Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்கவேண்டாம் குண்டு மல்லீஸ்❤️
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு:

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 5


கீழே வந்த அதிதி மோனிகா பற்றிய பயம் நீங்கியவுடன், ராதாவின் அருகிலேயே சமையலறையில் நின்று கொண்டாள்.


தன் கணவனின் நினைவு அவளுக்கு எழவே இல்லை. இரவு உணவிற்காக டைனிங் டேபிள் வந்தவனும் அவளை கண்டுகொள்ளவில்லை.


எல்லா வேலையும் முடித்து இரவு பத்து மணிக்கு படுக்கைக்கு வந்த அதிதி, தன் கணவன் தனக்கு முதுகு காட்டி உறங்குவதைக் கண்டு தன் செல்லத் திருடனுக்கு இன்று என்னவாயிற்று என்று குழம்பினாள்.


எப்போதும் தன் வருகைக்காக காத்திருந்து, தன் நெஞ்சில் முகம் புதைத்துத் தூங்குபவன் இன்று தன்னைத் தேடாமல் படுத்திருந்தது ஒருவித வலியைக் கொடுத்தது அவளுக்கு.


அவன் அருகில் சென்று சில நிமிடங்கள் அமைதியாகப் படுத்திருந்தவள் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாதவளாய் பால்கனி பக்கம் சென்று வெடித்தழுதாள்.


திடீரென அவளின் தோளின் மேல் கரமொன்று விழவும் அவனின் ஸ்பரிசம் உணர்ந்தவளாய் கையை தட்டிவிட்டாள்.


"போங்க! தனியாப் போய் தூங்குங்க. நான் உங்களுக்கு வேணாமில்ல? தேவையில்லல?" என விசும்பினாள்.


"நான் அப்படி சொன்னேனா?" என்றவன் திமிறியவளை அணைத்துக்கொண்டே,


"நீ இல்லாம என்னால முடியலடி. ஆமா சாயங்காலம் என் பேச்சைக் கேட்காம ஏன்டி கீழப்போன? என் கம்பெனில பத்து லட்சம் பேர் வேலைப் பார்க்கறாங்க. எல்லாரும் நான் சொல்றதை கேட்கறாங்க.. ஆனா நீ மட்டும் நான் சொல்றதை கேட்க மாட்ட. அப்படி தான? ம்?" என ஏகத்துக்கும் 'டி' போட்டான் விக்ரமன்.


"சரி, நான் தான் நீ என் பேச்சை கேட்காத கோபத்துல தள்ளியிருக்கேன்.. நீயாவது ஏன் இப்படி இருக்கீங்க? என்னை விட்டு ஏன் தள்ளிப் போறீங்க?னு என் சட்டையைப் பிடிச்சு கேட்கறியா? ம்ஹூம், என் பக்கத்துலக் கூட வராம நீ பாட்டுக்க இப்படி தனியா உட்கார்ந்து அழுதுக்கிட்டிருக்க? சரியான அழுமூஞ்சி பொண்டாட்டி டி நீ" என்றான்.


அவளோ, "அந்தப் பொண்ணு பாட்டுக்க வந்து கத்திட்டுப் போகுது. நீங்களும் அவளைப் பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறீங்க. வேற நான் என்ன தான் பண்றதாம்? என்ன சொன்னீங்க? அழுமூஞ்சி பொண்டாட்டியா? ஆமா, ஹாஸ்டெல்ல படிக்கிறப்போ இருந்தே நான் இப்படி தான். என் ப்ரெண்ட்ஸ் என் கூட பேசாம இருந்தாக் கூட இப்படி தான் அழுவேன்." என்று மூக்குறிஞ்சியவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் விக்ரமன்.


"இப்படிலாம் இருந்தா இந்த புவனில பொழைக்க முடியாதுடி என் அம்முக்குட்டி." என்றவனின் மடியில் நன்றாக அமர்ந்து கொண்டு கழுத்தில் கைகளைக் கோர்த்தவள், அவன் கூறியவற்றில் மற்றதை விட்டுவிட்டு அம்முக்குட்டியை மட்டும் பிடித்துக் கொண்டாள்.


"அதென்ன புதுசா அம்முக்குட்டி? ரெண்டு நாள் முன்னாடி பட்டுக்குட்டி. இப்போ அம்முக்குட்டியா?" என்றாள்.


"ஏய்! நான் என் பொண்டாட்டிய என்ன வேணா சொல்லி கூப்பிடுவேன். உனக்கு என்னடி வந்துச்சு?" என்று காதோரம் இழைந்தான் விக்ரமன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
"அப்புறம் நானும் உங்களை எக்குத் தப்பா செல்லப்பேர் வச்சிக் கூப்பிடுவேன். அப்புறம் நீங்க தாங்க மாட்டீங்க பார்த்துக்கோங்க" என்றவள் மிரட்டவும்,


"என்ன பேர் சொல்லிடி கூப்பிடுவ?" என கிறக்கமாய் கேட்டான் விக்ரமன்.


"ம்? அதுவந்து.. நான் சொன்னதுக்கப்புறம் என்னைய ஒண்ணும் செய்ய மாட்டிங்களே?"


"நான் செய்றதும் செய்யாம இருக்கறதும் நீ சொல்றதுல தான் இருக்கு. முதல்ல என்னன்னு சொல்லு?"


"அது வந்து.. அது வந்து.. அவசர ஆம்புலன்ஸ் நூத்தியெட்டு" என சொல்லி விட்டு ஓடுவதற்காக அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றவளை, மீண்டும் தன் கைச்சிறைக்குள்ளாகவே கொண்டுவந்து நிறுத்தியவன்,


"ஏன்டி அப்படி பேரு வச்ச?" என்று உறுமினான்.


"அய்யோ! விடுங்க. வலிக்குது" என்று நெளிந்தவள்,


தன் கைகளை அவன் தளர்த்தியதும், "அது உங்களோட எல்லா செயல்லயும் ஒரு வேகம் இருக்குமா? அதான்.." என்று இழுத்தாள்.


அவளை அப்படியா எனும் விதமாய் பார்த்தவன், "அப்போ வா! நம்ம மெதுவா ட்ரையல் பார்க்கலாம்." என்றதும்,


முடியாது என்று திமிறியவளை, அந்தக் கள்வன் கெஞ்சிக் கொஞ்சி இளக்கினான்.


இறுதியில் அவன் தொல்லை தாங்காமல் கேட்ட அனைத்தையும் தந்துவிட்டே மைவிழி மூடினாள் அதிதி.


*


அடுத்த வாரம் வரவிருக்கும் பொங்கல் விழாவிற்காக, இப்போதிலிருந்தே அனைவரும் தயராகத் தொடங்கினர். புதிதாக திருமணம் முடித்தவர்கள் தங்கள் குல தெய்வக் கோவிலின் முன் நின்று பொங்கல் இடுவது வழக்கம் தான் என்பதால் அதற்கான ஏற்பாட்டைத் துவங்கினார் நாச்சியம்மை.


பொங்கல் விழாவிற்கு நான்கு நாட்களுக்கு முன்பே வந்த கீர்த்தியின் பெற்றோரும், சுருதியின் பெற்றோரும் தங்களின் மகள்களுக்கான பொங்கல் சீர்களை வழங்கினர்.


ஜவுளி வியாபாரியான கீர்த்தியின் தந்தை அவளுக்கு பொங்கல் சீராக இருபது கட்டு கரும்பு, பத்து மூட்டை அரிசி, புத்தாடைகள் என தடபுடல் பண்ணியிருக்க, நகைக்கடை வியாபாரியான ஸ்ருதியின் தந்தை மூன்று வைர நகைப் பெட்டியை கொடுத்து ஆடம்பரம் பண்ணியிருந்தார்.


அவைகளைப் பார்த்த அதிதிக்கு திடீரென தன் பிறந்த வீட்டின் நினைப்பு வந்து நெஞ்சை அடைத்தது. உடனே கழிவறை ஓடிச்சென்று யாருக்கும் தெரியாமல் விக்கி விக்கி அழுதாள்.


அவளுக்கு யாரிடமும் சென்று தன் பிறந்த வீட்டிற்கும் இந்தக் குடும்பத்திற்கும் என்ன பகை என்று கேட்க துணிவில்லை. கேட்டால் எங்கே தன்னை காயப்படுத்தி விடுவார்களோ என்று பயம்.


பொங்கல் விழாவிற்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் வீட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் புத்தாடை வழங்கினார் நாச்சியம்மை. அதிதியை அழைத்து அவர் அவள் கையிலும் ஒரு பார்சலைக் கொடுக்க, அந்த பேதைப்பெண் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டாள்.


பொங்கலன்று வைகறையில், தன் மனைவியின் மொத்த எடையையும் தன் மேல் தாங்கிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த விக்ரமன், “கிர்ர்ர்”' என்ற அலார ஒலியில் கலைந்து நேரத்தைப் பார்த்தான். அது நான்கு எனக் காட்டியது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
'லூசு, நாலு மணிக்குப் போய் எதுக்கு அலாரம் வச்சிருக்கா?' எனத்தன் மனைவியை மனதில் அர்ச்சித்துக்கொண்டே அவன் படுத்திருக்க, அந்நேரம் அடித்த குளிர் காற்றில், என்னைக் காப்பாற்று விக்ரமா! என்று அவன் மார்பில் பதுங்கினாள் அதிதி.


அசைவில் அவளின் விழிப்பை அறிந்தவன் அவளின் காதில், "ஏன் நாலு மணிக்கு அலாரம் வச்சிருக்க?" எனக் கேட்க,


அடித்துப் பிடித்து எழுந்தவள், "நாலு மணி ஆகிடுச்சா?" என்றாள்.


"எப்பவோ ஆகிடுச்சு. இப்போ மணி அஞ்சு." எனவும்,


"ஐயோ! என்னங்க நீங்க?" என பதறி எழுந்தவள், வேகமாய் குளியலறை சென்று திரும்பவும், தானும் குளியலறைக்குள் புகுந்தான் விக்ரமன்.


பதினைந்து நிமிடங்களில் குளித்து முடித்து கையில்லாத வெள்ளை பனியனும், கறுப்பு நிற ட்ரவுசரும் அணிந்து தலையை துவட்டிக்கொண்டே வெளியில் வந்தான்.


அவன் ஐந்தரை மணி வைகறைக் காற்றில் நடுங்கியபடியே முந்தானை மடிப்பை எடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த தன் மனைவியை அணுகி, "பொறுமையா எடு. ஏன் இப்படி பதட்டப்படுற?" எனும் போதே வார்த்தையை பாதியில் நிறுத்தினான்.


ஆம், அவன் அப்போது தான் கவனித்தான் அவளது முன்புற முரசுகொட்டும் அழகை.


அவன் பார்வையின் பொருள் அறிந்தவள் ரவிக்கையின் தோள்பட்டையை மேலேற்றி விட்டுக்கொண்டே, "இல்லங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அத்த இந்த சேலையைக் கொடுத்தாங்க. அந்த டெய்லர் அக்கா நிறைய ஆர்டர் இருக்குனு ப்ளவுஸ் தைக்க முடியாதுனு சொன்னப்போ, ராதாம்மா தான் கட்டாயப்படுத்தி தைக்க வச்சாங்க. நல்லா டிசைன் வச்சு, பாசிமணி எல்லாம் கோர்த்து தச்சவங்க என் சட்டை அளவுக்கு தைக்காம வேற யாரு சட்டை அளவுக்கோ தச்சு வச்சுட்டாங்க. அதான் முன்னாடி கழுத்து இவ்வளவு இறங்கிப் போச்சு. பின்னாடி இருக்க கயித்த இறுக்கிக் கட்டி விடுங்க. ப்ளீஸ்! அப்போ தான் முன்னாடி இறங்காது" எனத் திரும்பி நின்றாள்.


அவளின் பேச்சில் சுதாரித்தவன், "எப்பப் பார்த்தாலும் உனக்கு மூணு முடிச்சு போடுறதே எனக்கு வேலையாப் போச்சு" என சலித்துக்கொண்டே, அந்த மூன்று முடிச்சுகளைப் போட்டுவிட்டான்.


பின், தன்னை நோக்கி திரும்பியவளிடம், "இன்னைக்கு நீ எங்க இருந்தாலும் என்னோட கண்ணு உன்னை கண்டுபிடிச்சிடும்டி" என்றான்.


அதற்கு வெட்கப்பட்டவளைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தவன், "ஏன்னா உன் புடவை கலர் அப்படி. பஞ்சு மிட்டாய் கலர்ல ஒரு புடவை. கண்ணை அப்படியே தக தகனு பறிச்சு எரிக்குதுல" எனவும், எக்கி அவன் தலையில் குட்டி வைத்தவள் வேகமாக கிளம்பி கீழே சென்றாள்.


கீர்த்தியின் அறையில் கீழே படுத்து கை கால்களை உதறி அழும் ப்ரஜீனைக் கண்டு பதறி அவள், "என்னாச்சு கீர்த்திக்கா? ஏன் ப்ரஜூ இப்படி தரைல படுத்து அழறான்?" எனக் கேட்க,


நிஹாரிகாவுக்கு பட்டுப்பாவாடை அணிவித்துக் கொண்டிருந்தவள், "ஆங்? ஐயாவுக்கு அவரு போடுற பச்சை சட்டைக்கு மேட்ச்சா பச்சை ஜட்டி தான் வேணுமாம் அதிதி. அதைப் போட்டப்புறம் தான் துரை இந்த வேஷ்டியைக் கட்டுவாராம்" என அந்த சிறிய வேஷ்டியை தன் மகனை நோக்கி தூக்கியெறிந்தாள் கீர்த்தி.


அவனைத் தூக்கிய அதிதி, "இப்போ உன் பச்சை ஜட்டியை யாருடா பார்க்கப் போறாங்க? நீ இந்த சின்ன வேஷ்டியத்தானே கட்டப் போற? எந்த ஜட்டிய போட்டா என்ன?" எனக் கேட்கவும்,


அவள் தோளில் முகம் புதைத்திருந்தவன், "ம்? போங்க சித்தி. எனக்கு அந்த பச்சை ஜட்டி தான் வேணும்" என ஒற்றை காலில் பிடிவாதமாய் நின்றான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
"சரி விடு அதிதி. நம்ம எல்லாரும் கோவிலுக்குப் போகலாம். அவன் மட்டும் தனியா இங்க கிடக்கட்டும்." என கீர்த்தி சொல்லவும், பதறிய ப்ரஜீன் வேறு வழியில்லாமல் தன் தாய் போட்டு விட்ட சிவப்பு நிற ஜட்டியுடன் வேஷ்டி அணிந்து வெளியே வந்தான்.


அனைவரும் ஒரு சேரக் கிளம்பி காரில் தங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்றனர்.


அதிதி, கீர்த்தி, ஸ்ருதி என அனைவரும் ரங்கோலியிட்ட பின், நாச்சியம்மையின் குடும்பத்தின் சார்பில் மூன்று பொங்கல் வைக்கப்பட்டது.


நாச்சியம்மையின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அந்த பொங்கல் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


ராதா தன் வயிற்றில் பிறவாத மூன்று மகள்களுக்கும் அறிவுரை வழங்கிக்கொண்டு அவர்களின் அருகிலேயே நின்று கொண்டார்.


முதன்முதலாக இவ்வாறு ஒரு அடுப்படியில் அமர்ந்து சமைப்பதால் பழக்கமில்லாத அதிதிக்கு புகையில் கண்கள் கலங்கின.


ராதா பக்கத்திலிருந்த கீர்த்தி, ஸ்ருதிக்கு உதவிக் கொண்டிருந்ததால் இவளுக்கு உதவி புரிய இயலவில்லை.


அவளின் கஷ்டத்தை உணர்ந்த விக்ரமன், யாரையும் கண்டுகொள்ளாமல் தானே தனது வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவளின் அருகில் அமர்ந்து, அடுப்பு சரியாக எரிய உதவி புரிந்தான்.


அனைவரின் பொங்கலும் இறைவனுக்கு படைக்கப்பட்டு, பின் அங்கிருந்தவர்களுக்கு பகிரப்பட்டது.


அதிதி கையில் சிறு தீக்காயம் பட்டதைப் பார்த்த விக்ரமன் தானே அவளுக்குப் பொங்கலை எடுத்து ஊட்டிவிட, அவர்களை கவனித்துக் கொண்டிருந்த நாச்சியம்மையின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் புகையத் துவங்கினார்.


"என்ன நாச்சியம்மா? உன் தங்கச்சி மகனை அவம் பொண்டாட்டி தன் முந்தானையில முடிஞ்சி வச்சிருக்கா போல? அவளை இந்தத் தாங்கு தாங்குறான்?" எனக் கேட்கவும்,


தானும் அவர்களைப் பார்த்தவர், "அவ முந்தானைல என்ன? தன் தலை முடியிலேயே முடிஞ்சி வச்சிருந்தாலும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான் என் புள்ள" என்று பெருமை பேசினார்.


ஆனால், பிற்காலத்தில் தான் நம்பும் தன் தங்கை மகனே கேள்விக் கணைகளால் தன்னை திணறடிக்கப் போவதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.


"ஆமா நாச்சியம்மா வீட்டுல தான் உன் தங்கச்சி அலமேலுவோட நகைகள் எல்லாம் இருக்குமே? அதை இவளுக்கு கொடுக்கலையா? புள்ள வெறும் கழுத்தோட வந்திருக்கு?" என்றதும்,


"இப்படி ஒண்ணும் போடாம இருக்கறது தான் இப்ப நாகரீகமாம் அண்ணி. அதான் எல்லாம் இருந்தும் ஒண்ணும் போடாம இருக்கா. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். நம்ம சொல்றதை இப்ப இருக்க இளவட்டம் எங்க கேட்குது?" என பொய்யுரைத்து சமாளித்து வைத்தார் நாச்சியம்மை.


"படிச்ச புள்ள, நல்லா கண்ணுக்கு அடக்கமாக புடவை கட்டிட்டு வரும்னு பார்த்தா, தக தகன்னு என்னவோ ஆட்டக்காரி கணக்கா இல்ல புடவை கட்டிட்டு வந்திருக்கா" என இன்னொருவர் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல் கேட்கவும்,


அருகில் தன் அண்ணன் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த கௌதமன், "இங்க ஒருத்தன் இருபத்தொன்பது வயசாகியும் தனியா இருக்கானே, அவனுக்கு ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலைனு ஒன்னாவது கேட்குதா பாரு? எவ என்ன போட்டிருக்கான்னு புறணி பேசுறதுலயே எல்லாம் குறியா இருக்குதுகளே" எனத் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அவனின் கூற்றில் அவனது இரண்டு அண்ணன்மார்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.


அவர்களின் கேள்விகளைக் கேட்டு பொறுக்க முடியாத நாச்சியம்மை, 'பொங்கல் தின்னுட்டு போறாளுகளான்னு பாரேன். கேள்வி மேல கேள்வியாக் கேட்டு கொல்றாளுக' என மனதில் நினைத்துக்கொண்டே, "நானும் எவ்வளவோ நல்ல நல்ல கலர்ல எல்லாம் புடவையை எடுத்து காட்டினேன் அண்ணி. இப்படி கலர்ல கட்டினா தான் நவீன காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கும்னு தேடிப்பிடிச்சு எடுத்தா. விக்ரமனும் வேண்டாம் நல்லாயில்ல, வேற கலர்ல எடுனு சொன்னான். ஆனா இந்தக்குட்டி கேட்கவேயில்ல" என்று கதை விடவும்,


"என்ன நாச்சியம்மா சொல்ற? அவன் பேச்சை இந்தப் புள்ள கேட்காதா? அப்போ எப்போ அத்துட்டு அப்பன் வீட்டுக்கு போவான்னு தெரியலனு சொல்லு. அவளே தன் தலையில் மண்ணள்ளி போட்டுக்கிருவா போலயிருக்கே. என்ன புள்ளையோ?" என வந்திருந்த ஒருவர் நாச்சியம்மையின் திட்டபடி அங்கலாய்த்தார்.


அதிதி தான் வைத்தப் பொங்கலை மரத்தின் பின்புறம் உட்கார்ந்திருந்த சில முதியவர்களிடம் கொடுத்துவிட்டு திரும்பிய போது, அவளைப் பார்த்த ஒரு பெண்மணி, "என்ன தாயி நல்லா இருக்கியா?" என்று கேட்க,


“நீங்க யாரு?” எனத் திரு திருவென விழித்தவளைக் கண்டு, "என்ன நாச்சியம்மா? உன் மருமவ இந்த முழி முழிக்கிறா. நான் யாருன்னு சொல்லு இவளுக்கு!" என்றார் அந்தப் பெண்மணி.


"அடடே! வாங்க அண்ணி. அண்ணா வரலையா? நீங்க வர ஏன் இவ்ளோ நேரமாச்சி?" என நலம் விசாரித்தவர்,


பின் அதிதியிடம், "இவங்க பேரு அன்னக்கொடி. எனக்கு அண்ணி முறை. உனக்கு பெரியம்மா முறை வரும்." எனவும்,


"வாங்க பெரியம்மா. நல்லாயிருக்கீங்களா?" என்றாள் அதிதி.


அவள் முறை வைத்து கூப்பிட்டதில் மனம் பூரித்துப் போனவர், "எனக்கென்ன தாயி? நல்லா இருக்கேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி பார்த்தது. இப்போ தான் பாக்கேன். அம்மாடி! இப்போ தான் புள்ள முகமே பூரிச்சுப்போய் கிடக்கு" என அவள் முகத்தை வழித்து நெட்டி முறித்தார்.


பின், "விக்ரமன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா தாயி? நான் ஒரு கேனச்சிறுக்கி. உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே விக்ரமனோட அனுசரனைப் பத்தி. உன் வீட்ல இருக்கறவங்கக் கிட்டயிருந்து தகவல் ஏதாவது வந்துச்சா தாயி?" எனக் கேட்கவும், கேவி கேவி அழுதாள் அதிதி.


அழுகையினூடே தன்னைப் பார்த்து 'இல்லை' என தலையாட்டியவளின் கரம் பிடித்து, "கவலப்படாத தாயி. சீக்கிரமே பேசிடுவாங்க. அதான் தை பொறந்திருச்சில்ல? இனி வழியும் பிறக்கும்" என்றவரை ஆச்சரியமாகப் பார்த்த அதிதி, திரும்பி அங்கு கொலுவீற்றிருந்த அம்மனை மனமுருக வேண்டிக் கொண்டாள்.


இறுதியில் அனைவரும் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டனர். வீட்டிற்கு வந்த ராதாவிற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


வீட்டிற்குள் நுழைந்த ராதா வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன் கணவர் ஹரியைக் கண்டு மகிழ்ச்சியில் உறைந்து போனார்.


பின்னால் வந்த அனைவரும் அவரை நலம் விசாரிக்க தன்னிலை மீண்ட ராதா, "என்னங்க! வேலை இருக்கு. இப்போதைக்கு எங்கயும் நகர முடியாதுனு சொன்னீங்க? இப்போ சர்ப்ரைஸா இங்க வந்து நிற்கறீங்க?" என ஆனந்த அதிர்ச்சியில் வினவவும்,


"நீ பொங்கல் சாப்பிட்டியா?" என சம்பந்தமில்லாமல் கேட்டார் அவர்.


"நீங்க இல்லாம நான் என்னைக்குங்க பொங்கல் கொண்டாடியிருக்கேன்?" என கண்கள் கலங்கிய ராதாவை, இவ்வளவு நேரம் வற்புறுத்தியும் இவர் பொங்கல் உண்ணாததற்கு காரணம் தன் கணவர் அருகில் இல்லாதது தானா? என அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர்.


"நீ நான் இல்லாம எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டேனு தெரியும். அதான் நாச்சியக்கா நேத்து போன் பண்ணி, நீ வரலைன்னதும் உன் பொண்டாட்டி முகமே தொங்கிப் போச்சு. உடனே வாடானு சொன்னதும் முக்கியமான வேலையெல்லாம் முடிச்சி கொடுத்துட்டு, உடனே கிளம்பி வந்துட்டேன்." என ஹரி கூறவும், அதைக்கேட்ட அதிதிக்கு தான் நாச்சியம்மை மேல் வைத்த மதிப்பு பன்மடங்காகியது.

ஆனால், அவள் விஷயத்தில் இந்த ஏங்குதலையெல்லாம் அவர் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை எந்த அசரீரியும் அதிதிக்கு உரைக்கவில்லை, பாவம்!
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்க வேண்டாம் குண்டுமல்லீஸ்❤️
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom