்றான்.



"ஹலோ யங் மேன்.....!என்ன திடீர்ன்னு என் பக்கம் காத்து வீசுது....?",ஆர்ப்பாட்டமாய் எதிர் முனையில் பேசியவரின் குரல் நித்திலா வரை எட்டியது.



"ஹாய் அங்கிள்....!எப்படி இருக்கீங்க அண்ட் ஆண்ட்டி எப்படி இருக்காங்க....?எனக்கு உங்ககிட்ட இருந்து ஒரு ஹெல்ப் வேணுமே....?",



"ஆல் ஆர் ஃபைன்.....என்ன ஹெல்ப்னு சொல்லுப்பா....?",



"நம்ம ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிற கம்பெனிக்கு வழக்கமா எவ்ளோ யூனிட்ஸ் ரா மெட்டீரியல்ஸ் அனுப்புவீங்களோ.....அதே அளவு இந்த மாசம் அனுப்ப வேண்டாம்....!அதை விட குறைவா அனுப்புங்க....போதும்.....!",



"ஏன்ப்பா....?அப்படி நான் அனுப்பினா உங்க ப்ரொடக்க்ஷன் குறையாதா....?",



"எனக்கு அதுதானே வேணும்.....!",



"என்னப்பா சொல்ற.....?எனக்குப் புரியல....!",



"அங்கிள்.....!இது என்னுடைய எம்ப்ளாயிஸ்க்கு ஒரு சவால் மாதிரின்னு வைச்சுக்கோங்களே.....!அவங்களுக்கு முன்னாடி பிஸினஸ்ல ஒரு ப்ராப்ளம் இருக்கும் போது.....அதை அவங்க எப்படி சால்வ் பண்றாங்கன்னு நான் பார்க்கணும்....!ஸோ....நான் சொன்னபடி செய்யுங்க.....!",



"ஒகே ப்பா....!நீ எது செய்தாலும் அதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.....நீ சொன்ன மாதிரியே அனுப்பி வைச்சிடறேன்....!",



"தேங்க்ஸ் அங்கிள்....!அண்ட் இன்னொரு விஷயம்....என் எம்ப்ளாயீஸ் யாராவது உங்களுக்கு கால் பண்ணி.....இன்னும் ரா மெட்டீரியல்ஸ் அனுப்ப சொன்னா....'ப்ரஸாஸ் போய்கிட்டு இருக்கு....இன்னும் கொஞ்ச நாள்ல அனுப்பிடறோம்ன்னு' முடிஞ்ச அளவுக்குத் தள்ளிப் போடுங்க....!",



"ம்....புரியுதுப்பா....!நான் பார்த்துக்கிறேன்....!",



போனை அணைத்து விட்டு நித்திலாவைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தான் ஆதித்யன்.அவன் சிரிப்பின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.சற்று முன் நடந்த தொலைபேசி உரையாடலைக் கேட்டாலும்....அதை அவ்வளவு பெரிய விஷயமாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை.



பாலாவுடன் அவளைப் பேச விடாமல் தடுப்பதற்கான முதல் அடியை அவன் எடுத்து வைத்து விட்டான் என்பதை அவள் அறியவில்லை.



வழக்கம் போல் நாட்கள் ஓடிக் கொண்டிருக்க....சுமித்ராவின் விலகலை கெளதம் கண்டு கொண்டான்.இரவில் அவன் அனுப்பும் எந்த மெசேஜ்களுக்கும் அவளிடமிருந்து பதில் வரவில்லை.அலுவலகத்தில் பார்த்தாலும்....சிறு புன்னகையுடன் விலகிச் சென்று விடுவாள்.அதையும் மீறிப் பேசினால்...அது வேலை விஷயமாகத்தான் இருக்கும்.



அவனுக்கு சிறு எரிச்சல் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.'இவளுக்கு என்ன ஆச்சு....?கொஞ்ச நாளா நல்லாப் பழகினா....அப்புறம் திடீர்ன்னு முகத்தை 'உம்'முன்னு வைச்சுக்கிட்டு விலகிப் போறா....',என்று அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது.



ஒருநாள்...பொறுக்க முடியாமல் அவளிடம் கேட்டே விட்டான் கெளதம்.



தன் அறைக்கு ஒரு பைலில் கையெழுத்து வாங்குவதற்காக வந்தவளை நிறுத்தி,"இப்பவெல்லாம் என்கிட்டே இருந்து விலகற மாதிரி இருக்கு....?ஏன் என்கூட சரியா பேச மாட்டேங்கிற....?",தன் கண்களை நேராய் பார்த்துக் கேட்டவனைப் பார்த்துத் திணறினாள் அவள்.

"இல்லையே சார்...!நான் நல்லாதானே பேசறேன்....",அவன் கண்களைப் பார்ப்பதை தவிர்த்தபடி ...சுற்றி இருந்த பொருட்களைப் பார்த்தபடி அவள் கூற,



"சுமித்ரா....!இங்கே பார்....!என் கண்ணைப் பார்த்து பேசு....உண்மையா என்கூட முன்ன மாதிரிதான் பழகறையா....?நான் முன்னாடி வந்தாலே....ஏதோ பேயை பார்த்த மாதிரி ஓடற...?",கோபமாக ஆரம்பித்து நக்கலாக முடித்தான்.



அவன் துருவித் துருவி கேட்க அவளுக்குக் கோபம் வந்தது.'ஆமாடா....!என்னால உன் கண்ணைப் பார்த்து பேச முடியல....எங்கே உன் முகத்தைப் பார்த்தால்...என்னை மீறி ஏதாவது உளறிடுவேனோன்னு பயமா இருக்கு....!',என்று கத்த ஆசை வந்தது.



தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள்,"நான் எப்பவும் போலதான் இருக்கிறேன்....!உங்களுக்குத்தான் வித்தியாசமா தெரியும் போல....!",குரலில் எட்டிப் பார்த்த சிறு எரிச்சலுடன் கூற,



"ம்ஹீம்....!என்கிட்ட எதையோ மறைக்கிற....",புருவம் சுருங்க அவன்...அவளையே ஆராய்ச்சிப் பார்வை பார்க்க,



அவளோ எதையும் கண்டு கொள்ளாமல்,"பைல்ல சைன் போட்டீங்கன்னா...என் வேலை முடியும்...!",என்க,



அவளையே இரு நிமிடம் உற்றுப் பார்த்தவன்....ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி பைலை படிக்க ஆரம்பித்தான்.அதில் கையெழுத்து போட்டபடியே,"ஒகே சுமித்ரா....!இன்னைக்கு ஈவ்னிங் வெளியே போகலாம்....அஞ்சு மணியோட உன் வேலை முடிஞ்சிடும்தானே....?",என்று ஒன்றும் நடக்காததைப் போல வினவ,



"இல்ல சார்....!நான் எங்கேயும் வரல....!",அவள் மறுத்தாள்.



"ஏன்....?",அவளையே கூர்மையாக அளவிட்டது அவனது விழிகள்.



"நான் வரல....அவ்வளவுதான்....!"தன் பதட்டத்தை மறைத்தபடி கூறினாள் அவள்.



"அதுதான் ஏன்னு கேட்கிறேன்....?நீதான சொன்ன 'நான் உங்ககூட நல்லாத்தான் பழகறேன்னு...',அப்புறம் என்ன...இன்னைக்கு வர முடியாதா....?",அவன் குரலில் கோபம் ஏறிக் கொண்டே போனது.



அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளை பலவீனமாக்கிக் கொண்டிருந்தது.'உடனே இங்கிருந்து வெளியேறு....!',என்று மூளை கட்டளையிட....எதுவும் பேசாமல்....அவன் கையெழுத்துப் போட்ட பைலை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதற்காக திரும்பினாள்.



அவளது இந்த செயலில் அவனுக்கு ஆத்திரம் வந்தது.மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய்....இவன் கோபத்தின் உச்சாணியில் சென்று அமர்ந்து கொண்டான்.



"ஏய்...நில்லு....!இங்க ஒருத்தன் பேசிக்கிட்டு இருக்கேன்....நீ பாட்டுக்கு முகத்தை திருப்பிக்கிட்டு போற....!என்னைப் பார்த்தா....உனக்கு எப்படி தெரியுது....?",அவன் உச்சஸ்த்தாயியில் கத்த...தன் காதலை வெளிப்படுத்த முடியாத தன் நிலையை நினைத்து அவளுக்கும் கோபம் வந்தது.



மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தவள்,"இங்கே பாருங்க சார்....!நீங்க கூப்பிட்டா....உங்க கூட வெளியே வரணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல....ஏன்...!விருப்பமும் இல்ல....!போன வாரம் உங்க கூட வந்ததுக்கு காரணம்....நீங்க வற்புறுத்தி கூப்பிட்டீங்க.....அதுவும் இல்லாம....ஒரு மரியாதைக்காகத்தான் மறுக்காம வந்தேன்...!அதைத் தாண்டி நமக்குள்ள எதுவும் இல்ல...!நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணும் கிடையாது....நீங்க கூப்பிட்ட உடனே வர்றதுக்கு....!அதையே ரீசனா வச்சுக்கிட்டு....என்கிட்ட அட்வான்ட்டேஜ் எடுத்துக்கலாம்ன்னு நினைக்காதீங்க....!",இவ்வளவு நாள் அவளுக்குள் நடந்த மனப் போராட்டத்தில் சோர்வுற்றவளாய்....எதை எதையோ உளற ஆரம்பித்தாள்.



தன் வார்த்தைகள் அவனை சீண்டி விட்டுக் கொண்டிருக்கின்றன....என்பதை அறியாமல் தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவள்....அவன் தன் கையை உயர்த்தி 'போதும்' என்று சைகை செய்யவும்தான் நிறுத்தினாள்.அவன் கண்கள் இரண்டும் கோபத்தில்....கோவைப் பழமாய் சிவந்திருந்தன.



அவளைப் பார்த்து 'போதும்' என்பதாய் ஒற்றைக் கையை உயர்த்தியவன்,"என்னைப் பத்தி....இவ்வளவு உயர்வா நினைச்சு வைச்சிருந்ததுக்கு தேங்க்ஸ்....!என்னை கொலைகாரனா மாத்தறதுக்கு முன்னாடி....தயவு செய்து இங்கிருந்து போயிடு.....!",கண்களில் அடிபட்ட வலியுடன் கூறியவனைப் பார்த்தவளுக்கு....நெஞ்சுக்குள் பிசைந்தது.



"இ...இல்ல....",என்று அவள் ஏதோ கூற வர,



"போன்னு சொன்னேன்....!",என்று அவன் கர்ஜிக்க....அவனுடைய கோபத்தில் மிரண்டு போனவளாய் வெளியேறி விட்டாள்.



கண்ணீரை அடக்கிக் கொண்டு வெளியே வந்தவள்....யாரும் அறியாமல் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று கதறிவிட்டாள்.



'கடவுளே....!என்ன காரியம் பண்ணி வைச்சிருக்கிறேன்....யார் யார் மேலேயோ இருக்கற கோபத்தை....இப்படி என் கெளதம் மேல காட்டிட்டு வந்திருக்கிறேனே....!இவ்வளவு நாள் என் கூட பழகினாலும்....எவ்வளவு கண்ணியமா என்கிட்ட நடந்துக்கிட்டாரு....!அவரைப் பார்த்து,'என்கிட்ட அட்வான்ட்டேஜ் எடுத்துக்காதீங்கன்னு' பேசிட்டு வந்திருக்கேனே....!',என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள்.



அதுவும் கடைசியாக அவன் பார்த்த பார்வை....அந்த அடிபட்ட பார்வை...அதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.



'சாரி கெளதம்....!ரியலி வெரி சாரி....!என் சகவாசமே உங்களுக்கு வேண்டாம்....!இந்த கொஞ்ச நாட்களா....நீங்க என்னைப் பார்க்கிற பார்வையில ஒரு உரிமை தெரியுது....!ஒரு அதீத ஆர்வம் தெரியுது....!நீங்களும் என்னை மாதிரி காதலை வளர்த்துக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்....!அதை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடறதுதான் உங்களுக்கு நல்லது....என் குடும்பம் நம்ம காதலை வாழ விடாது....!



நீங்க என் மேல வெறுப்பை வளர்த்துக்கோங்க....!எனக்கு அதுதான் வேணும்....!ஒவ்வொரு முறையும்....நீங்க கண்கள்ல ஆர்வத்தைத் தேக்கி என்னைப் பார்க்கும் போது....நான் உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிடறேன்....!அந்த ஆர்வமான பார்வை....எந்த கணத்துல காதலா மாறுமோன்னு எனக்கு 'பக் பக்குன்னு' அடிச்சுக்குது...நான் எவ்வளவு துரதிர்ஷ்டசாலி பார்த்தீங்களா கெளதம்....?என் மனசு முழுக்க உங்க மேல காதல் இருக்கு....ஆனால்....அந்தக் காதலோட எதிரொலி உங்க கண்கள்ல தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன்....!கடவுளே....!என்னை ஏன் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில நிற்க வைச்சிருக்க....!',மனதிற்குள்ளேயே அவனிடம் பேசியபடி வெகுநேரம் அழுது தீர்த்தாள்.



கௌதமின் நிலையோ அதற்கு மேல் இருந்தது.அவளுடைய விலகலும்....பாராமுகமும்....அவனுக்கு ஏற்கனவே எரிச்சலைக் கொடுத்திருந்தது.அதிலும் அவள் இன்று பேசிய பேச்சு....அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை....!அவளது வார்த்தைகள் அவனது மனதிற்கு வலியைக் கொடுத்தன.அனைத்தும் சேர்ந்து வெடிக்கும் எரிமலையின் மன நிலைமையில் இருந்தான் அவன்.



இவை அனைத்திற்கும் மேலாக....அவன் கோபம் வெடித்துச் சிதறுவது போல்....ஒரு சம்பவம் அடுத்த நாள் நடந்தேறியது.



இருவரும் இருவேறு மனநிலையில் இருக்க....அவளோ ஒரு கணக்கு வைத்திருக்க....காதலோ....வேறு ஒரு கணக்கு வைத்திருந்தது.தன் வார்த்தைகளால் அவனை சீண்டி விட்டு....தன் மேல் வெறுப்பை வளர்க்க வேண்டும் என்று அவள் எண்ணியிருக்க....காதலோ....வேறு ஒன்றை எண்ணியிருந்தது.ஒரு வழியாக...இருவரின் காதலும் கரையைக் கடக்க காரணமாக இருந்த சம்பவத்தையும் காதல் நடத்தி வைத்தது...!




அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 19



அன்று....சற்று முக்கியமான வேலைகள் முடிக்க வேண்டி இருந்ததால்....சற்று நேரமாகவே அலுவலகத்திற்கு வந்து விட்டான் கெளதம்.காலையில் இருந்து...உட்கார்ந்தபடியே வேலை செய்ததில்...தோள்பட்டை இரண்டும் வலிக்க...தனது லேப்டாப்பை மூடி வைத்து விட்டு....இரண்டு கையையும் உயர்த்தி நெட்டி முறித்தான்.



இருக்கையில் இருந்து எழுந்து வந்து ஜன்னலோரம் நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.அவனது அறையின் ஜன்னலில் இருந்து பார்த்தால்....அலுவலகத்தின் மெயின் கேட் தெரியும்.அங்கு நின்றபடி ஆபிஸிற்குள் வருபவர்களை பார்த்தபடி இருந்தான்.



வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தவனின் விழிகள்....ஒரு இடத்தில் ஆணி அடித்தது போல் நின்றது.



ஒரு இளைஞன் கூலிங் க்ளாஸ் அணிந்தபடி....படு ஸ்டைலாக பைக்கை ஓட்டியபடி வர...அவன் பின்னாடி அவன் தோளைப் பற்றியபடி அமர்ந்திருந்தாள் சுமித்ரா.அவளை இறக்கி விட்டப் பின்பும்....அவன் செல்லாமல்....பைக்கில் நின்றபடியே அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.



இருவரும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் அவன் ஏதோ கூறவும்....இவள்....அவன் முதுகின் மேலேயே இரண்டு அடி போட்டாள்.சிறிது நேரம் பேசி விட்டு அவன் கிளம்பிப் போக....இவள் புன்னகை மாறா முகத்துடனே உள்ளே நுழைந்தாள்.



இதை அனைத்தையும் ஜன்னலின் வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு....மனதில் இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த திரை அறுந்து விழுந்தது போல் இருந்தது.இவ்வளவு நாட்கள் 'அவள் மீது வரும் உணர்வுக்குப் பெயர் என்ன....?',என்று தெரியாமல் தவித்தவனுக்கு....அந்த உணர்வுக்குப் பெயர் காதல் என்று தெள்ளத் தெளிவாக விளங்கியது.



எந்த நொடி அவளை வேறு ஒரு ஆடவனுடன் பார்த்தானோ....அந்த நொடியே முழுவதுமாக உணர்ந்து கொண்டான்...'இவள் என்னவள்...!வேறு யாருக்கும் அவளை விட்டுத் தர முடியாது....!',என்று...!தன் காதல் தந்த சிலிர்ப்பினை அனுபவிப்பதற்கு முன்னாடியே....அவள் சற்று முன் வேறொரு ஆடவனுடன் சிரித்துப் பேசிய காட்சி மனதினுள் விரிந்தது.



எதிலேயோ தோற்றுப் போன உணர்வு வந்தது அவனுக்கு.அவன் மனதில் பூத்த காதலையும் மீறி....அவள் மீதான ஆத்திரம் பெருகியது.அடிபட்ட புலி போல் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அவன் நடை பயின்று கொண்டிருக்கும் போதே....அவன் கோபத்திற்கு காரணமானவளே....சரியாக அந்த நேரம் பார்த்து...கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.



தன்னை உறுத்து விழித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு...என்ன செய்வது என்று தெரியவில்லை.'ஹைய்யோ....நேற்றைய கோபத்துலதான் இன்னும் இருக்கிறார் போல...!',என்று தயங்கியபடியே,"குட் மார்னிங் சார்....!",என்க,



அவள் குட் மார்னிங்கை அலட்சியப்படுத்தியவன்....அவளை முறைத்தவாறே,"யார் அவன்....?",என்று கேள்வியெழுப்பினான்.



"யாரு....?",அவள் புரியாமல் விழிக்க,



"அதுதான்....!பைக்ல ஒருத்தன் கூட வந்து இறங்குனயே....அவன்...?",



"ஓ....அவரா....அவர்....",என்று அவள் ஆரம்பிக்க...இவன் கோபமாக இடையிட்டான்.



"போதும் நிறுத்து டி.....!நீ எதுவும் சொல்ல வேண்டாம்....!அவராம்....அவர்...!ச்சீ....நீ எல்லாம் ஒரு பொண்ணா....?போன வாரம் வரைக்கும் என்கூட சுத்தினே....!இந்த வாரம் அவன்கூட சுத்திக்கிட்டு இருக்க....!",கோபத்தில் வார்த்தைகளை கடித்துக் குதறினான்.



அவன் தன்னை தவறாகப் புரிந்து கொண்டான் என்ற நினைப்பில்....அவனுக்கு விளக்கும் நோக்கத்தோடு,"இல்ல....நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க....",என்று அவள் ஏதோ கூற வர....இவன் விடவில்லை.



"இப்பத்தான் டி சரியா புரிஞ்சிருக்கிறேன்....!என்கிட்ட நீ நினைக்கிற அளவுக்கு வசதி இல்லைன்னு தெரிஞ்ச உடனேயே....என்னைக் கழட்டி விட்டுட்டு அவனைப் பிடிச்சுக்கிட்ட....!அதுதானே உண்மை....எப்படி....?அவன் நீ நினைக்கிற மாதிரி பணக்காரனா....?",வேறொரு ஆடவனுடன் அவள் நெருக்கமாக இருந்ததும்....நேற்றைய கோபமும் சேர்ந்து கொண்டது.



"போதும்....நிறுத்துங்க....!அவரைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்....?",என்று கத்தினாள் அவள்.எவ்வளவு முயன்றும் கண்ணீரை அவளால் அடக்க முடியவில்லை.



ஏளனமாக உதட்டை மடித்துக் கடித்தவன்,"ஆமாமா....எனக்கு ஒண்ணும் தெரியாதுதான்...!இவனை வளைச்சுப் போட்ட திமிர்லதானே....நேத்து நான் வெளியில கூப்பிட்டதுக்கு அவ்வளவு சீன் போட்ட....!என்ன சொன்ன....'நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல....!',அப்படித்தான சொன்ன....?இப்ப....இதுக்கு பேர் என்ன டி....?நேத்து வரைக்கும் என்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த...இன்னைக்கு அவன்கிட்ட பல்லைக் காண்பிக்கற....?ச்சே...!நீ இப்படி இருப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல....",கை முஷ்டியை மடக்கி அருகில் இருந்த சுவற்றில் குத்தினான்.



அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்திற்குள் சம்மட்டியாய் இறங்கின.கண்களில் வழிந்த நீருடன்,"நானும் நீங்க இப்படிப்பட்டவருன்னு நினைச்சுக் கூட பார்க்கல....!நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட.....நீங்க முழுசா கேட்கல....!",அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் வலியில் தோய்ந்து வந்தன.



ஆனால்....அவன் எங்கே அவளது வலியை உணர்ந்தான்....?அவனது மனதில் இத்தனை நாளாய் அழுத்தி வைத்திருந்த காதலின் தாபமும்....கோபமும்....எரிமலையாய் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன....!



"இன்னும் என்ன டி கேட்கணும்....?அதுதான்....என் இரண்டு கண்ணாலும் பார்த்தேனே.....இப்படி பட்டவ....எதுக்கு டி என்கூட பழகின....?முதல்லயே ஒரு பணக்காரனா பார்த்து பல்லை இளிச்சிருக்கலாமே....?எதுக்குத் தேவையில்லாம என் வாழ்க்கைக்குள்ள வந்த....?எப்படி....?அவன் கூடவாவது கடைசி வரைக்கும் இருப்பியா....?இல்ல....இவனை விட வேற யாராவது பெட்டரா வந்தா....அவன் பின்னாடி போயிடுவியா...?",



அவன் வார்த்தைகளின் வீரியம் தாங்காமல்....தன் காதுகளைப் பொத்திக் கொண்டவள்,"போதும்....!போதும்...நிறுத்துங்க மிஸ்டர்.கெளதம்....!இதுக்கு மேல ஒரு வார்த்தை....என்னைப் பத்தி தப்பா சொன்னீங்கன்னாலும் நடக்கறதே வேற....!",அவள் குரல் நடுங்கியது.



தான் மனம் முழுக்க அவனை மட்டுமே சுமந்திருக்க....அதை அறியாமல்....கண்டபடி பேசியவனின் மீது கோபம் கோபமாய் வந்தது.எந்தப் பெண்மையுமே தனக்கு ஒரு களங்கம் என்று வரும் போது துடித்து எழும்.அதில் சுமித்ரா மட்டும் விதி விலக்கா என்ன....?பெண் வேங்கையாய் சிலிர்த்து நிமிர்ந்தாள்.



"என்ன டி செய்வ....?மிரட்டலெல்லாம் பலமா இருக்கு....உண்மையை சொன்னா கசக்குதோ....?",உதட்டோரங்கள் கேலியாய் வளைந்தன.



அவனை தீர்க்கமாக நிமிர்ந்து பார்த்தவள்,"எது உண்மை....?சொல்லுங்க....!சும்மா கழட்டி விட்டேன்....!கழட்டி விட்டேன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே....இவ்வளவு நாள்ல....எப்பவாவது ஒரு நாள்....உங்களை காதலா பார்த்திருப்பேனா....?இல்ல...உங்ககிட்ட வந்து லவ் பண்ணறேன்னு சொல்லியிருக்கேன்னா....?சொல்லுங்க....!பார்ப்போம்...!",அவளது கேள்வியில் இருந்த உண்மை அவனை சுட்டது.



'அப்படி என்றால் இவள் மனதில் என் மீது காதல் இல்லையா....?',என்று ஒரு வலி மனதின் ஓரம் எழுந்தாலும்....அதை வெளிக் காட்டாமல்,"சும்மா பேச்சை மாத்தாத....!என்னவோ உத்தமி மாதிரி என்னைக் கேள்வி கேட்கிற.....?கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் உன் யோக்கியதை என்னன்னு நான் பார்த்தேனே.....!எவன் கூடவோ கொஞ்சிக்கிட்டு பைக்ல வந்து இறங்கினவதான நீ....?",தன் காதலின் ஏமாற்றம் தாங்காமல்....என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே கோபத்தில் பேசிக் கொண்டிருந்தான்.



"தட்ஸ் இனஃப் மிஸ்டர்....!எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு....!நான் எவன் கூட வேணும்னாலும் சிரிச்சு பேசுவேன்....பைக்ல வந்து இறங்குவேன்....!அதை கேட்கறதுக்கு நீங்க யாரு...?உங்களுக்கு என்ன உரிமை இருக்குன்னு என்னைக் கேள்வி கேட்கறீங்க....?",மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க....ஆத்திரமாய் அவனைப் பார்த்துக் கேள்வி கேட்டாள் அவள்.



அவன் தனது வார்த்தைகளால்...அவள் மனதில் இருந்த காதலை சிறுகச் சிறுக கொன்று கொண்டிருந்தான்.



இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவன்....அவளது இந்தக் கேள்வியில் ரௌத்ரமாகிப் போனான்.ஆத்திரத்துடன் அருகில் இருந்த நாற்காலியை உதைக்க....அது பத்தடி தள்ளிச் சென்று சுவற்றில் மோதி விழுந்தது.



வேகமாக அவள் அருகில் வந்தவன்,"என்ன டி சொன்ன....?நான் யாரா...?எனக்கு என்ன உரிமையிருக்கா....?இப்போ தெரிஞ்சுக்குவ....என் உரிமை என்னன்னு....!",அவளது தோள் பட்டையைப் பிடித்து உலுக்கியபடி கர்ஜித்தவன்....அவளை இழுத்து அணைத்து....முரட்டுத்தனமாக அவளது இதழ்களை சிறை செய்தான்.



தன்னுடைய ஆத்திரம்....கோபம்...ஏமாற்றம்....வலி...காதல் என் அனைத்தையும் வன்மையாக....மிக மிக வன்மையாக அவளுடைய இதழ்களில் காட்டிக் கொண்டிருந்தான் அந்த காதல் பைத்தியக்காரன்....!



முதலில் அவனிடமிருந்து திமிறியவள்....பிறகு நேரம் ஆக...ஆக அவனுடன் ஒன்றிப் போனாள்.என்னதான் மனதில் கோபம் நிறைந்திருந்தாலும்....தன்னவனுடைய முதல் இதழ் முத்தம்....அவள் உயிர் வரை சென்று தீண்டியது.



அவனும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருந்தான்.முதலில் கோபத்தோடு அவளது இதழ்களைத் தீண்டியவன்....நேரமாக ஆக....காதலோடு தீண்ட ஆரம்பித்தான்.எவ்வளவு நேரம் சென்றதோ....தெரியவில்லை....!அவளின் இதழ்களின் மென்மையில் மூழ்கிக் கரைந்து கொண்டிருந்தவன்....மூச்சுக் காற்றுக்காக கூட....அவளின் இதழ்களைப் பிரிய மறுத்தான்.



அவளது பின்னந்தலை முடியைப் பற்றியவாறு அவன்....அவளுக்குள் மூழ்கியிருக்க....அவனது சட்டையை இறுகப் பற்றியபடி கண்ணை மூடியிருந்தாள் அவள்.தன் கைகளில் அவள் தொய்ந்து சரியவும்தான்....அவன்....அவளை விட்டு விலகினான்.



முடி கலைந்திருக்க....இதழ்கள் சிவந்திருக்க....மூச்சு வாங்க அவள் நின்றிருந்த கோலம்....அவன் மனதை மயக்கியது.சற்று முன் காதலோடு பரிமாறப்பட்ட இதழ் முத்தத்தில்....அவர்களது கோபம்...ஆத்திரம் என அனைத்துமே கரைந்து போயிருந்தது.



அவன் தன் இரு கைகளையும் விரித்து....கண்களால் அவளை 'வா...'வென்று அழைக்க....அவ்வளவுதான்...!அடுத்த நொடி....சிறு அழுகையுடன் ஓடி வந்து அவன் நெஞ்சில் விழுந்திருந்தாள் அந்தக் காரிகை...!



தன்னை அணைத்தபடி...தன் மார்பில் முகம் புதைத்து தேம்பியவளின் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் கெளதம்.அவளை மென்மையாக அணைத்தபடி....அவளது நெற்றியில் தனது முகவாயை அழுத்தியபடி அமைதியாக கண்களை மூடி நின்றிருந்தான்.



இருவரின் மனம் முழுக்க அமைதி மட்டுமே நிறைந்திருந்தது.இவ்வளவு நாட்கள் எங்கெங்கோ அலைந்து....இப்போது தன்னிடம் வந்து சேர்ந்தது போல்....இருவர் முகத்திலும் நிம்மதி நிலவியது.



இன்னும் தன் மார்பில் புதைந்தபடி தேம்பிக் கொண்டிருந்தவளின் முகத்தை மெல்ல நிமிர்த்தியவன்,"ஷ்....!போதும் டா அழுதது....!ரியலி சாரி டா ஹனி....!",என்று மனதிலிருந்து மன்னிப்பு கேட்டவன்....அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான்.



தன் ஒற்றைக் கையை மடக்கி....அவன் மார்பில் குதித்தபடி,"எதுக்கு அப்படியெல்லாம் பேசுனீங்க....?எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா....?",சிறு குழந்தையாய் தன் முகம் பார்த்து வினவியவளை....இறுக அணைத்துக் கொண்டவன்,



"சாரி டா கண்ணா....!ரியலி வெரி சாரி....!நீ ஒரு ஆணோட வந்து பைக்ல இறங்கினயா....அதுவும் இல்லாம....அவன் கூட நெருக்கமா வேற பேசிக்கிட்டு இருந்தயா....அந்த கோபத்துலதான்....ஏதேதோ பேசிட்டேன்.....!ரியலி சாரி டா....!",தன்னவள் தனக்குத்தான் என்ற உறுதியில் அவன் மனதில் இருந்த பொறாமை பறந்து போயிருந்தது.



அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"அவரு என்னுடைய அண்ணன்.....!என் பெரியம்மா பையன்....!நாங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் மாதிரிதான் பழகுவோம்....!அவரோட சேர்த்து வைச்சு நீங்க பேசவும்....நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்....!அதுவும்....என் மனசு முழுக்க உயிரா....உங்களைத்தான் விரும்பிக்கிட்டு இருக்கேன்....!அப்படி இருக்கும் போது....என்னைப் பார்த்து அப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு.....?அதுவும்...'பணக்காரன்....அவன் பின்னாடி போய்டுவியா....?' அப்படி...இப்படின்னு....",மூக்கு விடைக்க....தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்டவளைப் பார்த்தவனுக்கு....மனதிற்குள் வலித்தது.அந்த நிலையிலும் அவனை விட்டுப் பிரியாது....அவனைக் கட்டிக் கொண்டேதான் கேள்வி கேட்டாள் அவனுடைய காதலி.



தன் இரு கைகளாலும் அவள் கன்னத்தை ஏந்தியவன்,"எனக்கு அப்ப ஏதோ கிறுக்குதான் பிடிச்சிருந்திருக்கு.....!லூசுத்தனமா...என்ன என்னவோ உளறியிருக்கேன்....!சாரி டா...!இல்ல....சாரின்னு கேட்டா கூட பத்தாது....!நீ வேணா என்னை ரெண்டு அடி அடிச்சிடு....!",என்றபடி அவள் கையை எடுத்துச் சென்று தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.



'என்ன....என்ன வார்த்தைகளைக் கூறி அவளைக் கஷ்டப்படுத்தி விட்டோம்....!',என்று அவனுக்கு வேதனையாக இருந்தது.



வேதனையில் முகம் சுருங்க நின்றிருந்தவனைப் பார்த்தவளுக்கு மனது தாங்கவில்லை.அவனை சகஜமாக்கும் பொருட்டு,"அப்படியா....!அப்ப....இதுதான் வாய்ப்புன்னு உங்களை ரெண்டு அடி போடவா....?",அவள் குறும்பாக வினவ,



"ஹே....வாலு....!",என்றபடி அவள் தலையில் செல்லமாகத் தட்டியவன்,"இருந்தாலும்....நான் செஞ்சது தப்புதான் இல்லையா....?சாரி டி....!",அவன் வருத்தப்பட,



"ஷப்பா....போதும்....அதை விடுங்க....!நீங்க எப்ப என்னை லவ் பண்ண ஆரம்பிச்சீங்க....?அதை சொல்லுங்க....!",ஆவலுடன் அவள் வினவ,



அவள் மூக்கப் பிடித்து செல்லமாக ஆட்டியவன்,"நீ இங்க வந்து ஜாயின் பண்ணினதில் இருந்தே...உன்னைப் பார்க்கும் போது ஒரு ஃபீலிங் வரும்....!அநேகமா...அப்ப இருந்தே உன்னை லவ் பண்ணியிருப்பேன்னு நினைக்கிறன்....!பட்....இந்த விஷயத்துல உன் அண்ணனுக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்....!அவரோட உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம்தான்....உன் மேல எனக்கு இருந்த காதலை உணர்ந்தேன்....!",என்று தான் காதலை உணர்ந்த கணத்தைக் கூற,



"ஹ்ம்ம்....இந்த விஷயத்துல நான்தான் உங்களுக்கு சீனியர்....தெரியுமா....?"அவனைத் தள்ளிவிட்ட படி....விழிகள் பளிச்சிட கேட்டவளைத் திரும்ப தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்,



"எப்படி....?",என்க,



"உங்களுக்கு முன்னாடியே நான் நம் காதலை உணர்ந்துட்டேன்....!அன்னைக்கு நாம....ஹோட்டல்...பார்க் எல்லாம் போனோம்ல....அந்த அன்னைக்கு நைட்டே எனக்குத் தெரிஞ்சிடுச்சு.....இது காதல்தான்னு....!",



அவனுக்கு இந்த விஷயம் புதிது.எனவே....ஆச்சிரியத்துடன்,"அப்படியா...!அப்புறம் ஏன்....நீ என்கிட்ட வந்து உன் லவ்வ சொல்லவே இல்ல....?அது மட்டும் இல்லாம....என்கிட்ட இருந்து விலகி விலகிப் போன...?",குழப்பத்துடன் கேள்வியெழுப்பினான்.



அவன் கேட்ட பிறகுதான்....தான் அவனை விட்டு விலகி சென்றதன் காரணம் அவளுக்கு ஞாபகம் வந்தது.உடனே....அவன் கைகளை தள்ளி விட்டு விலகி நின்றவள்,"எங்க அப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாருன்னுதான்....உங்களை விட்டு விலகி நிற்க முடிவு செஞ்சேன்....!அதுவும் என் சொந்தக்காரங்க எல்லாம்....காதல்ன்னா கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டாங்க....!இதையெல்லாம் யோசிச்சுத்தான் என் காதலை மறைக்க நினைச்சேன்....!எனக்கு...என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு....",என்று நடுங்கியவளை இழுத்து அணைத்தவன்,



"ஹே....லூசு....!இதுக்கெல்லாமா பயப்படுவாங்க....?இந்த விஷயத்தை என்கிட்ட விட்டுரு....!உன் குடும்பத்துக்கிட்ட பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு....!",என்று மென்மையாகக் கூறினான்.



"இல்ல....உங்களுக்கு அவங்களைப் பத்தி தெரியாது....!",அவள் பயம் குறையாதவளாய் கூற,



"உனக்கு அந்தக் கவலையெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன்ல....இனி உன்னுடைய வேலை....ஐயாவைக் கவனிக்கிறது மட்டும்தான்....!",என்றபடி தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கொள்ள....அவனது செய்கையில் அவளது பயம் மறைந்தது.



எனவே....குறும்புடன்,"எப்படி....?ஐயாவோட கன்னத்துல இப்படிக் கிள்ளி வைச்சு கவனிச்சிக்கிறதா....?",என்றபடி அவள் சிரிக்க....அவளது சிரித்த இதழ்களிலேயே அவனது பார்வை நிலைத்தது.



தான் அவளை வன்மையாக முத்தமிட்டது நினைவுக்கு வர,"ஸாரி டா ஹனி....!ரொம்ப வலிச்சுதா....?கொஞ்சம் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்ல.....!",அவள் இதழ்களை தனது விரல்களால் வருடியபடி அவன் கேட்க....அவள் நிலைமைதான் தத்தளித்தபடி இருந்தது.



தன் இதழ்களை வருடிய அவன் விரல்களைத் தடுத்து நிறுத்தியவள்,"பின்ன....கோபம் வந்தா....கண்மண் தெரியறதில்ல....!",என்று முணுமுணுக்க,



"நான் வேணும்ன்னா...மறுபடியும்....மெதுவா....",என்றபடி அவள் முகம் நோக்கி குனிய....



"அதெல்லாம்....ஒண்ணும் வேண்டாம்....!",முகம் சிவக்க தன்னைப் பிடித்து தள்ளி விட்டவளைப் பார்த்தவனுக்கு ஆசையாக வந்தது.



"ஹே....ப்ளீஸ் டி ஹனி....!",என்றபடி அவன்....அவள் இடையை வளைக்க,



அவன் கைகளைத் தள்ளி விட்டபடி,"என்ன...புதுசா ஹனின்னு கூப்பிடறீங்க....?",என்க,



அவளைப் பார்த்து குறும்பாக ஒற்றைக் கண்ணைச் சிமிட்டியவன்,"அதுவா....அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்கே....!",அவள் மீண்டும் தன் கைகளைத் தட்டி விட முடியாதபடி...இறுக்கமாக அவள் இடையை வளைத்தபடி கூற,



அவன் கையை தள்ளி விட முயன்று தோற்றபடி,"என்ன....காரணம்....?",என்றாள் மெதுவாக.



"அது...என்னன்னா...உன் ஹனி லிப்ஸை டேஸ்ட் பண்ணினத்துக்கு அப்புறம்தான் எனக்கே தெரிஞ்சுது....நீ ஒரு ஹனின்னு....!அதுதான் உனக்கு இந்த நிக் நேம்...!எப்படி என் செலெக்க்ஷன்....?",



"அய்ய....ச்சீ....!",அழகாக வெட்கப்பட்டாள் அவள்.



"என்ன டி ச்சீ...?எவ்வளவு கஷ்டப்பட்டு....உனக்குப் பொருத்தமான பேரை கண்டுபிடிச்சிருக்கேன்....நீ என்னடான்னா 'ச்சீ'ங்கிற....?",



"ம்....ஆமாம்...ஆமாம்...!நல்ல பொருத்தமான கண்டுபிடிப்புதான்....!",அவள் போலியாக சலித்துக் கொள்ள,



"இந்த மாதிரி நிறைய கண்டுபிடிச்சு சொல்வேன்....பார்க்கிறயா....?",கண்களில் போதையுடன் அவன் கேட்க,



"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்....!நான் உள்ளே வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு....!வெளியே போய் என் வேலையைப் பார்க்கிறேன்....!நீங்களும் சமர்த்தா உங்க வேலையைப் பாருங்க....!",என்றபடி வெளியே ஓடிவிட்டாள்.



கண்களில் நிறைந்த காதலுடன் அவள் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்.



முகம் முழுக்க புன்னகையுடன் ஆதித்யன் அறைக்குள் நுழைந்த கெளதம்,"மச்சி....!",என்ற அழைப்போடு ஓடிச் சென்று....அவனை நாற்காலியில் இருந்து எழுப்பி கட்டிக் கொண்டான்.ஆதித்யனுக்கு ஒன்றும் புரியவில்லை.நண்பன் ஏதோ மகிழ்ச்சியில் இருக்கிறான் என்பது மட்டும் புரிய....அவனும் கௌதமை திருப்பிக் கட்டிக் கொண்டான்.



'ஆ'வென்று வாய் பிளந்தபடி அங்கு நடக்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவை இருவருமே கவனிக்கவில்லை.



"மச்சி....!ஐ ம் சோ ஹேப்பிடா....!"என்று கத்தியபடி ஆதித்யனைக் கட்டிக் கொண்டிருந்தவன்....எதேச்சையாக நிமிர்ந்து பார்க்க....வைத்த கண் வாங்காமல் தங்களையே பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவைக் கவனித்து விட்டான்.



அவளைப் பார்த்து,"ஹி....ஹி....!அது ஏதோ...ஜாலி மூட்ல...!",என்றபடி அசடு வழிந்தவன்...ஆதித்யனை தள்ளிக்கொண்டு கேன்டீனுக்கு சென்றான்.



"டேய்....!என்னடா மேட்டர்....?ரொம்ப சந்தோஷமா இருப்ப போல....?",அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தபடி ஆதித்யன் வினவ,



"ம்ம்...சொல்றேன் மச்சான்....!",இரண்டு ஜுஸை கையில் ஏந்தியபடி வந்து அமர்ந்தான் கெளதம்.



"என்னடா விஷயம்....?இப்பவாவது சொல்லு....?",ஜுஸை உறிஞ்சியபடி ஆதித்யன் கேட்க,



சிறிது நேரம் எங்கேயோ பார்த்தபடி கனவில் மிதந்தவன்....பிறகு சிரித்தபடியே,"நானும் சுமித்ராவும் லவ் பண்றோம் டா....!ஃபைனலி ஐ ம் ஃபாலிங் இன் லவ்....!",மென்மையாக புன்னகைத்தபடியே கூற,



"ஹே....வாவ்...!சூப்பர் டா மச்சான்....!ஐ ம் சோ ஹேப்பி ஃபார் யூ....எப்படியோ குடும்பஸ்தன் ஆகிட்ட....!",அவன் கூறியதைக் கேட்டு ஒரு வெட்கப் புன்னகையை சிந்தினான் கெளதம்.



பெண்களின் வெட்கம்தான் அழகு என்று யார் சொன்னது....?காதல் வயப்பட்ட ஆண்களின் வெட்கம்....அதை விட அழகு....!



"இங்கே பாருடா....!என் மச்சானுக்கு வெட்கமெல்லாம் வருது....!",ஆதித்யன் கலாய்க்க,



"டேய்....!போதும் டா....!",இன்னும் அதிகமாக வெட்கப்பட்டான் அந்த ஆறடி ஆண்மகன்.



நண்பனை கனிவாக நோக்கியவன்,"உன்னை இப்படி பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது டா.!அந்தப் பொண்ணு உன்னை நம்பி அவ மனசை கொடுத்திருக்கா....கடைசி வரைக்கும் அவளை நீ நல்லபடியா பார்த்துக்கணும்....!"பொறுப்பான நண்பனாக அவனுக்கு அறிவுரை வழங்கவும் அவன் மறக்கவில்லை.



இதுதான் நட்பு என்பது....!ஒருவனுக்கு நல்ல நட்பு கிடைத்து விட்டால் போதும்....அவனது வாழ்க்கையே ஒரு பூந்தோட்டமாக மாறி விடும்...!பத்து மாதம் சுமந்து...ரத்தமும் பாசமுமாய் வளர்த்த தாயிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை....உயிருக்கு உயிராய் பழகும் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள முடியும்...!நட்பு என்ற ஒன்றிற்கு வரைமுறை என்பதே கிடையாது...!



"ஷ்யூர் டா...!இனி என் வாழ்க்கையே அவள்தான்....!",அவன் கண்களில்தான் எத்தனை காதல்.



இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பிச் சென்றனர்.



நட்பிற்கு மட்டுமா வரைமுறை இல்லை....?காதலுக்கும்தான் இல்லை....!எந்த ஒரு எல்லை கோட்டையையும்...காதல் தாண்டச் சொல்லும்....!எவ்வளவு பெரிய தடைகளையும் தூசி மாதிரி....காதல் ஊதித் தள்ளும்....!



காதல்....!இந்த ஒற்றை வார்த்தை செய்யும் மாயங்கள் கணக்கிலடங்காதவை....!!



அகம் தொட வருவான்...!!!
 

Latest posts

New Threads

Top Bottom