Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கூட்டத்தில் எது ஓநாய்? - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Priyamudan Vijay

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
9
Points
3
BK-31, கூட்டத்திலெது ஓநாய், அத்தியாயம் – 1

அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில்.. நிலவொளிகூட உள்ளே வர அச்சம் கொண்டது. தொண்டை வரை வந்த எச்சிலைக் கஷ்டப்பட்டு விழுங்கியபடி, ‘தன்னை ஏதேனும் பின்தொடர்கிறதோ?’’ என்பதை தன் பார்வையால் துழாவியபடி அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்தாள். நெற்றியில் வழிந்த வியர்வையை, தன் கரத்தில் துடைத்தபடி, அவள் நடந்து செல்ல... அவளது பூபோன்ற கரங்கள், பயத்தினால் சில்லிட்டது. திடீரென்று தனக்குப் பின்னால் சல-சலவென இலைகள் அசையும் சத்தம் கேட்டவளின் இதயம் சற்று நின்று துடித்தது. படபடவென அடித்த இதயத்தை சாந்தப்படுத்த தெரியாமல், பயந்தபடி திரும்பிப் பார்த்தாள் அவள். கண்களுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை. தன் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு தம் கட்டியவள், ‘நிச்சயமாய் ஏதோ ஒன்று என் பின்னே வருகிறது...’ என்ற பயத்துடனே நடக்கலானாள். சில விநாடியில், ஏதோ ஒன்று நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக தன் பின்னே வருவதை உணர்ந்த கணத்தில், ‘என்ன? ஏதென்று?’ யோசிக்காமல், காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடலானாள். அவள் அணிந்திருந்த காலணிகளோ, அவளைக் கீழே தள்ளியது. தடுக்கி விழுந்தவள், அக்காலணிகளை வீசியெரிந்துவிட்டு ஓட்டம் பிடித்தாள். ‘எந்தத் திசையில் ஓடுகிறோம்?’ என்று கூடத் தெரியாமல் அவள் ஓட, அந்தப் பாதை ஒரு மலையின் முடிவில் கொண்டு போய்விட்டது. கால்கள் தடுமாற அப்படியே நின்றவளுக்கு ‘அடுத்து என்ன செய்வது?’ என்று தெரியவில்லை. மனம் படபடக்க தன் தலையை மெல்லத் திருப்பினாள். இலைகள் சரசரக்கும் சத்தம் மேலும் மேலும் அதிகரித்தது. தான் அக்காட்டிலிருந்து வெளிவந்ததை உணர்ந்தவள், நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள். வழக்கத்திற்கு மாறாக, வான்நிலவும் அதனை மறைக்க முற்படும் கருமையான மேகங்களும் அவளுக்கு இன்னும் அதிகமாக திகிலைக் கிளப்பியது. சில நொடிகளிலேயே, வான்மேகங்கள் நிலவினை மறைக்க... மறுபடியும் அவ்விடம் இருள் நிறைந்து காணப்பட்டது.

‘தன்னைத் துரத்துவது மனிதனா? இல்லை, மிருகமா? அல்லது வேறெதுவுமா?’ ஒன்றும் புரியாமல் தன் தலையை பிய்த்துக்கொண்டாள். ‘தன்னைத் துரத்துவதிடமிருந்து தப்பிக்க எண்ணி, இம்மலையிலிருந்து குதிப்பதா? அல்லது, தன்னைத் துரத்துவது ஏதுவென்று கண்டுகொண்டு அதனிடமிருந்து தப்பிக்க ஏதேனும் வழியிருக்கிறதா என்று பார்ப்போமா? இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது?’ என்று குழம்பித் தவித்தாள் அவள். தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து, தனது கைப்பேசியை எடுத்தவள்.. ‘கைப்பேசி சிக்னல் கிடைக்கிறதா?’ என்று பார்த்தாள். ம்ஹூம்.. ஒரு பலனுமில்லை. கைப்பேசியில் பிளாஷ் லைட்டை உயிர்ப்பித்தவள், மெல்ல அதனை அக்காட்டுப் பகுதியில் செலுத்தினாள். மனதில் ஒருவாறாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, இலைகளின் சத்தம் வரும் திசையை நோக்கி பிளாஷ் லைட்டின் வெளிச்சத்தைச் செலுத்தினாள். சத்தத்தைத் தவிர எவ்வித உருவமும் தென்படவில்லை. ஆனால் அவ்வோசை தன்னை நெருங்குவது மட்டும் நன்கு உணர்ந்தாள்.

பயத்தில் அவள் செவியிரண்டும் அடைக்க, அவற்றை தன் இருவிரல்களால் அழுத்தி அமுக்கிவிட்டு எடுத்தாள். சற்று நேரத்தில் அந்த அடைப்பு விடுவிக்க... அம்மலையின் நுனியில் நின்றுகொண்டு ‘தரைபரப்பிலிருந்து அம்மலை எவ்வளவு உயரத்தில் இருக்கிறது?’ என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள எண்ணி, தன் தலையை மட்டும் முன் கொண்டுவந்து பிளாஷ் லைட்டினை செலுத்தியபடி எட்டிப்பார்க்க, அவ்வெளிச்சம், அந்தக்காரிருளை கிழிக்கத் தவறியது. அந்த அடர் இருட்டில் அவள் கண்களுக்கு தரைப்பரப்பு தெரியவில்லை.

சற்று நேரத்தில் தன்னை துரத்திய அந்தச் சத்தம் நின்றுவிட, அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது. ஒருவேளை, அது தன்னை நெருங்கிவிட்டதோ? என்றெண்ணி ‘திக்-திக்’ என்று அடித்த தன் நெஞ்சைத் தட்டிக்கொடுத்தபடி மெல்ல திரும்பிப் பார்க்க... பத்தடி தூரத்தில் நான்கு ஜோடிக் கண்கள் கூர்மையாக தன்னைத் துளைப்பதைக் கவனித்தாள். அதன் சிவந்த கண்கள் அவளுக்கு உள்ளூர பயத்தை அதிகரிக்க..

“வருவது எதுனாலும் முடிஞ்சவரை அடிச்சுப் போட்டு தப்பிக்கும் வழியப் பார்ப்போம்.” என்று தனக்கு தானே பேசியவள், ‘தனக்கருகில் ஏதேனும் கட்டையோ அல்லது பெரிய கல்லோ இருக்கிறதா?’ என்று தேடும் எண்ணத்தில், குத்துக்காலிட்டு தரையைத் தடவ, அதுவரை துரத்திய அவ்வுயிரினம் அவளை நெருங்கியது.

கட்டையைத் தேடி தரையைத் துழாவிய அவளது கரங்கள் அப்படியே நின்றது. அது தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்தவள், தன் கண்களை நிமிர்த்தாமல் அப்படியே எழுந்து நின்றாள். முகம் முழுக்க வியர்வையால் நனைந்திருக்க... சுவாசம் கூட நாசியிலிருந்து வெளிவர அச்சம் கொண்டது. தன்னை நெருங்கும் ஓசைக் கேட்டு மெல்ல மெல்லப் பின்னோக்கி அடியெடுத்து வைத்தாள்.

“சௌந்தரியா!!!!!!!”

திடீரென்று தன்னை யாரோ அழைக்கும் சத்தத்தைக் கேட்டவள் அதுவரை திடமாக நின்ற அவள் கால்கள் அதிர்ச்சியில் தடுமாற... குரல் வந்த திசையை நோக்கினாள். சட்டென்று ஏதோ ஒன்று அவள் மீது பாய,

“ஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!” என்று அலறியபடி மலையிலிருந்து கீழே விழுந்தாள் சௌந்தரியா.

--------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் “நியூ ஓர்லியன்ஸ்” அந்நகரத்தில் இருக்கும் “கிராண்ட் ஓர்லியன்” என்னும் கடற்கரை மிகவும் பெயர்பெற்றது. அக்கடற்கரை காற்றில் மயங்காத மனிதர்களே இருக்க முடியாது. அந்தக் கடற்கரை மணல் மிகவும் தூய்மையாக, மாசுமறுவற்றுக் காணப்படும். கடல் நீரோ, சூரிய ஒளிபட்டு மின்னும் கண்ணாடியைப் போல் பளபளக்கும். வான்நீல நிறத்திலிருக்கும் அக்கடல் தண்ணீரைப் பார்க்கவே சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவர். அப்படிப்பட்ட அக்கடற்கரை மணலில், கடல் நீரை வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தான் “ஜியாங் ஷின்”.

கடலின் அமைதியை ரசித்தவன், தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், அவ்வூர் மக்கள் அனைவரையும் வேடிக்கை பார்த்தான். கடலைக் கண்டு துள்ளிக்குதிக்கும் சிறுவர்களைக் கண்டவனின் சிவந்த உதடுகள் மெல்ல புன்னகைப் பூ பூத்தது. கடற்கரைக் காற்றில் கட்டிலடங்காமல் அசையும் தனது கார்கேசத்தை, இடதுகையால் ஒதுக்கிவிட்டபடி எழுந்து நின்றான். கைக்கடிகாரத்தைப் பார்த்தவனுக்கு, அது மணி காலை பத்து என்றது. தன் டெனிம் பேண்டில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டுவிட்டு, தனது காரை நோக்கி விரைந்தான்.

“ஜியாங் ஷின்”, இருபத்தி நான்கு வயது இளம் ஆடவன். தன் பெயருக்கேற்றாற் போல் மிகவும் அமைதியான.. மனதில் தன்னம்பிக்கை கொண்ட இளைஞன். தமிழ்நாட்டைச் சேர்ந்த லதாவிற்கும், தென் கொரியாவைச் சேர்ந்த ஜியாங் ஜூன்-க்கும் பிறந்த ஒரே புதல்வன். திருமணமான புதிதில், தென் கொரியாவில் வாழ்ந்து வந்த அத்தம்பதியினர், ஜூனிற்கு திடீர் பணி மாற்றம் ஏற்பட, கொரியாவிலிருந்து அமெரிக்கா வந்தடைந்தனர் ஜூன்-லதா தம்பதியினர். ஜியாங் ஷின், நம் கதாநாயகன் பிறந்தது இந்த நியூ ஓர்லியன்ஸ் மகானத்தில் தான். நிறத்தில் தன் தந்தையைப் போல் இருந்தாலும், கொரியர்களைப் போல் சிறிய கண்களைக் கொண்டில்லாமல், சற்று விரிந்த கண்களை தன் தாயிடமிருந்து பெற்றுக்கொண்டான். கருகருவென்று இருக்கும் கோரை முடி.. பால் நிறத்தில் செதுக்கிய பற்கள்... சிவந்த உதடுகள், அவ்வுதட்டின் மேல் மீசையை வளர்க்காமல், செம்மையாக ஸ்ரவம் செய்திருந்தான். இவ்வாறு தன் தாய்-தந்தையிடம் இருக்கும் அழகினை ஒரு சேர பெற்ற அந்த இளைஞனுக்குச் சினிமாவில் நடிக்க ஆசை. ஆனால், அதற்கான பாதையை அவன் அறியவில்லை. சினிமாவைத் தவிர்த்து, மேனேஜிங் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற ஷின், படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை செய்தாலும் அவன் மனம் அதில் திருப்தியடையவில்லை. அவன் மனம் சினிமாவில் நடிப்பதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும். என்னதான் கை நிறையச் சம்பாதித்தாலும், வெறுமையாய் உணர்ந்தவன், அன்று அவ்வெறுமையைப் போக்க எண்ணி, கிராண்ட் ஓர்லியன் கடற்கரைக்கு வந்தான்.

கடற்கரைக்கு வந்த மக்கள், கடற்காற்று, அதன் சுற்றுச்சூழல் அவன் மனதைச் சற்று மாற்ற.. எழுந்து தன் கார் நிற்கும் இடத்தை நோக்கிச் சென்றான். அதுவரை அங்கு அமர்ந்திருந்தவன், அக்கடற்கரை பங்களாவை கண்டுகொள்ளவில்லை. தன் காருக்குள் நுழைய எத்தனித்தவனின் காதுகளில் அப்பங்களாவைச் சுற்றி நின்றுகொண்டு பொதுமக்கள் சத்தமாகப் பேசும் ஒலி கேட்டது. என்னவென்று அறிய எண்ணி, அப்பங்களாவை நோக்கி நடந்தான் ஜியாங் ஷின்.

“ஹேய்! இது ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி நடக்கும் ஓர்லியன் பங்களா தானே?” என்று அம்மக்களின் கூட்டத்தில் நிற்கும் ஒருவன், முகம் நிறையச் சந்தோசத்துடன் இன்னொருவனை நோக்கிப் பேசுவதை கவனித்த ஷின், அவர்கள் அருகில் சென்று நின்றான்.

“ஆமா பா. ஓர்லியன் பங்களா-னாலே அந்த ரியால்டி ஷோ நடக்கும் இடம்-னு இந்த ஊருக்கே தெரியுமே!” என்று மற்றொருவன் பேச... ஷின்னிற்கு அந்நிகழ்ச்சியைப் பற்றி அலசல்-புலசலாகத் தெரியும்.

அது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. அந்த விளையாட்டில் நடக்கும் உண்மை சம்பவங்களை மக்களுக்குக் போட்டுக்காட்டி டி.ஆர்.பி ரேட்டை அள்ளிக் குவித்தனர். ஷின்னிற்கு தெரிந்தவரை அந்நிகழ்ச்சி, சென்ற ஆண்டு வரை ஏழு சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்டது.

வருடத்திற்கு ஒருமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அந்நிகழ்ச்சி பதினைந்து போட்டியாளர்களைக் கொண்டது. வெகு சிலரைத் தவிர அனைவரும் வெவ்வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள். ஆனால் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருமே அவரவர் நாட்டில், சின்னதிரையில் ஓரளவிற்குப் பெருமைபெற்றவர்கள். திரைப்படங்களில் தடம்பதிக்கும் எண்ணத்தில் தான் அனைவரும் அந்த ரியால்டி ஷோவில் பங்கேற்பர். விளையாட்டின் விதிமுறைப்படி, போட்டியாளர்கள் அந்தப் பங்களாவில் நூறு நாட்கள், தன் சொந்த பந்தங்களுடன் எவ்வித தொடர்புமின்றி வாழ வேண்டும். சமையிலிருந்து அனைத்தும் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். நூறு நாட்களில், ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு குறிப்பிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்படுவர். நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களை, அந்நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்கள், தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டுப் போடுவர். குறைவான ஓட்டுகளைப் பெற்ற போட்டியாளர், அப்போட்டியிலிருந்து விலக்கப்படுவர்.

இவ்வாறாக ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு, கடைசியாக ஐவர் மிஞ்சுவர். அந்த ஐவரில் கடைசி நிமிடம் வரை எவன் இருக்கிறானோ, அவனுக்கே ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம் வழங்கப்படும். அத்தோடு இல்லாமல், இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்துப் போட்டியாளர்களுக்கும், அப்பங்களாவிலிருந்து வெளியே வந்ததும், திரைப்பட வாய்ப்புகள் வந்து குவியும். அந்நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே நிச்சயம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு உண்டு என்ற பெருமையைக்கொண்டது அந்நிகழ்ச்சி. ஆனால், இது நாள் வரை அந்நிகழ்ச்சியில் சின்னதிரை பிரபலங்களைத் தவிர வேறு எவரும் பங்குபெற்றதில்லை. முக்கியமாக சாம்மான்னிய மக்களுக்கு அந்நிகழ்ச்சியில் ஒரு துளிகூட இடமில்லை.

இதனை நன்கு அறிந்த ஷின், எப்படியேனும் இந்த ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும் என்றெண்ணிக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அப்பங்களாவின் வாசலை நெருங்கி நின்று கொண்டான். வாசலில் நான்கு-ஐந்து தடி பயில்வான்கள்... கருமை நிற இறுகிய டிசர்ட், கருமை நிற பேண்ட், கருப்பு நிற முக்குகண்ணாடியை என்று அனைத்தையும் கருமையில் அணிந்தபடி நின்றுகொண்டிருந்தனர்.

“பாடிகார்ட்ஸ் போல..” மனதில் எண்ணிக்கொண்டான் ஜியாங் ஷின். சில நிமிடங்களிலேயே, அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஜார்ஜ் ‘ஓர்லியன் பங்களா’வின் வாசலில் வந்து நின்றான்.

அடர்சிவப்பு நிற கோட்-ஸூட் அணிந்திருந்தவனின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. தன் ப்ரவுன் நிற முடியினை, ஜெல் போட்டு ஏற்றிச் சீவி நிறுத்தியிருந்தான். மீசை-தாடி இல்லாமல் நன்கு சவரம் செய்த தாடை. நீல நிற கண்கள் என்றுப் பக்கா அமெரிக்கனைப் போலிருந்தான் ஜார்ஜ். அமெரிக்கனைப் போல் இல்லை. அமெரிக்கனே தான்.

அவன் அங்கு வந்து நிற்கவும் எங்கிருந்தோ வந்த ஏழெட்டு காமெராக்கள் அவனைச் சுற்றிவளைத்து. காமெராவின் ஒளிபடவும், அவனின் உதடுகளை மேலும் இழுத்து வைத்துச் சிரித்தபடி பேசத்தொடங்கினான்.

“வணக்கம் நேயர்களே! நான் தான் ஜார்ஜ் வைல்டர். இது தான் உங்கள் அபிமான ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி. உங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிஞ்சதுப் போல, இது முழுக்க முழுக்க ஒரு ரியால்டி ஷோ. போட்டியாளர்கள் எல்லோரும் அவங்களோட தனித்திறமைகளை, உண்மையான குணங்களை வெளிப்படுத்தி மக்களோட மனசுல இடம் பிடிப்பாங்க. இப்படி நூறாவது நாள் வரை இந்த ஓர்லியன் பங்களாவில் யார் இருக்காங்களோ, அவங்களுக்கு தான் ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம் கிடைக்கும். உங்களுக்கே தெரியும் நம்ம நிகழ்ச்சியில கலந்துகொண்டாலே சினிமால நடிக்குற சான்ஸ் கிடைக்கும். போன வருசம் கலந்துகொண்ட 15 பேருமே இப்போ சினிமால ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்காங்க. அப்படி இந்த நூறு நாளுக்கு அப்பறம் சினிமாவுல ஜொளிக்கப் போற 15 போட்டியாளர்கள், பங்களாக்குள்ள வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க, போகலாம்..” என்று செம்மையான ஆங்கிலத்தில் ஜார்ஜ் பேசி முடிக்கவும் அனைத்துக் காமெராக்களுக்கும் அணைக்கப்பட்டது.

பேசியவரை போதும் என்று, பொதுமக்களைத் திரும்பிக்கூட பாராமல், பங்களாவிற்குள் விரைந்தான் ஜார்ஜ்.

‘இந்த நிகழ்ச்சியில காமெராக்கள்-ல ஆஃப் செய்யமாட்டாங்கள்-னு கேள்விப்பட்டேனே!’ என்று மனதிற்குள் நினைத்த ஷின், பங்களாவின் வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘எது எப்படியும் இருந்துட்டு போகட்டும். நம்ம இந்த நிகழ்ச்சியில எப்படியாச்சும் கலந்துக்கணும்.’ என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு கடவுளாகப் பார்த்து ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்.

அடுத்த மிரட்டலான அத்தியாயத்துடன்.....

வார்த்தைகளின் எண்ணிக்கை :- 1,187.
 

Priyamudan Vijay

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
9
Points
3
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 2

‘நாம இந்த அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில எப்படியாச்சும் கலந்துக்கணும்.’ என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு கடவுளாகப் பார்த்து ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்.

“போதும் போதும்... இதுக்கு மேல இந்த ஷோ-ல என்னால கலந்துக்க முடியாது.” என்றவாறு ஒரு இளம் பெண், மற்றொரு இளம் பெண்ணிடம் கோபமாக பேசியபடி அந்தப் பங்களாவிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தாள். அந்தக் கோபமாக பேசியப் பெண்ணைப் பார்த்த பொதுமக்களில் ஒருவன்,

“இது ஜெர்மனி-ல டீவி ஷோ நடத்துற பாட்டுப் போட்டியோட தொகுப்பாளினி தானே?” என்று கூறவும், நமது நாயகன் ஜியாங் ஷின் அப்பெண்ணைப் பார்த்தான். உடற்பயிற்சியால் மெருகேறிய வனப்பான தேகம். இளம் அரக்கு நிறம் கொண்ட கோரை முடி.. கையில்லா அந்தப் பளபளப்பான, நீளமான கவுனை அணிந்திருந்தவளின் முன்னழகை, கவுனின் கழுத்து டிசைன் வெளிச்சம் போட்டுக் காட்டியது... அவளது கை, கால்கள் வளவளப்பாக இருப்பதைக் கவனித்தவனுக்கு ‘அவை அழகு சாதன பொருட்களால் நன்கு பராமரிக்கப்பட்டவை’ என்று காட்டிக்கொடுத்தது. அம்புபோன்று கூர்மையான தாடையை உடைய அவளது முகத்தில் அனைத்து அவையங்களும் முகப்பூச்சுகளின் கைவண்ணத்தால் செதுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அவளைக் கவனித்த ஷின், அந்தத் தொகுப்பாளினியின் பின்னே பதட்டத்துடன் நடந்து வந்தவள் பேச்சினைக் கவனிக்களானான்.

“கிளாரா மேடம்! ப்ளீஸ் மேடம்.. நீங்க இந்த நிகழ்ச்சிய விட்டு போயிட்டா, என்னைய வேலைல இருந்து தூக்கிடுவாங்க மேடம். ப்ளீஸ்... போகாதீங்க மேடம். உங்க பிரச்சனை எதுனாலும், எங்கிட்ட சொல்லுங்க மேடம். நான் தீர்த்துவைக்கிறேன்.” என்றபடி அந்தப் பெண் பதட்டத்துடன் கூறியபடி, கிளாரா எனப்படும் அந்த ஜெர்மன் தொகுப்பாளினியைப் பின்தொடர்ந்து வந்தாள்.

“நோ நோ மிஸ். சௌந்தரியா. என்னால இதுக்கு மேல இங்கே இருக்க முடியாது. நீங்க என்னனு சொல்லி இங்கே கூட்டிட்டு வந்தீங்க? என்னோட இஷ்டம் போல, என்னோட உண்மையான குணத்தோட இந்த வீட்டுல இருந்தா போதும்னு தானே சொன்னீங்க? இப்போ இங்கே வந்து பார்த்தா, எல்லாம் நீங்க சொல்லுறதுபடி நடந்துக்கணும்னு சொல்லுறீங்க!! என்ன நினச்சுட்டு இருக்கீங்க? இப்படிலாம் பண்ணுனா, நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக்குறத தவிற வேற வழியில்ல. நீங்க இந்த ஷோ-வோட அசிஸ்டன்ட் டைரக்டர்-ஆ இருக்கலாம். அதுக்கு நான் உங்க அடிமை போல நீங்க சொல்லுற எல்லாத்தையும் என்னால செய்யமுடியாது. எங்க ஊருல நான் எவ்வளவு பெரிய காம்பையர் தெரியுமா? என்னைய போய் நீங்க அடிமை மாதிரி நடத்த பார்க்குறீங்க.” என்று கூறியபடி. அந்த கிளாரா, தன்னுடைய அரக்கு முடியைச் சிலுப்பிக்கொண்டு முன்னே நடக்க... அவள் பின்னே முகத்தில் கவலையுடன் நடந்துச்செல்லும் அந்த அசிஸ்டன்ட் டேரக்டர் சௌந்தரியாவை பார்க்கையில், ஷின்னிற்கு பாவமாக இருந்தது.

சாம்பல் நிற கோட் ஷூட் அவள் உடற்கட்டிற்குக் கச்சிதமாக பொருந்தியது. மெல்லிய உடல்வாகு.. மாநிறம்... கருமை நிற அடர்த்தியான தலைமுடி, ஆங்காங்கே லேசான சுருள்களைக் கொண்டிருந்தது. நீள்வட்டமான முகத்திற்கு அழகு சேர்ப்பது போன்ற நீண்ட பெரிய கண்கள்... கண்ணிற்கு லேசாக மையிட்டிருக்க, அந்த மை தீட்டிய கண்களில் லேசான கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது. செதுக்கிய உதடுகள், அழுகையில் நடுங்கியது. புருவ மத்தியில், மிகச்சிறிய அளவில் ஒரு புள்ளியை பொட்டாக வைத்திருந்தாள் அந்த சௌந்தரியா. அந்த ஜெர்மன் தொகுப்பாளினி கிளாராவைப் போன்று முகப்பூச்சு பூசாமல், லேசான அளவான அலங்காரத்தைக் கொண்ட அந்த முகத்தில் இயற்கையான அழகு பூத்துக்குலுங்கியது. அவளைப்பார்த்த மாத்திரத்திலேயே, ஷின்னிற்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. வைத்தக் கண் வாங்காமல் பார்த்தவனுக்கு, அவளின் பதட்டம் நினைவிற்கு வரவே,

‘அவளுக்காகனாலும், அந்த கிளாராவ சமாதானம் செய்து நிகழ்ச்சியில கலந்துக்கச் செய்யணும்.’ என்று நினைத்தவன், வேகமாகக் கூட்டத்திலிருந்து வெளியேறி, கிளாரா-சௌந்தரியாவிற்கு அருகில் சென்று நின்றான் ஷின்.

“மிஸ்.கிளாரா.... மிஸ்.கிளாரா. ஒரு நிமிசம் நில்லுங்க ப்ளீஸ்...” என்று கூறியவாறு கிளாராவின் வழியை மறித்து நின்றான். அவனின் இந்த திடீர் பிரவேசத்தை அங்கே எதிர்பார்க்காத கிளாரா, மை தீட்டிய அவளது புருவங்களில் முடிச்சுவிழ அவனை ஏற-இறங்கப் பார்த்தாள். சௌந்தரியாவோ அவளது வேலைக்கு வேறொரு வடிவில் ஆப்பு வந்துவிட்டதாக எண்ணி கண்களில் நீர் தேங்க அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாள்.

“யார் மேன் நீ? நீ எப்படி இங்கே வந்த? ஆடியன்ஸ்-ஸா நீ? ஆடியன்ஸ்-லாம் அங்கே கூட்டத்துலையே நின்னுக்கணும். இப்படி எங்க பக்கத்துல வந்து பேசக்கூட்டாது.” என்று முகத்தில் திமிருடன் பேசிய கிளாராவின் வார்த்தைகளைக் கேட்ட ஷின்னிற்கு, தன்மானம் பொங்கி, அவ்விடத்தைவிட்டு நகர எத்தனித்தபொழுது, சௌந்தரியாவின் பூமுகம் நினைவிற்கு வரவே, இழுத்து மூச்சுவிட்டு விட்டு, கிளாராவிடம் பேசத்தொடங்கினான்.

“நான் வெறும் ஆடியன்ஸ் மட்டுமில்ல. இந்த நிகழ்ச்சியோட ரசிகன். இந்த நிகழ்ச்சியோட அழகே உங்களப் போல ரொம்ப அழகான, பெருமை வாய்ந்த 15 போட்டியாளர்கள் தான். உங்கள தூரத்துல இருந்து பார்க்கும்போதே அவ்வளவு அழகா தெரிஞ்சீங்க. இப்போ கிட்ட வந்து பார்க்கும் போது, அத்தன அழகும் சும்மா ஜொலிஜொலிக்குது....” என்று ஷின், தான் கூறுவது முற்றிலும் பொய் என்றாலும், அப்போதைய சூழ்நிலையில் கிளாராவை சமாதானம் செய்வதற்கு அதைவிட வேறு வழியில்லை. அவளது திமிரான வார்த்தையிலேயே, அவள் முகஸ்துதிக்கு மயங்குபவளென்று நன்கு புரிந்துகொண்டான் அவன்.

ஷின் எதிர்பார்த்ததைப் போல், கிளாராவின் முகத்தில் கோபம் நீங்கிப் புன்னகை தவழ்ந்தது. அவளது இந்த முகமாற்றத்தை கவனித்த சௌந்தரியாவின் மனதில் நிம்மதி வர, ஷின்னை மேலும் பேசவிட்டு வேடிக்கைபார்க்கத் தொடங்கினாள்.

“கிளாரா மேடம்... இவ்வளவு அழகை, நீங்க உங்க ஜெர்மனிலேயே மறச்சு வைக்கப் போறீங்களா? இந்த அமெரிக்கா என்ன பாவம் செஞ்சுது? இந்தப் பேரழக, கொஞ்சம் அமெரிக்கன் சினிமாலையும் காட்டலாமே!!!” என்று பேசிய ஷின், கண்களைச் சுருக்கி, ‘நாம கொஞ்சம் ஓவராத் தான் போறோமோ?’ என்ற யோசனையுடன் கிளாராவின் முகத்தைப் பார்த்தான். ஆனால் அவள் கண்கள் மின்ன, முகத்தில் சற்று பெருமையுடன் அவளது முடியினை பின்னே தள்ளி, சிலுப்பியபடி பேசத்தொடங்கினாள்.

“நீங்க சொல்லுறது கரெக்ட் தான் மிஸ்டர். என்னோட இந்த அழக, இந்த அமெரிக்கன் சினிமா மிஸ் பண்ணிட கூடாது. ஏதோ உங்களப் போல சில நல்ல உள்ளங்களுக்காக, நான் மறுபடியும் இந்த பங்களாக்குள்ள போய் நிகழ்ச்சியில கலந்துக்குறேன்.” என்று புன்னகையுடன் கிளாரா கூறவும், சௌந்தரியாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. வேகமாக ஓடிவந்து ஷின்னின் கரத்தைப்பற்றி,

“தேங்க்ஸ்... ரொம்ப தேங்க்ஸ்.... என்னோட வேலைய காப்பாத்திக் கொடுத்துட்டீங்க... ரொம்ப நன்றி....” என்று தன்னை மறந்து சந்தோசத்தில் ஷின்னின் கரத்தைப் பற்றியபடி பேசியவளின் கையை கண்ணிமைக்காமல் ஷின் பார்க்கவே, அப்பொழுது தான் தன்னிலை அடைந்தவளாக தன் கரத்தை, ஷின்னின் கரத்திலிருந்து எடுத்தவளின் கன்னங்கள் வெக்கத்தில் சிவந்தது. தலைகுனிந்தபடி உதட்டில் புன்னகையுடன் பின்வாங்கியவளைக் கண்ணிமைக்காமல் ஷின் பார்த்துக்கொண்டிருக்க...

“சௌந்தரியா..........!!!!!!!!!” என்று கோப கர்ஜனையுடன் அம்மூவருக்கருகில் ஒரு நடு வயது பெண்மணி வந்து நின்றார். மரூன் நிற கோட்-ஷூட் அணிந்திருந்த அப்பெண்ணைப் பார்க்கும் போதே, அவர் சௌந்தரியாவின் மேலதிகாரி என்றுணர்ந்தான் ஷின். முகத்தில் கோபாக்னி கொப்பளிக்க வந்து நின்றவர், கிளாராவை நோக்கி,

“ஹேய் யூ! கிளாரா... உன்னைய இந்த நிகழ்ச்கியில இருந்து இப்போ நான் தூக்குறேன். இந்த நிகழ்ச்சியில கலந்துக்கணும்னா, நாங்க சொல்லுறத தான் நீ கேட்கணும். நீ உளறுரதெல்லாம் இங்கே கேட்காது.” என்றபடி தனது செவியினைக் காட்டியவளின் பேச்சுகளைக் கவனித்த கிளாரா, முகத்தைத் திருப்பிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள். அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த சௌந்தரியாவின் முகத்தின் முன் தன் விரல்களால் சொடுக்கிட்டுத் தன்னைப் பார்க்கச் சொன்னாள் அந்த நடுத்தர வயதுப் பெண்.

“லுக் சௌந்தரியா. நீயும் உன்னோட பொருட்கள எடுத்துகிட்டு இங்கேயிருந்து கிளம்பலாம். உன்னைய இந்த வேலையிலிருந்து தூக்கி பதினஞ்சு நிமிசமாச்சு. சீக்கிரம் கிளம்பு.” என்றபடி அவ்விடத்தைவிட்டு நகர எத்தனித்தவள், அப்பொழுது தான் ஷின்னை கவனித்தாள். புருவங்களில் முடிச்சு விழ ஷின்னைப் பார்த்தவள்,

“யார் நீ? இங்கே எப்படி வந்த?” என்று கேட்கவும், ஷின்னின் மூளைக்கு ஒரு யோசனை வந்தது. நிகழ்ச்சியைவிட்டு கிளாரா சென்ற பிறகு, அவளது இடத்தை நிரப்ப, அந்தப் பெண்மணி எப்படியேனும் ஆள்தேடும் படலத்தில் ஈடுபடுவாள். கிளாராவிற்கு பதிலாக, எப்படியேனும் ‘தான்’ நுழைந்துவிட்டால், தன்னுடைய சினிமா கதாநாயகன் கனவு நிறைவேறும் வாய்ப்பு கிடைக்கும்.. அதுமட்டுமல்லாமல், அவன் அப்படிச் செய்தால், சௌந்தரியாவின் வேலையும் பறிபோகாமலிருக்கும், என்றுணர்ந்தவன்.. அந்நடுத்தர வயது பெண்மணியை நோக்கி,

“நான் தான் அந்த 15 போட்டியாளார்கள்ல ஒருத்தன்.....” என்று தன்னுடைய வசீகர மந்திர புன்னகையை உதிர்த்தான். அவனின் புன்னகையை கவனித்த அப்பெண்மணி, தலையை உலுக்கிவிட்டு, புருவங்கள் சுருங்க மேலும் யோசனையில் ஆழ்ந்தவளாக,

“உன்னைய இதுக்கு முன்னாடி டிவியில எந்த நிகழ்ச்சியிலும் பார்த்ததில்லையே!!!” என்று யோசனையாக அப்பெண்மணி கேட்கவும்,

“நான் டிவியில இதுக்கு முன்னாடி வந்ததே இல்ல தான். ஆனா, இந்த முறை என்னைய போல சாதாரண மக்கள்ல ஒருத்தன, 15 போட்டியாளர்கள்ல ஒருத்தனா சேர்த்துகிட்டா, இதுவரை இந்த ஷோ-வ பார்க்காத மக்களும் பார்க்க ஆரம்பிப்பாங்க. உங்க ஷோ-வோட டி.ஆர்.பி ரேட்-டும் கூடும். என்ன சொல்லுறீங்க மேடம்?” என்று தனது இடப்பக்க புருவத்தை மட்டும் மேலேற்றியப்படி ஷின் கேட்கவும், சற்று யோசனையுடன், தன் தாடையை தடவியபடி சௌந்தரியாவைப் பார்த்த அப்பெண்மணி,

“இவன் சொல்லுறத பத்தி நீ என்ன நினைக்குற சௌண்ட்?” என்று ‘சௌந்தரியா’ என்ற அழகான பெயரை, சுருக்கி ‘சௌண்ட்’ என்றழைத்த அப்பெண்மணியின் வார்த்தையில் விழித்தெழுந்தவளைப் போல், கண்களை விரித்துப் பார்த்தாள் சௌந்தரியா. அவளின் முகத்திற்கு முன் விரல்களால் சொடுக்கிட்டு, அவளை அழைத்த அப்பெண்மணி, “உன்னத் தான் கேட்குறேன்... இவன் சொல்லுறத பத்தி என்ன நினைக்குற? இவன, நிகழ்ச்சியில கிளாராவுக்கு பதிலா சேர்த்துக்கலாமா?” என்று கேட்கவும், சௌந்தரியாவின் மனதிலேனோ சந்தோசம் பொங்கியது. அவனின் அருகாமை ஏனோ சௌந்தரியாவின் மனதிற்கு இதமாக இருந்தது. ஷின், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், அவனைத் தினமும் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும் என்ற யோசனை அவளுக்கு வந்தது.

“எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள்ல நூற்றுக்கு நூறு உண்மையிருக்குறது போல தோணுது ஜெனிபர் மேடம். புது முயற்சியா, மக்கள்ல ஒருத்தர நம்ம ஷோ-ல சேர்த்துகிட்டா, நம்ம ஷோ-வோட டி.ஆர்.பி ரேட்-ம் கூடும்.... இந்த ஷோ-வோட பிரடியூசர்-ம் உங்கள புகழ்ந்து, உங்களோட சம்பளத்த ஏத்துவார். ஒரு சீனியர் டைரக்டரா, இப்போ நீங்க வாங்குற சம்பளத்தவிட ரெண்டு மடங்கு அதிகம் வாங்குற வாய்ப்பிருக்கு. அதுனால, இவர இந்த ஷோ-ல நம்ம சேர்த்துக்கலாம்.” என்று சௌந்தரியா கூறவும், மறுபேச்சு பேசாமல், ஜெனிபர் என்றழைக்கபடும் அந்த சீனியர் டைரக்டர்.. சௌந்தரியாவின் கூற்றினை ஒப்புக்கொண்டாள்.

“ஓகே மேன்... நீயும் இந்த ஷோ-ல கலந்துக்குற... இன்னைக்கே, இப்போவே உன்னைய இந்த ஷோ-குள்ள சேர்த்துக்குறேன். சௌந்தரியா!! இவன பங்களாக்குள்ள கூட்டிட்டு வா. இவனோட இந்த டர்டி டிரஸ்-ஸ மாத்திட்டு, இவன் பெயர், முகவரி, வயதுனு எல்லா டீடெயில்ஸ்-ஸையும் எழுதி எங்கிட்ட இன்னைக்கு ஈவ்னிங் சப்மிட் பண்ணு.” என்று கூறிவிட்டு நகர்ந்தவள், நின்று அசையாமல் அவ்விடத்திலேயே சிலையாக நின்றுகொண்டிருந்த சௌந்தரியாவைப் பார்த்து, ‘என்ன?’ என்பதுபோல் சைகையால் ஜெனிபர் கேட்க, அதற்கு அவள் பதிலளிக்காமல் அப்படியே நிற்கவே,

“என்ன அப்படியே நிக்குற சௌண்ட்? உன் வேலை உனக்கு தான். இது போல அருமையான ஐடியாவ கொடுத்த உன்னைய வேலையவிட்டு தூக்குனா, என்னைய போல முட்டாள் வேற யாருமிருக்க முடியாது. ஒழுங்கா, பங்களாக்குள்ள எங்களோட பழைய.... வேலையில துடிதுடிப்பான... சௌண்ட்-டா வா.” என்று கூறிய ஜெனிபரின் வார்த்தைகளில் சந்தோசம் தெரிந்தாலும், முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காமலிருப்பதைக் கவனித்தான் ஷின்.

சௌந்தரியாவிற்கு இரட்டைச் சந்தோசம். ஒன்று, அவள் வேலை பறிபோகவில்லை. மற்றொன்று ஷின்னின் அருகாமை. கண்கள் மின்ன ஷின்னை நோக்கியவள்,

“நீங்க ரொம்ப லக்கி. உங்கள போல மக்கள்ல ஒருத்தர், இதுவரைக்கும் இந்த ஷோ-ல கலந்துக்கிட்டதில்ல. நீங்க தான் ஃபர்ஸ்ட் மேன். வாழ்த்துகள். ஓர்லியன் பங்களா, உங்கள அன்போட வரவேற்குது மிஸ்டர்.........” என்று அவள் இழுக்க..

“ஷின்... ஜியாங் ஷின்” என்று தன் பற்கள் தெரிய சிரித்தவனின் புன்னகையில் மயங்கித்தான் போனாள் சௌந்தரியா.

“நைஸ் நேம்...” என்று புன்னகைத்தபடி ஷின்னிற்கு மட்டும் கேட்கும் வகையில் ஹஸ்கி குரலில் கூறியவள் ஏதோ நினைவு வந்தவளாக, தன் தலையை உலுக்கிவிட்டு, தொண்டையை செருமிவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தாள். “ஓகே மிஸ்டர் ஷின். உங்க வலது காலெடுத்து வச்சு, இந்த ஓர்லியன் பங்களாகுள்ள வாங்க.. அதுவும் ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியோட போட்டியாளராக...” என்று தன் செவ்விதழ் விரியச் சௌந்தரியா கூறவும், ஷின்னிற்கு மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. தன்னுடைய நீண்ட நாள் கனவை அடைவதற்கான முன்னேற்றப் பாதையில் கால் தடம் பதிக்கிறான். கூடுதல் சலுகையாக, அந்தக் கனவை அடையப்போகும் பாதையில் சௌந்தரியாவின் துணையிருப்பு...

மகிழ்ச்சியில் அவனது ஆழ்மனம், வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தது. அதே சந்தோசத்துடன், அங்கே நிகழவிருக்கும் விபரீதங்கள் தெரியாமல், ஓர்லியன் பங்களாவின் வாசற்படியில் தன் காலடியை எடுத்துவைத்தான் ஷின்.



அடுத்த மிரட்டலான அத்தியாயத்துடன்.....

வார்த்தைகளின் எண்ணிக்கை :- 1,270.
 

Priyamudan Vijay

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
9
Points
3
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 3

ஷின்னின் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. தன்னுடைய நீண்ட நாள் கனவை அடைவதற்கான முன்னேற்றப் பாதையில் கால் தடம் பதிக்கிறான். கூடுதல் சலுகையாக, அந்தக் கனவை அடையப்போகும் பாதையில் சௌந்தரியாவின் துணையிருப்பு...

மகிழ்ச்சியில் அவனது ஆழ்மனம், வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தது. அதே சந்தோசத்துடன், அங்கே நிகழவிருக்கும் விபரீதங்கள் தெரியாமல், ஓர்லியன் பங்களாவின் வாசற்படியில் தன் காலடியை எடுத்துவைத்தான் ஷின்.

ஷின்னிடம், தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சௌந்தரியா கூறிவிட்டு, விறுவிறுவென்று பங்களாவிற்குள் சென்றாள். பங்களாவிற்குள் சென்ற ஷின்னின் கவனத்தை அப்பங்களாவின் இன்டீரியர் மிகவும் கவர்ந்தது. கூடத்திற்குள் வந்தவன், தனக்கு முன்னே சென்ற சௌந்தரியாவைத் தேட... அவளோ கூடத்திலுள்ள எட்டு அறைகளில் ஓர் அறையிலிருந்து பரபரப்பாக வெளியே வந்தாள். அவள் கையில் கொத்துக் கொத்தாகக் கோப்புகள் தென்பட்டன. அதிலிருக்கும் காகிதங்களை, புரட்டிப்பார்த்தபடி தன்பக்கம் வந்து நின்றவளை தன் இடப்பக்க புருவத்தை மட்டும் உயர்த்தி, கேள்வியாகப் பார்த்தான் ஷின்.

காகிதங்களைப் புரட்டிப்பார்த்த சௌந்தரியா, ஷின் தன்னைக் கேள்வியாகப் பார்ப்பதைப் புரிந்துகொண்டவளாய்,

“என்ன யோசனை?” என்று கேட்டுவிட்டு மீண்டும் தன் கவனத்தை அந்தக் கோப்புகளில் திருப்பினாள்.

“மேடம், ரொம்பப் பிஸியோ?” என்று குனிந்தபடிக் கோப்புகளைப் புரட்டியவளின் முகத்தைப் பார்த்துக் கேட்டான் நாயகன். அவனது கேள்வியில் லேசாகத் தன் தேனிதழ் மலரப் புன்னகைத்தவள்,

“பிஸி-லாம் இல்ல. ஆனா ரொம்ப முக்கியமான ஒருசில விசயங்களத் திரட்டி உனக்காக இங்கே கொண்டுவந்திருக்கேன்.” என்றவள் கோப்புகளனைத்தையும் மூடிவிட்டு, தன் கோட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு எதையோ தேடினாள்.

“முக்கியமான விசயங்கள எனக்காகக் கொண்டுவந்திருக்கீங்களா? அப்படி என்ன விசயம்?” என்று தன் இருபுருவங்களையும் சுருக்கியபடி ஷின் கேட்க, அதற்கு சௌந்தரியா பதிலளிக்குமுன், சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டாள். அவள் பார்த்த விதத்திலேயே, ‘அக்கூடத்தில் தங்களிருவரைத் தவிர வேறு எவரும் இருக்கின்றனரா?’ என்பதை உறுதிச் செய்வது ஷின்னிற்கு நன்கு விளங்கியது.

அவ்வாறு உறுதிசெய்துகொண்ட பின்னர், அவன் கையில் அந்தக் கோப்புகளை வைத்துவிட்டு, “ஷின், இதுல, இந்தப் போட்டியிலக் கலந்துக்குற 14 போட்டியாளர்கள் பத்தின எல்லா விவரங்களும் இருக்கு.” என்று மிகவும் சன்னமான குரலில் சௌந்தரியாக் கூற..

“ஓஓஓஓ......” என்று கூறியபடி, அந்தக் கோப்புகளில் ஒன்றினை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். முதல் பக்கத்தில் ‘ஜெரோம்’ என்ற பெயர் தடிமனான எழுத்துக்களில் எழுதியிருந்தது. அப்பெயரைச் சத்தமாக வாய்விட்டு ஷின் வாசிக்க,

“ஸூ...ஸூ...” என்றபடி சௌந்தரியா அவனை அமைதிகாக்கும்படி சைகைக் காட்டினாள். “ஷின், இதுபோல ஒரு போட்டியாளரோட விவரங்கள, இன்னொரு போட்டியாளார்கிட்டக் காட்டுறது, இந்த ஷோவோட விதிமுறைப்படி தப்பு. ஆனா, நான் அந்த விதிமுறைலாம் மீறி உனக்காக இதை இங்கே எடுத்துட்டு வந்திருக்கேன். உனக்காக....” என்று இன்னும் சன்னமாக அவள் கூற, ‘ஏன்?’ என்பதுபோல் அவன் கேள்வியாக மீண்டும் சௌந்தரியாவை நோக்கினான்.

“இன்னைக்கு... நான் இந்த வேலைல இருக்கேன்னா, அதுக்கு முழுக்காரணமும் நீ தான். நீ மட்டும் இன்னைக்கு எனக்காகப் பேசலைனா, என்னைய இந்த வேலைல இருந்து தூக்கிருப்பாங்க. இந்த வேலையவிட்டா ஆயிரம் வேலைக் கிடைக்கும் தான். ஆனா, இந்த வேலைல நான் படிப்படியா முன்னேறி இன்னைக்கு நான் வாங்குற சம்பளத்த, எடுத்தவுடனே வேற எந்த வேலைலயும் தரமாட்டாங்க. இந்த அளவு சம்பளத்த வாங்க, நான் மறுபடியும் சில வருசம் உழைக்கணும். அதுனாலையே எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியமான ஒன்னு. அப்படிப்பட்ட வேலைய பறிபோகாம நீ பார்த்துகிட்ட... அதுக்கு நன்றி செலுத்துற விதமா, உனக்கு இந்த நிகழ்ச்சியோட இறுதுச்சுற்று வரைக்கும் ஏதோ வகைல உதவலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். நீ இந்தப் போட்டியில கடைசி வரைக்கும் கலந்துக்கணும்னு ஆசைபடுறேன். நீ ஜெயிக்கிறியோ இல்லையோ, இந்த நிகழ்ச்சியோட ஃபைனலிஸ்ட்-ல ஒருத்தராவாவது நீ வரணும்னு நினைக்குறேன். அதுக்கு என்னாலான சில உதவிகள, சிலபல விதிமுறைகள்ல மீறி உனக்காக நான் செய்யப்போறேன். அந்த மாதிரி ஒரு வகையான உதவி தான் இந்தப் போட்டியாளார்களோட விவரங்கள். இந்த போட்டியோட முக்கியமான ஒரு விசயமே, ‘ஒரு நபர், மீதமுள்ள 14 பேரையும் சமாளிச்சுக் கடைசிவரைக்கும் வர்றாரா?’-னுப் பார்க்குறது தான்.” என்று சௌந்தரியா பேசிக்கொண்டிருக்கும்போதே அவளைப் பேசவிடாமல் தன் சந்தேகத்தைக் கேட்டான் ஷின்.

“14 பேர சமாளிக்குறது என்ன, அவ்வளவு பெரிய வித்தையா? நான் ஒரு மேனேஜர். எனக்குக் கீழ நிறையத் தொழிலாளர்கள் இருக்காங்க. அத்தனை பேரையும் நான் நல்லாவே சமாளிச்சிருக்கேன். என்னோட வேலைப்பார்க்குறவங்களோட எண்ணிக்கையக் கணக்கு பண்ணா, அது இந்த 14 பேரவிட ஜாஸ்தியா வரும். அத்தனை பேரையும் சமாளிச்ச என்னால, இந்த 14 பேர சமாளிக்க முடியாதா? அதுக்கு, இதுபோல விசயங்கள திரைக்குப்பின்னாடி செஞ்சாகணுமா?” என்று கேட்டவன், அந்தக் கோப்பை மூடினான். அவன் கூறியதை ஏற்பதுபோலத் தன் தலையை மேலும் கீழுமாய் ஆட்டிய சௌந்தரியா,

“நீ சொல்லுறதெல்லாம் சரி தான். உன்கூட வேலைச் செய்யுறவங்கள சமாளிச்ச உன்னால இவங்கள சமாளிக்க முடியும் தான். ஆனா, நீ மிஞ்சிப் போனா.. உன் ஆபீஸ்-ல எவ்வளவு மணி நேரம் இருப்ப? குறஞ்சது 12 மணி நேரம்? அப்பறம், நீ உன் வீட்டுக்குப் போயிருவ. மறுபடியும் அவங்கள நீ அடுத்த நாள் காலைல தான் பார்ப்ப.. அதே ஆட்கள, நீ 24 மணிநேரமும் பார்த்து, பேசிப் பழகமாட்ட.. ஒரு சராசரி மனிதன், தன்னுடைய உண்மையான குணத்த, அதிக நேரம் தன்கூடச் செலவளிக்குறவங்ககிட்டத் தான் காட்டுவான். அவன் உண்மையான உணர்வுகள, தன்னோட வீட்டுல இருக்குறவங்கக் கிட்டத் தான் காட்டுவான். கோபமாயிருந்தாலும், தன்னோட குடும்பதுட்டத் தான் காட்டுவான்... அழுகையா இருந்தாலும் தன்னோட குடும்பத்துல இருக்குறவங்கக் கிட்டத் தான் காட்டுவான். காரணம், தன்னோட அதிக நேரம் செலவுப் பண்ணுறவங்கக் கிட்ட, ரொம்ப நேரம் முகமுடி அணிஞ்சு வாழ முடியாது. அதே போலத் தான், உன்கூட 100 நாள் வாழப்போற இந்த 14 போட்டியாளர்களும்.. ரொம்ப நாளைக்கு அவங்கனால, பொய்யான முகமூடியப் போட்டுகிட்டு வாழமுடியாது. அப்படி, ஒவ்வொருத்தரும் அவங்களோட கோபம், துரோகம்னு அவங்கவங்க இன்னொரு முகத்த வெளிக்காட்டும்போது, ‘இவங்களப் போய் நம்ம நம்பிட்டோமே!!’-னு நீ நினச்சு, போட்டியிலக் கஷ்டப்பட்டுறக் கூடாது. அதுக்குத் தான் இதெல்லாம்.” என்று சௌந்தரியா விவரித்த விதம் ஷின்னை மேலும் அவள்புறம் ஈர்க்க வைத்தது.

“இப்போ புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இந்த விவரங்கள நீ உன் மொபைல்ல போட்டோ எடுத்துவச்சுக்கோ. வேணுங்குற அப்போ எடுத்துப்பார்த்துத் தெரிஞ்சுக்கோ...” என்று கூறியவள், ஷின்னின் மற்றொரு கையில் ஒரு புளூடூத் இயர்பீஸ்-ஐ கொடுத்தாள். “இதுவும் உனக்குத் தான். இது உன்கிட்ட இருக்கிறது, உன்னையவும் என்னையவும் தவிர வேற யாருக்குமே தெரியக்கூடாது. இதை உன் மொபைல்ல இருக்குற புளூடூத்-தோட கனெக்ட் செஞ்சுக்கோ.” என்று சௌந்தரியா கூறிக்கொண்டிருக்கும்போதே ஷின்,

“மொபைல்.. மொபைல்...னு சொல்லுறீயே, மொபைலத் தான் இந்த ஷோ-ல போட்டியிடுற நாங்க உபயோகிக்கக் கூடாதே! அப்பறம் எப்படி நான் இந்தப் புளூடூத், அப்பறம் போட்டியாளர்களோட விவரங்களிருக்குற போட்டோஸ்ஸலாம் பார்ப்பேன்?” என்று அவன் தன் சந்தேகத்தைக் கேட்க.. அதற்குச் சௌந்தரியா சிரித்து வைத்தாள். “என்ன ப்பா? சிரிக்குற? நான் என்ன காமெடியாப் பண்ணேன்?” என்று ஷின் கேட்கவும், தன்னுடைய சிரிப்பை அடக்கிக்கொண்டு சௌந்தரியா பேசத்தொடங்கினாள்.

“ஹய்யோ ஷின்...!!! இந்த மொபைல்ல போட்டியாளர்கள் உபயோகிக்கமாட்டாங்க-ங்கறதெல்லாம் சும்மா, மக்கள நம்பவைக்கச் சொன்னப் பொய்கள்ல ஒன்னு... இங்கே எல்லாப் போட்டியாளர்களும் மொபைல உபயோகிக்கலாம்... ஆனா... காமெரா ரோல் ஆகைல, கண்டிப்பா உங்க மொபைல மறச்சு வச்சுடணும். மக்களுக்கு நீங்க எல்லோரும் இந்தப் பங்களாக்குள்ள மொபைல் உபயோகிக்கிறது தெரியவே கூடாது. அவ்வளவு தான் விசயம்... இப்போ இதுல ஏதாவது சந்தேகம் இருக்கா?” என்று மெல்லிய புன்னகையோடு சௌந்தரியா கேட்க.. அதற்கு ‘இல்லை’ என்பதுபோல் தன் தலையை இடம்வலமாக ஆட்டினான் ஷின்.

“அப்போ சரி.. இப்போ மெயின் விசயத்துக்கு வருவோம். இந்தப் புளூடூத் இயர்பீஸ் எப்பவுமே நீ போட்டுட்டு இருக்கணும். இது வழியாத் தான், ஒருசில இக்கட்டான சூழ்நிலைகள்ல நீ எப்படிக் கையாளணும்னு சொல்லுவேன். நான் சொல்லுறது போல நீ செஞ்சா, இந்தப் போட்டியோட ஃபைனலிஸ்ட்டாக நீ எப்படியும் கண்டிப்பா வந்திருவ.” என்று சௌந்தரியா கூறவும் அவளை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இதெல்லாம் நமக்கு இவள் செய்யணும்னு அவசியமே இல்ல... ஆனாலும் இவ்வளவு ரிஸ்க்கான வேலைகள எனக்காக, நான் இந்த ஷோ-வோட முடிவு வரைக்கும் வரணுங்கறதுக்காகச் செய்யுறாள்...’ என்று எண்ணியவன் தன்னை மறந்து அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதுவரை அதனைக் கவனியாத சௌந்தரியா, ஷின்னிடமிருந்து எவ்விதப் பதிலும் வராமலிருப்பதைக் கவனித்து, அவனது முகத்தை ஏறிட்டாள். அவன் இமைக்காமல் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டுகொண்டவளின் பெண்மனம் நாணம் கொண்டது. வெக்கத்தில் முகம் சிவக்கக் கீழே குனிந்தவள்,

‘என்ன இப்படிப் பார்த்துவக்கிறான்...???!!!’ என்று தன் மனதிற்குள் பேசியவள், ஷின்னின் முகத்தைப் பெயருக்குக்கூட நிமிர்ந்துப் பார்க்கவில்லை. சௌந்தரியாவின் வெக்கம், ஷின்னிற்குக் குஷியை கிளப்ப, அவளை நெருங்க எத்தனித்தபோது....

“ஹாய்..... சௌண்ட்...!!!!’ என்று ஓர் ஆணின் குரல் அங்கே நிலவிய அமைதியைக் கிழித்தது.

‘எவன் டா அவன்?’ என்று தன் மனதிற்குள் குமுறிய ஷின், நிமிர்ந்து சத்தம் வந்த திசையை நோக்கினான். கூடத்தின் இடப்புறத்தில் இருக்கும் படியிலிறங்கியப்படி ஓர் உயரமான ஆடவன் அவர்கலிருவரையும் நோக்கி வந்துக்கொண்டிருந்தான்.

‘ம்ம்ச்ச்.... எங்களோட ரோமேன்டிக் மொமென்ட்ட கெடுத்த அந்தக் கரடி, நீ தானா?’ என்றெண்ணியபடி ஷின் அந்த உயர்ந்த மனிதனைப் பார்க்க, சௌந்தரியாவோ ஷின்னின் கையைத் தன் தோள்பட்டையை வைத்து இடித்தாள். அவள் தன்னை இடித்த விதத்தில், காதலின் ஆர்ப்பரிப்பில் சிக்கித்தவித்துத் தன்னை ஆசையாக.. காதலுடன் இடிக்கிறாள் என்று தவறாகப் புரிந்துக்கொண்ட ஷின், தன் பலத்தை உபயோகித்து, சௌந்தரியாவைத் தன் தோள்பட்டையால் ஒரு இடி இடித்தான்.

அவன் இடித்த வேகத்தில் தடுமாறிப்போன சௌந்தரியா... ஷின்னை நோக்கி, ‘ஏன்ன்ன்ன்...?’ என்பது போல் பாவமாகப் பார்க்க... அவனோ காதலின் உணர்ச்சியில் அகப்பட்டுக்கொண்டவனாக, தரையைப்பார்த்துச் சிரித்து வைத்தான். ஷின்னின் இந்த முகபாவம் முதலில் சௌந்தரியாவிற்கு விளங்கவில்லை. பின், தற்போது நடந்தவைகளை மீண்டும் எண்ணிப்பார்த்தவள்,

‘அடக்கடவுளே!!! இவனை இரகசியமா அழைக்குறதுக்கு இடிச்சேன். இவன் என்னடானா, நான் லவ்வோட ஆசையா இடிச்சேன்னு நினச்சு என்னைய, அதே காதலோட இடிச்சுக் கீழத் தள்ளிவிடப்பார்த்தானா? அட எருமைப்பயலே!!!!’ என்றெண்ணியபடிப் பெருமுச்சுவிட்டவள், காதலாகி... கசிந்துருகி நின்னவனின் தோளை லேசாகச் சொறிந்து,

“ஷின்.... நான் சொல்லுறதக் கவனி.. அப்பறம் கூட, உன் ரூமுக்குப் போய் வெக்கப்பட்டுக்கோ.” என்று சௌந்தரியா கூறியதைக் கேட்ட ஷின்னிற்கு மனதிற்குள் சோகமான பின்னணி இசையே ஓடியது.

“இவன் தான் ஃபர்ஹான் அக்தர். பாகிஸ்தான்னச் சேர்ந்தவன். அங்கே ஒரு சீரியல்ல நடிச்சுட்டு வர்றான். பாகிஸ்தான்ல இருக்குற கோடீஸ்வரங்கள்ல இவன் அப்பாவும் ஒருத்தர். பிறவி பணக்காரனான இவனுக்கு சினிமா ஆசைலாம் இல்ல. பெயரும் புகழும்னா, இவனுக்கு உயிர். அந்தப் பெயரும் புகழுக்காக இவன் எவ்வளவு கீழ கூட இறங்குவான். உதாரணத்துக்கு இவன் செஞ்ச ஒரு விசயத்தச் சொல்லுறேன். போன வருசம் இவன் ஹீரோவா நடிச்ச ‘மேரா பியார் பாத்திமா’ ங்கற சீரியல்ல இவன் கூட நடிச்ச ஹீரோயின் வேற ஒரு பையன லவ் பண்ணிருக்கு. அந்தப் பையன் ஒலிம்பிக்ல ஓட்டப்பந்தயத்துலக் கலந்துகிட்டு வெங்கலப்பதக்கம் வாங்குனவன். அதனாலையே இவங்க ரெண்டுப் பேரோட காதல், அவங்க ஊரு முழுக்கப் பேசப்பட்டுச்சு. இந்த ஃபர்ஹான், அதுவர செஞ்சக் கேவலமான காரியங்கள்லையே, இவங்கக் காதல் விசயத்துல செஞ்ச விசயம்தான் ரொம்பக் கேவலமான காரியம். ஹீரோயினோட காதல, தன்னோட பெயருக்காகவும் புகழுக்காகவும் கெடுத்துவிட்டான். அவளோட காதலப் பிரிச்சுட்டான்.” என்று சௌந்தரியா கூறிக்கொண்டிருக்கும்போதே அந்த ஃபர்ஹான் அவர்களை நெருங்கிவர, அமைதியானாள் அவள்.

“சௌண்ட், ஒன் ஹெல்ப் யா. நான் எப்பவும் ஐஸ் வாட்டரையே குடிச்சு வந்தவன்... அங்கே என் ரூம்ல நீங்க வச்சிருக்குற வாட்டர்லக் கொஞ்சம் கூடக் கூலிங்கே இல்ல. எனக்காக, என்னோட ரூமுக்கு மட்டும் சின்னதா ஒரு பிரிட்ஜ் வைக்க முடியுமா?” என்று அவன் கேட்கவும் கடுப்பான சௌந்தரியா,

“ஃபர்ஹான் சாகிப்.... முதல்ல உங்ககிட்ட நான் சொல்ல விரும்புறது என்னனா, என்னைய ‘சௌண்ட்’னு நீங்க கூப்பிடாதிங்க. ரெண்டாவது, உங்களுக்குனுத் தனியா பிரிட்ஜ்லாம் வைக்க முடியாது. எங்கள் சீனியர் இதுக்குலாம் அனுமதித் தரமாட்டாங்க. உங்களுக்கு வேணும்னா, நீங்களே கீழ இறங்கி வந்து கிட்சன்ல இருக்குற பிரிட்ஜ்ஜத் திறந்து, ஐஸ் வாட்டர எடுத்துக்கோங்க.” என்று வராத புன்னகையை வரவழைத்து ‘ஈஈஈஈ’ என்று போலியாக இழித்துவைத்தாள் சௌந்தரியா.

“ஓ.. இட்ஸ் ஒகே.. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்.. அண்ட், என்னைய ‘சாகிப்’னுக் கூப்பிட வேண்டாம் மிஸ்.சௌந்தரியா... சாகிப்-லாம் எங்கள் நாட்டுல எனக்குக் கீழ இருக்குறவங்க என்னைய கூப்பிருற முறை. நீ என்னோட ப்ரெண்ட். ஸோ, சாகிப்னுக் கூப்பிடாத. சரியா?” என்று கூறியவன், அவ்விடத்தை விட்டு நகரப்போக.. ஒரு வினாடி நின்று.. திரும்பி ஷின்னைக் கேள்வியாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, “யார் இது? இங்கே வந்ததுல இருந்து, இவன இங்கே நான் பார்க்கவேயில்லையே!” என்று சௌந்தரியாவிடம் ஃபர்ஹான் கேட்க... அதற்கு ஷின், தாமே முன்வந்து பதிலளித்தான்.

“பாஸ்... என் பெயர் ஜியாங் ஷின். ஷார்ட்டா, ஷின்னு கூப்பிடுவாங்க. இந்த நிகழ்ச்சியிலக் கலந்துக்குற 15 போட்டியாளர்கள்ல நானும் ஒருத்தன்.” என்று முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் மின்னக் கூறியவன், மரியாதை நிமித்தமாக, கைக் குலுக்க, தன் கையை ஷின் நீட்ட... அதனைத் தட்டிவிட்ட ஃபர்ஹான், அவனை ஆறத்தழுவிக்கொண்டான்.

“வெல்கம் டூ ஓர்லியன் பங்களா மிஸ்டர்.ஷீ....!!!” என்று ஃபர்ஹான் கூற, திருக்கிட்டவனாக ஷின், அவன் பிடியிலிருந்து விலகி ஃபர்ஹானை விசித்திரமாகப் பார்த்து வைத்தான். அதனைக் கண்ட ஃபர்ஹான், “என்ன அப்படிப் பார்க்குற ஷீ? ஓ!!! உன்னைய ஷீ ஷீ-னு ஏன் கூப்பிடுறேன்னு பார்க்குறீயா? உன்னைய ஷின்னு கூப்பிடுறது ரொம்ப சிரமமாவும் கஷ்டமாவும் இருந்துச்சு. அதான் ஷார்ட்டா, ஷீ-னுக் கூப்பிட்டேன்.” என்று ஃபர்ஹான் கூறவும் ஷின்னிற்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

‘அட நாரப்பயலே!!! ஷின்-ங்கற ரெண்டே எழுத்துக்கொண்ட வார்த்தைய சொல்ல உனக்குச் சிரமமா இருக்கா?’ என்று தன் மனதிற்குள் புலம்பிய ஷின்,

“ஹிஹிஹிஹி... ஃபர்!! என்னாலப் புரிஞ்சுக்க முடியுது.” என்று ஷின்னும் ‘ஃபர்ஹான்’ என்ற பெயரைச் சுருக்கிக் கிண்டலாக ‘ஃபர்’ என்றழைக்கவும் ஃபர்ஹானின் முகம் கருத்தது. சற்று நேரத்திலேயே தன் முகத்தைச் சிரித்த முகமாய் மாற்றியவன், ஷின்னிடம்,

“ஓகே ஷின். நான் கிளம்புறேன். பை சௌந்தரியா.” என்று கூறிவிட்டு விடைப்பெற்றுக்கொண்டான் ஃபர்ஹான். அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த சௌந்தரியா, ஷின் பக்கம் திரும்பி,

“ஷின், இவன் கிட்டக் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. இவன் நல்லவனே இல்ல. கொஞ்சம் தள்ளியே இரு.” என்று சௌந்தரியா தன் அடிக்குரலில் கூற..

“ம்ம்.. காதலர்கள்லப் பிரிக்குறதே பெரிய பாவம். அப்பவே புரிஞ்சுகிட்டேன். இவன் எவ்வளவு மோசமானவன்னு.” என்று ஷின், ஃபர்ஹான் முதல் தளத்திலிருந்த அவனது அறைக்குச் செல்வதைப் பார்த்தபடிக் கூறினான். அதற்கு சௌந்தரியா, ஷின்னின் புறம் திரும்பி,

“நீ இன்னும் அவனப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கல ஷின். அந்தப் பொண்ணோட காதல்ல எப்படிப் பிரிச்சான்னுத் தெரியுமா உனக்கு?” என்று சௌந்தரியா கேட்கவும், தன் புருவங்களைச் சுருக்கி அவளை நோக்கினான் ஷின். சௌந்தரியாவோ நீண்டப் பெருமூச்சு ஒன்றை விட்டு, பேசத் தொடங்கினாள்.

“இவன் எப்படிப்பட்டவன்னு உனக்கு இப்போ நல்லாவே தெரிஞ்சிடும் ஷின். ஃபர்ஹான் கதாநாயகனா நடிச்ச அந்த சீரியல்லோட ஹீரோயின் பொண்ணோட காதல்ல எப்படிப் பிரிச்சான் தெரியுமா? ஒரு கேவலமான வழிமுறையப் பின்பற்றிப் பிரிச்சுவிட்டான். ஒருமுறை இவனுக்கும் அந்த ஹீரோயினுக்கும் ரொம்ப நெருக்கமான காட்சிய வைக்கச் சொல்லி... அந்த சீரியல் டைரக்டர்கிட்ட இவனாப் போய்க் கேட்டிருக்கான். அப்படி வைக்கலனா, அவன் அந்த சீரியல்ல இருந்து விலகிக்குறேன்னு மிரட்டிருக்கான். இவன் இந்த சீரியல்ல நடிக்குறதுக்காகவே நிறைய இளம்பெண்கள் அந்த சீரியல்ல விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சு, அந்த சீரியலோட டி.ஆர்.பி ரேட் கூடிருச்சு. அதுனால அந்த டைரக்டரும் வேற வழியில்லாம, ஃபர்ஹான் கேட்டத போல நெருக்கமான காட்சிய வச்சிருக்கார். அந்த சீன், டிவி-ல வந்தப்போ, அதப்பார்த்த நேயர்கள்.. ‘ஃபர்ஹானும் அந்த ஹீரோயினும் உண்மையான லவ்வர்ஸ் போலத் தெரியுறாங்க இந்த சீன்ல.. ஹீரோயின், ஃபர்ஹான்னப் பார்த்தப் பார்வைய... அவளோட காதலன்னு சொல்லுற ஒலிம்பிக் சாம்பியன்-னப் பார்த்துருக்குமானுத் தெரியல... அந்தப் பொண்ணோட காதல் விசயம் மட்டும் யாருக்கும் தெரியாம இருந்திருந்தா, ஃபர்ஹான்னும் இந்தப் பொண்ணும் தான் உண்மையான லவ்வர்ஸ்னு நினச்சிருப்போம்.’–னுலாம் பேச்சுக்கள் உலா வந்துச்சு. இந்தப் பேச்சுக்கள கேட்ட மீடியா, ஃபர்ஹான்-அ நேர்ல சந்திச்சு, அந்த ஹீரோயினுக்கும் ஃபர்ஹானுக்கும் நிஜமாகவே காதல் மலர்ந்துச்சா?’-னுக் கேட்டிருக்காங்க. புகழாசைப் பிடிச்ச இவன், ‘ஆமா.. நாங்க ரெண்டுப் பேரும் லவ் பண்ணுறோம். சமீபத்துல டெலிகாஸ்ட் ஆன சீன்-அ பார்த்திருந்தாலே தெரிஞ்சிருக்கும். ஹீரோயின் முகத்துல என்மேல இருக்குறக் காதல் ரொம்ப நல்லாத் தெரிஞ்சுருக்கும். அது ஒன்னுப் போதாதா? நானும் அவங்களும் உண்மையாக் காதலிக்குறோம்னு?’ அப்படிச் சொல்லிட்டு மறுவார்த்தைப் பேசாம ஓடிட்டான். இவனோட இந்தப் பேச்சுக்கள்ல அந்த ஊர் புத்தகங்கள்-ல அட்டப்படமாப் போட்டுத் தாக்கிட்டாங்க. இதெல்லாம் பார்த்த அந்த ஒலிம்பிக் சாம்பியன், அந்தப் பொண்ணுகிட்ட ‘என்ன ஏது’-னுக் கூடக் கேட்காம விலகிட்டான். மீடியாப் பசிக்கு இரையான அந்த ஹீரோயின், இதுக்குலாம் காரணமான ஃபர்ஹான்னப் பார்க்க அவன் வீட்டுக்குப் போனாள். அங்க அவன் இவகிட்ட என்ன சொல்லி மிரட்டுனான்னுத் தெரியல. அழுதுட்டே அமைதியாப் போயிருச்சு. அதுக்கப்பறம் அந்த சீரியல்ல அவள் கடமைக்கு நடிச்சுக் குடுத்துட்டுப் போனவ தான். என்ன ஆனாள்னு யாருக்குமே தெரியாது. அந்த சீரியல்ல நடிச்ச அப்பறம் இவன் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய ஆளாகிட்டான். ரசிக-ரசிகைகள் நிறையக் கிடச்சாங்க, அந்தப் பெயருக்காகவும் புகழுக்காகவும் தான் அந்தப் பொண்ணோட காதல்ல பிரிச்சான். அந்தக் காதல் முறிவுனாலையே அவளோட எதிர்காலமும் போச்சு.” என்று கூறிய சௌந்தரியாவின் மனம், அப்பெண்ணின் நிலையை எண்ணி லேசாகக் கண்ணீர் சிந்தினாள். அவளது கண்ணீரைத் துடைக்க எத்தனித்த ஷின், ஒரு நிமிடம் அப்படியே நின்று ‘இப்போது அவர்களது தனிமையைக் கெடுக்கும்படி வேறு எவரும் வருகின்றனரா?’ என்று பங்களாவை அந்நார்ந்து, சுற்றிப்பார்த்தான். எவருமே இல்லை என்பதை உறுதிச் செய்துக்கொண்டபின், சௌந்தரியாவின் கண்ணீரைத் துடைத்தான் ஷின்.

ஷின்னிடம், அவனது விவரங்களை வாங்கிய சௌந்தரியா, அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையைக் காட்டிவிட்டு, தனது பிறவேலைகளைச் செய்யக் கிளம்பியவள், நின்று ஷின்னைப் பார்த்து..

“இன்னைக்கு எந்த நிகழ்ச்சியும் இல்ல. நாளைக்குத் தான் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போகுது. நாளைக்கே நாமினேசன்ன அறிவிச்சிருவோம். நீ அதுக்குள்ள, உன்கிட்டக் கொடுத்த போட்டியாளர்களோட விவரங்கள்லப் படிச்சுத் தெரிஞ்சு வச்சுக்கோ. ம்ம்ம்? புளூடூத் இயர்பீஸ்-ச நாளைக்குக் காலைல இருந்து போட ஆரம்பி. அதுமூலமா உனக்கு நான் எப்படி நடந்துகணும்னு விவரங்கள்ல சொல்லுவேன். நாளைக்கு காலைல 12 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கும். காமெரா ஆன் பண்ண முன்னாடி, உங்கள் எல்லாருக்கும் ஸ்பீக்கர்ல அறிவிப்போம். நீங்க அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோங்க. டிவி-ல டெலிகாஸ்ட் பண்ணுற அப்போ, நாங்க அது காலை ஆறு மணி-னுக் காட்டுவோம். எல்லாம் புரிஞ்சுதா? ஏதாவது சந்தேகம்னா, என்னோட நம்பர்க்கு மெசேஜ் பண்ணு..” என்று கூறியவள், அவ்விடத்தை விட்டு அகலமுற்பட்ட பொழுது, அவளது மனம் ஏனோ ஷின்னைப் பார்க்கச் சொல்ல.. திரும்பி ஷின்னைப் பார்த்தாள். இவள் தன்னைப்பார்ப்பள் என்பதை எதிர்பாத்தவனைப் போல் அவனும், சௌந்தரியாவையே பார்க்க, முகம் சிவந்து அவ்விடத்தை விட்டு ஓடினாளவள்.

மறுநாள் நண்பகலில் 12 மணிக்கு ஆரம்பித்த படப்பிடிப்பு, அன்று சாயங்காலம் ஏழு மணியளவில் முடிவுற, ஷின் முதற்கொண்டு அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றனர்.

அன்று இரவு 11 மணிக்கு, ஓர் இளம்பெண்ணின் அலறல் சப்தம் கேட்கவே, ஓர்லியன் பங்களாவில் இருந்த அனைவரும் சப்தம் வந்த திசையை நோக்கிச் சென்றனர். மீண்டும் அப்பெண்ணின் அலறல் குரல் கேட்க... பங்களாவின் பின்புறத்தில் இருந்த அந்தத் தோட்டத்திலிருந்து தான் சப்தம் வருகிறது என்பதை அறிந்தவர்கள், வேகவேகமாக அத்தோட்டத்திற்குச் சென்றனர். அவர்களனைவரும் செல்வதற்குள் அப்பெண் அங்கே மாய்ந்துக்கிடந்தாள். அவளின் உயிரற்ற உடல் மட்டுமே அங்கே இருந்தது. அவள் உடல் முழுக்க, ஒரு விலங்கின் நகக் காயங்கள் இருந்தன. அவளின் ஆடை, அவ்விலங்கின் நகம்பட்டுக் கிழிந்துக்கிடந்தது. அப்பெண்ணின் கழுத்துப் பகுதிச் சதை, அவ்விலங்கின் பற்களால் கடித்தெறியப்பட்டது என்று தெரிந்தது.

பங்களாவிலிருந்த போட்டியாளர்களில் சிலர் அவரவர் கண்களை இறுக மூடிக்கொண்டனர். அப்படியிருந்தது, அப்பெண்ணின் நிலை. அவளின் இந்நிலையைக் கண்ட ஷின், சௌந்தரியாவிடம் சென்று,

“ஏன் பா இவங்களுக்கு இப்படி ஆச்சு? இவங்களுக்கு இந்த நிகழ்ச்சியில நல்ல வரவேற்பு வந்துச்சுனு, நம்ம சீனியர் டைரக்டர் ஜெனிபர் சொன்னாங்களே?! அதுக்குள்ள இவங்களுக்கு ஏன் தான் இப்படி நடந்துச்சோ?! இவங்களோட உடலப் பார்க்கைல ஏதோ விலங்கு வேட்டையாடிருக்குறது போலத் தெரியுது. என்ன விலங்கு இவங்கள இப்படிச் செஞ்சிருக்கும்? அதுவும் பங்களாவோட பின்பக்கத்துல என்ன விலங்கோட நடமாட்டம் இருக்கு?” என்று ஷின் கேட்கவும், அதுவரை அப்பெண்ணின் உயிரற்ற உடலைக் கண்டு கண்ணீர் வடித்தவள், ஷின்னின் கேள்வியில் அவனை நிமிர்ந்துப்பார்த்தவள்,

“எனக்கும் தெரியல ஷின். நிகழ்ச்சி டெலிகேஸ்ட் ஆகைல, எல்லா சோசியல் மீடியாலையும் நேயர்கள் இந்தப் பொண்ணப் பத்தித் தான் புகழ்ந்துப் பேசிட்டு இருந்தாங்க. அதவச்சுத் தான் ஜெனியே அப்படிச் சொன்னாங்க. நான் கூட இந்தப் பொண்ணு இறுதிச்சுற்றுக்கு வரும்னு நம்புனேன்.. ஆனா.....” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையடைத்தது. சௌந்தரியாவை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் ஷின் விழித்துக்கொண்டிருந்த வேளையில், ஓர்லியன் பங்களாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த வனப்பகுதியில் விலங்குகளின் வெறிக்கொண்ட நான்கு கண்கள், அப்பங்களாவைப் பார்த்துக்கொண்டிருந்தன.

நிகழ்ச்சி ஆரம்பித்த நாளன்றே அந்தப் பிரபலப் போட்டியாளரைக் கொன்ற மிருகம் எது? அந்தப் போட்டியாளர் ஏன் அவ்வேளையில் பங்களாவின் பின்புறத் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும்? இக்கேள்விக்கான பதிலை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..

வார்த்தைகளின் எண்ணிக்கை :- 2,122

Comments Link :-

https://www.sahaptham.com/community/threads/கூட்டத்தில்-எது-ஓநாய்-comments.448/
 

Priyamudan Vijay

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
9
Points
3
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 4



‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு, அன்று நண்பகல் 12 மணியளவில் நடக்கவிருந்த நிலையில், ஜியாங் ஷின் அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து உடற்பயிற்சிகளைச் செய்துமுடித்தான்.

‘இந்த ஷோ போட்டியாளர்களோட டீடெயில்ஸ்-அ படிப்போம்...’ என்றெண்ணியவனாக, சௌந்தரியா தந்த கோப்பினை எடுத்துப்படிக்க ஆரம்பித்தான். அதில் முதல் பக்கத்தில் ‘வாலன்டீனா’ என்ற ஒரு பெண்ணின் பெயர் இருந்தது. கீழே அவளது புகைப்படமும், அவளைப்பற்றிய விபரங்களும் இருந்தது. வாலன்டீனா என்பவள் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையின் மாடல் அழகி என்றும், அவள் ஆங்கில நாவல் கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவள் என்றும் இருந்தது.பத்திரிக்கைத்துறையில் மாடலானால், திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டும் என்று நம்பியவள், அம்முயற்சியில் தோற்றுப்போனாள். கடைசி முயற்சியாக இந்த ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியைக் கையிலெடுத்திருப்பதாக அந்நிகழ்ச்சி சீனியர் டைரக்டரான ஜெனிபரிடம் கூறியுள்ளாள் என்பதும் அக்கோப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவள் எழுதிய, ‘தி சீக்ரட் ஆஃப் மௌன்டைன் பேலஸ்’ என்ற திரில் நாவல், புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டு, பலரும் விரும்பிவாங்கினர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்க..

“அட! அந்த நாவல்ல எழுதுனது இவங்க தானா?” என்றெண்ணியவனாக அடுத்த பக்கத்தைத் திருப்பினான். இவ்வாறாக 14 போட்டியாளர்களின் முழு விவரங்களையும் படித்துமுடித்தவன்,

“உஷ்ஷ்... அப்ப்பா.... எல்லாத்தையும் ஒருவழியா வாசிச்சு பார்த்தாச்சு.” என்று பேசியவன், கால்களைத் தொங்கவிட்டபடி அப்படியே மெத்தையில் இருகைகளையும் விரித்துவைத்த நிலையில் சாய்ந்தான். திடீரென்று அவ்வீடு முழுக்கப் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியிலிருந்து ஓர் ஆண்குரல் கேட்டது.

“வணக்கம்! என் பெயர் ஜார்ஜ் வைல்டர். இந்த நிகழ்ச்சியோட தொகுப்பாளர்.. உங்களுக்கே தெரியும், இங்கே நிறைய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவோம்னு.. ‘என்னென்ன போட்டி, எப்பப்போ நடக்கும்? போட்டியோட விதிமுறைகள் என்ன?’ இப்படி எல்லா விவரங்களும் நான் காமெரா ரோல் ஆகவும் சொல்லுவேன். இன்னைக்கு மதியம் 12 மணிக்கு, நான் கூப்பிட கூப்பிட ஒவ்வொருத்தரா மேடைக்கு வந்து உங்கள நேயர்களுக்கு அறிமுகம் செய்யணும். இந்தப் பங்களாவோட இரண்டாவது மாடியில, அழகுக்கலை நிபுணர் பாத்திமா இருப்பாங்க. அவங்கள் தான் உங்களுக்கு மேக்கப்பிலிருந்து, டிரஸ்ஸிங் வரைக்கும் எல்லா அலங்காரங்களும் செஞ்சுவிடுவாங்க. காமெரா ரோல் ஆக முன்னாடியே நீங்கள் வரிசையா போய் மேக்கப் செஞ்சுக்கணும். இன்னைக்குத் திங்கட்கிழமை. இந்தவார சனிக்கிழமைல நடக்கவிருக்குற எலிமினேசன்கு, உங்க சக போட்டியாளர்கள்ல ஒருத்தவங்க இந்தப் போட்டியவிட்டு வெளியேத்தப்படுவாங்க. அதுக்கு நீங்கள் எல்லோரும் இன்னைக்கு ஒருத்தர நாமினேட் செய்யணும். கீழ் தளத்துல ‘ஒப்புதல் அறை’னு இருக்கும். அந்த அறைல தான் உங்களோட நாமினேசன சொல்லணும். இப்போ சொன்னதுல ஏதாவது சந்தேகம் இருக்கா?” என்று அந்த ஒலிபெருக்கியின் மூலம் தொகுப்பாளர் ஜார்ஜ் கேட்க.. ஷின் வேக வேகமாகச் சென்று, தன் டேபிளின் மீது வைத்திருந்த ‘காலர் மைக்கினை’ அணிந்துக்கொண்டு,

“எந்த சந்தேகமும் இல்ல ஜார்ஜ்” என்று தன்னுடைய ஆண்மை ததும்பும் குரலில் ஷின் பதிலளித்தான். அவனுக்கடுத்து அனைவரும் அவரவர் பதிலைக் கூறிமுடித்தனர்.

சற்று நேரத்தில் ஷின்னின் வயிற்றில் பசிப்பதற்குரிய அறிகுறிகள் தெரிய.. சௌந்தரியா அளித்த புளூடூத் இயர்பீஸை அணிந்துகொண்டு தன் அறையைவிட்டு வெளியே வந்து, சாப்பாட்டு அறையை நோக்கி நடந்தான். சாப்பாட்டு அறையில் ஓர் இளம்பெண் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் ஷின்னிற்கு அவள் யாரென்று தெரிந்துவிட்டது.

‘இது ரஷிகா தானே? தமிழ் பொண்ணு...’ என்றெண்ணியபடி, டைனிங் டேபிளுக்குச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அதற்குள் இயர்பீஸில் சௌந்தரியாவின் குரல் கேட்டது.

“ஷின், இவள் ரஷிகா. தமிழ் தான். இவளுக்கு நடிக்கணும்னுலாம் ஆசையில்ல. வேறேதோ குறிக்கோளோட வந்திருக்குறதா சொல்லிருந்தாள். கோபக்காரினு பேசும்போதே தெரிஞ்சுது. பார்த்துப் பேசு..” என்று கூறிவிட்டுச் சென்றாள். சௌந்தரியாவின் வாய்மொழிகளைக் கேட்ட ஷின், ரஷிகா புறம் திரும்பி..

“ஹாய்...” என்று பேச்சைத் தொடங்கி வைத்தான். அவளோ, முகத்தில் எவ்வித உணர்ச்சிகளுமின்றி அவனை ஏறெடுத்துப்பார்த்துவிட்டு தன் சாப்பாட்டுக்கடமையைத் தொடர்ந்தாள். சௌந்தரியாவின் உபயத்தால், ரஷிகாவின் குணமறிந்த ஷின், அவளின் பதிலை எதிர்பாராமல்...

“என் பெயர் ஜியாங் ஷின்.. உங்கள் பெயர்?” என்று உதட்டில் புன்னகைத்தவழ கேட்டவனை மீண்டும் ஏறேடுத்துப்பார்த்தவள்,

“ரஷிகா... கால் மீ ‘ராஷ்’” என்றுக்கூறிவளுக்கு அப்போதுதான் உறைத்தது, ஷின் தன்னிடம் தமிழில் உரையாடியது... முகத்தில் ஆச்சரியம் பொங்க ஷின்னின் பக்கம் திரும்பி, “நீங்கள் தமிழா?” என்று அவள் கேட்க..

“இல்ல.. நான் ஷின்.. என்னுடைய மொழி கொரியனும்-தமிழும். அதாவது, என்னுடைய தந்தை மொழி கொரியன். தாய்மொழி தமிழ்.” என்க.. எதிரே அமர்ந்திருந்த ரஷிகாவின் முகம், கடினம் நீங்கி மென்மையானது. அம்மாற்றத்தைக் கவனித்த ஷின்,

“நான் ஜோக் சொன்னேன்... அதுக்கு நீங்கள் சிரிப்பீங்கனு எதிர்ப்பார்த்தேங்க...” என்று கூறிய ஷின், தன் அடிக்கண்ணால் அவளின் பதிலை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தான். ஆனால் அவளோ,

“சிரிப்பு வந்தா, சிரிச்சிருக்க மாட்டோமா? எங்கள் ஊர் காமெடி நடிகர், சூரி மாதிரி பேசிட்டு, சிரிக்கலையானு கேள்வி வேற..” என்று அவள் உதட்டில் லேசான புன்முறுவலோடு தனக்குள் முணுமுணுத்தது, ஷின்னின் கூர்மையான செவிகளில் விழுந்துவிட..

“ஹாஹாஹா.. நான் கேட்டுட்டேன்.. நான் கேட்டுட்டேன்” என்று வாய்விட்டு சிரித்தபடி ஷின் கேட்டவிதத்தில் ரஷிகாவிற்கும் சிரிப்பு வர, மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவள், அதனை தன் கைக்கொண்டு மறைத்தபடி, ஷின்னிடம்..

“டைனிங்க்கு சாப்பிட வருவாங்க.. நீங்கள் இங்கே கடலை வறுக்க வந்தீங்களா?” என்று கேட்கவும், அதற்கும் ஷின் சிரித்தபடி ஒரு தட்டில் தனக்கு உணவை எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டுக்கொண்டே ஷின், ரஷிகாவிடம் பேச.. அவனின் வார்த்தைகளைக் கேட்டு, சிரிப்பை அடக்கியடக்கி பதிலுரைத்தாளவள். அந்நேரத்தில் ஃபர்ஹான் அங்கே வர... அங்கே ஷின்னின் பேச்சுகளைக் கேட்டு, ரஷிகா சிரிப்பை அடக்கி பேசுவதைக் கண்டான்.

“என்ன ஷின்?! நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன். நீங்கள் பொழுதன்னைக்கும் பொண்ணுங்க கூடத் தான் பேசிட்டிருக்கீங்க. இங்கே என்னையவும் சேர்த்து ஆறு பசங்க இருக்கோம். கொஞ்சம் பசங்க கூடவும் பேசலாம்..” என்றபடி ஃபர்ஹான், தனக்கொரு தட்டினை எடுத்துக்கொண்டான்.

‘வந்துட்டான் மாங்கா மண்டையன்..’ என்றெண்ணிய ஷின், “அதுல உங்களுக்கு ஏன் ப்ரோ இவ்வளவு வயித்தெறிச்சல்?” என்று வாய்விட்டே கேட்டு வைக்க.. முகம் கறுத்தான் ஃபர்ஹான்.

உணவை உண்டுமுடித்த ரஷிகா, கைக்கழுவச்சென்றாள். அவள் வாஷ்பேஸினில் தட்டினைக் கழுவுவதைக் கவனித்த ஃபர்ஹான், வேகமாக எழுந்து சென்று குப்பைப்பையில் தான் உண்டு மீதமிருந்த உணவினை கொட்டிவிட்டு ரஷிகாவிற்கருகில் நின்று, மற்றொரு குழாயில் கைகழுவியபடி,

“யூ லுக் பியூட்டிஃபுல். உன் பெயர் என்ன?” என்று ரஷிகாவிற்கு மட்டும் கேட்கும் வகையில் கிசுகிசுத்தான். ஆனால் ரஷிகாவோ அவன் பேச்சைப் பொருட்படுத்தாமல், தட்டினைக் கழுவி.. அதிலிருந்த தண்ணீரை வடித்துவிட்டு நகர்ந்தாள். அவள் செல்வதை முறைத்துப்பார்த்த ஃபர்ஹான்,

‘என்ன ஒரு திமிர்..!!’ என்று மனதிற்குள் பொருமினான்.

காலை 11.55 மணியளவில், ஒலிபெருக்கி மூலம் ஜார்ஜ், அனைத்துப் போட்டியாளர்களையும் அவரவர் அறைக்குச் சென்று உறங்குவதை போன்று நடிக்கச் சொல்ல.. அனைவரும் அவரவர் அறைக்கு விரைந்தனர். மதியம் 12 மணியளவில் அலாரம் போன்று சத்தம் வந்தது.. அது காமெரா ரோல் ஆவதற்கான முன்னெச்சரிக்கை அலாரம்.. அலாரம் அடித்துமுடிய.. காமெரா ரோலானது...

போட்டியாளர் அனைவரும் ஒவ்வொருத்தராகத் தங்களை நேயர்களுக்கு அறிமுகம் செய்யத் தொடங்கினர். ஷின்னின் முறை வரும் பொழுது அவனையறியாமல், ஒரு கட்டுமஸ்தான ஆடவனின் மீது மோதினான்.

“ஸாரி.. ஸாரி.. ஐ அம் ரியலி ஸாரி..” என்று ஷின் பதட்டத்துடன் கூறுவதைக்கண்ட அவ்வாடவன்,

“பதறாதீங்க..” என்று செம்மையான ஆங்கிலத்தில் கூறவும், அவனது முகத்தைப் பார்த்தான். கருப்பரின அமெரிக்கரைப் போன்று இருந்த அந்த ஆண்மகனின் சிரிப்பு வசீகரிக்கும் வல்லமைக் கொண்டது என்றுணர்ந்தான் ஷின்.

“ஹாய் ப்ரோ..! நீங்க....?” என்று அவ்வாடவன் பெயரை ஷின் கூறவருவதற்குள், அவன்...

“நான் ஆண்ட்ரூ...” என்று தன் வெள்ளைப் பற்கள் தெரிய சிரித்தபடி, ஷின்னிடம் கை நீட்டி.. “உங்கள் ஸ்வீட் நேம்?” என்று ஆண்ட்ரூ ஆகிய அந்த அமெரிக்கன் கேட்க.. ஷின் தன்னை அறிமுகம் செய்துவைத்தான். அதற்குள் ஜார்ஜ் ஒலிபெருக்கி மூலம் ஷின்னை ஒப்புதல் அறைக்கு வந்து அவனை சுய அறிமுகம் செய்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்க, ஆண்ட்ரூவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு ஒப்புதல் அறையை நோக்கி விரைந்தான் ஷின்.

தன்னை சுய அறிமுகம் செய்துகொண்ட பின்னர், ஒப்புதலறையிலிருந்து வெளிவந்த ஷின்னை ஆண்ட்ரூ வரவேற்றான்.

“ஆண்ட்ரூ!! எதுக்கு எனக்காகக் காத்திருக்கீங்க?” என்று ஆங்கிலத்தில் ஷின் கேட்க, அதற்குப் புன்னகைத்த ஆண்ட்ரூ,

“நம்ம ரெண்டுப் பேரும் நண்பர்களாகலாமா ஷின்?” என்று கேட்கவும், சற்று தயங்கிய ஷின்னின் புளூடூத் இயர்பீஸ் மூலம் சௌந்தரியாவின் குரல் கேட்டது.

“இந்த நிகழ்ச்சியில நண்பர்கள் சேர்த்துக்குறது ரொம்ப நல்லது. நாளைக்கு இந்தப் பங்களாவுல ஏதாவது உனக்குப் பிரச்சனைனா, உன் பக்கம் இருக்குற நண்பர்களோட உதவி கண்டிப்பா தேவைப்படும்.” என்று கூறவும், புருவங்கள் முடிச்சு விழ ஷின்..

“பிரச்சனையா? என்ன பிரச்சனை?” என்று அங்கே ஆண்ட்ரூ இருப்பதை மறந்து வாய்விட்டுக் கேட்டுவிட... மறுமுனையில் சௌந்தரியாவிடமிருந்து மௌனமே பதிலாக வந்தது. திடீரென்று ஷின் ஏதோ மொழியில் பேசுவதைக் கேட்ட ஆண்ட்ரூ,

“என்ன? என்ன சொன்னீங்க? எனக்குப் புரியல..” என்று கேட்டுவைக்க.. தன்னிலை மறந்து உளறிவிட்டதை உணர்ந்த ஷின், தன் நாக்கை கடித்துவிட்டு,

“ஓகே.. ஃப்ரெண்ட்ஸ் ஆகிடலாம் ங்கறத என்னோட தாய்மொழில சொன்னேன்.” என்று ஷின் கேவலமாக சமாளிக்க... அதனை அப்பாவியான ஆண்ட்ரூ நம்பிவிட்டான்.

“தேங்க்ஸ்... அப்புறம் ஷின், நம்ம நட்ப பாராட்டும் விதமா.. உங்களுக்கு ஒரு இடத்த சுத்திக்காட்டுறேன். என்கூட வர்றீங்களா?” என்று உதட்டில் புன்னகையுடன் ஆண்ட்ரூ ஷின்னிடம் கேட்க....

‘இந்தப் போட்டியில இருக்குற வரைக்கும் வெளியிடங்களுக்கு போகக்கூடாதுனு சௌந்தரியா சொன்னாளே!!’ என்று எண்ணியவன், அவளின் நம்பருக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டான்.

"ஆண்ட்ரூ என்னைய பங்களவுக்கு வெளியே கூட்டிட்டுப் போய் சுத்திக்காட்டுறேன்னு சொல்லுறார். போகவா?”​

என்று ஷின் அனுப்பிய வாட்ஸ்-அப் குறுஞ்செய்தியை உடனே பார்த்த சௌந்தரியாவிடமிருந்து பதிலேதும் வரவில்லை. ஷின்னிற்கு இது விசித்திரமாகப் படவே,

‘ஏன் இவள் திடீருனு ஒருமாதிரி நடந்துக்குறாள்?’ என்றெண்ணியவனை ஆண்ட்ரூ மீண்டும் அழைக்க.. சற்றே தயங்கினான் ஷின்.

“என்ன யோசனை ஷின்?” என்று வினவிய ஆண்ட்ரூவின் முகத்திலிருந்த புன்னகை மறைந்திருந்தது.

“இல்ல.... இந்தப் போட்டியில இருக்குற வரைக்கும் பங்களாவை விட்டு வெளியே போகக்கூடாது ங்கறது விதிமுறைகள்ல ஒன்னுல? அதான்... கொஞ்சம் யோசனையா இருக்கு.....” என்று தயங்கித்தயங்கி ஷின் கூறவும்.... வெடித்துச் சிரித்தான் ஆண்ட்ரூ.

“இவ்வளவு தான் விசயமா? விதிமுறையாவது, கத்திரிக்காயாவது.. இந்த நிகழ்ச்சியப் பொருத்தவரை, விதிமுறையே இல்ல. இது ஒரு குப்பை. இந்தப் பங்களா, நல்லா அலங்கரிக்கப்பட்ட குப்பை மேடு.. இங்கையே இருந்தா, வீச்சம் தாங்காம நீ ஓடிடுவ. கொஞ்சம் ஓய்வெடுக்குற விதமா, உனக்கு ஒரு இடத்தைக் காட்டுறேன். தயங்காம என்கூட வா. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. தைரியமா என்கூட வா.” என்று கூறியவன் ஷின்னின் பதிலை எதிர்பாராமல், அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு பங்களாவின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஒரு மூலையில் நான்கைந்து மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு மூட்டையாகத் தூக்கி, தள்ளிவைத்தான் ஆண்ட்ரூ. மூட்டைகள் விலக விலக.. அங்கே பின்பக்கத்தின் வாசலுக்குச் செல்லும் வழியிருந்தது. அதனைக் கண்டு ஷின் அதிர்ச்சியாக.. அவனின் அதிர்ச்சியை எதிர்பார்த்தவன் போன்று ஆண்ட்ரூ, அவனைப் பார்த்துச் சிரித்துவைத்தான்.

“என்ன பார்க்குற ஷின்? இதுலாம் சாதாரணம்.. இந்தப் பங்களாவுல இதுபோலப் பல மர்மங்கள் நிரம்பி வழியுது. அதெல்லாம் உன் காதுக்கே எட்டவேண்டாம்.” என்று கூறியவன், தன் கைகளிலிருந்த தூசியைத் தட்டியபடி ஷின்னை நெருங்கி வந்தான். அவன் கூறியதைக் கவனித்த ஷின்,

‘இதுலாம் இவனுக்கு எப்படித் தெரியும்? இவனும் நம்மல போன்ற போட்டியாளர் தானே?’ என்று எண்ணியபடி யோசனையாக ஆண்ட்ரூவை ஷின் பார்க்க..

“ஹாஹாஹா!! நீ இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடலையா? என்ன யோசிக்குற இப்போ? ம்ம்ம்.... நான் சொல்லட்டுமா? இந்த இரகசியப்படிகள்ல இருந்து, இந்தப் பங்களாவோட மற்ற இரகசியங்கள் எனக்கு எப்படித் தெரியும்னு தானே யோசிக்குறீங்க?” என்று சிரித்தபடி ஆண்ட்ரூ கேட்கவும்... ஷின் பதிலேதும் பேசாமல் திருதிருவென விழித்தான்.

“இந்தப் பங்களாவுல இருக்குற சில மர்மங்கள்ல ஒன்னா, என்னோட இந்த விசயங்களும் மர்மமாவே இருக்கட்டுமே! ம்ம்ம்? இப்போ என்கூட வாங்க..’ என்றவன், ஷின்னின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, அந்த இரகசியப்படிகளில் இறங்கினான். அந்தப்படிகள், பங்களாவின் பின்பக்க தோட்டத்தில் கொண்டுபோய் விட்டது. தோட்டத்தைக் கண்ட ஷின்னின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆண்ட்ரூவின் மர்மங்கள் நிறைந்த வார்த்தைகளை மறந்து, அங்கிருந்த செடிகொடிகளை ரசிக்க ஆரம்பித்தான். குஷியாகத் தோட்டத்துக்குள் ஷின் சுற்றுவதைக் கண்ட ஆண்ட்ரூவின் முகத்திலும் மென்மை குடிகொண்டது. மெல்லிய புன்னகையோடு ஷின்னின் சந்தோசத்தை ரசித்துப்பார்க்கத் தொடங்கினான். தோட்டத்தினுள் ஷின் சென்ற பக்கமெல்லாம் அவனைப் புன்னகையுடன் பின்தொடர்ந்தான் ஆண்ட்ரூ.

அங்குமிங்கும் நடந்த ஷின்னின் கண்களுக்கு அங்கிருந்து சற்றுத் தொலைவிலிருந்த அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி தென்படவே..

“ஆண்ட்ரூ! இந்த இடத்துல ஒரு காடு இருக்கு பாரேன்....” என்று ஆண்ட்ரூவை ஷின் அழைக்க, அதுவரை ஆண்ட்ரூவின் முகத்தில் குடிகொண்டிருந்த புன்னகை மறைந்து, சற்றுக் கடினமாக மாறியது அவனது பூமுகம்.

“சரி, போதும்னு நினைக்குறேன். வா ஷின்.. கிளம்பலாம்.” என்று கூறியவன் ஷின்னின் பதிலை எதிர்பார்க்காமல், வேகமாக அந்த இரகசியப்படிகளை நோக்கி விரைந்தான். அவன் செல்வதையே கண்ணிமைக்காமல் பார்த்த ஷிந்,

‘இன்னைக்கு ஏன் எல்லாரும் வித்தியாசமா நடந்துக்குறாங்க?’ என்று எண்ணியவன், “ஆண்ட்ரூ!!! நில்லு. நானும் வர்றேன்..’ என்று கூறியவாறு அவன் பின்னே ஓடினான் ஷின்.

பங்களாவிற்குள் நுழைந்த அவ்விரு இளைஞர்களும், கூடத்தில் நின்றுகொண்டு உரையாடத் தொடங்கினர்.

“ஷின், நான் இரண்டாவது மாடியில 23-வது அறையிலிருக்கேன். உங்களுக்கு என்கூடப் பேச தோணுச்சுனாலோ, உதவி வேணும்னாலோ அங்கே வந்து என்னைப் பார்க்கலாம். நான் வர்றேன். என் மனசு சரியில்ல. கொஞ்சம் தூங்கி எந்திரிச்சா சரியாகிரும்.” என்று கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான் ஆண்ட்ரூ. அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த ஷின்னிற்கு, ஆண்ட்ரூவின் தலைவலிக்குக் காரணம் அந்தக் கொள்ளைப்புற தோட்டத்தில் நடந்த நிகழ்வு தான் என்று நன்கு விளங்கியது.

ஒன்றும் பேசாமல் மெதுவாகத் தன் அறைக்குச் சென்றவன், சௌந்தரியா கொடுத்த அந்தப் போட்டியாளர் விவரங்கள் கொண்ட கோப்பினை எடுத்துப் பார்த்தான். அதன் பக்கங்களை வேகமாகத் திருப்பியவன், ஆண்ட்ரூவின் பக்கம் வரவும், நிறுத்தி அதனை ஒருமுறை வாசித்தான். அவன் ஒரு தீயணைப்பு வீரன் என்றும், அந்தத் துறையில் நிறைய நற்காரியங்கள் புரிந்து, பல விருதுகளைக் குவித்துள்ளான் என்றுமிருந்தது. அதைத்தவிர வேறு எவ்வித விவரமும் இல்லை. புருவங்கள் நெரிக்கக் கோப்பினை மூடி, யோசனையில் ஆழ்ந்தவன் அப்படியே கண்ணயர்ந்தான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

14 போட்டியாளர்களில் ஒருத்தியான “எலிசா” என்பவள், ஜாப்பான் நாட்டில் பிரபல சானலில் செய்தி வாசிப்பாளராகப் பணிப்புரிபவள். ‘மிகவும் அழகான பெண்’ என்று பங்களாவிற்கு வந்த நாள் முதலே அவ்வீட்டினரால் பேசப்பட்டவள். இவ்வாறு புகழாரங்கள் தனக்குக் கேட்டும், அதனைத் தலைக்கனத்திற்கு இடும் தீனியாக வைத்திராமல், சாதாரணமாக நடந்துகொண்டாள். நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்திலிருந்து, நேயர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் அந்த எலிசாவின் அழகையும், அவளது தலைக்கனமில்லா தன்மையையுமே பாராட்டி சில பதிவுகளையிட்டனர். அதனைக் கவனித்த அந்நிகழ்ச்சியின் சீனியர் டைரக்டர் ஜெனிபர்,

“ஆஹா! இந்தப் பொண்ணு இவ்வளவு தூரம் ரீச் ஆகும்னு நான் நினச்சுக்கூடப் பார்க்கல. குட். நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.” என்று சௌந்தரியாவிடம் கூறியவர், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜார்ஜிடம் திரும்பி, “இன்னைக்கு சாயங்காலம் 5 மணிக்கு நாமினேசன் நடத்திட்டு, போட்டியாளர்கள் கிட்ட எலிசாவோட பாப்புலாரிட்டிய பத்தி சொல்லு ஜார்ஜ்.” என்று கூறியவள் வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து பிற வேலைகளில் தன் கவனத்தைச் செலுத்தினாள்.

ஜெனிபர் கூறியதைப்போல் ஜார்ஜ், ஒலிபெருக்கியில் போட்டியாளர்களை நாமினேசன் செய்யும்படி அறிவித்தான். அதன்படி அவர்களும் நாமினேட் செய்து முடித்தனர். அனைவரையும் கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமரச்சொன்ன ஜார்ஜ், தன் பேச்சினை ஆரம்பித்தான்.

“எலிசா!!’ என்று அவளை ஜார்ஜ் அழைக்கவும், அவள் எழுந்து நின்று,

“யெஸ் ஜார்ஜ்..?” என்று வினவவும், ஜார்ஜ்..

“எலிசா! நம்ம நிகழ்ச்சியப் பத்தி மக்கள் பல்வேறு சமூக வலைத்தளங்கள்ல நல்லவிதமா பேசிட்டு வர்றாங்க. அவங்க முக்கியமா, அவங்களுக்கு உங்கள் ரொம்பப் பிடிச்சிருக்குனு நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். வாழ்த்துக்கள் எலிசா. இதை இப்படியே தொடர்ந்தால், நீங்க தான் இந்த நிகழ்ச்சியோட வின்னர். வாழ்த்துக்கள்” என்று ஜார்ஜ் பேசிமுடித்துவிட்டுக் கிளம்ப.. மற்ற போட்டியாளர்களும் அவளிடம் வாழ்த்து சொல்ல, ஃபர்ஹான் மட்டும் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனாக இருந்தான். ஃபர்ஹானின் இச்செயலைக் கவனித்த ஷின்,

‘என்ன இந்த சைக்கோ எதையோ யோசிக்குறதப்போல இருக்கே!!’ என்றெண்ணியபடி எலிசா பக்கம் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தவன், அடுப்பறைக்கு செல்ல.. அங்கு ரஷிகா தலையில் கைவைத்தபடி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க.. அவளிடம் சென்று,

“என்ன ஆச்சு ராஷ்? நல்லா தானே இருக்கீங்க?” என்று ஷின் வினவ, அதற்கு அவள்..

“ம்ம்ச்” என்ற சப்தத்தையே பதிலாகக் கூறினாள்.

“எதுனாலும் என்கிட்ட சொல்லலாம் ராஷ்..” என்று ஷின் கூறவும், அவனை ஏறிட்ட ரஷிகா,

“அவகிட்ட அப்படி என்ன இருக்குனு தெரியல. மக்கள் எல்லோரும் அவள பாராட்டுற அளவுக்கு..” என்று அவள் பொரிந்து தள்ளினாள்.

‘எவகிட்ட?’ என்றெண்ணியவன்.. “விடுங்க ராஷ்” என்று மட்டும் கூறினான்.

“எனக்கு அதான் புரியல..” என்று கூறியவளுக்கு இருமல் வர, தண்ணீரை அருந்தினாள்.

‘எது புரியல? எனக்குத் தான் இங்கே ஒன்னும் புரியல’ என்று தன் தலையைச் சொறிந்தவன், ரஷிகாவிடம்.. “நீங்கள் ஃபீல் பண்ணாதிங்க ராஷ்.” என்று கூற.. அதற்கு ரஷிகாவோ,

“முடியாது.. அவளுக்கு முடிவு கட்டியே ஆகணும்..” என்று சற்று கடினமான குரலில் கூற.. குழம்பிப்போனான் ஷின்.

‘இது எவள்னே தெரியலையே!!’ என்றெண்ணியவன் அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாதவனாக “யார பத்தி இப்போ நம்ம பேசுறோம்னு நான் தெரிஞ்சுக்கலாமா ராஷ்?” என்று பொறுமையாகக் கேட்டு வைக்க. நிமிர்ந்து அவனை நோக்கிய ரஷிகா,

“ம்ம்.. அந்த எலிசாவ தான் சொல்லிட்டு இருக்கேன் ஷின்” என்று கூறியவள் மீண்டும் தன் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க, திடுக்கிட்டான் ஷின்.

“அப்போ அவங்களுக்குத் தான் முடிவு கட்டணும்னு சொன்னீங்களா ராஷ்?” என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் ஷின் கேட்க.. அவளும் ‘ஆமாம்’ என்பது போல் தலையில் கை வைத்தபடி மேலும் கீழுமாய்த் தலையசைத்தாள். அதனைப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி..

‘முடிவு கட்டணும்னா, எதைச் சொல்லுறாங்க?’ என்றெண்ணியபடி ரஷிகாவை நோக்கியவன், “சரிங்க ராஷ். நம்ம அப்புறம் மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

கூடத்திற்கு வந்தவனுக்கு அதைவிடப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது.


ஷின் கண்ட அதிர்ச்சியான விசயம் என்ன? நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே எவரோ ஒரு பெண் மரணித்திருந்தாள். அவள் யார்? அவளின் மரணம் தானாக நிகழ்ந்ததா? இல்லை வேறு எவரும் நிகழ்த்தினரா? ஆண்ட்ரூ ஏன் அந்தக் காட்டினைப் பற்றிப் பேசவும் சற்றுக் கடுப்பானான்?

இதுபோன்ற பலவிதமான கேள்விகளுக்கு இனி வரும் அத்தியாயங்களில் பதில் கிடைக்கும்..


வார்த்தைகளின் எண்ணிக்கை :- 1,846


Comments Link:-

 

Priyamudan Vijay

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
9
Points
3
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 5

“அப்போ அவங்களுக்குத் தான் முடிவு கட்டணும்னு சொன்னீங்களா ராஷ்?” என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் ஷின் கேட்க.. அவளும் ‘ஆமாம்’ என்பது போல் தலையில் கை வைத்தபடி மேலும் கீழுமாய் தலையசைத்தாள். அதனைப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி..

‘முடிவு கட்டணும்னா, எதைச் சொல்லுறாங்க?’ என்றெண்ணியபடி ரஷிகாவை நோக்கியவன், “சரிங்க ராஷ். நம்ம அப்புறம் மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

கூடத்திற்கு வந்த ஷின்னிற்கு அதைவிடப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது. ஃபர்ஹானிடம் அந்த எலிசா மிக நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஃபர்ஹான் காதல் மொழிகளைப் பேசவும், அதைக் கேட்டு அவள் வெட்கி சிவப்பதுமாக இருந்தாள். அதனைக் கண்டவனுக்கு,

‘அய்யயோ! இந்த நாய் இந்தப் பொண்ண, அவனோட புகழாசைக்குப் பலியாக்க பிளான் பண்ணிருச்சு போலையே!’ என்றெண்ணியபடி அவர்கள் இருவரையும் கடந்து சென்ற ஷின், அவன் அறைக்குச் சென்று தன் மெத்தையில் அமர்ந்தான். ஷின்னின் நினைவெல்லாம் அன்றைய பொழுதில் நடந்த மர்மங்களிலேயே இருந்தது. ஒருமுறை காலையிலிருந்து நடந்தவைகளைக் கண்மூடி எண்ணிப்பார்த்தான்..

‘காலைல, இந்த சௌந்தரியா ஏதோ பிரச்சனை வரும்னு சொன்னாள்.. என்ன பிரச்சனைனு கேட்ட அப்புறம் ஆளையே காணோம். இப்போ வரைக்கும் கூடப் பேசலை. அப்புறம் அந்த ஆண்ட்ரூ... அவனே ஆள் மர்மமா தான் இருக்கான். இந்தப் பங்களாவோட மூளைமுடுக்கெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான். நான் பார்க்க, சிரிச்சுட்டே என் பின்னாடி வந்தவனோட முகத்துல, தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற காட்டுப் பகுதிய பத்தி கேட்கவும் முகம் சுருங்கிருச்சு. கடைசியா இந்த ரஷிகா.. எலிசாவ போட்டுத்தள்ளணும்னு பகீரங்கமா சொல்லுறாள்...’ என்றெண்ணியவனுக்குத் தலை லேசாக வலிக்கவே, எழுந்து சென்று தண்ணீர் ஜாடியை எடுத்தான். அதில் தண்ணீர் காலியான நிலையிலிருக்கவே, தன் தலையில் கை வைத்த நிலையில், அவ்வறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

‘ம்ம்ச்ச்... இப்போ தண்ணீர் எடுக்க, கீழே போகணுமா?’ என்றெண்ணிச் சலித்தவன், மெதுவாக எழுந்து அடுப்படிக்குச் சென்றான். கைக்கடிகாரத்தைப் பார்த்த ஷின், அது மணி ஏழு என்று கூறவே..

‘காமெரா ரோல்லிங் முடிஞ்சிருக்கும்...’ என்றெண்ணியபடி அடுப்படிக்குள் அவன் செல்ல எத்தனிக்க... அங்கே அடுப்படிக்கு அருகிலிருந்த மாடிப்படியின் அடிப்பகுதியில் ஃபர்ஹானும் எலிசாவும் உதட்டில் முத்தமிட்டுக்கொண்டிருக்க... ஷின் அதனைக் கண்டு அதிர்ந்தான்.

‘அச்சசோ!!! என்ன இது?!!!’ என்றெண்ணி அதிர்ந்த ஷின், கண்களை மூடிக்கொண்டு அடுப்படிக்குள் சென்றான். அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. ஏனென்றால், தன் அழகில் மயங்கி அனைவரும் பேசிய முகஸ்துதிக்கு மயங்காத எலிசா, எவ்வாறு ஃபர்ஹானின் வலையில் விழுந்தாள் என்று வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது..

‘முத்தங்கள் கொடுக்குறது, இந்த அமெரிக்காவுல சாதாரணம் தான். ஆனால், எலிசா புகழ்ச்சிக்கு மயங்காதவள் போலல தெரிஞ்சா? இந்த பாவி பேசி பேசியே அந்தப் பிள்ளைய லவ் பண்ணுறது போலக் காட்டி, பேமஸ் ஆகலாம்னு முடிவுக்கு வந்துட்டான்.. ச்சே! என்ன மாதிரி புத்தி இவனுக்கு?’ என்று தன் மனதிற்குள் ஃபர்ஹானை புகழ்ந்து தள்ளியவன், மெல்ல நடந்து போய் அடுப்பு மேடைக்கருகிலிருந்த ஃபில்டரைத் திறந்து தண்ணீர் ஜாடியைக் கீழே வைத்துப்பிடித்தபடி நின்றான். திடீரென்று ஃபர்ஹானும் எலிசாவும் சிரித்துப் பேசும் சப்தம் அருகில் கேட்கவும்,

‘ஆஹா! இதுங்க ரெண்டும் இங்கே வருதுங்க போலையே!’ என்று தனக்குத் தானே பேசியவன், ஒளிந்துகொள்ள இடத்தைத் தேடியவனை ஒரு கை, இழுத்துச் சென்றது. அடுப்படியிலிருந்த ஃபிரிட்ஜிற்கு அருகில் போய் ஒளிந்தவன், தன்னை இழுத்தது யாரென்று திரும்பிப் பார்க்க.. அருகில் சௌந்தரியாவும் அவர்கள் இருவருக்கும் தெரியாதவாறு மறைந்து உட்கார்ந்திருப்பது தெரியவரவே,

“ஹேய் சௌந்தரியா..!!” என்று ஷின் அழைக்கவும், அவன் வாயை தன் கைக்கொண்டு மூடியவள் மெதுவாக எட்டிப்பார்த்தாள். அங்கே எலிசாவும் ஃபர்ஹானும் அடுப்பு மேடைக்கு அருகில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துவிட்டு, ஷின்னின் பக்கம் வந்தவள்,

“லூசு மாதிரி சத்தம் போட பார்த்தியே!! என்று மிகவும் மெல்லிய குரலில் சௌந்தரியா ஷின்னிடம் பேசுவதும், அவர்கள் இருவரும் சென்றுவிட்டனரா? என்று பார்ப்பதுமாக இருக்க.. ஷின் சௌந்தரியாவின் அருகாமையை ரசித்துக்கொண்டிருந்தான். இரவின் நிலவொளி அவ்வடுப்படியில் சாளரம் வழியாக வந்து, அவள் முகத்தில் பட்டு, அவளது தோல் மின்னுவதைப் பார்த்தான். கழுத்தில் மெல்லிய தங்கச்செயின் உருண்டு விளையாட, அதன் விளையாட்டில் ஷின் லயித்துப்போனான்... காதுகளில் மிகச்சிறிய அளவில் தொங்கும் தோடு, அங்கே ஓடிய மின்விசிறியின் காற்றுபட்டு மெதுவாக அசைய, அதன் அசைவில் ஷின் சொக்கி தான் போனான்..

“ஹும்ம்ம்ம்... அந்த தோடாக நானிருக்கக் கூடாதா?????” என்று பெருமூச்சுவிட்டபடி, சௌந்தரியாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வகையில் ஷின் வாய்விட்டுப் பேசிவிட.. சட்டென்று அவன் புறம் திரும்பியவள்,

“என்ன?!” என்று கேள்வியாகக் கேட்டவளுக்கு ஷின்னின் உதட்டை தன் கையால் மூடியிருப்பது அப்பொழுது தான் உறைத்தது. அதனை உணர்ந்தவளாகத் தன் கீழுதட்டை மடித்துக் கடித்தபடி, தன் கரத்தை அவன் உதட்டிலிருந்து எடுத்தவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருந்தது. அதனைக் கவனித்த ஷின்னின் கண்கள் குஷியில் மின்ன.. மெதுவாக அவள் காதுப்பக்கம் சென்று, மெல்லிய குரலில்,

“என்னமோ கேட்க வந்த?” என்று ஷின் கேட்கவும், வெட்கத்தில் புன்னகைத்தவாறு தலைகுனிந்த சௌந்தரியா, ஷின்னைப் போல் மிகவும் மெல்லிய குரலில்..

“என்னமோ சொன்னீங்களே! அது என்னனு கேட்க வந்தேன்....” என்று வெட்கத்தில் அவள் தனக்கு மரியாதைத் தந்து பேசியதை கவனித்த ஷின், சௌந்தரியாவைக் கண்ணிமைக்காமல் பார்த்துவைக்க... அவன் கண்களைப் பார்க்க வேண்டாமென்று முடிவெடுத்தவளாகக் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள் அவள். அவளின் இச்செயல் ஷின்னிற்குப் பிடித்துப் போகவே, குறும்பு மின்னும் கண்களோடு சௌந்தரியாவிடம்..

“உன் காதுல அழகா ஆடும் அந்தத் தோடாக நான் இருந்திருக்கக் கூடாதா? னு வருத்தப்பட்டேன்.” என்று ஷின் தன் உதட்டோர புன்னகையோடு சௌந்தரியாவின் குனிந்த முகத்தைப் பார்த்தவாறு கூற.. அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. அவளது வெட்கத்தை ஷின் ரசித்துப்பார்த்துக்கொண்டிருக்க, அங்கே ஃபர்ஹானும் எலிசாவும் அவ்விடத்தைவிட்டு அகழும் சப்தம் கேட்டு, சௌந்தரியா அவர்கள் சென்றுவிட்டதை உறுதி செய்யும் விதமாக மெல்ல எட்டிப்பார்த்தாள். ஃபர்ஹானும் எலிசாவும் அவ்விடத்தைவிட்டு வெகுதொலைவில் சென்றுவிட்டதை உறுதி செய்த சௌந்தரியா, மெதுவாக எழுந்து ஷின்னையும் எழுந்திருக்கச் சொன்னாள்.


“நல்ல வேலை.. அதுங்க ரெண்டும் நம்மல பார்க்கல..” என்று கூறியபடி ஷின்னை நோக்க, அவன் கண்ணோ கிண்டலாகப் பார்த்தது. “என்ன பா? எதுக்கு இப்படிக் கிண்டலாப் பார்க்குற?” என்று யோசனையாகக் கேட்டாள் சௌந்தரியா.

“நீ எதுக்கு இங்கே வந்த? எதையாவது பார்த்து வச்சுட்டீயா?” என்று வினவிய ஷின் வெடித்துச் சிரிக்க.. தனது நாக்கினை பற்களால் கடித்தவள்,

“நீ பார்த்தியா?” என்று ஷின்னின் கேள்வியை அவனுக்கே சௌந்தரியா திருப்பிவிட..

“ஆ.. அதெல்லாம் கேட்கக்கூடாது.” என்று கூறி சிரித்தவனுக்கு அன்று காலை சௌந்தரியா தன்னிடம் விசித்திரமாக நடந்துகொண்டது நினைவிற்கு வரவே.. “உன்கூட நான் பேசமாட்டேன் சௌண்ட்..” என்று தன்னை மீறி அவளை ‘சௌண்ட்’ என்று ஷின் அழைக்க.. அதனை மனதிற்குள் ரசித்தாள் அந்த மங்கை. ஆனாலும் அவனது இந்த கோபத்தின் காரணம் அறிய அவளது மூளை அவளை பிறாண்ட,

“எதுக்காம்?” என்று ஷின்னின் கண்ணைப் பார்த்து சௌந்தரியா கேட்ட விதத்தில் அப்படியே சிலையாகிப் போனான் ஷின். பிறகு தன் தலையை உலுக்கி,

‘ஆஹா!! நம்மல கவுக்கப் பார்க்குறாள்... நான் அசையமாட்டேனே..’ என்று தனக்குத் தானே உறுதிப்பூண்டு மீண்டும் அவளை ஷின் நோக்க.. சௌந்தரியாவோ அதே மாயப்பார்வையை ஷின்னின் பக்கம் செலுத்தினாள். ‘என்னமா இப்படி பண்ணுறாளே மா..!! ஷின்... அவளோட எந்த ஃபயர் லுக்கும் உன்னைய ஒன்னும் பண்ணமுடியாது டா. நீ கேட்க வந்த விசயத்த, அதே கோபத்தோட கேட்டுடு..’ என்று ஷின் தன் மனதுடன் வாதாடிவிட்டு சௌந்தரியாவின் கண்ணைப் பார்க்காமல் பேசினான். “இன்னைக்கு காலைல இருந்து நீ விசித்திரமாவே நடந்துக்குற சௌண்ட்.. முதல்ல ஏதோ பிரச்சன வரும் ங்கற ரீதியில சொல்லுற.. என்னனு கேட்டா அமைதியாகிடுற. அப்புறம், ஆண்ட்ரூ கூட வெளியே போகவானு நான் வாட்ஸ்-அப்ல மெசேஜ் பண்ணதுக்கு நீ அதைப் பார்த்தும் பதிலனுப்பல. அதான் உன்கூட பேசமாட்டேன்னு இருக்கேன்.” என்று பொய் கோபத்துடன் பேசிவிட்டு, சௌந்தரியாவிற்கு முதுகு காட்டி நின்றுகொண்டான். அவன் விளையாட்டாகக் கோபித்துக்கொண்டான் என்பதை உணர்ந்தாலும், அவனது கேள்வி ஏனோ சௌந்தரியாவை உறுத்த..

“ஷின்! என்னால எதையும் முழுசா சொல்லமுடியாது. ஆனால், மேலோட்டமா சொல்லுறேன். இங்கே, இந்த பங்களாவுல சில பிரச்சனைகள் வரும்.. அந்த பிரச்சனைகள்ல இருந்தும் உன்னைய பாதுகாத்துக்கணும்னா, நீ பங்களாவோட பின்பக்கத்துல ஒரு தோட்டம் இருக்கு. அங்கே போகாத... அங்கே யாரும் போகக்கூடாதுனு தான் அதுக்குப் போற வழி எங்கே இருக்குனு யாருகிட்டையும் சொல்லாம மறைச்சு வச்சிருக்கோம். சொல்லப்போனா, அப்படி ஒரு தோட்டம் இருக்குதுங்கறதையே நீங்கள் யாரும் தெரிஞ்சிருக்க மாட்டீங்க. ஆனாலும், அங்கே எப்படிப் போறாங்கங்கற விசயம் மட்டும் மர்மமாவே இருக்கு.” என்று கூறியவள் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தாள். “ம்ம்... அந்த பின்பக்க தோட்டத்துல தான் பிரச்சனை. நாளைக்கு ஒருவேளை, நீ அங்கே தெரியாம போய்ப் பிரச்சனைல சிக்கினாலும், உன்னைய காப்பாத்த, உன் பிரண்ட்ஸ் வரணுங்கற காரணத்துக்காகத் தான் நான் காலைல அப்படிச் சொன்னேன். நீ சட்டுனு கேட்கவும், என்னால சொல்ல முடியல. இப்போ கூடப் பிரச்சனை என்னனு, முழுசா என்னால சொல்லமுடியலைனாலும், பின்பக்க தோட்டம் ஆபத்தானதுனு சொல்லிட்டேன். இதைக்கூட வேற யாருகிட்டையும் சொல்லிடக்கூடாதுனு மேலிடத்தோட உத்தரவு. அந்த உத்தரவையும் மீறி உன்கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கேன். வேற யாருகிட்டையும் இதை நான் சொன்னதில்ல. சொல்லவும் மாட்டேன். நீ பிரச்சனைல மாட்டி, உனக்கு ஏதாவது ஆயிட்டா.....” என்றுக்கூறியவளுக்கு அதற்கு மேல் பேச இயலாமல், அழுகையில் மூச்சு முட்ட, ஷின் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

“எனக்கு ஒன்னும் ஆகாது. சரியா? உன் விருப்பம் போல, நான் பின்பக்க தோட்டத்துக்குப் போகல. சரியா?” என்று அவளை அணைத்தபடி ஆறுதலாகக் கூறவும் அமைதியானாள் சௌந்தரியா. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, தன்னிலை வந்த இருவரும், சட்டென்று விலகிக்கொண்டனர்.

“சரி.. நம்ம காலைல மீட் பண்ணலாம்..” என்று கூறிவிட்டு சௌந்தரியா திரும்பி பார்க்காமல் ஓடினாள்.

அவள் செல்லும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஷின், தன் பற்கள் தெரிய சிரித்துவிட்டு தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். அது மணி 9 என்க, இரவு உணவைச் சாப்பிட அமர்ந்தான் அவன்.

இரவு உணவை முடித்துவிட்டு, தன் அறைக்குச் சென்றவனுக்குத் தூக்கம் சொக்க.. அப்படியே மெத்தையில் படுத்துக் கண்ணயர்ந்தான்.

இரவு 11 மணியான நிலையில், எலிசாவின் அலறல் சப்தம், அப்பங்களாவெங்கும் ஒலித்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஷின் கண் விழித்தான். ஓர்லியன் பங்களாவிலிருந்த அனைவரும், ஷின் உட்பட, எல்லோரும் சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர். மீண்டும் அவளின் அலறல் குரல் கேட்க, பங்களாவின் பின்புறத்திலிருந்த அந்தத் தோட்டத்திலிருந்து தான் எலிசாவின் அலறல் சப்தம் கேட்பதையறிந்தவர்கள், வேகவேகமாக அத்தோட்டத்திற்கு ஜெனிபர் காட்டிய பாதையில் ஓடினர். அங்குச் செல்வதற்கான கதவுகள் நிறையப் பாதுகாப்புகளுடன் பூட்டியிருக்கவே, ஜெனிபர் தன்னிடமிருந்த சாவிக்கொத்தினை வைத்து அந்த பூட்டுகளைத் திறந்து, கதவுகளைத் திறந்தார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் சென்றதைவதற்குள் எலிசா அங்கே மாய்ந்துக்கிடந்தாள். அவளின் உயிரற்ற உடல் மட்டுமே அங்கே இருந்தது. அவள் உடல் முழுக்க, ஒரு விலங்கின் நகக் காயங்கள் இருந்தன. அவளின் ஆடை, அவ்விலங்கின் நகம்பட்டுக் கிழிந்துக்கிடந்தது. அப்பெண்ணின் கழுத்துப் பகுதிச் சதை, அவ்விலங்கின் பற்களால் கடித்தெறியப்பட்டது என்று தெரிந்தது.

பங்களாவிலிருந்த போட்டியாளர்களில் சிலர் அவரவர் கண்களை இறுக மூடிக்கொண்டனர். அப்படியிருந்தது, எலிசாவின் உயிரற்ற உடலின் நிலை. அவளின் இந்நிலையைக் கண்ட ஷின், சௌந்தரியாவிடம் சென்று,

“ஏன் பா எலிசாவுக்கு இப்படி ஆச்சு? இவங்களுக்கு இந்த நிகழ்ச்சியில நல்ல வரவேற்பு வந்துச்சுனு, நம்ம சீனியர் டைரக்டர் ஜெனிபர் கூட சொன்னாங்களே?! அதுக்குள்ள இவங்களுக்கு ஏன் தான் இப்படி நடந்துச்சோ?! இவங்களோட உடலப் பார்க்கைல ஏதோ விலங்கு வேட்டையாடிருக்குறது போலத் தெரியுது. என்ன விலங்கு இவங்கள இப்படிச் செஞ்சிருக்கும்? அதுவும் பங்களாவோட பின்பக்கத்துல என்ன விலங்கோட நடமாட்டம் இருக்கு?” என்று ஷின் கேட்கவும், அதுவரை அப்பெண்ணின் உயிரற்ற உடலைக் கண்டு கண்ணீர் வடித்தவள், ஷின்னின் கேள்வியில் அவனை நிமிர்ந்துப்பார்த்தாள்.

“எனக்கும் தெரியல ஷின். நிகழ்ச்சி டெலிகேஸ்ட் ஆகைல, எல்லா சோசியல் மீடியாலையும் நேயர்கள் இந்தப் எலிசாவைப் பத்தித் தான் புகழ்ந்துப் பேசிட்டிருந்தாங்க. அதவச்சுத் தான் ஜெனியே அப்படிச் சொன்னாங்க. நான் கூட இந்தப் பொண்ணு இறுதிச்சுற்றுக்கு வரும்னு நம்புனேன்.. ஆனா.....” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையடைத்தது. சௌந்தரியாவை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் ஷின் விழித்துக்கொண்டிருந்த வேளையில், ஓர்லியன் பங்களாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த வனப்பகுதியில் விலங்குகளின் வெறிகொண்ட நான்கு கண்கள், அப்பங்களாவைப் பார்த்துக்கொண்டிருந்தன.

நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருக்க, ஷின்னின் மூளையோ,

‘முதல்ல எலிசாவுக்கு இந்தத் தோட்டத்தப் பத்தி எப்படித் தெரியும்?’ என்று யோசிக்கத்தொடங்கியது.

சௌந்தரியா அன்றிரவு கூறியது போல, இந்த பின்பக்கத் தோட்டத்தைப் பற்றி, எவரும் அறிந்திலர். அப்படியே அறிந்திருந்தாலும், அதற்குரிய பாதையை அறிந்தவர் எவரும் இல்லை.

இவ்வாறாக யோசித்துக்கொண்டிருந்த அவனது மூளைக்கு அலாரம் அடித்தது போல ஆண்ட்ரூவின் ஞாபம் வரவே, சட்டென்று அவன் நிற்கும் திசையை நோக்கினான். கண்களைச் சுருக்கி, ஆண்ட்ரூவின் நடவடிக்கைகளைக் கவனித்தான். எலிசாவின் உடலுக்கு அருகில் கூடியிருந்த போட்டியாளர்கள் அனைவரது முகத்திலும் வருத்தம் தென்பட்டது. ஆனால், ஆண்ட்ரூவின் முகம் வருத்ததைப் பிரதிபலிக்காமல் ஒருவித அசட்டையைப் பிரதிபலிக்கவே... கண்கொட்டாமல் ஆண்ட்ரூவையே நோக்கினான். ஆண்ட்ரூவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று ஷின்னைப் பார்த்தான் அவன். ஷின்னைப் பார்க்கவும் அவனது முகத்தில் ஒரு பிரகாசம். அவனைக்கண்டு, ஆண்ட்ரூ புன்னகைத்தவன் ஷின்னின் யோசனையான பார்வையைக் கண்டதும் அவனது புருவங்கள் நெறித்தது. சட்டென்று தன் முகத்தை வேறுபுறம் திருப்பிய ஆண்ட்ரூ, மீண்டும் ஷின்னை நோக்க.. அவனோ வைத்த கண் வாங்காமல் அதே யோசனையான பார்வையைப் பார்த்துவைத்தான். வேறுபுறம் தன் தலையைத் திருப்பியவனுக்கு, எதனாலையோ அக்குளிர் வேளையிலும் முகம் வியர்த்தது.

ஓரக்கண்ணால் ஷின்னைப் பார்த்தபடி தனது பேண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு எதையோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆண்ட்ரூவின் கைகளுக்கு எதுவும் கிடைக்காமல் போகவே, அவன் முகத்தில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது. எதையும் பார்க்காமல் ஆண்ட்ரூ, வேகவேகமாக பங்களாவிற்குள் நுழைந்தான். இதனையே பார்த்துக்கொண்டிருந்த ஷின்னிடம் சௌந்தரியா அழுகுரலில் பேசினாள்.

“இந்த எலிசா எப்படி இங்கே வந்தாள்னே தெரியலையே ஷின்! இங்கே வர்றதுக்குறிய கதவுகள கூட ஜெனி தானே இப்போ நம்ம கண்ணு முன்னாடி திறந்தாங்க? அப்புறம் எப்படி இவள், இங்கே.....” என்று வார்த்தைகள் வராமல் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வரவே.. ஷின் அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு,

“அழாத சௌந்தரியா.. ப்ளீஸ்! நான் சொல்லுறத கேளு. எலிசா இறந்ததப் பத்தி அழுதுட்டு இருக்குற நேரத்துல, அடுத்து யாரும் இந்த இடத்துக்குப் போகாத மாதிரி பாதுகாப்புகள வலுபடுத்துங்க.” என்று சமாதானம் கூறிய ஷின்னின் மனம் ஆண்ட்ரூவின் விசித்திர நடவடிக்கைகள் பக்கம் செல்லவே... சௌந்தரியாவிடம், “எனக்கு மனகஷ்டத்துல தலை லேசா வலிக்குது. நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, ஆண்ட்ரூ சென்ற வழியில் போய் அவனைப் பின்தொடர்ந்தான்.

பங்களாவிற்குள் வந்த ஷின், ஆண்ட்ரூவின் அறைக்குச் செல்ல.. அங்கே ஆண்ட்ரூ ஒரு நாட்குறிப்பில் ஏதோ குறிப்பெழுதுவதைக் கண்டு, அப்படியே அறை வாசலில் நின்று அவன் செயல்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தான். எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆண்ட்ரூ, சட்டென்று நிமிர்ந்து அறை வாசல் பக்கம் தன் பார்வையைத் துழாவவிட.. ஷின் அப்படியே மறைந்து நின்றுகொண்டான்.

‘ஹப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸு..! இல்லைனா, இவன் கண்ணுல பட்டிருந்தால், என்ன நடந்திருக்குமோ?’ என்றெண்ணியவனுக்கு அதிர்ச்சியில் மூச்சிரைக்க.. தனது நெஞ்சில் கைவைத்து, தட்டிக்கொடுத்தபடி தனக்கு தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ஆண்ட்ரூவின் அறைக்குள்ளே பொருட்களைப் புழங்கும் சப்தம் கேட்கவே, மெதுவாகத் தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்தான். அங்கே ஆண்ட்ரூவோ, கையில் டவலை எடுத்துக்கொண்டு, குளிக்க குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான்.

‘என்ன இவன்? ஒரு பொண்ணு கீழே செத்துக்கிடக்கு.. இவன் என்னடானா, அப்படி ஒன்னு நடந்ததே தெரியாத மாதிரி ஜாலியா குளிக்கப்போறான்?’ என்றெண்ணியவனின் மூளைக்கு அந்த நாட்குறிப்பைப்பார்க்கும் யோசனை வரவே... பூனையைவிட மெல்லிய அடிகளை எடுத்துவைத்து ஆண்ட்ரூவின் அறைக்குள் நுழைந்து, ஆண்ட்ரூ சற்றுமுன் நின்ற மேசையருகில் சென்றான். மேசையின் மேல் பகுதியில் வெறும் தண்ணீர் ஜாடியிருப்பதைக் கண்ட ஷின், மெதுவாக அம்மேசையின் முதல் இரண்டு இழுப்பறைகளைத் திறந்துப்பார்த்தான். அவ்விரண்டு இழுப்பறைகளிலும் நாட்குறிப்பு இல்லாமல் போகவே, அதே மேசையின் கடைசியிலிருந்த அலமாரிக் கதவைத் திறந்த ஷின்னிற்கு இம்முறை ஏமாற்றமில்லை. அங்கிருந்த நாட்குறிப்பை எடுத்து, அதன் பக்கங்களைப் புரட்டியவன் கடைசியாக ஆண்ட்ரூ எழுதியிருந்த பக்கத்தை எடுத்தான். அதிலோ அன்றைய தேதியை எழுதியிருந்ததை அடுத்து,

நாள்-1 (போட்டியாளர்-1) எலிசாவின் மரணம்.

நாள்-7 : (போட்டியாளர்-2) ___________“


என்று ஆண்ட்ரூ தன் கைப்பட ஆங்கிலத்தில் எழுதியிருந்த குறிப்பில் ஷின்னின் சந்தேகம் மேலும் வலுவானது. அதன் தலைப்பை வாசித்தவனுக்குத் தூக்கிவாறிப்போட்டது.

“ஓர்லியன் பங்களாவில் நடக்கவிருக்கும் மரணங்கள்”

என்றிருந்த அந்த தலைப்பைக் கண்ட ஷின்னிற்குத் தொண்டை அடைத்தது. அதற்கு முன் எழுதியிருந்த பக்கங்களைப் பார்க்கும் பொருட்டு, அந்த நாட்குறிப்பின் பக்கங்களைப் புரட்ட.. ஆண்ட்ரூ தன் குளியலறையின் தாழ்ப்பாள் திறக்கும் சப்தம் கேட்டு, கையிலிருந்த அவன் நாட்குறிப்பை எடுத்துக்கொண்டு அவ்வறையைவிட்டு ஓடினான் ஷின். தன் அறைக்குள் வந்தவன், முதல் வேலையாக அறைக்கதவை தாழிட்டுக்கொண்டான். பின் தன் மெத்தையில் அமர்ந்து வேகவேகமாக அந்த நாட்குறிப்பைத் திறந்த ஷின், அதன் முதல் பக்கத்தில் ஆண்ட்ரூவின் பெயர் இருப்பதைக் கண்டுவிட்டு, அடுத்தப்பக்கத்திற்குச் சென்றான். அதில் சென்ற வருடத்தின் தேதி குறிப்பிட்டிருப்பதை கவனித்தவனுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய தகவலிருந்தது.

“ ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி, சீசன்-8’

நாள்-93 : (போட்டியாளர்-13) ஆலியாவின் மரணம்.

நாள்-98 : வஞ்சகத்தால் நான் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
”​

இதனைப் பார்த்த ஷின் அதிர்ந்து போனான்.

“போன வருசம் நடந்த இந்த போட்டியில ஏற்கனவே இவன் கலந்திருக்கான். போன சீசன்ல ஏற்கனவே ஆலியாங்கற பொண்ணு இறந்திருக்காள். அதை இவன் குறிப்பிட வேற செஞ்சிருக்கான். யாரு அவள்? போன சீசனோட போட்டியாளரா இருந்த இவன், எதுக்கு மறுபடியும் இந்த வருசப் போட்டியில கலந்துக்க வந்திருக்கான்? அப்படியே வெற்றிப்பெறும் ஆசைல வந்திருந்தாலும் அதை ஏன் இரகசியமா வச்சுக்கணும்? என்கிட்ட இதைப்பத்தி ஒன்னுமே ஆண்ட்ரூ சொல்லலையே!!! அதுகூட அவன் சுயலாபத்துக்கு மறைச்சான்னு வச்சுப்போம். சௌந்தரியா என்கிட்ட கொடுத்த அந்தப் பைல்ல (கோப்புல) கூட இவன் போன சீசனோட போட்டியாளர்னு குறிப்பிடலையே?! சௌந்தரியாவுக்கு, இவன பத்தி தெரியாம இருந்திருக்காது. ஆனால், அவளும் இதைப் பத்தி என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டாள். இன்னைக்கு நடந்த எலிசாவோட மரணத்த குறிப்பிட்டவன், சரியா ஏழாம் நாள்ல இன்னொரு போட்டியாளர் இறப்பாங்கங்கற மாதிரி ஒரு இடத்தை வேற காலியா விட்டு வச்சிருக்கான். அப்போ, இன்னைக்கு நடந்த மரணத்துக்கும் ஆண்ட்ரூவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு....” என்று தனக்குத் தானே வாய்விட்டு மெதுவாகப் பேசிய ஷின்னை, அவன் அறை பின்பக்கமிருந்த சாளரம் வழியே இருகண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன.

ஷின்னை நோட்டமிடும் அந்த மர்மக் கண்கள் யாருடையது? ஷின்னின் கணிப்பு போன்று, எலிசாவின் மரணத்திற்கும் ஆண்ட்ரூவிற்கும் ஏதேனும் சம்பந்தமிருக்குமா? சென்ற வருடம் நடந்த இப்போட்டியின் போட்டியாளர்களில் ஒருவனாக வந்த ஆண்ட்ரூ எதற்காக, மறுபடியும் இப்போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கிறான்? அவன் சென்ற வருடப் போட்டியாளர் என்பதை சௌந்தரியா அறிந்தும் அதனை அவள் ஷின்னிடம் மறைத்தது ஏன்?

அடுத்த மிரட்டலான அத்தியாயத்துடன்.....


வார்த்தைகளின் எண்ணிக்கை :- 1,912.

Comments link :-

Thread 'கூட்டத்தில் எது ஓநாய்? - Comments' https://www.sahaptham.com/community/threads/கூட்டத்தில்-எது-ஓநாய்-comments.448/
 

Priyamudan Vijay

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
9
Points
3

BK-31,கூட்டத்திலெது ஓநாய்? – 6


“போன வருசம் நடந்த இந்தப் போட்டியில ஏற்கனவே இவன் கலந்திருக்கான். போன சீசன்ல ஏற்கனவே ஆலியாங்கற பொண்ணு இறந்திருக்காள். அதை இவன் குறிப்பிட வேற செஞ்சிருக்கான். யாரு அவள்? போன சீசனோட போட்டியாளரா இருந்த இவன், எதுக்கு மறுபடியும் இந்த வருசப் போட்டியில கலந்துக்க வந்திருக்கான்? அப்படியே வெற்றிபெறும் ஆசைல வந்திருந்தாலும் அதை ஏன் இரகசியமா வச்சுக்கணும்? என்கிட்ட இதைப்பத்தி ஒன்னுமே ஆண்ட்ரூ சொல்லலையே!!! அதுகூட அவன் சுயலாபத்துக்கு மறைச்சான்னு வச்சுப்போம். சௌந்தரியா என்கிட்ட கொடுத்த அந்தப் பைல்ல (கோப்புல) கூட இவன் போன சீசனோட போட்டியாளர்னு குறிப்பிடலையே?! சௌந்தரியாவுக்கு, இவன பத்தி தெரியாம இருந்திருக்காது. ஆனால், அவளும் இதைப் பத்தி என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டாள். இன்னைக்கு நடந்த எலிசாவோட மரணத்த குறிப்பிட்டவன், சரியா ஏழாம் நாள்ல இன்னொரு போட்டியாளர் இறப்பாங்கங்கற மாதிரி ஒரு இடத்தை வேற காலியா விட்டு வச்சிருக்கான். அப்போ, இன்னைக்கு நடந்த மரணத்துக்கும் ஆண்ட்ரூவுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு....” என்று தனக்குத் தானே வாய்விட்டு மெதுவாகப் பேசிய ஷின்னை, அவன் அறை பின்பக்கமிருந்த சாளரம் வழியே இருகண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஷின்னிற்கு ஏதோ தன்னைப் பார்ப்பதுபோல் தோன்ற, தன் தலையை மெதுவாகத் திருப்பி அந்தப் பின்பக்க சாளரத்தைப் பார்த்தான். அங்கே ஏதோ நிழலுருவம் தெரியவே, அடிமேல் அடிவைத்து நடந்து அந்தச் சாளரத்தை நெருங்கினான். சாளரத்தை நெருங்க நெருங்க, ஷின் பாதி அமர்ந்த நிலையில் நடக்கலானான். சாளரத்தின் சுவரைப் பிடித்து மெதுவாகத் தன் தலையை மட்டும் மேலுயர்த்தி எழும்பியவன், சற்றென்று எழுந்து நின்று சாளரம் வழியே கீழே பார்க்க... தரைத் தளத்தில் ஒருவன், முழங்கால் வரை நீண்டு தொங்கிய, தலைக்குக் கருமை நிற குல்லாவுடன் கூடிய முழுக்கை கோட்டுடன் ஓடுவதைக் கவனித்த ஷின், வேகவேகமாகத் தன் அறையைவிட்டு வெளியே வந்து, படிகளில் உருளாதக் குறையாக இறங்கி... அவனைக் கண்டுபிடிக்கும் பொருட்டு காற்றைவிட வேகமாக ஓடிய ஷின், பின்பக்க தோட்டத்தை அடைந்தான். சரியாக அவன் அறை சாளரத்திற்கு நேராக உள்ள அந்தப் பகுதிக்கு வந்தான். இரவின் இருட்டான சூழலில் ஷின்னின் கண்ணிற்கு ஒன்றும் தெரியாமல் போகவே, தனது கைப்பேசியின் ஃப்ளாஷ் லைட்டினை உயிர்ப்பித்தான்.

ஃப்ளாஷ் லைட்டினை அங்குமிங்கும் ஓடவிட்டவனின் கண்ணுக்கு ஏதோ நடமாட்டம் தெரியவே, வேகமாக நடந்து அவ்விடத்தை அடைந்தான். சுற்றும் முற்றும் தன் பார்வையால் துழாவியவனின் பின்னந்தலையில் நங்கென்று கட்டையால் அடித்துவிட, ஷின்னிற்கு அப்படியே தலை சுழன்றது. தன் பின்னந்தலையைப் பிடித்தவாறு கலங்கியக் கண்களோடு தன்னை அடித்தவரைத் திரும்பிப் பார்க்க முற்பட்டபொழுது, மறுபடியும் அந்நபர் அவனை அடிக்க எத்தனிக்க... அவரின் கரத்தினை, ஷின் தனது பலம் வாய்ந்த கரத்தினைக் கொண்டு தடுத்தான். அடிக்க வந்த நபரோ, தன்னாலான வரை அவனது பிடியைத் தளர்த்தும் முயற்சியில் ஈடுபட... தொலைவில் ஓர் ஆடவன் கண்களில் இந்நிகழ்வு தென்படவே, அவன் வேகமாக ஓடிவருவதைப் பார்த்த அந்த முகம் தெரியாத நபர்... ஷின்னை அப்படியே எட்டிமிதித்துவிட்டு ஓடிவிட்டான்.

தலையைப் பிடித்தவாறே ஷின் அப்படியே கீழே சரிய, அவனை வந்து தாங்கிப்பிடித்தது, இந்நிகழ்வைத் தொலைவிலிருந்து பார்த்த அவ்வாடவனின் கரம். கண்கள் சொருக, தன்னை காப்பாற்றியவனின் முகத்தைப் பார்த்தான் ஷின். முக்கால்வாசி முகத்தைக் மறைத்திருந்தது அவ்வாடவனின் மூக்குக்கண்ணாடி. அவனின் முகத்தை இரத்தமாய் இருந்த தன் கரத்தினைக் கொண்டு பிடித்த ஷின்னை, அவ்வாடவன் தூக்கிக்கொண்டு பங்களாவிற்குள் கூட்டிச்சென்றான். பங்களாவிற்குள் நுழைந்ததும், படிகளில் ஷின்னை தூக்கியபடியே ஏறினான். ஷின்னின் அறை வரவும், கதவைத் திறந்து உள்ளே கூட்டிச்சென்றவன் அவனை அவன் மெத்தையில் படுக்கவைத்தான். அறையிலிருந்த அலமாரிக்கதவைத் திறந்து, அந்நிகழ்ச்சியின் அதிகாரிகள் வைத்திருந்த முதலுதவி பொருட்களை எடுத்துக்கொண்டு ஷின்னின் மெத்தையில் அவனுக்கருகில் அமர்ந்தான் அவன்.

தன்னாலான சில முதலுதவிகளைச் செய்த பின்னர், ஷின் சற்றுக் கண்ணயர்வதைக் கவனித்த அவன்... ஷின்னின் மெத்தைக்குக் கீழே தரையில் படுத்துக்கொண்டான்.

கதிரவன் தன் கதிர் கரத்தினை ஷின்னின் சாரளத்தின் வழியே அவனறைக்குள் செலுத்தியதால், ஷின்னின் முகத்தில் பட்டுத் தெறித்தது. சூரிய வெளிச்சம், ஷின்னின் கண்களுக்குக் கூச்சத்தினை ஏற்படுத்தவே... மெதுவாகக் கண்விழித்தான். முந்தைய நாளின் நிகழ்வு அவனுக்கு நினைவு வரவே, தலையில் இடப்பட்டிருந்த கட்டினை பிடித்தவாறே, தன்னைக் காப்பாற்றிய அந்நபரை தேடும் முடிவிற்கு வந்த ஷின், தன் மெத்தையை விட்டுக் கீழே இறங்கினான். தரையில் நேற்று இரவு தன்னைக் காப்பாற்றிய நபர், ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதைக் கவனித்தவன் அவரை எழுப்பாமல், தன் குளியலறைக்குச் சென்றான்.

ஷின் குளித்து முடித்து வெளியே வருவதற்கும், அந்நபர் உறக்கத்திலிருந்து விழிப்பதற்கும் சரியாக இருந்தது.

“தேங்க்ஸ் ங்க...” என்று ஷின் கூறிய வார்த்தைக்கு அவன் புறம் திரும்பிய அந்த மூக்குக்கண்ணாடி நபர் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

முந்தைய நாளிரவில் தன்னை அவன் காப்பாற்றிய பொழுதில் அவன் முகத்தை ஷின் சரியாகக் காண இயலவில்லை. ஆனால் தற்போது அவன் முகத்தைப் பார்க்கவும் ஷின் அந்த மூக்குக்கண்ணாடி ஆடவனை அடையாளம் கண்டுகொண்டான்.

‘இவன், இந்த நிகழ்ச்சியில கலந்துக்குற போட்டியாளர்கள்ல ஒருத்தனாச்சே! பேரு கூட.... ம்ம்ம்... ஸ்டீபன்’ என்று ஷின் தன் மனதில் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அந்த ஸ்டீபன், தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

“ஹலோ! ஐ அம் ஸ்டீபன்... இந்த நிகழ்ச்சியோட போட்டியாளர்கள்ல நானும் ஒருத்தன். நைஸ் டூ மீட் யூ... பை தி வே, நானும் அமெரிக்கன் தான்.” என்று செம்மையான தமிழில் தன்னை அவன் அறிமுகம் செய்து வைக்க... ஷின்னிற்கோ அவனை சௌந்தரியா தந்த `போட்டியாளர் விவரப் பட்டியலில்` கண்ட நினைவு வந்தது.

”என் பேரு ஜியாங் ஷின். உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோசம் மிஸ்டர். ஸ்டீபன்... நேத்து என்னைய அப்போ காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றிகள். நிஜமா நீங்க செஞ்ச இந்த உதவி, மிகப் பெருசு. ரொம்ப நன்றி ஸ்டீபன்.” என்று ஷின் அவனுடன் நட்பிற்கு அடையாளமாய் ஸ்டீபனிடம் கைக்குலுக்கினான்.

“ஹைய்யோ... இதுக்குலாம் இத்தன நன்றிகள் சொல்லாதிங்க. யாரோ உங்கள அடிக்குற மாதிரி தெரியவும் என்னால எப்படி அங்கேயே நிக்க முடியும்? இதை உதவினு சொல்லாதீங்க ஷின். நேத்து மட்டும் உங்கள நான் பாதுகாக்கலனா, காலம் முழுக்க அது என் நெஞ்சுல ஆறாத வடு ஆகிடும். ம்ம்ம்ம்.... அப்போ நான் என்னோட ரூமுக்கு போறேன் ஷின். கொஞ்ச நேரத்துல காமெராக்கள்லாம் ஆன் ஆகிடும். நம்ம அப்பறம் பாக்கலாம்.” என்று புன்னகைத்தபடியே ஷின்னிடமிருந்து விடைபெற்றுவிட்டு தன் அறையை நோக்கி விரைந்தான் ஸ்டீபன்.

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ஷின், போட்டியாளர்கள்பற்றிய விவரங்களைத் தன் கைப்பேசியில் புகைப்படமாக[ பதிந்து வைத்திருந்ததை எடுத்துப்பார்க்கலானான். அதில் ஸ்டீபங்க்கு மாலைக் கண் நோய் இருப்பதாகப் பதிந்திருந்தது. அதனைக் கண்டவனின் மனதில் அதிர்ச்சி குடிகொண்டது.

‘இவனுக்கு மாலைக் கண் நோய்னா, எப்படி நேத்து ராத்திரி எனக்கு ஆபத்துனு இவன் கண்ணுக்குத் தெரிஞ்சுது?’ என்று யோசித்தவன் மெல்ல தன் அறையைவிட்டு வெளியேறிக் கூடத்தை நோக்கி நடக்கலானான். கூடத்தின் இடப்பக்க பகுதியில் இடப்பட்டிருந்த நீளமான சோபாவில் அமர்ந்தான். அவன் அமர்ந்த சற்று நேரத்திலேயே ஸ்டீபனும் வந்து, அவனருகில் அமர்ந்தான். ஷின்னைப் பார்த்து லேசாகப் புன்னகைத்த ஸ்டீபன்,

“தலைல வலி குறஞ்சிருச்சா?” என்று கேட்கவும் அதற்கு ஷின்,

“ம்ம்ம்” என்ற பதிலையே தந்தான். சற்று நேரத்திலேயே சௌந்தரியா அந்தக் கூடத்திற்கு வந்து, காமெராக்களுக்கு ஏற்ற மாதிரி, கூடத்தில் சில பல மாற்றங்களைத் தனியே செய்துகொண்டிருக்க... ஷின்னிற்கு அருகிலிருந்த ஸ்டீபனோ, வேகமாகச் சென்று, சௌந்தரியாவிற்கு உதவிகளைச் செய்யத்தொடங்கினான். அவனைப் பார்த்துக்கொண்டிருந்த ஷின்,

‘இவன் நல்லவனா தான் இருக்கான். ஆனா, இந்த மாலைக் கண் நோய் விசயம் தான் இடிக்குது... எதுவா இருந்தா என்ன? நேத்து ராத்திரி, இவன் மட்டுமில்லனா.......’ என்று மனதில் எண்ணியவனின் தலை லேசாக வலி எடுக்க, முந்தைய நாளின் நினைவு அவன் மூளையில் வந்து போனது. அதனைப் பற்றி யோசித்த ஷின், தன்னை அடிக்கும் அளவிற்கு அந்தப் பங்களாவில் தன் மீது யாருக்கு விரோதம் என்று யோசித்தவனின் கவனத்தை கவரும்படி, ஆண்ட்ரூவின் குரல் கேட்டது.

“ஆமா, ஆமா... எனக்குத் தான்.” என்று ஆண்ட்ரூ யாரிடமோ தன் கைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தது ஷின்னின் செவியில் விழவே... அவன் கூறிய அவ்வார்த்தைகளும் தன் யோசனையுடன் ஒத்துப்போவதைக் கவனித்தவன்,

‘இவன் யாருகிட்டையோ தான் பேசுறான்... ஆனால், இவனோட இந்தப் பதில், என்னோட யோசனையோட ஒத்துப்போகுதே!! இது கடவுள் காட்டுற அறிகுறியா இருக்குமோ? ஒருவேளை, நேத்து என்னைய அடிச்சுப் போட்டது, இவன் தானா? இவன் மேல தான் சந்தேகம் நேத்து எனக்கு அதிகமாச்சு. எலிசாவோட இறந்த உடல பார்த்த அப்போ அவன் முகத்துல ஒரு அசட்டையான உணர்வு தான் தெரிஞ்சுது. அது மட்டுமில்லாம, நான் அவன சந்தேகப்படுறேனு அவனுக்குத் தெரிஞ்சிருக்கும் அப்போவே. இல்லைனா, என்னையக் கண்டு ஏன் இவன் அப்படி பதறணும்?’ என்றெண்ணியவன், அவனிடன் பேச்சு கொடுக்கலாம் என்ற யோசனையில் ஆண்ட்ரூவிற்கு அருகில் போய் நின்றான் ஷின். கைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு, திரும்பிய ஆண்ட்ரூ, ஷின்னைக் கண்டு முகம் மலரச் சிரித்தான். பின், அவன் தலையிலிடப்பட்டிருந்த கட்டினை, புருவங்கள் நெரியப் பார்த்தவன், அதனைப் பற்றி ஷின்னிடம் எதுவும் பேசாமல்,

“என்ன ஷின்? டிபன் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டபடி தனது தொலைப்பேசி அழைப்பினை துண்டித்தான்.

ஷின்னின் கட்டைப் பார்த்தும் பாராதது போல் ஆண்ட்ரூ பேசியதைக் கவனித்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஷின் ஆண்ட்ரூவின் கேள்விகளுக்குப் பதிலளிக்கலானான்.

“இனிமே தான் சாப்பிடணும் ஆண்ட்ரூ. நீங்கச் சாப்பிட்டீங்களா?” என்று அவனும் ஒன்றும் நடவாதுப் போலப் பேச்சை மாற்றினான் ஷின்.

“ஃபெல்லோ மேட்ஸ்...! எல்லோரும் வாங்க இங்க...” ஜெனிபரின் அதிகாரக் குரல் அந்தப் பங்களாவில் எதிரொலிக்கவே, அனைத்து போட்டியாளர்களும் ஜெனிபரின் முன் ஒன்றுகூடினர். ஷின்னின் கண்களோ, எலிசாவின் காதலனான அந்தப் பாகிஸ்தானி நடிகன், ஃபர்ஹானைத் தேடியது. அவனோ மெல்ல மெல்ல, பூமித்தாய்க்கு வலித்தராமல் நடந்து வந்து ஜெனிபரின் முன் வந்து நின்றான். அவனது முகத்தைக் கூர்ந்து பார்த்த ஷின் திகைத்தான். ஏனெனில், அவன் முகத்தில் சிறிதும் கவலையில்லை.

‘அது சரி... இவன் தான் பெயருக்காகவும், புகழுக்காகவும் பழகுறவனாச்சே! எலிசாவோட இழப்புலாம் இவனுக்குப் பெரிசில்ல தான்.’ என்றெண்ணியவன் அதற்கு மேல் ஃபர்கானைப் பார்த்து வைத்தால், அவன் தன்னைத் திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால், சட்டென்று தன் பார்வையை ஜெனிபர் பக்கம் செலுத்தினான். எதேச்சையாய் சௌந்தரியாவைப் பார்த்த ஷின்னிற்கு தன் தலையில் அடித்துக்கொள்ளலாம் போன்று இருந்தது.

ஏனென்றால், சௌந்தரியா ஃபர்ஹானை பாவமாகப் பார்த்து வைத்தாள். அவள் கண்களில் தெரிந்த கருணையைக் கண்ட ஷின், இப்பொழுது நிஜமாகவே தன் தலையில் அடித்துக்கொண்டான்.

‘அந்தப் பரதேசியே ஒரு மண்ணு ஃபீலிங்க்ஸும் இல்லாம, எனக்கென்னனு வந்து நிக்குது. இதுல இவள் வேற அன்னை தெரஸா ரேஞ்சுக்கு கருணை பொங்க, பாவமா அவனைப் பார்த்து வைக்குறாள்.’ என்று சௌந்தரியாவை மனதிற்குள் புகழ்ந்தவன், மீண்டும் ஃபர்ஹானை பார்க்க... அவனோ, சௌந்தரியா தன்னைக் கண்டு பரிதாபப்படுகிறாள் என்பதை உணர்ந்துகொண்டு, தன் முகத்தில் பொய்யான வருத்தத்தைப் பிரதிபலித்தான்... இதனைக் கவனித்த ஷின்னிற்கோ, ஃபர்ஹானை கொன்றுவிடும் கொலைவெறி வந்தது. அதே கொலைவெறியுடன் சௌந்தரியாவை அவன் நோக்க, அவள் கண்களில் கண்ணீர் தான் வரவில்லை. அப்படியொரு சோகம் அவள் முகத்தில் ஃபர்ஹானைக் கண்டு.

‘மொதல்ல இவள போட்டுத்தள்ளணும்...’ என்று தன் மனதிற்குள் பொய்யாகக் கோபித்தவனுக்கு அப்பொழுது தெரியாது அவ்வார்த்தை மெய்யாகப் போவது...

“போட்டியாளர்கள் எல்லோரும் வந்தாச்சா சௌண்ட்?” என்று ஜெனிபர் சௌந்தரியாவின் புறம் திரும்பிக் கேட்கவும், அதுவரை ஃபர்ஹானைக் கண்டு கண்ணிற்குத் தெரியாத வயலினில் சோக கீதம் வாசித்த சௌந்தரியா அவ்வயலினைக் கீழே போட்டுவிட்டு ஜெனிபரிடம்,

“ம்ம்... வந்துட்டாங்க ஜெனி” என்று கூறினாள். அதனைக் கவனித்த ஷின்,

‘நீ எங்கே போட்டியாளர்கள்ல செக் பண்ண? வந்ததுல இருந்து ஃபர்ஹானப் பார்த்து அழுவாச்சி காவியம் தானே பாடிட்டு இருந்த...? அம்புட்டும் பொய்யி...’ என்று தன் மனதிற்குள் சௌந்தரியாவை அர்ச்சனை செய்து கொண்டிருந்தான். இவனது அர்ச்சனையைக் கலைக்கும் விதமாக ஜெனிபர், தன் உரையை ஆரம்பிக்கலானாள்.

“எல்லோரும் கவனிங்க...! நேத்து நடந்த எலிசாவோட மரணம் மிகவும் வருத்ததிற்குரிய விசயம். அவள் நிஜமாகவே ரொம்ப நல்ல பொண்ணா தான் இருந்தாள். ஒரு நல்ல ஜீவனுக்கு அப்படியொரு முடிவு வந்திருக்கக் கூடாது. அவளது அந்தப் புனிதமான ஆத்மாவுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவோம்...” என்று ஜெனிபர் கூறிமுடிக்கவும், போட்டியாளர்களிலிருந்து அந்தப் பங்களாவில் பணிபுரியும் வேலையாட்கள் முதற்கொண்டு, அனைவரும் ஒரு நிமிடம் அவரவர் கண்களை மூடி, எலிசாவிற்காக மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பிறகு கண்களைத் திறந்த ஷின்னின் காதுகளுக்கு யாரோ கதறியழும் சப்தம் கேட்கவே, யாரது என்ற யோசனையுடன் திரும்பியவன்... கடுப்பின் உச்சத்திற்கே சென்றான்.

“இசா........ “ என்று எலிசாவை எண்ணி போலியான கண்ணீரை வரவழைத்துக் கொண்டு ஃபர்ஹான் அழுவதைக் கண்டால் ஷின்னிற்கு மட்டுமல்ல, அவனை நன்கறிந்தவர்களுக்குக் கூடக் கடுப்பாகும் தான்.

‘அய்யைய...! இவன் போடுற சீன்-அ பார்த்து இந்த லூசு என்ன செய்யுதோ.....?’ என்றெண்ணியபடி அவனது லூசான சௌந்தரியாவை நோக்க... அவளோ, தனது கைக்குட்டையில் மூக்குச்சிந்தும் அளவிற்கு கண்ணீர் சிந்தியிருந்தாள். அதனைக் கண்ட ஷின்,

‘ஆண்டவா...!’ என்று தன் கண்களை இறுக மூடிக்கொண்டான். பின்பு, சௌந்தரியா என்ன எண்ணினாளோ தெரியவில்லை. சட்டென்று அவளது அழுது வடிந்த கண்கள், ஷின்னைப் பார்த்தது. அவள் தன்னைப் பார்ப்பதைக் கண்ட ஷின், அவளிடம் சைகையில் பேசினான்.

“எதுக்கு அழுகுற?” என்று ஷின் சைகையில் சௌந்தரியாவிடம் கேட்க... அதற்கு அவளோ, தன்னுடைய நீளமான விரலினை நீட்டி ஃபர்ஹானை சுட்டிக்காட்டவும், ஷின்னின் மூக்கு, காது, வாய் என்று அவனது முகத்தில் உள்ள அனைத்து துவாரங்கள் வழியே கோபாக்னி தெறித்தது.

“இத முடிச்சுட்டு வெளிய வா… உனக்கு வைக்கிறேன் கச்சேரி.” என்று ஷின் சைகையில் கூறவும் அவனின் இக்கோபத்தின் காரணம் தெரியாமல் திகைத்தாள் சௌந்தரியா.

அவர்கள் இருவரின் கவனத்தை மீண்டும் தன் புறம் திருப்பியது ஜெனிப்பரின் குரல்.

“இப்போ உங்கள் எல்லோரையும் நான் மௌன அஞ்சலி செலுத்த சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு. அப்கோர்ஸ்… எனக்கும் அந்தப் பொண்ணு எலிசாவோட மறைவுல வருத்தம் தான். ஆனால், அதுக்காகலாம் இந்த விசயத்த வெளிய தெரியவிட முடியாது. மீடியாக்களோட பசிக்கு நம்ம ஷோவ பலியாக்க முடியாது. அதுனால, அவளோட உயிரற்ற உடல, நாங்களே எரிச்சுட்டோம். இப்படியொரு விசயம் நடந்தத நாங்களும் மறந்துறோம்… நீங்களும் மறந்துருங்க.” என்று கூறிவிட்டு ஜெனிபர் திரும்ப....

இதனைக் கேட்கவும் அதிர்ந்த ஷின், “இது அந்தப் பொண்ணோட இறப்புக்கு நம்ம செய்யுற அநியாயம்.” என்று சத்தமாகவே கூறிவிட்டான். அதனைக் கேட்ட ஜெனிபர், மெதுவாக தன் தலையை மட்டும் திருப்பி ஷின்னை கண்களைச் சுருக்கிக் கொண்டுபார்த்தார்.

“நியாயம் அநியாயம் பார்க்கவா நான் ஷோ வச்சு நடத்துறேன்?” என்று கேட்டவர், போட்டியாளர்கள் அனைவரையும் பார்த்து, “வந்த வேலைய மட்டும் பார்க்கணும் எல்லோரும். செத்தவளுக்கு வக்காலத்து வாங்க நினைக்குறவங்க தாராளமா எலிமினேசன் கேட்டு வாங்கிட்டுப் போகலாம். மீடியாக்கு விசயத்தக் கொண்டுப் போனா, நீங்க எலிமினேட் ஆன கடுப்புல இப்படிலாம் பொய் புரளி கிளப்புறீங்கனு சொல்லிட்டு போயிட்டே இருப்போம்.” என்று கூறிய ஜெனிபர் ஷின்னை ஒரு முறைத்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.

இதனைக் கேட்ட ஷின்னின் மனம் வலிக்க, சௌந்தரியாவைப் பார்க்க… அவளோ ‘இதெல்லாம் சகஜம்’ என்பது போன்ற முகபாவத்தை வைத்துக்கொண்டாள். அது அவனுக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது.

தலைகுனிந்தபடி இருந்தவனின் தோளில், ஆண்ட்ரூ தன் பரந்த கரத்தை போட்டவன்,

“என்னவாம்? ஃபீலிங்க்ஸா?” என்று உதட்டில் புன்னகை மலர வந்து நின்றவனை கலங்கிய கண்களோடுப் பார்த்தான். ஆனால் ஆண்ட்ரூவின் முகத்திலிருந்த புன்னகையைக் கண்டவனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டது.

‘இவனோட இந்த நடவடிக்கைகள் தான் எனக்கு இவன்மேல இருக்குற சந்தேகத்த அதிகரிக்குது.’ என்று எண்ணியபடி அவனைப் பார்க்க, அவனோ இவனது கலங்கிய கண்களைக் கண்டுவிட்டு,

“இங்க பாரு ஷின். தொலைக்காட்சி நிகழ்ச்சியில இதுப்போல விசயங்கள் சர்வ சாதாரணம். இதெல்லாம் நீ கண்டும் காணாம இருக்க கத்துக்கோ. ம்ம்ம்? அதான் உனக்கு நல்லது.” என்று கூறிவிட்டு அவன் அறையை நோக்கி விரைந்தான் ஆண்ட்ரூ.

மதிய நேரமானது... மைக்கில் ஜார்ஜின் குரல் ஒலிக்கவே, அனைவரும் அதனைக் கவனிக்கலானார்கள்.

“போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கப் பண்ண நாமினேசன்கான ரிசல்ட் இன்னைக்கு சாயங்காலம் வெளியிடப்போறோம். நீங்கள் பண்ண நாமினேசன்ல, யார அதிகாமான நபர்கள் தேர்ந்தெடுத்துருக்காங்களோ, அவங்க தான் இந்த வார எலிமினேசன்காக நாமினேட் செய்யப்பட்டவங்க.” என்று அறிவிக்கவும், அனைவரின் மூளையும் இவ்வாரத்திற்காக நாமினேட் ஆனவர்கள் எவரெவர் என்ற யோசனையில் ஆழ்ந்தது.

ஆனால் ஷின்னின் நினைவுகள் அனைத்தும் எலிசாவின் இறப்பிலும், அதனைக் கண்டுகொள்ளாமல் விடும்படி கூறிய ஜெனிபரின் வார்த்தைகளுமே சுழன்றுகொண்டிருந்தது. இவ்வாறு யோசித்தபடி அவன் தன் அறையில் அங்குமிங்குமாய் நடந்துகொண்டிருக்க... சௌந்தரியா அந்த அறையைக் கடந்து சென்றாள். இதனைக் கண்டுகொண்ட ஷின், அவளது கையைப் பிடித்துத் தன் அறைக்குள் இழுத்துக்கொண்டான்.

வார்த்தைகளின் எண்ணிக்கை - 1674
 

Priyamudan Vijay

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
9
Points
3

BK-31, கூட்டத்திலெது ஓநாய்? அத்தியாயம் – 7​

மதிய நேரமானது... மைக்கில் ஜார்ஜின் குரல் ஒலிக்கவே, அனைவரும் அதனைக் கவனிக்கலானார்கள்.

“போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பண்ண நாமினேசன்கான ரிசல்ட் இன்னைக்கு சாயங்காலம் வெளியிடப்போறோம். அப்படி நீங்கள் பண்ண நாமினேசன்ல, யார அதிகாமான நபர்கள் தேர்ந்தெடுத்துருக்காங்களோ, அவங்க தான் இந்த வார எலிமினேசன்காக நாமினேட் செய்யப்பட்டவங்க.” என்று அறிவிக்கவும், அனைவரின் மூளையும் இவ்வாரத்திற்காக நாமினேட் ஆனவர்கள் எவரெவர் என்ற யோசனையில் ஆழ்ந்தது.

ஆனால் ஷின்னின் நினைவுகள் அனைத்தும் எலிசாவின் இறப்பிலும், அதனைக் கண்டுகொள்ளாமல் விடும்படி கூறிய ஜெனிபரின் வார்த்தைகளுமே சுழன்றுகொண்டிருந்தது. இவ்வாறு யோசித்தபடி அவன் தன் அறையில் அங்குமிங்குமாய் நடந்துகொண்டிருக்க... சௌந்தரியா அந்த அறையைக் கடந்து சென்றாள். இதனைப் பார்த்துவிட்ட ஷின், அவளது கையைப் பிடித்துத் தன் அறைக்குள் இழுத்துக்கொண்டான்.

“ஷின்! என்ன இது? ஒரு பொண்ண இப்படியா கையப் பிடிச்சு இழுப்பீங்க?” என்று தன் புருவங்கள் நெறியக் கேட்டாள் சௌந்தரியா.

“வேற எப்படி கையப் பிடிச்சு இழுக்கணும்?” என்று ஷின் கேட்ட கேள்வியில் தன் இடப்பக்க புருவத்தை மட்டும் உயர்த்தி, அவனை முறைத்துப் பார்த்தாள் அவள். “பின்ன என்ன பா? நானும் காலைல இருந்து பார்க்குறேன். நீ ரொம்ப வித்தியாசமா நடந்துக்குற.” என்றவன் செல்லக்கோபத்துடன் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டான்.

“வித்தியாசமானா? புரியல ஷின்...” என்றவளின் பார்வையில் குழப்பம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“நீ முன்ன மாதிரி இல்ல சௌந்தரியா.”

“எதையுமே முழுசா சொல்லமாட்டியா நீ?” என்று சௌந்தரியா சாதாரணமாய் சொல்லி வைக்க, ஷின்னோ அதனை அவள் தன்மீதுள்ள கடுப்பில் கூறுகிறாள் என்று எண்ணியவனின் முகம் கணப்பொழுதில் வாடித் தெரிந்தது.

“ஓ...! சாரி மேடம். ஒண்ணுமில்ல. நீங்கள் உங்கள் வேலையப் பார்க்கப் போகலாம். தேவையில்லாம உங்களோட இந்தப் பிஸியான நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன். சாரி...” என்று தன் முகத்தைப் பின்புறமாகத் திருப்பியபடி, வலது கையை ‘போ’ என்பது போன்று அசைத்துவிட்டு, நடக்க முற்பட... அவனது கரத்தினை பற்றினாள் சௌந்தரியா. அவளது பிடியில் சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான் ஷின்.

“போ ன்னு சொன்னா, போயிடணுமா?” என்றவளின் கண்களில் காதல் அப்பட்டமாகத் தெரிந்தது. அவளது காந்தப் பார்வையின் தாக்கத்தைத் தாங்க இயலாது, முதலில் கண்கள் விரியப் பார்த்த ஷின் மூச்சை இழுத்துப் பிடித்தபடி சட்டென்று தன் பார்வையைத் தாழ்த்திக்கொள்ள... பட்டென்று சிரித்துவிட்டாள் சௌந்தரியா. “ஹாஹாஹா!!! என்ன பா? சும்மா பார்த்தாளே இப்படி வெக்கப்படுற?” என்று சிரித்தபடி அவள் கேட்டுவைக்க...

“அதெல்லாம் யாரும் இங்கே வெக்கப்படல.” என்றவன் அப்பொழுதும் நிமிர்ந்து சௌந்தரியாவைப் பார்க்காமல் வேறுபுறம் பார்த்தான்.

“ஓஹோ... அப்போ சரி.” என்றவள் சிறு நமுட்டு சிரிப்புடன், ”சரி... இப்போ என்னமோ நீ பேச வந்த. நான் வேற இடைல புகுந்து கெடுத்துவிட்டேன். என்ன விசயம்? சொல்லு” என்ற சௌந்தரியாவின் குரலில் தீவிரத்தன்மைத் தெரிந்தது. அதனை உணர்ந்த ஷின்,

“நீ ஏன் அந்த ஃபர்ஹானக் கண்டு அழுத?” என்று அவனும் அதே தீவிரத்துடன் வினவினான்.

“ஃபர்ஹானா? அவனைப் பார்த்தா பாவமா இல்லையா உனக்கு? எவ்வளவு அன்யோன்யமா இருந்தாங்க எலிசாவும் ஃபர்ஹானும்? அதைப் பார்த்துமா நீ இப்படி கேக்குற? அது மட்டுமில்லாம அவன் முகமே வாடிப்போய் தெரிஞ்சுது இன்னைக்கு.” என்ற சௌந்தரியாவின் முகம் மீண்டும் துக்கத்தில் வாட்டமாகத் தெரிந்தது.

“அவனைப் பத்தி தெரிஞ்சுமா நீ இதைச் சொல்லுற?” என்று ஷின் ஆச்சரியத்தில் கேட்க...

“ஹேய்! என்ன பா நீ? நானும் முதல்ல உன்னையப் போலத் தான் அவன் சும்மா காதலிக்குறதப் போல நடிக்குறான்னு நினச்சேன். ஆனால், எலிசாவோட இழப்பு அவன பெருசா பாதிச்சிருக்கு பா. அவன் அழுதுட்டே இருந்தான். நான் பார்த்தேன்.” என்ற சௌந்தரியாவின் குரல் வருத்தத்தைக் காட்ட... அருகிலிருந்த சுவரில் லேசாகத் தன் தலையை முட்டிக்கொண்டான் ஷின். “ஹேய்! ஏன் இப்படி நடந்துக்குற? இப்போ நான் என்ன சொல்லிட்டேன்?” என்று சௌந்தரியா பதட்டத்துடன் கேட்டாள்.

“லூசு... லூசு... லூ............சு! அவன் உனக்கு சீன் போட்டான். அதுகூட புரிஞ்சுக்காம...” என்று வார்த்தைகளை முடிக்காமல் பாதியில் நிறுத்திய ஷின் மீண்டும் சுவரில் முட்டிக்கொள்ள...

“சீன்னா? எனக்கா? எனக்கு ஏன் அவன் சீன் போடணும்?” கண்கள் விரிய சௌந்தரியா கேட்கவும், அதனைக் கேட்ட ஷின்னோ மூன்றாவது முறையும் தன் தலையைச் சுவரில் முட்டிக்கொள்ள வேண்டும் போன்றிருந்தது.

“உனக்கு சீன் போடாம எனக்கா போடுவான்? இந்தப் பங்களாலையே அவன் குணம் தெரிஞ்ச இளம் பொண்ணு நீ. அது தெரிஞ்சு நீ அவன உன்கிட்ட நெருங்கக் கூட விடுறதில்ல. முகம் கொடுத்துப் பேசுறது இல்ல. அப்படியே பேசுனாலும், கண்டுக்காம மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிர்ற... ஒரு பொண்ணு இதெல்லாம் செஞ்சா பார்த்துப் பொறுத்துப் போற குணமா அவனோடது? அதான் உன்னைய எப்படிடா அவன் வழிக்குக் கொண்டுவரலாம்னு பார்த்துருப்பான். இப்போ எலிசாவோட இழப்ப வச்சு உன் மனசுல பரிதாபத்த சம்பாதிச்சு, அதன் மூலமா உன்கூட சிரிச்சு பேசலாங்கற ஐடியா தான் அவனுக்கு.” என்ற ஷின்னின் வார்த்தையில் சற்றே அதிரத் தான் செய்தாள் பெண்ணவள். அதிர்ச்சியில் வாயடைத்துப் போனவளைக் கண்ட ஷின், தன் பேச்சைத் தொடர்ந்தான். “இதுக்கே ஷாக்கானா எப்படி? இதோட அவன் விடமாட்டான். நீ வேணும்னா பாரு. நாளைக்கு நீ அவனைக் கடந்து போகும்போது, கரெக்டா அப்போ தான் ரொம்ப சோகமா இருக்குற மாதிரி நடந்துப்பான். மற்ற நேரத்துல அவன்பாட்டுக்கு திரிவான். ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ. காதல் ங்கறது ஒரு அழகான உணர்வு. அது, இவன மாதிரி மெண்டல் கேஸூகளுக்குலாம் வராது. ஃபர்ஹான் கூட நடிச்ச அந்தப் பாகிஸ்தானி நடிகையோட நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப்பாரு. தன்னோட பெயர் பிரபலமாகணுங்கறதுக்காக அந்தப் பொண்ணோட எதிர்காலத்தையே கெடுத்தவன் அவன். இப்படிப்பட்ட ராஸ்கலுக்கு காதல் வருமா? நிச்சயம் வராது. அப்படியே வந்தாலும் அதுல இவனுக்கு ஏதோ லாபம் இருக்குனு அர்த்தம். இப்போ எலிசா விசயத்துலையுமே அவன் அவள காதலிச்ச மாதிரி நடிக்கத் தான் செஞ்சான்.” என்று ஷின் கூறிக்கொண்டிருக்கும் போதே, சௌந்தரியா அதிர்ந்தவளாக...

“என்னது!!! எலிசாவோட காதலிக்குறதப் போல நடிச்சானா? என்ன ஷின் சொல்லுற?” என்று கண்கள் விரிய வினவினாள்.

“ஆமா சௌந்தரியா. உனக்கு தெரிய ஃபர்ஹானோட குணமே, பேருக்காகவும் புகழுக்காகவும் எல்லாமே செய்யுறவன். இந்தப் போட்டியில எலிசாவுக்கு நிறையா ரசிகர்கள் சேர்ந்தாங்க. இது அந்த ஃபர்ஹானுக்கும் தெரியும். அவளோட இந்தப் பிரபலத்த இவன் பயன்படுத்தி தானும் பிரபலம் ஆகலாம்னு நினச்சான். இப்போதாவது புரியும்னு நினைக்குறேன். அவன் கிட்டப் பார்த்து நடந்துக்கோ இனி. இதெல்லாம் நான் வந்த புதுசுல நீ எனக்குச் சொன்னது. இப்போ நான் உனக்குச் சொல்ல வேண்டியதா இருக்கு...” என்றபடி தன் தலையில் அவன் அடித்துக்கொண்டான்.

“நான் அவன் நடிக்குறான்னே நினைக்கல ஷின். நிஜமாகவே அழுறான்னு தான் நினச்சேன். அவன் விட்ட கண்ணீர நம்பிட்டேன். சரி, விடு. இனி நீ சொன்னது போல அவன்கிட்ட கவனமா நடந்துக்குறேன். ம்ம்ம்? ரொம்ப தேங்க்ஸ் ஷின். எனக்குப் புத்தியத் தெளிய வச்சதுக்கு. ஒரு நிமிசத்துல அந்த நாடகக்காரனோட நாடகத்த நம்பிட்டேன்.” என்றவள், ஏதோ நினைவு வந்தவளாகத் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். “அச்சோ லேட்டாச்சே! சாரி ஷின். நான் இப்போ உடனே கிளம்பியே ஆகணும். நாமினேடேட் பெர்சன்ஸோட லிஸ்ட்ட பார்க்கணும். நான் அப்பறமா உன்னை வந்துப் பார்க்குறேன். பை...!” என்று கூறிக்கொண்டு வேகமாக அவ்விடத்திலிருந்து நகர எத்தனித்தவளின் கரத்தைப் பற்றினான் ஷின். அவனது பிடியைப் பார்த்தவள்,

“என்ன ஷின் இது? ப்ளீஸ் விடு. நான் இப்போ கிளம்பியே ஆகணும். இல்லைனா ஜெனிபர் என்னைய திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. சும்மாவே என்னைய எப்படா வேலைய விட்டுத் தூக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்காங்க. இதுல நான் இப்போ அவங்க வரச் சொன்ன டைம்க்கு போகலைனா, அதையே காரணமா வச்சு என்னைய வேலையவிட்டு அனுப்பிட்டு அந்த ஜார்ஜ அஸிஸ்டெண்டா போடலாம்னு முடிவே பண்ணிடுவாங்க.” என்ற சௌந்தரியா சுற்றும் முற்றும் தன் கண்களால் துழாவினாள்.

“என்னைய மட்டும் உன் கண்ணால அப்படி பார்த்துவச்சு, என்ன பாடு படுத்துன? அதுனால.....” என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அவளைச் சுவரில் சாய்த்து நிறுத்தினான். அவனது இச்செய்கையில் முதலில் பதறியவள், ஷின்னை இத்துனை நெருக்கத்தில் பார்த்ததால் முகம் சிவக்கத் தலை குனிந்தாள் பெண்ணவள்.

சௌந்தரியாவின் வெட்கத்தை புரிந்துகொண்ட ஷின், குனிந்த அந்த மலர் முகத்தை... அவளது நாடியைப் பிடித்து மெல்ல உயர்த்தி அவன் முகத்தைப் பார்க்க வைத்தான். ஆயினும் அவள் கண்கள் திறக்காமல் மூடிக்கொண்டபடி நிற்கவே...

“என்ன ஆச்சு? ம்ம்ம்?” என்று மெல்லியக் குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் ஷின் கிசுகிசுக்க... தன் கண்களை மெல்லத் திறந்தாள் சௌந்தரியா. கண்களைத் திறந்தவள், ஷின்னின் கண்களை நோக்க... என்னத் தோன்றியதோ, பட்டென்று சிரித்துவிட்டாள். அவளது சிரிப்பில் கலவரமான ஷின், மெல்ல மெல்லத் தனது பிடியைத் தளர்த்தினான். அதுவரை குறும்பு பொங்கிய அவனது முகம், இப்போது பயங்கரமான யோசனையில் ஆழ்ந்தது.

“என்ன ஆச்சு இப்போ? ஏன் திடீர்னு இவ்வளவு சிரிப்பு?” என்ற ஷின் சௌந்தரியாவிடமிருந்து சற்று தள்ளி நின்று யோசனையாகக் கேட்டான்.

“ஹாஹாஹா...! இப்போ நீ என்ன டிரைப் பண்ண?” என்று வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள் சௌந்தரியா. அவளது இக்கேள்வியில் மேலும் குழம்பிய ஷின்,

“நீ என்னைய ஒரு மாதிரி பார்த்தேல? அதுப்போல உன்னையவும் பார்த்து வச்சேன். இதுல என்ன காமெடிய கண்ட? இப்படி சிரிக்குற அளவுக்கு?” என்று வினவியவன் யோசனையாகத் தன் விழியிரண்டையும் உருட்டி உருட்டிப் பார்த்தான். அவனை அதற்கு மேலும் யோசிக்கவிட வேண்டாம் என்ற முடிவிற்கு வந்த சௌந்தரியாவோ, சிரித்து முடித்ததினால் லேசாகத் தன் தொண்டையை செறுமிக்கொண்டவளாய்...

“அதாவது, நீ என்னைய ரோமாண்டிக்கா பார்த்த? அப்படிதானே?” என்று பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு ஷின்னிடம் கேட்டாள்.

அதற்கு ஷின்னோ, ‘ஆமாம்’ என்பது போலத் தன் தலையை மேலும் கீழுமாய் ஆட்டினான். அதனைப் பார்த்த சௌந்தரியா ‘களுக்’ என்று சிரித்துவிட்டு, தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

“நீ... நீ... என்னையப் பார்த்தது ரோமாண்டிக் லுக்குனு சொன்னா, குழந்தை கூட நம்பாது.” என்று வாய்மூடிச் சிரித்தபடிக் கூறியவளை மேலும் குழப்பத்துடன் பார்த்த ஷின்,

“அப்போ வேற எப்படி தெரிஞ்சுது என் பார்வை?” என்று தன் கருவிழியை மேல் நோக்கியபடி யோசித்த ஷின்னைப் பார்க்கையில் சௌந்தரியாவிற்கு மேலும் மேலும் சிரிப்பு வந்தது.

“நீ என்னையப் பார்த்தது.....” என்று இழுத்தவள், வாயை மூடிக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள். “அது.... பிள்ளப் பிடிக்க வந்தவனப் போல இருந்துச்சு” என்றவள் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்து வைக்க... ஷின்னிற்கோ ‘என்னடா....’ என்று ஆனது. அவள் உருண்டு பிரண்டு தான் சிரிக்கவில்லையே தவிர, அவ்வறையே அதிரும்படியாகச் சிரித்து வைத்தாள். அதனைக் கண்ட ஷின் தன் கீழுதட்டைப் பிதுக்கியபடி,

“சரி... விடு. கிண்டல் பண்ணாத.” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல... அதனைக் கேளாமல் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.

“ஹாஹாஹா...! முடியல என்னால... ஹைய்யோ!” என்று சிரித்து சிரித்து மூச்சு வாங்கியவளை ஒரு கணம் தன் கண்களைச் சுருக்கிப் பார்த்த ஷின், அவளது வாயினை தன் வலக்கரத்தினால் வைத்துப் பொத்தி, சுவரில் சாய்த்தான். அதனைச் சற்றும் எதிர்பாராத சௌந்தரியா, தன் விழியகல ஷின்னைப் பார்த்தாள். அவன் தன் வாயைப் பொத்திய போதிலும் அதையும் மீறி அவள் ஏதோ கூற எத்தனிக்க...

“ச்சு! பேசாத. இவ்வளவு நேரம் உன்னையப் பேசவிட்டு கேட்டேன்ல? இப்போ நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு.” என்று ஷின் கூறவும், ‘ம்ம்’ என்ற பதிலையே அவளால் தர முடிந்தது. அதற்கு ஷின், “ஓகே... நான் அப்போ உன்னைய ரோமாண்டிக்கா பார்க்கலன்னே வச்சுப்போம். ஆனால் நான் கிட்ட வந்ததும் நீ கோபப்படாம ஏன் வெட்கப்பட்ட?” என்றவனின் உதட்டில் மெல்லிய புன்முறுவல் பூத்தது. அவனது பார்வையே, ‘மாட்டிக்கொண்டாயா?’ என்று இருந்தது.

ஷின் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தவள், சைகையால் தன் வாயைவிடும்படி கேட்டாள். வாயை விட்டால் தான் அவளால் பேச இயலுமென்று உணர்ந்த ஷின், மெதுவாக சௌந்தரியாவின் வாயை விடுவித்தான். அவன் தன் வாயை விடுவிக்கவும்,

“உஃப்....” என்று மூச்சுவிட்டவள், ஷின்னை நோக்கினாள். “பதில் வேணுமா?” என்று அவள் கேட்கவும்...

“ஆமா.” என்று ஷின் பதிலளித்த மறுநொடியே தன் இருக்கைகளையும் கொண்டு ஷின்னின் மார்பில் வைத்துத் தள்ளிவிட்டு விட்டு அவ்வறை வாசலை அணுகியவள்,

“சொல்ல முடியாது போ டா.” என்று கூறிவிட்டு சிட்டாகப் பறந்தாள் சௌந்தரியா.

மின்னலை விட வேகமாக தன்னிடமிருந்து தப்பிய சௌந்தரியாவை எண்ணிய ஷின்னின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அவளது வாயிலிருந்து தன்னை ‘டா’ போட்டு பேசியவிதத்தில் பாகாய் கரைந்தான் அவன்.

அன்று சாயங்காலம் ஏழு மணியளவில், ஜார்ஜின் நாமினேசன் முடிவிற்காக 14 போட்டியாளர்களுமே கூடத்தில் ஒன்றுத் திரண்டனர். காமெராவின் ரோல்லிங் ஆரம்பமாக, முகத்தில் ஒரு நாடகத்தன்மையான புன்னகையை வரவழைத்துக்கொண்ட ஜார்ஜ்,

“வணக்கம் வணக்கம்...! இந்த வாரத்தோட எலிமினேசனுக்காக், நம்ம போட்டியாளர்கள் நாமினேட் செஞ்ச மற்ற போட்டியாளர்கள் யார் யார்னு பார்ப்போம்...” என்று கூறியவன், கையில் வைத்திருந்த கார்டைப் பிரித்தான். “வாவ் வாவ் வாவ்...!! முதல் வாரம் நாலே நாலுப்பேரு தான் நாமினேட் ஆகிருக்கீங்க. அது யார்னு இப்போ பார்ப்போம்.” என்றவன், நாமினேட் ஆகிய ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயரைக் கூறினான்...

“முதல்ல நாமினேட் ஆகிருக்கறது, ஃபர்ஹான்...” என்று ஜார்ஜ் கூறவும், கண்கள் விரிய சௌந்தரியாவை நோக்கினான் ஷின். ஆனால் அவளோ ஷின்னைக் கலங்கிய கண்களோடுப் பார்த்தாள். அதனைக் கண்டவன், ஃபர்ஹானைப் பார்க்க... அவனோ எலிசாவின் இழப்பில் துக்கத்திலிருப்பது போன்ற முகபாவனை செய்துகொண்டிருந்தான்.

‘ஓஹோ! இந்த நாமினேசன் கூட இவர பாதிக்கலையாம். எலிசாவோட இழப்பு தான் பெரிய வலியாம்... நடிகன் டா நீ. ஆனாலும் இந்த சௌந்தரியா உன்னைய நம்புதே இன்னும்! பாரு, இன்னும் கண்ணுல கண்ணீர தேக்கிட்டுப் பார்க்குறா’ என்று மனதிற்குள் ஃபர்ஹானை வசைபாடியவன், மறுபடியும் சௌந்தரியாவைப் பார்த்தான். அப்பொழுதும் அவள் கண்களில் நீர் தேங்கியிருக்க... தன் தலையில் அடித்துக் கொண்டான் ஷின்.

“அடுத்து, பலாங்கா” என்று ஸ்பைனைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரை நாமினேசனுக்காக அறிவித்தான் ஷின். அந்தப் பலாங்காவின் சிவந்த முகமோ அதிர்ச்சியில் மேலும் சிவந்தது.

“அடுத்ததாக நாமினேட் ஆனது, செல்சியா” என்று ஒரு ஆப்ரிக்காவை சேர்ந்த பெண்ணை ஜார்ஜ் அறிவித்தான். “ஃபைனல்லி, ஜியாங் ஷின்....” என்று ஜார்ஜ் நாமினேட் ஆன போட்டியாளர்களை அறிவித்து முடிக்க, சௌந்தரியாவோ பொங்கி வந்த அழுகையில் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

முதலில் தன் பெயர் நாமினேசனிற்கு வந்ததில் அதிர்ச்சி ஆனாலும், சௌந்தரியாவின் அழுகையைக் கண்டவன் வேக வேகமாக சௌந்தரியாவைப் பின் தொடர்ந்து ஓடினான்.

ஷின்னை நாமினேட் செய்தது யார்?இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.​

வார்த்தைகளின் எண்ணிக்கை :- 1,462.
 
Status
Not open for further replies.
Top Bottom