MANI EZHILAN
New member
- Messages
- 11
- Reaction score
- 3
- Points
- 1
இதுவரை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானதில்லை. என் போதாத காலம் என்னை அலைகழித்துக் கொண்டிருந்தது. கழுத்தை நெருக்கிப் பிடிக்கும் கந்து வட்டியில் சிக்கித் தவிக்கும் நகரவாசிகளில் நானும் ஒருவன். மனிதனை மனிதனே கொன்று உண்பது அகோரிகள் மட்டுமல்ல இதுபோன்ற கந்துவட்டிக்காரர்களும்தான். ஈவு இரக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு, மனித நேயத்தை மண்ணோடு புதைத்துவிடும் மகாபாவிகள்தான் அவர்கள். என்றாலும், எங்களைப் போன்ற நடுத்தர வாசிகள், ஏழைகள், சிறு வியாபாரிகள் போன்றவர்களுக்கு இவர்கள்தான் சமயத்தில் உதவும் கடவுள்.
ஒருவரிடம் பணம் வாங்கி ஒரு கடனை அடைப்பது. இன்னொருவரிடம் கடன் வாங்கி இவர்களிடம் அடைப்பது என கடன் தொகை சுழற்சி முறையில் செயல்படும். வட்டித் தொகை மட்டும் குட்டி மேல் குட்டி போட்டு மொத்தமாக பூதாகரமாக வந்து நிற்கும்.
உழைத்து உழைத்து ஓய்ந்துபோய் அவன் வாழ்வின் கடைசி நிமிஷத்தில் திரும்பிப் பார்க்கையில் அந்த உழைப்பு அத்தனையும் களவாடப்பட்டிருக்கும். உறைந்து போன ரத்தம் மட்டுமே மிச்சப்பட்டிருக்கும். தன் உறவுகளுக்கு, தன் நட்புக்கு, சமூகத்திற்கு என ஏதோ ஒரு வகையில் தன் சந்தோஷங்களை இழந்து இவன் சேமித்த பணமெல்லாம் பல்லக்கில் வந்து பறித்துக்கொண்டு போவார்கள் கடன்காரர்கள். இந்த வேதனையிலிருந்து மீள இன்னொரு கடவுள் உதவ முன்வரமாட்டானா எனத்தோன்றும். ஆனாலும் அவனும் மனிதன்தான் தான் என நிரூபித்துவிடுவான்.
கடவுள் என்பவன் யார்? மனிதனை மனிதனாகவும், மிருகமாகவும், கடவுளாகவும் மாற்றி மாற்றி வித்தை காட்டும் திருவிளையாடல் செய்பவனா? அல்லது சமயத்தில் எதிர்பாராமல் மற்றவர்களைக் காப்பாற்றுபவர்களா? இல்லை பணம் உள்ளவன் மட்டுமா? என்று அடுக்கடுக்காய் கேள்விகள் ஓசோன் அடுக்குகளைப் போல் விஸ்தாரமாகவும், விசித்திரமாகவும் எழுகிறது.
சமயத்தில் பணம் கொடுத்து உதவி செய்பவர்கள் கடவுள் என்றால் அதன்பின்பு நெருக்கடிகளை கொடுத்து அவன் கழுத்தை நெறிப்பவர்களுக்கு என்ன பெயர்?
மனித குப்பைகளுக்கு மத்தியில் குப்பையோடு குப்பையாக பணத்தையும் படைத்து வேடிக்கை பார்ப்பவனை என்ன செய்வது? அவன் மனிதனாகப் பிறவி எடுத்துவந்தால் ஒருமுறை கடன் வாங்கிப் பார்க்கச் சொல். அவன் கழுத்தையும் நெறிப்பார்கள்.
ஒரு அவசர தேவைக்கு நான் வாங்கியிருந்த கடனுக்கு உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களாய் அலைந்து கொண்டிருக்கிறேன். பைனான்ஸ், கந்து வட்டிக்காரர்கள், தண்டல்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் கேட்டாயிற்று, அனைவருமே பத்து நாள் பிறகே பணம் வருமென பட்டும்படாமல் பொய் சொன்னார்கள். நம்பிக்கை என்பது பணத்தில் மட்டும் எவருக்குமில்லை. யாரைச் சொல்லியும் குற்றமில்லை. ஏமாற்றும் மனங்களை நம்பி பல ஆயிரங்களைக் கொடுக்க அவர்கள் தயங்குவதில்லை. நம்பிக்கையை காப்பாற்றத் துடிக்கும் மனங்களுக்கு ஒரு ரூபாய் கூட தர மனம் விரும்புவதில்லை.
இருப்பினும் இன்று கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் என் கால்கள் சைக்கிள் பெடலை வேகமாய் இயக்கியது. இராயப்பேட்டையில் தெரிந்தவர் ஒருவர் ஒரு பைனான்ஸியரிடம் பேசிவிட்டு என்னை வரச்சொல்லியிருந்தார். இன்று எப்படியும் கிடைத்துவிடும் என்று என் மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வேர்வை கொட்டியபடி அவரிடம் சென்றிருந்தேன்.
“வாப்பா, இப்பத்தான் உன் விஷயமா பேசியிருந்தேன். அவன் வட்டி அதிகமா சொல்றான்பா” என்றார்.
“என்னண்ணே சொல்றீங்க? எவ்வளவு சொல்றான்?”
“பத்து வட்டி சொல்றான்பா! இப்படி அநியாயத்துக்கு வட்டிக்கு வாங்கி உன்னை சிக்க வைக்க எனக்கு மனசில்லப்பா. ஒரு ஒருவாரம் பொறுத்துக்க. நான் வேற ஏற்பாடு பண்றேன். சரியா?” என்றார்.
“ம்ம்... இந்த பணமெல்லாம் எப்படித்தான் இவனுங்களுக்கு ஒட்டுதோ!” என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி என்னை சமாதானப்படுத்த முயற்சித்தார்.
கொட்டிய வியர்வைத்துளிகளின் நடுவே என் கண்ணீர் வழிந்ததை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனினும் நான் விரக்தியின் உச்சத்தில் இருந்ததை புரிந்துகொண்டார்.
வேகமாய் தனது செல்போனை எடுத்து ஒரு நம்பரை அழுத்திப் பேசினார்.
“ஏம்பா நம்ப பையன் ஒருத்தன். நல்ல நம்பிக்கையான பையன். இப்பதான் ஒரு வேலைல வேற சேர்த்துவிட்டேன். அவனுக்கு அவசரமா பணம் கொஞ்சம் தேவைப்படுது. உன்னால எதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?”
எதிர் முனை ஏதோ கூறியதும் முகம் மலர்ச்சியோடு “சரிப்பா... சரிப்பா...” என்று செல்போனை வைத்துவிட்டு. “தம்பி நாலு நாள் பொறுத்துக்க. பணத்தை ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன். தைரியமா போ” என்று தோளை தட்டிக்கொடுத்தார்.
அவர் சொல்வது சரிதான். அவர் ஏற்பாடு செய்துவிடுவார். ஆனால், எனக்கு பணம் கொடுத்தவன் இன்று என் வீட்டில் வந்து காத்துக்கொண்டிருக்கிறான் என்று அவருக்கு எப்படித் தெரியும். நாளை, நாளை என்று நான்கு நாட்கள் சொல்லியாயிற்று. மீண்டும் நான்கு நாட்கள் என்றால்.... என்னால் அவன் பேசும் வார்த்தைகளை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை.
என் தலை முழுக்க வெப்பம் பரவியது. தலை வெடித்துவிடும் போலிருந்தது. இனி என்ன செய்வதென தெரியாமல் என்னுடைய செல்போனில் தெரிந்த நம்பர்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு பேரை மட்டும் நான் இதுவரை கேட்கவில்லை. அவர்களையும் பார்த்துவிடுவோம் என்று மீண்டும் நம்பிக்கையோடு வேகமாய் புறப்பட்டேன்.
ராயப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை, சைதாப்பேட்டையிலிருந்து மயிலாப்பூர் என்று நான் பார்த்த இருவரும் ஒரே பதிலைக் கூற என் கால்கள் ஓய்ந்துபோய் தள்ளாடியபடி களங்கரை விளக்கம் அருகில் உள்ள கடற்கரை சென்றேன். ஒரு நடைமேடை இருக்கையில் அமர்ந்தபடி கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் கண்களை இறுக மூடியபடி என் தலையை பின்புறம் சாய்க்கையில் இருபுறமும் கண்ணீர் காது மடல்களைத் தொட்டது. அப்போது என் தலைமுடியை ஏதோ ஒரு கை கோதிவிட்டது. இன்னொரு கை கன்னத்தைக் கிள்ளியது. திடுக்கிட்டு கண்விழித்துப் பார்த்தேன். என்னைச் சுற்றி மூன்று திருநங்கைகள். லிப்ஸ்டிக், ஹெண்ட் பேக், செல்போனுடன் ஒருவர், புடவையை கவர்ச்சியாக கட்டியபடி லூஸ் ஹேர் விட்டபடி ஒருவர், நளினமாய், எளிமையாய் இன்னொருவர்.
“ஏன் பயப்படுறே....” என்று ஒருவர்.
“ஏன் அழறே...” இன்னொருவர்.
“அய்ய... வீட்ல சரியா கம்பெனி கெடச்சிருக்காது. அதான் தனியா உக்காந்து அழுவுது”
“அப்டியா!”
“அய்ய... இதுக்கா அழுவாங்க. நம்பகிட்ட வந்தா நல்லா கம்பெனி தரப்போறோம். இன்னா, வர்றியா?” என்று நெருங்கி அமர்ந்து என் கன்னத்தை கிள்ளியபடி கேட்டார்கள்.
“நான் ஏற்கனவே மனசு நொந்துபோய் இங்க உக்காந்திருக்கேன். ப்ளீஸ், என்னை தனியா விடுங்க. உங்கள கெஞ்சி கேக்குறேன்” என்றேன் மெதுவாக.
“நொந்துபோன மனச நாங்க ஜாலியாக்குறோம். மூணுபேருக்கும் சேர்த்து 100 ரூபா கொடு போதும்” என்று மேலும் நெருங்கினார்கள்.
நான் திரும்ப பதில் பேசாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“அய்ய... இன்னா... இது ரொம்பதான் சத்தாய்க்குது. நாங்களும் மனசு நொந்துபோனவங்கதான். வேணும்னா 25 ரூபா கம்மியா குடு. சந்தோஷமா வாங்கிக்குறோம். என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் திரும்பி “இன்னா சொல்ற எக்கா...” என்று இன்னொருத்தியிடம் சொன்னாள்.
பாவம் இவர்கள். குடும்பம், பணம், எதிர்காலம், இலட்சியம் என்றெல்லாம் ஏகப்பட்ட நினைவுகளில் சிக்கி வாழ்க்கையை வகுத்து வாழும் நமக்கு இத்தனை மன உளைச்சல் என்றால், தன் வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஜீரனிக்கமுடியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களின் மனநிலை எப்படி இருக்கும்!
பாலியல் பார்வையோடு மட்டுமே ஆண்களை பார்க்கும் இவர்களுக்கு என்னசொல்லி என் நிலையை உணரவைப்பது. வலிகொண்ட நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி....
“இங்க பாருங்க எனக்கு இன்னிக்கு மிகப்பெரிய பணப்பிரச்சனை. அலைஞ்சு, திரிஞ்சு மனசு ஒடிஞ்சுபோய் இங்க வந்திருக்கேன். உங்களோட கேலி, கிண்டலுக்கு வறுமையில பாதிக்கப்பட்ட என்னால சிரிக்க முடியல. உங்கள கையெடுத்து கும்பிடனும்னு மட்டும்தான் தோனுது. உங்க பார்வையில நான் எப்படின்னு தெரியாது. ஆனா, எனக்கு நீங்க கடவுள் மாதிரி. உங்கள நான் அப்படித்தான் நெனச்சுகிட்டிருக்கேன். நீங்க ‘அர்த்தநாரீஸ்வரர்’. கடவுளோட படைப்பு. உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன். உங்களால முடிஞ்சா என்னையும், என் குடும்பத்தையும் ஆசிர்வாதம் பண்ணுங்க. நீங்க ஆசிர்வாதம் செஞ்சா நாங்க நிச்சயம் நல்லா இருப்போம்” என்றதும் உறைந்துபோய் நின்றார்கள். மௌனம் முழுமையாய் ஆக்ரமித்துக் கொண்டது.
அவர்கள் சந்தித்த வெவ்வேறு முகங்களிலிருந்து நான் வித்தியாசப்பட்டிருக்கிறேன். கட்டிலில் படுக்க அழைத்தால் நம்மை கடவுள் என்கிறானே! இவன் என்ன சாமியாரா? அல்லது கிறுக்கனா? என்று நினைத்திருப்பார்கள் போலும். அவர்களது மௌனமும், பார்வையும் எனக்கு அப்படித்தான் சொல்லிற்று. என் பார்வையில் அவர்கள் எப்போதும் அப்படித்தான் தெரிந்தார்கள். அவர்களின் மனம் என்மனதைவிட பலமடங்கு வலிகளை தாங்கியது. என்னைவிட வாழ்க்கையில் நிறைய சிக்கல்களையும், மன உளைச்சல்களையும் சந்தித்தவர்கள். அவர்களின் ஏக்கம், கனவு, ஆசை அத்தனையும் மிதிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு பின்பு பக்குவப்பட்ட மனது. அந்த மனதுக்குள்தான் கடவுள் ஆத்மார்த்தமாக அமர்ந்திருப்பார். அவர்கள் மனது திருப்தி அடைந்தால் கடவுள் ஆனந்தக் கூத்தாடுவார்.
காமத்தை எதிர்பார்த்து வந்த அவர்களுக்கு ‘கடவுள்’ என்றதும் சட்டென்று கண்ணீர் பெருகியது. தங்களை இந்தச் சமூகம் மனிதர்களாகவே அங்கீகரிக்காத போது இவன் ‘கடவுள்’ என்கிறானே! என்று உள்ளூர ஆனந்தப்பட்டனர். சொல்லிவைத்தாற்போல் மூவரும் ஒருசேர கைகளைப் பிடித்தார்கள். கண்ணீரோடு புன்னகை வடித்தார்கள்.
“இதுநாள்வரைக்கும் எங்க ஒடம்ப பாத்து கேலி பேசறதும், கிண்டல் பண்றதும், எங்கள சீண்டி வம்பிழுக்கிற ஆம்பளைங்களதான் பாத்தோம். இவ்வளவு இன்னாத்துக்கு, பெட்டுல சரியா கம்பெனி கொடுக்கலன்னு அடிமாடு மாதிரி அடிச்ச ஆளுங்கள எல்லாம் பாத்துருக்கோம். ஆனா எங்கள பாத்து கடவுள்னு சொன்ன சாமி நீங்கதான். நாங்க மனசு ஒடிஞ்சு தெனம் தெனம் செத்துகிட்டிருக்கோம். உங்க ஒத்த வார்த்த கேட்டதும் இப்பவே செத்துப்போகணும்போல இருக்கு சாமி. இந்தாங்க... இது எங்களால முடிஞ்சது. உங்களுக்கு எந்த கொறையும் வராம எங்க கூவாகம் ஆத்தா காப்பாத்துவா” என்று கலக்ஷென் ஆன பணத்தை என்னிடம் நீட்டினார்கள்.
“வேண்டாங்க. இந்த பணத்த வெச்சு நீங்க நல்ல தொழில் ஏதாவது தொடங்கமுடியுமான்னு பாருங்க. நீங்க மனசுல வைராக்கியம் வெச்சு வாழ்ந்தா மக்களோட மக்களா நல்லா வாழ்வீங்க. இந்த பொழப்ப விட்டு நல்ல பொழப்பு தேடுங்க. உங்களுக்கு நல்ல மனசுள்ள ஆட்கள் நெறய பேர் உதவி செய்ய காத்திருக்காங்க. உங்க வாழ்க்கைய சந்தோஷமா தொடங்குங்க. எனக்கு ஏதாச்சும் செய்யனும்னு நெனச்சா இன்னைக்குள்ள எம்பிரச்சனை சரியாகிடனும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க அதுபோதும். நான் கிளம்புறேன்” என்று கிளம்பினேன்.
அந்த மூவரும் ஏதோ மந்திரம்போல் முணுமுணுத்து என்னை அனுப்பிவைத்தார்கள். இனி பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டோம் என்று சத்தியம் செய்தார்கள். நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி வாழ்த்தினார்கள்.
உடல் திருப்தி அடைய வந்தவர்களை மனதிருப்தி செய்த நிம்மதியோடு அங்கிருந்து புறப்பட்டேன்.
பாவம் என் மனைவி என்ன பாடுபடுகிறாளோ என்று கவலை தோய்ந்த முகத்தோடு வந்த என்னை புன்னகையோடு வரவேற்றாள்.
“என்னங்க பணம் கிடைக்கலையா?” என்றாள்.
“ஆம்” என்றேன்.
“பரவாயில்லைங்க, நீங்க போனதும் என் பிரண்டு மாலா வந்தா. அவகிட்ட எதுக்கும் உதவும்னு நான் கடனா கொடுத்து வச்சிருந்த பணத்த கொண்டுவந்தா. என்கிட்ட உங்களுக்கு தெரியாம சேர்த்து வெச்ச பணம் கொஞ்சம் இருந்தது. கையில சில பொடி நகைங்க இருந்தது. எல்லாம் சேர்த்தா நம்ப கடன அடைக்கிறதுக்கு வேண்டிய பணம் கெடச்சுது. ஒரு மணிநேரம் முன்னாடிதான் அவருக்கு கொடுத்தனுப்பினேன். நீங்க வந்த பின்னாடி சொன்னா சந்தோஷப்படுவீங்கன்னு போன் கூட செய்யாம இருந்தேன்” என்றாள் புன்னகையோடு.
அந்தப் புன்னகையில் அந்த மூவரின் முகம் தெரிந்தது.
கையெடுத்து கும்பிட்டேன் கண்ணீரோடு!