வணக்கம் சகோதரிகளே ..
#சந்திரநகையே..!!
ஆசிரியர் ரஜனி.
தேய்பிறை நிலவின் நேசக்காரியை
வளர்பிறை நிலவுக்குள் பதுக்கி
முழுமதியாக பவனிவர..
நிழலாக தொடரும் மேகத்தை விலக்கி
சந்திரமதியின் நகையை உலாவர..
வைத்திட்ட ஆகாய மாதவனின் காதல்..
முதல் சீண்டல் முழுவடிவம் கனலை கக்க
நகை பூத்தவனின் அழகில் மயங்கி நகையாகி
போனாளோ மாதவள்..
சந்திரநகையே புன்னைகையின்
நந்தவன காடு..
இங்கே சிரிபொலி மட்டுமே..
மெல்லிய சாமரம் வீசிடும்..
நாயகன் அமரேந்திரன் தலைப்பு கருக்கு பொருத்தமானவன்.
இனிமையான இளவரசன் .பார்ப்பவர் மனம் கவர் நல்ல நேயன்.
வீட்டின் ஒற்றை வாரிசு செல்லப்பிள்ளை. புன்னகை மன்னன் இவன் இயல்புகளை பங்குபோட வரும். நாயகியின் முதல் சந்திப்பிலே அடிவாங்கும் காதல்காரன்.. அந்த ஒற்றை பெயர் விளிப்பிலே...
நாயகி அனுஷ்கா பொறுப்பான குடும்பத்தை சுமக்கும் பெண்.
மனதிலே பலவலிகளை சுமந்தாலும் இயல்பு குறையாமல் சின்ன சிரிப்பை மட்டுமே சிந்தும் பாவமான பெண்.அவளின் இலட்சியம் என்ன என்பதை அறிய நாயகன் போராடும் நிலை பாவமே..
காதல் கொண்ட நாயகன் நாயகியை துரத்தி .. துரத்தி காதல் செய்வதும் மோதல் விடு தூதாக முறைப்பதும் மிகவும் ரசனையே..
விளையாட்டு நாயகனுக்கும் பொறுப்பான நாயகிக்கும் வரும் காதலை அழகாக கொண்டு செல்வது அழகு.
நாயகனின் குடும்பத்தார் அனைவரும் அநியாயத்திற்கு நல்லவராய் இருப்பது பெருமையோடு இப்படி அழகான குடும்பமா என நினைக்க தோன்றுகிறது .!!!!?
அதுவும் சித்தப்பா மகன் உறவு ஏதோ நண்பர்கள் போல மாமன் மச்சானாகா வளைய வருவது படிக்கும் நமக்கு குளிர்ச்சியே..
இருவரும் செய்யும் பலவேலைகள் சிரிப்பின் உச்சமே..
பறக்காவெட்டி !!! இது என்ன பேச்சோ ஆனால் சொல்லுமிடம் சிரிப்பின் உச்சம்.. அமர் அவசரகாரன் என்பதில் அவனின் சிலபல விளையாட்டில் புரிகிறது. அசத்திட்டான் அமர்.
அப்பப்போ ராமனின் பொருப்பான பேச்சு கவலை அழித்தாலும் ரசனையே.. வழி நடத்தலும் கூட . பேசினால் விடாத நல்ல மனிதர்.
இரு குடும்பத்தின் தந்தைகளுக்கும் எப்படியான வித்தியாசம் என சொல்லி இருப்பது மிகவும் அழகு. அப்படியும் ஒரு அப்பா இப்படியும் ஒரு அப்பா..!!
ஒரு கிராமத்தில் விவசாயம் அதனை சுற்றி நடக்கும் வாழ்வியல்புகள் பேச்சு வழக்கு என அழகாக கதையை நகர்த்தியது மிகவும் அழகு.
அமர் மனதோடு குறும்பனாக சில்மிஷ கோபகாரனாக மனதோடு நிறைந்து போனான். அனு அப்படியே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அழகான ஒரு குடும்பத்தில் தாத்தா,பாட்டி,முதல் அனைவரோடும் ஒன்றாக வாழ்ந்த மாதிரி இருந்தது.
விவசாயம் ,பொறுப்பு,குடும்ப பாசம்,காதல்,வலி,பேராசைநிலை,
தன் சுயபேராசை ஆசைகள்,என பல நிலைகளை அழகா கொடுத்து சென்றது அருமை ஆசிரிய தோழியே..
ஒரு மெல்லிய காதல் கதையை தென்றலாக கொண்டு வந்து வீசி சென்றது அழகு ஆசிரிய தோழியே..
சந்திரபுன்னகையே மனதோடு புன்சிரிப்பாக
போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா