Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
21. திடீர் திருப்பம்

வெகு தூரம் இருவரும் அமைதியாக இருக்க ஷக்தியே மௌனத்தை கலைத்தான்.

"மஹா இன்னும் டூ ஆர் த்ரீ டேஸ்ல உங்க ஊருக்கு போறோம்." என்றான்.

"என்ன?... அங்க எதுக்கு... இல்ல நான் வரமாட்டேன்." என்றாள் அதிர்சசியாக

"மஹா! இதுக்கு முன்னாடி உனக்கு யாரும் இல்ல. அதனால பயந்த.. இப்ப நான் இருக்கேன்ல எதுக்கு டா பயப்படற?" என்று கார் ஒட்டியபடி மஹாவை தன்னருகே இழுத்து ஒரு கையால் அணைத்து கொண்டான்.

"இல்ல ஷக்தி நான்.. எனக்கு..." என்று திணறினாள் .

"ஷ் பயப்பட கூடாது. வி ஆர் கோயிங் தட்ஸ் பைனல்".

"லாயர் அங்கிள்கிட்ட பேசி உங்க சித்தி மாமா மேல கேஸ் போட சொல்லிருக்கேன்."

"எதுக்கு?" என்றாள்.

"எதுக்கா...? என்ன கேள்வி கேக்கற உன்ன அவங்க பண்ண கொடுமைக்கு எனக்கு இருக்க கோவத்துக்கு அவங்கள என்ன செய்வேனே தெரியாது... நீ என்னடான்னா எதுக்குன்னு கேக்கற?" என்று கோவத்தில் சரமாரியாய் பொரிந்து தள்ளினான்.

"அவங்க உனக்கு பண்ண கொடுமைக்கு பதில் சொல்லியே ஆகணும். உனக்கு சேர வேண்டிய சொத்தை உன் கைல கொடுத்துட்டு வெளியே போய்டணும். உனக்கு பண்ண துரோகத்துக்கு அவங்க நடுத்தெருவில நிக்கணும், அவங்கள சும்மாவிட மாட்டேன்." என்று கோவமாக பற்களை கடித்தான்

"வேண்டாம் ஷக்தி! அந்த பாவம் நமக்கு வேண்டாம். என்ன தான் இருந்தாலும் அவங்க என்னை இத்தனை நாளா வளர்த்துருக்காங்க."

"ஹ்ஹமம் முடியாது. உனக்காக ஒன்னுவேணா செய்றேன். அவங்களுக்கு சின்னதா ஒரே ஒரு இடம் இருக்கறதுக்கு ஏற்பாடு செய்றேன். எனக்கு இருக்குற கோவத்துக்கு அவங்கள ஆயுள் முழுக்க உள்ளே வச்சி களி சாப்பிட வச்சிருப்பேன். உனக்காக தான் இதுகூட" என்று மஹாவின் தலை கோதினான்.

"நாம நேர்ல வரணும்னு லாயர் சொல்றாரு." என்று மஹாவை நோக்கினான்.

மஹா அமைதியாக இருந்தாள்.

"ஏன் உனக்கு பிடிக்கலையா நான் வேணா இதுலேர்ந்து ஒதுங்கிக்கிடட்டுமா?" என்றவுடன் ஷக்தியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

"இல்ல நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. அவங்கள்ல்லாம் ரொம்ப மோசமானவங்க. சொத்துக்காக என்ன வேணா செய்வாங்க. உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துருமோன்னு எனக்கு பயமா இருக்கு." என்றாள் விழிகளில் நீர் தேங்க..

"ஹே செல்லம். எனக்கு ஒன்னும் ஆகாது. நான் பார்த்துகிறேன். நீ கவலைப்படாதே." என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை மோதி புன்னகைத்தான்.

"எனக்கு உங்கள விட்டா யாரும் இல்ல. உங்களுக்கு ஏதாவதுன்னா என்னால தாங்க முடியாது. அடுத்த நொடி நான் உயிரோட இருக்க மாட்டேன்." என்றவளின் இதழை சட்டென ஷக்தி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.

அவனின் செயலுக்கு இணங்குவது போல் மஹாவும் தடுக்காமல் சம்மதம் தெரிவிக்க ஒரு சில நொடி இருவரின் மூச்சுகளும் பரிமாறிக் கொண்டன.

சிறிதுநேரம் கழித்து அவளின் இதழை விடுதலை செய்து மூச்சு விட இடம் கொடுக்க, மஹாவின் முகம் வெட்கத்தில் மிளிர்வதை தன் ஒரே விழியால் பருகியபடி அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

இருவரும் அமைதியாக வர ஷக்தி,
"மழை வர மாதிரி க்ளைமேட் நல்லா இருக்கு கொஞ்சம் நடக்கலாமா?" என்று காரை நிறுத்தினான்.

"சரி" என்று மஹா தலையாட்ட காரை விட்டு இருவரும் கீழே இறங்கினார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத சிறிது நிலா வெளிச்சம் மட்டும் இருந்த இடம்.

சில அடிகள் நடந்தவுடன் ஷக்தி மஹாவின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்தபடி நடந்தான்.

சக்தியின் ஸ்பரிசம் தனக்குள் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டு தன் உடலினுள் சிலிர்ப்பு தோன்றுவதை மஹாவால் உணர முடிந்தது.

ஒரு வித படபடப்பு உண்டானாலும் இதை அவள் மனம் விரும்பியது.

"மஹா நான் ஒன்னு கேப்பேன். பதில் சொல்றியா?" என்று மஹாவை விழியால் கண்டு கொண்டே வந்தான்.

"ஹ்ம் கேளுங்க" என்றாள் அவனை பார்க்காமலே...

"நான் உன் கழுத்துல தாலி கட்டும் போது நீ என்ன நினைச்ச?" என்றான்

"அது..." என்று இழுத்தாள்.

"ஹ்ம் என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் சொல்லு?" என்று அவளின் தோளில் கை போட்டபடி நடந்தான்.

மஹாவின் வலப்புறம் முழுவதும் சக்தியின் இடப்புறம் தீண்டியபடி நடக்கவும்,

மஹாவின் தோள் சக்தியின் மார்போடு மோதியபடி நடக்க கொஞ்சம் அல்ல நிறையவே திணறி தான் போனாள்.

சுற்றுப்புற சூழலும் மழை காற்றும் சேர்ந்து கொள்ள இருவருக்குள்ளும் இடைவெளி மிகவும் குறையவும் அவர்களுக்குள் வெப்பம் அதிகரிப்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் அறியாவண்ணம் பார்வையை செலுத்தியபடி நடந்து வந்தனர்.

சக்தியின் போன் அடிக்கவே எடுத்தவன் மஹாவிடம் இருந்து விலகி சற்று தள்ளி நின்று பேசினான்.

சக்தியின் முகத்தை பார்த்தபடியே நின்றிருந்தாள் மஹா.

"இந்த முகத்துல ஏதோ ஒரு விதமான காந்த ஷக்தி இருக்கு. இல்லனா என்னால அவர் முகத்தில் இருந்து பார்வையை எடுக்க முடியவில்லையே" என்று தனக்குள் பேசியபடி நின்று சக்தியை பார்த்திருந்தவள் திடிரென்று தன் பார்வையை கூர்மையாக்கினாள்.

இருட்டில் ஒரு உருவம் சக்தியின் பின்னால் சக்தியை நோக்கி வருவதை கவனித்தாள். அதுமட்டும் இல்லாமல் அந்த உருவத்தின் கண்களை தவிர முகம் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.

அதன் கைகளில் கூர்மையான பளப்பளக்கும் கத்தி ஒன்று ஷக்தியை நோக்கி வருவதை பார்த்து அதிர்ந்தபடி, "ஷக்தி" என்று கத்தியபடி ஓடவும் அந்த உருவம் நெருங்கி கத்தியை சக்தியின வயிற்றில் சொருகவும் மஹா இடையில் புகுந்து அந்த கத்திக்குத்தை வாங்கவும் சரியாக இருந்தது.

"ஆஹ்... அ...ம்...மா...." என்ற அலறலுடன் ஷக்தியின் மீதே சாய்ந்து கீழே சரிந்தாள்.

"ஹே யாருடா நீ நீல்லு டா?" என்று எழுந்தவனை சட்டையை இறுக்கி பிடித்து "ப்ளீஸ் என்னை விட்டு போகாதீங்க ஷக்தி." என்றாள்.

"இல்ல மஹா உனக்கு ஒன்னும் ஆகாது." என்று தன் சட்டையை கழுட்டி மஹாவின் வயிற்றில் கட்டினான்.

மஹாவின் கண்கள் சொருக, "மஹா ப்ளீஸ் கண்ண மூடாதடா." என்று அவளுடன் பேசியவாறே அவளை தூக்கி வேகமாக காரில் படுக்க வைத்தான்.

"ஆஹ்...ஆ..." என்று அலற "கொஞ்சம் பொறுத்துகோடா. தோ பைவ் மினிட்ஸ் உடனே ஹாஸ்பிடல் போய்டலாம் மஹா." என்று காரை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.

"ஷக்தி ப்ளீஸ் என்...ன எப்படி... யாவது காப்பாத்... திடுங்க... நான் உ...ங்க கூட வாழ...னும்" என்று கண்களை இறுக மூடி திறந்தாள்.

"உனக்கு ஒன்னும் ஆகாதுடா நான் இருக்கேன்." அவளின் கைகளை ஆதரவாய் பிடித்தபடி வண்டியை ஓட்டினான் தன் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வருவதை உணர்ந்தான்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
22. ஹாஸ்பிட்டல்

சற்று முன்பு வரை இருந்த எங்களின் மகிழிச்சி நெருக்கம் தொலைந்து போய் இப்படி ஆகிவிட்டதே! தான் காரில் இருந்து இறங்கி நடக்காமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று ஷக்தி மிகவும் வருந்தினான்.

யார் தன்னை கொலை செய்ய வந்திருப்பார்கள் தனக்கு படவேண்டிய அடியை தன் பாதி வாங்கி கொண்டாள் என்று மனம் நொந்து கொண்டிருந்தான்.

காரை விரைந்து ஒட்டியவன் ஹாஸ்பிடல் வாசலில் நிறுத்தி வேகமாக மஹாவை தூக்கி கொண்டு உள்ளே ஓடினான்.

"சிஸ்டர் எமெர்ஜெனசி ப்ளீஸ்.. டாக்டர் கூப்பிடுங்க." என்று கத்தியபடி உள்ளே ஓடினான்.

வேகமாக ஸ்ட்ரெட்ச்சருடன் ஓடிவந்த வார்டுபாய் மஹாவை அதில படுக்க வைக்க,

சிஸ்டர், "என்ன சார் கத்திக்குத்து இருக்கு போலீஸ்க்கு இன்போர்ம் பண்ணுங்க. இல்லனா ட்ரீட்மெண்ட் பண்ணமாட்டோம்." என்றாள் திமிராக.

"ஹலோ யார்கிட்ட பேசறோம்னு தெரிஞ்சு பேசுங்க. அசிஸ்டென்ட் கமிஷனர் எங்க அண்ணன் தான். சொல்லிட்டேன் வந்துருவாரு. நீங்க ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணுங்க. அவங்க உயிருக்கு ஏதாவது ஆச்சு உங்க ஹாஸ்பிடலையே ஒன்னும் இல்லாம பண்ணிருவேன்." என்று முறைக்க.

செவிலியரிடம் பரபரப்பு தொற்றி கொண்டது. வேகமாக ஆபரேஷன் அறைக்குள் கூட்டி சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.

"சார் ரிசப்ஷன்ல பார்ம் பில் பண்ணி அமௌன்ட் பே பண்ணிடுங்க. உங்களுக்கு அவங்க என்ன வேணும்?" என்றாள் நர்ஸ்.

"ஷி இஸ் மை வைப்" என்றான்.

"இந்தாங்க இதுல சைன் பண்ணுங்க." என்று ஒரு பேப்பரை நீட்டினாள்.

காட்டிய இடத்தில் கணவன் என்று கை எழுத்து இட்டு அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினான்.

"கடவுளே என் மஹாவுக்கு எதுவும் ஆக கூடாது." என்று வேண்டினான்.

சுரேஷ் இடம் இருந்து போன் வரவே அழுத படி நடந்தவற்றை கூற, அடுத்த அரை மணி நேரத்தில சுரேஷின் குடும்பம் ஹாஸ்பிடலில் இருந்தனர்.

சுரேஷின் அம்மாவை கண்டதும் தாயை கண்ட சேய் போல் கட்டி கொண்டு சிறு குழந்தை போல் அழ ஆரம்பிக்கவும்,

"என்னடா கண்ணா நடந்தது?" என்று கேட்டார்.

நடந்த எல்லாவற்றையும் கூறிஎவன், "ஆண்ட்டி எனக்கு மஹா வேணும். அவ இல்லாம என்னால இருக்க முடியாது." என்று சிறு பிள்ளை போல தேம்ப ஆரம்பித்தான்.

"ஒன்னும் ஆகாது ஷக்தி கண்ணா. மஹா ரொம்ப நல்ல பொண்ணு. நிச்சயம் உன்கிட்ட திரும்பி வந்துருவா."

"மயக்கமா ஆகறதுக்கு முன்னாடி கூட என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க நான் உங்க கூட வாழணும்னு சொன்னா ஆண்ட்டி. எனக்கு என் மகா வேணும்." என்றான் தேம்பிக்கொண்டே.

ஆதரவாய் அவன் தலையை கோதியவாறு சுரேஷை பார்த்து, "சுரேஷ் சக்தியை சமாதானப்படுத்தி ஜூஸ் ஏதாவது குடிக்க வை." என்று அனுப்பி வைத்தார்.

"இல்ல எனக்கு எதுவும் வேணாம். மஹாக்கு ஒன்னும் இல்லனு டாக்டர் சொல்ற வரைக்கும் எனக்கு எதுவும் வேணாம்." என்றான் பிடிவாதமாக.

"ஷக்தி நிச்சயமா மஹாக்கு குணமாகிடும். அவ கண் விழிச்சி உன்ன கேட்டா? நீ இப்படி இருந்தா நீயும் அவளுக்கு பக்கத்து பெட்ல அட்மிட் ஆக வேண்டியது தான், ஆண்ட்டி சொல்றத கேளு போ!" என்று சுரேஷிடம் கண் ஜாடை காட்டி அனுப்பி வைத்தாள்.

"மிஸ்டர்.ஷக்தி யாரு?" என்று ஆப்ரேசன் தியேட்டர்ல இருந்து வெளிய வந்த டாக்டர் கேட்டதும்.

"நா தான் டாக்டர். மஹா எப்படி இருக்கா?" என்று தவிப்புடன் கேட்டான்.

"ஷி இஸ் இன் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் ஒன்லி. அவங்க ஓயாம உங்க பேர தான் கூப்பிட்றாங்க. கத்தி ஆழமா இறங்கிருக்கு. 24 ஹௌர்ஸ் கழிச்சு தான் சொல்ல முடியும். ஷக்தி நீங்க மட்டும் போய் பார்த்துட்டு உடனே வந்துடுங்க." என்று வெளியே சென்றார்.

ஷக்தி உள்ளே சென்றதும் சுருண்ட கோழியை போல் படுத்திருக்கும் மஹாவை கண் கொண்டு காண முடியவில்லை.

மஹாவின் தலையை வருடி முத்தமிட்டான். பின்னர் வெளியே போக திரும்பியவனின் கரத்தை பற்றி கீழே குனியுமாறு சைகை காட்டினாள்.

"என்னடா?" என்று அவளின் முகத்தருகே குனிந்து கேட்டான்

"என்னை காப்பாத்திட்டீங்க தேங்ஸ்." என்றாள்.

"என்ன பேசற மஹா? பத்து நாளோ பத்து நிமிசமோ நீ என் உயிர்ல கலந்துட்ட நீ இல்லாம நான் இருப்பேன்னு நினைக்கிறியா?" என்று தன் மனையாளின் உயிரை மீட்ட பரவசத்தில் பேசினான்.

"எதையும் நினைச்சு மனச குழப்பிக்காத. நான் உன்கூடயே தான் இருக்கேன்." என்று உதட்டில் ஒரு முத்தத்தை லேசாக ஒற்றி எடுத்தான்.

"ஐ லவ் யு ஷக்தி." மெதுவாய் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கண்களை மூடி கூறினாள்.

எத்தனை தடவை தான் கேட்டும் கூறாமல் இருந்தவள் வாயில் இருந்து தேனாய் வந்து தானாய் பயந்தது போல் இருந்தது.

அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவளின் வார்த்தைகள் வாயில் இருந்து வராமல் உள்ளத்தில் இருந்து தான் வருகிறது என்பதை யூகித்து, "ஐ லவ் யு டு டா " என்றான்.

"சார் கொஞ்சம் வெளிய இருங்க. அவங்க இன்னும் அப்செர்வஷன்ல தான் இருக்காங்க." என்று நர்ஸ் ஒருத்தி கூறவே வெளியில் வந்து கண்களை மூடியபடி சுவரில் சாய்ந்து நின்றான்.

"உன்னை கண்ட நொடியில்
கலந்து விட்டாய்
என் உயிரினில்...
உன்னை மீறி
நானும்....
என்னை மீறி
நீயும் ....
உடலில் இருந்து உயிர் பிரிய
விட்டு விடுவோமா?.....
பிரிந்தாலும் இன்னொருவர்
உயிர் வாழ்வோமா?.....
அக்னிதேவன் சாட்சியாய்.....
நான்இட்ட திலகம்
உன் நெற்றி வகிட்டில்.....
இருக்கும் போது போகாது
உன் உயிர் .......
அதை தொடர்ந்து
என் உயிரும் ...... "
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
23.அதிர்ச்சி

தன் போன் அடிப்பதை கூட உணராமல் ஏதோ யோசனையில் இருக்க சுரேஷ், "ஷக்தி போன் அடிக்குது." என்று தோளை உலுக்கினான்.

போனை எடுத்து, "ஹலோ!" என்ற ஷக்தி.

"ஷக்தி மணி பதினொன்னு ஆகுது இன்னமும் என்ன பண்ணிட்டு இருக்க வீட்டுக்கு வராம?" என்றார் சக்தியின் அம்மா.

"அம்மா..." என்று சிறு குழந்தை போல் அழவே,

"என்னப்பா ஷக்தி என்னாச்சு?" என்று பதறினார்.

"ஷக்தி என்னடா இப்டி பண்ணிட்ட அம்மாகிட்ட அழுகுறியே என்ன காரணம் சொல்றது?" என்று சக்தியிடம் இருந்து போனை பிடுங்கி கைகளால் மூடிய சுரேஷ் கேட்டான்.

"ஆண்ட்டி நாங்க எல்லோரும் இங்க ஹாஸ்பிடல்ல இருக்கோம் மஹாக்கு உடம்பு சரியில்லை." சுரேஷ்.

"மஹாக்கு என்னாச்சுப்பா?" என்று பதட்டத்துடன்

"ஆண்ட்டி அவளை யாரோ கத்தியால் குத்திடாங்க?" என்றான்

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், "எந்த ஹாஸ்பிட்டல்?" என்று கேட்டார்.

அடுத்த இருபதாவது நிமிடம் சக்தியின் குடும்பம் ஹாஸ்பிட்டலில் இருந்தது.

நேராக சக்தியிடம் வந்தவர், "என்ன நடந்தது?" என்றார்.

"அம்மா" என்று அவரை கட்டி கொண்டு அழ சக்தியின் அப்பா ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றார்.

"நீ எவ்ளோ நாளா மஹாவை விரும்புற?" பட்டென்று அம்மா கேட்ட கேள்வியில் அனைவரும் திகைத்து போயினர்.

"அம்மா" என்று அதிர்ச்சியோடு ஷக்தி பார்க்க,

"நான் உன்ன பெத்தவடா. என் பிள்ளையோட மனசு எனக்கு தெரியாதா?" என்றார்.

"அம்மா நா உங்ககிட்ட..." என்று இழுக்க கை அமர்த்தி "நான் சுரேஷ் வீட்லயே நீ அவளை பார்த்துக்கிட்டுருந்த விதத்துல உனக்கு மஹா மேல விருப்பம் இருக்குனு தெரிஞ்சப்புறம் தான் உனக்கு அவளை மனைவியாக்கணும்னு முடிவு பண்ணேன். என் பிள்ளையின் மனசு எனக்கு தெரியும்." என்று கண் கலங்கினார்.

"மிஸ்டர்.ஷக்தி உங்க மனைவியை பத்தி டாக்டர் பேசணும்னு கூப்பிடறார்." என்று நர்ஸ் கூறவும் அந்த இடமே அசைவற்று நின்றது அதிர்ச்சியில்.

ஷக்தி சுதாரித்து, "இதோ வரேன்." என்று அங்கிருந்து சென்றான்.

"மே ஐ் கம் இன்" என்று டாக்டர் கேபினில் நின்றான்.

"எஸ்" என்று குரல் வந்ததும் உள்ளே சென்றவன் .

"டாக்டர் மஹா நல்லா இருக்காள்ல எனி திங் ப்ராப்ளம்?" என்று கவலையாய் கேட்க.

"உக்காருங்க ஷக்தி. உங்க மனைவி இப்ப ஆபத்தான கட்டத்துலேர்ந்து மீண்டு வந்துட்டாங்க. பட், அவங்க வயத்துல கத்தி பலமா குத்திருக்கறதால சரியாக அட்லீஸ்ட் டூ மந்த்ஸ் ஆகும். அதுவரைக்கும் அவங்கள கூட இருந்து ரொம்ப பத்திரமா பார்த்துக்கணும். அண்ட் நீங்க ரெண்டு பேரும் டூ ம்த்ஸ் பிரிஞ்சருக்கனும்." என்றார் டாக்டர்.

"டாக்டர்.." என்றான் புரியாமல்

"ஷக்தி அஸ் எ ஹஸ்பண்ட் நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர கூடாதுனு சொன்னேன்." என்றார்.

முதலில் புரியாமல் இருந்தவன் பின் புரிய, "ஓகே டாக்டர். நான் பார்த்துகிறேன்." என்றான்.

"இன்னும் டூ டேஸ் இங்க இருக்க வேண்டி இருக்கும்."

"ஓகே டாக்டர் தேங்க்ஸ்." என்று விடை பெற்று வெளியே வந்தான்.

எல்லோரும் இருக்கும் இடத்திற்கு வந்தவன் தயங்கி தயங்கி நிற்கவே, சக்தியின் அப்பா அவனை நெருங்கி, "நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" என்றார் கோவமாக.

எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இனி மறைப்பதில் பயன் இல்லை என்று யோசித்த ஷக்தி, "ஆமாம் " என்று கூறி முடிக்கும் முன்பே பளார் என்ற அரை ஷக்தியின் கன்னத்தில் விழுந்தது.

கன்னத்தை தடவியபடி தன் அப்பாவை பார்க்க,

"யு ராஸ்கல். என்னோட மருமகளை நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வராம இன்னொருத்தங்க வீட்ல தங்க வச்சுருக்க. ஐ அம் அஷேம்டு ஆப் யு இடியட்." என்றவரை ஒன்றும் புரியாமல் விழித்தான்.

"என்ன பார்க்கற எனக்கும் உனக்கும் ஒத்து வராது தான். அதுக்காக நீ செய்றது எல்லாமே பிடிக்காதா? நீ செஞ்சா அது கரெக்டா இருக்கும்னு நினைக்கிறவன் நான், அப்ப நீ காதலிச்சா மட்டும் தப்புனு நினைப்பேனா முட்டாள். ஆபிஸ் விஷயத்துல தான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். அதுவும் உன்ன நீயே இம்ப்ரூவ் பண்ணிக்கத் தான்."

"நீ எங்களை எவ்ளோ மதிக்கறேன்னும் தெரியும். அப்டி இருக்க நீ ஏதோ தவிர்க்க முடியாத சூழல்ல தான அந்த பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கன்னு புரிஞ்சிக்க முடியாதா எங்களால? எனிவே நீ செலக்ட் பண்ணதால எங்க மருமக பெர்பெக்ட்டா தான் இருப்பா. சோ ஹாஸ்பிடல்லர்ந்து டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா." என்றவரை,

"அப்பா! ஐ லவ் யு டாட்." என்று அழுது கொண்டே கட்டி பிடித்தான்.

தன் அம்மா தன்னிடம் கோவம் கொண்டு தன்னை பார்க்காமல் இருப்பதை கண்டு தவித்தபடி, "அம்மா ஐ ஆம் சாரி நான் பிளான் பண்ணி மஹாவ கல்யாணம் பண்ணலம்மா ஆக்சிடென்ட்டலா நடந்தது." என்று ஆரம்பித்து சுருக்கமாக கூறி முடித்தான்.

சுரேஷின் அம்மாவும், "சாரி அண்ணி. ஷக்தி கெஞ்சி கேட்கவே என்னால உங்ககிட்ட சொல்ல முடியல." என்றார் வருத்தமாக.

"பரவால்ல அவன் வேற எங்கயும் கூட்டிட்டு போகாம உன்கிட்ட கூட்டிட்டு வந்தானே அது வரைக்கும் சந்தோஷம்." என்று சிரித்தார்.

அம்மாவின் முகத்தில் தன் மேல் கோபம் இருப்பது தெளிவாக தெரிந்தது. கொஞ்ச நாள் போனால் சரி ஆகிடும் என்று தனக்கு தானே சமாதானம் கூறிக்கொண்டான்.
 

govarthani

Member
Messages
35
Reaction score
24
Points
18
☺️ story super sister .mahava kapathunathu nandri. sakthitha pavam romba payanthudan.ok eallam sari akiduchula .next episode eappo varum .i am waiting :giggle: :giggle: :giggle: ☺️
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
24. திருமண ஏற்பாடு

"என்ன தான் சமாதானம் ஆகிடுவாங்க என்றாலும் அதுவரை ஏன் அம்மா நம் மேல் கோவமா இருக்கனும்?" என்று யோசித்தபடி தன் அம்மாவின் முன் போய், "அம்மா உங்களுக்கு மஹாவா பிடிக்கலேனா நான் வேணா அந்த வீட்டை விட்டு வெளிய போய்டுறேன்." என்றதும் திரும்பி அவனை முறைத்தவர்.

"ஆமா! அவ அங்க வரக்கூடாது." என்றார் அழுத்தமாக.

சுரேஷின் அம்மாவிடம் திரும்பி, "ஹாஸ்பிட்டல்லர்ந்து உன் வீட்டுக்கு நேர கூட்டிட்டு போ" என்றார்.

அவர் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருப்பது புரிய, "சரி அண்ணி" என்றார்.

ஷக்தி தான் பாவமாய் அம்மாவை பார்த்தான்.

"உன் பொண்டாட்டி ஹாஸ்பிடலில் இருக்கற வரைக்கும் நீயும் இங்கயே இரு வீட்டு பக்கம் வராத" என்றார்.

அவரின் சொற்களில் காயப்பட்டாலும் அமைதியாய் இருந்தான்.

"என்னங்க வாங்க போலாம்." என்று சக்தியின் அப்பாவை பார்க்க அவர் சின்ன தலை ஆட்டலுடன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்.

"நீங்க ரெண்டு பேரும் வெளிய வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்." என்று முன்னே நடக்க சுரேஷின் பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவரை பின் தொடர்ந்து நடந்தனர்.

மஹாவை ஒரு நொடி கூட பிரியாமல் பக்கத்தில் இருந்து கண்ணும் கருத்துமாய் கவனித்து கொண்டான்.

மஹாவின் கண்களில் கண்ணீர் தானாய் வழிந்து கொண்டிருந்தது.

"மஹா என்னடா வலிக்குதா டாக்டர் கூப்பிடட்டுமா?"

"இல்ல வலி இல்ல"

"அப்புறம் என்ன?" என்று அவளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தான்.

"இந்த மாதிரி அன்புக்காக நான் சின்ன வயசுலேர்ந்து ரொம்ப ஏங்கி இருக்கேன்." என்றாள் கண்களை மூடியபடி

"இனி ஒவ்வொரு நொடியும் வாழ்நாள் முழுக்க கிடைக்கும் நீ தேவ இல்லாம ஏதாவது யோசிச்சுட்டு இருக்காத. நான் இருக்கேன் இனி உன்னை தாங்கி பிடிக்க" என்றான்.

"சரி" என்று தலையாட்டியவள்.

"சார்! இன்னைக்கு உங்க மனைவி டிஸ்சார்ஜ் ஆகறாங்க இல்ல" என்றார் நர்ஸ.

இதோ வீட்டுக்கும் வந்து விட்டார்கள்.

இன்னும் மூன்று நாட்களில் சுரேஷிற்கு திருமணம் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது.

எல்லோரும் திருமண வேளைகளில் பிஸியாக இருக்க சக்தியை மஹாவிடம் இருக்க சொல்லி விட்டனர்.

மகா இப்பொழுது ஓரளவு தேறி இருந்தாள்.

அவளுக்காக கல்யாண பெண்ணின் அளவுக்கு புடவை பயங்கர க்ராண்டாக எடுத்திருந்தார்கள்.

"எதுக்குமா இவ்ளோ க்ராண்டா எனக்கு எடுத்துருக்கீங்க?" என்றாள்.

"ஏன்டா மகா உனக்கு பிடிக்கலையா வேற கலர் மாத்திக்கலாமா?" சுரேஷின் அம்மா.

"இல்லம்மா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, விலை ரொம்ப அதிகமா இருக்கே?" மஹா.

"அதனால என்னடா? வீட்ல கல்யாணம். நீயும் எங்க பொண்ணு தான.. அதுவும் உனக்கும் இப்ப தான கல்யாணம் ஆகி இருக்கு."

"சரி மா. அது தான் உங்கள் விருப்பம் என்றால் நான கட்டி கொள்கிறேன்." என்றவள் கண் கலங்கினாள்.

"என்ன கண்ணு கலங்குது?"

"அது ஒன்னும் இல்லம்மா! ஊர்ல நம்ம வீடு தான் வசதியானவங்க. ஆனா, பிறந்ததில் இருந்தே எங்க பாட்டிய தவிர எனக்கு யாரும் துணி எல்லாம் எடுத்து கொடுத்ததில்ல. அதான் வசதி எவ்வளவு இருந்தாலும் பாசமான மனசு உள்ள ஜனங்க வேணும்" என்றாள்.

"விடுடா. முடிஞ்சதை பத்தி நினைக்காத. இனி என்னை உன் அம்மாவா நினைச்சுக்க" என்றார்.

"அம்மா" என்று அவரை கட்டி கொண்டாள்.

"நான் இங்க வந்து ஒரு மாசம் ஆக போகுது. இதுவரை நீ யாரு எங்க இருந்து வந்த ஒரு வார்த்தை கூட கேக்கலையே நீங்க?"மஹா.

"கேக்கற மாதிரி எதுவும் நடக்கலையே மா. எங்க ஷக்தியோட மனைவி நீ நிச்சயம் நல்ல பொண்ணா தான் இருப்ப." என்றவரை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

"என்னடா அப்டி பார்க்கற? ஆமா ஷக்தி இதுவரைக்கும் வீட்ல இருக்கவங்க தவிர எந்த பொண்ணுகிட்டயும் பேசினதில்ல. பொண்ணுங்க பேச வந்தாகூட விலகி போயிருவான். அப்படி பட்டவன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தானா அந்த பொண்ணு நிச்சயமா தங்கமா தான் இருக்கும்" என்றார்.

"அம்மா" என்று இதுவரை தன் கடந்த காலத்தை பற்றி கூறினாள்.

"இப்டிலாம்மா கூட மனுஷங்க இருக்காங்க? பாவம் மா நீ. இவ்ளோ சின்ன வயசுல எவ்ளோ கஷ்டங்கள். கவலைப்படாத நிச்சயம் நீ இனி நல்லா இருப்ப." என்று நெற்றியில் ஒரு முத்தம் பதித்தார்.

"இங்க பாரு இதுல கல்யாணத்தன்னைக்கு போட்டுக்க உனக்கு நகைகள் மற்ற எல்லாமே இருக்கு." என்று மஹாவிடம் கொடுத்தார்.

கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் நல்ல படியாக நடந்து கொண்டிருந்தது.

ஷக்தி வேலை விஷயமாக இரண்டு நாள் வெளியூர் சென்றவன் இன்று தான் திரும்பினான்.

நேராக மஹாவை பார்க்க வந்தான்.

"வா டா ஷக்தி எப்போ வந்த?"

"இதோ நேரா இங்க தான் வரேன் ஆண்ட்டி" என்று சிரித்தான்.

"ஆண்ட்டி மஹாவுக்கு எப்படி இருக்கு?" என்றான்.

"பரவால்ல நல்ல முன்னேற்றம். நல்லா இருக்கா" என்றார்.

"சாரி ஆண்ட்டி. என்னால கல்யாண ஏற்பாடு எதுவுமே செய்ய முடியல."

"பரவால்ல பா! போய் மஹாவா பார்"

"சரி" என்று மஹாவின் ரூமிற்கு சென்றவன் மெதுவாக கதவை திறந்தான்.

இத்தனை நாளும் நைட்டியில் இருந்தவள் இன்று தான் குளித்து விட்டு புடவை கட்டிக் கொண்டிருந்தாள்.

பின்னாலிருந்து மெதுவாக அணைக்க பயந்து துள்ளி குதித்து நின்றாள்.

"ஹேய்! மகா நான் தான். ஏன் இப்டி பயப்படற? என்னை தவிர என் பொண்டாட்டிய யாராவது தொட முடியுமா?"

"அன்னைக்கு உங்கள குத்த வந்தது என் மாமா தான்" மஹா.

******

உங்களுக்கு கதை புடிச்சி இருந்த ஷேர் யுவர் ஓட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
25. திருமணம்

ஒரு நொடியில் சக்தியின் முகம் கோவத்தில் சிவந்தது.

"என்ன சொல்ற?"

"அன்னைக்கு உங்கள குத்த வந்தது எங்க மாமா தான்."

"உனக்கு எப்படி தெரியும் வந்திருந்தவன் முகம் முழுக்க மூடியிருந்ததே?"

"எனக்கு கண்டிப்பாக தெரியும் ஏன்னா அவன் போட்டு இருந்த மோதிரம் என் அப்பாவுடையது.

என் அப்பா இறந்த பிறகு அப்பாவுடைய எல்லா நகைகளும் அவர் தான் வைத்திருந்தார். நேற்று உங்களை குத்த வந்தவனின் விரல்களில் அந்த மோதிரம் இருந்தது."

"ராஸ்கல்! நேருக்கு நேர் மோத துப்பில்லை. அவனை நான் சும்மா விட மாட்டேன்" ஷக்தி.

"இல்லை. நீங்கள் ஒன்றும் செய்யக்கூடாது. நாளை சுரேஷ் அண்ணன் திருமணம் முடிந்தவுடன் என்னை அங்கே கூட்டிட்டு போங்க. உங்களுக்கு வர விருப்பம இல்லையென்றால் நானே தனியாக போய்ட்டு வரேன்."

சக்தியின் கோவம் எல்லை மீறி மஹாவின் கழுத்தை பிடித்து சுவரோடு இடித்து நிறுத்தினான்.

"என்ன நினைச்சிட்டு இருக்க? நீ என்னுடையவள். எனக்கு மட்டும் தான் சொந்தம். வேற எவனோட கண்ணும் உன் மேல தப்பா பட்றத நான் விரும்பல." என்றான் இறுகிய குரலில்...

"ஷக்தி விடுங்க... மூச்சு விட... முடியல" என்ற மஹாவின் தேய்ந்த குரலில் பதறி அவளை விடுவித்து,

"ஐ ஆம் சாரி டா! என்னால இனி நீ இல்லாம இருக்க முடியாது. உன் மாமன் பார்வை சரி கிடையாது. அதான் நீ சொன்னவுடனே கோவம் வந்திட்டு. ஐ ஆம் ரியலி சாரி."

ஒரு நிமிடம் அவனை பயத்தோடு பார்த்தவள் சக்தியின் கண்கள் கலங்குவதை பார்த்து, "விடுங்க! ஆனா நாளைக்கு நான் அங்க போயே ஆகணும்." என்றாள் உறுதியாக.

இதுவரை மஹா இப்படி பிடிவாதமாக பேசி அவன் பார்த்ததே இல்லை.

"சரி மஹா. இப்ப என்ன அங்க போகணும் அவ்ளோ தான? நாளைக்கு கல்யாணம் முடிந்தவுடன் நேரா அங்க போறோம் சரியா?" என்றான்.

"சரி" என்று சிரித்தாள்.

"நீங்க ரெடி ஆகுங்க. என்கூடயே இருக்கீங்களே அத்தைக்கு தெரிஞ்சா திட்ட போறாங்க" என்றாள்.

சக்தியின் குடும்பத்திற்கு தன் திருமண விஷயம் தெரிந்ததை பற்றி மஹாவிடம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று ஷக்தி கூறி இருந்ததால் யாரும் அவளிடம் எதுவும் கூறவில்லை.

"இல்ல நீ முதல்ல ரெடி ஆகிடு அப்புறம் பேசலாம்" என்றான்.

அவளும் குளித்து புது புடவை கட்டி கொண்டாள். அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் ஷக்தி அமர்ந்தபடி ரசித்து கொண்டு இருந்தான்.

எல்லா நகைகளும் அணிந்து கொண்டிருந்த அவளின் கை பிடித்து நிறுத்தி ஒவ்வொரு நகையும் தானே போட்டு விட்டான். ஷக்தியின் ஒவ்வொரு தீண்டலிலும் தனக்குள் ஏற்படும் மாற்றத்தை மஹா விரும்ப ஆரம்பித்து இருந்தாள்.

முழுவதும் இருவரும் ரெடி ஆன பின்னர், "பெர்பெக்ட் மஹா ரொம்ப அழகா இருக்க. நீ தான் கல்யாண பொண்ணு மாதிரி இருக்க. சாரீ ஜவெல்ஸ் எல்லாம் உன் செலெக்ஷனா?" என்றான் அவளை பின்னாலிருந்து அணைத்தபடி.

"இல்ல அம்மா தான் குடுத்தாங்க."

"ஓகே ஒண்ணே ஒன்னு மட்டும் மிஸ்ஸிங்" என்றவனை கேள்வியாய் பார்க்க,

"இது தான்" என்று அவளின் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டான். இருவரின் விழிகளும் ஒருவர் மேல் பதிந்திருக்க, நான்கு விழிகளும் இமைக்க மறந்தன.

கதவு தட்டப்படும் ஓசை கேட்க இருவரும் தன்னிலைக்கு வந்தார்கள.

"வழக்கம் போல எந்த கரடின்னு தெரியல போய் பாரு" என்றான்.

தன் சிரிப்பை அடக்கி கதவை திறக்க நின்றது சுரேஷின் அம்மா, "என்னடா கிளம்பிட்டீங்களா? மண்டபத்துக்கு போலாம் எல்லாரும் ரெடி டைம் ஆகிடுச்சு" என்றார்.

"ரெடிமா போலாம்" என்று இருவரும் வெளியே வர, சுரேஷின் அம்மா முன்னே நடந்தார்.

மஹாவின் இடையினை பிடித்து கிள்ளி விட்டு, "ஆண்ட்டி நான் போய் சுரேஷ கூட்டிட்டு வரேன்" என்றான்.

"வேணாம் எல்லாரையும் மண்டபத்துக்கு துரத்திட்டு தான் உங்கள கூபிட வந்தேன்." என்று வாயிற் கதவை பூட்டினார்.

காரில் மண்டபத்துக்கு வந்தவுடன் சுரேஷும் ஜனனியும் நின்றிருந்தனர். அவர்களுக்கு ஆலம் எடுத்து பின்னர் ஷக்தி மஹாகும் எடுத்தனர்.

"இப்ப தான புதுசா கல்யாணம் ஆகி இருக்கு அதான் எடுக்க சொன்னேன்." என்றார் சுரேஷின் அம்மா.

எல்லோரும் உள்ளே நுழைய சுரேஷும் ஜனனியும் மேடை ஏறினர்.

ஷக்தி சுற்றும் முற்றும் நோட்டம் விட்டு கொண்டிருந்தான். ஏதோ ஒரு பொறி தட்டவே நகர முயன்றவனை,

"ப்ளீஸ் என்னை தனியா விட்டுட்டு எங்கேயும் போயிடாதீங்க." என்றாள் மஹா கெஞ்சும் குரலில்.

"இல்லடா எங்கையும் போகல." என்று அவள் கையினுள் தன் கரத்தை நுழைத்து கொண்டான்.

"இங்க என்ன பண்றிங்க ரெண்டு பேரும்? போய் பொண்ணு மாப்ள பக்கத்துல நில்லுங்க" என்று இருவரையும் மேடைக்கு அனுபினார் சுரேஷின் அம்மா.

மேடை ஏரிய இருவரும் தனி தனியாக நின்றனர்.

பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் மாலை கொடுத்தனர். அடுத்து மஹா ஷக்தி இருவருக்கும் மாலை கொடுக்க "எங்களுக்கு எதுக்கு?" என்றான் ஷக்தி.

"உங்களுக்கு எதுக்கா? பின்னாடி திரும்பி பாருங்க" என்றான் வந்தவன்.

மஹாவும் சக்தியும் ஒன்றாக திரும்ப அங்கே இருந்த திரை விலகி ஷக்தி வெட்ஸ் மஹாலக்ஷ்மி அண்ட் சுரேஷ் வெட்ஸ் ஜனனி என்ற எழுத்துக்கள் மின்னியது. ஆச்சர்யமாய் இருவரும் திரும்ப அங்கே சக்தியின் அம்மா நின்றிருந்தார்.

If you like this story please share your valuable votes and comments and keep supporting.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
26. திடிர்

"அம்மா!" என்று புன்னகையுடன் வந்தவனை, "ச்சி தள்ளி போடா" என்று மஹாவை கட்டி பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் பதித்தார்.

"உனக்கு இப்ப உடம்பு பரவா இல்லையாம்மா."

"பரவ இல்லை அத்தை"

"ஹ ஹம்... நீ இனி என்ன அம்மான்னே கூப்பிடலாம்" என்றார்.

"இன்னைலருந்து நீ என்கூட தான் இருக்க போற. உன்ன கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன். உன் பாஸ்ட் பத்தி எல்லாம் எனக்கு தெரியும். சோ, எல்லாத்தையும் கெட்ட கனவா நினைசசு மறந்துருடா" என்றார்.

"சரி" என்று தலையாட்டிய மஹாவிடம், "உனக்கு இந்த புடவை பிடிச்சிருக்கா?"

ஒன்றும் புரியாமல் மஹா பார்க்க, "இது எல்லாத்தையும் என் மருமகளுக்காக நான் பார்த்து பார்த்து வாங்கினது." என்றவுடன் முகத்தில் மலர்ந்த சிரிப்புடன், "எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு" எனறாள்.

"சாரி டா! உன்ன ஹாஸ்பிடல்லர்ந்து வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லிட்டேன்" என்றார்.

'இது எப்போ நடந்தது?' என்று ஷக்தியை பார்க்க.

"அம்மா அவளுக்கு இதை பத்தி எதுவும் தெரியாது."

"நீ யாருக்கும் தெரியாம என் வீட்டுக்கு மருமகளா வரது எனக்கு பிடிக்கல! ஊர் அறிய பெருமையா நம்ம வீட்டுக்குள்ள அடி எடுத்து வைக்கணும்னு தான் நான உன்ன பார்க்க வரல." என்றார் வருத்தமாய்.

"பரவால்லம்மா நீங்க பெரியவங்க எது செஞ்சாலும் கரெக்ட்டா தான் இருக்கும்" என்றாள்.

"சரி டா எல்லாரும் வெயிட் பண்றாங்க. நான் கிழ இருக்கேன் உனக்கு ஏதாவது வேணும்னா என்ன கேளுடா." என்று கீழே இறங்க போனவரின் கையை பற்றி.

"அம்மா திஸ் இஸ் டூ மச்! உங்க மருமக கிட்ட மட்டும் பேசிட்டு இந்த பையன மறந்துட்டீங்க?" என்றான் கெஞ்சலாக.

திரும்பி கையை வெடுக்கென்று பிடுங்கியவர். "சீன் கிரியேட் பண்ணாம போய் நில்லு."

"அம்மா டோன்ட் ட்ரை திஸ். பிக்காஸ் யு டோன்ட். உங்களால என்கிட்ட கோவமா இருக்க முடியாது. பட் அப்படியும் என்ன ஒரு வாரம் தவிக்க விட்டுட்டிங்க."

"போதும் போதும் ஓவர் ஆக்ட்டிங் வேணாம். நீ அன்னைக்கே நான் கேட்டப்ப இல்லம்மான்னு எல்லாம் சொல்லிருந்தான்னா மஹாவ என் கூட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பேன். அவளுக்கு இப்டி எல்லாம் நடந்திடுக்காதுல்ல."

"சாரி மா" என்றான்.

"சரி டா மஹா தனியா நிக்கறா கூட போய் நில்லு." என்று கீழே இறங்கினார்.

வந்தவர்கள் மணமக்களை வந்து வாழ்த்தினர்.

சுரேஷ் சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்க ஜனனி ஏக கடுப்பானாள்.

"டேய்! இப்ப எதுக்கு ஓவரா பேசுற.. அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு ஒருத்தருக்கு இன்னொருத்தர் புடிச்சிருக்கு. அதனால ஜாலியா என்ஜாய் பண்றாங்க. இங்க நீ என்னோட பரம எதிரி அப்புறம் எதுக்குடா வெட்டியா சிரிக்கிற?"

"ஏய்! மொக்க எதுக்கு இவ்ளோ பேசற? எல்லாம் என் தல எழுத்து. அங்க பாரு எங்க அப்பாவை கைல துப்பாக்கி மட்டும் தான் இல்ல. நான் சிரிக்கலன்னா அவர் மொறைக்கறார். அதுவும் இல்லாம எனக்கு இன்னியோட சங்கு ஊத்திட்டாங்க அதனால நான் சந்தோஷத்துல சிரிக்கல கடைசியா வேதனைல சிரிக்கிறேன்."

போன் அடிப்பதை கேட்டு எடுத்து, "ஹலோ! " என்றவனின் முகம் சிவந்து நிற்க...

"என்னாச்சுடா?" எனும் ஷக்தியை அருகில் அழைத்து காதில் கூறியதுடன்.

ஷக்தியின் முகம் மாறுவதை பார்த்த மஹா, "என்னாச்சு என் கோவமா இருக்கீங்க?"

"மஹா நீ என்ன நம்பறயா?" என்று கேட்டான்.

"என்ன இப்டி கேக்கறீங்க? என்னை விட உங்கள தான் நான் அதிகமா விரும்புறேன்." என்றாள்.

"சரி. இதுக்கு அப்புறம் வரவங்கள்ல யார் என்னை பத்தி என்ன சொன்னாலும் நீ என் மேல இருக்க நம்பிக்கையை மட்டும் இழந்துடாத, நான் அதிகமா மரியாதை வச்சுருக்குற எங்க அம்மா மேல சத்தியமா சொல்றேன். நான் விரும்புன முதலும் கடைசியுமான பெண் நீ தான். நீ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது." என்றான் ஷக்தி.

அவன் கண்களில் ஒரு வித பதட்டம் கலந்த பயம் தெரிவதை மஹா உணர்ந்து கொண்டாள். அந்த விழிகள் பேசுவது உண்மையே! என்றது அவளின் மனம்.

"என்ன நடந்தாலும் உங்கள விட்டு போகமாட்டேன்." என்றாள்.

"தேங்க்ஸ் டா"

"ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்றேன். உங்க கண்ல தெரியற பயம் எனக்கு பிடிக்கல. என் புருஷன் வருத்தப்படறத என்னால பார்க்க முடியாது எப்பவும் போல ஜாலியா இருங்க." என்றாள்.

"ஷக்தி!..." என்று ஒரு பெண் கத்துவது கேட்டது.

வேகமாக அங்கே வந்த பெண் சக்தியின் காலரை பிடித்தாள்.

இதை பார்த்து அதிர்ந்த மஹா...

Silent redears niraiya per irukingapaa story paditchutu puditchirundhaa kandipaa vote pannunga.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
27. மஹாவின் பேச்சு

"ஷக்தி" என்று குரல் கேட்கும் திசையில் திரும்பும் முன் சக்தியின் காலரை ஒரு பெண் பிடித்திருப்பதை கண்டு மஹா முதலில் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் பின் ஷக்தி கூறியது நினைவிற்கு வர சக்தியின் கண்களில் தெரிந்தது அதே பயம் கலந்த படபடப்பு.

'அதுகூட நான் என்ன நினைப்பேன் என்பதனால் வந்த குழப்பம். இனி இது நீடிக்க கூடாது' என்று நினைத்தவள்.

"ஏன்டா என்னை ஏமாத்தன? இந்த கல்யாணம் செல்லாது. நா இருக்கறப்ப நீ எப்டி அவ கழுத்துல தாலி கட்டலாம்? உன்ன போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வைக்காம விட மாட்டேன்." என்று கத்தி கொண்டு இருக்க,

ஷக்தி அவளை பார்த்து, "எனக்கு உன்ன பிடிக்கல எத்தனை தடவ சொல்றது?" எனவும்

"இத நீ என் கழுத்துல தாலி கட்றதுக்கு முன்னாடி சொல்லி இருக்கனும்." என்றாள்.

"என்ன?" என்றான் ஷக்தி கோவமாய்.

மஹா அவளிடம், "ஏய்! யாரு நீ? வந்த... என் புருஷன் காலரை புடிச்ச... இப்ப கடைசியா தாலி கட்டிட்டாருன்னு சொல்ற?" என்று கேட்டாள்.

"அதுவா நான் தான் உன்னுடைய சக்களத்தி. உன் புருஷனுக்கு முதல் பொண்டாட்டி." என்றாள் நக்கலாக.

சக்தியை மஹா பார்க்க, "இல்லை!" என்பது போல் பாவமாய் தலை ஆட்டினான்.

"அப்டியா! அப்பிடியே இருந்தாக்கூட இருக்கட்டும். சரி முதல்ல அவர் சட்டைலர்ந்து கையெடு!" என்றாள் கூலாக.

ஒரு நிமிடம அந்த பெண் அதிர்ந்தாலும், "உன் புருஷன் எனக்கு தாலி கட்டிருக்கான்னு சொல்றேன். நீ இவ்ளோ கூலா இருக்க?" என்றாள் சற்றே எரிச்சலுடன்.

"வெறும் வாயிலேயே பேசிட்டு இருந்தா எப்படி? இன்னைக்கு இல்ல, எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது. நாங்க புருஷன் பொண்டாட்டியா ரொம்ப சந்தோஷமா இருக்கோம். என் புருஷன பத்தி எனக்கு தெரியும். ஆதாரம் இருந்தா காட்டு இல்லனா வந்த வழியே போயிரு. அதைவிடுத்து இவளோ பேர் முன்னாடி என் புருஷன் மேல் கைய வச்ச உன் பல்லு முப்பத்தி இரண்டையும் தட்டி கைல குடுத்துருவேன்." என்றாள் கோவமாக மிரட்டும் தொனியில்..

சற்றே அதிர்ந்தாலும் சுதாரித்து, "தோ பார்" என்று மொபைலில் ஒரு சில போட்டோஸ் காட்டினாள்.

அதை பார்த்த மஹா அதிர்ச்சியோடு ஒரு சில நொடி சக்தியை பார்க்க பின் பலமாய் சிரித்தாள்.

"எதுக்கு சிரிக்கிற? இதெல்லாம் பார்த்து லூசாயிடியா?" என்றாள் அந்த பெண்.

"இல்ல உன்ன மாதிரி லூசு யார் இருப்பான்னு நினைச்சு சிரிச்சேன். இதெல்லாம் நம்ப முடியாது வீடியோ இருக்கும்ல. என் புருஷன் உன் கழுத்துல தாலி கட்டிரு பாருல்ல அதை காட்டு நான் நம்பறேன்" என்றாள் மகா.

குழப்பமாய் மஹாவை பார்க்க,

"என்ன அப்படி பார்க்கற க்ராமத்துலேர்ந்து வந்துருக்கா ஒன்னும் தெரியாத பட்டிகாடுன்னு நினைச்சிட்டியா? நானும் பி.இ படிச்சவ தான் அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல. இதெல்லாம் ஒண்ணுமே இல்ல இது மாதிரி ஆயிரம் பொண்ணுங்க கழுத்துல என் புருஷன் தாலி கட்ற மாதிரி போட்டோஸ் செஞ்சி தரவா?" என்றாள் கணீரென்று

"என்னங்க உங்க போன் குடுங்க உங்க மேல அபாண்டமான பொய் சொல்றதுக்கு போலீஸ்ல நான் இவ மேல புகார் குடுக்க போறேன்." என்றதும், அவளின் முகத்தில் பயம் வந்தது .

"இங்க இருந்து போயிரு இல்லனா உன் மேல மான நஷ்ட வழக்கு போட்றுவேன்." எனவும் அங்கிருந்து அந்த பெண் "உங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன்" என்றாள்.

"உன்னால முடிஞ்சதை பார்த்துக்க. நானும் என் புருஷனும் இங்கயே தான் இருப்போம் உன்ன மாதிரி ஓடிர மாட்டோம்" சென்றாள்.

தன் மனைவியை மிகவும் ஆச்சர்யமாக பார்த்தான் ஒரு நாள் கூட அவள் இப்படி பேசி நான் பார்த்தது இல்லையே என்று.

"அண்ணி சூப்பர் அண்ணி கலக்கிட்டீங்க" என்றான் சுரேஷ்.

"தேங்க்ஸ் டா என்ன நம்பனதுக்கு" என்றான் ஷக்தி கலங்கிய கண்களோடு.

"உங்கள நம்பலேன்னா அது என்னையே நான் நம்பாதது மாதிரி சரி விடுங்க."

ஷக்தி தன் மனைவியை சரியாக தேர்தெடுத்து இருக்கிறான் என்று மனம் குளிந்திருந்தார் சக்தியின் தாய்.

எல்லோரும் சாப்பிட்டு படுக்க சென்றார்கள்.

சக்தியும் மஹாவையும் தனி தனி அறையில் தங்க வைத்தனர்

ஷக்தி மஹாவிற்கு போன் செய்தான்.

" ஹலோ! மஹா"

"ம் சொல்லுங்க"

"மாத்திரை போட்டியா? ரொம்ப களைப்பா இருக்கா?"

"மாத்திரை நான் எடுத்துட்டு வரலைங்க. கொஞ்சம களைப்பா தான் இருக்கு. வயிறு லேசா வலிக்கிற மாதிரி இருக்கு" என்றாள்.

"அம்மா இல்லையா பக்கத்துல?"

"இல்ல வெளிய பேசிட்டு இருக்காங்க."

"சரி வை நான் வரேன்"

மஹாவின் அரை நோக்கி நடந்தவனை தடுத்தார் சக்தியின் அம்மா

"எங்கடா போற?"

"அம்மா நீங்க மஹா பக்கத்துல இருக்காம இங்க என்ன பண்றிங்க ?"

"ஏன்டா மஹா தூங்கட்டும்ன்னு தான் நான் வெளிய வந்தேன்."

"அவ இன்னும் முழுசா குணமாகல. டேப்லெட் போடல வயிறு வலிக்குதுன்றா."

"அடடா இப்ப என்ன பண்றது?"

"நான் போய் எடுத்துட்டு வரேன் நீங்க போய் பார்த்துக்கோங்க" என்றான்.

"சரி பா. பார்த்து பாத்திரம் துணைக்கு யாரையாவது கூட்டிட்டு போ"

"சரி மா நான் மஹாவா பார்த்துட்டு போய்டுறேன்."

"சரி வா நானும் வரேன்"

மஹாவின் அறை கதவை திறந்ததும் அவள் மயங்கிய நிலையில் கீழே இருப்பதை பார்த்து பதறி ஓடி சென்று தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான் ஷக்தி

Hi. Ftiends Thanks for your valuable votes and comments and keep supporting.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
28. முடிந்தது இனிதே!

மஹாவை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன் பக்கத்தில் தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை மஹாவின் முகத்தில் அடித்தான்.

"மஹா! கண்ண திற மஹா!" என்று மெதுவாக தன இருக்கைகளில் அவள் முகத்தை ஏந்தியபடி கவலையோடு கூப்பிட்டான்.

மெதுவாக கண்ணை திறந்த மஹா எதிரே சக்தியை பார்த்தவுடன் "ஷக்தி " என்று அழுதபடி அவனை கட்டிக்கொண்டாள்.

அவளின் முதுகினை ஆறுதலாய் தட்டி கொடுத்தான்.

"மஹா என்னாச்சு ஏன் கீழே விழுந்திருந்த முடியலைன்னா எங்களை கூப்பிட்டு இருக்கலாம்ல ?" என்றான்

"என்னங்க அந்த பொண்ணு வந்திருந்தா ?"

"எந்த பொண்ணு?"

"அதான் உங்கள அடிக்க வந்தா இல்ல அவ தான்"

"யாரு வந்தனாவா ?" என்றான்

"எனக்கு அவ பேறே தெரியாதே ?" என்றாள் பாவமாய்

"என்ன சொல்ற மஹா! இவ்ளோ பேர் இருக்கோம் எங்க கண்ல அவ படவே இல்லையே? எப்படி வந்தா ? உன்ன ஏதாவது...... " என்றான் பதட்டமாய்

ஆமாம் என்று லேசாய் தலை ஆட்டி "அவ முழுக்க கவர் பண்ணி இருந்தா, என்ன இங்கேர்ந்து கடத்த தான் வந்தா, எனக்கு மயக்க மருந்து கொடுக்க ட்ரை பண்ணும் போது உங்க ரெண்டு பேர் குரல் கேட்டுச்சு அதனால வேகமா வெளிய போய்ட்டா " என்றாள்.

அப்பொழுது தான் ஷக்தி எதிரே ஒரு பெண் முழுவதும் மூடியபடி சென்றதை நினைவில் கூர்ந்தான்.

"என்ன சொன்னா?"

"நீ இருந்தா தான கல்யாணம் நடக்கும் நான் இருக்க வேண்டிய இடத்துல நீ இருக்க கூடாது" அப்டினு சொன்னா

"சாரி மஹா! என்னால தான் உனக்கு இப்படி ஆகிடுச்சு நீ வயிறு வலிக்குது சொன்ன இப்ப எப்படி இருக்கு நான் போய் டேப்லெட் எடுத்துட்டு வரேன் " என்று எழுந்தவனின் கை பிடித்து " ப்ளீஸ் என் கூடயே இருங்க" என்றாள்

சிறிது நேரம் யோசித்தவன் "சரி ஒரு அஞ்சு நிமிஷம் நான் இப்ப வந்துடறேன் " என்று தன் அம்மாவிடம் திரும்பி "அம்மா மஹா பக்கத்துலயே இருங்க நான் வர வரைக்கும் " என்று வெளியில் சென்றவன் பத்து நிமிடம் கழித்து வந்தான்.

"எங்க போனீங்க?" என்று கேட்க

"மஹா என் பிரெண்ட டேப்லெட் எடுத்துட்டு வர சொல்லிருக்கேன்" என்றவன் அவள் தலைய லேசாக வருடிக்கொடுத்தான்.

அதன்பிறகு மஹாவை விட்டு ஒரு நொடிகூட பிரியாமல் இருந்தான் ஷக்தி.

அதிகாலை அய்யர் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார் ஷக்தி ரெடி ஆகி மணமேடைக்கு போகும் முன் சுபாவையும நிலாவையும் அழைத்து இரவு நடந்ததை கூறி மஹாவை பத்திரமாக அழைத்து வருமாறு கூறி சென்றான்.

சுரேஷும்ரெடியாகி மணமேடையில் அமர்ந்தான் ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் என்பதால் கூட்டம் நிறைய இருந்தது.

சக்திக்குதான் மஹாவை தனியாக விட்டு வந்தது பதட்டமாக இருந்தது.

அய்யர் "பொண்ணுங்களை கூட்டிட்டு வாங்க" என்றார்

சக்தியின் விழி மஹா வரும் வழியையே நிறைத்திருந்தது.

மஹா செதுக்கி வைத்த சிற்பம் போல் இருக்க சக்தியின் விழிகள் அவளை விட்டு நகர மறுத்தது. தன் அருகில் அவள் வந்து அமரும் வரை தன் உயிர் தன்னிடம் இல்லை என்று யோசித்து கொண்டிருந்தான்

இப்பொழுதான் நிம்மதியாய் மூச்சி விட்டான்.

ஜனனி பொற் சிலையாய் எழில் கொஞ்சும் அழகை தலை குனிந்து தன்னோடு சுமந்து வர சுரேஷின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது "இந்த குட்டி பிசாசு கூட இவ்ளோ அழகா ?" என அவளையே பார்த்து கொண்டிருந்தான்..

சுரேஷின் அருகில் வந்து அமர்ந்த ஜனனி "ஏ தடியா என்ன பார்த்தது போதும் மண்டபத்துல இருக்குற எல்லாரும் உன்ன தாண்டா பாக்கறாங்க என் மானத்தை வாங்காத " என்று மெதுவாய் கிசுகிசுத்தாள்.

ஜனனியின்பேச்சில் நினைவிற்கு வந்தவன் " அய்யோ! உன்ன போய் எவனாவது பார்பாங்கலா அங்க பாரு அந்த பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா அவளை பார்த்துகிட்டே இருக்கணும்னு போல இருக்கு" என்று அவள் முகததை பார்த்து வம்பிழுத்தான்.

" குரங்கு ஒழுங்கா அமைதியா இரு இல்லனா முதல் முறையா கல்யாண மேடைல பொண்ணு மாப்பிள்ளையை அடிச்சிட்டான்னு வரும் " என்றாள்

சிறது நேரம் அமைதியாய் இருந்த சுரேஷ் "ஒரே ஒரு டவுட் " என்றான்

"என்ன " என்றால் ஜனனி

"இல்ல குரங்கு எப்பவும் மனுஷங்களை கல்யாணம் பண்ணாதுல " என்றான் பாவமாய்

"இப்ப வாய மூட்ல அக்னி குண்டத்துல இருக்க நெருப்பு உன் வாயில இருக்கும் " என்றால் காட்டமாக

"இருந்தாலும் நீ நல்லாத்தான் இருக்க " என்றான்.

உள்ளே புன்னைகைத்தாலும் " அது எனக்கே தெரியும் " என்றாள் வெடுக்கென்று

"திமிரு பிடிச்சவ " என்று முனகினான் .

"என்னது "

"ஒன்னும் இல்ல " என்றான்

"இப்ப உங்க சண்டை முடிஞ்சிதுன்னா இந்த மந்திரத்தை சொல்லுங்க " என்றார் அய்யர்

மஹாவையே பார்த்து கொண்டிருந்த ஷக்தியை நிலா கிள்ள அவளை முறைதான்.

"இனி எப்பவும் அண்ணி கூட தான இருக்க போறாங்க எல்லாரும் உன்னையே பார்க்கறாங்க " என்று சிரித்தாள்.

"மஹா இப்ப வலி எப்படி இருக்கு ?" என்றான் ஷக்தி

"டேப்லெட் போட்டபுரம் இல்லங்க !" என்றாள் மஹா

அய்யர் " கெட்டிமேளம் கெட்டிமேளம்" என அங்கு சூழ்ந்திருந்த அனைவரின் ஆசியோடு இருவரும் தங்கள் துணையின் கழுத்தில் தாலி கட்டினர்.

எல்லா சடங்குகளும் முடிந்து வந்திருந்த அனைவரும் புகைப்படம் எடுத்து பரிசளித்து வாழ்த்து சொன்ன பின்னர் மணமக்களை வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.

மஹா ஷக்தியிடம் " நாம நேரா ஊருக்கு போயிடடு வரலாம் " என்றாள்.

"மஹா உனக்கு உடம்பு குணமாவட்டும் அப்புறம் போலாம் " என்றான் ஷக்தி

"இல்ல நான் தான் நேத்தே சொன்னேன்ல கல்யாணம் முடிஞ்சா உடனே என்ன கூட்டிட்டு போகணும்னு"

"இப்ப நம்மளுக்கும் தான கல்யாணம் ஆகி இருக்கு இப்ப எப்படி?" என்று இழுக்க

இவர்கள் இருவரும் பார்த்தபடி சக்தியின் அம்மா வந்தார்

"போலாமா ?" என்றவரிடம்

"அம்மா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாலள் மஹா

"சொல்லுமா?"

"தனியா " என்றதும் ஷக்தி சிறிது தூரம் தள்ளி நின்றான்

"அம்மா நான் உங்கள என் அம்மாவா தான் நினைக்கிறன். நான் இப்ப ஊருக்கு போகணும் முடிக்க வேண்டிய வேல ஒன்னு இருக்கு முடிச்சிட்டு தான் நம்ம வீட்ல காலடி எடுத்து வைப்பேன் " என்றாள்

"ஏன் மஹா ஏதாவது பிரசட்சணையா ?"

"இல்லம்மா" என்று தான் நினைத்தை அவரிடம் கூறினாள்.

"ப்ளீஸ் நான் போய்ட்டு வந்துடறேன் " என்று கெஞ்சவும் சிறிது யோசித்து

" சரி போயிட்டு ஈவினிங் உடனே திரும்பிடனும் டிரஸ் மாத்திட்டு போறியா?"

"இல்ல மா இப்படியே போயிட்டு வரேன் " என்றாள்.

சக்தியை அழைத்து "ஷக்தி நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போயிட்டு வாங்க "

"ஆனா அம்மா மஹாக்கு இன்னும்...."

"எல்லாம் எனக்கும் தெரியும் நீங்க போயிட்டு வாங்க " என்றார்.
 

Latest posts

New Threads

Top Bottom