Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 20



மதியம் நித்திலா,சுமித்ரா மற்றும் பாலா ஆகிய மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது....சுமித்ரா எதையோ கூற வருவதும்...பிறகு தயங்குவதுமாக சாப்பாட்டைக் கொறித்துக் கொண்டிருந்தாள்.அவளை கவனித்த பாலா,



"என்னங்க சுமித்ரா...!சாப்பாட்டை சாப்பிடாம...கொறிச்சுக்கிட்டு இருக்கீங்க....?",அவன் கேட்ட பிறகுதான் அவளைப் பார்த்த நித்திலா,



"ஆமா டி...!இன்னும் ஃபுல் டிஃபன் பாக்ஸை அப்படியே வைச்சிருக்கிற...?",என்று கேள்வியெழுப்ப,



"ஹ்ம்ம்....சாப்பிடணும்....!அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்....!",என்றாள் தயங்கியவாறு.



"ம்...என்னன்னு சொல்லுங்க....!",பாலா அவளை ஊக்க,



"அது....அது வ...வந்து...",என்று அவள் இழுக்க,



"அதுதான் வந்துட்டியே....!இன்னும் வரணுமா....?என்னன்னு சொல்லித் தொலை டி...!",என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவளைத் திட்டினாள் நித்திலா.



அப்பொழுதும் அவள் தயங்கியபடி,"அது....நானும்...எ..எனக்கு....",என்று இழுத்துக் கொண்டிருக்க,



அவள் முகத்தில் இருந்த வெட்கத்தைப் பார்த்த நித்திலா,"ஹே....!உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சா....?அதனாலதான்....நீ இவ்ளோ வெட்கப்படற....!யா....!ஐ காட் இட்....!",என ஆர்ப்பரிக்க,



"அச்சோ....இல்லைடி...!",அவசர அவசரமாக மறுத்தாள் சுமித்ரா.



"நித்தி....!நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு....அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு கேட்போம்....!",என்று பாலா ஒரு அதட்டல் போடவும்,



"ஒகே...ஒகே....!நான் எதுவும் பேசலை....நீயே சொல்லு....!",என்றபடி அமைதியானாள்.



சிறிது நேரம் தனது கை விரல் நகங்களை ஆராய்ந்தபடி அமைதியாக அமர்ந்திருந்தவள்...பிறகு ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு....இருவரையும் நிமிர்ந்து பார்த்து,"நானும்...கௌதமும் லவ் பண்றோம்....!",என்று விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.



மற்ற இருவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்திருக்க முதலில் சுதாரித்தது பாலாதான்."ஓ...கங்க்ராட்ஸ் சுமித்ரா....!வாழ்த்துக்கள்....!",என்று வாழ்த்து கூற,



"தேங்க்ஸ் பாலா....!",என்றபடி அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள்,இன்னும் அதிர்ச்சி விலகாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவை உலுக்கியவள்,"ஹே....நித்தி....!ஏன் இப்படி பார்க்கிற....?ஏதாச்சும் பேசு டி...!",என்று அவளை உலுக்க,



தன் நிலைக்கு வந்த நித்திலா...சுமித்ராவிடம் கேட்ட முதல் கேள்வி,"இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமா....?",என்பதுதான்.



அதைக் கேட்ட பாலாவிற்கு சிரிப்புதான் வந்தது."ஹா....ஹா...!நித்தி....!வீட்டுக்கு எல்லாம் சொல்லிட்டா....எல்லாரும் லவ் பண்ணுவாங்க....!விட்டால்....ஊரைக் கூட்டி சொல்ல சொல்லுவ போல.....!ஹா...ஹா...!",அவன் பாட்டிற்க்கு சிரித்துக் கொண்டிருக்க,



"யூ....ஷட்டப் பாலா....!நான் சுமித்ராக்கிட்ட பேசிட்டு இருக்கேன்.....!",கோபமாக அவனை அதட்டியவள்....சுமித்ராவிடம் திரும்பி,"சொல்லு டி....!இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமா....?",சற்று வேகமாக வந்தன அவளது வார்த்தைகள்.



ஏற்கனவே தன் குடுமபத்தை நினைத்து பயத்தில் இருந்த சுமித்ரா...இப்பொழுது இவள் இப்படி கேட்கவும்,"இ...இல்ல....தெரியாது....!",என்றாள் முகம் வெளிற.



நம் நாயகிக்கு இந்த பதில் போதாதா....?ரோட்டில் போகிறவர்கள் யாரவது 'நான் காதலிக்கிறேன்...!',என்று கூறினாலே போர்க்கொடி தூக்குபவள்....தன் உயிர்தோழியை சும்மாவா விடுவாள்.....?அவள் அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டாள்.



"லுக் சுமி....!இது தப்புன்னு தெரியல....?உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்ததுன்னா....கெளதம் சாரை உங்க வீட்ல வந்து பேசச் சொல்லு....!அதை விட்டுட்டு....இப்படி வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றதெல்லாம் தப்பு....!",என்று அந்நியன் பெண் அம்பியாக மாறி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தாள்.



வீடு என்றதுமே கலவரமடைந்த சுமித்ரா,"அய்யோ....!என் அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்....என்ன நடக்கும்ன்னே தெரியாது....!இந்த லட்சணத்துல வீட்டுக்கு வேற வந்து பேசி....அவங்க சம்மதத்தோட லவ் பண்ணச் சொல்ற....நடக்கற கதையை பேசு நித்தி....!",என்று பயம் பாதி....எரிச்சல் மீதியாகக் கூறி முடித்தாள்.



"அப்போ...உங்க வீட்டுக்குத் தெரியாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கறதா உத்தேசமா...?",கூர்மையாக அவளையே பார்த்தப்படி நித்திலா வினவ...தோழி என்ன கூற வருகிறாள் என்பது சுமித்ராவிற்குப் புரிந்து போனது.



நித்திலாவைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள்....அவளது கையைப் பற்றியபடி,"நித்தி....!நீ நினைக்கிற மாதிரியெல்லாம் நடக்காது....!என் அப்பா அம்மா மேல நானும் ரொம்ப மதிப்பும்....மரியாதையும் வைச்சிருக்கிறேன்....!அவங்க சம்மதம் இல்லாம....எங்க கல்யாணம் நடக்காது....!என் குடும்பத்தை சம்மதிக்க வைக்கிற பொறுப்பை....அவரு பார்த்துக்கறதா சொல்லியிருக்காரு....!",கடைசி வார்த்தையைக் கூறும் போதே....சுமித்ராவின் முகம் நாணத்தால் சிவந்தது.



தோழி முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும்....அழகான வெட்கமும்....அவளது தெளிவான சிந்தனையும்....நித்திலாவின் மனதில் இருந்த சஞ்சலங்களை விரட்டியடித்தன.



அவள் கன்னத்தைப் பிடித்து செல்லமாக ஆட்டியபடி,"உன் முகத்துல தெரியற இந்த வெட்கத்துக்காகவே....எதை வேணும்ன்னாலும் செய்யலாமே....!எனிவே....வாழ்த்துக்கள் டி....!பட்....என்ன நடந்தாலும் உன் பேரண்ட்ஸை நீ மறக்கக் கூடாது...!",என்று அவளுக்கு அறிவுறுத்தவும் மறக்கவில்லை.



இருவரும் பேச ஆரம்பித்ததில் இருந்து....இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த பாலாவிற்கு 'பக்'கென்று இருந்தது.



'அடக் கடவுளே....!இவகிட்ட காதலை சொல்றதுக்குப் பதிலா....இவ அப்பா அம்மா கால்ல போய் விழுந்தடலாம் போல இருக்கே....!இவ பேசறதை வைச்சுப் பார்த்தா....இந்த ஜென்மத்துல இல்ல....வேற எந்த ஜென்மத்துலேயும் லவ் பண்ண மாட்டான்னு தோணுதே....!',என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.



இப்படி பேசிக் கொண்டிருக்கிறவளும்....ஒருநாள் காதல் வயப்படப் போகிறாள்....அதுவும் இந்த ஜென்மத்திலேயே....மொத்த ஜென்மத்திற்கும் போதுமான காதலை தன்னவனிடம் பொழியப் போகிறாள்....!பெற்றவர்களுக்குத் தெரியாமல் காதலிக்கக் கூடாது என்று சட்டம் பேசுகிறவள்தான்....ஒருநாள்....தன் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானத்தை அவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப் போகிறாள்....!



காதல் பூ மனதில் பூக்கும் போது.....அது வேறு எதையும் கவனிக்க விடாது....!தன் இணையின் சந்தோசம் மட்டுமே....அப்பொழுது அனைத்தையும் விட பிரதானமாகத் தெரியும்....!



தன் இணைக்காக மலையையும் புரட்டச் சொல்லும்....!வானத்தையும் தாண்டச் சொல்லும்....!அப்பேற்பட்ட காதல் நடத்தும் ஆட்சியில்....காதல் வயப்பட்டவர்கள்....காதலுக்கு அடிமையாகத்தான் ஆக வேண்டும்....!ஆனால்....அந்த அடிமைத்தனத்திலும்....ஒரு கோடி சுகத்தை காதல் மட்டுமே அள்ளி அள்ளித் தரும்....!இதில்....நித்திலா மட்டும் விதி விலக்கா என்ன....?



...........................................................................................................................



காலை....எப்பொழுதும் போல் வழக்கமாக தனது வேலைகளில் மூழ்கியிருந்தான் ஆதித்யன்.அவனை நிமிர்ந்து பார்ப்பதும்....பிறகு தன் சிஸ்டமை பார்ப்பதுமாக....மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.



தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் இருந்து கண்களை எடுக்காமலேயே....,"என்ன வேணும் பேபி....?எதுக்கு இப்படி மாமாவையே குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்க....?",அவளைக் கண்டு கொண்டவனாய் அவன் வினவ,



"ஹ்ம்ம்....ஆசைதான்....!",அவள் சலித்துக் கொள்ள,



"அப்படியா....!இதோ ஒரு ஜஸ்ட் டென் மினிட்ஸ்....!இந்த வொர்க்கை முடிச்சிட்டு மாமா ஓடி வந்துடறேன்....!",



"ப்ச்....!",என்றவள் ஒன்றும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.



சிறிது நேரம் கழித்து அவனே,"சரி....சொல்லு....!என்ன விஷயம்....?",கையிலிருந்த பைலை மூடி வைத்தபடி அவளிடம் கேட்க,



"ம்....அது....சுமித்ரா அண்ட் கெளதம் சார் விஷயம் உங்களுக்குத் தெரியுமா....?",



"ம்ம்....தெரியும்....!தெரியும்...!தெரிஞ்சு என்ன பண்றது....?உன் பிரெண்டுக்கு இருக்கற மூளை கூட....உனக்கு இல்லையே....!",என பெருமூச்சு விட,



"சார்....!ப்ளீஸ்.....!நான் சீரியஸா பேச விரும்பறேன்....!",அவள் முகத்தில் தெரிந்த உறுதியில் அவன் தன் விளையாட்டுத்தனத்தை கை விட்டான்.



"ஒகே....ஒகே...!சொல்லு....!",



"உங்க பிரெண்ட் எப்படி....?அதாவது அவரு கேரக்டர் பத்தி கேட்கிறேன்....",



"ஓ....!உன் பிரெண்டுக்காக விசாரணை கமிஷன் நடத்தறயாக்கும்....!",



"இதுல என்ன தப்பு இருக்கு....?என் பிரெண்டுக்கு நல்லது எது...?கெட்டது எதுன்னு சொல்றது என் கடமைதான...?",



"ம்....அஃப் கோர்ஸ்....!பட்....இந்த விஷயத்துல நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்ல....!கெளதம்....நூறு சதவீதம் நல்ல பையன்....!என்ன....கொஞ்சம் கோபமும்....அவசர புத்தியும் இருக்கு...!",



"உங்க பிரெண்டா இருந்துட்டு....கோபம் இல்லாம இருந்தாதான் ஆச்சரியம்.....",என்று அவள் முணுமுணுக்க....அவன் காதில் அது தெளிவாக விழுந்தது.



"என்ன பண்றது பேபி....?இந்த கோபமும்....பிடிவாதமும் இல்லைன்னா....எப்பவோ இந்த பிசினெஸ்ஸை இழுத்து மூடிட்டு போயிருக்க வேண்டியதுதான்.....!இங்க நிலைச்சு நிற்கறதுக்கு....அது ரெண்டும் கட்டாயம் வேணும்....!",



அவன் கூறுவதும் சரியாகத்தான் பட்டது நித்திலாவிற்கு.இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை வெறும் அன்பினால் மட்டுமே கட்டி ஆண்டுவிட முடியாது....!எதிராளியை வீழ்த்துவதற்குத் தேவையான பலத்தை கோபத்தால் மட்டுமே கொடுக்க முடியும்....!அதே போல்....தோல்வி வந்தாலும் எதிர்கொள்ளும் வைராக்கியத்தை பிடிவாதம் மட்டுமே கொடுக்கும்....!



"கடைசியில உன் பிரெண்டும்....என் பிரெண்டும் ஜோடி சேர்ந்துட்டாங்க....!நீயும் நானும்தான் ஒரு முன்னேற்றமும் இல்லாம இப்படியே இருக்கோம்....!",அவளை ஓரக் கண்ணால் நோக்கியபடி பெருமூச்சு விட்டான் ஆதித்யன்.



"அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது....!",என்றாள் அவள் பட்டென்று.



"தப்பா சொல்ற பேபி....!நீ நினைச்சாதான் எல்லாம் பண்ண முடியும்....!",அவன் சொன்னதன் அர்த்தத்தை உணராமல்,



"நான் எதையும் நினைக்கத் தயாரா இல்ல....!",என்றாள் அழுத்தமாக,



"பார்ப்போம்....!இன்னும் எவ்வளவு நாள் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கேன்னு....?",



"இன்னும் ரெண்டு வருஷம்....!இங்கே இருந்து ரிசைன் பண்ணிட்டு போகிற வரைக்கும் இதையேதான் சொல்லிக்கிட்டு இருப்பேன்....!",



அவளைப் பார்த்து மர்மமாகப் புன்னகைத்தவன்,"ஒகே பேபி....!நீ சொல்லிக்கிட்டே இரு....!இப்ப மாமாக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு....!அதை பார்க்க விடு....!",எனவும்,



"ப்ச்....!",என்றபடி தன் சிஸ்டமை தட்ட ஆரம்பித்தாள்.



கதவைத் தட்டிவிட்டு கௌதமின் அறைக்குள் நுழைந்த சுமித்ராவை....அவன் இல்லாத வெறுமையான இருக்கையே வரவேற்றது.'நம்மை வரச் சொல்லிட்டு இவரு எங்க போனாரு....?',என்று எண்ணியபடியே உள்ளே நுழைந்தாள்.



உள்ளே நுழைந்தவளை இரு வலிய கரங்கள்....பின்னிருந்து அணைத்தது.'அய்யோ....!',என்று அலறப் போனவளின் வாயை கரம் கொண்டு மூடியவன்,"ஹே....!நான்தான் டி....!கத்தி ஊரைக் கூட்டாதே.....!",பின்னாலிருந்து அணைத்தபடியே அவள் காதுக்குள் கூறினான் கெளதம்.



"நீங்களா....?நான் யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்.....!",



"என்னைத் தவிர வேற எவனால...உன்னை இப்படி கட்டிப் பிடிக்க முடியும்....?இல்ல....அதுக்குத்தான் நான் விட்டுருவேனா....?",அவனது மீசையும்....உதடுகளும் அவளது காது மடலை உரசிச் சென்றன.



"சரி....விடுங்க.....!என்னை எதுக்கு கூப்பிட்டிங்க....?",அவனிடமிருந்து விலக முயன்றபடி அவள் வினவ,



"ப்ச்....ஹனி....!கொஞ்ச நேரம் இப்படியே அமைதியா நில்லு....!",என்றவன் அவளது கூந்தலில் முகம் புதைத்து வாசம் பிடிக்க ஆரம்பிக்க,



அவனது அருகாமையில் நெகிழத் தொடங்கிய தன் மனதையும்....உடலையும் கட்டுப்படுத்தியபடி....,"விடுங்க.....!எனக்கு வேலை இருக்கு....!வெளியே போகணும்....!",என்றபடி அவனைத் தள்ளி விட,



"இப்பதானே வந்த....கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம்....!",அவளது அருகாமை விலகிய எரிச்சலில் சற்று கடுப்பாகக் கூறினான்அவன்.



"ம்ஹீம்....!ஏற்கனவே....உங்களோட என்னை இணைச்சு வைச்சு கலாய்ப்பாங்க....!இதுல....அடிக்கடி உங்க ரூமுக்கு வந்துட்டுப் போனா....ஏதாவது சந்தேகம் வந்துரும்....!",அவனது எரிச்சலை கவனித்தாலும் கவனிக்காததைப் போல் கூற,



"ஒகே....!அப்ப....இன்னைக்கு ஈவ்னிங் வெளியே போகலாம்....!",



"அய்யோ....!ம்ஹீம்....!வெளில எல்லாம் வேண்டாம்....!",



"ஏய்....!என்ன டி விளையாடறியா...?ஆபிஸ்லேயும் வேண்டாம்....வெளியேயும் வேண்டாம்ன்னா....நாம எங்கேதான் பேசிக்கறது....?",



"போன்ல பேசிக்கலாம்....!இன்னைக்கு நைட் நானே உங்களுக்கு கால் பண்றேன்....ஓகே வா...?",



"என்னதான் இருந்தாலும் நேர்ல பேசிக்கற மாதிரி இருக்குமா....?",அவனுக்கு அவளுடன் தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும் போல் இருந்தது.



"ப்ளீஸ்ங்க....!இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க....!யாரவது தெரிஞ்சவங்க பார்த்துட்டா....வம்பா போயிடும்....!",



"போடி....!",அவள் கூறியதைக் கேட்டு முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு நின்றான் அவன்.



அவன் அருகில் நெருக்கமாக வந்து நின்றவள்....அவனது சட்டை பட்டனை திருகியபடியே,"கோபமா....?",அவன் முகம் பார்த்துக் கேட்க,



அவளது அந்த உரிமையான செய்கையிலும்....அவள் அருகாமை ஏற்படுத்திய மயக்கத்திலும்,"ம்ம்...",என்று முணுமுணுத்தான்.



அவன் சட்டை பட்டனை நிமிண்டியபடியே,"இங்கே பாருங்க....!என் அம்மா...அப்பா...சித்தி...சித்தப்பா...அத்தை....மாமான்னு எல்லாரும் இந்த ஊர்லதான் இருக்காங்க....!",



குழந்தைக்குச் சொல்வது போல்....அவள் பொறுமையாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்க....அந்தக் கள்வன் எங்கே அவள் கூறுவதைக் கேட்டான்....?தன் அருகில் நின்றவளின்....கழுத்தில் முகம் புதைத்தவாறு....வாசம் பிடித்துக் கொண்டிருந்தான்.இதை எதையும் உணராமல்....அவன்....தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பில்....அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாள்.



"நாம எங்கேயாவது வெளியில சுத்தும் போது....அவங்க நம்மளை பார்த்துட்டா....என்னாகும்....?",



"ம்....!",



"அப்புறம்...எப்படியாவது என் அம்மா அப்பா காதுக்கு நம்ம விஷயம் போயிடும்....!",



"ம்....!",



"அப்படி எங்க அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்டுச்சுன்னா....எங்க அப்பா என்னை ஆபிஸ்க்கு போக வேண்டாம்ன்னு சொல்லிடுவாரு.....!என்னை வேலையை விட்டே நிறுத்திடுவாரு.....!",



"ம்....!",அவள் கழுத்தில் இருந்த தனது உதடுகளை....அவளது காது மடலை நோக்கி நகர்த்தியவாறு 'ம்....' கொட்டினான் அந்தக் காதல் திருடன்.



"அதுக்கு அப்புறம்....நமக்கு நம்ம பக்கம் இருக்கிற நியாயத்தை சொல்றதுக்கு வாய்ப்பே கிடைக்காம போயிடும்....!",



"ம்....",இப்போது அவனது உதடுகள் அவளது கன்னத்தை நோக்கி பயணித்தன.



"என்னை வேலையை விட்டு நிறுத்திட்டாங்கன்னா அப்புறம்....நாம ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு சான்ஸ் கிடைக்காது....!",



"ம்.....!",அவளது கன்னத்தில் ஊர்ந்து கொண்டிருந்த அவனது உதடுகள்....மீண்டும் அவளது காதுமடலை நோக்கி தனது ஊர்வலத்தை தொடங்கியது.



"நாம வெளியே போக வேண்டாம்ன்னு....நான் ஏன் சொல்றேன்னு இப்ப உங்களுக்குப் புரியுதா....?",



"ம்....!",என்றவனின் உதடுகள் அவளது காதுமடலில் அழுத்தி ஒரு முத்தம் வைக்கவும்தான்....அவளுக்குத் தற்போதைய நிலை உரைத்தது.



"ஹேய்...!என்ன பண்றீங்க....?",சிறு கூச்சலுடன் அவன் முடியைப் பிடித்து இழுத்து....அவனைத் தள்ளிவிட்டாள்.



இவ்வளவு நேரம் இருந்த ஏகாந்தமான நிலை தடைபடவும்....,"ப்ச்....என்னடி....?",என்றான் அவன் வாட்டமாக.



"என்ன....என்னடி....?இவ்வளவு நேரம் நான் என்ன பேசிக்கிட்டு இருந்தேன்னு....சொல்லுங்க பார்க்கலாம்....?",இடுப்பில் கை வைத்தபடி கேட்டவளைப் பார்த்தவன்....திருட்டு முழி முழித்தான்.



"என்ன பேசிக்கிட்டு இருந்த....?",என்று அவளைத் திருப்பிக் கேள்வி கேட்க வேறு செய்தான்.

அவனைப் பார்த்து முறைத்தவள்,"அப்ப....இவ்வளவு நேரம் நான் என்ன பேசினேன்னு கேட்கவே இல்ல....அப்படித்தானே....?",கோபமாக கேட்க,



"ஆமா டி....!சும்மா முறைக்காத....!இவ்வளவு பக்கத்துல வந்து நின்னு பேசினா....கேட்கவா தோணும்....?வேற ஏதாச்சும்தான் தோணும்....!",அவனும் கோபமாக முணுமுணுத்தான்.



"சரி...அப்ப இனிமேல் உங்க பக்கத்துல வந்து நின்னு பேச மாட்டேன்.....!தூரமா தள்ளியே நின்னுக்கிறேன்.....!",என்றவள் அவனை விட்டுத் தள்ளி நிற்க,



"இல்லல்ல ஹனி....!நீ இப்படி பக்கத்துலேயே நின்னுக்கலாம்...!",என்றவன் அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தபடி."சரி....!இப்ப சொல்லு....என்ன சொன்ன....?",என்று கேட்க,



"நான் இன்னைக்கு உங்ககூட வெளியே வர முடியாது....!",



"சரி....வேண்டாம்....!இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்....!",



"இன்னொரு நாளும் சந்தேகம்தான்...!",



அதை....அந்த இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்....!",



இப்பொழுதே மறுத்தால் அவனுக்கு கோபம்தான் வரும் என்று எண்ணியவள்....அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.



"ஒகே....!இப்ப நான் கிளம்பட்டுமா....?வொர்க் இருக்கு....!",



"ஹ்ம்ம்...கிளம்பறதுலேயே இரு....!",என்றவன் அவளை ஒருமுறை இறுக அணைத்த பின்தான் விடுவித்தான்.



அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 21 :



"உன்னைப் போன்ற பெண்ணை
கண்ணால் பார்த்ததில்லை....!
உன்னை அன்றி யாரும்
பெண்ணாய் தோன்றவில்லை....!
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு....?!"




அந்த நெடுஞ்சாலையில் சென்ற காரில் இருந்த சி.டி பிளேயரில் பாடல் ஓடிக் கொண்டிருந்தது.அதனுடன் சேர்ந்து பாடியபடி....இல்லை இல்லை....கத்தியபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ஆதித்யன்.



அவனருகில் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தது வேறு யாருமல்ல.....நம் நாயகி நித்திலாதான்....!உயர்தர ஹோட்டல் ஒன்றை கட்டித் தரும் பணி இவர்களுக்கு வந்திருந்தது.அது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.அதைப் பார்த்து விட்டு வருவதற்காகத்தான் இருவரும் போய்க் கொண்டிருந்தனர்.



ஒரு கட்டத்திற்கு மேல்....அவனுடைய கத்தலை தாங்க முடியாமல் நித்திலா....சி.டி பிளேயரை ஆஃப் செய்துவிட்டாள்.அவன் ஆன் செய்ய....அவள் நிறுத்த....அவன் மறுபடியும் ஆன் செய்ய....இருவரும் மாறி மாறி போடவும்....நிறுத்தவும் செய்து கொண்டிருந்தனர்.



"இப்ப எதுக்கு பாட்டை நிறுத்தற....?நல்லாத்தானே இருக்கு....?",ஆதித்யன் கேட்க,



"அது நல்லாத்தான் பாடுது....!நீங்க கத்தறதுதான் நாராசமா இருக்குது.....",



"என்னது கத்தறேனா....?எவ்வளவு அழகா பாடிக்கிட்டு இருக்கேன்....கத்தறேன்னு சொல்ற...!",



"ஹலோ....!அதைக் கேட்கறவங்க சொல்லணும்....!பாடறீங்களா....?இல்ல....கத்திக்கிட்டு இருக்கறீங்களான்னு....?அப்படியே....காக்கா கத்தற மாதிரி இருக்குது....!",அவள் கூறவும் அவன் முகம் அஷ்ட கோணலாக மாறியது.



"ரசிக்கறதுக்கும் ஒரு மனசு வேணும்....!",அவன் கூற,



"ஆமா....ஆமாம்....!",என்றாள் அவள் கேலியாக.



இவர்கள் பேசிக் கொண்டிருக்க....இவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த கார் திடீரென நின்றது.அதை எதிர்பார்க்காத ஆதித்யன்....காரை வளைத்துத் திருப்பி....சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினான்.



"ஹே....இடியட்....!கொஞ்சமாவது அறிவு இருக்கா....?",அந்தக் காரை ஒட்டிக் கொண்டு வந்திருந்த பெண்ணை பார்த்து அவன் கத்த,



"சாரி சார்....!திடீர்ன்னு ஏதோ....படபடப்பா வந்திடுச்சு.....ரியலி சாரி....!",அந்தப் பெண் இன்னும் அந்த படபடப்பிலிருந்து வெளியே வரதவளாய் காணப்பட்டாள்.



"நான் கொஞ்சம் பார்த்து ட்ரைவ் பண்ணலைன்னா இந்நேரம் எல்லாரும் உருண்டிருப்போம்....!",கோபம் குறையாதவனாய் அவன் கத்திக் கொண்டே தனது காரை எடுத்தான்.



"இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படறீங்க....?அவங்களுக்கு என்ன கஷ்டமோ...?பாவம்....!",அந்த பெண்ணிற்காக நித்திலா வருத்தப்பட,



"இந்தப் பொண்ணை எல்லாம் யாரு காரை ஓட்டச் சொன்னது....?சும்மா வீட்ல படுத்து தூங்காம....காரை எடுத்துக்கிட்டு 'நானும் ட்ரைவ் பண்றேன்னு' வந்துட வேண்டியது.....!",எரிச்சல் குறையாமல் அவன் முணுமுணுக்க....நித்திலாவிற்கு கோபம் வந்து விட்டது.



"இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க....?பொண்ணுங்கன்னா வீட்ல சமையல் செஞ்சுக்கிட்டு உட்கார்ந்துக்கணும்....இப்படியெல்லாம் வெளியில வரக் கூடாதுன்னு சொல்றீங்களா....?",ஒட்டு மொத்த பெண் குலத்தையும் காக்க வந்த காளி போல்....தன் முன்னால் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,



"ஹே....!நான் எப்ப அப்படி சொன்னேன்...?",என்று பதறினான்.



"பின்ன....நீங்க சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம்....?பொண்ணுங்கன்னா உங்களுக்கு இளக்காரமா போச்சா....?",



"அம்மா...!பரதேவதையே....!இப்ப எதுக்கு பெண் குலத்துக்கு எதிரா என்னை மாட்டிவிடற....?நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட....அந்தப் பொண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னா...வீட்ல படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானேன்னு சொன்னேன்....!நம்ம கம்பெனிலேயே நாற்பது சதவீதம் பொண்ணுங்க வேலை செய்யறாங்க....அவங்களுக்கு நிறைய சலுகைகள் செஞ்சு கொடுத்திருக்கிறேன்....!அப்படி இருக்கும் போது....நான் எப்படி பெண்களுக்கு எதிரா பேசுவேன்....?எல்லாத்துக்கும் மேல....என் மனசுல ஒரு அழகான பொண்ணு உட்கார்ந்துக்கிட்டு என்னை....அவள் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைச்சிக்கிட்டு இருக்கா....!இதுல....நான் பொண்ணுங்களுக்கு எதிரா பேசுவேனா.....?சொல்லு.....ம்...?",என்று அவன் மென்மையாக எடுத்துக் கூற....அவன் வார்த்தையில்....அவள் அமைதியானாள்.அதிலும்....அவன் கடைசியாக பேசிய வார்த்தை அவள் மனதுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.



"நானா உங்களை ஆட்டிப் படைச்சிக்கிட்டு இருக்கேன்...?நீங்கதான் என்னை....உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைச்சுக்கிட்டு இருக்கீங்க.....!",அவள் மெதுவாக முணுமுணுக்க,



"அதெல்லாம் உனக்குத் தெரியாது பேபி.....!என் மனசுல உன்னால....குட்டி குட்டி யுத்தமே நடந்துக்கிட்டு இருக்கு....அந்த யுத்தத்தால நிறைய காயம் ஆகியிருக்கு....!அந்தக் காயத்துக்கெல்லாம் மருந்து நீதான்....!எப்ப எனக்கு மருந்து தரப் போற....?",தன் கண்களை அவளது விழிகளோடு உறவாடவிட்டவன்....மென்மையான குரலில் கேட்க,



அவனுடைய அந்தக் குரல் அவளது மனதை தடம் புரளச் செய்தது.எதுவும் பேசாமல் வெளியே வேடிக்கைப் பார்ப்பதை போல் திரும்பிக் கொண்டாள்.சிறிதாக ஒரு பெருமூச்சை வெளியிட்டவன்....அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.ஹோட்டல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இடம் வந்துவிட....ஒரு மரநிழலில் காரை நிறுத்திவிட்டு....இருவரும் இறங்கிச் சென்றனர்.



மதிய நேரம் என்பதால் வேலையாட்கள் அனைவரும் சாப்பிட சென்றிருந்தனர்.இவனைப் பார்த்ததும் மேஸ்திரி ஓடி வந்தார்.



"வணக்கம் சார்....!",



"ம்...வணக்கம்...!வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு....?",



"அதெல்லாம் பக்காவா போய்க்கிட்டு இருக்கு சார்....நீங்க கவலையே படாதீங்க....!கொடுத்திருக்கிற டைம்க்குள்ள எல்லாத்தையும் முடிச்சிடலாம்....",



"ம்....வெரி குட்....!செங்கல்...மணல் எல்லாம் தேவையான அளவுக்கு இருக்கா....?வேலையாளுங்க எல்லாம் ஒழுங்கா வேலைக்கு வர்றாங்களா....?",பொறுப்பான முதலாளியாக அவன் விசாரித்துக் கொண்டிருக்க....நித்திலா வழக்கம் போல் சுற்றும் முற்றும் திரும்பித் திரும்பி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.



நித்திலாவிற்கு இந்த மாதிரி சைட்டிற்கு வருவதற்கு மிகவும் பிடிக்கும்.எனவேதான்....ஆதித்யன் அழைக்கும் போதெல்லாம் மறுக்காமல் வந்து விடுவாள்.அவன் மேஸ்திரியிடம் வேலையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது....இவள் இன்னொரு பக்கம் வேடிக்கை பார்க்க கிளம்பி விடுவாள்.என்னதான் ஆதித்யன் வேலை விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தாலும்....அவளைத் தன் கண் பார்வையை விட்டு விலக அனுமதிக்க மாட்டான்.



பொதுவாகவே....கட்டிட வேலை நடைபெறும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்.மேலே இருந்து எப்பொழுது செங்கல் விழும் என்று சொல்ல முடியாது.கீழே யாரும் இல்லை என்ற நினைப்பில் மேலே உள்ளவர்கள் ஜல்லியையோ....செங்கலையோ கொட்டி விடுவர்.எனவே....இதுபோன்ற இடங்களுக்கு அவளை அழைத்து வரும் போதெல்லாம்....அவளைத் தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொள்வான்.



அவன் கேட்ட கேள்விக்கு மேஸ்திரி,"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார்.....!நம்ம மேனேஜர் சார் அப்பப்ப பார்த்து தேவையானதெல்லாம் வரவைச்சிடுவார்....இப்பத்தான் சாப்பிட்டு வர்றேன்னு கிளம்பினாரு.....!போன் பண்ணி வரச் சொல்லட்டுமா.....?",என்று கேட்க,



"இல்ல வேலு....!நான் பார்த்துகிறேன்....!நீங்களும் போய் சாப்பிடுங்க....!",என்றபடி அவரை அனுப்பி வைத்தான்.



அங்கு கொட்டப்பட்டிருந்த மணலில் இருக்கும் கிளிஞ்சல்களை பொறுக்கியபடி இருந்தவளின் பின்னால் சென்று கை கட்டி நின்றபடி....அவளை ரசித்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதித்யன்.



"என்ன பண்ணிக்கிட்டு இருக்க பேபி....?",



"கிளிஞ்சல்....சங்கு எல்லாம் பொறுக்கிட்டு இருக்கேன்....",என்றவள் தன் கை நிறைய சேகரித்திருந்த கிளிஞ்சல்களை காட்டினாள்.



"இதை வைச்சு என்ன பேபி பண்ணுவ....?குழந்தை மாதிரி விளையாடுவியா....?",சிரித்தபடியே அவன் வினவ,



"ம்....இதோ இந்த கிளிஞ்சலையெல்லாம் காதுக்கிட்ட வைச்சு குலுக்கினா....ஒரு சத்தம் கேட்கும்....!அந்த சவுண்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்....!நீங்களும் கேட்டுப் பாருங்க...!",என்றபடி அவன் காதுக்கருகில் தன் கையை கொண்டு சென்று குலுக்கினாள்.அத்தோடு நில்லாமல்,"எப்படி நைஸ்ல....?",என்ற கேள்வியை வேறு கேட்டு வைத்தாள்.



குழந்தைத்தனமாக குதூகலித்தபடி தன் முன் நின்றிருந்தவளை ரசித்தவன்,"அது சரி....!தி கிரேட் பிசினஸ்மேன் ஆதித்யனை இப்படி கிளிஞ்சல் பொறுக்கி விளையாட சொல்றயா....?இதை மட்டும் யாரவது பார்த்தால்....நாளைக்கு ஃபிளாஷ் நியூஸ் நானாகத்தான் இருப்பேன்....!",என்க,



"ஹய்ய....ரொம்பவும்தான் பெருமையடிச்சுக்காதீங்க.....இவரு பெரிய ஆதித்யா பிர்லா பாரு.....!நீங்க என்ன பண்றீங்கன்னு கண்காணிச்சிட்டே இருக்கற அளவுக்கு....பத்திரிகைக்காரங்க ஒண்ணும் வேலை இல்லாம சும்மா இல்ல.....!",



"இன்னமும் என் உயரம் தெரியாம பேசிக்கிட்டு இருக்க பேபி....!சரி வா...!மேலே போய் பார்க்கலாம்....!",



மேலே மொட்டை மாடிக்குச் செல்லும் வழியில் ஒரு சில படிக்கட்டுகள் கட்டப்படாமல் இருந்தன.அந்த இடத்தைக் கடந்து மேலே செல்வதற்கு வசதியாக கயிறு ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.அதைப் பிடித்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் இரும்புக் கம்பியில் கால் வைத்து மேலே ஏற வேண்டும்.



அதைப் பார்த்த ஆதித்யன்,"நீ இங்கேயே இரு....!நான் மேலே போய் பார்த்துட்டு வர்றேன்....",என்றபடி கயிறை பிடிக்க,



"வேண்டாம்....!மேலே வெறும் மொட்டை மாடிதான இருக்கு....படிக்கட்டு வைச்சதுக்கு அப்புறம் போய் பார்த்துக்கலாம்....!",அவன் எங்கே கீழே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் அவள் மறுத்தாள்.



"இல்ல....மேலே ரூஃப் கார்டன் அமைச்சிட்டு இருக்காங்க....!அந்த வொர்க் எப்படி போகுதுன்னு பார்த்துட்டு வந்துடறேன்....!",அவன் தொங்கிக் கொண்டிருந்த கயிறைப் பிடித்துக் கொண்டு மேலே ஏற எத்தனிக்க,



"அய்யோ....!வேண்டாம்....!எனக்கு பயமாயிருக்கு....!எங்கேயாவது கீழே விழுந்துடப் போறீங்க....",அவள் குரல் பதட்டத்துடன் வந்தது.



"பேபி....!என் மேலே உனக்கு இவ்வளவு அக்கறையா.....?எனக்கு அடிபட்டறக் கூடாதுன்னு....இப்படி பதறுற.....!",அவன் குறும்பாக கேட்க,



சட்டென்று சுதாரித்துக் கொண்டவள்,"அய்ய....!நான் ஒண்ணும் உங்களுக்காக வருத்தப்படல....!இன்னும் சென்னை எனக்கு பழக்கம் ஆகல....ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பஸ் பிடிச்சுக் கூட போகத் தெரியாது....!இந்த லட்சணத்துல....உங்களை நம்பி ஆபிஸ்ல இருந்து இவ்வளவு தூரம் வந்துட்டேன்....!எங்கேயாவது கீழே விழுந்து காலை உடைச்சிக்கிட்டீங்கன்னா....என்னை யாரு பத்திரமா ஆபிஸ்ல கொண்டு போய் சேர்க்கிறது....?ம்....?",என்றபடி தோளை குலுக்கினாள்.



அவன் கயிறைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறுகிறேன் என்று சொன்னபோதே....அவளுக்குப் பதட்டமாகத்தான் இருந்தது.அதனால்தான்....அவள்...அவனைத் தடுத்தாள்.இப்பொழுது அவன் அவ்வாறு கேட்கவும்,'எங்கே தன் பதட்டத்தைக் கண்டு கொள்வானோ....?',என்ற பயத்தில் அவசர அவசரமாக பேசினாள்.



"அப்படியா.....!டோன்ட் வொர்ரி பேபி....!என்னை நம்பி வந்துட்டா....அப்படியெல்லாம் பாதியில கழட்டி விட மாட்டேன்....அண்ட் இப்படி ஏறுவது ஒண்ணும் எனக்கு புதுசு இல்ல....!உன்னைப் பத்திரமா கொண்டு போய் சேர்த்துடறேன்....!",லேசாக உதட்டை வளைத்தபடி அவன் கூறிய விதமே....அவள் சொன்ன காரணத்தை அவன் நம்பவில்லை என்று காட்டியது.



இருந்தும் விட்டுக் கொடுக்க மனமில்லாமல்,"அப்படியா....!ரொம்ப சந்தோஷம்....!தாராளமா போய்ட்டு வாங்க....!",என்றாள் அசால்ட்டாக.



அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,"நான் போய்ட்டு சீக்கிரம் வந்துடறேன்....!நீ இங்கேயே நில்லு...!இன்னும் மாடிப்படிக்கு கைப்பிடி வைக்கல....எட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்காத....!அப்புறம்....மேலே வரணும்ன்னு ட்ரை பண்ணாத....உன்னால முடியாது....!",அக்கறையுடன் அவன் கூறிக் கொண்டிருக்க,



அவளோ,"எனக்குத் தெரியும்....!நான் ஒண்ணும் குழந்தை இல்ல....!",என்றாள் வெடுக்கென்று.



"அந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாகவே இருக்கு....!",அவளைப் பார்த்து சொன்னவன்....கயிறைப் பிடித்தபடி லாவகமாக மேலே ஏறிச் சென்றான்.அவன் ஏறிச் சென்ற வேகத்தைப் பார்த்தவள்,'போன ஜென்மத்தில் குரங்கா பிறந்திருப்பானோ....!',என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.



மேலே நின்றபடி அவளைத் திரும்பிப் பார்த்தவன்,"நாம எல்லாருமே குரங்கில் இருந்துதானே வந்திருக்கிறோம்....!",என்க,



'நாம் மனதில் நினைத்ததை இவன் எப்படி கண்டுபிடித்தான்....!',என்று அவள் யோசிக்கும் போதே,"ரொம்ப திங்க் பண்ணாதே பேபி....!அதுதான் நீ என்ன நினைக்கிறேன்னு....உன் முகத்துலேயே தெரியுதே....!",என்றபடியே நகர்ந்தான்.



அவன் சென்ற பிறகு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,"மேலே ஏறிப் பார்க்கலாமா...?",என்று கயிறைப் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.அதிலும் அவன்,'உன்னால் முடியாது....!',என்று கூறியது வேறு அவளை சீண்டிப் பார்த்தது.'என்ன....இந்தக் கயிறைப் பிடிச்சிட்டு அந்தக் கம்பி மேல கால் வைச்சுப் போகணும்....!அவ்வளவுதான....ட்ரை பண்ணி பார்ப்போம்....!',என்று மனதிற்குள் பேசிக் கொண்டவள்.....தன் கைப்பையை கீழே வைத்துவிட்டு....அந்தக் கயிறைப் பிடித்தபடி மேலே ஏற ஆரம்பித்தாள்.



அதைப் பிடித்தபடியே பாதி தூரம் வரை சென்றவள்....பக்கத்தில் இருக்கும் கம்பியில் கால் வைப்பதற்காக காலை எட்டினாள்.அவ்வளவுதான்....!அந்தக் கம்பியில் கால் வைக்க முடியாமல் போக....இன்னும் சற்று காலை எட்ட....கயிறு ஆடிய வேகத்தில் பக்கத்தில் இருந்த சுவற்றில் போய் 'டொம்'மென்று மோதிக் கொண்டாள்.



ரூஃப் கார்டனின் அமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனின் காதில்,"அய்யோ....!அம்மா....!",என்ற நித்திலாவின் அலறல் விழவும்....பதறி ஓடி வந்தான்.வந்து பார்த்தவன்....சிரிப்பை அடக்க முடியாமல்....சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.கயிற்றைப் பிடித்து தொங்கியபடி....மேலே பார்த்துக் கத்திக் கொண்டிருந்தாள் அவள்.



"ஹா....ஹா....!பேபி....!என்ன....எக்ஸர்சைஸ் பண்றியா....?ஹா...ஹா...!",வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் சிரிக்க,



"ப்ச்....!ரொம்ப சிரிக்காதீங்க....!மேலே ஏறி வரலாம்ன்னு ட்ரை பண்ணினேன்....!அந்தக் கம்பில கால் வைக்கவே முடியல....!கயிறு ரொம்பவும் ஆடுது...!",அவனைப் பார்த்து பாவமாக கூறினாள் நித்திலா.



"நான் உன்னைக் கீழேதான நிற்க சொன்னேன்....உன்னை யாரு மேலே ஏறி வரச் சொன்னது....?பழக்கம் இருக்கறவங்கனாலதான் இப்படி கயிறைப் பிடிச்சிட்டு மேலே ஏறி வர முடியும்.....!நான் சொல்ற எதையுமே காது கொடுத்து கேட்க கூடாதுங்கற முடிவுல இருக்கியா....?",



"ஐயோ....!ரூஃப் கார்டன் பார்க்கணும்ங்கிற ஆசையில மேலே ஏறி வந்துட்டேன்....!இப்ப ஏதாவது பண்ணுங்க....கை வலிக்குது....!",முகத்தை சுருக்கியபடி கேட்டவளைப் பார்த்தவனுக்கு ரசிக்கத்தான் தோன்றியது.



"சரி....சரி...!வா....!அந்தக் கயிறை விட்டுட்டு என் கையைப் பிடிச்சுக்க....மேலே தூக்கி விடறேன்....!",என்றபடி அவன் கையை நீட்ட,



"ம்ஹீம்....!நான் கயிறை விட மாட்டேன்....!உங்களால என் வெயிட்டை தூக்க முடியாது....!கீழே போட்ருவீங்க....",பயந்துகொண்டு கயிறை விட மறுத்தாள்.



"ஹே....!காமெடி பண்ணாத பேபி....!என்னால உன்னைத் தூக்க முடியாதா....?உன்னை மாதிரி இன்னும் நாலு பொண்ணுங்களை ஒரே டைம்ல தூக்குவேன்.....!நீ அந்த கயிறை விடு...!",என்றவன் அவள் கையைப் பிடித்து தூக்க முயல,



அவனது பேபியோ....அந்தக் கயிறை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு 'விடமாட்டேன்...!',என்று அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்தாள்.



"சரி....!நீ இப்படியே இந்தக் கயிறை பிடிச்சிட்டே தொங்கிட்டு இரு....!இன்னும் கொஞ்ச நேரத்துல...சாப்பிடப் போனவங்க எல்லோரும் வந்துடுவாங்க....!அவங்களுக்கு முன்னாடி குரங்கு மாதிரி தொங்கிட்டு இரு....!",திட்டியபடி அங்கிருந்து நகரப் போனான்.



"ஹைய்யோ....!வேண்டாம்....!போகாதீங்க....!என்னைத் தூக்கி விடுங்க....!இந்தக் கயிறை விட்டர்றேன்....",பதறியபடி கத்தினாள் அவள்.



சிரித்தபடியே அவள் அருகில் வந்தவன்....குனிந்து அவள் கையைப் பற்றியபடி அலேக்காக....அவளை மேலே தூக்கினான்.பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டவள்....கால்கள் தரையில் படவும்தான் கண்களைத் திறந்தாள்.



"தேங்க் காட்....!நல்லபடியா மேலே வந்துட்டேன்....!",என்று நிம்மதிப் பெருமூச்சு விடவும்,



"தேங்க் காடா....?நீ எனக்குத்தான் நன்றி சொல்லணும்....!எவ்வளவு பத்திரமா உன்னைத் தூக்கி விட்டுருக்கேன்....!அதுவும் இல்லாம....பேபி....!நீ ஒண்ணும் அவ்வளவு வெயிட் இல்ல....!",கிசுகிசுப்பாக அவன் குரல் காதருகில் ஒலிக்கவும்தான்....அவனருகில் தான் நெருங்கி நின்றிருப்பது அவளுக்கு உரைத்தது.



சட்டென்று விலகியவள்,"ரொம்ப தேங்க்ஸ்....!",என்றபடி அங்கிருந்து அகன்றாள்.மெலிதான புன்னகையுடன் அவளைத் தொடர்ந்தவன்....அங்கு நடக்கும் வேலைகளைப் பற்றி அவளுக்கு விளக்கிக் கூற ஆரம்பித்தான்.அவளும் ஆர்வமாக கேட்டுக் கொண்டாள்.



எந்தெந்த இடங்களில் செடி வைக்கப்படும்....?அங்கு அமைக்கப்படும் செயற்கை நீரூற்று...டேபிள் போடப்படும் இடம் என அனைத்தையும் காட்டினான்.கண்களில் ஆர்வம் மின்ன,"வாவ்....!சூப்பர் ப்ளான் சார்....!",மனதார பாராட்டினாள் அவள்.



அந்த இடத்திற்கு வந்ததும்,"நீ இறங்கறயா....?",அவன் கேட்க,



"இல்ல...நீங்க ஃபர்ஸ்ட் இறங்குங்க....!எப்படி இறங்கறீங்கன்னு பார்த்துட்டு....அதே மாதிரி நானும்
இறங்கிக்கிறேன்....!",என்னமோ அவன் உதவி இல்லாமல் இறங்கி விடுபவளைப் போல்...அவள் கூற,



"சரி....!",என்றபடி அவனும் முன்னே இறங்கி விட்டான்.



அவனுக்குப் பிறகு இறங்கியவளால்...முன்பு போலவே இப்பொழுதும் கம்பியில் எட்டி காலை வைக்க முடியவில்லை.ஆதித்யன் கீழே நின்றபடியே அவள் இடையைப் பற்றி இறக்கி விட்டான்.அவளது மேனி முழுவதும் அவனது உடலோடு உரசியது.ஆதித்யனின் பாடு பெரும் கொண்டாட்டமாக இருந்தது என்றால்....நித்திலாவின் பாடு பெரும் திண்டாட்டமாக இருந்தது.



அவனது வலிய கரங்கள்...தனது இடையில் அழுத்தமாகப் புதைந்ததில்....உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தாள்.



இருவரும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்தனர்.பெரும் தடுமாற்றமும்....தயக்கமும் அவர்களை சூழ்ந்திருந்தது.தொழிலில் எவ்வளவு பெரிய தடையையும்....உறுதியாக எதிர் கொள்பவன்....அந்தச் சிறு பெண்ணின் கடைக்கண் பார்வையை தடுமாற்றத்தோடு எதிர்கொண்டான்.



அவளது அருகாமை தந்த மயக்கம்....அவனை....அவளிடம் நெருங்கச் சொல்லி வற்புறுத்தினாலும்...அவனது காதல் கொண்ட மனமோ....'இல்லை....!வேண்டாம்....!இந்த ஏகாந்தமான சுகந்தத்தை அனுபவி....!காதலோடு அவள் விழிகளோடு மட்டும் உறவாடு....!',என்று உத்தரவிட்டது.



இதுதான் காதல் செய்யும் மாயம்....!காமம் அல்லாது....வெறும் காதலோடு மட்டுமே ஒரு பெண்ணை பார்க்கச் சொல்லும்....!அதுமட்டுமல்ல....பட்டும் படாமலும்....தொட்டும் தொடாமலும்....தேகம் உரசிக் கொள்ளும் சுகமே போதும்....அந்த ஜென்மம் முழுவதும் வாழ்ந்து விடலாம்....என்ற வேகத்தையும் காதல் மட்டுமே கொடுக்கும்....!



அங்கு இருவர் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்து காவியம் படைத்துக் கொண்டிருக்க....பூஜை வேளை கரடியாக அங்கு வந்த மேனேஜரின் குரலில்....இருவரும் நடப்பிற்கு வந்தனர்.



"வாங்க சார்....!நீங்க வந்திருப்பதா மேஸ்திரி சொன்னாரு....!",என்ற மேனேஜரின் குரலில்....அவசர அவசரமாக....அவள் இடையைப் பற்றியிருந்த தனது கரங்களை விலக்கினான் ஆதித்யன்.நித்திலாவும் தனது கைப்பையை எடுப்பது போல் குனிந்து கொண்டாள்.



"யா...மிஸ்டர்....!நான் நினைச்சபடியே பில்டிங் வந்திருக்கு....வெரி குட்....!",சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு ஆதித்யன்....மேனேஜரிடம் பேச ஆரம்பித்தான்.



மேனேஜரிடம் வேலை விஷயமாக சிறிது நேரம் பேசிவிட்டு...இருவரும் கிளம்பிச் சென்றனர்.காரில் திரும்பும் போது....இருவருக்குள்ளும் அழகான மௌனமே நிலவியது.'காதலில் மௌனம் கூட ஒரு வகையான அழகுதான்....!',என்பதை உணர்ந்து அனுபவித்தான் ஆதித்யன்.





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 22 :



அடுத்த நாள் காலை....வேகமாக உள்ளே நுழைந்த ஆதித்யன்....நித்திலாவின் டேபிள் மீது ஒரு கவரை வைத்தான்.



"என்ன இது....?",அவள் கேட்க,



"எந்நேரமும் என்னை கண்காணிச்சிட்டே இருக்கற அளவுக்கு....பத்திரிக்கைக்காரங்க ஒண்ணும் வெட்டியா இல்லைன்னு நீதானே சொன்ன....அந்த வெட்டியா இல்லாதவங்க பண்ணின வேலையைப் பாரு.....!",கை கட்டியபடி அசால்ட்டாகக் கூறினான் அவன்.



உள்ளுக்குள் உதறலெடுக்க....அதைப் பிரித்துப் பார்த்தாள் நித்திலா.உள்ளே....ஆதித்யனும் நித்திலாவும் இணைந்திருக்கும் புகைப்படம் இருந்தது.இரண்டு கைகளிலும் கிளிஞ்சல்கள் நிரம்பியிருக்க....இவள் அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி ஏதோ கூற....அவன்....கண்களில் வழியும் காதலுடன் அவளைப் பார்த்து சிரித்தபடி....மிக அழகாக எடுக்கப்பட்டிருந்தது அந்தப் புகைப்படம்.



"கடவுளே....!இதை யாரு எடுத்தா....?",நடுங்கும் குரலில் அவள் ஆதித்யனிடம் வினவ,



"வேற யாரு....?ரிப்போர்ட்டர்தான்....!தின நிருபர் பத்திரிகையினுடைய ரிப்போர்ட்டர்....அந்த வழியா போகும் போது...நம்ம ரெண்டு பேரையும் பார்த்திருக்காரு....!கிசுகிசு போடறதுக்கு ஒரு நியூஸ் கிடைச்சதுன்னு போட்டோ எடுத்துட்டாரு....!",



"அய்யோ....!என்ன சொல்றீங்க....?",அவள் பதற,



"தின நிருபர் பத்திரிகையினுடைய M.D எனக்கு பழக்கமானவரு....ஸோ....இந்த ஃபோட்டாவை பார்த்த உடனே எனக்கு போன் பண்ணி,'என்னப்பா....?காதலா....?'ன்னு விசாரிச்சாரு....!",அவன் பேசிக் கொண்டிருக்க...அவன் பேச்சின் ஊடே புகுந்தவள்,



"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க....?",படபடப்பாக வினவ,



"நான் என்ன சொல்வேன் பேபி....!ஆமாம்....!இது காதல்தான்....!நாங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு சொன்னேன்....!",தோளை குலுக்கியபடி படு கூலாக கூறினான்.



"அய்யோ....!முருகா.....!என்ன காரியம் பண்ணி வைச்சிருக்கீங்க.....?அப்ப....இந்த போட்டோ பேப்பர்ல வ...வந்திடுமா....?",கலங்கிய குரலில் அவள் வினவ,



"ஹ்ம்ம்....வந்தாதான் என்ன...?நான் உண்மையைத்தானே சொன்னேன்....!அந்த நியூஸ்ல ஒண்ணும் பொய் இல்லையே.....?நாளைக்கு நியூஸ் பேப்பர்ல நாம ரெண்டு பேரும்தான் ஃப்ளாஷ் நியூஸ்....!",



அவன் கூறியதைக் கேட்டு தன் நெற்றியில் அறைந்து கொண்டவள்,"போச்சு....!எல்லாம் போச்சு....!இந்த நியூஸ் மட்டும் எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சுதுன்னா....அவரு என்னைப் பத்தி என்ன நினைப்பாரு....?என் மேல வைச்சிருந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் ப...பண்ணிட்டேன்னு நினைப்பாரு.....!'இதுக்குத்தான் உன் பொண்ணை சென்னைக்கு அனுப்பினாயா'ன்னு என் சொந்தக்காரங்க அவரைப் பார்த்து கேள்வி கேட்பாங்க.....!நீங்க மனுஷ ஜென்மமே இல்ல....எ...எதுக்காக இப்படி என் வாழ்க்கையோட விளையாடறீங்க.....?",கையில் இருந்த போட்டோவை சுக்கு நூறாக கிழித்து....அவன் மீது எறிந்தவள்....பைத்தியம் பிடித்தது போல் கத்தினாள்.



கண்களில் அருவி போல் கண்ணீர் வழிய...,"என் நிலைமையில இருந்து கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா....?உங்களுக்கு உங்க பிடிவாதம்தான் முக்கியம்.....!",கோபமாக அவள் பேசிக் கொண்டிருக்க,



அவளது தோளை தனது இரு கைகளாலும் அணைத்தவன்,"பேபி....!கூல் டா....!இங்கே பாரு....!முதல்ல அழுகையை நிறுத்து....!",சமாதானப்படுத்தியபடியே அவளது விழிநீரை துடைத்து விட்டான்.



அவன் கைகளைப் பிடித்து தள்ளி விட்டவள்,"இவ்வளவு பெரிய காரியம் பண்ணி வைச்சிட்டு 'அழுகாதே....!'ன்னு சொன்னா....எப்படி அழாம இருக்க முடியும்....?",தேம்பலுக்கு நடுவே வந்து விழுந்தன வார்த்தைகள்.



"இங்கே பாருடா பேபி....!முதல்ல நான் சொல்ல வர்றதை கேளு....நான் சும்மா உன்கிட்ட விளையாண்டேன் டா....!நான் அப்படியெல்லாம் பண்ணுவேனா....?சொல்லு....?ம்....?",அவன் இதமாய் வினவ...அவளது அழுகை மெல்ல குறைந்தது.



"என்ன சொல்றீங்க....?விளையாடுனீங்களா....?",தன் கண்களில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்தபடி அவன் முகம் நோக்க,



"ம்...ஆமாம்....!நீ இப்படி அழுவேன்னு எதிர்ப்பார்க்கல....!சும்மா உன்னை சீண்டி பார்க்கலாமேன்னு நினைச்சேன்....!",அவள் நெற்றியில் கலைந்து விழுந்திருந்த முடிக்கற்றையை ஒதுக்கியபடி மென்மையான குரலில் கூறினான்.



அவளுக்கு இருந்த பதற்றத்தில் அவள் நெற்றியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அவனது விரல்களை அவள் கவனிக்கவில்லை.தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதிலேயே அவள் குறியாய் இருந்தாள்...



"அப்ப....அந்த போட்டோ....?",



"அந்த ரிப்போர்ட்டர் போட்டோ எடுத்ததெல்லாம் உண்மைதான்....!நேத்து நைட் தின நிருபருடைய M.D...என்கிட்ட போன் பண்ணி விசாரிச்சப்ப....'அதெல்லாம் இல்ல...!நாங்க பிஸினெஸ் விஷயமா பேசிக்கிட்டு இருக்கறப்ப உங்க ரிப்போர்ட்டர் போட்டோ எடுத்துட்டான்....!இந்த விஷயத்தை பெரிசு படுத்த வேண்டாம்....!எடுத்த போட்டோஸை எல்லாம் எனக்கு அனுப்பி வையுங்க....'ன்னு சொல்லிட்டேன்....!",அவன் விரல்கள் அவள் நெற்றி முடியை கலைத்து விளையாட ஆரம்பித்தன.



"கடவுளே....!நன்றிப்பா....!",நிம்மதி பெருமூச்சு விட்டவளுக்கு அப்பொழுதுதான் உரைத்தது....அவன் விரல்கள் தன் நெற்றியில் நடத்தும் ஊர்வலத்தை....!அவனை முறைத்தபடியே சட்டென்று அவன் கையைப் பிடித்து தள்ளவிட்டாள்.



எதுவும் பேசாமல் அவள் நெற்றியிலிருந்து தன் விரல்களை விலக்கிக் கொண்டவன்....அவள் கன்னங்களை தன் இரு கைகளாலும் ஏந்தியபடி,"நிலா....!இங்கே பாருடா.....!எந்தப் பிரச்சனையையும் உன்கிட்ட நெருங்க விட மாட்டேன்....!எதுவா இருந்தாலும்....என்னைத் தாண்டித்தான் உன்னைத் தொட முடியும்....!இன்னும்....என் காதலுடைய ஆழத்தை நீ சரியா புரிஞ்சுக்கல.....!சின்ன துரும்பு உன் மேல படக் கூட நான் அனுமதிக்க மாட்டேன்.....!அப்படி இருக்கும் போது.....இவ்வளவு பெரிய அவமானத்தை உனக்கு எப்படி தருவேன்.....?



நீ என் உயிர் டி...!நீ வேற....நான் வேற இல்ல....!உன் வாழ்க்கையை என்னை நம்பி....என் கையில நீ கொடுக்கலாம்.....!நான் இருக்கற வரைக்கும்....உனக்கு எந்த ஒரு கஷ்டமும் வராது....!ஒருவேளை.....நான் இந்த உலகத்துல இல்லாம போனாலும்.....உனக்கு ஒரு கஷடமும் வர விட மாட்டேன்....!",தன் ஒட்டு மொத்த காதலையும் தன் விழி வழியாக அவள் விழிகளுக்குள் பாய்ச்சியபடி கூறினான்.அவனது ஒவ்வொரு வார்த்தையும் கரை காணாத காதலில் மூழ்கித் திணறி வெளிவந்தது.



அவன் வார்த்தைகளில் முதன் முதலாக...அவள் மனதில் ஒரு சிறு சலனம் எட்டிப் பார்த்தது.அவனது பார்வைச் சுழலில் இருந்து மீள முடியாமல்....மீள விருப்பம் இல்லாமல் நின்றிருந்தாள் நித்திலா.



"ஐ லவ் யூ பேபி....!",மனதின் ஆழத்திலிருந்து கூறியவனின் வார்த்தைகளை ஏனோ அவளால் வெறுக்க முடியவில்லை.இதயத் துடித்து எகிறி குதிக்க....கால்கள் வேரோட நின்றிருந்தவளின் நெற்றியில் முத்தமிடும் நோக்கத்தோடு அவள் முகம் நோக்கி குனிந்தான் அவன்.சட்டென்று தன் நினைவுக்கு வந்தவள்....அவனை விலக்கி விட்டு வெளியேறி விட்டாள்.



அவள் மனதில் இனம் விளங்காத ஒரு படபடப்பு....!அன்று....அவள் இருதயத்தில் காதலின் முதல் விதை விதைக்கப்பட்டது என்பதுதான் உண்மை....!காதல் தேவன்....வெற்றிகரமாக தன் முதல் காதல் கணையை அவள் மீது எய்து விட்டான்....!அவளை முழுவதுமாக காதல் வலையில் வீழ்த்துவதற்கு....தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான் காதல் தேவன்....!!



.......................................................................................................................................



நாட்கள் மிக அழகாக கடந்து செல்ல....கெளதம் சுமித்ராவின் காதலும் மிக அழகாக வளர்ந்து கொண்டிருந்தது.



"இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க மிஸ்டர்.பாலா.....?",தன் முன்னால் நின்றிருந்த பாலாவை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் ஆதித்யன்.அவன் கையில் அந்த மாதத்திற்கான ப்ரொடக்க்ஷன் ரிப்போர்ட் இருந்தது.



"சார்....!தேவையான அளவுக்கு ரா மெட்டீரியல்ஸ் சப்ளை இல்லை....அதனாலதான் ப்ரொடக்க்ஷன் குறைஞ்சு போச்சு....!",பாலா பதட்டத்துடன் விளக்கிக் கொண்டிருந்தான்.



"ஸ்டாப் இட்....!ஐ டோன்ட் வான்ட் எனி மோர் இடியாட்டிக் ரீசன்ஸ்.....!",அவன் கத்திய கத்தலில் நித்திலாவே பயந்து போனாள்.



"சார்....நான் என்ன சொல்ல வர்றேன்னா....",பாலா எதையோ கூற ஆரம்பிக்க,



"நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.....!சின்னக் குழந்தை மாதிரி ரா மெட்டீரியல்ஸ் பத்தலைன்னு காரணம் சொல்றீங்க....!எப்பவுமே ரா மெட்டீரியல்ஸ் ஸ்டாக் வைச்சிருக்கணும்ன்னு தெரியாதா....?",



"ஸ்டாக் பண்ணி வைச்சதை யூஸ் பண்ணியுமே....டார்க்கெட்டை ரீச் பண்ண முடியல....சுபம் எலக்ட்ரிக்கல்ஸ்க்கு போன் பண்ணி ரா மெட்டீரியல்ஸ் சப்ளை பண்ண சொல்லியும்....அவங்க டிலே பண்ணிட்டாங்க....!அது மட்டும் இல்லாம....அவங்க இந்த மன்த் குறைவான யூனிட்ஸ் தான் சப்ளை பண்ணியிருக்காங்க....!",



சுபம் எலக்ட்ரிக்கல்ஸ் என்றதுமே....நித்திலாவிற்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது.அன்று...ஆதித்யன் போனில் பேசியது வேறு நினைவுக்கு வந்தது.அவன் பேசியதையும்....இன்று....பாலா பேசுவதையும் இணைத்துப் பார்த்தவளுக்கு....ஆதித்யன்தான் ஏதோ செய்திருக்கிறான் என்பது புரிந்தது.அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.



"நீங்க பண்ணினது தப்புதான் பாலா....!இதனால....எனக்கு எவ்வளவு கோடி லாஸ் தெரியுமா....?நான் ஒண்ணும் சின்ன அளவுல பிஸினஸ் பண்ணிட்டு இல்ல....இந்த மாசம் போனால்....அடுத்த மாசம் பார்த்துக்கலாம்ன்னு சொல்ல....!நான் இந்த பிசினஸை உலக அளவில பண்ணிக்கிட்டு இருக்கேன்....!ஒரு மாசம் டார்க்கெட் மிஸ் ஆனால்....அதனால எவ்வளவு லாஸ் ஆகும்ன்னு உங்களுக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்....!",



"யெஸ் சார்.....!ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்....பட்....இது சப்ளையர்சுடைய தப்பு....!",



"உங்களுடைய தப்பை தூக்கி இன்னொருத்தர் மேல போடாதீங்க....!வேணும்ங்கற அளவுக்கு ஸ்டாக் மெயின்ட்டெய்ன் பண்ணணும்ங்கிறது உங்களுக்குத் தெரியும்தானே......?",



"யெஸ் சார்....!அது என் ட்யூட்டிதான்....!பட்....இப்படி ஆகும்ன்னு நான் எதிர்பார்க்கல.....",



"வெல் பாலா....!நீங்க கிளம்பலாம்....!உங்க செட்டில்மெண்ட் ரெடியா இருக்கு....G.M கிட்ட போய் வாங்கிட்டு கிளம்புங்க....!",அசால்ட்டாக கூறிவிட்டு பைலை பார்க்க ஆரம்பித்து விட்டான் ஆதித்யன்.



அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாலா,"சார்....!ப்ளீஸ்.....!இவ்வளவு பாப்புலரான கம்பெனில இருந்து திடீர்ன்னு என்னை விலக்குனா....எனக்கு வேற எங்கேயும் வேலை தர மாட்டாங்க....!இது ஒரு ப்ளாக் மார்க் மாதிரி எனக்கு ஆகிடும்....!ப்ளீஸ் சார்....!இனி இப்படி நடக்காம பார்த்துகிறேன்....!",தன் மேல் தவறில்லாத போதும் கெஞ்ச வேண்டிய நிலைமையில் இருந்தான் பாலா....அப்படிப்பட்ட நிலைமையை உருவாக்கியிருந்தான் ஆதித்யன்.



"நான் எதுவும் பண்ண முடியாது பாலா....!நீங்க கிளம்பலாம்....!",தயவு தாட்சணியமின்றி உறுதியாக கூறினான் அவன்.



"சாரி சார்....!ப்ளீஸ்....!இனி இது மாதிரி நடக்காது....!ஒரு சான்ஸ் கொடுங்க....!ப்ளீஸ்....!",மன்றாடிக் கொண்டிருந்தான் பாலா.



அவனையே சிறிது நேரம் பார்த்தவன்,"ஒகே பாலா....!நீங்க இவ்வளவு கேட்கறதுனால....நான் சம்மதிக்கிறேன்....!நீங்க இங்கேயே கண்ட்னியூ பண்ணுங்க....!பட்....இன்னொரு முறை இந்த மாதிரி நடந்தா....நான் எதைப் பத்தியும் கவலைப் பட மாட்டேன்....!இதனால....உங்க கேரியர் லைப் பாதிக்கும்ன்னு தெரிஞ்சாலும்....ஐ டோன்ட் கேர்....!புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்....?",கடைசி வார்த்தையை உச்சரிக்கும் போது அவன் பார்வை வெகு அழுத்தமாக நித்திலாவின் மீது படிந்தது.



நித்திலாவிற்கு நன்கு புரிந்து போனது....இவன் தன்னை மறைமுகமாக தாக்குகிறான் என்று....!தன்னை பாலாவுடன் பேச விடாமல் செய்வதற்காக....அவன் எந்த எல்லைக்கும் போவான் என்று புரிந்தது.இன்று....தனக்காக பல கோடிகளை இழக்கத் துணிந்தவன்....நாளை எதற்கும் துணிவான் என்ற உண்மை அவள் மனதில் அறைந்தது.தான் இன்னும் பாலாவுடன் பழகினால்....அவனது வேலைக்கே ஆபத்து என்பது அவளுக்கு நன்கு புரிந்து போனது.



"தேங்க் யூ சார்....!தேங்க் யூ ஸோ மச்....!",நன்றி உரைத்துவிட்டு பாலா வெளியேறிவிட....ஒரு வெற்றிப் புன்னகையுடன் நித்திலாவைப் பார்த்தான் ஆதித்யன்.



ஆத்திரத்துடன் அவனை ஏறிட்டவள்,"இதெல்லாம் ரொம்ப தப்பு....!தேவையில்லாம நீங்களே ஒரு தப்பை உருவாக்கி....அதை நீங்களே சம்பந்தமில்லாம பாலா மேல போட்டு இருக்கீங்க....!இதை பண்றதுக்கு உங்க மனசாட்சி உறுத்தலையா....?",கோபம் குறையாதவளாய் அவள் கத்திக் கொண்டிருந்தாள்.



"எதுக்கு டி மனசாட்சி உறுத்தணும்....?என்னைப் பொறுத்த வரைக்கும்....நான் பண்ணினது சரிதான்....!நான் காதலிக்கிற பொண்ணை வேற யாருக்கும் விட்டுத் தர நான் தயாரா இல்ல....!நீ எனக்கே எனக்கு மட்டும்தான்....! உன் மனசில நான் மட்டும்தான்...முதன்மையானவனா இருக்கனும்....!உன் பேரண்ட்ஸ் கூட எனக்குப் பிறகுதான்....!உன்னைடைய முழுமையான அன்பும்...காதலும் எனக்கு மட்டும்தான் சொந்தம்....!



எனக்குப் பிறகுதான் நீ மத்தவங்களைப் பத்தி யோசிக்கணும்.....!உன் எண்ணங்கள்ல கூட நான்....நான் மட்டும்தான் நிறைஞ்சு இருக்கணும்.....!இதையெல்லாம் நீ சுயநலம்ன்னு சொன்னா....சொல்லிக்கோ....!எனக்கு அதைப் பத்தி எந்த கவலையும் இல்ல....ஆமா....!நான் சுயநலக்காரன்தான்.....!என் காதல் சுயநலமானதுதான்.....!இங்கே பாரு டி.....!ஒண்ணை உன் மனசுல நல்லா பதிய வைச்சுக்க.....உன்னை உனக்காக கூட விட்டுத் தர....நான் தயாரா இல்ல....!புரிஞ்சுதா.....?",கிட்டத்தட்ட உறுமி விட்டு வெளியேறினான்.



அவன் சென்றதுமே புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.எங்கே அவனுடைய ஆக்ரோஷமான காதல் ஆழிப் பேரலையில்...தான் அடித்துச் செல்லப்பட்டு விடுவோமோ என்ற பயம் நித்திலாவின் மனதில் எழுந்தது....!இவ்வளவு வருட வாழ்க்கையில்.....முதன்முதலாக.....ஒரு ஆண்மகனின் காதலைக் கண்டு பயந்து நின்றாள் அவள்.....!அவனுடைய வெறித்தனமான காதலின் முன்....தன் உறுதியெல்லாம் தளர்ந்து போவது போல் உணர்ந்தாள் நித்திலா.



பெரும் தடுமாற்றத்துடனும்....குழப்பத்துடனும் அமர்ந்திருந்தவளின் மனதில்.....அவளை ஊருக்கு அனுப்புவதற்கு முன்....அவளது தந்தை கூறிய வார்த்தைதான் நினைவுக்கு வந்தது.'என் மகள் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு....!',என்ற வார்த்தை....காதல் சுழலில் சிக்கி....மூழ்கிக் கொண்டிருந்தவளை மீட்டு....கரைக்கு இழுத்து வந்தது....!



'இல்லை....!நான் அவ்வளவு பலவீனமானவள் இல்லை....!ஒரு ஆணின் காதல் வார்த்தைகள் என்னை பலவீனமாக்கிவிட முடியாது....!',என்று மனத்துக்குள் அழுத்தமாக சொல்லிக் கொண்டாள்.ஆனால்....ஆதித்யனின் காதல் மாபெரும் சக்தி வாய்ந்தது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை....!அது மட்டுமல்ல....அவள் எந்த மூலையில் இருந்தாலும் சரி....அவனுடைய காதல் அவளை....அவன்பால் இழுத்து வந்து விடும் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை....!



அந்த சம்பவத்திற்கு பிறகு....நித்திலா பாலாவிடம் இருந்து விலக ஆரம்பித்தாள்.மதிய இடைவேளையின் போதும்....அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு எழுந்து வந்து விடுவாள்.பாலாவிற்கு இருந்த வேலை அழுத்தத்தில் அவனும் அவளது விலகலை கவனிக்கவில்லை.



இத்தனை விஷயங்களில் அவள் ஒன்றை யோசிக்க மறந்துவிட்டாள்.அவள் நினைத்திருந்தால்....நடந்த தவறுக்கு முழுக் காரணமும் ஆதித்யன்தான் என்பதை....அவள்....பாலாவிடம் கூறியிருக்கலாம்.ஆனால்....அவள் அதைக் கூறவில்லை.ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.அடுத்தவரின் முன்....ஆதித்யனின் மதிப்பு குறைவதை ஏனோ அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதற்கான காரணத்தையும் அவள் யோசிக்காமல் விட்டு விட்டாள்.



ஹாஸ்டலிலும் சோர்வான முகத்துடன் வலம் வந்தவளை நந்தினி கண்டுகொண்டாள்.



"நித்தி....!ரெண்டு நாளா நீ ரொம்ப டல்லா தெரியற....ஏதாவது ப்ராப்ளமா....?",அக்கறையாக விசாரிக்க,



"அதெல்லாம் ஒண்ணுமில்ல டி....!",என்று மழுப்பினாள்.



"நித்தி....!என்ன ப்ராப்ளமா இருந்தாலும் சொல்லு....நீயே மனச போட்டு குழப்பிக்காத....!பிரச்சனையை ஷேர் பண்ணினாதான் ஏதாவது ஒரு சொல்யூஷன் கிடைக்கும்....!",நந்தினி மென்குரலில் கூற....நித்திலாவிற்கு ஒரு நிமிடம் ஆதித்யனின் காதலைப் பற்றி கூறி விடலாமா என்ற எண்ணம் தோன்றியது.பிறகு 'வேண்டாம்....!',என முடிவெடுத்தவள்,



"ஏதாவது ப்ராப்ளம்ன்னா கண்டிப்பா உன்கிட்ட சொல்றேன்....!அம்மா அப்பாவை பார்த்து....ரொம்ப நாளாச்சுல்ல....அதுதான்....ஒரு மாதிரி இருக்கு....!",என்றாள்.



"ஹ்ம்ம்....வேணும்னா ஒண்ணு பண்ணு....!இந்த வாரம் வெள்ளிக்கிழமை லீவ் போட்டுட்டு ஊருக்கு கிளம்பு.....மூணு நாள்...ஜாலியா....ரிலாக்ஸா...அம்மா அப்பா கூட இருந்துட்டு வா....!",என்று யோசனை சொல்ல,



"என்னது லீவா.....?அந்த கடுவன் பூனை கொடுத்திட்டுத்தான் மறுவேலை பார்க்கும்....!",என்று நித்திலா முணுமுணுக்க,



"கடுவன் பூனையா....?அது யாரு.....?",என்றாள் நந்தினி கேள்வியாக.



"வேற யாரு....?என் M.D யைத்தான் சொல்றேன்....!",



"தி கிரேட் பிஸினஸ் மேன் ஆதித்யன் சாரையா சொல்ற....?",என்று வாய் பிளந்தாள் நந்தினி.



"அந்த கிரேட் ஆதித்யனைத்தான் சொல்றேன்....!",



"அடிப்பாவி....!அவரு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா....?சின்ன வயசிலேயே இவ்வளவு பெரிய உயரத்திற்கு போயிருக்காருன்னா....அவருக்கு எவ்வளவு திறமை இருக்கும்....?அதுவும் இல்லாம....ஆளும் பார்க்கறதுக்கு சூப்பரா இருப்பாரே....!செம ஸ்மார்ட்டா....ஸ்டைலா....கம்பீரமா....!ஹ்ம்ம்....எந்தப் பொண்ணுக்கு கொடுத்து வைச்சிருக்குன்னு தெரியல....?",ஒரு பெரு மூச்சுடன் முடித்தாள் நந்தினி.



"ரொம்பவும் மூச்சு விடாத டி....!நான் பறந்துடப் போறேன்....!",ஏனோ நித்திலாவின் மனதுக்குள் குறுகுறுப்பாக இருந்தது.



"ஆனாலும்....நீயும் கொடுத்து வைச்சவதான் டி....!தினமும் அவர் கூடவே இருந்து....அவரை சைட் அடிக்கறதுக்கான சான்ஸ் கிடைச்சு இருக்கல்ல....!எப்படி....?ஜாலியா என்ஜாய் பண்ணுவியா....?",கண்ணடித்தபடி நந்தினி வினவ,



"ஆமாண்டி....!எனக்கு வேற வேலை இல்ல பாரு.....!தினமும் அவரை சைட் அடிக்கறதுக்குத்தான் ஆபிஸ்க்கு போறேன் பாரு.....!",சலித்தபடி கூறினாள் நித்திலா.



"ஹே...ஹே....!பொய் சொல்லதேடி....!காலேஜ் படிக்கும் போது....நானும் நீயும் சேர்ந்து எத்தனை பசங்களை சைட் அடிச்சிருப்போம்.....இப்ப....தினமும் உன் ஆபிஸ்ல ஒரு அழகான பையன் உன் பக்கத்துல உட்கார்ந்திருக்கும் போது....சைட் அடிக்காமலா இருந்திருப்ப....?அதுவும்....ஆதித்யன் மாதிரி....படு ஸ்மார்ட்டான பையனை நீ ஒரு தடவை கூடவா சைட் அடிக்கல....?",



"இல்ல டி....!நான் அந்தளவுக்கு அ...அவரை கவனிச்சது இல்ல....!",இதைக் கூறும் போதே...நித்திலாவின் மனசாட்சி அவள் முன்னாள் குதித்து,'நீ இதுவரைக்கும் அவனை சைட் அடிச்சதே இல்லை....?',என்று கேள்வி கேட்க...'ச்சு....போ....!',என அதன் தலையில் குட்டி அடக்கி வைத்தாள் அவள்.



"நீ சொல்றது நம்பற மாதிரி இல்லையே.....!",இடுப்பில் கை வைத்தபடி அவளை சந்தேகப் பார்வை பார்த்தாள் நந்தினி.



"உண்மைதான் டி....!அதுவும் இல்லாம....அவருக்கு தான் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கோம்ங்கிற திமிரு....!",



"சே....சே....!அவரு அப்படிப்பட்டவர் இல்லை டி.....!அவரு எவ்வளவு பெரிய பிஸினஸ் மேன்...!அவரைப் போய் திமிரு பிடிச்சவர்....கடுவன் பூனை....அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்க....!",



"ப்ச்....!அப்ப நான் சொல்றதை நம்ப மாட்டியா....?கூடவே இருக்கிற எனக்குத் தெரியாதா....?கொஞ்சம் திமிர்....கர்வம்....ஆணவம்....ரொம்ப பிடிவாதம்...கோபம் இதெல்லாம் கலந்த கலவைதான் மிஸ்டர்.ஆதித்யன்....!",



"ஒரு பெரிய பிஸினஸ்மேன்க்கு இதெல்லாம் இருக்கிறது ஒண்ணும் தப்பு இல்ல....!பட்....அவரு அழகு மேல அவருக்குத் திமிர் இருக்குன்னு சொல்ற பாரு....அதைத்தான் என்னால நம்ப முடியல....!",



"அட....ஆமா டி....!கொஞ்சம்....கொஞ்சமென்ன நிறையவே திமிர் இருக்கு....!",



"அப்படியா.....?அது எப்படி உனக்குத் தெரியும்....?",தோழியை சந்தேகப் பார்வை பார்த்தபடி நந்தினி வினவ,



நித்திலா எங்கே அதைக் கவனித்தாள்....?ஆதித்யனைப் பற்றி கட்டுரையே வரைய ஆரம்பித்தாள்.



"எனக்குத் தெரியாதா.....?தினமும் காலைல இருந்து.....ஈவ்னிங் வரைக்கும் அவர் கூடத்தானே இருக்கேன்....!அதுவும்....அவரு போன் பேசும் போது நீ பார்க்கணும்....ஒரு கையால தலையை கோதிக்கிட்டே பேசுவாரு.....!அப்புறம் 'என்ன...?'ன்னு வாயைத் திறந்து கேட்கலாம் ல....?பட்....அப்படிக் கேட்காம....ஒற்றைப் புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கி....ஸ்டைலா கண்ணசைவிலேயே கேட்பாங்க.....!அப்புறம்....ஏதாவது யோசிக்கும் போது...ஒரு விரலால வலது புருவத்தை நிமிண்டிக்கிட்டே யோசிப்பாரு.....!இன்னும் இந்த மாதிரி நிறைய இருக்கு....!அவருடைய ஒவ்வொரு மேனரிஸம்லேயும்....ஸ்மார்ட்னெஸ்சும்....கம்பீரமும் தெறிச்சு விழும்....!அந்த திமிருதான் அவருக்கு.....!",மூச்சு விடாமல்....கைகளை ஆட்டியபடி.....அவன் செய்வதைப் போலவே செய்து காட்டிக் கொண்டிருந்தாள் நித்திலா.



வாயைப் பிளந்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினி,"அடிப்பாவி.....!'நான் கவனிக்கல....!சைட் அடிக்கல....!'அப்படின்னு கதை அளந்துட்டு....இப்போ அவரோட ஒவ்வொரு செய்கையையும் பிட்டு பிட்டு வைக்கிற.....?",அவள் காதைப் பிடித்து திருகியபடி அவள் கேட்க,



"ஆ...ஆ....!வலிக்குது....!விடுடி....!இதெல்லாம் சும்மா....அப்பப்ப கவனிச்சது.....!அவ்ளோதான்.....!",திக்கித் திணறி திருட்டு முழி முழித்து சமாளித்தாள் நித்திலா.



"எது சாமி....?இப்ப நீ சொன்னியே ஒரு லிஸ்ட்டு....அதெல்லாம் அப்பப்ப கவனிச்சதா....?கொஞ்சம் விட்டால்....அவருக்கு எங்கெங்கே மச்சம் இருக்குதுன்னு கூட சொல்லிடுவ போல.....!",



"அடச் சீ....!அசிங்கமா பேசாதே டி குரங்கு.....!",



"ஹ்ம்ம்....எது எப்படியோ.....மொத்தத்துல அவரை நல்லா சைட் அடிச்சிருக்க.....!எனிவே....என்ஜாய்....!",குறும்பாக நந்தினி கண் சிமிட்ட....பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து அவளை மொத்த ஆரம்பித்தாள் நித்திலா.



வர்ஷினி வந்து பார்த்த போது....அறையே அலங்கோலமாக இருந்தது.தரையில் அங்கங்கு பொருட்கள் சிதறிக் கிடக்க....படுக்கை விரிப்பெல்லாம் உருவப்பட்டு....கீழே எறியப்பட்டிருந்தது.நந்தினியும்....நித்திலாவும் விளையாட்டாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருக்க....பறந்து வந்த தலையணை ஒன்று....வர்ஷினியின் தலை மீது 'நங்'கென்று மோதி....கீழே விழுந்தது.



"அடப்பாவிகளா.....!ரூமை ஏண்டி இப்படி அலங்கோலமா வைச்சிருக்கீங்க.....?முதல்ல சண்டை போடறதை நிறுத்துங்க.....!"அவள் கத்திய பிறகுதான் அறை இருக்கும் நிலைமையை இருவரும் கவனித்தனர்.திரு திருவென முழித்தபடி....இருவரும் வர்ஷினியைப் பார்க்க,



"எருமைகளா.....!நான் ரூமை க்ளீன் பண்ண மாட்டேன்....!நீங்க ரெண்டு பேரும்தான் சுத்தம் பண்ணனும்......!",வர்ஷினிக்கு அவள் கவலை.



"ஹே.....!ப்ளீஸ் டி செல்லக்குட்டி.....!நாம மூணு பேரும் சேர்ந்து க்ளீன் பண்ணுவோம்.....!",அதையும் இதையும் சொல்லி வர்ஷினியையும் சம்மதிக்க வைத்து....பிறகு....அறையை சுத்தம் செய்து விட்டு படுக்கும் போது....இரவு வெகு நேரமாகியிருந்தது.



நித்திலாவின் மனமும் சற்று அமைதியடைந்திருந்தது.சமீப காலமாக ஆதித்யனால் ஏற்பட்ட தடுமாற்றமும்....குழப்பமும் தீர்ந்து போய்....மனம் தெளிவாக இருப்பதைப் போல் உணர்ந்தாள்.நட்பின் குதூகலத்தில் ஒளிந்திருந்த அவளது காதல் தடுமாற்றம்....அடுத்த நாள் ஆதித்யனைப் பார்க்கும் போது விழித்துக் கொண்டது.





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 23 :



அடுத்த நாள் காலையில் உற்சாகமாக உள்ளே நுழைந்த ஆதித்யனைப் பார்த்த போது....நித்திலாவிற்கு நந்தினியிடம் அவனைப் பற்றி வர்ணித்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது.'நேத்து நந்துக்கிட்ட என்னையும் அறியாம....இவரோட ஒவ்வொரு செய்கையையும் பத்தி சொல்லியிருக்கேன்.....!அப்படின்னா....இவரை எந்த அளவுக்கு நான் கவனிச்சிருக்கணும்.....?நோ....நித்தி....!நீ ஏதோ ரூட்ல போற மாதிரி இருக்கு....!அவனுடைய பேச்சை கேட்டு மயங்கிடாதே....!',தனக்குத் தானே யோசித்துக் கொண்டு....தனக்கு எதிரில் இருந்த சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நித்திலா.



அவளையே பார்த்தபடி வந்த ஆதித்யன்....அவள் முகம் யோசனையில் இருக்கவும்....அவள் முன்னால் வந்து தன் விரல்களால் சொடக்கு போட்டான்.கனவில் இருந்து எழுபவளைப் போல் விழித்தவள்.....அவனைப் பார்த்து பேந்த பேந்த விழித்தாள்.'என்ன....?',என்பது போல்....அவன்....தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கவும்....அவளுக்கு கோபம் வந்தது.



'ஆமா....!இதுக்கு ஒண்ணும் குறைச்சல் .இல்ல...!வாயைத் திறந்து 'என்ன....?'ன்னு கேட்டாத்தான் என்னவாம்....?மனசுக்குள்ள பெரிய மன்மதன்னு நினைப்பு.....!சும்மா கண்ணாலேயே பேச வேண்டியது....!',அவனுடைய ஒவ்வொரு மேனரிஸமும் அவளை....அவன்பால் ஈர்த்துக் கொண்டிருந்தது.அதை ஒத்துக் கொள்ள மனம் வராமல் மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.



அவள் தன்னையே பார்த்தபடி எதுவும் பேசாமல் இருக்கவும்....மீண்டும் அவள் முகத்தின் முன் விரலால் சொடுக்கினான்.கவர்ச்சியான புன்னகையுடன் தன்னையே பார்த்துக் கொண்டு நின்றவனைப் பார்த்தவளுக்கு எரிச்சலாக வந்தது.



'சிரிப்பை பாரு....!அப்படியே ஆளை மயக்கற சிரிப்பு....!அதிலேயும் வாய் விட்டு சிரிக்கும் போது பார்க்கணும்.....!உண்மையிலேயே இவன் வசீகரன்தான்.....!எத்தனை பொண்ணுங்க இவன் பின்னாடி சுத்தறாங்கன்னு தெரியல....?இவனுடைய ஒரு சிரிப்பே போதும்...பொண்ணுங்களை மயக்கறதுக்கு.....!ஆனால்....இவன் யார்கிட்டேயும் அவ்வளவு க்ளோசா பழகறது இல்ல....ஒரு எல்லைக்கு மேல யாரையுமே நெருங்க விடறது இல்ல....!என்கிட்ட மட்டும் தான் இவ்வளவு உரிமையா நடந்துக்கிறான்.....!',இந்த நினைவே அவள் மனதுக்குள் தித்திப்பாக இறங்கியது.இமைக்காத பார்வையுடன்....தன்னை மறந்து....அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.



"பேபி.....!மனசுக்குள்ள சீரியஸா என்னைப் பத்தி எதுவோ யோசிக்கறேன்னு தெரியுது....பட்....என்ன யோசிக்கறேன்னுதான் தெரியல....!",அவன் தன்னை கண்டு கொண்டான் என்ற நினைவில் அவளுக்கு எரிச்சல் வந்தது.



"ம்க்கும்....!நீங்க அப்படியே அந்த மயக்கற மன்மத மாயக்கண்ணன் பாரு....!உங்களை பத்தியே யோசிச்சிக்கிட்டு இருக்கறதுக்கு.....!ஆமா....அது என்ன....?வாயைத் திறந்து 'என்ன...?'ன்னு கேட்டா ஆகாதா....?சும்மா....புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குறீங்க....?",என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே அவனிடம் வளவளத்துக் கொண்டிருந்தாள்.



அவன் எதுவும் கூறாமல் சிரித்துக் கொண்டே நிற்கவும்,"நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்....!நீங்க பாட்டுக்கு சிரிச்சிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்....?முதல்ல இப்படி....ஆளை மயக்கற மாதிரி சிரிக்கறதை நிறுத்துங்க....!",அவனது உருவம்...தன் மனதில் அழுத்தமாக பதிவதை தடுக்கும் வழி தெரியாமல்....பொருமிக் கொண்டிருந்தாள்.



வசீகரமான புன்னகையுடன் அவளை ஆழப் பார்வை பார்த்தவன்,"ஸோ.....நான் உன்னை பாதிக்கிறேன்.....!அப்படித்தானே....?",நிறுத்தி நிதானமாக வெளி வந்தன அவனது வார்த்தைகள்.



அவனது பார்வையிலும்....வார்த்தைகளிலும் தடுமாறிய மனதை இழுத்து பிடித்தபடி,"நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன்....?நீங்க என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க.....?",என்றாள் படபடப்பாக.



அவள் விழிகளுக்குள் நோக்கியவன்,"உண்மை பேபி....!நான் உன்னை பாதிச்சிருக்கேன்....!உன் மனசில....என்னால....ஒரு சலனம் வந்திருக்கு.....!",ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக உச்சரித்தான்.



அவன் கூறுவதில் இருந்த உண்மை அவளைச் சுட....,"ஒரு மண்ணும் இல்ல....!"என்று வெடித்தாள் அவள்.



'இல்லை...!' என்பதாய் தலையசைத்தவன்,"என் சிரிப்பு உன்னை பாதிச்சிருக்கு.....!என்னுடைய ஒவ்வொரு செய்கையும் உன்னை பாதிக்குது....!எங்கே....உன்னையும் அறியாம....உன் மனசுக்குள்ள நான் வந்திடுவேனோன்னு நீ பயப்படற.....!நான் உன் மனச பாதிச்சிருக்கிறதுனுடைய விளைவுதான்....உன்னுடைய இந்தக் கோபம்....!என் சிரிப்பிலேயும்....என் மேனரிசம்லேயும் நீ கவரப்படற.....அதை ஏத்துக்க முடியாத ஆத்திரத்துல....வர்ற கோபத்தை என் மேல திருப்பற.....!",அவளுடைய நிலைமையை பிட்டு பிட்டு வைத்தான் ஆதித்யன்.



"நோ...!நோ.....!நான் ஒண்ணும் அவ்வளவு பலவீனமானவள் இல்லை....!உங்களால என் மனசை நெருங்க முடியாது.....!",அவன் கூறுவது உண்மைதானோ என்ற பதட்டத்தில் கத்தினாள் நித்திலா.



"இல்ல பேபி....!உன் மனசை நான் தொட்டுட்டேன்.....!",ஒவ்வொரு வார்த்தையும் வெகு நிதானமாக....அழுத்தமாக வந்து விழுந்தன.



அவன் கூறியதைக் கேட்டு விக்கித்து நின்றவளின் கன்னத்தில் செல்லமாகத் தட்டியவன்,"மனசை போட்டு ரொம்பவும் குழப்பிக்காதே பேபி.....!எது எப்படி இருந்தாலும்....எனக்கு நீ தான்...!உனக்கு நான் தான்....!அது...ஒரு போதும் மாறப் போறதில்லை....!",என்றவன் தன் இருக்கையில் அமர்ந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.



சில கண நேரம் சிலையாய் சமைந்திருந்தவள்....பிறகு சுதாரித்துக் கொண்டு,'இல்ல....!இவரு ஏதோ உளறிக்கிட்டு இருக்காரு....!இவரு சொல்ற மாதிரி என் மனசில எதுவும் இல்ல....!காதலாவது....மண்ணாங்கட்டியாவது.....!அதுக்கு ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன்....!',என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.



முன்பு போலவே....கௌதமும் சுமித்ராவும் இணைந்து வேலை செய்ய வேண்டிய நிலைமை வந்தது.கெளதம் நினைத்திருந்தால்....தனியாளாக அவனே அதை செய்து முடித்திருக்கலாம்.ஆனால்....'வேலை' என்ற போர்வையில் அவளுடன் நேரம் செலவழிக்கலாம் என்ற ஆசையில் அவளையும் உடன் அழைத்துக் கொண்டான்.



அன்று போல் அவன் அமைதியாக வேலை செய்யவில்லை.இடையிடையே.....அவளிடம் குறும்பு செய்து கொண்டே இருந்தான்.தனது இருக்கையை அவளுக்குக் கொடுத்து விட்டு....அவளை நெருக்கியபடி ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு....அவளை ஒட்டியபடி அமர்ந்திருந்தான்.



"அய்யோ.....!கொஞ்சம் தள்ளித்தான் உட்காருங்களேன்.....!விட்டால்....என் மடி மேலேயே வந்து உட்கார்ந்துக்குவீங்க போல....!",செல்லமாக சலித்துக் கொண்டாள் சுமித்ரா.



"ஹை....!அது கூட நல்லாத்தான் இருக்கும்.....!ட்ரை பண்ணி பார்க்கட்டா.....?",என்று அவன் குதூகலிக்க,



"ஒண்ணும் வேண்டாம்.....!முதல்ல தள்ளி உட்காருங்க.....!",என்றபடி அவனது சேரை பிடித்து தள்ளி விட்டாள்.



"சரி டி.....!தள்ளி விடாத....!நகர்ந்து உட்கார்றேன்....!",வாய்க்குள் முணுமுணுத்தவன்....நாற்காலியை ஒரு இன்ச் மட்டும் நகர்த்தினான்.



அவனைப் பார்த்து முறைத்தவள்,"இதுதான் நீங்க தள்ளி உட்கார்ற லட்சணமா.....?எதிர்ல இருக்கற சேர்ல போய் உட்காருங்க.....!போங்க....!",என்றாள் சற்று கண்டிப்புடன்.



"ப்ச்....!உனக்கு இப்ப என்னதான் டி பிரச்சனை....?சும்மா 'நொய் நொய்'ன்னுட்டு....",என்று அவன் கத்த,



"நீங்க இப்படி என் பக்கத்துல உட்கார்ந்திருக்கறதை....யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.....?",சற்று உள்ளடங்கிய குரலில் கூறினாள் சுமித்ரா.



"என் பெர்மிஷன் இல்லாம எவனும் இந்த ரூமுக்குள்ள வர மாட்டான்....!சும்மா என்னைப் போட்டு பிராண்டாம....உன் வேலையைப் பாரு....!",அவள் தள்ளி உட்கார சொன்ன கடுப்பில் அவன் கத்தினான்.



"சரி....!அதுக்கு எதுக்கு இப்படி கத்தறீங்க.....?",என்று முணுமுணுத்தவள் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.



சிறிது நேரம் அமைதியாக தனது லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தவன்....பிறகு மெதுவாக,"ஹனி.....!",என்று அவளை அழைத்தான்.



"ம்....!",தன் சிஸ்டமில் இருந்து தலையை உயர்த்தாமலேயே 'ம்....' கொட்டினாள் அவள்.



அவன் மீண்டும்,"ஹனி....!",என்றழைக்க,



"ம்....!என்னன்னு சொல்லுங்க....!",என்றாள் பார்வையைத் திருப்பாமலேயே.



"என் முகத்தைப் பார்த்து பேசு.....!",



"ஷ்.....!இப்ப எதுக்கு வேலையை செய்ய விடாம....என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க.....?",



"ப்ச்....ஒண்ணும் இல்ல....!நீ உன் வேலையைப் பாரு....!",லேப்டாப்பை தட்ட ஆரம்பித்தான்.சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன்....பிறகு நாற்காலியில் அமர்ந்தபடியே நெளிய ஆரம்பித்தான்.



"எதுக்கு இப்படி ஆடிக்கிட்டே உட்கார்ந்திருக்கீங்க.....?",



"ம்....டயர்டா இருக்குது டி....!தூக்கம் வர மாதிரி இருக்கு....!",



"பின்ன....தூக்கம் வராம என்ன பண்ணும்.....?நைட் முழுக்க....நீங்களும் தூங்கல....!என்னையும் தூங்க விடல....!",



"அடிப்பாவி.....!நான் என்னடி பண்ணுனேன்....?நான் பாட்டுக்கு சமர்த்தா என் வீட்ல இருந்தேன்....!நீ பாட்டுக்கு உன் வீட்ல இருந்த....!",



"ச்சீ....!நான் ஒண்ணும் அத சொல்லல....!நைட் ஒரு மணியாகியும் போனை வைக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா....பகல்ல தூக்கம் வரத்தான் செய்யும்....!",



"அப்புறம் என்னை என்ன பண்ண சொல்ற....?வெளில கூப்பிட்டாலும் வரமாட்ட.....ஆபிஸ்லயும் பத்து நிமிஷத்துக்கு மேல பேச மாட்ட.....!அப்புறம் நான் எப்பத்தான் உன்கூட பேசறது.....?",அவன் குரலை உயர்த்தி கத்த,



"சரி...சரி....!அதுதான் நான் ஒண்ணும் சொல்லலையே.....?நைட் ஒரு மணி இல்ல....விடியற வரைக்கும் பேசினால் கூட....நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்....!சரியா....?",எங்கே அவன் தன்னை வெளியே அழைத்து விடுவானோ என்ற பயத்தில் அவசர அவசரமாக அவனை சமாதானப்படுத்தினாள்.



பிறகு சிறிது நேரம் அமைதி நிலவ....அவன் மெதுவாக,"ஹனி....!",என்றழைத்தான் கிசுகிசுப்பாக.



"ம்....!",



"நேத்து நைட் உன்கிட்ட ஒண்ணு கேட்டேன்ல.....?அதை இப்ப கொடு....?",



"என்ன....?",அவள் புரியாமல் வினவினாள்.



"நேத்து நைட் போன்ல ஒண்ணு கேட்டேன்ல.....?அதை இப்ப கொடு....!",அவன் மீண்டும் கூறினான்.



நேற்று இரவு போனை வைக்கும் போது....அவன்....அவளிடம் முத்தம் தருமாறு கேட்டான்.அவள் வெட்கப்பட்டுக் கொண்டு மறுத்து விட்டாள்.அதைத்தான் இப்பொழுது அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.



அவன் கேட்டதும் முகம் வெட்கத்தில் சிவக்க,"ம்ஹீம்....!முடியாது....!",தலையை இடமும் வலமுமாக ஆட்டியபடி மறுத்தாள்.



"ஹே....!ஒண்ணே ஒண்ணு டி....!நேத்து நைட்டும் இப்படித்தான் ஏமாத்திட்ட....?",



"ம்ஹீம்....!நான் மாட்டேன்.....!அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்.....!",



"சரி.....நீ கல்யாணத்துக்கு அப்புறம் கொடு....!நான் இப்ப கொடுக்கிறேன்....!",என்றபடி அவன் நெருங்க,



தள்ளி அமர்ந்து கொண்டவள்,"இப்ப நீங்க அமைதியா வேலை பார்க்கலைன்னா.....நான் எழுந்து வெளியே போயிடுவேன்....!",என்று மிரட்டினாள்.



"சின்னதா ஒரு ஹக்....கிஸ் கூட இல்லாம எப்படி டி....?",அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,



"சரி....!அப்ப நான் வெளியே போறேன்....!",என்றபடி அவள் எழ,



"சரி....சரி...!உட்கார்ந்து தொலை....!ஒண்ணும் கேட்க மாட்டேன்....!எனக்கு விதிச்சது அவ்ளோதான்....!",என்று முணுமுணுத்தவன்...தனது கோபத்தை எல்லாம் லேப்டாப்பின் மீது காண்பித்தான்.



சிறிது நேரம் 'டொக்...டொக்'கென்று அவன் லேப்டாப்பைத் தட்டும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.



ஓரக் கண்ணால் அவன் முகத்தைப் பார்த்தாள்....!முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.பிறகு....அவளாகவே....,"சரி....!கன்னத்துல வேணா ஒண்ணே ஒண்ணு கொடுக்கிறேன்....!",என்றாள் மெதுவாக.



அவளாகவே தருகிறேன் என்று கூறியதில் அவன் மனம் குதூகலித்தது."ம்...சரி...!நீயே கொடு....!",அவன்...அவளுக்கு வாகாக கன்னத்தை காட்டினான்.



இதயம் ஆயிரம் மடங்கு வேகமாக எகிறி குதிக்க....மனம் முழுவதும் ஒரு கோடி மத்தாப்பூ பூக்க....விழிகளை இறுக மூடியபடி.....அவனருகே நெருங்கினாள்.சட்டென்று திரும்பிய அந்தக் கள்வன்.....தன் கன்னத்தில் பதியப் போன அவளது இதழ்களை....தனது இதழ்களால் எதிர்கொண்டான்.



"ஏய்....!",என்ற அவளது கூச்சல்....அவனது இதழ்களுக்குள் கரைந்து போனது.



இருவரும் முத்தத்தின் தித்திப்பில் மூழ்கியிருக்க....நொடிகள் நிமிடங்களாகி கரைந்து போக....அவளது இதழ்களை விடுவிக்கும் எண்ணமின்றி....அவன்....அவள் இதழ்களின் மென்மையில் மேலும் மேலும் புதைந்து கொண்டிருந்தான்.



அவள்தான் மூச்சுக் காற்றுக்காக போராடி...அவனை வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளி விட்டாள்.



"சரியான திருடன் டா நீ....!",கை முஷ்டியை மடக்கி அவன் நெஞ்சில் குத்தினாள்.



அவன் கைகளைப் பற்றி முத்தமிட்டவன்,"பின்ன....குழந்தை மாதிரி கன்னத்துல முத்தம் கொடுக்கிறேன்னு சொல்ற....?அதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட்.....!",அவள் நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்கி...அவளது காதோரம் சொருகியபடி கூறினான் அவன்.



"ராஸ்கல்....!",என்றபடி அவனது மூக்கைப் பிடித்து செல்லமாக ஆட்டியவள்....அவனது மார்பில் சுகமாக சாய்ந்து கொண்டாள்.அப்பொழுதுதான் அவளுக்கு அந்த வித்தியாசம் உரைத்தது.விசுக்கென்று நிமிர்ந்தவள்,"நான் எப்ப இங்க வந்தேன்....?",என்றாள் அதிர்ச்சியாக.



அவளுடைய அதிர்ச்சிக்கும் காரணம் இருந்தது.ஏனெனில்....அவள்....அவன் மடியில் அமர்ந்திருந்தாள்.எப்பொழுது அவளை இழுத்து....தன் மடியில் அமர வைத்தானோ தெரியவில்லை......?



"ஹா....ஹா....!நீ வேற பத்தடி தள்ளி உட்கார்ந்திருந்தயா.....?முத்தம் கொடுக்கறதுக்கு வசதியாவே இல்ல....அதுதான்....உன்னை இழுத்து மடிமேல் உட்கார வைச்சேன்....!பட்....மேடம்க்கு ஒண்ணுமே தெரியல....!அப்படியே கண்ணை மூடிக்கிட்டு.....",அதற்கு மேல் என்ன சொல்லியிருப்பானோ....அவனை சொல்ல விடாமல் அவனது வாயை பொத்தினாள்.



"போதும்....!போதும்....!ஒண்ணும் சொல்ல வேண்டாம்....!ஆனாலும்....சரியான திருட்டு பூனை டா நீ....!",செல்லமாக அவன் தலை முடியை கலைத்து விட்டாள் அவள்.அந்நேரம் பார்த்து கௌதமின் மேசையின் மேல் இருந்த போன் அலறியது.பதறி எழப் போனவளைத் தடுத்து மீண்டும் தன் மடி மேல் அமர வைத்தவன்....ஒரு கையை எட்டி போனை எடுத்தான்.ஆதித்யன்தான் அழைத்திருந்தான்.



எடுத்த எடுப்பிலேயே,"டேய்.....!என்னடா பண்ணிக்கிட்டு இருக்க....?",என்று கத்த,



"ஹய்யையோ......!சிசிடிவி கேமரா ஏதாச்சும் செட் பண்ணி வைச்சிருக்கியா டா மச்சான்....?",அவன் பரபரப்புடன் சுற்றும் முற்றும் தேட.....'சிசிடிவி கேமரா' என்ற வார்த்தையிலேயே சுமித்ரா எழுந்து கொண்டாள்.



"அடச்சீ....!அந்தக் கருமத்தை வைச்சு....நீ அடிக்கற கூத்தை பார்த்து நான் வயிறெரியவா.....?அதெல்லாம் ஒண்ணுமில்ல.....!உன்கிட்ட கொடுத்த ப்ராஜெக்ட் எந்த நிலைமையில இருக்கு.....?அதைக் கேட்கத்தான் போன் பண்ணினேன்....?",



'ஹப்பாடா....!',என்று நிம்மதியாக மூச்சை விட்டவன்,"அந்த ப்ராஜெக்ட்டா.....?அது போய்க்கிட்டே இருக்குடா....",என்றான் சாவதானமாக.



"அடப்பாவி....!உனக்கு இது அநியாயமா தெரியலையா டா.....?நீ நினைச்சா தனியாளா ஒரு மணி நேரத்துல நீயே அந்த ப்ராஜெக்ட்டை முடிக்கலாம்....!அதை விட்டுட்டு....ஹெல்ப்புக்கு ஆள் வேணும்ன்னு சுமித்ராவையும் கூப்பிட்டு வைச்சுக்கிட்டு....ப்ராஜெக்ட்டையும் முடிக்கலைன்னா....என்னடா அர்த்தம்....?",



"ப்ச்....!இப்ப உனக்கு என்ன வேணும்....?இன்னைக்கு ஈவ்னிங் அந்த ப்ராஜெக்ட் உன் டேபிளில் இருக்கும்....!என்னை டிஸ்டர்ப் பண்ணாத டா....!",சுமித்ராவின் அருகாமை விலகிய கடுப்பில் அவன் கத்தினான்.



"டேய்....!வேணாம் டா....!நானே காய்ஞ்சு போய் கிடக்கிறேன்.....வீணா என் வயித்தெரிச்சலை வாங்கி கட்டிக்காத....!",நித்திலாவின் அருகாமை கிடைக்காத கடுப்பில் அவன் கத்தினான்.



"கூல்....!கூல் டா மச்சான்....!உனக்கும் ஒரு காலம் வரும்.....டோன்ட் வொர்ரி....!இப்ப நீ போனை வைக்கிறயா டா ராஜா....?",அவனுக்கு அவன் கவலை.



"நாயே....!வைச்சுத் தொலைக்கிறேன் டா.....!",கத்தியபடியே போனை வைத்து விட்டான் ஆதித்யன்.



ஒருவழியாக ஆதித்யனை சரி கட்டி விட்டு அவன் நிமிர்ந்து சுமித்ராவைப் பார்த்தால்....அவள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.



"ஹனி....!நீ எதுக்கு அங்க போன....?இங்கே வா.....!",என்று அவளை இழுக்க,



"ப்ச்....!இது ஆபிஸ்....!உங்க வீடல்ல.....ஞாபகம் இருக்கல்ல....?",என்றபடி அவன் கையைத் தட்டி விட்டாள்.



"அதனால் என்ன.....?",என்றான் அவன் கூலாக.



"அதனால் என்னவா.....?ஆதித்யன் சார் என்னைப் பத்தி என்ன நினைப்பாரு.....?",



"அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டான்....!",



"நினைக்கலைன்னாலும் பரவாயில்ல....!நீங்க அமைதியா உங்க வேலையைப் பாருங்க.....!நான் என் வேலையைப் பார்க்கிறேன்.....!இந்த ப்ராஜெக்ட்டை முடிக்கணும்....!",என்றபடி தன் வேலையில் ஆழ்ந்து விட்டாள்.



வாய்க்குள் எதையோ முணுமுணுத்தபடி திரும்பிக் கொண்டவன்....சிறிது நேரம் அமைதியாகவே வேலை செய்தான்.பிறகு....அவள் புறம் திரும்பி அமர்ந்தபடி....அவள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கியை ஆட்டி விட்டு விளையாட ஆரம்பித்தான்.



"ஹைய்யோ.....!கொஞ்ச நேரம் இந்த கையை வைச்சுக்கிட்டு சும்மாதான் இருங்களேன்.....!",என்றபடி அவன் கையைத் தள்ளி விட,



"இப்படியே நான் எது செஞ்சாலும் தடை சொல்லிட்டே இரு.....!ஒரு நாள் இல்ல....ஒரு நாள்....உங்க வீட்டுக்கு வந்து....என் மாமனார்கிட்ட....உங்க பொண்ணை எனக்கு கொடுங்கன்னு கேட்கப் போறேன்.....!நம்ம கல்யாணத்துக்குப் பிறகு....நான் எது செஞ்சாலும் நீ தடுக்க முடியாதில்ல.....?",



"ஆமா....!அப்படியே எங்க அப்பாவும் 'வாங்க மாப்பிள்ளை....!என் பொண்ணை கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை....' அப்படின்னு....என்னை உங்க கூட அனுப்பி வைச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு....!",



"பின்னே....!ஐயாவோட பெர்சனாலிட்டி அப்படியாக்கும்....!நான் வந்து பொண்ணு கேட்டா....கொடுத்துதான் ஆகணும்....!என்னை 'வேண்டாம்....!'ன்னு மறுக்கறதுக்கு ஒரு காரணமும் இல்லையே.....?",



அவனுடைய உறுதியில் ஒரு நிமிடம் அவனை ஆழ்ந்து நோக்கியவள்,"இல்லைங்க....!நீங்க நினைக்கிற மாதிரி நம்ம கல்யாணம் அவ்ளோ ஈஸியா நடந்துறாது....!நம்ம காதலுக்காக நாம கொஞ்சம் போராட வேண்டி இருக்கும்....!",என்றாள்.



அவன் எதுவும் பேசாமல் அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.அவன் முகம் ஏதோ யோசனையை காட்டியது.சில மணி நேரங்கள் அமைதியில் கழிய....பிறகு அவனே,"ஒருவேளை....உங்க வீட்ல சம்மதிக்கலைன்னா....நீ என்ன பண்ணுவ....?",அவள் தோளில் இருந்து தலையை உயர்த்தாமலேயே கேட்டான்.



"அதைப் பத்தி இப்ப எதுக்கு பேசணும்.....?கொஞ்சம் கடுமையா போராட வேண்டி இருக்கும்....!இந்த விஷயத்துல எங்க ரிஷி அண்ணாவைத்தான் நம்பி இருக்கேன்....!அதுதான்....அன்னைக்கு என்னை பைக்ல கொண்டு வந்து ட்ராப் பண்ணினாரே....?அவருதான்...!",



"ஓ.....!",என்றவனின் முகம் மறுபடியும் யோசனைக்குத் தாவியது."உங்க அண்ணா எடுத்துச் சொல்லியும்...உங்க வீட்ல ஒத்துக்கலைன்னா....?",அவள் கண்களைப் பார்த்து வினவினான்.



"அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது பார்த்துக்கலாம்....!",



"இல்ல சுமி....!எனக்கு பதில் தெரிஞ்சாகணும்....!ஒருவேளை....உங்க குடும்பத்தில யாருமே நம்ம காதலை ஏத்துக்கலை அப்படின்னா....உன்னுடைய பதில் என்னவா இருக்கும்....?சொல்லு....?",அவன் குரலில் இருந்த பிடிவாதம்....அவள் பதில் கூறித்தான் ஆக வேண்டும் என்று கட்டளையிட்டது.



அவளுக்குமே அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்....அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.தன் பெற்றோருக்காக பார்ப்பதா....?இல்லை....தன்னவனுக்காக பார்ப்பதா....?என்று குழம்பினாள்.எனவே....கௌதமை சமாதானப்படுத்தும் விதமாக,



"பாஸிட்டிவா திங்க் பண்ணுவோம்....!நல்லதே நடக்கும்....!",என்றாள்.



"நான் கேட்டத்துக்கான பதில் இது இல்ல....!",அவள் கண்களை கூர்மையாகப் பார்த்தபடி....அழுத்தமாக வினவினான்.அவன் விழிகள்....அவள் விழிகளிடமிருந்து எதையோ யாசித்தது.அதற்கான பதில் அவள் விழிகளில் தென்படாது போகவும்....அவனுக்கு கோபம் வந்தது.அதற்கு ஏற்றார் போல்....அவளும் எதுவும் பேசாமல் தயங்கியபடியே அமர்ந்திருந்தாள்.



"எனக்குத் தெரியும் டி....!என் கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியல....அப்படித்தானே....?இன்னைக்கு என்னை காதலிச்சிட்டு....நாளைக்கு உன் அப்பா அம்மா வந்து கூப்பிட்டா....அவங்க பின்னாடி போயிடுவ....!உன் வீட்டாருடைய சம்மதம் கிடைக்கலைன்னா....என் காதல தூக்கி எறிஞ்சிடுவ.....!அப்படித்தானே.....?",கோபமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவன்.....பிறகு அமைதியாக,



"ச்சே.....!எனக்கும் அன்புக்கும் ராசியே இல்ல போல....!முதல்ல என் அப்பா என்னை விட்டுப் போனாரு.....!அப்புறம் என் அம்மா....!இப்ப நீ....!என் அப்பா அம்மா இழப்பைக் கூட தாங்கி....அதிலிருந்து மீண்டு வந்துட்டேன் டி....!ஆனால்....நீ மட்டும் என் வாழ்க்கையில இல்லாம போனா....என்ன ஆவேன்னே தெரியல....!எனக்கு நீ வேணும் டி....!ச்சே....!இதையெல்லாம் உன்கிட்ட போய் சொல்லிக்கிட்டு இருக்கேன் பாரு.....நான் எப்பவுமே ஒரு அனாதைதான்.....!",அவனுடைய பேச்சில் பாசத்திற்காகவும்....அன்பிற்காகவும் ஏங்கிய அவனுடைய ஏக்கம் நன்கு தெரிந்தது.



'இனி தனக்கு எல்லாம் அவள்தான்....!',என்று முடிவெடுத்திருந்தவன்....'எங்கே அவள் தன்னை விட்டு போய்விடுவாளோ....?',என்ற பயத்தில் எதை எதையோ பேசி விட்டான்.அவன் பேசியதைக் கேட்டவளுக்கு கண்களில் கண்ணீர் வந்தது.அதிலும் அவன் 'அநாதை....' என்று சொல்லும் போது....அவன் கண்களில் தெரிந்த வலியைப் பார்த்தவளுக்கு.....தன் உயிரை யாரோ பிடுங்கி எறிவது போல் இருந்தது.



பாய்ந்து சென்று அவனைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள் அவள்.அந்த நிமிடம் அவள்...அவனுக்குத் தாயாக மாறினாள்.அவள் கண்களுக்கு....அவன் காதலன் கௌதமாக தெரியவில்லை....!பாசத்திற்காக ஏங்கும் ஐந்து வயது சிறுவனாகத்தான் தெரிந்தான்.



தன் மார்போடு அணைத்திருந்தவனின் தலைமுடியை மெல்ல கோதிவிட்டவள்,"இனியொரு முறை உங்களை அனாதைன்னு சொல்லாதீங்க....!நான் உயிருடன் இருக்கும் வரை நீங்க அ...அனாதையாக முடியாது....!நான் இருக்கேன் கெளதம் உங்களுக்கு....!வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நான் உங்க கூடவேதான் இருப்பேன்....!நான் உங்களுக்கு ஒரு காதலியா....ஒரு மனைவியா மட்டும் இருக்க மாட்டேன்.....!உங்களுக்கு இன்னொரு அம்மாவா நான் இருப்பேன்....!என்னுடைய முதல் குழந்தை நீதான்....!நீ மட்டும்தான்....!",அவள் விழிநீர் வழிந்து வந்து அவன் நெற்றியில் பட்டுத் தெறித்தது.



அவள் கூறிய வார்த்தைகளில்....அவளை மேலும் அணைத்துக் கொண்டவனின் கண்களிலும் கண்ணீர்.அவள் மார்பில் ஆழமாக முகம் புதைத்திருந்தவனின் மனதில் ஒரு துளி அளவு கூட காமம் இல்லை....!தாயின் அணைப்பில் நிச்சலனமாய் உறங்கும் கைக்குழந்தையின் நிலைமையில்தான் அவன் அப்போது இருந்தான்.



அவன் முகத்தை தன் இரு கைகளிலும் தாங்கியவள்,"என் குடும்பம் மட்டுமில்ல....!இந்த உலகமே நம்ம காதலை எதிர்த்தாலும் நான் அதைப் பத்தி கவலைப்பட போறதில்ல....!நீங்க எந்த வழியைக் காண்பிக்கிறீங்களோ....அந்த வழியில உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு உங்க கூட வர்ற நான் தயாரா இருக்கேன்....!ஆனால்....நான் உங்ககிட்ட ஒண்ணு மட்டும் சொல்ல விரும்பறேன்....!நாம வாழப் போற வாழ்க்கையுடைய மிகப் பெரிய சொத்தா இருக்கப் போறது....நம்மை பெத்தவங்களுடைய ஆசிர்வாதம் மட்டும்தான்....!அதை எப்பவும் உங்க மனசில வைச்சுக்கோங்க.....!மத்தபடி....நான் உங்களுடையவள்தான்.....!நான் உங்களை விட்டு பிரியறதுன்னா....அது நான் செத்துப் போனா....",அதற்கு மேல் சொல்ல விடாமல் அவளுடைய வாயைப் பொத்தியவன்...



"போதும் டி....!எனக்கு இது போதும்....!உன் அம்மா அப்பா ஒத்துக்கலைன்னா....நீ என்னை விட்டு போய்டுவியோங்கிற பயத்துலதான்....ஏதேதோ பேசினேன்....!எனக்கு உன்னுடைய இந்த வார்த்தை போதும் டி....!நானும் உனக்கொரு ப்ராமிஸ் பண்றேன்....!உன் பேரண்ட்ஸ் சம்மதம் இல்லாம....நம்ம கல்யாணம் நடக்காது....!ஒகே வா....?",அவள் கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்துவிட்டப்படி அவன் கூற,



"ரொம்ப தேங்க்ஸ்....!ஐ லவ் யூ கெளதம்....!",என்றபடி அவனை அணைத்துக் கொண்டாள் அந்தக் காரிகை.



இது ஒரு மிக அற்புதமான தருணம்....!தன்னுடைய காதலி.....மற்ற அனைவரையும் விட தன்னை மட்டும்தான்....மிக அதிகமாக நேசிக்கிறாள் என்பது எந்த ஒரு ஆண் மகனையும் கர்வம் கொள்ள வைக்கும்.



ஒரு பெண் என்பவள்....தன் கணவனுக்கு ஒரு மனைவியாக மட்டும் இருக்கக் கூடாது....!அவன் சோர்ந்து போகும் போது....அவனுக்குத் தோள் கொடுக்கும் தோழியாகவும்....அவன் உடைந்து போகும் சமயங்களில்....அவனை மடி தாங்கும் தாயாகவும் இருக்க வேண்டும்....!



அதே போல்....எந்த ஒரு ஆணும் தன்னவளுடையவளின் உணர்வுகளுக்கும்....உரிமைகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.....!கெளதம்....சுமித்ராவின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து....'பெற்றவர்களின் சம்மதம் இல்லாமல் தன்னுடைய திருமணம் நடக்காது.....!',என்ற உறுதியைக் கொடுத்தான்....! மிக அற்புதமான புரிதல் இது....!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 24 :



"எருமை மாடே....!இப்படி காலங் காத்தால....வெறும் வயித்துல முறுக்கை தின்னுக்கிட்டு இருக்கியே....?உடம்பு என்னத்துக்கு ஆகும்.....?",கையில் ஒரு பெரிய சம்படா நிறைய முறுக்கை வைத்துக் கொண்டு அதை ஒவ்வொன்றாக காலி செய்து கொண்டிருந்த நந்தினியைப் பார்த்துத் திட்டிக் கொண்டிருந்தாள் நித்திலா.



அந்த வார விடுமுறையை தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக கழித்து விட்டு உற்சாகமாக வந்திருந்தாள் நித்திலா.கூடவே....அவள் அம்மா செய்த முறுக்கையும் இரண்டு சம்படா நிறைய நிரப்பிக் கொண்டு வந்திருந்தாள்.



காலை நேர பரபரப்பில் நித்திலாவும்....வர்ஷினியும் அவசர அவசரமாக ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டிருக்க.....எதைப் பற்றியும் கவலைப்படாமல்....பெட்டில் சாய்ந்தபடி....சம்படாவில் இருந்த முறுக்கை கொறித்துக் கொண்டிருந்த நந்தினியைப் பார்த்துதான் திட்டிக் கொண்டிருந்தாள்.



"அடா....அடா....!அப்படியே என் உடம்பு மேல அக்கறை இருக்கற மாதிரி நடிக்காத....!எங்கே முறுக்கு தீர்ந்துடுமோன்னுதானே கவலைப்படற.....?",முறுக்கை வாயில் அடைத்தபடி கேட்டாள் நந்தினி.



"ஆமாண்டி....!எங்க அம்மா எனக்காக செஞ்சு கொடுத்திருக்காங்க.....!நீயே தின்னு தீர்த்திட்டேனா....அதுதான்....கொடுடி...!",என்றபடி அவள் கையிலிருந்த சம்படாவைப் பிடுங்கினாள் நித்திலா.



"ஹே....பிச்சைக்காரி.....!போடி.....!எங்க ஆன்ட்டி எனக்காக செஞ்சு கொடுத்திருக்காங்க.....!நான் சாப்பிடுவேன்....!விடுடி....!",என்றபடி நித்திலாவிடம் இருந்து அந்த முறுக்கு சம்படாவைக் கைப்பற்றிக் கொள்வதற்காக....அதை தன்பக்கமாக இழுத்தாள்.



"தர மாட்டேன் போ.....!ஏற்கனவே அரை சம்படாவை நீயே....ஒத்த ஆளா காலி பண்ணிட்ட.....!இன்னும் எனக்கும் வர்ஷிக்கும் வேணும்.....!கொடுடி.....!",என்றபடி அவள் பிடுங்க,



அந்த நிலையிலும் அவசர அவசரமாக ஒரு முறுக்கை எடுத்து தன் வாயில் போட்டவள்,"அதுதான் இன்னும் ஒரு சம்படா இருக்கல்ல....இது எனக்கு மட்டும்தான்.....!",என்று பிடுங்கினாள் நந்தினி.



இவர்களது போராட்டத்தில் அந்த சம்படா கீழே விழுந்து அத்தனை முறுக்கும் தூள் தூளாகியது.



"அடிப்பாவி.....!கிராதகி....!ஏண்டி இப்படி பண்ணின....?அய்யோ.....!என் முறுக்கெல்லாம் போச்சே....!",புலம்பியபடி நந்தினி குனிந்து கீழே கிடந்த உடைந்த முறுக்குகளை பொறுக்க,



"எல்லாம் உன்னால்தான் டி....!காலையிலேயே குரங்கு மாதிரி முறுக்கு டப்பாவ எடுத்து வைச்சு உட்கார்ந்தா....இப்படித்தான் நடக்கும்....!",நித்திலா அவள் பாட்டுக்கு புலம்ப,



"பைத்தியங்களா....!ரெண்டு பேரும் சண்டை போட்டு யாருக்கும் முறுக்கு இல்லாம பண்ணிட்டீங்க.....?என்று வர்ஷினி அவள் பங்கிற்கு கத்தினாள்.



"ஹே....!இல்ல வர்ஷி.....!இன்னும் ஒரு சம்படா இருக்கு....!",சமாதானமாக கூறியபடி நந்தினி அதை எடுக்கச் செல்ல,



"மவளே....!அதிலிருந்து ஒரு முறுக்கு கூட உனக்குத் தர மாட்டேன்....!அது எனக்கும் வர்ஷிக்கும் மட்டும்தான்....!"என்றபடி அந்த சம்படாவைக் கைப்பற்றிக் கொண்டாள் நித்திலா.



"ஹே....ஹே....!நித்தி குட்டி....!ப்ளீஸ் டி....!நாம மூணு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.....!",நந்தினி அவளை தாஜா செய்ய,



"கண்ணுங்களா.....!உங்க சண்டையை அப்புறம் வைச்சுக்கோங்க.....!முதல்ல இந்த இடத்தை க்ளீன் பண்ணுங்க....!இல்லைன்னா....எறும்பு வந்துடும்....!நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன்.....!லேட் ஆகிடுச்சு....!",என்றபடி வர்ஷினி தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப,



நித்திலாவும் நந்தினியும் தங்கள் சண்டையை நிறுத்தி விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.பிறகு வழக்கம் போல்.....வர்ஷினியை சமாதானப்படுத்தி....மூவரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டுக் கிளம்பினர்.



நித்திலா அலுவலகத்தை அடைந்த போது சற்று தாமதமாகியிருந்தது."நல்லவேளை....!ஆதித்யன் வரவில்லை....!",என்று நிம்மதியடைந்தபடியே வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.



சிறிது நேரத்திலேயே வர்ஷினி அவளை போனில் அழைத்தாள்.எடுத்த உடனேயே அவளுடைய அழுகைதான் கேட்டது.



"ஹே....!வர்ஷி....!என்னாச்சு டி.....?எதுக்கு அழற....?",படபடப்பாக நித்திலா கேட்க,



"நித்தி....!நம்ம ந...நந்து....நந்து.....!",என்றபடி தேம்ப ஆரம்பித்தாள்.



இங்கு நித்திலாவிற்கு கை கால் உதற ஆரம்பித்தது.



"ந...நந்து...அவளுக்கு என்னாச்சுன்னு சொல்லு டி....?",என்று கத்த,



"நம்ம நந்துவுக்கு ஆ...ஆக்சிடெண்ட்....!இங்க சுகம் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க.....!",திக்கித் திணறி அவள் கூறி முடிக்க,



"ஏய்....!விளையாடாத டி....!எனக்கு ப...பயமா இ...இருக்கு.....!",அவளையும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் 'கரகர'வென்று வழிந்தது.



"அய்யோ....!இந்த விஷயத்துல விளையாடுவேனா.....?கொஞ்சம் சீ...சீக்கிரம் வாடி....!எனக்கு பயமா இருக்கு....டாக்டர்ஸ் என்னென்னமோ சொல்றாங்க.....!",எதிர் முனையில் அழுதபடி வர்ஷினி சொல்ல....அதற்கு மேல் நித்திலா நொடியும் தாமதிக்கவில்லை.



தன் கைப்பையை எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் வெளியேறியவள்....எதிரே வந்த கெளதம் மீது சென்று மோதிக் கொண்டாள்.



"ஓ....சாரி....!",என்றபடி அவன் நிமிர....அவளோ....கண்ணீருடன் தலையாட்டி விட்டு நகர்ந்தாள்.அவள் முகத்தைப் பார்த்ததுமே 'ஏதோ பிரச்சனை....!',என்று ஊகித்தவன்....அவள் முன்னால் சென்று வழியை மறித்தபடி,



"நித்திலா....!ஏதாவது ப்ராப்ளமா....?இவ்வளவு வேகமா எங்கே போறீங்க....?",என்று விசாரிக்க,



"என் பிரெண்டுக்கு ஆக்ஸிடெண்ட்....!",கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவள் கூற,



"ஓ காட்....!ஏதாவது ஹெல்ப் வேணுமா.....?நான் வேணா கூட வரட்டுமா....?",அவன் அக்கறையுடன் வினவ,



"நோ....தேங்க்ஸ்....!இங்கே சுகம் ஹாஸ்ப்பிட்டல் தான்....!நானே போய்க்கிறேன்....!",என்றபடி நகர்ந்து விட்டாள்.



அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த கெளதம்,'பாவம்.....!அந்தப் பொண்ணுக்கு எதுவும் ஆகக் கூடாது....!',என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.



என்னதான் அந்த ஆட்டோ டிரைவர் வேகமாக வண்டியை ஓட்டினாலும்....சென்னையின் ட்ராஃபிக்கில் நீந்தி....அந்த மருத்துவமனையை அடைவதற்கு அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது.பல ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரம்மாண்டமாக விரிந்திருந்தது.....அந்த 'சுகம் மருத்துவமனை'.



வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் விசாரித்துக் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு ஓடினாள் நித்திலா.அங்கு ஒரு அறையின் வாசலில் நின்றபடி அழுது கொண்டிருந்தாள் வர்ஷினி.



இவளைக் கண்டதும்,"நித்தி.....!",என்று அழுதபடியே ஓடி வந்து கட்டிக் கொண்டாள் வர்ஷினி.



"நித்தி....!டாக்டர்ஸ் என்னென்னமோ சொல்றாங்க டி....!நம்ம நந்துவுக்கு தலையில....பலமான அடியாம்.....!இரத்தம் நிறைய போயிருக்காம்....!உடனே....ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க டி....!"அழுதபடியே கூற,



"ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா....?",நித்திலா பலவீனமாக வினவ,



"இல்ல டி....!அது ஏதோ கிரிட்டிக்கலான ஆப்ரேஷனாம்....!அதுல ஸ்பெஷலிஸ்ட்டா இருக்கற டாக்டர் இப்ப....இங்க இல்லையாம்....!வெளிநாடு போயிருக்கறாராம்....!இப்ப முதலுதவிதான் பண்ணிக்கிட்டு இருக்காங்க....!",



"கடவுளே....!",என்றபடி அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்து விட்டாள் நித்திலா.சிறு வயதில் இருந்தே இருவரும் நல்ல தோழிகள்.இருவருக்கும் இடையில் இதுவரை எந்த ஒரு ஒளிவு மறைவும் இருந்ததில்லை.தள்ளாடி நடை பயிலும் வயதிலிருந்தே.....இருவரும் கை கோர்த்துக் கொண்டு ஒன்றாக சுற்றியவர்கள்.வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும்....இருவரும் சேர்ந்தே எதிர்கொண்டவர்கள்.அப்படிப்பட்ட தோழி அடிபட்டுக் கிடப்பது....அவளில் ஒரு பாதியை இழந்தது போல் இருந்தது.



கடவுளிடம் அவளைக் காப்பாற்றிக் கொடுக்கும்படி மனதிற்குள் மன்றாடிக் கொண்டிருந்தாள்.அந்த அறையைத் திறந்து கொண்டு டாக்டர் வெளியே வரவும்....ஏதோ கடவுளைப் பார்த்தது போல் அவரிடம் ஓடினர் தோழிகள் இருவரும்.



"டாக்டர்....!நந்தினிக்கு இப்போ எ...எப்படி இருக்கு.....?",



"கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் தான் மா....!பின் மண்டையில நல்லா அடி பட்டிருக்கு....!அந்த அதிர்ச்சியில மூளையில இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு....!உடனே....ஆப்ரேஷன் பண்ணி அதை நிறுத்தணும்....!ரியலி ஸாரி டு ஸே....!அந்த ஆப்ரேஷன் பண்ற டாக்டர் ஃபாரின் போயிருக்காரு....!எங்க யாராலையும் அந்த ஆபரேஷனைப் பண்ண முடியாது....!நாங்க எல்லா ஏற்பாடும் பண்ணி ஆம்புலன்ஸ்ல அனுப்பி வைக்கிறோம்....!வேற ஹாஸ்பிட்டல்ல பார்த்துக்கோங்க....!",அவர் கூற....நித்திலா கதற ஆரம்பித்தாள்.



"சார்....!வேற ஹாஸ்பிட்டல்ன்னா எங்கே போறது....?எங்களுக்கு எதுவுமே தெரியாது....!நாங்க சென்னைக்கு புதுசு.....!ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க.....ப்ளீஸ்....!",



"நீங்க 'நலம் ஹாஸ்பிட்டல்'க்கு போங்க....!அங்க எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்காரு.....!அவரும் மூளை சம்மந்தப்பட்ட ஆப்ரேஷன்ல ஸ்பெஷலிஸ்ட் தான்....!நான் அவருக்கு இன்ஃபார்ம் பண்றேன்.....!",மருத்துவராய் அவர் ஆலோசனை கூறினார்.



அதன் பிறகு....நந்தினியை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தன.ஆனால்....அதிலும் ஒரு சிக்கல் வந்தது.அவளது உடல்நிலை எந்த ஒரு சின்ன அசைவையும் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமையில் இருந்தது.



"ரியலி ஸாரி மா.....!அவங்க இப்ப இருக்கற நிலைமைல....அவங்க உடம்பு ட்ராவல ஏத்துக்காது....!கண்டிஷன் இன்னும் சீரியசாகிடும்.....!நாங்களே என்ன பண்றதுன்னு குழப்பத்துல இருக்கோம்....!",என்று டாக்டர் கூற,



"சார்....!எப்படியாவது அவளைக் காப்பாத்துங்க....!",நித்திலாவும் வர்ஷினியும் அவரை நோக்கி கை கூப்ப,



"வேணும்ன்னா ஒண்ணு செய்யலாம்....!அந்த டாக்டரை இங்கே வரச் சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணுவோம்....!பட்...அவராலையும் முடியுமான்னு தெரியலை ம்மா....!இது ரொம்ப ரொம்ப கிரிட்டிக்கலான ஆப்ரேஷன்....!கடவுளை வேண்டிக்கோங்க....!",அவர் தன் பங்கிற்கு பீதியை கிளப்பி விட்டு விட்டு சென்று விட்டார்.



"என்ன நித்தி.....இப்படி சொல்றாங்க....?"வர்ஷினி பதற,



"கவலைப்படாதே வர்ஷி....!நந்துவுக்கு ஒண்ணும் ஆகாது....!கடவுள் பார்த்துக்குவார்....!",அவள் முகத்தில் அப்படி ஒரு நம்பிக்கைத் தெரிந்தது.



அந்த தீவிர சிகிச்சை பிரிவின் அறைக் கதவு வழியாக நந்தினியைப் பார்த்த நித்திலா....அவளுடன் மானசீகமாகப் பேச ஆரம்பித்தாள்.மூக்கிலும் வாயிலும் பல வயர்கள் சொருகப்பட்டு....தலையில் பலத்த கட்டுடன் படுத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.



"நந்து....!தயவு செய்து எழுந்திருச்சு வந்துரு டி....!அந்த மீதி இருக்கிற ஒரு சம்படா முறுக்கு மொத்தத்தையும் நீயே எடுத்துக்க....!எனக்கு ஒரு முறுக்கு கூட வேண்டாம்.....!வர்ஷியும் பங்கு கேட்க மாட்டா.....!அதை நீயே சாப்பிடலாம்.....!ப்ளீஸ் டி....வந்துடு...!எனக்கு ரொம்ப பயமா இருக்கு நந்து....!",என்றவள் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.



வர்ஷினி வந்து ஆறுதலாக அவள் தோளில் கை வைக்கவும்,"இல்ல வர்ஷி....!நான் அழ மாட்டேன்....!நந்து திரும்பி வந்துடுவா....எனக்கு நம்பிக்கை இருக்கு.....!",என்றபடி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு....அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.



அதன் பிறகு நித்திலா ஒரு துளி கூட அழவில்லை.நந்தினியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததாகட்டும்....!அவளுக்குத் தேவையான மருந்துகள் வாங்கி வந்து கொடுத்ததாகட்டும்....!அனைத்தையும் ஒருவித தைரியத்துடனேயே செய்து முடித்தாள்.நலம் மருத்துவமனையின் டாக்டர் வந்து பார்த்துவிட்டு....'இந்த ஆப்ரேஷன் கடினம்....!', என்று கை விரித்து விட.....அதையும் மன உறுதியுடனேயே எதிர் கொண்டாள்.



வர்ஷினி கூட,"அழுது விடு நித்தி....!இப்படி இருக்காதே....!",என்று அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொள்ள.....,"இல்ல வர்ஷி....!நந்துவுக்கு ஒண்ணும் ஆகாது....!",என்றபடி அவளை விட்டு விலகி அமர்ந்து கொண்டாள்.



அலுவலகத்திற்கு வந்த ஆதித்யன்....அறை வெறுமையாக இருக்கவும்,"எங்கே....நம்ம ஆளக் காணோம்.....!நாம வந்ததே லேட்....!இதுல....இவளை இன்னும் காணோம்....!",என்று தனக்குத் தானே பேசியபடி வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.



நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர....நித்திலா வந்த பாடில்லை.'என்னாச்சு இவளுக்கு.....?லீவ்ன்னா இன்ஃபார்ம் பண்ணி இருப்பாளே....?',என்றபடி அவளது மொபைலுக்கு அழைக்க....அது எடுக்கப்படவில்லை.



'சே....!என்ன ஏதுன்னு இன்ஃபார்ம் பண்ண மாட்டாளா....?என்னாச்சோன்னு நாம பதற வேண்டியதா இருக்கு....!',என்றபடி புலம்பிக் கொண்டிருக்க....சரியாக அந்த நேரம் பார்த்து கையில் ஒரு பைலை எடுத்துக் கொண்டு கெளதம் உள்ளே நுழைந்தான்.



"என்னடா மச்சான்....?தனியா புலம்பிக்கிட்டு இருக்க....?",



"நித்திலாவை இன்னும் காணோம் டா...!லீவா....என்னன்னு தெரியல....?".அவன் கூறவும்தான்....கௌதமிற்கு.....அவள் மருத்துவமனைக்கு சென்றிருப்பது ஞாபகம் வந்தது.



"அய்யோ....!சாரி டா மச்சான்.....!அவங்க பிரெண்டுக்கு ஆக்ஸிடெண்ட்ன்னு ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க.....!நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்....!",



"இதையெல்லாம் நான் வந்த உடனேயே சொல்ல மாட்டயா....?சரி....எந்த ஹாஸ்பிட்டல்ன்னு விசாரிச்சியா....?",



"ம்....நம்ம சுகம் ஹாஸ்பிட்டல் தான்....!",



"சரி....நான் போய் பார்த்துட்டு வர்றேன்.....!நீ ஆபிஸை பார்த்துக்கோ.....!",தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ஆதித்யன்.



கைகள் தன் பாட்டிற்கு காரை ஒட்டிக் கொண்டிருக்க....மனது நித்திலாவை நினைத்துக் கொண்டு இருந்தது.'கடவுளே....!அவ தனியா என்ன கஷ்டப்படறான்னு தெரியல.....ரொம்பவும் பயந்திருப்பா.....!அவளுக்கு ஆறுதல் சொல்றதுக்காவது யாராவது கூட இருக்கறாங்களான்னு தெரியல.....!',காதல் கொண்ட அவன் மனது.....அவளுக்காக புலம்பிக் கொண்டிருந்தது.



காரை பார்க் செய்து விட்டு....வேகமாக தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தான்.இருக்கையில் தலையைச் சாய்த்தபடி....மிகவும் சோர்ந்து போனவளாய்.....கண்களை மூடி அமர்ந்திருந்தாள் நித்திலா.அவளைப் பார்த்த பிறகுதான்....அவனுக்கு நிம்மதியாக இருந்தது.



இரு கைகளையும் கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.



ஏதோ ஓர் உந்துதலில் பட்டென்று கண்ணைத் திறந்தவள்....சுவற்றில் சாய்ந்தபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனைப் பார்த்துவிட்டாள்.அவ்வளவுதான்.....!அடுத்த நொடி...."ஆது.....!",என்ற கதறலுடன் ஓடிச் சென்று....அவன் மார்பில் விழுந்திருந்தாள் அவள்.அந்த நிமிடம்.....அந்த நொடி....அவள் தன் மனதில் போட்டு வைத்திருந்த....அனைத்து இரும்புக் கதவுகளையும் தகர்த்த எறிந்து விட்டு....அவள் மனம் என்னும் சிம்மாசனத்தில் உரிமையுடன் ஏறி அமர்ந்திருந்தான் ஆதித்யன்.



காதல் செய்யும் மாயங்களில் இதுவும் ஒன்று....!தனக்கு உரிமையான இடத்தில் மட்டும்தான்....தன் மன பாரத்தை இறக்கி வைக்க அனுமதிக்கும்....!இவ்வளவு நேரம்....தோழியாய் வர்ஷினி....நித்திலாவின் அருகிலேயே இருந்தாலும்....அவள் மனம் நாடியது என்னவோ ஆதித்யனைத்தான்.....!ஆறுதலாய்....அவள் தோள் சாய்ந்தது....ஆதித்யனின் நெஞ்சத்தில்தான்....!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 25 :

அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமும்....ஆதித்யனைக் கண்டவுடன் அணை உடைத்த வெள்ளமாய் வெடித்துச் சிதறியது....!இத்தனை நேரம் இருந்த தைரியம் அனைத்தையும் இழந்தவளாய்....வேரற்ற கொடி போல்....அவன் நெஞ்சில் சாய்ந்து கதறிக் கொண்டிருந்தாள் நித்திலா.

அவனைக் கண்ட அந்தக் கணம்....அவள் மனதில் அடி ஆழத்தில் புதைந்திருந்த அத்தனை காதல் உணர்வுகளும் முட்டி மோதிக் கொண்டு வெளி வந்தன....!அவனைக் கண்டதும் 'தான் என்ன உணர்கிறோம்....!',என்று அறியாமலேயே ஓடிச் சென்று அவனை அணைத்திருந்தாள்.

கடும் வெயிலில்....பாலைவனத்தில் நடந்து கொண்டிருப்பவளுக்கு.....ஒரு குளம் தென்பட்டால் எப்படி உணருவாளோ....அந்த நிலைமையில் இருந்தாள் நித்திலா.'இவன் வந்துவிட்டான்....!இனி அனைத்தையும் இவன் பார்த்துக்கொள்வான்....!',என்ற நிம்மதியில்....அவன் மார்பில் புதைந்திருந்தாள்.

ஆதித்யன் நிலைமையோ....சொல்லவே வேண்டியதில்லை....!அவளுடைய 'ஆது....!' என்ற அழைப்பும்....அதை விட....அவளது அணைப்பும்....இருக்கும் இடத்தையும் மறந்து...மனதுக்குள் குத்தாட்டம் போடச் செய்தது.'அவள் மனதில் தான் இருக்கிறோம்....!ஒரு இக்கட்டான சூழ்நிலை என்று வரும் போது....தன்னவள் தன்னை மட்டும்தான் தேடுகிறாள்....!',என்ற உணர்வே அவனை விண்ணில் பறக்கச் செய்தது.

தன் மார்பில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தவளின் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்தவன்,"ஷ்....!நிலா....!அழாதேடா.....!அதுதான்....நான் வந்துட்டேன்ல.....!இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.....!",எங்கே அழுத்திச் சொன்னால் வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று எண்ணும் அளவிற்கு....அவ்வளவு மென்மையாக கூறினான்.அப்பொழுதும் அவள் அழுகை நின்ற பாடில்லை.

"இல்ல ஆது.....!உங்களுக்குத் தெரியாது.....!நந்துவுக்கு தலையில ப...பலத்த அடியாம்....!ஏதோ....கிரிட்டிக்கல் ஆப்ரேஷன்....அது இதுன்னு....என்னென்னமோ சொல்றாங்க.....!",தேம்பல்களுக்கு இடையே வந்து விழுந்தன வார்த்தைகள்.

தன் மார்பில் இருந்து அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவன்,"நிலா....!இங்கே பாருடா....!அதுதான் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன்ல.....?நான் இருக்கற வரைக்கும் நீ எதுக்காகவும் அழக் கூடாது.....!நீ முதல்ல அழுகையை நிறுத்து.....!நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்தேன்னா....நான் உன்னை விட்டு நகர மாட்டேன்....!அப்புறம் மத்த விஷயமெல்லாம் யார் பார்க்கறது.....?ம்ம்....?",பொறுமையாக எடுத்துக் கூறியபடி அவள் கண்ணீரை சுண்டி விட்டான்.

"இல்ல ஆது.....!நான் அழ மாட்டேன்.....!நீங்க போய் மத்த வேலையைப் பாருங்க....!",என்றபடி தன் கண்களை அவசர அவசரமாக துடைத்துக் கொண்டவளுக்கு....ஏதோ யோசனையில் மீண்டும் முகம் சுருங்கியது.

"ஆது....!எனக்கு ப...பயமா இருக்கு....!",என்றபடி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

அழுகையில் உதடு பிதுங்க....தன் முகம் நோக்கியவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்,"நிலா....!அழாதேடா....!உன் பிரெண்டுக்கு ஒண்ணும் ஆகாது....!முதல்ல கண்ணைத் துடை....!",ஆறுதலாக அவள் தலையை நீவியபடி....அவள் காதுக்குள் மிக மென்மையாக கூறினான்.

அவனது அந்தக் குரல் என்ன மாயம் செய்ததோ....?"சரி....!நீங்க போய் டாக்டரை பார்த்துப் பேசுங்க....!இனி நான் அழ மாட்டேன்....!",என்று கூறியவள்....சிறு குழந்தை போல் அவன் சட்டையிலேயே தன் முகத்தை அப்படியும் இப்படியும் புரட்டி....கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.அவனுடைய சட்டை முழுவதும்....அவளுடைய கண்ணீர் கறைகள்.அவளுடைய இந்த செய்கையில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

"ம்...தட்ஸ் குட்....!நீ இங்கேயே உட்கார்ந்திரு.....!",அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தவன்....அந்த மருத்துவமனையின் டீனை பார்க்கச் சென்றான்.

நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினிக்கு....'நித்திலா ஆதித்யனைக் காதலிக்கிறாள்....!',என்பது புரிந்து போனது.அதைப் பற்றி அவளிடம் பேசுவதற்கு....இது சரியான நேரமில்லை என்று புரிய....அமைதி காத்தாள்.

அடுத்த பத்தாவது நிமிடம்....நிறைய மருத்துவர்கள் புடை சூழ....அவர்களிடம் தீவிரமாக எதையோ விவாதித்தபடியே....அந்த பகுதிக்குள் நுழைந்தான் ஆதித்யன்.சென்னையில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நந்தினியைப் பற்றிய ரிப்போர்ட் பறந்தது.அடுத்த அரைமணி நேரத்தில்....சென்னையில் இருக்கும் மூளை சம்மந்தமாக அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அனைவரும் அந்த சுகம் மருத்துவமனையில் கூடியிருந்தனர்.

நந்தினியின் உடல்நிலையை பரிசோதித்து விட்டு....ஐந்து பேர் அடங்கிய மருத்துவர் குழு ஒன்று....அவளுக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய திட்டமிட்டது.இதற்கிடையில்....ஃபாரினில் இருக்கும் அந்த மருத்துவருக்கும் தகவல் பறக்க....அடுத்த அரைமணி நேரத்தில் அவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தார்.

அனைத்து வேலைகளும் பரபரவென்று நடந்தேற....நந்தினியும் அறுவை சிகிச்சைக்காக ஆப்ரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள்.கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அந்த ஆப்ரேஷன் நீடித்தது.இந்த நான்கு மணி நேரத்தில் ஒரு நிமிடம் கூட....நித்திலா....ஆதித்யனை விட்டு அகலவில்லை.அவன் தோளில் சாய்ந்தபடி....ஆப்ரேஷன் தியேட்டரின் கதவையே பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.

அவனும்....அவளை தன்னை விட்டு விலக அனுமதிக்கவில்லை.தன் கையணைப்பிற்குள் அவளை வைத்தபடியே அனைத்து வேலைகளையும் செய்தான்.இடையில்.....அந்த மருத்துவமனையின் டீன் வந்து ஆதித்யனிடம் பேச முற்பட்ட போது கூட....அவனை விட்டு விலகாமல்....அவன் சட்டையை இறுகப் பற்றியபடி....அவனது தோளில் சாய்ந்திருந்தாள்அவள்.

"அவர்கிட்ட பேசிட்டு வந்துடறேன் பேபி....!",என்றபடி அவன் எழ முயற்சித்த போது கூட...."ம்ஹீம்....!",என்றபடி அவனது சட்டை காலரை இறுகப் பற்றிக் கொண்டாள்.அவளது நிலைமையை பார்த்து விட்டு...அந்த டீனே,"சரி ஆதித்யன்....!நான் அப்புறம் பேசிக்கிறேன்....!",என்றபடி விலகிச் சென்று விட்டார்.

ஒரு வழியாக நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு....வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தபடி....மருத்துவர் குழு வெளியே வந்தது.அவர்களைப் பார்த்ததும் இன்னும் பயந்து போய் ஆதித்யனிடம் மேலும் ஒன்றிக் கொண்டாள் நித்திலா.அவளை அணைத்துப் பிடித்தபடியே எழுந்தவன்....டாக்டரிடம்,"இப்போ அவங்களுக்கு எப்படி இருக்கு....?",என்று விசாரிக்க,

"எவ்ரிதிங் இஸ் நார்மல்....!இனி பயப்படத் தேவையில்லை.....!இன்னும் மூணு நாள் அப்சர்வேஷன்ல இருக்கணும்....அதுக்கு பிறகுதான் நார்மல் வார்டுக்கு மாத்த முடியும்....!",என்க,

"தேங்க யூ டாக்டர்.....!",என்றபடி ஆதித்யன் அவரிடம் கை குலுக்கினான்.

"நாங்க எங்களுடைய கடமையைத்தான் செஞ்சோம் மிஸ்டர்.ஆதித்யன்....!உங்க ஃபியான்சிதான் ரொம்பவும் பயந்துட்டாங்க போல....",என்றவர்....அவனை ஒட்டியவாறு நின்றிருந்த நித்திலாவைப் பார்த்து,"மேடம்....!உங்க பிரெண்ட் ரொம்ப நல்லாயிருக்காங்க....!இனி நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்ல....எங்க ஆதித்யன் சார்க்கு வரப் போற மனைவி தைரியமா இருக்க வேண்டாமா....?",இருவரின் நெருக்கத்தையும் பார்த்து....'இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள்....!',என்று அவரே முடிவு செய்து கொண்டார்.

அவர் மட்டுமல்ல....அந்த மருத்துவமனையை அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்தது.அவர் கூறிவிட்டுச் செல்லவும்தான்....நித்திலாவிற்கு தற்போதைய நிலை உரைத்தது.முகத்தில் அறை வாங்கியது போல்....அவள் செய்த காரியம் அவள் மனதில் அறைய...சட்டென்று அவனை விட்டு விலகி நின்றாள்.அதற்குள் அவனை டாக்டர் அழைக்கவும்,"இங்கேயே இரு நிலா....!சும்மா மனசை போட்டு குழப்பிக்காதே....!நான் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடறேன்....!",அவளிடம் உரைத்து விட்டு அகன்றான்.

திக்பிரமை பிடித்தவள் போல் நின்று கொண்டிருந்தாள் அவள்.'கடவுளே....!இதுக்கு என்ன அர்த்தம்....?அவரைப் பார்க்கிற வரைக்கும்....நான் தைரியமாகத்தான் இருந்தேன்....!அவரைப் பார்த்த உடனே....எனக்குள்ள என்ன நடந்ததுன்னே தெரியல....எதுக்காக ஓடிப் போய் அவர் நெஞ்சில் விழுந்தேன்....?என்னுடைய மனபாரம் மொத்தத்தையும் அவர் தோளில் தான் இறக்கி வைச்சேன்.....?ஏன்....?நான் ஏன் இப்படி பண்ணினேன்....?

இவ்வளவு நேரம் வர்ஷியும் என் கூடத்தான் இருந்தாள்....ஆனால்....அவ தோள்ல சாய்ந்து அழணும்ன்னு எனக்கு ஏன் தோணல....?எனக்கு ஒரு கஷ்டமான நிலைமைன்னு வரும்போது....நான் அவரைத்தான் தேடியிருக்கேன்.....அப்படின்னா....அப்படின்னா....இதுக்கு என்ன அர்த்தம்....?அவர்....அவர்....என் மனசை தொட்டு விட்டார்ன்னுதானே அர்த்தம்....?என் மனசில அவருக்கான காதல் இருந்திருக்கு....எந்தக் கணத்துல....அவரை என் மனசுக்குள்ள நுழைய அனுமதிச்சேன்னு தெரியல....?என்னையும் அறியாம....நான் அவரை காதலிச்சிருக்கேன்.....!',என்று தன் முதல் காதலை உணர்ந்து கொண்டவளின் மனதில்....அவள் என்றோ படித்த ஒரு கவிதையின் வரிகள்தான் ஞாபகத்தில் உதித்தது.

"இனம் விளங்கவில்லை.....!
எவனோ என் அகம் தொட்டு விட்டான்....!!!"



மெல்ல அவளுடைய உதடுகள்....இந்த வரிகளை உச்சரித்தன.

உறைந்து நின்றவளின் தோளைப் பற்றித் தன் புறம் திருப்பிய வர்ஷினி,"நித்தி....!அதுதான் நந்துவுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்களே....!இன்னும் ஏன் இப்படி நிற்கிற....?",என்று கேட்கவும்,

"ஹ்ம்ம்....ஒண்ணுமில்லை வர்ஷி....!நந்துவுடைய அம்மா அப்பா எங்க வந்துட்டு இருக்காங்களாமா....?போன் பண்ணி கேட்டியா....?",

"ம்...பாவம் டி...!ரொம்பவும் அழுதாங்க....!",

"ம்...இருக்கும்ல....ஒகே....!நான் போன் பண்ணி இப்ப எந்த பிரச்சனையும் இல்லைன்னு இன்பார்ம் பண்ணிடறேன்....!",என்றபடி மொபைலை எடுத்துக் கொண்டு நகர்ந்தவளுக்கு....நந்தினியின் உடல் நிலையில் அப்போதைக்கு ஆதித்யனின் நினைவு பின்னுக்குத் தள்ளப்பட்டது.

நேரங்கள் கடக்க....டாக்டரைப் பார்க்கச் சென்ற ஆதித்யன் வரவில்லை.ஆனால்....அவன் அனுப்பி வைத்ததாக சாப்பாட்டையும்....பழச்சாற்றையும்....தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு....அங்கு வேலை செய்யும் ஒரு அம்மா வந்தார்.ஐ சி யூ விற்கு பக்கத்தில் இருந்த ஒரு அறையை இவர்களுக்காக திறந்து விட்டவர்....அங்கு அமர்ந்து அவர்களை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கும்படி கூறினார்.

"இல்லைங்க....!இதெல்லாம் வேண்டாம்....!நீங்களே எடுத்துட்டுப் போங்க.....!அப்புறம் எங்களுக்குன்னு ரூமெல்லாம் அவசியம் இல்ல....",என்று நித்திலா மறுக்க,

"இல்லைம்மா.....!ஆதித்யன் சார்தான் இதையெல்லாம் ஏற்பாடு பண்ண சொன்னார்....!கூடவே இருந்து உங்க ரெண்டு பேரையும் சாப்பிட வைச்சிட்டுத்தான் நான் இங்கேயிருந்து போகணும்ன்னு சொன்னார்....!",என்று அவர் கூற....நித்திலாவிற்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது.

"அவர் எங்கே இருக்காரு....?",வர்ஷினி வினவ,

"ஏதோ வேலை விஷயமா பேசிக்கிட்டு இருக்காராம்....!கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்னு சொல்லச் சொன்னாரு....!",

"ஓ....!",என்றபடி வர்ஷினி அமைதியாகி விட....அந்த அம்மா இருவரையும் சாப்பிடச் சொல்லி மீண்டும் வற்புறுத்தினார்.நித்திலா பிடிவாதமாக மறுக்க,"தயவு செஞ்சு சாப்பிடுங்கம்மா....!நீங்க சாப்பிடலைன்னா எனக்குத்தான் திட்டு விழும்....!",என்று அவர் பாவமாக கெஞ்ச....இருக்கும் மனநிலையில் இருவரும் சாப்பாட்டை மறுத்துவிட்டு....ஜுஸை மட்டும் அருந்தினர்.அதன் பிறகே அவர் வெளியே சென்றார்.

அவர் வெளியேறிய பிறகு....நித்திலாவைப் பார்த்த வர்ஷினி,"ஆதித்யன் சார் மட்டும் இல்லைன்னா....நாம நம்ம நந்துவை திரும்ப பார்த்து இருக்கறது கஷ்டம் தான்....!அவர் வந்த உடனே....கடகடன்னு அத்தனை வேலையும் நடந்துச்சு....!இதையெல்லாம் அவர்...உனக்காகத்தான் டி செய்தார்....!அவருடைய காதல் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும்....!நீயும் லவ் பண்றேன்னு எங்களுக்கு ஏன் சொல்லவே இல்ல....?",அவள் வினவ,

"நான் ஒண்ணும் அவரை லவ் பண்ணல....!என் மனசில காதல் இல்ல....!அந்த டாக்டர் என்னடான்னா...'நான் அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு' சொல்றாரு....!நீ என்னடான்னா....காதல்...அது இதுன்னு உளறிக்கிட்டு இருக்க....?",என்று நித்திலா கத்தினாள்.அவள் மனதில் ஆதித்யனின் மீதான காதல் இருக்கிறது என்பதுதான் உண்மை....!ஆனால்....அதை ஏற்றுக் கொள்ள முடியாமல்....வர்ஷினியிடம் கத்திக் கொண்டிருந்தாள்.

"என்னது.....?நான் உளருறேனா.....?ஹாஸ்பிட்டல்ல நாலு பேர் பார்ப்பாங்க அப்படிங்கற நினைப்பு இல்லாம....அவரைப் பார்த்ததும் ஓடிப் போய் அவரைக் கட்டிப்பிடிச்சது நீ.....!இதைப் பார்க்கறவங்க என்னன்னு நினைப்பாங்க....?நீயும் அவரும் லவ் பண்றீங்கன்னுதான் நினைப்பாங்க.....!",வர்ஷினிக்கு வந்த கோபத்தில் அவளைப் பிடித்து திட்ட ஆரம்பித்தாள்.

"இல்ல....நான் யாரையும் லவ் பண்ணல....!என் மனசில அப்படி ஒரு எண்ணம் இல்ல....!",

"சும்மா இதையே சொல்லாத டி....!உன் மனசில காதல் இல்லாமதான் அவர் நெஞ்சில சாஞ்சு அழுதியா...?அவ்வளவு நேரம் நான் உன் பக்கத்துலதானே இருந்தேன்....?உனக்கு அழணும்ன்னு தோணுச்சுன்னா....என் தோள்ல ஆறுதலா சாஞ்சு அழுது இருக்கலாமே.....?அதை விட்டுட்டு....அவரைப் பார்த்த உடனேயே....ஓடிப் போய் அவரை கட்டிப் பிடுச்சுக்கிட்டே.....!உன் மனசுல காதல் இல்லாமலா இதையெல்லாம் செஞ்ச.....?நல்லா யோசிச்சுப் பாரு நித்தி....!உன்னையறியாமலே....உனக்கான ஆறுதலை நீ அவர்கிட்ட தேடியிருக்க.....மனசில காதல் இல்லாம இதெல்லாம் நடக்காது.....!",வர்ஷினி....நித்திலாவிற்கு புரிய வைக்க முயற்சிக்க,

"இல்ல....ஏதோ ஒரு நினைப்பில அப்படியெல்லாம் பண்ணிட்டேன்.....!நந்துவை அந்த நிலைமைல பார்த்த குழப்பத்துல....நான் அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்....!",ஏனோ அவளால் அவள் மனதில் பூத்திருந்த காதலை ஒத்துக்கொள்ள முடியவில்லை.இவ்வளவு காலம்....அவள் வளர்ந்திருந்த விதம்....அவளுடைய அப்பாவின் நம்பிக்கை....அனைத்தும் சேர்ந்து அவளை ஒத்துக்கொள்ள முடியாமல் தடுத்தன.

"பார்த்தியா....?இதுக்கான பதிலை நீயே சொல்லிட்ட.....?'ஏதோ குழப்பத்துல அப்படி நடந்துக்கிட்டேன்....'ன்னு சொல்றயே.....?இதுக்கு என்ன அர்த்தம்.....?மனசு தெளிவில்லாம....குழப்பமா இருக்கற சூழ்நிலையிலும் நீ அவரைத்தான் தேடியிருக்கேன்னு அர்த்தம்....!உனக்கு ஒண்ணு தெரியுமா....?நந்துவுக்கு உள்ளே ஆப்ரேஷன் நடக்கும் போது....நீ ஒரு நிமிஷம் கூட ஆதித்யன் சாரை விட்டுப் பிரியலை....!இந்த ஹாஸ்பிட்டல் டீன்....அவர்கிட்ட பேச வந்த போது கூட....நீ அவரை விட்டு விலக மாட்டேன்னு....அவரை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு நின்ன....கடைசியில....அந்த டீன் தான் 'அப்புறம் பேசிக்கிறேன்....!'ன்னு விலகிப் போனாரு.....!

அப்புறம்....இன்னொரு விஷயத்தை ஞாபகம் வைச்சுக்கோ....!இதை அனைத்தையும் ஆதித்யன் சார் உனக்காக....உனக்காக மட்டும்தான் பண்ணினாரு.....!உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வர்றதை கூட அவர் விரும்பல....!நீ அழும் போது....அவர் முகம் எவ்வளவு வேதனையை காட்டுச்சுன்னு....நான் பார்த்துட்டுத்தான் இருந்தேன்....!அவர் அளவுக்கு உன்னை யாரும் நேசிக்க முடியாதுன்னு எனக்குத் தோணுது.....!நீயும் அமைதியா யோசிச்சு பாரு....!",நிலைமையை தெளிவாக உரைத்து விட்டு....அவள் வெளியேறிவிட்டாள்.

நித்திலாவின் மனதில் ஒரு பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தது.'தான் ஆதித்யனை காதலிக்கிறோம்....!இதுவரை....தான் போட்டு வைத்திருந்த அனைத்து வேலிகளையும் உடைத்தெறிந்து விட்டு....அவன் தன் அகத்தை தொட்டு விட்டான்....!',என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.இதுநாள் வரை....அவனது செய்கையால் சிறிது சிறிதாகத் தடுமாறிக் கொண்டிருந்தவள்....அன்று....முழுவதுமாக அவன் காலடியில் வீழ்ந்தாள்.

'எப்பொழுது இது நிகழ்ந்தது....?எப்பொழுது பார்த்தாலும்....இருவரும் சண்டையிட்டுக் கொண்டுதானே இருந்தோம்.....?அப்படி இருக்கும் போது....எந்தக் கணத்தில்....அவன் மீது காதல் வந்தது....?அவனது முரட்டுப் பிடிவாதமும்....அந்த வெறித்தனமான காதலுமே....என்னை அவன் பக்கம் சாய்த்து விட்டது....அவனுடைய காதல் என்னை ஜெயித்து விட்டது....!',

'ஆனால்....',இந்த 'ஆனால்' என்ற கேள்வி அவள் முன் பூதாகரமாய் எழுந்து நின்றது.

'இல்ல....!என் அப்பா என் மேல வைச்சு இருக்கிற நம்பிக்கையை நான் அழிக்க மாட்டேன்....!பெத்தவங்களுக்குத் தெரியாம லவ் பண்றது....அவங்க என் மேல வைச்சிருக்கிற நம்பிக்கைக்குத் துரோகம் பண்ற மாதிரி....நான் அந்த துரோகத்தை பண்ண மாட்டேன்....!

ஆனால்....என்னுடைய காதல்....!என்னுடைய ஆது....!அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால வாழ முடியுமா....?கடவுளே....!என்னால ஒரு முடிவை எடுக்க முடியலையே....!நேத்து வரைக்கும்...அவர் யாரோ.....?நான் யாரோ...?ன்னு இருந்தேன்....!ஆனால்....இந்த நிமிசத்தில இருந்து....அவரில்லாம என்னால வாழ முடியாதுங்கிற நிலைமைல வந்து நிற்கிறேனே....?இல்ல....இது கூடாது.....!என் அம்மா அப்பாவை நான் ஏமாத்த மாட்டேன்....!அவங்களை மீறி நான் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்....!',உண்மையில் அவள் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருந்தாள்.ஒரு மனம்....அவள் காதலுக்காக போராட....இன்னொரு மனமோ....அவளது பெற்றோர்களுக்காக வாதாடியது.

இறுதியில்....பெற்றவர்களின் பாசம்....காதல் கொண்ட மனதை....அப்போதைக்கு தற்காலிகமாக ஓரங் கட்டியது.உண்மையில்....காதலின் முன் நாம் அனைவருமே விளையாட்டு பொம்மைகள்தான்.....!பெற்றவர்களின் பாசம்....பெரு நெருப்பு என்றால்.....காதல் ஒரு கொதிக்கும் எரிமலை....!இரண்டும் பொங்கி எழும் போது....சுற்றி இருப்பவை அனைத்தும்....எரிந்து சாம்பலாகி விடும்....!ஆனால்....விதி என்ற ஒன்று இருக்கிறதல்லவா....?அது....விஷ்வரூபம் எடுத்து ஆடும் போது....அனைத்தும் அதற்குள் அடங்கித்தான் ஆக வேண்டும்....!இதுதான் இயற்கையின் ...நியதி...!

ஒரு முடிவுடன் வெளியே வந்தவள்....அங்கு நின்றிருந்த வர்ஷினியைப் பார்த்து,"வர்ஷி....!ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் தேவைப்படும்ல....?நான் போய் ஏ.டி.எம் ல எடுத்துட்டு வந்துடறேன்....!",என்றபடி நகர....அவளைத் தடுத்து நிறுத்தியவள்....தன்னுடைய ஏ.டி.எம் கார்டையும் கொடுத்தனுப்பினாள்.

அருகில் இருக்கும் ஏ.டி.எம் சென்டருக்கு சென்று....தங்கள் இருவரின் அக்கவுண்டில் இருந்தும் பணம் எடுத்து வந்தவள்....தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நர்ஸிடம் சென்று,"சிஸ்டர்....!இதுவரைக்கும் எங்களுக்கு பில் வரலை.....!எங்கே பணம் கட்டணும்ன்னு சொன்னீங்கன்னா....நான் அங்க போய் பணம் கட்டிடுவேன்.....!கொஞ்சம் அதை பார்த்து சொல்லுங்க....!",என்று வினவ,

அந்த நர்ஸோ அவளை வித்தியாசமாகப் பார்த்தார்."என்ன மேடம்....!விளையாடறீங்களா....?உங்க ஹாஸ்பிட்டல்ல உட்கார்ந்துக்கிட்டு....நான் உங்க கிட்டேயே பணம் கேட்டேன்னா அவ்வளவுதான்....!என் வேலை காலி ஆகிடும்....!என்னை வேலையை விட்டு தூக்கலாம்ங்கிற ஐடியால இருக்கீங்களா....?",கேலியாக கூறினார் அவர்.

"என்ன சொல்றீங்க....?என் ஹாஸ்பிட்டலா....?எனக்கு ஒண்ணும் புரியல....!",குழப்பமாக அவள் வினவ,

"மேடம்....!நீங்கதானே ஆதித்யன் சாரை கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு.....?இந்த ஹாஸ்பிட்டலே அவருடையதுதான் மேடம்.....!இது மட்டும் இல்ல....இந்த மாதிரி ஸ்கூல்...காலேஜ்ன்னு நிறைய இன்ஸ்ட்டிடூயஷன்ஸ்.....அவருடைய கொள்ளு தாத்தா நினைவா....டிரஸ்ட் மூலமா நடத்திக்கிட்டு இருக்காரு....!என் பையன் கூட அவருடைய ஸ்கூல்லதான் படிக்கிறான்....!மத்த ஸ்கூல்ஸ் கூட கம்பேர் பண்ணும் போது ஃபீஸ் ரொம்ப குறைவுதான்....!இதெல்லாம் தெரியாமலேயே ஆதித்யன் சாரை லவ் பண்ணுனீங்களா....?ஆச்சரியமா இருக்கு.....!உண்மையிலேயே ஆதித்யன் சார் கொடுத்து வைச்சவர்தான்....!அவரை....அவருடைய பணத்துக்காக இல்லாம....அவருக்காகவே காதலிச்சிருக்கீங்க.....!சூப்பர்.....!",ஒரு நீண்ட சொற்பொழிவையே ஆற்றி முடித்தார் அந்த நர்ஸ்.

ஆதித்யனின் பிரம்மாண்டமான உயரம் அவளை மலைக்க வைத்தது.அவன் பணக்காரன் என்று தெரியும்....!ஆனால்....இந்த அளவுக்கு கோடீஸ்வரன் என்று தெரியாது....!தனக்கும் அவனுக்கும் இடையே பெரிய பள்ளம் விழுந்ததைப் போல் உணர்ந்தாள் நித்திலா.தனக்கும் அவனுக்கும் இருக்கும் வித்தியாசம்.....மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்பது நன்கு புரிந்து போனது....!ஏணி வைத்தால் கூட....அந்த வித்தியாசத்தை சரி பண்ண முடியாது என்பது அவளுக்கு உரைத்தது.சற்று முன்....அவள் மனதில் எடுத்திருந்த முடிவு இறுகி உறுதியானது.....!

ஆனால்....அவள் ஒன்றை அறியவில்லை....!எவ்வளவு பெரிய வித்தியாசத்தையும்....ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் அதிசயத்தை காதல் செய்யும்.....என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

தன் போக்கில் உழன்று கொண்டிருந்தவளை,"உண்மைதான் சிஸ்டர்.....!இவ கிடைக்க நான் கொடுத்துதான் வைச்சிருக்கணும்....!",என்ற ஆதித்யனின் குரல் கலைத்தது.அவளருகில் வந்து நின்றபடி....அவள் தோளைச் சுற்றி கைகளை போட்டு அணைத்துக் கொண்டான்.எதிரில் நர்ஸ் இருக்கவும்....அவன் கைகளை தட்டி விட முடியாமல் அமைதி காத்தாள் நித்திலா.

"உங்க காதல் மாதிரியே....உங்க ஜோடிப் பொருத்தமும்...ரொம்ப அழகா இருக்கு சார்....!",அந்த நர்ஸ் ரசித்துச் சொல்ல,

"எங்க காதல் மாதிரியேவா....?அதெப்படி எங்க காதலை நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க....?",ஆதித்யன் வினவ,

"அதுதான் நான் பார்த்தேனே சார்....!சுத்தி நாங்க எல்லோரும் நிற்கிறோம்....!எங்க யாரைப் பத்தியும் கவலைப்படாம....உங்களைப் பார்த்ததும்....அடுத்த நிமிஷம் ஓடி வந்து உங்க நெஞ்சில விழுந்தாங்களே....!அது மட்டும் இல்ல...இவங்க பிரெண்டும் அவ்வளவு நேரம் அங்கேயேதான் இருந்தாங்க....!மேடம் நினைச்சிருந்தா....ஆறுதலா அவங்க தோள்ல சாஞ்சு அழுதிருக்கலாம்.....!ஆனால்....இவங்க அதை செய்யல....ஆறுதலுக்காக அவங்க உங்க தோளைத்தான் தேடியிருக்காங்க....!மனசில எவ்வளவு காதல் இருந்திருந்தா....உங்களை இந்தளவுக்கு தேடியிருப்பாங்க.....!",அந்த நர்ஸ் பாட்டிற்கு...நித்திலாவின் நிலைமையை பிட்டு பிட்டு வைத்துக் கொண்டிருந்தார்.

நித்திலாவினால் அங்கு நிற்கவே முடியவில்லை.தோளைச் சுற்றியிருந்த அவனின் கைகளும்....நர்ஸின் வார்த்தைகளும் அவளை என்னவோ செய்தன.அதற்குள் அந்த நர்ஸிற்கு ஏதோ வேலை வந்துவிட....அவர்....இவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து நகன்றார்.

அவர் நகரவும்....அவன் கைகளை விலக்கி விட்டவள்....தன் கையிலிருந்த பணத்தை அவன் முன் நீட்டினாள்.

"என்ன இது....?",அமைதியாக அவன் கேட்க,

"பார்த்தா தெரியலையா....?பணம்....!",என்றாள் அவள்.

"அது தெரியுது.....!அதை எதுக்கு என்கிட்ட கொடுக்கிற....?",

"நந்துவுடைய ட்ரீட்மெண்ட்க்கு....!இப்போதைக்கு இவ்வளவுதான் புரட்ட முடிஞ்சுது.....!இன்னும் கொஞ்ச நேரத்தில....நந்துவுடைய அம்மா அப்பா வந்திடுவாங்க....!பில் எவ்வளவுன்னு தெரிஞ்சா....எங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்....!",

"உனக்குத் தெரியலைன்னு நினைக்கிறேன் பேபி....!இந்த ஹாஸ்ப்பிட்டல் நம்மளுடையதுதான்....!வேற ஹாஸ்பிட்டலா இருந்திருந்தாலும்.....நான் உன்கிட்ட பணம் வாங்கியிருக்க மாட்டேன்....!",பொறுமையாகவே எடுத்துக் கூறினான் அவன்.

அவனை உற்றுப் பார்த்தவள்,"ஒரு சின்ன திருத்தம் சார்....!இந்த ஹாஸ்பிட்டல் நம்மளுடையது இல்ல....!உங்களுடையது.....!",என்றாள் வீம்பாக.

"என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு....!",என்றான் அவன் ஒரு மாதிரிக் குரலில்.

"இப்பத்தான் கரெக்ட்டா பேசறேன்....!இந்தாங்க....பணம்.....!",என்றபடி பணத்தை அவன் கைகளில் திணிக்க முயல,

"ஒழுங்கு மரியாதையா அந்த பணத்தை எடுத்து உள்ளே வைச்சிடு.....இல்லைன்னா.....என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.....!",ஒவ்வொரு வார்த்தையையும் பல்லைக் கடித்தபடி....மிக அழுத்தமாகக் கூற....அவனுடைய ரௌத்திரத்தில்.....அவளுடைய கை தன்னிச்சையாக அந்த பணத்தை எடுத்து.....தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டது.

"ம்....தட்ஸ் மை பேபி.....!",என்றபடி அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டியவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"ஒரு நிமிஷம் சார்.....!நாம எல்லா விஷயத்தையும் இப்பவே பேசி க்ளியர் பண்ணிடலாம்....!என் மனசில உங்க மேல....அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்ல....!கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம்.....ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல நான் பண்ணினது.....!",வாய் கூசாது....தன் மனதை மறைத்து அவனிடம் பொய் கூறினாள்.

அவளை நிதானமாக அளவிட்டவன்,"எது....?என்னைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டும்....என் தோள்ல சாஞ்சிக்கிட்டும் இருந்தயே.....அதெல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல பண்ணினதா....?",அவன் குரல் நக்கலாக வெளிவந்தது.

தன் கண்களை ஒரு கணம் அழுந்த மூடித் திறந்தவள்,"ஆமாம்.....!நானும் நந்துவும் சின்ன வயசுல இருந்தே பெஸ்ட் பிரெண்ட்ஸ்.......!அவளை அந்த நிலைமைல பார்த்ததும்....'என்ன பண்றேன்னு' தெரியாம....ஏதோ ஒரு குழப்பத்துல அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்.....!மத்தபடி.....என் மனசில வேற எந்த ஒரு எண்ணமும் இல்ல....!",அவன் கண்களைப் பார்ப்பதை தவிர்த்து வேறு எங்கோ பார்வையை செலுத்தியபடி கூறினாள்.

இரு கைகளையும் கட்டியபடி.....அவள் விழிகளுக்குள் ஆழ்ந்து நோக்கியவன்,"பொய்......!",என்றான் அசட்டையாக.

"என்னது......?பொ...பொய்யா....?நான்.....நான் எதுக்கு பொய் சொல்லணும்.....?",தடுமாறினாள் அவள்.

இமைக்காது அவள் விழிகளுக்குள் கூர்மையாகப் பார்த்தவனின் பார்வையை....அந்தப் பாவை சில நிமிடமே தாக்குப் பிடித்தாள்.அதற்கு மேல்.....அவன் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல்....தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள் அவள்.

அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன்,"உன்னுடைய இந்த தடுமாற்றமே சொல்லுது.....!நீ பொய் சொல்றேன்னு.....",என்று கூறியவன்....அவள் தலையை இதமாக வருட,

'அவன் தன்னை கண்டு கொண்டான்....!' என்ற நினைவில் எழுந்த எரிச்சலில்,"ப்ச்....!முதல்ல இப்படி என்னை தொட்டு தொட்டு பேசறதை நிறுத்துங்க....!அந்த டாக்டரும்....நர்ஸும்.....நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு நினைச்சுக்கிட்டு....என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்காங்க....!நீங்களும் மறுத்து பேசாம அமைதியா இருக்கீங்க.....?",என்று எரிந்து விழுந்தாள்.

"அவங்க உண்மையைத்தானே பேசினாங்க.....!அப்புறம்....அவங்க பேசும் போது நீயும் அங்கேதான இருந்த....உனக்குப் பிடிக்கலைன்னா....நீயே மறுத்து பேசியிருக்க வேண்டியதுதானே.....?",கலைந்திருந்த அவள் தலைமுடியை ஒதுக்கியபடி அவன் கேட்க,

என்ன பேசுவது என்று தெரியாமல்,"அதுதான்....!இனிமேல் யாரவது வந்து என்கிட்ட அப்படி பேசட்டும்.....நல்லா திட்டி விடறேன்.....!",என்று கறுவியபடியே....."ப்ச்....!",என்ற சத்தத்துடன் அவன் கைகளைத் தட்டி விட்டாள்.

அவளையே சில நிமிடங்கள் இமைக்காது நோக்கியவன்,"பேபி.....!நீ என்னை காதலிக்க ஆரம்பிச்சுட்ட.....!உன்னோட இந்த குட்டி இதயத்துக்குள்ள.....நான் அழுத்தமா.....உரிமையா....வந்து உட்கார்ந்துட்டேன்.....!",தன் ஆள்காட்டி விரலால் அவள் இதயத்தை சுட்டிக் காட்டிவிட்டு,"இருந்தும்....ஏதோ இடியாட்டிக்.....வீணாப் போன காரணத்துக்காக....அதை ஒத்துக் கொள்ள மறுக்கிற.....!அப்படி என்னதான் ப்ராப்ளம்.....?",மென்மையாய் அவன் வினவ,

அவன் சொன்ன 'வீணாப் போன காரணம்....' என்ற வார்த்தை அவளுக்கு கோபத்தைக் கொண்டு வந்தது.

"வீணாப் போன காரணமா....?இல்ல....நல்ல காரணத்துக்காகத்தான் மறைக்கிறேனா....அப்படின்னு.....நான்தான் சொல்லணும்.....!நீங்க சொல்லக் கூடாது.....!",என்றபடி தன் தலையை சிலுப்ப,

குறும்பாக அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,"ஸோ.....நீ என்னை காதலிக்கறே அப்படிங்கறது உண்மைதான்.....ஏதோ ஒரு இத்துப் போன காரணத்துக்காகத்தான்.....அதை என்கிட்ட இருந்து மறைக்கிறே அப்படிங்கறதும் உண்மைதான்.....இல்லையா....?",ஆழ்ந்த குரலில் அவன் வினவ,

"நான் எப்ப உங்களைக் காதலிக்கறேன்னு சொன்னேன்.....?",அதிர்ச்சியுடன் கேட்டாள் அவள்.

"இப்போதானே.....கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி....உன் வாயாலேயே ஒத்துக்கிட்ட....!'வீணாப் போன காரணமா....?இல்ல....நல்ல காரணத்துக்காக மறுக்கிறேனான்னு.....நான்தான் முடிவு பண்ணனும்....'ன்னு சொன்னியே.....?அதுக்கு என்ன அர்த்தம்.....?நீ என்னைக் காதலிக்கிற....ஆனால்....ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை மறுக்கிறே.....அப்படின்னுதானே அர்த்தம்.....?",என்று சுற்றி வளைத்து அவன்....அவளை மாட்டி விட,

'தன் வாயாலேயே ஏதோ உளறியிருக்கிறோம்....!இனி இவனுடன் ஜாக்கிரதையாகத்தான் பேச வேண்டும்....!இப்பொழுது இவனை எப்படி சமாளிப்பது....?",என்ற உணர்வில் திரு திருவென முழித்தாள்.

அவள் முழியைக் கண்டு அவனுக்கு சிரிப்புதான் வந்தது.மனதிற்குள்,'மாட்டினயா டி....!இந்த ஆதித்யன் கிட்டேயே உன் வேலையைக் காட்டறியா.....?',என நினைத்துக் கொண்டவன்....வெளியே,

"ஒகே பேபி.....!நம்ம விஷயத்தை இன்னொரு நாள் பேசி....ஒரு முடிவுக்கு வரலாம்...!இப்ப உன் பிரெண்டை பத்தி பேசலாமா.....?",

"ஏன்....?அவளுக்கென்ன.....?நந்து ந...நல்லாத்தானே இருக்கா.....?மறுபடியும் ஏதாவது ப்ராப்ளமா.....?என்று பதற,

"இல்ல....இல்ல....ஒரு ப்ராப்ளமும் இல்ல....!உன் பிரெண்ட் நல்லா இருக்காங்க.....!நாளைக்கு காலையில கண் முழிச்சிடுவாங்களாம்....!அதுக்கு அப்புறம்...ஒவ்வொருத்தரா போய் பார்க்கலாம்ன்னு டாக்டர் சொன்னாரு.....!அவங்க பேரண்ட்ஸ் எப்ப வருவாங்க....?",அவன் கூறிய பிறகுதான் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.

"இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவாங்க.....!",

"ம்....எப்படி ஆக்சிடெண்ட் நடந்துச்சாமா....?உனக்கு ஏதாவது தெரியுமா.....?",

"எனக்குத் தெரியாது....!வர்ஷிதான் சொன்னா....இவ ஸ்கூட்டில ஆபிஸ்க்கு போய்ட்டு இருந்தப்ப....ஆக்சிடெண்ட் ஆகியிருக்குது.....!பக்கத்தில இருக்கறவங்க....இவளை இந்த ஹாஸ்பிட்டல்ல கொண்டு வந்து சேர்த்திருக்காங்க.....!அவ மொபைல்ல 'ரூம் மேட்'ன்னு போட்டு வர்ஷியுடைய நம்பரை சேவ் பண்ணி வைச்சிருக்கா.....!அதைப் பார்த்துட்டு....இவளுக்கு கால் பண்ணி இன்பார்ம் பண்ணியிருக்காங்க.....!",

"ம்....எங்க உன்னுடைய இன்னொரு பிரெண்டை காணோம்....?",

"அவ மனசு சரியில்லைன்னு....பக்கத்துல இருக்கற பிள்ளையார் கோவிலுக்குப் போயிருக்கா.....?",

"ஒகே நிலா....!நந்தினியுடைய பேரண்ட்ஸ் வந்ததும் நீ கிளம்பு.....!நான் உன்னைக் கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல ட்ராப் பண்ணிட்டு.....நான் ஆபிஸ்க்கு போறேன்....!",

"இல்ல....நான் நைட் கிளம்பிக்கிறேன்....!நீங்க இப்ப ஆபிஸ்க்கு கிளம்புங்க.....!",என்று மறுக்க,

"நோ....நோ....!இங்கேயிருந்து உன் ஹாஸ்டல் ரொம்ப தூரம்.....!நைட் தனியா ட்ராவல் பண்ண வேண்டாம்....!அதுவும் இல்லாம....பார்க்கறதுக்கே ரொம்ப களைப்பா தெரியற....ஹாஸ்டலுக்கு போய் ஃபிரெஷ்ஷா ஒரு குளியலை போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு.....!நீ போய் ரெடி ஆகு....!அவங்க வந்ததும் நாம கிளம்பலாம்....!",உறுதியாக கூறி விட்டான் அவன்.

இதற்கு மேல் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான்....என்பது புரிய.....அவளும் அமைதியாகிவிட்டாள்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே....நந்தினியுடைய பெற்றோர் வந்து விட்டனர்.கண்ணீரும்....புலம்பலுமாக நந்தினி படுத்திருந்த ஐ.சி.யூ அறையின் கதவுக்கருகிலேயே நின்று கொண்டிருந்தவர்களை....நித்திலாவும் வர்ஷினியும்தான் தேற்றினர்.ஆதித்யன் செய்த உதவி....வர்ஷினி மூலமாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட....இருவரும் நன்றியுடன் ஆதித்யனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டனர்.

"ரொம்ப நன்றிப்பா.....!அந்தக் கடவுள்தான் உங்களை அனுப்பி வைச்சிருக்கணும்.....!எங்களுடைய உலகமே....எங்க பொண்ணு நந்தினிதான்.....!அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா....அடுத்த நிமிஷம் நாங்க ரெண்டு பேரும் உயிரோட இருந்திருக்க மாட்டோம்.....!"கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீர் வழிய அவர்கள் கூற,

வயதில் பெரியவர்கள் தன்னை நோக்கி கும்பிட்டது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.பதட்டத்துடன் அவர்களது கைகளைப் பற்றிக் கொண்டவன்,"என்னங்க....ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க....!நித்திலாவுடைய பிரெண்ட் எனக்கும் பிரெண்ட்தானே....அண்ட்.....உதவி செய்யக் கூடிய நிலைல நான் இருக்கேன்.....ஸோ.....உதவி செஞ்சேன்.....!இதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காதீங்க.....!",பணிவுடன் அவன் மறுக்க....பெரியவர்கள் இருவருக்கும் அவனை மிகவும் பிடித்துப் போனது.

பிறகு நித்திலாவிடம் வந்தவன்,"ஒகே டா....!நாம கிளம்பலாமா....?"அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே....அவள் முகம் அழுகையில் சுருங்கியது.

"நந்து இல்லாம....ஹாஸ்டல் ரூமுக்கு போறதுக்கே கஷ்டமா இருக்கு.....!ஒவ்வொரு விஷயத்திலேயும் அவதான் ஞாபகத்திற்கு வருவா....!இன்னைக்கு காலையில கூட முறுக்குக்காக என்கூட சண்டை போட்டா.....",அழுகையில் உதடு பிதுங்க அவள் கூற,

அவளை நெருங்கி....அவள் கண்ணீரை சுண்டி விட்டவன்,"ஷ்.....என்னடா.....?மறுபடியும் அழ ஆரம்பிச்சுட்ட......சொல்லப் போனா....நீ சந்தோஷம்தான் படணும்.....!உன் பிரெண்ட் இப்ப எந்த பிரச்சனையும் இல்லாம....நல்லபடியா குணமாகிட்டாங்க.....!அதை நினைச்சு சந்தோஷப்படாம....இன்னும் பழசை நினைச்சு அழுதுக்கிட்டு இருக்க....!

வாழ்க்கையில சில சமயங்கள்ல.....கஷ்டங்கள் வரத்தான் செய்யும்.....!அதையெல்லாம் தைரியமா ஃபேஸ் பண்ண கத்துக்கணும் நிலா.....!லைஃப்ல என்ன ப்ராப்ளம் வந்தாலும்....ஈஸியா ஃபேஸ் பண்றதுக்கு....ஒரு மந்திரம் கத்துக் கொடுக்கட்டா.....?",நெற்றியில் புரண்ட அவள் முடியை சரி செய்தவாறு அவன் கூற,

"என்ன அது....?",குழந்தையாய் அவன் முகம் பார்த்து வினவினாள் அவள்.

"இதுவும் கடந்து போகும்....!இதுதான் அந்த மந்திரம்.....!கஷ்டம் வரும் போதெல்லாம்.....கண்ணை மூடிக்கிட்டு ஜெபம் மாதிரி இந்த மூணு எழுத்து மந்திரத்தை சொல்லிப் பாரு.....!நீயே புத்துணர்வா ஃபீல் பண்ணுவ....!என்ன ஒகே வா.....?",அவன் மெதுவாக கேட்க,

அவள் 'சரி' என்பதாய் தலை அசைத்தாள்.

"ஹ்ம்ம்....தட்ஸ் மை குட் கேர்ள்....!ஒகே.....இப்ப கிளம்பலாமா.....?",

"ம்....வர்ஷியையும் கூட்டிட்டு வந்திடறேன்.....!இல்லைன்னா.....அவ தனியா வரணும்.....!",என்றபடி அவள் வர்ஷினியை அழைக்க சென்றாள்.நந்தினியை ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டு.....அவளது பெற்றோரிடமும் விடைபெற்று விட்டுக் கிளம்பினர்.பயணத்தின் போது மூவருக்குள்ளும் அமைதியே நிலவியது.

ஹாஸ்டல் வந்துவிட....ஒரு 'நன்றி'யை உதிர்த்து விட்டு....இருவருக்கும் தனிமை அளித்து விட்டு வர்ஷினி உள்ளே சென்று விட்டாள்.காரில் இருந்து இறங்கி....அவளுடன் மெயின் கேட் வரை நடந்து வந்தான் ஆதித்யன்.

"நிலா....!ரூமுக்கு போன உடனே குளிச்சிடு....!இவ்வளவு நேரம் ஹாஸ்பிட்டல்ல இருந்தயல்ல....ஸோ....கண்டிப்பா குளிச்சிடு....அண்ட்....ஏதாவது சாப்பிட்டுப் படு.....வெறும் வயித்தோட படுக்காத.....!அப்புறம்....நான் சொன்னதை ஞாபகம் வைச்சுக்கோ.....!எதை நினைச்சும் அழக்கூடாது....!ஒகே வா....?",

தன் மீதான அவனுடைய அக்கறையைக் கண்டு அவளுக்கு மனம் குளிர்ந்து.அந்த இதத்துடனேயே,"சரி.....!",என்றாள்.

"ஹ்ம்ம்....ஒகே....!நான் கிளம்பறேன்.....!",என்றபடி அவன் திரும்ப,

"ஒரு நிமிஷம்.....!",என்றாள் அவள் அவசரமாக.

மென்மையான புன்னைகையுடன் அவள் புறம் திரும்பியவன்....அதை விட மென்மையாக,"என்ன....?",என்றான்.

"அது....வந்து....நீங்களும் காலையில இருந்து எதுவுமே சாப்பிடலை.....!ஹோட்டல்ல....ஏதாவது சாப்பிட்டுட்டு ஆபிஸ்க்கு போங்க....!",முதலில் எப்படியோ.....காதல் வந்த பிறகு....அவளால்....அவன் கண்களைப் பார்த்துப் பேசவே முடியவில்லை.

"ம்....சரிங்க மேடம்.....!",என்றவன் சிரித்தபடியே காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.அவன் கார்.....கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டுத்தான்....இவள் உள்ளே வந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும்....நந்தினி இல்லாத வெறுமை....மனதை தாக்கினாலும்....ஆதித்யன் சொல்லிக் கொடுத்தபடி....தன் மனதை தேற்றிக் கொண்டாள்.அவன் கூறியபடி குளித்து விட்டு....சாப்பிட்டு விட்டுத்தான் படுத்தாள்.அவனும்.....அவள் கூறியதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு....வழியில் சாப்பிட்டு விட்டுத்தான் ஆபிஸிற்கு சென்றான்.இருவரும் மற்றவரின் நினைவுகளில் சுகமாய் மூழ்கிப் போயினர்....!


அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 26 :

அடுத்த நாள்....தோழிகள் இருவரும் நேரமாகக் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்று விட்டனர்.இருவருமே....இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தனர்.

இவர்கள் ஹாஸ்பிட்டலுக்கு போகும் போது....நந்தினி கண் விழித்திருந்தாள்.இருவரும்,"நந்து....!",என்றழைத்தபடி ஓடிச் சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டனர்.

"எப்படி இருக்கு நந்து.....?இப்போ பரவாயில்லையா....?",அக்கறையுடன் விசாரிக்க,

"ம்....பரவாயில்லை டி....!தலைதான் கொஞ்சம் பாரமா இருக்கற மாதிரி இருக்கு....!",அவர்களைப் பார்த்து சோம்பலாக புன்னகைத்தபடி கூறினாள் நந்தினி.

"இதைப் பத்தி டாக்டர் கிட்ட கேட்டீங்களா ஆண்ட்டி....?அவரு என்ன சொன்னாரு....?",நித்திலா....நந்தினியின் தாயைப் பார்த்து கேட்க,

"டாக்டர் காலையிலேயே வந்து செக் பண்ணிட்டு போயிட்டாரு மா....!இன்னும் இரண்டு நாளைக்கு இப்படித்தான் இருக்கும்ன்னு சொன்னாரு....!பயப்பட அவசியமில்லையாம்.....!",என்று அவர் கூறிய பிறகுதான்....தோழிகள் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

நந்தினியின் புறம் திரும்பிய நித்திலா,"ஏண்டி....எருமை மாடே....!வண்டியில போகும் போது....பார்த்து கவனமா போகணும்ங்கிற அறிவு இல்லையா....?இப்படித்தான் எங்களையெல்லாம் பயமுறுத்துவியா....?",என்று திட்ட,

"நான் பார்த்துத்தான் டி போனேன்....!எதிர்ல வந்தவன் தான்....பார்க்காம வந்துட்டான்.....!",என்று முணுமுணுக்க,

"உடனே எதிர்ல வந்தவன் மேல பழியை தூக்கிப் போடாத....!ரோட்ல போகும் போது நாமதான் கவனமா இருக்கணும்.....!",

"எது எப்படியோ....?அந்த ஒரு சம்படா முறுக்குல....நான் பங்குக்கு வர மாட்டேன்னு நீ ஹேப்பியாதான இருப்ப....?",குறும்பாக புன்னகைத்தபடி அவள் கேட்க,

"ஆமாண்டி.....!நானும் வர்ஷியுமே தனியா உட்கார்ந்து.....அந்த முறுக்கையெல்லாம் தின்னு தீர்க்க போறோம்....!உனக்கு ஒரு முறுக்கு கூட தர மாட்டோம்.....!ஹாஸ்பிட்டல்ல....பேஷண்ட்டா படுத்திருக்கும் போது.....பேச்சை பாரு....அடிங்க.....!",அவளை அடிப்பது போல் நித்திலா கை ஓங்க....தோழிகள் மூவருக்குள்ளும் சிரிப்பு பீறிட்டது.

அடுத்த இரண்டு நாட்களும்....தோழிகள் இருவரும்....பார்வையாளர்கள் நேரம் முழுவதும் நந்தினியுடனேயே செலவிட்டனர்.

இங்கு அலுவலகத்தில்....நித்திலா இல்லாமல் ஆதித்யனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை.அவள் அறையில் இருந்தால்....மல்லிகையின் இதமான நறுமணமும்.....அவள் கால் கொலுசின் மெல்லிய ஒலியும்.....அவளுக்கே உரித்தான பிரத்யேக வாசனையும் அறையில் பரவி இருக்கும்.

அந்த சுகந்தத்தை அனுபவித்துக் கொண்டேதான்....வேலைகள் செய்வான் ஆதித்யன்.அதுவும்....அவள் லேசாகத் திரும்பினால் கூட.....அவள் கால் கொலுசின் மணிகள் ஒன்றோடொன்று உராய்ந்து சப்தம் எழுப்பும்.இவை அனைத்தையும் அனுபவித்து ரசித்தவனுக்கு.....இரண்டு நாட்களாக அவள் இல்லாதது வெறுமையைத் தந்தது.

நந்தினி உறங்கி விட.....நித்திலாவும் வர்ஷினியும் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களிடம் வந்த நந்தினியின் தாயார்,

"நித்திம்மா....!ஆதித்யன் தம்பியுடைய போன் நம்பர் இருந்தா கொடும்மா.....?",என்று கேட்க,

"ஏன் ஆண்ட்டி....?",

"அவருக்கு நன்றி சொல்லணும் ம்மா....!நந்துவுடைய மருத்துவ செலவு முழுசையும் அவரே ஏத்துக்கிட்டாரு......!நாங்க கூட பயந்துட்டே இருந்தோம்....!அவளுடைய கல்யாணத்துக்கு கூட இன்னும் பணம் சேர்த்தி வைக்கல.....!இதுல....திடீர்ன்னு இவ்வளவு பெரிய பணத் தேவைன்னா....என்ன பண்றதுன்னு நானும்....உன் அங்கிளும் யோசிச்சிட்டு இருந்தோம்.....!நல்லவேளை....கடவுள் மாதிரி வந்து.....ஆதித்யன் தம்பி எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாரு.....!",அவர் கூறிக் கொண்டிருக்க,

'ஆமா.....!ஹாஸ்பிட்டலே அவனுடையதுதான்....!இதுல என்னமோ.....மருத்துவ செலவை நானே ஏத்துக்கிறேன்னு சீன் வேற போட்டிருக்கான்.....!சுத்தி இருக்கிற எல்லாரையும் கவுத்திடுவான் போல.....!',காரணமில்லாமல் மனதிற்குள் எரிச்சல் பட்டுக் கொண்டாள் நித்திலா.

"என்னம்மா.....இப்படி நிற்கிற....?அந்த தம்பியுடைய நம்பர் இருக்கா.....?இல்லையா....?",அவர் மீண்டும் கேட்கவும்,

"ம்....இதோ....!தர்றேன் ஆன்ட்டி.....!",என்றபடி அவனுடைய நம்பரைக் கொடுத்தாள்.

இவ்வாறாக இரண்டு நாட்களும் கடந்து சென்று விட....மூன்றாவது நாள் காலையில் நேரமாகக் கிளம்பி....மருத்துவமனைக்குச் சென்று பார்த்து விட்டு....ஆபிஸிற்கு வந்து சேர்ந்தாள் நித்திலா.

அவள் உள்ளே நுழைந்ததுமே,"ஹப்பா.....!வந்துட்டியா பேபி.....?இவ்ளோ நாள் நீ இல்லாம.....இந்த ரூமே வெறுமையா இருந்துச்சு.....!இனி இப்படியெல்லாம் லீவ் போடாதே பேபி....!நான் உன்னை ரொம்பவும் மிஸ் பண்ணினேன்.....!",அவன் குரலில் உண்மையிலேயே அவளைப் பிரிந்து இருந்த வருத்தம் தெரிந்தது.

"என்னவோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி பேசறீங்க.....?ஏதோ....ரெண்டு நாள் ஆபிஸ்க்கு வரல....அதுக்கு இத்தனை பாடா.....?",தன் இருக்கையில் அமர்ந்தபடியே வினவினாள் அவள்.

"ரெண்டு நாள் தான்....!ஆனால்....ஏதோ ரெண்டு வருஷம் ஆன மாதிரி ஒரு ஃபீல் ஆகுது....!நீ இல்லாம சத்தியமா என்னால வாழ முடியாதுங்கிறதை....இந்த ரெண்டு நாள் எனக்கு நல்லாவே உணர்த்திடுச்சு.....!நாம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாமா....?",இரண்டு நாட்களாக அவளைப் பார்க்காத ஆதங்கத்தில் அவன் பேசிக் கொண்டிருக்க,

"ஹலோ....!ஹலோ....!போதும் நிறுத்துங்க....!நான் காதலிக்கவே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்....!நீங்க என்னடான்னா....கல்யாணம் வரைக்கும் போய்ட்டிங்க......?",

"நீ என்னை லவ் பண்றேன்னு....எனக்கு ரொம்ப நல்லா .தெரியும்.....!ஏன் பொய் சொல்ற....?",என்றான் அவன் அமைதியாக.

"இல்ல....நான் உங்கள காதலிக்கலை.....!",என்று அவள் கத்த,

"நீ என்னைக் கல்யாணம் பண்ணிட்டு மெதுவா லவ் பண்ணு....!எனக்கு எந்த ஒரு ப்ராப்ளமும் இல்ல.....!என்ன சொல்ற....?உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா....?",

"எப்ப பாரு விளையாட்டுதான்.....!ஆபிஸ் வொர்க் பார்க்கலாம்ங்கிற ஐடியா இருக்கா....?இல்லையா.....?",அவள் எரிந்து விழ,

"நான் எங்கே டி விளையாடினேன்.....?நீ தான் விளையாட விட மாட்டேங்கிறாயே.....?",அவன் முணுமுணுக்க,

"என்ன.....?",என்று சீறினாள் அவள்.

"ஒண்ணுமில்ல....உன் பிரெண்டுக்கு பரவாயில்லையான்னு கேட்டேன்.....!",அவன் வேண்டுமென்றே சத்தமாக கத்த,

"ம்....நல்லாயிருக்கா....!அதுக்கு ஏன் இப்படி கத்தறீங்க.....?",

"என் வாய்....!நான் கத்தறேன்....!உனக்கு என்ன வந்தது.....?",அவன் மீண்டும் கத்தவும்,

"எனக்கு என்ன வந்துச்சு.....?எனக்கு ஒண்ணும் இல்ல....!",முணுமுணுத்தபடி அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவளே,"தேங்க்ஸ்.....!",என்றாள்.

"எதுக்கு.....?",

"நந்துவுடைய மருத்துவ செலவு எல்லாத்தையும் நீங்களே ஏத்துக்கிட்டீங்களாமே....!அதுக்கும்....அன்னைக்கு நிறைய டாக்டர்ஸை வர வைச்சு....உடனே நந்துவுக்கு ஆப்ரேஷன் பண்ண ஏற்பாடு செஞ்சீங்களே....அதுக்கும்....எல்லா உதவிக்கும் ரொம்ப தேங்க்ஸ்.....!",

"பேபி....!எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே....உனக்குத் தெரியல.....!",என்றான் அவன் குறும்பாக.

"என்ன....?நான் நல்லாதானே சொன்னேன்.....!",அவள் குழம்ப,

"இல்ல....இப்படி சொல்லக் கூடாது.....!நான் வேணும்ன்னா....'தேங்க்ஸ்' எப்படி சொல்லணும்ன்னு சொல்லித் தரட்டா.....?",அவன் கேட்ட விதமே....அவன் ஏதோ வில்லங்கமாகத்தான் கூறப் போகிறான் என்பதைக் கூறியது.

"ஒ...ஒண்ணும் வேண்டாம்.....!நான் சொன்ன தேங்க்ஸே போதுமானதுதான்.....!அவசர அவசரமாக கூறியபடி திரும்பிக் கொண்டாள்.

"பட்.....எனக்குப் போதாதே.....!",விடாமல் அவன் வம்பிழுக்க,

கோபமாக அவன் புறம் திரும்பியவள்,"இப்ப நீங்க அமைதியா இருக்கப் போறீங்களா.....?இல்லையா....?ரெண்டு நாள் லீவ்ல நிறைய வொர்க் பெண்டிங்ல இருக்கு.....!அதை நான் முடிக்கணும்.....!",அந்தக் கம்பெனியின் உரிமைக்காரனையே அவள் மிரட்ட,

"அடேயப்பா.....!உன் M.D யையே மிரட்டறியா.....?",என்றவன் அதற்குப் பிறகு அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

அடுத்த ஐந்து நாட்களில்....நந்தினி ஐ.சி.யூ வில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு விட....அவளது உடல்நிலையும் மெல்ல மெல்ல தேறி வந்தது.நாட்கள் வேகமாக விரைய....பதினைந்து நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு.....நந்தினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு....ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

நித்திலாவும்....வர்ஷினியும் நந்தினி டிஸ்சார்ஜ் ஆகும் நாளன்று ஹாஸ்பிட்டலுக்கு சென்று அவளை வழியனுப்பி விட்டுத்தான் வந்தனர்.
.................................................................................................................................................

"ஹே நித்தி....!மெதுவா சாப்பிடு....!எதுக்கு இவ்ளோ வேகமா சாப்பிடற.....?",தன் முன் அமர்ந்து....அவசர அவசரமாக உணவை அள்ளி வாயில் போட்டபடி இருந்த நித்திலாவைப் பார்த்துதான் அவ்வாறு கூறிக் கொண்டிருந்தான் பாலா.

வேலை காரணமாக சுமித்ரா சீக்கிரம் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட....நித்திலாவும்....பாலாவும் தான் தனியாக இருந்தனர்.'அய்யோ....!இவன் கூட தனியா உட்கார்ந்து சாப்பிடறதை மட்டும் ஆதித்யன் பார்த்தான்....அவ்வளவுதான்....!நான் செத்தேன்....!",என்று எண்ணியபடியே வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா.

இதுவே....முதலில் இருந்த நித்திலாவாக இருந்திருந்தால்....'நீ என்னவோ சொல்லிக் கொள்....!',என்பதைப் போல் இருந்திருப்பாள்.ஆனால்...ஆதித்யனைக் காதலிக்கும் தற்போதைய நித்திலாவினால்....அவனது கோபத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை.

பாலா கேட்கவும்,"இல்ல பாலா....!கொஞ்சம் வேலை இருக்கு....!அதுதான்....!",என்று சமாளித்தாள்.

அவளைக் கூர்மையாகப் பார்த்தவன்,"இப்பவெல்லாம் உனக்கு அதிகமா வொர்க் இருக்கு....இல்லையா நித்தி....?",ஒரு மாதிரிக் குரலில் அவன் கூற,

"ம்....ஆ...ஆமா....!ஏன் கேட்கிற....?",இவள் தடுமாறினாள்.

"இல்ல....இப்ப எல்லாம் மதியம் லன்ச்சுக்கு வந்தா....'எனக்கு வேலை இருக்கு'ன்னு சொல்லிட்டு....அவசர அவசரமா போயிடறயே....!அதுதான் கேட்டேன்.....!எங்க கூடவெல்லாம் பேசறதுக்குக் கூட உனக்கு டைம் கிடைக்கிறது இல்ல....முக்கியமா என் கூட.....?",நிதானமாக சாப்பிட்டபடி.....அதை விட நிதானமாக அவன் கூற....இவள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டாள்.

"அப்படி எல்லாம் இல்ல பாலா....!உண்மையிலேயே வொர்க் அதிகம்....!",என்றாள் தலை குனிந்தபடி.

"ஹ்ம்ம்....உண்மையா இருந்தா சந்தோஷம்தான்.....!சரி....நீ ஏன் சாப்பிடறதை நிறுத்திட்ட.....?சாப்பிடு....!",

"ம்....!",என்றபடி அவள் ஒரு வாய் உண்ண,

"எனக்கு என்னவோ....நீ என்னை அவாய்ட் பண்றியோன்னு தோணுது நித்தி....!",அவன் குரல் அமைதியாக வெளி வந்தது.

அவன் கூறியதில் அவள் தான் பெரிதும் தடுமாறிப் போனாள்.

"இல்ல பாலா....!நீ ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க....நான் எதுக்கு உன்னை அவாய்ட் பண்ணனும்....?",திக்கித் திணறி கூற,

"அது உனக்குத்தான் தெரியணும்.....!",பார்வையில் அழுத்தத்துடன் கூறினான் அவன்.

அவள் பதில் கூற முடியாமல் தடுமாற்றத்துடன் விழிப்பதைக் கண்டவன்,"ஒகே நித்தி....!நீ சாப்பிட்டுட்டு கிளம்பு....!உனக்காக நிறைய வேலைகள் காத்துக்கிட்டு இருக்கும்....!",அவன் குரலில் இருந்தது கோபமா....?இல்லை....விரக்தியா....?என்ன என்று அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.தான் அவனை ஒதுக்குவது அவனுக்குத் தெரிந்து விட்டது என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல்,"இல்ல பாலா....!நான் உன்னை அவாய்ட் பண்ணல....!உண்மையாலுமே....",தடுமாறிக் கொண்டிருக்க,

"வேண்டாம் நித்தி....!நீ உன்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டு....பொய் சொல்ல வேண்டாம்....!விட்டு விடு....!",வெறுமையாகக் கூறியவன் எழுந்து சென்று விட்டான்.

அவனது வேதனையை கண்டு கொண்டவளுக்கு வருத்தமாக இருந்தது.இதுநாள் வரை....தன்னிடம் ஒரு நல்ல தோழனாகப் பழகியவனை விலக்கி வைப்பது என்பது....அவளுக்கும் கடினமாகத்தான் இருந்தது.அத்தனை வருத்தமும்.....கோபமாக மாறி ஆதித்யனின் மேல் திரும்பியது.அந்த கோபத்திற்கு தூபம் போடுவது போல்.....ஆதித்யன் ஒரு செயலை செய்து வைத்தான்.

அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 26 (1) :

மதிய உணவு இடைவேளை முடிந்து அறைக்குள் நுழைந்த நித்திலாவை....தனது கூர்மையான பார்வையுடன் எதிர் கொண்டான் ஆதித்யன்.

"என்ன....உன் பிரெண்ட் கூட பலமான பேச்சுவார்த்தை போல....?",

அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"ப்ச்....!",என்றபடி ஒன்றும் பேசாமல் தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"இன்னும் லன்ச்சுக்கு அவன் உங்ககூட தான் ஜாய்ன் பண்ணிக்கறானா.....?",என்று கேட்டான் அமைதியான குரலில்.

"ஆமா.....!கூட வந்து உட்கார்ந்து சாப்பிடறவனை முகத்தில் அடிச்ச மாதிரி....'நீ வராதே....!'ன்னு என்னால சொல்ல முடியாது.....!",என்றாள் சற்றுக் கோபமாக.

தோளைக் குலுக்கியவன்,"ஒகே....!முகத்தில் அடிச்ச மாதிரி நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்....!இனிமேல்...லன்ச்சுக்கு நீ அங்கே போக வேண்டாம்.....!இங்க என்கூடவே சாப்பிடு.....!",அவன் முடிவாகக் கூற,

அவனுடைய பேச்சில் அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க.....?பாலா கூட பேசக் கூடாதுன்னு சொன்னீங்க....சரின்னு நான் ஒத்துக்கிட்டேன்.....!இப்ப என்னடான்னா....கூட சேர்ந்து சாப்பிடக் கூடாதுன்னு சொல்றீங்க.....?அங்க....பாலா மட்டும் இல்ல....!என் பிரெண்ட் சுமியும் தான் இருக்கா....!என்ன காரணம் சொல்லிட்டு என்னால விலக முடியும்.....?",படபடவென்று அவள் பொரிய,

"என்ன காரணம் சொல்லுவியோ....அது எனக்குத் தெரியாது....!அது உன் பிரச்சனை....!நாளையில் இருந்து நீ என் கூட தான் லன்ச் சாப்பிடற....!",அசால்ட்டாகக் கூறியவன்....தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.

அவனையே சில நிமிடங்கள் உறுத்து விழித்தவள்,"என்ன விளையாடறீங்களா.....?என்னைக் கட்டுப்படுத்தணும்ன்னு நினைக்காதீங்க.....!நான் எதுக்கு நீங்க சொல்றதைக் கேட்கணும்.....?நான் கேட்க மாட்டேன்....!",என்றாள் அவள் உறுதியாக.

"நீ கேட்கலைன்னா....நான் உன்னை கேட்க வைப்பேன்.....!",என்றான் அவன்....அவளை விட உறுதியாக.

அவனிடம் தன் கோபம் செல்லாது என்பதை உணர்ந்தவள்....அவனிடம் மெதுவாக எடுத்துக் கூற முயன்றாள்.

"இங்கே பாருங்க....!நான் உங்க கூட....உங்க ரூம்லயே தான் உட்கார்ந்து வேலை செய்துட்டு இருக்கேன்.....!என் பிரெண்ட்ஸ் கூட பேசறதுக்கு லன்ச்ல மட்டும்தான் டைம் கிடைக்குது.....!அந்த நேரத்தையும் நீங்களே எடுத்துக்கிட்டா....என்ன அர்த்தம்....?",பொறுமையாக அவள் வினவ,

'இதற்கெல்லாம் அசருவேனா.....?' என்பது போல் அமர்ந்திருந்தவன்,"உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூடப் பிரிய விரும்பலைன்னு அர்த்தம்....!",என்றவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க வேறு செய்தான்.

வந்த எரிச்சலை முயன்று அடக்கியவள்,'நித்தி.....!இது நீ கோபப் படறதுக்கான நேரம் இல்ல....!நீ எதிர்த்து பேச பேச அவனுடைய பிடிவாதம் அதிகமாகிட்டே போகும்.....!ஸோ....பொறுமையாதான் இதை டீல் பண்ணனும்.....!",மனதிற்குள் கூறிக் கொண்டவள்....வெளியே....

"கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.....!நீங்களும் நானும் ஒரே ரூம்ல வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கோம்.....!இதுல....லன்ச்சுக்கு கூட நான் வெளியே போகலைன்னா....எல்லாரும் என்ன நினைப்பாங்க.....?",அவள் கூறிக் கொண்டிருக்க,

அவனோ,"மத்தவங்க நினைப்பை பத்தி....ஐ டோன்ட் கேர்.....!",என்றான் அசட்டையாக.

"சரி....அதை விடுங்க....!நான் போகலைன்னா....சுமி தனியா சாப்பிட வேண்டி வரும்....!",எப்படியாவது அவனுக்குப் புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் அவள் பேசிக் கொண்டிருக்க....அவனோ....அவளது ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வைத்திருந்தான்.

"சுமித்ராவைப் பத்தி நீ கவலைப் பட வேண்டாம் பேபி....!நீ போகலைன்னா....கெளதம்....அவள் கூட ஜாயின் பண்ணிக்குவான்.....!நீ என்னைப் பத்தி மட்டும் கவலைப்படு.....போதும்.....!",

"ஐயோ....!எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க....?லன்ச் டைம் மிஞ்சிப் போனா....ஒரு...ஒரு மணி நேரம் இருக்குமா....?அந்த ஒரு மணி நேரத்துல நான் அங்கே போய் சாப்பிட்டு வர்றதுல என்ன ஆகப் போகுது.....?",

"அதையேதான் நானும் கேட்கிறேன் பேபி....!அந்த ஒரு மணி நேரம் என்கூட இருக்கிறதுல என்ன ஆகிடப் போகுது.....?",

"நீங்க என்னை ரொம்பவும் கன்ட்ரோல் பண்றீங்க....?",

"நீ என்னை கன்ட்ரோல் பண்றதை விடவா....?",ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி ஆழ்ந்த குரலில் அவன் வினவ....அவள் சற்று மயங்கித்தான் போனாள்.

"எ...என்ன....?நான் உங்களை கன்ட்ரோல் பண்றேனா....?பொய் சொல்லாதீங்க......!",என்ன முயன்றும் அவள் குரல் கோபமாக வராமல்....குழைந்துதான் வந்தது.

அவளைப் பார்த்தவாறே எழுந்து அவன்....அவளருகில் வர....அவளோ....நாற்காலியோடு இன்னும் ஒன்றி அமர்ந்து கொண்டாள்.அவன்....அவள் கண்ணைப் பார்த்தவாறு பேச ஆரம்பித்தான்.

"உண்மைதான் பேபி....!நீ என்னுடைய இந்த இதயத்துக்குள்ள வந்து சட்டமா உட்கார்ந்திட்டு....என்னென்ன அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கிற தெரியுமா.....?காலையில எழுந்ததுமே என்னுடைய கண்கள் உன்னைத்தான் தேடுது....!நீ என் பக்கத்துல....என் பெட்ல உட்கார்ந்து....என் தலைமுடியை கலைச்சு விட்டு....என் நெற்றியில ஒரு கிஸ் பண்ணி....நீ என்னை எழுப்பி விடணும்....!நைட்லேயும் நீ என்னைத் தூங்க விடாம.....ரொம்பவும் டிஸ்டர்ப் பண்ற.....!எத்தனை இரவுகள்....உன் கன்ட்ரோல்ல இருந்து வெளிவர முடியாம....நான் என் தூக்கத்தை தொலைச்சு தவிச்சிருக்கேன் தெரியுமா.....?",அவளைப் பார்த்து கேள்வி கேட்டவன்,

சிறு பெருமூச்சுடன்,"அதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது.....?ஆனால்....ஒண்ணு பேபி....!அந்த அத்தனை இரவுக்கும் உன்கிட்ட வட்டியும் முதலுமா....வசூலிக்காம விட மாட்டேன்....!",என்றான் மயக்கத்துடன்.

மருண்ட விழிகளோடு தன்னை நோக்கியவளின் முகம் நோக்கி குனிந்தவன்,"இவ்வளவு ஏன்....?இதோ....இப்ப கூட நான் என் கன்ட்ரோல்ல இல்ல....!இவ்வளவு பக்கத்துல....உன்னைப் பார்க்கும் போது....சத்தியமா என்னால முடியலை டி.....!இப்படி உன் அழகான கண்ணை விரிச்சு....என்னை விழுங்கற மாதிரி பார்க்கும் போதும்.....நான் உன் பக்கத்துல வந்தாலே இப்படி உன் நெற்றியில குட்டி குட்டியா வியர்க்கும் போதும்....என் கன்ட்ரோலை இழந்து....நான் உன் கன்ட்ரோலுக்கு வந்திடறேன்.....!இதோ இப்படி என் மூச்சுக் காத்து உன் மேல படும் போதெல்லாம்....நடுங்கற உன் இதழை.....என் உதட்டால அணைச்சு.....அந்த நடுக்கத்தை குறைக்கணும் போல ஆசை வருது.....!சரி....இப்ப சொல்லு.....!நான் உன்னை கன்ட்ரோல் பண்றேனா.....?இல்லை.....நீ என்னை கன்ட்ரோல் பண்றியா.....?",கிசுகிசுப்பாக வினவியவனைப் பார்த்தவளுக்கு.....அடி வயிற்றில் 'சில்'லென்ற உணர்வு பரவியது.

அவளுக்கு வெகு அருகில் தெரிந்த அவனுடைய முகம்....அவளுக்குள் லட்சம் கோடி பூக்களை பூக்க செய்தது.அவனுடைய பேச்சிலும்....அருகாமையிலும் மயங்கிப் போய் அமர்ந்திருந்தாள் அந்தப் பேதை.....!அவள் அமர்ந்திருந்த சேரின் கைப்பிடியில் தன் இரு கைகளையும் ஊன்றியபடி....அவளை நோக்கி குனிந்திருந்தவன்.....அவளுடைய மயக்கத்தை கண்டு கொண்டான்.

அவளைப் பார்த்து மெலிதாக விசிலடித்தவன்,"சொல்லு பேபி.....?",என்று அவளை ஊக்க....தன் நிலைக்கு வந்தவள்,

"மு....முதல்ல தள்ளி நில்லுங்க.....!",என்றாள் தடுமாற்றத்துடன்.

"ஏன்.....?",என்று கேள்வி கேட்டவன் மருந்துக்கும் தள்ளி நிற்கவில்லை.மாறாக....இன்னும் நெருக்கமாக அவளை நோக்கி குனிந்தான்.

"இப்படி பக்கத்துல வந்து நின்னா....பதில் எப்படி வரும்....?",என்றாள் அவள் முணுமுணுப்பாக.

"வேற என்ன வரும்....?",என்று கேட்டவனின் சூடான மூச்சுக்காற்று....அவள் முகத்தில் வந்து மோதியது.அவன்பால் நழுவ இருந்த மனதை....வெகு சிரமப்பட்டுத்தான் தன் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது....நித்திலாவினால்.

படபடத்த இதயத்தை கஷ்டப்பட்டு அடக்கியவள்,"ம்....கோபம் தான் வரும்....!முதல்ல ந...நகருங்க....!",ஜாக்கிரதையாய் நாற்காலியில் இன்னும் ஒட்டி அமர்ந்தபடி அவள் கூற,

அவனுக்கும் அவளுக்கும் இருந்த மிகச் சிறிய இடைவெளியை மேலும் குறைத்தவன்,"ஏன் நகரணும்.....?என் அருகாமைதான்....உன்னை எந்த விதத்திலேயும் பாதிக்காதுன்னு....அன்னைக்கு சொன்னியே.....?அப்புறம்....நான் ஏன் நகரணும்.....?",அவன் சட்டம் பேச,

'சரியான ராட்சசன்.....!நேரம் பார்த்து என்னை பழி வாங்கறான்....!',மனதிற்குள் அவனை திட்டியவள்.....வெளியே....அவனிடம் தன் மனதை ஒத்துக் கொள்ள மறுத்து,

"அதையேதான் இப்பவும் சொல்றேன்....!உங்களுடைய எதுவும் என்னை பாதிக்காது.....",என்றாள் வீம்பாக.

"அப்படியா....?",என்று போலியாக வியந்தவன்....சட்டென்று குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டான்.

விதிர்த்து போய் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன்,"அதுதான் என்னுடைய எதுவும் உன்னை பாதிக்காதே.....!அப்புறம் ஏன் உன் உடம்பு இப்படி நடுங்குது பேபி....?ஒருவேளை....என்னுடைய முத்தம்.....உன்னை பாதிக்குதோ.....?",கேலியாக அவன் உதட்டை மடிக்க,

"ஹைய்யோ....!சாமி....!தெரியாம சொல்லிட்டேன்.....!போதுமா....?இப்ப தள்ளி நில்லுங்க.....!",அவனுடைய முத்தத்தில் கிறங்கிப் போய் இருந்தவள்....அவசர அவசரமாகக் கூறினாள்.

"எதை தெரியாம சொல்லிட்ட....?",அவன் வேண்டுமென்றே வினவ,

"அ...அதுதான்....!நீங்க என்னை பாதிக்கலைன்னு....தெரியாம சொல்லிட்டேன்....!இப்போவாவது தள்ளி நில்லுங்க....!",

"தெரியாம சொல்லலை.....!தெரிஞ்சே பொய் சொல்லிட்ட.....!",

"சரி....!எதுவோ ஒண்ணு....தள்ளி நில்லுங்க.....!",அவனை தள்ளி நிறுத்துவதிலேயே....அவள் குறியாய் இருந்தாள்.அந்தளவிற்கு அவனுடைய அருகாமையில்....அவள்....சிறுகச் சிறுக தன்னை இழந்து கொண்டிருந்தாள்.அதை அவனும் உணர்ந்துதான் இருந்தான்.

எனவே....மெல்லிய சிரிப்புடன்,"கூல்....கூல் பேபி....!இப்படியே....நீ என்னை காதலிக்கறதையும் ஒத்துக்கிட்டா.....ரொம்ப நல்லாயிருக்கும்....!",என்க,

சற்று நேரம் எதையோ யோசித்தவள்....பிறகு சிறு சிரிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்து,"நீங்கதான் பெரிய வீராதி வீரனாச்சே.....!இப்ப இந்த விஷயத்தை என்னை ஒத்துக்க வைச்ச மாதிரி....அந்த விஷயத்தையும் என்னை ஒத்துக்க வைங்க....பார்க்கலாம்....!",அந்த சிறு முயல் குட்டி....பல தொழில்களை கட்டி ஆளும்...அந்த வேங்கையுடன் சவால் விட்டது.

அவள் கண்களையே....அவன் உற்றுப் பார்க்க....சிறிதும் சளைக்காமல் அவனது பார்வையை எதிர்கொண்டாள் அவள்.

"என்ன டி சவாலா....?",

"ம்...அப்படித்தான் வைச்சுகோங்களேன்.....!தி கிரேட் பிஸினெஸ் மேன் ஆதித்யன்.....சவாலைக் கண்டு பயப்படறவரா....என்ன....?",அவள் புருவம் உயர்த்த,

"சவால் டி....!உன் வாயாலேயே....உன் காதலை ஒத்துக்க வைக்கிறேன்....!",முகத்தில் இன்னதென்று விளங்காத கர்வப் புன்னகையுடன் அவள் சவாலை ஏற்றான் அந்த தொழிலதிபன்.

"பார்க்கலாம்....!இப்ப கொஞ்சம் தள்ளி நிற்கறீங்களா....?",

அவள் விழிகளையே பார்த்தபடி அவளை விட்டு விலகியவன்,"நீ இன்னும் இந்த ஆதித்யனை சரியா புரிஞ்சுக்கலை பேபி....!நான் புரிய வைக்கிறேன்....!ஒகே பேபி....!நாளையில் இருந்து லன்ச் என்கூடத்தான் சாப்பிடப் போற....சுமித்ராகிட்ட இன்பார்ம் பண்ணிடு....!",என்க,

"அதையும் பார்க்கலாம்.....!",என்றபடி அவள் தன் சிஸ்டமின் புறம் திரும்பிக் கொள்ள,

"பார்க்கத்தானே போற....!",என்றபடி தன் இருக்கைக்கு சென்று விட்டான் அவன்.அதன் பிறகு....இருவருக்கும் இடையில் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.

அன்று இரவு....விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்த நித்திலாவிற்கு....என்ன யோசித்தும் எதற்காக ஆதித்யனிடம் சவால் விட்டோம் என்ற காரணம் பிடிபடவில்லை.அவனுடைய அருகாமையை விலக்க வேண்டும் என்பதே அப்போதைக்கு அவள் மனதில் இருந்தது.அவனுடைய நெருக்கத்திலும்....பேச்சிலும்....ஒவ்வொரு நொடியும்....அவளது கன்னி மனது அவன்பால் சரிந்து கொண்டிருந்தது.அதை தடுத்து நிமிர்த்தும் பொருட்டு....வாய்க்கு வந்ததை பேசி அவனிடம் சவால் விட்டு விட்டாள்.

'அவனிடம் வாயைக் கொடுத்து...வலியப் போய் மாட்டிக் கொண்டோமோ....?சும்மா இருந்தவனை சீண்டி விடுவது போல் எதை எதையோ பேசி சவால் விட்டு விட்டோம்....!',என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு.....பிறகு....தன் இயல்பான குணம் தலை தூக்க....'சரி....!விடு நித்தி....!பார்த்துக்கலாம்....!',என்று தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள்.

'அப்படி என்ன செய்து...என்னை ஒத்துக் கொள்ள வைப்பான்.....?ஒருவேளை....இன்னைக்கு முத்தம் கொடுத்த மாதிரி....டக்குன்னு முத்தம் ஏதாவது கொடுத்திருவானோ....?பண்ணினாலும் பண்ணுவான்....!இந்த மோதிரத்தை என் விரல்ல போடறதுக்கே என்னென்ன அழிச்சாட்டியம் பண்ணினான்....!சரியான ரௌடி....!காதல் ரௌடி...!',என்னவோ அவன் அப்பொழுதான் அவளை முத்தமிட்டது போல்....தன் கன்னங்களைத் துடைத்துக் கொண்டாள்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள்....ஏதோ நினைவு வந்தவளாக கடிகாரத்தைப் பார்க்க.....மணி இரண்டு ஆகியிருந்தது.சட்டென்று தன் தலையில் அடித்துக் கொண்டவள்,'நித்தி....!நீ சரியில்லை.....!உனக்கு என்ன ஆச்சு....?அவன் உன்னை மயக்கப் பார்க்கிறான்....!சரியான மாயக்காரன்.....!ஜாக்கிரதையாய் இருந்துக்கோ.....!இப்ப பேசாம தூங்கு.....!",தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்.....கண்ணை மூடி தூங்க முயற்சி செய்தாள்.என்னதான் முயற்சி செய்தாலும்....மனதின் ஓரம் ஒரு குறுகுறுப்பு எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.....!


அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 27 :



ஒரு வழியாக....அடுத்த நாள் காலை....சூரியன் தன் கடமையை செவ்வனே ஆற்றும் பொருட்டு....கிழக்கில் உதிக்க ஆரம்பித்துவிட்டான்.காலையில் எழும் போதே....நித்திலாவிற்கு ஆதித்யனின் முகம்தான் மனதில் வந்தது.அதிலும் அவன்....அவளைத் தன்னுடன் சாப்பிடச் சொன்னதுதான் ஞாபகம் வந்தது.



'என்னமாய் ஆர்டர் போடறான்....!இன்னைக்கு என்ன ஆனாலும் சரி....அவனுடன் சாப்பிடப் போவதில்லை....பார்க்கலாம்....!அவனா....நானா....?ன்னு....!',உறுதியாக நினைத்துக் கொண்டவள்....ஒரு முடிவோடு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றாள்.



வழக்கம் போல் நேரம் கழிய....மதிய உணவு வேளையும் வந்தது.மணி ஒன்று ஆகவும்....தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவளை பார்த்த ஆதித்யன்,"எங்கே போற.....?",என கேள்வியெழுப்ப,



"வேற எங்கே.....?சாப்பிடத்தான்.....!",உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே தைரியமாகவே கூறினாள்.



"நேற்று நான் சொன்னது....உனக்கு ஞாபகம் இல்லைன்னு நினைக்கிறேன்.....!",அழுத்தமான குரலில் அவன் வினவ,



"ஏன் ஞாபகம் இல்ல....!அதெல்லாம் நல்லாவே இருக்கு.....!",அவனுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற முடிவில்....வீம்பாக கூறினாள் அவள்.



சில கண நேரம் அவளையே இமைக்காது வெறித்துப் பார்த்தவன்.....பிறகு ஒன்றும் பேசாமல்.....தன் கையிலிருந்த ஃபைலை ஆராயத் தொடங்கினான்.அவன் பார்வையில்....அவள் சிலையாக ஸ்தம்பித்து நின்று விட்டாள்.



'அவன் பார்வைக்கு என்ன அர்த்தம்.....?அன்னைக்கு பாலா கூட வெளியே போகும் போது....அவன் பார்த்த அதே பார்வை.....!',முதுகுத்தண்டு வரை ஜில்லிட....காலை இம்மியளவும் நகர்த்த முடியாமல் அப்படியே நின்று விட்டாள்.திடீரென்று அவன் மேசையில் இருந்த தொலைபேசி ஒலிக்கவும்....அந்த ஒலியில் தன்னை மீட்டுக் கொண்டவள்.....வேக வேகமாக வெளியேறிவிட்டாள்.அவள் வெளியேறியதைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள்....தீக்கங்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்தன.கோபத்தில் அவன் முகம் பாறையாய் இறுகியது.



அவனை தவிர்த்து விட்டு வந்த நித்திலாவிற்கு சாப்பாடே உள்ளே இறங்கவில்லை.அவனது அழுத்தமான பார்வை....மீண்டும் மீண்டும் அவள் மனக்கண்ணில் தோன்றி.....அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.அவன் பார்வைக்கான அர்த்தம் நிச்சயம் நல்லதற்கல்ல....என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.



ஒரு வழியாக....சாப்பிட்டு விட்டு....இருவரிடமும் சொல்லிக் கொண்டு....அவள்....அறைக்குள் வரும் போது....ஆதித்யன் அதே நிலையில்தான் இருந்தான்.'அதற்குள் சாப்பிட்டு விட்டு வந்துட்டாரா....?',என்று மனதில் நினைத்தவள் ஒன்றும் பேசாமல் தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.அதன் பிறகு...அவர்களுக்குள் வேலையைத் தவிர எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.ஆதிதயனும் பார்ப்பதற்கு சகஜமாகத்தான் தெரிந்தான்.



நித்திலாதான் 'எப்பொழுது வெடிக்குமோ....?' என்று பயந்து கொண்டிருந்தாள்.புலி பதுங்குவது....நிச்சயம் பாய்வதற்காகத்தான்....! எனபதை அறியாதவள் அல்லவே அவள்....!



ஆதித்யனுக்கு கோபம் வந்து....அவன் அப்போதே நாலு திட்டி திட்டி விட்டான் என்றால்....அப்பொழுதே அந்தக் கோபம் முடிவுக்கு வந்து விடும்...!ஆனால்...கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில்....அவன் அமைதியாக இருந்து விட்டான் என்றால்....அது பின்னாளில் பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தும்....!



அவனுடைய கூர்மையான பார்வையும்....அழுத்தமான மௌனமும்....மிகப் பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தவை....!இதை அனைத்தையும் நித்திலாவும் அறிந்தே இருந்தாள்.



அன்று....பாலாவுடன் வெளியே சென்று விட்டு வந்த போது....இதே பார்வையைத்தான் அவளை நோக்கி வீசி வைத்தான் ஆதித்யன்.அதன் பிறகு....அந்த விஷயத்தில் அவன் எடுத்த முடிவு அதிரடியாக இருந்தது.



எனவே....சற்று பயத்துடனேயேதான் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் நித்திலா.ஆனால்....அவள் பயந்தது போல் அன்று எதுவுமே நடக்கவில்லை.சுமூகமாகவே சென்றது.வேலை நேரம் முடிந்து....அவள் கிளம்பியும் சென்று விட்டாள்.



ஹாஸ்டலுக்கு சென்று....தன் தாய் தந்தையிடம் பேசியதில்....கிட்டத்தட்ட அந்த விஷயத்தையே மறந்து போனாள் நித்திலா.



அடுத்த நாளும் உதயமாக....சற்று உற்சாகமாகவே கிளம்பி அலுவலகத்திற்கு சென்றாள்.அவளுக்கு முன்பே ஆதித்யன் வந்திருந்தான்.அவள் அறைக்குள் நுழையும் போதே...."குட் மார்னிங் பேபி.....!" என்று புன்னகை முகமாக வரவேற்றான்.அவனுக்குப் பதிலுக்கு குட் மார்னிங்கை உரைத்து விட்டு....தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தவள் மனதில் சிறு நிம்மதி எழுந்தது.



'அந்த உணவு விஷயத்தை மறந்து விட்டான் போலும்.....!இல்லையென்றால்.....என் விருப்பத்தை மனதில் கொண்டு அவனே விலகியிருப்பான்.....!',என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.



அவள் நினைத்ததிலும் தவறொன்றும் இல்லை.ஏனென்றால்....அந்தளவிற்கு அவன்...அவளிடம் சகஜமாகத்தான் பேசிக் கொண்டிருந்தான்.



மதியம் மணி ஒன்று ஆகவும்.....வழக்கம் போல் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.கதவு வரை சென்றவள்....ஏதோ ஓர் உந்துதலில் திரும்பி அவனைப் பார்க்க....அவனோ....கடினமான முகத்துடன்....நேற்றுப் பார்த்த அதே பார்வையைத்தான் அவளை நோக்கி வீசிக் கொண்டிருந்தான்.குழம்பிய முகத்துடன் அவள் வெளியேறிவிட்டாள்.



நேற்று போலவே இன்றும் பெயருக்கு சாப்பாட்டை கொறித்து விட்டு....பாலாவிடமும்....சுமித்ராவிடமும் எதையோ கூறி சமாளித்தபடி எழுந்து வந்து விட்டாள்.



அவள் அறைக்குள் நுழையும் போது....'சற்று முன் தான் பார்த்த பார்வைக்கும்....தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை....!',என்பது போல் அமர்ந்திருந்த ஆதித்யனைப் பார்த்தவளுக்கு குழப்பமாக இருந்தது.ஆனால்....அவன் எப்பொழுதும் போல் இயல்பாகத்தான் இருந்தான்.



இடையில் மூன்று நான்கு முறை....அவனது மொபைல் அலற....அவன் அதை அட்டெண்ட் செய்யாமல் தவிர்த்து விட்டான்.



மதியம் மூன்று மணி ஆகும் போது....அவனுடைய டிரைவர் செல்வம் உள்ளே நுழைந்தார்.அவருக்கு எப்படியும் நாற்பது வயதிற்கு மேல் இருக்கும்.கடந்த ஐந்து வருடங்களாக.....ஆதித்யனிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.ஆதித்யனிடம் மிகுந்த விசுவாசம் உடையவர்.



எப்பொழுதும் ஆதித்யனுக்கு மதிய உணவு வீட்டிலிருந்து வந்து விடும்.செல்வம் தான் சென்று வாங்கி வருவார்.காலையில் ஆதித்யன் வரும் போது.....அலுவலகத்திற்கு காரை ஓட்டி வருபவர்.....அதன் பிறகு எங்கேயும் செல்லாமல் காரின் அருகிலேதான் இருப்பார்.



ஏனென்றால்....ஆதித்யனுக்கு எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லும் வேலை வந்து விடும்.அந்த நேரத்தில்....காரை எடுப்பதற்கு வசதியாக அவர் காரின் அருகிலேயே இருக்க வேண்டும்.இல்லையென்றால்....ஆதித்யனுக்கு கோபம் வந்து காட்டுக்கத்து கத்துவான்.அவனுடைய கோபத்திற்கு பயந்தே அவர் எங்கும் செல்ல மாட்டார்.



ஆனால்....மதியம் 12 மணி வாக்கில்....ஆதித்யனின் வீட்டிற்குச் சென்று மதிய உணவு வாங்கி வருவார்.பிறகு மூன்று மணியாகும் போது.....அவன் சாப்பிட்ட டிபன் கேரியரை எடுத்துச் சென்று அவன் வீட்டில் கொடுத்து விட்டு வருவார்.



இது ஆதித்யனுடைய அம்மா லட்சுமி இட்ட கட்டளை.ஆதித்யனை கவனிக்காமல் விட்டு விட்டால்.....அவன் சாப்பாட்டை மறந்து வேலையில் மூழ்கி விடுவான்.எனவேதான்....அவன் டிரைவரிடம் இப்படி ஒரு உத்தரவைப் போட்டு வைத்தார்.மூன்று மணிக்கு வந்து அவர் டிபன் கேரியரை எடுத்துச் செல்வதால் வேறு வழி இல்லாமல்....ஆதித்யன் நேரத்தோடு சாப்பிட்டு விடுவான்.இல்லையென்றால்தான்.....அவன் அம்மாவிடம் திட்டு விழுமே....!



இன்றும் வழக்கம் போல்....டிபன் கேரியரை எடுத்துச் செல்வதற்காக வந்தவர்.....அவனது உணவு உண்ணும் அறையில்....தொடப் படாமல் அப்படியே இருந்த பாத்திரங்களைப் பார்த்தவர்.....ஒரு தட்டில் சாப்பாட்டைப் போட்டு வெளியே எடுத்து வந்தபடி....ஆதித்யனிடம் சென்று,"சார்....!மணி மூணாச்சு.....!சாப்பிட்டுட்டு வேலையைப் பார்க்கலாமே.....!",பணிவாக அவர் கூற,



"இல்ல....வேண்டாம்.....!",தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் இருந்து பார்வையை உயர்த்தாமலேயே கூறினான்.



"சார்.....!நேற்று மதியமும் நீங்க சாப்பிடலை.....!கொண்டு வந்த டிபன் கேரியரை அப்படியே திருப்பி எடுத்துட்டுப் போனேன்.....!அதுவும் இல்லாம.....இப்பத்தான் அம்மா போன் பண்ணுனாங்க.....!உங்களுக்கு கூப்பிட்டாங்களாம்....நீங்க எடுக்கவே இல்லையாம்.....!நேத்து நைட்டும் நீங்க சாப்பிடலையாம்.....!இன்னைக்கு காலையிலேயும் ஏதோ வேலைன்னு சாப்பிடாம ஓடி வந்துட்டீங்களாம்.....!அவங்க ரொம்ப கவலைப் படறாங்க.....!உங்களைப் பார்த்து....நீங்க சாப்பிடலைன்னா.....என்னை சாப்பிட வைக்கச் சொன்னங்க....!",



'என்ன....நேத்து மதியத்தில் இருந்து....இவரு சாப்பிடலையா....?',பதைபதைத்த மனதுடன் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.



"இந்தாங்க சார்.....!இப்படியே வேலையைப் பார்த்துட்டே சாப்பிடுங்க.....!",என்றபடி அவன் முன் இருந்த டேபிளில் தட்டை வைக்க,



"வேண்டாம் செல்வம்.....!எனக்குப் பசியில்லை.....!நீங்க எடுத்துட்டுப் போங்க.....!",தன் கையிலிருந்த பைலை ஆராய்ந்தபடியே கூறினான் அவன்.



"சார்....!ப்ளீஸ்.....!கொஞ்சமா சாப்பிடுங்க.....!",அவர் மீண்டும் வற்புறுத்த....அவ்வளவுதான்....!அடுத்த நொடி....டேபிளில் இருந்த தட்டு...எதிரில் இருந்த சுவற்றை நோக்கிப் பறந்தது.



'டங்'கென்று சுவற்றில் மோதிய தட்டில் இருந்து அனைத்து சாப்பாடும் கீழே கொட்டிவிட....தட்டு மட்டும் உருண்டு வந்து நித்திலாவின் காலடியில் விழுந்தது.



அதிர்ச்சியுடன் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டாள் நித்திலா.தட்டை வீசியெறிந்த ஆதித்யனோ...'இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.....!',என்பது போல் பைலை பார்த்துக் கொண்டிருந்தான்.



இரண்டு நாட்களாக அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் அவளுக்கு விளங்கியது.'எதனால் இந்தக் கோபம்....?எதனால் அவன் சாப்பாட்டை மறுக்கிறான்.....?',என்பது அவளுக்குப் புரிந்தது.அவன் பிடிவாதத்திற்கு முன்பாக....தன்னால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாக உரைத்தது.



அதிர்ச்சி விலகாமல்....அவனையே பார்த்தபடி நின்றிருந்த செல்வத்தை கண்டவள்,"அண்ணா....!நீங்க போங்க.....!நான் பார்த்துக்கிறேன்....!",என்றபடி அவரை வெளியே அனுப்பினாள்.



ஆதித்யனைப் பார்க்க.....அவனோ...கருமமே கண்ணாக பைலை பார்த்துக் கொண்டிருந்தான்.ஒரு பெருமூச்சுடன் உணவு உண்ணும் அறைக்குச் சென்றவள்.....அங்கிருந்த டிபன் கேரியரையும்....தட்டுகளையும் எடுத்து வந்து....ஆதித்யனின் டேபிளின் மீது வைத்தாள்.அப்பொழுதும்....அவன் அவளை நிமிர்ந்து பார்த்தானில்லை.



ஒரு தட்டை எடுத்து....சாப்பாடு போட்டு....குழம்பு ஊற்றி.....பொரியலை வைத்தவள்....அதை எடுத்துச் சென்று ஆதித்யனின் முன் வைத்தபடி,"நீங்க சொன்னதுக்கு....நான் ஒத்துகிறேன்.....!",என்று ஒரு வார்த்தைதான் கூறினாள்....அவளை நிமிர்ந்து பார்க்காமல் எழுந்து சென்று....கை கழுவி விட்டு வந்தவன்....அவள் போட்டு வைத்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.



சாப்பிட ஆரம்பித்த பிறகுதான்....அவனுக்குப் பசியின் வேகமே தெரிந்தது.வேக வேகமாக சாப்பிட்டவனுக்கு....பார்த்து பார்த்து பரிமாறியவள்....அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை.



அவன் சாப்பிட்டு முடிக்கவும்....நித்திலா....டேபிள் மேல் இருந்த பாத்திரங்களை எடுத்துச் சென்று உணவு உண்ணும் அறையில் வைக்க...அவனும் அவளுக்கு உதவினான்.



தரையில் சிதறிக் கிடந்த சாப்பாட்டையும்....ஓரமாகக் கவிழ்ந்து கிடந்த தட்டையும் பார்த்தவள்,"ஆனாலும்.....உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது....!",என்றாள் கோபமாக.



தோளைக் குலுக்கியவன்,"என் பிடிவாதத்தைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே பேபி.....!நேத்தே என்கூட உட்கார்ந்து சாப்பிடறதுக்கு உனக்கு என்ன வந்துச்சு....?",அசட்டையாக வினவ,



"எல்லா நேரமும் உங்க பிடிவாதம்தான் ஜெயிக்கும்ன்னு நினைச்சிட்டு இருக்காதீங்க.....!என்னதான் கோபம் இருந்தாலும்.....அதை இப்படி சாப்பாடு மேல காண்பிக்க கூடாது.....!அன்னம்ங்கிறது கடவுள் மாதிரி.....சாப்பிடற தட்டு சிவன் மாதிரின்னு சொல்லுவாங்க......!இப்படியா....சாப்பாட்டுத் தட்டை தூக்கி வீசி அடிக்கிறது.....?",அவன் தூக்கி எறிந்த தட்டை சுட்டிக் காட்டி கேட்டவள்.....அதை சுத்தம் செய்ய முயல,



"விடு.....!நீ க்ளீன் பண்ண வேண்டாம்.....!ஆயாவை கூப்பிட்டு க்ளீன் பண்ண சொல்லு.....!",என்று அவளைத் தடுத்தான்.



அவனைப் பார்த்து முறைத்தவள்,"நோ....!நீங்கதானே தூக்கி எறிஞ்சீங்க.....?அப்ப....நீங்கதான் சுத்தம் பண்ணனும்.....!வாங்க....வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.....!",அவள் கறாராகக் கூற....அவன் முகம் அஷ்டகோணலாக மாறியது.



"வாட்.....?நான் க்ளீன் பண்ணனுமா.....?என் பெட் ரூமைக் கூட நான் சுத்தம் பண்ணினதில்ல.....!என்னைப் போய்....இதை க்ளீன் பண்ண சொல்ற.....?நெவர்....!என்னால முடியாது.....!",



"இதை நீங்கதான் க்ளீன் பண்ணியாகணும்....!நீங்க யாராக இருந்தாலும்....சாப்பாட்டை அவமதிச்சது தப்பு.....!ஸோ....அதுக்கான பனிஷ்மெண்ட் தான் இது....!",அழுத்தம் திருத்தமாக கூறினாள் அவள்.



அந்த சிறு புள்ளி மானின் கட்டளைக்கு.....பெரும் தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆளும்....அந்த சிறுத்தை கட்டுப்பட்டு அடிபணிந்தது....!



"சரி.....!பண்ணித் தொலைக்கிறேன்.....!",முணுமுணுத்தபடி அவன் குத்திட்டு அமர முயல....அதற்கு அவன் அணிந்திருந்த பேண்ட்....மிகப் பெரிய தடையாக இருந்தது.



"பேபி.....!இந்த பேண்ட்டை போட்டுக்கிட்டு....என்னால உட்காரவே முடியல.....!",இதைக் காரணமாக வைத்து.....அவன் தப்பித்துக் கொள்ள முயல,



"அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை.....இந்த இடத்தை நீங்கதான் க்ளீன் பண்ணனும்....!",என்று அவனது முயற்சியில் மண்ணை அள்ளிப் போட்டு மூடினாள் அவனது பேபி.



ஆனால்.....ஆதித்யனா இதற்கெல்லாம் அசருபவன்.....?அவனோ....படு கூலாக,"ஒகே பேபி.....!இந்த பேண்ட்டை கழட்டி வைச்சிட்டு வேலை செய்யறேன்.....!அதைப்பத்தி எனக்கு ஒண்ணும் கவலை இல்லை.....நீதானே இருக்கிறே....!",என்றபடி தனது பெல்ட்டில் கை வைக்க,



"அய்யோ....!அப்படி எதுவும் பண்ணிடாதீங்க.....!",பதறிப் போய் எழுந்தாள் அவள்.அவள் பதற்றத்தைக் கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்,'வாடி என் அழகு பேபி.....!உன்னை வைச்சு கொஞ்ச நேரம் விளையாடறேன்.....!',மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்....வெளியே....



"ஏன் பேபி.....?நீதானே உனக்கு ஒண்ணும் அதைப் பத்தி கவலை இல்லைன்னு சொன்ன......?ஸோ....அது இருந்தா என்ன....?இல்லைன்னா....உனக்கு என்ன....?",என்று விளக்கமாக வேறு கேட்டு வைக்க,



அவன் கேள்வியில் அவள் தன் தலையில் அடித்துக் கொண்டவள்,"கடவுளே....!நான் அப்படி சொன்னேன்தான்....!அதுக்காக....நீங்க இப்படியா பண்ணுவீங்க.....?",,



"எப்படியா பண்ணுவேன்....?",அவளைப் போலவே திருப்பிக் கேட்டான் அவன்.



"அதுதான்....நீங்க....உங்க பே....",அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவள் தடுமாற,



"ம்.....சொல்லு பேபி.....!",அவன் உதட்டோரம் இருந்த குறும்புச் சிரிப்பைக் கண்டு கொண்டாள் அவள்.



"நீங்க வேணும்னேதான் இப்படியெல்லாம் பண்றீங்க.....!",என்று படபடத்தவள்....அவனைப் பார்த்து முறைக்க....அவன் சற்று தன் விளையாட்டை கைவிட்டான்.



"சரி....!சரி....!முறைக்காதே....!இப்ப என்ன.....?இந்த இடத்தை க்ளீன் பண்ணனும்.....அவ்வளவுதானே.....?பண்ணிட்டா போச்சு.....!",என்றபடி கீழே கிடந்த பருக்கைகளைப் பொறுக்க ஆரம்பிக்க.....அவளும் அவனுக்கு உதவி செய்தாள்.இருவரும் சேர்ந்து கீழே சிதறியிருந்த சாப்பாட்டையும்....தட்டையும் அப்புறப்படுத்தி விட்டு.....ஆயாவை அழைத்து அந்த இடத்தை துடைக்கச் சொல்லினர்.



ஆயா வெளியே சென்றதும்.....தனது இருக்கைக்குச் சென்று அமரப் போன நித்திலாவின் கையைப் பிடித்து இழுத்தவன்....அருகிலிருந்த சுவற்றில் அவளை சாய்த்து....அவளுக்கு இரு புறமும் தன் கைகளை ஊன்றி.....அவளை சிறை செய்தவன்,"ஏன் பேபி....!நான் சாப்பிட்டா என்ன.....?சாப்பிடாட்டி உனக்கென்னன்னு நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்திருக்கலாமே......?எதுக்காக என்னை சாப்பிட வைச்ச....?",அவள் கண்களையே பார்த்தவாறு வினவ,



அவன் கேட்ட கேள்வியில் தடுமாறியவள்.....பிறகு சுதாரித்துக் கொண்டு,"நீங்கன்னு இல்ல....அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும்.....நான் அவங்களை சாப்பிட வைச்சிருப்பேன்.....!ஸோ....நீங்க ஓவரா மனக்கோட்டை கட்டிக்காதீங்க.....!",அவனைப் பிடித்து தள்ளி விட்டபடி அவள் கூற,



அவள் முயற்சியைத் தடுத்தபடி.....அவள் இடையை தன் இரு கரங்களாலும் வளைத்தவன்,"அப்படியா.....!யாரா இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருப்பியா.....?",அவன் மீண்டும் கேட்க,



"ஆமாம்.....!",என்றாள் அவள் வீம்பாக.



"அப்ப.....அன்னைக்கு ஹாஸ்பிட்டலேயும்....என்னைத் தவிர வேற யாரா இருந்திருந்தாலும் அப்படித்தான் ஓடி வந்து கட்டிப் பிடிச்சிருப்பியா.....?",அவள் விழிகளில் தன் பார்வையைப் பதித்து வினவ.....அவள் ஒரு கணம் அதிர்ந்து போனாள்.



ஏனென்றால்....அவளுக்கு நன்கு தெரியும்.....!அந்த இடத்தில் ஆதித்யன் அல்லாது வேறு ஒருவன் இருந்திருந்தால்.....அந்த ஆணின் சுண்டு விரலைக் கூட அவள் தொட்டிருக்க மாட்டாள்....என்ற உண்மை அவள் நெற்றியில் அறைந்தது.ஆனால்.....இதை ஆதித்யனிடம் சொல்லவா முடியும்.....?எனவே.....தன் மனதை மறைத்து,



"எனக்குத் தெ...தெரியாது.....!",என்றாள்.



அவள் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தவன்,"தெரியாதா....?இல்ல...சொல்ல மாட்டியா பேபி....?",என்க,



"எனக்குத் தெரியாது.....!அப்படியே தெரிஞ்சாலும்....உங்களுக்கு சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இல்ல....!",படபடவென பொரிய,



"ஷப்பா.....!இந்த அழகான உதடு....எவ்வளவு பொய் பேசுது....!அதுக்குத் தண்டனை கொடுத்தாதான் உண்மையை பேசும் போல.....!",என்றவனின் விரல்கள் அவள் இதழ்களை வருட ஆரம்பிக்க....அவன் கையை தட்டி விடவும் மறந்தவளாய்....மூச்சை அடக்கி.....சிலையாய் சமைந்திருந்தாள் நித்திலா.



"தண்டனை கொடுத்திடலாமா....?",என்றபடி அவன்....அவள் முகம் நோக்கி குனியவும் தான்...நித்திலா என்னும் சிலைக்கு உயிர் வந்தது.



"வே...வேண்டாம்.....!என்னை விடுங்க.....!",முழு மூச்சுடன் அவள்....அவனைப் பிடுத்துத் தள்ளி விட,



அவனோ....அவள் கைகளை எளிதாக தடுத்தபடி....மேலும் அவளை சுவரோடு சாய்த்தவன்...,"அப்படின்னா....இந்த உதடுகள் உண்மையை பேசணுமே....!",அவன் விரல்கள் மீண்டும் அவள் செவ்விதழ்களை வருட ஆரம்பித்தன.



"நான் உண்மையைத்தான் சொல்றேன்....!நீங்களா அதை பொய்ன்னு நினைச்சுக்கிட்டா....நான் ஒண்ணும் பண்ண முடியாது.....!",சொல்லும் போதே அவள் முகம் அழுகைக்கு மாறியது.



முதன் முறையாக....தனக்குள் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை எதிர் கொள்ள முடியாமல் அழ ஆரம்பித்தாள் அந்தக் காரிகை.



சிறு குழந்தை போல் அவள் அழ ஆரம்பிக்கவும்.....அவன் முகம் வேப்பெண்ணெய் குடித்தது போல் மாறியது.



"சரி....சரி....!அதுக்கு எதுக்கு அழற....?",கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கடுப்பில் அவன் சற்று எரிச்சலுடன் வினவ,



"பின்ன....நீங்க இப்படி பண்ணினா....நான் என்ன பண்ணுவேன்.....?நீங்க கிட்ட....கிட்ட வந்து நின்னா.....எனக்கு என்னவோ செய்யுது....!",அவள் தேம்ப ஆரம்பிக்க....ஆதித்யனுக்கு சிரிப்புதான் வந்தது.



முயன்று தன் சிரிப்பை அடக்கியவன்,"ஹைய்யோ.....!பேபி.....!அழாத.....!இங்கே பார்.....நான் தள்ளித்தான் நிற்கிறேன்.....!",என்றபடி அவளை விட்டு விலகி நின்றவன்,"ஆனாலும் பேபி.....!உனக்கு பேச்சுதான் ரெண்டு ஊருக்கு கிழியுது.....!மத்தபடி இப்படி பயந்து நடுங்கற.....?",என்னதான் முயன்றாலும்....அவனது உதட்டோரங்கள் கேலி சிரிப்பில் சுருங்கத்தான் செய்தன.



"நான் ஒண்ணும் பயப்படல.....!",அவன் கண்டு கொண்டான் என்ற நினைவில் முறுக்கிக் கொண்டாள் அவள்.



"அதுசரி.....!நான் பக்கத்துல வந்ததும்....பயந்து போய் ஊ....ஊன்னு அழுதுட்டு....இப்ப பேச்சைப் பாரு.....!",



"நான் ஒண்ணும் ஊ....ஊன்னு எல்லாம் அழல....!ஏதோ லைட்டா கண்ணில தண்ணி வந்துடுச்சு....!அவ்வளவுதான்....!இனிமேல் இப்படி ஏதாவது பண்ணிப் பாருங்க....!எங்க அப்பாக்கிட்ட சொல்லி வைக்கிறேன்.....!",குழந்தையாய் அவள் மிரட்ட,



"என்னது.....?",ஆதித்யன் அலறிய அலறலில் பழைய கட்டிடமாக இருந்திருந்தால்....இந்நேரம் இடிந்தே விழுந்திருக்கும்.



"எதுக்கு இப்படி கத்தறீங்க.....?",அவள் அதட்ட,



"பேபி....!நீ இன்னும் வளரவே இல்லையா....?அப்பாக்கிட்ட போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்னு சொல்ற.....!இப்பவெல்லாம் குழந்தைக கூட அவங்க அப்பாக்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றது இல்ல.....!",அவன் கூறிய பிறகுதான் அவளுக்கு 'என்ன சொன்னோம்....?',என்பதே உரைத்தது.



பிரெண்ட்ஸிடம் வாக்குவாதம் செய்யும் போது.....விளையாட்டாக 'எங்க அப்பாக்கிட்ட சொல்லி வைக்கிறேன்.....!',என்று மிரட்டுவாள்.அந்த ஞாபகத்தில் ஆதித்யனிடம் அப்படியே கூறி விட்டாள்.நிமிர்ந்து ஆதித்யனைப் பார்த்தால்.....அவன் முகம் இஞ்சி தின்ன குரங்கு போல் மாறியிருந்தது.



'பாவம்....!பயபுள்ள....ரொம்பவும் அரண்டிருச்சு போல.....!சரி....இப்படியே மெயின்ட்டெய்ன் பண்ணுவோம்....!',என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டவள்....வெளியே,"ஆனால்....நான் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்.....!",என்றாள் சீரியஸான குரலில்.



"அதுசரி....!ஆதித்யா.....!உன் நிலைமை ரொம்பவும் கஷ்டம் போலவே.....!சின்னதா ஒரு முத்தம் கொடுக்க நினைச்சதுக்கே....அப்பாக்கிட்ட சொல்லுவேன்னு மிரட்டறா.....!இதுல....எப்படி அவகூட குடும்பம் நடத்தி.....என்ன பண்ணப் போறியா.....?தெரியல.....!",என்று புலம்பியபடி தனது இருக்கைக்குச் சென்று விட்டான்.



அவனுடைய புலம்பலைக் கேட்டு அவளுக்கு சிரிப்புதான் வந்தது.இருந்தும்....முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 28 :



ஹாஸ்டல் அறையில் ஓய்வாக அமர்ந்தபடி கதைப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள் நித்திலா.அப்பொழுது....அவளது அலைபேசி அலறி தனது இருப்பைத் தெரியப்படுத்தியது.அவளுடைய அக்கா தீபிகாதான் அழைத்திருந்தாள்.



முகம் மலர போனை எடுத்துக் காதில் வைத்தவள்,"என்ன அதிசயமா இருக்கு.....?எனக்கெல்லாம் கால் பண்ணியிருக்க.....?",ஆர்ப்பாட்டமாக நித்திலா பேச ஆரம்பிக்க,



"ஹலோ மேடம்.....!இவ்வளவு நாள் கழிச்சு அக்கா கால் பண்ணியிருக்காளே.....அவ நல்லா இருக்காளான்னு கேட்போம்ன்னு எல்லாம் உனக்குத் தோணாதே....?எடுத்த உடனே....எதுக்கு கால் பண்ணியிருக்கேன்னு கேட்கிறே....?",



"சரி....சரி....!எப்படியிருக்க....?நீ நல்லாத்தான் இருப்ப....அதுதான் எங்க மாம்ஸ் உன்னை தங்க தட்டுல வைச்சு தாங்கறாரே....!",



"ஆமாமா.....தங்கத் தட்டு உடைஞ்சிடாம இருந்தா சரிதான்.....!",



"ஏண்டி இப்படி அலுத்துகிற.....?சரி சொல்லு....!எங்க மாம்சும்....அதிதி குட்டியும் எப்படி இருக்காங்க....?",



"அவங்களுக்கென்ன.....!ரொம்ப ஜாலியா இருக்காங்க....!உனக்கு ஆபிஸ் எப்படி போகுது.....?",



"ம்....சூப்பரா போகுது.....!",



"சரி....!உனக்கு இந்த வாரம் லீவ்தானே....?இங்க எங்க வீட்டுக்கு வந்துடு....!",



"அங்கேயா...?வேணும்னா ஒண்ணு பண்ணலாம்.....!நீ அதிதி குட்டியைத் தூக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்திடு.....!எனக்கு அம்மா அப்பாவை பார்த்த மாதிரியும் இருக்கும்.....உன்னை பார்த்த மாதிரியும் இருக்கும்....!",



"இல்லை டி....!நம்ம அம்மா அப்பா....நம்ம சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து இந்த வாரம்....ராமேஸ்வரம்...திருப்பதின்னு கோவில் டூர் போகப் போறாங்க....!அதுதான் நான் உன்னை இங்க கூப்பிடறேன்.....!",



"ஓ....அப்படியா....?அம்மா என்கிட்ட சொல்லவே இல்ல....!",



"மறந்திருப்பாங்களா இருக்கும்....!நீ கிளம்பி இங்க வந்துடு.....!அதிதி குட்டியும் உன்னை கேட்டுட்டே இருக்கு.....!",



"ஹ்ம்ம்....ஒகே....!இந்த வாரம் உங்க வீட்ல ஆஜர் ஆகிடறேன்.....!",



"நந்தினிக்கு ஆக்சிடெண்ட்ன்னு கேள்விப்பட்டேன்....பரவாயில்லையா....?",



ம்....இப்ப பரவாயில்ல....!நேத்து கூட அவகிட்ட போன் பண்ணி பேசினேன்.....!நல்லாயிருக்கேன்னு சொன்னா.....ஊருக்கு வந்தா அவளையும் போய் பார்த்துட்டு வரணும்....!",



"நானும் உன்கூடவே வந்து பார்த்துட்டு வந்துடறேன்.....!சரி நித்தி....!உன் மாமா வந்துட்டாரு.....நான் போய் அவரை கவனிக்கணும்.....!உனக்கு அப்புறம் கால் பண்றேன்....!",



"ஹ்ம்ம்....நடத்து....நடத்து.....!மாமா காலேஜ்ல இருந்து வந்த உடனேயே உங்க ரொமான்ஸை ஸ்டார்ட் பண்ணிடுவீங்களா......?",நித்திலா கேலி செய்ய,



"உனக்கு என்னடி பொறாமை.....?",சிறிது வெட்கப்பட்டாள் தீபிகா.



"ஒரு ஆமையும் இல்லை.....!நீ போய் உன் வேலையைப் பாரு....!பை....பை....!",என்றபடி போனை வைத்துவிட்டாள் நித்திலா.



....................................................................................................................



ஆதித்யா கன்ஸ்டரக்ஷன்ஸ்.....



மும்முரமாக தன் முன்னால் இருந்த சிஸ்டமில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள் சுமித்ரா.அவள் டேபிளில் இருந்த போன் அலறி அவள் கவனத்தை தன்பக்கம் கொண்டு வந்தது.போனை அட்டெண்ட் செய்தவளின் காதில்,"மேடம்.....!ரொம்ப பிஸியோ....?ஒரு 'குட் மார்னிங்....!',சொல்லக்கூட ரூம் பக்கம் வரல.....!",என்ற கௌதமின் குரல் ஒலித்தது.



"ம்....கொஞ்சம் பிஸிதான்.....!",



"சரி....ஒரு பத்து நிமிஷம் ரூம்க்கு வந்துட்டு போ.....!",



"எதுக்கு.....?",



"ஒண்ணு சொல்லணும்.....!",



"எதுவா இருந்தாலும் இப்படியே சொல்லுங்க.....!நான் ரூமுக்கெல்லாம் வர மாட்டேன்.....!",



"ஏய்....!அதெல்லாம் போன்ல சொல்ல முடியாது.....!",



"அப்படின்னா......நீங்க சொல்லவே வேண்டாம்.....!",



"ஹே....ஹே....!ப்ளீஸ் டி.....!ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்.....காலையில இருந்து உன்னைப் பார்க்கவே இல்லைல்ல.....!ஒரு மாதிரி இருக்கு.....!வா டி.....!",



"பொய் சொல்லாதீங்க.....!இந்நேரம்....சிசிடிவி கேமரா வழியா என்னைத்தான் பார்த்துட்டு இருப்பீங்க.....!எனக்குத் தெரியும்.....!",



அவள் கூறியது உண்மைதான்.....!சிசிடிவி கேமரா வழியாக அவனது மானிட்டரில் தெரிந்த அவளது உருவத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"இருந்தாலும்.....தேவியின் தரிசனத்தை நேரில் பார்த்தது போல் இருக்குமா.....?என் தேவியின் தரிசனம் கிடைக்காமல்....இந்த பக்தன் மிகவும் ஏங்கிப் போய் இருக்கிறான்....!சிறிது கருணை காட்டக் கூடாதா.....?",



"பக்தனுக்கு தரிசனம் தருவதற்கு.....இப்பொழுது தேவிக்கு விருப்பமில்லை.....!",அவனைப் போலவே திருப்பிக் கூறினாள் அவள்.



"ஏனாம்....?",



"தேவியை நேரில் பார்த்தால்....பக்தனின் கைகளும்....உதடுகளும் சும்மாவே இருப்பதில்லை.....!",



"ஏன்.....?என்ன செய்யும்.....?",அவன் குறும்பு கலந்த ஆர்வத்துடன் கேட்க,



"ம்....அதெல்லாம் சொல்ல முடியாது.....!இப்போ என்னுடைய வாய்....உங்களுக்கு 'பை....!' சொல்லிவிட்டு....என்னுடைய கை போனை வைக்கப் போகிறது....",



"ஏய்.....ஏய்....!இரு டி....!போனை வைக்காதே......!ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் வந்துட்டுப் போ டி.....!",



"ம்ஹீம்.....!அஞ்சு நிமிஷம்தான்னு சொல்லுவீங்க.....!அப்புறம்....அரை மணி நேரம் என்னை விட மாட்டீங்க.....!நான் வர மாட்டேன்.....!",



"என் புஜ்ஜுக்குட்டில்ல.....ரூமுக்கு வருவீங்களாம்.....!",அவன் கெஞ்ச,



"என் செல்லக்குட்டி மாமால்ல......!போனை வைப்பீங்களாம்.....!",என்று அவள் கொஞ்சினாள்.



"என்னது மாமா வா....?",



"ஹ்ம்ம்....!இனிமேல் உங்களை நான் 'மாமா'ன்னுதான் கூப்பிடப் போறேன்.....!நல்லாயிருக்கல்ல.....!மாமா.....!",அவள் கூப்பிட்டுக் காண்பிக்க,



"ஹே....!கொல்லாதே டி....!இதை மட்டும் நீ நேர்ல சொல்லியிருந்தேன்னு வை.....'மாமா'ன்னு சொன்ன உன்னுடைய அழகான உதட்டுக்கு நிறைய பரிசு கொடுத்திருப்பேன்.....",



"அந்தப் பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மாமா.....!நீங்க போனை வைங்க மாமா.....!",என்று வார்த்தைக்கு வார்த்தை 'மாமா' என்றழைக்க.....அவன் மயங்கித்தான் போனான்.



"மவளே.....!நீ மட்டும் தனியா என் கையில மாட்டின......அப்ப இருக்கு உனக்கு கச்சேரி.....!",



"அதை தனியா மாட்டும் போது பார்க்கலாம் மாமா....!",



"என்னடி.....நேர்ல இல்லைங்கிற தைரியத்துல பேசறியா......?தனியா என்கிட்ட மாட்டுவியல்ல.....!அப்ப இருக்கு உனக்கு.....!",



"ம்ம்....முடிஞ்சா என்னைத் தனியா பிடிங்க பார்ப்போம்.....!",அவள்...அவனை ஏத்தி விட,



"என்னடி....முடியாதுன்னு நினைக்கிறியா....?",



"ஆனால்.....ஒரு கண்டிஷன்.....!வேலைங்கிற பேர்ல என்னை.....உங்க கேபினுக்கு கூப்பிடக் கூடாது.....!வேற எங்கேயாவது.....என்னைத் தனியா மீட் பண்ணனும்....!",



"சரி டி....!அப்படி நான் உன்னைத் தனியா பிடிச்சிட்டா.....எனக்கு என்ன தருவ.....?",



"நீங்க என்ன கேட்டாலும் தர்றேன் மாமா.....!",



"மறுபடி பேச்சு மாறக்கூடாது.....!",அவன் அழுத்திக் கேட்க,



"ம்ஹீம்.....!பேச்சு மாற மாட்டேன்.....!நீங்க என்ன கேட்டாலும் கொடுக்கப்படும்.....!",அவனிடம் தனியாக மாட்ட மாட்டோம் என்ற தைரியத்தில் அவள் வாய்விட்டாள்.



"என்கிட்ட வசமா மாட்டினடி.....!",அவன் சிரிக்க,



"ஹலோ பாஸ்......!அதை மாட்டும் போது பார்க்கலாம்.....!இப்ப போனை வையுங்க.....!",என்றபடி போனை வைத்து விட்டாள்.



இருவருக்குள்ளும் அழகான கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமானது....!என்ன....இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் யாருமே கண்ணை கட்டியிருக்க மாட்டார்கள்....!இதில் வெற்றி பெற்றாலும்....தோல்வி அடைந்தாலும்....கிடைப்பது என்னவோ சுகமான பரிசுதான்....!



ஆதித்யன் அறையில் வழக்கம் போல் இரண்டும் முட்டிக் கொண்டிருந்தது.



"இந்த வேலையை நீதான் பண்ணியாகணும்.....!",ஆதித்யன் உத்தரவிட,



"என்னால எப்படி இதை பண்ண முடியும்.....?நோ....!",நித்திலா மறுத்துக் கொண்டிருந்தாள்.



என்ன விஷயமென்றால்.....சென்னையில் வளர்ந்து வரும் நிறுவனமாகிய 'சாரல் குரூப்ஸ்....' ஒரு டெண்டர் விட்டிருந்தது.அதற்கான விலை பட்டியலைத் தயாரிக்கும் வேலையை.....'ஆதித்யா க்ரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' சார்பாக நித்திலாதான் செய்ய வேண்டும் என்று ஆதித்யன் கூறினான்.அவளோ...."இவ்வளவு பெரிய பொறுப்பை நான் எப்படி சுமப்பேன்......?",என்று தடுமாற்றத்துடன் மறுத்துக் கொண்டிருந்தாள்.



"நான் சொன்னதுதான் ஃபைனல்......!இன்னையில இருந்தே கொட்டேஷன் பிரிப்பேர் பண்ற வேலையை ஆரம்பிச்சிடு.....!",அவ்வளவுதான் என்பது போல் அவன் தன் வேலையில் ஆழ்ந்து விட....நித்திலாதான் தடுமாறிப் போனாள்.



"புரிந்துதான் பேசறீங்களா.....?இவ்வளவு பெரிய வொர்க்கை நான் எப்படி தனியா ஹேண்டில் பண்ணுவேன்......?இந்த வொர்க்ல எனக்கு எக்ஸ்பீரியன்ஸும் இல்ல.....!",



"நீ ஒண்ணும் தனியா இல்ல....இந்த வொர்க்கை முடிக்கறதுக்கு எல்லா விதத்திலேயும் நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்.....!டோன்ட் வொர்ரி.....!அப்புறம்....எல்லா விஷயத்துக்கும் முதல் முறைன்னு ஒண்ணு இருக்கு....!முதல் அடி எடுத்து வைச்சாதான் அனுபவம்ங்கிறது கிடைக்கும்.....!",அவன் எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும்....அவள் மனம் ஒப்பவில்லை.



"நல்லா யோசிச்சுப் பாருங்க....!இது உங்க கம்பெனியுடைய வளர்ச்சி சம்மந்தப்பட்ட விஷயம்....ப்ரைஸ் கோட் பண்றதுல நான் ஏதாவது ஒரு சின்ன மிஸ்டேக் பண்ணிட்டாலும்....அது உங்க கம்பெனியுடைய இமேஜைத்தான் பாதிக்கும்.....!",எங்கே தான் தவறு செய்து விடுவோமோ என்ற பயத்தில் அவள் அந்த வேலையை ஒத்துக் கொள்ள மறுத்தாள்.



அவள் மறுப்பதிலும் காரணம் இருக்கத்தான் செய்தது.கொட்டேஷன் தயாரிப்பது என்பது அவ்வளவு ஒன்றும் சாதாரண காரியமில்லை.டெண்டர் என்று வரும் போது....ப்ரைஸ் கொட்டேஷன் என்பது மிகப் பெரிய அங்கம் வகிக்கக் கூடியது.வெறும் ஒரு ரூபாய் வித்தியாசத்தில் கூட நிறைய டெண்டர்கள் கை மாறியிருக்கின்றன.இவ்வளவு ஏன்.....?வெறும் ஒற்றை ரூபாய் வித்தியாசத்தில்.....ஆதித்யனே நிறைய டெண்டர்களை கை பற்றியிருக்கிறான்.இதையெல்லாம் யோசித்துதான் நித்திலா மறுத்தாள்.



தன் முன்னால் நின்று வாதாடிக் கொண்டிருந்தவளை ரசனையுடன் அளவிட்டவன்,"ஒரு சின்ன கரெக்ஷ்ன் பேபி.....!இது என்னுடைய கம்பெனி இல்ல.....நம்மளுடையது.....!",என்று திருத்தினான்.



உரிமையுடன் கூடிய அவனது பேச்சில்....அவள் மனம் மயங்கினாலும்....வெளியே காட்டிக் கொள்ளாமல்,"இப்ப இது ரொம்ப முக்கியம்.....!",என்று அலுத்துக் கொள்ள,



"இதுவும் முக்கியம்தான் டி......!",என்றான் அவன்.



"சரி.....!அதை விட்டுட்டு இப்ப....நம்ம பேச்சுக்கு வாங்க.....!",



"நீ எதுக்கு இவ்வளவு பயப்படற.....?நீ ரெடி பண்ற கொட்டேஷனை நாம ஒண்ணும் அப்படியே அனுப்பி வைக்கப் போறதில்லை.....!நானும் பார்த்து ஃபைனலிஸ் பண்ணினதுக்கு அப்புறம்தான் அனுப்ப போறோம்.....!",



"அதுதான் எதுக்குன்னு நான் கேட்கிறேன்.....?நான் ப்ரிப்பேர் பண்ணி....அதுக்கு அப்புறம் நீங்க ஃபைனலிஸ் பண்றதுக்கு....நீங்களே எல்லாத்தையும் பண்ணிடலாமே.....?அட்லீஸ்ட்....அமௌண்ட் மட்டுமாவது சொல்லுங்க.....!மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.....!",அவள் கெஞ்ச....அவன் உறுதியாக மறுத்தான்.



"நோ பேபி.....!இந்த வொர்க்கை முழுக்க....முழுக்க நீதான் பண்ணியாகணும்.....!",



"அதேதான் நானும் சொல்றேன்.....!எல்லாத்தையும் நானே ப்ரிப்பேர் பண்றேன்.....!பட்.....டெண்டர் அமௌண்ட் மட்டும் சொல்லிடுங்க.....!ப்ளீஸ்.....!",அவள் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தாள்.



அவளை தீர்க்கமாகப் பார்த்தவன்,"ஆதித்யா க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் M.D யுடைய வருங்கால மனைவி.....ஒரு சின்ன டெண்டரோட அமௌண்ட் கோட் பண்ணத் தெரியாம இருக்க கூடாது.....!இதையெல்லாம் நீ கத்துக்கணும்.....!",அவனுடைய குரலில் உறுதி இருந்தது.



'வருங்கால மனைவி' என்ற வார்த்தையில் அவளது மனதுக்குள் சாரல் அடிக்கத்தான் செய்தது.இருந்தும் மனதின் ஒரு மூலையில்.....அவனது உறுதி கண்டு சன்னமாக எரிச்சல் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.



'எவ்வளவு உறுதியா சொல்றான் பார்....!இதுக்காகவே....இவன் மூக்கை உடைக்கணும்.....!',மனதிற்குள் கறுவிக் கொண்டவள்,



"நடக்காத விஷயத்தைப் பத்தி பேசாதீங்க சார்....!",என்று உதட்டைச் சுழிக்க,



அவளது உதட்டுச் சுழிப்பையே தீவிரமாக ஆராய்ந்தவன்,'இவ இந்த உதட்டை சுழிக்கறதை மட்டும் விடவே மாட்டா......!ஒருநாள் என்கிட்ட மாட்டட்டும்....!பிடிச்சு கடிச்சு வைக்கிறேன்.....!டேய் ஆதி.....!கன்ட்ரோல் யுவர் செல்ஃப்......இப்ப மட்டும் இவகிட்ட இணக்கமா பேசினேன்னு வை.....மறுபடியும் இந்த வொர்க்கை பண்ண மாட்டேன்னு போர்க்கொடி தூக்க ஆரம்பிச்சிடுவா.....!ஸோ....கண்டிப்போட பேசித்தான் இவளை வழிக்கு கொண்டு வரணும்.....!',தனக்குத் தானே பேசிக் கொண்டவன்....அவளைப் பார்த்து...



"நீ என்னதான் சொன்னாலும்.....நான்தான் உனக்கு புருஷன்.....!நீதான் எனக்குப் பொண்டாட்டி....!இது ஒரு போதும் மாறப் போறதில்லை.....!ஸோ....தேவையில்லாத ஆர்க்யூமென்ட்ஸை விட்டுட்டு.....நீ உன் வேலையைப் பார்க்க போ....!",என்று அதட்டினான்.



அவன் கூறியதைக் கேட்டு அவள் 'என்ன திமிர்....!' என்று மனதிற்குள் திட்டினாலும்....அந்த திட்டலில் ஒரு துளி கூட கோபம் இல்லை என்பதுதான் உண்மை....!இருந்தும் அதை மறுத்து வெளியே அவனிடம் கெஞ்சினாள்."சார்....!கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க....!இது தேவையில்லாத டைம் வேஸ்ட்தானே.....!நான் ப்ரிப்பேர் பண்ணி....அது தவறா இருந்தா நீங்க கரெக்ஷன் பண்ணி....மறுபடியும் நான் ப்ரிப்பேர் பண்ணின்னு நேரம்தான் வேஸ்ட் ஆகும்......!",



"நேரம் வேஸ்ட் ஆனாலும் பரவாயில்லை.....!டெண்டர்க்கு இன்னும் பத்து நாள் இருக்கு.....!நீ பொறுமையா உன் வேலையைப் பாரு.....!",அவள் என்ன சொன்னாலும்.....திருப்பி சொல்வதற்கு அவன் ஒரு பதில் வைத்திருந்தான்.



இருந்தும் விலகாமல்....குழப்பமான முகத்துடன் அவள் நின்றிருக்க.....அவளைப் பார்த்தவன்,



"இதோ பார் நிலா.....!இந்த விஷயத்துல நீ ஏன் இவ்வளவு தயங்கறேன்னு எனக்குப் புரியல.....!இவ்வளவு தூரம் இந்த வொர்க்கை செய்யச் சொல்லி நான் உன்னை ஃபோர்ஸ் பண்றேன்னா....அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.....! நாளைக்கே வேலை விஷயமா நான் ஃபாரின் போக வேண்டி இருக்கலாம்.....!அப்படி நான் போகும் போது....என் சார்பா இந்த கம்பெனியை நிர்வகிக்கிற திறமை உனக்கு இருக்கணும்....!",என்று கூற,



"அதுக்குத்தான் கெளதம் சார் இருக்கிறாரே.....?",அவள் முணுமுணுக்க,



"அவன் இருக்கிறான் தான்.....!ஆனால்....எனக்கு அடுத்தபடி இந்த கம்பெனில எல்லா உரிமையும் உனக்குத்தான் இருக்கு.....!இன்னும் சொல்லப் போனா.....எனக்கு இணையான அதிகாரம் என் ஃபியூச்சர் வைஃப் ஆன உனக்கு மட்டும்தான் இருக்கு.....!இப்ப இருந்தே நான் உன்னை ட்ரெய்ன் பண்ணனும்ன்னு நினைக்கிறேன்.....!எனக்கு இந்த ஒரு தொழில் மட்டும் இல்லை டி....!ஸ்பேர் பார்ட்ஸ் ஃபேக்டரி....ஸ்கூல்....காலேஜ்....ஹாஸ்பிட்டல்ன்னு நிறைய தொழில் இருக்கு.....!ஏதாவது ஒரு மேனேஜ்மென்ட்டை நீ உன் பொறுப்பில் எடுத்துக்கிட்டேன்னா....நான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா மத்த பிஸினெஸ்ஸை பார்ப்பேன்.....!",அவன் பொறுமையாக அவளுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான்.



அவன் கூறியதில் இருந்த உண்மையை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.இவ்வளவு சிறிய வயதில்....இவ்வளவு பெரிய பாரங்களை சுமக்க வேண்டும் என்றால்.....அதிக டென்ஷன் இருக்கத்தான் செய்யும்.ஏதோ தன்னால் ஆன உதவி செய்யலாமே என்று அவளுக்குத் தோன்றியது.



"அது மட்டுமில்ல.....!உனக்குள்ள நிறைய திறமை இருக்கு பேபி.....!அதையெல்லாம் கல்யாணம்....குடும்பம்ன்னு ஒரு வட்டத்துக்குள்ள அடைக்க நான் விரும்பல.....!நம்ம மேரேஜ்க்கு அப்புறமும் உனக்குன்னு ஒரு ஸ்பேஸ் ஏற்படுத்திக் கொடுக்க விரும்பறேன்.....!உன் திறமையை வெளிக்காட்ட உனக்கு ஒரு ஸ்பேஸ் வேணும்......!அந்த ஸ்பேஸ் நம்ம பிசினெஸ்ஸா இருந்தா....எனக்கு கொஞ்சம் வொர்க் பர்டன் குறையும்......!இல்ல....வேற ஏதாவது லைன்ல உனக்கு விருப்பம் இருந்தாலும் சொல்லு.....!அதுல உனக்குன்னு ஒரு இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.....!",



அவன் பேசியதைக் கேட்டு அவள் மனம் நெகிழ்ந்துதான் போனாள்.இதுவரை.....அவள் பார்த்த ஆதித்யன் வேறு.....!இதுநாள் வரை....கோபக்காரனாகவும்.....பிடிவாதக்காரனாகவும் தான் அவன்....அவளுக்கு அறிமுகமாகியிருந்தான்.இப்பொழுது அவள் பார்க்கும் ஆதித்யன் முற்றிலும் வேறு ஒருவனாக இருந்தான்.அவளுக்கும் சம உரிமை கொடுத்து.....அவளது உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து.....அவள் விரலைப் பிடித்தபடி வாழ்க்கைப் பாதையில் அவளுடன் கை கோர்த்து நடக்க வேண்டும் என்பது.....இந்த ஆதித்யனுடைய எண்ணமாக இருந்தது.



அதிரடியாக அவளிடம் காதல் சொல்லி.....அதை விட முரட்டுத்தனமாக அவள் மனதில் நுழைந்தது ஒரு ஆதித்யன் என்றால்.....என் வாழ்வின் சரிபாதி நீ.....!உன் விருப்பு வெறுப்பு அனைத்திலும் எனக்கும் பங்கு உண்டு என்று சொல்லாமல் சொன்னவன் இன்னொரு ஆதித்யன்.....!



ஆனால்....இந்த இரு ஆதித்யனையுமே அவள் விரும்பத்தான் செய்தாள்.அவனுடைய முரட்டுக் காதலும்.....அழுத்தமான பிடிவாதமும் அவளை மயங்கச் செய்தது என்றால்.....அவனுடைய இந்த மென்மையான அணுகுமுறை அவளை நேசிக்கச் செய்தது.



என்னதான் தான் மறுத்தாலும்....மறைத்தாலும் அவனுக்கான தன்னுடைய காதல் வீறு கொண்டு எழுவதை அவள் உணர்ந்தாள்.எவ்வளவு காலம் தான் மனதுக்குள் எரிந்து கொண்டிருக்கும் காதல் என்னும் நெருப்பை.....பாசம் என்னும் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியும்.....?சில சமயங்களில்.....அந்த தண்ணீரே நெருப்பை கொழுந்து விட்டு எரியச் செய்யும் எண்ணெயாக மாறி விடும்....!



அப்படிபட்ட காதல் உணர்வுகள் அவளுக்குள் மெல்ல தலைதூக்க.....அவள் தலை அவனைப் பார்த்து தானாக 'சம்மதம்' என்பது போல் ஆடியது.அவள் விழிகள் அவளையும் அறியாமல்.....காதல் பார்வையை அவனை நோக்கி வீசின.....!அவளுடைய இதழ்கள் மிக மென்மையாக காதல் புன்னகையை அவனை நோக்கி சிந்தின....அவளையும் அறியாமலேயே....!



அவள் விழிகள் பிரதிபலித்த காதலை....அவனுடைய விழிகள் உள்வாங்கிக் கொண்டன....!மெலிதாய்....மிக மெலிதாய் அங்கு காதல் சங்கமம் நடந்தேறியது.....!என்ன.....அங்கு இரு உடல்கள் உரசிக் கொள்ளவில்லை....!மாறாக....இருவருடைய விழிகளும் மோதிக் கொண்டன.....காதலாக.....!இரு உடல்களின் சங்கமத்தை விட.....காதல் கொண்ட மனங்களின் விழிகளின் சங்கமம் கோடி சுகங்களை அள்ளி கொடுக்கும்.....!



விழிகளால் தீண்டிக் கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த சுகம் புரிபடும்.....!



இருவரின் விழிகளின் பரிபாஷணைக்கும் முதலில் முற்றுப்புள்ளி வைத்தது நித்திலாதான்.....!வெளியே இருந்து.....ஜன்னலின் வழியாக வந்த 'படக்' என்ற சத்தத்தில்....அவன் பார்வையில் இருந்து தன் விழிகளைப் பிரித்தெடுத்தவள்,



"கொட்டேஷன் எப்படி ரெடி பண்ணனும்ன்னு சொல்றீங்களா.....?",பொங்கிப் பிரவாகமெடுத்த தன் உணர்வுகளுக்கு அணை போட்டபடி.....மென்மையான குரலில் வினவினாள்.



தன் முடியை அழுந்தக் கோதி....தன் தடுமாற்றத்தை மறைத்தவன்,"S V S க்ரூப்ஸ் கம்பெனிக்கு இந்த மாதிரியான ரிப்போர்ட் ரெடி பண்ணியிருப்போம்.....!எடுத்து ஸ்டடி பண்ணிப் பாரு.....!உனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.....!ஏதாவது சந்தேகம்ன்னா என்கிட்ட கேளு.....!",என்க,



'சரி' என்பதாய் தலை அசைத்தவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.



வெளியே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த சுமித்ராவிற்கு ஒரு சந்தேகம் வந்தது.அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக....அவளுக்குப் பழைய ஃபைல் ஒன்று தேவைப்பட்டது.



எதேச்சையாக சிசிடிவி மானிட்டரை பார்த்த கௌதமின் விழிகளுக்கு....ஃபைல் ரூமிற்குச் செல்லும் சுமித்ரா தென்பட்டாள்.



'ஆஹா.....!வசமா மாட்டினா.....!',மனதிற்குள் குத்தாட்டம் போட்டவன்....அவன் அறையை விட்டு வெளியே வந்து....ஃபைல் ரூமை நோக்கி நடந்தான்.



சுமித்ராவிற்குத் தேவையான ஃபைல் மேலடுக்கில் இருந்ததால் அவளுக்கு அது எட்டவில்லை.கையை எட்டி அதை எடுக்க முயன்று கொண்டிருந்தவளை....இரு வலிமையான கரங்கள் பின்னாலிருந்து அணைத்தபடி....அவள் இடையைப் பற்றி உயரே தூக்கியது.திடும்மென தான் தூக்கப்படவும்.....பயந்து அலறப் போனவள்....பிறகு அந்தக் கைகளின் அழுத்தத்திலிருந்தே....தன்னை தூக்கியவன் தன்னவன்தான் என்பதை கண்டு கொண்டாள்.



தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தவள்....ரகசியப் புன்னகையொன்றை அவனை நோக்கி வீச.....அவனோ....'எப்படி....?' என்று கண்களாலேயே வெற்றிப் புன்னகை புரிந்தான்.'அய்ய.....ரொம்பவும்தான்.....!',வாயைத் திறக்காமலேயே அவள் அழகு காண்பிக்க.....'முதல்ல ஃபைலை எடுடி.....!',கண்களாலேயே சைகை செய்தான் அவன்.



தனக்கு வேண்டிய ஃபைலை எடுத்து முடித்தவள்....மீண்டும் தன் தலையை மட்டும் திருப்பி 'கீழே இறக்குங்க....!' என்று பார்வையாலேயே உத்தரவிட....அந்தக் கள்வனோ....வேண்டுமென்றே மெதுவாக....மிக மெதுவாக அவளைக் கீழே இறக்கினான்.



கால்கள் தரையில் படுவதற்குள் அவளுக்குப் போதும்....போதும் என்றாகிவிட்டது.அந்தளவிற்கு அவன் வேண்டுமென்றே அவன் உடலுடன் உரசியபடி....அவளை கீழே இறக்கி விட்டான்.



அவன் கீழே இறக்கி விட்டதும்.....தன்னை நோக்கித் திரும்ப முயன்றவளைத் தடுத்தவன்....பின்னாலிருந்து அவளை அணைத்தபடியே அவளது பின்னங் கழுத்தில் முகம் புதைத்தான்.முகம் புதைத்தவன் சும்மாவும் இருக்காமல்...."என்னடி சொன்ன....?",என்று கிசுகிசுக்க வேறு செய்தான்.



அவன் உதடுகள் ஏற்படுத்திய குறுகுறுப்பில் உடல் கூசி சிலிர்த்தவள்,"ஒண்ணும் சொல்லலையே....!",என்றாள் வேண்டுமென்றே.



"ஒண்ணும் சொல்லல.....?",கேட்டவனின் உதடுகள் அவள் பிடரியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்தது.



அவனுடைய முத்தத்தில் கரைந்து உருகியவள்....குழைவான நலிந்த குரலில்,"ஒ....ஒண்ணும் சொல்லல....!",என்று முனகினாள்.



"ஒண்ணும் சொல்லல....?",ஏற்கனவே அவள் இடையில் பதிந்திருந்த அவனுடைய கரங்கள் ஊர்ந்து சென்று.....அவள் வயிற்றில் அழுத்தமாகப் பதிந்து அவளைத் தன்னுடன் இறுக்கியது.



"ஒண்ணும் சொல்லல.....!",என்று சொல்லியவளின் வாய்தான் அசைந்ததே தவிர.....குரல் வெளியே வரவில்லை.



"ஒண்ணும் சொல்லல.....?",இம்முறை அவனுடைய உதடுகள் அவளது காதுமடலைப் பற்றி செல்லமாக கடித்து வைத்தது.



அவ்வளவுதான்....!அதற்கு மேல் தாள முடியாமல்....."ஹைய்யோ.....!ஏண்டா இப்படி இம்சை பண்ற....?ஆமாம்....!நான் சொன்னேன்தான்....!போதுமா.....?இப்ப என்னை விடுங்க.....!",என்றபடி அவன் பிடியிலிருந்து திமிற,



அவளது திமிறலை....வயிற்றில் பதிந்திருந்த தனது கரத்தின் அழுத்தத்திலிருந்து மிக எளிதாக அடக்கியவன்,"என்ன சொன்னேன்னு சொல்லு டி.....!",இப்பொழுதும் அவன் உதடுகள் அவள் காது மடலையேதான் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.



தன் காதோரத்தில் உணர்ந்த அவனது சூடான மூச்சுக் காற்றில் மயங்கிக் கிறங்கிக் கொண்டிருந்தவள்,"நீ...நீங்க என்ன கேட்டாலும் த....தர்றேன்னு சொன்னேன்.....!",சொல்வதற்குள்ளேயே அவளுக்கு மூச்சு வாங்கியது.



அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன்,"என்ன சொன்ன....?சரியா காது கேட்கல....!",வேண்டுமென்றே அவன் சீண்ட,



"நீங்க என்ன கேட்டாலும் தர்றேன்னு சொன்னேன்.....!",கத்தினாள் அவள்.



"ஹ்ம்ம்....வெரி குட்.....!என்ன கேட்கலாம்.....?",தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி நின்றவனின் பார்வை.....அவளை மேலிருந்து கீழ்வரை நிதானமாக மேய்ந்தது.



அவனுடைய பார்வையில் குப்பென முகம் சிவக்க....வெட்கத்துடன் தலை குனிந்தவள்,"எ...என்ன....?",என்று தடுமாறினாள்.



அவளை வெகு நிதானமாக பார்வையிட்டு முடித்தவன்,"ஹ்ம்ம்.....எல்லாமும்தான் வேணும்....!நீ மொத்தமா வேணும் ஹனி.....!",மயக்கத்துடன் முணுமுணுத்தபடியே அவளது கழுத்து சரிவில் முகம் புதைத்தான் அந்தக் கள்ளன்.



"எ....என்ன....?",தனது கழுத்து வளைவில்....அவனது மீசையும்....உதடுகளும் நடத்திய ஊர்வலத்தில் தடுமாறியது அந்தப் பெண்மை.



"நீ தான் வேணும் ஹனி......!",தனது உதடுகளை அவளது கழுத்து சரிவில் அழுத்தமாக புதைத்தபடியே கிளிப்பிள்ளையாய் சொன்னதையே திருப்பிச் சொன்னான் அந்தக் காதல் காரன்.



"ம்ப்ச்.....!விளையாடாதீங்க......!நான் போறேன்.....!"இதுவரை தான் கண்டறியாத மாய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள்....வெகு சிரமப்பட்டுத் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவளாய்....அவனைப் பிடித்து தள்ளிவிட்டபடி நகர முயல,



அவள் கையைப் பிடித்து சுண்டி இழுத்தவன்.....அவளை அருகில் இருந்த ரேக்கில் சாய்த்தபடி,"நீதானே டி சொன்ன.....?என்ன கேட்டாலும் தரப்படும்ன்னு.....இப்ப என்னன்னா மாத்திப் பேசற.....?",சிறு குழந்தையாய் அவளிடம் நியாயம் கேட்டான் அந்த மாயக் கண்ணன்.



"நான் சொன்னேன்தான்.....!அதுக்காக....இப்படியா கேட்பீங்க.....!",



அவள் முகத்தில் எதைக் கண்டானோ தெரியவில்லை....!"சரி....!அது வேண்டாம்.....!இப்போதைக்கு.....இந்த அழகான உதடுகளிடம் இருந்து ஒரு முத்தம் மட்டும் போதும்.....!அதையும் நீயேதான் கொடுக்கணும்.....!",அவன் பேரம் பேச,



"என்னது.....?நானேவா.....?என்னால முடியாது.....!",வேகமாகத் தலையாட்டி மறுத்தாள் அவள்.



"சரி.....!ஃபர்ஸ்ட் நான் சொல்லித் தர்றேன்.....!நீ அதை ஃபாலோ பண்ணித் திருப்பிக் கொடு.....!ஒகே வா.....?",கூறியபடியே அவன்....அவள் இதழ்களை நெருங்கினான்.



தன்னவனது தாபமான மூச்சுக் காற்றை தனது இதழ்களில் உணர்ந்தவளின் விழிகள் தாமாக மூடிக் கொண்டன.அவன்....அவள் இதழ்களை சுவைத்து விடும் நோக்கத்துடன் மெதுவாக....மிக மெதுவாக அவளை நோக்கி குனிய....இருவரின் இதழ்களுக்கும் இடையே நூலளவு இடைவெளிதான் இருந்தது.



அவ்வளவுதான்.....!இன்னும் சற்று நெருங்கினால் போதும்.....அவளது தேனிதழ்களை பருகி விடலாம்.....என்ற நிலையில் சரியாக அந்த நேரம் பார்த்து.....அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் நித்திலா.இருவரும் நிற்கும் நிலையைப் பார்த்து அதிர்ந்தவள்,"ஐய்யோ.....!",என்று கத்தி விட்டாள்.



அவளுடைய கத்தலில் இருவரும் அவசர அவசரமாக விலகினர்.சுமித்ரா பக்கத்திலிருக்கும் ரேக்கில் ஃபைலை தேடும் சாக்கில் திரும்பிக் கொள்ள.....கௌதமோ...."ஹி...ஹி....நித்திலா....!வாங்க.....!என்ன இந்தப் பக்கம்.....?",என்று அபத்தமாக அசடு வழிந்து வைத்தான்.



"அது.....ஃபைல் எடுக்க வந்தேன்.....!",இன்னும் அதிர்ச்சி விலகாமல் கூறினாள் அவள்.



"ஓ.....ஃபைல் எடுக்க வந்தீங்களா.....?",ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக அவன் கேட்க,



இவர்களுடைய பேச்சில் ஓரளவிற்கு தன்னை சமாளித்துக் கொண்ட சுமித்ரா....கௌதமைப் பார்த்து,"ஃபைல் ரூமுக்கு பைல் எடுக்கத்தான் வருவாங்க.....!வேற எதுக்கு வருவாங்க.....!",என்று கிண்டலடிக்க,



"அப்படீங்களா மேடம்.....?பைல் ரூம்க்கு பைல் எடுக்கத்தான் வருவாங்கன்னு....உங்களுக்கு இப்பத்தான் உரைச்சுதாங்க மேடம்.....!"என்று நித்திலா அவள் காலை வாற.....சுமித்ரா முகம் சிவந்து போனது.



"அது....வந்து....இல்ல....நித்தி....நான் பைல் எடுக்கத்தான் வந்தேன்.....!இவருதான்....என்னை பிடிச்சு இழுத்து.....",அதற்கு மேல் என்ன சொல்லி கௌதமின் மானத்தை வாங்கியிருப்பாளோ.....கௌதம்தான் உள்ளே புகுந்து நிலைமையை சமாளித்தான்.



"உங்களுக்கு என்ன பைல் வேணும்ன்னு சொல்லுங்க நித்திலா.....!நான் எடுத்து தர்றேன்.....!",



அவன் பேச்சை மாற்றுவதை புரிந்து கொண்ட நித்திலா....சிறு முறுவலுடன்,"S V S க்ரூப்ஸ் பைல் வேணும் சார்.....!",என்றாள்.



"அது எதுக்கு.....?அது ரொம்ப பழைய பைல் ஆச்சே.....?",



"சாரல் க்ரூப்ஸ் உடைய டெண்டர்க்கு கொட்டேஷன் ரெடி பண்ணனும்.....!அதுக்காக அந்த பைலை கொஞ்சம் ஸ்டடி பண்ணனும்....!",



"ஒகே....!ஒகே....!இன்னொரு பைலும் எடுத்துத் தர்றேன்.....!அதையும் பாருங்க.....!உங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்.....!",என்றபடி இரண்டு ஃபைல்களை எடுத்துக் கொடுத்தான்.



"தேங்க் யூ சார்....!",என்றவளிடம்,



"இட்ஸ் ஒகேங்க நித்திலா.....!அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்....நான் உங்க பிரெண்டை மேரேஜ் பண்ணிக்கப் போறேன்.....!இந்த 'சார்...' எல்லாம் வேண்டாமே.....!ஜஸ்ட் கால் மீ கெளதம்....!",



"ஹ்ம்ம்....பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது.....!நான் வேணும்ன்னா அண்ணான்னு கூப்பிடட்டுமா....?",ஆவலாக கேட்டவளைப் பார்த்து மென்மையாக சிரித்தவன்,



"இது இன்னும் நல்லாயிருக்கே.....!எனக்கும் இன்னொரு தங்கை கிடைச்ச மாதிரி ஆச்சு.....!"என்றான் உற்சாகமாக.



"அதே மாதிரி நீங்களும் என்னை 'வாங்க....!போங்க....!'ன்னு பேச வேண்டாம்.....!நித்திலான்னே கூப்பிடுங்க.....!",



இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த சுமித்ரா,"ஹலோ....!ஹலோ....!இங்க என்ன நடக்குது....?திடீர்ன்னு ரெண்டு பேரும் பாச மலரை வளர்க்கறீங்க.....?",என்று மகிழ்ச்சியுடன் கிண்டலடிக்க,



"உனக்கென்ன டி பொறாமை.....?என் தங்கச்சி கூட நான் பேசறேன்.....!",கெளதம் சொல்ல,



"அதுதானே.....!என் அண்ணன் கூட நான் பேசறதை.....நீ எப்படி தடுக்கலாம்....?",குறும்பாகச் சொன்னாள் நித்திலா.



"அதுசரி.....!மேடம்.....!நீங்க வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியுமா.....?இப்படியே நீங்க உங்க அண்ணா கூட பாசப் புறாவை பறக்க விட்டுட்டு இருங்க.....!ஆதித்யன் சார் உங்களை பறக்க விட்டுருவாரு.....!",சுமித்ரா கேலி செய்ய,



"ஹைய்யோ.....!ஆமாம்ல.....!நான் கிளம்பறேன்.....!அண்ணா....!பை....!நான் உங்க கூட அப்புறமா பேசறேன்.....!",என்றபடியே ஓடி விட்டாள் நித்திலா.



முகத்தில் கனிவுடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன்.....சுமித்ராவைப் பார்த்துக் குறும்பாக கண் சிமிட்டியபடி,"ஹனி....!நாம நம்ம வேலையை கண்டின்யூ பண்ணலாமா.....?",என்றபடியே அவளை நெருங்க,



"ம்....ஆளை விடுங்க சாமி.....!",தான் எடுக்க வந்த பைலையும் மறந்தவளாய் ஓடி விட்டாள் சுமித்ரா.



"ஹே.....!ஒரு நாள் என்கிட்ட வசமா மாட்டுவ டி.....!அப்ப வைச்சுக்கிறேன்.....!",என்ற கௌதமின் குரல் அவளைத் தொடர்ந்தது.





அகம் தொட வருவான்....!!!
 

Latest posts

New Threads

Top Bottom