Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
50 வது அத்தியாயத்தின் தொடர்ச்சி இதோ...

தீனாவின் மீது கல் விழுந்ததை பார்த்த சந்திரனுக்கு இதயம் சுக்கு நூறாக வெடித்தது ...
அவனால் அப்போது கதறிக் கதறி அழுவதற்கு மட்டும் தான் அவனால் முடிந்தது..

இடி இடித்ததும் நின்றுவிட்டது.... சூறைக் காற்றும் நின்றுவிட்டது... கனமழையும் நின்றுவிட்டது.... சங்கர் ரேகாவும் அடிப்பதை நிறுத்திவிட்டார்கள் ......
அந்த இடம் அமைதியான சூழல் ஏற்பட்டது ...
அந்த இடத்தில் அப்போது சந்திரனின் அழுகை குரல் மட்டும் சத்தமாக தெளிவாக கேட்டது..

என்மேல் விழ வந்த கல் நீ எதற்காக குறுக்கே வந்து விழுந்தாய் தம்பி உன்னை இந்த நிலைமையில் பார்ப்பதை விட
என் உயிர் போய் இருந்தாலே பரவாயில்லையே என்று கண்ணீர் மல்க வாய்விட்டு அழுதுகொண்டே சொன்னான் சந்திரன்..

அப்போது சந்திரனையும் தீனாவையும் பார்த்தபடி பரந்தாமன் சிலைபோல பம்புசெட்டின் அருகே நின்றான்..

தீனாவின் நிலைமையைப் பார்த்து கவலைப்பட்டான் பரந்தாமன் ...
இருந்தாலும் அவன் மனம் பணத்தின் மீது திசை திரும்பியது உடனே பரந்தாமன் தோல் மீது ஒரு மூட்டையை தூக்கிக்கொண்டு மற்றொரு மூட்டையை வலதுகையால் இழுத்தபடி வீட்டுக்கு கிளம்பினான்...

இதை பார்த்துருந்த தீனாவின் முகம் சற்று சந்தோஷமாக மாறியது..

அண்ணே ...அழுகாதிங்க பெரிய அண்ணன் இங்கிருந்து வீட்டுக்கு தப்பித்துவிட்டார் என்று சந்தோஷமாக சொன்னான் தீனா..

உடனே சந்திரன் பின்னால் திரும்பிப் பார்த்தான் பரந்தாமன் காணவில்லை...

அண்ணே ... நீங்களும் இங்கிருந்து போங்க இல்லன்னா சங்கர் உங்களை மறுபடியும் அடிப்பான் என்று வழியால் துடித்துக்கொண்டே சொன்னான் தீனா...

தம்பி உன்னை இங்கு விட்டுவிட்டு நான் போக மாட்டேன்...
நீயும் வா உன்னை நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் என்று அழுதபடி சொன்னால் சந்திரன்...

அண்ணே ...நான் செய்த பாவத்திற்கு கடவுள் எனக்கு சங்கர் மூலமாக சரியான தண்டனை கொடுத்துவிட்டான் இனிமேல் என்னால் உயிர் பிழைக்க முடியாது ...
அதனால் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அண்ணா ...
நீங்கள் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து ஓடிடுங்க அதுவே எனக்கு போதும் என்று சொல்லிவிட்டு துக்கம் தாங்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டு அழுதான் தீனா...

தீனாவின் பேச்சைக் கேட்டதும் சந்திரன் ..அவனை தூக்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டு கதறிக் கதறி அழுதான் ..
தம்பி உன்னை விட்டு விட்டு நான் இங்கிருந்து போக மாட்டேன் உன்னை எப்படியாவது காப்பாற்றி விடுவேன் தம்பி என்று சொல்லிக்கொண்டே அழுதான் சந்திரன்...

தன் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் பிரிய போகிறது என்பதை உணர்ந்த தீனா... எப்படியாவது அண்ணனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடைசியாக சந்திரனை பார்த்து கட்டி அணைத்துக் கொண்டான் தீனா... அண்ணே இங்கிருந்து எப்படியாவது ஓடிடுங்க என்னைப் பற்றி கவலைப்படாதீங்க அண்ணா என்று ..கெஞ்சுவதை போல அழுதுகொண்டே சொன்னான் தீனா..

உடனே சந்திரன் கண்களை துடைத்துக்கொண்டு..
எழுந்து நின்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தீணாவை தூக்கி தன் தோள் மீது போட்டுக்கொண்டு தள்ளாடியபடி நடந்து சென்றான் வீட்டுக்கு..

பார்க்குமிடமெல்லாம் தண்ணீர் நிரம்பி இருந்தது வயல்வெளியில் ...
அப்போது புதிதாக நடவு செய்திருந்த நிலத்தில் சந்திரன் தீனாவை தோள்மீது தூக்கிக்கொண்டு நடந்து சென்றான் ...
அந்த அமைதியான சூழலில் நள்ளிரவில் சந்திரன் தண்ணீரில் நடந்து செல்லும் ஓசை தெளிவாக கேட்டது...

தம்பி நீ ஒன்னும் பயப்படாதே உனக்கு ஒன்றும் ஆகாது அண்ணன் உன்னை எப்படியாவது காப்பாற்றி விடுவேன் ...
என்று சொல்லிக்கொண்டே தண்ணீரில் நடந்து சென்றான் சந்திரன் ...

ஆனால் சந்திரனின் தோள் மீது இருக்கும் தீனாவின் தலை தொங்கியபடி இருந்தது கைகளும் எந்த துடிப்பும் இல்லாமல் தொங்கியது...

தீணாவை தூக்கிக்கொண்டு தண்ணீரில் நடந்து
சென்றுருந்த சந்திரனின் கால் பாதத்தில் பணக்கட்டுகள் மீதி படுவதைப் போல உணர்ந்தான் சந்திரன்..

உடனே சந்திரன் கீழே கூர்ந்து கவனித்தான் ..
அப்போது தண்ணீரில் சில பணக்கட்டுகள் மிதப்பதை பார்த்து அதிர்ந்து போனான்..

பணம் எல்லாம் இங்கு சிதறிக் கிடக்கிறதே...
அப்படி என்றால் அண்ணன் எங்கே என்று பதட்டமாக சுற்றுமுற்றும் பார்த்தான் சந்திரன்..

மறுபடியும் சிறிது தூரம் நடந்து சென்றான் ...அப்போது பண மூட்டை தண்ணீரில் மிதப்பதை பார்த்து மேலும் பயந்து போனான் சந்திரன்..

பணமெல்லாம் இங்கே கொட்டிக்கிடக்கிறது அண்ணனை காணவில்லையே ..
ஒருவேளை பணத்தை போட்டு விட்டு ஓடி விட்டாரா
இல்லை இங்கு எங்கேயாவது இருக்கிறாரா என்ற பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்த்த சந்திரனுக்கு திடீரென்று அதிர்ச்சியில் நின்றான்...

தீனாவை தோள் மீது சுமந்தபடி அதிர்ச்சியில் சிலைபோல நின்றான் சந்திரன்...
அவன் பார்த்த காட்சி அவனால் நம்ப முடியவில்லை...

சற்று வேகமாக நடந்து வந்த சந்திரன் ...
அந்த காட்சியை பார்த்ததும் அவனால் நடக்கமுடியாமல் உடம்பெல்லாம் சிலிர்த்தது .. பிறகு மெதுவாக நடந்து சென்று அருகில் சென்று அந்த காட்சியை கூர்ந்து கவனித்தான் அப்போது அவன் உயிர் பிரிந்து விட்டதைப் போல உணர்ந்தான் சந்திரன்..

தண்ணீர் நிரம்பியிருந்த அந்த நிலத்தில் பரந்தாமன் கொண்டுவந்த பணமெல்லாம் முட்டையோடு மிதந்து இருக்க... பரந்தாமன் தலைகீழாக பாதி உடம்பு சேற்றில் புதைத்தபடி கால்கள் மேலே நின்றபடி இறந்து கிடப்பதை பார்த்தான் சந்திரன்...

இந்தக் காட்சியை அவனால் நம்ப முடியவில்லை ..
பெரிய அண்ணன் இறந்துவிட்டாரா என்பதை அவன் உள்ளம் ஏற்கவில்லை.. இருந்தாலும் அவனால் மறுக்கவும் முடியவில்லை

அப்போது சந்திரன் நடுங்கியபடி சொன்னான் ....தம்பி பெரிய அண்ணன் இறந்துவிட்டார் தம்பி என்று சொல்லும்போது தீனாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை ...

சந்திரன் தீனாவின் முதுகை தட்டிக்கொடுத்து கொண்டே மறுபடியும் சொன்னான்...
தம்பி பெரிய அண்ணன் நம்மை அனாதையாக விட்டு விட்டு போயிட்டாரு தம்பி என்று வார்த்தை திக்கியபடி சொல்லிக்கொண்டு தீனாவை தோல் மீது இருந்து சேற்றில் இறக்கினான் ....

அப்போது தீனாவின் தலை சாய்ந்து ...இதை பார்த்து சந்திரன் மறுபடியும் அதிர்ந்தான் ..
தம்பி அண்ணனை பாருடா தம்பி அண்ணன் இறந்து விட்டார் என்று சொல்லிக்கொண்டே தீனாவின் கண்ணத்தை தடவி கொடுத்துக்கொண்டே அசைத்தான் ...
அப்போது தீனா இறந்துவிட்டான் என்பதை உணர்ந்தான் சந்திரன்...

நள்ளிரவில் . பார்க்குமிடமெல்லாம் தண்ணீர் சூழ்ந்திருந்த நிலத்தின் நடுவே சந்திரன் தீனாவை கட்டியணைத்துக் கொண்டு... தலைகீழாக புதைந்திருக்கும் பரந்தாமனின் கால்களை பிடித்துக்கொண்டும் கதரி கதரி அழுதான் அந்த அமைதியான இடத்தில்...

அண்ணனும் இறந்துவிட்டார் தம்பியும் இறந்து விட்டான் என்பதை உணர்ந்த சந்திரனுக்கு தலை சுற்றியது ....
அப்போது சந்திரன் மயங்கி அவனும் சேற்றில் சாய்ந்தான்...

தொடரும்.....
 
Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ....51👇

பொழுதும் விடிந்தது...🌅

காலையில் எழுந்த சாந்திக்கு மனசெல்லாம் படபடவென அடித்துக் கொண்டே இருந்தது ...
அவள் மனதுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத கசப்பான உணர்வு ஏற்பட்டது...

நேற்று இரவு தோட்டத்திற்கு சென்ற நம் கணவரும் தம்பிகளும் இன்னும் வரவில்லையே என்பதை உணர்ந்து அவளுக்கு என்னமோ போல மனசு சங்கடமாக இருந்தது...
வீடு வெறிச்சோடிக் கிடைப்பதை பார்த்து அவள் கண்களில் கண்ணீர் முட்டியது ...
இருந்தாலும் மனசை திடப்படுத்திக் கொண்டு வாசலை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்...

அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த 🏍️மோட்டர் பைக்கில் அவளுடைய புடவை சிக்கிக்கொண்டது ...
சாந்தி மோட்டார் பைக்கை பார்த்ததும் அவள் மனம் மேலும் நொந்து போனது ...பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் மூவரும் இன்னும் வரவில்லையே அவர்களுக்கு ஏதாச்சும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் அவள் மனதில் மெல்ல மெல்ல அதிகமானது ...

மோட்டார் பைக்கை பார்த்ததும் மூவரும் எப்போதுமே ஒன்றாக செல்லும் காட்சி அப்போது அவள் கண் முன்னே நின்றது ..
மோட்டர் பைக்கில் சிக்கிக்கொண்ட புடவையை எடுத்து முந்தானையால் பாசமாக பைக்கை துடைத்தாள் அப்போது அவளால் என்ன நடந்திருக்குமோ என்பதை தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை..

யாரிடமாவது விசாரிக்கலாம் என்று சுற்று முற்றும் பார்த்தாள் யாருமே தென்படவில்லை ..
பிறகு வீட்டின் மொட்டை மாடியில் மேல் நின்று பார்க்கலாம் நம் கணவரும் தம்பிகளும் நடந்து வருகிறார்களா என்று நினைத்து பதட்டத்தோடு வீட்டின் மொட்டை மாடியில் நின்று தெருக்களை பார்த்தாள் யாருமே தென்படவில்லை ...

அப்போது அவளுக்கு கை நடுங்க ஆரம்பித்தது .. எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் இவ்வளவு நேரம் வீட்டுக்கு வராமல் இருக்க மாட்டார்களே ..
இவ்வளவு நேரமாகியும் மூன்று பேரில் ஒருவர் கூட வீட்டுக்கு வர வில்லையே என்று ...
பதட்டத்தோடு தெரு முனையை பார்த்துக்கொண்டிருந்த சாந்திக்கு திடீரென்று அதிர்ச்சியானது..

ஊர் மக்கள் எல்லோரும் அலறியடித்துக்கொண்டு அழுது கொண்டும் தோட்டத்தை நோக்கி ஓடுவதை பார்த்தால் சாந்தி...

அப்போது அவளுக்கு மூச்சு வேகமாக வாங்கியது
அவள் சிந்தனைகள் வேறு மாதிரியாக நினைக்கத் தோன்றியது ...
உடனே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து தன் மகனை கையில் பிடித்துக் கொண்டு அவளும் தோட்டத்தை நோக்கி நடந்து சென்றாள் மனக் குழப்பத்தோடு..

ஊர் மக்கள் அனைவரும் பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்பு செட்டின் 🏡🏠அருகில் எல்லோரும் ஒன்றுகூடி அழுது இருப்பதை பார்த்துக்கொண்டே ஓடிவந்தாள் சாந்தி ..

அப்போது ஊர் மக்கள் சாந்தியும் அவளது மகன் சுரேஷும் வருவதை பார்த்து எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள்...

இதைப்பார்த்த சாந்தி வாய்விட்டு கதறி அழுதாள் ..நம் கணவருக்கும் தம்பிகளுக்கும் ஏதோ நடந்துவிட்டது என்பதை உறுதி செய்தாள் சாந்தி.. அவளால் மனதை சமாதானம் செய்ய முடியவில்லை வாய்விட்டு என்னங்க ...என்னங்க என்று கூப்பிட்டாபடி ஓடி வந்து கூட்டத்தை விலகி பார்த்தாள்..
அவள் பார்த்த காட்சி அவளால் நம்ப முடியவில்லை ..அப்படியே அழுகையை நிறுத்திவிட்டு அதிர்ச்சியில் சிலைபோல நின்றாள்..

பரந்தாமனின் வாய்க்குள் இருந்த சேற்றை சில பேர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து இருந்தார்கள் பரந்தாமன் இறந்த நிலையில் ...

தீனாவின் கால்கள் இரண்டும் உடைந்து இருந்ததால் ..
அவனின் கால்கள் வயிற்றுப்பகுதியில் திரும்பிக்கொண்டிருந்ததை பார்த்து சில பேர் ... கால்களை நேராக சரி செய்துகொண்டு இருந்தார்கள் தீனா இறந்த நிலையில் ...
அவனின் உடல் முழுக்க ரத்தக்கறையை பார்த்து எல்லோரும் அதிர்ந்து போனார்கள்...

சந்திரனுக்கு உயிர் இருப்பதை உணர்ந்த ஊர்மக்கள்
அவன் கால்களை பிடித்து
அவன் கால் பாதத்தில் கைகளால் தேய்த்து சூடு ஏற்றினார்கள்... மற்றொருவர் சந்திரனின் கைகளை பிடித்துக் கொண்டு கையோடு கை தேய்த்து சூடு ஏற்றிக் கொண்டிருந்தார்கள்..

இப்படிப்பட்ட அலங்கோலமான காட்சியை பார்த்த சாந்திக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது ...
அப்போது அவளின் மகன் சுரேஷ் அப்பா என்று அழுக ஆரம்பித்து விட்டான்..

சாந்தி பரந்தாமனின் கையை பிடித்து தனது கன்னத்தில் வைத்துக்கொண்டு...
என்னை இப்படி ஏமாற்ற உங்களுக்கு எப்படி மனசு
வந்ததுங்க என்னை மட்டும் தனியா விட்டுட்டு இப்படி எல்லோரும் போய் சேர்ந்துட்டிங்களே இனி நான் மட்டும் எப்படி தனியா இருப்பேன் என்று சொல்லிக்கொண்டே அழுதாள் ....

பரந்தாமனின் பக்கத்தில் தீனா அலங்கோலமான நிலையில் இருப்பதை பார்த்து சாந்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் ...
உங்களை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று கனவு கண்டார் உங்க அப்பா ...
ஆனால் இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துவிட்டதே நீங்களும் அவரோடு சேர்ந்து விட்டீர்களே .. இனிமேல் என்னை அண்ணி என்று பாசமாக யார் கூப்பிடுவாங்க...

உங்களுடன் நான் கொஞ்ச நாளா பேசாமல் இருந்தது என் தப்பு தான் அதற்காக இனிமேல் என்னிடம் கடைசி வரைக்கும் பேசாமலே போயிட்டீங்களே தம்பி என்று சொல்லிக்கொண்டே அழுதாள் சாந்தி...

சாந்தியின் வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை ... அந்த அளவுக்கு அவள் மனம் சிதறியது....

ஊர் மக்களுக்கு ஒரே குழப்பம் பண்ணையர் தோட்டத்தில் என்னதான் நடக்குது என்று...

பண்ணையாரும் முத்தையாவும் சேர்ந்து விவசாயம் செய்யும்போது இதுபோன்ற பிரச்சனைகள் எல்லாம் கிடையாது ...
எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம் ..
ஆனால் பண்ணையாரும் முத்தையாவும் எப்போது ஓய்வு எடுத்தார்களோ அதிலிருந்து பாவம் பண்ணையார் மகன்களுக்கு பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது ...
கடைசியில் பண்ணையாரின் இரண்டு மகன்களின் உயிரும் போய்விட்டது ...
ஆனால் இதற்கெல்லாம் யார் காரணம் என்று இதுவரைக்கும் தெரியலையே என்று ஒருவர் கூட்டத்தில் புலம்பியபடி சொன்னார்...

ஒரு காலத்தில் பண்ணையார் தோட்டம் என்றால் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் பெருமையாக பேசுவார்கள் ... ஆனால் சிலகலமாக பண்ணையார் தோட்டத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று தான் இப்போது எல்லோரும் பேசுகிறார்கள் ..
இந்த நிலைமை இனிமேல் மாறாது என்று வருத்தத்தோடு இன்னொருவர் கூட்டத்தில் சொன்னார்...

பம்புசெட்டில் ..முதலில் பெரியவரின் மகனும் மருமகளும் காணாமல் போனார்கள் ...
இதை ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டோம் இரண்டாவது ...கனகாவும்
ஊமையனும் காணாமல் போனார்கள் ... அப்போதுதான் நமக்கு இது திட்டமிட்ட சதி என்று புரிந்து கொண்டோம் ..
மறுபடியும் சங்கரும் ரேகாவும் காணாமல் போனார்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வரும் என்று எதிர்பார்த்தோம் எல்லோரும் ஆனால் இப்போது
பரந்தாமன்ஐய்யாவும்
தீணா ஐயாவும் இறந்தது தான் நமக்கு கிடைத்த சாபம் ...
இனிமேல் இந்த ஊரில் இருப்பது நமக்குத்தான் மனக்கஷ்டம் ஏற்படும் நமக்காக பாடுபட்டவர்கள் எல்லோரும் போய் சேர்ந்துவிட்டார்கள் இனிமேல் எதற்காக இந்த ஊரில் இருக்கணும் என்று மற்றொருவர் மன வேதனையோடு சொன்னார் கூட்டத்தில்...

எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருங்கப்பா ..
சந்திரன் கண்முழித்ததும் எல்லாம் உண்மையும் தெரியவரும் ..
அது வரைக்கும் எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருங்க என்று ஒரு பெரியவர் சொன்னார்...

கிணற்றின் அருகில் சாட்டை இருப்பதை கவனித்த ஊர்மக்கள் சாட்டையடி சாமியாரும் இங்கு வந்து இருக்கிறார் ..அவருடைய
சாட்டைதான் இது ...
பாவம் அவருக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை ..
பூஜை அறையிலும் யாருமே இல்லை இங்கேயும் அவர்கள் மூன்று பேரும் இல்லை ..
என்ன ஆச்சு தெரியவில்லையே நமக்கெல்லாம் அருள்வாக்கு சொல்பவர் சாட்டையடி சாமியார்தான் இப்போது அவரும் இல்லை என்று வேதனையோடு சொன்னார் ஒருவர்...

இப்படி ஊர் மக்கள் வேதனையோடு பேசிக் கொண்டிருந்த வேளையில் சந்திரனின் பாதத்தில் வேகமாக கைவத்து தெத்தார்கள் அப்போது சந்திரனின் உடல் சூடேறி மயக்கம் தெளிந்தது ...
சந்திரன் கண்வழித்து பார்த்தான்..

கதறிக் கதறி அழுது கொண்டிருந்த சாந்திக்கு சந்திரன் கண்விழித்து பார்த்தது சற்று ஆறுதலாக இருந்தது...

உடனே அங்கு கூடியிருந்த பெரியவர்கள் சந்திரனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார்கள் அப்போது சந்திரன் மருத்துவமனைக்கு வேண்டாம் சிறிது நேரம் நான் இங்கு பேச வேண்டும் என்று சொன்னான் சந்திரன்...

அப்போது ஊர் மக்கள் எல்லோரும்..
பெரிய எதிர்பார்ப்போடு சந்திரன் முகத்தையே பார்த்தார்கள்
நடந்த சம்பவத்திற்கு எல்லாம் யார் காரணம் என்று தெரியப் போகிறது என்ற ஆவலோடு...

தம்பி நீங்கள் எதையும் மறைக்காமல் எங்களிடம் சொல்லுங்கள்
உங்களை இப்படிப்பட்ட நிலைமைக்கு யார் காரணம் என்று சொல்லுங்கள் அவனை நாங்கள் உயிரோடு விடமாட்டோம் என்று ஆவேசத்துடன் ஒரு கூலித் தொழிலாளி சந்திரனிடம சொன்னார்..

உங்கள் மூன்று பேரையும் அடித்தது யார் என்று சொல்லு தம்பி அவன் யாராக இருந்தாலும் உங்கள் காலடியில் அவன் உயிரை எடுத்து விடுகிறோம் சொல்லுங்கள் தம்பி என்று மற்றொருவர் ஆவேசத்துடன் சந்திரனிடம் சொன்னார்...

இப்படி ஊர் மக்கள் அனைவரும் கொதித்தெழுந்த வேலையில்...

சந்திரன் மௌனமாக தனது அண்ணியை பார்த்து இரு கைகளால் கும்பிட்டான் ... அண்ணி என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போது சந்திரனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது...

சந்திரன் மன்னிப்பு கேட்டது சாந்திக்கு திக்கென்று ஆனது மூவரும் ஏதோ பெரிய தவறு செய்து இப்படி பட்ட நிலைமையை ஏற்படுத்தி விட்டார்கள்... அதனால் தான் சந்திரன் நம்மிடம் மன்னிப்பு கேட்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் சாந்தி...

சந்திரன் படுத்தபடியே பரந்தாமனையும் தீனாவையும் பார்த்து மௌனமாக
மனம் நொந்து அழுதான் உங்களை விட்டு விட்டு நான் மட்டும் எப்படி உயிர் வாழ்வேன் அண்ணா ...என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு மௌனமாய் தேம்பித் தேம்பி அழதான்..

பிறகு கண்களை துடைத்துக்கொண்டு ஊர் மக்களை பார்த்து பேச ஆரம்பித்தான் சந்திரன் படுத்தபடியே...

நீங்கள் நினைப்பது போல எங்களை யாரும் அடிக்கவில்லை..

இந்த பம்புசெட்டில் நடந்த எல்லாம் பிரச்சனைகளுக்கும் காரணம் ...
இந்த இடத்தில் மூன்று தீய சக்திகள் இருந்தது அதுதான் இங்கு தங்கி வேலை செய்தவர்களை பயமுறுத்தி கொடுமைப்படுத்தி துரத்தி விட்டது .. இந்த மூன்று தீய சக்திகளை விரட்டி அடிக்கத்தான் சாட்டையடி சாமியாரை நாங்கள் நேற்று இரவு அழைத்து வந்தோம் அப்போது அந்த மூன்று தீய சக்திகளுக்கும் எங்களுக்கும் ஏற்பட்ட மோதலில்தான்
என் அண்ணன் ..என் தம்பி உயிர் பிரிந்துவிட்டது ...
ஆனால் ..நம் சாட்டையடி சாமியார் அந்த தீய சக்தியை அழித்துவிட்டார் .. அதனின் ஆவியை எடுத்துக்கொண்டு வெகுதூரத்தில் விட்டு விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு சாட்டையடி சாமியாரும் அவரது சிஷ்யர்களும் சென்றுவிட்டார்கள்...

இனிமேல் இந்த இடத்தில் எந்த தீய சக்தியும் கிடையாது ...

இதை காணாமல் போனவர்கள் இடம் சொல்லுங்கள் ..
உங்களை கொடுமைப்படுத்திய 3 தீய சக்திகள் அழிந்துவிட்டது நீங்கள் இனி சந்தோசமாக இருக்கலாம் என்று சொல்லுங்கள் அவர்களுக்கு புரியும் அந்த தீய சக்தி யார் என்று ...

இனிமேல் நீங்கள் எந்த ஒரு பயமும் இல்லாமல் இங்கு வேலை செய்யலாம் ..
இந்த பண்ணையார் தோட்டத்தை மறுபடியும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ...

இதுதான்
நான் உங்களிடம் கடைசியாக கேட்கும் வரம் ...

இந்த வரத்தை நீங்கள் எனக்கு கொடுப்பீங்களா என்று ஊர் மக்களிடம் சொல்லிக்கொண்டே அழுதான் சந்திரன்....

சந்திரனின் பேச்சை கேட்டதும் ஊர் மக்கள் வியப்போடு பார்த்தார்கள் ..
இத்தனை நாளா இந்த தீய சக்திகள் தான் எல்லோரையும் கொடுமைப்படுத்தி இருந்ததா என்று நினைத்து வேதனைப் பட்டார்கள்...

சந்திரன் மூன்று தீய சக்திகள் என்று சொன்னதை சாந்தி புரிந்து கொண்டாள் ...
நடந்த எல்லாம் பிரச்சனைகளுக்கும் இவர்கள்தான் காரணம் என்று....

ஆனால் கடைசியாக சந்திரன் மூன்று தீய சக்திகள் அழிந்து விட்டது என்று சொன்னானே... அப்படி என்றால் அவனும் இறந்துவிடுவானா என்ற சந்தேகத்தோடு சந்திரனை உற்றுப் பார்த்தபடி அழுதாள் சாந்தி...

சந்திரன் மெதுவாக கையை அசைத்தபடி தனது அண்ணன் மகன் சுரேஷ்சை அழைத்தான்... அவனும் அழுது கொண்டே சந்திரனின் அருகில் அமர்ந்தான்..

அழுவாதடா... இனிமேல் நீ தான் தாத்தாவின் இடத்திலிருந்து
இந்த தோட்டத்தையும்
ஊர் மக்களையும் நல்லபடியா பாத்துக்கணும் ..
நீ தான் இனிமேல் இந்த ஊருக்கு 🙋சின்ன பண்ணையார்.

இதோ இரண்டு மூட்டைகளில் இருக்கும் பணத்தையெல்லாம் இந்த ஊர் மக்களுக்கு உன் கையால் எடுத்துக் கொடு... இனிமேல் எந்த தீய சக்தியும் இந்த ஊரில் கிடையாது... உன்னுடைய பயணத்தில் எந்த தடையும் ஏற்படாது ..
இனிமேல் நீ அழக்கூடாது என்று சொல்லிக்கொண்டே சுரேஷின் தோளை தட்டிக் கொடுத்தான் சந்திரன்...

பண்ணையாரின் பேரன் தான் இனிமேல் நமக்கு
சின்ன பண்ணையார் என்பதை நினைத்து நெகிழ்ந்து போனார்கள் ஊர்மக்கள்...

தொடரும்.....
 
Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...52 👇

தம்பி ...உண்மை தெரியாமல் நாங்கள் ஏதேதோ முடிவு செய்து இருந்தோம் ... எங்களை மன்னித்து விடு தம்பி என்று ஒரு பெரியவர் சந்திரனிடம் பணிவோடு கேட்டார்...

அண்ணி எல்லாம் நிலங்களையும் ஊர்மக்களுக்கு பிரித்து கொடுத்துவிடுங்கள் இதுதான் அப்பாவின் ஆசை இனிமேல் யாரும் காணாமல் போனவர்களை தேடி போக வேண்டாம் ...
இங்கு நடந்த சம்பவத்தை அறிந்து .. அவர்களே திரும்பி வருவார்கள் இனிமேல் இந்த ஊருக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது பேச முடியவில்லை ..
இன்னும் சிறிது நேரத்தில் நம் உயிர் பிரிந்து விடும் என்பதை உணர்ந்தான் சந்திரன்...

மூவரும் சேர்ந்து நம் வாழ்க்கையை ஏமாற்றிவிட்டார்கள் என்று நினைத்து சாந்தி
மன வேதனையில் அமைதியாக பரந்தாமனின் மார்பின் மீது படுத்தபடி நடந்தது எல்லாம் நினைத்துப் பார்த்தால்...

சந்திரனின் உடல் நடுங்கத் தொடங்கியது ...இதை பார்த்து எல்லோரும் கதறி அழுதார்கள் அப்போது பரந்தாமனின் அருகில் இருந்த சாந்தி எழுந்து ஓடிவந்து சந்திரனின் தலையை தூக்கி தன் மடிமீது வைத்துக் கொண்டு அழுதாள்...

தம்பி நீ ஒருத்தனாவது பிழக்கணும் ...என் கணவர் இறந்ததை நான் பார்க்கவில்லை தீனா இறந்ததையும் நான் பார்க்கவில்லை ...ஆனால் நீ என் கண்முன்னே இறந்து விடாதே தம்பி என்று சந்திரனை அழுதபடி கெஞ்சினாள் சாந்தி...

அப்போது சந்திரன் அவசரமாய் சாந்தியிடம் பேச துடித்தான்.. ஆனால் அவனால் பேச முடியவில்லை .. உடல் துடிக்க ஆரம்பித்துவிட்டது
அப்போது சந்திரன் சாந்தியை பார்த்து அண்ணி எனக்கு கடைசியா ஒரே ஒரு ஆசை அதை நீங்கள்தான் நிறைவேத்தனும் என்று கெஞ்சினான்...

சொல்லு தம்பி ... என்ன ஆசை சொல்லு என்று அழுது கொண்டே கேட்டாள் சாந்தி...

மொதல்ல என்னை அண்ணனுக்கும் தம்பிக்கும் நடுவில் என்னை படுக்க வையுங்கள் என்று சொன்னால் சந்திரன்...

உடனே அங்கு கூடியிருந்தவர்கள் சந்திரனை அலுக்காக தூக்கி பரந்தாமனுக்கும். தீணாவுக்கும் நடுவே சந்திரனை படுக்க வைத்தார்கள்...

உடனே சந்திரன் வலதுபுறமாக இருக்கும் பரந்தாமனின் கையை தனது கையோடு கோர்த்துக்கொண்டான் இடது பக்கமாக இருக்கும் தீனாவின் கையோடு கைகோர்த்துக்கொண்டு சந்திரன் சிறிது சந்தோசப்பட்டான்...

சந்திரனின் செயலைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் மேலும் கவலையோடு அழுதார்கள்..

அண்ணி ..அண்ணி எனக்கு ஒரு வாக்குறுதியை கொடுக்கனும் நீங்க ... என்று தன் உயிரை இருக்க பிடித்துக்கொண்டு சாந்தியிடம் கேட்டான் சந்திரன்...

சொல்லுங்க தம்பி ....

அண்ணி...எனக்கும் என் தம்பிக்கும் எல்லாமே என் அண்ணன்தான் ...
என் அண்ணனை விட்டு நாங்கள் என்னைக்குமே பிரிந்ததில்லை... நான் இறந்த பிறகு என்னையும் என் தம்பியையும் அண்ணனோடு ஒன்றாக புதைத்து விடுங்கள் அண்ணி ...என்று சொல்லி சந்திரன் அழுதான்...

சந்திரனின் வார்த்தையை கேட்டு கூடியிருந்தவர்கள் எல்லோரும் வாய்விட்டு கதறி அழுதார்கள்..

எல்லோரும் அழுது கொண்டிருந்த வேளையில் .. சந்திரன் தனது அண்ணனின் கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டான். மறுபக்கம் இருக்கும் தீனாவின் கையை எடுத்து மறு கன்னத்தில் வைத்துக்கொண்டு ஆனந்தத்தில் அவன் முகம் அப்போது மலர்ந்தது...

நம் அண்ணனோடும்
தம்பியோடும் இணைந்து விட்டோம் என்ற சந்தோஷம் மட்டும் சந்திரனின் மனதில் நிரம்பி இருந்தது ... அந்த சந்தோஷத்தில் அவன் முகம் ஜொலித்தது... அவனின் கண்கள் திறந்திருந்தாலும் அவனுக்கு யாரும் தெரியவில்லை
அவன் அருகில் தன் அண்ணனும் தம்பியும் மட்டும் இருக்கிறார்கள் என்ற சந்தோசம் மட்டுமே அவன் மனதில் நிரம்பி இருந்தது...

அங்கு கூடியிருந்த ஊர்மக்கள் அழுத்துக் கொண்டிருந்த வேளையில் ...

சந்திரன் ....தன் அண்ணனின் கையையும் தம்பியின் கையையும் கண்ணத்தில் தேய்த்துக் கொண்டு இருக்கும்போது அவன் உடம்பு அதிர்ந்தது நரம்புகள் இழுத்தது அப்போது சந்திரன் உறுதியோடு பரந்தாமனின் கையையும் தீணாவின் கையையும் இறுக்க பிடித்துக் கொண்டான்...
அதே சமயத்தில் அவன் உயிர் பிரிந்தது .....அவனை விட்டு..... சந்திரனின் கண்கள் திறந்தபடியே நின்றுவிட்டது....

இதை பார்த்த ஊர் மக்களும் சாந்தியும் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் வாயடைத்து அமைதியாக அதிர்ச்சியில் நின்று விட்டார்கள்...

எங்கு சென்றாலும் மூன்று பேரும் ஒற்றுமையாக ஒரே 🏍️பைக்கில் சென்ற காட்சி எல்லோருடைய கண்முன்னே வந்து நின்றது...

சிலபேர் ..அவர்கள் செய்த உதவிகளையும் நினைத்துப் பார்த்து அழுதார்கள் ...

அவர்கள் மூவரும் கம்பீரமாக வயல் வெளியில் நடந்து சென்றதை நினைத்து பார்த்து சில பேர் குலுங்கி குலுங்கி அழுதார்கள்...

சிலபேர் ..பரந்தாமன் ஊர் மக்களுக்காக எவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தாரே என்று நினைத்து அழுதார்கள்..

பரந்து விரிந்து காணப்படும் பண்ணையார் தோட்டத்தின் நடுவே ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி அழுவதை கழுகுப் பார்வையில் பார்க்கிறோம்...

அப்போது ஒரு பெரியவர் பரந்தாமனின் மகன் சுரேஷ்சை அழைத்துக்கொண்டு சந்திரனின் திறந்த கண்களை சுரேஷின் கைகளால் மூடி விட்டார்....

பிறகு சந்திரனின் ஆசைப்படி ஊர்மக்கள் பம்புசெட்டின் அருகில் பள்ளம் தோண்டி மூவரையும் ஒன்றாக புதைத்தார்கள்...

பரந்தாமன் ..சந்திரன் ..தீனா மூவரும் கைகோர்த்தபடி ஒரே பள்ளத்தில் புதைத்தார்கள்
ஊர் மக்கள்...
மன வேதனையோடு...

........ஆறு மதம் பிறகு.....

💐🌾🌱🌹🌿🌴 பண்ணையார் இருந்தபோது எப்படி தோட்டம் சிறப்பாக இருந்ததோ அதே போல இப்போதும் நல்ல செழிப்பாக வளர்ந்து இருந்தது....

பண்ணையார் தோட்டம் ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு சந்தோஷத்தோடும்
வேலை செய்து வந்தார்கள்...

🏡🏠பம்புசெட்டில் வழக்கம்போல கனகாவும் ஊமையனும் குடும்பத்தோடு வேலை செய்தார்கள்..

🏡🏠 பக்கத்தில் இருக்கும் பூஜை அறையில் ....
முதலில் காணாமல் போன பெரியவரின் மகனும் மருமகளும் தங்கி வேலை செய்து வந்தார்கள் இப்படி காணாமல் போன இரண்டு குடும்பங்களும் திரும்பி வந்துவிட்டார்கள்...

சங்கரும் ரேகாவும் நிச்சயம் ஒரு நாள் அவர்களும் திரும்பி வருவார்கள் என்ற முழு நம்பிக்கையோடு ஊர்மக்களும் சாந்தியும் காத்துக் கொண்டிருந்தார்கள்...

ரேகாவின் அம்மாவை தன்னோடு சேர்த்துக் கொண்டு வாழ்ந்து வந்தாள் சாந்தி ...

வெள்ளை நிற ஜிப்பா அணிந்த படி சுரேஷ் கம்பீரமாக
பின் கையை கட்டிக்கொண்டு வயல் வெளியே சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்திருந்தான் ...

இதைப் பார்த்த ஊர்மக்கள் சின்ன பண்ணையார் வந்து விட்டார் எல்லோரும் சுறுசுறுப்பா வேலை செய்யுங்க என்று சொல்லிக் கொண்டே வேலை செய்தார்கள்...

எல்லோரையும் கவனித்தபடி வந்துகொண்டிருந்த சுரேஷுக்கு ஒரு சின்ன சத்தம் காதில் கேட்டது அந்த சத்தம் அவனுக்கு வித்தியாசமாகவும் இருந்தது அதே சமயத்தில் அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது...

டன் டன் டன் டன் என்ற சட்டத்தின் ஓசையை கேட்டபடி சுரேஷ் தேடிக்கொண்டே சென்றான் அப்போது கனகாவின் மகன் ஒரு தகர டப்பாவை எடுத்துக்கொண்டு குச்சியால் அதை அடித்து கொண்டிருந்தான் ....
இதைப் பார்த்ததும் சுரேஷ்க்கு சந்தோஷமானது...

எதுக்கு இதை அடிச்சுக்கிட்டு இருக்க என்று சுரேஷ் கேட்க

சிறுவனும் இதை இப்படி அடித்தால்தான் கம்பங்கொல்லையில் குருவிகள் வராது என்று சொல்லி சிரித்தான்

அவனுடைய ஆர்வம் சுரேஷுக்கு பிடித்துப்போனது ...உடனே இருவரும் சிரித்துக்கொண்டே கைகோர்த்துக்கொண்டு பம்புசெட்டை நோக்கி நடந்து வந்தார்கள்...

அப்போது அங்கு வேலை செய்து இருந்தவர்கள் சுரேஷ்சையும் கனகாவின் மகனையும் பார்த்து பெருமையாக பேசினார்கள்.... சின்ன பண்ணையாரும் ....
சின்ன முத்தையாவும் ....
ஒன்று சேர்ந்துவிட்டார்கள் இனிமேல் நமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சொல்லி சிரித்தார்கள்...

பம்பு செட்டின் அருகில் இருக்கும் பரந்தாமன் சந்திரன் தீனா மூவரின் சமாதியின் மேல் அமர்ந்துகொண்டு சுரேஷும் கனகாவின் மகனும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்...

சமாதியில் ...பரந்தாமனின் முகம் வரையப்பட்டு இருந்தது வலதுபக்கம் சந்திரனின் முகம் இடது பக்கம் தீணாவின் முகம் வரையப்பட்டு இருந்தது இவர்களின் முகத்தின் மீது சிறுவர்களின் கால்கள் பட்டபடி பேசிக்கொண்டிருந்தார்கள் .. சமாதி மேல் அமர்ந்தபடி....

ஊர்மக்கள் சொன்னபடி
சின்ன பண்ணையாரும்
சின்ன முத்தையாவும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் ....
இனி சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை பண்ணையார் புறத்தில்....

இந்த நேரத்தில் நமக்கு நினைவுக்கு வருவது ...
கோவா திரைபடத்தின் முதல் பாடல்....

🎼ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம் எடுத்து வந்தோம் நல்ல வாரம் ....
🎵ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பன்னபுரம்.... 🎶முல்லையாறு முதல்முதலாய் முத்தமிடும் அந்த இடம் எல்லைகளைத் தாண்டி வந்தா எங்க அப்பா பொறந்த இடம்..... முல்லையாறு முதல் முதலாய் முத்தமிடும் அந்த இடம் எல்லைகளைத் தாண்டி வந்தா எங்க அப்பா பொறந்த இடம்...

🎼எழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம் எடுத்து வந்தும் நல்லவரம் .....
🎵எழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூடவரும் எங்க புரம் பன்னபுரம்...

🌹சுபம் 💐சுபம் 🌺சுபம்..

இக்கதை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது ..

டைரி நம்பர்...3177 / 2016
L 65083 /2017

இந்தக் கதை ✍️சகாப்தம் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு கிடைத்திருக்கிறது...

இந்தக் கதை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்... படிக்கப் போகிறவர்களுக்கும்... இக்கதையின் பற்றி திட்டங்கள் ஏதேனும் இருந்தால்
கீழே இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அழைக்கலாம்...

Karthikeyanjayaraman1980@gmail..c.

🙏நன்றி வணக்கம் 👍🏽
 
பண்ணையார் தோட்டம் மர்மம் கதையை படித்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.... 👃👃👃மின்னஞ்சல் மூலமாக என்னை தொடர்பு கொண்டு ..தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 👃👃👃மேலும் வாசகர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் ..இதோ என்னுடைய போன் நம்பர் கீழே கொடுத்துள்ளேன்..
தங்களுடைய விமர்சனங்களை நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம்..
9942663998... நன்றி சகாப்தம் வாசகர்களுக்கு...👃👃👃👍🏽👍🏽👍🏽
 
Top Bottom