Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
கீழே அனைவரும் எப்போதும் உணவருந்தும் நேரத்திற்கு சரியாக டைனிங் டேபிளை வந்தடைந்தனர். அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்கு செல்லவிருந்த நேரத்தில், விக்ரமனை மட்டும் தனியே அழைத்த நாச்சியம்மை தன்னறையில் காத்திருக்குமாறு கூறினார்.


பின், ராதாவின் அருகில் சென்றவர் மெல்லிய குரலில், "அந்த புதுசா வந்திருக்கற குட்டிக்கு சாப்பாடு ஏதாவது கொடுத்து நம்ம விக்ரமன் ரூம்ல விட்டிரு" எனவும், சரியென்ற ராதா சமையலறை நோக்கிச் சென்றார்.


அவர் சென்றவுடன் விக்ரமனிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காக தன் அறை நோக்கி புறப்பட்டார் நாச்சியம்மை.


அதிதி, ஜானகியம்மாளிடம் கேட்டக் கேள்விகளை எல்லாம் மாடிப்படியில் ஏறும்போதே கேட்டுவிட்ட ராதா, ஜானகியம்மாள் எதையும் உளறி விடுவாரோ? என்று வேகமாக எட்டுக்களை எடுத்து வைத்தார்.


அவர்களை சமீபித்ததும், "அட! ஜானகி நீ இங்க தான் இருக்கியா? நேரமாயிடுச்சிப் பாரு. வீட்டுக்கு கிளம்பல?" என அவரை அனுப்பி வைத்துவிட்டு, ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளிடம் சென்று, அவள் தலையை மெதுவாய் வருடியபடியே, "ம், சாப்பிடுமா." எனத் தன் கையிலிருந்த தட்டை அவளிடம் நீட்டினார்.


அதனை வாங்கத் தயங்கியவளை, "இதப்பாருடா, நான் உனக்கு அம்மா மாதிரி. என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்? இனிமே நீ என்னை ராதாம்மானு தான் கூப்பிடனும், சரியா? ம் சாப்பிடுடா" எனக்கூறி அவளை சாப்பிட வைக்க முயன்றார்.


உணவை கையில் வாங்கியவள் சாப்பிடாமல் அலைந்துகொண்டே இருந்தாள்.


"விக்ரமன் உன்கிட்ட சரியா பேசலைனு குழப்பத்துல இருக்கியாடா?" எனக் கேட்கவும், உணவை அலைவதை நிறுத்திவிட்டு, பாவமாய் ஆமென தலையசைத்தாள் அதிதி.


"விக்ரமனோட அம்மாவும், அப்பாவும் இறந்தப்போ அவனுக்கு வயசு ஏழுடா. எப்பவும் குறும்பு பண்ணி, அலுமேலு அண்ணியை அலைய விட்டுக்கிட்டே இருப்பான். அப்போல்லாம் வீடே கலகலனு இருக்கும். அண்ணணும் அண்ணியும் இறந்ததுக்கப்பறம் புள்ள பாவம் ரொம்ப துவண்டு போயிடுச்சி. அதான் யார்கிட்டயும் பேசாம உர்ருனு ஆகிட்டான். நீ தான்டா இனிமே அவனை ஒரு தாயாவும் தாரமாவும் இருந்துப் பார்த்துக்கணும். என் பொண்ணு மாயாவுக்கு அவனை விட அஞ்சு வயசு அதிகம். இல்லைனா இப்ப உன் புருஷன் உனக்கு கிடைச்சிருக்க மாட்டான்." என சிரித்தவர், அவள் சாப்பிட்டு முடித்தவுடன் விக்ரமன் அறையைக் காண்பித்து, “தைரியமா போடா” என்றார்.


பயந்துக்கொண்டே அறையினுள் தன் காலடியை எடுத்து வைத்த அதிதி, உள்ளே சென்றதும் அறையை நோட்டமிட்டாள். பால்கனியுடன் சேர்த்து முழுவதும் நவீன மயமாக்கப்பட்டதாக இருந்தது அந்த அறை.


அந்த அறையின் ஓரத்தில் இரண்டு கதவுகள் தென்பட, ஒவ்வொன்றாக திறந்துப் பார்த்தாள். அதில் ஒன்று உடற்பயிற்சி செய்யத் தேவையான உபகரணங்களுடன் கூடிய ஜிம். மற்றொன்று பெரிய பாத்டப் மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய குளியலறை. அனைத்தையும் பார்த்தவள், அடுத்து என்ன செய்வதென்றுத் தெரியாமல் பால்கனி சென்று அங்குள்ள திண்டில் அமர்ந்து, வானத்தையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.


எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியாது. காலையிலிருந்து தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். தற்போது அவள் எண்ணம் முழுவதும் அவள் தாத்தாக் கூறிய வார்த்தைகளிலேயே சுழன்றுக் கொண்டிருந்தது.


ஒரு வாரத்திற்கு முன்பு வாட்ஸப்பில் ஒரு போட்டோவை அனுப்பி, இவர் தான் மாப்பிள்ளை. இவரை நீ திருமணம் செய்து கொண்டால் என் பிஸினஸ் மற்றும் அரசியல் வாழ்விற்கு உதவியாக இருக்கும் என்று ஒலிக்குறிப்பு அனுப்பியிருந்த தாத்தா, இன்று காலையில் வேறு ஒருவரிடம் தன்னை ஒப்படைத்ததை எண்ணி, ஏன்? என யோசித்துக் கொண்டிருந்தாள்.


காரணம் தெரியாவிடினும் தன் வீட்டைப் போலவே இங்குள்ளவர்களும் கூட்டுக் குடும்பமாக வாழ்வதை நினைத்து மகிழ்ந்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
பின், 'இது தான் என் குடும்பம். இங்க தான் நான் வாழணும்' எனத் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டு, நட்சத்திரமாக மாறிய தனது அன்னையிடம் தன் வாழ்வை மகிழ்வுறச் செய்ய வேண்டிக்கொண்டிருந்தாள்.


அப்போது, "உன்னை யாரு இங்க அழைச்சிட்டு வந்தா?" என்ற விக்ரமனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள் அதிதி.


நாச்சியம்மையின் அறையிலிருந்து வெளியேறிய விக்ரமன், நேரே மொட்டைமாடிக்குச் சென்று அவளை காணாமல் வலைவீசித் தேடினான்.


எவ்வளவு தேடியும் அங்கு அவள் கிடைக்காமல் போகவும், யோசனையுடன் அறைக்குத் திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் அவனது பால்கனியிலேயே காத்திருந்தாள் அதிதி.


பால்கனித் திண்டில் அமர்ந்து நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தவன், "உன்னை யாரு இங்க அழைச்சிட்டு வந்தா?" என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.


உடனே விதிர்த்துத் திரும்பியவளை, "எதுக்கு இப்போ பதட்டமாகற? நான் தான்! மாடியில உன்னைக் காணாம இவ்ளோ நேரமா தேடிட்டு வர்றேன் தெரியுமா? ஆமா உள்ள உட்காராம இந்தப் பனிக்காத்துல உட்கார்ந்து என்னப் பண்ணிக்கிட்டிருக்க?" எனக் கேட்கவும்,


கையில்லாத பனியனும் ஷார்ட்ஷும் அணிந்திருந்தவனைப் பார்த்து திருதிருவென விழித்தவள், "அது.. அது.." என்று வார்த்தை வராமல் திணறினாள்.


என்ன நினைத்தானோ தன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவளை அணைத்துத் தூக்கி தரையில் நிறுத்தினான். பின், மெல்லிய குரலில் இனிமையாகப் பாடத் தொடங்கினான்.


"மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ?
அன்பே! என் அன்பே!


தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே! என் கண்ணே!

பூபாளமே கூடாதெனும்.
வானம் உண்டோ சொல்!"


என்று அவன் பாடிய பாடலைக் கேட்டு தன் கயல்விழிகளை அகல விரித்தவளைக் கண்டு, “சுத்தம்” என தன் தலையை ஆட்டியவன், "டேய் விக்கி, உன் நிலைமை ரொம்ப மோசம்டா" என வாய்விட்டேப் புலம்பினான்.


பின், "ம்ஹீம், இதெல்லாம் சரிபட்டு வராது. நீ இப்படியே என்னைப் பார்த்துக்கிட்டு இரு." என்று சொல்லிக்கொண்டே அவளை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு கட்டிலில் போய் விட்டான்.


சட்டென்று தன் மேல் கவிழ்ந்தவனை தடுக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கினாள் அதிதி. அவனின் அவசரம் அவளுக்கு பதட்டத்தை தந்தது.


கழுத்தில் புதைந்த அவன் முகத்தை தன் முகம் நோக்கி தூக்கியவள் அவன் தாபம் நிறைந்த விழிகளால் பேச்சு மூச்சற்றுப்போனாள்.


ஏதோ கேட்க வந்துவிட்டு அவனது விரல்கள் தன்னுடலில் ஆடிய நாட்டியத்தில் தான் கூற வந்ததையே மறந்தாள். இல்லை மறக்கச் செய்தான் அந்த மாயக்காரன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அவள் சூடியிருந்த மல்லிகையின் மணத்தில் மயங்கியவன், அவளின் பட்டுக்கன்னத்தில் அழுத்தமாக தன்னிதழைப் பதித்தான்.


கன்னத்தில் துவங்கிய அந்த இதழ் பயணமானது காதோரத்தில் வந்து முடிவடைந்த போது, ஏதோ அவள் ஆமாமென்று சொன்னால் உடனே அவளிலிருந்து எழுபவன் போல, "நான் தொடுறது உனக்கு அருவருப்பா இருக்கா?" என்று கேட்டான் விக்ரமன்.


அதற்கு அவள் இல்லையென மௌனமாக தலையாட்டினாள்.


அதிதியின் மனம் முழுவதும், தன் கணவன் தனக்கே உரிமையானவன், தான் அவனுக்கு மட்டுமே சொந்தமானவள் எனும் எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.


"அப்போ உனக்கு இதுல சம்மதம் தானே?" என மறுபடியும் உறுதி செய்துகொள்ள அவன் கேட்க, ஆமாமென விழிகளசைத்து வெட்கத்தில் முகம் மூடிக்கொண்டாள் அதிதி.


அவளின் சம்மதத்தில் தைரியம் வரப்பெற்றவன் புன்னகையை தன் இதழில் தவழ விட்டு, பின் தன் இதழ்களை அவள் இதழ்களுக்குள் தவழ விட்டான்.


நீண்ட நெடிய முத்தத்திற்குப் பின் விலகியவன் தாலி தவிர மற்ற அனைத்து நகைகளையும் கழற்றும் சாக்கில் அவ்விடங்களில் மென்முத்தம் பதித்தான்.


அடுத்த கட்டமாய் அவன் வேகமாக முந்தானையை இழுக்கப் போக, "அய்யோ! சேலை கிழியப் போகுது" என பதறித் தடுத்தாள் அதிதி.


"ஜூவல்ஸ் கழட்டும் போதே சேப்டி பின்னும் கழட்டிட்டேன்" என்றவன் விஷமமாய் புன்னகைக்க, வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை.


"சரியான கேடி நீங்க" என்றவள் அலட்டிக்கொள்ள,


"ம்ஹூம், நான் சரியான வேட்டைக்காரன்" என்று மறுதலித்தவன் சொல்லியது போலவே அவளை வேட்டையாடவும் தொடங்கினான்.


மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் அவளின் "ம்ம்ம்… ம்ஹூம்" சத்தத்திற்குக் கட்டுப்பட்டான் அந்த மந்திரவாதி.


எக்கச்சக்க பல் தடங்களை அவளுடலில் பதித்து கூடலுக்கு சான்று உண்டாக்கியவனை, தானும் தன் வளையல் மற்றும் கொழுசால் கீறி பிரபஞ்ச மனைவிகளுக்குரிய கடமையாய் தன் கணவனை பழிவாங்கினாள் அதிதி.


பால்கனி வழியே இவர்களைப் பார்த்திருந்த சந்திரன், விக்ரமன் தன் மேனகையுடன் இணைந்துவிட்ட கோபத்தில் முகில் எனும் திரையிழுத்துச் சென்றுவிட்டான்.


அனைத்தும் துறந்தால் மோட்சம் அடையலாம். அதிதியும் தன் அச்சம், மடம், நாணம், ஆடை என அனைத்தையும் துறந்தாள். ஆனால், மோட்சம் பெற்றதென்னவோ விக்ரமன் தான்.


இறுதியில் ஜீவனுக்குள் ஜீவன் சேர்ந்த களைப்பில் இருவரும் கண்ணயர, இயற்கை தன் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தது. மூன்று மணியளவில் வீசிய மார்கழி மாத பனி வாடைக் காற்று, காமம் கடந்த காதல் அணைப்பை இன்னும் அதிகப்படுத்தியது.


என்ன வேண்டுமோ எடுத்துக்கொள் என இரவில் அவன் கைகளில் கிறங்கிக் கிடந்தவள், காலையில் எழுந்தவுடன் தன்னவனின் நெஞ்சில் நாடி பதித்து, "மாமூ" என ஆசையாக அழைத்துப் பார்த்தாள்.


அதில் லேசாக நெளிந்து கொடுத்தான் விக்ரமன். விழித்து விடுவானோ எனப் பயந்தவள் பின், நேரமாகிவிட்டதென பரபரப்பாய் குளியலறைக்குள் புகுந்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
குளித்து முடித்து தலையில் ஒரு துண்டும், உடலில் ஒரு துண்டுமாய் சுற்றிக்கொண்டு வந்தவளை சாசுவதமாய் பிடித்திழுத்து சுவற்றில் சாய்த்தான் அந்தக் கள்ளன். தலை கலைந்து தூக்கக் கலக்கத்தில் பெட்ஷீட்டை தன் இடுப்பில் முடிந்திருந்தவனை காண முடியாமல் நாணத்தில் தலை குனிந்தாள் அதிதி.


அவளின் முகத்தைக் காண முடியாத ஏமாற்றத்தில் கீழிறங்கிய அவனின் சுட்டுவிழிகள், பள்ளத்தாக்கில் சொகுசாக அமர்ந்திருந்த அவளின் தாலிச்சரடைப் பார்த்தது.


"இந்தத் தாலிச்சரடை கொஞ்சம் மேல ஏத்தி கட்டியிருக்கணும். இல்லக் கொஞ்சம் கீழ இறக்கி கட்டியிருக்கணும்" என்றதும்,


"ஏன்?" என்றாள் நாணமாக.


"இல்ல, நான் இருக்க வேண்டிய இடத்துல, இனி இருபத்தினாலு மணி நேரமும் இது இருக்க போகுதில்ல? அதான்." என்றதும், அவனின் அந்த கதிர்வீச்சுப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் வெட்கத்தில் தலை குனிந்தாள் அதிதி.


குனிந்திருந்த அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, அவன் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவளை, "ஓய்! என்ன? உன் பேர் என்னனு கேட்டா இப்படி முழிக்கற? என்ன எல்லாம் ஒரே நைட்டுல மறந்திருச்சா?" என்று கேலி செய்தான் விக்ரமன்.


அதிதி, "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆமா என் பேரே உங்களுக்குத் தெரியாதா? உண்மையாகத் தான் சொல்றீங்களா?" என அவஸ்தையுடன் கேட்டாள்.


"ஆமா, தெரியாது. அது சரி, இப்பப் பேரா முக்கியம்." என்று கேட்டுக்கொண்டே இதழ்முத்தம் பதிக்க வந்தவன் சற்று நிதானித்தான்.


"இப்பக் கொடுத்தா அது டர்டி கிஸ் ஆகிடும்.‌ அப்புறமா வந்து கொடுக்கறேன்." எனக்கூறி அவளுடைய நெற்றியில் தன் இதழை மெதுவாக ஒற்றி எடுத்துவிட்டு,


"உனக்கு எப்போ உன்னைப் பத்தி சொல்லத் தோணுதோ அப்போ சொல்லு. ஆனா இனிமே இப்படி ஒரு கோலத்துல என் முன்னாடி நின்னா ஆகப்போற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல." என விசிலடித்துக்கொண்டே குளியலறை சென்றான்.


தன் பெட்டியிலிருந்து மஞ்சள் நிற சில்க் காட்டன் புடவையை கட்டிக்கொண்டவள், முடியை தளர்வாகப் பின்னி, முகத்தில் மிதமாக ஒப்பனையுடன் கீழே பூஜையறைக்குச் சென்றாள்.


மனமுருக கிருஷ்ணனை வேண்டிக் கொண்டிருந்தவளின் அருகில் கேட்ட சிரிப்புச் சத்தத்தில், கண் திறந்துப் பார்த்தாள். அவ்வீட்டீன் வாண்டுகள் தான் வரிசையாக நின்றிருந்தனர்.


அதிதி, "குளிக்காமல் பூஜை ரூமுக்கு வரலாமா?" என்று கண்டித்தாள் அவ்வாண்டுகளை.


உடனே நிஹாரிகா, "இல்ல சித்தி, நான் குளிச்சிட்டேன். தம்பி தான் இன்னும் குளிக்கல" எனவும்,


குட்டி வாண்டு கிஷோர், "சித்தி நானும் கூச்சிட்டேன். ப்ரஜு அண்ணா தான் பேட்பாய்." என ப்ரஜீனை மாட்டிவிட்டான்.


ப்ரஜீன், "இல்ல சித்தி, நான் குளிக்க போனப்போ டிவியில சின்ஷான் போட்டுட்டாங்களா? அதான் குளிக்கப் போகல." என தவறு தன் மீது இல்லை என தன் கையை ஆட்டி ஆட்டி கூறினான்.


அவனின் அந்த கொஞ்சல் பேச்சை ரசித்தவள் அனைவரின் நெற்றியிலும் குங்குமமிட்டு, "ப்ரஜூ குட்டி, நீங்க குட்பாய் தானே?" எனக்கேட்க, அவன் ஆமாமென தலையாட்டினான்.


"அப்பப் போய் குளிங்க பார்ப்போம்" என அவனை நிஹாரிகாவுடன் கீர்த்தியின் அறைக்கு அனுப்பி வைத்தவள் பின், கிஷோரை தன் கையில் தூக்கிக்கொண்டு, "பட்டுக்குட்டி பால் குடிச்சீங்களா?" எனக் கேட்டாள்.


"இல்லை" என தன் உதட்டை பிதுக்கி கையை விரித்தவனை,


"அச்சோ! தங்கம் இன்னும் பால் குடிக்கலையா? சித்தி பால் ஆத்தி தர்றேன்" என அவள் கூறிக் கொண்டிருந்த போதே அவளின் கையிலிருந்து குழந்தையை வெடுக்கென்று பிடிங்கினாள் ஸ்ருதி.


அதிதியை முறைத்துக் கொண்டே, "டேய்! நான் உன்னை ராதா பாட்டிக்கிட்ட தானே போக சொன்னேன்? இங்க என்னடா பண்ற?" என அவனைத் திட்டிக்கொண்டே இழுத்துச் சென்றாள்.


ஸ்ருதி வெடுக்கென்று குழந்தையைப் பிடிங்கியதில் வருத்தம் கொண்டவள் சமையலறை நோக்கிச் சென்றாள்.


காபி போட்டுத் திரும்பிய ராதா, அதிதியைப் கண்டதும் வாம்மாயெனக் கூறி, அவளுடைய கையில் இரண்டு காபி கோப்பைகள் அடங்கிய டிரேயைக் கொடுத்தார்.


பின், அவளின் முக மலர்ச்சியைப் பார்த்து அவர் புன்னகைக்க பதிலுக்கு வெட்கப் புன்னகை சிந்தியவள், காபி டிரேயை அவளுடைய அறைக்கு எடுத்துச் சென்றுவிட்டாள்.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
எனது புத்தகங்கள் பற்றிய விபரங்கள்:

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 4


அறைக்குள் நுழைந்ததும் அதிதி கண்டது கழுத்தில் டை கட்டிக் கொண்டிருந்த தன் கணவனைத் தான். நேராக அவனிடம் சென்று காபி கோப்பையைக் கொடுத்தாள்.


அதை மிடறு மிடறாக குடித்துக்கொண்டே அவளை பார்வையிட்டவன், "குங்குமம் வைக்கலையா?" என்றான்.


அப்போது தான், நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்க மறந்து விட்டோம் என்பதை உணர்ந்தவள், தன் நாக்கை கடித்தாள்.


அவளின் முகபாவனையில் சிரித்தவன், மேஜை மேலிருந்த குங்குமச் சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து, அவள் நெற்றி வகிட்டில் வைத்து விட்டான்.


அப்படியே அவளுடைய நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவளை அருகே இழுத்தவன், தன் நெஞ்சில் மோதி நின்றவளை தன்னுயரத்துக்குத் தூக்கி அவள் ரோஜா இதழ்களை நுகர்ந்தான்.


பின், தன் கைப்பேசியின் அலார ஒலியில் கலைந்து தான் அவளை விடுவித்தான்.


தன் சட்டையின் கசங்கல்களை நீவிவிட்டுக் கொண்டே அவன், "மீதியை நைட் வந்து கன்டினியூ பண்றேன்" என கையில் லேப்டாப் அடங்கிய பையுடன் வெளியேற, அவன் பின்னேயே அதிதியும் கீழிறங்கி வந்தாள்.


பின்னால் வந்த அவளை நாச்சியம்மை லேசாக எட்டிப் பார்த்தார்.


அவள் முகத்தில் தெரிந்த பூரிப்பைக் கண்டு தன் முகத்தில் எள்ளல் புன்னகை கொண்டவர், 'இது எவ்வளவு தூரத்துக்குப் போகுதுன்னு நானும் பார்க்கறேன் குட்டி' என வன்மமாக நினைத்துக் கொண்டார்.


தன் மகன்களிடம், "நீங்க மூணு பேரும் வட்டி கணக்கைப் பார்த்து, எவனெவன் செட்டில் பண்ணனும்னு கலெக்சன் பண்ணிட்டு வாங்கடா!" என்று அன்றைக்கான வேலைகளை ஒப்படைத்தார்.


பின், விக்ரமனிடம் திரும்பி, "விக்ரமா, நீ இன்னைக்கு உன் பிசினஸை கவனிப்பா. லண்டன்ல பார்த்த தொழிலையே இங்கயும் பார்க்கலாம்னு நேத்து சொன்ன இல்ல? அதுக்கான ஏற்பாட்டை பாரு" என்றவர்,


"இன்னும் ரெண்டு நாளைக்கு தான் உன் மாமங்காரன் ஹரி இங்க இருப்பான். அதுக்கப்புறம் எப்பவும் போல மும்பைக்கு கிளம்பிடுவான். அதனால நானும் ஹரியும் மும்பையோட கணக்கு வழக்குகளை எல்லாம் இன்னைக்கு வீட்லயிருந்தே பார்த்து முடிச்சிடலாம்னு இருக்கோம். எல்லாரும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்திருங்க என்ன?" என்ற நாச்சியம்மையின் இறுதி கட்டளை அன்புக் கட்டளையாக இருந்தது.


அவரவர் தங்களது வேலைகளை கவனிக்கச் சென்றுவிட, நேராக அதிதியிடம் சென்றார் நாச்சியம்மை.


"ஏய் குட்டி! இன்னைக்கு மதியம் நீ தான் எல்லாருக்கும் சமைக்கணும். மதிய சாப்பாடு நீதான் ரெடி பண்ணனும். புரியுதா?" என்றார்.


தனக்கு பனிரெண்டு வயதாக இருக்கும் போதே தனது பாட்டியின் உதவியுடன் சமைக்கக் கற்றுக் கொண்டிருந்த அதிதிக்கு, அவர் கூறியது ஒன்றும் பெரிய வேலையாகத் தெரியவில்லை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
உடனே தன் சமையல் வேலைகளைத் தொடங்கினாள். அவளுக்கு உதவும் விதமாக ராதாவும், கீர்த்தியும் அவளருகிலேயே நின்று கொண்டனர். ஸ்ருதி பக்கத்தில் இருக்கும் தன் தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி விடுதலை பெற்றுவிட்டாள்.


ஸ்ருதிக்கு மோனிகா என்றொரு தங்கை இருக்கிறாள். மோனிகாவை விக்ரமப்பாண்டியனுக்குத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஸ்ருதி கனவு கண்டு கொண்டிருந்தாள். ஆனால், தற்போது அது கனவாகவே போன ஆதங்கத்தில் தான், வயிறெரிந்து அதிதியை பொசுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.


விக்ரமனின் மீது மோனிகாவுக்குமே அலாதி காதல் உண்டு. அவனின் மீது என்பதை விட, அவனின் அழகு, வீரம், பணத்தின் மீது என்று சொலவது தான் பொருத்தமாக இருக்கும்.


ஸ்ருதியின் திருமணத்தின் போதே அவனின் பின்புலத்தைக் கேட்டு, அவன் மீது பேராசை கொண்டவள் முடிந்த அளவு அவனிடம் தன் ஆசையை அடிக்கோடிட்டு காட்டினாள். ஆனால், விக்ரமன் அதனை கண்டுகொள்ளாமல் லண்டன் சென்று விட்டான்.


தன் பிறந்த வீட்டிற்குச் சென்ற ஸ்ருதி, தன் புகுந்த வீட்டில் நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் தன் குடும்பத்தாரிடம் எழுதினாள். கல்லூரி விடுமுறையைக் கொண்டாட கனடா சென்ற தன் தங்கை மோனிகா எப்போது வருவாள் என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டவள், அவள் இந்தியா வரும் வரை எதுவும் அவளுக்கு தெரிய வேண்டாமென்றும் தன் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டாள்.


மறுபுறம் முதன் முதலில் அவ்வீட்டில் சமைப்பதால் இனிப்பிற்காக ரவா கேசரி செய்த அதிதி சாதம், சாம்பார், மூன்று வகை கூட்டு, பொரியல், ரசம் என ஒவ்வொன்றையும் கர்ம சிரத்தையுடன் பார்த்து பார்த்து செய்தாள்.


மதியம் அனைவரும் டைனிங் டேபிளில் ஒன்று கூடியதும், தானே அவர்களுக்கு பரிமாறவும் செய்தாள்.


விக்ரமனின் அருகில் சென்றவள் அவனுக்கு கேசரி பரிமாறிக் கொண்டிருக்கும் போது,
மஞ்சள் நிற புடவையினிடையே பளீரிட்ட அவளின் வெண்ணிற இடையை கப்பென்று பற்றினான் அந்த மன்மதன். பூவில் புகுந்த காற்றாய் இடையை இதமாய் வருடியவனை வெளியில் கடிந்து கொள்ள முடியாமல் கூச்சத்தில் நெளிந்தாள் அதிதி.


தென்றலாய் வருடியவன் திடீரென பூவுக்குள் புகுந்த புயலாய் அழுத்தமாகக் கிள்ளினான். வலி தாங்காமல் ஆவென கத்தியவளை அனைவரும் என்னவெனக் கேட்க, ஒன்றுமில்லையென கலங்கிய கண்களுடன் தலையாட்டிவள், தன் கணவனை முறைத்துப் பார்த்துக்கொண்டே ராதாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.


அவளின் கலங்கிய கண்களைக் கண்டு, 'மெதுவாத் தானே கிள்ளினேன்? அதுக்குப்போய் ஊரையே கூட்டுறா. ஒருவேளை உண்மையாவே வலிச்சிருக்குமோ?' என மனதில் நினைத்தவன், அவளைப் பார்த்து “ஸாரி”என வாயசைத்து வைத்தான்.


அதனை சட்டை செய்யாமல் முகம் திருப்பியவளை தன்னை பார்க்க வைக்கும் பொருட்டு, தன் இலையில் கிடந்த பச்சை மிளகாயை எடுத்து வாயில் வைத்தான். காரத்தின் காரணமாய் அவன் முகம் சிவப்பாகி கண்கள் கலங்கியது.


"ஹுக்கும்… ஹுக்கும்" என இருமியவனின் கையையும் வாயையும் பார்த்து பதறியடித்து அவனிடம் ஓடியவள், "இந்தாங்க கேசரி சாப்பிடுங்க. இந்தாங்க தண்ணிக் குடிங்க." என்று பரபரத்தாள். அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்த்தனர்.


முதலில் மறுத்தவன் பின் அவளின் கெஞ்சும் பார்வையில் இயல்பாகி, அவளின் வேண்டுதலுக்கிணங்க கேசரி எடுத்து சாப்பிட்டான்.


இதில் அவனின் வீம்பறிந்து, அவனை மன்னித்ததற்கு அடையாளமாய் அவனருகிலேயே நின்று கொண்டு, அவனின் விரல்கள் எனும் மாய உளிகளை எடுத்து மீண்டும் தன் இடையில் செதுக்கவிட்டாள் அதிதி. அங்கிருந்த அனைவரும் அவர்களுக்குள் ஏதோ ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, குனிந்த தலை நிமிரவில்லை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
பாதி சாப்பாட்டிலேயே எழுந்து நின்ற கௌதமன், முக்கியமான வேலையொன்றை மறந்துவிட்டதாகக் கூறி வெளியேறி விட்டான்.


தேவாமிர்தமாய் இருந்த உணவினை அனைவரும் ரசித்து சாப்பிட்டனர்.


உணவை சாப்பிட்டு முடித்த நாச்சியம்மை, "பரவாயில்ல, நல்லா தான் குட்டி சமைக்கிற. இந்தா!" எனத் தன் சுருக்குப் பையிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.


அதை அவர் அவளுக்கு கொடுக்கும் சம்பளமாக நினைத்தார். ஆனால், அதிதி அதை பரிசு என்று எண்ணிக்கொண்டு, அவரது காலில் விழுந்து ஆசிப்பெற்றுக் கொண்டாள்.


அதனை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவளது மணாளன் விக்ரமன்.


அவள் சந்தோஷத்துடன் அறைக்குச் சென்றதும் அவளின் பின்னேயே வால் பிடித்து வந்த அவளின் தலைவன், அவளை அணைத்துக் கொண்டு, "உனக்கு சமைக்கல்லாம் தெரியுமா?" என்று கூந்தலில் வாசம் பிடிக்க,


அவனின் அக்கேள்வியை புறம் தள்ளியவள், "ஆமா என் பேர் கேட்டீங்களே. இப்ப சொல்லவா?" என ஞாபகம் வந்தவள் போல் கேட்டாள்.


அதற்கு அவன், "ம், தெரியுமே. உன் பேர் அதிதி. உன் அப்பா பேர் உதயச்சந்திரன். அம்மா பேர் கீதா. உங்க அப்பா அம்மாவுக்கு நீ ஒரேப்பொண்ணு. நீ பிறந்த போதே உங்க அம்மா இறந்துப் போயிட்டாங்க. நீ பி.இ கெமிக்கல் எஞ்சினியரிங் படிச்சிருக்க. உனக்கு தாத்தா பாட்டினா உசுரு. இப்போ நான்னா. கரெக்டா?" எனக் கேட்கவும், அவள் தலை ஆமென ஆடியது.


அதைக் கண்டு அவன் வெடிப்புச் சிரிப்பு சிரிக்க அவள் பாவமாய், "எப்படிங்க?" என்றாள்.


"சீக்ரெட்" எனக் கூறி கண்ணடித்தவன், "கேள்விக் கேட்டே நேரத்தை வீணாக்கறடி" என்று, அவளை கேள்விகளை மறக்கும் படிச் செய்தான்.


*


அதிதி-விக்ரமனுக்கு திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் ஒரு நாள் அரைகுறை ஆடையுடன், படாரென அவ்வறையின் கதவைத் திறந்தாள் மோனிகா.


வந்தவள் தன் கரகரக் குரலில், "மாமா! என்னை ஏமாத்திட்டீங்கல்ல? என்னை நம்ப வச்சி கழுத்தறுத்துட்டீங்கல்ல?" என கண்ணீரும் கம்பளையுமாய் கதறினாள்.


கணிணியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன், அவளைக் கண்டு கொண்டாற் போலவேத் தெரியவில்லை.


"ஒன் மன்த் ஹாலிடே ட்ரிப் போன சமயத்துல இப்படி பண்ணிட்டீங்கல்ல? எனக்குத் தெரியும் மாமா. நீங்க அத்தை சொன்ன வார்த்தைக்காகத் தான் இவளை கல்யாணம் பண்ணியிருப்பீங்கன்னு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. இவளுக்கு விவாகரத்துக் கொடுத்திருங்க மாமா." என கையில் ஜுஸ் டம்ளர்களை ஏந்திய வண்ணம் வந்த அதிதியைக் காட்டிப் பேசினாள்.


உடனே கண்ணில் வந்த ஜலத்தை யாருக்கும் காட்டாமலிருக்க டிரேயை மேஜை மீது வைத்து விட்டு வெளியே செல்ல முயன்றவளை, கை பற்றி தன் மடி மீது விழச் செய்தான் விக்ரமன்.


அவள் எழ முயற்சிக்கும் முன், இறுக்கியணைத்து அவள் இதழ் மீது இதழும் பொருத்தினான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அதிர்ந்து விழித்துப் பின், “ச்சீ” என முகம் திருப்பிக் கொண்டாள் மோனிகா.


இதழில் கவி பாடி முடித்தவன் முகம் திரும்பி நின்றவளிடம், "இன்னொரு தடவை என் அனுமதி இல்லாம என் ரூமுக்கு வந்தா, இப்படி ஃப்ரீ ஷோ காட்டிட்டு இருக்க மாட்டேன்.. கன்னத்தை பேத்துருவேன். போ! அட போடின்னா!" என மிரட்டி விரட்டிவிட்டான்.


விக்ரமனின் மடியில் கிடந்தவளை முறைத்துக்கொண்டே வெளியேறப் போனவள், "ஏய்! கதவை சாத்திட்டு போடி. பிரைவஷி பாதிக்கப்படுதா இல்லையா?" என்றவனின் சத்தத்தில், நங்கென கதவை சாற்றி விட்டுச் சென்றுவிட்டாள்.


அவள் வெளியேறியதும் சட்டென தன் மடியில் கிடந்தவளை விடுவித்து, ஏதும் அறியாதவன் போல் கணிணியில் மூழ்கினான் விக்ரமன்.


அடுத்தவள் முன் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டதில் அவனை முறைத்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறப்போனாள் அதிதி.


"ஹே பட்டுக்குட்டி! அவ கீழப்போய் ஏதாவது ஏழரையைக் கூட்டுவா. நீ போனா உனக்குத் தான் மனசுக்குக் கஷ்டமா இருக்கும். அப்புறமா போ." என்றவன் சொல்ல, முறுக்கிக்கொண்டு வீம்பாக கீழே சென்றாள் அதிதி.


இதுவரை தன் பேச்சை யாரும் மறுத்தறியாத விக்ரமனுக்கு அதிதியின் இந்த மறுப்பு கோபத்தை உண்டாக்கியது.


ஒருவனின் கோபத்தை தூண்டி விட்டோம் என்பதை அறியாத அதிதி அதன்பின் ஒரு மனச்சிதறலுக்கு உள்ளானாள்.


கோபத்துடன் கீழே சென்ற மோனிகா, நாச்சியம்மை தன் தம்பி ஹரியுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, கண்களில் நீலிக்கண்ணீரை வரவழைத்தபடியே, "அத்த, என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே?" என பாசாங்கு செய்தாள்.


அவளின் நடிப்புக்கு செவி சாய்க்காதவர், "நீ வச்சிருந்த நூறு ஏக்கரா நிலத்தை நான் ஏமாத்திப் புடுங்கிட்டேனா? இல்ல உன் வயித்துல குழந்தையைக் கொடுத்து ஏமாத்திட்டேனா? என்ன நான் பண்ணினேன்?" எனக் கேலியாக வினவினார்.


அவர் கேள்வியில் கரைபுரண்டு வந்த கோபத்தை கட்டுப்படுத்தியவள், "எங்கப்பா உங்கக்கிட்ட வந்து நான் விக்ரம் மாமா மேல உயிரையே வச்சிருக்கேனு சொன்னப்போ, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிட்டு இப்ப இப்படி என்னை ஏமாத்திட்டீங்களேத்த?" எனத் தன் மனக்குமுறலை கொட்டவும்,


அவளின் கேள்வியைக் கேட்டுக்கொண்டே மாடிப்படியிலிருந்து கீழே இறங்கிய அதிதி, நாச்சியம்மை என்ன கூறப் போகிறாரோ? என ஆர்வமாய் அங்கிருந்த பூச்சாடியின் பின் சென்று ஒதுங்கி நின்று கொண்டாள்.


அதிதியை ஓர விழியால் பார்த்தவர் மோனிகாவிடம், "உங்கப்பா உன் ஆசையை என்கிட்ட வந்து சொன்னப்போ பின்னாடி பார்க்கலாம்னு தான் சொன்னேனே தவிர, உங்கப் பொண்ணு தான் என் வீட்டு மருமகனு நான் ஒன்னும் வாக்கு கொடுக்கலையே. விக்ரமன் ஏதாவது உன்கிட்ட வாக்கு கொடுத்தானா?" எனவும், அவள் தலை இல்லையென்று ஆடியது.


அதிதிக்கு அப்போது தான் ஜீவமூச்சே வந்தது.


"இல்லைல? அப்புறம் எந்த தைரியத்துல என் முன்னாடி வந்து இப்படி குரலை உசத்திப் பேசுற? உன் அக்காவைப் பார்த்துட்டேனா கிளம்பு!" எனவும்,


"இல்லங்கத்த.." என பேச வந்தவளை கையுயர்த்தித் தடுத்தவர், "நான் சொன்னது உன் காதுல விழலையா?" என்று டெசிபலைக் கூட்டினார்.


ஸ்ருதியும் கைகள் கட்டப்பட்ட நிலையில் எதுவும் செய்ய முடியாதவளாய் இருந்தாள். அதிதியை கண்களால் பஸ்பமாக்கிய மோனிகா சுருதியை உள்ளே வருமாறு கண்ணசைத்துக் கொண்டே, அவளறைக்குள் நுழைந்தாள்.


மோனிகா அறைக்குள் நுழையவும் பின்னேயே வந்த ஸ்ருதி கதவை தாழ் போட்டுவிட்டு, அறையின் குறுக்கும் நெடுக்குமாக அலையும் தன் தமக்கையையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
"என்னப் பேச்சு பேசுறா அந்தக் கிழவி? நீ இந்த வீட்டுல வாழ்றியேனு தான் பொறுத்துப் போறேன். இல்ல, அந்தக் கிழவியை லெஃப்ட் ரைட் வாங்கியிருப்பேன். நான் யாரு, என் குணம் என்னனு தெரியாம பேசிக்கிட்டு இருக்கா அந்தக் கிழவி. ஆமா எதுக்காக இந்த அம்மாஞ்சி மாதிரி இருக்கவளை பிடிச்சி விக்ரமனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாளாம்? எதுவும் விஷயம் இல்லாம இப்படியெல்லாம் பண்ண மாட்டாளே உன் மாமியாக்காரி?" எனவும்,


"அதை வேற ஏன் கேட்கற மோனி? நானும் எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்துட்டேன். அந்தக் கீர்த்தியும், ராதாம்மாவும் வாயவே திறக்க மாட்டேங்கறாங்க. என் புருஷன் கிட்டக் கூட கேட்டுப் பார்த்துட்டேன். மனுஷன் பிடி கொடுக்க மாட்டேங்கறாரு. ஜெய் ஏன் அந்த அதிதி பொண்ணை அவ வீட்லயிருந்து தூக்கிட்டு வந்து நம்ம விக்ரமனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்கனு கேட்டதுக்கு, தெரிஞ்சிட்டு நீ என்ன செய்யப் போறனு அதட்டினவரு, ரெண்டு நாளா என் முகத்தைக் கூட பார்க்கலை தெரியுமா? அப்புறம் நான் தான் மழுங்கி வெட்கம் கெட்டுப் போய், ஜெய் இங்கப் பாருங்க நம்ம கிஷிக் குட்டிய, உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா?னு கேட்டா அப்பா தான் பிடிக்கும்னு சொல்றானு ஐஸ் வச்சு சேர்ந்தேன்." என்று சலித்தாள்.


மோனிகாவோ லேசில் விடவில்லை.


"ஸ்ருதி, உன் மாமியார் சொத்தை பங்கு போட மூணு வாரிசு. ஆனா, அந்த விக்ரமன் அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே வாரிசு. அவனை வளைச்சுப் போட்டா மூணு தலைமுறைக்கு நாம உட்கார்ந்து சாப்பிடலாம். அவனுக்கு ரெண்டாம் தாரமா போகக் கூட எனக்கு சம்மதம் தான். ஆனா, அதுக்கு அவன் சம்மதிக்கனுமே?" என்றதற்கு, தமக்கை பதறினாள்.


"ஏய் மோனி! என்னடி நீ இப்படியெல்லாம் பேசுற?" என்றாள்.


"ப்ச்! வேற எப்படி பேச சொல்லுற? சரி, சரி, இனிமே இந்த வீட்ல ஒரு சின்ன துடுப்பு சிக்கினாலும் என்கிட்ட சொல்லிரு என்ன? வந்து ரொம்ப நேரமாயிடுச்சு, நான் இப்போ கிளம்புறேன். இல்லைனா உன் மாமியா சந்தேகப்படுவா." எனப் புறப்பட்டாள் மோனிகா.


கார் நிறுத்தத்தில் வைத்து மறுபடியும் அதையே தன் அக்காவிடம் நினைவுபடுத்தி விட்டு, தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள்.


அதை ஒற்றுக் கேட்ட ஒரு ஜீவனுக்கு தன்னைப் போல் மற்றொரு ஜீவனும் இந்தக் குடும்பத்தை கெடுக்கவிருப்பதை எண்ணிக் கொண்டாட்டமாய் இருந்தது.

தொடரும்...
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom