Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தமிழா தேவ்!!!

Messages
2
Reaction score
1
Points
1
ஓம் சாய் ராம்!!!

அனைவருக்கும்... சாய்லஷ்மியின் வணக்கம்!! இதோ.... உங்களுக்கான கதை!!!



தமிழா தேவ்!!!
“பேரன்பு கொண்ட அன்பர்களே! தாய்மார்களே! ஆசிரிய பெருமக்களே! தோழிகளே! என் மதிப்பிற்குரிய வணக்கங்கள்! நம் வாழ்வில் மறக்க முடியாத நாள்! உயர்திரு டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல்கலாம் அவர்களின் நான்காவது இறந்த தினம். நம்மை ஆழ்ந்த துக்கத்தில் வீழ்த்திய தினம், ஜயாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த நாள் போதாது!



அவர், நம் தாய்மண்ணில் பிறக்க என்ன தவம் செய்தோமோ? மத சார்பற்ற மனிதர், தாய்நாட்டையும், தாய் மண்ணையும் சுவாசித்தவர், அன்னிய நாடுகளிலிருந்து அவரையும், அவர் தம் அறிவையும் சுரண்ட நினைத்தவர்களுக்கு “எனது பணியும், உழைப்பும், என் தாய் நாட்டிற்கே!” என்றுரைத்து, அவர்கள் முகத்தில் எல்லாம் கரியை பூசினார் அந்த மாமனிதர். அவரை தெய்வமாக பாவித்து, அவர் தம் வழியில், நாமும் நடைபோட்டு நம் தாய் நாட்டை.......... செம்மைபடுத்துவோமாக! என அங்குள்ளவர்களை கிளர்ச்சியூட்டும் விதமாக அழகாகவும், ஆணிதரமாகவும் பேசி முடித்தான்...... சாய்தேவ்.




அவனுடைய உரையாடலை தொடர்ந்து, சிறு பிள்ளைகளின் கோலாட்டம், ஆடல்கள், பாடல்கள், நடைபெற்றன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து கொண்டு சென்றவன், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து, ஊனமுற்ற, ஆதரவற்ற, பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு பறிமாறி, உட்கொள்ள வைத்ததுடன் அல்லாமல் உறங்க வைத்து, இறுதி வரை செயலாற்றினான். அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டு நிமிரும் போது, மாலை.......நான்காகிவிட்டது.



அவனுடைய தொலைபேசியில் தொடர்ந்த அழைப்பிற்குரிய எண்ணை பார்த்து முதலில் பயந்தவன், உடனே பதறியபடி அழைக்க, மறுமுனையில், அவனுடைய அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதழோர புன்னகையுடன், அவ்விடத்தை விட்டு அகன்றவன், நேராக.... பெரிய அடிக்கு மாடி குடியிருப்பின்.... முன், தன் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தினான். அழைப்பு மணியை அழுத்தி, வீட்டின்... உள்ளே செல்ல, அவனை பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள் நட்சத்ரா.




“எதற்காக என்னை பார்க்க வந்தாய்? இங்கு யாரும், உன்னை காலையிலிருந்து எதிர்பார்த்து, அழகுபடுத்தி கொண்டு அமர்ந்திருக்கவில்லை. அதனால், நீ கிளம்பலாம்!...” என்று நகர்ந்தவளின் கை பிடித்து, “இன்று, நம் விஞ்ஞானி ‘ஐயா அப்துல்கலாம் அவர்களின் இறந்ததினம்.’ அவர் இன்னும், சிறிது காலம் உயிருடன் இருந்திருந்தால், நம் இளைஞர்களுக்கு சிறந்த வழி காட்டுதல் கிடைத்திருக்கும்...” என மேடையில் பேசுவது போல, அவரை நினைத்து கழக்கத்துடன் பேசிக் கொண்டிருக்க, தன் கையை பற்றிருந்த அவனது, கையை உதறினாள்.



அவளின் கோபத்தை குறைக்க நினைத்து, “உனக்காக, ஒன்று கொண்டு வந்திருக்கேன்! எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. என் பலநாள் தவத்திற்கு கிடைத்த பரிசென்று.... கூட சொல்லலாம்...” என கலர், கலரான கண்ணாடி தாள்களால் கவர் செய்யபட்ட பரிசென்றை... அவளிடம் நீட்டினான் தேவ். அதனை சட்டென்று வாங்கி கொண்டவள், ஆர்வமுடன் பிரிக்கலானாள். பிரிக்கும் பொழுது அவளிடமிருந்த ஆர்வம், ஆசையெல்லாம், அதில் இருந்தவற்றை பார்த்த பொழுது, மாயமாகி போனது. தெப்பென்று மஞ்சத்தில் அமர்ந்தவள்.



“என்னாதிது!..” என்று அதனை தூக்கி, அவன் முன் காட்டவும், அவளருகில் அமர்ந்தவன், "இது மிகப் பெரிய பொக்கிஷம். நம் மறைந்த விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களின் கையெழுத்து. இதற்காக எவ்வளவு கூட்டத்தை சமாளித்து, அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி, அவரின் கையெழுத்து பெற்றேன் தெரியுமா? அதனால், தான் இந்த, அறிய வகை பொக்கிஷத்தை உனக்கு கொடுக்குறேன்..” என்று பெருமையாக தன் காலரை தூக்கிவிட்டான் தேவ்.




அதனால் மேலும் எரிச்சலடைந்தவள், "நீ இதை என்னிடம் கொடுப்பதற்கு பதிலாக கண்காட்சியிலோ, நூலகத்திலோ காட்சி பொருளாக வைக்கலாம்..” என்று நக்கலாக.... அவள் எடுத்துரைத்த வார்த்தையை, ஆதாரமாக கொண்டு.... “இது எனக்கு தோன்றாமல் போய்விட்டதே!.. மிகவும் அருமையான யோசனை!...” என்று அவளது கன்னத்தில் செல்லமாக தட்டியவன்,



"ராமனின் சீதை கோவலனின் கண்ணகி பாரதியின் கண்ணம்மா வள்ளுவரின் வாசுகி எனக்கேற்றவள் நீ!..”

என்று, ஐஸ்கிரீம் அழகியிடம் கவிஞரை போன்று... வார்த்தைகளை புகழந்து விட்டு.... அகன்றான் தேவ். அவன் செல்வதை பார்த்து... முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.



“இன்று வெளியில் செல்லலாம் என்று நினைத்தேன். முடியாமல் போய் விட்டது. நான், அங்கு தான் செல்கிறேன் என்று... என்னிடம், ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அங்கே, பல மணி நேரம் படம் காட்டிட்டு, வந்ததுமில்லாமல் கவிதை வேறு, நான் காதலியா? இல்லை..... அவர் காதலியா? .



நல்ல வேளை... இன்று, இவனுடன் வெளியில் செல்லவிருக்கிறேன் என்று ப்ரண்ட்ஸிடம் சொல்லவில்லை, இல்லையெனில்.... என்னை கிண்டல் செய்து, வதக்கி எடுத்திருப்பார்கள்..” என மனதிற்குள் அவனை வதைத்து கொண்டிருந்தவளின் அருகில், அவளுடைய அன்னையும், தந்தையும் ஆறுதலாக தோல் பற்றினார்கள்.




“எல்லாம் மாறும், பொறுமையுடன் இரு!..” என்றுரைத்தனர். அவர்களின் முன், தன் கண்ணீரை மறைத்து கொள்ள..... அவளது அறைக்குள் வேகமாக தஞ்சம் புகுந்தாள் நட்சத்ரா.



“இவளுடைய எதிர்பார்பிற்கு, அவன் சரி பட்டு வர மாட்டான். தேவ் நல்ல பையன், பொறுப்பானவன் தான். ஆனால், அவனுக்கு என் மகளை விட, தேசத்தின் மீது தான் அளவில்லாத காதல்.. எல்லோரையும் போல, என் மக்களுடைய விருப்பத்தையும், ஆசைகளையும்.... அவனால் நிறைவேற்ற முடியுமா? என்றால்.. கேள்வி தான்???



அவனை போல், ஒரு தோழன் வேண்டும், உறவினன் வேண்டும் என்று.... தான் எதிர்பார்க்க முடியுமே தவிர, நம் மகளின் விருப்பதிற்கு ஏற்ற கனவனாய்... அவனால் இருக்க முடியாது. நாளை தேவுடன்... நம் மகள் வாழும் வாழ்க்கையை நினைக்கும் போது, சராசரி தந்தையாய், மித்த பெண்கள் போல... என் மகளும் நிம்மதியாய், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை படுகிறேன்.



அதனால், தான் அன்றைக்கே! நான் அவளிடம் எடுத்து கூறியும், அவன் தான் எனக்கு வேண்டும்... என்று சிறு பிள்ளை தனமாக இன்னும் அடம்பிடிக்கும்.... நம் மகளை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அவனை நம்பி, எப்படி? நம் மகளை மனமுடிப்பது. சொல்லி கொள்ளும் அளவிற்கு, ஒரு வேலை இல்லாமல், சமூக சேவை செய்து கொண்டிருந்தால், நம் மகளை இவனால் நன்றாக பார்த்து கொள்ள முடியுமா?...” என ஆனந்தன் தன் மனைவியான அஸ்வினியிடம் பேசி கொண்டிருப்பதை, தன் அறையிலிருந்த படி, கேட்டு கொண்டிருந்தாள் நட்சத்ரா. அவளின் நினைவில், தேவ்வை முதன் முதலாக பார்த்த நாள் நியாபகத்திற்கு வந்தது.



அன்று.... தன் ஒன்றுவிட்ட அண்ணன் குழந்தையுடனும், அண்ணியுடனும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமிற்கு சென்றிருந்தாள் நட்சத்திரா. அழுது கொண்டிருந்த சின்னச் சிறு குழந்தைகளை கையில் தூக்கி வைத்து கொண்டு, அழகாக சமாதானம் செய்து கொண்டிருந்தான் தேவ். நட்சத்ரா கையிலிருந்த குழந்தையும் அழுக ஆரம்பிக்க..... அக் குழந்தையிடம், மழலைக்கு ஏற்ப பேசி, சமாதானம் செய்து அவளிடம் கொடுத்தான்.




“உங்க குழந்தை அழகு, சிறிது நேரத்திலேயே... சமாதானம் ஆகிவிட்டாள்..” என்று சிரித்த முகமாக அவளிடம் பேசிய, அவனது முகத்தை.... பார்த்த முதல் எடுப்பிலேயே, முத்தை மூடிக் கொள்ளும் சிப்பி போன்று, பத்திரமாக மனதிற்குள் பதிந்து வைத்துக் கொண்டாள். ‘உங்க குழந்தையென்று’.... அவன் கூறிய வார்த்தையால், சிறு வருத்தம் அவளிடம் முளைத்தது.



பின்னர், ஒரு வாரம் கழித்து... பிரபல பேரங்காடியில் தேவ்வை பார்த்து புன்னகைதாள் நட்சத்ரா. அவளருகில் வந்தவன், குழந்தையை பற்றி விசாரிக்க, அது தன் குழந்தையில்லை... என்று அவசரமாக மறுத்தாள். தேசிய கொடியை.. அவளிடம் கொடுத்தவன்.... சுதந்திர தின வாழ்த்து கூறியதுடன், நன்கொடையும் பெற்று கொண்டான்.



அடுத்த வாரம், சர்வதேச மகளிர் அமைப்பின் சார்பில் நடக்கவிருக்கும் 'மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு' முகாமிற்கு நட்சத்ராவை அழைத்தான். கண்டிப்பாக கலந்து கொள்ளும் படி கட்டளையிட்டான் என்றே சொல்லலாம்! அவனது கனிவான மற்றும் கன்னியமான பேச்சுகள் இவற்றையெல்லாம் ரசித்தவள், அவனது சமூக சேவையை எண்ணி வியந்தாள். இதுவரை நண்பர்கள் கூட்டம், விருந்தினர் கூட்டம், என்று செல்லுபவள்... அவனது அழைப்பிற்கிணங்க... முதன் முறையாக முகாமிற்கு செல்ல விரும்பினாள்.



அங்கு,.

“பசி... ருசிக்கு புசிக்கும் கனியல்ல...

மோகம்... பாகம் செய்ய நிலமல்ல....

இன்பத்தை கருவாக்கி... உலகத்தில் மனிதரை உருவாக்கியவள்!

விண்ணவர்க்கும்.... மண்ணவர்க்கும்,விலை மதிப்பில்லாத செல்வம் பெண்!!!




என்று சொல்லி... அனைவருக்கும், ‘என் காலை வணக்கம் தோழிகளே!’ என்று ஒலிப்பெருக்கியை பிடித்து பேச ஆரம்பிக்கவும், நட்சத்திராவின் முழு கவனமும், அவனிடம்..... மட்டுமே நிலைத்திருந்தது.






பெண்கள் பற்றியும், அவர்களுடைய பாதுகாப்பு பற்றியும்.... படங்கள், காணொளி மூலமாகவும், அவன் விவரித்து கொண்டிருக்க, அவனது நடை, உடை, பாவனையெல்லாம் கண்களால் அளந்து கொண்டிருந்தாள் நட்சத்ரா.



பின்னர்... பெண்கள் தற்காப்பு, விழிப்புணர்வு, பாதுகாப்பு என இன்றைய கால கட்டத்திற்கு, ஏற்ப ஒவ்வொரு விஷயத்தையும், தெள்ள தெளிவாக, படங்கள் மூலம் விவரித்தான்.





"பெண்ணே... உன்னை மதிப்பவர்களுக்கு ரோஜாவாகவும்... மிதிப்பவர்களுக்கு முட்களாகவும் இரு"

என்று, இறுதியாக தன் உரையை முடித்தான் தேவ். சுமார் ஐந்துமணி நேரம், சலிக்காமல் முகாமை சிறப்பாக கொண்டு சென்றான் தேவ்.



“சமூக நலன், பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் என அக்கறை உள்ளவன், மனைவி என்று வரும் பொழுது, எப்படி பார்த்து கொள்வான்?..” என்று தன் மனதை, அவனிடம் பறி கொடுக்க ஆரம்பித்தாள் நட்சத்ரா. அடுத்தடுத்து, வந்த சந்தர்ப்பங்களில்.... எல்லாம் அவனுடன் நெருங்கி பழக ஆரம்பித்தாள். அதன் நினைவால் கண்களின் ஓரம் நீர் அரும்பியது.





காதலிக்க ஆரம்பித்த பொழுது, அவனிடம் பிடித்த குணங்கள், அவனுடன்... கழித்த தருணங்கள் எல்லாம், இன்று நினைக்கும் பொழுது ஏமாற்றமாக தெரிந்தது. இந்நிலை நீடிக்க காரணம், அவனுடைய வேலையின்மையே என முடிவு எடுத்தவள், இறுதியாக, முயற்சி செய்து பார்ப்போம்! என்று அவனுடைய பேச்சு திறமைக்கு ஏற்றவாறு, ஒரு வேலையை தேர்ந்தெடுத்து கொடுத்தால், அவனும் மகிழ்ச்சியாக வேலைக்கு சென்றுவிடுவான் என நினைத்தாள்.



அவனுடன் கழித்த பொழுதுகளில், கேட்போரை மனம் உருக, மறுக வைக்கும்... சுவரஸ்சியமான மேடை பேச்சினை, அவனுக்கு தெரியாமல் படம் பிடித்ததையும்... அவனுடைய சுயவிவரத்தையும், இணைத்து, பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தாள் நட்சத்ரா. நல்ல பதிலுக்காக... அவள் காத்துக் கொண்டிருக்க, வந்த ரிசல்ட் தான்.. அவளை கோபம் கொள்ள வைத்தது. அதனால்.. தேவ் வீட்டிற்கு, விரைந்தாள்.



“கண்ணா! எனக்கு ஒரே ஒரு ஆசை.. சீக்கிரம், நான் கண்ணை மூடுவதற்குள்... உன் பிள்ளைகளை பார்த்திட வேண்டும்..” என்று கையில் சாப்பாடு தட்டுடன், தோற்றத்தில் கே. ஆர். விஜயா மாதிரியிருந்தார் அவனின் தாய் சுந்தரி.



“அதெற்கெல்லாம், இன்னும் நாட்கள் இருக்கிறதும்மா. முதலில் நம் நாட்டிற்கு என்று.... எதையாவது செய்ய வேண்டும்மா!” என்ற அவனின் கூற்றிற்கு....



“இது நாள் வரை, உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்திருக்கிறேன் அல்லவா! அது போல, நீயும் என் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் கண்ணா!..” என அவனது முகவாயை பிடித்து கொண்டு, தாய் உள்ளம் பறிதவித்தது.



கணவன் இறந்ததும், ஒற்றை மகனை கையில் வைத்து கொண்டு, சத்துணவு கூடத்திற்கு... ஆசிரியை வேலைக்கு சென்றவள், சிறு வயதிலிருந்து, இவ்வளவு நாள் வரையிலும்.... அவனுடைய விருப்பத்திற்கே வளைந்து கொடுத்தாள். ஏனெனில், வெட்டியாக ஊரை சுற்றவில்லை, தப்பு தண்டா ஏதும் செய்யவில்லை. அவனுடைய திறமைக்கு, வெளிநாட்டில் வேலை கிடைத்தும், அப்துல்கலாம் மாதிரி.... சொந்த நாட்டிற்கு, தான் எனது உழைப்பை செலவழிப்பேன்... என்றான். அவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் பொழுது, புயலென நட்சத்ரா உள்ளே நுழைந்தாள்.



“வாம்மா! கண்ணு, இப்படி உட்கார். அப்பா, அம்மா செளக்கியமா? ,நீ எப்படி இருக்கம்மா?” என அக்கறையுடன் சுந்தரி விசாரிக்க,



அவளோ, அக்னியில் இருந்து... எழுந்து வந்தவள் போல, அவ்வளவு சூடாக இருந்தாள். “சூப்பர் ஆன்டி... நீங்க, இப்படியே... வீட்டில் உட்காரவைத்து, ஊட்டி விடுங்க.... பார்ப்பதற்கு ரொம்ப.. அருமையாக இருக்கிறது..” என்று கை தட்டினாள்.



“அதற்கு, என்னம்மா! உனக்கும் சேர்த்து... ஊட்டி விடுகிறேன்..” என்று அவள் புறம் திரும்பினாள் சுந்தரி.



“ஏற்கனவே, உங்க பையனுக்கு... வேலை வெட்டிக்குலாம் போக முடியாது. நீங்க வேற, இப்படி ஊட்டிவிட்டு... கொண்டிருந்தால், ஊருபட்ட மாதிரி தான்...” என சிடுசிடுத்தாள் நட்சத்ரா.



“என்னடா, கண்ணு... என்ன சொல்கிறாள்?...” என தேவ்விடம், கண்களை பதிக்க...



“அதெல்லாம் ஒண்ணுமில்லமா!...” என சாப்பிட ஆரம்பித்தான்.



“ஆஹா.... உங்க பையன் போல நடிக்க முடியாது. ஒழுங்க வேலைக்கு போடான்னு.... சொன்னா கிடைத்த வேலையையும் விட்டுட்டு.... உங்க பின்னாடி ஒளிஞ்சுகிட்டான்., என் வீட்டில் இருப்பவர்கள் எனக்காக, பொறுத்து கொள்ளலாம்... ஆனால், ஊர் உலகில் இருப்பவர்கள்... கேலி பேச தானே செய்வார்கள்..



படிச்சு, பட்டம் வாங்கி விட்டால் மட்டும் போதுமா?.. படித்தற்கான வேலையை சரியான சமயத்தில், சரியான நேரத்தில்... கை பற்றுவதும் திறமை தான். இப்படி... உப்பு சப்பில்லாத வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? வாழ்க்கையில் வாழ்வதற்கு ஆஸ்தி... அந்தஸ்து, பணம் இதலாம் வேண்டாமா?



தானாகவும்... முன்னேற முடியவில்லை.. என் அப்பாவின் தயவும் வேண்டாம் என்கிறான். ம்...... எதற்கும், ஒத்துவர மாட்டான்!..” என மூச்சிரைக்க பேசி முடித்தாள்... நட்சத்ரா.



"சரிம்மா... அவனிடம், நான் பேசுறேன். நீ கோவித்துக் கொள்ளாதம்மா...." என சமாதானம் சொன்னாள் சுந்தரி.



"நன்றாக... அவனுக்கு புரியும் படியாக சொல்லுங்க.. இவ்வளவு நாள், செல்லம் கொடுத்த மாதிரி... இப்போதும்... அவனை கெடுத்து விடாதீங்க.." என கோபத்தில் சொல்லி கொள்ளாமல், வீட்டை விட்டு வெளியேறினாள் நட்சத்ரா.



மற்ற பெண்கள் மாதிரி.. பார்க்.. பீச்.. சினிமா.. இங்கெல்லாம் கூட போக வேண்டாம். அன்பாக.. நாலு வார்த்தை.. ஒரு சின்ன சர்ப்ரைஸ் கிப்ட்.. இந்த மாதிரியாவது.. மாதத்தில், ஒரு நிகழ்வையாவது ஏதிர்பார்த்தாள். அதன் ஏக்கம் காரணமாக... யாருடனும் பேச விரும்பாமல் உம்மென்று இருந்தாள். இப்படியே... ஒரு வாரமாகி விட... பைத்தியம் பிடித்து விடும் என்று.... காரில் ஒரு ட்ரைவ் செல்லலாம் என கிளம்பினாள்.



சிக்னலில் காத்திருந்தவள் கண்களை நாலா பக்கமும்... சுழலவிட, எதிரில் தேவ் தென்பட்டான். அவனை பார்த்த சந்தோஷம்.. மறுநொடியே மறைந்து விட்டது. ஏனென்றால்... ரோட்டில் ஆனாதையாக கிடக்கும்.. பெரியவர்களை எழுப்பி, சாப்பாடு பொட்டலம் கொடுத்து கொண்டிருந்தான்.



"இவனலாம்... திருந்தவே மாட்டான். திருத்தவும் முடியாது. என் நினைவு... என்னை பற்றிய கனவு இவையாவும்.. அவனுக்கு இருப்பது போல தெரியவில்லை. அதனால் நான்... ஏன்! அவனை நினைக்கனும்..." சிக்னல் கிடைத்து விட... கிளம்பிவிட்டாள்.



அன்று... இளைஞர் தினம்.. அவர்கள் வசித்து கொண்டிருக்கும் தெருவில்.. உள்ள குப்பைகளை யெல்லாம், ஒரு பத்து பதினைந்து இளைஞர்களுடன் சேர்ந்து அகற்றி கொண்டிருந்தான். கிடைக்கும் இடங்களில், சுத்தம் செய்து விட்டு.. மரங்களை நட்டு வைத்தனர். அவனருகே.. காரை நிறுத்தினாள் நட்சத்ரா. அவளை பார்த்த சந்தோஷத்தில்... ஒரு மரக்கன்றினை அவளிடம் கொடுக்க.. அதனை தட்டி விட்டாள்.



"உன்னை மாதிரி.. நான் வேலை வெட்டியில்லாதவள் கிடையாது. பிரபலமான, ஒரு கம்பெனியில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறேன்.." என வார்த்தைகளை கடிந்து துப்பினாள். அவளை பார்க்காது.. பேசாது இருந்ததனால். இப்படி கோவித்து கொள்கிறாள் என்று நினைத்து....



"என்னுடைய ராணிக்கு, கோபத்திலும் இன்னும்... முகம் அழகாக ஜொலிக்கிறது. கோபத்தினால்.. சிவந்த உன் அழகிற்கு, செவ்வானம் ஈடாகாது.." என்று எப்போதும் போல... உள்ளார்ந்த அன்புடன், தேவ்... அவளது முகத்தை ஊற்று நோக்க.. முகத்தை திரும்பிக் கொண்டாள்.



தான்.. அவளிடம் பேசவில்லை. ஆனால்.. வெகு நாட்கள் கழித்து.. தன் மேல்.... உள்ள அளவற்ற காதலால்.. தன்னை தேடி வந்திருக்கும், அவளது ஒப்பற்ற காதலுக்கு முன்னர்... நிச்சியமாக நான், கால் தூசிக்கு பெற மாட்டேன் என்று.. அவன் நினைத்துக் கொண்டிருக்க.. நூறு ரூபாய் மதிப்பிலான பத்திரிக்கை ஒன்றை, நீட்டினாள் நட்சத்ரா.



இயல்பாக, அதனை பெற்று படித்தவனின் மனதில்... ஆணி வைத்து அறைந்தது போல் இருந்தது. நட்சத்திரா வெட்ஸ் சந்தோஷ் என்ற எழுத்துகளை மட்டும் தங்க கலரில்... மிண்ண செய்து, அதன் அழகை எடுத்து காட்டியிருந்தனர்.



"மாப்பிள்ளை.. உன்னை போல் அல்ல.. வெளிநாட்டில் வேலை பார்கிறார். கை நிறைய சம்பளம். கார்... பங்களா.. ம்.. திருமணம் முடிந்தவுடன், நானும் வெளிநாடு செல்லவிருக்கிறேன்.... நீ திறமையானவன்.. உன்னுடைய திறமையால்.. என்னை திருமனம் செய்தவுடன், வெளிநாடு அழைத்து செல்வாய்.. என்ற மனக்கோட்டை பொய்த்துவிட்டது. கடைசியில், நீ இந்த தெருவை கூட, தாண்டமாட்டாய் என்பதில்.. எனக்கு சந்தேகமேயில்லை..." என்று கைகளை ஆட்டியபடி.. கண்களில், ஒருவித ஒட்டாத பார்வையுடன்... தன்னை நோக்குவதை பார்க்கும் போது.. முதன் முதலாக நெஞ்சு கூட்டிற்குள் வலிப்பது போன்று தெரிந்தது...



"முக்கியமாக, நீ கல்யாணத்திற்கு வரவில்லையென்றாலும் பரவாயில்லை... ஏனெனில் சாப்பாடு ஏதேனும்.. மிஞ்சிவிட்டால்... நானே.. உன்னை அழைக்கிறேன்..." என்று புயல்வேகத்தில் காரை ஸ்டார்ட் செய்து... புழுதியை, அவன் முகத்தில் பரப்பிவிட்டு சென்றாள். அன்றைய சேவையை முடித்து விட்டு... நடை பினமாக உறங்க சென்றான் தேவ்.



காலையில் எப்போதும், சீக்கிரமாக கண் விழிக்கும்.. சுந்தரி. இன்னும் எழாழது கூறித்து.. நெற்றியில் தொட்டு பார்க்க, காய்ச்சல் என்று கண்டறிந்து.. ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றான். சுந்தரியை நல்லபடியாக கவனித்து கொள்ள.. அவன் கஷ்டப்பட்டுவதை கண்டு... கண்களில் வழியும் விழிநீரை.. சுந்தரி துடைக்கும் சமயம்... அதனை தேவ்வின் கண்கள் சந்தித்து விட்டன.



"நீ விரும்பிய பெண் கிடைக்கவில்லையென்று.. எனக்கு வருத்தமாக இருக்கிறது டா.. உன் அப்பாவை பிரிந்து... நான் அனுபவித்தது பத்தாதா? நீயும், அவளை பிரியனுமா? என்று வருத்த பட்ட சுந்தரியின் கைகயை பற்றினான்.





"இப்போது, என்னுடைய மிகப்பெரிய வருத்தம்... உங்களை இழந்து விட கூடாது என்பது தான்" என்று..... அவன் பேசுவதை பார்க்கும் போது... ஒரு முடிவு எடுத்துவிட்டான் போல.. கடைசியாக, கல்யாண பத்திரிக்கையை நீட்டும் போது, நட்சத்ரா... பேசியதை நினைவு கூர்ந்தாள் சுந்தரி.



"என்னம்மா... இப்படி சொல்லுற.. என் மகன்... அப்படி என்ன தவறு செய்து விட்டான். கொலை செய்தனா? கொள்ளை அடித்தானா?.. இல்லை யாரையாவது ஏமாற்றினானா? என நட்சத்ராவிடம் கேட்க..



"நீங்கள் சொல்வதில்... எதுவும் செய்யவில்லை. ஆனால், மற்ற யாரும்.. செய்ய நினைக்காததை செய்கிறான். தொலைக்காட்சியில் என்ன நிகழ்ச்சிகள் நடந்தால் என்ன? மதுவிலக்கு கூறித்து பிரச்சாரம் செய்யவில்லையென்றால் என்ன? விவசாயத்தை காப்போம் என பட்டினி கிடக்கவில்லையென்றால் என்ன? கந்து வட்டி கூறித்து கம்பெளண்ட் கொடுக்க வில்லையென்றால் என்ன? மகளிர் பாதுகாப்பு.. கற்பழிப்பு விழிப்புணர்வு பற்றி, பேரணி நடத்தவில்லையென்றால் என்ன? ஊழல், பஞ்சம், பட்டினி குறித்து.. இந்த மாதிரி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கவில்லையென்றால் என்ன?



ஏனெனில்... அவனை போல.. ஏதாவது, ஒரு மூலையில் இருந்து, யாராவது குரல் கொடுத்து கொண்டிருப்பதால் குற்றங்கள் குறைந்தனவா? இப்போதைய.. மக்கள் தொகைக்கு, ஒரு மாவட்டத்திலிருந்து..... அவனை போல, ஒருவன் தான் குரல் எழுப்புகிறான் என்றால் வருங்காலத்தில்???.. அதுமட்டுமல்ல.. இவன் மோதுவது.. சாதரணமானவங்க அல்ல.. அதனால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்??? என்க



"கடவுள் புண்ணியத்தால்.. தேவ்விற்கு எதுவும் நடக்காதும்மா.." என்றாள் சுந்தரி.



“கண்ணா! அவள் சொன்னதில், தவறில்லை... சொன்ன விதம் தான் தவறு.. அவளை விரும்பிய நீ... அவளுடைய விருப்பத்தையும் கொஞ்சமாவது விரும்பிருக்கலாம். நட்சத்ராவிற்காக ஒரு வேலையில் இருந்துக் கொண்டு, உன் சேவையை செய்யலாமே?..” என அன்னை கூறியதை.... தன் கவனத்தில் எடுத்துக் கொண்டான். அன்பை விட.. பணம் இதலாம் பெரிதாக போய்விட்டது? என அவளது நினைவை அசை போட்டான்.



“பூக்கள் எல்லாம் தலையாட்ட, மரங்கள் எல்லாம் கையாட்ட, சாலைகள் எல்லாம் பளிச்சென்று பல்லை காட்ட..” என மழை பெய்தனால் ஏற்பட்ட மாற்றங்களை எல்லாம் ரசித்து கொண்டு, மிதமான வேகத்தில், தன் தந்தையுடன்.... நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாள் நட்சத்திரா.



“நட்டு!.... அமைதியின் சொரூபமாய் மாறி கொண்டு வருகிறாய்! என்ன விஷயம்?..” என்று தந்தை கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், அவருடைய முகத்தை சில நொடிகள் பார்த்துவிட்டு....



“நீங்கள் ஆசைப்பட்டது.. உங்கள் வாழ்வில் கிடைத்ததுண்டா? அதனால் ஏற்பட்ட.... உங்கள் மகிழ்ச்சியை பற்றி சொல்லுங்க?..” என்று கேட்டவளிடம்...





சிறு புன்னகையை உதித்தவர்... “நான் சிறுவயதிலிருந்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட பெண், என்னுடைய அத்தை மகள் யாழினி. அவளின் மேல் அளவில்லாத பிரியம். ஆனால்!..... என்றவரது குரல் கம்மியது. வசதியின்மை காரணமாகவும், படிப்பறிவற்றவள் என்பதற்காகவும், என் பெற்றோர்... உன் அம்மாவை திருமனம் செய்து வைத்தார்கள்.





அவளை மணக்க முடியவில்லை என்ற வருத்தமிருந்தது. ஆனால்.... மகிழ்ச்சியை அள்ளி கொடுக்கும், அட்சயபாத்திரம் போல இருந்த..... உன்னை கானும் வரையில், அதற்காக உன் அம்மாவை நான் நேசிக்கவில்லை என்று சொல்லவில்லை!....” என ஆனந்தன் சிரித்தார்.





அவருடைய வார்த்தையிலிருந்து, தனக்கு ஏதோ பதில் கிடைத்துவிட்டதாக, மனதின் ஓரத்தில் சந்தோஷம் கொண்டவள், தேவ்வை பற்றி யோசிக்கலானாள். முப்பொழுதும், அவனை பற்றிய கற்பனையில் சில நாட்கள் பொழுதை கழிக்கிறேன். அப்படியென்றால்..... இதன் பெயர் காதல் தானோ!...” என மனதிற்குள் நினைத்து கொண்டிருந்தவளின் கையினை சட்டென்று ஆனந்தன் அசைக்கவும், தான் நிகழ்காலத்திற்கு வந்தாள் நட்சத்ரா.







“நட்டு! என்னால் மூச்சுவிட முடியவில்லை. நெஞ்சு கூட்டிற்குள் வலி அதிகமாகிறது..” என கைகள் இரண்டையும், நெஞ்சின் மேல் வைத்தபடி, வலியால், பேச முடியாமல் தவித்தார்.





இடி மின்னல் வேறு, மேலும் பயமுறுத்த.... இந்நிலையை எப்படி கையாள்வது? என பதட்டத்துடன், வேகமாக சாலையில் பயணித்து, கண்களால் மருத்துவமனையை நோட்டமிட்டாள். குண்டும், குழியுமான... சாலையில் வாகனத்தின் முன்பக்கம் நகரமுடியாமல். அக்குழியில் நின்றுவிட, மேட்டிற்கு செல்லமுடியாமலும், கொட்டும் பேய் மழையாலும்.... நான்கு சக்கர வாகனம் பழுதாகிவிட்டது.





தூரத்தில் ஏதேனும் வாகனம் வருகிறதா? என்று நெடு தூரம் வரை ஓடிச்சென்று, ஓய்ந்து போய் சாலையில் அமர்ந்தவளின் அருகில்.. ஏதார்த்தமாக, தன் இருசக்கர வாகனத்துடன் வந்தான் தேவ். தன்னுடைய அருகில் நின்றிருந்தவனை ஏறிட்டு பார்த்தவள். ஆனந்தம் ஒரு பக்கம்.... பயம் மறுபக்கம் என ஏதும் பேச முடியாமல், திணறிக் கொண்டிருக்க.... அவள் கை காட்டிய திசையை நோக்கி, தன் இரு சக்கர வாகனத்தில் அவளுடன் சென்றான்.





மயங்கிருந்த... ஆனந்தனின் நெஞ்சில் கை வைத்து அழுத்தம் கொடுத்தவன். அவரது மூக்கினை பிடித்து, வாய் வழியே சுவாசம் கொடுத்தான். பிறகு மீண்டும், தன் கைகளால் அழுத்தம் கொடுத்தான்.



இரண்டு நிமிட போராட்டத்திற்கு பிறகு, ஆனந்தன் கண் விழித்தவுடன் தான் இருவருக்கும் நிம்மதி வந்தது.



“அப்பா!..பரவாயில்லையா!.” என நடுங்கியபடி கேட்டாள் நட்சத்ரா. அவளது நடுக்கத்தை உணர்ந்து, தன் மேலாடையை விலக்கி, உடம்போடு அணிந்திருந்த பனியனை கழற்றி கொடுத்தான்.





“இப்பொழுது, எப்படி இருக்கிறது? வலி ஏதேனும் இருக்கிறதா!..” என அக்கறையுடன் ஆனந்தனிடம் வினாவ, ‘இல்லை’ என்று பதிலளித்தாலும், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் உறுதியுடன் இருந்தான் தேவ்.





ஓட்டுநனர் இருக்கையில்... அவளை அமரவைத்து, நிற்காமல் பெய்து கொண்டிருந்த மழையில்... தன்னுடைய முழு பலத்தையும் ஒன்று திரட்டி, குழிக்குள்... சிக்கிய நான்கு சக்கர வாகனத்தின் முன் பகுதியை வெளியே கொண்டு வந்தான். அவனுடைய வண்டியை ஓரமாக, நிறுத்திவிட்டு, காரை கிளப்பி, மருத்துவமனையை அடைந்தான்





ஆனந்தன் நலமாகும் வரை அங்கிருந்து, தேவ் அகலவில்லை. “நீங்கள் அதிர்க்ஷடசாலி சார். உங்கள் மகளின் அளவில்லாத பிரியத்தை பார்த்து, எனக்கும் மகள் தான் பிறக்கனும் என்று தோன்றுகிறது...” என முத்து பற்கள் மிண்ண சிரித்தான்.





“என்னை திருமணம் செய்து கொள். என்னுடைய முழு அன்பையும்... உனக்கே கொடுத்து, அதற்குச் சாட்சியாக... ஒரு பெண் குழந்தையையும், பெற்றுதருகிறேன்...” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.



அன்றிலிருந்து, அவனை தேடிச் சென்று நாளடைவில், காதலையும் ஒத்துக் கொள்ள வைத்தாள் நட்சத்ரா. அவன் பாதி நேரத்தை பறித்து கொண்டாள் ....



அன்று, கடற்கரை மணலில்... இருவரின் கால் தடத்தையும், தன்னுடைய போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டவள்,



“நம் அன்பின் ஒவ்வொரு வெளிப்பாடுகளையும்... படமாக பிடித்து வைத்து கொண்டால், வயதான காலத்தில், ஒவ்வொரு நாளும், இதனை பார்த்து ரசிக்கலாம்...” என அவனது தோலில், சாய்ந்து படம் எடுக்க முயன்றவள், பின் தயங்கியவாறு கைபேசியை அணைத்துவிட்டாள்.





என்னவாயிற்று.. என அவளது முகத்தை ஆராய்ந்தவன். அவளின் கண் போன திசையை பார்க்க, அங்கு காதலர்கள் தங்கள் துணைக்கு முத்தங்களை பறிமாறி கொண்டிருந்தனர்.





அதனால்.... நெடுந்தூரம் வரை நடைபயின்றவர்கள், இருவரும் அவர்களுக்கு பிடித்தது... பிடிக்காதது என எல்லாவற்றையும் பேசி கொண்டிருக்க, சட்டென்று கைகளை பற்றி.... அவளது எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாக.... ஆள் அரவம் இல்லாத இடத்தில் புகைப்படம் எடுத்தான். சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி, வைத்ததால்.. பெண்ணவள் மகிழ்ச்சியின் கடலில் தத்தளித்தாள். அவனுடைய கைகளை கோர்த்தபடி, மார்ப்பில் சாய்ந்தவாறு என்று விதவிதமாக திருப்தியாக படங்களை எடுத்து கொண்டாள்.





அவளது முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கவனித்துக் கொண்டிருந்த... அவனுடைய முகத்தை.... அவளும் பார்க்க.... இருவரின் கையிலிருந்த தொலைபேசி குறித்த, நேரத்தில் அவர்களை படம் எடுத்தது.





“தேவ், என்னை உங்களுக்கு பிடிக்குமா?..” என ஒருவித எதிர்பார்ப்புடன், ஏக்கமாக கண்களை நோக்க...





"எத்தனை முறை நீ கேட்டாலும்,

பதில்.. சொல்ல அலுக்காத கேள்வி?

என்னை உனக்கு பிடித்திருக்கிறதா..??"






என்றவன், பிடித்திருக்கிறது என தலையட்டினான். இருவரும், சிறிது நேரம் கடற்கரையில் நடந்த வண்ணமிருக்க,... தூரத்தில், ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்...

தொடரும்....

படித்து விட்டு, தங்களின் எதிர்ப்பார்ப்பு... ஏதேனும் மாற்றம் இருப்பின் தெரிவிக்கலாம்..
 
Messages
2
Reaction score
1
Points
1
அதனை கண்ட தேவ், வேகமாக சென்று... தலை முழ்கும் நிலையில் இருந்த, அப்பெண்ணை பிடித்து இழுத்து, கரைக்கு கொண்டு வந்தான். மயக்கத்திலிருந்த, பெண்ணின் கன்னத்தை.. தட்டி எழுப்ப, அவளிடம் அசைவில்லை. பின்னர், நட்சத்ராவின் கை பிடித்து, அவளது, வயிற்றில் அழுத்தம் கொடுத்தான். வயிற்றுக்குள் சென்ற கடல் நீர் சிறிது வெளியே வந்தது. கை, கால்கள் எல்லாம் தேய்த்து விட்டவன், கைகளை பிடித்து நாடி பார்த்தான்.

‘நட்சத்ரா’ என்ற அவனுடைய அழைப்பு, ஒரு வேளை.. இந்த பெண் இறந்துவிட்டாளோ? என்று பதறி போய், அப் பெண்ணிடமிருந்து, அவனிடம் பார்வையை திருப்பினாள்.

“அப் பெண்ணின் மூக்கினை பிடித்து கொண்டு, வாய் வழியே சுவாசம் கொடு...” என்று அவசர படுத்தினான்.

“நானா? தேவ். என்னால் முடியாது...” என்று அப் பெண்ணை அவள் பார்த்த பார்வையின் அர்த்ததை புரிந்து கொண்டவன்,

“கருப்பா, சிவப்பா, நெட்டையா, கட்டையா, ஆணா, பெண்ணா? என்று பார்க்க வேண்டாம். அது ஒரு உயிர் என்று மட்டும் பார்! இவள்... ஒரு பெண் என்பதால் தான், உன்னை செய்ய சொல்கிறேன்..” என்று எடுத்து கூறினான். அவனது சொல்லை மீற முடியாது என்ற காரணத்திற்காக, அப் பண்ணிற்கு , முதலுதவி செய்தாள்.

அதன் பலன், அப் பெண்... சிறிது நேரத்தில் கண்களை திறந்து, இருமினாள். தன் எதிரே அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து, “என்னை... ஏன் உயிர் பிழைக்க வைத்தீங்க?..” என்ற கேள்வியையும் கேட்டாள்.

கோபம் கொண்ட நட்சத்ரா, தன் அருகில் இருந்த தேவ்வை பார்க்க, அவனோ கண்களால் சமாதானம் செய்து விட்டு, அப் பெண்ணிடம் பேச ஆரம்பித்தான்.

“உனக்கு என்னம்மா பிரச்சனை? எதனால் இந்த முடிவை எடுத்தாய்!..” என அமைதியாக, கனிவாக பேசினான் .

அப் பெண்ணிடமிருந்து, பதில் ஏதும் வராததால் மீண்டும் தன்மையாக... மறுபடியும் பேச்சு கொடுத்தான். “என்ன பிரச்சனையாக இருந்தாலும், என்னிடம் சொல்லும்மா! என்னை, உன் அண்ணாவாகவும், இவர்களை என்று நட்சத்திராவை கை காட்டி, அண்ணியாகவும் ஏற்றுக் கொள்... இப்போது சொல்லு!..” என்று கூற, அவள் அழுகும் சத்தம் தான் அவர்களுக்கு பதிலாக வந்தது.

“என்னிடம் சொல்லமுடியாத விஷயமாக இருந்தால், அவர்களிடம் சொல்லும்மா..” என்று எழ முயன்றவனிடம்,

“அப்படி இல்லண்ணா! நான் செய்யக்கூடாத செயலை செய்திட்ட பாவி!..” என்று விசும்பியவள். என் பெயர் வாணி. நான் டி. நகர்.. ஜவுளி கடையில் வேலை பார்க்கிறேன். அங்கு ராஜேஷ் என்பவனை காதலித்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் எல்லை மீறி எனக்கே தெரியாமல் என்னை...” என்று சொல்லமுடியாமல்.. தவித்தாள் வாணி.

“என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்று அவனிடம் சண்டையிட்டதற்கு, என் வீட்டில் ஐம்பது பவுன் நகையுடன் வரும் பெண்ணை தான் ஏற்று கொள்வார்கள். உன்னை மாதிரி அண்ணாடங்காட்சியை இல்லை... வேண்டுமென்றால் ஒரு ஐந்தாயிரம் பணம் தருகிறேன்... கருவை கலைத்துவிடு என்கிறான்..” என அழுதாள்.

“என் வீட்டிற்கு தெரியாது. அவர்களுக்கு, தெரிந்தால் உயிரை விட்டுவிடுவார்கள். அதனால், இந்த முடிவை..” என்று கூறியவளின் கன்னத்தில் சட்டென்று அவனது கரம் பதிந்தது.

அதனை எதிர்பார்க்காத... அவ்விரு பெண்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். தேவ்வின் மென்மையான.. கனிவான பேச்சை எப்போதும் கண்டவள். மற்றொரு முகத்தை பார்த்தும் ஆடி போனாள் நட்சத்ரா.

“என்ன காரியம் செய்ய நினைத்தாய். அவனை நம்பி மோசம் போனதை விட... சாக துணிந்தது தான் மிகப் பெரிய தவறு. யாரு தான் தவறு செய்யவில்லை? தெரிந்தோ, தெரியாமலோ... உலகத்தில் ஆயிரம் தவறுகள் நடக்கின்றன. அதற்கெல்லாம், இறப்பு நிறத்தர தீர்வாகாது...” என்ற அவனது வார்த்தைகள் கணீரென்று ஒலித்தது.

மார்ப்பின் குறுக்கே... இரு கைகளையும் கட்டிக் கொண்டு, தன்னை சமாதானம் செய்து கொண்டவன், தன் நண்பனுக்கு அழைப்பு விடுத்து பேசினான். பக்கவாட்டு தோற்றத்தில்... அக்னியாய் ஜொலித்தான். அவர்களை திரும்பி பார்க்க, பயந்த பார்வையுடன் அவனை நோக்கினார்கள். அதனால், நொடி நேரத்தில்... தன் முகபாவனையை மாற்றிக் கொண்டு, அவர்களை தன் பின்னால் வரும்படி சைகை செய்தான் .

நீ பத்திரமாக வீட்டிற்கு சென்றதும்... எனக்கு போன் பண்ணு! நாங்க கிளம்புறோம்.." என்று, அவளை பார்த்த பார்வையில் கோபம் இல்லை, காதல் இல்லை, ஏதோ ஒர் உணர்வு ஆட் கொண்டதை போல காணபட்டான் தேவ். எவ்வளவு ஆசையாக... இங்கு கிளம்பி வந்தோம். இப்போது... என நொய்து கொண்டாள் நட்சத்ரா.

ஒரு வாரம் கழித்து, அவன் அழைக்க... “ உடனே டி. நகர் பத்திர அலுவலகத்திற்கு விரைந்து வா.. நான் உனக்காக காத்திருக்கிறேன்.. " என்றதும் ‘என்ன விஷயம்’ என்று கூட கேட்காமல்... வேகமாக அவ்விடத்திற்கு விரைந்தாள்.

அங்கு மணப்பெண்ணாக வாணியும், மண மகனாக தேவ்வின் நண்பன் திருநாவும் நின்றிருந்தனர். அவளின் வருகையை அறிந்து, ஒடிச் சென்று அவளை கட்டிக் கொண்டாள் வாணி.

அண்ணி! நீங்களும் அண்ணனும்... இல்லையெனில், இப்படி ஓர் வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்காது. வாழ்வை முடித்து கொள்ள சென்றவளை காப்பாற்றி, என் நிலையை விளக்கி... அண்ணாவின் நண்பரை.. மணமுடித்து வைக்கிறார்., உங்களுக்கு, எப்படி.... என் நன்றியை தெரிவிப்பேன். என்னை ஏமாற்றிய... அவனுக்கு, சரியான தண்டனையை அண்ணா வாங்கி கொடுப்பார் என்ற நம்பிக்கை... எனக்கு இருக்கிறது. இப்போது அவன் காவல்நிலையத்தில் இருக்கிறான். என கண்ணீர் மல்கியவளின் கை பிடித்து சமாதானம் செய்த... நட்சத்ராவின் அருகில் வந்து நின்றான் தேவ்.

“வாங்க மேடம், உங்களுக்காக தான் காத்திருக்கிறோம்!..” என தெரிவித்ததும், இருவரது திருமணமும் சட்டபடி பதிவு செய்யப்பட்டது. பெண்ணின் சொந்தம் என்று சாய்தேவ்வும், நட்சத்ராவும் கையெழுத்திட, மணமகனின் சார்பாக அவனது பெற்றோர் கையெழுத்திட்டனர். அதையெல்லாம் பார்த்து, பார்த்து செய்து கொண்டிருந்த தேவ்வின் முகத்தில் எல்லையில்லா சந்தோஷமும், புன்னகையும் நிலவியதை கவனித்தாள் நட்சத்திரா

நாளாக... தேவ்வின் சேவை அதிகரிக்க... பதவி, பணம், பொருள், தேவைகளை அவன் முன் வைத்தாள். இன்று பணத்திக்காக, வேறொரு மாப்பிள்ளை மணக்க துணிந்துவிட்டாள். என்று வருத்தமாக இருந்தாலும்... அவள் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தான்.

அன்று ஞாயிற்று கிழமை, விடுமுறை என்றாலும், தேவ் மற்றும் அவனுடன் படித்த நண்பர்களும், அண்டை பகுதியில்... பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கொண்டிருந்தவன், பிரியா என்ற பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் மட்டும் வரவில்லை என அறிந்து, அப் பெண்ணை பற்றி விசாரிக்க, அவள் இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று சக மாணவர்களின் மூலம் தெரிந்து கொண்டு அப்பெண்ணின் வீட்டிற்கு கிளம்பினான் தேவ். அவனை கண்டு பிரியாவின் தாயார் கண்ணீர் வடித்தார்.

“என்னக்கா! என்ன பிரச்சனை, ஏன் பிரியா பள்ளிகூடம் செல்லவில்லை?... நம்ம பாடசாலைக்கும் வரவில்லை என்று கேட்க, அவர்களிடம் பதில்லில்லை.

“என் மேல் நம்பிக்கையிருந்தால், என்ன பிரச்சனையாக இருந்தாலும், உங்கள் மகனாக நினைத்து என்னிடம் சொல்லுங்கள்?..” என்க

“என் பொண்ணு வாழ்க்கை, குடும்பமானம்... சந்தி சிரிச்சிடும் போல... வெளியில் சொல்ல, கூட பயமாக இருக்கு தம்பி! என பிரியாவின் தாயார் கூறினாள்.

"என்ன பிரியா.. என்ன ஆச்சும்மா! அண்ணாகிட்ட சொல்லு..” என்க,

“அண்ணா! ஆங்கிலத்தில் பேசலாம் வாங்க! என்று முக நூலில் பார்த்து, அவர்களை தொடர்ப்பு கொண்டேன். முதல் இரண்டு மாதம் நல்லபடியாக சொல்லி கொடுத்தார்கள். ஏதேனும் சந்தேகம் என்றால்... தொடர்ப்பு கொள்ளலாம் என்று சரவணன் என்றவன் கூறினான். தினமும்... அவர்களிடம் ஆங்கிலத்தில் சின்ன.. சின்ன வார்த்தைகள் பேசி பழகினேன்.

என்னை வெளியில் வர சொல்லி அழைத்தார்கள். வரவில்லை என்றேன்... நாளாக... நாளாக அவனின் பேச்சு, தப்பாக எனக்கு தென்பட்டது. அதனால் நானும் பேசவில்லை விலகிவிட்டேன்....” என பிரியா கூறியதும்,

“அந்த பாவிங்க, இரண்டு நாட்களுக்கு முன்னாடி பிரியாவிடம் தப்பு தப்பாக பேசிருக்கான். நான் சொல்லுற, இடத்திற்கு வர வில்லை என்றால், உன்னுடைய புகைப்படத்தை... சமூக வலைத்தளங்களில் அசிங்கமாக பதிவிடுவேன் என மிரட்டுகிறான் தேவ்...”. என்றாள் அப்பெண்மனி.

“அதனால் தான் நீ, பள்ளிகூடத்திற்கு போகவில்லையா?..” என்றதும். ம்... என்று தலையாட்டினாள் பிரியா.

“காவல் நிலையத்திற்கு செல்ல நினைக்காதீங்க , உங்கள் வீட்டு முகவரி இது தானே என்கிறான், வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது..” என பிரியாவின் தாயார் வாய் பொத்தி அழுதாள்.

“பிரியம்மா! அண்ணன் இருக்கிறேன். இதை நான் பார்த்து கொள்கிறேன். நல்லபடியாக படித்து.. நீ, மற்ற பெண்களுக்கு படிப்பிலும், தைரியத்திலும் முன் உதாரணமாக இருக்க வேண்டும். அதனால், நீ போலீஸ் அதிகாரியாக வேண்டும், எனக்காக இதனை மட்டும் செய்வா?...” என்று கேட்ட....

சரி!... என்று சிரித்த முகமாக தலையை ஆட்டினாள் பிரியா. அழுது சிவந்திருந்த அவளது முகம்... இப்போது, பார்க்க பூவாய் மலர்ந்திருந்தது, அதற்காகவே, அந்த சரவணனை அடித்து, நாரு நாராக கழிக்கலாம் போல தோன்றியது தேவ்விற்கு...

“அப்பறம், என்னக்கா! நாளைக்கே... நீங்கள் பிரியாவை பள்ளிக்கு அனுப்புங்கள். எதற்கும் ஒரு மாதம் அவளுடன் நீங்களும், அண்ணனும் சென்று வாருங்கள். தொலைபேசியை மட்டும் என்னிடம் கொடுங்கள். ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்து விடுகிறேன்....” என்று உறுதி அளித்தான்.

“சரிப்பா! என்று நம்பிக்கையுடனும், நிம்மதியுடனும்..” கூறினாள் பிரியாவின் தாய்.

அந்த புகைப்படத்தை, க்ரைம் அலுவலகத்தில் உள்ள தன் நண்பனிடம் கொடுத்தான். இந்த மாதிரி தவறாக மாற்றி அமைத்த புகைப்படங்களை எப்படி நீக்குவது? என தெரிந்துக் கொண்டான். அந்த சரவணனை போலீஸில் பிடித்து கொடுத்து... பாதிக்க பட்டவர்களின்... புகைப்படங்களையும்... போலீஸ் உதவியால் நீக்கினான்.

சரியான நேரத்தில், பிரியாவிற்கு உதவவில்லை என்றால், என்னவாகியிருக்கும் சின்னச் சிறு குழந்தையிலிருந்து, இப்போது.. வரை ஓடி, ஆடி விளையாடி கொண்டிருக்கும் பட்டாம் பூச்சியை, அந்த நாயிடமிருந்து.... மீட்டதை எண்ணி சந்தோஷம் கொள்ள முடியவில்லை, காரணம் சமூகத்தில்.. இது மாதிரி நடக்கவிருக்கும் அநியாயத்தை எப்படி சரி செய்வது? என சிந்தித்தான்.

மனிதர்களில் சில மிருங்களும் இருக்கின்றன. அவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்! அதற்காக ஏதாவது செய்ய வேண்டும்! நம் சமூகத்தில் விழிப்புணர்வு வேண்டும்! மாற்றம் வேண்டும்!...அது மட்டுமில்லாமல்... அன்று நட்சத்திரா கூறியது, வேறு, அவன் மனதை குடைந்தது.

மாற்றம் வேண்டும்! மாற்றம் வேண்டும்! என மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தவன், தன் தொலைபேசியை எடுத்து முதன் முதலாக "நல்லதே செய்வோம்" என்ற பெயரில் முகநூல் கணக்கை ஆரம்பித்தான் தேவ்.

அதில்., “வணக்கம் தோழைமைகளே! நான் உங்கள் தமிழன் என்ற எழுத்தினை திருத்தி, “தமிழாதேவ்” என மாற்றினான். "நல்லதே செய்வோம்" என்ற அமைப்பில், உங்களது சேவை தொடரட்டும். தங்களுடைய பதிவுகளும், வழி காட்டுதல்களும் அனைவர் வாழ்க்கையிலும் ஒளிரூட்டடும்!!!..” என தன்னுடன் தொடர்ப்புள்ள அனைத்து நபர்களையும், இச் சேவைக்கு அழைப்பு விடுத்தான்.

முதல் நாளில் இரண்டு, மூன்று நபர்கள்... தங்களது சம்மத்தை தெரிவித்து, "நல்லதே செய்வோம்" என உறுதி அளித்தனர். இப்படியாக, ஒரு வாரம் கழிய, அதில்... ஒரு, நூறு பேர் இணைந்தனர். அவர்களின் மூலம் மரம் நடுதல், இரத்த தான முகாம், இயற்கையை பாதுகாப்போம் என நிறைய சேவைகளை செய்ய ஆரம்பித்தான்.

அன்று, எப்போதும் போல, சமூக சேவையில் ஈடுபட்ட பொழுது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை... அவன் பதிவிடும் பொழுது, ஒரு காணொளி "நல்லதே செய்வோம்" என்ற முக நூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

அதில், என்ன பதிவிடபட்டிருக்கிறது என்று பார்க்க, “எல்லோரும் தான் சேவை செய்கிறேன் என்று புகைப்படங்களை பதிவிடுகின்றனர். முறையாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒன்றும் செய்யவில்லை... ஆனால் ‘நல்லதே செய்வோம்’ என்ற பெயர் எதனால் வைத்தீர்கள்!..” என்று ஒரு முகநூல் வாசி கேள்வி எழுப்பினான்.

அவன் மனதிலும், நித்தம் எழுகிற கேள்வி இது தான், நான் என்ன செய்கிறேன்.. நான் செய்யும் சேவை மக்களை சென்றடைகிறதா? என்பதே அவனுடைய மனகுமறல்... பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்காக நமது சேவையின் நோக்கமாக வைத்துக் கொள்வோம். அம்மாவின் பெயரில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தனும் என்று முடிவெடுத்தான்.

மறுநாள்.. மக்களே! இது ஒரு விழிப்புணர்வு குறித்த பதிவு. நம், மக்களுக்கான இன்றைய முக்கியமான மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

இதோ உங்களுக்காக! ... ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில், அதிலிருந்து முழுமையாக விலகி விடலாம். ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான் பயந்து கொண்டு பெரிய தவறு செய்கின்றனர்.

குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது, பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்கு தள்ளபட்டு, கடுமையாக பாதிக்க படுகின்றனர்.

பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.

முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன. IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள, புகைப்படங்களை நீக்கி விட முடியும்.

கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து அதை நீக்கி விட இயலும்.

யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும். XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில், ABUSE REPORTING FORM என்று ஒரு படிவம் உள்ளது. அந்தப் படிவத்தில் , இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தால், அந்தக் காணொளியை நீக்கி விடுவார்கள்.

இதனைத் தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது. அல்லது இதை செய்து கொடுக்க தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.

பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்றுவிடக் கூடாது .

முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லவில்லை. எப்போதும், தைரியத்துடனும் துணிச்சலுடன் இந்த மாதிரி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்.

நல்ல விதைகளை விதைத்து.. கள்ளி செடிகளை... களையெடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி என்று உங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களுக்கும் இச் செய்தியினை மக்களுக்கு கொண்டு செல்ல, மாவட்டத்திற்கு ஒரு தோழர் வேண்டும்.

உங்களில் மாற்றம் வேண்டும் என விரும்புபவர்கள், என்னை தொடர்ப்பு கொள்ளுங்கள் நண்பர்களே! என்று தன்னுடைய தொலைபேசி எண்ணையும் அத்துடன் பதிவிட்டிருந்தான் தேவ்.

இன்றைய தினம், பாலியல் அச்சுறுத்தல் விழிப்புணர்வு குறித்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தன்னார்வமுள்ளவர்கள் அதனை மக்களிடம் கொண்டு செல்ல முன் வந்தனர். பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தவறான தொடுதல்கள் மற்றும் பாலியல் அச்சுறுத்தல்கள் ஆகியவை அக் குழந்தைகளின் வயதிற்கேற்ப பெண்கள் மூலம், விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டன.

"நல்லதே செய்வோம்" என்ற அமைப்பை அரசின் அனுமதியுடன், ஆர்வமுள்ளவர்களால் மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் ஏற்படுத்தப் பட்டன. அதில் சமூக பற்று, சேவை செய்யும் மனபாண்மை உள்ளவர்கள் உறுப்பினர்களாக முன் வந்தனர். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் சமூக ஆய்வாளர்களின் மூலம் அவ்வியக்கம் உறுப் பெற்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், அதனை சுற்றியுள்ள கிராமங்கள், பெண்கள் வேலை பார்க்கும் இடங்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள், அவசர கால உதவிகள் பற்றி ஒவ்வொரு மாதமும் கூட்டங்கள் நடைபெற்றன.

அன்றோரு நாள்.. "நல்லதே செய்வோம்" முகநூல் பக்கத்தில்...

வணக்கம் தோழர். தங்களின் பதிவு யாருக்கு சென்றடைந்ததோ இல்லையோ, எனக்கு பெரும் உதவியாக இருந்தது. மானத்தை விட, உயிர் பெரிதல்ல என்று நினைத்து வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்தவளுக்கு, தங்களின் பதிவு.. எனக்கு உயிர் கொடுத்தது.

என் வீட்டில் வெளிநாட்டு மாப்பிள்ளை என்று பிரவீன் என்பவனை தேர்வு செய்தார்கள். நிச்சயம் முடிந்து, கல்யாண தேதியையும் குறித்தாகி விட்டது. சமீபத்தில் அவனுடைய நடவடிக்கைகள் எதும் சரியில்லை என்று அவனுக்கும், எனக்கும் வாக்குவாதம் வந்தது.

தாம்பத்யம் என்பது புனிதமான ஒன்று. அதனை வற்புறுத்தி, கொச்சைபடுத்தி, பேசி நிதமும் சித்திரவதை செய்தான். என் வீட்டில் கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று முடிவு செய்தார்கள்.

கோபத்தில்.. என்னுடைய புகைப்படத்தை தவறாக மாற்றி அமைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என மிரட்டினான். வெளியில் சொல்ல முடியாமல் மறைமுகமாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தோம். அதனை தெரிந்து கொண்டவன், அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டான். அப்போது தான், என்னால், இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல்... வீட்டிலும் சொல்லாமல் தற்கொலைக்கு முயன்ற பொழுது, உங்களின் பதிவை பார்த்து, உடனே வீட்டில் தெரிவித்து, தனியார் சைபர் கிரைம் மூலம் அந்த புகைப்படத்தை அழித்த பின்னர் தான்... உங்களுக்கு மனமாற நன்றி சொல்கிறேன் அண்ணா. அத்தோடு என்னை போன்று வேறு யாரும், அவனிடம் ஏமாற கூடாது! என்பதற்காக அவனுடைய புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறேன்.

தைரியமாக, இந்த மாதிரி பாவிகளின் முகத்திரையை கிழக்க வேண்டும். அதற்காக உதவிய உங்களுக்கு நன்றிகள்!!..” என ஒரு இளம் பெண் குறிப்பிட்டிருந்தாள்.

அப்பெண்ணின் பதிவிற்கு, பலரும் தங்களின் ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். சில பேர் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு தேவ்விற்கு நன்றியையும் தெரிவித்தனர்.

திருமணம் என்ற பெயரில் பல பெண்களை ஏமாற்றி சுகம் கான நினைக்கும் காமுகன்களை மற்றும் புகைப்படம், காணொளி மூலம் மிரட்டி பணம்,நகை, கொலை, கற்பை சூரையாட நினைக்கும் ராட்சசன்களை போன்று சமூகத்தில் நடமாடும் மிருகங்களை தைரியத்துடன் எதிர்க்க வேண்டும்.

இது பெண்களுக்கும் பெருந்தும். பெண்களில் சிலர் தவறான பாதையில் செல்கின்றனர். அவர்களுக்கும், தண்டனை உண்டு. பெண் என்பதால் விட முடியாது. குற்றம் யாரு செய்தாலும் குற்றம், குற்றமே! ஏனெனில் இன்றைய உலகில் ஆண், பெண் என இருபாலருக்கும் சமமாக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.

இந்த, மாதிரியானவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டுங்கள். பாதிப்பு எற்படாமல் காப்பாற்றலாம். பயந்து கொண்டிருந்தால், இது சாத்தியமற்றது. என்னை தொடர்ப்பு கொள்ளுங்கள் என ஒரு பெண் காவல் துணை ஆய்வாளர் ஆக்ரோஷமாய் பதிவிட்டிருந்தார்.

“உண்மையை உறக்க சொண்ணீர்கள் மேடம். ஆண் மற்றும் பெண் இருபாலரையும் சமமாக பார்க்கும், உங்களுக்கு நன்றிகள்!!!..” என ஒரு ஆண், கருத்தினை தெரிவித்தார்.

அதனையெல்லாம், படித்துக் கொண்டிருந்த, தேவ் முகத்தில் என்றுமில்லாத புன்னகை படர்ந்திருக்க, அதனை கண்டாள் சுந்தரி,.

“நீ, இது போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கனும் கண்ணா! அம்மாவிற்கு.... அது தான் வேண்டும்...” என்க... சுந்தரியின் கை பிடித்து, அந்த முக நூல் பதிவை பற்றி தெரிவித்ததும், பெரிதும் மகிழ்ந்தார்.

“நம் நாட்டில் பெண்களுக்கு, அதீத துயரங்களும், சோதனைகளும் நடக்கின்றன. பெண்ணிற்கு.. பெண்ணே முதல் எதிரியாய் இருப்பது மிகப் பெரிய வருத்தம் கண்ணா. பெண்களின் பொருளாதார நிலை உயர வேண்டும். வீட்டு செலவிற்கும், பிள்ளைகளின் படிப்பு செலவிற்கும்... சரியில்லாத ஒரு கனவனை வைத்துக் கொண்டு என்ன தான் செய்வாள்...”

எவ்வளவோ கட்டுபாடுகள், நடைமுறைகள் என அனைத்தையும் கடந்து போராடி வந்துள்ளனர். இன்றும், போராட்டம் நடக்க தான் செய்கின்றன. நிரந்தரமான தீர்வு, எப்போது தான் கிடைக்கும்...” என சுந்தரி பெருமூச்சு விட....

“கண்டிப்பாக மாற்றம் நடக்கும்! முன்பெல்லாம், இது மாதிரியான குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. அதனை, யாரும் வெளியில் கூட சொன்னதில்லை, ஏதிர்த்து கேட்டதில்லை, குடும்ப கெளரவம் என மூடி மறைத்தனர். இன்று, சிலர் எதிர்த்து நிற்கின்றனர். நன்மை நடக்கும் பாருங்கள்..” என்றான் தேவ்.

“கண்ணா! நீ...... ஒரு தொழில் தொடங்கலாமே? உன்னால் நிறைய பேருக்கு நன்மை நடக்கும்! குறிப்பாக, பெண்களுக்கு... எற்ற வேலையாக இருந்தால், நானும் வேலை செய்வேன்..” அதனால், தேவ்வின் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும்.. என்று ஊடகமாக பேசினார் சுந்தரி.

“கண்டிப்பாக மா! விவசாயம் செய்யலாம் என ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன் என தன்னுடைய டைரியை எடுக்க.. அதில், நட்சத்ராவின் பத்திரிக்கை தென்பட்டது. சந்தோக்ஷ் என்ற இடத்திலிருந்த புகைபடம்... முகநூல் பக்கத்தில்... அந்த பெண் குறிப்பிட்டிருந்த ‘ப்ரவீன்’ என்றவனது புகைபடமும் ஒன்றாக இருந்தது.

“அய்யோ... இவன் ஒரு அயோக்கியன் ஆயிற்றே!..இன்று தான் கல்யாணம் வேறு” என்று... முகநூலில் தைரியமாக எண்களை பதிவிட்டிருந்த பெண் காவல் துணை ஆய்வாளரை அவசரமாக தொடர்பு கொண்டு, கல்யான மண்டபத்திற்கு விரைந்தான்.

“சே… இவ்வளவு நாளாக கவனகுறைவாக இருந்துவிட்டேனே!!..” என அதிரடியாக அங்கு நுழைந்தான். வேகமாக மனமேடை ஏறி... பர்வீன்.. சந்தோஷ் என்ற பெயரில் உலா வந்தவனை... கழுத்தை பிடித்து.. தர தரவென இழுத்தான்..

“தேவ்.. ஏன்பா இப்படி நடந்துக்குற.. உன் மேல எவ்வளவு மதிப்பு வச்சிருந்தேன்..” என ஆனந்தன் கூற

"சார்... புரியாம பேசாதீங்க.. இவன் நல்லவனில்லை.. என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போது.. போலீஸ் உள்ளே நுழைந்தார்கள். அவனை சரமாரியாக அடித்தனர்.

“என் டா!.. எவ்வளவு பெண்களை ஏமாற்றுவாய்... உன் பேரில், ஏற்கனவே பல கேஸ்கள் இருக்கிறது. எவ்வளவு தைரியம் இருந்தால்.. மறுபடியும் தவறு செய்ய துணிந்திருப்பாய் என அவனை அடித்து.. இழுத்து சென்றனர்.

"கை போனில், மற்ற விஷயங்களை பார்ப்பது போல... நீயூஸ்சும் கொஞ்சம் பாருங்க....

அப்போது தான்.. சமூகத்தில் நடக்கும் இந்த மாதிரி நிகழ்வைகளை தடுக்க முடியும்... "என எல்லோர் முன்னிலையிலும் பேசினான். ஏனெனில், இவ்வளவு பேருக்கும்.. அந்த அயோக்கியனை அடையாளம் தெரியவில்லை என்பது.. அவனது ஆதங்கம். அவனுடைய இலக்கு... இன்னும் நிறைய பேரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தனும் என்று நினைத்தான்.

செய்த பந்தங்கள் எல்லாம்.. ஆறுதல் சொல்லி கிளம்பிவிட.. தேவ்வும் கிளம்ப எத்தனித்தான்.

"என்றோ, செய்த செயல்... இன்று உன்னை காப்பாற்றியிருக்கிறது. பார்க்.. பீச்.. தேயேட்டர் இதலாம் லைப் கிடையாது. பணம், சொத்து, பதவி இதலாம் நிறந்தரம் கிடையாது. நிலையான அன்பு.. தோல் கொடுக்க தோழர்கள், அன்பாக அரவணைத்து சொல்ல உறவுகள். இது தான் எப்போதும் நிறந்தரமான சந்தோஷம்..

எதையும் உடனடியாக முடிவெடுக்காதே! உன் விருப்பத்திற்கு ஏற்றவனாக.. வேறொரு, நல்ல பையனை கூட.. உனக்காக நான் தேர்வு செய்கிறேன். வாழ்வதற்கு தேவையானவற்றை என்னால் கொடுக்க முடியும்.. அந்த நம்பிக்கை.. என் மேல் இருந்தால்.. என் பின்னே வா! காத்திருப்பேன்.

“சார்.. என்ன உதவி வேண்டுமானாலும்.. என்னிடம் கேளுங்கள்...” என அவர்களிடம் விடை பெற்றான்.... ஒரு மாதம் கழித்து.. தேவ்வை பார்க்க சென்றாள் நட்சத்ரா.

அங்கே... "சுந்தரி ஆலயம் " என்றதொரு.... விவசாய கூடத்தை சின்னதாக, ஒரு முப்பது பேரை வைத்து... ஆரம்பித்திருந்தனர்.

கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை முளைக்க ஆரம்பித்தது. அதனை பார்வையிட்டு கொண்டிருந்த நட்சத்ராவின் அருகில் சுந்தரி வந்தார்.

"கண்ணு.. இப்போது தான்.. இந்த, அத்தையை பார்க்க வழி தெரிந்ததா? எதையும் நினைச்சு கவலை படாதே! அவனை வழிக்கு கொண்டு வந்திடலாம். கூடிய சீக்கிரமே... உங்க கல்யாணத்தை.. நான் நடத்தி வைக்கிறேன்.." என சுந்தரி கூறவும்..

"சாரி.. அத்தை! உங்களையெல்லாம், நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை... இப்போது தான், எனக்கு உண்மையான நிலவரம் புரிகிறது.." என கண்ணீர் சிந்தினாள்.

"வேறொரு.... மாப்பிள்ளையை, நான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதை விட, நித்தம் தேவ்வின் அருகில், ஒரு நிமிடமாவது வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் நல்ல மனதை புரிந்துக் கொண்டேன்..” என்று இருவரும் பேசியபடி... அலுவலக அறைக்கு சென்றனர்.

"ரிஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கிறது.." என்றதும்.. தேவ் அதனை கையெழுத்திட்டு வாங்கினான். அதனை படித்ததும்.. அவனது முகத்தில் சில உணர்வுகள் தென்பட.. இருவரும் ஆர்வமாக தேவ்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"அம்மா.. சிறந்த சமூக சேவை செய்தற்கான இளம் சாதனையாளர் விருது கொடுக்குறாங்க.. நான் இதற்கு தகுதியானவனில்லை.. டெல்லிக்கு போகனும் என்றான். தேவ்

அதனால்.. என்ன நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்தை செய்துக் கொண்டு... சேர்ந்தே போய்யிட்டு வாங்க... அடுத்த மாதம் முகூர்த்திற்கு ஏற்பாடு பண்ணிடலாம் கண்ணா! என்று சுந்தரி சந்தோஷமாக பேச..

"ம்மா.. மேடமிற்கு ஓகே வான்னு கேளுங்க... என தேவ் அவளின் முகம் பார்க்க.."

"அத்தை... நீங்க எதற்கும் கட்டுச்சோரு, ஒரு வாரத்திற்கு ஏற்ப கட்டிக் கொடுங்க.. டெல்லிக்கு சென்று விருது வாங்கி விட்டு... அப்படியே.. அங்கேயும், ஒரு சமூக சேவை மையத்தை... தொடங்கி வைத்து விட்டு வருகிறோம்.. என நட்சத்ரா சொல்லவும்...

"அப்புறம்... என்னம்மா! என் பொண்டாட்டியே சொல்லிட்டாங்க. மறுபரிசிலனை கிடையாது..." என தேவ் கூறி... மற்றவர்கள் சிரித்தனர்.

சுபம்...


வர போகும், புத்தாண்டை வெகு விமர்சியாக கொண்டாடுவோம். எல்லா வளமும், நலமும் பெற்று வாழ ........ எல்லாம் வல்ல சாய் நாதரை பிரத்திக்கிறேன்.

நம் தாய் நாட்டில், பிறக்கும்........ ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் , நேசம், கருணை, தேச பற்று, கோபம், தாபம்............. என அனைத்தும் நிறைந்திருக்கும். "நல்லதற்கு பயன்படுத்தினால்............. யாவும் நல்லதாகவே முடியும்..."
நம் நாட்டின் விடுதலைக்காக...... சுயநிலம் கருதாது, பாடுபட்டு பெற்று தந்த சுதந்திரம்.... இன்னும் நிலைக்க.......ஒவ்வொருவரும் சுயநலம் கருதாது இணைந்து.... கிடைத்த சுதந்திரத்திற்காக தன்னார்வுடன் சேவை செய்தல் வேண்டும்.
இருக்கும் வரை .... இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும்....... கொடுத்து ...... எல்லோருடனும் இணைந்து வாழ்வோமாக!!!
பள்ளிகளில் இருந்தே! நல்ல முறையில்... குழந்தைகளை ஒரு சிறந்த... மனிதனாகவும், தேசப்பற்று மிக்கவனாகவும், மனித நேயம் கொண்டு... நாட்டிற்கும் ... வீட்டிற்கும் சேவை செய்பவனாக உருவாக்க வேண்டும்... அந்த பொறுப்பு... முதல் ஆசிரியரான பெத்தவர்கள்.. மற்றம் இரண்டாம் பெற்றோர்களான ஆசிரியர்களும் தான் நிறைவேற்ற முடியும் ... ஜெய்ஹிந்த்
 
Last edited:

Latest posts

New Threads

Top Bottom