Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்-..37👇


பிறகு ஒருவழியாக ஊர் மக்கள் பண்ணையாரையும் ..
முத்தையாவையும் நல்லபடியாக அடக்கம் செய்தார்கள் ..

அப்போது அவர்களின் நட்பை பற்றி பெருமையாக பேசினார்கள்.. கடைசிவரைக்கும் இருவரும் ஒன்றாகவே பிரியாமல் மண்ணுக்குள்ளே சென்றுவிட்டார்கள் ..

ஆனால் இந்த ஊர் மக்களை இப்படி அனாதையாக தவிக்க விட்டுவிட்டு சென்று விட்டார்களே என்ற பெரும் சோகத்தோடு ஊர் மக்கள் அந்த கிராமத்தில் அமைதியாக சோகத்தோடு இருந்தார்கள்..


⛺ சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் பூஜை அறையில் பேசிக் கொண்டார்கள்..

குருவே ஊர் மக்கள் எல்லோரும் ரொம்ப சோகத்தில் இருக்கிறார்கள் பண்ணையார் தோட்டத்திற்கும் யாரும் வேலைக்கு போகவில்லை

பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டை நினைத்துப் பார்த்தாலே எல்லோருக்கும் பயத்தில் பேதியாகுதாம்

இந்த நிலைமையில் எல்லோரும் எப்போது தான் வேலைக்கு போக போறாங்கன்னு தெரியல .
இவங்க பணம் சம்பாதித்தால்தான் நம்ம பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் இந்த நிலைமை எல்லாம் மாற எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலையே குருவே ..
நமக்கும் வருமானம் கிடைப்பதில் சிக்கல்லாக இருக்குது குருவே என்று ஒரு சிஷ்யன் சொன்னான்..

எனக்கு கூட ரொம்ப கவலையா இருக்கு இந்த ஊர் மக்களை நினைச்சுப் பார்த்தா..

இந்த ஊருக்கே சோதனைக்காலம் வரப்போகுதுன்னு நம்ம ஏதோ தெரியாமல் சொல்லி விட்டோம்..

நான் சொன்ன நேரம் அப்படியே இந்த ஊர் மக்களுக்கு நடந்திடுச்சு.. நம்ம கரும்பு தோட்டத்துக்கு தீ வச்சி இந்த ஊர் மக்களை கஷ்டப்படுத்த லாம் என்று நினைத்து அப்படி சொன்னேன் ...

சோதனைக்காலம் வரப்போகுதுன்னு எண்ணிக்கு சொன்னோமோ அண்ணியிலிருந்து பாவம் இந்த ஊர் மக்கள் மீள முடியாத சோகத்தில் மாட்டிக்கிட்டாங்க..

இதனால கஷ்டம் நமக்கும் தான் அவங்க ஒரு அளவுக்கு பணம் சம்பாதித்தால்தான் ...
அவர்களை ஏமாற்றி நம்ம சம்பாதிக்க முடியும்
இப்போ இருக்கிற நிலைமைக்கு நம்ம 📲செல்போனுக்கும் வேலை இல்ல நம்ம வார்த்தைக்கும் வேலை இல்லை.. பாவம் ஊர் மக்கள்..

ஆனால் பண்ணையாரும் முத்தையவும். இந்த இரண்டு பேரும் நம்மை மதிக்கவே மாட்டாங்க இப்போ இந்த இரண்டு கிழவனும் இறந்து போயிட்டாங்க ..

இனிமேல் நம்ம அதிகாரத்தை கொஞ்சம் ஒசத்திக்கணும் குருவே என்று மற்றொரு சிஷ்யன் சொன்னான்..

நீ சொல்வது உண்மை தான் ..
இந்த இரண்டு பெரிசுகளும் நம்மை மதிக்க மாட்டாங்க ..
அதோடு சங்கரும் பண்ணையார் மகன்களும் நம்மை மதிக்க மாட்டாங்க ஆனால் இப்போது சங்கரும் என்ன ஆனான் என்று தெரியவில்லை..
நீ சொல்வதைப் போல இந்த ஊரில் இனி நமக்கு எதிரிகள்
குறைவுதான் நமக்கு எதிரி என்று பார்த்தால் பண்ணையார் மகன்கள்தான் அவர்கள் தான் நம்மை மதிக்க மாட்டார்கள் அவர்களையும் மெதுவாக நம்ம வழிக்கு கொண்டு வர வேண்டும் சிஷ்யா...

நிச்சயம் நம்ம வழிக்கு வருவாங்க குருவே .... அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் குருவே..

என்னடா முக்கியமான விஷயம்...

நம்ம 📲செல்போன்ல பொம்பள
பேய் சிரிப்பதைப் போல தான் ரிங்டோன் இருக்கிறது குருவே ஆனால் இனிமேல் ஆம்பள பேய் சிரிப்பதைப் போல ரிங்டோன் செட் பண்ணிக் கொள்ள வேண்டும் குருவே..

எதுக்குடா...

முத்தையாவும் பண்ணையாரும் தான் உங்களை மிரட்டுகிறார்கள் என்று பொய் சொல்லி
பணம் சம்பாதிக்கலாம் குருவே என்று சந்தோஷத்துடன் சொன்னான் சிஷ்யன்..

இப்படி செய்தால் நம்ம தான் மாட்டிக்குவோம் ...

இருவருமே மக்கள் மீது ரொம்ப பாசமாக இருப்பவர்கள் ..
இறந்த பிறகு அவர்கள் எப்படி நம்மை மிரட்டுவார்கள் என்று நினைத்து ஊர் மக்கள் நம் மீது சந்தேகப் படுவாங்க சிஷ்யா..

அதனால நமக்கு ஆம்பளை பேய் ரிங்டோன் எல்லாம் வேண்டாம்.. இப்போது இருக்கும் பொம்பள பேய் ரிங்டோன் நமக்கு போதுமானது
இத வச்சியே இந்த ஊர் மக்களை நம்ம ஆட்டிப் படைக்கலாம் என்று சாட்டையடி சாமியார் சிஷ்யர்களிடம் சொன்னார்..


.....நாட்கள் நாட்கள்...

வழக்கம்போல பரந்தாமன் வீட்டின் மொட்டைமடியில் யோசித்தபடி இருந்தான்...

எப்படியோ பெரிய பிரச்சனையில் இருந்து தப்பித்து விட்டோம்.. இனிமேல் நமக்கு எதிரிகள் கிடையாது நமக்கு எதிரியாக இருந்த சங்கரையும் அப்பாவையும் தீர்த்துக்கட்டி விட்டோம்
இனி மேல் நம்முடைய லட்சியத்திற்கு எதிராக யாரும் செயல்பட முடியாது ...

இருந்தாலும் நம்முடைய லட்சியமே விவசாய நிலங்களை நாமே அனுபவிக்க வேண்டும் ..
அதில் கிடைக்கும் வருமானத்தை நாமே அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம்

ஆனால் விவசாய நிலம் இனிமேல் அனைத்தும் நமக்குத்தான்.. அதேசமயத்தில் விவசாயம் செழிப்பாக நடக்குமா என்பது தான் இப்போது பெரிய பிரச்சனையாக நமக்கு இருக்கிறது ...
இது மட்டும் சரி ஆகி விட்டாள் நமக்கு இதை விட சந்தோஷம் வேறு எதுவுமே கிடையாது ..

ஆனால் ஊர் மக்கள் யாரும் இனிமேல் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு யாரும் வரமாட்டார்கள் ..
இப்போது இருக்கும் நிலைமைக்கு எந்த வேலைக்கும் ஊர் மக்கள் வராமல் இருக்கிறார்கள் பயத்தில்..

இதையெல்லாம் எப்படி சரி செய்வது என்ற சோகத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக கவலையோடு பரந்தாமன் இருந்தான் ..

ஆனால் சாந்தியும் சந்திரன் தீனாவும் அண்ணன் அப்பா இறந்த சோகத்தில் தான் இப்படி யாரிடமும் பேசாமல் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..


ஒரு நாள் ஊர் மக்கள் வழக்கம் போல முத்தையாவின் வீட்டின் வாசலில் ஒன்று கூடி பேசினார்கள்...

நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த நம்ம முத்தையா அண்ணன் பண்ணையாரும் இறந்து விட்டார்கள் ...
அவர்கள் இருந்திருந்தால் நம்ம இப்படி பசியும் பட்டினியுமாக குடும்ப நடத்த தேவையில்லை ..
நம்ம ஊர் மக்கள் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை இப்படி ஒரு நிலைமை இந்த ஊருக்கு வந்து விட்டது ...

நம்ம ஊரைப் பார்த்து பக்கத்தில் உள்ள ஊர்களில் பெருமையாக பேசுவார்கள் ...
இனிமேல் இந்த ஊரில் பிழப்பது ரொம்ப கஷ்டம் ..
அதனால் எல்லோரும் வழக்கம்போல நம்ம அண்ணன் முத்தையாவின் வீட்டின் வாசலில் ஒன்றுகூடி பேசினால் ...
ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கையில் அவர் வீட்டின் வாசலில் ஒன்று கூடி இருக்கிறோம் இப்போது அவங்கவங்க விருப்பத்தை சொல்லுங்க என்று ஒருவர் சொன்னார்...

என்னத்த சொல்றது என்று சலிப்போடு ஒருவர் பேச ஆரம்பித்தார்...

பண்ணையாரின் மகன் சந்திரனின் திருமணத்தை ரொம்ப சிறப்பா நடத்தலாம் என்று சந்தோஷமா ஊரே கொண்டாடிக் கொண்டு இருந்தோம் ..

இப்படி வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்தது போல எல்லோரும் சந்தோஷமா இருந்த சமயத்தில் இப்படி அடி மேல் அடி விழுந்து எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறோம்

பாவம் சங்கர் ரேகா இருவரும் திருமணம் நடந்து ஒரு வருடம் கூட திரும்பவில்லை ..
அவர்களுக்கு என்ன நடந்ததோ என்று தெரியவில்லை

எப்படிப்பட்ட பிரச்சனையும் சமாளித்து விடுவான் சங்கர். அவனுக்கே இந்த நிலைமை என்றால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும். பண்ணையார் தோட்டத்தின் அருகில் செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது..

இதுல விருப்பத்தை சொல்லி என்ன ஆகப் போகுது என்று சலிப்போடு சொன்னார் ஒருவர்..

நான் சொல்றபடி எல்லோரும் கேளுங்க..
இனிமேல் பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்ய முடியாது ..
அதனால நமக்கு வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டம்
நம்ம ஊரே பண்ணையார் தோட்டத்தை நம்பி தான் இருக்கிறோம் ..
ஆனால் இப்போது அங்கு வேலை செய்வதில் எல்லோருக்கும் பயம் அதனால் இந்த ஊரிலிருந்து பட்டினியாக சகுவதைவிட எங்கேயாவது வேறு ஒரு ஊருக்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம் இதுதான் என்னோட விருப்பம் என்று ஒருவர் சொன்னார்..

என்னப்பா இப்படி சொல்லிட்ட ....

நம்ம தெய்வமா மதிக்கிற முத்தையாவின் வார்த்தையை மீற சொல்லுறியா ... அவர் கடைசியாக நம்மிடம் கெஞ்சிக் கேட்டது ஒன்றே ஒன்றுதான் . நீங்கள் யாரும் இந்த ஊரைவிட்டு போகக்கூடாது ...
என் மகன் சங்கரும் நிச்சயம் ஒருநாள் வருவான் ...
என்று சொல்லிவிட்டு இறந்துட்டாரு இப்போது அவர் இல்லை என்பதற்காக அவர் வார்த்தையை மீற சொல்றியா என்று மற்றொருவர் சொன்னார்...

நீங்க சொல்றதுதான் சரி ....
என்ன கஷ்டம் வந்தாலும் முத்தையாவின் வார்த்தையை மீறக்கூடாது. நிச்சயம் பண்ணையாரும் முத்தையாவும் தெய்வமாக இருந்து . நமக்கெல்லாம் ஒரு நல்ல வழி கிடைக்க வழி செய்வார்கள் .
அந்த நம்பிக்கையில் நம்ம எல்லோரும் இந்த ஊரை விட்டு போகக் கூடாது என்று நிறைய பேர் கூட்டத்தில் சொன்னார்கள்..

அப்படின்னா இனிமேல் நமக்கு சாப்பாடு எப்படி கிடைக்கும் ...
வேலை இருந்தாதானே சாப்பாடு கிடைக்கும் . இதுக்கும் நீங்களே ஒரு வழி சொல்லுங்களேன் என்று ஒருவர் சொன்னார்..

நீ சொல்றது சரிதான் ..வேலை இருந்தா தானே சாப்பாடு கிடைக்கும் வேலை இல்லை என்றால் எப்படிப் பிழக்க முடியும்

நமக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் பண்ணையாரும் முத்தையாவும்தான் தீர்த்து வைப்பார்கள் ஆனால் இப்போது அவர்கள் இல்லை ..

அதனால் இனிமேல் நமக்கு எல்லாமே பண்ணையாருக்கு அடுத்தபடியாக இருக்கும் அவருடைய பெரிய மகன் பரந்தாமன் ஐயாவிடம் சென்று நம்முடைய குறைகளை சொல்லலாம் ... பிறகு அவர் சொல்லும் பதிலை பொறுத்து
இந்த ஊரில் இருக்கலாமா .. இல்லை முத்தையாவின் பேச்சை மீறி வேறொரு ஊருக்கு சென்று பிழக்கலாம். என்ற முடிவை செய்யலாம் என்று ஒருவர் சொன்னார்..

பரந்தாமனின் யோசனைப்படி முடிவு செய்யலாம் என்று ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவு செய்தார்கள்..


கல்யாண வீடாக இருந்த நம்முடைய குடும்பம் இப்படி மாறி விட்டதே என்று நினைத்து சாந்தி சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்...

அப்போது சந்திரனின் வருங்கால மாமனாரும் மாமியாரும் வருவதை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்..

வாங்க மாமா என்று சொல்லிக்கொண்டு சந்திரனும் தீனாவும் அவர்களை அழைத்து வந்து வீட்டின் மையப் பகுதியில் அமர வைத்தார்கள்..

உடனே சாந்தி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்..

இருவரும் தண்ணீரை குடித்து விட்டு பரந்தாமனை பார்த்தார்கள்..

பரந்தாமன் லேசாக சிரித்தபடி இரு கைகளால் கும்பிட்டு மரியாதை கொடுத்தான்..

அப்போது சந்திரனின் வருங்கால மாமியார் ஏழுந்து சென்று சாந்தியின் தோள் மீது கை வைத்து ஆறுதல் சொன்னார்..

இத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு இந்த குடும்பத்தை வழி நடத்துவது சாதாரணமான விஷயம் அல்ல உன்னைப் போல மனம் தைரியமானவள் இந்த குடும்பத்திற்கு கிடைத்தது
நம்ம பண்ணையார் செய்த புண்ணியம் என்று பெருமையாக சொன்னாள்...

அப்போது சாந்தியின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது..

எனக்கு அப்பாவாகவும் ..
மாமனார் ஆகவும் தெய்வமாகவும் இருந்தவரை ... நான் இப்படி தவற விடுவேன் என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை அம்மா ...
என்று சொல்லி அழுதாள் சாந்தி..

கவலைப்படாதே.. கடவுள் ஒரு வழியை மூடினால் இன்னொரு வழியை கண்டிப்பா திறப்பார் என்று ஆறுதல் சொன்னாள் சந்திரனின் மாமியார்..

பரந்தாமனுக்கு இவர்களைப் பார்த்ததும் மனதுக்குள் எரிச்சலாக இருந்தது எதற்காக இவர்கள் இங்கு வந்தார்கள் இனிமேல் என் தம்பிக்கு நான் திருமணமே நடத்தப் போவதில்லை. தேவையில்லாமல் எதற்காக இவர்கள் இங்கு வருகிறார்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு எரிச்சலோடு அவர்களை பார்த்தபடி இருந்தான் பரந்தாமன்..


அப்போது சந்திரனின் வருங்கால மாமனார் பரந்தாமனை பார்த்து சொன்னார்..

இனிமேல் இந்த குடும்பத்தையும் இந்த ஊர் மக்களையும் சந்தோஷமாக பார்த்துக் கொள்வது உன்னோட பொறுப்பு பரந்தாமா... இனிமேல் நீதான் எல்லோரையும் வழிநடத்த வேண்டும் பண்ணையாரை போலவே நீயும் இந்த ஊரில் பெயர் எடுக்க வேண்டும் அதனால் உனக்கு இனி நிறைய பொறுப்புகள் உள்ளது இதையெல்லாம் நல்லபடியாக நீ முடிப்ப என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு பரந்தாமா என்று சொன்னார் சந்திரனின் மாமனார்..

வாங்க சாப்பிடலாம் என்று சாந்தி அவர்களை அழைத்தாள்..

இருக்கட்டும்... இன்னொரு நாளைக்கு நிச்சயமா சாப்பிடுகிறோம் .. நாங்கள் ஒரு முக்கியமான தகவலை சொல்லத்தன் இங்கு வந்தோம் என்று சொன்னார்கள்...

முக்கியமான தகவலா ....என்று நினைத்து எல்லோரும் அவர்களை சந்தேகத்தோடு பார்த்தார்கள்..

நான் சொல்ல போவதை கேட்டு நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் எங்களுடைய மகளுக்கு நாங்கள் வேறு இடத்தில் நிச்சயம் செய்திருக்கிறோம்.. அதனால் எங்களை மன்னித்து விடுங்கள்

நாங்களும் உங்கள் வீட்டிற்கு என் மகளை மருமகளாக அனுப்ப வேண்டும் என்ற ஆசையில் தான் இத்தனை நாள் காத்திருந்தோம் ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து திருமணத்தை நிறுத்தி விடுகிறது. இப்போது இருக்கும் நிலைமையில் உங்களால் திருமணத்தை நடத்த முடியாது இதேபோல நிலைமை நீடித்தால் என் மகளுக்கு திருமணம் நடப்பதில் பெரிய சிக்கல் ஏற்படும்

அதனால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம் எங்களுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால் இந்த முடிவைத்தான் செய்திருப்பீர்கள் என்று சந்திரனின் மாமனார் சொன்னார்..

இதைக் கேட்டதும் சாந்தி மறுபடியும் சோகத்தில் தலைகுனிந்தாள்...

சந்திரனுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது ...ஆசையோடு மனதுக்குள் மனைவியாக வாழ்ந்து வந்தோமே அவளும் நமக்கு கிடைக்கவில்லையே என்ற சோகம் அவனை சூழ்ந்துகொண்டு..

அம்மா ...இந்த ஒரு முறை மட்டும் நீங்கள் பொறுத்திருங்கள் நிலைமை சரியாகிவிடும்
அதன் பிறகு உடனே சந்திரன் திருமணத்தை நாங்கள் நடத்துகிறோம் என்று சாந்தி அவர்களிடம் கெஞ்சினாள்..

எங்கள் மகள் வாழ்க்கை பற்றி நாங்கள் சாதாரணமாக முடிவு செய்ய மாட்டோம் ...
எங்கள் குடும்பத்தில் எல்லோரும் கலந்து பேசிதான் இந்த முடிவை செய்தோம் எங்களை மன்னித்துவிடு சாந்தி என்று சொன்னார்கள்....

பரந்தாமனுக்கு மனதுக்குள் சின்ன சந்தோஷம் ...

நம்ம எதையாவது சொல்லி நிறுத்த வேண்டிய திருமணம் ..
இப்போது தானாகவே நின்று விட்டது நமக்கு வேலை மிச்சம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பரந்தாமன் கவலைப்படுவதை போல நின்று இருந்தான்..

நாங்கள் இருக்கும் நிலைமையை பார்த்து நீங்கள் தவறான முடிவு செய்து விட்டீர்கள் இதை நீங்கள் மறுபடியும் யோசிக்க வேண்டும் அம்மா என்று சாந்தி கெஞ்சினாள்..

அண்ணி அவங்கள தொந்தரவு செய்யாதீங்க அவர்கள் எனக்கு மாமாவாகவும் அத்தையாகவும் உறவுமுறையில் இங்கு வந்து சென்றாலே போதும் ....

எனக்கு அவர்களின் மகளை திருமணம் செய்து கொள்ள குடுப்பனை இல்லை ..
அவள் வேறு எங்கேயாவது நல்ல இடத்தில் நிம்மதியாக வாழ்ந்தாலே எனக்கு சந்தோஷம்
என்னை பொறுத்தவரை அவள் சந்தோஷமாக இருந்தாலே போதும் அதனால் அவர்கள் விருப்பப்படியே விட்டுவிடுங்கள் என்று சந்திரன் சொன்னான்..

சந்திரனின் பேச்சைக் கேட்டதும் மனமுடந்து சோகத்தில் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள் இனியும் எங்கு இருந்து எல்லோரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று நினைத்து இருவரும் நாங்கள் போய்ட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள் சந்திரனின் மாமாவும் அத்தையும்..


நம்ம செய்திருக்கும் தவறுக்கு இனிமேல்தான் தண்டனை கிடைக்கப் போகிறது என்று நினைத்து சந்திரன் வருத்தத்தில் அவனுடைய அறைக்கு சென்று விட்டான்...


இப்போதெல்லாம் நம்முடைய லட்சியத்திற்கு இருந்த எல்லாப் பிரச்சனைகளும் தானாகவே முடிந்துவிடுகிறது இதே போல நமது தோட்டமும் பசுமையாக மாற நம்முடைய லட்சியத்தை அடைய வழி கிடைத்தால் நன்றாக இருக்கும் இனிமேல் நம்ம தான் ராஜா....
என்று பரந்தாமன் நினைத்து சந்தோஷப்பட தொடங்கினான்..


பரந்தாமனுக்கு நினைத்ததெல்லாம் கைகூடி வருகிறது ...

எப்படிப்பட்ட பிரச்சனையும் பரந்தாமனுக்கு சாதகமாகவே அமைந்து விடுகிறது ....

ஒருவேளை பரந்தாமனுக்கு அவனுடைய அம்மா உண்மையாகவே துணையாக இருக்கிறாளா.... என்றுபொறுத்திருந்து பார்க்கலாம்...



தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
nice ud na............
ஆர்வத்தோடு விமர்சனம் செய்வதற்கு நன்றி.vaishnaviselvam👍🏽

கொஞ்ச நாள் கழித்து...upd.. பதிவு செய்கிறேன் .... இடைவேளைக்கு மன்னிக்கவும்...🙏🙏🙏
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்...38👇


பரந்தாமன் வழக்கம்போல தனது வீட்டு மொட்டை மாடியில் யோசித்தபடி கவலையோடு இருந்தான்..

எத்தனையோ சூழ்ச்சி செய்தோம்..

தம்பிகளை ஏமாற்றி நம் சொல்வதைப்போல கேட்கும்படி மாற்றி விட்டோம்
நம்முடைய லட்சியத்தை அடைவதற்காக மூன்று கொலைகளையும் செய்து விட்டோம் அப்படி இருந்தும் ... நம் லட்சிய கனவுக்கு இடஞ்சல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறதே

இனிமேல் ஊர் மக்கள் யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு வரமாட்டார்கள் அதனால் நம்முடைய விவசாயமும் நின்றுவிடும்.
அதில் சந்தேகமில்லை

இனிமேல் பழையபடி நம்முடைய எல்லாம் நிலங்களிலும் விவசாயம் செய்வதில் சந்தேகம்தான்..

நமக்கும் இனி வருமானம் குறைவுதான். எதற்காக இத்தனை திட்டங்கள் போட்டோமே அவை எல்லாமே இப்போது வீணாகப் போனது ...

இனிமேல் எப்படி விவசாயத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வருவது என்று பரந்தாமன் யோசித்திருந்தால் ...

அவனுக்கு எந்த யோசனையும் எடுபடவில்லை ...

இனி நமக்கு எல்லாம் அதிகாரமும் நம் கையில் இருந்தாலும்... விவசாயம் மட்டும் நம் கையை மீறி விட்டதே ...என்று நினைத்து பெரும் கவலையோடும் மொட்டை மாடியில் யோசித்திருந்தால் பரந்தாமன்..

பிறகு பரந்தாமன் சோகத்தோடு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான்..

உங்களுடைய யோசனை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இதை உங்கள் அண்ணனிடம் சொல்லுங்கள் என்று சாந்தி பேசிக்கொண்டிருப்பதை பரந்தாமன் கவனித்தான்..

என்ன மூணு பேரும் ரொம்ப தீவிரமா பேசிகிட்டு இருக்கீங்க என்று பரந்தாமன் கேட்டான்..

அது ஒன்னும் இலலைங்க ...மாமா சாகறதுக்கு முன்னாடி என் கிட்ட ஒரு விஷயம் சொன்னாரு ....அதை உங்க தம்பிகளிடம் நான் சொன்னேன் ...

அவங்களும் இதற்கு சம்மதம் சொல்லிட்டாங்க இதை நீங்களே உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க என்று நான் சொல்லிக் கொண்டு இருந்தேன் என்று சாந்தி பரந்தாமனிடம் சொன்னாள்..

சிறிது குழப்பத்தோடு என்ன விஷயம் அப்பா உன்னிடம் சொன்னார் என்று பரந்தாமன் கேட்டான்..

நமக்கு தேவையான நிலங்களை எடுத்துக்கொண்டு மிச்சம் உள்ள அனைத்து நிலங்களையும்
ஊர் மக்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டால் ...நமக்கு எந்த தொல்லையும் வராது என்று என்னிடம்
சொல்லியிருந்தார். மாமா

நானும் .. திருமணம் முடியட்டும் இதற்கு ஒரு முடிவு செய்யலாம் என்று சொன்னேன் அதற்குள் இப்படி நிலைமை மாறிவிட்டது இதுதான் உங்கள் தம்பிகளிடம் சொன்னேன் என்றாள் சாந்தி..

ஆமாம் அண்ணா ... எங்களுக்கும் இது தன் சரியாக படுது

நமக்கும் அப்பாவின் ஆசையை நிறைவேற்றினா சந்தோஷம் கிடைக்கும் .. ஊர் மக்களும் சந்தோஷமாக வேலை செய்வார்கள் இல்லை என்றால் ஊர் மக்கள் பயந்து கொண்டு யாரும் வேலைக்கு வரமாட்டார்கள்

நிலைமை இப்படியே நீடித்தால் எல்லாம் நிலங்களும் வீணாகப் போய்விடும் அண்ணா ..
அதனால் ஊர் மக்களுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்து விடலாம் அண்ணா என்று சந்திரனும் தீனாவும் பரந்தாமனிடம் சொன்னார்கள்..

உங்களுக்கெல்லாம் நிலத்தை யார் இப்போ கொடுக்கப் போறா.... நீங்களே ஒன்றுமில்லாத வெரும் பயலுங்க உங்களுக்கு நிலத்தை பிரித்துக் கொடுக்கும் துணிச்சல் ஏற்பட்டு விட்டதா
உங்களை இப்படியே விட்டால் பிறகு எனக்கே நீங்கள் யோசனை சொல்வீங்க இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுகிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் தம்பிகளை பாசமாக பார்ப்பது போல் நடித்தான்..

என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதில்.. அப்பாவுக்கு எவ்வளவு ஆசை என்று உங்களுக்கே தெரியும் இதைத் தெரிந்து மா நீங்கள் இருவரும் இப்படி பேசுறீங்க என்று பரந்தாமன் சொன்னான்..


திருமணமா ...இனிமேல் எனக்கு திருமணம் வேண்டாம் அண்ணா நான் என்ன பாவம் செய்தேனோ எனக்கு திருமணத்தில் தொடர்ந்து தடங்கள் வந்து கொண்டே இருக்கிறது ..
அதனால் எனக்கு இனிமேல் திருமணம் வேண்டாம்..
தீனாவுக்கு வேணுமானால் திருமணத்தை செய்து வையுங்கள் என்று சந்திரன் வருத்தத்தோடு சொன்னான்..

சந்திரனின் மன நிலைமையை நினைத்து சாந்தியும் தீனாவும் மனம் வருத்தத்தோடு நின்றார்கள்..


நடந்ததையெல்லாம் மறந்துடுங்க இனிமேல் அப்பாவின் முதல் ஆசை உங்களுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் ..

அதுதான் என்னோட விருப்பம் அதன் பிறகு நீங்கள் யாருக்கு வேணாலும் நிலத்தை பிரித்துக் கொடுங்கள் .. முதல்ல உங்க இரண்டு பேரின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் அப்போதுதான் ஊரில் உள்ளவர்கள் என்னையும் உங்கள் அண்ணியையும் தவறாக பேச மாட்டார்கள் ..

இல்லையென்றால் ...பண்ணையார் இருந்திருந்தால் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருப்பார் ஆனால் பரந்தாமன் அப்படி செய்யவில்லையே என்று தவறாக பேசுவார்கள்..

அதனால் நான் உங்களுக்கு முதலில் திருமணம் செய்யப்போகிறேன் என்று பரந்தாமன் உறுதியோடு சொன்னான்..

பரந்தாமனின் பதில் சாந்திக்கு சரியாகப்பட்டது...

ஆமாம் தம்பி உங்கள் அண்ணன் சொல்வதுதன் சரியானது ...
எனக்கு கூட இந்த யோசனை எட்டவில்லை உங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஊர் மக்கள் எங்களை தான் கேவலமாக பேசுவார்கள் தம்பி உங்கள் அண்ணன் சொல்வதைப்போல நீங்கள் திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று சாந்தி பணிவோடும் பாசத்தோடும் சொன்னாள்..

திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை ..
ஆனால் உங்களின் பேச்சையும் என்னால் மீறவும் முடியாது
இனி உங்கள் விருப்பம் என்று சந்திரன் வருத்தமாக சொன்னான்..


இந்த ஜென்மத்தில் உங்கள் இருவருக்கும் திருமணமே கிடையாது .... நான் உயிரோடு இருக்கும்வரை அந்த கடவுளே நினைத்தாலும் நான் அதை தடுத்து நிறுத்தி விடுவேன் .. திருமண கனவை காணாதே தம்பி என்று மனதில் நினைத்துக்கொண்டான் பரந்தாமன்....

உடனே பரந்தாமன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு தம்பிகளின் தோளை தட்டிக் கொடுத்து சொன்னான் ...

தம்பி நடந்ததையெல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாம் இனி நாம் எப்படி சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் நினைத்துப் பாருங்கள் என்று தம்பிகளிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஊர் மக்கள் கூட்டமாக வருவதை பார்த்தார்கள்..

ஊர் மக்களை பார்த்ததும் சாந்திக்கு மறுபடியும் அதிர்ச்சியானது ஏற்கனவே நொந்து போயிருக்கும் நமக்கு மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டதா என்று நினைத்து பயந்து போனாள்..


ஊர் மக்கள் அனைவரும் வீட்டின் வாசலில் நிரம்பி இருந்தார்கள்..

ஐயா எங்களுக்கு இந்த ஊரில் இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு இனிமேல் பண்ணையாருக்கு அடுத்தபடியாக நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அதனால் உங்களிடம் இதைப் பற்றி நல்ல யோசனை கேட்கலாம் என்று வந்திருக்கிறோம் என்று ஒரு பெரியவர் பரந்தாமனிடம் சொன்னார்..

பரந்தாமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது...

உங்களுக்கு நாங்கள் என்ன குறை வைத்தோம் எதற்காக இந்த முடிவை எடுத்தீங்க..

ஐயா பம்புசெட்டு வேலைக்கு போவதற்கும் எங்களுக்கு பயமாக இருக்கிறது அதனால் வேலை இல்லாமல் எல்லோரும் பசியால் தவிக்கிறோம் அதனால் வேறு எங்கேயாவது சென்று பொழப்பு நடத்தலாம் என்று முடிவு செய்தோம் அது சரிதானா என்று எங்களுக்கு தெரியவில்லை இதற்கு நீங்களே ஒரு பதிலை சொல்லுங்கள் ஐயா..


இனிமேல் பம்புசெட்டில் எந்த தவறும் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் . அது என்னுடைய பொறுப்பு என்னை நம்பி நீங்கள் பம்புசெட்டு வேலைக்கு தாராளமாக வந்து வேலை செய்யலாம்

அப்படி வேலை செய்பவர்களுக்கு இருமடங்கு கூலி தருகிறேன் அதன் பிறகு எல்லோருடைய பிரச்சனையும் சரியாகிவிடும் இதுதான் என்னோட பதில் என்று பரந்தாமன் சொன்னான்..

ஆமாம் அய்யா ... இனிமேல் பம்புசெட்டில் எந்த அசம்பாவிதமும் நடக்காது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் பயப்படாமல் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யலாம் என்று சந்திரனும் தீனாவும் ஊர் மக்களிடம் சொன்னார்கள்...

இப்படிதான் சங்கரும் ரேகாவும் எங்களுக்கு தைரியத்தை சொல்லிக் கொடுத்து விட்டு ..
பம்புசெட்டு வேலைக்கு சென்றார்கள். ஆனால் அவர்களின் நிலைமை பாவம் ..
இதேபோல நிலைமை மறுபடியும் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் பம்புசெட்டு வேலைக்கு வரவில்லை இதற்கு நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் எங்களுக்கு துளியும் விருப்பம் இல்லை ஐயா எங்களை மன்னித்து விடுங்கள் ...
வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள் நிச்சயம் நாங்கள் கேட்கிறோம்..


ஊர் மக்களின் பேச்சு பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது ஊர் மக்கள் நாம் செய்த சூழ்ச்சியால் ரொம்ப பயந்து போய்விட்டார்கள் இனிமேல் யாரும் பம்புசெட்டு வேலைக்கு வரமாட்டார்கள் என்று நினைத்து கவலையில் தலைகுனிந்தான்..

ஐயா எங்களுக்கு வேலை வேண்டும் ...
வேலை இருந்தால் தான் நாங்கள் நிம்மதியாக சாப்பிட முடியும்
அப்படி இல்லை என்றால் நாங்கள் தெய்வமாக மதித்துருந்த முத்தையா அண்ணனின் வார்த்தையை மீறி இந்த ஊரைவிட்டு வேறு எங்கேயாவது போக வேண்டிய நிலைமை ஏற்படும் .. அதனால் ஒரு வாரத்தில் எங்களுக்கு நல்ல பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா என்று ஊர் மக்கள் சொன்னார்கள்..

உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் வேகமாக உள்ளே சென்று இரண்டு கட்டு பணத்தை எடுத்து வந்து ஊர் மக்களிடம் கொடுத்தான்..

ஐயா நாங்கள் வேலையே செய்யவில்லையே எதற்காக இந்த பணம் என்று ஊர் மக்கள் வாங்க தயங்கினார்கள்..


நீங்கள் பசியோடு இருப்பது என் மனம் தாங்க முடியவில்லை அதனால் இந்த பணத்தை வைத்து நிம்மதியாக இருங்கள் அதற்குள் என்னுடைய பதிலை சொல்கிறேன் பிறகு உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று சொல்லி ஊர் மக்களை அனுப்பி வைத்தான் பரந்தாமன்..


.....நாட்கள் நகர்ந்தது......


பரந்தாமனின் மனம் குழப்பமாகவே இருந்தது ஊர் மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தான். ஊர் மக்கள் எல்லோரும் சென்று விட்டால் பிறகு நமக்கு இங்கு என்ன வேலை நம்முடைய லட்சியம் எப்படி நிறைவேறும் என்று நினைத்து பெரும் கவலையில் இருந்தான் பரந்தாமன் ...

அப்போது அவன் மனசுக்கு பம்புசெட்டில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்னால் நம்முடைய குறைகளை சொல்லலாம் என்று முடிவு செய்துகொண்டு பரந்தாமன் அன்று காலையில் தம்பிகளை அழைத்துக் கொண்டு பம்பு செட்டுக்கு கிளம்பினான்...🏠🏘️


பச்சை பசுமையாக இருந்த தோட்டம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் வீணாக கிடப்பதை பார்த்து சந்திரன் தீனா பரந்தாமன் மூவரும் கவலைப்பட்டார்கள்..

அண்ணா ..நம் தெரியாத செய்த தவறினால் இப்படி நம்முடைய தோட்டமும் ஊர் மக்களின் வாழ்க்கையும் வீணாக போய் விட்டதே என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்..

ஆமாம் தம்பி ...அதுமட்டும்மல்ல இனிமேல் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய யாரும் வரமாட்டார்கள்.. இங்கு ஏதோ மர்மம் இருக்கிறது என்று எல்லோரும் நம்புகிறார்கள் ..

ஆனால் நடந்தது எல்லாம் நம் மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும் இனிமேல் நம்ம எந்த தவறும் செய்ய மாட்டோம்
இது ஊர் மக்களுக்கு தெரியாது இதை சொல்லவும் முடியாது ..
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற கதை போல நம்முடைய கதையும் மாறிவிட்டது தம்பி என்று கவலையோடு சொன்னான் பரந்தாமன்..

நம்முடைய விவசாயமும் நம்மை விட்டு போயிடுச்சு ...
இன்னும் கொஞ்ச நாள்ல ஊர்மக்களும் நம்மை விட்டு போக போறாங்க அண்ணா என்று சந்திரன் வருத்தத்தோடு சொன்னான்..

பிறகு மூவரும் பேசிக்கொண்டே பம்பு செட்டை அடைந்தார்கள் அப்போது மூவருக்கும் சங்கரையும் ரேகாவை கொலை செய்த ஞாபகம் வந்தது..

அப்போது மண்வெட்டி கிழே கிடைப்பதை மூன்று பேரும் பார்த்தார்கள் ...கடைசியாக சங்கர் மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு கிணற்றில் கொதித்தது ஞாபகத்திற்கு வந்தது..

உடனே தீனா அந்த மண்வெட்டியை எடுத்து அருகில் இருக்கும் பலா மரத்தின் கிளைகளில் மாட்டி விட்டான்..

தம்பி நீங்கள் இருவரும் தோட்டத்தை பார்த்துவிட்டு வாருங்கள் நான் சிறிது நேரம் இங்கேயே இருக்கிறேன் என்று பரந்தாமன் சொன்னான்..

தம்பிகள் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றதும் பரந்தாமன் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டினான்..

நான் உயிரை விடுவதை விட வேறு வழி இல்லை என்ற நிலைமைக்கு இருந்த போதும் ... நீ என்னை எப்படியோ காப்பாற்றிவிட்டாய் தாயே
எனக்கு இந்த பிரச்சனையில் இருந்து தப்பவே முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டேன் ஆனால் என்னுடைய குறைகளை உன்னிடத்தில் நான் சொல்லி கற்பூர தீபத்தை ஏற்றினேன் .. அதற்கு பலனாக எல்லாம் சம்பவங்களும் எனக்கு சாதகமாகவே அமைந்து விட்டது தாயே இதில் ஒரே ஒரு தவறை மட்டும் நான் உன்னை கேட்காமலே செய்து விட்டேன் தாயே அப்பாவை கொன்று விட்டதுதான்... என்னை மன்னித்துவிடு தாயே...

இனிமேல் எனக்கு எந்த குறையும் கிடையாது என்னை எதிர்ப்பவர்கள் யாரும் கிடையாது இனி ஒரே ஒரு கவலை மட்டும்தான் இதற்கு ஒரு நல்ல வழி காட்டி விட்டால் எனக்கு வேறு எந்த கவலையும் கிடையாது ..

நான் தம்பிகளையும் இந்த ஊர் மக்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் தாயே எப்படியாவது நம்முடைய விவசாயம் பழைய நிலைமக்கு திரும்ப வேண்டும் உன்னருகில் வைத்திருக்கும் என்னுடைய பணப்பெட்டி நிரம்ப வேண்டும் .. இதுதான் என்னோட கடைசி ஆசையாக கூட எடுத்துக்கொள் தாயே ..

இதை மட்டும் எப்படியாவது என் கூட இருந்து என் சந்தோசத்தை நீ நிறைவேற்றி வாய்ப்பை என்ற நம்பிக்கையில் நான் செல்கிறேன் தாயே எனக்கு ஒரு நல்ல வழிகாட்டு தாயே என்று சொல்லிவிட்டு பரந்தாமன் வெளியே வந்து நின்றுவிட்டான்...


அப்போது பரந்தாமன் ஊர் மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தபடி மெதுவாக நடந்தபடி இருந்தான்..

நிச்சயம் நம்முடைய அம்மா ஒரு நல்ல வழி நமக்கு சொல்வார் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது அவன் அருகில் பலா மரத்தின் கிளையில் மாட்டி வைத்திருந்த மண்வெட்டி அவன் காலடியில் விழுந்தது..

உடனே பரந்தாமன் அந்த மண்வெட்டியை எடுத்து நன்றாக கூர்ந்து கவனித்தான் ..

எதற்காக இந்த மண்வெட்டி திடீரென்று நம் காலடியில் விழுந்தது என்று யோசிக்க ஆரம்பித்தான் பரந்தாமன்...

அப்போது அவனுக்கு ஒரு யோசனை பட்டது ..
பம்புசெட்டு வேலையை நாமே ஏன் செய்யக்கூடாது ...
இந்த வேலையால் தானே ஊர் மக்கள் பயப்படுகிறார்கள் ..
நமக்கு ஒரு பயமும் கிடையாது ஏனென்றால் இங்கு நடந்த தவறும் நம்முடைய திட்டம் தான் அதனால் நாம் ஏன் பயப்பட வேண்டும்..

இனிமேல் நாமே இரவு பகலும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்தால் தான் நம்முடைய லட்சியம் நிறைவேறும் என்று முடிவுக்கு வந்தான் பரந்தாமன் ...

அப்போது அவன் உள் மனசு சொன்னது இது நம்முடைய தாயின் யோசனையாக தான் இருக்கும் என்று..

தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு சந்திரனும் தீனாவும் பம்புசெட்டின் அருகில் வந்து பரந்தாமனை பார்த்து கவலையோடு சொன்னார்கள்..

அண்ணே ..எல்லாம் பயிரும் வீணாகிப் போச்சு இனிமேல் புதிதாய் நடவு செய்தால்தான் வேலைக்கு ஆகும் என்று சந்திரன் சொன்னான்...

ஆமாம் அண்ணா... இனிமேல் எல்லா நிலங்களிலும் புதிதாய் பயிர் செய்ய வேண்டும் என்றால் நிறைய பணம் செலவாகும் என்று தீனாவும் வருத்தத்தோடு சொன்னான்...

தம்பி எனக்கு ஒரு யோசனை படுது இதற்கு நீங்கள் இருவரும் ஒத்துழைத்தால் நம்முடைய எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்று பரந்தாமன் சொன்னான்..

என்ன யோசனை சொல்லுங்க அண்ணே ...நிச்சயம் நாங்கள் செய்கிறோம் இனிமேல் நம்முடைய குடும்பமும் இந்த ஊர் மக்கள் நிம்மதியும் தான் எங்களுக்கு முக்கியம் அண்ணே என்று தீனாவும் சந்திரனும் உற்சாகத்தோடு சொன்னார்கள்..

பம்புசெட்டு இரவு வேலயை நாமே செய்தால் என்ன ...

ஊர் மக்களுக்குத் தான் இங்கு ஏதோ மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்
ஆனால் நமக்குத்தான் இங்கு நடப்பதெல்லாம் தெரியுமே அதனால் நாம் ஏன் பயப்பட வேண்டும் இந்த வேலையை நாமே செய்யலாம் பகலில் ஊர் மக்கள் வேலை செய்யட்டும் என்று பரந்தாமன் சொன்னான்..

நீங்கள் சொல்வது சரிதான்
ஆனால் இதற்கு அண்ணி சம்மதிப்பாங்களா அண்ணா..

அண்ணியை நான் சமாளித்துக் கொள்கிறேன் இதற்கு உங்களுடைய விருப்பம் சம்மதமா..

எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை இனி நாங்கள் கடுமையாக நிலத்தில் உழைக்க வேண்டும் என்ற ஆசை தான் எங்களுக்கு அதிகமாகவே உள்ளது ..
அதனால் இரவும் பகலும் நாங்கள் பம்புசெட்டில் தங்கி வேலை செய்கிறோம் அண்ணா நீங்கள் ஒன்றும் கவலைப்பட தேவையில்லை என்று இருவரும் சந்தோஷமாக சொன்னார்கள்..

இனிமேல் நமக்கு நல்ல காலம்தான் தம்பி .. என்று மூவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு வீட்டுக்கு புறப்படும் சமயத்தில் கிணற்றில் ஏதோ குதித்தது போல சத்தமாக கேட்டது...

ஒரு நொடியில் மூவரும் பயந்து போனார்கள் ... சங்கர் எப்படி கிணற்றில் குதித்தபோது சத்தம் கேட்டதோ அதேபோல சத்தம் கேட்டது...

பரந்தாமனின் மனம் படபடவென அடித்தது உடனே பரந்தாமன் பயந்துகொண்டு தம்பிகளிடம் சொன்னான்..

கிணற்றில் ஏதோ விழுந்தது போல இருந்ததே தம்பி என்று முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னான் பரந்தாமன்...

அப்போது சந்திரனும் தீனாவும் சற்று பயத்தோடு மெதுவாக சென்று கிணற்றை எட்டிப் பார்த்தார்கள் அப்போது கிணற்றில் ஒரு தேங்காய் மிதப்பதை பார்த்து சற்று நிம்மதி அடைந்தார்கள்...

அண்ணா கிணற்று தேங்காய் விழுந்துருக்கிறது அந்த சத்தம் தான் நமக்கு கேட்டது என்று தீனா சொன்னான்..

அப்போது பரந்தாமனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது ..
உடனே அங்கிருந்து மூவரும் கிளம்பி விட்டார்கள்..

அப்போது தீனாவுக்கு மட்டும் ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டது.. கிணற்றில் இருந்த தேங்காய் பச்சை இளநீர் ... அது எப்படி அறுந்து கிணற்றில் விழுந்தது ஏதாவது மர்மம் இருக்குமா என்ற சந்தேகத்தோடு சென்றான் தீனா....


பலா மரத்தின் கிளையில் மாட்டியிருந்த மண்வெட்டியை
நம் காலடியில் தள்ளிவிட்டு நம்முடைய அம்மா ... நமக்கு ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துவிட்டால் என்ற சந்தோசத்தோடு சென்றான் பரந்தாமன்..



பரந்தாமனின் காலடியில் மண்வெட்டியை தள்ளிவிட்டது...... அவனுடைய அம்மாவா .....
இல்லை சங்கரா .....
பொறுத்திருந்து பார்க்கலாம்.....



தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்-..39👇


மறுநாள் காலையில் பரந்தாமன் தனது யோசனையை சாந்தியிடம் சொன்னான்...

இதுக்கு ஒருபோதும் நான் சம்மதிக்க மாட்டேன்.
இதனால் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும். இந்த ஒரு விஷயத்திற்கும் மட்டும் நான் சம்மதிக்கவே மாட்டேன்
தயவு செய்து உங்க முடிவை மாற்றிக்கிங்க மாமா. என்று பிடிவாதமாக சாந்தி சொன்னாள்..

நம்ம தோட்டத்துல வேலை செய்யறதுக்கு நாமலே பயந்தான் ஊர் மக்கள் எப்படி வருவாங்க வேலைக்கு. எங்களுக்கு எதுவுமே நடக்காது நீ தைரியமா இரு சாந்தி..

ஏற்கனவே மூணு குடும்பம் மர்மமான முறையில் காணாம போயிட்டாங்க. அதுக்கே இன்னும் சரியான தீர்வு கிடைக்கல மறுபடியும் நீங்க மூணு பேரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்த உங்களுக்கு ஏதாவது ஒன்னு நடந்தா என் நிலைமையை கொஞ்சம் நினைச்சுப் பாரு மாமா என்று வருத்தத்தோடு சொன்னாள் சாந்தி..

பரந்தாமனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எப்படி இவளுக்கு சொல்லி புரியவைப்பது
நடந்த எல்லாம் குற்றங்களையும் நாங்கள்தான் செய்தோம்
அதனால் எங்களுக்கு எதுவுமே நடக்காது என்று சொல்லவும் முடியாமல் தவித்தான் பரந்தாமன்..

அண்ணி நீங்கள் நினைக்கிற மாதிரி இந்த முறை எந்த அசம்பாவிதமும் . நம்ம பம்புசெட்டில் நடக்காது
இந்த முறை நாங்கள் கவனமாக நடந்துகொள்கிறோம் அண்ணி அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சந்திரன் சாந்தியிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னான்..

உங்களுக்கு என்ன தம்பி....
நீங்க ஆம்பளைங்க ....
எதை நாளும் சொல்லிவிட்டு துணிச்சல இறங்கி செய்வீங்க.. நாளைக்கு ஏதாவது உங்களுக்கு ஒன்னு நடந்தா தனி மரமா நிக்கிறது நான் மட்டும்தான் தம்பி.... எனக்குன்னு அப்புறம் யாருமே கிடையாது ... அதுக்கப்புறம் நான் உயிரோடு இருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கண்ணீரோடு சொன்னாள் சாந்தி..

அண்ணி நீங்க சொல்றது உண்மைதான... இருந்தாலும் இந்த முறை நாங்கள் மூன்று பேரும்
இந்த ஊர் மக்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் அண்ணி .... தயவுசெய்து எங்களை போக அனுமதி கொடுங்கள் அண்ணி என்று தீனாவும் பணிவாக கேட்டான்...

நானும் ஊர்மக்கள் நல்லதுக்காகத்தான் சொன்னேன் எல்லோருக்கும் நிலத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு நம்ம நிம்மதியா வீட்டில் இருந்தால் என்ன ...

அவர்கள் அவரவர் நிலத்தில் வேலை செய்து பிழக்கட்டும் அதில் கிடைக்கும் லாபத்தில் நமக்கு கொஞ்சம் கொடுக்கட்டும் இது போதாதா நமக்கு ..
அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் மறுபடியும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்தால் உங்களுக்கு நிச்சயம் ஏதாவது நடந்து விடும் அதனால் தயவு செய்து இந்த முடிவை விட்டுவிடுங்கள் என்று மறுபடியும் அழுதுகொண்டே சொன்னால் சாந்தி...

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் என்ன சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் குழம்பினார்கள் சாந்தியின் நிலைமையை பார்த்து அவர்களுக்கு கவலையாக இருந்தது..

பிறகு பரந்தாமன் சாந்தியின் தோல் மீது தட்டிக்கொடுத்து பொறுமையாக சொன்னான்...

இந்த ஒரே ஒருமுறை மட்டும் எங்களுக்கு நீ அனுமதி கொடு அதுக்கப்புறம் நீயே ஆச்சரியப்படுவ இந்த ஊர் மக்கள் நிம்மதியாக வாழ்வதை பார்த்து உனக்கே சந்தோஷமாக இருக்கும் .
அதோடு நாமும் நிம்மதியாக இருக்கலாம்
அதுக்கு அடுத்தபடியாக சந்திரனின் திருமணத்தையும் நடத்த வேண்டும் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால்
நாங்கள் மூன்று பேரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்தால்தான் எல்லாவற்றுக்கும் தீர்வு ஏற்படும் சாந்தி என்று பரந்தாமன் சொன்னான்..

இதே போல தான் சங்கரும் துணிச்சலோடு வேலை செய்து வந்தான் .. சங்கரின் துணிச்சலை பார்த்து ஊர் மக்களே ஆச்சரியப்பட்டார் ...
அவன் நிச்சயம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டி விடுவான் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே இருந்தது ஆனால் கடைசியில் நடந்தது வேறு அதனால் தான் சொல்கிறேன் மாமா .. எனக்கு நீங்கள் மூன்று பேரும் வேண்டும் உங்களை நம்பி தான் இந்த ஊர் மக்களும் இருக்கிறார்கள் இப்போது நீங்களே இந்த மர்மமான வேலைக்கு போனால் எப்படி மாமா என்று பாசத்தோடு மூவரையும் பார்த்து அழுதபடி சொன்னால் சாந்தி...

பரந்தாமனுக்கு மெல்லமெல்ல கோபம் தலைக்கேறியது ...
அவளின் சம்மதத்தை இனி எதிர்பார்த்தால் நம்முடைய இலட்சியம் நிறைவேறாது என்று மனதில் நினைத்துக்கொண்டு சற்று கோபத்தோடு சொன்னான் பரந்தாமன்..

சாந்தி எங்களுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை தேவையில்லாமல் நீ அழுது கொண்டு எங்களை தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதே சாந்தி ...
எனக்கு கோபம் வந்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது...
உன்னோடு சம்மதத்தோடு நாங்கள் வேலைக்கு போகணும் என்று நினைத்துதான் உன்னுடைய சம்மதத்தை கேட்கிறோம் ..
ஆனால் நீ இப்படி பிடிவாதம் பிடிப்பதில் எந்த பலனும் கிடையாது சாந்தி ....
நிச்சயம் எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை நீ தான் உன்னுடைய பிடிவாதத்தை விட்டு விட்டு எங்களை நல்லபடியாக வழி அனுப்பி வைக்க வேண்டும் என்று சற்று கோபத்தோடு சொன்னான் பரந்தாமன்...

பரந்தாமனின் பேச்சு சாந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது ...
அப்படி என்றால் இவர்கள் மூவருக்கும் நிச்சயம் ஏதோ நடக்கப்போகிறது இனிமேல் நாம தனிமரமாக தான் நிற்கப் போகிறோம் என்று நினைத்து சிறிது நேரம் அதிர்ச்சியில் மௌனமாக இருந்தால் சாந்தி..


நமக்கு ஒன்றும் நடக்காது இருந்தாலும் அண்ணி இடத்தில் நாம் இருந்தாலும் இப்படிதான் பிடிவாதம் பிடிப்போம் என்று சந்திரன் யோசித்தபடி வருத்தத்தோடு நின்றான்..

அண்ணே நம்முடைய முடிவில் ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் அண்ணே அன்னைக்காக என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்...

அப்போது சாந்திக்கு தீனாவின் பேச்சு சற்று ஆறுதலாக இருந்தது வியப்போடு தீனாவை பார்த்தால் சாந்தி..

சொல்லு தம்பி..

பம்புசெட்டில் தங்கி மூன்று பேரும் வேலை செய்தால் நமக்கு ஏதாவது நடந்திடும் என்ற பயத்தில் தான் அண்ணி இதற்கு சம்மதம் சொல்லல அதனால நம்ம மூணு பேரும் பம்புசெட்டில் ஒன்றாக தங்கி வேலை செய்வதை விட மூவரும் ஆளுக்கு ஒரு நாள் என்று பம்புசெட்டில் தங்கி வேலை செய்யலாம் அன்னிக்கும் சற்று ஆறுதலாக இருக்கும் என்று தீனா சொன்னான்..

இப்போதாவது உனக்கு சம்மதமா சாந்தி ....
தீனா சொன்னதுபோலவே நாங்கள் ஆளுக்கு ஒரு நாள் பம்புசெட்டில் தங்கி வேலை செய்கிறோம் என்று பரந்தாமன் சாந்தியை பார்த்து பாசத்தோடு சொன்னான்..

அப்போது சந்திரன் சொன்னான்....
அண்ணே பம்புசெட்டில் தினமும் நானும் தம்பியும் மாறி மாறி வேலை செய்கிறோம் ..
நீங்கள் அண்ணியோடு இருங்கள் நாங்கள் இருவரும் தோட்டத்தை பார்த்துக்கொள்கிறோம் அண்ணா என்று சந்திரன் சொன்னான்...

நீங்கள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பதால் நான் இதற்கு சம்மதிக்கிறேன் ஆனால் உங்களில் யாராவது ஒருவருக்கு ஏதாவது சின்ன பாதிப்பு
ஏற்பட்டால் கூட நிச்சயம் நான் என்ன முடிவு எடுப்பேன் என்று எனக்கே தெரியாது
அதனால் இந்த முறை கவனமாக இருக்கணும் தம்பி ...
நமக்கு வழிகாட்டியாக இருந்த உங்க அப்பாவும் இப்போது இல்லை அதனால் நாமதான் கவனமாக நடந்து கொள்ளணும் .
இதை மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்யுங்கள் என்று வருத்தத்தோடு சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் சாந்தி...

எப்படியோ சாந்தியின் சம்மதத்தை வாங்கிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு பரந்தாமன் தனது தம்பிகளை பார்த்து சொன்னான்... தம்பி நீங்கள் இரண்டு பேரும் மாறி மாறி பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு கஷ்டமாக இருக்காதா நானும் ஒரு நாளைக்கு வேலை செய்கிறேன் தம்பி என்று பாசமாக நடித்துக்கொண்டு சொன்னான் பரந்தாமன்..

வேண்டாம் அண்ணா... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்
எங்களுக்கும் செய்த தவறுக்கு இந்த ஊர் மக்களுக்கு கடுமையாக உழைத்து அவர்களை சந்தோஷமாக பார்த்துக் கொண்டோம் என்ற நிம்மதி எங்களுக்கு கிடைக்கும் அண்ணா என்று தீனா சொன்னான் ...

இதைக் கேட்டதும் பரந்தாமனுக்கு மேலும் சந்தோஷம் பொங்கியது இனிமேல் நமக்கு நல்ல காலம்தான் தம்பிகளும் நம் நினைத்தபடியே நடந்துகொள்கிறார்கள் ...
இனி நமக்கு எந்த தடங்கலும் ஏற்படாது நம்முடைய லட்சியத்தை சீக்கிரமாகவே அடைந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டான் பரந்தாமன்...


🏠🛖🏘️⛺🏝️ ஊர் மக்களுக்கு பண்ணையார் மகன்கள் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யப் போகிறார்கள் என்ற விசயத்தை கேள்விபட்டதும் எல்லோரும் அதிர்ச்சியானார்கள்..

நம்ம எல்லோரும் இந்த ஊரைவிட்டு போய்விடுவோம் என்ற கவலையில் தான் பண்ணையார் மகன்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் பாவம் நமக்காக அவர்கள் உயிரை பணயம் வைத்து அந்த பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய துணிந்து விட்டார்கள் ..
இவர்களின் செயலுக்கு நம்ம தலை குனிந்து நிற்க வேண்டியதுதான் என்று ஊர் மக்கள் கூட்டமாக பேசிக்கொண்டார்கள்..

நம்முடைய நலனுக்காக அவர்கள் துணிந்து இந்த முடிவை எடுத்து விட்டார்கள் ஆனால் நம்ம இன்னும் பயந்து கொண்டேதான் இருக்கிறோம் இது இப்படியே நீடித்தால் நம்ம முத்தையா அண்ணனுக்கு கொடுக்கிற மரியாதை குறைந்து கொண்டே வரும் ...

அதனால் கூடிய சீக்கிரத்தில் நம்மில் யாராவது ஒருவர் அவர்களைப்போலவே பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய துணிந்து வரவேண்டும் ..
நாமளும் ஆளுக்கு ஒருவர் என்ற விதத்தில் தினமும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும் அப்படி செய்தால்தான் நாம் பண்ணையாருக்கும் முத்தையாவுக்கு கொடுக்கும் மரியாதை என்று மற்றொருவர் சொன்னார்..

ஆமாம் நீங்க சொல்றது உண்மைதான் ...
இல்லையெனறால் கூலி கொடுத்த முதலாளியை நம் வேலை செய்ய வைத்த பாவத்தை சுமக்க வேண்டியது இருக்கும் என்று மற்றொருவர் சொன்னார்..


சரி சரி கொஞ்ச நாள் அவர்கள் பம்புசெட்டில் வேலை செய்யட்டும் அதன் பிறகு உடனே நாமும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு துணிந்து வரவேண்டும் ..
இந்த ஊரிலுள்ள ஆண்கள் தினமும் ஆளுக்கு ஒருநாள் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும் இது நம்முடைய கடமையும் கூட என்று ஒருவர் சொன்னார்..

அப்போது அந்தக் கூட்டத்தில் ரேகாவின் அம்மா. பித்துப் பிடித்தவள் போல லட்சுமி அம்மாள் எல்லோரையும் இலேசாக முறைப்படியும் சிரித்தபடி இருந்தாள் அவரைப் பார்த்து எல்லோரும் கவலையோடு இருந்தார்கள்..

பாவம் எப்படி இருந்த குடும்பம் இப்படி தலைகீழாக மாறிவிட்டது என்று நினைத்து வருத்தப் பட்டார்கள் அனைவரும்..


⛺ குருவே விஷயம் தெரியுமா... நாளையிலிருந்து எல்லோரும் பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போகப் போறாங்க... இனிமேல் ஊர்மக்கள் சம்பாதிக்க போறாங்க நமக்கும் வருமானம் இனிமேல் நல்லாவே கிடைக்கும் குருவே என்று ஒரு சிஷ்யன் சொன்னான்..

ஆமாண்டா நானும் கேள்விப்பட்டேன் ..இனிமேல் நமக்கு எதிரிகள் குறைவுதான்
இந்த பண்ணையாரும் முத்தையாவும் தான் நம்மை கண்டுக்கவே மாட்டாங்க
ஆனால் இப்போது இவங்க இரண்டு பேருமே இல்லை அதனால் இந்த ஊரை நம் எப்படியாவது நம் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் ..
அப்போதுதான் பணம் நிறைய சம்பாதிக்க முடியும் அதுக்கு ஒரு நல்ல யோசனையை செய்து
ஒரு திட்டத்தை போடவேண்டும் சிஷ்யா என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் பொறுப்போடு சொன்னார்..

அது எப்படி முடியும் குருவே.... பண்ணையாருக்கு பதிலாக அவரின் மகன்கள் இந்த ஊரை வழிநடத்துறாங்க ..
அவங்களும் நம்மை கண்டுக்கவே மாட்டாங்க இப்படி இருக்கும்போது நாம எப்படி ஊரை நம்ம பக்கம் திருப்ப முடியும் குருவே என்று சிஷ்யன் சொன்னான்..

அதுக்கு தான் சொல்றேன் சிஷ்யா..
இந்த மூன்று பேரையும் நம் வலையில் சிக்க வைக்க வேண்டும் அதுக்குத்தான் ஏதாவது ஒரு திட்டத்தை போட வேண்டுமென்று அவர்கள் நம் வலையில் சிக்கி விட்டால் பிறகு இந்த ஊரே நம் கையில்தான் என்று சாட்டையடி சாமியார் சொன்னார்..

அப்படின்னா கொஞ்ச நாள் போனதும் மறுபடியும் இந்த ஊருக்கு சோதனைக்காலம் வரப்பகுதுன்னு சொல்லுங்க குருவே ...
அப்போது பண்ணையார் பசங்க உங்க பேச்சை மதித்து ஓடிவந்து பரிகாரத்தை செய்ய சொல்லுவாங்க ..
அப்போது அவங்களை நம்ம வலையில் சிக்க வைத்துவிடலாம் குருவே என்று மற்றொரு விஷயம் சொன்னான்..

எதையாவது சொல்லி இந்த மூன்று பேரையும் நம்ம வழிக்கு வர வைக்கணும் அப்படி செய்தால் தான் நம்ம ஆயுசு முழுக்க உட்கார்ந்து சாப்பிட முடியும் என்று சாட்டையடி சாமியா உறுதியோடு தனது சிஷ்யர்களிடம் கூறினார்...



பரந்தாமன் நினைத்தபடியே ஊர் மக்கள் எல்லோரும் தோட்டத்தில் வேலை வந்து செய்தார்கள்...

பரந்தாமனும் பம்புசெட்டில் உள்ள தனது தாய் படத்தின் பின்னால் சேர்த்து வைத்திருந்த பணத்தில் சிறிதளவு எடுத்து விவசாயத்திற்கு செலவு செய்தான் ...

🌱🌾🍁🌼🌻🌹🌴விவசாயமும் நன்றாக நடந்தது ...

திட்டமிட்டபடி சந்திரன் ஒரு நாள் தீனா ஒருநாள் என்று இருவரும் மாறி மாறி பம்புசெட்டில் தங்கி வேலை செய்து வந்தார்கள்..

சாந்திக்கும் சந்தோசம் ஏற்பட்டது எப்படியோ எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம் இது இப்படியே நீடித்தால் நல்லா இருக்கும்
ஆனால் திடீரென்று ஏதோ மர்மமான முறையில் ஏதாவது நடந்துவிடுகிறது என்ற பயம் அவள் மனதுக்குள் ஒலித்துக்கொண்டு இருந்தது..


........நாட்கள் நகர்ந்தது....

ஊர் மக்கள் தினமும் தோட்டத்தில் வேலை செய்து நிம்மதியாக குடும்பம் நடத்தினாலும் சங்கரையும் ரேகா வையும் கனகாவும் ஊமையனும்
அந்த பெரியவரின் மகனையும் மருமகளையும் நினைத்து வருத்தப்பட்டார்கள் ...

இந்த நிலத்தில் அவர்கள் எப்படி எல்லாம் சந்தோஷமாக வேலை செய்து வந்தார்கள் ..
ஆனால் அவர்களுக்கு என்ன நடந்ததோ என்று தெரியவில்லையே
இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூட நமக்கு தெரியவில்லை ..
ஆனால் இவர்களை எல்லாம் நம் மறந்துவிட்டு நாம் மட்டும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வருகிறோம் என்று நினைத்து மக்கள் கவலைப்பட்டார்கள்....


நிறைய பணத்தை விவசாயத்திற்காக செலவு செய்து விட்டோம் ...
இனிமேல் அருவடை செய்து லாபத்தை வழக்கம்போல பம்புசெட்டில் மறைத்து வைத்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு பரந்தாமன் சந்தோஷமாக இருந்தான்...



பரந்தாமனின் கனவு பலிக்குமா.....



தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்...40👇


ஊர் மக்கள் எல்லோரும் தோட்டத்தில் வேலை செய்வதை பார்த்து.. பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் ரசித்தபடி பம்புசெட்டின் கிணற்றின் அருகில் நின்றிருந்தார்கள்...

அப்போது ஒரு கூலித்தொழிலாளி வந்து பரந்தாமனிடம் சொன்னார்..

ஐயா எங்களுக்கு வேலை தரணம் என்பதற்காக நீங்கள் பம்புசெட்டில் தங்கி கஷ்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் ...
இதை பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது அதனால் அடுத்த மாதத்திலிருந்து நாங்கள் ஆளுக்கு ஒரு நாள் பம்புசெட்டு தங்கி வேலை செய்கிறோம் ஐயா என்று அந்த கூலித்தொழிலாளி பரந்தாமனிடம் சொன்னார்..

ரொம்ப சந்தோஷம் ...
உங்களுக்கு எப்போது பம்புசெட்டில் தங்கி வேலை செய்யணும் என்ற எண்ணம் வருகிறதோ ..
அப்போதே நீங்கள் வாங்க அதுவரைக்கும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று பரந்தாமன் சொன்னான்..

ஐயா இன்னொரு விஷயம் என்று இழித்தார் அந்தப் பெரியவர்...

என்ன விஷயம் ..சொல்லுங்க ஐயா எதுக்கு தயங்குறீங்க...

ஒன்னும் இல்ல ....வழக்கம் போல நம்ம சாட்டையடி சாமியாரு மறுபடியும் இந்த ஊருக்கு சோதனை காலம் வரப் போகுதுன்னு சொல்லுறாரு அதனால நீங்க அவர பார்த்து இதற்கு ஏதாவது பரிகாரம் செய்யணுமா என்று கேளுங்களேன் என்று சற்று தயக்கத்துடன் சொன்னார் அந்த கூலித்தொழிலாளி...

பரந்தாமனுக்கு ம் அவனது தம்பிகளுக்கும் கோபம் தலைக்கு ஏறியது இருந்தாலும் அதை நிதானமாக கட்டுப்படுத்திக் கொண்டார்கள் .
இந்த சாமியாரை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும் அண்ணா என்று தீனா சொன்னான்..

வீடு வீடு .. அவருக்கு மனசுல பட்டத சொல்றாரு நமக்குத் தெரியாதா இனிமேல் இந்த கிராமத்துக்கு நல்ல காலம் தான் வரும் என்று இதற்கெல்லாம் கோபப்படக் கூடாது என்று பரந்தாமன் சொன்னான்..

ஐயா நான் ஏதாவது தவறாக பேசிவிட்டேன என்று கூலித்தொழிலாளி சற்று பதட்டமாய் கேட்டார்..

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... நீங்கள் அந்த சாமியாரை தெய்வமாக நினைக்கிறீர்கள்.. அதனால் உங்கள் மனசுக்கு பட்டதை என்னிடம் சொன்னிங்க..
ஆனால் எங்களுக்கு இந்த மந்திர தந்திரத்தில்.. இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது ஐயா..
இது எங்க அப்பாவுக்கும் பிடிக்காது இது உங்களுக்கே தெரியும் அதனால் அவர் எதையாவது சொல்லட்டும் நம்ம வேலையை நம்ம பார்க்கலாம் என்று பரந்தாமன் கூலித் தொழிலாளியிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னான்..

சரிங்க ஐயா என்று சொல்லிவிட்டு கூலி தழிலாளி வேலை செய்ய கிளம்பிவிட்டார்...

அண்ணே ..இந்த சாமியாரின் கையை காலை உடைச்சஅதான் இந்த மாதிரி தேவையில்லாத பிரச்சனையை உருவாக்க மாட்டான் என்று சந்திரன் சற்று கோபத்தோடு சொன்னான்..

விடு தம்பி ...இந்த ஊருக்கு சோதனை காலத்தை நாமதான் தெரியாம வர வச்சிடும்...
ஆனால் இனிமேல் நாம இந்த ஊருக்கு நல்ல காலத்தை தான் கொடுக்கப் போறோம் ..எல்லாமே நம்ம முடிவு பண்றதுதான்..
அதனால தேவை இல்லாம அந்த சாமியாரை எதுக்கு அடிக்கணும் சிலபேர் அவரை தெய்வமாக பாக்குறாங்க அதனால அவரு எதையாவது சொல்லிட்டு போட்டோம் இந்த முறை அவர் சொல்றதெல்லாம் பலிக்காது என்று சாதாரணமாக பரந்தாமன் சொல்லிவிட்டு தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றான்...


.....நாட்கள் நகர்ந்தது....


இரவு 10 மணிக்கு .... வழக்கம்போல தீனா மண்வெட்டியை எடுத்துக் கொண்டு கையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு கிளம்பினான்..

தம்பி இன்னைக்கு ராத்திரிக்கு வாழைத் தோப்புக்கு தண்ணீர் பாய்த்துவிடு அப்போதுதான் பகலில் மிளகாய் செடிக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும் என்று பரந்தாமன் சொன்னான்...

சரி அண்ணே என்று சொல்லிவிட்டு தீனா கிளம்பினான் அப்போது பரந்தாமன் மறுபடியும் அழைத்தான்..

தம்பி 🏍️பைக்கை எடுத்துக் கொண்டு போ என்று சொன்னான்..

வேண்டாம் அண்ணா ..
பைக்கில் இதுவரைக்கும் நம்ம மூன்று பேரும் தன் ஒன்றாக சென்று இருக்கிறோம் தனியா ஓட்டிச்சென்று பழக்கம் இல்லை அதனால் நான் நடந்தே போகிறேன் என்று சொல்லிவிட்டு வழக்கம் போல தீனா தோட்டத்திற்கு நடந்தே சென்றான்...


எந்த ஒரு பயமும் படபடப்பும் இல்லாமல் தீனா வழக்கம் போல களத்துமேட்டில் பைக் நிறுத்துமிடத்தில்
நின்று அங்கு எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கின் வெளிச்சத்தில் சற்று வேட்டியை சரி செய்து கொண்டு இருந்தான்..


அப்போது திடீரென்று கம்பத்தில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்கு வெடித்து சிதறியது...

அந்த இடத்தில் இருள் சூழ்ந்துகொண்டது தீனாவுக்கு என்ன திடீரென்று விளக்கு வெடிச்சு டிருச்சி என்ற சற்று லேசான பயத்தோடு கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை அடித்தபடி பாம்பு செட்டை நோக்கி சென்றான்...

சற்று தூரத்தில் இருக்கும் பம்புசெட்டின் அருகில் உள்ள தென்னை மரம் பலா மரம் எல்லாம் புயல் காத்து அடிப்பதை போன்று வேகமாக அசைவதைப் பார்த்து தீனாவுக்கு பயம் அதிகரித்தது..

இங்கு காத்து அடிக்கவில்லை ஆனால் பம்புசெட்டில் அருகில் இருக்கும் மரங்கள் எல்லாம் கீழே விழும் அளவுக்கு அங்கு காற்று அடிக்கிறதே என்று நினைத்து குழம்பினான் தினா...

தீனாவின் நடந்து செல்லும் மேகம் குறைய ஆரம்பித்தது கண்கள் தூரத்திலிருக்கும் பம்புசெட்டிடை கூர்ந்து கவனித்தது. அப்போது அவன் உடம்பு ஒருவிதமான சிலிர்ப்பை ஏற்படுத்தியது...

இன்னைக்கு ஒரு மாதிரியாகவே இருக்கிறதே என்று நினைத்தபடி பாம்பு செட்டை நோக்கி சென்றார் அப்போது வயல்வெளிகளில் இருக்கும் கருவண்டு அவன் முகத்தின் முன்னால் வந்து சுத்தி சுத்தி வந்தது ஒருவிதமான சத்தத்தோடு...

அந்த இரவில் கருவண்டு சத்தம் அவனுக்கு மேலும் பயத்தை அதிகரித்தது...

பம்பு செட்டின் அருகில் புயல் காத்து அடிப்பதைப் போல மரங்கள் எல்லாம் ஆடியது இதை பார்த்துக் கொண்டே வரப்பு மேட்டில் நடந்து சென்றான்..

திடீரென்று வரப்பு மேட்டில் ஒரு கருப்பு உருவம் உட்கார்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்து போனான் தீனா அந்த இருளில் அந்த உருவம் தீணாவின் கண்களில் லேசாக தெரிந்தது..

உடனே தீனா கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை .. அந்த உருவம் உட்கார்ந்து இருந்த இடத்தில் அடித்துப் பார்த்தான்..
அப்போது எதுவுமே அவன் கண்களுக்குத் தென்படவில்லை..

அப்போது தீனா டார்ச் லைட்டை ஆப் செய்து விட்டான். 👽 உடனே அந்த உருவம் அதே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அந்த இருளில் லேசாக தெரிகிறது..

இன்று ஏதோ நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தான் தீனா... இருந்தாலும் எப்படியாவது பம்பு செட்டுக்கு சென்று வாழைத் தோப்புக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற முடிவில் மெதுவாக அடியெடுத்து வைத்து பம்புசெட்டை நோக்கி நகர்ந்தான் தீனா...


மறுபடியும் டார்ச் லைட்டை அந்த உருவம் இருந்த இடத்தில் அடித்துப் பார்த்தான்.. அப்போது அந்த உருவம் தென்படவில்லை டார்ச் லைட்டை ஆப் செய்தால் அந்த உருவம் அதே இடத்தில் உட்கார்ந்து இருக்கிறது ...

இப்படி இக்கட்டான நிலைமையில் எப்படி அந்த உருவத்தை கடந்து செல்வது என்ற குழப்பத்தோடு டார்ச் லைட்டை அடித்துக்கொண்டே சென்றான் தீனா ...

அந்த வெளிச்சத்தில் அவன் கண்களுக்கு எதுவுமே தென்படவில்லை ..
பிறகு அந்த இடத்தை கடந்து சென்றதும் திரும்பி பார்த்தான் மறுபடியும் அதே இடத்தில் அந்த உருவம் உட்கார்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்து போனான் தீனா பிறகு உடனே பம்புசெட்டை நோக்கி வேகமாக நடந்தான்..


பம்பு செட்டின் அருகில் செல்ல செல்ல காற்று வேகமாக வீசியதை உணர்ந்தான் தீனா அப்போது யாரோ சிரிப்பது போல சத்தம் கேட்டது..

தீனாவின் இதயம் வேகமாக துடித்தது இந்த நேரத்தில் யார் சிரிப்பது ஒருவேளை ரேகாவாக இருக்குமா என்ற பயம் தீனாவுக்கு ஏற்பட்டது...

ஒரு பக்கம் தீனாவின் உள்மனது திரும்பிப் போய்விடலாம் என்று சொன்னது .. மறுபக்கம் எப்படியாவது பம்புசெட்டை திறந்து தண்ணீர் மோட்டாரை ஆன் செய்துவிட்டு இங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி விடலாம் என்று அவன் உள்மனசு சொன்னது இப்படிப்பட்ட குழப்பத்தோடு பயத்தோடு பாம்பு செட்டின் அருகில் சென்று விட்டான் தீனா...

காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது அவனால் அந்த இடத்தில் நிற்க கூட முடியவில்லை அப்போது பம்பு செட்டின் மேலே எரிந்திருந்த மின்விளக்கு வெடித்து சிதறியது..

இதைப் பார்த்த தனாவுக்கு நிற்கக்கூட முடியவில்லை
அந்த அளவுக்கு கை கால் உதறல் எடுத்தது பம்புசெட்டிலன் மேலெ எறிந்துருந்த மின்விளக்கு வெடித்து சிதறியதை நினைத்து பயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் தீனா அப்போது அந்த இடத்தில் இருள் சூழ்ந்தது..


திடீரென்று கிணற்றில் சத்தமாக சிரித்தாள் ரேகா...

இனிமேல் இங்கு இருந்தால் நம் உயிருக்கு ஆபத்து என்று நினைத்து தீனா பம்பு செட்டின் கதவை திறப்பதற்கு முயன்றான்...

அப்போது கிணற்றில் புகை கிளம்புவதை பார்த்து மரண பீதியில் அதிர்ந்து போனான் தீனா..

நிச்சயம் நம்ம இங்கிருந்து போக முடியாது என்று அவன் உள் மனசு சொன்னது ...

அப்போது திடீரென்று ☠️😈சங்கர் கோபத்தோடு .. எங்கடா வந்த உனக்கு எவ்வளவு தைரியம் இங்கு வரதுக்கு என்ற ஆவேச குரல் கிணற்றில் இருந்து வந்தது.. உடனே ரேகாவும் சிரிப்பதும். அழுவதும்மாக குரல் வந்தது கிணற்றிலிருந்து..


உடனே இங்கிருந்து ஓடி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தீனா சட்டென்று பம்புசெட்டின் கதவை திறந்தான் ..
அப்போது தென்னை மரத்திலிருந்து ஒரு தென்னை ஓலை பிடிங்கிக் கொண்டு வந்து தீனாவின் பின்னால் ஓங்கி அடித்தது ... இதை பார்த்த தீனாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது ..

இனியும் இங்கு இருக்கக் கூடாது என்று முடிவு செய்துகொண்டு தீனா வீட்டுக்கு ஓடத் தொடங்கினான்...

அப்போது அந்த தென்னை ஓலை தீணவின் முதுகில் அடித்தபடியே வந்தது அவனும் வலி தாங்க முடியாமல் கத்தி கொண்டு ஓடி வரப்பு மேட்டில் விழுந்தான்...

அப்போது ரேகா தன்னருகில் சிரித்துக் கொண்டே வருவதை உணர்ந்தான் தீனா ..
ஆனால் அவன் கண்களுக்கு உருவம் தென்படவில்லை..

பலா மரத்தின் கிலையும் உடைத்துக் கொண்டு வந்து தானாக தீணாவை அடித்தது.. இப்படி தென்னை ஓலையும் தீனாவை வெளுத்து வாங்கியது அப்போது அவன் சேற்றில் விழுந்து வலி தாங்க முடியாமல் அழுதான் ..
அந்த நேரத்தில் ரேகா சத்தமாக சிரித்துக்கொண்டே இருந்தால் இப்படி மரண பீதியில் தீனா சேற்றில் புரண்டு புரண்டு அடி வாங்கினான்..

உடனே பம்புசெட்டில் தானாக தீப்பற்றி 🏘️🏠🔥எரியத் தொடங்கியது..

பம்புசெட்டில் எரிந்த தீ மளமளவென கரும்புத் தோட்டத்திற்குள் பரவி எல்லா பயிர்களும் எரியத் தொடங்கியது..🔥🌾🌹🌱🔥🔥

இதைப் பார்த்த தீனா ....
மனம் நொந்து போனான்... எவ்வளவு கஷ்டப்பட்டு விவசாயத்தை செய்தோம் .. இப்படி வீணாக🔥 எரிகிறதே என்று...

அப்போது அவன் அருகில் இருக்கும் வாழை தோப்பில் பச்சை மரம் எரிவதை பார்த்து அதிர்ச்சி ஆனான் ...

இனிமேல் சங்கரும் ரேகாவும் நம்மை விடமாட்டார்கள் என்று முடிவு செய்து கொண்டு.. வலியோடு மறுபடியும் ஓடத் தொடங்கினான் ..
அப்போது அவனை பின்தொடர்ந்து கொண்டே தென்னை ஓலையும் பலா மரத்தின் கிளையும் அடித்துக் கொண்டே போனது.


ஒருவழியாக தீனா தப்பித்து வீட்டின் அருகில் சென்று விட்டான்..

அவனால் வலி தாங்க முடியாமல் வீட்டு வாசலிலே மயங்கி விழுந்துவிட்டான் தீனா...


☠️😈இனி சங்கர் ரேகாவின் வேட்டை ஆரம்பம்....👽



தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்...41👇


தீனா ..எப்படியோ சங்கரிடமும் ரேகா விடமும் அடி வாங்கிக்கொண்டு தப்பித்து நள்ளிரவில் தனது வீட்டு வாசலில் மயங்கி விழுந்து விட்டான்..


....பொழுதும் விடிந்தது...

சாந்தி எழுந்தவுடன் வழக்கம்போல பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கையில் ஒரு துடைப்பத்துடன் வீட்டு வாசலை சுத்தம் செய்வதற்கு சென்றாள்...

வீட்டு வாசலில் அலங்கோலமான நிலையில் யாரோ விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானாள் சாந்தி. ..
உடம்பு முழுக்க சேரும் ரத்தமும் பூசி இருந்ததால் அவளுக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை ரத்தக்கரை களைப் பார்த்து பயந்துபோய் வாய்விட்டு கத்தினாள் சாந்தி..

என்னங்க இங்க ஓடி வாங்க.... என்னங்க இங்கே யாரோ விழுந்து கிடக்குறாங்க என்று... அழுதுகொண்டே கத்தினாள் சாந்தி...

சாந்தியின் அலறல் குரலைக் கேட்டு பரந்தாமனும் அவனது மகன் சுரேஷும் சந்திரனும் எல்லோரும் எழுந்து ஓடி வந்து வாசலில் நின்றார்கள்..

உடனே பரந்தாமன் சந்திரனும் ஓடிச்சென்று தீணாவை தூக்கிப் பார்ப்பார்கள் ...அப்போது இருவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது...

சந்திரன்... தீனாவின் அலங்கோலமான நிலைமையை பார்த்து வாய்விட்டு தம்பி தம்பி என்று கதறிக் கதறி அழுதான்....

பரந்தாமனும் தம்பி உனக்கு என்ன ஆச்சுடா என்று அவனும் பதறிப்போனான்...

அப்போதுதான் சாந்திக்கு விழுந்திருப்பது தீனா என்று தெரிந்தது உடனே அவள் ஓடி வந்து தீனாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுக ஆரம்பித்து விட்டாள்...


எல்லோரும் அழுவதை பார்த்து பரந்தாமனின் மகன் சுரேஷ் அழுதான்..

உடனே சந்திரன் அருகில் இருந்த பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து தீணாவின் தலையில் ஊற்றினான்...

அப்போதுதான் தீனாவின் மயக்கம் லேசாக தெளிய ஆரம்பித்தது..

தீனா கண் திறந்து பார்த்ததும் எல்லோரும் அவனைச்சுற்றி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அவனுக்கு மேலும் மனம் நொந்து போனான்..

உடனே பரந்தாமனும் சந்திரனும் தீனாவை தூக்கிக்கொண்டு பாத்ரூமில் அவனை குளிப்பாட்டினார்கள் ...உடைகளை எல்லாம் கழட்டிப் போட்டு விட்டு தீனாவை சுத்தம் செய்து ..
பிறகு அவனது அறையில் உடையை மாற்றி கட்டிலில் படுக்க வைத்தார்கள்...

சாந்தியின் அழுகை நிறுத்தவே இல்லை ..மறுபடியும் தீணாவை பார்த்து அழுது கொண்டே இருந்தால்.. தம்பி உனக்கு எப்படி இந்த காயங்கள் வந்தது உன்னை யார் என்ன செஞ்சாங்க என்று புலம்பிக்கொண்டே அழுது இருந்தால் ..

அப்போது பரந்தாமன் சந்திரனும் தலையை தடவி விட்டபடி கேட்டார்கள்..

தம்பி என்ன ஆச்சு ...
தம்பி எங்களுக்கு ரொம்ப பயமாயிருக்கு என்று பதட்டத்துடன் கேட்டாள் பரந்தாமன்..

அப்போது தீனாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அண்ணன் உண்மையை சொன்னால் தாங்குவாரா என்று நினைத்து வேதனையில் துடித்தான்....


தம்பி நீ அமைதியாக இருப்பதைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமாக இருக்குது தம்பி என்று சாந்தி பதட்டமாய் கேட்டாள்...

அப்போது தீனா கண்களைத் துடைத்துக்கொண்டு மெதுவாக பேச ஆரம்பித்தான்..

அண்ணே.. என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள்
நான் உங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டேன் என்று சொல்லி மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டான் தீனா..

தம்பி என்ன சொல்ற பா எங்களுக்கு ஒன்னும் புரியல நீ என்ன எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்த போற .. என்று குழப்பத்தோடு கேட்டான் பரந்தாமன்..

அண்ணே.. நேத்து ராத்திரி நான் பம்பு செட்டுக்கு சென்று தண்ணீர் மோட்டாரை ஆன் செய்த போது தவறுதலாக மின்சாரம் பாய்ந்து
நம் பம்புசெட்டு தீப்பிடித்து எரிந்தது அப்போது அருகில் இருந்த நம்முடைய தோட்டம் தீப்பற்றி எரிந்தது. அதில் ஏற்பட்ட காயம் தான் இது. இப்படியே எல்லாம் தோற்றமும் எரிந்து நாசமாகி விட்டது அண்ணே என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி தீனா தேம்பித் தேம்பி அழுதான்...

பரந்தாமன் அதிர்ச்சியில் அப்படியே கட்டிலில் கீழே உட்கார்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழுதான்..

எல்லாம் பயிர்களும் எரிந்து விட்டதே என்று நினைத்து சந்திரனும் சாந்தியும் பெரும் அதிர்ச்சியில் அப்படியே சிலை போல நின்றார்கள்....


நான்தான் அப்போதே சொன்னேனே .. நமக்கு இந்த விவசாயம் எல்லாம் வேண்டாம் ஊர்மக்களுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று ..
என் பேச்சை யாருமே கேட்கலையே இப்போ பாருங்க நமக்கு எவ்வளவு நஷ்டம் அதோடு தீனாவுக்கு ஏதாவது ஒன்று ஆகியிருந்தால் நம்மால் தாங்க முடியுமா என்று சொல்லி சாந்தி அழுதாள்..


சாந்தியின் அழுகை பரந்தாமனுக்கு மேலும் எரிச்சலாக இருந்தது
உடனே பரந்தாமன் எழுந்து சாந்தியைப் பார்த்து கோபத்தோடு சொன்னான்..

தேவையில்லாமல் எனக்கு நீ புத்திமதி சொல்லாதே ..
யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்..
நீ ஒன்றும் எனக்கு யோசனை சொல்ல தேவை இல்லை .. இத்தனை நாள் ஏதோ மனைவி என்ற மரியாதைக்கு உன்னிடம் சில சம்மதத்தை கேட்டேன் ..
அதுக்காக நீ எனக்கு யோசனை சொல்ல தேவையில்லை .
யாருக்கு என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும் நீ இனிமேல் தேவையில்லாமல் எதையாவது பேசின. அதுக்கு அப்புறம் என் கோபத்தைப் பற்றி உனக்கு தெரியாது போடி வெளியே என்று ஆவேசத்துடன் சொன்னான் பரந்தாமன்...

பரந்தாமனின் கோபத்தையும் பேச்சியும் பார்த்த சாந்தி அதிர்ந்து போனாள் ...
நம் கணவர் இதுவரைக்கும் இப்படி நம்மிடம் பேசியது இல்லையே
இந்த அளவுக்கு கோபப்பட்டு பார்த்ததில்லையே என்று நினைத்து வேதனையில் துடித்தாள் ..
உடனே அங்கிருந்து வெளியே வந்து தனது மகன் சுரேஷ்சை கட்டியணைத்துக் கொண்டு அழுதாள்...

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் மனவேதனையில் துடித்தார்கள்..

பரந்தாமன் மறுபடியும் தீணாவின் அருகில் உட்கார்ந்து கொண்டு பொறுமையாக கேட்டான்...

தம்பி பம்புசெட்டு மட்டும் எரிந்ததா இல்லை அம்மாவின் பூஜை அறையும் சேர்ந்து 🔥எரிந்து விட்டதா என்று பதட்டத்தோடு கேட்டான்..

அண்ணே பம்புசெட்டு மட்டும்தான் எரிந்தது அம்மாவின் பூஜை அறை எரியவில்லை என்று சொன்னதும் பரந்தாமனின் மனசுக்கு சற்று ஆறுதலாக இருந்தது..

அப்போது தீனா மறுபடியும் அழுதான்...

எதுக்கு தம்பி அழுவுற உனக்கு எதுவுமே நடக்காமல் நீ திரும்பி வந்ததே எங்களுக்கு சந்தோஷம்தான் என்று சந்திரன் சொன்னான்...

அண்ணே... அண்ணி இருந்ததால உங்களிடம் உண்மையை சொல்ல முடியல அண்ணனே என்று சொல்லிக்கொண்டே அழுதான் தீனா...

என்ன தம்பி சொல்ற அப்படி என்ன அங்கு என்ன நடந்தது என்று பரந்தாமனும் சந்திரனும் பதட்டமாக கேட்டார்கள்..

இனிமே நம்ம விவசாயமே செய்ய முடியாது அண்ணா ..சங்கரும் ரேகாவும் அங்கு 👽பேயாக இருக்கிறாங்க அவங்க நம்ம மூணு பேரையும் உயிரோடு விட மாட்டாங்க அவங்க தான் என்னை இப்படி அடித்தது அவர்களிடமிருந்து நான் எப்படியோ தப்பித்து ஓடி வந்துவிட்டேன் இன்னொரு முறை அங்கு சென்றாள் நிச்சயம் அவர்கள் நம்மை உயிரோடு விடமாட்டார்கள் அந்த சங்கர் ரொம்ப கோபத்தோடு இருக்கிறான் அண்ணா ..
இனி நம்மளை நிம்மதியாக வாழ விட மாட்டான் சங்கர் என்று சொல்லி அழுதான் தீனா..

தீனா சொன்னதைக் கேட்டு பரந்தாமனும் சந்திரனும் அதிர்ந்து போனார்கள் ...
விழிபிதுங்க சிலைபோல நின்று விட்டார்கள் ..சங்கரும் ரேகாவும் பேயாக வந்துவிட்டார்களா என்று நினைத்து ...


அப்போது வீட்டு வாசலில் ஊர் மக்கள் கூட்டமாக வந்து அய்யா அய்யா என்று குரல் கொடுத்தார்கள்...

ஊர் மக்களின் குரல் கேட்டதும் பரந்தாமனும் சந்திரனும் வெளியே வந்து பார்த்தார்கள்.. சாந்தி மட்டும் ஊர் மக்களை பார்த்து விட்டு அவள் உள்ளேயே இருந்தால் அழுதுகொண்டு..


ஐயா...இந்தக் கொடுமையை நான் எப்படி சொல்வது .. காலையில் வேலைக்கு சென்றால் நம்ம தோட்டம் எல்லாம் எரிந்து வீணாக கிடைக்கிறது அய்யா என்று சொல்லி எல்லோரும் வருத்தப்பட்டார்கள்...

ஒரு பயிர் கூட மிஞ்சவில்லை அய்யா எல்லாமே எரிந்து விட்டதே. எப்படின்னு எங்களுக்குத் தெரியவில்லை ஐயா என்று சொல்லி வருத்தப் பட்டார்கள்..

இதில் ஏதாவது சதி இருக்கிறதா ஐயா என்று ஒரு கூலித்தொழிலாளி கேட்டார்..

இதில் எந்த ஊரு சதி திட்டமும் கிடையாது ...

நேத்து ராத்திரி என் தம்பி தீனா பம்பு செட்டுக்கு சென்று தண்ணீர் மோட்டார் ஆன் செய்த போது தவறுதலாக மின்சாரம் பாய்ந்து பம்புசெட்டு தீப்பிடித்து எரிந்ததில் தோட்டமும் பற்றிக்கொண்டு எரிந்துவிட்டது. ..

எப்படியோ தவறு நடந்து விட்டது இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் ..
நாங்கள் உங்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டேதான் இருப்போம் . அதனால் நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள் என்று பரந்தாமன் சற்று வருத்தத்தோடு ஊர் மக்களிடம் சொன்னான்..

இது வரைக்கும் வாழை மரம் எரிந்து நாங்கள் பார்த்ததே இல்லை ஐயா ஆனால் நம் தோட்டத்தில் எல்லாம் வாழைத்தோப்பு எரிந்து இருப்பதை பார்த்தால் தான் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது இதில் ஏதாவது சதி இருக்கிறதா என்று அதனால் தான் எங்களுக்கு சந்தேகம் வந்தது ஐயா என்று ஒரு கூலித்தொழிலாளி சொன்னார்..

பச்சை வாழ மரத்தையே எரித்திருக்கிறான் அந்த சங்கரும் ரேகாவும் .. அந்த அளவுக்கு கோபத்தோடு இருக்கிறான்.. என்று மனதில் நினைத்துக் கொண்டார்கள் பரந்தாமனும் சந்திரனும்...

ஒரு சதித் திட்டமும் இல்லை இன்னும் கொஞ்ச நாளில் பம்புசெட்டில் உள்ள மின்சாரத்தை சரி செய்துவிட்டு மறுபடியும் விவசாயத்தை தொடங்கலாம் நீங்கள் கவலைப்படாமல் போங்கள் என்று ஊர் மக்களிடம் சொல்லி அனுப்பி வைத்தான் பரந்தாமன்..


நடந்ததையெல்லாம் கவனித்து இருந்த சாந்தி ...
மறுபடியும் விவசாயம் செய்யப் போறீங்களா... இவர் கடைசி வரைக்கும் விவசாயத்தை விட மாட்டார் நிச்சயம் நம் குடும்பத்திலும் நிம்மதியும் இருக்காது என்று நினைத்து சாந்தி கவலைப்பட்டாள்..


இப்படியே நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து எல்லோரும் கவலையோடு இருந்தார்கள்...


......நாட்கள் நாட்கள்....


தீனாவின் உடல்நிலை மெல்ல மெல்ல தெரியாது...

சாந்தி யாரிடமும் பேசாமல் தனது மகன் சுரேசை மட்டும் கவனித்து வந்தாள்..

எத்தனையோ சூழ்ச்சி செய்தோம் எத்தனையோ பொய் சொன்னோம் தம்பிகளை ஏமாற்றி நம் சொல்வதைப்போல கேட்கும்படி மாற்றி விட்டோம் ..

நம் லட்சியம் நிறைவேற கொலைகளையும் செய்துவிட்டோம் இருந்தாலும் நம்முடைய லட்சியத்தை அடைவதில் இனிமேல் சிரமம்தான் ..

சங்கரும் ரேகாவும் நம்மை உயிரோடு விடுவார்களா என்ற சந்தேகம்தான் ..

இந்த நிலைமையில் நாம் எப்படி விவசாயம் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பணப்பெட்டியை நிரப்ப முடியுமா.. அதுவரைக்கும் விவசாயத்தை நடத்த விடுவானா சங்கர் ...

நம்மை உயிரோடு விடுவானாதே சந்தேகம்தான் என்று யோசித்து யோசித்து பித்துபிடித்தவன்போல பரந்தாமன் எல்லாத்தையும் இழந்து விட்டவன் போல சோர்வாக இருந்தான்...


ஒரு நான் சந்திரனும் தீனாவும் சாந்தியிடம் சென்று மௌனமாக நின்றார்கள்..

சாந்தி சந்திரனையும் தீனாவையும் பார்த்து அமைதியாக இருந்தாள்.. அப்போது தீனாவின் உடல்நிலை தேரி வருவதை பார்த்து சந்தோஷப்பட்டாள்...
இருந்தாலும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..

அண்ணி... நீங்க இவ்வளவு நாளா எங்களிடம் பேசாமல் இருப்பது எங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கு அண்ணி என்று பொறுமையாக சொன்னான் சந்திரன்..

அண்ணி.. என் உடம்பு வலியை விட நீங்கள் பேசாமல் இருப்பதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது அண்ணி.. என்று தீனாவும் சொன்னான்..

என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து நடந்துகிட்ட காலமெல்லாம் என் மாமனாரோடு போயிடுச்சு... இப்போதெல்லாம் என்னை யாரும் மதிக்கரதும் கிடையாது ..
என் பேச்சையும் யாரும் கேட்பதும் கிடையாது..

நாங்களும்மா அண்ணி...


நீங்க மட்டும் ஒழுக்கமா ....என்னிடம் பொய் பேச கத்துக்கிட்டீங்க.
இவரு பம்பு செட்டுக்கு போனாராம்.. தண்ணீர் மோட்டாரை ஆன் செய்தாராம்...
உடனே பம்புசெட்டு தீ பத்திக்கிச்சாம்...
தோட்டமும் எறிந்து போயிடுச்சாம்.... இவருக்கும் அதனால நிறைய காயமா....
இதெல்லாம் இந்த ஊர் மக்கள் நம்புவாங்க ..
நான் நம்ப மாட்டேன் தம்பி ...
நீங்கள் எதையோ என்னிடம் மறைக்கிறீங்க என்று முகத்தைப் பார்த்து சாந்தி சொன்னாள்..

சந்திரனுக்கும் தீணாவுக்கும் திக்கென்று ஆனது...
அண்ணி நம்மை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க என்று நினைத்து..

அண்ணி... இப்ப நாங்க என்ன செய்யணும் சொல்லுங்க அண்ணி என்றான் தீனா..

ஏற்கனவே சொன்னதுதான்..
நான் இப்பவும் சொல்றேன்.. இருக்கிற நிலத்தை எல்லாம் ஊர் மக்களுக்கு கொடுத்து விட்டு அவங்க கொடுக்கிற வரிப்பணத்தில் நம்ம நிம்மதியா குடும்பம் நடத்தலாம்...
உங்க அப்பா சொன்ன மாதிரி நமக்கு குடும்ப விரோதி இருக்கான் அவனை சரி கட்டணம் என்றாள் இதை தான் செய்யனும்
அப்போதுதான் நாமும் நிம்மதியாக வாழ முடியும் .. இல்லை என்றால் இது போல பிரச்சனைகள் தான் உருவாகும் ..

உங்க அப்பா காலத்தில் இப்படியெல்லாம் எதுவுமே நடக்கல நீங்க என்னைக்கு இந்தத் தோட்டத்தை கவனிக்க போனீங்களோ..
அன்னையிலிருந்து ஒவ்வொரு குடும்பமாக காணாம போய்க்கிட்டு இருந்தாங்க..
இப்போ தோட்டமே எரிஞ்சு போச்சு இப்படிப்பட்ட நிலைமை எல்லாம் வந்துகிட்டே இருக்கும் ...

அதனால இனிமே இருக்கிற நிலத்தை ஊர் மக்களுக்கு கொடுத்துடுங்க இதுதான் என்னோட முடிவு என்று சாந்தி மறுபடியும் ஆணித்தரமாக சொன்னாள்....

சரி அண்ணி ....நீங்க சொல்றது போலவே செய்யறோம் ..
எங்களுக்கு இதில் எந்த தயக்கமும் இல்லை . இந்த விஷயத்தைப் பற்றி நாங்கள் அண்ணனிடம் பேசுறேன் என்று சொல்லிவிட்டு சந்திரனும் தீனாவும் பரந்தாமனிடம் சென்றார்கள்..


அண்ணே.. இனிமேல் சங்கர் நம்மை விவசாயம் செய்ய விடமாட்டான். அதனால நிலத்தை எல்லாம் ஊர் மக்களுக்கு கொடுத்து விட்டால் ஊர் மக்களை சங்கர் ஒன்றும் செய்ய மாட்டான் நமக்கும் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும் இதில் எங்களுக்கு சம்மதம் அண்ணிக்கும் சம்மதம்
இப்போ நீங்கள் தான் சொல்லனும் அண்ணா என்று வார்த்தையை இழித்தான் சந்திரன்..

தம்பி இந்த ஒரு விசயத்தில் மட்டும் என்னை வற்புறுத்த திங்க ..
என் உயிர் இருக்கும் வரை நான் விவசாயம் செய் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருப்பேன் இதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக சொன்னான் பரந்தாமன்..

மறுபேச்சு எதுவுமே பேசாமல் வந்துவிட்டான் சந்திரனும் தீனா...



நிலத்தை ஊர் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் சாந்தி இருக்கிறாள்..

ஒரு பிடி மண்ணைக் கூட யாருக்கும் கொடுக்கக்கூடாது என்ற பிடிவாதத்தில் பரந்தாமன் இருக்கிறான்..


யார் பிடிவாதம் ஜெயிக்கும்....
பொபொறுத்திருந்து பார்க்கலாம்.....



தொடரும்......
 
Top Bottom