Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீயென நானும் நானென நீயும் 2

Messages
4
Reaction score
0
Points
1
தேன்மொழியின் அறையில் அலாரம் அலற அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள் தேன்மொழி. தான் இன்னும் அதே நிலைமையிலேயே இருப்பதை கண்டவள் 'என்னடா இந்த கனவு இவ்வளவு நீளமா இருக்கு' என தலையை சொறிந்து கொண்டே கண் முன் இருக்கும் சொர்க்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவசரமாக வந்த இயற்கை உபாதையை அடக்க முடியாமல் அறைக்குள் இருந்த குளியறைக்குள் புகுந்து கொண்டவள் எதேச்சையாக கண்ணாடியில் விழுந்த தன் விம்பம் கண்டு ஆடிப் போனாள்.

கிராமத்திலுள்ள சந்தோஷின் அறைக்கதவு தட்டப்பட மயக்கத்திலிருந்தவன் மெதுவாக எழுந்து கதவை திறந்தான். அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள்.

அவள் இவனிடம் பால் தம்ளரை திணித்து விட்டு " என்ன அண்ணா, இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்குற? உடம்புக்கு முடியலயா?" என அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தவள், "ஐயோ என்னண்ணா உடம்பு இப்படி கொதிக்குது" என்று விட்டு "அம்மா... சித்ரா..." என அழைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள். சற்று நேரத்தில் அங்கு வந்த அவனுடைய தாயும், தங்கைகளும் அவன் பக்கத்திலேயே இருந்து அவனுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்துக் கொண்டனர். ஆனால் அவனுக்கோ இவர்கள் யார் என்று தெரியவில்லை. தனக்கு என்ன ஆனதென்றும் புரியவில்லை. திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டவனின் நிலையை விட கொடுமையாக இருந்தது அவன் நிலைமை. 'நான் தேன்மொழி. ஆனா ஏன் இப்ப யாருனே தெரியாத ஒரு ஆள்ட உடம்புல இரிக்கேன். இது என் வீடு கிடையாது. இங்கே இருக்குற யாரையுமே நான் இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்லை. என்னை சந்தோஷ்னு கூப்பிடுறாங்க. ஆனா நான் சந்தோஷ் கிடையாது' என கத்த வேண்டும் போல இருந்தது

ஆனால் இந்த கிராமத்து சூழ்நிலையும், அங்கு இருந்தவர்களின் அன்பான கவனிப்பும், அக்கறையும் இதமாக இருந்தது என்னவோ உண்மை தான். அவள் ஏங்கியதும் இப்படிப்பட்ட அன்பிற்காக தானே.
அவளது தாயும், தந்தையும் பெரிய தொழிலதிபர்கள். ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை பெற்ற பிள்ளைகளுக்காக ஒதுக்குவதே அபூர்வம். அழகான மாளிகையில் ஆடம்பர வாழ்க்கை நடத்தினாலும், அங்கு ஒவ்வொருவரும் தனித்தீவு தான். மெல்லிய அரவணைப்பு, செல்ல முத்தம், சின்ன சின்ன உரையாடல்கள், தலை கோதி தேற்றுதல்- இவை எதையும் அவளைப் பெற்றவர்கள் அளித்ததாய் அவளுக்கு நினைவில்லை. பிறந்த நாளிலாவது இவையெல்லாம் கிடைக்காதா என ஒவ்வொரு வருடமும் ஏங்குபவளுக்கு வாய்த்ததென்னவோ இலவு காத்த கிளியின் நிலை தான். தான் ஏன் பிறந்தேன் என்று எண்ணும் அளவுக்கு விரக்தியுற்றிருந்தாள்.

அங்கு தேன்மொழி வீட்டில் தேன்மொழியின் தோற்றத்தில் இருக்கும் சந்தோஷ் குழப்பத்தில் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான். தான் ஒரு பெண்ணின் உருவத்தில் இருப்பதை உணர்ந்தவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. இது கனவல்ல, நிஜம் என்று புரிந்து கொண்டவன் அந்த அறையை ஆராயத் தொடங்கினான். அப்போது மேசையில் இருந்த ஒரு நாட்குறிப்பேடு அவன் கவனத்தை ஈர்க்க, அதை எடுத்து படிக்கத் தொடங்கினான்.


தொடரும்...


💐💐💐விடிவெள்ளி💐💐💐
 

New Threads

Top Bottom