Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
மகேந்திரபுரி கோலாகல கொண்டாட்டத்தில் இருந்தது.வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் வேட்டை திருவிழா தொடங்க இன்னும் ஒரு நாள்தான் இருந்தது.வெவ்வேறு நாடுகளிலிருந்து துணிவு மிகுந்த வீரர்கள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து வேட்டை விழாவில் கலந்து கொள்ள மகேந்திரபுரியில் குவிந்திருந்தனர்.வெகு வேகமாக செல்லக்கூடிய குதிரைகளும் தேர்களும், சாரட் வண்டிகளும் நகரத்தின் வீதிகளில் உலா வந்து கொண்டிருந்தன.மகேந்திரபுரியின் மக்கள் நமுட்டு சிரிப்போடு வீரர்களை கவனித்து கொண்டிருந்தனர்.அவர்களுக்கு நன்றாக தெரியும்.வேட்டை திருவிழாவில் கலந்து கொண்ட யாரும் வெற்றியோடு ஊர் திரும்பியதில்லை.உடல் ஊனமுற்றோ, தோற்றோதான் நாடு திரும்பியுள்ளனர்.கடந்த பத்தாண்டுகளாக வேட்டை விழாவில் தொடர்ந்து வெற்றி பெறுபவன் மகேந்திரபுரியின் தளபதி கருணாகரன் மட்டுமே.அது எப்படி என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.மகேந்திரபுரியின் மன்னனுக்கு இதில் தாள முடியாத பெருமை.அந்த பெருமைக்கு குந்தகம் விளைவிக்க கோட்டையை நோக்கி விரைந்து கொண்டிருந்தன இரு புரவிகள்.அவற்றின் வாய் நுரை தொலைதூரத்திலிருந்து அந்த புரவிகள் வருகின்றன என்பதை சொல்லாமல் சொல்லின.அவற்றில் அமர்ந்திருந்த இருவரும் பயணத்தால் சற்றே களைப்புற்றிருந்தாலும் களையான முகத்துடன் இருந்தனர்.அவர்களின் மேனியில் மேலாடை போடப்படாது இருந்த இடங்களில் தெரிந்த தழும்புகள் இருவரும் சண்டையில் தேர்ந்தவர்கள் என்பதையும் அதில் காயப்பட அஞ்சாதவர்கள் என்பதை் பார்ப்பவர்கள் ஊகிக்கும்படியும் அவர்களிடம் வாலாட்ட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை தருவது போலவும் இருந்தன.அவர்களின் கச்சையிலிருந்த குறுவாள்கள் ஒழுங்காகவும், கச்சிதமாகவும் சொருகப்பட்டிருந்தன.இடுப்பிலிருந்த வாள் வலது கையை ஒட்டியபடியே இருந்ததால் எந்த நேரத்திலும் வாளை சுழற்றி அவர்களால் தாக்க முடியும் என்பதை எதிரிகள் உணர்ந்து கொள்ளவாகாக இருந்தன.குதிரையை மெல்ல நடத்திக் கொண்டிருந்த இளையவன் “அண்ணா! நமக்கு கிடைத்த தகவல் சரிதானா? “என்றான்.
“அரபு வணிகன் பொய் சொல்ல மாட்டான்.ஆறு விரல் கொண்ட ஒரு மனிதன் மகேந்திரபுரியில் இருப்பதாகத்தான் அவன் கூறினான்.!”
“கடந்த ஆறு திங்கள்களில் நாம் பல நாடுகளில் பல ஆறு விரல் உள்ள மனிதர்களை பார்த்து விட்டோம்.ஆனால் யாருமே நாம் தேடி வரும் நபருடன் பொருந்தி போகவில்லை! “
“உண்மைதான்! இங்காவது நம் தேடல் முடிவுற வேண்டும்! “
ஆதித்தன் தன் ஆடையிலிருந்து அந்த ஆபரணத்தை எடுத்தான்.கழுத்தில் அணியும் ஆபரணங்களில் ஒன்று அது.”இதை பார்த்தவுடன் யாருடைய முகம் மாறுகிறதோ அவனே நாம் தீர்க்க வேண்டிய ஆள்! துரதிர்ஷ்டவசமாக இந்த நகையுடன் முன் அனுபவம் உள்ள ஆறு விரல் ஆசாமி நம் கண்களில் தட்டுப்படவில்லை! “
“ஆமாம்! இந்த நகையை பார்த்து முகம் மாறியவர்கள் யாருமில்லை.மேலும் பத்மாவதி பொய் உறைத்திருக்கலாம்! “
“பத்மாவதியாவது பொய் கூறுவதாவது? “
“இல்லை! அவளை ஏமாற்றியவன் பொய் கூறி இருக்கலாம் அல்லவா? “
“பொய் மட்டுமா கூறினான்? ஒரு இனத்தையே அழித்து விட்டல்லவா காணாமல் போயிருக்கிறான்.?அவன் மட்டும் என் கையில் கிடைத்தால்? “
“பொறு ஆதித்தா! கோட்டை நெருங்கி விட்டது! “என்றான் அரிஞ்சயன்.அவர்கள் கோட்டை தலைவனின் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு வணிகர் தெருக்களில் நடக்க துவங்கினர்.மகேந்திரபுரியின் செல்வ செழிப்பை கடைவீதி தெள்ள தெளிவாக காட்டி கொண்டிருந்தது.ஒவ்வொன்றாக பார்த்தபடி இருவரும் ஆறுவிரல் கொண்ட யாராவது நாட்டில் உள்ளனரா என்று விசாரித்து கொண்டிருந்தனர்.வணிகர்களின் பார்வையில் ஆறு விரல் கொண்ட கை பார்வைக்கு தப்பாது என்பதாலேயே இருவரும் வணிகர் வீதிகளில் விசாரிக்க தலைப்பட்டனர்.குதிரையை நடத்தியபடி சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற ஆதித்தன் வெகு வேகமாக வந்த ஒரு புரவியால் மோதி தள்ளப்பட்டான்.திடிரென தள்ளி விடப்பட்டதால் கடும் கோபமடைந்த ஆதித்தன் அருகிலிருந்த பழக்கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களில் ஒன்றை இடித்து சென்றவனின் தலையை நோக்கி குறி பார்த்து வீசினான்.பழம் அவனுடைய தலையில் மோதி முகத்தை சாறாக்கியது.நல்லவேளையாக அவன் யவனர்களின் முக கவசத்தை அணிந்திருந்ததால் அவனுடைய முக சேதாரம் குறைவாகவே இருந்தது.
“எங்கேயப்பா இவ்வளவு அவசரமாக செல்கிறாய்? உன் மனைவியை கற்பழிப்பவர்களிடமிருந்து காப்பாற்ற செல்கிறாயா? “சற்று இடக்காகவே வந்தன ஆதித்தனின் வார்த்தைகள்.
“எனக்கு இன்னும் திருமணமாகவில்லை குருடனே! “என்றவன் புரவியிலிருந்து இறங்கினான்.அவனது முகத்தை பார்த்ததும் கடைவீதியில் பரபரப்பு கிளம்பியது.”தளபதி கருணாகரன்! “என்று யாரோ சொன்னார்கள்.அரிஞ்சயனுக்கு சூழ்நிலை சட்டென்று புரிந்தது.அரசின் உயர் மட்ட அதிகாரியோடு தம்பி தெரியாமல் மோதி விட்டான் என்று உணர்ந்தவன் ஆதித்தனின் கைகளை பிடித்தான்.”வேண்டாம் ஆதித்தா! “என்ற அரிஞ்சயன் கருணாகரனின் அடுத்த செயலை பார்த்து அதிர்ந்தான்.
“இந்த அந்நியனுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன்! “என்ற கருணாகரன் தன் புரவியை முடுக்குவதற்காக வைத்திருந்த சவுக்கை எடுத்து ஆதித்தனை நோக்கி வீசினான்.தன்னை நோக்கி வந்த சவுக்கின் நுனியை லாவகமாக பற்றிய ஆதித்தன் கருணாகரனை பார்த்து கேலியாக புன்னகைத்தான்.இனி என்ன செய்ய உத்தேசம் என்ற ஆதித்தனின் புன்னகை கேள்வியில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கருணாகரன் சவுக்கை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்ய ஆரம்பித்தான்.அப்படியான முயற்சியில் கருணாகரன் ஈடுபட்ட போது அவனது வலதுகையில் இருந்த ஆறாவது விரலை சகோதரர்கள் இருவருமே பார்த்தனர்.அரிஞ்சயன் நாட்டின் தளபதியை கொன்று விட்டு இருவரும் வெளியேறுவது நடக்கக்கூடிய காரியமா? என்ற அச்சத்தில் உறைந்தான்.ஆதித்தனின் கண்கள் பழி வாங்கும் வெறியில் சிவக்க தொடங்கின.!