Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நினைவலைகள்

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
கவிதைகள்

கவிதை1: அப்பா
உன்
உயிரினில்...
உதிரத்தில்...
ஒரு பாகமாய்
என்னை உருவாக்கினாய்...
உன்
வயிற்றினில்
ஈரைந்து மாதங்கள்
சுமந்து என்னை
பெற்றெடுக்க
வில்லை தான்...
ஆனாலும்
நான் உருவான
நொடி முதல்
உன் நெஞ்சினில்
சுமக்கின்றாய்
ஆயுள் முழுவதும்
சுகமாய்...
உன் தாயே
வந்து பிறந்ததாய்
என்னை பார
Heart touching line akka............🥺🥺🥺
 

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
கவிதை 2:

கைம்பெண்
ஆணென்பதையும் மறந்து
சுற்றி சுற்றி வந்தாயடா
என் மனதை கவர,
உன் வித்தைகளின் பிடியில்
சிக்காமல் லாவகமாய்
தள்ளி சென்றபோதும்
விடாமல் உன்னை
நுழைத்து கொண்டாய்
என் மனதில்...
எனக்குள்ளே போராட்டங்கள் பல
உன்னை எதிர்த்தும் ஆதரித்தும்
நடந்து கொண்டே தான் இருந்தது
இருந்தும் வென்று விட்டாய்
என் மனதை...

அதோடு நிற்காமல்
வீடேறி பெண் கேட்டு
பல சோதனைகளை கடந்து
மணவறையில் மங்கையென்னை
கைப்பிடித்தாய் அன்பே!
இக்கணம் முதல்
என்னை முழுதும் ஆட்கொண்டவள்
நீ மட்டும் தானடி சகியே
என் சரிபாதியே! என்றாய்.
முன்பிருந்ததை விட பலமடங்கு
உன் கெஞ்சலும் கொஞ்சலும்
நாளுக்கு நாள் என்னிடம் வளர்ந்து
உன் அன்பை மழையாய்
பெய்தாயடா...
என்னை உன் ஆயுள் முழுதும்
சுமப்பேன் என்று
உள்ளங்கையில் தாங்கினாயே!
ஆகாயத்தில் சுகமாய்
உன் அணைப்பில்
கட்டுண்டு இருந்த என்னை
நொடிதனில் சுவாசமற்ற
மலராய் மாற்றியது
உன் எதிர்பாரா மரணம்.
என்னை சுற்றி
இருள்மட்டும் சூழ்ந்திருக்க
அதில் மின்மினியாய்
உன் நினைவுகள் மட்டும்
சுழன்று கொண்டிருக்க,
காதிருந்தும் செவிடானேன்
கண்ணிருந்தும் குருடானேன்
வாயிருந்தும் ஊமையானேன்
இறுதியில் நீ இல்லாமல்
என்
உயிர் இருந்தும் பிணமானேன்.
தங்கத்தின் ரதமாய் இருந்த
மகனை முழுங்கிவிட்டாள் பாதகி
என ஊர் ஏச,
பெற்றவர்களும் உறவினர்களும் தூற்ற,
உயிர் உள்ளவரை உன்னுடன்
இருப்பேன் என்றாயே!
ஒருவேளை
நீ இல்லையென்றால்
அதன்பிறகு என்ன செய்யவேண்டும்
என்றும் கூறாமல் சென்றதேனோ?
உன் தீண்டலின் இனிமையில்
என் மேனி இன்னும் தகிக்கின்றது...
கெஞ்சல்களின் மொழியில்
உன் விழிகள் என்னை எரிக்கின்றது...
உன்
கொஞ்சல்களின் நினைவில்
தீயாய் சூழ்கிறது என் மனம்...

உயிர்விடும் முன்
என்னோடு வா என்றிருந்தால்
விட்ருப்பேன் இம்மேனியோடு
என் உயிரையும் சேர்த்து...
நீ இல்லாமல் வெறும்
கூடாய் நிற்கின்றதே
என் செய்வேன் அன்பே !
தர்ஷினிசிம்பா
wow wow ..............❤️❤️❤️❤️❤️.............kutti story ye kavithai ya semma ya write pandriga ka .............nanu try pannuva naalu line mela varathu:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..........neega romba azhaga write pandriga
 

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
கவிதை 3:

"காதலென்பது யாதெனில்"

உருகி உருகி
காதலித்தாலும்
விரும்பியவளை
அக்கினியின்முன்
தனதாக்கி கொள்ளும்பொழுதே ஆண்மகனின் காதலுக்கு
தனி அழகு...
என் உயிரே
நீ தான் கண்மணியே
என்றுரைத்தாலும்
நீயும் என்னுயிர் தான்
அன்பே என்றுரைத்து
ஊரார் முன் கரம்பற்றி
தன்னை தரும் பொழுது
பெண்மையின் அழகே
தனி அழகு...
அக்காதலும்
வாழ்க்கை செல்ல செல்ல
ஆயிரம் சண்டைகள்
வந்தாலும்
நீயா நானா என்றில்லாமல்
ஒருவரின் கோபத்தை
மற்றவர் தணிக்க முயலும்
நேரம் உங்களின்
காதல் பேரழகு...
wow perazhaku spr sis:love::love::love::love::love::love:.............
 

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
கவிதை 6:

"எங்கள் சேவையின் முடிவு"

மருத்துவ சேவையில்
மூழ்க ஆசைகொண்டு
மருத்துவத்தை நாடி
படித்தேன் வெறியோடு...

கொடிய நோயின் தாக்கத்தில்
மக்கள் துயர் துடைக்க
நான் பெற்ற பிள்ளையை
தவிக்க விட்டுவிட்டு
பெற்றெடுக்காத பிள்ளைகளுக்காக
அயராது உழைக்க
விழைந்தோடி வந்தேன்
மருத்துவமனைக்கு...

பல நாள்
இரவு பகல் பாராமல்
ஊண் உறக்கம் இல்லாமல்
அயராது கண்விழித்து
மருத்துவம் பார்த்திட,
உன்னையும் பிடிப்பேன்
எங்கே ஒடுவாய் என்று
கொரோனாவெனும்
கொடியநோய்
என்னையும் ஆட்கொள்ள
முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டேன்.

இன்று விளைவோ,
கைதொடும் தூரத்தில்
என் கைக்குழந்தை
"வேற ஒன்னும் வேணாம்
அம்மா மட்டும் போதும்...
வாம்மா வீட்டுக்கு போகலாம்"
என்ற கதறலினை கேட்டும்
உள்ளுக்குள் ஊமையாய் அழுது
மனம் கல்லாய் சமைந்திருக்க,
என் சக ஊழியரின்
மரணத்தை காட்டிலும்
வலி தந்தது அவரை அடக்கம் செய்ய
இடம்கொடுக்க மறுக்கும்
உங்களுக்கா சேவைசெய்ய
என் பிள்ளையை தவிக்கவிட்டேன்
என்று தலைகுனிகிறேன்
ஆழ்ந்த வருத்தத்தில்...

இருந்தும் மீண்டும் எழுகிறேன்
"நீங்கள் தான் கடவுள்"
என்று வரும்
அடுத்த உயிரை
காப்பாற்ற...
எத்துணை துயர்வரினும்
காப்பதே என் கடமை..

"மருத்துவத்துறையில் இந்த இக்கட்டான நேரத்தில் உயிரையும் பொருட்படுத்தாது உழைக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் இக்கவிதை சமர்ப்பணம்"

-தர்ஷினிசிம்பா
docters are real god🙏🙏🙏🙏🙏🙏🙏..........really avaga illa na world la inno yevlo per ssollave mudila ......
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 9:

"தவமாய்"


"ஹலோ!" அவளின் குரல் தேனாய் என் செவிகளில்..

"எனக்கு பாப்பாகிட்ட பேச ஆசையா இருக்கு" கெஞ்சும் குரலில் நான்.

"ஹ்ம்ம். பேசு"

"ஹலோ! செல்லம். எப்படி இருக்கீங்க? சமத்தா இருக்கீங்களா? " நான்.

"எங்க? கொஞ்சம்கூட அடங்குறதே இல்ல. எந்த நேரமும் ஆட்டம் தான்" அவள்.

அப்படியாடா செல்லம்? அம்மாவ ரொம்ப தொந்தரவு பண்ணக்கூடாது. அப்பா சீக்கிரம் வந்துடுவேன். அதுவரைக்கும் நீ தான் அம்மாவை பார்த்துக்கணும்" நான்.

"அப்போ எப்போ வருவ மாமா?" என் நேசத்திற்கு ஏங்கியவளாய்.

"சீக்கிரமே வந்துடுவேன்" எப்பொழுது என்று தெரியாமல் நான்.

"எட்டு மாசம் ஆகுது உன்னை பார்த்து. உன்னை பார்க்கணும் போல இருக்கு" என்றாள் குரலில் தவிப்பை தேக்கி.

"எனக்கும் தான் உன் மடியில தலைவச்சி தூங்கனும்" நான்.

"எப்படியாவது குழந்தை பிறக்கிறதுக்குள்ளையாவது வந்துடவியா?" என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வில்.

"எனக்கு நீ ஒரு கண்ணுன்னா என் தாய்நாடும் ஒரு கண்ணு" நான்.

"அதனால தான் இன்னும் அதிகமா உன்னை விரும்புறேன்" சிரித்தாள் அவள்.

"ஹ்ம்ம் போதும் சிரிச்சே கொல்லாத. உன்னையும் குட்டிதேவதையும் பார்க்க ஓடி வரேன். " நான்.

"அதையும் பார்க்கிறோம் நாங்க" அவள் என்னை சீண்டி.

"போதும்டி ஏற்கனவே என் உடல் மட்டும்தான் இங்க இருக்கு உயிர் உங்ககிட்ட தான் இருக்கு" நான்.

"பட்டாளத்துக்கு போனாலும் உன் காதல் வசனம் குறையல." அவள்.

"என் தேசமே அன்பால் உருவானது தானே? அதனால அப்படியே தான் இருப்பேன். போகணும் வரேன்." வைக்க மனமில்லாமல் வைத்த நான்.

மீண்டும் என் குரல் கேட்க தவமாய் அவள்.
 

New Threads

Top Bottom