Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கணம் மாறிய போது

Thi Shi

New member
Messages
7
Reaction score
1
Points
1
வணக்கம் நான் திஷி, சகாப்தம் சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறேன்.



தலைப்பு - கணம் மாறிய போது

நாயகன் - ராம்

நாயகி - மாளவி



இது த்ரில்லர் கலந்த காதல் கதை. கதைக்களம் பார்த்தால் பெரியதாக வரும் கதையை, அதை சிறிய வடிவில் கொடுக்க முடியுமா என்ற சேலஞ். சரியாக கொடுத்து இருக்கேன்னா என்று நீங்கள் கண்டிப்பாக சொல்லணும்



திஷி
 

Thi Shi

New member
Messages
7
Reaction score
1
Points
1
கணம் மாறிய போது
"ஆல் ரெடி பாய்ஸ்! இன்னிக்கி ஆபரேஷன் ஒன்னு சர வெடியா இருக்கலாம்..இல்ல நமுத்து போன பட்டாசா ஆகலாம். பட், வி ஆர் கோயிங் டு அவர் பெஸ்ட். சிவிலிலியன்ஸ் ஜாக்கிரதை" என்று ஜாயின்ட் கமிஷனர் தனது குழுவிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
"வில் கேட்ச் தி கல்பிரிட்ஸ் சார்" என்று ராம் உறுதி அளிக்க, ஜே சி

"தெரியும், பட் சில சமயம் நீ கொஞ்சம் அரகண்ட். உன் மேலே உனக்கு இன்னும் கன்ட்ரோல் வேணும்." என்று ராமை மீண்டும் எச்சரித்தார்.
அவரது எச்சரிக்கை அவனுக்கு எரிச்சல் விளைவித்தது. தவறு செய்பவர்களுக்கு வைத்திலை பாக்கு வைத்து, மேள தாளத்துடன் காவல் நிலையம் அழைத்து கொண்டு செல்ல முடியாது என்பது அவன் கூற்று. அதற்கு ஏற்றவாறு தான் அவனும்.
அவனிடம் பிடிபட்ட குற்றவாளிகள் யாரும் முகம் தாறுமாறாக ஆகாது, உடம்பில் புண் படாது காவல்நிலையம் வந்ததில்லை. ஏனென்றால் அவன் நம்பும் நியாயம்,
கண்ணிற்கு கண்
பல்லிற்கு பல்.
அது மட்டுமல்ல, அவன் பெயரும் தான். முழு பெயர் ராமபத்ரன், பரசுராமரின் மற்றோர் பெயர். தீயவர்களை தயவு தாட்சண்யம் இல்லாது அவர்களை தண்டித்த ஒரு அவதாரம். அவன் அந்த அவதாரத்தின் வழியில்.
கடந்த முறை, ஒரு சிறுமியை வன்புணர்வு கொள்ள முயன்றோர் கதி இன்று வரை யாரும் அறியார், அவனை தவிர. இவ்வளவு கண்டிப்பு கலந்தவனுக்கு வராத இடையூறுகள் இல்லை, உடம்பில் குண்டு படாத இடமும் இல்லை. அந்த காலத்தை போல், ஒரு ஆணின் உடலில் எவ்வளவு விழுப்புண்கள் இருக்கிறதோ, அவனே தைரியவான் என்று கூறியது இவனுக்கும் பெருந்தும்.
2 வாரங்கள் முன்பு கூட, அவனுக்கு ஓர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனை வாசம் கழிந்து 1 வாரம் முன்பு தான் கடமையில் சேர்ந்தான். எடுத்தவுடன் அவனுக்கு ஒரு என்கவுன்டர் தான் கொடுக்கப்பட்டு உள்ளது.

விஷயம் இது தான். ஒரு வெளிநாட்டு கும்பல் இந்தியா வந்து இறங்கி உள்ளது, சிலை கடத்தல், அதற்கு ஈடாக ஆயுதங்கள். அதை பற்றிய பேச்சுவார்த்தைக்காக அவர்கள் மும்பையில் இன்று ஓரிடத்தில் தங்கள் வியாபாரத்திற்கு தகுந்த ஆட்களை சந்திக்க வருகின்றனர். இந்த துணுக்கு செய்தியின் படி, ராமபத்ரன் மற்றும் அவனது குழு அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்ய வேண்டும், மீறினால் என்கவுன்ட்டர் தான்.
 

Thi Shi

New member
Messages
7
Reaction score
1
Points
1
"ஆல் இந் பொசிஷன் ?" என்று ராம் காவல் பணியில் கொடுக்கப்படும் சின்ன தொலைத்தொடர்பு சாதனத்தில் வாய்க்குள்ளே பேச,



சற்று தள்ளி அமர்ந்து இருந்த அவனுடன் பணிபுரியும் ஆய்வாளர் மதி,



"எஸ் சார் !" என்று தெரிவிக்க, ராம் தனது சுற்று சூழலை கவனித்தான். மாலை மங்குகின்ற நேரம். இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம், இந்த உணவகத்தில் கூட்டம் கூட ஆரம்பித்து விடும்.

"ராஸ்கல்ஸ் ! பப்லிக் பிளேஸ்இல் தான் நான் உங்களை என்கவுண்டர் செய்யணுமா" என்று மனதில் அவர்களை திட்டிக் கொண்டு இருந்தான்.

ஒரு காதல் ஜோடி ஒன்று அந்த இடம் நீங்க, இவன் ஓர் இருக்கையில், சற்று தள்ளி அவனது மதி உட்கார்ந்து இருந்தான். இன்னும் 2 காவல் துறையினர், உணவகத்தின் வெளியே இருக்க, இந்த உணவகத்தில் ஏற்கனவே வேலை செய்பவளாக மற்றோர் ஆய்வாளர் ஷாலினி ஷிண்டே இருந்தாள்.

ஷாலினி, வெயிட்ர்ஸ் போல் வந்து, அவனுக்கு தண்ணீர் வைத்து விட்டு, அவன் என்ன உண்ண போகிறான் என்று கேட்டுக் கொண்டாள்.

அவள் அவ்விடம் நீங்க, ராம், கண்ணாடி ஜன்னல் வழியாக, சற்று முன் வரை அங்கே இருந்த காதல் ஜோடி கிளம்புவதை பார்த்து கொண்டிருந்தான். அவர்கள் முகத்தை அவன் சரியாக பார்க்கவில்லை.



அப்போது 2 ஆப்பிரிக்கவாசிகள் இறங்கினர். இருவரும் நல்ல உயரம், அதற்கேற்ற உடல் வாகு, சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், எம கிங்கிரர்கள் போல் இருந்தனர்.



அவர்கள் வர, மதி ராம்மிடம்

"பேர்ட்ஸ் ஹேவ் கம்" என்று தகவல் பரிமாற, ராம்



"பறவைகளாடா இவங்க, சரியான டைனோசர் பரம்பரை" என்று கிண்டல் செய்ய, அந்த நேர அவகாசத்தில் ஷாலினி ஆப்பிரிக்கவாசிகளுக்கு தண்ணீர் வைக்க சென்றாள்.



தண்ணீர் வைத்து விட்டு,

"உவர் ஆர்டர்ஸ் …" என்று இழுக்க, ஒருவன்



"கிவ் அஸ் சாம் டைம்" என்று நேர அவகாசம் வாங்கி கொண்டான். ராம் மற்றும் மதி அவர்களை பார்ப்பதை தவிர்த்து என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஆரம்பித்தனர். ஷாலினி அங்கே சென்ற போது , அவர்களுக்கு சந்தேகம் வராத வாறு அவர்கள் மேஜை கீழே ஒரு ஸ்பீக்கர் வைத்துவிட்டு வந்தாள்.

அவர்கள் ஆப்பிரிக்க மொழியில் ஏதோ பேசிக்கொண்டு இருக்க, சத்தியமாக இவர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் இடை இடையியே வந்த வார்த்தைகள் ஆயுதம் சம்பந்தப்பட்டவை மட்டும் நன்கு விளங்கியது. ராம், அவர்களது பேச்சை, அப்படியே தன்னிடம் உள்ள சேமிப்பு கருவியில் சேமிக்கும் படி ஒரு ஏற்பாடும் செய்து இருந்தான்.



ஒருவனுக்கு அலைபேசியில் ஒரு செய்தி வர, அவனும் மற்றவனுக்கு எழுந்து நிற்க, ஷாலினி அவர்களிடம் சென்று



"எனி இஷ்யூஸ் ?" என்று வினவ, அவர்கள்



"நத்திங்" என்று சொல்லிவிட்டு அவர்களது மூட்டை முடிச்சை கட்ட எத்தனிக்க, ஷாலினி தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை நீட்டி



"யு ஆர் அர்ரெஸ்ட்டேட்" என்று மொழிய, அங்கே ஒரு சண்டை ஆரம்பித்தது. துப்பாக்கிகளை ஏந்தி இரு குழுக்களும் சண்டை இட, ஷாலினி கையில் முதலில் குண்டு பாய்ந்தது, அதன் பின் மதி மீது.



சுவருக்கு பின்னால், காவல் துறை துப்பாக்கி சூடு நடக்க. வெளியே இருந்த 2 காவலாளிகள் உள்ளே வந்த போதே, சுடப்பட்டுவிட்டனர்.

இப்போது ராமும் அந்த கடத்தல்காரர்கள் மட்டுமே. கடுமையான துப்பாக்கி சூடு தொடர, ஒரு கட்டத்தில் அவன் பொறுமை இழந்து, வெளியே வந்தான். அவனது சுடுதல் வேட்டையில் ஒருவன் மாண்டான். இனி மற்றவனும், ராமும். இருவரின் துப்பாக்கி சுடுதல் நடந்து கொண்டு இருக்கும் போது, ஒரு கட்டத்தில் கடத்தல்காரனின் குண்டுகள் தீர்ந்து விட, ராம் இது தான் சமயம் என்று அவனை உயிரோடு பிடிக்க முயன்ற நேரம், அந்த கடத்தல்காரன் ராம் மீது பாய்ந்தான். அப்போது ராம் தன் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி கொண்டிருந்த நேரம்.



இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட, அது மதம் பிடித்த 2 யானைகள் ஒன்றற்கொன்றை தாக்குவது போல் இருந்தது. துப்பாக்கி மீது இருவரின் கைகளும் பட, அதை தன் வசப்படுத்த இருவரும் முயல, அப்போது அங்கே அசந்தர்பமாக நுழைந்த ஒருவன் மீது குண்டு பாய்ந்தது.



*****************



இடம் : கொச்சின்



தென் மேற்கு இந்திய கடற்கரை பகுதி, பரசுராமரால் உருவாக்கப்பட்டது, அதனை பரசுராமக்ஷேத்திரம் என்று தான் அந்த காலத்தில் கூறுவார்கள்.



கொச்சினில் தான் ராம்மிற்கு இப்போது வேலை, குற்றபிரிவு. சமீபத்தில் குற்றவாளி யாரென்று கண்டே பிடிக்க முடியாது என்று ஒரு வழக்கில் அவன் வாங்கிய பெயர் 'கொச்சினின் ஷெர்லாக் ஹோம்ஸ்'



கிட்டதட்ட 3 வருடம் முன்பு புதைக்கப்பட்ட பிரேதம், அது யார், என்ன, எப்படி என்று சகலத்தையும் கண்டு எடுத்தான். அதை எப்படி துப்பு துலக்கினான் என்று பத்திரிகை கூட்டத்தில் விவரித்தவன் அவர்கள் பாராட்டினை பெற்று கொண்டு,

"உங்க கிட்ட ஒரு ஹெல்ப் ஆர் ரிக்குவஸ்ட். குற்றம் நடக்கும் இடம் அல்லது குற்றங்கள் செய்வோர் பற்றிய தகவல் கிடைத்தால், எங்க கிட்ட சொல்லுங்க. வி பிலீவ் இன் க்ரைம் ப்ரீ இந்தியா. தேங்க யூ கைஸ்" என்று கூட்டத்தை முடித்து கொண்டு வீடு புறப்பட்டான்.

வீட்டில் ஒரு இன்ப அதிர்ச்சி. அவன் தங்கை ரஞ்சனியும், தாய் லட்சுமியும் வந்து இருந்தனர்.



"என்ன திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம?" என்று ஆரம்பித்தான், தன் ரஞ்சனியின் மகள் ஆரபியை தூக்கிக்கொண்டு கொஞ்சிய படி,



"ஏன் என் புள்ள வீட்டுல வர முன், பர்மிஷன் வாங்கணுமா?" என்று டபராவில் காப்பியை ஆற்றியபடி லட்சுமி நொடித்து கொள்ள, ராம்

"இல்ல...சொல்லிருந்தா நானே வந்திருப்பேன். ஸ்டேஷனில் ராமபத்ரன் ஏ சி பி வீடுன்னு சொல்லி ஆட்டோ ஏறலியே. " என்று தாயை கூர்மையாக பார்த்தான். அவனுக்கு தெரியும், லட்சுமி இங்கே ஏதோ ஒரு திட்டத்தோடு தான் வந்து இருக்கிறார் என்று.



கடந்த முறை இதே போல், இவர்கள் சேர்ந்து வந்த போது, நடந்த பெண் பார்க்கும் நிகழ்வு, பெண் அங்கேயே போலீஸ்காரன் வேண்டாம் என்று சொன்னது, தனது உத்தயோக விபரங்களை ஒழுங்காக ஏன் அவர்களிடம் சொல்லவில்லை என்று இவன் கடிந்தது என்று எல்லாம் நியாபகம் வந்தது.



அதன் பின் இவன் கிட்டத்தட்ட அன்னையிடம் 2 மாதங்கள் பேசவேயில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாது போக, இவனும் மனம் இறங்கினான். அதன் பின் கல்யாண பேச்சுகளை தவிர்த்தான், முற்றிலும்.



லட்சுமி பேசும் முன், ஆரபி வாண்டு



"மாமா! உனக்கு மாமி பாக்க தான் வந்து இருக்கோம், நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு பட்டுப்பாவாடை கிடைக்கும், " என்று உளறி வைக்க, ராம், பரசுராமன் ஆனான்.



"கேட்டேனா? வேண்டாம்ன்னா, வேண்டாம்" என்று எடுத்த எடுப்பிலேயே மறுக்க, ரஞ்சனி இடையில் புகுந்து



"இந்த முறை உன் உத்யோகம் பத்தி தெளிவா சொல்லி இருக்கு. பொண்ணு அவ்வளோ அழகு" என்று அவன் மனதை தணிக்க பார்க்க,

"அழகு ஆபத்து" என்று கத்தரித்து பேச, லட்சுமி



"நீ இப்படி இருக்கறது பிடிக்கலே ! கல்யாணம்கறது ஒரு கம்பானியன்ஷிப், துணை, கண்டிப்பா வேணும். இப்போ உனக்கு இளமை வேகம், தெரியாது. பின்னாடி ரிடையர் ஆனபிறகு என்ன செய்வே ! நீயும் உன் துப்பாக்கியும் கட்டி புடிச்சுகிட்டு இருப்பீங்களா ?" என்று பொரிய , ராமபத்ரன் ஒன்றும் சொல்லாது, அவர் தயாரித்த காப்பியை கூட குடிக்காது வெளியே கிளம்ப,



"என்ன இது ? பெரியவங்க பேசிகிட்டு இருக்கும் போது..இப்படி மரியாதை இல்லாம கிளம்பறது ? நில்லு ராம் " என்று அவரும் விடவில்லை.



"உங்களுக்கு கேரளா மழை செட்டாகாது ! நாளைக்கே...ம்ம்ம் ..இன்னிக்கே டிக்கெட் இருக்கானு பார்க்க போறேன்" என்று அசால்ட்டாக ஒரு குண்டை போட்டான்.



"ராம் !" என்று அவர் கத்த, ரஞ்சனி



"அண்ணா ! இது ஓவர் ! பொண்ணு பார்க்கறது என்ன குத்தமா ? எந்த ஐ பி சி செக்ஷன் ?" என்று அவளும் அதிருப்தி தெரிவிக்க, ராம் பொறுமையை இழுத்து பிடித்து



"வேண்டாம்னு சொன்னா, விடணும்! நான் குழந்தையும் இல்ல, எனக்கு ஜூரமும் இல்ல" என்று கூறினான், அதில் காரம் இல்லாது இல்லை.



"இப்போ தெரியாது ! இந்த அம்மானு ஒருத்தி இல்லாத போது தான் உனக்கு தெரியும் " என்று லட்சுமி கண்ணை கசக்க, ராம் சற்று தணிந்தான், இருந்தாலும்



"எனக்கு சீரியல்ஸ் பிடிக்காது" என்று நக்கல் அடிக்க தவறவில்லை. லக்ஷ்மியும் விடவில்லை.



"இனி என் வீட்டு படி ஏறணும்ன்னா, உன் பொண்டாட்டி கூட வந்தா தான் முடியும்" என்று அவரும் சாட, ரஞ்சனியை ராம் பார்த்தான்.



"இவங்களுக்கு என்ன ஆச்சு? சென்னை வெயில் இன்னும் ஜாஸ்தி ஆகிடுச்சா?" என்று வினவ,



"கொச்சியில் தான் இப்போ வெயில் அதிகம்" என்று ரஞ்சனி பதிலடி கொடுத்தாள். இரு பெண்கள், அவனுக்கு முக்கியமான பெண்கள் இருவரும் ஒரே கட்சி, அவனோ தனி ஒருவன். பெரும்பான்மை இல்லாத கட்சி, சற்று சும்மா இருக்க தீர்மானித்தாலும், ரஞ்சனியின் கணவனை அழைத்து



"2 புயலையும் இங்க அனுப்பிட்டு, நிம்மதியா இருக்கியாடா நீ" என்று தனது அறையில் அலைபேசியை ஒலிபெருக்கி முறையில் வைத்து வம்பு வளர்த்தான். ரஞ்சனியின் கணவன் ராகவன்



"யாம் பெற்ற இன்பம், பெருக ராமபத்ரனும்" என்று ஜகா வாங்க முயல, ராம்

"மவனே ! நேரில் வந்தேன், நீ கைமா தாண்டி, இது என்ன புது தலைவலி, பொண்ணு, ஊசி பின்னுன்னு " என்று தகவல் சேகரிக்க முயன்றான்.



"எனக்கு தெரிஞ்சவங்க பொண்ணுடா ! பேர் மாளவி ! நல்ல குடும்பம், பொண்ணு நல்ல பொண்ணு ! இஞ்சினீரிங்-எம் பி ஏ முடிச்சு, கொஞ்ச நாள் பாரின் ஜாப். இப்போ அப்பா பிசினஸ் ! ப்ரீ டைமில் என் ஜி ஓ வில் வர்க் பண்ணறா ! பாரு ! நல்ல அமைதி ! உனக்கு கண்டிப்பா செட் ஆகும் " என்று விபரங்கள் கூற,



அதை சட்டை செய்யாது, குடும்ப விவாகாரங்கள் கேட்டானே ஒழிய, மாளவியை பற்றி வேறு ஒன்றும் கேட்கவில்லை.

ராகவனிடம் பேசிவிட்டு வந்தவன் ரஞ்சனி மற்றும் லக்ஷ்மியை பார்க்க, ஏதோ இழவு வீட்டில் இருப்போர் போல் காட்சி அளிக்க, இந்த பிரச்னையை வேறு விதமாக தான் சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான்.



"இப்போ என்ன பொண்ணு பார்க்கணும் ! அவ்வளோ தானே ! வரேன். பட் இப்போ வர்க் டைட் , நெஸ்ட் மந்த் போகலாம்" என்று கூற, லட்சுமி



"பொண்ணு இங்க ஆலப்பி வந்து இருக்கா ! நாளைக்கு போகலாம் ! பெர்மிஷன் போடு இல்ல வேண்டாம், லீவு எடு . ஒருநாள் லீவு எடுக்க முடியும், கொடுக்கலைன்னா எனக்கு உடம்பு சரியில்லே, கோமா ஸ்டேஜுக்கு போனாலும் போகலாம் !, அம்மாவை பார்த்துக்கணும்னு சொல்லு" என்று அவனை வகையாய் வளைத்து பிடித்தார்.



"வாட் ! எல்லாம் ப்ரீ பிளான்ட் இல்லே !" என்று கொந்தளித்தான்.

"ராம் ! உன்னை நான் அறிவேன் ! நான் உன் அம்மாடா ! சோ கொஞ்சமாச்சும் ம்ஹூம் உன்னை விட கொஞ்சம் மூளை எனக்கு அதிகம் உண்டு ! போ போ ! ஏதாச்சும் பாக்கி வேலை இருந்தா முடிச்சிட்டு வா , நாளைக்கு நீ லீவ்" என்று முடிவாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.
 

Thi Shi

New member
Messages
7
Reaction score
1
Points
1
படகில் செல்ல வேண்டும் என்று ஆரபி ஆசைப்படுகிறாள் என்று ராம், வேண்டுமென்றே படகு சவாரியை தேர்ந்து எடுத்தான். அதில் இன்னும் நேரம் ஆகும், பெண் வீட்டுக்காரர்களை வெறுப்பேற்ற வேண்டும், தன்னை பற்றி அவர்கள் சரியாக நினைக்க கூடாது என்று நம்பியாரிஸத்தை காட்ட முயன்றான்.



ஆனால் அவர்களோ முகத்தை சுளிக்காது, அவனை வரவேற்க, ராமின் திட்டம் அங்கேயே பணால் ஆனது.



"பரவாயில்லை ! கொச்சின் ஏ சி சாருக்கு எவ்வளவோ வேலை இருக்கும் ! ஒருநாள் உங்களுக்காக காத்திருந்தா குறைஞ்சு போக மாட்டோம்" என்று பெண்ணின் தகப்பன் சுப்பிரமணியன் கூற, ராம்



"தேங்க்ஸ்" என்று அசடு வழியாது இருக்க கஷ்டப்பட, லட்சுமி 'இது தேவையா!' என்று அவனை பார்த்து வைத்தார். பெண் வீட்டார் இருக்கும் வீடு, ஒரு ஓடையின் கரையில் அமைந்து இருந்தது, படகில் இருந்து அவன் இறங்கி வரும்போதே, மாடியில் இருந்து மாளவி பார்த்து விட்டாள். ஆனால் அவன் சற்று நிமிர்ந்து அவ்வீட்டின் மாடி ஜன்னலை பார்க்க, அவள் சடுக்கென்று ஜன்னல் புறத்தில் இருந்து நீங்கினாள்.



"பார்த்தியா! எப்படி இருக்கார் ஏசிபி?" என்று அவளது ஒன்று விட்ட சகோதரி மாலா கேட்க, மாளவி



"ஒரு மனுஷன் எப்படி இருப்பாரோ, அப்படி தான் இருக்கார்" என்று சுவாசரஸ்யம் இல்லாத பதிலை கூற, மாலா



"உன்னை போய் கேட்டேன் பாரு! என்னை சொல்லணும். நல்ல கலர், ஹைட்டு, மீசை வச்சுக்கிட்டு, சும்மா மணி சார் பட ஹீரோ மாறி இருக்கார். எனக்கு பிடிச்சிருக்கு அவரை" என்று மாலா ஜொள்ளு விட, மாளவி



"நீயே கல்யாணம் கட்டிக்கே அப்போ" என்று சொல்லவும் தவறவில்லை



"நீ வேஸ்டு, எனக்கு அவரை மாப்பிள்ளையாக பார்த்து இருக்கணும்" என்று போலியாக ஏங்கினாள்.



"கழுதை! உனக்கு அடுத்த மாசம் தான் 18 வயசு ஆக போகுது" என்று மாளவி அவளை செல்லமாக அடிக்க, மாலா



"ஓஹோ! அப்போ நீயே கட்டிக்கேன்னு சொன்ன போது தெரியலையா! ம்ம்ம்..புரியுது புரியுது! போஸ்ஸிவ்னெஸ்..நடத்து நடந்து| என்று வாரி விட்டாள். மாளவி பதில் பேசும் முன்,



"மாலா! அக்காவை கூட்டிட்டு வெளிய வா!" என்று ஒரு குரல் கேட்க, மாளவி மனதே இல்லாது தயாராக, மாலா அவளுடன் வெளிய வந்து விட்டு வரவேற்பு அறையில் மாளவியை கொண்டுவிட்டு உள்ளே சென்று விட்டாள்.



தலைகுனிந்து எல்லாம் இல்லாது, அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் கையில் காப்பி கோப்பைகளுடன். அவனுக்கு பிடிக்காத ஒன்று, பெண் பார்க்கிறேன் என்ற ரீதியில், இலவசமாக காபி, பஜ்ஜி என்று பிள்ளை வீட்டார் மொக்குவது. லக்ஷ்மியின் காதில்



"நம்ம வீட்டில் காபி பொடி, பால் எல்லாம் இருக்கு தானே" என்று தணிவான குரலில், கடிய, பெண்ணின் தந்தை



"மாப்பிள்ளைக்கு ஏதாச்சும் வேணுமா !" என்று விசாரிக்க, அவன் நேரிடையாக



"மாளவி கிட்ட தனியா பேசணும்" என்று டக்கென்று விஷயத்துக்கு வந்தான்.



"அதுக்கென்ன தாராளமா பேசுங்க ! முதலில் காபி தண்ணி குடிங்க! அம்மாடி, மாப்பிளைக்கு கொடு" என்று ஒரு பெரிசு அவளிடம் ஆணையிட, மாளவி ராம்மிடம் சென்று காப்பி கோப்பைகளை நீட்டி



"ப்ளீஸ்" என்று இனிய குரலில் உரைக்க, அவன் அவளை ஒரு நொடி போலீஸ் பார்வை பார்த்துவிட்டு



"நோ தேங்கஸ் ! என்னோட காபி டைம் ஆகலே ! வா ! உன்கிட்ட நான் பேசணும்" என்று அவள் கையில் இருக்கும் காப்பி கோப்பை அடங்கிய தட்டினை வாங்கி ஒரு மேஜையில் வைத்துவிட்டு, அவளை கையை பிடித்து இழுக்காத குறையாக, வெளியே கூட்டிக் கொண்டு சென்றான்.



எல்லோரும் ஸ்தம்பித்து நிற்க, லட்சுமி தான்

"அவனுக்கு ஏதோ கேஸ் இருக்குனு சொன்னான் ! அதான் கொஞ்சம் அவசரம் …" என்று சூழ்நிலையை சமாளிக்க பார்த்தார். ரஞ்சனியோ



"மானம் போகுது .." என்று குசுகுசுக்க, லட்சுமி



"சமாளி ! இருந்தாலும் உன் அண்ணனுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது" என்று அவரும் அதிருப்தி தெரிவித்தார்.



அங்கே ஓடை முன் ராம் நின்று கொண்டிருக்க, ஒரு இருக்கையில் மாளவி உட்கார்ந்து இருக்க, இனிமையான மாலை பொழுது, வீசும் தென்றல், பறவைகள் கூட்டை அடைந்த மகிழ்ச்சியில் இனிமையாக கத்த, அந்த இனிமைக்கு நேர மாறான மனநிலையில் இருவருமே இருந்தனர்.



"உன்கிட்ட ஒன்னு சொல்லணும்" என்று அவனும், "உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்" என்று அவளும் ஒரே நேரத்தில் பேசினர்.



"லேடீஸ் பர்ஸ்ட் " என்று அவன் நாகரீகம் காக்க, அவள் எப்படி சொல்வது என்று தெரியாது கையில் இரு இலையை வைத்து கொண்டு நோண்டி கொண்டிருந்தாள்.



"இந்த இலையை கிழிப்பது எப்படினு சொல்ல போறியா?" என்று அவன் கேட்க, அவள் ஒரு பெருமூச்செறிந்து



"எனக்கு இந்த கல்யாணம் வேணுமான்னு தெரியலே" என்று குழப்பமான பதிலை சொல்ல, ராம்



"வாட் கம் அகேன்" என்று ஒன்றும் புரியாது வினவினான். ஏனென்றால், உன்னை பிடிக்கவில்லை, உன் உத்யோகம் சரி வராது என்ற பதிலை தான் கேட்டு இருக்கிறான்.



இவள் என்னடா என்றால், குழப்பமாக ஒன்றை கூற, முற்றிலும் திகைத்து போய் விட்டான்.



மாளவி

"4 வருஷம் முன்னாடி எனக்கு நிச்சியம் பண்ணினாங்க ஒருத்தன் கூட, அவன் இப்போ இல்லை, செத்துட்டான்..சோ..." என்று அவள் இழுக்க, ராம்



"ஓகே ! யு ஸ்டில் லவ் ஹிம் ! அப்போ ஏன் இந்த வேண்டாத வேலை! டைம் வேஸ்ட்" என்று பொரிய ஆரம்பிக்க, அவளது பெரிய கண்களில் சோகம் அப்பிக்கொண்டது.



"நான் சொன்னேன் அப்பவும் அம் நாட் ரெடின்னு , இப்போவும் சொன்னேன் அம் நாட் ரெடின்னு . என் பேச்சை யாரும் கேக்கலே, அம் சாரி அபோட் திஸ் , ரியலி சாரி" என்று அவள் மன்னிப்பு யாசிக்க, எல்லோரையும் கோவம் வந்தால் வறுத்து எடுக்கும் ராம்



"ஓகே ! என் கூட வா !" என்று அவள் கையை பிடித்து கொண்டு உள்ளே சென்றான்.



"மிஸ்டர்.சுப்பிரமணி ! பொண்ணை இனி கேட்டிட்டு பஜ்ஜி, சொஜ்ஜி , காபி சப்பளை பண்ணுங்க" என்று கூறிவிட்டு, லட்சுமியிடம்

"கிளம்பலாமா ?" என்று அக்கினி பார்வை ஒன்றை வீச, சுப்பிரமணியன்



"மாளவி ! அவர் கிட்ட என்ன சொன்னே ! இந்த கல்யாணம் நடக்கனுன்னு சொன்னேன்லே ! என்னத்த பண்ணி வச்சிருக்கே !" என்று ராம்முன் சீற, மாளவி



"என்னை கம்பெல் பண்ணாதீங்கன்னு நானும் சொன்னேன் ! நீங்க தான் கேக்கலே ! இப்போ எதுக்கு என்னை குத்தம் சொல்லறீங்க ! ஜஸ்ட் லீவ் மி அலோன்" என்று அவளும் கத்த,

சுப்ரமணியன் அவளை அடிக்க கை ஒங்க, ராம் இடையில் புகுந்து அவர் கையை பிடித்தான்.



"ஒரு பொண்ணை அடிக்கிறது தப்பு ! அதுவும் ஒரு போலீஸ் ஆபீசர் முன்னாடி அடிக்கிறது இன்னும் தப்பு, ஐ ஹேவ் டுஅரெஸ்ட் யு" என்று சீற, மாளவி தான் இடையே புகுந்து



"லீவ் ஹிம் ! இது குடும்ப விஷயம் ! போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம், விடவும் மாட்டேன்" என்று அவனிடம் இறைஞ்ச, ராம், சுப்பிரமணியனை விட்டான்.



"அம் நாட் பேஷண்ட் ஆல்வேய்ஸ்" என்று எச்சரித்து விட்டு சென்றும் விட்டான்.



அடுத்த நாள் ராம், தனது அலுவலக்தில் இருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, மாளவி வந்து இருந்தாள் அவனை காண.

ஜீப்பில் ஏற போனவனை அவள்

"எக்ஸ்க்யூஸ் மி ! ஏசிபி சார்" என்று தயக்கத்துடனே தான் அவனை கூப்பிட, அவளை முதலில் கண்டபோதும், கண்டுகொள்ளாது இருந்தவன் இப்போது அவள் புறம் திரும்பி



"யா ! டெல் மி ! " என்று உதவி ஆணையர் தோரணையில் பேச ஆரம்பித்தான். நேற்றுக்கும், இன்றும் எவ்வளவோ வித்யாசம் அவனிடத்தில். நேற்று வேட்டி சட்டையில் கம்பீர தமிழ் மகன், இன்று காக்கி உடுப்பில் விறைப்பான காவல் மகன். அவனது முக உணர்வுகளோ கஞ்சி போட்டு காயவைத்த பருத்தி உடை போல இருக்க, அவனது குளிர் கண்ணாடி வேறு அவளை இம்சித்தது.

அவன் கண் எங்கே பார்க்கிறது என்று அவளுக்கு புரியவில்லை, தெரியவுமில்லை.



நேற்று உரிமையுடன் கையை பிடித்தவன், அவளை தவறாக ஒரு நொடி கூட பார்க்கவில்லை. அந்த தைரியத்தில்,

"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், டைம் இருக்கா ?" என்று நேரே பேச்சை ஆரம்பித்தாள்.



"இப்போ நான் ப்ரீ இல்லே ! மே பி ஈவினிங் ! காபி ஷாப் ஸே 7 பி எம் ! உனக்கு ஓகேன்னா பார்க்கலாம்" என்று கடமை அழைக்கிறது பெண்ணே என்று மறைமுகமாக கூறிவிட்டான்.



ஓரளவு இதை எதிர்பார்த்தாள், பார்ப்பேன் என்று கூறியதே பெரிய விஷயம் என்று அவளும் சம்மதமாக தலை அசைத்துவிட்டு, அவன் அலுவலகம் நீங்க, அவனது ஜீப்பும் அதே நேரம் வெளியே வந்தது. அவள் சாலையை கடக்க நிற்க, அவனது ஜீப் அவளை கடந்து சென்று கொண்டு இருந்த நேரம், அவள் பின்னால் இருந்து, ஒரு பெரிய எஸ் யு வி, அவளை மோதுவது போல் வர, அதை ரியர் வ்யூ கண்ணாடியில் பார்த்த ராம், சடுக்கென்று வண்டியை திருப்பி புயலென அவள் புறம் சென்றான்.



தன் மீது ஒரு வண்டி மோதுவது போல் வர, அவள் ஒரு க்ஷ்ண நேரம் தடுமாறினாலும், உடனே இரு சாலைகளை பிரிக்கும் டிவைடர் புறம் ஓடி, அதன் மீது ஏறியும் கொண்டாள். அங்கே டிவைடர், சற்று அகலமான கான்க்ரீட் அமைப்பு, அதில் புல் படரவிட்டு வைத்து இருந்தனர், அங்கிருந்து அவள் சாலையின் மறுபுறம் செல்ல முயல பார்த்தாள், அங்கே இருந்த போக்குவரத்து நெரிசலில் அது முடியாது போக, பயத்தில் தனது கைப்பையை இறுக்க பிடித்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாது நிற்க, அவளை மோத வந்த வண்டியில் இருந்து, ஒரு கைக்கூலி அரிவாளுடன் இறங்கி அவள் மீது பாய எத்தனிக்க, அவள் பயத்தில்



"அம்மா ...." என்று கத்த, அவளை வெட்டுவதற்கு அரிவாள் அவள் கழுத்தை நெருங்கிய அதே நேரம் குண்டு ஒன்று அந்த கைகூலியின் முதுகில் பாய்ந்தது. எல்லாம் சேர்ந்த அதிர்ச்சியில் அவள் மயங்கியும் விழ, ராம் ஒருநிமிடம் அந்த வண்டியில் இருப்போரை பார்க்க, அதற்குள் வண்டி ரிவர்ஸ் எடுக்கப்பட்டு செல்ல எத்தனிக்க, அதன் சக்கரத்தில் குண்டை பாய்ச்சினான். இவ்வளவு கலாட்டாவில் அவனது அலுவலகத்தில் இருந்து காவல் அதிகாரிகளும் வந்து விட, ராம்மின் கவனம் மாளவி புறம் சாய்ந்தது.
 

Thi Shi

New member
Messages
7
Reaction score
1
Points
1
மருத்துவமனையில் அவன், அவள் கண் முழிக்கும் வரை இருந்தான்.



"உனக்கு தான் அவளை பிடிக்கலேயே ! அப்பறம் ஏன் சோறு தண்ணி இல்லாம அங்கேயே இருக்கே !" என்று லட்சுமி தனது கடுப்பை பரிபூர்ணமாக அவனிடம் காண்பிக்க,



"எனக்கு அவளை என்கொய்ரி செய்யணும் ! அதுக்கு தான் இருக்கேன் " என்று ராம் சாதித்தாலும், லஷ்மி நம்பாது



"பார்றா ! ஏசிபி யோட வேலையா இது ! ஏன் உன் கீழே இருக்கற எல்லாம் இன்ஸ்பெக்டர்ஸ் எல்லாம் ஹனிமூன் போயிட்டாங்களா ?" என்று நக்கல் குறையாது வினவ, ராம் மீசையில் மண் ஓட்டவேயில்லை என்று



"என் கண் முன்னாடி நடந்த க்ரைம் ! சோ அம் ஹியர் ! இப்போ பை" என்று அழைப்பை துண்டித்தான். ஏன் தான் மதியம் சாப்பிட வர மாட்டேன் என்பதற்கு அவரை அழைத்து பேசினோம் என்று பொருமினான்



அவக் முழித்து விட்டாள் என்ற சேதி கேட்டவுடன், தனக்கு தானே



"நீ போலீஸ் ஆபீசரா தான் அவ கிட்ட பேச போறே. ஸோ நோ எமோஷன்ஸ்" என்று உரு போட்டுக் கொண்டான். ஏனென்றால் அவள் கண்ணில் அந்த மரண பயத்தை பார்த்து, அவன் ஆடி தான் போனான், இரும்பு மனதில் ஓர் இளக்கம். அவனுக்கு அது பிடிக்கவில்லை.



ராமபத்ரன் அதில் வெறும் ராமாக ஆவது போல் அவனுக்கு ஒரு எண்ணம். ராமபத்ரனாக இருப்பது தான் நலம் என்று அறிவுறுத்திக் கொண்டு அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான். உள்ளே சுப்ரமணியமும் வீற்று இருக்க, ராம்,



"மாளவியை என்கொயர் செய்யணும்" என்று அறிவித்தான். அதில் சுப்பிரமணியம் வெளியே செல்ல, ஒரு நாற்காலியை சடாரென்று எடுத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.



அழகிய முகம், பிறை நிலா போல், அவன் அளவு நிறம் இல்லை, அதற்கு மாநிறமும் இல்லை, ஒரு மாதிரி அழகான சந்தன நிறத்தவள். பெரிய முட்டை கண்கள், அதில் இப்போது சோர்வும் பீதியும் மட்டுமே. அதரங்கள் உலர்ந்து போய், சோகை பிடித்தாற்போல் இருந்தாள். முடிக்கற்றுகள் அங்கும் இங்கும் அலைபாய, அதை எடுத்து ஒதுக்கி விட வேண்டும் என்ற தன் கரங்களை கைது செய்ய அவன் பெரும்பாடு பட்டான்.



"யார் அவங்க" என்று தொண்டையை செருமி கொண்டு ஆரம்பித்தான்.



"தெரியலே ! இப்போ தான் பார்க்கிறேன்" என்றவள் குரலில் இன்னும் பீதியும் நடுக்கமும் குறையவில்லை.



"உன் அப்பாவோட பிசினஸ் ரைவல்சா?" என்று அவளது பலகீனமான நிலையை வேண்டாம் வெறுப்பாக ஒதுக்கிவைத்து கேட்டான்.



"தெரியலே ! ஒன்னும் தெரியலே! ப்ளீஸ் என்னை விடுங்க" என்று கிட்டத்தட்ட அவள் அழும் நிலை. அதில் என்ன தோன்றியதோ அவனுக்கு



"ம்ம்..டேக் கேர் ! ஆனா திரும்பி வருவேன் . பி ரெடி" என்று கிட்டத்தட்ட அதட்டி விட்டு தான் சென்றான்.



வெளியே வந்த பின் ராம் சுப்ரமணியனிடம் ,

"உங்களையும் என்கொயர் செய்யணும்" என்று கூற, அவர்



"நானே வரேன் " என்று அடுத்த நாள் அவனை அவனது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.



"சொல்லுங்க ! யார் இவங்க ? என்ன வேணும் இவங்களுக்கு?" என்று ராம் ஆரம்பிக்க, முடிவில் அவனுக்கு தலைசுற்றல் தான் வந்தது, கூட கோபமும்.



"நான் என்ன பாடி கார்ட் சர்விஸ் பண்ண ஐ பி எஸ் பாஸ் பண்ணிருக்கேனா ? வாட் தி ஹெல் யு திங்க் !" என்று பொரிய, சுப்பிரமணியன்



"சாரி ! நான் அப்படி நினைக்கலே !என் பொண்ணோட பாதுகாப்பு , அது முக்கியமா பட்டது ! ஒரு அப்பாவா யோசிச்சேன், மன்னிச்சிருங்க !" என்று இரு கை கூப்பி கொண்டு மன்னிப்பு வேண்ட, ராம்

"லெட்ஸ் கீப் திஸ் ப்ரபேஷனல் ! நான் போலீஸ் ஆபீசர், ஒரு பப்லிக் சர்வெண்ட், உன் வீட்டு அடியாள் இல்லை" என்று கடுமையாக கூறிவிட்டு விடை கொடுத்தான், ஒரேடியாக.



ஆம், அவனது அலுவலகம் விட்டவர், உயிரற்ற உடலாக தான் வீடு வந்து சேர்ந்தார். விபத்து என்று கூறப்பட்டது, ஆனால் அது விபத்து அல்ல என்றும் அவன் திட்டவட்டமாக அறிவான்.



துக்க வீட்டிற்கு அவன் லட்சுமியுடன் சென்ற போது, மாளவியை பார்த்தான். ஏதோ பித்து பிடித்தாற் போல் அவள் இருந்தாள், எங்கோ வெறித்து பார்த்தபடி.



லக்ஷ்மி அவளிடம் சென்று கையை பிடித்து கொள்ள, அவள் கண்ணில் நீர்.

"அழணும்ன்னா அழுதிரு" என்று கூற, மாளவி அப்போதும் அழாது எங்கோ பார்த்தபடி இருக்க, லக்ஷ்மிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

திரும்பி ராமை பார்க்க, அவன் மாளவியிடம்



"அவங்க யார்னு கண்டு பிடிச்சு, ஐ வில் பனிஷ் தேம்" என்று உறுதி கொடுக்க, மாளவி



"அப்போ என்னோட அப்பா திரும்பி வந்துருவாங்களா?" என்ற ஒற்றை கேள்வி மட்டும் கேட்டாள். அதற்கு பதில் சொல்ல முடியாது ராம் திகைத்து நின்றான்.



அவனது விசாரணைகள் தொடர்ந்தன. அன்று அவளை தாக்க முயற்சி செய்தோர் தொழில் முறை எதிரிகள் என்று சாதித்தனர். அது உண்மையில்லை என்றும் அவன் நன்கு அறிவான். சுப்ரமணியன் விபத்து சம்பந்தப்பட்ட வண்டி பிடிப்பட்டது, ஆனால் வண்டியை யார் செலுத்தினார்கள் என்பது தெரியவில்லை.



ஒரு வாரம் செல்ல, ஒரு நாள், மாளவி அவனது வீட்டிற்கு வந்து இருந்தாள். ராம் அலுவல் வேலை முடித்து வீடு வந்த நேரம்.

அவனை காண தான் வந்து இருந்தாள். லட்சுமியிடம் பேசிக்கொண்டு இருந்தவள், அவன் வந்த பின், அவனிடம் தனிமையில்

"இந்த கேஸை விட்டிருங்க " என்று மட்டும் சொன்னாள். அவன் திகைத்து



"ஏன்" என்றும் அவளை கூர்மையாக பார்க்க, அவள்



"வேண்டாம் ! என்னால யாருக்கும் தொல்லை வேணாம், நான் சென்னை திரும்பி போக போறேன்" என்று அறிவிக்க, அவன்



"ஆர் யு மேட் ? உனக்கு தான் இப்போ ஆபத்து ! உன் அப்பா கதையை முடிச்சிட்டு, நெஸ்ட் தே வில் கம் பார் யு, இங்கே இரு" என்று படபடவென்று பொரிந்தான்.



நீண்ட பெருமூச்செறிந்தவள் ,

"என்னோட கவலை அது ஏசிபி சார்" என்று புறப்பட எத்தனிக்க, அவன் ஒன்றும் செய்யாது நின்றான்.



ஆனால் அடுத்த நாளே அவள் அவனிடம் திரும்பி வருவாள் என்றும் அவனோ, இல்லை அவளோ எதிர்பார்க்கவில்லை.



அழுது புலம்பி கொண்டிருந்தவளை லட்சுமி சமாதானம் செய்து கோ கொண்டிருந்தார்.



"சென்னைக்கு டிக்கெட் கிடைக்கலையா? பை தி வே இது டிக்கெட்ஸ் ரிசெர்வேஷன் செய்யற இடம் இல்லை " என்று அவன் குதர்க்கமாக கேட்டான், ஆரம்பத்திலேயே. லட்சுமி தான் கோபத்தை உடனே காண்பித்தார்.



"என்ன பேசறே நீ ! இப்படி தான் பேச நான் சொல்லி கொடுத்து இருக்கேனா? என்ன மாறி சிச்சுவேஷனில் அவ இருக்கானு தெரியுமா?" என்றும் வானை திட்ட, ராம்



"உங்களை விட எனக்கு நல்ல தெரியும், அவளுக்கு தான் தெரியலே. அதான் நேத்து என்கிட்ட, நானே பார்த்துக்கறேன் எல்லாத்தையும், நீ ஆணியே புடுங்க வேணாம்னு சொல்லிட்டு போனா. " என்றும் அவனும் விடவில்லை.



லட்சுமி அவளை கேள்வியாக பார்க்க, மாளவி ஒன்றும் சொல்லாது தலைகுனிந்து அழுதாள்.



அவளது அழுகை தாள முடியாது,

"இப்போ மாலாவை கண்டு பிடிக்க முடியுமா, முடியாதா?" என்று ராமை மிரட்ட, அவன்



"ஏசிபி யை மிரட்டறது கிரைம் , உங்களுக்கு தெரியுமா ! இல்லன்னா உங்க வக்கீல் மாப்பிள்ளை கிட்ட கேளுங்க" என்று அசட்டையாக சொல்லிவிட்டு தனது அறைக்குள் புகுந்து கொள்ள, லட்சுமி விடாது அங்கேயும் வந்து அவனை திட்டினார்.



"ஏசிபி க்கு பொறுப்பு இல்லன்னா மிரட்டலாம், தப்பே இல்ல. இப்ப எதுக்கு யூனிபார்ம் கழட்டறே ! நீ அந்த பொண்ணை கண்டு பிடிச்சிட்டு தான் வீட்டுக்கு திரும்பணும்" என்று காக்கி சட்டையை அவிழ்த்து விட்டு, வெறும் பனியன் மற்றும் காக்கி பேண்ட்டுடன் இருக்கும் அவனிடம், அவனது துப்பாக்கியை எடுத்து கொடுக்க, ராம்,



"நீங்க என்னோட அம்மா தானே ! புள்ளைக்கு அடி பட்டு இருக்கு . அது கண்ணுக்கு தெரியலே! யாரோ ஒரு பெண்ணுக்காக இப்படி என்கூட சண்டைக்கு வரீங்க. ஐ கண்டம் திஸ் யூர் ஆனர்" என்று விளையாட்டாக பேசினாலும், அதை கேட்டவள் மனநிலை வேறு மாதிரி இருக்க, அவள் அங்கே வந்து



"சாரி சார் ! தப்பு தான் ! நான் இங்க வந்தது தப்பு, ஹெல்ப் கேட்டது தப்பு" என்று கிளம்ப, ராம்



"மாளவி மேடம் ! கொஞ்சம் உங்க போனை பாருங்க ! மாலாவை கண்டு பிடிச்சாச்சுனு உங்க சித்தப்பா மெசேஜ் பண்ணி இருப்பார்" என்று அவளிடம் சொல்லிவிட்டு, லட்சுமியிடம்



"இப்போ கொஞ்சம் காப்பியும், மருந்தும் கிடைக்குமா" என்று தனது காயத்தை காண்பிக்க, லட்சுமி



"முதலிலே ஏன் சொல்லலே?" என்றும் அவன் காயத்தை பார்த்து நொடித்து கொள்ள, மாளவிக்கு பூமிக்குள் புதைந்து போய் விட்டால் தேவலாம் என்று இருந்தது. ஏனென்றால் அவள் நேற்று பேசிய விதம், இன்று அவள் நடந்து கொண்ட விதம் அதற்கு அவனது பதில் நடவடிக்கைகள்.



அவனுக்கு காப்பியும் கொடுத்து, மருந்தை தடவி விட்டு கொண்டிருந்த லட்சுமி எப்போது தனக்கும் அவனுக்கும் தனிமை கொடுப்பார் என்று அவள் அவஸ்தையாக காத்து கொண்டிருக்க, ராம் அவளை படித்தவன்



"அம்மா ! சிக்கன் சூப் குடிச்சா, உடம்பு வலி சரியாகும், நம்ம தெரு முக்கில் ப்ரெஷ் சிக்கன் வந்து இருக்கு ! கொஞ்சம் எனக்காக சமைச்சு தரீங்களா" என்று சிறுபையன் போல் வேண்டுகோள் விடுக்க, லட்சுமி உருகியே போய் விட்டார். உடனே அவர் வெளியே செல்ல , ராம் அவளிடம் நேரிடையாக



"சாரி சொல்லனுமா ?" என்று நேரே கேட்டான். அவள் லஜ்ஜையுற்றாள்.



"நிறைய ! வண்டி வண்டியா " என்று குரலே எழும்பாது கூற, ராம்



"இட்ஸ் ஓகே ! உனக்கு இப்போ யார் பண்ணறாங்கனு தெரிஞ்சு இருக்கணும், அம் ஐ ரைட்?" என்று கேட்டான்.



"தெரியும் ! அந்த ஸ்வஸ்தி பைனான்ஸ்! எனக்கு நிச்சியம் பண்ணின ஆகாஷோட அண்ணா ! நான் என்ன செய்ஞ்சேன் ! ஆகாஷ் செத்து போயிட்டான், இனி எனக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்" என்று சொல்லும்போதே அவள் குரல் உடைய ஆரம்பிக்க, ராம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டான்



"ஆகாஷை ரொம்ப லவ் பண்ணினியா?" என்று கேட்கப்பிடிக்காது கேட்டான்.



"தெரியலே ! நிச்சியம் பண்ணினாங்க! அதனால் அவனை எனக்கு பிடிக்கவைக்க ட்ரை பண்ணினேன், நல்லவேளை பிடிக்கல" என்று அவள் சொன்ன பதிலில்



"ஓ !" என்று குதூகலித்த அவன் மனதை கட்டுப்படுத்த முயன்றான். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு,



"இப்போ என்ன டிசைட் பண்ணிருக்கே?" என்று தீர்க்கமாக கேட்டான்.



"எனக்கு பாதுகாப்பான இடம் வேணும் ! சித்தப்பா வீட்டில் இதுக்கு மேலே இருக்க முடியாது ! அப்பா பிசினஸ் வேற பார்க்கணும். என்ன செய்யனு தெரியலே" என்று மனதில் உள்ளதை உரைக்க, அப்போது வீட்டுக்குள் நுழைந்த லட்சுமி



"இங்க தங்கிடு " என்று கூலாக கூற, இருவரும் அதிர்ச்சியில்,



"அம்மா " என்று இவனும் , "ஆன்டி" என்று அவளும் ஒரே நேரத்தில் கூவ. லட்சுமி



"இதில் என்ன ? நான் கொஞ்ச நாள் இவன் கூட தான். ரொம்ப விட்டா ஏ சி பி சாருக்கு அம்மா மேலே பயம் போகிடும். நீயே பார்த்தே இல்லே ! என்கூட இரு" என்று பிரச்சனை முடிந்தது போல், சமையல் அறை செல்ல, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க, சமையல் அறையில் இருந்து லட்சுமி



"மாளவி ! கொஞ்சம் ஹெல்ப் வேணும்" என்று கூற, அவளும் இது தான் சாக்கு என்று அவனது பார்வை சிறையில் இருந்து தப்பித்தாள்.
 

Thi Shi

New member
Messages
7
Reaction score
1
Points
1
அடுத்த நாள் பெட்டி எடுத்து கொண்டு, அவள் தனது குடும்பத்தினருடன் வருகை தர, ராம் கோபத்தின் உச்சிக்கே சென்றான். உள்ளே விருந்து சமைத்து கொண்டிருந்த லட்சுமியிடம்



"என்ன இதெல்லாம் ?" என்று காய, லட்சுமி சாவதானமாக



"வடை, பாயாசம். வேணுமா ?" வினவ, ராம்



"ஹா ஹா பெரிய காமெடி, சிரிச்சிட்டேன். இதெல்லாம் என்ன ? நேத்து எதோ அவள சமாதானம் செய்ய சொன்னீங்க பார்த்தா ! அவ நிஜமாவே வந்து இருக்கா ! எனக்கு பிடிக்கல" என்று எதிர்ப்பை காட்ட, லட்சுமி நக்கலாக



"சோ அதான் சார் வந்து ராகவ் கிட்ட, முதலில் பொண்ணு, ஊசி பின்னு வசனம் பேசிட்டு, அப்பறம் அவ அப்பா தவறி போன பிறகு, அவ இப்படி சோகமா இருக்கறது எனக்கு பிடிக்கலே, அவ கண்ணுல ஆனந்த கண்ணீர் தான் வரணும், அப்பறம் என்னவோ சொன்னானே ஹான்..உனக்கு இங்க வலிக்குதாமே, அவ இப்படி இருக்கறது பார்த்தா" என்று அவன் நெஞ்சை குத்தி காண்பிக்க, ராம்



"ஒரு மண்ணும் இல்ல, ராகவ் பொய் சொன்னான். சும்மா ஏதாச்சும் சொல்லிக்கிட்டு, அவளை கிளம்ப சொல்லுங்க" என்று கத்த, லட்சுமி



"நீ வாக்கு தவறலாம், ஆனா நான் இல்ல, அவ என்கூட தான் இருப்பா, உனக்கு கஷ்டமா இருந்தா, வேற வீடு பார்த்துகிட்டு போறோம் " என்றும் அவர், ராமபத்ரனின் அன்னை என்று நிரூபிக்க, ராமால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவனுக்கு காதலை ஒத்துக்கொள்ள முடியாது இருக்க காரணம் இருக்கிறது, அவள் நிலையோ வேறு மாதிரி.



என்னத்தான் லட்சுமி அவளை நன்றாக பார்த்து கொண்டாலும், ராமை அவள் நேருக்கு நேர் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், தனது அறைக்குள் முடங்கி விடுவாள். கொச்சியில் இருந்தே தந்தையின் நிறுவனத்தை கண்காணித்து விட்டு, சற்று நேரம் ஓய்வாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்க, ராம் வீட்டினுள் நுழைந்தான்.



அவனை கண்டவுடன், அவள் தொலைக்காட்சியை அணைத்து விட்டு, தன் அறைக்குள் ஓடி ஒளிய , ராமா கடுப்பில்

"நான் பூதம் பேய் பிசாசு இல்ல" என்றான் சத்தமாக. அதற்கு லட்சுமி மறுமொழி வேறு



"அதை விடடா நீ ! ஸ்ட்ரிக்ட் ஆபீசர்" என்று வாரிவிட , ராம் அவளது அறை வாயிலில் நின்று



"மாளவி! இப்போ நீ வரியா ! நான் உள்ள வரணுமா !" என்று மிரட்ட, மாளவி எதற்குடா வம்பு என்று வெளியே செல்ல, அவள் கையை பிடித்து, ரிமோட்டை கொடுத்து



"ஒரு கம்பெனி எம் டி, கொஞ்சம் கெத்தா இரு அண்ட் ஐ டோன்ட் ஈட் ஹ்யுமன்ஸ்" என்று கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.





முன்பு அவளது ஒதுக்கம், அவன் அன்று லட்சுமியிடம் பேசியதை கேட்டது தான். அந்த ரிமோட் சம்பவத்துக்கு பின், கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் சகஜமாக பழக ஆரம்பித்தாள். ஒருநாள், அவனது பக்கத்து வீட்டு குழந்தையுடன் சிரித்து பேசி மகிழ, அதை பார்த்தவன் முகத்தில் அழகாய் ஒரு புன்னகை. அதை கண்ட லட்சுமி அவன் நெஞ்சை சுட்டி காண்பித்து



"என்னடா இங்க இப்போ சரியாச்சா?" என்று மடக்கவும், அவன்



"நான் ரூமுக்கு போறேன்" என்று தப்பித்து விட்டான். இலைமறைகாயாக அவனும் தன்னை அறியாது தனதன்பை உணர்த்த, புரிந்து கொள்ள வேண்டியவள் மெல்ல மெல்ல அவனை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.



"ஏன் அத் ..ஆன்டி ! அவர் சின்ன வயசில் இருந்தே போலீஸ் ஆகணும்னு இருந்தாரா" என்றும் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவள் முயற்சி செய்ய, லட்சுமி



"அத்தேன்னு கூப்பிடு ! பின்னாடி அப்படி தானே கூப்பிட தான் போறே! அவனுக்கு போலீஸ் ஆகணும்னு ட்ரீம் இல்ல, வெறி. அதான் அவனுக்கு அவன் வேலைன்னா அப்படி ஒரு பக்தி" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, அழைப்பு மணி அடிக்க, லட்சுமி திறக்க, உள்ளே அடாவடியாக ஆருஷ் நுழைந்தான்.



ஆருஷ், ஆகாஷின் அண்ணா. அவனுக்கு மாளவி மீது சமீபமாக ஒருதலை காதல். சுப்பிரமணியன் அவளுக்கு வரன் தேட ஆரம்பிக்க, அவன் தானே அவளை மணக்கிறேன் என்று முன்வந்தான். ஆனால் சுப்பிரமணியன் சம்மதிக்கவில்லை. ஏனென்றால் ஆருஷை சட்ட விரோத வேலைகள் செய்வது மட்டுமல்ல, பெண்கள் சகவாசமும் உண்டு. ஆருஷின் தந்தை இவன் பக்கம். முன்பு இவர்கள் குடும்பம், சுப்பிரமணியத்தை கிட்டத்தட்ட மிரட்டி தான் ஆகாஷுடன் அவளது நிச்சியத்தை முடித்தனர். சுப்பிரமணியம் வேறு வழி இல்லாது, தாய் இல்லா பெண்ணான மாளவியிடம் இந்த மிரட்டல் பற்ற எல்லாம் கூறாது தான் நிச்சியம் செய்தார். மாளவியால் இதை தாங்க முடியாது என்று அறிவார். எப்படியாவது இந்த நிச்சியம் நின்றால் நல்லது என்று எண்ணியவருக்கு, கடவுள் ராமபத்ரன் ரூபத்தில் வந்தார்.



மும்பையில் ராம் செய்த என்கவுண்டரில் மாண்ட அந்த 'சிவிலியன்' ஆகாஷ் தான். அந்த ஆப்பிரிக்காரர்களுடன் வியாபாரம் பேச, ஆகாஷ் மற்றும் ஆருஷ் முதலில் வருவதாக இருந்தது, ஆனால் அங்கே காவல்துறை இருக்கின்றனர் என்ற செய்தி கிடைத்தவுடன், ஆருஷ் அந்த ஆப்பிரிகர்களை தொடர்பு கொள்ள, அவர்கள் வெளியே வரும்முன் தான் ராம் என்கவுன்டர் ஆரம்பிக்க, உணவகத்தை விட்டு வெளியேறி விட்டனரா என்று பார்க்க ஆகாஷ் அங்கே நுழைய, அவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். அவனை சுடும் போது, ட்ரிக்கரை ராம் மற்றும் அந்த ஆப்பிரிக்கன் பிடித்து இருந்தனர், யார் அழுத்தினர் என்று கூற இயலவில்லை. ஆனால் ஒரு குடிமகன் இந்த துப்பாக்கி சூட்டில் சுட்டு கொல்லப்பட்டான் என்று அது வேறு விதமாக பிரச்சனை ஆக, ராம் மனித உரிமை மீறல் என்ற பேரில் சஸ்பெண்ட் செய்ய பட்டான்.



ஆனால் இறந்தவனிடம் எப்படி துப்பாக்கி இருந்தது, அவன் ஏன் அங்கு வந்தான் என்ற கேள்விகளும் வந்தன.எல்லாவற்றுக்கும் மேல், அந்த ஆப்பிரிக்காரனுக்கு வந்த அழைப்பில் இருந்த அந்த இந்திய எண், ஆகாஷிடமும் இருந்தது. ஆகையால் அவன் வரவில் சந்தேகம் வந்தது. பாழும் பணம் முன் எல்லாம் தவிடுபொடியாக, ஆகாஷ் ஒரு அப்பாவி என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரம் ராமின் வழக்கறிஞர் ட்ரிக்கரை ராம் தான் அழுத்தினான் என்பதற்கு சாட்சிகள் இல்லை என்று வாதாடி, அவனது பதவி நீக்கத்தை ரத்து செய்தார்.



இது துப்பாக்கி சூடு செய்திகளில் வந்தபோது, அவனது ஜாயின்ட் கமிஷனர் தலைமையில் ஒரு படை என்று தான் குறிப்பிடப்பட்டதே ஒழிய, அவன் பெயர் வரவில்லை. நீதிமன்ற வழக்கை பற்றிய செய்தியில் அவன் பெயர் வந்திருந்தது. மாளவியிடம், இந்த செய்தி கூறிய தருணம், அவள் அயல்நாட்டிற்கு படிப்பதற்காக பயணம் செய்து கொண்டிருந்தாள்.



அவளிடம் அவனுக்கு விபத்து என்று கூறிவிட்டார், சுப்பிரமணியம். அவள் ஆகாஷின் தந்தையிடம் பேச, அவர் ஆகாஷ் அந்த உணவகத்திற்கு எதேச்சையாக செல்லும் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்துவிட்டான் என்று சொல்ல, அவள் எதற்கு அங்கே சென்றான் என்ற கேள்வியை மீண்டும் கேட்டாள்.



ஏனென்றால் அவளும், ஆகாஷுடன் துப்பாக்கி சூடு நடக்கும்முன் அந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சென்று விட்டனர். அன்று அவளுக்கு விமான பயணம் வேறு. படிப்பு முடிந்த பின் திருமணம் என்று பேசியிருந்தனர். துப்பாக்கி சூடு நடந்த போது, அவள் விமானநிலையத்தில் இருந்தாள். ஆகாஷின் தந்தை அவளிடம், அவன் தனது உடமைகளில் ஒன்றை அங்கேவிட்டு விட்டான், அதை மீண்டும் எடுக்க சென்றபோது, துப்பாக்கி சூட்டில் அவன் மரித்தான் என்று கூற, அவள் சந்தேகம் தீராது தந்தையிடம் துருவி துருவி விசாரித்தாள்.



அவர் தான் ஆகாஷின் குடும்பம் செய்யும் சட்ட விரோத வேலைகள் பற்றி சொல்லிவிட்டு எம்மாதிரியான நிலையில் அவள் நிச்சியம் நடைபெற்றது என்றும் கூற, அவளுக்கு, அசாத்தியமான கோபம் வந்தது. என்றாவது ராமபத்ரனை பார்த்து நன்றி சொல்ல வேண்டுமென்று தீர்மானித்து கொண்டாள். சிறிது காலம், வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு திரும்பினாள். அப்போது அவளுக்கு வேறு வரன் பார்க்க ஆரம்பிக்க, ஆருஷ் தொல்லை செய்ய ஆரம்பித்தான்.





எப்படி இவர்களிடம் இருந்து தப்பிக்க என்று பார்த்த போது தான், ராமபத்ரனுக்கு வரன் பார்ப்பதை அறிந்துகொண்டு சுப்பிரமணியன் இதை பெண் பார்க்கும் படலம் வரை கொண்டு சென்றார். ஆனால் மாளவிக்கு இது பிடிக்கவில்லை. ஒருவரை தன் சுயநலத்திற்காக கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கவில்லை. அதை தான் அன்று பெண் பார்க்கும் படலம் போது கூற முயன்றாள். அவன் கேட்கவில்லை, அடுத்த நாளும் கூற வர அவளுக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின் சுப்ரமணியனின் கொலை, மாலாவின் கடத்தல் என்றெல்லாம் போக, அவளுக்கு இதில் மீண்டும் ராமபத்ரன் மூக்கை நுழைத்து வீணாக மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தீர்மானமாக நம்பினாள்.அதுவும் ஒரு நல்ல காவல்துறை அதிகாரி இவர்களிடம் சிக்கிக்கொண்டு பலியாக விரும்பவில்லை.



ஆனால் இன்று ராமபத்ரன் அவர்களை நேருக்கு நேர், யுத்த களத்தில் சந்திக்கும் நாள் வந்துவிட்டது. வீட்டினுள் அடாவடியாக நுழைந்த ஆருஷ், லட்சுமியை தள்ளிவிட்டு மாளவியை இழுத்துக்கொண்டு சென்றனர். ராம்மிடம் விஷயம் தெரிவிக்கப்பட, அவன் வேகமாக வீடு அடைந்தான். லக்ஷ்மிக்கு நெற்றியில் காயம், அவரை மருத்துவமனை அழைத்து சென்ற போது அவனுக்கு ஓர் அழைப்பு.



"என்ன பெரிய பருப்பா நீ! உன் வீட்டில் இருந்தே அவளை தூக்கிட்டேன் பார்த்தியா?" என்று அசிங்கமாக ஆருஷ் பேச, ராமபத்ரன் ஒன்றும் பேசாது அவனை பேசவிட்டான். கடைசியில் ஒன்றே ஒன்று மட்டும் தான் ராம் அவனிடம் கூறினான்



"வெயிட் அண்ட் வாச்" என்று கூறிவிட்டு, இந்த அழைப்பு எங்கிருந்து வருகிறது என்று கண்டெடுத்தான். சற்று நேரத்தில் அவன் அங்கே.



துப்பாக்கி சூடு அங்கும் இங்கும் நடக்க, ஒரு கட்டத்தில் ராம்மின் குண்டுகள் தீர்ந்து போன நிலையில், ஆருஷ் கையில் துப்பாக்கி இவனை குறிபார்த்து நிற்க, அந்த திக்திக் நொடியில், ஆருஷ் ட்ரிக்கரை அழுத்த, தன் கட்டுக்களை ஒருவாறு அவிழ்த்து கொண்டு மாளவி, தன்னுயிர் காத்து, ஊரை காக்கும் காவலனை காக்க



"நோ…" என்று அலறியபடி ஓட, குண்டு காற்றை கிழித்தது. எல்லாம் ஸ்தம்பித்த நிலையில், ராம் கீழே விழுந்தான். அதன் பின்…





கொச்சின் பதிவு அலுவலகம்



"எல்லாம் ரெடியா?" என்று கேட்டபடி பதிவாளர் உள்ளே நுழைய, அழகான கசவு புடவையில் மிளர, ராம் வேட்டி சட்டையில் ஆண்மையின் இலக்கணமாக மிளிர்ந்தான். ராம்மின் கடவுள் நம்பிக்கை எல்லாம், பள்ளியிலேயே காற்றில் பறந்து விட்ட ஒன்று. அவன் தந்தையை அவர் எதிரிகள் வெட்டி சாய்த்த போது, அவன் கடவுள் நம்பிக்கை வெட்டி சாய்க்கப்பட்டது. ஒரு நேர்மையான நீதிபதி அவர், பிரபலமான அரசியல் புள்ளி கொலை செய்ததற்கு தூக்கு தண்டனை வழங்க, அது அவரையும் காவு வாங்கி விட்டது.



நியாயம் செய்ததற்கு இந்த அநியாயம் என்றால், கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை கொண்டு விட்டான். ஆகையால் திருமணம் பதிவு திருமணம் மட்டுமே. லட்சுமியின் அதட்டலுக்காக, பதிவு திருமணம் கழிந்து தாலி கட்டினான்.



கொசுறாக "உங்களால் தான் கோல்ட் விலை குறைய மாட்டேங்குது" என்று சத்தமும் போட்டான்.



இருவர் திருமணம் முடிந்து, அவர்கள் தனிமை நேரம் முன், லட்சுமி சென்னைக்கு கிளம்ப, ராம் இதை முற்றிலும் எதிர்பார்க்காதவன்,



"என்னை இப்படி தனியா விட்டு போனா, நான்.." என்று ஆரம்பிக்க, லட்சுமி



"கல்யாணம் செஞ்சாச்சு. இனி உன் பாடு, உன் பொண்டாட்டி பாடு" என்று எஸ் ஆக, மாளவி நக்கலாக



"கொச்சின் ஏசிபி! கொஞ்சம் கெத்தாக இருங்க. ப்ளஸ் ஐ டோன்ட் ஈட் ஹ்யுமன்ஸ்" என்று அவன் பாட்டை அவனுக்கு திரும்பி படிக்க, ராம் வழமைக்கு மாறாக ஒன்றும் பேச முடியாது நின்றான்.



முதலிரவில் இருவருக்கும் பதட்டம். இனி இருவர் மட்டும். ஓரளவு ஒருத்தரை ஒருவர் அறிவர். ஆனால் அவன் கோபம், இவள் தயக்கம் என்று நேரெதிர் குணங்கள் நிறைய இருவருக்கும் உண்டு. வாழ்வு இனி எப்படியோ என்ற கவலை.



"ஒன்னு சொல்லணும்" என்று இருவருமே ஒரே நேரத்தில் ஆரம்பிக்க, ராம்



"நீ முதலில் சொல்லு" என்று விட்டுக்கொடுத்தான்.



"ஐ நீட் சம் டைம்" என்று பட்டென்று சொல்லிவிட்டாள்.



"ஷ்யூர்" என்று இயல்பாக கூறிவிட்டு வெளியே சென்று படுக்க எத்தனிக்க, அவள்



"எங்க போறீங்க ஏசிபி! இங்கே படுங்க" என்று அவனிடம் பழக்க தோஷத்தில் ஏசிபி என்று விளிக்க, அவன்



"ராம்" என்று திருத்தினான். நாக்கை கடித்து கொண்டவள்,



"ம்ம். உங்க பேர் கொஞ்சம் ஒல்ட் பேஷண்ட். எப்படி கூப்பிடனு தெரியல" என்று குரல் எழும்பாது தயங்க, அவன் அவள் முகத்தை கையில் ஏந்தி



"ராம், தமிழில் ரெண்டு லெட்டர் தான்." என்று காதலை கண்ணில் தேக்கி கேட்க, அவள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல்,



"ராம்" என்று விளிக்க, அவள் குரலில் தன் பெயர் கேட்டவுடன், தன்னை தொலைத்து அவள் இதழ்களில் சரண் புகுந்தான். முதல் தீண்டல், தடுமாற்றங்களை தாண்ட, ஒரு கட்டத்தில் அவள் கோரிக்கை நினைவுக்கு வர, இதற்கு மேல் நல்லதில்லை என்று அவன், இதழ் பிரிந்தான். அவன் காதலின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாது அவள் இருக்க, ராம்,



"மாளவி! அழகான சஹானா ராகத்தோட குட்டி தங்கச்சி. இப்படி எல்லாம் என்னை பார்த்தா, பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை" என்று கண் சிமிட்ட, மாளவி வெட்கம் அடைந்து தலையை தாழ்த்திக் கொள்ள, அவள் முகத்தை நிமிர்த்தியவன்



"அம் நாட் அ ரொமான்டிக் பெர்சன். முரட்டு போலீஸ் மேன். உனக்காக என்னால முழுசா என்னை மாதிக்க முடியாது. சில நாள், நான் வீட்டுக்கு வராம இருக்கலாம். உனக்கு மிரட்டல் போன் கால்ஸ் வரலாம். என் உயிருக்கு.." என்று சொல்லுமுன் அவன் வாயை தன் கைகளால் பொத்தி,



"நான் தினம் பொக்கே அண்ட் சாக்லேட்ஸ் எதிர்பார்க்கிற பொண்ணு இல்ல. தட்ஸ் நாட் ரொமான்ஸ் டு மி. உங்க உயிரை மதிக்காது நீங்க அன்னிக்கி எனக்காக வந்து, குண்டடி பட்டு" என்று அவன் சட்டையை பிரித்து, ஆருஷ் அவனை சுட்ட இடத்தை காண்பித்தாள். ஆம், இடையே புகுந்து அவனுக்கு பதில் குண்டுகளை தன் மேல் தாங்க வந்தவளை தள்ளிவிட்டு குண்டினை தன் வலது மார்பில் தாங்கினான்.



அதில் மாளவி வெறி வந்தாற்போல் ஆருஷின் கையில் இருக்கும் துப்பாக்கியை மதிக்காது, அவனை கையில் கிடைத்த பொருள் கொண்டு தாக்க, ராம் ஒருவாறு எழுந்து, ஆருஷ் கையில் இருந்து மாளவியின் தாக்குதல் காரணம் நழுவிய துப்பாக்கியை பற்றியவன் அவனை வீழ்த்தினான், ஒரேடியாக.



அதன் பின், ரத்தப்போக்கில் அவனும் வீழ்ந்தான். மருத்துவமனை, அறுவை சிகிச்சை, வீடு என்று ஒருவாறு தன்னிலை அடைந்தவன், அவளை மணக்க சம்மதம் கோரி மணந்தும் கொண்டான்.



"உங்க உயிர், என்னோட பிராபெர்டி கூட, அதை நீங்க கண்டிப்பா பத்திரமா பார்த்துக்கணும். அம் யூ" என்று அவன் இதழ்களை அவள் முற்றுகை இட, இருவரும் பரிபூரண சதி-பதி ஆயினர்.





ஒரு கணம் அவன் வாழ்வை தடம் புரள செய்ய



அதே கணம் அவளை தடம் புரளாது வழி நடத்த



கணங்கள் மாறிய போது



வாழ்வு பாதை மாறி



காதல் வெளிச்சத்தில்



கரை சேர்ந்தது.
 

Thi Shi

New member
Messages
7
Reaction score
1
Points
1
ஹலோ மக்களே,
திஷி ஹியர். என்னோட சிறு கதை போட்டுட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்கு, எந்த கதா பாத்திரம் பிடிச்சு இருக்கு, எந்த இடம் ரசித்து படிச்சீங்க ன்னு சொன்னா, மகிழ்வேன்.

எனக்கு லட்சுமியின் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அண்ட் அவங்களும் ராம் பேசும் இடங்கள்.

உங்களுடைய பிடித்ததை கண்டிப்பா சொல்லுங்க

வெயிட்டிங்

திஷி
 
Top Bottom