என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 20, 21& 22)
அடடே விறுவிறுப்பான அருமையான பதிவு. அட யாருடா இவன் புதுசு புதுசா நம்பர் வாங்கி மிரட்டிக்கிட்டு ஏன் அவனுக்கு இவ்ளோ காண்டு இப்புடி பண்ணிட்டு இருக்கான்? சரியான லூசா இருப்பான் போல.... செம ஸ்ரீ கன்சீவ் ஆ இருக்காளா?😜 அடேய் பிடிக்கல பிடிக்கலனு இப்படி பண்ணிட்டியே மித்ரன் சார். எப்படியோ ஹாப்பி தான். ஆனா பாவம் திவி தான் எப்படி சமாளிப்பாளோ? யாருடா இந்த ராணவ் சரியான அரை வேக்காடா இருப்பான் போல அட பாவி அவ மாசமா இருக்கானு தெரிஞ்சு எவனோ ஒருத்தன கொலை பண்ணிட்டியே டா 😳😳😳 பைத்தியம் 😡 இந்த மதன் வேற என்ன நம்பிக்கை துரோகி னு சொல்லிட்டான். அட லூசு அவ விரும்பின ஆளு தான மித்ரன் அப்புறம் என்னவாம் இவனுக்கு? ஐயோ சுதா இந்த கிறுக்கன பத்தி தெரியாம இப்படி பின்னாடி வந்து மாட்டிக் கிட்டியே மா ஒடீடு இல்ல எதாவது பண்ணிட போறான். என்னடா இது ஆளு ஆளுக்கு இப்படி மெண்டல் மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க?🤔🤔🤔 நினச்சேன் எல்லாருக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கும்னு இப்போ கன்ஃபார்ம் ஆயிடுச்சு.
ஐயயோ போச்சு திவ்யா வை கடத்திட்டாங்களா? பாவம் மித்ரன் எவ்ளோ பெரிய மகிழ்ச்சியான விஷயம் ஆனா எவனோ சொல்லி கேட்க வேண்டியதா போச்சே😞 டேய் ராணவ் லூசு நீ பார்த்த வேலை தானா இது? எப்படி டா இப்படி மனசாட்சி இல்லாம நடந்துக்குற பைத்தியமே😡 கடத்தல் பண்ணிட்டு ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு இருந்த இப்ப மித்ரன் கண்டு பிடிச்சதும் என்னமா நடுங்கிட்டு இருக்க தேவையா உனக்கு இது? அதோ பாருடா நம்ப தல மித்ரன என்ன ஸ்டைல்லா திமிரு வராருனு இனிமே இருக்குடா ராணவ் நீ செத்தடா மவனே. அடடே என்ன என்ன பண்றாரு நம்ப கமிஷ்னர் சார். இந்த ராணவ் மதனையும் விட்டு வைக்கல போல பாவம். ஸ்ரீ இந்த நேரத்துல கூட ஒரே லவ்ஸ் தான். என்ன கமிஷ்னர் சார் பொதுக்குனு இப்படி பண்ணீட்டிங்களே???😳😳😳😳
மித்ரன் எல்லாருக்கும் இப்படி அதிரடியா பீதியை கிளப்பிட்டீங்களே அங்க பாருங்க ராணவ் கண்ணுல மரண பீதி தெரியுது. ஏம்மா சுட்டி டீவி அங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ என்னடானா இப்போ மித்ரன சைட் அடிச்சிட்டு இருக்கியா பக்கி😤😤😤 இதுல வேற இந்த ராணவ்க்கு காண்டு ஏறுது போல. அடப்பாவி டேய் ராணவ் பேசிட்டு இருக்கும் போதே துப்பாக்கிய எடுக்குற நீ. அடே யப்பா சாமி மித்ரன் நீ திவிய காப்பாத்த வந்தியா இல்லயா? அப்படியே போய் அமைதியா உட்காந்துட்ட ஆனாலும் ஏதோ ஒரு காரணம் இருக்க மாதிரி தான் தெரியுது. பார்க்கலாம் பெரிய ஏதும் இருக்குமோ🤔🤔🤔 ஏது திவ்யா மதனோட மச்சினிச்சியா?😳😤 ஆக மிக்ரனுக்கும் இப்போ எல்லா உண்மையும் தெரிந்து போச்சா? 😱 அடேய் பாவி பாவம் டா திவி அவள போட்டு இப்படி கொடுமை படுத்துறியே ராணவ். பாவம் திவி யாரு பக்கம் நிப்பா ரெண்டு பேருமே முக்கியம் தானு சொல்லுறா ஆனா நீ அவ குழந்தைய வச்சு ப்ளாக் மெயில் பண்றியே பக்கி சீ மிருகம் மாதிரி செஞ்சுட்டு இருக்க😡 அடக் கொடுமையே கடைசியா இப்பவும் மிக்ரனுக்கு எதிரா நிக்குறியா ஏன் திவி பாவம் அவன் இன்னும் எவ்ளோ கொடுமை அனுபவிக்கனுமோ😞😞😞
ஏம்மா ரைட்டர் மேடம் ஆக மொத்தம் எல்லாருக்கும் உண்மைய சொல்லிட்டீங்க போல? படிக்குற எங்கள தவிர எல்லாரும், இப்போ மித்ரன் முதல் கொண்டு உண்மைய தெரிஞ்சு கிட்டான். ஆனா எங்கள போட்டு குழப்பறதுலையே இருக்கீங்க. அத எப்படி மித்ரனுக்கு மட்டும் சொன்னீங்க? எங்கள பார்க்க பாவமா இல்ல உங்களுக்கு? மித்ரன் கூட சேர்ந்து கூட்டு சதி பண்ணிட்டீங்களே HB. எப்போ தான் எங்களுக்கு ப்ளாஸ் பேக் சொல்லுவிங்க? சீக்கிரம் செல்றீங்களா? இல்ல சங்கத்துக்கிட்ட கோர்த்து விடவா?😠😠😠😜😜😜👍👍👍👍