Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஓ(அ)ரங்க நாடகம்

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
ஓர(அ)ங்க நாடகம்
2019


சிறுவயதில்,பள்ளிபருவத்தில் நிகழும் ஒருசில விஷயங்கள் நம் வாழ்வில் வெகுதூரம் நம்மை துரத்துகிறது! அவற்றின் ஒரு அங்கத்தினை நீங்கள் படிப்பதர்காக வைத்துள்ளேன் ...ஓர(அ)ங்க நாடகம் !

நிவாஸ் -மிருதுளா,சிவம்-அபிராமி,சுப்ரமணியம்-சிவகாமி,ஸ்ரீ நிதி, மீனு இவங்க தான் இநத கதை மூலமா நாம சந்திக்கபோற பாத்திரங்கள்!


வயல் வெளியின் பசுமையும்,ஆற்று நீரோட்ட சலலப்பையும் விட்டு சென்னை வந்து எட்டு வருடங்கள் ஓடி விட்டது சிவதிற்கு ...ஆடுதுறை பக்கம் சிறியதொரு கிராமத்தை சேர்ந்தவர் சிவம்..வீட்டின் மூன்றாவது பிள்ளை...பண்ணையார் குடும்பம்.

தங்களுக்கு குழந்தை இல்லை என்பதை பெரிது படுத்தி பேசிய உறவுகளிடமிருந்து அவர் தன் மனைவியை காக்கும் பொருட்டு எடுத்த முடிவு... சென்னை வந்து இரண்டு வருடங்களில் அவர் மனைவி அபிராமி கரு தரிக்க ...அவள் கரு தரித்த நேரம் சிவத்தின் ஏற்றுமதி தொழில் அமோகமாக லாபத்தை அள்ளித்தந்தது.....தன் மகனின் வரவிர்குபின் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே!

அதன் பிறகு ,மூன்று வருட இடைவெளியில்ஒரு பெண் குழந்தை பிறக்க மகிழ்ச்சி தவிர வாழ்வில் துன்பத்திர்க்கு இடமில்லை என ஆனது அவர்கள் வாழ்வு!



சிவம் தன் மகனுக்கு ஸ்ரீநிவாஸ் என்றும்,மகளுக்கு ஸ்ரீ நிதி என்றும் பெயரிட்டார்... நிவாஸ் சிறுவயதிலேயே படிப்பு, விளையாட்டு இரண்டிலும் கெட்டி....நிதி குறும்புடன் கூடிய விளையாட்டு பெண்... இந்த கதை ஸ்ரீநிவாசை சுற்றி பின்னியிருக்கிறேன்..

தனது வளமையை காட்ட சிவம் என்றுமே தன் மக்களை அனுமதிக்கவில்லை..வல்லமையை காட்டவே குழந்தைகளை பழக்கினார். இருவரையுமே சாதாரண ஆங்கில வழி பள்ளியில் சேர்த்திருந்தார்.....

நிவாஸின் தோழி மிருதுளா...தோழி என்றால் இருவரும் ஒன்றாம் வகுப்பு முதலே நண்பர்கள்..பால் வேறுபாட்டை மீறிய தோழமை...வளர வளர தோழமை வளர்ந்தது... மிருதுளாவின் அப்பா மளிகை கடை வைத்திருந்தார்.. ஒரு தங்கை அவளுக்குண்டு..தங்கை மீனாவும் நிதியும் ஒரே வகுப்பு...

நிவாஸின் திறமைகளும் அவனைபோலவே அசுர வளர்ச்சி...மிருதுளா அவன் போன்று இல்லாவிடினும் ஓரளவிர்க்கு நன்றாக படிப்பவள் தான்.

அவளுக்கு விளையாட்டில் ஆர்வம் சுத்தமாக இல்லை, பருவத்திர்கே உரிய குறும்புகளுடன்,காண்போரை கவரும் அழகி...நிவாஸ்தான் எப்போதும் அவளுடன்...வேறு ஆண் பிள்ளைகளுடன் பழகும் எண்ணம் அவளிடம் இல்லை..இது அவள் உடன் பயிலும் சில மாணவர்களுக்குள் புகைச்சலை கிளப்பிவிட்டது....போதா குறைக்கு....ஏண்டா ,கணேஷு.உங்க கிளாசுல இருக்குற மிருதுளா யாரோடையும் பேசி பழகலையே...எப்போதுமே,அந்த நிவாஸோட சுத்துறா ..ஏதாச்சும் மேட்டரா..என்று மேல்வகுப்பு படிக்கும் மாணவர்கள் ..நிவாஸ் வகுப்பு மாணவர்களை உசுபேத்தி தங்கள் ஆற்றாமையை வெளிபடுத்தினர்.

அந்த வருட ஒன்பதாம் வகுப்பிர்க்கான கோப்பைகளில் பாதியை நிவாஸ் தட்டிச் சென்றிருந்தான்... அபூர்வமாக அன்று தன் மகனை அழைத்துச் செல்ல சிவம் தனது இன்னோவா காரில் வர ,பள்ளி தாளாளர் அவருக்கு அளித்த மரியாதை ..சக மாணவர்களுக்குள் நிவாஸ் மீதான காழ்புணர்வை தூண்டியது.அவங்கிட்ட பணம் ஜாஸ்தி போலடா..அதான்...எல்லா பரிசுகளும், மிருதுளாவும் அவனை சுத்தி சுத்தி வருது..அவனது திறமைகள் வேறு விதமாக பேசப் பட்டது.

டேய்..அவன எப்படியாவது அடக்க வேணும்டா..என்று சில மாணவர்கள் மேல் வகுப்பு மானவர்களுடன் சேர்ந்து கட்டம் கட்டினார்கள்... விபரீதம் புரியாமலே!

பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த மாணவர்கள் தகுந்த நேரத்திர்க்காக காத்திருந்தனர்..

நீல படங்களை வீட்டிர்க்கு தெரியாமல் பார்த்து வைத்த ஞானம் வேறு...அதன்படி... கழிவறையில்... நிவாஸிடம் பேச்சு வளர்த்தனர். டேய்..நிவாஸ்..உன்னோட *** என்னடா இவ்வளவு சின்னதா இருக்கு... என ஆரம்பித்து... தங்கள் ஒட்டுமொத்த திறமையும் கொண்டு அவனை குழப்பினர்.

நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா..உன் வொய்ஃப் பாவம்டா என முடிக்க..இதே மாதிரியான உரையாடல்கள் தொடர்ந்து நடக்க..உள்ளுக்குள் ஏதோ கையாலாகாத்தனத்தை உணர்ந்தான் நிவாஸ். மிருதுளாவுடன் கூட சரியாக பேசுவதில்லை. இவன் ஒதுங்க ,ஒதுங்க..அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை..அந்த சமயம் வந்த அனைத்து தேர்வுகளிலுமே நிவாஸ் மதிப்பெண்கள் ஐம்பதை தாண்டவில்லை. கவலைக்கொண்ட மிருத்துளா..நிவாசின் அப்பாவை பார்த்து அவன் நிலையை சொல்ல நினைத்தாள்... அன்று வயிற்றுவலி என சொல்லிவிட்டு...மாலை ட்யூஷன் செல்லாமல் நிவாசின் அப்பாவிற்க்கு போன் செய்ய வீட்டிர்க்கு வருமாறு சொல்லிவிட்டு அவரும் விரைந்தார்.

மிருதுளா நிவாஸின் வேறுபாடான நடவெடிக்கைகளுடன் ,அவன் தன்னுடனும் பேசுவதில்லை என அழுதவளை எப்படி தேற்றுவது என்று சிவம் தம்பதியினருக்கு சுத்தமாக புரியவில்லை.. தன் மகனின் விடலைப் பருவ பிரச்சனை எனும் அளவிர்க்கு அவர்களுக்கு புரிந்தது... நீ என்னிக்கும் அவனோட நட்ப விடாதம்மா....நாங்க என்னன்னு பாக்குறோம் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தனர். சிறிது நாட்கள் பேசாமல் இருந்த நிவாசிற்க்கு தன் தோழியை விலக்கி வைக்க முடியவில்லை....அடிமன குழப்பத்துடனே இருந்தவனை....என்னவென்றே புரியாமல், ஒருவழியாக படிப்பில் ஈடு பட வைத்தாள் மிருதுளா... நிவாஸ்...சொல்லிக்குடு என தன் சந்தேகங்களுடன் அவனிடம் வருபவளுக்கு நிதானமாக படித்து சொல்லிக்குடுப்பான்....இவ்வாறே அவனும் தன்னையும் அறியாமல் படிப்பில் ஆழ்ந்தான்....இவன் மாற்றங்களை அவளும் அவன் தந்தையிடம் சொல்லிக்கொண்டு வந்தாள். ஆனால் ,நிவாஸ் தனிமை விரும்பியானான்...வீட்டிலும் கலகலப்பாக இருக்கவில்லை. அவன் இயல்பே மாறி விட்டிருந்தது....

தன் மகனின் மாற்றம் புரிந்தாலும் ஏன் என்று புரிபடாமல் அபிராமி தவித்தார். இப்படியே விட்டால், நிவாசின் வாழ்க்கை பாதை மாறிவிடும் என்பது சிவம் – அபிராமி இருவருக்குமே தெளிவாக புரிந்தது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில் ,சிவம் தன் மகனிடம் பேசத் தொடங்கினார்..அவனுடன் தனியே வெளியே செல்வது, உணவு அருந்த அவனும் அவரும் செல்வது என நெருக்கத்தை அதிகப்படுத்தினார்..சில சமயம் அபிராமியும் வருவார்..சில சமயம் குடும்பத்துடன் செல்வார்கள்...வீட்டினர் எப்போதும் அவனுடந்தான் எனும் எண்ணம் அவனுள் ஆழ பதியவிட்டார் சிவம்.

தன் நண்பனாக தன் தந்தையை ஏற்றுக்கொண்டிருந்தான் நிவாஸ்...மிக தயங்கி தயங்கி,தான் சொல்ல நினைப்பதை மிகுந்த வருத்ததுடன் துக்கத்துடன் சொல்லி முடித்தான்...மற்ற மாணவர்களின் கூற்றையும் தான்...அப்பா ..எனக்கு ** ரொம்ப சின்னது...கல்யாணம் செஞ்சுக்க லாயக்கில்லன்னு சொல்றாணுங்கப்பா..என விக்கி விக்கி அழும் மகனை தேற்றும் வகை புரியாது தவித்தவர்... டோன்ட் வொர்ரி கண்ணா...இப்பவே நாம இதுக்கான டாக்டர பாத்தா சரியாகிடும் என்று மகனை தேற்றினார்...

அப்பா..இது அம்மாவுக்கு கூட தெரியவேணாம்...ரொம்ப அவமானமா பீல் பண்ணுறேன்..என்றான் நிவாஸ்... சரி என்று தலையாட்டி சென்றவருக்குள் சொல்லொணா கோவம்...யாரை குற்றம் சொல்ல முடியும்? படிக்கும் பிள்ளைகளுக்கு இது தேவையா? மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு ,அவனுக்கு பிரச்சனைகள் உடல் அளவில் ஏதுமில்லை..ஆனால்,கவுன்சிலிங்க் தேவை என்று முடிவெடுத்தார் மருத்துவர்...சொல்ல கூடாது என மகன் கேட்டுக்கொண்டாலும் மனைவியிடம் அனைத்தையும் சொல்லி தெரிந்ததாக காட்டிக்கொள்ள வேண்டாம் என்று விட்டார் சிவம்...மகனின் நன்மை ஒன்றே விரும்பும் தாய் மனம்...சரி என்றுவிட்டது.

மிருதுளாவின் அப்பாவிர்க்கு வியாபாரத்தில் கடுமையான நஷ்டம் தாக்க...இரண்டு வருடங்களுக்குள் கடை மூடு விழா நடத்த...அவர்கள் குடும்பம்...இவளது பன்னிரண்டாம் வகுப்பீர்க்கு பின்னர் சொந்த கிராமத்திர்க்கு செல்ல முடிவெடுத்தது...

நிவாஸால் இந்த பிரிவை தாங்க முடியவில்லை ...வேற வழி இல்ல நிவாஸ்..... மிருது..எங்கப்பாகிட்ட உதவி கேக்கலாமா....

இல்லடா....எங்கப்பா ஒத்துக்க மாட்டாரு...

சரிடி...அடிக்கடி போன் பண்ணு...படிப்ப விட்டுராத...உனக்கு எப்பவுமே நா இருக்கேன். மறக்காத ....

கண்ணீருடன் விடை பெற்றாள் மிருதுளா .

முதல் சில மாதங்கள் இருவருக்குள்ளும் தொலைபேசி வழியே நட்பு தொடர்ந்தது...ஒருநாள் அவளது அப்பா வெகுவாக கண்டிக்கவும் ,மெல்ல மெல்ல தொடர்பு விட்டே போனது!

வருடங்கள் கடக்க ...பொறியியல் படிப்புடன் ,நிர்வாக படிப்பும் முடித்து ,தொழிலில் கால் ஊன ஆரம்பித்தான் நிவாஸ்....ஆனால் ,அவனால் அவன் ஆழ்மன அழுத்ததிலிருந்து வெளி வர முடியவில்லை..அது வடுவாகிவிட்டிருந்தது.

மிருதுளா...மதுரை அரசு கல்லூரியில் பி.எஸ்‌சி கணினி அறிவியல் முடித்துவிட்டு ,இனி கட்டுமான துறையில் வேலை வாய்புக்கள் அதிகம் என நண்பர் மூலம் அறிந்துகொண்ட மிருதுளாவின் அப்பா அவளை அதற்கு பழக்க முனைய,மேலே ..சில கட்டிட வடிவமைப்புகளுக்கான கணினி பயிற்சிகளுடன் ஒரு சிறு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தாள்.

அவள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ய, கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என அழுது ஆர்பாட்டம் செய்தும், விளைவு பூஜ்ஜியம் தான்......

வேறு வழி இன்றி ,அவசரமாக,தோழி மூலம்,சென்னையில் வேலை தேடிக்கொண்டு...திருமண முதல் நாளில் மாப்பிள்ளையிடம் தனக்கு திருமண உறவில் நாட்டமில்லை என்று தெரிவிக்க...பெரிய பூகம்பம் வெடித்தது.

மிருதுளாவின் அப்பா சுப்ரமணியம் ,ருத்ர தாண்டவம் ஆடினார். தொழில் நஷ்டத்திர்க்குப் பிறகு,வெகு பிரயர்த்தனத்தில் இந்த ஏற்பாட்டை செய்திருந்தார். அவரால் நடந்தவற்றை ஜீரணிக்க முடியவில்லை!!

காரணத்தை கேட்க அங்கு யாருக்கும் இஷ்டமில்லை....கல்யாணத்தை முடிக்க அவசரம் காட்ட,இவளோ தன் நிலையிலிருந்து கீழிறங்கவில்லை....திருமண வாழ்வே பிரச்சனையானால் இருவருக்கும் நரகமாகிவிடும்...அந்த நிலை ஏற்படாமல் தடுக்கவேண்டும் என முனைந்தாள்.

வேறு வழி இன்றி, மிருதுளாவின் தங்கை மீனு மணப்பெண்ணாக....மாப்பிள்ளை வீட்டார் மிருதுளா அங்கிருந்தால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்றுவிட்டனர்.!

எதிர்பார்த்த ஒன்றுதான் ...நல்லதென மிருதுளா கிளம்பிவிட்டாள்..சென்னையை நோக்கி.....

மிருதுளாவின் அம்மாவின் கண்கள் மட்டும் கண்ணீரை நிறுத்த முனையவில்லை ..அவருக்கு தெரியும் நிஜக் காரணம்.

எஸ்.எஸ் கட்டிட நிறுவனத்தில் மிருதுவிர்க்கு உள் கட்டமைப்பு பிரிவில் வேலை ...நல்ல சம்பளம்தான் ..ஒரு மகளிர் விடுதியில் தங்கிக்கொண்டாள் ...நிவாஸை அவள் மனம் நாடியது ...நீண்ட கால நண்பன் ...இள வயது தோழன் ..அவன் தோள் வளைவில் சாய்ந்து ஒருமூச்சு அழ முடிந்தால்....

அவன் இப்பொழுது எங்கு எப்படி இருப்பானோ....என்னை ஞாபகம் இருக்குமா ...ம்ஹூம்..நிச்சயம் தெரியவில்லை..

மும்பையில் அலுவலக வேலைகள் முடிந்து ,சென்னை திரும்பிய நிவாசினுள் ,ஒருவித பரபரப்பு....தேடிய எதுவோ கிடைத்த சந்தோஷம்...அதே மனதுடன் கட்டுமான அலுவலகம் வந்தான்....அவனும் அவனது நண்பன் சுரேஷும் இணைந்து நடத்தும் நிறுவனம் இது.... இவன் நிறுவனம் கட்டுமான பொருட்கள் சில ,கம்பிகள் போன்றவற்றை தயாரித்து கொடுத்து வந்தது....அங்கு ஒரு தேநீர் கோப்பையுடன் இன்னொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தவள் அவளே...இவன் தோழி மிருதுளா....தன்னை அணுகாமல், இவள் வேலை தேடிக்கொண்டு வந்தது அவனுள் கோவத்தை ஏற்படுத்தியது ...

நான்தான் எதுனாலும் என்கிட்ட பேச தயங்காதன்னு சொல்லி இருந்தேனே ..ஒருவேள என்னை மறந்திருப்பாளோ? ஆனால், அது எப்படி சாத்தியம்? அவனுள்ளும் பல்வேறு கேள்விகள்.

கோவம் மீற..அவளை கண்டுகொள்ளாமல் சென்றான் நிவாஸ். அவனை பார்த்த மிருதுளா அவன் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதால் தன்னை கண்டுகொள்ளவில்லை....இல்லை...மொத்தமாய் என்னை மறந்திருப்பான்...பள்ளி நட்புதானே? என்று தன்னை தேற்றிக் கொண்டாள்.

இருவருக்குமான கண்ணாமூச்சி பல மாதங்கள் நீள ..வெளியூர் பிரயாணங்கள் நிவாஸை சென்னையில் இருக்கவிடாமல் அலைக்கழிக்க முக்கிய கோப்பில் கையெழுதிட கட்டுமான நிறுவனத்திர்க்கு வந்த சிவம் மிருதுளாவை அடையாளம் கண்டுகொண்டார்.

நீ இங்கயாமா வேலை செய்யுற? நிவாஸ் ஒரு வார்த்தையும் சொல்லலயே! என்று ஆச்சார்ய பட்டுப் போனார்.

அவன் ..ஸாரி , ஸார் என்ன மறந்திருப்பார் சர் ...என்றவளை வியப்புடன் பார்த்த சிவம்.... நீ என்ன மாமான்னு தான கூப்பிட்டுகிட்டு இருந்த? திடீர்னு இது என்ன புது வழக்கம் ?

இல்ல ...இது ஆஃபிஸ் ...அதுனால ..பெர்சனல் ரிலேஷன்ஷிப் சொல்றது நல்லா இருக்காது....சர்...தயங்கி தயங்கி முடித்துவிட்டாள்...அவருக்கும் சரி என பட...நிவாஸிடம் பேச வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டார்.

கிட்ட தட்ட ஒருமாத பிரயாணத்திர்க்குப் சென்னை வந்த நிவாஸிடம் மிருதுளாவை பற்றி ஏன் சொல்லல நிவாஸ்? என்றார் சிவம்....

மிருதுளா சென்றபின்னர் ,இருந்த ஒரே தோழமையும் பிரிந்துவிட்ட துயரில் நெருங்கிய நண்பர்கள் என அவன் மனம் வேறு யாரையும் ஏற்கவில்லை ...சுரேஷும் தொழில்முறை நண்பன் மட்டுமே.

இவை அனைத்தும் தெரிந்த சிவத்திற்கு நிவாஸின் செய்கை ஆச்சர்யத்தையே ஏற்படுத்தியது.

இல்லப்பா...என்னன்னு தெரியல...அவ என்ன தெரிஞ்சாமாதிரியே காமிச்சுக்கல...அதோட ,சென்னை வந்தும் என்னை தொடர்பு கொள்ளல..அதான்...உங்ககிட்ட என்னனு சொல்றதுன்னு புரியல...

மகனின் கருத்து தன் கருத்தோடு ஒத்துப்போக,மிருதுளா ,பத்தாம் வகுப்பில், தன்னை தேடி வந்த நாள் ,அவள் அழுகை..அவர் கண்முன் ..மீண்டும் விரிந்தது....நல்ல நண்பனை சட்டென விட்டுவிடும் குணம் கொண்டவள் அவள் அல்ல ...பின்னே ,என்னவாயிற்று அந்த பெண்ணிற்கு?

நிவாஸ்...எனக்கு செக்ரட்ரி வேணும்னு சொன்னேனே.....மிருதுளாவ இங்க மாத்திடு....நம்ம கண் முன்ன இருக்கட்டும்...தனியாதான் இருக்காபோல...அப்படியே விட முடியாது...சிவம் வெகு தீவிரமாக சொல்ல நிவாஸிர்க்கும் சரியென்றே பட்டது.!

ஆனால் ,அவளுக்கு அதுக்கான முறையான பயிற்சியோ ,அனுபவமோ இல்லயேப்பா ...

சிறிது நேரம் யோசித்தவர்...அவ ஷார்ட் ஹேண்ட் போனதா ஞாபகம்...விசாரி.... நம்ம செக்ரட்ரி இன்னும் மூணு மாசம் இங்கதான் இருப்பார்..ஸோ ,இப்பவே மாத்தினாத்தான் சரியா இருக்கும். கத்துக்கவும் சந்தேகம் தீர்க்கவும் தோது ....

மும்பையில், நிவாஸ் காரில் அமர்ந்திருக்க ,போக்குவரத்து ரெட் சிக்னலில் ,பிச்சை எடுத்து வந்த சுமார் பதினாறு வயது மதிக்கத் தக்க திருநங்கை முகம் திரும்ப திரும்ப நினைவில் வர ,தன் ஆழ்மன குழப்பங்களுடன் போராடிக்கொண்டிருத்தான் நிவாஸ்.... இதுபோல ,நிறைய பார்த்துவிட்டான்....

அவர்களுக்கேன் இந்த நிலை?

அவர்களின் தவறு ஏதுமில்லையே! இது இயற்கையின் ஒரு வஞ்சிப்பு...இவர்களை சமூகம் ஒதுக்குவது பிழை!

அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்.....முடிவெடுத்தவனாக...சிவத்தை நாடி சென்றான்!

அப்பா....

சொல்லு நிவாஸ்....

என்னோட நிலை தெரிஞ்சும் நீங்க ஏன் என்னை ஒதுக்கல?

உன்னோட நிலை என்ன நிவாஸ்...?

நீ....முழுமையான ஆண்மகன்.....நா சும்மா சொல்லல.....டாக்டர் செஞ்ச டெஸ்டுகளோட ரிப்போர்ட் சொல்லுது! நீ இன்னுமா உன் எண்ணங்கள மாத்திக்கல?

என்னால அந்த நாட்களேந்து வெளியே வர முடியலப்பா.

பாருடா...உனக்கு கல்யாணம் செய்யணும்னு நாங்க யோசிக்கறோம்...நிதி கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷங்கள் ஆச்சு..ஏதாவது உளறாதே!

அவர் குரலில் அப்பட்டமாய் கடுமை தெரிந்தது...

அப்பா ...பிளீஸ் ..எனக்கு யோசிக்கணும்!

நா இப்ப பேச வந்தது வேற விஷயம்....

சரி...சொல்லு...

நாம எக்ஸ்போர்ட் கம்பனியில திருநங்கைகள வேலைக்கு வைக்கலாம்னு யோசிக்கிறேன்.!

சிவத்திர்க்கு மனது பதறியது.சமூகம் எவ்வாறு பார்க்கும் ?

இல்லப்பா...நா முடிவு பண்ணிட்டேன்! இதுவும் சமூக சேவைதான்!

முதற்கட்டமாக ,சுமார் ஐம்பது திருநங்கைகளுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு சேர்த்து கொண்டான்.....அவர்களுடன் பணிபுரிய முடியாதென மற்ற பணியாளர்கள் போராட அவர்களுக்கென தனி தளம் ஒதுக்கினான். அவனை பற்றி பலவித கருத்துக்கள் பரவ ..சை ...அவங்களும் மனுஷங்க தானே ...நல்லபடியா வாழ அவங்களுக்கு மட்டும் தகுதி இல்லையா?

அவன் மனம் வாதிட ...இன்னும் பல திருநங்கைகளுக்கு, தனது மற்ற தொழிற்கூடங்களிளூம் வாய்ப்பளித்தான்...சில மாற்றங்கள ஏற்படுதுதாணும்னா வலிகளையும் ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்..எப்படியும் நா பின்வாங்கறதாக இல்ல..என மனதிர்க்கு தெம்பூட்டினான் .



அண்ணே...அவங்களும் மனுஷங்க தான்....பயிற்சி குடுத்தா நல்லா வேலை பண்ணுவாங்க...போராடி மற்றவர்களை சம்மதிக்க வைத்தான். ஆண்களுடைய உடல் வலிமையும்,சேந்தவங்க...நல்லா வேலை செய்யக்கூடியவங்க....அவன் வாதங்களில் உண்மையும் உண்டு..முதலில் வெறுப்புடன் முதலாளிக்காக ஒப்புக் கொண்டவர்களுக்கு,சீருடையில் அவர்களை காண்கையில் வேறுபாடுகள் கண்ணுக்கு பெரியதாக படவில்லை...கண்ணுக்குப் புலப் படாதது கருத்தினில் நிலைப்பதில்லை!

தம்பி..நீங்க புள்ள குட்டியோட சந்தோஷமா வாழணும்...உள்ளூர திருநங்கைகளிடமிருந்து அவனுக்கு கிடைத்த வாழ்த்து....சிரித்து கொண்டான்..

மிருதுளாவின் அம்மா மட்டும் அடிக்கடி சென்னை வந்து மகளை பார்த்து சென்றார்...மற்றவர்களால் முடியும்....பெற்ற மகளை கைகழுவ அம்மாவால் முடியுமா?

உன்னோட முடிவுக்கு நான்தான் காரணமில்ல மிருதுளா?

அவரது கேள்வி அவளை உலுக்கியது.....ஆனாலும், ஆமாம் என சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தாள்!

சிவத்தின் நேரடி பார்வையில் வேலைக்கு வந்த பிறகு ,நிவாஸும் அவளும் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள்! திருநங்கைகளின் வேலை சம்மந்தமாக அவன் சந்தித்த சவால்கள் ஏராளம்... மிருதுளா அறிந்ததே! மிகவும் சோர்ந்து காணப்பட்டான்...நிவாஸ்...தனது துணை இந்த சமயத்தில் அவனுக்கு மிகவும் அவசியம் என்பதை அவளும் புரிந்து வைத்திருந்தாள்.

அவன் மனம் தன் தோழியை வெகுவாக நாடியது...அவள்தான் திரைக்கு பின் ஒளிந்திருக்கிறாளே? போலியான மாயத்திரை..?!

இதற்குமேல் முடியாது என்று உணர்ந்தவளாக.....நிவாஸ்.....

அந்த ஒரு வார்த்தை கேட்டதும் வெகுண்டான் நிவாஸ்....வாடி வா...இப்பதான் உன் கண்ணுல நா தெரியுறனா? காண்டீனில் உட்கார்ந்திருந்த மற்றவர்கள் திரும்பி பார்க்க ..நிவாஸ் ...கத்தாதே ..பிளீஸ்....

அவளை அழைத்துக்கொண்டு வண்டலூர் பூங்காவிர்க்கு வந்து விட்டான்....சிறு வயது நட்பு இன்னும் மாறாமல் இருப்பது ஆச்சர்யமே! இடைப்பட்ட வருடங்களுக்கான மொத்த கதையும் இருவரும் பேசினார்கள். தங்கள் பிரச்சனைகளை மட்டும் பேசவில்லை!



இந்த சன்டே என்ன பிளான் மிருதுளா?

வழக்கம் போலதான்? அநாதை இல்லம் போவேன்....

சிறிது தயங்கியவனாக ..நானும் வரவா? என்றான் நிவாஸ்....அவனுக்கும் உணர்வுகளுக்கான வடிகால் தேவை பட்டதோ/?

இருவருக்கும் ஞாயிற்று கிழமைகள் அங்கு கழிந்தன......ஒருமுறை மிருதுளாவின் அம்மா நேராக அலுவலகம் வந்துவிட ...என்னம்மா ..இங்கெல்லாம் ஏன் வர? போன் பண்ணி இருந்தா இன்னிக்கி லீவு போட்டிருப்பேனே?

இல்லடி ...மீனுவுக்கு பிரசவ நேரம்.....அதான் ..பாக்க வந்திட்டேன்..பிரசவம் ஆனா திரும்ப கொண்டு விடுற வரை உன்ன பாக்க வரமுடியாதே!

மௌனமே அவளிடமிருந்து பதில்...அவள் என்ன சொல்ல முடியும்? தங்கை சந்தோஷமாக இருந்தால் சரி....

சிறிது நேரம் பேசிவிட்டு மிருதுளா மேலேறி அலுவலகம் செல்ல ..உள்ளே நுழைந்த சிவம் கார் கண்ணாடி வழியே மிருதுளாவின் அம்மாவை பார்த்துவிட்டார்....

உடனே ...காரை நிறுத்திவிட்டு ...வாங்க சிவகாமி....என்னை அடையாளம் தெரியுதா? பரஸ்பர விசாரிப்புகள்...மீனாவின் நிலை தெரிந்து கொண்டவர் மிருதுளா பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினார்...வாங்களேன்...வீட்டுக்குபோய் பேசலாம்...அபியும் உங்களை பாத்தா சந்தோஷ பாடுவா....

இல்லண்ணே ..அடுத்தமுறை அவசியம் வரேன் என்று மறுத்தவரை உணவருந்த அழைத்துசென்றார்...

மிருதுளாவின் அம்மாவிர்கும் ஆச்சர்யமே..தன் மகள் நிவாசின் அலுவலகத்தில்தான் வேலை என்று ஏன் சொல்லவில்லை?

மெல்ல பேச்சு கொடுத்ததில் ...மிருதுளாவே தன் திருமணத்தை தானே நிறுத்தியது தெரியவர....நிவாஸை அவள் விரும்புகிறாளோ என அவருக்கு சந்தேகம் ....

இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டவர்கள்...திருமணம் செய்துகொண்டாலும் பரவாயில்லை..இவன் வேறு உளறிக்கொண்டிருக்கிறான்....சமீப காலமாக இருவரும் அதிக நேரம் ஒன்றாய் கழிப்பது அவருக்கும் தெரிந்துதான் இருந்தது.

அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிக்கவில்லை என்றாலும் முயன்று பார்க்கவே அவருக்கு தோன்றியது....

நிவாஸிடம் சமயம் பார்த்து சொன்னார். நிவாஸ் மிருதுளாதான் அவ கல்யாணத்த நிறுத்திட்டாளாம்.. அவங்க அம்மா ரொம்பவே வருத்த படுறாங்க ...

யாரயாவது காதலிக்கிறாளா தெரியல...

நா நேரம்பாத்து கேக்குரென்பா.... என்ற நிவாஸின் பதில் அவருக்கு உப்புசப்பில்லாமல் இருந்தது...

வழக்கம்போல் ,அநாதை இல்லத்திலிருந்து திரும்பும் பொழுது கடற்கரைக்கு போலாமா என்றான் நிவாஸ்.

இருவரும் சிறிது நேரம் கடலில் விளையாடியபின்னர்,அவனே ஆரம்பித்தான்...நீ ஏன் கல்யாணத்தை நிறுத்தின மிருதுளா?

நீ ஏன் கல்யாணம் செஞ்சுக்கல நிவாஸ்? உங்கப்பா ரொம்பவே வருத்தபடுறார் தெரியுமா என்றாள் பதிலுக்கு..இருவருக்குள்ளும் சிறிது மௌனம்...பிறகு ,நிவாஸ் தன் பள்ளி நாட்களின் அனுபவத்தை வெளியிட....வெகுவாக அதிர்ந்தாள் அவன் தோழி...

சரிடா..அதான் ஒண்ணும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாங்களே? அப்புறமென்ன?

இல்ல ...மிருதுளா..எனக்கு ரொம்பவே பயமா இருக்கு...அம் நாட் அ கம்ப்ளீட் மேன் ....எனக்கு அப்டித்தான் தோணுது....ஒருவேளை என்னோட மனைவிய சந்தோஷ படுத்த முடியாம போயிட்டா?

சாரிடி..எனக்குன்னு உன்னை தவிர நட்புன்னு யாரும் இல்ல..இது உன்கிட்ட சொல்ற விஷயம்மான்னுகூட தெரியல...இன்ஃபாக்ட் என்னோட அம்மாகிட்ட சொல்லவேணாம்னு அப்பாகிட்ட சொல்லி இருக்கேன்...பட் ..நீ வேறயா தெரியல......

இருவருக்குள்ளும் நீண்ட மௌனம்...

இப்போ உன் காரணம்?

சின்ன வயசுல அப்பாவும் அம்மாவும் படுக்கையறைக்குள்ள போவாங்க...திரும்ப வரும்பொழுது அம்மா முகம் அழுது வடியும்....அங்கங்க பல்கடி தடங்கள்... கொஞ்சம் வயசானபிறகு...

கல்யாணம்னாலே இது சகஜம்னு அம்மா சொன்னாங்க...அது மனசுல பயத்த கெளப்பிடுச்சி ...அதான்..இப்படி....கல்யாணம்னாலே ரொம்பவே பயமா இருக்கு நிவாஸ்...தெரியாத மனிதனுடன் வாழ்நாள் முழுசும்...அந்த மனுஷனும் எங்கப்பா மாதிரி இருந்தா? என்னால எங்கம்மா மாதிரி தாங்கமுடியுமா...அதவிட இப்படியே இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.

அவள் காரணத்தை அவனும் ,அவன் காரணத்தை அவளும் ஜீரணிக்க முடியாமல் இருவரும் மௌனமாக கிளம்பினர்... நிவாஸ்...பிளீஸ் ..இது ரொம்பவே அந்தரங்கம்...யாருக்கும் தெரியக்கூடாது...

கவலைபடாதே! யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.

மாதங்கள் செல்ல செல்ல..நிவாஸ் ஒருநாள் அவளிடம்...நாமளே கல்யாணம் செஞ்சுக்கலாமா? என்று அவளை அதிரச்செய்தான்.இருவருமாக இதில் நன்மை தீமைகளை அலசி இறுதியாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

மிருதுளாவின் அம்மா மட்டுமே வந்தார்,,,,,வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் திருமணம்....பணியாளர்களுடன் திருமண விருந்து.அபிராமிக்கும் தன் மகன் திருமணம் செய்துகொண்டதில் மகிழ்ச்சியே!

தன் மகன் தனியே நின்றுவிடுவானோ எனும் எண்ணம் அவருக்குள் ஆழ்ந்த துக்கத்தை விதைத்திருந்தது! மிருதுளா இனி சந்தோஷமாக வாழ்வாள் என்றே சிவகாமிக்கும் தோன்றியது!

நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே சென்றது....மாதங்கள் ..வருடமானது. அபிராமியின் எதிர்பார்ப்பும் தீவிரமடைந்தது....

நிவாஸின் மனம் எந்த மாறுதலுக்கும் உட்படாமல்....மிருதுளாவின் பயம் தெளியாமல் எந்த ரசாயனமும் நிகழாதே!

தனது காரிய தரிசியாக இருந்தவளை நிவாசிடம் அனுப்பி இருவருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க ,முயற்சித்தார் சிவம்...

வெளிநாடுகளுக்கும் இருவரும் சேர்ந்தே சென்றனர்...வெளியூர்களுக்கும் அப்படியே!

நட்பை தாண்டி யோசிக்க இருவருக்குள்ளும் தயக்கம்...

எப்பொழுதும் போல தொட்டு பேசினாலும்..அவன் தொடும் வேளையில் இப்பொழுதெல்லாம் ...உடல் நடுங்குகிறது....வெளிக்காட்டாமல் நிற்கிறாள் அவள்....

இந்த ஷர்ட் போடு நிவாஸ்....அவள் அவனது உடல் மீது ஷர்டை வைக்கும் பொழுது அவனுள் மெல்லிய படபடப்பு...உணர்ச்சியின் பெயர்தான் அவனுக்கு தெரியவில்லை. இயல்புபோல் அவனை தொடும் சாக்கு அவளுக்கு.

இந்த புடவை வேணாம்டி...என்றுவிட்டு...மேல் முந்தானையின் பின்னை கழற்றி விட்டு ...அவசரமாக தன் செய்கையை நினைத்து ...வெட்கினான் நிவாஸ்...

அய்யோ...என்னை பற்றி மிருதுளா என்ன நினைத்துக்கொள்வாள்? அதேசமயம் நரம்பு மண்டலம் முழுதும் இறுக்கமாய்...அவளை ஒரு மலைபாம்பாக மாறி சுற்றி வளைக்க ஏங்கியது அவனுடல்.

நான் ஏன் இப்படி ஆகிவிட்டேன்? அவளது மனம் ஒருபுறம்....அவள் ஒத்துக்கொண்டாலும் என்னால் அடுத்த கட்டத்திர்க்கு போகமுடியுமா? ஒருவேளை முடியவில்லை என்றால்?

தான் செய்த புதுவகை உணவை ஒருவார்த்தையும் மதிப்பு குறைவாக சொல்லாமல் உண்ணும் தன் நண்பன் அவள் கண்களுக்கு இப்பொழுதெல்லாம் நல்ல கணவனாக தெரிகிறான்....

அவள் அம்மா செய்யும் உணவுகளை நக்கலடிக்காமல் ஒருநாளும் அவள் அப்பா சாப்பிட்டது கிடையாது! நன்றாக சாப்பிட்டு தொப்பை வைத்தது என்றாலும் மனைவியை அவர் எங்கும் மரியாதையாக நடத்தியதில்லை...படுக்கையிலும்தான்....

நிவாஸ் இன்று வரை அவளை மரியாதை குறைவாக நடத்தியதில்லை...யார் சொன்னது ..நண்பன் வேறு கணவன் வேரென்று...நல்ல கணவன் ..நல்ல நண்பனே என்று உள்ளூர அவள் மனம் கவிதை பாடியது! அவள் மாமனாரும் மனைவியை தரக்குறைவாக நடத்தியதில்லை! மனைவியை பிறர் சொல்ல பொறுக்காமல் தனியே கூட்டிவந்த அவரது செய்கையை அபிராமி சொல்லும்பொழுது மாமியாரின் முகத்தில் பெருமகிழ்ச்சி தாண்டவமாடும்....

இவற்றையே யோசித்துக்கொண்டு ,நிவாசை பார்த்தவளுக்கு, தினமும் ஷேவ் செய்து காணப்படும் நிவாஸின் முகம் சொல்லொணா ஏக்கத்தை வரவழைக்க... ஒன்றும் புரியாமல் ..தன்னிலை மறந்து ..நச்சென தன் முதல் முத்தத்தை பதித்தாள். அதிர்ச்சியில் நிவாஸுக்கு புரையேற...தன்னிலை நினைத்தவளுக்கு..தன்னுள்ளே என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை..வெட்கம் மேலோங்க...நிவாஸ் என்னைபற்றி என்ன நினைப்பான்...என்று பயந்தாள்....மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த சிவம் தம்பதியினர் எதயும் காணாதவர்கள் போல திரும்ப சென்றார்கள்.

அவர்களுக்குள்ளே.... எல்லாம் சரியாகும் எனும் நம்பிக்கை வந்தது....

இருவருக்குள்ளும் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டிருக்கும் நிமிடங்கள் ரசிக்கத்தொடங்கின....உடலின் தேவையை தவிரவும் காதல் ஆழம் என இருவருக்குமே புரிந்தது....

காரணமிருந்தால் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார்கள்...காரணம் இல்லை எனில் தோள் வளைவில் அவள் முகம் புதைக்க அவளின் உச்சி முகர்வான் அவன்.....

நண்பர்களாக ஒருவரை ஒருவர் நாடிய நாட்கள் தவிர...இப்பொழுதெல்லாம் காதலர்களாய் உணரத்தொடங்கினார்கள்....

எந்த அவசரமும் இன்றி ...மெல்ல மெல்ல அவர்களையும் அறியாமல் அவர்கள் உறவு அடுத்தகட்டத்தை நோக்கி பிரயாணபட்டது.

எந்த ஆரவாரமும் இல்லை....தேன் நிலவு செல்ல இருவருக்கும் தோன்றவில்லை... அவர்கள் அறையில் ஒன்றாய் இருக்கும் நேரம் முழுதுமே தேனாய் இனித்தது...

இந்நிலையில் நிதி தன் இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க.... முதல் முறையாக ..தன் நாத்தனாரின் குழந்தையாய் கைகளில் ஏந்தியவளுக்கு தன் கணவனின் மகவிர்க்கு பாலூட்ட வேண்டுமாய் இதயம் பரபரத்தது.... அவளது ஏக்கம் கண்களில் தெரிய.... உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் அபிராமி... தான் மகன் அப்பாவாகும் நாட்கள் அதிக தூரமில்லை என எண்ணியவராக..நிதி அருகில் துணைக்கு மிருதுளாவை இருக்க சொல்ல...பதினைந்து நாட்கள் பொறுத்துபார்த்த நிவாசிர்க்கு இதற்க்குமேல் மிருதுளாவை பிரிந்து உறங்க முடியாது என புரிந்தது...

அவள் அருகில் இல்லாத படுக்கை வெறுத்தது..தூங்கவும் பிடிக்கவில்லை..சுத்தமாக அவனால் இந்த தனிமையை ஏற்க முடியவில்லை!



நேராக தான் அம்மாவிடமே சென்று மிருதுளாவால் இனி அங்கு உறங்கமுடியாது..வேறு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்...மிருதுளாவிர்க்கு வெட்கம் பிடுங்கி தின்றது...

இதை எதிர்பார்திருந்த அபிராமியோ...ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த உதவியாளரை வரச்சொல்லிவிட்டார்.

தங்களது அறையில் மனைவியை கண்டவனுக்கு சந்தோஷத்தை அடக்க முடியவில்லை...ஏண்டி ..அம்மாதான் சொல்றாங்கன்னா நீயும் சந்தோஷமா அங்கயே இருக்க..என்ன பத்தி அக்கறையே இல்லயே?

அங்கலாய்த்துக்கொண்ட நிவாஸிடம்... இல்ல நிவாஸ்...குழந்தையோட இருக்கணும்னு தோணிச்சு ..அதான்..அங்கயே இருந்துட்டேன்...நமக்குன்னு குழந்தை பிறந்தா இங்க இருந்துட்டு போறேன்...ஒருவழியாக தன் மன ஆசையை வெளிபடுத்திவிட்டாள்.

அவனுள்ளும் அதே ஆசை... இதயங்கள் இணைந்து மாதங்கள் கடந்த பின்னும் ஏதோ ஒரு தயக்கம்....இருவருக்குள்ளும்...திரும்பவும் நாட்கள் கடந்தன.

படுக்கையில் இருவரும் அருகருகே....கட்டிபிடித்து...ஒருவருடன் ஒருவர் கை கால்கள் பின்னி...

என்று நடந்தது என தெரியாது...என்று நடந்தது என தெரியாது.. அவன் தொடுகையில் அவள் குழைத்தாள்....அவள் பயம் அவளிடம் இல்லை...அவள் நாணம்..அதையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டாள்.... காதலின் கூடலில் வெட்கம் ,வெறுப்பு இரண்டும் கூடாதே!

அவனது மன நடுக்கம்.பயம் ..அவள் அறிந்ததே....அவனது காதல் தீவிரத்தில் ஏற்பட்ட காயங்கள் அவளுக்கு அழுகையை பரிசளிக்கவில்லை ..விரகத்தையே கூட்டியது.....

காதல் மீறும்பொழுது..அதன் வடிகால் காமம் என்பது இருவருக்குமே புரிந்தது...அவளது உடல் மொழி அவளது எல்லை மீறிய காதலை உரைக்க, அவன் அவளை கையாண்ட விதம் அவனது காதலையும் அக்கறையையும் வெளிபடுத்தியது...

எந்த விதத்திலும் அவளது பயம் அவளை ஆக்ரமிக்க விடமாட்டேன் என்பதாய் அவன் காதல் .. அவனது கூடலில் முழுமையை அவன் உணரும் விதமாய் வெளிக்காட்டினாள் அவள்....அவன் தயக்கங்கள் தங்களுக்குள்ளான காதலின் நடுவே அனுமதிக்க மாட்டேன் என்பதாய் அவள்..



மாதங்கள் கழிய ,அவர்களது காதலை உலகிற்கு பறையறிவிக்க , மகள் பிறந்தாள். வாழ்த்த வழக்கம்போலவே...அவள் அம்மா மட்டுமே அவள் சார்பாக....

தன்னிடம் வேலைபார்க்கும் திருநங்கைகளையும்,மற்ற பணியாளர்களுடன் விருந்துண்ண அழைத்திருந்தான் நிவாஸ்.....

ஆண் என்கிற கர்வமுள்ள என்னோட அப்பா வரலன்னு எனக்கு வருத்தமில்ல .... என்னோட குழந்தையை வாழ்த்த இத்தனை பேர் வந்திருக்காங்களே ..என எண்ணிக்கொண்டாள் மிருதுளா..

தன் உடல் சார்ந்த சந்தேகம் ..நிவாஸுக்கு மிருதுளாவுடன் இணைந்த நிமிடமே மறைந்து விட்டது..அதன் சாட்சி அவன் மகள்....

தங்களையும் சக உயிராய் மதித்து ,அழைத்த நிவாஸ் இன்னும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தினார்கள் அந்த திருநங்கைகள்.!

(சில மாநிலங்களில் பிள்ளை பேறு, திருமணம் போன்ற இடங்களுக்கு திரு நங்கைகளை அழைத்து பணம்,பொருட்கள் கொடுப்பார்கள் ..அவர்களும் வாழ்த்தி செல்வார்கள் என படித்திருக்கிறேன்,ஆனால் என்றோ ஒருநாள் மட்டும் அவர்களை அழைத்து பணமும்,பரிசு பொருட்களும் கொடுப்பதால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் நிலைத்திடுமா? அவர்கள்,நம்மிடம் வந்து பணம் கேட்பதும்,பாலியல் போன்ற தொழில்களில் ஈடுபடுவதும் நம் அவர்கள்மீது கொண்டுள்ள அலட்சியத்தால்தானே? உண்மையில் ஆண்களின் உடல் பலமும்,பெண்களின் மென்மையும் கொண்ட படைப்புகளான அவர்களை நமது அவமரியாதைகளின் மூலமாக மாற்றப் பார்க்கிறோம்,,,இவர்களை பற்றி பலமுறை எண்ணி வருந்தி இருக்கிறேன்....)

(சிறுவயதில் குறிப்பாக விடலை பருவத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே மனம் உடல் சார்ந்த மாற்றங்கள் இருக்கும் என்பது நாம் அறிந்ததே...அதில் சில சமயம் இதுபோன்ற தவறான,விபரீதமான நிகழ்வுகளும் உண்டு...இது போன்ற சமயங்களில்,பெற்றோரின் அரவணைப்பு, தகுந்த மருத்துவ ஆலோசனைகள்,இவை மட்டுமே. நம் குழந்தைகளை மீட்கும்....)

உங்கள் விமர்சனங்களையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் உங்கள் தோழி

சுகீ..
 
Top Bottom