Harini
Member
- Messages
- 41
- Reaction score
- 43
- Points
- 18
இதழ் சிரிப்போடு முடிந்தது
தொண்டையடைக்கும் துக்கம்
மனதிலே மாய்ந்தது
அணையில்லா ஆசைகள்
தலையணையோடு காய்ந்தது
கரையில்லா கண்ணீர்
தூக்கத்தால் சமன்பட்டது
காரணமுள்ள கோபம்
கனவு காணவும் அச்சப்பட்டது
இறந்துவிட்ட இதயம்
மீண்டும் மனதில் தோன்றியது
நீக்கப்படவேண்டிய நினைவுகள்
இவற்றுக்கு காரணமாய் இருந்தும்,
அமைதி கொடுத்தது
தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமை !!
தொண்டையடைக்கும் துக்கம்
மனதிலே மாய்ந்தது
அணையில்லா ஆசைகள்
தலையணையோடு காய்ந்தது
கரையில்லா கண்ணீர்
தூக்கத்தால் சமன்பட்டது
காரணமுள்ள கோபம்
கனவு காணவும் அச்சப்பட்டது
இறந்துவிட்ட இதயம்
மீண்டும் மனதில் தோன்றியது
நீக்கப்படவேண்டிய நினைவுகள்
இவற்றுக்கு காரணமாய் இருந்தும்,
அமைதி கொடுத்தது
தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமை !!