Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தேவதை பெண்கள்

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
அன்று என் வீடு பரபரப்பு கொண்டு இருந்தது…



எந்த வேலையும் பொறுமையாகவும்,நிதானமாகவும் செய்யும் தந்தையிடம் இன்று எவ்வளவு படபடப்பு. இதை யாரு இங்க வைத்தது?..லட்சுமி எல்லாம் தயாராக இருக்கா?..பிரபா..என்னடா பண்ணுற இதை எடுத்து வை.



தன் சமையல் மீது அதீத நம்பிக்கை கொண்ட தாய்.உண்மையில் என் அம்மா சமையல் ரொம்ப பிரமாதமாக இருக்கும்.ஆனால் இன்று மது உப்பு சரியா இருக்கா? காரம் அளவாக இருக்கா? இது இனிப்பா இருக்கா?

அந்த சிவப்பு பச்சை கலந்த புடவை கட்டிக்கோ மது. அது உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்.



பிரபா.சின்ன குறும்புகார தம்பி.இன்று எவ்வளவு பொறுப்பு.அக்கா இந்த மல்லிகை பூ அம்மா கொடுக்க சொன்னங்க.அக்கா அப்பா சீக்கிரம் தயாராக சொன்னார்.அப்பா இருங்கள் நான் வந்து எடுத்து வைக்கிறேன்.அப்பப்பா….பதினைந்து வயது சிறுவனிடம் இவ்வளவு பொறுப்பா?..



நான்.மனமே அழகு என்று நம்பிக்கை கொண்டவள். ஆனால் இன்று கண்ணாடியில் ஒரு பத்து தடவையாது என் முகத்தை பார்த்து கொண்டேன்.கலையாத புடவை மடிப்பை எட்டு தடவை சரி செய்து கொண்டேன்.என்னையும் மீறி புன்னகை என் இதழோரத்தில் வந்தது.நான் தடுத்தும் முடியவில்லை.

மனம் எங்கும் அவ்வளவு மகிழ்ச்சி.



என் முகம் பெருமையில் மின்னியது.இருக்காத பின்னே...

இந்த இனிய நாளில் நான் தானே நாயகி.அதுவும் தன் நாயகனுக்கு காத்து இருப்பவள்.



எவ்வளவு கனவுகள்.. எவ்வளவு காத்து இறுப்புகள். எவ்வளவு எதிர்பார்புகள்..



தோழிகள் அவர்கள் காதல் கதையை கூறும் போது என் மனம் எங்கோ எனக்கானவனை தேடி கற்பனையில் அலைந்து கொண்டு இருக்கும்.

எப்படி இருப்பான்?

எங்கு இருப்பான்?

என் கரம் பிடிப்பது எப்போது?.



படம் பார்க்கும் போது,காதல் காட்சிகள் காணும் போதெல்லாம் என் கண்களில் ஆயிரம் கனவுகள் மின்னும்.அவனும் என்னை பார்த்து இப்படி தானே பாடுவான்.அவனுக்கு என்னை பார்த்தால் எந்த பாடல் மனதில் வரும்? மனம் குழந்தையாய் மாறிவிடும்.



தனது தோழியுடன் எவ்வளவு உரையாடல்கள் இதை பற்றி.



கண்ணும் கண்ணும் மோதி கொள்ள..ஒரு நொடியில் இரு இதயமும் பறிபோனதே?.. இது தான் கண்டதும் காதலா!..,



மாப்பிளை வாந்தாச்சு..தம்பி கூற..

என் இதயம் தொண்டைக்குழியில்

வந்து மாட்டிக்கொண்டது.



தாய் வருகைக்காக, காத்து கொண்டு இருத்தேன். அவள் வந்து என்னை அழைத்து கொண்டு போய் அவர்கள் முன் நிறுத்திய நொடியில்,



அவர்கள் அனைவரின் பார்வையும் என்னை மதிப்பிட தொடங்கியது.அந்த நொடியை நான் வெறுத்தேன்.நான் ஒரு காட்சி பொருளாக, பொம்மையாக அவர்கள் பார்வைக்கு தோன்றினேன் போல…



நான் அவர்களை உற்று நோக்கினேன். என் வீட்டவர்களிடம் தெரிந்த பயம் பதட்டம் துளி கூட அவர்களிடம் இல்லை. இது அனைத்தும் பெண் வீட்டாருக்கு உரியது போல…



அது சரி,என் அம்மா தானே தன் பெண்ணை வேறு வீட்டிற்கு அனுப்ப போகிறாள்;என் அப்பா தானே அவள் பெண்ணை வரதட்சணை கொடுத்து என்னை விற்க போகிறார்;நான் தானே என் செல்ல தம்பியை விட்டு பிரிய போகிறேன்;



என் பார்வை அவனை ஆராய்தது. அவன் கண்களில் நான் எப்படி தெரிகிறேன்?..



அந்த பார்வை காதலை சொல்லியது. நல்லவேளை, அவனுக்காவது நான் ஒரு பெண்ணாக என்ற உணர்வு உள்ளதே..அதுவே அவன் மீது எனக்கு பெரிய நம்பிக்கை ஏற்படுதியது.



ஏனென்றால், இங்கு பலர் பார்வையில்

பெண் என்பவள் ஒரு உணர்ச்சியற்ற, உரிமைகள் இல்லாத ஜடம்.பல பெண்கள் இன்னும் நடைபிணமாகவே வாழ்கிறாள் என்பதே நிதர்சனமான உண்மை.



பாதுகாப்பு என்கிற பெயரில் ஒரு தங்க கூண்டில் அடைக்க படுகிறாள்.தங்க கூண்டோ,வெள்ளி கூண்டோ,கூண்டு கூண்டுதானே.



சில கொடிய மிருகங்கள் பார்வையில் ஒரு பொம்மையாய் இருக்கிறாள்.

அவர்கள்,அதை வைத்து விளையாடுகிறார்கள். இன்னும் சிலர் அதை பிய்த்து நாசமாக்கி விளையாடும் மனசாட்சி அற்ற கொடூரன்கள்.



இவர்கள் ஒருவகை என்றால்,பெண்கள் உணர்வுகள் உடன் விளையாடும், உணர்ச்சியற்ற பிணங்களை எந்த வகையில் சேர்ப்பது.



அவன் கண்களில் தெரிந்த காதல் என்னை கட்டி போட்டது.அவன் என் கண்களை பார்த்த அந்த நிமிடம் தொண்டையில் இருந்த என் இதயம் வாய் வழியே குதித்து விழுந்தது. அவன் மனமும் என்னிடம் விழுந்தது. இது தான் கண்டதும் காதல் போல.



பூவை விட மென்மையான மனம் கொண்டவள். தாய்ப்பால் போல் தூய்மையானவள்.தமிழ்மொழி போல இனிமையானவள். வானத்து நிலவை விட அழகானவள். நீ என் தோழியாக கிடைத்ததே வரம் என்னும் போதே,அவன் இப்படி உன்னை விட்டு வேறு ஒருவளை…



கல்யாணபத்திரிகை கொடுக்கும் சாக்கில் ஒவ்வொரு பழைய தோழிகளை பார்ப்பது மனதிற்கு ஆனந்தம் அளித்தாலும்,சிலரின் வாழ்க்கை மனதை ரணம் ஆக்கியது. மனம் பொங்கி எழுந்தது.



முதலில் நான் சந்தித்தது, தேன்மொழி. என் கல்லூரி தோழி.

அவள் வீட்டில் மூத்தபெண்.முதல் பட்டதாரி. இரு படிக்கும் தங்கைகள் இவள் வருமானத்தை நம்பி. ஏழ்மையான குடும்பம்.இவளுக்கு இவள் விடாமுயற்சியால் ஒரு நல்ல வேலை கிடைத்தது.



வேலைக்கு சென்று குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டு இருந்த அவளுக்கு போன மாதம் வேலை போய்விட்டதாம்.இது ஒரு அதிர்ச்சி என்றால்,அதற்கு காரணம் இன்னொரு பெண் என்பது எனக்கு பேரதிர்ச்சியாக இருத்தது.அதுவும் கேவலம் இவள் மீது உள்ள பொறாமையால் ஒரு திருமணமாகாத பெண் மீது தவறாக பழி சுமத்தி ஒரு குடும்பத்தை நிலை குலைய செய்து உள்ளாள் அந்த ராட்சசி.



ச்சீ..இப்படியும் சில பெண்களா? பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?..!



கவிதா.இவளை கவிதா என்று சொல்லுவதை விட கவிதாமித்திரன் என்றே சொல்லலாம்.இருவரும் கல்லூரி காலத்தில் அவ்வளவு காதல் செய்தனர்.சுத்தாத இடம் கிடையாது.இருவரும் எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்று கேட்ட போது அவள் பதில் கண்ணீராக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.



அவள் சொன்னாள்"எல்லாமே நல்லாதா போய்ட்டு இருந்துச்சு. அவனுக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. கூடவே என்னை விட அழகான பொண்ணு கிடைத்தது. அப்புறம் என்னோட காதல் அவனுக்கு தேவைபடலை."



இதை கேட்கும் போதே அருவருப்பாக இருந்தது. காதல் என்பது ஒரு ஆண்ணை பொறுத்தவரை இவ்வளவுதானா?..ஒன்றை விட இன்னொன்று சிறப்பாக கிடைத்தால் விட்டு செல்ல பெண் என்ன உணர்வுகள் அற்ற பொருளா?...



இதுவும் ஒருவகை கற்பழிப்பே. அவனும் ஒரு காமகொடூரனே.



தன்வினை தன்னை சுடும். விதைத்து தானே விளையும்.மித்தரனை அந்தபெண் பாதியில் விட்டு வேறு பணக்கார பையனை திருமணம் செய்து கொண்டாள்.



கவி..நீ..அவனை மீண்டும் ஏத்துக்க போறியா?..



அட.. நீ..வேற.. மது..அவனை நா கொலை பண்ணாம விட்டதே பெரிசு..சாக்கடைனு தெரிஞ்சு ஏன் காலை விடணும்.



சரி தானே..!



திவ்யா. ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை.வேலை எப்படி போகுது?.என்ற கேள்வியை கேட்டகாமலே இருந்து இருக்கலாம்.



"ஏந்தா? இந்த வேலைக்கு போறமோனு இருக்கு..மது.மானேஜர் பெரிய தொல்லை. ரொம்ப தப்பா நடத்துக்குறான்.எதுவும் சரி இல்லை."என்று கண்ணீர் வடித்தாள்.



இது போன்ற ஆண்கள் இப்படி பெண்களிடம் நடக்கும் போது அவர்கள் வீட்டு பெண்களை ஏன் நினைத்து பார்ப்பதில்லை என்று தோன்றியது.



அனு.என் நெருங்கிய தோழி.அவளின் திருமணத்தின் போது பார்த்தது. அதன் பின்னர் இப்போது தான்.



உயிர் உள்ளவரை தொடரும் ஆண்களின் நட்பு.ஆனால் பெண்களின் நட்பு திருமணம் ஆன பின் முடிந்து விடுவது மட்டும் எப்படி என்று தெரியவில்லை.



இவளின் வாழ்க்கை கதை என்னை உலுக்கியே விட்டது. நான் நிலை குலைந்து போனேன். திருமணம் ஆன ஒரு வருடத்தில் அவளின் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஓடி விட்டான்.



அனு ஒரு தேவதை பெண். அவள் மிகவும் குணமிக்கவள்.அவள் தோழியாக கிடைத்தது என் வரம்.அப்படி இருக்கும் ஒரு பெண்ணனை எப்படி அவன் விட்டு சென்றான்.அதுவும் அவளை நிறைமாத கர்ப்பிணியாக.



கூடவே,புருசனுடன் சரியாக குடும்பம் நடத்த தெரியாதவள் என்ற பட்டத்தை கொடுத்து விட்டு போய் விட்டான்.ஒரு பெண்ணுடன் மட்டும் வாழ முடியாத கேவல புத்தி கொண்டவன்.



ஆனால் அவள் சோர்ந்து போகவில்லை.ஒரு சுயதொழில் துடங்கி அவள் குழந்தையுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறாள்.நிச்சயமாக,இப்படி ஒரு பெண்ணை விட்டு சென்றவன் ஒருநாள் வருந்துவான் என்று தோன்றியது.



எவ்வளவு தேவதைகள் இங்கு தன் இறகுகள் உடைக்கபட்டு

வலியில் துடித்து கொண்டு தன் லட்சியங்களை நோக்கி பறந்து கொண்டு இருகிறது...அவர்கள் மத்தியில் நீ சாக்கடையில் விழுந்து புரண்டு கொண்டு இருகிறாயே… என்ன ஜென்மம்..




தோழிகளின் நிலை கண்டு மனம் வருந்தியது.ரத்தம் கொதித்தது. தலை வலித்தது.



என் வண்டியை காபி கடை நோக்கி திருப்பினேன்.எனக்கு தலைவலி என்றால் என் நாக்கு காபியை சுவை பார்த்து விட வேண்டும்.



ஆனால் அங்கே...எனக்கு மீண்டும் ஒரு தீராத தலைவலி வந்தது அந்த காட்சியை கண்டு..



அது அவள் தான் தீபா.கண்டிப்பாக அவளே தான். ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் ஆனதே நான் கூட போய் இருத்தேன்.இருவருக்கும் நல்ல ஜோடி பொருத்தம்.



ஆனால் இவன் யார்?நிச்சயமாக இது அவள் கணவன் இல்லை. இருந்தும் அவன் கணவன் போல இவளிடம் இப்படி நெருக்கமாக நடந்து கொள்கிறானே…



யார் இவன்?.ஆ...ஞாபகம் வருகிறது. இது அவள் கணவனின் தம்பி.கல்யாணத்தில் பார்த்தேன்.



இது போன்ற தகாத உறவுகள் நிறைய வளர்ந்து வருகிறது. சொல்ல முடியாத உறவினர்களுடன் சொல்ல முடியாத உறவுகள்.



அண்ணி என்பவள் அடுத்த அன்னை ஆயிற்ரே. தீபா காணும் போது ஒரு அருவருப்பான உணர்வு.



சில நல்ல ஆண்மகன்கள், தன் குடும்பமே உலகமாக வாழ்கிறார்கள்.அவர்களுக்காக உழைக்கிறார்கள்.அவர்களை ஏமாற்ற இது போன்ற பெண்களுக்கு எப்படித்தான் மனது வருகிறதோ..



பத்திரிகை வைக்கவில்லை. வைக்கவும் தோன்றவில்லை.

வந்துவிட்டேன்.



சுபமேளம் முழங்க,உறவுகள் ஆசீர்வதிக்க,அக்னி சாட்சியாக, நம்பிகையுடன் அவன் கரம் பிடித்து என் இல்வாழ்வை தொடங்கினேன்….அதுவும் இனிமையாக சென்றது.



என்னுள் எவ்வளவு மாற்றங்கள்.என் வீட்டில் சிறு துரும்பை கூட நகர்த்த யோசிக்கும் நான்..இங்கு காலை நான்கு மணி துடங்கி இரவு பத்து வரை இவ்வளவு வேலைகளை எப்படி சலிக்காமல் செய்கிறேன்.



அவனுக்காக வேலை செய்யும் போது ஏன் என் மனம் இவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறது. காரணம் அவன் உண்மையான அன்பு.



அவன் வாயில் இருந்து இப்போது அதிகமாக வரும் வார்த்தை மது.. மது..மது..!



நான் மிக அதிர்ஷ்டகாரியாம்.நான் வந்த நேரம் நீண்ட காலமாக வராமல் இருந்த பரம்பரை சொத்து அவர்களுக்கு கிடைத்ததாம். என் மாமியார் சொன்னார்.



மருமகளே..,எப்ப எனக்கு ஒரு பேரனை பெத்து கொடுக்க போற?.. ஆறு மாதத்தில் இந்த கேள்வி.உண்மையில் நான் அதிர்ஷ்டகாரி போல.திருமணம் ஆன ஏழு மாதத்தில் கர்ப்பம் ஆனேன்.



ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தேன். அது எனக்கு மகிழ்ச்சியே.



ஒரு பெண்ணை பொத்தி பொத்தி வளர்ப்பதை விட ஒரு ஆண் மகனை ஒழுக்கமாக வளர்த்தால், பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாபாகவும் இருப்பார்கள்.



ஒரு பையனை ஒழுக்கமாக வளர்ப்பது , நூறு பெண்களுக்கு சுதந்திரமான பாதுகாப்பு கொடுபதற்கு சமம் என்பது என் நம்பிக்கை.



என் கனவுகள் அனைத்து கண்ணீராய் கரைந்தது..என் பூ தீயில் கருகியது ஏனோ.. வளையல்கள் நொறுங்கியது ஏனோ.. குங்குமம் அழிந்தது ஏனோ..



இரண்டு வருடங்கள்.முயல் போல ஓடியது. சஷ்டிஷ் ஒரே அருமை மகன் கொஞ்சம் வளர்த்து விட்டான்.



அவர் அவன் மீது உயிரே வைத்து இருந்தார். அவனுக்காக விளையாட்டு பொருட்கள் வாங்க சென்றார்.



சென்றவரை எமன் அவனுடன் அழைத்து கொண்டான். நான் இருள் சூழ்ந்த காட்டில் கண்ணை கட்டி தனியாக விடபட்டேன்.



காது நன்றாக கேட்டது.எவ்வளவு பேச்சுகள். கத்தியால் குத்தியது போல ஒரு ரணம்.



அதிர்ஷ்டகார மருமகள், இன்று என் மாமியார்க்கு நாசகார மருமகள் ஆனேன்.



எவ்வளவு கண்கள் என் முகம் பார்த்தால் கெட்ட சகுனம் என்று திருப்பின.எத்தனை சுபநிகழ்ச்சிகள் என்னை தனிமை படுத்தியது.



அம்மா சொன்னாள்.ஒரு பெண்ணுக்கு ஆம்பளை துணை வேண்டும். உன் மகனிற்கு ஒரு அப்பா வேணும்.உன் வாழ்க்கை இதோட முடியலை.



அப்பா சொன்னார்.நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் துணை இருப்பேன்.என் அப்பா எப்பவும் இப்படி தான். அவர் எனக்கு எப்போதும் பலமே.



வருடங்கள் சென்றது.நான் இன்று..

என் அப்பாவின் துணையுடன் அவர் வியாபாரத்தை கவனித்து கொள்கிறேன். ஒருநாள் தனியாக ஒரு தொழில் செய்யும் நம்பிக்கை உள்ளது.



நான் மதுமிதாபாலகிருஷ்ணன்.என் மகன் சஷ்டிஷ்மதுமிதா.அவனும் மற்ற பையன்களை போலவே ஒழுகமாகவும் தைரியமாகவும் வருகிறான்.



எனக்கு மீண்டும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை. அவரை தவிர என் மனம் யாருக்கும் இடம் தரவில்லை.என் மகனை தனியாக வளர்க்க முடியாத அளவுக்கு நான் கோழையும் இல்லை.



பெண்கள் என்பவர்கள் தேவதைகள்.அவளுக்கு வரமும் தர தெரியும். சாபமும் கொடுக்க தெரியும். அது நீங்கள் அவளிடம் நடப்பதை பொறுத்து.



முற்றும்.
 

New Threads

Top Bottom