Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

BK NOVEL பகை தீர்க்கவா - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

Last edited:

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
அழகான அன்பர்களே!
சகாப்தம் வண்ணங்கள் போட்டியில் நான் எழுதும் கதை பகை தீர்க்கவா?
வண்ணம் : கருப்பு
அதில் இருந்து சிறு டீசர்.
படிச்சுட்டு கமெண்டுங்கய்யா

ரூமின் உள்ளே நுழைந்தவன் மின் விளக்குகளை உயிர்பித்து தான் கையில் கொண்டு வந்திருந்த உருளை போன்ற வடிவமைப்பினை பெற்ற கண்ணாடி குடுவையை அருகிலுள்ள செல்பில் வைத்தான்.

குடுவையை அதனுள் வைத்தவன் அதை எண்ணத் தொடங்கினான் .

1, 2 … என்று எண்ணத் தொடங்கியவன் முகம் மலர்ந்தது. அங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட குடுவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அதை எண்ணி முடித்தவனின் முகம் திருப்தியுற்றது. அவன் மடிகணிணியை உயிர்பித்ததும் அதன் திரையில் ஒரு பெண்ணிண் கண்கள் மட்டும் தெரிந்தது

அந்த பெண்ணிண் கண்களை ரசனையோடு சில மணித்துளிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், அந்த கண்களோடு பேச ஆரம்பித்தான்

" மைவிழி! ஆஹா ! எவ்வளவு அழகான கண்கள்.!" என்று ரசனையோடு பேச ஆரம்பித்தவன் சட்டென்று முகம் மாற

"நீ அப்டி பண்ணியிருக்கக் கூடாதுடி. ஏன்டி அப்டி செஞ்ச? " என்று அங்கிருந்த குடுவையை உடைத்தபடியே கத்தியவன் சட்டென்று அமர்ந்தான்.

அனைத்து குடுவையையும் அவன் உடைத்திருக்க, அதன் உள்ளிருந்த திரவங்களோடு அதுவும் கீழே விழுந்தது.

கீழே அமரந்தவன் வேகமாக சில மாத்திரைகளை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டான். அதை அப்படியே முழுங்கியவன் சற்று நேரத்தில் கண் அயர்ந்தான்.

கண் அயர்ந்தவனை சுற்றி கண்ணாடிகளாக நொறுங்கி இருக்க, பல திரவங்கள் சூழ, அவனை சுற்றி பரவி கிடந்தது பெண்ணின் கண்கள்.

#####$$$$$$$

"போதும் நிறுத்து! சுப்பு. இன்னும் எல்லாரையும் ஏமாத்தி முட்டாளாக்கி ரசிக்குற உன் பழக்கம் இன்னும் உன்னைவிட்டு போகலயாடி? " - நேகா

நேகா! நான் பொய் சொல்லி எல்லாத்தையும் ஏமாத்தி இருக்கேன்தான். ஆனால் இப்ப சுமார் ஒரு மாத காலமா நான் கனவா பார்க்குற எல்லா விசயமும் உண்மையா நடந்துட்டு வருது. -சுப்ரதா

நேகா! இன்னைக்கு கனவுல நம்ம வார்டன் செத்து போற மாதிரி கனவு கண்டேன்டி என்று அவள் சொல்ல நேகா தூக்கக் கலக்கத்திலேயே தலையாட்டினாள்.

ஏய்? என்னாச்சு ரீமா? ஏன் விடுதியே பரபரப்பாக இருக்கு. - நேகா

நேகா! உனக்கு விசயம் தெரியாதா? நம்ம வார்டன் காலையில் இறந்து போயிட்டாங்க. அதான் எல்லாரும் போய் பார்த்துட்டு வறோம் .அதுவும் சூசைட் என்று அவள் சொல்லிவிட்டுச் செல்ல நேகா திகைத்தாள்.
 
HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
அழகான அன்பர்களே பகை தீர்க்கவா ? கதையிலிருந்து அடுத்த டீசர் படிச்சுட்டு கருத்து திரியில் கமெண்ட் பண்ணுங்கய்யா.

இளைஞன் ஒருவனை கத்திக் கொண்டிருந்தார் தபசு.

"உனக்கு அறிவு ஏதும் இருக்காடா? குறை பிரசவத்தில் பிறந்தவனே!யாராவது இப்படி செய்வாங்களா?" - தபசு

நான் செய்வேன்மா? என்று அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் பிரேம், தபசுவின் பையன்

அடி செருப்பால? எதுத்தா பேசுற? உன்னை? என்று அவனை அடிக்க அவர் வர ,இருவரின் இடையில் புகுந்தாள் பெண்ணவள். அவளைப் பார்த்ததும் தபசு கோபத்தில் கத்தினார் .

" குஞ்சாரம்மா! நீ இதில் தலையிடாத. போ அந்தப் பக்கம் " - தபசு

" அம்மா! விடு அவனை! ஏதோ தெரியாம பண்ணிட்டான். " என்று அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் குஞ்சாரம்மா என்று அவரால் அழைக்கப்பட்ட கனகா.

" டேய்! நில்லுடா? எதுக்குடா அப்டி பண்ண? " - தபசு

அய்யோ!அம்மா ஒரு விஞ்ஞானியை போய் ஏன் செய்யுற? எதுக்கு செய்றனு கேட்டா நான் என்னத்த சொல்றது? - பிரேம்

யாராவது ரத்தத்தை பரிசோதித்து விளையாடுவாங்களா? உன் கைல நீ செஞ்சு பார்க்க வேண்டியது தானடா . நீ விளையாட என் கைதானா கிடைச்சுச்சு? - தபசு

ஆமாம்மா! நீதான் நல்லா பல்க்கா இருக்கே. ரத்தம் லிட்டர் லிட்டரா வச்சிருப்ப? அதான் உன் ரத்தத்தை எடுத்து செக் பண்ணேன். சும்மா சொல்லக் கூடாதுமா நிறைய லிட்டர் தேரும் போலயே.நாளை மிச்சத்தை எடுத்து நான் ரிசர்ச் பண்ண யூஸ் பண்ணிக்குறேன் என்று பிரேம் சொன்னதும்

அடி செருப்பால என்று தபசு விளக்குமாற்றை தூக்கிக் கொண்டு அவனை அடிக்க வர, பிரேம் வேகமாக வெளியே ஓடிவிட்டான்.

கனகாவை பார்த்ததும் பிரேமிற்கு ஞாபகம் வர," அக்கா! நில்லு! போகாத.வண்டில பிரேக்க்க்க்க் … " என்று கத்திக் கொண்டே அவன் வர அதற்குள் அவள் அவனை தாண்டிச் சென்றுவிட்டாள்.

#############
வண்டி பிரேக் பிடிக்காததை அப்போது தான் உணர்ந்த கனகா என்ன செய்வதென்று தெரியாமல் கண்களை மூடிக் கொண்டே எதிரில் இருந்த ஜீப்பின் மேல் மோதி கீழே விழந்தாள் .எழுந்துவள் தன் கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க அப்போது அவள் எதிரில் கோபத்தின் உருவாக வந்து நின்றான் அவன்.
 
HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
பகை 1

இருள் சூழ்ந்திருந்த அந்த ரூமின் உள்ளே தன் கைகளில் எதையோ சுமந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.

ரூமின் உள்ளே நுழைந்தவன் மின் விளக்குகளை உயிர்பித்துவிட்டு தான் கையில் கொண்டு வந்திருந்த உருளை போன்ற வடிவமைப்பினை உடைய கண்ணாடி குடுவையை அருகிலுள்ள செல்பில் வைத்தான்.

அங்கு ஏற்கனவே அதே அமைப்பினைக் கொண்ட பல குடுவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க ,அதனுள் இந்த குடுவையும் சேர்த்து வைக்கப்பட்டது. தான் கையில் வைத்திருந்த குடுவையை குடுவைகளோடு வைத்தவன் குடுவைகளை எண்ணத் தொடங்கினான் .

1, 2 … என்று குடுவைகளை எண்ணத் தொடங்கினான். அங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட குடுவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அதை எண்ணி முடித்தவனின் முகம் திருப்தியுற்றது.

குடுவைகளை எண்ணி முடித்தவன் அருகில் இருந்த மேஜை நோக்கிச் சென்று , அங்கிருந்த மடிகணிணியை உயிர்பித்தான். அவன் மடிகணிணியை உயிர்பித்ததும் அதன் திரையில் ஒரு பெண்ணின் கண்கள் மட்டும் தெரிந்தது.

அந்த பெண்ணின் கண்களோ காடு போன்று அடர்த்தியாக வளர்ந்து இருந்த புருவங்களுடனும், ,அந்த புருவங்களை இணைக்கும் பாலமாக இரு புருவமத்தியின் நடுவே சில கற்றை முடிகள் வளர்ந்து , கண்களின் இமைகளோ வளைந்து பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் அழகோவியமாக காட்சி அளித்தது அந்த கண்கள்.

அத்தனை அம்சங்களோடு கூடிய அந்த பெண்ணின் கண்களை ரசனையோடு சில மணித்துளிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், அந்த கண்களோடு பேச ஆரம்பித்தான்

" மைவிழி! ஆஹா ! எவ்வளவு அழகான கண்கள். இந்த கண்களை பார்த்த நொடியிலிருந்து நான் நானாக இல்லையடி " . என்று தனக்குத் தானே மேலும் பிதற்ற ஆரம்பித்தான் .

"உன் கண்களின் முக்கிய அம்சம் என்ன தெரியுமா , மைவிழி?

உன் இரு கண்களையும் இணைக்கும் அந்த கற்றை முடிகள் தான்டி "

என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென்று மாறியது.

அவன் முகம் கடினமுற, அந்த கண்களை வேகமாக தன் கை கொண்டு குத்த ஆரம்பித்தான் .பின்பு கீழே அமர்ந்து, தன் மடியில் மடிகணிணியை வைத்துக் கொண்டு, அந்த பெண்ணின் கண்களை பார்த்துக் கொண்டே, சுவற்றில் சாய்ந்தான். சுவற்றில் சாய்ந்தவன் தன் பின்னந்தலையை சுவற்றில் மோதியபடியே பேச ஆரம்பித்தான்.

" நீ அப்டி பண்ணியிருக்கக் கூடாதுடி.என்னை அப்டி உதாசினப்படுத்திட்டு போயியிருக்கக்கூடாதுடி "என்று தனக்குள் சொன்னவன் அந்த கண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு , " என்னை அப்படி பார்க்காத மைவிழி! நீ என் கிட்ட என்ன கேட்குறேனு எனக்குத் தெரியும்" என்று சற்று நேரம் இடைவெளிவிட்டவன், தன்னை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான்.

'உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தமா நான் உனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இவைகளை பரிசா தந்திருக்கிறேன். இதோ பார்!' என்று கூறிக்கொண்டே அவன் அங்கிருந்த குடுவைகள் ஒவ்வொன்றையும் திறந்து காட்டினான் .

இப்படியாக அந்த கண்களோடு பேசிக் கொண்டிருந்தவன் தீடீரென்று கோபம் அதிகரிக்க " மைவிழி " என்று கத்திக் கொண்டே அங்கிருந்த குடுவைகள் ஒவ்வொன்றையும் போட்டு உடைத்தான்

" நீ அப்டி பண்ணியிருக்கக் கூடாதுடி. ஏன்டி அப்டி செஞ்ச? " என்று குடுவையை உடைத்தபடியே கத்தியவன் சட்டென்று அமர்ந்தான். அனைத்து குடுவைகளையும் அவன் உடைத்திருக்க, அதன் உள்ளிருந்த திரவங்களோடு அதுவும் கீழே விழுந்தது.

கீழே அமரந்தவன் வேகமாக தன் பேண்ட் பாக்கெட்டின் உள்ளே கையை விட்டு சிறு டப்பா ஒன்றை வெளியே எடுத்தான். அதை திறந்து வேகமாக அதிலிருந்து சில மாத்திரைகளை தன் கைகளில் தட்டி தன் வாயில் போட்டுக் கொண்டான். மாத்திரைகளை வாயில் போட்டவன் அதன் அப்படியே முழுங்கிவிட்டு சற்று நேரத்தில் கண் அயர்ந்தான்.

கண் அயர்ந்தவனை சுற்றி கண்ணாடிகளாக நொறுங்கி இருக்க, அவனை சுற்றி பரவி கிடந்தது பல கண்கள்.

*****

தீப்பெட்டி கட்டிடம் போல ஒன்றன் மேல் ஒன்றாக கட்டப்பட்டிருந்த அந்த மாணவியர் தங்கும் விடுதியின் உள்ளே இருந்த ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

அவள் எழுந்து அமர்ந்ததும் அருகில் இருந்த பெண்ணும் வேகமாக எழுந்தாள்.

" இப்ப என்னடி? நீ இன்னும் தூங்கலையா? நீ எழுந்தா எனக்கும் டிஸ்டர்ப் ஆகுதுடி. பேசாம படு சுப்பு " என்று எழுந்த நேகாவோ தன் வாயை மூடிக் கொண்டே ஒரு கொட்டாவியை விட்டபடி அருகில் இருந்த சுப்பு என்று அழைக்கப்பட்ட சுப்ரதாவைப் பார்த்து கத்தினாள்.

நேகா தூக்கம் கலைந்த எரிச்சலை சுப்ரதாவிடம் காட்டிக் கொண்டிருந்தாள் நேகா, சுப்ரதாவின் ரூம் மேட்.

அதை கேட்ட சுப்ரதா நேகாவிடம் திரும்பி,

"நேகா! இன்னைக்கு திரும்பவும் அந்த பொண்ணு கனவுல வந்தா . அவ கனவுல வந்து .. "என்று சுப்ரதா அவள் சொல்வதற்குள் நேகா இடையில் பேசினாள்.

"வந்து … உனக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க இன்றைக்கு இறக்கப் போறாங்கனு சொல்லியிருந்திருப்பாளே? " – நேகா.

"அட ஆமாம்டி!நான் கனவுல பார்த்ததை அப்படியே சொல்றியே எப்படி டி ? " - என்று சுப்ரதா ஆச்சரியமாக கேட்க, நேகா அவளை பார்த்து முறைத்தாள்.

"ஏன்டி முறைக்குற? " -சுப்ரதா.

"என் தூக்கத்தை கெடுத்தவும் இல்லாம கேள்வியா கேட்குற? " – நேகா.

"அதில்லைடி…." – சுப்ரதா.

"நிறுத்து சுப்பு! இப்டி எல்லா இரவும் பேய் மாதிரி எந்திரிச்சு என்னையும் தூங்கவிடாம டிஸ்டர்ப் பண்றடி. இன்னும் நீ பொய் சொல்லி எல்லாத்தையும் ஏமாத்துற பழக்கத்தை விடலையா? "- நேகா.

"அய்யோ! நேகா! நீ நினைக்குற மாதிரி இல்லை . சத்தியமா நான் அவங்க சாகுற மாதிரி கனவு கண்டேன்டி" – சுப்ரதா.

ஆமா யாரு சாகுற மாதிரி கனவு கண்ட? உன் செத்துப் போன தாத்தா சாகுற மாதிரியா ? - நேகா

இல்லைடி. நம்ம … என்று சுப்ரதா ஏதோ சொல்வதற்குள் அவளை சொல்லவிடாமல் இடையில் பேசினாள் நேகா.

" போதும் சுப்பு. இன்னும் பொய் சொல்லி எல்லாரையும் முட்டாளாக்கி ரசிக்கும் உன் பழக்கம் இன்னுமா உன்னைவிட்டு போகலடி? " – நேகா.

"அப்படியில்லை நேகா! நான் பொய் சொல்லி எல்லாத்தையும் ஏமாத்தி இருக்கேன்தான் ஒத்துக்குறேன். ஆனால் சுமார் ஒரு மாத காலமா நான் கனவா பார்க்குற எல்லா விசயங்களும் நிஜங்களா என் கண் முன்னே நடந்துட்டு வருது. அதனால் இன்றைக்கு நான் பார்த்த விசயமும் கண்டிப்பா நடக்கும்டி -சுப்ரதா.

"ம்ம்ம்... இதை எவளாச்சும் கேனச்சி ஒருத்தி இருப்பா அவகிட்ட போய் சொல்லு,அவ வேணா நம்புவா உன் கதையை நம்புவா . இப்ப நீ பேசாமபடுக்குறீயா இல்ல நான் வெளியே போய் தனியா படுத்தூக்கட்டுமா? என்று நேகா சொல்ல சுப்ரதா பதறினாள்.

"அய்யோ … வேண்டாம் நேகா. என்னை தனியே விட்டு போயிராதடி. எனக்கு தனியா படுக்க பயமாயிருக்கு" – சுப்ரதா.

அப்ப வாயை மூடிட்டு பேசாமபடுடி -என்று சுப்ரதாவை திட்டிவிட்டு நேகா படுத்துக் கொள்ள, சுப்ரதாவும் அவள் அருகில் படுத்துக் கொண்டாள்.

ஆனால் சற்று நேரத்திற்குள் திரும்பவும் ஆரம்பித்தாள் சுப்ரதா.

"நேகா! இன்னைக்கு நான் கனவுல பார்த்தது, என்னனு கேட்க மாட்டியா?" - சுப்ரதா.

"திரும்ப ஆரம்பிச்சுட்டியா? நான் கேட்க மாட்டேன்னு சொன்னா விடவா போற. சொல்லித் தொலை!" - நேகா.

இன்னைக்கு கனவுல நம்ம வார்டன் இறந்து போற மாதிரி கனவு வந்துச்சுடி என்று அவள் சொல்ல நேகா தூக்கக் கலக்கத்திலேயே "அப்படியா? ரொம்ப சந்தோசம். அந்த லேடி ஹிட்லர் போய்ட்டா நம்ம ஜாலியா இருக்கலாம்.நாளை அதுக்கு ஒரு மாலையை வாங்கி போட்டுருவோம் .கவலைபடாத என்று முணங்கியபடியே அவள் தூங்கிவிட " எரும! உன்கிட்ட போய் சொன்னேன் பாரு! " என்று சுப்ரதா தன் தலையில் அடித்துக் கொண்டே தானும் படுத்து தூங்கிவிட்டாள்.

காலையில் இருவரும் தாமதமாக எழுந்து வெளியே வர, அங்கிருந்த மாணவியர்கள் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அதை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக தன்னை கடந்து சென்ற ஒரு மாணவியை நிறுத்திக் கேட்டாள் நேகா.

"ஏய்? ரீமா! நில்லு . என்னாச்சு ரீமா? ஏன் விடுதியே பரபரப்பாக இருக்கு." – நேகா.

"நேகா! உனக்கு விசயம் தெரியாதா? நம்ம வார்டன் காலையில் இறந்து போயிட்டாங்க. அதான் எல்லாரும் போய் அவங்களைப் பார்த்துட்டு வறோம் .நேகா அவங்க சூசைட் பண்ணிகிட்டாங்க தெரியூமா" என்று அவள் சொல்லிவிட்டுச் செல்ல நேகாவும் சுப்ரதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

*****

அந்த போலிஸ் குவாடர்ஸில் பல குடியிருப்புகள் இருக்க, அதில் இருந்த ஒரு வீடு மட்டும் அந்த காலை வேளையில் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

அங்கு இளைஞன் ஒருவனை கத்திக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெண்மணி தபசு.

"உனக்கு அறிவு ஏதும் இருக்காடா? குறை பிரசவத்தில் பிறந்தவனே. யாராவது இப்படி செய்வாங்களாடா?" - தபசு

"நான் செய்வேன்மா…" என்று அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் 21 வயசான பிரேம், தபசுவின் பையன்

"அடி செருப்பால!. எதுத்தா பேசுற? உன்னை…" என்று அவனை அடிக்க அவர் கை ஓங்கிக் கொண்டு வர, இருவரின் இடையில் புகுந்தாள் பெண்ணவள். அவளைப் பார்த்ததும் தபசு கோபத்தில் கத்தினார் .

" குஞ்சாரம்மா! நீ இதில் தலையிடாத. போ அந்தப் பக்கம் " - தபசு

" அம்மா! விடு அவனை! ஏதோ தெரியாம பண்ணிட்டான். " என்று அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் குஞ்சாரம்மா என்று அவரால் அழைக்கப்பட்ட கனகா.

இன்னைக்கு நான் அவனை விடுறதா இல்லை குஞ்சாரம்மா - தபசு.

அம்மா பிளிஸ் … என்று கனகா இங்கு அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, பிரேமோ அவர்களின் இடையில் புகுந்தான்.

" ஏய்! குஞ்சாரம்மா! தெரிஞ்சுதான் நான் அப்டி பண்ணேன். தெரியாமலா பண்ணல. " என்று அவன் சொன்னது தான் தாமதம் கனகாவைப் பார்த்து முறைத்தார் தபசு.

அவளைப் பார்த்தீயா… என்ற ரீதியில் தபசு பார்த்துக் கொண்டிருக்க, கனகா வேகமாக

நான் கிளம்புறேன்மா... என்று அவரிடம் சொல்லிக் கொண்டு அவரிடம் தப்பித்து வேகமாக கீழே செல்ல, அவளை பின்பற்றி பிரேமும் செல்ல முயன்றான்.

ஆனால் தபசு அவனை போக விடாமல் நிறுத்தினார்.

" டேய்! நில்லுடா? எதுக்குடா அப்டி பண்ண? " - தபசு

"அய்யோ!அம்மா ஒரு விஞ்ஞானியை போய் ஏன் செய்யுற? எதுக்கு செய்றனு கேட்டா நான் என்னத்த சொல்றது?" - பிரேம்

"இல்ல நீ சொல்லியே ஆகனும் . ஏன்டா அப்டி பண்ண. யாராவது ரத்தத்தை பரிசோதித்து விளையாடுவாங்களாடா . அந்த பரிசோதனையை உன் கைல நீ செஞ்சு பார்த்து விளையாட வேண்டியது தானடா . ஏன்டா என் கைல விளையாண்ட ?" - தபசு

"அது வேற ஒன்றுமில்லைமா . என்னோட உனக்கு தான் ரத்தம் ஜாஸ்தியா இருக்கும். ஏனா நீதான் நல்லா பல்க்கா இருக்கே. அதனால் ரத்தம் லிட்டர் லிட்டரா வச்சிருப்ப. அதான் உன் ரத்தத்தை எடுத்து செக் பண்ணேன்.

சும்மா சொல்லக் கூடாதுமா நிறைய லிட்டர் தேரும் போலமா.. நாளைக்கு மிச்சத்தை எடுத்து நான் ரிசர்ச் பண்ண யூஸ் பண்ணிக்குறேன்" என்று பிரேம் சொன்னதும், "நாயே!..." என்று தபசு விளக்குமாற்றை தூக்கிக் கொண்டு அவனை அடிக்க வர, பிரேம் வேகமாக வெளியே ஓடிவிட்டான்.

"இரு! வீட்டுக்குள்ளே வா உன்னை வச்சிக்குறேன்" என்று தபசு அவனை திட்டிவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.

அவரிடம் தப்பித்து வெளியே ஒடிவந்தவன் தன் தலையை தானாக தட்டிக் கொண்டு யோசித்தபடியே நடந்து வந்தான்.

"சயின்டிஸ்ட் பிரேம்! நீங்க எதையோ மறந்துட்டிங்க?" என்று அவன் யோசித்துக் கொண்டே வர, அவனை கடந்து சென்றாள் கனகா .

கனகாவை பார்த்ததும் பிரேமிற்கு ஏதோ ஞாபகம் வர, " அக்கா! நில்லு! போகாத.வண்டில பிரேக்க்க்க்க் …" என்று கத்திக் கொண்டே அவன் வர அதற்குள் அவள் அவனை தாண்டிச் சென்றுவிட்டாள்.

கனகா தன்னை பார்க்கவில்லை என்றதும் பிரேம் கத்தினான்

" அக்கா! வண்டி பிரேக் வயர் இங்க இருக்கு " என்று அவன் தன் கையில் இருந்த பிரேக் வயரைக் காட்டி கத்த ஆனால் அவளோ அவன் பேச்சு காதில் கேட்காத தூரத்தில் சென்று கொண்டிருந்தாள் கனகா.

*****

அந்த டிவிஎஸ் எக்சல்லை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்த கனகா தான் வேலை பார்க்கும் இடம் வந்ததும் வண்டியை நிறுத்த முயல, வண்டி பிரேக் பிடிக்கவில்லை.

வண்டி பிரேக் பிடிக்காததை அப்போது தான் உணர்ந்த கனகா என்ன செய்வதென்று தெரியாமல் கண்களை மூடிக் கொண்டே எதிரில் இருந்த ஜீப்பின் மேல் மோதி கீழே விழந்தாள்.

மோதி கீழே விழுந்தவளுக்கு கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்க, அதை பார்த்தபடியே கஷ்டப்பட்டு எழுந்து நின்றவள், எதிரே பார்க்க அங்கு கோபத்தின் உருவாக நின்றிருந்தான் அவன். அவனைக் கண்ட கனகா திகைத்தாள்.

தீர்ப்பாள் …
 
HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
பகை 2

சிவப்பு நிற உடையை உடுத்திக் கொண்டு, அதன் மேலே கருப்பு நிறத்திலான பெரிய அங்கி ஒன்றை அணிந்து கொண்டு, முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் மற்ற பாகங்கள் துணி கொண்டு மறைக்கப்பட்டு, தன் கைககளில் கத்தி ஒன்றை ஏந்திக் கொண்டு அந்த விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது உருவம் ஒன்று.

அந்த உருவத்தின் கண்களோ வேட்டை நாயின் வெறியை பிரதிபலித்தது . அந்த கண்களை சற்று உற்று நோக்கினால், அவை ஒரு பெண்ணின் கண்களை போன்றிருந்தது.

இருளில் சென்று கொண்டிருந்தவள் அந்த விடுதியின் முன் சென்று நிற்க, அந்த விடுதியை காவல் காத்துக் கொண்டிருந்தவனோ உட்கார்ந்தபடியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனை எழுப்பாமல் மெதுவாக அவனை தாண்டிச் சென்றவள், விடுதிக்குள் சென்று ஒரு அறையின் முன் நின்று கதவைத் தட்டியவள், அவர்கள் கதவை திறப்பதற்குள் தன் கை விரல்கள் ஒவ்வொன்றையும் மடக்கி மடக்கி விரித்தாள். அவளது பொறுமையை சற்று நேரம் சோதித்துவிட்டு கதவை திறந்தார் ஒரு பெண்மணி.

அந்த பெண்மணி கதவை திறந்து 'யார்?' என்று அங்கு நின்றவளைப் பார்த்து கேட்டது தான் தாமதம், பெண்ணவள் அவரது வாயை பொத்திக் கொண்டு அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள்.

உள்ளிருந்து சற்று நேரத்தில் திரும்பி வெளியில் வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் கைகளில் வழிந்த ரத்தத்தை அது கீழே வழிவதற்குள் வேகமாக தன் கையில் இருந்த துணி கொண்டு தன் கைகளை வேகமாக சுற்றிக் கொண்டு யாரும் பார்ப்பதற்குள் அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.

*****

தன் அறையில் குளித்துவிட்டு பேண்ட் மற்றும் சட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் தலையை வாரிக் கொண்டிருந்தான் அமுதன்.

கண்ணாடியில் தன் தலையை வாரி முடித்தவன் அருகில் இருந்த மேஜையில் இருந்த அந்த கோட்டை அணியாமல் தன் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து அங்கிருந்த உயர்ந்த ரக காரில் ஏறினான்.

காரில் ஏறி அமர்ந்தவன் அதனை உயிர்பித்து தன் கைகளை ஸ்டீரிங்கில் தட்டியபடியே மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். அரை மணி நேர பயணத்தின் பின் கார் அந்த உயர்ந்த கட்டிடத்தின் முன் சென்று நின்றது.

காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவன் தன் அறையை நோக்கி சென்று கொண்டிருக்க, அவனை வழியில் பார்த்த அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்தனர். அனைவரின் வணக்கத்தையும் தன் ஒற்றை தலையசைப்பால் ஏற்று கொண்டவன், அவன் அறையின் முன் நின்று, தன் முன் இருந்த அமுதன் MBBS., பெயர் பலகையை தன் கைகளால் ஆசையோடு வருடினான்.

பின் ஊள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்ததும் அவள் அருகில் வந்து நின்றாள் செவிலி. அவளைப் பார்த்த அமுதன் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தான்.

"மிஸ் ஷீலா! அந்த பத்தாம் நம்பர் பேசண்ட்டிற்கு டிரிப்ஸ் போட்டாச்சா?" -அமுதன்.

" எஸ் டாக்டர்!" - ஷீலா.

" அந்த பெரியவர்க்கு பிபி, பிரஷர் செக் பண்ணியாச்சா?" - அமுதன்.

" எஸ் டாக்டர்! எவிரிதிங் நார்மல்" - ஷீலா.

"ஓ.பி ல எத்தனை பேசண்ட்ஸ் வெயிட் பண்றாங்க?" - அமுதன்.

"30 பேர் சார்..." - ஷீலா.

"ஓ! ஏன்? முதலலேயே எனக்கு போன் பண்ணி இன்டிமேட் பண்ணல?" என்று நர்சை பார்த்து கத்தினான்.

"உங்களுக்கு போன் பல தடவை பண்ணேன் சார். ஆனால் உங்க போன் நம்பர் அவுட் ஆஃப் கவரேஜ்னு சொல்லுச்சு சார்.." என்றதும்,

சற்று நேரம் எதையோ யோசித்த அமுதன் "ஓ.. சரி.. ஷீலா 5 மினிட்ஸ் கழிச்சு பேசண்ட்ஸை வரச் சொல்லுங்க" என்று அவன் சொல்லிவிட்டு அங்கிருந்த மீன் தொட்டியின் அருகே சென்று நின்றதும்,

"ஓகே சார்..." என்று ஷீலா தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள்.

அவள் சென்றதும் சற்று நேரம் அந்த மீன்களைப் பார்த்தபடியே தன் தலையை முன்பக்கம், பின்பக்கம் அசைத்தவன் அதன்பின் தன் கண்களை மூடியபடியே நெற்றியை தன் கை கொண்டு குத்தினான்.

இப்படியாக ஐந்து நிமிடங்கள் அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே கழிய, கதவை தட்டிக் கொண்டு நோயாளிகள் ஒருவரின் பின் ஒருவர் உள்ளே வர ஆரம்பித்தனர்.

அவர்களை பார்த்ததும் தன்னை மறந்தவன், அவர்களிடம் அன்போடும் சிரித்த முகமாகவும் பேசியபடியே அவர்களது நோயினை ஆராய்ந்தான். அவனது சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகள் பலர் .

-----

இப்ப அமுதன் பத்தி சின்ன இண்ட்ரோ பார்த்துடலாம். வாங்க அன்பர்களே!

அமுதன், இறுகிய கட்டமைப்பு கொண்ட உடல்வாகு, மீசை, தாடி என ஏதுமின்றி முகம் சவரம் செய்யப்பட்டு, தாடியின்றி சாக்லேட் பாய் என்று கூறும் அளவிற்கு அழகன். ஒரு தலைசிறந்த மருத்துவன். ஆரம்பத்தில் சிறிய அளவிலான கிளினிக் ஒன்றை வைத்து நடத்திக் கொண்டு வந்தவன் இப்பொழுது பெரிய அளவில் மருத்துவமனை ஒன்றினை வைத்து அனைவருக்கும் சிறந்த முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டு வருகிறான்.

இப்ப இங்க வாங்கய்யா.

-----

அன்று வந்த நோயாளிகளை பார்த்து முடித்த அமுதன் அருகிலிருந்த தன் பர்ச்சை எடுக்க முயல,அப்போது அதிலிருந்து வளையல் துண்டுகள் கீழே விழுந்தன. அதை எடுத்து பார்த்தவனின் முகம் வருத்தமடைந்தது.

அவனையும் மீறி அவளது உதடுகள் சாரு… என்று முணுமுணுத்தது.

*****

தன் எதிரில் நின்று தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்ட கனகா வேகமாக எழுந்து, சலூயூட் அடித்தபடியே "குட்மார்னிங் சார்!" என்று அவனுக்கு வணக்கம் வைக்க, அதை கண்டவனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது.

"கான்ஸ்டபிள் கனகா, வணக்கம் வைக்குற நேரமா இது. யூ ஆர் 5 மினிட்ஸ் லேட். நீ டெய்லி லேட்டா தான் வருவியா? இன்னைக்கு ஒரு படி மேல போய் வீர சாகசம்லா பண்ற? என்ன இதெல்லாம்? என்று தன் ஜீப்பின் முன் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த பம்ப்பரை காட்டி அவன் அவளை திட்ட , கனகாவோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். அவள் விழிப்பதை பார்த்தவன் மேலும் கத்தினான்.

" அப்பா செத்துட்டாங்கனு அவர் வேலையை வாங்கிட்டா மட்டும் பத்தாது. அதற்குண்டான வேலையையும் செய்யணும். வேலையில் சேர்ந்து என் கழுத்தை அறுக்கனே வந்திருக்குதுங்க" என்று கனகாவை திட்ட, அதை கேட்ட கனகாவோ வருத்தமடைந்தாள்.

அவள் வருத்தத்தை பார்த்தவன் அருகில் இருந்த ஏட்டைப் பார்த்து " ஏட்டு! அந்த ***மாணவியர் விடுதிக்கு அவங்களை வரச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு அவன் தன் ஜீப்பில் ஏற. கனகாவும் வேகமாக ஜீப்பின் பின்னால் ஏறி அமர்ந்தாள். திரும்பவும் தாமதமாக சென்று அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவள் தயாராக இல்லை.

கனகாவையும், ஏட்டு பெருமாளையும் ஏற்றிக் கொண்டு அந்த மாணவியர் விடுதியை நோக்கி தன் வண்டியை செலுத்தினான் அவன், நந்தவர்மன்., அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ் .

-----

இப்ப நந்தவர்மன்,கனகா பத்தி சின்ன இண்ட்ரோ பார்த்துடலாம். வாங்க அன்பர்களே!

நந்தவர்மன் காவல் அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்போடும், நடை பாவனைகளில் கண்டிப்போடும் நேர்மை தவறாத ஒரு சிறந்த கமிஷ்னராக விளங்கினான்.

அவனுக்கு கீழ் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் கனகா. கனகாவின் தந்தை கேஸ் ஒன்றில் தீவிரவாத அமைப்பினால் சுட்டுக் கொல்லப்பட அந்த வேலை வீட்டில் மூத்த வாரிசான கனகாவிற்கு கொடுக்கப்பட்டது.

மென்மையின் இலக்கணமாக, பயத்தின் முழு உருவமாக இருந்த கனகா குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் நந்தவர்மன் அவளை திட்டிக் கொண்டே இருந்தான்.

சரி.. சரி.. கனகாவையும், நந்தவர்மனை பற்றிய அறிமுகம் பார்த்தாச்சு. கதைக்குள்ள போகலாம் அன்பர்களே.

-----

கனகாவை அழைத்துக் கொண்டு அந்த விடுதியை நோக்கி பயணப்பட்டவன் சற்று நேரத்தில் அந்த மாணவியர் தங்கும் விடுதியின் முன் வண்டியை நிறுத்தினான்.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன் கனகாவைப் பார்க்க, அவனது பார்வையின் பொருளை படித்த கனகா வேகமாக விடுதியின் உள்ளே சென்றாள். உள்ளே சென்றவள் சற்று நேரத்தில் வெளியே வர, அங்கு ஆம்புலன்ஸும் வந்து நின்றது.

அதை தொடர்ந்து அந்த விடுதியின் வார்டன் வண்டியில் ஏற்றப்பட, கனகா நந்தவர்மன் அருகில் வந்தாள்.

"சார்!தூக்கு போட்டு தொங்கி இருக்காங்க. ஆனால் இது தற்கொலை மாதிரியும் தெரியுது. கொலை மாதிரியும் தெரியுது என்று அவள் சொல்ல, நந்தவர்மன் சற்று நேரம் யோசித்தான்.

"இதே மாதிரி தான போன வாரம் அந்த ****காலேஜ் வார்டன் இறந்து போனாங்க" நந்தவர்மன்

"எஸ் சார்" - கனகா.

"சோ! இது தற்கொலையல்ல! கொலை. விரைவில் இதை பூருவ் பண்றேன் என்று அவன் சொல்ல கனகா தலையசைத்தாள்.

*****

அந்த அறையில் கண் மூடி கிடந்தவனோ எழுந்து தன் கையில் இருந்த மாத்திரை டப்பாவை தூக்கி எறிந்து

"மை விழி! மைவிழி!" என்று பிதற்ற சற்று நேரத்திற்குள் அவன் கையில் நடுக்கம் ஏற்பட, வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

வெளியே சென்றவன் காரை இலக்கற்று ஒட்டிக் கொண்டிருக்க, அவன் கண்களில் விழுந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணை பார்த்ததும் அவனின் கைகளின் நடுக்கம் குறைய. "மைவிழி" என்று அழைத்துக் கொண்டே அந்த பெண்ணின் அருகில் வண்டியை நிறுத்தினான் அவன்.

தீர்ப்பாள்.
 
HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
பகை 3

அந்த இருட்டு ரூமில் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் கண்கள் அச்சத்தை பரதிபலித்தது. காரணம் அவளின் முன் கூர்மையான ஆயுதம் ஒன்றினை ஏந்திக் கொண்டு நின்றிருந்தான் அவன். அந்த கூர் ஆயுதத்தையும் அவனையும் பார்த்தவளுக்கு, கண்களில் பயத்தையும் மீறி கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் அழுவதைப் பார்த்தவன் அவள் அருகில் வேகமாக வந்து, அவளது கண்களில் இருந்து விழும் கண்ணீரை தன் கையில் தொட்டு பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.

"மைவிழி! மைவிழி! எதுக்கு இப்ப நீ அழுகுற? இங்கே கொஞ்சம் என்னை பார்!" என்று சொல்லிக் கொண்டே அவன் அவளது வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு அவளது நாடியை பற்றி தன்னை பார்க்கச் செய்தான். ஆனால் அவன் துணியை எடுத்ததும் அந்தப் பெண் "என்னை காப்பாத்துங்க! என்னை காப்பாத்துங்க!" என்று கத்த ஆரம்பித்துவிட்டாள். அவள் கூச்சலிட ஆரம்பித்ததும் வேகமாக அவள் அருகினில் வந்து அவளது வாயை தன் கைகளால் அடைத்தான் அவன்.

அவளது வாயை அடைத்தவன் "சூ சூ! கத்தக்கூடாது. அதையும் மீறி நீ கத்துனே, இந்த கத்தி உன் தொண்டையில் இறங்கிடும்" என்று அருகில் இருந்த கத்தியை எடுத்து அவளை மிரட்டினான் அவன். அவன் அப்படி மிரட்டியதும் அந்த பெண் வேகமாக தன் வாயை மூடிக் கொண்டாள். அவள் வாயை மூடியதும் " குட்!" என்று கூறியபடியே அவள் அருகில் அமர்ந்த மேலும் பேசினான் அவன்.

"மைவிழி! நீ ‘காப்பாத்துங்கனு‘அப்படி கத்தி இருக்கக்கூடாது? யாராவது பார்த்தா என்னை பற்றி என்ன நினைப்பாங்க? அசடு! அசடு! வளர்ந்திருக்குறீயே தவிர உனக்கு மூளையே கொஞ்சம் கூட இல்லை" என்று சொல்லியபடியே அவளது தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டினான் அவன். அதன்பின் சற்று நேரம் யோசித்தவன் மீண்டும் சொன்னதையே சொல்ல ஆரம்பித்தான்." நீ இப்படி பண்ணி இருக்கக்கூடாது மைவிழி. நீ இப்படி பண்ணுவேனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல தெரியுமா? மறுபடியும் நீ இப்படி பண்ண, உன்னை நிரந்தரமா கத்த விடாம பண்ணிடுவேன் பார்த்துக்கோ” என்று கூறிக் கொண்டே அவளது தொண்டையின் அருகில் அந்த கூர் ஆயுதத்தை அவன் கொண்டு செல்ல, அவளது தொண்டை குழி பயத்தில் ஏறி இறங்கியது, அதை பார்த்தவன் அந்த ஆயுதத்தை வேகமாக அவளது தொண்டை குழியில் இருந்து எடுத்து அருகில் வைத்தான்.

பின்பு அவளிடம் திரும்பி, " அய்யோ மறந்துட்டேன் பாரேன். ஆமாம் என்னை காப்பாத்துங்கனு எதுக்கு கத்தின?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க நிமிடத்திற்கு நிமிடம், நிறம் மாறும் அவனது முகத்தை பயத்துடன் பார்த்துக் கொண்டே அந்த பெண் அவனது கேள்விக்கு பதில் சொன்னாள்

"உன்னைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. நீ என்னை கொலை செய்யப் போறீயா?" என்று அந்த பெண் பயந்து கொண்டே கேட்க,

அதை கேட்டு அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் தலையில் தட்டிக் கொண்டே சற்று நேரம் யோசித்தான் மிஸ்டர் எக்ஸ்.

"மைவிழி! என்னை பார்த்தா பயமா இருக்குனு சொன்ன? நீயே என்னை பார்த்து இப்படி சொல்லலாமா? நான் உன் பாவா மைவிழி.! பாவாவை பார்த்து யாராவது பயப்படுவாங்களா? இல்லை கொலை தான் செய்வாங்களா?’’ – என்று அவன் அவளிடமே மறுகேள்வி கேட்க, அதை கேட்ட பெண்ணவளோ திகைத்தாள்.

"இல்லை! இல்லை! நீ என் பாவா இல்லை. நீ ஏதோ தப்பா என்னை புரிஞ்சி வச்சிருக்க. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல.

பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சிற்காக காத்து கொண்டு நின்று கொண்டிருந்த என்னிடம் நீயா வந்து அட்ரஸ் கேட்குற மாதிரி கேட்டுட்டு, இப்படி என்னை இங்கே கடத்திட்டு வந்துட்ட. அதுமட்டுமல்ல நீ இப்படி முறை தவறி என்கிட்ட பேசுறது சரியில்லை" என்று அவள் கூற, அவனோ அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னை அவன் பார்க்கும் பார்வையை கவனித்த அந்த பெண் தன் பேச்சை வேகமாக நிறுத்திக் கொண்டு, " ஏன்? என்னை அப்படி பார்க்குற?” என்று பயத்தோடு கேட்டாள்.

‘ம்ம்ம்...' என்று சற்று நேரம் யோசித்தவன் அவளது முகத்தை பற்றி முன்னே பின்னே திருப்பி திருப்பிப் பார்த்தான். பின்பு கோபம் தலைகேற

"மைவிழி! உன் அழகான கண்கள் எங்க போச்சு?” என்று எக்ஸ் அவளைப் பார்த்து கத்தினான். அவன் அப்படி கத்த ஆரம்பித்ததும் அந்த பெண் வேகமாக

"நான் உன் மைவிழி இல்லை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! என்னை என் வீட்டில் தயவு செய்து கொண்டு போய் விட்டுடு ” என்று அந்த பெண் அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் கெஞ்ச ஆரம்பித்தததும் அதை கேட்டு சற்று நேரம் தலை குனிந்து அமர்ந்திருந்தான் அவன். அந்த பெண் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அந்த பெண் எக்ஸ் தலை குனிந்தபடியே பேசினான்.

"ஆமா. நீ சொல்றது சரிதான். நீ என் மைவிழி இல்லை. என் மைவிழியின் கண்கள் இப்படி இருக்காது. நீ வேறு யாரோதான்” என்று குனிந்தபடியே அவன் சொல்ல

அதை கேட்ட அந்த பெண் சந்தோசத்தில் மிதந்தாள்.

"தேங்க் காட்.! இப்பவாவது என்னை மைவிழி இல்லைனு புரிஞ்சுக்கிட்டீயே! எனக்கு அதுவே போதும். சீக்கிரமா என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டுடு" என்று அவள் சொல்ல வேகமாக தலைநிமிர்ந்தான் அவன்.

தலைநிமிர்ந்தவனின் கண்களை பார்த்த அந்த பெண்ணிற்கு பயம் பிடித்துக் கொண்டது. அவன் கண்கள் சிவந்து பார்ப்பதற்கு பயமாக இருந்தது. அந்த கண்களோடு அவன் அந்த பெண்ணை பார்த்துக் கொண்டே பேசினான்.

"என் மைவிழியின் கண்களைத் தவிர இந்த உலகத்தில் வேறு யாருடைய கண்களையும் நான் பார்க்கவே கூடாது" என்று கூறிக் கொண்டே அவன் கீழே இருந்த கூர் ஆயுதத்தை மறுபடியும் தன் கைகளில் எடுத்துக் கொண்டு அந்த பெண்ணின் அருகில் வந்தான். அவன் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னை நோக்கி வரவும் " நோ! நோ!" என்னை எதுவும் பண்ணிடாத விட்டுடு" என்று அந்த பெண் அலற ஆரம்பித்தாள்.

அவளது அலறலைக் கேட்ட அவனோ

"ஏய்! கத்தாத. எனக்கு தேவை அந்த கண்கள் மட்டும் தான். உனக்கு வலி எதுவும் குடுக்காம எனக்கு தேவையானதை மட்டும், உன்கிட்ட இருந்து எடுத்துட்டு , உன்னை நான் விட்டுடுவேன், எனக்கு தேவையானதை கொடுத்துட்டு நீ எங்க வேணா போ. உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். பிராமிஸ்!." என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றான் அவன். அவன் அவளை இழுத்து பற்றி அவளது கைகளில் ஊசி ஒன்றை போட்டான்.

ஊசியை அவன் கைகளில் போட்டதும் சற்று நேரத்தில் மயங்கினாள் அந்த பெண். அந்த பெண் மயங்கியதும் அந்த பெண்ணின் அருகில் சென்றவன், ஏதோ செய்துவிட்டு விலக, அந்த பெண் பேச்சு மூச்சின்றி கீழே கிடந்தாள். அவளது கண்களோ களவாடப்பட்டிருந்தது.

*****

நேகாவும், சுப்ரதாவும் காலேஜ் கேண்டினில் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சுப்ரதா அமைதியாக அமர்ந்து காபி பருகிக் கொண்டிருக்க, நேகாவின் கைகளோ காபி தட்டில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. அதை கண்ட சுப்ரதா நேகாவை பார்த்து கத்தினாள்.

"ஏய் அடச்சீ நிறுத்து? என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி காபி தட்டில் தாளம் போடுட்டு இருக்குற நேகா?" – சுப்ரதா.

"ஏது? தாளம் போடுறேனா? பயத்தில் கை தானாக ஆடுதுடி, சுப்பு ’’ – நேகா.

"பயமா? எதுக்கு?” – சுப்ரதா.

"என்ன சுப்பு? இவ்வளவு சாதாரணமா கேட்டுட்ட? சாரி கேட்டுட்டீங்க... நீங்க நேற்று கனவுல பார்த்து சொன்ன மாதிரியே நம்ம வார்டன் இறந்து போயிட்டாங்க. அதுக்கு பயப்படாம என்ன செய்யனும்னு கேட்குறீங்க?"– நேகா.

"நான் தான் நேற்றே சொன்னேன்லடி எனக்கு கனவுல நடக்குறது எல்லாம் நேரில் நிஜமா நடக்குதுனு. நீ நம்பினாத்தான? இப்பவாவது என் பேச்சை நம்புறீயா நேகா?” – சுப்ரதா.

"இனி நம்பி தானே ஆகணும் வேற வழி?" – நேகா.

"என்னடி சொல்ற. எனக்கு ஒன்றும் புரியல"- சுப்ரதா.

"ம்ம்ம்... அதை விடுடி. சாரி விடுங்க மேம். இப்ப அதுவா முக்கியம் நம்ம விசயத்துக்கு வாங்க. இனிமேல் நான் எதுவும் உங்க கனவுல வந்தா, தயவு செய்து அதை மறைக்காம என்கிட்ட வந்து சொல்லிடுங்க சுப்பு மேம்.’’ – நேகா.

"ஏன்?" – சுப்ரதா.

"அப்ப தான் நான் பாதுகாப்பா இருக்க முடியும் சுப்பு மேம், அதான்" என்று நேகா பயத்தோடு சொல்ல, சுப்ரதா அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.

"ஏய்! நேகா! என்னாச்சு உனக்கு? ஏன் தீடீர்னு என்னை மரியாதையோட கூப்பிடுற? "– சுப்ரதா

"நான் எங்க கூப்பிடுறேன் பயத்துல அதுவா வருதுடி’’ – நேகா.

"அது... சரி! இது கூட நல்லா தான்டி இருக்கு. நீ எத்தனை நாள் என்னைய ஓட்டிருப்ப. இப்ப பார்த்தீயா? உன்னை ஓட்ட கடவுளா பார்த்து எனக்கு சான்ஸ் கொடுத்திருக்கார்.. அதை நான் விட மாட்டேன். இனி எதாவது என்கிட்ட வம்பு பண்ண, அப்புறம் உன்னை வச்சி கனவு காண்பேன் பார்த்துக்கோ. பீ கேர்புல்" என்று சுப்ரதா அவளை மிரட்ட, அதை கேட்ட நேகாவோ அவளை பார்த்து திகைத்தாள்.

அதை பார்த்த சுப்ரதா சிரித்துக் கொண்டே "சும்மா உன்கிட்ட விளையாடினேன்டி நேகா. நான் எப்பவும் உன் உயிர் தோழி தான். உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்டி’’என்று சொல்ல, நேகா வேகமாக ஏதோ சொல்ல, அதை கேட்ட சுப்ரதா அதிர்ச்சியடைந்தாள்.

*****

அந்த யாருமற்ற வீட்டின் உள்ளே இருந்த கிட்சனில் எதையோ கிண்டி கொண்டு இருந்தாள் மாயா.

சற்று நேரம் அதை கிண்டியவள் அதை எடுத்துக் கொண்டு ஒரு அறையின் உள்ளே சென்றாள். அங்கு படுத்த நிலையில் முகத்தை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் அருகில் சென்ற மாயா, அந்த போர்வையை விலக்கி விட்டு அவளை எழுப்பினாள்.

" குண்டு! ஏய் குண்டு! எழுந்திரி. இந்தா. இந்த கசாயத்தை குடிச்சிட்டு படுத்துக்க டா." – மாயா.

அதை கேட்ட அந்த பெண்ணோ கஷ்டப்பட்டு எழுந்தவள் கண்ணை திறவாமலேயே தன் கைகளால் பெட்டை தடவி, வேகமாக அருகில் இருந்த கருப்பு நிற கண்ணாடியை எடுத்து, தன் கண்களில் அணிந்து கொண்டே மாயாவிடம் திரும்பினாள்.

" எனக்கு இது வேண்டாம் மாயா. குடிக்க கஷ்டமா இருக்கு " என்று அவளால் குண்டு என்று அழைக்கப்பட்ட வாணி அவள் குடுத்த கசாயத்தை குடிக்க மறுத்துவிட்டு திரும்பவும் படுத்துக் கொண்டாள்.

ஆனால் மாயா அவளை விடுவதாக இல்லை. "ஏய் படுக்காத! எழுந்திரு வாணி! நீ இதை குடிச்சே ஆகணும். நீ இதை குடிக்கலைனா உன் கை சரியாகாது” என்று கூறியபடி அவளது ஒரு கைகள் மட்டும் இழுத்து பக்க வாதம் போல இருந்த அவளது கைகளை காட்டி சொன்னாள் மாயா.

அதை கேட்ட வாணியின் முகம் வாடியது.

"இதை குடிச்சு கை சரியாகி நான் என்ன செய்யப் போறேன்கா. நான் இப்படியே இருந்துட்டு போறேனே என்னை விட்டுடுக்கா. கடைசி வரைக்கு உன் தங்கச்சியா உன்கூடவே நான் இருந்துடுறேன்கா. ப்ளீஸ் ” என்று வாணி சொல்ல அதை கேட்ட மாயாவிற்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"நீ இப்படியே பேசிகிட்டே இரு. அப்பதான் உன்னுடைய இன்னொரு கையையும் அவன் வந்து உடைச்சுட்டு போக வசதியா இருக்கும்” – மாயா

மாயா அப்படி சொன்னதும் "அக்கா!" என்று அதிர்ச்சியில் கத்தினாள் வாணி. வாணி அப்படி கத்தியதும் மாயா அமைதியாகி அவளின் அருகில் அமர்ந்து அவளது கைகளையும் அவளது முகத்தையும் பார்த்தபடியே மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

"இங்க பார் வாணி. நீ வாழ்ந்து தான் ஆகணும். நீ வாழ்ந்தா தான் அவன் சாக முடியும்!" என்று மாயா எதையோ நினைத்துக் கொண்டு சொல்ல அதை கேட்ட வாணி சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

வாணியின் அமைதியை கண்ட மாயா அவள் அருகில் அமர்ந்து அவளது தோளில் கை போட்டபடியே பேச ஆரம்பித்தாள். "வாணி.! நடந்ததை நினைத்து கவலைப்பட்டுக்கிட்டு அமர்ந்து இருந்தா எதுவும் மாறப் போவது இல்லை.. நான் சொல்றதை கேள். நீ உன்னை திடப்படுத்திக்கோ! அப்ப தான் அவனை நாம் அழிக்க முடியும் "என்று மாயா சொல்ல வாணியின் முகம் சற்றுத் தெளிந்தது.

அவள் முகம் தெளிந்ததை பார்த்த மாயா "குட்.! அப்படியே இந்த கசாயத்தை குடிச்சிடுமா! " என்று சொல்லிக் கொண்டே கசாயத்தை அவளிடம் நீட்டினாள்.

ஆனால் இந்த தடவை மறுப்பேதும் சொல்லாமல் கசாயத்தை குடித்துவிட்டாள் வாணி. வாணி கசாயத்தை குடித்ததும் அந்த டம்ளரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள் மாயா.

மாயா சென்றதும் தன் கண்ணாடியை கழட்டி தன் கண்களை தடவிப் பார்த்தாள் வாணி. அவள் கண்களில் ஒரு கண் முற்றிலும் எரிந்து காணப்பட்டது. தன் கண்களை தடவிப் பார்த்தவளின் முகம் மிகவும் வருத்தமடைந்தது.

*****

அந்த மாணவியர் தங்கும் விடுதியை விட்டு வந்து கொண்டிருந்தனர் கனகாவும், நந்தவர்மனும். நந்தவர்மன் ஏதோ யோசனையில் வர, கனகா அவனையே பார்த்துக் கொண்டு அமைதியாக அவனோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.. ஆனால் அந்த அமைதியை கலைத்தது நந்தவர்மன் தான்,

" மிஸ் கனகா! எதுக்கு என்னையவே வச்ச கண் வாங்காம பார்த்துகிட்டே வரீங்க. உங்களுக்கு என்கிட்ட எதுவும் கேட்கணும்னா தாராளமா நீங்க கேட்கலாம்" - நந்தவர்மன்

நந்தவர்மன் அப்படி சொன்னதும் தன் தைரியத்தை வரவழைத்து பேச ஆரம்பித்தாள் கனகா.

" சார்! அது வந்து..." என்று அவள் தயங்க, " ம்ம்ம் கேளுங்க என்று நந்தவர்மன் சொன்னதும் கனகா ஆரம்பித்தாள்.

" சார்! அந்த வார்டன் எதனால் இறந்திருப்பாங்க சார்? யார் அவங்களை கொன்றிருப்பாங்க? " – கனகா.

" தெரியல! யார் கொன்னாங்கனு இனி மேல் தான் கண்டுபிடிக்கணும். ஆனால் அவங்க இறந்து போயிட்டாங்கனு தெரிஞ்சும் அவங்களை கத்தியால பல தடவை குத்தி இருக்கான் கொலையாளி. இதை பார்க்கும் போது இது கண்டிப்பா இது பகை தீர்க்க நடந்த கொலையா இருக்கலாம் னு எனக்கு தோணுது " – நந்தவர்மன்.

" ஓ அப்படினா! வார்டனால பாதிக்கப்பட்ட யாரோ தான் இந்த கொலையை செஞ்சிருக்கணும்" – கனகா

"ம்ம்ம் யூ ஆர் கரெக்ட். பரவாயில்லையே உனக்கு கூட கொஞ்சம் அறிவு வேலை இருக்கு." என்று அவளை பாராட்டியவன் ஒரு புகைபடத்தை தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளிடம் காட்டினான்.

அந்த புகைபடத்தை பார்த்த கனகா "சார்! இது... " என்று அவள் இழுக்க நந்தவர்மன் அவளிடம் அந்த புகைப்படத்தைகாட்டி விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்.

அந்த புகைபடத்தில் இறந்து கிடந்த வார்டனின் அருகில் ஒரு பேப்பர் கிடந்தது. அந்த பேப்பரில் இறப்பதற்கு முன் தன் ரத்தத்தால் எதையோ எழுதியிருந்தார் வார்டன்.

அதில் ‘10008716’ என்று நம்பர் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்தவள் குழப்பமாக நந்தவர்மனைப் பார்த்தாள்.

"சார்! இது என்ன நம்பராக இருக்கும்? பார்த்தா போன் நம்பர் மாதிரியும் தெரியல?" – கனகா.

"ம்ம்ம்... அதை தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்., ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நாம இந்த நம்பரை கண்டுபிடிச்சுட்டோம்னா கொலையாளியை நாம ஈஸியா ரீச் பண்ணிடலாம் " என்று அவன் சொல்ல அதை கேட்ட கனகா சம்மதமாக தலையசைத்தாள்.

" அப்புறம் இன்னொரு சந்தேகம் சார் " - கனகா.

"ம்ம்ம் சொல்லுங்க சார்" - நந்தவர்மன்.

"சார்! நான் சாதாரண கான்ஸ்டபிள்.. என்கிட்ட போய் நீங்க இப்படி கேஸ் பற்றிலா டிஸ்கஸ் பண்றது ஆச்சரியா இருக்கு" - கனகா.

" ம்ம்ம் ஐ நோ! உங்களுக்குள்ள ஒரு தேடல் இருக்கு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம் இருக்கு. அதான் உங்ககிட்ட சொல்றேன். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்! " என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் செல்ல கனகா அவனை மெச்சியபடியே அவன் பின்னால் சென்றாள்.

எண்கணின் குறீயிட்டின் உள்ளே கொலையாளியின் முகக் குறீயிடு.

பகையை தீர்க்கும் முன் காவலன் குறீயீட்டினை கண்டிடுவானா? கண்டிடுவாளா?

வருவாள்
 
HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
பகை 2

சிவப்பு நிற உடையை உடுத்திக் கொண்டு, அதன் மேலே கருப்பு நிறத்திலான பெரிய அங்கி ஒன்றை அணிந்து கொண்டு, முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் மற்ற பாகங்கள் துணி கொண்டு மறைக்கப்பட்டு, தன் கைககளில் கத்தி ஒன்றை ஏந்திக் கொண்டு அந்த விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது உருவம் ஒன்று.

அந்த உருவத்தின் கண்களோ வேட்டை நாயின் வெறியை பிரதிபலித்தது . அந்த கண்களை சற்று உற்று நோக்கினால், அவை ஒரு பெண்ணின் கண்களை போன்றிருந்தது.

இருளில் சென்று கொண்டிருந்தவள் அந்த விடுதியின் முன் சென்று நிற்க, அந்த விடுதியை காவல் காத்துக் கொண்டிருந்தவனோ உட்கார்ந்தபடியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனை எழுப்பாமல் மெதுவாக அவனை தாண்டிச் சென்றவள், விடுதிக்குள் சென்று ஒரு அறையின் முன் நின்று கதவைத் தட்டினாள். அவர்கள் கதவை திறப்பதற்குள் தன் கை விரல்கள் ஒவ்வொன்றையும் மடக்கி மடக்கி விரித்தாள். அவளது பொறுமையை சற்று நேரம் சோதித்துவிட்டு கதவை திறந்தார் ஒரு பெண்மணி.

அந்த பெண்மணி கதவை திறந்து 'யார்?' என்று அங்கு நின்றிருந்தவளைப் பார்த்து கேட்டது தான் தாமதம், பெண்ணவள் அவரது வாயை பொத்திக் கொண்டு அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள்.

உள்ளிருந்து சற்று நேரத்தில் திரும்பி வெளியில் வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் கைகளில் வழிந்த ரத்தத்தை அது கீழே வழிவதற்குள் வேகமாக தன் கையில் இருந்த துணி கொண்டு தன் கைகளை வேகமாக சுற்றிக் கொண்டு யாரும் பார்ப்பதற்குள் அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.

*****

தன் அறையில் குளித்துவிட்டு பேண்ட் மற்றும் சட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் தலையை வாரிக் கொண்டிருந்தான் அமுதன்.

கண்ணாடியில் தன் தலையை வாரி முடித்தவன் அருகில் இருந்த மேஜையில் இருந்த அந்த கோட்டை அணியாமல் தன் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து அங்கிருந்த உயர்ந்த ரக காரில் ஏறினான்.

காரில் ஏறி அமர்ந்தவன் அதனை உயிர்பித்து தன் கைகளை ஸ்டீரிங்கில் தட்டியபடியே மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். அரை மணி நேர பயணத்தின் பின் கார் அந்த உயர்ந்த கட்டிடத்தின் முன் சென்று நின்றது.

காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவன் தன் அறையை நோக்கி சென்று கொண்டிருக்க, அவனை வழியில் பார்த்த அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்தனர். அனைவரின் வணக்கத்தையும் தன் ஒற்றை தலையசைப்பால் ஏற்று கொண்டவன், அவன் அறையின் முன் நின்று, தன் முன் இருந்த அமுதன் MBBS., பெயர் பலகையை தன் கைகளால் ஆசையோடு வருடினான்.

பின் ஊள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்ததும் அவள் அருகில் வந்து நின்றாள் செவிலி. அவளைப் பார்த்த அமுதன் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தான்.

"மிஸ் ஷீலா! அந்த பத்தாம் நம்பர் பேசண்ட்டிற்கு டிரிப்ஸ் போட்டாச்சா?" -அமுதன்.

" எஸ் டாக்டர்!" - ஷீலா.

" அந்த பெரியவர்க்கு பிபி, பிரஷர் செக் பண்ணியாச்சா?" - அமுதன்.

" எஸ் டாக்டர்! எவிரிதிங் நார்மல்" - ஷீலா.

"ஓ.பி ல எத்தனை பேசண்ட்ஸ் வெயிட் பண்றாங்க?" - அமுதன்.

"30 பேர் சார்..." - ஷீலா.

"ஓ! ஏன்? முதலலேயே எனக்கு போன் பண்ணி இன்டிமேட் பண்ணல?" என்று நர்சை பார்த்து கத்தினான்.

"உங்களுக்கு போன் பல தடவை பண்ணேன் சார். ஆனால் உங்க போன் நம்பர் அவுட் ஆஃப் கவரேஜ்னு சொல்லுச்சு சார்.." என்றதும்,

சற்று நேரம் எதையோ யோசித்த அமுதன் "ஓ.. சரி.. ஷீலா 5 மினிட்ஸ் கழிச்சு பேசண்ட்ஸை வரச் சொல்லுங்க" என்று அவன் சொல்லிவிட்டு அங்கிருந்த மீன் தொட்டியின் அருகே சென்று நின்றதும்,

"ஓகே சார்..." என்று ஷீலா தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள்.

அவள் சென்றதும் சற்று நேரம் அந்த மீன்களைப் பார்த்தபடியே தன் தலையை முன்பக்கம், பின்பக்கம் அசைத்தவன் அதன்பின் தன் கண்களை மூடியபடியே நெற்றியை தன் கை கொண்டு குத்தினான்.

இப்படியாக ஐந்து நிமிடங்கள் அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே கழிய, கதவை தட்டிக் கொண்டு நோயாளிகள் ஒருவரின் பின் ஒருவர் உள்ளே வர ஆரம்பித்தனர்.

அவர்களை பார்த்ததும் தன்னை மறந்தவன், அவர்களிடம் அன்போடும் சிரித்த முகமாகவும் பேசியபடியே அவர்களது நோயினை ஆராய்ந்தான். அவனது சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகள் பலர் .

-----

இப்ப அமுதன் பத்தி சின்ன இண்ட்ரோ பார்த்துடலாம். வாங்க அன்பர்களே!

அமுதன், இறுகிய கட்டமைப்பு கொண்ட உடல்வாகு, மீசை, தாடி என ஏதுமின்றி முகம் சவரம் செய்யப்பட்டு, தாடியின்றி சாக்லேட் பாய் என்று கூறும் அளவிற்கு அழகன். ஒரு தலைசிறந்த மருத்துவன். ஆரம்பத்தில் சிறிய அளவிலான கிளினிக் ஒன்றை வைத்து நடத்திக் கொண்டு வந்தவன் இப்பொழுது பெரிய அளவில் மருத்துவமனை ஒன்றினை வைத்து அனைவருக்கும் சிறந்த முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டு வருகிறான்.

இப்ப இங்க வாங்கய்யா.

-----

அன்று வந்த நோயாளிகளை பார்த்து முடித்த அமுதன் அருகிலிருந்த தன் பர்ச்சை எடுக்க முயல,அப்போது அதிலிருந்து வளையல் துண்டுகள் கீழே விழுந்தன. அதை எடுத்து பார்த்தவனின் முகம் வருத்தமடைந்தது.

அவனையும் மீறி அவளது உதடுகள் சாரு… என்று முணுமுணுத்தது.

*****

தன் எதிரில் நின்று தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்ட கனகா வேகமாக எழுந்து, சலூயூட் அடித்தபடியே "குட்மார்னிங் சார்!" என்று அவனுக்கு வணக்கம் வைக்க, அதை கண்டவனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது.

"கான்ஸ்டபிள் கனகா, வணக்கம் வைக்குற நேரமா இது. யூ ஆர் 5 மினிட்ஸ் லேட். நீ டெய்லி லேட்டா தான் வருவியா? இன்னைக்கு ஒரு படி மேல போய் வீர சாகசம்லா பண்ற? என்ன இதெல்லாம்? என்று தன் ஜீப்பின் முன் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த பம்ப்பரை காட்டி அவன் அவளை திட்ட , கனகாவோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். அவள் விழிப்பதை பார்த்தவன் மேலும் கத்தினான்.

" அப்பா செத்துட்டாங்கனு அவர் வேலையை வாங்கிட்டா மட்டும் பத்தாது. அதற்குண்டான வேலையையும் செய்யணும். வேலையில் சேர்ந்து என் கழுத்தை அறுக்கனே வந்திருக்குதுங்க" என்று கனகாவை திட்ட, அதை கேட்ட கனகாவோ வருத்தமடைந்தாள்.

அவள் வருத்தத்தை பார்த்தவன் அருகில் இருந்த ஏட்டைப் பார்த்து " ஏட்டு! அந்த ***மாணவியர் விடுதிக்கு அவங்களை வரச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு அவன் தன் ஜீப்பில் ஏற. கனகாவும் வேகமாக ஜீப்பின் பின்னால் ஏறி அமர்ந்தாள். திரும்பவும் தாமதமாக சென்று அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவள் தயாராக இல்லை.

கனகாவையும், ஏட்டு பெருமாளையும் ஏற்றிக் கொண்டு அந்த மாணவியர் விடுதியை நோக்கி தன் வண்டியை செலுத்தினான் அவன், நந்தவர்மன்., அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ் .

-----

இப்ப நந்தவர்மன்,கனகா பத்தி சின்ன இண்ட்ரோ பார்த்துடலாம். வாங்க அன்பர்களே!

நந்தவர்மன் காவல் அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்போடும், நடை பாவனைகளில் கண்டிப்போடும் நேர்மை தவறாத ஒரு சிறந்த கமிஷ்னராக விளங்கினான்.

அவனுக்கு கீழ் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் கனகா. கனகாவின் தந்தை கேஸ் ஒன்றில் தீவிரவாத அமைப்பினால் சுட்டுக் கொல்லப்பட அந்த வேலை வீட்டில் மூத்த வாரிசான கனகாவிற்கு கொடுக்கப்பட்டது.

மென்மையின் இலக்கணமாக, பயத்தின் முழு உருவமாக இருந்த கனகா குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் நந்தவர்மன் அவளை திட்டிக் கொண்டே இருந்தான்.

சரி.. சரி.. கனகாவையும், நந்தவர்மனை பற்றிய அறிமுகம் பார்த்தாச்சு. கதைக்குள்ள போகலாம் அன்பர்களே.

-----

கனகாவை அழைத்துக் கொண்டு அந்த விடுதியை நோக்கி பயணப்பட்டவன் சற்று நேரத்தில் அந்த மாணவியர் தங்கும் விடுதியின் முன் வண்டியை நிறுத்தினான்.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன் கனகாவைப் பார்க்க, அவனது பார்வையின் பொருளை படித்த கனகா வேகமாக விடுதியின் உள்ளே சென்றாள். உள்ளே சென்றவள் சற்று நேரத்தில் வெளியே வர, அங்கு ஆம்புலன்ஸும் வந்து நின்றது.

அதை தொடர்ந்து அந்த விடுதியின் வார்டன் வண்டியில் ஏற்றப்பட, கனகா நந்தவர்மன் அருகில் வந்தாள்.

"சார்!தூக்கு போட்டு தொங்கி இருக்காங்க. ஆனால் இது தற்கொலை மாதிரியும் தெரியுது. கொலை மாதிரியும் தெரியுது என்று அவள் சொல்ல, நந்தவர்மன் சற்று நேரம் யோசித்தான்.

"இதே மாதிரி தான போன வாரம் அந்த ****காலேஜ் வார்டன் இறந்து போனாங்க" நந்தவர்மன்

"எஸ் சார்" - கனகா.

"சோ! இது தற்கொலையல்ல! கொலை. விரைவில் இதை பூருவ் பண்றேன் என்று அவன் சொல்ல கனகா தலையசைத்தாள்.

*****

அந்த அறையில் கண் மூடி கிடந்தவனோ எழுந்து தன் கையில் இருந்த மாத்திரை டப்பாவை தூக்கி எறிந்து

"மை விழி! மைவிழி!" என்று பிதற்ற சற்று நேரத்திற்குள் அவன் கையில் நடுக்கம் ஏற்பட, வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

வெளியே சென்றவன் காரை இலக்கற்று ஒட்டிக் கொண்டிருக்க, அவன் கண்களில் விழுந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணை பார்த்ததும் அவனின் கைகளின் நடுக்கம் குறைய. "மைவிழி" என்று அழைத்துக் கொண்டே அந்த பெண்ணின் அருகில் வண்டியை நிறுத்தினான் அவன்.

தீர்ப்பாள்.
 
HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
பகை 3

அந்த இருட்டு ரூமில் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் கண்கள் அச்சத்தை பரதிபலித்தது. காரணம் அவளின் முன் கூர்மையான ஆயுதம் ஒன்றினை ஏந்திக் கொண்டு நின்றிருந்தான் அவன். அந்த கூர் ஆயுதத்தையும் அவனையும் பார்த்தவளுக்கு, கண்களில் பயத்தையும் மீறி கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் அழுவதைப் பார்த்தவன் அவள் அருகில் வேகமாக வந்து, அவளது கண்களில் இருந்து விழும் கண்ணீரை தன் கையில் தொட்டு பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.

"மைவிழி! மைவிழி! எதுக்கு இப்ப நீ அழுகுற? இங்கே கொஞ்சம் என்னை பார்!" என்று சொல்லிக் கொண்டே அவன் அவளது வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு அவளது நாடியை பற்றி தன்னை பார்க்கச் செய்தான். ஆனால் அவன் துணியை எடுத்ததும் அந்தப் பெண் "என்னை காப்பாத்துங்க! என்னை காப்பாத்துங்க!" என்று கத்த ஆரம்பித்துவிட்டாள். அவள் கூச்சலிட ஆரம்பித்ததும் வேகமாக அவள் அருகினில் வந்து அவளது வாயை தன் கைகளால் அடைத்தான் அவன்.

அவளது வாயை அடைத்தவன் "சூ சூ! கத்தக்கூடாது. அதையும் மீறி நீ கத்துனே, இந்த கத்தி உன் தொண்டையில் இறங்கிடும்" என்று அருகில் இருந்த கத்தியை எடுத்து அவளை மிரட்டினான் அவன். அவன் அப்படி மிரட்டியதும் அந்த பெண் வேகமாக தன் வாயை மூடிக் கொண்டாள். அவள் வாயை மூடியதும் " குட்!" என்று கூறியபடியே அவள் அருகில் அமர்ந்த மேலும் பேசினான் அவன்.

"மைவிழி! நீ ‘காப்பாத்துங்கனு‘அப்படி கத்தி இருக்கக்கூடாது? யாராவது பார்த்தா என்னை பற்றி என்ன நினைப்பாங்க? அசடு! அசடு! வளர்ந்திருக்குறீயே தவிர உனக்கு மூளை கொஞ்சம் கூட இல்லை" என்று சொல்லியபடியே அவளது தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டினான் அவன். அதன்பின் சற்று நேரம் யோசித்தவன் மீண்டும் சொன்னதையே சொல்ல ஆரம்பித்தான்." நீ இப்படி பண்ணி இருக்கக்கூடாது மைவிழி. நீ இப்படி பண்ணுவேனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல தெரியுமா? மறுபடியும் நீ இப்படி பண்ண, உன்னை நிரந்தரமா கத்த விடாம பண்ணிடுவேன் பார்த்துக்கோ” என்று கூறிக் கொண்டே அவளது தொண்டையின் அருகில் அந்த கூர் ஆயுதத்தை அவன் கொண்டு செல்ல, அவளது தொண்டை குழி பயத்தில் ஏறி இறங்கியது, அதை பார்த்தவன் அந்த ஆயுதத்தை வேகமாக அவளது தொண்டை குழியில் இருந்து எடுத்து அருகில் வைத்தான்.

பின்பு அவளிடம் திரும்பி, " அய்யோ மறந்துட்டேன் பாரேன். ஆமாம் என்னை காப்பாத்துங்கனு எதுக்கு கத்தின?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க நிமிடத்திற்கு நிமிடம், நிறம் மாறும் அவனது முகத்தை பயத்துடன் பார்த்துக் கொண்டே அந்த பெண் அவனது கேள்விக்கு பதில் சொன்னாள்

"உன்னைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. நீ என்னை கொலை செய்யப் போறீயா?" என்று அந்த பெண் பயந்து கொண்டே கேட்க,

அதை கேட்டு அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் தலையில் தட்டிக் கொண்டே சற்று நேரம் யோசித்தான் மிஸ்டர் எக்ஸ்.

"மைவிழி! என்னை பார்த்தா பயமா இருக்குனு சொன்ன? நீயே என்னை பார்த்து இப்படி சொல்லலாமா? நான் உன் பாவா மைவிழி.! பாவாவை பார்த்து யாராவது பயப்படுவாங்களா? இல்லை கொலை தான் செய்வாங்களா?’’ – என்று அவன் அவளிடமே மறுகேள்வி கேட்க, அதை கேட்ட பெண்ணவளோ திகைத்தாள்.

"இல்லை! இல்லை! நீ என் பாவா இல்லை. நீ ஏதோ தப்பா என்னை புரிஞ்சி வச்சிருக்க. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல.

பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சிற்காக காத்து கொண்டு நின்று கொண்டிருந்த என்னிடம் வந்து அட்ரஸ் கேட்குற மாதிரி கேட்டுட்டு, இப்படி என்னை இங்கே கடத்திட்டு வந்துட்ட. அதுமட்டுமல்ல நீ இப்படி முறை தவறி என்கிட்ட பேசுறது சரியில்லை" என்று அவள் கூற, அவனோ அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னை அவன் பார்க்கும் பார்வையை கவனித்த அந்த பெண் தன் பேச்சை வேகமாக நிறுத்திக் கொண்டு, " ஏன்? என்னை அப்படி பார்க்குற?” என்று பயத்தோடு கேட்டாள்.

‘ம்ம்ம்...' என்று சற்று நேரம் யோசித்தவன் அவளது முகத்தை பற்றி முன்னே பின்னே திருப்பி திருப்பிப் பார்த்தான். பின்பு கோபம் தலைகேற

"மைவிழி! உன் அழகான கண்கள் எங்கே போச்சு?” என்று எக்ஸ் அவளைப் பார்த்து கத்தினான். அவன் அப்படி கத்த ஆரம்பித்ததும் அந்த பெண்ணோ

"நான் உன் மைவிழி இல்லை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! என்னை என் வீட்டில் தயவு செய்து கொண்டு போய் விட்டுடு ” என்று அந்த பெண் அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் கெஞ்ச ஆரம்பித்தததும் அதை கேட்டு சற்று நேரம் தலை குனிந்து அமர்ந்திருந்தான் அவன். அந்த பெண் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, எக்ஸ் தலை குனிந்தபடியே பேசினான்.

"ஆமா. நீ சொல்றது சரிதான். நீ என் மைவிழி இல்லை. என் மைவிழியின் கண்கள் இப்படி இருக்காது. நீ வேறு யாரோதான்” என்று குனிந்தபடியே அவன் சொல்ல

அதை கேட்ட அந்த பெண் சந்தோசத்தில் மிதந்தாள்.

"தேங்க் காட்.! இப்பவாவது என்னை மைவிழி இல்லைனு புரிஞ்சுக்கிட்டீயே! எனக்கு அதுவே போதும். சீக்கிரமா என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டுடு" என்று அவள் சொல்ல வேகமாக தலைநிமிர்ந்தான் அவன்.

தலைநிமிர்ந்தவனின் கண்களை பார்த்த அந்த பெண்ணிற்கு பயம் பிடித்துக் கொண்டது. அவன் கண்கள் சிவந்து பார்ப்பதற்கு பயமாக இருந்தது. அந்த கண்களோடு அவன் அந்த பெண்ணை பார்த்துக் கொண்டே பேசினான்.

"என் மைவிழியின் கண்களைத் தவிர இந்த உலகத்தில் வேறு யாருடைய கண்களையும் நான் பார்க்கவே கூடாது" என்று கூறிக் கொண்டே அவன் கீழே இருந்த கூர் ஆயுதத்தை மறுபடியும் தன் கைகளில் எடுத்துக் கொண்டு அந்த பெண்ணின் அருகில் வந்தான். அவன் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னை நோக்கி வரவும் " நோ! நோ!" என்னை எதுவும் பண்ணிடாத விட்டுடு" என்று அந்த பெண் அலற ஆரம்பித்தாள்.

அவளது அலறலைக் கேட்ட அவனோ

"ஏய்! கத்தாத. எனக்கு தேவை அந்த கண்கள் மட்டும் தான். உனக்கு வலி எதுவும் குடுக்காம எனக்கு தேவையானதை மட்டும், உன்கிட்ட இருந்து எடுத்துட்டு , உன்னை நான் விட்டுடுவேன், எனக்கு தேவையானதை கொடுத்துட்டு நீ எங்க வேணா போ. உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். பிராமிஸ்!." என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றான் அவன். அவன் அவளை இழுத்து பற்றி அவளது கைகளில் ஊசி ஒன்றை போட்டான்.

ஊசியை அவன் கைகளில் போட்டதும் சற்று நேரத்தில் மயங்கினாள் அந்த பெண். அந்த பெண் மயங்கியதும் அந்த பெண்ணின் அருகில் சென்றவன், ஏதோ செய்துவிட்டு விலக, அந்த பெண் பேச்சு மூச்சின்றி கீழே கிடந்தாள். அவளது கண்களோ களவாடப்பட்டிருந்தது.

*****

நேகாவும், சுப்ரதாவும் காலேஜ் கேண்டினில் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சுப்ரதா அமைதியாக அமர்ந்து காபி பருகிக் கொண்டிருக்க, நேகாவின் கைகளோ காபி தட்டில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. அதை கண்ட சுப்ரதா நேகாவை பார்த்து கத்தினாள்.

"ஏய் அடச்சீ நிறுத்து? என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி காபி தட்டில் தாளம் போடுட்டு இருக்குற நேகா?" – சுப்ரதா.

"ஏது? தாளம் போடுறேனா? பயத்தில் கை தானாக ஆடுதுடி, சுப்பு ’’ – நேகா.

"பயமா? எதுக்கு?” – சுப்ரதா.

"என்ன சுப்பு? இவ்வளவு சாதாரணமா கேட்டுட்ட? சாரி கேட்டுட்டீங்க... நீங்க நேற்று கனவுல பார்த்து சொன்ன மாதிரியே நம்ம வார்டன் இறந்து போயிட்டாங்க. அதுக்கு பயப்படாம என்ன செய்யனும்னு கேட்குறீங்க?"– நேகா.

"நான் தான் நேற்றே சொன்னேன்லடி எனக்கு கனவுல நடக்குறது எல்லாம் நேரில் நிஜமா நடக்குதுனு. நீ நம்பினாத்தான? இப்பவாவது என் பேச்சை நம்புறீயா நேகா?” – சுப்ரதா.

"இனி நம்பி தானே ஆகணும் வேற வழி?" – நேகா.

"என்னடி சொல்ற. எனக்கு ஒன்றும் புரியல"- சுப்ரதா.

"ம்ம்ம்... அதை விடுடி. சாரி விடுங்க மேம். இப்ப அதுவா முக்கியம் நம்ம விசயத்துக்கு வாங்க. இனிமேல் நான் எதுவும் உங்க கனவுல வந்தா, தயவு செய்து அதை மறைக்காம என்கிட்ட வந்து சொல்லிடுங்க சுப்பு மேம்.’’ – நேகா.

"ஏன்?" – சுப்ரதா.

"அப்ப தான் நான் பாதுகாப்பா இருக்க முடியும் சுப்பு மேம், அதான்" என்று நேகா பயத்தோடு சொல்ல, சுப்ரதா அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.

"ஏய்! நேகா! என்னாச்சு உனக்கு? ஏன் தீடீர்னு என்னை மரியாதையோட கூப்பிடுற? "– சுப்ரதா

"நான் எங்க கூப்பிடுறேன் பயத்துல அதுவா வருதுடி’’ – நேகா.

"அது... சரி! இது கூட நல்லா தான்டி இருக்கு. நீ எத்தனை நாள் என்னை ஓட்டிருப்ப. இப்ப பார்த்தீயா? உன்னை ஓட்ட கடவுளா பார்த்து எனக்கு சான்ஸ் கொடுத்திருக்கார்.. அதை நான் விட மாட்டேன். இனி எதாவது என்கிட்ட வம்பு பண்ண, அப்புறம் உன்னை வச்சி கனவு காண்பேன் பார்த்துக்கோ. பீ கேர்புல்" என்று சுப்ரதா அவளை மிரட்ட, அதை கேட்ட நேகாவோ அவளை பார்த்து திகைத்தாள்.

அதை பார்த்த சுப்ரதா சிரித்துக் கொண்டே "சும்மா உன்கிட்ட விளையாடினேன்டி நேகா. நான் எப்பவும் உன் உயிர் தோழி தான். உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்டி’’என்று அவள் சொன்னதும் நேகா வேகமாக ஏதோ சொன்னாள் அதை கேட்ட சுப்ரதா அதிர்ச்சியடைந்தாள்.

*****

அந்த யாருமற்ற வீட்டின் உள்ளே இருந்த கிட்சனில் எதையோ கிண்டி கொண்டு இருந்தாள் மாயா.

சற்று நேரம் அதை கிண்டியவள் அதை எடுத்துக் கொண்டு ஒரு அறையின் உள்ளே சென்றாள். அங்கு படுத்த நிலையில் முகத்தை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் அருகில் சென்ற மாயா, அந்த போர்வையை விலக்கி விட்டு அவளை எழுப்பினாள்.

" குண்டு! ஏய் குண்டு! எழுந்திரி. இந்தா. இந்த கசாயத்தை குடிச்சிட்டு படுத்துக்க டா." – மாயா.

அதை கேட்ட அந்த பெண்ணோ கஷ்டப்பட்டு எழுந்தவள் கண்ணை திறவாமலேயே தன் கைகளால் பெட்டை தடவி, வேகமாக அருகில் இருந்த கருப்பு நிற கண்ணாடியை எடுத்து, தன் கண்களில் அணிந்து கொண்டே மாயாவிடம் திரும்பினாள்.

" எனக்கு இது வேண்டாம் மாயா. குடிக்க கஷ்டமா இருக்கு " என்று அவளால் குண்டு என்று அழைக்கப்பட்ட வாணி அவள் குடுத்த கசாயத்தை குடிக்க மறுத்துவிட்டு திரும்பவும் படுத்துக் கொண்டாள்.

ஆனால் மாயா அவளை விடுவதாக இல்லை. "ஏய் படுக்காத! எழுந்திரு வாணி! நீ இதை குடிச்சே ஆகணும். நீ இதை குடிக்கலைனா உன் கை சரியாகாது” என்று கூறியபடி அவளது ஒரு கைகள் மட்டும் இழுத்து பக்க வாதம் போல இருந்த அவளது கைகளை காட்டி சொன்னாள் மாயா.

அதை கேட்ட வாணியின் முகம் வாடியது.

"இதை குடிச்சு கை சரியாகி நான் என்ன செய்யப் போறேன்கா. நான் இப்படியே இருந்துட்டு போறேனே என்னை விட்டுடுக்கா. கடைசி வரைக்கு உன் தங்கச்சியா உன்கூடவே நான் இருந்துடுறேன்கா. ப்ளீஸ் ” என்று வாணி சொல்ல அதை கேட்ட மாயாவிற்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"நீ இப்படியே பேசிகிட்டே இரு. அப்பதான் உன்னுடைய இன்னொரு கையையும் அவன் வந்து உடைச்சுட்டு போக வசதியா இருக்கும்” – மாயா

மாயா அப்படி சொன்னதும் "அக்கா!" என்று அதிர்ச்சியில் கத்தினாள் வாணி. வாணி அப்படி கத்தியதும் மாயா அமைதியாகி அவளின் அருகில் அமர்ந்து அவளது கைகளையும் அவளது முகத்தையும் பார்த்தபடியே மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

"இங்க பார் வாணி. நீ வாழ்ந்து தான் ஆகணும். நீ வாழ்ந்தா தான் அவன் சாக முடியும்!" என்று மாயா எதையோ நினைத்துக் கொண்டு சொல்ல அதை கேட்ட வாணி சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

வாணியின் அமைதியை கண்ட மாயா அவள் அருகில் அமர்ந்து அவளது தோளில் கை போட்டபடியே பேச ஆரம்பித்தாள். "வாணி.! நடந்ததை நினைத்து கவலைப்பட்டுக்கிட்டு அமர்ந்து இருந்தா எதுவும் மாறப் போவது இல்லை.. நான் சொல்றதை கேள். நீ உன்னை திடப்படுத்திக்கோ! அப்ப தான் அவனை நாம் அழிக்க முடியும் "என்று மாயா சொல்ல வாணியின் முகம் சற்றுத் தெளிந்தது.

அவள் முகம் தெளிந்ததை பார்த்த மாயா "குட்.! அப்படியே இந்த கசாயத்தை குடிச்சிடுமா! " என்று சொல்லிக் கொண்டே கசாயத்தை அவளிடம் நீட்டினாள்.

ஆனால் இந்த தடவை மறுப்பேதும் சொல்லாமல் கசாயத்தை குடித்துவிட்டாள் வாணி. வாணி கசாயத்தை குடித்ததும் அந்த டம்ளரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள் மாயா.

மாயா சென்றதும் தன் கண்ணாடியை கழட்டி தன் கண்களை தடவிப் பார்த்தாள் வாணி. அவள் கண்களில் ஒரு கண் முற்றிலும் எரிந்து காணப்பட்டது. தன் கண்களை தடவிப் பார்த்தவளின் முகம் மிகவும் வருத்தமடைந்தது.

*****

அந்த மாணவியர் தங்கும் விடுதியை விட்டு வந்து கொண்டிருந்தனர் கனகாவும், நந்தவர்மனும். நந்தவர்மன் ஏதோ யோசனையில் வர, கனகா அவனையே பார்த்துக் கொண்டு அமைதியாக அவனோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.. ஆனால் அந்த அமைதியை கலைத்தது நந்தவர்மன் தான்,

" மிஸ் கனகா! எதுக்கு என்னையவே வச்ச கண் வாங்காம பார்த்துகிட்டே வரீங்க. உங்களுக்கு என்கிட்ட எதுவும் கேட்கணும்னா தாராளமா நீங்க கேட்கலாம்" - நந்தவர்மன்

நந்தவர்மன் அப்படி சொன்னதும் தன் தைரியத்தை வரவழைத்து பேச ஆரம்பித்தாள் கனகா.

" சார்! அது வந்து..." என்று அவள் தயங்க, " ம்ம்ம் கேளுங்க என்று நந்தவர்மன் சொன்னதும் கனகா ஆரம்பித்தாள்.

" சார்! அந்த வார்டன் எதனால் இறந்திருப்பாங்க சார்? யார் அவங்களை கொன்றிருப்பாங்க? " – கனகா.

" தெரியல! யார் கொன்னாங்கனு இனி மேல் தான் கண்டுபிடிக்கணும். ஆனால் அவங்க இறந்து போயிட்டாங்கனு தெரிஞ்சும் அவங்களை கத்தியால பல தடவை குத்தி இருக்கான் கொலையாளி. இதை பார்க்கும் போது இது கண்டிப்பா இது பகை தீர்க்க நடந்த கொலையா இருக்கலாம் னு எனக்கு தோணுது " – நந்தவர்மன்.

" ஓ அப்படினா! வார்டனால பாதிக்கப்பட்ட யாரோ தான் இந்த கொலையை செஞ்சிருக்கணும்" – கனகா

"ம்ம்ம் யூ ஆர் கரெக்ட். பரவாயில்லையே உனக்கு கூட கொஞ்சம் அறிவு வேலை இருக்கு." என்று அவளை பாராட்டியவன் ஒரு புகைபடத்தை தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளிடம் காட்டினான்.

அந்த புகைபடத்தை பார்த்த கனகா "சார்! இது... " என்று அவள் இழுக்க நந்தவர்மன் அவளிடம் அந்த புகைப்படத்தைகாட்டி விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்.

அந்த புகைபடத்தில் இறந்து கிடந்த வார்டனின் அருகில் ஒரு பேப்பர் கிடந்தது. அந்த பேப்பரில் இறப்பதற்கு முன் தன் ரத்தத்தால் எதையோ எழுதியிருந்தார் வார்டன்.

அதில் ‘10008716’ என்று நம்பர் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்தவள் குழப்பமாக நந்தவர்மனைப் பார்த்தாள்.

"சார்! இது என்ன நம்பராக இருக்கும்? பார்த்தா போன் நம்பர் மாதிரியும் தெரியல?" – கனகா.

"ம்ம்ம்... அதை தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்., ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நாம இந்த நம்பரை கண்டுபிடிச்சுட்டோம்னா கொலையாளியை நாம ஈஸியா ரீச் பண்ணிடலாம் " என்று அவன் சொல்ல அதை கேட்ட கனகா சம்மதமாக தலையசைத்தாள்.

" அப்புறம் இன்னொரு சந்தேகம் சார் " - கனகா.

"ம்ம்ம் சொல்லுங்க சார்" - நந்தவர்மன்.

"சார்! நான் சாதாரண கான்ஸ்டபிள்.. என்கிட்ட போய் நீங்க இப்படி கேஸ் பற்றிலா டிஸ்கஸ் பண்றது ஆச்சரியா இருக்கு" - கனகா.

" ம்ம்ம் ஐ நோ! உங்களுக்குள்ள ஒரு தேடல் இருக்கு கனகா. அதுமட்டுமல்ல கேஸ் பற்றி தெரிஞ்சுக்கணும்னு உங்களுக்குள்ளே ஒரு ஆர்வம் இருக்கு. அதான் உங்ககிட்ட. கேஸ் பற்றிய விசயங்களை சொல்றேன். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்! " என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் செல்ல கனகா அவனை மெச்சியபடியே அவன் பின்னால் சென்றாள்.

Top Bottom