Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...20 👇


......மாலை நேரம்...

முத்தையாவும் லட்சுமி அம்மாளும் சங்கர் ரேகாவின் திருமணத்தைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்கள் திண்ணை மீது அமர்ந்தபடி.

சங்கர் ரேகாவும் வீட்டுக்குள்ளே கட்டில் மீது இருவரும் ஓட்டிக்கொண்டு ஆசையோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.

மாமா ..இன்னைக்கு நீங்கதான் சமைக்கணும் உங்களுடைய கைப்பக்குவம் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன் என்று ரேகா செல்லமாக சொன்னாள்.

இன்னைக்கு நீ சமைக்க போவதில்லையா . நான் தான் சமைக்கனும்மா. என்றான் சங்கர்.

ஆமாம் ..நீங்கதான் ரொம்ப வித்தியாசமா வீட்டு வாசலில் மலாக்கா படுத்துக்கொண்டே சமையல் செய்வீங்களே.
அந்த வித்தியாசமான சமையலின் ருசியை இன்னைக்கு எப்படி இருக்குன்னு பாக்குறேன் என்று கிண்டலாக சொன்னாள் ரேகா.

என்னோட சமையலைப் பத்தி உனக்கு தெரியாது .
நான் படுத்துக்கொண்டே சமையல் செய்தாலும் அதனோட ருசியே வேற தான் . ஆனா இப்போது நான் சமையல் செய்தாள் உங்க அம்மா உன்னை தான் திட்டுவாங்க அதனால ஒழுங்கா போயிட்டு சமையல் செய் என்று சொல்லிவிட்டு ரேகாவின் கன்னத்தை செல்லமாக கடித்தான் சங்கர்.

ஆமாம்மா .. நீங்க வைக்கிற குழம்பு சாம்பாரா
இல்லை ரசமா என்று தெரியாமல் தாத்தா தவித்தது எனக்குத் தெரியும் என்று கிண்டலாய் சொல்லி சிரித்தாள் ரேகா.

வீட்டுக்குள்ளே ரேகாவின் சிரிப்பு சத்தத்தை கேட்டு லட்சுமி அம்மாளுக்கும் முத்தையாவுக்கும் சந்தோஷமாக இருந்தது அப்போது லட்சுமி அம்மாள் முத்தையாவிடம் .
நான் காபி போட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன் அப்பா என்று சொல்லி விட்டு எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு சென்றால் லட்சுமி அம்மாள்.

சிறிது நேரம் கழித்து ரேகா சந்தோஷமாக வெளியே வந்து வாசலில் இருக்கும் அடுப்பை விரகு வைத்து தீ பற்ற வைத்து சமையல் செய்வதற்கு
தயார்றனால் .

அப்போது . திண்ணையில் அமர்ந்து இருக்கும் முத்தையாவை பாசமாக பார்த்தாள் ரேகா. அப்போது முத்தையாவின் முகம் சோகமாக இருப்பதை உணர்ந்தால் ரேகா.

சற்று நேரத்தில் சமையலை செய்து முடித்தவுடன்
சுடசுட முத்தையாவுக்கு சாப்பாடு கொடுத்தால் ரேகா சிரித்த முகத்தோடு..

மறுபடியும் ரேகாவும் சங்கரும் கட்டிலில் படுத்தபடி நடந்ததையெல்லாம் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

உன்னை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று என் அப்பா சொல்லி இருக்கிறார் . அதனால் நீ ரொம்ப கடுமையாக உழைக்க வேண்டும் உன்னை நம்பி இனிமேல் இரண்டு குடும்பங்கள் இருக்கிறது என்று அப்பா சொல்லியிருந்தார் ஆனால் இந்த நேரம் பார்த்து பண்ணையார் தோட்டத்திற்கு யாரும் வேலைக்குப் போவதற்கு பயப்படுகிறார்கள் . காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை யாரும் பண்ணையர் தோட்டத்திற்கு வேலைக்கு போகக்கூடாது என்று முடிவு செய்துகொண்டு
வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் இந்த நிலைமை எப்போது மாறுவது என்று சற்று வருத்தத்தோடு சொன்னான் சங்கர்.

நான் இந்த வீட்டு மருமகளாக வந்ததே எனக்கு பெரிய சந்தோஷம் இதற்கு மேல எனக்கு எந்த சந்தோஷமும் கிடையாது தாத்தா என் மீது உள்ள அக்கறையில் அப்படி உங்களிடம் சொல்லி இருப்பார்
அதனால் நீங்கள் அதையே நினைத்து வருத்தப்பட வேண்டாம் . என்னை பொறுத்தவரை எப்போதுமே உங்கள் கூடவே இருப்பது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் அதனால் நீங்கள் தாத்தா சொன்னதை நினைத்து வருத்தப்படாதிங்க மாமா தாத்தாவுக்கு ஒரு பேரனோ பேத்தியோ வந்துவிட்டால் அவர் நம்மைப் பற்றி கண்டுக்கவே மாட்டார் எல்லாம் பாசத்தையும் பேரன் மீதும் பேத்தி மீதும் காட்டுவார் அதனால் அவர் சொன்னதை நினைத்து கவலைப் படாதீங்க எல்லோரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பயப்படுவார்கள் ஒருநாள் எல்லோரும் வேலைக்கு கிளம்புவார்கள் அப்போது நீங்களும் தாராளமாக வேலைக்கு சென்று சம்பாதித்து நம்ம குடும்பத்தை சந்தோசமா பாத்துக்குங்க .
இப்போ இருக்கிற வேலையை பாருங்க என்று சிரித்துக்கொண்டே சங்கரன் கட்டியணைத்தாள் ரேகா.

உங்க அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்தாயா என்று சங்கர் கேட்டான்.

அவங்க எப்ப வேணாலும் வந்து சாப்பிடுவாங்க என்று சொன்னாள்.

அப்படியெல்லாம் சொல்லாதே முதலில் அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கொடுத்து விட்டு வா என்று சங்கர் சொன்னதும் .
ரேகாவும் சாப்பாடு எடுத்துக்கொண்டு எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு சென்று சாப்பாடு அம்மாவிடம் கொடுத்துவிட்டு திரும்பி வரும்போது திண்ணைமீது அமர்ந்திருந்த முத்தையாவை பார்த்தாள் ரேகா
அப்போது முத்தையா சாப்பாடு சரிவர சாப்பிடாமல் இருந்தார்.

ஏன் தாத்தா சாப்பாடு வச்சுட்டீங்க என்று முத்தையாவின் அருகில் அமர்ந்து ரேகா பாசமாக கேட்டாள்.

என்னன்னு தெரியலம்மா சாப்பாடு பிடிக்கலை என்று வருத்தத்தோடு சொன்னார் முத்தையா.

மனதில் எதையோ நினைத்துக்கொண்டு கவலைப்படுகிறார் தாத்தா என்று புரிந்துகொண்டு ரேகா தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

என்ன புள்ள ..உங்க அம்மாவுக்கு சாப்பாடு வேண்டாமா ..அப்படியே எடுத்துக் கொண்டு வந்துட்டா என்று சங்கர் கேட்டான்.

இந்த சாப்பாடு தாத்தாவுக்கு போட்டது ..
என்னனு தெரியல திருமணம் ஆனதிலிருந்து அவர் எதையோ நினைத்து ரொம்பவே கவலைப்படுகிறார் சரியாகவே சாப்பிடுவதே கிடையாது ஒருவேளை என் மீது ஏதாவது கோபமா தாத்தாவிற்கு எதுவுமே தெரியலையே என்று வருத்தத்தோடு சொன்னாள் ரேகா.

உடனே சங்கர் முகம் சற்று சோகமாக மாறியது எதனால் அப்பா கவலையோடு இருக்கிறாய் என்று யோசித்தபடியே வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து இருக்கும் முத்தையாவை பார்த்தான் சங்கர்.

என்னப்பா ஆச்சு ..ரெண்டு நாளா சரியாவே சாப்பிடல உடம்புக்கு ஏதாவது முடியலையா என்று சங்கர் முத்தையாவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை மனசு சரியில்லை அதனால சாப்பிட பிடிக்கலை என்றார் முத்தையா.

தாத்தா நான் ஏதாவது தவறாக நடந்துக் கொண்டேனா என்று ரேகாவும் முத்தையாவின் இன்னொரு கையை பிடித்துக் கொண்டு கேட்டாள்.

எனக்கு யார் மீதும் கோபம் இல்லை நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தாலே அதுவே எனக்கு போதும் என்னோட வருத்தம் .
என் நண்பன் பண்ணையார் இப்போது மிகவும் கவலையோடு இருக்கிறான்
இந்த நிலைமையில் என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொல்லி தலையை குனிந்தார் முத்தையா.

அவரோட மகன் திருமணம் நின்றுவிட்டதால் அவர் வருத்தத்தோடு இருக்கிறார் அதனால் நீங்களும் அதை நினைத்து படுத்தப்படுவதால் பிரச்சனை சரியாகி விடுமா என்று சங்கர் சொன்னான்.

அவனுக்கு இரண்டு பிரச்சனை... அவனுடைய மகன் திருமணம் நின்று போனதை விட இந்த ஊர் மக்கள் வேலை இல்லாமல் பயந்துகொண்டு பசியால் இருப்பதை நினைத்து தான் அவனுக்கு பெரும் கவலை என்றார் முத்தையா.

ஊர்மக்கள் பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தங்கி வேலை செய்த குடும்பம் மர்மமான முறையில் காணாமல் போனதை நினைத்து பயந்து கொண்டு யாரும் வேலைக்கு போகாமல் இருக்கிறார்கள்
இந்த நிலைமை மாறுவதற்கு சிறிது காலம் ஆகும் இதை நினைத்து கவலைப்படுவதால் யாருக்கும் பயனில்லை அப்பா என்று சங்கர் சொன்னான்.

ஊர் மக்கள் பயப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும் பண்ணையார் தோட்டத்திற்கு நீ வேலைக்குப் போவதைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று முத்தையா கேட்டார்.

எனக்கு ஒரு பயமும் கிடையாது ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி காணாமல்போனவர்கள் கிடைக்கும் வரை யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யக் கூடாது என்று முடிவு செய்ததால். நானும் அதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன் என்றான் சங்கர்.

எல்லோரும் பயப்படுவது இயல்பான விஷயம் தான் அதனால் வேலைக்குப் போகாமல் இப்படி கஷ்டத்தோடு வாழ்வதைவிட பயத்தை ஓரங்கட்டிவிட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவது தான் புத்திசாலித்தனம் என்றார் முத்தையா.

இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க அப்பா.

எல்லோரும் போலவே நீயும் வேலைக்கு போகாமல் இருக்க வேண்டாம் நீயும் உன்னுடைய நண்பர்களும் பண்ணையர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று நல்லபடியாக வேலை செய்து பண்ணையார் தோட்டத்தை மறுபடியும் பழைய நிலைமைக்கு மாற்ற வேண்டும் அப்போது தான் என் மனமும் பண்ணையார் மனமும் ஒரு அளவுக்கு நிம்மதியாக இருக்கும் என்று முத்தையா சங்கரின் கையை பிடித்து சொன்னார்.

நீங்க சொன்னதைப் போலவே நாளையிலிருந்து நான் என் நண்பர்களோடு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகிறேன் நீங்கள் கவலைப்படாமல் இருங்கப்பா என்று முத்தையா வை சமாதானம் செய்துவிட்டு ரேகாவும் சங்கரும் வீட்டுக்குள்ளே சென்றார்கள்.

பொழுது விடிந்தது...🌄

சாந்தி காலையில் பரபரப்பாக பரந்தாமனை ..என்னங்க என்ற படி குரல் கொடுத்துக்கொண்டே எழுப்பினாள்.

என்னங்க சீக்கிரம் எழுந்திரிங்க.. தோட்டத்துக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் காத்துகிட்டு இருக்காங்க நீங்க இன்னும் இங்கேயே இருந்தால் எப்படி என்று பரந்தாமனிடம் சொன்னாள் சாந்தி.

சாந்தியின் வார்த்தை பரந்தாமனுக்கு சற்று இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

என்னடி சொல்ற ...வேலைக்கு ஆட்கள் வந்து இருக்காங்களா உண்மையாகவா சொல்ற என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் பரந்தாமன்.

ஆமாங்க ...இன்னைக்கு நம்ம சங்கர் அவரோட நண்பர்கள் எல்லோரும் நம்ம தோட்டத்துக்கு வேலைக்கு வந்திருக்காங்களாம் இப்பத்தான் எனக்கு தகவல் தெரிந்தது நீங்க உடனே கிளம்பி தோட்டத்துக்கு போங்க என்று சொல்லி விட்டு சந்தோஷமாக வந்தாள் சாந்தி அப்போது பண்ணையார் சாந்தியின் சந்தோஷத்தைப் பார்த்து.

என்னம்மா... காலையிலே ஒரே பரபரப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிற என்றார் பண்ணையார்.

மாமா ...நான் சொன்னதைப் போலவே சங்கர் திருமணம் முடிந்ததும் ஒரு திருப்பம் ஏற்படும் என்று சொன்னேனே... இன்னைக்கு நம்ம தோட்டத்திற்கு சங்கரும் அவருடைய நண்பர்களும் வேலைக்கு வந்து இருக்காங்க இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பிரச்சனையேல்லம் சரியாகிவிடும் என்று சந்தோஷமாக பண்ணையாரிடம் சொன்னால் சாந்தி.

பண்ணையாருக்கு சற்று சந்தோஷமாக இருந்தது.... கண்டிப்பாக இது முத்தையாவின் ஏற்பாடுதான் என்று நினைத்து சந்தோஷப்பட்டார் பண்ணையார்.

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் உற்சாகமாக தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.

கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் வெறிச்சோடிக் கிடந்த பண்ணையார் தோட்டம் சங்கர் அவனுடைய நண்பர்கள் நிலத்தில் மும்முரமாக வேலை செய்து இருப்பதை பார்த்து பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் சந்தோஷமாக இருந்தது.

அண்ணே இதுபோல ஊர் மக்கள் வேலை செய்ததை பார்த்து எத்தனை நாளாச்சு இனிமேல் இதேபோல ஊர் மக்கள் வேலைக்கு வந்தாள் நன்றாக இருக்கும் . நம்முடைய குடும்ப கௌரவம் இந்த விவசாயத்தில் தான் இருக்கிறது
நம்ம தோட்டத்தைப் பற்றி எல்லா கிராமத்திலும் பெருமையாக பேசுவார்கள் . இப்படிப்பட்ட நம்முடைய தோட்டம் கொஞ்ச நாளாக வாடி இருப்பதை பார்த்து அப்பாவுக்கு கவலையாக இருந்தது ஆனால் இனிமேல் சங்கரின் முயற்சியால் நம்முடைய தோட்டம் மெல்ல மெல்ல பழைய நிளமைக்கு வந்துவிடும் என்று சந்திரன் சந்தோஷமாக பரந்தாமனிடம் சொன்னான்.

ஆமாம் தம்பி இனிமேல் நம்ம இந்த ஊர் மக்களிடம் பாசமாக நடந்து கொள்ள வேண்டும் இன்னொரு முறை நம்மால் ஊர் மக்களுக்கு எந்த ஒரு திங்கும் ஏற்படுத்த கூடாது என்று பரந்தாமன் சொன்னான்.


அண்ணே... நாங்களும் குடிப்பதை நிறுத்தி விட்டோம் இனிமேல் நாங்கள் தேவையில்லாமல் எந்த ஒரு தவறையும் நாங்கள் செய்ய மாட்டோம் அண்ணே. இந்த ஊர் மக்கள் ஏதோ ஒரு புதிய முயற்சியோடு நம்முடைய தோட்டத்திற்கு வேலைக்கு வந்திருக்கிறார்கள் அவர்களின் சந்தோசத்தை இனிமேல் குறையாமல் நம்மா பார்த்துக்கொள்ளவேண்டும் அண்ணா என்று தீனா சொன்னான்.

சங்கரும் அவனுடைய நண்பர்களும் மும்முரமாக தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்து பரந்தாமனுக்கு எல்லை இல்லா சந்தோஷம்
அதே சமயத்தில் தம்பிகளும் இனிமேல் நாம் என்ன சொல்கிறோமோ அதை தான் கேட்பார்கள் அந்த அளவுக்கு நம்மிது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இனிமேல் நம்முடைய திட்டத்திற்கு எந்த தடங்களும் இருக்காது மெல்லமெல்ல விவசாயத்தை பெருக்கி அதில் வரும் லாபத்தை நம் பம்புசெட்டில் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டியை எப்படியாவது இன்னும் சில மாதங்களில் நிரப்பிவிட வேண்டும் என்று நினைத்து பரந்தாமன் சந்தோஷமாக ஒரு உற்சாகத்தோடு வேலை செய்யும் தொழிலாளர்களை பார்த்துக்கொண்டு கம்பீரமாக நின்றான்.


⛺மழைக்காலம் வந்தாலே நமக்கு தொழில் செய்யறதுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது என்ன சிஷ்யா என்று சாட்டையடி சாமியார் சொன்னார்.

ஆமாம் குருவே ..நம இந்த ஊர் மக்களை பேய் இருப்பது போல பயமுறுத்தி வருகிறோம் ஆனால் இந்த மழைக்காலம் வந்தால் நம்ம நினைத்தபடி செல்போனை ஒளித்து வைப்பதில் சிரமமாக இருக்கிறது மழை வந்தால் நம்முடைய செல்போன் நினைந்துவிடும் அதன் பிறகு நம்மால் தொழில் செய்வதற்கு கஷ்டமாகவே இருக்கும்
இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் மழை வரும் பிறகு வெயில் காலம் ஆரம்பித்து விடும் அதுக்கப்புறம் நம்முடைய செல்போனுக்கு வேலையும் வந்துவிடும் என்று சிஷ்யன் சொன்னான்.

இந்த ஊர் மக்கள் என்னைக்கு நம்முடைய பித்தலாட்டத்தை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் எனக்கு லேசாக இருக்கிறது சிஷ்யா என்றார் சாட்டையடி சாமியார்.

குருவே நீங்க எதுக்குமே பயப்படாதீங்க நாம்மா செல்போனை வச்சித்தான் பொழப்பு நடத்தனும் என்ற அவசியம் கிடையாது ஏனென்றால் உங்களுடைய செல்வாக்கு இந்த ஊருக்குள்ளே பெருகிவிட்டது நீங்கள் சொல்வதுதான் நடக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்கள் அதனால் இனிமேல் நமக்கு வருமானம் சற்று கூடுதலாக கிடைக்கும் அதனால் நீங்கள் கவலைப்படாமல் இருங்க குருவே என்று மற்றொரு சிஷ்யம் சொன்னான்.

நீ சொல்வதும் சரிதான் அதேபோல நம்மா செல்போன் விஷயத்துல கொஞ்சம் கவனமாக இருக்கணும் மொதல்ல ஒரு வீட்டின் அருகில் செல்போனை ஒளிச்சு வைக்கிற வேலையை கவனமா பார்க்கணும் அதுக்கப்புறம்
12 மணிக்கு நம்ம செல்போனுக்கு போன் செய்யணும்
நம்முடைய செல்போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போது பக்கத்துல இருக்கிற குடும்பம் பேய் இருப்பதாய் நெனச்சி பயந்து போவாங்க அதுக்கப்புறம் மறு நாளைக்கு நம்மிடம் வந்து முறையீடு வாங்க
நான் பேயை ஓட்டுவது போல மறுநாள் ராத்திரிக்கு போகும் அப்போது ஒருத்தர் நம்ம பூஜை அறையிலேயே இருந்துகிட்டு 12 மணிக்கு மேல் செல்போனுக்கு போன் செய்வீங்க
நானும் உங்களில் ஒருவரை கூட்டிக்கொண்டு
பேய் விரட்டுவது போல செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு வந்து விடுவோம் இதில் எந்த ஒரு தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்ளனும் இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரிந்தால் நம்மை மூன்று பேரையும் பண்ணையார் பசங்க உண்மையாகவே சாகடித்து பேயாக மாத்திடுவாங்க அதனால இந்த செல்போனை ஒளித்து வைக்கும் போது கவனமா நடந்துக்கணும் என்று சாட்டையடி சாமியார் சிஷ்யர்களிடம் சொன்னார்.

அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் குருவே இப்போது எங்களுக்கு பசிக்குது என்றான் சிஷ்யன்.

எனக்கும்தான் பசிக்குது நீங்கள் இருவரும் வழக்கமான கடைக்கு சென்று நான் சொன்னேன் என்று இருவரும் சாப்பிட்டுவிட்டு எனக்கும் வாங்கிக் கொண்டு வாங்க என்று தனது இரண்டு சிஷ்யன் களையும் அனுப்பி வைத்தார் சாட்டையடி சாமியார்.

தம்பி ...நம்மா கொடுக்கிற ஐடியா வைச்சுகிட்டு அந்த ஆளு இந்த ஊரில் நல்லா ஏமாற்றுகிறார் ஆனால் நமக்கு மட்டும் காசு கொடுக்காமல் இந்த ஊர் மக்களைப் போலவே நம்மையும் ஏமாற்றுகிறார் குரு இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும தம்பி என்று முதல் சிஷ்யன் சொன்னான்.

அவரை மீறி நம்மால் என்ன செய்ய முடியும் அண்ணா
நம்ம குரு நம்மிடம் வேலையையும் ஐடியாவையும் வாங்கிக் கொள்கிறார் ஆனால் பணம் கொடுப்பதில் மட்டும் நம்மிடம் கஞ்சதனம் பார்க்கிறார் அவரை விட்டுவிட்டு வேறு எங்கும் நம்மால் பொழப்பு நடத்த முடியாது அதனால்தான் அவரிடமே இருக்கிறோம்
ஏதோ நிம்மதியாக சாப்பிடுகிறோம் என்று இரண்டாவது சிஷ்யன் சொன்னான்.

இப்படியே நம்ம குருவுக்கு ரெண்டு பேரும் ஐடியா சொல்லிக் கொடுத்து அவரை பெரிய
ஆளக்கி விட்டோம் ஆனால் நம்ம ரெண்டு பேரும் சாப்பிடுவதற்கு அவரைதான் கையேந்தும் நிலைமையை மாற்ற வேண்டும் என்று முதல் சிஷ்யன் சொன்னான்.

நீ சொல்வதும் சரிதான் முக்கால்வாசி வேலையை நம்ம தான் செய்கிறோம் ஆனால் எல்லாம் பணத்தையும் அவரே தான் வசிக்கிறார் நம்மால் அவரை மீறி என்ன செய்ய முடியும் என்றான் இரண்டாவது சிஷ்யன்.

அந்த செல்போனை நம்ம குருவுக்கு தெரியாமல் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு வீட்டின் அருகில் ஒளிக்கவைத்து நள்ளிரவில் அந்த செல்போனுக்கு நம்மிடம் இருக்கும் இன்னொரு செல்போனில் போன் செய்யலாம் அப்போது ஒளிக்க வைத்த செல்போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போது அந்த குடும்பம் பேய் வந்துவிட்டது என்று நினைத்து நம் குருவிடம் காலையில் ஓடி வருவார்கள் அவர்களை நாம் இருவரும் பாதிவழியில் மடக்கி நாங்கள் அந்த பேயை விரட்டுகிறோம் எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று பேசி விடலாம் பிறகு மறுநாள் நான் பேய் ஓட்டுவது போல அவர்கள் வீட்டுக்கு செல்கிறேன் நீ குருவுக்கு தெரியாமல் செல்போனுக்கு போன் செய்து கொண்டிரு
நானும் பேய் விரட்டுவது போல விரட்டிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு அந்த குடும்பத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன் இப்படி நம் குருவுக்கு தெரியாமலே நம்ம இரண்டு பேரும் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் சிஷ்யன் சொன்னான்.

நீ சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது நாமும் நாலு காசு பார்க்கலாம் என்றால் நம் குருவுக்கு தெரியாமல் இந்த ஊரை ஏமாற்ற வேண்டும் என்று இரண்டாவது சிஷ்யனும் சொன்னான்

சரி சரி நம்ம இப்போதைக்கு குருவுக்கு நல்ல சிஷ்யனா நடந்து கொள்ளணும் சமயம் பார்த்து நம்ம ரெண்டு பேரும் நம்முடைய திட்டத்தை ஒரு நாளைக்கு செய்யலாம் என்று இரண்டு சிஷ்யர்களும் ஒன்றுகூடி பேசி குருவுக்கு தெரியாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவை தீர்மானித்தார்கள்.

நாட்கள் நகர்ந்தது.....

ஆரம்பத்தில் சங்கரும் அவனுடைய நண்பர்களும் பண்ணையார் தோட்டத்தில் வேலைக்குச் சென்று வந்த நிலையில் மெல்ல மெல்ல ஊர்மக்களும் ஒவ்வொரு குடும்பமாக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார்கள் ரேகாவின் அம்மா லட்சுமி அம்மாள் ஊரில் உள்ள பெண்களிடம் .
தேவையில்லாமல் யாரும் பயப்பட வேண்டாம் முதலில் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகலாம் பிறகு காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது பற்றி பிறகு முடிவு செய்யலாம் என்று சொல்லி பெண்களை பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றால் லட்சுமி அம்மாள் இப்படி ஊர்மக்கள் பழையபடி எல்லோரும் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு கிளம்பினார்கள்.


ஊர் மக்கள் பழையபடி எல்லோரும் வேலைக்கு வந்து விட்டார்கள் என்று நினைத்து சாதாரணமாக இருந்து விடாதே இனிமேல்தான் நீ கவனமாக இருக்க வேண்டும் என்றார் பண்ணையார் ..பரந்தாமனிடம்.

நீங்கள் சொல்வதும் சரிதான் அப்பா இனிமேல் நம்ம தோட்டத்தில் ஊர் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதபடி நான் கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்று பரந்தாமன் தனது அப்பாவிடம் சொன்னான்.

இப்ப ஊர் மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையை இனிமேல் சிறிதளவுகூட குறையாமல் பார்த்துக் கொள்ளனும்.

சரி அப்பா அப்படியே பார்த்துக் கொள்கிறேன் ஆனால் ஒரு சின்ன வருத்தம் ஊர் மக்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதில் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது என்றான் பரந்தாமன்.

ஏன் என்ன ஆச்சு ..எல்லோருக்கும் வேலை இல்லையா என்று கேட்டார் பண்ணையார்.

பம்புசெட்டில் தங்கி இரவு முழுக்க நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சினால் தான் காலையில் ஊர் மக்கள் அனைவருக்கும் வேலை இருக்கும்
ஆனால் பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்யாததால் பகலில் மட்டும் தண்ணீர் பாய்வதால் பாதி நிலத்திற்கு மட்டுமே தண்ணீர் பாய்கிறது அதனால் ஊர் மக்களுக்கும் பாதி பேருக்கு மட்டுமே வேலை இருக்கிறது அதனால் அனைவருக்கும் வேலை கொடுப்பதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்றான் பரந்தாமன்.

இப்போதைக்கு அனைவருக்கும் வேலையை சமமாக கொடுத்து எல்லோருக்கும் பணமும் கொடுத்துவிடு பிறகு மெல்ல மெல்ல நிலைமை சரியாகிவிடும் என்று பண்ணையார் சொன்னார்.

நானும் அந்த நம்பிக்கையில் தான் காத்திருக்கிறேன் அப்பா என்று பரந்தாமன் சொன்னான்.


இன்னைக்கு ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் அதனால் இன்று இரவு நமது ஊர் மக்களை வரச்சொல் என்று சங்கரிடம் முத்தையா சொன்னார்.

என்ன முக்கியமான முடிவு அப்பா என்றான் சங்கர்.

பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்த இரண்டு குடும்பங்கள் காணாமல் போனதைப் பற்றி ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் அதனால் நீ நம்ம ஊரில் உள்ளவர்களிடம் இன்று இரவு வரச்சொல் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று முத்தையா சொன்னார்.

தாத்தா ஏதோ ஒரு பெரிய திட்டத்தை வச்சிருக்காரு அதனால் தான் எல்லோரையும் இன்று இரவு நம் வீட்டுக்கு கூப்பிடுகிறார் . அதனால் நீங்க எல்லோரிடமும் தகவலை சொல்லிடுங்க என்று ரேகா சங்கரிடம் சொன்னாள்.


முத்தையாவின் திட்டத்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....


தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்... 21 👇


முத்தையா அண்ணன் ஏதோ ஒரு திட்டத்தை நினைத்துதான் நம் அனைவரையும் அழைத்திருக்கிறார் . நிச்சயம் அவருடைய திட்டம் நம்முடைய நல்லதுக்காகத்தான் இருக்கும் அதனால்தான் நாம் அனைவரையும் முத்தையா அண்ணன் இன்று இரவு தன்னுடைய வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார் என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள்.

மாமா... தாத்தாவிடம் விசாரித்திங்களா ...எதுக்காக எல்லோரையும் வரச்சொல்லி இருக்காருன்னு என்று ரேகா சங்கரிடம் கேட்டாள்.

இன்னும் கொஞ்ச நேரத்துல ஊர் மக்கள் எல்லோரும் இங்கே வரப்போறாங்க . அப்போது அப்பா அவரோட திட்டத்தை சொல்லப் போறாரு இதுக்கு முன்னாடி நாம அந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் ஊர் மக்களுக்கு சொல்லும் போது நாமும் தெரிந்துகொள்ளலாம் என்று சங்கர் ரேகாவிடம் சொன்னான்.

எப்படியோ ஊர் மக்களுக்கு நல்ல விஷயமாகத்தான் தாத்தா சொல்லுவார் என்று சொல்லிக்கொண்டு ரேகா தனது வீட்டு வேலைகளை பார்த்தாள்.


மாலை நேரம் ஆனது.....🌙

ஊர் மக்களும் அனைவரும் முத்தையாவின் வீட்டு வாசலில் நிரம்பி இருந்தார்கள்.

முத்தையாவும் லட்சுமி அம்மாள் தின்னை மீது அமர்ந்தபடி ஊர் மக்களை வாசலில் அமரச் சொன்னார்கள்.

ஊர் மக்களும் வாசலில் படிமாணமாக அமர்ந்து முத்தையா அண்ணன் முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அது என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திரந்தார்கள்.

சங்கரும் ரேகாவும் ஊர் மக்களோடு மக்களாக. வாசலில் இருவரும் ஜோடியாக அமர்ந்தார்கள் அப்போது ரேகா சங்கரின் கையை பிடித்து தனது நெஞ்சோடு அணைத்தபடி அமர்ந்தாள்.

ஊர் மக்களை பார்த்து முத்தையா நிதானமாக பேச ஆரம்பித்தார்...

நம்ம ஊரில் ஒரு பெரிய பிரச்சனையால் நமக்கு பலவிதமான சங்கடத்தை ஏற்படுத்தியது . அந்த பிரச்சனையை பற்றி உங்களுக்கே தெரியும் நம்ம பெரியவரின் மகனும் .மருமகளும் .பண்ணையார் தோட்டம் பம்புசெட்டில் தங்கி வேலை செய்து வந்தது நம் எல்லோருக்கும் தெரியும் திடீரென்று ஒரு நாள் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் அவர்களை பற்றிய தகவல் இதுவரைக்கும் நமக்கு தெரியவில்லை .

பண்ணையாரும்...... நமது தோட்டத்தில் வேலை செய்த குடும்பம் காணாமல் போய்விட்டது என்று தெரிந்ததும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் . டவுனில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் தகவலை சொல்லி எழுதியும் கொடுத்திருக்கிறார்.
இதுவும் நமக்கு தெரியும் அதேசமயம் தன்னுடைய மகன்களை வாரத்தில் இரண்டு நாள் காணாமல் போன குடும்பத்தை தேடுவதற்காக அனுப்பிவைப்பார்......
பண்ணையார் மகன்களும் எந்த தயக்கமும் இல்லாமல் வாரத்தில் இரண்டு நாள் காணாமல் போனவர்களை தேடிக் கொண்டுதான் இருந்தார்கள் இதுவும் நம் அனைவருக்கும் தெரியும் .

முதலில் நாம் அனைவரும் காணாமல் போனவர்களைப் பற்றி சாதாரணமாக எடுத்துக்கொண்டு இருந்தோம் . நிச்சயம் என்றாவது ஒருநாள் அவர்கள் நம் ஊருக்கு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம்

அதனால் பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு மறுபடியும் கனகாவும் ஊமையன் அவனது மகன் இப்படி குடும்பத்தோடு பம்புசெட்டில் தங்கி வேலை செய்து வந்தார்கள்.

ஆனால் அவர்களும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போனதும் நமக்கு அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது அப்போதுதான் நமக்கு காணாமல் போனவர்கள் ஏதோ சதி திட்டத்தால் தான் காணாமல் போய்விட்டார்கள் என்று புரிந்து கொண்டோம் .
இப்படி ஒரே இடத்தில் இரண்டு குடும்பம் காணாமல் போனதால் நம்மூரில் சோகத்தை ஏற்படுத்தியது அதேபோல பண்ணையார் குடும்பத்திலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது . இதனால் பண்ணையாரின் மகன் திருமணம் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை இப்படி நம்மூரில் பண்ணையார் தோட்டத்தில் மர்மமான முறையில் இரண்டு குடும்பங்கள் காணாமல் போய்விட்டார்கள் இனிமேல் நாம் அனைவரும் இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும் என்று முத்தையா பொறுமையாக ஊர் மக்களிடம் எடுத்துச் சொன்னார்.

கூட்டத்தில் ஒரு கூலித் தொழிலாளி எழுந்து பேசினார்...

முத்தையா அண்ணே .....நம்ம எல்லோரும் பேசி ஏற்கனவே முடிவு செய்ததுதானே. காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை பண்ணையார் தோட்டத்தில் இருக்கும் பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்யக்கூடாது என்று இதே இடத்தில்தான் முடிவு செய்துகொண்டு நம்முடைய முடிவையும் பண்ணையாரிடம் தெரிவித்துவிட்டு வந்து விட்டோம் இப்போது இதைப்பற்றி மறுபடியும் என்ன முடிவு செய்வது என்று அந்த தொழிலாளி முத்தையா விடும் சொன்னார்.

சரி தம்பி நீ சொன்னபடியே காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்ய வேண்டாம் அதுவரைக்கும் பண்ணையார் தோட்டத்தில் தினமும் வேலை செய்து வீட்டுக்கு வந்தாலே போதும் என்று எடுத்துக்கொள்வோம்.
இப்போது நமது ஊரில் உள்ள அனைவருக்குமே பண்ணையார் தோட்டத்தில் வேலை இருக்கிறதா என்று முத்தையா ஊர் மக்களை பார்த்து கேட்டார்.

பாதிப் பேருக்குதான் வேலை இருக்கு மீதி பேருக்கு வேலை இல்லாமல் இருக்கிறார்கள்
ஆனால் பண்ணையார் மகன்கள் அனைவருக்குமே சமமாக கூலி கொடுக்கிறார்கள் ..
என்று ஒரு கூலித்தோழிலாளி முத்தையா விடம் சொன்னார்.

பண்ணையார் மகன்கள் ஏதோ நம் மீது உள்ள அக்கறையில் வேலை செய்யாதவர்களுக்கும் கூலி கொடுக்கிறார்கள் இதை நாமும் வாங்கிக் கொள்கிறோம் ஆனால் எத்தனை நாளைக்கு இப்படி பாதிப்பேர் வேலை செய்யாமலே கூலியை வாங்கிக் கொண்டு இருக்கமுடியும் அப்படி வாங்கினால் அது நாம் செய்வது நியாயம் தானா என்று முத்தையா சொன்னார்.

எங்களுக்கும் தர்மசங்கடமாக தான் இருக்கிறது வேலை செய்யாமலே கூலி வழங்குவது இருந்தாலும் சாப்பிடுவதற்கு வேறு வழி இல்லையே இனிமேல் வேலை செய்யாமல் கூலி வாங்க வேண்டாம் என்றாள் சொல்லுங்கள் .
இனிமேல் யாரும் வேலை செய்யாமல் கூலி வாங்க மாட்டோம் என்று ஒருவர் தொழிலாளி எழுந்து சொன்னார்.

நம்மைப் பொறுத்தவரை வேலை செய்துதான் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம் . பண்ணையார் குடும்பமும் நமக்கு இதுநள் வரைக்கும் வேலை இல்லை என்று சொல்லி யாரையும் திருப்பி அனுப்பியது கிடையாது அதேபோலத்தான் இப்போதும் பண்ணையார் குடும்பம் வேலை இல்லை என்று தெரிந்தும்
நமக்கு கூலி கொடுக்கிறார்கள் அவர்களின் நல்ல உள்ளத்தை நாம் என்னைக்குமே மறக்கக்கூடாது அதே சமயத்தில் அவர்களை தொடர்ந்து வேலை செய்யாமல் கூலி வாங்கினாள் அது அவர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் ஒரு நாள் யாராவது ஒருவர் அவர் குடும்பத்தில் இந்த பிரச்சனையை பற்றி பேசி பண்ணையாரின் மனதையும் சங்கடப் படுத்துவார்கள் அதனால் நாம் அனைவரும் இனிமேல் வேலை செய்ததற்கு மட்டும் கூலி வாங்க வேண்டும் அதற்காகத்தான் நான் இன்று உங்களை அழைத்தேன் இதற்கு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் இன்று எடுக்கப்போகும் முடிவு நமது ஊருக்கும் பண்ணையார் குடும்பத்திற்கும் நல்லதாகவே இருக்க வேண்டும் என்று முத்தையா சொன்னார்.

நீங்கள் சொன்னபடியே இனிமேல் பண்ணையார் தோட்டத்திற்கு பாதி பேர் மட்டும் வேலைக்கு செல்கிறோம் மறுநாள் மிதி பேர் வேலைக்கு செல்லட்டும்
இப்படி மாறி மாறி வேலைக்கு செல்லலாம் அப்போது பண்ணையார் மகன்கள் வேலை செய்யாதவர்களுக்கு கூலி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுகிறோம் என்று ஒரு தொழிலாளி சொன்னார்.

நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் .
வேலை செய்துதான் கூலி வாங்க வேண்டும் என்றுதான் சொன்னேனே தவிர .
பண்ணையார் மகன்கள் நம்மிது உள்ள அக்கறையில் அவர்கள் உதவி செய்கிறார்கள் அதை வேண்டாம் என்று சொன்னாள் அவர்களை அவமானம் படுத்துவது போல மாறிவிடும் .என்று முத்தையா சொன்னார்.

அப்படி என்றால் நாங்கள் என்னதான் செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்க அண்ணே... என்று ஒரு கூலித்தொழிலாளி எழுந்து சொன்னார்.

பம்பு செட்டில் தங்கி யாராவது வேலை செய்தாள் . இரவு முழுக்க நிலத்தில் தண்ணீர் பாய்ந்து காலையில் ஊர் மக்களுக்கு எல்லோருக்குமே வேலை கிடைக்கும் இதைதான் நான் சொல்ல வந்தேன் . நம்முடைய ஊரில் யாராவது ஒரு குடும்பம் பம்புசெட்டில் தங்கி வேலை பார்த்து ஊர் மக்கள் அனைவருக்குமே வேலை கொடுக்க வேண்டும் இதுதான் என்னோட திட்டம் என்றார் முத்தையா.

முத்தையாவின் பேச்சு அனைவருக்கும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது.

பம்புசெட்டில் தங்கி வேலை செய்தாள் காணாமல் போய்விடுகிறார்கள்
இந்த நிலைமையில் முத்தையா அண்ணன் ...எப்படி பண்ணையார் தோட்டத்தில் தங்கி வேலை செய்ய சொல்கிறாரே இந்த முடிவில் யாருக்கு விருப்பம் இருக்கும் என்று முணுமுணுத்தார்கள்.

நான் சொன்னதைப் பற்றி யாரும் பதில் சொல்லவில்லையே என்று முத்தையா கேட்டார்.

அண்ணே... பம்புசெட்டில் தங்கி வேலை செய்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால்தான் எல்லோரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் நீங்கள் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும் என்று சொல்வது எல்லோருக்கும் குழப்பமாக இருக்கிறது இதில் யாருக்குமே விருப்பமில்லை என்று ஒருவர் எழுந்து சொன்னார்.

அப்படி என்றாள் நமது ஊர் மக்கள் அனைவருக்கும் வேலை பண்ணையார் தோட்டத்தில் இருக்காது இப்படி ஒரு நிலைமையை நாம் ஏற்படுத்த வேண்டுமா என்று முத்தையா கேட்டார்.

அப்போது ஊர் மக்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டு மவுனமாக இருந்தார்கள்.

இரண்டு குடும்பம் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கும் இந்த சமயத்தில் அதே இடத்தில் மறுபடியும் தங்கி வேலை செய்ய சொன்னாள் எப்படி அண்ணே ....நீங்கள் சொல்வதைப் போலவே யாராவது ஒரு குடும்பம் பம்புசெட்டில் தங்கி வேலை செய்து வந்து . பிறகு அவர்களும் காணாமல் போனாள் அதற்கு யார் பொறுப்பு அதனால் இந்த முடிவை ஏற்பது எல்லோருக்கும் வருத்தமாக இருக்கிறது அண்ணே என்று ஒரு கூலித்தொழிலாளி சொன்னார்.

காணாமல் போனவர்கள் இதுவரைக்கும் போலீஸ் கண்களில் அகப்படவில்லை அதேபோல பண்ணையாரின் மகன்களுக்கும் அவர்கள் தென்படவில்லை
இப்படி நீண்ட நாட்களாக தேடிக்கொண்டு இருக்கும் அவர்களை நம் கிராமத்தில் உள்ளவர்கள் அவர்களை தேடுவதற்கு யாராவது முயற்சி செய்தோமா.

யாரும் முயற்சி செய்யவில்லை காரணம் அவரவர் குடும்ப பொறுப்பை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது .
அதனால் யாரும் காணாமல் போனவர்களை தேடுவதற்கு நம்ம ஊரில் யாரும் முயற்சி செய்யவில்லை . இப்படி இருக்கும் நம்முடைய குடும்ப சூழ்நிலை... காணாமல் போனவர்கள் எப்போது கிடைப்பது அதுவரைக்கும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யாமல் இருந்தால்
ஊர் மக்கள் அனைவரும் நிம்மதியாக குடும்பத்தை நடத்த முடியுமா ஸஸஸ எத்தனை நாளைக்குத்தான் பண்ணையார் குடும்பம் நமக்கு வேலை செய்யாமலே பணம் கொடுப்பார்கள் அதனால்தான் சொல்கிறேன் காணாமல் போனவர்களை தேடுவதற்கு பிறகு முடிவு செய்யலாம் . இப்போது யாராவது ஒரு குடும்பம் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று ஆணித்தரமாக முத்தையா சொன்னார்.

ஐயா எனக்கு ஒரு யோசனை படுது அதை நான் இந்தக் கூட்டத்தில் சொல்லலாமா என்று ஒரு கூலித்தொழிலாளி கேட்டார்.

எல்லோரின் விருப்பத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டத்தையே கூட்டி இருக்கிறோம் உன்னுடைய விருப்பத்தையும்
நீ தாராளமாக சொல்லலாம் என்று முத்தையா சொன்னார்.

ஐயா காணாமல் போனவர்களை தேடுவதற்கு எனக்கு ஒரு யோசனை சரியாக படுகிறது .
அது என்னன்னா நம்ம ஊரில் இருக்கும் சாட்டையடி சாமியாரின் சக்தி நமது ஊரில் உள்ளவர்களுக்கு அனைவருக்குமே தெரியும்
அவர் நம்ம ஊரிலுள்ள பேய்களை எல்லாம் விரட்டி அடித்தவர்
சில சமயங்களில் பேய்கள் நமது வீட்டின் அருகில் சிரித்து நம்மை பயமுறுத்தி கொண்டிருந்த சமயத்தில் அவர்தான் அந்த பேய்களை நடுரத்திரியில் விரட்டி அடித்தவர் அதேபோல அவர் நமது ஊருக்கு சோதனை காலம் வரப்போகிறது என்று சில நாட்களுக்கு முன்னால் சொல்லியிருந்தார்
இது எல்லோருக்குமே தெரியும் அவர் சொன்னபடியே ....கனகா குடும்பம் காணாமல் போனதால் நமது ஊருக்கு சோதனைக் காலம் வந்துவிட்டது இப்படி சக்திவாய்ந்த நமது சாட்டையடி சாமியாரை சந்தித்து காணாமல் போனவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு . அவர் சொல்லும் யோசனைப்படி அவர்களை தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள் அதன் பிறகு எந்த ஒரு பயமும் இல்லாமல் பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு எல்லோருக்குமே விருப்பம் இருக்கும் . பிறகு இந்த ஊருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று அந்த கூலித் தொழிலாளி பொறுப்போடு தனது விருப்பத்தை சொன்னார்.

நம்ம ஊரும் பண்ணையார் குடும்பமும் சோகத்தில் இருப்பதே காணாமல் போன குடும்பங்கள் கிடைக்கவில்லையே என்று நினைத்துதான் . இந்த விஷயம் சாட்டையடி சாமியாருக்கு தெரியாதா ... அவருக்கு நம் ஊர் மீது அக்கறை இருந்தால் அவரே காணாமல் போனவர்களைப் பற்றி விபரத்தை நம்மிடம் கூறலாமே... இந்த ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகுது என்று மட்டும் நாம் கேட்காமலே நம்மிடம் சொன்னவர்.. காணாமல் போனவர்களை பற்றி எந்த தகவலையும் அவர் இதுவரைக்கும் சொல்லாதது ஏன்.

அதனால் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் .
ஒருவரை உருவாக்குவதும் அழிப்பதும் கடவுளின் சக்தியாள் மட்டும்தான் முடியும்
இதில் மனிதர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது .
நான் சாட்டையடி சாமியாரை குறை சொல்லவில்லை அவர் சில குடும்பங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுத்திருக்கிறார் என்பதும் எனக்கு தெரியும் இருந்தாலும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது நம்ம தான் முயற்சி எடுக்க வேண்டும் .இதில் மந்திர சக்திக்கு எந்த வேலையும் கிடையாது அதனால் பண்ணையார் தோட்டத்தில் இருக்கும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்தால்தன் இனிமேல் நம்மா ஊருக்கு நிம்மதி பிறக்கும் என்று முத்தையா மறுபடியும் ஒரு அழுத்தமாக சொன்னார் ஊர் மக்களிடம்.

நீங்கள் சொல்வது எங்களுக்கு இப்போதுதான் நன்றாக புரிகிறது அண்ணே... நம்ம ஊரில் யாராவது பம்புசெட்டில் வேலை செய்தாள் அனைவருக்குமே வேலை கிடைக்கும் அதே சமயம் காணாமல் போனவர்களை பற்றியும் ஒரு முடிவு செய்வதற்கு வசதியாக இருக்கும் .
நம்ம குடும்பம் சந்தோசமாக இருந்தால் தான் காணாமல் போனவர்களை பற்றி விசாரிப்பது சரியாக இருக்கும் .
அதற்கு நம் அனைவரும் தினமும் பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் .
அதற்கு யாராவது ஒரு குடும்பம் பம்புசெட்டில் வேலை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று ஒரு கூலித்தொழிலாளி சொல்லிவிட்டு அமர்ந்தார்.

ஊர் மக்கள் முணுமுணுக்க பேசிக்கொண்டார்கள்..

முதலில் யார் குடும்பம் பம்புசெட்டு வேலைக்கு செல்வது என்று ஒருவரையொருவர் பேசிக்கொண்டு எந்த முடிவையும் எடுக்காமல் முழித்தார்கள்.

நீங்கள் இந்த முறை ..பம்புசெட்டில் வேலை செய்யும் போது உங்களை கவனமாக பார்த்துக் கொள்வார்கள் பண்ணையார் மகன்கள். அவர்களுக்கும் இப்போதுதான் ஒரு பொறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது நம்முடைய தோட்டத்தில் இரண்டு குடும்பங்கள் காணாமல் போனதால் சந்திரனின் திருமணம் நின்று விட்டது அதனால் இந்த முறை அங்கு சென்று தங்கி வேலை செய்யும் குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக்கொள்ளா வேண்டும் என்று.

அதனால் நீங்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம் யாராவது பம்புசெட்டில் வேலை செய்வதற்கு முன் வாருங்கள் என்று மறுபடியும் ஊர் மக்களை பார்த்து சொன்னார் முத்தையா.

ஊர் மக்கள் எல்லோருக்குமே பயம் இருந்தாதால் யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு முன்வரவில்லை. எல்லோரும் அமைதியாக தலை குனிந்து கொண்டார்கள் அப்போது ஒரு பெரியவர் எழுந்து சொன்னார்.

ஐயா எல்லோருக்குமே பயம் இருக்கிறது என்பது அனைவரும் அமைதியாக இருப்பதில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் அதனால் நான் என் மனதில் பட்டதை சொல்கிறேன் ஆனால் நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்தப் பெரியவர் சொன்னார்.

நிச்சயம் ஊருக்கு நல்லதை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாள் உன்னுடைய இந்த யோசனை கூட்டத்தில் நிறைவேறும் தயங்காமல் சொல்லு தம்பி என்றார் முத்தையா.

நம்ம ஊரே பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போவதற்கு பயந்து கொண்டு இருந்த சமயத்தில் .
உங்கள் மகன் . இந்த ஊர் செல்லப்பிள்ளை ...சங்கர்தான் அவனுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றான் . பிறகு எல்லோருக்கும் பயம் தெளிந்து ஒவ்வொரு குடும்பமாக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றோம் இப்போது எல்லோருக்கும் ஒரு அளவுக்கு பயம் தெளிந்து விட்டது
அதேபோல இப்போது பண்ணையார் தோட்டத்தில் இருக்கும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு ஊர்மக்கள் எல்லோருக்குமே பயம் இருக்கிறது என்பதை நீங்களே இப்போது புரிந்து கொண்டீர்கள் . அதனால் ஏற்கனவே ஊர்மக்களின் பயத்தை போக்கிய சங்கர் . இப்போதும் இந்த ஊர் மக்களின் பயத்தை அவன்தான் தீர்த்துவைக்க வேண்டும் . முதலில் சங்கர் அவன் குடும்பத்தோடு பம்புசெட்டில் தங்கி மூன்று மாதங்கள் வேலை செய்யட்டும் . பிறகு அடுத்த மூன்று மாதத்திற்கு இன்னொரு குடும்பம் வேலை செய்வார்கள் இப்படி மூன்று மாதத்திற்கு ஒரு குடும்பம் பம்புசெட்டில் வேலை செய்து வரலாம் . அதன் பிறகு எல்லோருக்குமே பயம் என்னைக்கு தெளிகிறதோ அப்போது விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து பம்புசெட்டில் தங்கி வேலை செய்யட்டும் . அதன் பிறகு காணாமல் போனவர்களை தேடுவதற்கான நல்ல முடிவை தீர்மானிக்கலாம் என்று அந்தப் பெரியவர் சொன்னார்.

உடனே ஊர்மக்கள் மெதுவாக தலை நிமிர்ந்து முத்தையாவின் பதிலை எதிர்பார்த்தார்கள்.

ஊர் மக்கள் தலைநிமிர்ந்து பார்த்த போது ...முத்தையா தலை குனிந்து கொண்டார் . அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.


முத்தையா அண்ணனுக்கு தன்னுடைய மகனை பம்புசெட்டு வேலைக்கு அனுப்புவதில் விருப்பம்மில்லை அதனால் தான் அவர் அமைதியாக இருக்கிறார் என்று முணுமுணுத்தார்கள்.
ஊர் மக்கள்.

அப்பா எதற்காக அமைதியாக தலைகுனிந்து கொண்டார் என்ற குழப்பத்தோடு சங்கர் ரேகாவும் பதட்டமாக இருந்தார்கள்.

இனிமேல் நீங்கள் சொல்லும் வார்த்தையில் தான் முடிவு ஏற்படும் என்று கூட்டத்திலிருந்த ஒருவர் முத்தையாவிடம் சொன்னார்.

நீங்கள் என்னிடம் சொன்ன கருத்து நியாயமானதுதான் . ஆனால் சங்கர் என் மகனாக மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் நான் அவனுக்கு கட்டளையிட்டுருப்பேன் ஆனால் அவன் ஒரு பெண்ணுக்கு கணவன் . அவனுக்கென்று ஒரு குடும்பம் . அதனால் நீங்கள் சொன்ன கருத்துக்கு சங்கரும் ரேகாவும்தான் பதில் சொல்ல வேண்டும் என்று முத்தையா சங்கரை பார்த்தபடி சொன்னார்.

சங்கர் சிறிதும் தாமதிக்காமல் எழுந்து நின்று . நான் பம்புசெட்டு வேலைக்கு என் மனைவியோடு செல்வதற்கு எனக்கு விருப்பம் அதேசமயம் எனக்கு பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதில் எந்த ஒரு பயமும் கிடையாது . நான் மூன்று மாதங்கள் வரைக்கும் வேலை செய்ய போவதில்லை . இந்த ஊர் மக்களுக்கு எல்லோருக்குமே எப்போது பயம் தெளிகிறதோ அதுவரைக்கும் நான் பம்புசெட்டில் தங்கி வேலை செய்கிறேன் .
என்று தைரியமாக குரல் உயர்த்தி சொன்னான் சங்கர்.

முத்தையாவின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது அப்போது அவர் ஊர் மக்களிடம் சொன்னார் என் மகன் என்னைப்பலவே ஊர் மக்களின் நன்மைக்காக பாடுபடுபவன் என்பது இப்போது எனக்கு புரிந்து விட்டது . இனிமேல் நீங்கள் அனைவரும் சந்தோஷமாக பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்து .
பழையபடி பண்ணையார் தோட்டத்தை செழிப்பாக மாற்ற வேண்டும் என்று சொல்லி கூட்டத்தை முடித்து வைத்தார் முத்தையா.

சங்கரின் பேச்சை கேட்டதும் இலட்சுமி அம்மாளுக்கு சற்று பயம் ஆரம்பமானது . இப்போதுதான் நம் மகளுக்கு திருமணம் முடிந்தது அதற்குள் மர்மமாக காணாமல் போன குடும்பம் வேலை செய்த இடத்தில் நம் மகளும் மருமகனும் வேலை செய்யப் போகிறார்களா என்று நினைத்து அவள் மனம் சற்று படபடப்பாக இருந்தது.

கடைசியில் ..இன்று ஊரே ஒன்றுகூடி நம் குடும்பத்தை அந்த பம்புசெட்டு வேலைக்கு அனுப்ப முடிவு செய்து விட்டார்களே அப்படியென்றால் நாமும் ..மாமாவும் காணாமல் போய் விடுவோமா
என்ற பயம் ரேகாவுக்கு ஏற்பட்டது.


ரேகாவின் பயம் தொடருமா ... இல்லை சங்கரின் துணிச்சலும் தைரியமும் வெற்றி பெறுமா... என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...


தொடரும்.....


கதையின் கருத்துக்களை வரவேற்க படுகிறது....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ....22👇


நேத்து ராத்திரி இந்த முத்தையா கிழவன் தலைமையில் கூட்டம் நடந்தது . அதைப்பற்றி ஊருல விசாரித்திர்களா என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் கேட்டார்.

விசாரித்தோம் குருவே... எல்லாமே நமக்கு எதிராகவே கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள் .இனிமேல் நாம அமைதியா இருந்தா நம்மள பத்தி யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். இப்பதான் நம்முடைய செல்வாக்கு இந்த ஊருல பெருமையா பேசிக்கிட்டு இருந்தாங்க . ஆனா ...ராத்திரி நடந்த கூட்டத்தில் நம்மை கேவலமாக பேசி இருக்கிறார் அந்த முத்தையா கிழவன் என்று ஒரு சிஷ்யன் சொன்னான்.

என்ன சொல்றீங்க ....நம்மள பத்தி அப்படி என்ன கேவலமா
பேசிநங்க கூட்டத்தில அதுக்காகவா முத்தையா கூட்டத்தை கூட்டினார் என்று சாட்டையடி சாமியார் சிஷ்யனிடம் கேட்டார்.

காணாமல் போன இரண்டு குடும்பங்களை கண்டுபிடிப்பதற்கு நம்முடைய மந்திர சக்தியால் அவர்களை சீக்கிரமாகவே கண்டுபிடித்து விடலாம் என்று நம்மைப் பற்றி ஒருவர் பெருமையாக சொல்லியிருக்கிறார் .
அதற்கு அந்த முத்தையா கிழவன் காணாமல் போனவர்களை நாமதான் தேடி கண்டுபிடிக்க வேண்டும் . இதற்கெல்லாம் மந்திர சக்தியால் ஒன்றும் செய்யமுடியாது என்று நம்மைப் பற்றி இப்படி கேவலமாக பேசியிருக்கிறார் ..
அந்தக் கிழவன் .
அதனால் நீங்கள் இனிமேல் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது .
என்று சிஷ்யன் சொன்னான்.

நம்மளை பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறான் இந்த முத்தையா கிழவன். இவர்களிடம் நம்ம கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும் . பேசட்டும் என்னைக்காவது ஒருநள் நம்மிடம் வந்து நிற்பான் அந்தக் கிழவன் . அன்னைக்கு வச்சுக்கிறேன் என்று சாட்டையடி சாமியார் சற்று விரைப்பாக சொன்னார்.

குருவே எல்லாத்துக்கும் நேரம் வரட்டும் என்று அமைதியா இருந்தா . நம்முடைய தொழிலுக்கு நல்லா இருக்காது எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தால்தான் . நம்மைப் பற்றி ஊருல பேசிக்கொண்டே இருப்பாங்க குருவே
இப்போ ஊர் மக்கள் எல்லோரும் சந்தோசமாக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போறாங்க பம்புசெட்டில் தங்கி வேலை செய்யறதுக்கு சங்கரும் அவனோட மனைவியும் இன்னைக்கு போகப் போறாங்க இனிமேல் பண்ணையார் தோட்டமும் இந்த ஊர் மக்களும் செழிப்பாக வாழ போறாங்க ஆனால் நீங்கள் சொன்னபடி இந்த ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகுது என்று சொல்லி இருந்திங்க . ஆனால் அது இந்த ஊர் மக்களுக்கு கொஞ்ச நாள் தான் சோகத்தில் இருந்தார்கள் மறுபடியும் இந்த முத்தையா கிழவன் முயற்சியால் நம்முடைய வார்த்தையை பொய் என்று சொல்வதைப்போல இந்த ஊர் மக்களை மறுபடியும் சந்தோஷமாக வாழ்வதற்கு வழி செய்துவிட்டான் இந்த கிழவன் அதனால் நீங்கள் உடனே ஒரு முடிவு செய்து. இந்த ஊர் மக்கள் நம்மைப் பற்றி பேசும்படி மறுபடியும் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்று மற்றொரு சிஷ்யன் சொன்னான்.

நம்முடைய நிலைமை இந்த அளவுக்கு வந்து விட்டதா....
என்ன செய்யறது ஊர் என்றால் ஒருவன் நம்மை மதிப்பான் இன்னொருவன் முறைப்பான் இன்னொருவன் கண்டுகொள்ளவே மாட்டான் இப்படி தான் இருக்கும .. அதனால் பொறுமையாக இருந்து நம்முடைய திட்டத்தை செயல்படுத்தனும் இல்லையென்றால் நமக்குத்தான் பாதிப்பு . என்று சற்று சலிப்போடு சொன்னார் சாட்டையடி சாமியார்.

என்ன குருவே இப்படி ஏன் பயப்படுறீங்க நாங்க இருக்கும்போது உனக்கு என்ன பயம் நீங்கள் நாளைக்கே சொல்லுங்க . இன்னும் கொஞ்ச நாள்ல மறுபடியும் இந்த ஊருக்கு சோதனை காலம் வரப்போகிறது என்று . அப்போதுதான் இந்த ஊரில் நமக்கு மதிப்பு இருக்கும் என்று மற்றொரு சிஷ்யன் சொன்னான்.

ஏன்டா... இப்படி தப்பு தப்பா ஐடியா கொடுக்குறீங்க
நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா
நான் இந்த நேரத்தில் நீங்கள் சொல்வதைப் போல இந்த ஊருக்கு சோதனைக்காலம் இன்னும் கொஞ்ச நாளில் வரப்போகிறது என்று சொன்னால். நிச்சயம் சோதனைக்காலம் இந்த ஊருக்கு வராது ..நம்ம மூணு பேருக்கும் தான் வரும் ஏனென்றால் சங்கர் நம்ம சொன்ன வார்த்தைக்கு உடனே வந்து நம்மை மூன்று பேரையும் . மிதி மிதி என்று மிதிப்பான் அவனுடைய சுறுசுறுப்பை பற்றி உங்களுக்கு தெரியும். அவனுடைய அடியும் அதே போல தான் இருக்கும் பார்ப்பதற்கு ஒல்லியாய் இருக்கான் என்று நினைக்காதீங்க
இந்த நேரத்துல நம்ம கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இருப்பதுதான் நல்லது . என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்.

ஊருல ஏமாத்துற பணத்தை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு எங்களுக்கு மட்டும் 200 ரூபாய் மட்டும் கொடுக்கிற ...
அதனால் உன்னை ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கவிடலாம் என்று நினைத்தால் . இந்த ஆளு உஷாராக இருக்கிறானே .
என்று சிஷ்யர்கள் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.


முத்தையாவின் காலில் விழுந்து சங்கரும் ரேகாவும் ஆசீர்வாதத்தை பெற்றார்கள்.🎎

அப்பா நாங்கள் போயிட்டு வருகிறோம்.. இனிமேல் பண்ணையார் தோட்டத்தை நல்லபடியாக கவனித்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு அதே போல காணாமல் போன 2 குடும்பத்தையும் கூடிய சீக்கிரத்தில் இதேபோல ஊர் மக்களை கூட்டி அவர்களை கண்டுபிடிப்பதும் நம்முடைய பொறுப்பு நாங்கள் இருவரும் பம்புசெட்டில் இருந்தாலும் எங்களுக்கு அதனால் எந்த ஒரு மன கஷ்டமும் கிடையாது அதனால் நீங்கள் கவலை இல்லாமல் சந்தோஷமாக இங்கே இருங்கள் தேவைப்பட்டால் நானும் ரேகாவும் அடிக்கடி வந்து செல்கிறோம் என்று முத்தையா விடம் பாசமாக சங்கர் சொன்னான்.

அம்மா... தாத்தாவை நல்லபடியா பார்த்துக்குங்க அவருக்கு சுடுதண்ணி வச்சு உடம்புக்கு ஊத்தி விடுங்க .. பொழுதோடு அவருக்கு சூடா சாப்பாடு செஞ்சு கொடுங்க அப்பத்தான் அவருக்கு ஜீரணமாகும்
நான் அடிக்கடி வந்து உங்களையும் தாத்தாவையும் பார்த்து விட்டு செல்கிறேன் என்று ரேகா தனது அம்மாவிடம் சொன்னாள்.

அப்போது லட்சுமி அம்மாள் ரேகாவை கட்டி அணைத்துக் கொண்டால் . பிறகு ரேகாவ சற்று தனியாக அழைத்துக் கொண்டு பேசினாள்.

அம்மாடி ...நீங்கள் இருவரும் அந்த பம்புசெட்டு வேலைக்கு போவதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை . இருந்தாலும் முத்தையா அப்பா சொன்ன வார்த்தைக்கு எதிராக பேசவும் எனக்கு மனம் இல்லை .
அதனால்தன் நான் அமைதியாக இருக்கிறேன் . இப்படிப்பட்ட நல்ல குடும்பத்தில் நீ மருமகளாக ஆனதே எனக்கு பெரும் சந்தோஷம் . இப்படி ஒரு வாழ்க்கையை உனக்கு ஏற்படுத்தி கொடுத்தவர் முத்தையா அப்பாதான் அதனால் தான் அவரின் பேச்சுக்கு நான் மதிப்பு கொடுத்து அமைதியாக இருக்கிறேன் .
இல்லை என்றால் எனக்கு அந்த பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு துளியும் விருப்பம் இல்லை . என்ன செய்வது கடவுள் உனக்கு நல்லதை கொடுப்பார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு . என்று லட்சுமி அம்மாள் ரேகாவிடம் மெதுவாக தனது விருப்பத்தை சொன்னாள்.

நீ ஒன்றும் கவலைப்படாதே அம்மா . எங்களுக்கு ஒரு குறையும் இருக்காது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை அவர் சமாளித்து விடுவார் நீங்கள் ஒன்னும் பயப்படாதீங்க அம்மா என்றாள் ரேகா.

தம்பி... ஆர்வத்தில் இரவு நேரத்தில் கண்டபடி வேலை செய்து கொண்டிருக்கும் .
நீதான் தம்பியை பொறுப்போடு பார்த்துக்கொள்ள வேண்டும் தம்பி ஏதாவது வேலையில் அவசரப்பட்டால் நீ தான் அதுக்கு புரிய வைக்க வேண்டும்
எந்த ஒரு விஷயத்திலும் இனிமேல் அவசரப்படக் கூடாது ஏனென்றால் இப்போது இருக்கும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது ..
ஊரில் உள்ளவர்கள் எல்லோருமே பயந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த பம்புசெட்டில் வேலைக்கு செல்வதற்கு ஆனால் நீங்கள் இருவரும் அந்த பம்பு செட்டின் வேலைக்கு போகவேண்டும் என்ற நிலைமை உங்களுக்கு வந்து விட்டது .. நீங்கள் அதனால் அலட்சியமாக இல்லாமல் கவனத்தோடு இருக்கணும் என்று லட்சுமி அம்மா ரேகாவிடம் சொன்னாள்.

நீ கவலைப் படாம ..தாத்தாவை பாத்துக்குங்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது .
என்று தனது அம்மாவை சமாதானம் செய்துவிட்டு ரேகா சங்கரோடு புறப்பட தயாரானாள்.



பண்ணையாரும் தனது மருமகள் சாந்தியும் பூஜை அறையில் மும்முரமாக சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அம்மாடி ..முதல்ல ஆரத்தியை உன் கணவனுக்கும் அவனுடைய தம்பிகளுக்கும் காட்டிவிட்டு வா இனிமேல் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்க சொல் என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.

தாம்புல தட்டில் கற்பூர ஆரத்தியை எடுத்தபடி சாந்தி சந்தோஷமாக பக்கத்து அறையில் இருக்கும் தீனாவிடம் காண்பித்து தீனாவிற்கு நெற்றியில் திருநீரு வைத்துவிட்டு .
அடுத்த அறையில் இருக்கும் சந்திரனுக்கும் திருநீறு நெற்றியில் இட்டு விட்டு ஆரத்தியும் காண்பித்தாள் .
பிறகு பரந்தாமனுக்கு தனது மகன் சுரேஷுக்கும் திருநீறை நெற்றியில் வைத்து விட்டு மீண்டும் பூஜை அறைக்கு வந்தாள் சாந்தி.

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது மாமா ...நின்றுபோன நம்முடைய விவசாயம் மறுபடியும் ஆரம்பமாகி விட்டது .
இதேபோல சந்திரனின் திருமணத்தையும் கூடிய சீக்கிரத்தில் ஆரம்பிக்க வேண்டும் மாமா ..என்று பண்ணையாரிடம் சொன்னால் சாந்தி.

எனக்கு கூட நம்பிக்கையே இல்லை. இவ்வளவு சீக்கிரத்தில் ஊர் மக்கள் வேலைக்கு வருவார்கள் என்று எல்லாம் என் நண்பன் முத்தையாவின் முயற்சியால்தான் நம்முடைய தோட்டம் மறுபடியும் பழைய நிலைமைக்கு வரப்போகுது. என் நண்பன் முத்தையாவை பொறுத்தவரை நம்முடைய தோட்டம் செழிப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய குறிக்கோள் .
எனக்கு எப்படி ஊர் மக்கள் மீது அக்கறையோ அதேபோல அவனுக்கு நம்ம தோட்டத்தின் மீது அக்கறை. ஏனென்றால் ஆரம்ப காலத்திலிருந்தே அவனுக்கு நம்முடைய தோட்டத்தைதான் பெரிதாக நினைப்பான் விவசாயத்தில் எந்த ஒரு சின்ன பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது .
அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் நம்முடைய விவசாய தோட்டத்தைப் பற்றிதன் பெருமையாக பேசுவார்கள் ஆரம்பத்திலிருந்தே .
அதேபோல எந்த குறையும் இல்லாமல் இந்த தோட்டம் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் முத்தையாவின் குறிக்கோள் அவனுடைய யோசனைப்படிதான் இப்போது ஊர் மக்கள் பயமில்லாமல் வேலைக்கு வருகிறார்கள் எப்படியோ ஒவ்வொரு பிரச்சனையும் இதேபோல சரியாகி விட்டால் நன்றாக இருக்கும் என்று பண்ணையார் சொன்னார்.

நீங்க கவலையே படவேண்டாம் மாமா ..நமக்கு இனிமேல் நல்ல காலம் தான் என்று சாந்தி சந்தோஷமாக சொன்னாள்.

சரி சரி நேரமாச்சு இந்நேரம் என் நண்பனின் மகன் சங்கரும் ரேகாவும் இந்நேரம் பம்பு செட்டுக்கு வந்துவிட்டு இருப்பார்கள் இவனுங்க இன்னும் இங்கேயே இருக்கிறானுங்க .. உடனே சீக்கிரம் அனுப்பி வை என்று பண்ணையார் அவசரத்தோடு சொன்னார் சாந்தியிடம்.



பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் ஒரு புதிய உற்சாகத்தோடு தோட்டத்திற்கு மூவரும் வழக்கம் போல ஒரே பைக்கில் சென்றார்கள்.


பண்ணையார் தோட்டம்.. பம்பு செட்டின் அருகில் சங்கரும் ரேகாவும் வந்து நின்றார்கள்
கையில் துணிமணிகள் மற்றும் சிறிது பாத்திரங்களோடு இருவரும் பம்புசெட்டில் அருகில் நின்றார்கள். முதல் முறை பண்ணையார் தோட்டம் பம்பு செட்டுக்கு ரேகா வந்ததால்.
அப்போது ரேகா பம்பு செட்டின் சுற்றி இருக்கும் பலா மரம் தென்னை மரம் மற்றும் பெரிய கிணறு பண்ணையாரின் மனைவி படம் வைத்த பூஜையறை இவற்றையெல்லாம் ரேகா ரசித்தபடி இருந்தாள்🏠🏡🌋🏝️🌻🌱🌳......

பம்பு செட்டை பார்த்ததும்.. சங்கருக்கு கனகாவும்
ஊமையனும் சந்தோஷமாக இங்கு குடும்பம் நடத்தியதை நினைத்துப்பார்த்தான் சங்கர் கனகாவும் ஊமையனும் வயல் பகுதியில் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடி காதல் செய்ததையும் நினைத்துப்பார்த்தால் சங்கர் அதேசமயம் இதற்கு முன்னாடி காணாமல் போன அந்தப் பெரியவரின் மகனும் .மருமகளும் இவர்களைப் போலவே சந்தோஷமாக குடும்பம் நடத்தியதை நினைத்துப்பார்த்தான் சங்கர் அப்போது அவனுக்கு மனம் கவலைப்பட ஆரம்பித்தது
இப்படி இரண்டு குடும்பம் சந்தோஷமாக இங்கு குடும்பம் நடத்தி வந்தார்கள் எதனால் இந்த இரண்டு குடும்பம் திடீரென்று காணாமல் போனார்கள் என்ற விஷயம் இதுவரைக்கும் மர்மமாகவே இருக்கிறதே
அப்படி என்னதான் அவர்களுக்கு எங்கு பிரச்சனை ...
என்று மனதுக்குள் யோசித்தான் சங்கர்.

சங்கர் அமைதியாக எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்த ரேகாவுக்கு... மாமா தனியாக வந்து விட்டோம் என்று நினைத்து வருத்தப்படுகிறார் அதனால் தான் இப்படி மௌனமாக இருக்கிறார் என்று மனதில் நினைத்துக்கொண்டு சங்கரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள் ரேகா.

என்ன மாமா ...தாத்தாவை விட்டு பிரிந்து வந்து விட்டோம் என்று நினைத்து கவலையாக இருக்கிறதா என்றாள் ரேகா.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை புள்ள . இந்த பம்புசெட்டை பார்த்ததும் இதுக்கு முன்னாடி இங்கே இருந்தவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததை நினைத்து பார்த்தேன் பாவம் அவர்களுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சோதனை வந்துவிட்டதே என்று நினைத்து மனசுக்கு கஷ்டமாக இருக்குது புள்ள என்று சங்கர் சொன்னான்.

நிச்சயம் அவங்களுக்கு எதுவும் நடந்திருக்காது மறுபடியும் அவங்க சந்தோஷமா இந்த ஊருக்கே வந்து வாழத்தான் போறாங்க அதனால நீங்க இப்போது அதை நினைத்து கவலைப்படாதீங்க என்று ரேகா சொல்லிக்கொண்டு இருக்கும்போது பரந்தாமனும் அவனது தம்பிகளும் சற்று தூரத்தில் 🏍️பைக்கில் வருவதை கவனித்தால் ரேகா.

வழக்கம்போல களத்துமெட்டில் பைக்கை நிறுத்திவிட்டு பரந்தாமனும் அவனது தம்பிகளும் சுறுசுறுப்பாக பம்பு செட்டை நோக்கி வந்தார்கள்.

சங்கரையும் ரேகா வையும் பார்த்து பரந்தாமன் தனது இரண்டு கைகளால் கும்பிட்டு பாசத்தோடு அவர்களுக்கு மரியாதை கொடுத்தான் சந்திரனும் தீனாவும் அவர்களும் இருககளால் கும்பிட்டு மரியாதை கொடுத்தார்கள்.

பதிலுக்கு சங்கரும் ரேகாவும் இருகைகளால் கும்பிட்டு மரியாதை கொடுத்தார்கள் அப்போது ரேகாவுக்கு பண்ணையாரின் மகன்களை பார்த்ததும் அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தது .
இதற்கு முன்னாடி அவள் இவர்களிடம் பேசியது கிடையாது அதனால் அவளுக்கு சற்று கூச்சத்தோடு நெளிந்தபடி நின்றாள் ரேகா.

சங்கர்... உன்னை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது . நீ இங்கு பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய மட்டும் வரவில்லை எங்கள் குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்கு தான். நீ துணிச்சலோடு இங்கு வந்து இருக்கிறாய் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்
உன்னால்தான் ஏன் குடும்பத்திலும் இந்த ஊருக்கும் நல்லது நடக்கப்போகிறது என்று பரந்தாமன் உண்மையான சந்தோசத்தில் பூரிப்போடு சொல்லிக்கொண்டே... சங்கரை கட்டி அணைத்துக் கொண்டான்.

ஐயா... இனிமேல் நான் இந்த விவசாய நிலங்களை பொறுப்போடு கவனித்து நம்முடைய பெருமையை காப்பாற்றுவேன் .என்று சங்கர் பரந்தாமனிடம் சொன்னான்.

உன் வார்த்தை பலிக்கட்டும் சங்கர் என்று சொல்லிவிட்டு தனது இடுப்பில் வைத்திருந்த பம்புசெட்டின்🌡️ சாவியை எடுத்து சங்கரிடம் கொடுத்தான் பரந்தாமன்.

நீ இங்கு வேலை செய்து வந்ததால் உனக்கு என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் நான் உனக்கு எதுவும் சொல்ல தேவையில்லை அதனால் நீ உன் விருப்பப்படி எங்கு சந்தோஷமாக உன்னுடைய வேலையை செய்யலாம்
உனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாசத்தோடு சங்கரை பார்த்து சொன்னான் பரந்தாமன்.

பிறகு வழக்கம்போல தம்பிகளை தோட்டத்தை சுற்றிப்பார்க்க சொல்லி அனுப்பி வைத்தான் பரந்தாமன் . பிறகு அவன் பம்புசெட்டில்🏠🏡 மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்பு நின்று வேண்டினான்.

அம்மா ...என் விருப்பத்தை நீ எப்படியாவது நிறைவேற்றி வைத்து விடுகிறாய் என்னை எந்த ஒரு கவலையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாய் நான் உன்னிடம் வேண்டியதை போலவே எனக்கு நீ எல்லாம் நன்மையும் எனக்கு அளித்து விட்டாய் அதேபோல நான் உன்னிடம் சொன்னது போல தம்பிகளையும் சந்தோசமாக பார்த்துக்கொள்வேன்.
அதேபோல இனிமேல் எல்லோரிடமும் பாசமாக பழகுவேன் ஏனென்றால்
இனிமேல் என் லட்சத்திற்கு எந்த ஒரு தடங்கலும் ஏற்படாது .
நான் நினைத்தபடியே இந்த அனைத்து நிலங்களையும் நானே அனுபவைப்பேன் இதில் கிடைக்கும் வருமானத்தையும் நானே அனுபவிப்பேன் இதில் இனிமேல் எந்த பிரச்சனையும் ஏற்படாது இதேபோல நிலைமையை எனக்கு நீ ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டே இருக்கணும் தாயே .
என்று பரந்தாமன் தனது தாய் படத்தின் முன்னால் மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.
பிறகு யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டியை பார்ப்பதற்கு மெதுவாக சென்று தாய் படத்தின் பின்னால் இருக்கும் பெரிய பணப்பெட்டியை மெதுவாக திறந்து பணம் சரியான அளவில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மெதுவாக பணப் பெட்டியை மூடி பூட்டை பூட்டி விட்டு கீழே இறங்கி வெளியே வருவதற்கு திரும்பினான் .................அப்போது அவன் மனம் இடி விழுந்ததை போல அதிர்ச்சி அடைந்து அப்படியே சிலை போல நின்று விட்டான்........ வாசலில் சங்கரும் ரேகாவும் நின்றிருப்பதை பார்த்து...


சங்கர் வந்த சில நிமிடத்தில் பரந்தாமன் மனம் இடி விழுந்ததை போல ஆனது
இனி வரப்போகும் நாட்கள் எப்படி அமைய போகிறது பரந்தாமனுக்கு... என்று
பொறுத்திருந்து பார்க்கலாம்.....


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்... 23 👇


பம்புசெட்டில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்பக்கமாக ஒளித்து வைத்திருக்கும் பணப்பெட்டியை பரந்தாமன் சரி பார்த்து விட்டு வெளியே போவதற்கு திரும்பினான் அப்போது ரேகாவும் சங்கரும் வாசலில் நின்றிருப்பதை பார்த்து பரந்தாமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது .
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் அப்படியே சிலைபோல நின்றான். இருவரும் நம் பணப்பெட்டியை சரி பார்த்ததை பார்த்துவிட்டார்கள் என்று நினைத்து அதிர்ந்து போனான்.

அப்போது பரந்தாமன் சங்கரையும் ரேகாவையும் கூர்ந்து கவனித்தான் அப்போது இருவரும் . கண்களை மூடியபடி வேண்டிக்கொண்டு இருந்தார்கள் இதை பார்த்ததும் பரந்தாமனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது . இருவரும் நம் பணப்பெட்டியை சரி பார்த்ததை கவனித்து இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது .

சிறிது நேரத்தில் சங்கரும் ரேகாவும் கண்திறந்து பார்த்தார்கள் .
எதிரே பரந்தாமன் நின்று கொண்டிருந்தான்.

ஐயா ..இனிமேல் உங்கள் அம்மாதான் எங்களை இங்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அதனால்தான் நாங்கள் இருவரும் உங்கள் அம்மாவை தெய்வமாக நினைத்து வேண்டிக் கொண்டோம் என்று சங்கர் பரந்தாமனிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்... மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ரேகாவை அழைத்துக்கொண்டு இருவரும் உற்சாகமாக விவசாய வேலையை ஆரம்பித்தார்கள்....

பரந்தாமன் பூஜை அறையில் இருந்து வெளியே வந்து வழக்கம்போல கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தபடி இருந்தான்.

சந்திரனும் தீனாவும் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு பம்புசெட்டின் அருகில் வந்து நின்றார்கள் பரந்தாமனை பார்த்தபடி.....

தம்பி ..சங்கரும் ரேகாவும் நம்முடைய பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்காக வந்திருக்கிறார்கள் .
அவர்களை நாம் நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பரந்தாமன் சந்திரன்னிடமும் தீணாவிடம் சொன்னான்.

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா ....இந்த ஊரே பயந்து கொண்டிருக்கும் சமயத்தில் சங்கரும் ரேகாவும் துணிச்சலோடு இங்கு வேலை செய்ய வந்திருப்பது எங்களுக்கும் சந்தோஷம் தான். அவர்கள் நம்மிது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதேபோல நாமும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் அண்ணா என்று சந்திரன் சொன்னான்.

ஆமாம் தம்பி ...இனிமேல் விவசாயத்தில் எந்த ஒரு குறையும் இருக்கக்கடாது என்று சொல்லிவிட்டு மூவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

நாட்கள் நகர்ந்தது...

சங்கரும் ரேகாவும் சிறப்பான முறையில் பண்ணையார் தோட்டத்தில் வேலையை செய்து வந்தார்கள் ... ஊர் மக்களும் மெல்ல மெல்ல பயம் தெளிந்து சந்தோஷமாக பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்கள் ரேகாவும் நினைக்கும் போதெல்லாம் ஊருக்குள் வந்து தன்னுடைய அம்மாவையும் தாத்தாவையும் பார்த்துவிட்டு செல்வது வழக்கமானது.....


பரந்தாமன் தனது வீட்டு மொட்டை மாடியில் சந்தோஷமாக யோசித்தபடி இருந்தான் .
அப்போது சந்திரனின் மாமனார் மாமியாரும் வருவதை கவனித்தான் பரந்தாமன்.

திருமணத்தை தான் அப்பா நிறுத்தி விட்டாரே .
காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணத்தை நடத்தப் போவதில்லை என்று உறுதியோடு சொல்லிவிட்டார் அப்பா .
பிறகு எதற்காக சந்திரனின் மாமனாரும் மாமியாரும் வருகிறார்கள் என்று யோசித்துக்கொண்டே சற்று பதட்டமாய் கீழே இறங்கி வந்தான் பரந்தாமன்.

வாங்க வாங்க என்று பண்ணையார் சந்திரனின் மாமனார் மாமியாரை வரவேற்றார் ... சாந்தியும் அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் .
பிறகு வீட்டின் மையப்பகுதியில் அமர்ந்தார்கள் . அப்போது பரந்தாமனும் வந்து நின்றான்.

என் வார்த்தையை மதித்து நீங்கள் இவ்வளவு நாட்கள் காத்திருந்தது நீங்கள் என் மீது உள்ள மதிப்பை காட்டுகிறது . அதேசமயம் நானும் உங்களை ரொம்பவே சிரமத்திற்கு ஆளாகி விட்டேன் .
என்ன செய்வது என் தோட்டத்தில் இரண்டு குடும்பத்தை தொலைத்துவிட்டு இருக்கேன்
இந்த நிலைமையில் என் மகனுக்கு திருமணம் செய்வதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை .
அதனால் தான் திருமணத்தை தள்ளி வைத்தேன் .
ஆனால் இப்போது எல்லாமே கைகூடி வருகிறது இன்னும் கூடிய சீக்கிரத்தில் சந்திரனின் திருமண வேலையும் ஆரம்பித்துவிடலாம் என்று சந்திரனின் மாமனார் இடமும் மாமியாரிடமும் பண்ணையார் சொன்னார்.

உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் எங்களுக்கு மாப்பிள்ளையை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அதைவிட உங்கள் குடும்பமும் எங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு நீங்கள் இந்த ஊர் மக்களோடு ஒற்றுமையாக இருப்பதை பார்த்து எங்களுக்கு பெருமையாக இருக்கிறது .
ஊர் மக்கள் மீது இந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள் அதேபோல இந்த வீட்டு மருமகளாக வரப்போகும் என்னுடைய மகளுக்கும் இந்த குடும்பத்தில் நல்ல மரியாதை இருக்கும் இருந்தாலும் நீங்க திருமணத்தை தள்ளிப் போட்டது எங்களுக்கு மனசு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது ..
இருந்தாலும் பரவாயில்லை நல்லதுக்காக காத்திருப்பதில் தவறு இல்லை என்று சந்திரனின் வருங்கால மாமனார் சொன்னார்.

என் மருமகள் தான் உங்களை அழைத்து முறைப்படி தகவலை சொல்லணும்னு என்று சொன்னால் அதனாலதான் உங்களை இன்னைக்கு வரச் சொன்னேன் என்றார் பண்ணையார்.

அப்போது சந்திரனும் தீனாவும் தனது அறையிலிருந்து வந்து பார்த்தார்கள். அப்போது புன்னகை சிரிப்போடு தனது வருங்கால மாமனாரையும் மாமியாரையும் பார்த்து சந்திரன் சிரித்தான்.

எப்ப வந்தீங்க மாமா ..அத்தை .. என்று சந்திரன் கேட்டான்.

கொஞ்ச நேரம்தான் ஆனது மாப்பிள்ளை என்று சொன்னார்.

பரந்தாமனுக்கு எரிச்சலாக இருந்தது .
இதோடு திருமணம் நடக்காது என்று நினைத்தாள் . இப்படி மீண்டும் திருமண வேலை ஆரம்பமாகும் போல் தெரிகிறதே என்று நினைத்து கோபத்தோடு நின்றிருந்தான் பரந்தாமன்.

பண்ணையார் சந்தோஷமாக எழுந்து நின்று சொன்னார்.

இன்னும் கொஞ்ச நாளில் திருமண வேலையை ஆரம்பித்துவிடலாம் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் .
கூடிய சீக்கிரத்தில் என் சின்ன மருமகள் இந்த வீட்டிற்கு வந்து விடுவாள் இதை முறைப்படி உங்களிடம் சொல்ல வேண்டும் அதுதானே முறை என்று பண்ணையார் சொன்னார்.

எங்களுக்கு இப்போது தான் ரொம்ப சந்தோசமாக இருக்கு
இந்த விஷயத்தை சொன்னாள் என் மகள் ரொம்பவே சந்தோசப் படுவாள் என்று சொல்லி சிரித்தார் சந்திரனின் மாமியார்.

நீங்கள் இருவரும் கட்டாயம் சாப்பிட்டுட்டு தான் போகணும்.

கண்டிப்பா நம்ம வீட்டில சாப்பிடறதுக்கு எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டே சாப்பிடுவதற்கு புறப்பட்டார்கள் சாந்தியும் அவர்களை அன்போடு அழைத்துச் சென்று உணவு பரிமாறினாள்.

சந்திரன் தீனா பரந்தாமன் மூவரும் சிரித்தபடி நின்றிருந்தார்கள் பரந்தாமன் மட்டும் சந்தோஷமாக இருப்பதை போல நடித்துக்கொண்டே. தனது அப்பாவிடம் கேட்டான்.

காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணம் நடத்தப் போவதில்லை என்று சொன்னிங்களே அப்பா
இப்போது திருமணத்தை நடத்துவதற்கு என்ன காரணம் அப்பா ..என்று பரந்தாமன் கேட்டான்.

இப்போதும் சொல்கிறேன் காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை சந்திரன் திருமணம் நடக்காது.. என்றார் பண்ணையார்.

பரந்தாமனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது திருமண வேலையும் ஆரம்பிக்கிறார் .
காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணம் நடக்காது என்றும் சொல்கிறார்
ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று பரந்தாமன் யோசித்தான்.

சந்திரனுக்கு தனது அப்பாவின் பேச்சு அதிர்ச்சியாக இருந்தது அப்பா நமக்கு திருமணம் நடத்தப் போகிறார் என்ற சந்தோஷத்தில் இருந்த சந்திரன் .
காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணம் நடக்காது என்று சொன்னதும் அவன் மனம் கவலையில் அழ்ந்தது.

நான் சொல்வது உங்களுக்கு புரியாது ..
சந்திரனின் மாமனாரும் மாமியாரும் சாப்பிட்டுவிட்டு போகட்டும் பிறகு நான் என்னுடைய திட்டத்தை உங்களிடம் சொல்கிறேன் காணாமல் போனவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி என்று சொல்லிவிட்டு பண்ணையார் அமைதியாக உட்கார்ந்துகொண்டார்.

பரந்தாமனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. காணாமல் போனவர்கள் கிடைத்தால்தான் திருமணம் என்று அப்பா சொன்னதை நினைத்து சற்று சந்தோஷமாக இருந்தான் பரந்தாமன்.

சாப்பிட்டு முடித்தவுடன்..இங்கு வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் நாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டு .
சந்தோஷமாக கிளம்பினார்கள் சந்திரனின் மாமியார் மாமனாரும்.

சாந்தி இருவரையும் சந்தோஷமாக வழி அனுப்பி வைத்துவிட்டு . வாங்க நாம எல்லோரும் சாப்பிடலாம் என்று அழைத்தாள்.

சாப்பிடுவதற்கு முன்னாடி நம்ம எல்லோரும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசலாமா என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.

சரி மாமா என்று சொல்லிவிட்டு சாந்தியும் அமர்ந்தால் .

வீட்டின் மையப்பகுதியில் பண்ணையார் சாந்தி பரந்தாமன் சந்திரன் தீனா இப்படி குடும்பத்தோடு அமர்ந்து பேசினார்கள்.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.
என்று ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருந்தேன்
அதைப் பற்றி தான் இப்போது முடிவு செய்யணும் என்று பண்ணையார் சொன்னார்.

உங்களுடைய திட்டத்தை நீங்க சொல்லுங்க மாமா அது எப்படிப்பட்ட திட்டம் என்று பார்க்கலாம்
என்று ஆர்வத்தோடு சாந்தி சொன்னாள்.

என் நண்பனின் மகன் சங்கரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பரந்தாமனை பார்த்து கேட்டார் பண்ணையார்.

சங்கர் ரொம்ப நல்லவன் ..அதுவும் தைரியசாலி துணிச்சலானவன் அவனால்தான் நம்முடைய தோட்டம் செழிப்பாக மாறிவிட்டது அதேசமயம் அவன் ஒரு விஷயத்தில் இறங்கினாள் அதை முடிக்காமல் விடமாட்டான் .
என்று சங்கரை பற்றி பெருமையாக சொன்னான் பரந்தாமன்.

நான் நெனச்சதை போலவே நீயும் சொல்லிட்ட. அதனால் தான் அடுத்த வாரத்திலிருந்து சங்கரை காணாமல் போனவர்களை தேடுவதற்கு அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கேன் இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால் பண்ணையார்.

பரந்தாமனுக்கும் .சந்திரன் தீனாவுக்கும் இடி விழுந்ததைப் போல ஆடிப் போனார்கள் .
அப்பா இப்படி ஒரு திட்டத்தை போட்டு விட்டாரே என்று நினைத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு நின்றார்கள்.

மாமா.. உங்களுடைய யோசனை ரொம்பவே நல்லா இருக்கு
நிச்சயம் சங்கர் காணாமல் போனவர்களை எப்படியாவது கண்டுபிடித்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு மாமா .
உங்களுடைய யோசனை எனக்கு சரியாகவே படுகிறது என்று சாந்தி சொன்னாள் பண்ணையாரை பார்த்து.

உனக்கு இதில் விருப்பம் தானே பரந்தாமா என்றார் பண்ணையார்.

நீ ..நீ ,.நீங்க சொல்வது சரியாதான் இருக்கு அப்பா ஆனால் விவசாய வேலை பாதிக்குமே என்று சொல்லி தனது அப்பாவின் திட்டத்தை திசைதிருப்ப முயற்சி செய்தான் பரந்தாமன்.

நீ சொல்வதும் சரிதான் பரந்தாமா சங்கர் காணாமல் போனவர்களை தேடப் போனால் . விவசாய வேலை பாதிக்கும் அதனால் என்ன செய்யலாம் நீயே ஒரு யோசனை சொல் பரந்தாமா.

வழக்கம்போல நாங்கள் மூவரும் காணாமல் போனவர்களை தேடுவதற்கு வாரத்தில் நான்கு நாட்கள் எடுத்துக் கொள்கிறோம் இதற்கு முன்னாடி வாரத்தில் இரண்டு நாட்கள் தேடினோம் ஆனால் அவர்கள் எங்களிடம் கிடைக்கவில்லை .
அதனால் இந்த முறை வாரத்தில் நான்கு நாட்கள் தேடுகிறோம் நிச்சயம் அவர்கள் எங்களிடம் கிடைப்பார்கள். என்று பரந்தாமன் சொன்னான்.

நீங்கள் சரியாக தேடவில்லை என்பதற்காக நான் சங்கரை தேட சொல்லவில்லை .
உங்களுடைய அனுபவம் வேறு சங்கரின் அனுபவம் வேற
அதனால் தான் நான் சங்கரை தேடுவதற்கு அனுப்பலாம் என்று திட்டம் போட்டேன். மற்றபடி உங்கள் மீது எனக்கு எந்த குறையும் இல்லை என்றார் பண்ணையார்.

சங்கர் இல்லையென்றால் விவசாய வேலைகள் மறுபடியும் நின்று போகும். அதனால் யோசித்து முடிவு செய்ய வேண்டும் அப்பா என்று சந்திரனும் மறுப்பு சொல்வதைப்போல சொன்னான்.

எதுக்கு ...எல்லோரும் விவசாய வேலை நின்று போகும் என்று கவலைப்படுகிறிர்கள்... காலையிலிருந்து மதியம்வரை விவசாய வேலையை சங்கர் பார்க்கட்டும் . பிறகு காணாமல் போனவர்களை தேடுவதற்கு செல்லட்டும் தினமும் இப்படி செய்தாள் விவசாயமும் நடக்கும் காணாமல் போனவர்களும் சீக்கிரத்தில் கிடைத்து விடுவார்கள் என்று சாந்தி சொன்னாள்.

நீ சொல்வதும் சரியாதான் இருக்கு அப்படியே செய்யலாம் நாளைக்கே சங்கரை வீட்டுக்கு வர சொல்லுங்கள் இதைப்பற்றி அவனிடம் கேட்கலாம்
அவன் சம்மதித்தால் உடனே அடுத்த வாரத்தில் இருந்து காணாமல்போனவர்களை தேடுவதற்கு சங்கரை அனுப்பலாம் என்று பண்ணையார் சொன்னார்.

பரந்தாமனுக்கு சாந்தி மேல் கோபம் ஏற்பட்டது . தேவையில்லாமல் எதையாவது சொல்லி நம்மை சிக்கலில் மாட்டீ விடுவதற்கே பேசுறாள் என்று நினைத்து எரிச்சலோடு என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தான்.

சந்திரனும் தீனாவும் உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் அப்பா என்று சொன்னார்கள் .
பரந்தாமனும் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு தலையாட்டினான்...


சங்கரும் ரேகாவும் சந்தோஷமாக விவசாய வேலையை பார்த்துக்கொண்டு இருவரும் காதலர்கள் போல பேசிக்கொண்டும் சேற்றில் இறங்கி இருவரும் கபடி ஆடிக்கொண்டும் சந்தோஷமாக பண்ணையார் தோட்டத்தில் வேலை பார்த்தார்கள்.

இரவு நேரம் ஆனது...

சங்கரின் மார்பின்மீது படுத்தபடியே பேசினால் ரேகா.

மாமா பண்ணையாரின் மகன்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க நீங்க என்று ரேகா கேட்டாள்.

ரொம்ப தங்கமான குணம் கொண்டவர்கள் .
பண்ணையார் போலவே இவர்களும் ரொம்ப நல்லவர்கள் நம்ம இங்கு வேலைக்கு வந்த நாள் முதல் நம்மிடம் பாசமாக நடந்துகொள்கிறார்கள் .
இதுக்கு மேல என்ன வேணும் என்று சங்கர் சொன்னான்.

எனக்கும் அப்படிதான் தோணுது ஆனால் பண்ணையாரின் பெரிய மகன் பரந்தாமன் அவர் மீது தான் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது மாமா...

என்ன புள்ள அவரைப்பார்த்து பயப்படுற ..பார்ப்பதற்குத்தான் அவர். ஆல் கம்பீரமாக இருப்பாரு ஆனால் அவர் குணம் குழந்தை மாதிரி..

அவரை பார்த்து பயப்படவில்லை மாமா ...அவரு பக்கத்து அறையில் இருக்கும் அவங்க அம்மா படத்தின் பின்னாடி எதையோ மறைச்சு வச்சு இருக்காரு மாமா...
இங்கு வரும்போதெல்லாம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவங்க அம்மா படத்தின் பின்னாடி எதையோ மறைத்து வச்சிருக்காரு என்று தெரியுது மாமா ...
நான் அடிக்கடி அவரை மறைந்திருந்து கவனிச்சேன் அவரும் யாரும் இல்லாத சமயத்தில் தான் அவங்க அம்மா அப்படத்தின் பின்னாடி எதையோ மறைத்து வைத்துவிட்டு . அது சரியாக இருக்கிறதா என்பது போல பார்த்துவிட்டு போறாது மாமா என்றாள் ரேகா.

அப்படியா... வா பார்ப்போம் என்று சங்கர் எழுந்திரிக்க முயற்சித்தான்.

வேண்டாம் மாமா ...எனக்கு பயமாக இருக்கிறது
எதுவாக இருந்தாலும் காலையில் பார்க்கலாம் என்று ரேகா சொன்னாள்.

இந்த இடத்தில நம்ம கொஞ்சம் உஷாராகவே இருக்கணும் புல்லா யாரையுமே நம்ப கூடாது
ஏன்னா ...இதுக்கு முன்னாடி இங்கே இருந்தவங்க இப்படிதான் நம்மைப்போலவே சந்தோஷமா இருந்தாங்க .ஆனால் திடீரென்று தான் அவங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கும் .
அதனால் தான் இரண்டு குடும்பமே திடீரென்று காணாமல் போனார்கள் அதனால் கவனமா இருக்கணும் என்று சங்கர் சொன்னான்.

நம்மா முதல் முதல்ல இங்கு வேலைக்கு வந்தோமே அன்னைக்கே அவங்க அம்மா படத்தின் முன்னாடி நின்று நம்ம வேண்டிக் கொண்டோம் .
நமக்கு முன்னாடி பரந்தாமன் ஐயா நின்று வேண்டிக் கொண்டிருந்தார் அப்போது சீக்கிரமாகவே வேண்டி முடித்துவிட்டு கண் திறந்து பார்த்தேன் நான் அப்போதுதான் அவர் படத்தின் பின்னாடி ஏதோ யாருக்கும் தெரியாமல் மறைச்சு வச்சு இருக்காரு .
நம்மை பார்த்ததும் அவர் பயந்து விட்டார் . உடனே அவருக்கு கைகள் நடுங்கியது நான் பார்த்தேன் . உடனே நானும் கண்களை மூடிக்கொண்டேன் பிறகு நீ பேசியதும்தான் நான் கண் திறந்தேன் நம்ம அவரை கவனிக்கவில்லை என்று நினைத்து கொண்டார். இதைப்பற்றி நான் அன்னைக்கே சொல்லி இருப்பேன் ஆனால் என் மனசுக்கு சங்கடமாக இருந்தது வந்த முதல் நாளிலே அவர்களைப் பற்றி குறை சொல்லனுமா என்று நினைத்துதான் நான் உன்னிடம் எதுவும் சொல்லவில்லை மாமா ஆனால் அவர் அடிக்கடி இப்படி அந்த அறையில் சென்று இதுபோல பார்ப்பது . எனக்கு ஏதோ அந்த இடத்தில் ஒரு ரகசியம் இருப்பது போல தெரியுது மாமா... என்று ரேகா சற்று பயத்தோடு சொன்னாள்.

சரி புள்ள ...பொழுது விடிந்ததும் நம்ம அந்த படத்துக்கு பின்னாடி என்னதான் இருக்குதுன்னு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் தூங்கினார்கள்.


பொழுது விடிந்தால் தெரியும் யாருக்கு பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது என்று....



தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்.... 24 👇


சங்கருக்கு சரியாக தூங்காமல் ரேகா சொன்னதையே நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தான் . பொழுது விடிந்ததும் முதல் வேலையாக பக்கத்து அறையில் என்னதான் மறைத்து வைத்திருக்கிறார் பரந்தாமன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் யோசித்து கொண்டேன் தூங்க ஆரம்பித்தான்..

சிறிது நேரத்தில் பொழுது விடிந்தது...🌄

சங்கரும் ரேகாவும் எழுந்தவுடன் பக்கத்து அறையில் 🏠🏡 என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இருவரும் சென்றார்கள்.

ஏ புள்ள... நான் உள்ளே சென்று பண்ணையாரின் மனைவி படத்தின் பின்னால் என்னதான் இருக்கு என்று பார்க்கிறேன்.
நீ யாராவது வராங்களா என்று பாரு என்று சொல்லிவிட்டு சங்கர் உள்ளே சென்றான்.

மாமா.. சீக்கிரமா பார்த்துட்டு வாங்க . நம்ம ஊர் ஆடுங்க வேலைக்கு வர நேரம்.. அதனால சீக்கிரமா பார்த்துட்டு வந்துரு மாமா என்று ரேகா சங்கரிடம் சொன்னாள்.

சங்கர் பண்ணையாரின் மனைவி படத்தை நன்றாக கூர்ந்து கவனித்தான் . அந்த படம் ஒரு மேடை மேலே இருப்பதை போல அலங்கரித்து இருந்தது..
பிறகு மெதுவாக ஒரு படி ஏறி படத்தின் பின்பக்கமாக பார்த்தான்.
அப்போது 2 பூட்டு ...பூட்டிய படி தொங்கிக்கொண்டிருந்தது சங்கருக்கு இதை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது முன்பக்கமாக பார்த்தால் சிறிய மேடை போல தெரிகிறது பின்பக்கமாக பார்த்தாள் ஒரு பெரிய பெட்டி போல தெரிகிறது இந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கும் . எதுக்காக இந்தப் பெட்டிக்கு பின்பக்கமாக பூட்டியிருக்கிறார்கள் .
இது பண்ணையாருக்கு தெரியுமா இல்லை பரந்தாமனுக்கு மட்டும் தெரியுமா என்று யோசித்தான் சங்கர் .
பிறகு அந்தப் பெட்டியை மெதுவாக தட்டிப் பார்த்தான் அப்போது பெட்டியின் சத்தம் கனமாக ஒலித்தது .
பிறகு இன்னொரு இடத்திலும் தட்டிப் பார்த்தான் அங்கேயும் கனமான சத்தம் ஒலித்தது சங்கருக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது பெட்டியில் ஏதோ நிரம்பியிருக்கிறது ஆனால் அது என்னவென்று தான் தெரியவில்லையே என்று சங்கர் சந்தேகத்தோடு அந்தப் பெட்டியை பார்த்தான் .
அப்போது ஒரு சின்ன துளை தெரிந்தது அந்த பெட்டியில் அந்தத் துளை வழியாக முகர்ந்து பார்த்தான் சங்கர் .
அப்போதும் அவனுக்கு எந்த ஒரு வாசனையும் அவனுக்கு வரவில்லை பிறகு மெதுவாக இறங்கி வெளியே வந்துவிட்டான் சங்கர்..

என்ன மாமா... ஏதாவது தெரிஞ்சதா அந்தப்படத்தின் பின்னாடி என்ன இருக்கிறது மாமா என்று பரபரப்போடு ரேகா ஓடிவந்து கேட்டாள்.

நீ சந்தேகப்பட்டது உண்மைதான் புள்ள .. படத்தின் பின்னாடி எதையோ மறைத்து வச்சிருக்காங்க அதை பூட்டு போட்டு வச்சிருக்காங்க.
அதனால என்னால் திறந்து பார்க்க முடியவில்லை
ஆனால் அந்த பெட்டிக்குள்ள ஏதோ இருக்குது .
நான் தட்டிப் பார்த்ததில் கனமான சத்தம் கேட்டது புள்ள என்று சங்கர் சற்று யோசித்த படியே சொன்னான்.

இதைப்பற்றி உடனே பண்ணையாரிடம் சொல்லிவிடலாம் மாமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றாள் ரேகா..

அவசரப்படாதே புள்ள இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் . நம்ம ஏதாவது நினைச்சு பண்ணையாரிடம் சொன்னபிறகு அது ஒருவேளை அவங்க குடும்ப விஷயமாக இருந்தால் நம்மை பற்றி தவறாக நினைப்பார்கள் அதனால் இந்த விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக தான் இருக்க வேண்டும் என்றான் சங்கர்.

அப்படின்னா காணாமல் போனவர்களுக்கும்.
பெட்டியில் மறைத்து வைத்திருக்கும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா மாமா என்றாள் ரேகா..

அந்தப் பெட்டியில் இருப்பது ஏதோ பொருளாகத்தான் இருக்கணும் . ஏனென்றால் நான் அந்த பெட்டியின் அருகில் நன்றாக முகர்ந்து பார்த்தேன் அப்போது எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை அதனால் நம்ம அவசரப்படக்கூடாது தேவையில்லாமல் அவர்கள் மீது நம்ம சந்தேகப்படக்கூடாது ஏனென்றால் அவர்கள் நம்ம ஊரையே காப்பாற்றுகிறார்கள் அவர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகப்பட்டு எதையாவது பண்ணையாரிடம் சொல்லிவிட்டால் . பிறகு நமக்கு மதிப்பு இருக்காது அதனால் நம்மா கொஞ்சம் நிதானமாகத்தான் அவங்க நடவடிக்கையை கண்டுபிடிக்கணும் என்று சங்கர் ரேகாவிடம் சொல்லி விட்டு இருவரும் விவசாய வேலையை செய்வதற்கு கிளம்பினார்கள்.


💒அம்மாடி இன்னைக்கு என் நண்பனோட மகனும் அவனுடைய மனைவியும் வரப்போறாங்க அதனால அவங்களுக்கு விருந்து தடபுடலாக இருக்கணுமா என்று உரிமையோடு பண்ணையார் சொன்னார். சாந்தியிடம்..

திருமணமாகி முதன்முதலா நம்ம வீட்டுக்கு வராங்க அவங்களுக்கு என்ன மாதிரியான சாப்பாடு கொடுக்கணும்னு எனக்குத் தெரியும் மாமா என்று சிரித்துக்கொண்டே சாந்தி சொன்னாள்.

சரி மா இவனுங்க மூணு பேரும் கிளம்பிட்டனுங்களா தோட்டத்திற்கு..

இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க மூணு பேரும் டிபன் சாப்பிடறாங்க மாமா என்று சாந்தி சொன்னாள்.

பரந்தாமனும். சந்திரன் தீனாவும் டிபன் சாப்பிட்டு விட்டு கைகளை தனது வேட்டியால் துடைத்துக்கொண்டே வந்தார்கள் முகத்தில் எந்த ஒரு உற்சாகமும் இல்லாமல்.

அப்பா நாங்கள் தோட்டத்திற்கு கிளம்புகிறோம் என்று பொறுமையாக பரந்தாமன் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

அம்மாடி உங்க வீட்டுக்காரன் முகம் கலையவே இல்லையே.. என் மீது கோபத்தில் இருக்கானா ஒன்றும் புரியவில்லையே என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.

அப்படித்தான் தெரியுது மாமா.. மூணு பேரும் முகத்திலும் எந்த ஒரு சந்தோஷமம் தெரியவில்லை காணாமல் போனவர்களை நம்ம சரியாக தேடவில்லை அதனால்தான் அப்பா சங்கரிடம் அந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று நினைத்து மூன்று பேரும் கவலையில் இருக்காங்க என்று நான் நினைக்கிறேன் மாமா..

எனக்கும் அப்படி தான் தெரியுது இருந்தாலும் நீ கொஞ்சம் பரந்தாமனிடம் எடுத்து சொல்லுமா... எனக்கு என் மகன்கள் மீது எந்த குறையும் நான் பார்க்கவில்லை .
நீதான் உன் கணவனிடம் எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று பண்ணையார் சொன்னார்.

இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க மாமா ...
நீங்க முடிவு செஞ்சு இருப்பது யாருக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு நிச்சயம் சங்கர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து இந்த ஊருக்கும் நம் குடும்பத்திற்கும் நிம்மதியை தரத்தான் போகிறார் அதனால் நீங்க தேவையில்லாமல் உங்கள் பிள்ளைகளை பார்த்து வருத்தப்படாதீங்க காணாமல் போனவர்கள் கிடைத்தால் உங்க பிள்ளைகளுக்கும் சந்தோஷம் தானே.. என்று சாந்தி சொன்னாள்.


நீ சொல்லும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உண்மையிலேயே
இது நடந்தாள் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா என்று பண்ணையார் சொல்லிக்கொண்டே ஆனந்தமாய் சிரித்தார்..


வழக்கம்போல களத்துமேட்டில் பைக்கை நிறுத்திவிட்டு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பம்புசெட்டை நோக்கி நடந்து சென்றார்கள்.

மூவரும் பம்பு செட்டின் கதவை பார்த்தார்கள் .. கதவு சாத்தி இருந்தது சங்கரும் ரேகாவும் வேலை செய்வதற்காக போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மூவரும் கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தார்கள்.

அப்பா இப்படி ஒரு முடிவு செய்வார் என்று கொஞ்சம் கூட நான் நினைக்கவில்லை அண்ணா ..என்று சந்திரன் பரந்தாமனிடம் சோகத்தோடு சொன்னான்.

நானும்தான் தம்பி ...
உன் திருமணம் நடக்கப்போகிறது என்று நினைத்து சந்தோஷமாக இருந்தேன் . ஆனால் அப்பா காணாமல் போனவர்களை தேடுவதற்கு சங்கர்தன் பொருத்தமான ஆளு என்று சொன்னதும் எனக்கு ரொம்பவே மனம் கஷ்டம்மா ஆயிடுச்சு தம்பி.

இப்போ நம்ம என்ன செய்யறது அண்ணா..

நம்ம என்ன செய்ய முடியும் தம்பி எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் அப்பாவிடம் உங்களுக்கே தெரியும் காணாமல் போனவர்களை நாங்களே தேடி கண்டுபிடிக்கிறோம் என்று சொன்னேன் ..
உங்க அண்ணியும் அப்பாவும் சங்கர்தான் பொருத்தமான ஆளு என்பதுபோல பேசுறாங்க ..
நம்ம தப்பிக்க எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எந்த வழியும் கிடையாது . இனிமேல் நமக்கு இறங்கு முகம் தான் என்று வருத்தத்தோடு தரையைப் பார்த்தபடி பரந்தாமன் சொன்னான்.

ரெண்டு பேருமே கவலைப்பட வேண்டாம் அண்ணா..
சங்கரால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாது . அவர்கள் எங்கேயோ தூரத்தில் ஓடி விட்டு இருப்பார்கள் அதனால் நீங்கள் தேவையில்லாமல் கவலைப் படாதீங்க அண்ணா... இன்னும் கொஞ்ச நாளில் சந்திரன் அண்ணன் திருமணம் நடக்கப் போகுது. இந்த நேரத்தில் நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படாதீங்க அண்ணா என்று தீனா சொன்னான்.

முட்டாள்தனமா பேசாதே தம்பி அப்பா காணாமல் போனவர்கள் கிடைத்தால்தான் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் இப்போது திருமண வேலையை ஆரம்பிப்பதில் மும்முரமாக இருக்கிறார்... எதனால்... காணாமல் போனவர்களை சங்கர் கண்டுபிடித்துவிடுவான் என்ற நம்பிக்கையில்தான் திருமண வேலையை ஆரம்பித்திருக்கிறார் ஒரு வேளை நீ சொல்வதைப் போலவே சங்கர் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கவில்லை என்றால் திருமணமும் மறுபடியும் தள்ளிப் போடுவார் அப்பா...என்று பரந்தாமன் தீனாவிடம் சொன்னான்.

அப்படின்னா இந்த முறையும் அண்ணன் திருமணம் நடக்காதா என்று ஏக்கத்தோடு கேட்டான் தீனா.

நான்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை தம்பி .
காணாமல் போனவர்கள் கிடைத்தாலும் நம்முடைய வேஷம் கலைந்து போகும் அப்போதும் சந்திரன் திருமணம் நடப்பதில் சந்தேகம்தான் என்று பரந்தாமன் சொன்னதும் ......சந்திரனுக்கு மேலும் கவலையாக இருந்தது.

அப்படி என்றால்.. நம்ம கூடிய சீக்கிரத்தில் இந்த ஊருக்கும் நம்ம குடும்பத்திற்கும் கெட்டவனாக தெரிய போகிறோமா அண்ணா என்றான் தீனா..

எனக்கும் அப்படி தான் தெரிகிறது தம்பி. நம்முடைய வாழ்க்கையில் இனி எந்தப் பிரச்சனையும் கிடையாது
எல்லா பிரச்சனைகளையும் சங்கர் தீர்த்து வைத்து விட்டான் என்று நினைத்து பெருமைப்பட்டேன்..
ஆனால் நம்முடைய அப்பா...
அதே சங்கரை வைத்து நம்ம செய்த தவறை எல்லாம் கண்டு பிடிக்கப் போகிறார் என்பதை நெனச்சா என் உயிரே போய்விடும் அளவுக்கு பயமாக இருக்குது தம்பி என்று சோகமாக சொன்னான்.

அப்போது சங்கரும் ரேகாவும் விவசாய வேலையை முடித்துவிட்டு பம்புசெட்டை நோக்கி நடந்து வருவதை சந்திரன் பார்த்தான்.

அண்ணே சங்கரும் ரேகாவும் வராங்க என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று கொண்டான் சந்திரன்.

என்ன ஐயா... இன்னைக்கு சீக்கிரமாகவே தோட்டத்துக்கு வந்துட்டீங்க என்று சங்கர் பணிவாக கேட்டான்.

எல்லாம் உனக்காகத்தான் சங்கர் என்று லேசாக சிரித்துக்கொண்டே சொன்னான் பரந்தாமன்.

என்ன சொல்றீங்க ஐயா... எனக்காகவா சீக்கிரமாக வந்தீங்க.

ஆமாம் சங்கர் ...உன்னையும் உன் மனைவியும் அப்பா இன்னைக்கு வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காரு ...ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி உன்கிட்ட பேசலாம் என்று ..
அதனால நாங்கள் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துட்டோம் சங்கர் என்று பரந்தாமன் சொன்னான்.

ரேகாவுக்கும் சங்கருக்கும் ஒரே புதிராக இருந்தது ...
என்ன முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு நம்மை கூப்பிடுகிறார் பண்ணையார் என்று குழம்பினார்கள் ரேகாவும் சங்கரும்.

நீங்கள் இருவரும் உடனே கிளம்புங்கள் .... உங்கள் பின்னாடியே வருகிறோம் என்று பரந்தாமன் சொன்னான்.

சங்கரும் ரேகாவும் குழப்பத்தோடு பண்ணையார் வீட்டிற்கு கிளம்பினார்கள்.


💒 சங்கரும் ரேகாவும் பண்ணையார் வீட்டிற்கு சென்றதும் . பண்ணையார் சங்கரை பார்த்ததும் . அருகில் வந்து கட்டி அணைத்துக் கொண்டார் பிறகு இருவரையும் சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்றார். அப்போது சாந்தி அவர்களுக்கு அக்கறையோடு எல்லாவிதமான உணவுகளையும் பாசமாக பரிமாறினாள்.

பண்ணையாரும் அவருடைய மருமகளும் நம் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறார்களே என்று நினைத்து சங்கரும் ரேகாவும் பூரித்துப் போனார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் சங்கர் ரேகா சாந்தி பண்ணையார் நான்கு பேரும் வீட்டின் மையப் பகுதியில் அமர்ந்தார்கள்.

என் நண்பன் எப்படி இருக்கிறான் அவனை நீ அடிக்கடி சென்று பாக்குறியா என்று பண்ணையார் சங்கரிடம் கேட்டார்.

அவருக்கு எந்தக் குறையும் இல்லை ஐயா... வாரத்தில் இரண்டு முறை ரேகா சென்று பார்த்துவிட்டு வருவாள் தேவைப்பட்டால் தினமும் சென்று அப்பாவை பார்த்துவிட்டு வருகிறாள் என்று சங்கர் சொன்னான்.

சங்கர் உன்னிடம் ஒரு முக்கியமான பொறுப்பை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.. நீ விருப்பப்பட்டால் இந்த பொறுப்பை ஏத்துக்க இல்லை என்ற எனக்கு எந்த வருத்தமும் கிடையாது .. அதனால் உன்னுடைய பதிலை நீ யோசித்து சொல் தேவைப்பட்டால் முத்தையாவிடம் இதைப் பற்றி சொல்லி. நாளைக்கு கூட உன்னுடைய பதிலை சொல் என்றார் பண்ணையார்.

என்ன விஷயம் சொல்லுங்க ஐயா என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன் என்றான் சங்கர்.

நம்ம பம்பு செட்டில் வேலை செய்து காணாமல் போனவர்களை பற்றின எந்த ஒரு தகவலும் நமக்கு இதுவரைக்கும் கிடைக்கவில்லை ...
என் மகன்களும் தேடிக் கொண்டுதான் இருந்தாங்க ஆனாலும் அவர்களைப் பற்றின எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை .. அதனால் நான் என் மகன்களை காணாமல் போனவர்களை தேட வேண்டாம் நீங்கள் என்று சொல்லிவிட்டேன் அந்த வேலைக்கு உன்னை அனுப்பலாம் என்று நான் நினைக்கிறேன் .... உனக்கு விருப்பமிருந்தால் நீ இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் சங்கர் என்று பண்ணையார் சொன்னார்.

நிச்சயம் நான் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விடுவேன் .
எனக்கு இதில் எந்த தயக்கமும் கிடையாது ஐயா ...அப்பாவுக்கும் இதில் விருப்பம் இருக்கும் ஏனென்றால் அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார் என்று சங்கர் சொன்னான்.

சாந்திக்கும் பண்ணையாருக்கும் சந்தோசமாக இருந்தது சங்கரின் உறுதியான பேச்சு.

அம்மாடி ...உனக்கு இதில் ஏதாவது வருத்தம் இருக்கிறதா என்று பண்ணையார் ரேகாவிடம் கேட்டார்.

ஐயா... எனக்கு ஒரு வருத்தமும் இல்லை என் கணவர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விட்டாள்
எனக்குத்தானே பெருமை நிச்சயம் அவரால் முடியும் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் ஐயா என்று ரேகா சொன்னாள்.

இனிமேல் என் குடும்ப கௌரவத்தையும் . இந்த ஊர் மக்களின் பயத்தையும் சங்கர் கூடிய சீக்கிரத்தில் தீர்த்து வைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது தாயே என்று ரேகாவை பார்த்து உற்சாகமாக சொன்னார் பண்ணையார்.

ஐயா நாங்கள் புறப்படுகிறோம் இந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டு நாளையிலிருந்து காணாமல் போனவர்களை தேடுவதற்கு நான் போகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு ரேகாவும் சங்கரும் புறப்பட தயாரானார்கள் .
அப்போது பண்ணையார் சங்கரின் தோள்மீது கை போட்டபடி சொன்னார்..

காணாமல் போனவர்களை நீ ஒரு திட்டம்போட்டு தேட வேண்டும் திட்டம் இல்லாமல் தேடினால் நிச்சயம் அதில் பலன் கிடைக்காது அதனால் அவர்கள் எங்கு போயிருப்பார்கள் என்பதை ஒரு திட்டம்போட்டு தேடினாள் நிச்சயம் அவர்கள் உன்னிடம் கிடைப்பார்கள் என்று பண்ணையார் சங்கரின் கண்களை பார்த்தபடியே சொன்னார்.

நிச்சயம் நீங்க சொன்னபடியே செய்கிறேன் ஐயா... நாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டு சங்கரும் ரேகாவும் கிளம்பினார்கள்

சங்கரும் ரேகாவும் சென்றதும் சிறிது நேரத்தில் பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் பைக்கில் வீட்டுக்கு வந்தார்கள்..

பண்ணையாரும் சாந்தியும் சிரித்த முகத்தோடு இருப்பதை பார்த்து பரந்தாமன் சற்று சலிப்போடு சென்றான் ...

அப்போது சாந்தி என்னங்க... சங்கர் காணாமல் போனவர்களை தேடுவதற்கு சம்மதம் சொல்லிட்டாரு என்று புன்னகையோடு சொன்னாள்.

அப்படியா... சரி மா ....என்று சொல்லிவிட்டு மூவரும் சோகத்தோடு அவரவர் அறைக்கு சென்றார்கள்.

என்னம்மா நம்மா சந்தோஷமான சேதியை சொன்னால்கூட இவனுங்க முகம் சோகமாகவே இருக்குதே.. என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.

ஆமாம் மாமா ....எனக்கும் ஒண்ணுமே புரியல எதுக்காக மூணு பேரும் சோகமா இருக்காங்க என்று தெரியல மாமா என்று சாந்தி சொன்னாள்


🏠⛺🏘️🛖 ஊருக்குள்ளே சென்று சங்கரும் ரேகாவும் முத்தையா விடம் நடந்ததையெலலாம் சொன்னார்கள்.

அப்பா நீங்க நினைச்ச மாதிரியே பண்ணையார் தோட்டமும் இப்போ செழிப்பா மாறிடுச்சு... அடுத்ததா... காணாமல்போனவர்களை கண்டுபிடிக்கணும் என்று சொல்லி இருந்தீர்கள் அதே போல தான் பண்ணையாரும் இப்போ அந்தப் பொறுப்பையும் என்னிடம் கொடுத்திருக்கிறார் அப்பா என்று சங்கர் சொன்னான்.

முத்தையாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது ...
நம் மகன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் நம்முடைய நண்பன் என்று நினைத்து பெருமைப்பட்டார் முத்தையா.

அப்போது லட்சுமி அம்மாளும் வந்து பெருமையாக சொன்னார்.. இந்த ஊர் மக்கள் தம்பியைப் பற்றி ரொம்ப பெருமையாக பேசுறாங்க .... இன்னைக்கு எல்லோரும் பசியில்லாமல் இருக்கிறதுக்கு காரணம் சங்கர்தான் என்று ..தம்பியைப் பற்றி பெருமையாக பேசுறாங்க அப்பா என்று லட்சுமி அம்மாள் முத்தையாவிடம் சொன்னார்.

அடுத்தபடியா காணாமல்போனவர்களை இவர் கண்டுபிடித்து விட்டால் இன்னும் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று ரேகா சொன்னாள்.

அப்பா நாங்கள் தோட்டத்திற்கு கிளம்புகிறோம்.. நாளை முதல் காணாமல் போனவர்களை நான் தேடபோறேன் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா என்று சங்கர் முத்தையாவின் காலில் விழுந்தான்.

உனக்கு எந்தக் குறையும் ஏற்படாது... நீ நேர்மையான வழியில் செல்வதால் உனக்கு தோல்வியே கிடையாது...
நீ எடுக்கும் முயற்சி எல்லாமே இதுவரைக்கும் ஜெயிச்சிருக்கு இந்த முயற்சியும் உனக்கு கண்டிப்பா வெற்றி கிடைக்கும் என்று சொல்லி சங்கரை ஆசீர்வதித்தார் முத்தையா..


பிறகு சங்கரும் ரேகாவும் சந்தோஷமாக பண்ணையார் தோட்டத்திற்கு சென்றார்கள்..


பரந்தாமனின் இலட்சியத்திற்கு சங்கர் முட்டுக்கட்டை போடுவானா... பொறுத்திருந்து பார்க்கலாம்..


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ..25 👇


திட்டமிட்டபடி சங்கர் பண்ணையார் தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு காணாமல் போனவர்களை தேடுவதற்கு தயாரானான்..

ஏ புள்ள நான் கிளம்புறேன்
இனி இங்கு தனியாக இருக்காதே நான் வர்றதுக்கு நேரம் ஆகும் அதனால நீ தாத்தாவையும் உங்க அம்மாவையும் பார்த்துட்டு சாயங்காலமா வந்து சமையல் செய்து வை.
அதுக்குள்ள நான் வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு சங்கர் புறப்பட தயாரானான்.

மாமா.. பார்த்து நீதானம்மா போயிட்டு வாங்க ..
பண்ணையார் மகன்கள் இவ்வளவு நாளா தேடியும் அவங்க கிடைக்கல .
அதனால நீங்க அவசரப்படாம பொறுமையா ஒவ்வொரு இடமா தேடுங்க . இன்னிக்கே கண்டுபிடிக்க வேண்டுமென்ற நெனப்புல சாப்பிடாம கூட சுத்திக்கிட்டு தெரியாதிங்க
எந்த விஷயத்திலும் அவசரப்படாதீங்க என்று ரேகா சங்கரிடம் சொன்னாள்.

சரி புள்ள அப்ப நான் கிளம்புறேன் கொஞ்ச நேரம் கழிச்சு நீயும் கிளம்பி விடு
இங்க தனியா இருக்காதே யாரையும் நம்ப கூடாது எனக்கு உன்னை தனியா விட்டுட்டு போகறதுக்கு மனசே இல்லை இருந்தாலும் இந்த பொறுப்பை நம்மை நம்பி பண்ணையார் கொடுத்து இருக்காரு இதை நல்லபடியா முடிச்சு கொடுக்கும் வரை நீ கொஞ்சம் பத்திரமா இருக்கணும் என்று பாசத்தோடு சொல்லிவிட்டு சங்கர் கிளம்பினான்.

பரந்தாமனுக்கு தோட்டத்திற்கு போக மனமில்லை... எப்படியும் சங்கர் காணாமல் போன இரண்டு குடும்பங்களையும் கண்டுபிடித்து அப்பாவிடம் நிறுத்துவான் அவர்களும் நடந்த உண்மையை சொல்லி நம்மை காட்டிக் கொடுப்பார்கள் இனிமேல் நம்முடைய திட்டமும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்
நம்முடைய அப்பாவும் நமக்கு என்ன தண்டனை கொடுப்பார் என்றும் தெரியவில்லை .. இப்படி மனக்குழப்பத்தில் பரந்தாமன் படுத்துக்கொண்டே யோசித்திருந்தான்.

மாமா... இன்னைக்கு உங்க பிள்ளைங்க தோட்டத்திற்கு போகாம சோகமா இருக்காங்க அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு நீங்களே கேளுங்க மாமா... என்று சாந்தி பண்ணையாரிடம் சொன்னாள்.

என்னம்மா சொல்ற.... அவனுங்களுக்கு என்னதான் ஆச்சு .. அவனுங்களுக்கு என்னதான் பிரச்சனை
எதுக்காக இப்படி சோகத்தோடு இருக்கானுங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே இன்னும் கொஞ்ச நாள்ல சந்திரன் கல்யாணத்தை முடிக்கலாம் என்று நான் சந்தோஷமா இருக்கேன் ஆனால் இவனுங்க எதுக்காக சோகத்தோடு இருக்கானுங்க ஒண்ணுமே புரியலையே சென்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.

என்னன்னு தெரியல மாமா நீங்களே கேளுங்கள்.

சரி மா... நான் சொன்னேன்னு மூன்று பேரையும் தோட்டத்துக்கு கிளம்பி போக சொல்லு ...ஏன்னா சங்கரும் இன்நேரம் காணாமல் போனவர்களை தேட போயிட்டு இருப்பான் அதனால இவனுங்க மூன்று பேரையும் தோட்டத்துக்கு போக சொல்லு அப்படி அவனுங்க போகலைன்னா என்ன பிரச்சனைன்னு நான் கேட்கிறேன் என்றார் பண்ணையார்.

சரி மாமா ....நீங்க சொன்னபடியே அவரிடம் சொல்கிறேன் என்று சாந்தி பரந்தாமனிடம் சென்றாள்.

என்னங்க ...உங்கள மாமா தோட்டத்துக்கு உடனே கிளம்பி போக சொன்னாரு . அங்கு சங்கர் காணாமல் போனவர்களை தேடப் போய் இருப்பாரு அதனால உங்க மூணு பேரையும் தோட்டத்திற்கு கிளம்பி போக சொன்னாரு அப்படி போகலைன்னா. அதுக்கு என்ன காரணம்னு சொல்ல சொன்னாரு என்று சாந்தி பரந்தாமனிடம் சொன்னாள்.

நான் இப்போ போக மாட்டேன்னு யார் சொன்னது . இன்னைக்கு கொஞ்சம் மனசு சரியில்ல அதனால நாளைக்கு போகலாமுன்னு இருந்தேன்
இப்ப என்ன உங்களுக்கு தோட்டத்துக்கு போகணும் அவ்வளவுதானே . இதோ கிளம்புகிறோம் . என்று சொல்லிவிட்டு பரந்தாமனும் அவனது தம்பிகளும் மூவரும் தோட்டத்திற்கு கிளம்பி சென்றார்கள்.

வழக்கம்போல மூவரும் பம்புசெட்டின் அருகில் நின்றார்கள் . அப்போது பம்பு செட்டின் கதவு சாத்தியிருந்ததை பார்த்தான் பரந்தாமன். ரேகா ஊருக்குள்ளே போயிருப்பாள் என்று நினைத்து பரந்தாமன் தம்பிகளிடம் சொன்னான்.

தம்பி ...சங்கர் நம்ம நினைத்தபடி காணாமல் போனவர்களை தேட சென்று விட்டான் ரேகாவும் ஊருக்குள்ளே சென்றுவிட்டாள் நீங்கள் இருவரும் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வங்க எனக்கு மனசு சரியில்லை நான் சிறிது நேரம் இங்கேயே இருக்கிறேன் . என்று சோகமாக பரந்தாமன் தம்பிகளிடம் சொன்னான்.

சந்திரனும் ..தீனாவும் பரந்தாமனை பார்த்து கவலைப்பட்டார்கள்....

அண்ணன் நம்முடைய ஆசைக்காக இப்படி ஒரு தவறு செய்துவிட்டு இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்று நினைத்து கவலைப் படுகிறார் .. நமக்காக அண்ணன் எத்தனையோ கஷ்டங்களை இதுவரைக்கும் தாங்கிக் கொண்டு இருக்கிறார் ஆனால் நாம் இதுவரைக்கும் அண்ணன் மனம். சந்தோஷம் படும்படி அவருக்கு எதுவுமே நம் செய்யவில்லை என்று சந்திரனும் தீனாவும் பேசிக்கொண்டு தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றார்கள்.

பரந்தாமனுக்கு மனசு திக் திக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. நமக்கு கெட்ட நேரம் ஆரம்பம் ஆயிடுச்சு சங்கர் மூலமாக என்று நினைத்து கவலையோடு இருந்தான் அப்போது அவனுக்கு தனது குறைகளை வழக்கம்போல தனது அம்மா படத்தின் முன்பு சொல்லலாம் என்று நினைத்து பரந்தாமன் பம்புசெட்டில் பக்கத்து அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்னால் நின்று மனதுக்குள் வேண்டினான்.

தாயே இதுவரைக்கும் நான் உன்னிடம் வேண்டிக் கொண்டதில் எனக்கு எந்தத் தோல்வியும் நீ தரவில்லை ஆனால் இப்போது எனக்கு உருவாகியிருக்கும் இந்த பிரச்சனை . உன்னால் கூட தீர்க்க முடியாது தாயே
அதனால் தான் உன்னிடம் நான் வேண்டிக் கொள்வதற்கே தயக்கமாக இருக்கிறது இருந்தாலும் உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமே கிடையாது எனக்கு எல்லாமே நீதான் தாயே இதுவரைக்கும் நான் கோவிலுக்கு சென்று என்னுடைய குறைகளை சொன்னதே கிடையாது . உன்னிடம் மட்டும்தான் நான் சொல்லுவேன் என்னை இதுநாள் வரைக்கும் கவலையில்லாமல் பார்த்துக்கொண்டாய் ஆனால் இப்போது வந்திருக்கும் பிரச்சனையில் கண்டிப்பாக நான் மாட்டிக் கொள்வேன் இதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனென்றால் சங்கர் ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் அதை கண்டிப்பா வெற்றி பெறச் செய்வான் இதுவரைக்கும் அவன் அப்படிதான் இருக்கான்


சங்கர் எனக்கு இதுவரைக்கும் நல்லவனாக எனக்குத் தெரிந்தான். ஆனால் இனிமேல் அவன் எனக்கு எதிரி
ஏனென்றால் அவன் நான் செய்த தவறை எல்லாம் இந்த ஊர் மக்களுக்கும் நம் குடும்பத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டப் போகிறான் அதன் பிறகு நான் உயிரோடு இருப்பது கஷ்டம் தாயே நான் இந்த பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை இருந்தாலும் என்னை இந்த பிரச்சினையில் இருந்து நீதான் காப்பாற்ற வேண்டும் தாயே இதில் நீ எனக்கு உதவி செய்வது கஷ்டம்தான் இருந்தாலும் எனக்கு வேறு வழி இல்லை என்று உருக்கமாக மனதில் வேண்டிக்கொண்டு பரந்தாமன் தனது வலது கையில் ஒரு பெரிய கற்பூரத்தை வைத்து அதை எரிய விட்டு கைகளால் தனது அம்மா படத்தின் முன்னாள் நீட்டினான் அப்போது கற்பூரம் பரந்தாமன் வலதுகையில் மளமளவென எரிந்தது.

பரந்தாமனுக்கு அவன் மனதில் கவலையும் பயமும் நிரம்பி இருந்ததால் அவனின் உள்ளங்கையில் எரிந்து கொண்டிருக்கும் தீயின் வலி அவனுக்கு பெரியதாக படவில்லை..

சந்திரனும் தீனாவும் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு பம்புசெட்டின் அருகில் வந்து நின்றார்கள் அப்போது பரந்தாமன் கவலையோடு நின்றிருந்தான் அவனது வலது கையில் தீக்காயம் இருந்ததால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை . மெல்ல மெல்ல வலி அதிகமானது
அப்போது பரந்தாமன் வலி தாங்க முடியாமல் தீப்புண் மீது ஊதினான்.

இதை கவனித்த சந்திரனும் தீனாவும் அண்ணன் எதுக்காக கை மீது ஊதிக் கொண்டே இருக்கிறார் என்ன ஆச்சு என்று இருவரும் பரந்தாமனின் அருகில் வந்து கையை கவனித்தார்கள் அப்போது இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

அண்ணா.. எப்படி ஆச்சு இவ்வளவு பெரிய தீக்காயம் என்ன ஆச்சு என்று பதட்டத்தோடு சந்திரனும் தீனாவும் கேட்டார்கள்.

ஒன்றுமில்லை கொஞ்ச நாள்ல சரியாகிவிடும் விடுங்கப்பா என்று பரந்தாமன் சாதாரணமாக சொன்னான்.

என்னென்ன இப்படி சாதாரணமா சொல்றீங்க உள்ளங்கையே வெந்து போய் இருக்கு. இதை போய் சாதாரணமா ஒன்னும் இல்லைன்னு சொல்றீங்க என்று சந்திரன் சொன்னான்.

பரந்தாமனுக்கு அவன் மனவேதனையும் தாங்க முடியவில்லை . கையில் இருக்கும் தீப்புண் காயமும் எரிச்சல் தாங்க முடியவில்லை அதேசமயம் தம்பி களிடமும் உண்மையை சொல்லாமல் மௌனமாகவே வலியோடு கவலையோடும் துடித்தான் பரந்தாமன்.

அண்ணே.. என்ன ஆச்சு சொல்லுங்க அண்ணே எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சற்று கண் கலங்கியபடி தீனா சொன்னான்.

ஒன்னும் இல்ல.. அம்மா அப்படத்தின் முன்னாடி நின்று வெறும் கையில கற்பூர தீபத்தை காட்டி வேண்டிக்கிட்டேன் அதனாலதான் இந்த தீக்காயம் ஏற்பட்டது என்று பரந்தாமன் மெதுவாக சொன்னான்.

வெறும் கையாள கற்பூரத்தை ஏற்றி வேண்டிக் கொள்ளும் அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை அண்ணா என்று சந்திரன் கேட்டால்.

இந்த முறை உன் திருமணம் நின்று போகக் கூடாது என்றுதான் அம்மாவிடம் வேண்டிக்கொண்டேன் தம்பி என்று பரந்தாமன் பொய் சொன்னான்..

இதைக்கேட்டதும் சந்திரன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அண்ணன் நம்முடைய வாழ்க்கையை பற்றி இந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறாரே என்று நினைத்து சந்திரன் பரந்தாமனை கட்டியணைத்துக் கொண்டு அழுதான். தீனாவும் கண்கலங்கினான்.
இப்படி மூவரும் அழுதார்கள்.

ரேகா ஊருக்குள்ளே சென்று எனது அம்மாவையும்
முத்தையாவையும் பார்த்துவிட்டு பண்ணையார் தோட்டத்திற்கு வந்து கொண்டிருந்தாள் அப்போது அவளுக்கு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அழுகும் சத்தம் லேசாக கேட்டது ரேகாவுக்கு..

யாரு இந்த நேரத்துல அழுவது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் ரேகா .. அவள் கண்களுக்கு யாரும் தென்படவில்லை மறுபடியும் பம்புசெட்டை நோக்கி நடந்தாள் ரேகா.


தம்பி ..இந்த சங்கர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் ஏனென்றால் உன் திருமணத்தை கண்டிப்பாக அப்பா நிறுத்திவிடுவார் அதன் பிறகு என்னால் உயிரோடு இருக்க முடியாது தம்பி
எனக்கு உங்களுடைய சந்தோசம் தான் எனக்கு முக்கியம் உங்களுக்காகத்தான் நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் என்று உருக்கமாக சொல்லி தம்பிகளின் மனதில் மேலும் வலுவான இடத்தை பிடித்தான் பரந்தாமன்.

சந்திரனுக்கும் தீனாவுக்கும் மேலும் கவலை அதிகமானது அண்ணன் நம் திருமணம் நின்று விட்டாள் உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்கிறாரே என்று நினைத்து இருவரும் வாய் திறந்து சத்தமாக அழுதார்கள்.

பரந்தாமனும் தனக்கு வரப்போகும் சோதனைகளை நினைத்து அவனும் சத்தமாக அதுதான் இப்படி மூவரும் பம்பு செட்டின் அருகில் சத்தமாக அழுதார்கள்..

மூவரும் அழுது கொண்டிருக்கும் சத்தம் ரேகாவுக்கு நன்றாக கேட்டது .
ரேகாவும் பண்ணையார் மகன்கள் தான் அழுது கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்து சற்று வேகமாக நடந்து வந்தாள்.

ரேகா வருவதை பார்த்துவிட்டான் தீனா..

அண்ணே.. ரேகா வரா யாரும் அழ வேண்டாம் என்று சொல்லிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டான் தீனா.

பதட்டமாய் ஓடி வந்த ரேகா மூவரையும் பார்த்தாள்.

ஐயா ..இவ்வளவு நேரம் நீங்களா அழுதுருந்தீங்க என்று கேட்டாள்.

மூவரும் திருதிருவென முழித்தார்கள் அப்போது பரந்தாமன் சற்று முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு.

நாங்க எதுக்காக மா அழுப்போறோம்.
நீ எதுக்காக இப்படி கேட்டாய் என்று பரந்தாமன் சொன்னான்.

எனக்கு இங்கதான் யாரோ சத்தமா அழுத மாதிரி கேட்டது ஐயா . அதனால் தான் கேட்டேன் என்று சொல்லிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள்.

சரி மா நாங்க கிளம்புகிறோம் நீ பத்திரமா இருமா என்று சொல்லிவிட்டு மூவரும் உடனே அங்கிருந்து கிளம்பினார்கள் அப்போது ரேகா பரந்தாமனின் வலது கையின் உள்ளங்கையில் இருக்கும் காயத்தை பார்த்தாள்.

நிச்சயம் அழுதது இவர்கள்தான் நம்மிடம் மறைக்கிறார்கள் பெரியவரின் கையில் எப்படி காயம் ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகமும். பயமும் குழப்பமும் உருவானது ரேகாவுக்கு..


எப்போதுமே பைக்கை நம்ம வீட்டுக்காரர் தானே ஓட்டி வருவார் இன்னைக்கு என்ன சந்திரன் ஓட்டி வருகிறான் என்று ஆச்சரியத்தோடு சாந்தி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தாள்.

அப்போது பரந்தாமன் வலது கையை சற்று தூக்கிப் பிடித்துக்கொண்டு வருவதை பார்த்த சாந்திக்கு மனதில் திக்கென்று ஆனது உடனே மொட்டை மாடியில் இருந்து இறங்கி ஓடி வந்தாள்.

சந்திரன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு பரந்தாமனை மெதுவாக அழைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே வந்தான் அப்போது சாந்தி ஓடிவந்து பரந்தாமனின் கையை பார்த்ததும் சத்தம்போட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

சாந்தியின் அழுகை கேட்டதும் பண்ணையாரும் வந்து பார்த்தார்..

என்னம்மா ஆச்சு என் மகனுக்கு என்று அவரும் கண்கலங்கியபடி பரந்தாமனின் கையை பார்த்தார்.

சந்திரனும் தீனாவும் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தார்கள்..

எனக்கு ஒன்றுமில்லை எதுக்காக இப்படி இரண்டு பேரும் அழுகிறீர்கள் நான் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கணும் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் தனது அறைக்கு சென்றுவிட்டான்.

உங்க அண்ணனுக்கு எப்படி இந்த தீக்காயம் ஏற்பட்டது சொல்லுங்க தம்பி என்று அழுதுகொண்டே கேட்டாள் சாந்தி..

அண்ணன் என் திருமணம் இந்த முறை நல்லபடியாக நடக்கணும் என்று அம்மா படத்தின் முன்னால் வெறும் கையில் கற்பூர தீபத்தை காட்டி வேண்டிக்கொண்டார் அதில் ஏற்பட்ட காயம் தான் இது என்று வருத்தமாக சந்திரன் சொன்னான்.

தம்பிகள் மீது இந்த அளவுக்கு பாசமா என்று நினைத்து பண்ணையாரும் சாந்தியும் மனம் நெகிழ்ந்து போனார்கள்.

உன் பேர் மட்டும் பரந்தாமன் இல்லை அந்த பரந்தாமனே எனக்கு மகனாக வந்து பிறந்து இருக்கிறான் என்று பண்ணையார் சொல்லி அழுதார்.


தம்பியின் திருமணத்துக்காக தான் கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக்கொண்டேன் என்று ஒரு பொய்யை சொல்லி நம் குடும்பத்தில் அசைக்கமுடியாத நல்ல பெயரை எடுத்துவிட்டோம் ஆனால் இந்த சங்கர் ..இன்னும் கொஞ்ச நாளில் இது எல்லாமே வேஷம் என்று நிரூபிக்க போறான் என்று நினைத்து பரந்தாமன் கவலையோடு படுத்துக்கொண்டான்..


தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்....26👇


சங்கர் சில இடங்களில் காணாமல் போனவர்களை தேடிவிட்டு சோர்வாக பம்பு செட்டுக்கு திரும்பி வந்தான்..

ரேகா சங்கர் முகத்தை கவனித்தாள்.

என்ன மாமா .. எதுக்காக ஒரு மாதிரியா இருக்கீங்க .
காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லையே என்ற கவலை தானே மாமா .. என்று இயல்பாக கேட்டாள் ரேகா.

ஆமா புள்ள.. என்னால் முடிந்தவரை எல்லா இடத்திலும் தேடினேன்
ஆனா காணாமல் போன வாங்க அந்த இடத்துல இருக்கிற மாதிரி ஒரு தகவலும் கிடைக்கல அப்படின்னா அவங்க எங்க தான் போய் இருப்பாங்க ன்னு தெரியல புள்ள .. என்று சோகத்தோடு சொன்னான் சங்கர்.

இன்னைக்குத் தான் முதல் முதல்ல தேட போனீங்க .. அதுக்குள்ள அவங்க கிடைக்கலையே என்று கவலைப்படாதீங்க மாமா ..
அது எப்படி மாமா அவங்க உடனே கிடைத்து விடுவாங்க
ஒவ்வொரு இடமா தேடிக்கிட்டு இருந்தாதான் என்னைக்காச்சும் ஒரு நாளைக்கு அவங்கள பத்தின தகவல் யாராச்சும் ஒருத்தர் நமக்கு கண்டிப்பா சொல்லுவாங்க .
அப்படி தான் அவங்க கிடைப்பாங்க நீங்க அவசரப்படும் படி உடனே கிடைக்க மாட்டாங்க மாமா ..
என்று சிரித்தபடி புன்னகையோடு சங்கரை பார்த்து சொன்னாள் ரேகா.

அவங்க கிடைக்கலன்னா கூட பரவாயில்லை . ஒரு சின்னத் தகவல் கூட அவங்கள பத்தி இன்னைக்கு தெரியவில்லையே அதனால்தான் புள்ள மனசுக்கு கஷ்டமா இருக்கு..

இதுக்கெல்லாம் போயிட்டு கவலைப் படலாமா மாமா வாங்க பம்புசெட்டு தொட்டியில் இறங்கி முதல்ல குளிச்சுட்டு வாங்க அதுக்கப்புறம் உங்களை எப்படி சிரிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொண்டே ஆசையோடு கட்டியணைத்தாள் ரேகா..

ரேகாவின் புன்னகையும் அவள் தலையில் வச்சிருந்த மல்லிகைப் பூவின் வாசமும் சங்கருக்கு சற்று மனம் சந்தோசத்தில் மாறியது.

இரவு நேரம் ஆனது...

அமைதியான சூழல் ... பண்ணையார் தோட்டம் ஊருக்கு சற்று தூரத்தில் இருப்பதால் பம்புசெட்டில் ரேகாவும் சங்கரும் வாசலில் பாய்விரித்து இருவரும் கட்டியணைத்தபடி படுத்திருந்தார்கள் . அந்த அமைதியான சூழலில்..
அப்போது ரேகா சங்கரிடம் சொன்னாள்.

மாமா ..நீங்க காணாமல் போனவர்களை தேடுவதற்கு கிளம்பிப் போனதும் .
கொஞ்ச நேரத்தில் நானும் ஊருக்குள்ளே சென்றுவிட்டேன் அதுக்கப்புறம் . தாத்தாவையும் அம்மாவையும் பார்த்துவிட்டு சாயங்காலம் திரும்பி வந்து கொண்டிருந்தேன் . அப்போது பம்பு செட்டின் பக்கத்தில் யாரோ அழுவது போல எனக்கு குரல் கேட்டது மாமா நானும் யார் இந்த நேரத்தில் அழுகிறார்கள் என்று சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன் அப்போது யாருமே இல்லை..

என்ன புள்ள சொல்ற ..அப்படின்னா யார்தான் அழுதது என்று ஆச்சரியத்தோடு கேட்டான் சங்கர்.

மறுபடியும் நான் நடந்து வந்து கொண்டிருந்தேன் மாமா..
அப்போது யாரோ மறுபடியும் சத்தமாக அழுதார்கள்..

அழுதது ஆனா பெண்ணா என்றான் சங்கர்.

அழுதது ..ஆம்பள தான் மாமா அதுவும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து அழுததை போல எனக்கு கேட்டது . நானும் சற்று பயந்தபடியே தேடிப்பார்த்தேன் அப்போது நம்ம பம்பு செட்டின் அருகில். பண்ணையார் மகன்கள் தான் இருந்தாங்க நான் அவர்களை பார்த்ததும் ஓடி வந்து கேட்டேன் . ஐயா இங்கே யாரோ அழுவது போல சத்தம் கேட்டது என்று நான் கேட்டேன் மாமா .. அதற்கு அவர்கள் மூவரும் யாருமே இங்கு அழுகலயே என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பிட்டாங்க மாமா..

என்ன புள்ள சொல்றே. அப்படின்னா யார் தான் அழுதது.

எனக்கென்னமோ பண்ணையார் மகன்கள் தான் அழுது இருப்பாங்கன்னு நினைக்கிறேன் மாமா..

என்ன புள்ள சொல்ற அவங்க எதுக்கு அழு போறாங்க .
இன்னும் கொஞ்ச நாள்ல சந்திரன் திருமணம் நடக்கப் போகுது இப்படி இருக்கும் சமயத்துல அவங்க எதுக்காக அழு போறாங்க..

என்னைப்பார்த்ததும் அவங்க மூணு பேரும் முகமும் ஏதோ மறைப்பது போல திருதிருவென முழித்தார்கள் பிறகு உடனே கிளம்பிட்டாங்க அப்போது பெரியவர் பரந்தாமன் அவர் உள்ளங்கையில் பெரிய தீப்புண் இருந்ததை நான் பார்த்தேன் மாமா ..அது எப்படி ஆச்சுன்னு எனக்கு தெரியல..

தீப்புண் காயமா....என்னவோ புள்ள எனக்கும் இந்தப் பண்ணையார் மகன்களை பார்த்தாள்.
ஒருபக்கம் இவர்களின் நடவடிக்கை சந்தேகமாகவே இருக்கிறது
ஒரு பக்கம் இதுவரைக்கும் எந்த ஒரு தவறும் இவர்கள் செய்ததாக யாரும் எதுவுமே சொல்லவில்லை ..
ஒரே குழப்பமாக இருக்குது புள்ள.. எதுக்கோ நம்ம ரெண்டு பேரும் இந்த இடத்தில கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் புள்ள.. என்றான் சங்கர்..

ஆமா மாமா... யாரையுமே நம்ம நம்பக்கூடாது நீங்க காணாமல் போனவர்களை கண்டுபிடித்தால் தான் இதுக்கெல்லாம் ஒரு முடிவு தெரியும் அதுவரைக்கும் யாரைப் பார்த்தாலும் நமக்கு சந்தேகம்தான் வரும் மாமா. என்று ரேகா சொன்னாள்..

சரி புள்ள ..நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே காணாமல்போனவர்களை தேடப் போகிறேன். என்று சொல்லிவிட்டு இருவரும் தூங்குவதற்கு யார் ஆனார்கள்..


மறுநாள் பரந்தாமன் படுக்கையிலிருந்து எழுந்திரிக்கவே இல்லை .. காய்ச்சல் அதிகமாக இருந்தது வலது கையில் இருந்த தீ புண்ணும் பெரியதாக காணப்பட்டது கை வீக்கமாக இருந்தது இப்படிப்பட்ட நிலைமையில் பரந்தாமன் கண்களை மூடியபடி படுத்து இருந்தான் . அப்போது அவன் அருகில் அமர்ந்தபடி சாந்தி தீப்புண் காயத்திற்கு என்னை தடவி கொண்டு இருந்தாள்.

அப்போது பண்ணையார் மெதுவாக வந்து.. பரந்தாமனை பார்த்தார் பரந்தாமனின் நிலைமையை பார்த்த பண்ணையாருக்கு கண் லேசாக கலங்கியது .
அப்போது சாந்தி அழுதுகொண்டே சொன்னாள்.

இவரை உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகணும் மாமா இல்லைன்னா இவரு உடம்பு ரொம்ப மோசமாகி விடும் என்று சாந்தி சொன்னாள்.

நீ சொல்றது உண்மைதான் இவனை இப்படியே விட்டால் இவன் உடம்பு தேராது நான் சந்திரனையும் தீனாவையும் அழைத்து வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரனும் தீனாவும் வந்து பரந்தாமனை பார்த்தார்கள் அப்போது பரந்தாமனின் நிலைமையைப் பார்த்து இருவரும் சோகத்தில் தலைகுனிந்தார்கள்.

என்னங்க எழுந்திரிங்க ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று சாந்தி பரந்தாமனை எழுப்பினாள்..

அப்போது மெதுவாக கண் திறந்து பார்த்தான் பரந்தாமன்.
எல்லோரும் சோகமாக இருப்பதை பார்த்துவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்.

என்னங்க எழுந்திரிங்க ஹாஸ்பிட்டலுக்கு போகலாம் எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க என்று அழுதுகொண்டே பரந்தாமனை மறுபடியும் எழுப்பினால் சாந்தி..

அப்போது கண்களை மூடியபடியே சொன்னான் பரந்தாமன்..

என்னை தொந்தரவு பண்ணாதீங்க நான் கொஞ்ச நேரம் தூங்கணும் எனக்கு ஒன்றுமில்லை என்று பரந்தாமன் சொன்னான்.

உடம்பெல்லாம் ஆனாலய் கொதிக்குது. ஹாஸ்பிடலுக்கு போனால்தான் குணமாகும் எனக்கு ரொம்ப பயமா இருக்கு .
வாங்க ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்றாள் சாந்தி.

பரந்தாமா.. பிடிவாதம் பிடிக்காதே டா உன்ன இந்த நிலைமையில் பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா வாடா ஹாஸ்பிட்டலுக்கு போகலாம் என்று பண்ணையார் கெஞ்சுவதை போல சொன்னார்.

அப்பா ...என்னை தனியா விட்டாலே போதும் ஹாஸ்பிடலுக்கு எல்லாம் நான் வரமாட்டேன் நான் மனசார அம்மா படத்தின் முன்னால் நின்று கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டேன்
அதில் ஏற்பட்ட இந்த காயம் தானாக ஆர வேண்டும் அப்போதுதான் என்னுடைய வேண்டுதல் பலிக்கும் இதற்கு மருந்து தடவக்கூடாது தானாக ஆரவேண்டும். அதனால் என்னை தனிமையில் விட்டாலே போதும் என்று மெதுவாக பரந்தாமன் எல்லோரையும் பார்த்தபடி சொன்னான்.

பரந்தாமன் பேச்சைக் கேட்டதும் சந்திரன். தீணா .பண்ணையார் சாந்தி இவர்கள் அனைவரும் பதில் பேச முடியாமல் வாயடைத்து போனார்கள் அதேசமயம் பரந்தாமனின் பெருந்தன்மையை பார்த்து பெருமை பட்டார்கள் சந்திரனும் தீனாவும்.

குடும்பத்தின் மீது இவ்வளவு அக்கறை கொண்டவனாக இருக்கிறானே. எனக்கு உண்மையாகவே அந்த பரந்தாமனே மகனாக பிறந்து வந்திருக்கிறான் என்று பெருமையாக சொல்லிக்கொண்டே பண்ணையார் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படிப்பட்ட அண்ணன் கிடைப்பது அபூர்வம் என்று சந்திரனும் தீனாவும் மனதில் நினைத்துக் கொண்டார்கள்.



திட்டமிட்டபடி சாட்டையடி சாமியாருக்கு தெரியாமல் இரண்டு சிஷ்யர்களும் ஊரை ஏமாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு தனது திட்டத்தைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அதோ வருகிறானே ஒரு குடிகாரன் அவன் வீட்டின் அருகில் தான்
நான் செல்போனை மறைத்து வைக்கப் போறேன் நம்ம திட்டத்திற்கு இவன் தான் சரியான ஆள் என்று முதல் சிஷ்யன் சொன்னான்.

முதன்முதலா நம்ம குருவுக்கு தெரியாம திட்டத்தை போட்டிருக்கும் இந்த குடிகாரன் குடும்பத்தைய தேர்வு செஞ்சீங்க இந்த குடிகாரன் வீட்டில் பணம் இருக்குமா அண்ணே.. என்று இரண்டாவது சிஷ்யன் கேட்டான்.

இவனைப் பற்றி உனக்குத் தெரியாது தம்பி
இவன் பண்ணையார் தோட்டத்தில் நல்லா வேலை செஞ்சு அதில் சிறிதளவு மட்டும் பணத்தை எடுத்து குடித்து விடுவான் .
பிறகு மீதி பணத்தை அவன் மனைவியிடம் கொடுத்து விடுவான் அதனால் இவனை நம்பி நம்ம வேலையை ஆரம்பிக்கலாம் தம்பி என்று அந்த சிஷ்யன் சொன்னான்.

சரி அண்ணே .. இன்னைக்கு நம்ம செல்போனை அந்த குடிகாரன் வீட்டின் அருகில் ஒளித்து வைத்துவிடலாம் ராத்திரிக்கு நம்ம குருவுக்கு தெரியாம இன்னொரு செல்போனில்
நம்ம மறைத்து வைத்திருக்கிறா செல்போனுக்கு போன் செய்யலாம் அந்த செல்போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போது அந்த குடிகாரனும் அவன் மனைவியும் பயந்து போய்
வழக்கம் போல காலையில நம்ம குருவை தேடி வருவாங்க
அதுக்கு முன்னாடியே நாம அவங்கள மடக்கி அந்த பேய் நாங்கள் விரட்டி விடுகிறோம் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என்று சொல்லி அவர்களை ஏமாற்றலாம் அன்று இரவு நீ அந்த பேய் விரட்டுவது போல நீ வந்து நாடகம் ஆடு. நான் தொடர்ந்து குருவுக்கு தெரியாமல் அந்த செல்போனுக்கு போன் செய்து கொண்டே இருக்கிறேன் பூஜை அறையில் பிறகு நீ பேயை விரட்டி விட்டது போல நடித்து விட்டு அவர்களுக்கு தெரியாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு . பணத்தையும் வாங்கிக்கொண்டு வந்து விடு என்று இரண்டாவது சிஷ்யன் தன்னுடைய திட்டத்தின் செயலை சொன்னான்.

ஆமாம் தம்பி .. நாமளும் இதுபோன்ற காரியத்தை செய்தால் தான் நமக்கு நாலு காசு தேறும் இல்லன்னா நம்ம குரு மட்டும் தான் காசு பார்ப்பார் . இனிமேல் நாமளும் முன்னேற வேண்டும் என்று சொல்லிவிட்டு .

அந்த குடிகாரன் வீட்டின் அருகில் சென்று செல்போனை எங்கு ஒளித்து வைக்கலாம் என்று பார்த்தார்கள் . அப்போது அந்த வீட்டின் பின்பக்கமாக அடர்ந்த டிசம்பர் பூசெடி இருப்பதை இருவரும் கவனித்தார்கள் .
பிறகு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு செல்போனை அந்த பூச்செடியில் மரைத்துவிட்டு உடனே அங்கிருந்து இருவரும் கிளம்பி விட்டார்கள்.

எப்போதுமே செல்போன் வைப்ரேஷன் மூடில் தான் இருக்கும் .
அதை மறைத்து வைக்கும் போது நார்மல் மூடுக்கு மாற்றிவிட்டு வருவது வழக்கம் .ஆனால் இந்த இரண்டு சிஷ்யர்களும் பணம் சம்பாதிக்க போகிறோம் என்ற ஆசை மனம் முழுக்க நிரம்பி இருந்ததால் செல்போனை மறைத்து வைத்துவிட்டு நார்மல் மோட் மாதாமலே வந்துவிட்டார்கள்..

இரவு நேரம் ஆனது...

வழக்கம்போல அந்த குடிகாரன் பண்ணையார் தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு அதில் கிடைத்த பணத்தில் மது வாங்கி குடித்துவிட்டு வந்து கொண்டிருந்தான் .
அவனால் அன்று பாட்டிலில் இருந்த மதுவை முழுவதும் அவனால் குடிக்க முடியவில்லை. மீதியிருக்கும் மதுவை என்ன செய்வது என்று புரியாமல் எடுத்துக்கொண்டு தள்ளாடியபடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

இந்த பாட்டிலில் இருக்கும் மதுவை வீட்டுக்கு கொண்டு சென்றால் நம்முடைய மனைவி இதை எடுத்து கீழே கொட்டி விடுவாள் .
அதனால் அவளுக்கு தெரியாமல் இதை மறைத்து வைத்து விடலாம் மறுநாள் காலையில் எடுத்து குடித்து விடலாம் என்று நினைத்து கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான் அப்போது அவன் மதுவை ஒளித்து வைப்பதற்கு இடம் தேடினான் அப்போது அவன் கண்களுக்கு தனது வீட்டின் பின்னால் இருக்கும் அடர்ந்த டிசம்பர் பூச்செடி தென்பட்டது உடனே கையில் வைத்திருந்த மதுவை பூச்செடியில் வைத்தான் அப்போது மது பாட்டில் மீது ஏதோ உராய்வது போல சத்தம் கேட்டது.

அவனுக்கு என்ன சத்தம் என்று புரியவில்லை. மறுபடியும் பாட்டிலை பூச்செடிக்கு உள்ளே வைத்தான் . அந்த மது பாட்டில் செல்போன் மீது பட்டு சத்தம் கேட்டது மறுபடியும் .
அந்த குடிகாரனுக்கு ஒன்றும் புரியவில்லை பூச்செடி குள்ள ஏதோ இருப்பது போல சத்தம் கேட்கிறதே என்று நினைத்து பாட்டில் வைத்த இடத்தை நன்றாக பூச்செடியை விலக்கிப் பார்த்தான் .

அப்போது அங்கு செல்போன் இருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்தான் ..ஏதோ காக்கா குருவி எடுத்துவந்து போட்டு இருக்கும் என்று நினைத்து அந்த குடிகாரன் உடனே செல்போனை எடுத்து தனது டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான் அந்த இடத்தில் மது பாட்டிலை ஒலிக்க வைத்துவிட்டு.. வீட்டுக்குள்ளே சென்றான்.



சாட்டையடி சாமியாரின் பலம்
அந்த செல்போன்தான் .
ஆனால் அது இப்போது அந்த குடிகாரன் கையில் சிக்கிக் கொண்டது .. இனி சாட்டையடி சாமியாரின் வேஷம் கலையுமா.. இல்லை சிஷ்யர்களில் திட்டம் வெற்றி பெறுமா....
என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....


தொடரும்........
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் 27👇


உங்களுக்கு இதே வேலையா போச்சு . தெனமும் குடிச்சிட்டு வந்தா குடும்பம் எப்படி உருப்படும் உங்கள பத்தி இந்த ஊரே பேசியது தினமும் நீங்க ஒரு ஆளு மட்டும்தான் குடிச்சிட்டு வரீங்க என்று குடிகாரனின் மனைவி சற்று கோபத்தோடு திட்டினாள்.

நான் தினமும் வேலைக்கு போறேன் சம்பாதிக்கிறேன் அதனால தினமும் கொஞ்சம் குடிக்கிறேன் இதுல என்னடி தப்பு இருக்கு சிலபேரு விருப்பப்பட்ட வேலைக்கு வரான் விருப்பப்பட்டால் குடிக்கிறான் அதனால அவன் நல்லவன் நான் கெட்டவனடி என்று கூறியபடியே அந்த குடிகாரன் தன் மனைவியிடம் சொன்னான்.

சரி சரி இன்னிக்கு என்ன வீட்டுப் பின் பக்கமாய் இருந்து வரீங்க அந்த அளவுக்கு போதை ஆயிடுச்சா.

அதெல்லாம் ஒன்னும் இல்லடி சும்மாதன் வீட்டு பின்னாடி போய் பார்த்துட்டு வரேன் அப்புறம் பையன் தூங்கிட்டானா டி என்று மனைவியை செல்லமாக கேட்டான்.

நீங்க வருவீங்க நடுவே ராத்திரியில அதுவரைக்கும் அவன் மூச்சு கிட்ட இருப்பான் வாங்க சீக்கிரம் சோறு தின்னுட்டு படுங்க இன்னிக்கு வாங்கின கூலி பணத்தை குடுங்க என்று சொல்லிக்கொண்டே சட்டை பாக்கெட்டில் கைவிட்டு அவளே எடுத்துக் கொண்டால் பணத்தை.

பிறகு அந்த குடிகாரன் தனது மனைவியை ஏக்கத்தோடு பார்த்தபடி சாப்பாடு சாப்பிட்டான்

ஒருவழியாக சாப்பிட்டு முடித்தவுடன் இருவரும் பாய் மீது படுத்து உறங்குவதற்கு தயாரானார்கள்.

அப்போது தனது மனைவியிடம் செல்லமாக சொன்னான் அந்த குடிகாரன்... அடியே உனக்கு நான் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா..

என்னய்யா வாங்கிட்டு வந்திருக்க அதை காட்டு என்று ஆச்சரியத்தோடு கேட்டாள்.

நீ பொருளை பார்த்த நீ ரொம்ப சந்தோஷப்படுவே அதனால இன்னைக்கு எனக்கு என்னமோ போல இருக்குதடி என்று ஏக்கத்தோடு பார்த்தான் அந்த குடிகாரன்.

பாக்குறதுல்லதான் வீரம் உனக்கு மத்தபடி ஒன்னும் கிடையாது .. மொதல்ல என்ன வாங்கிட்டு வந்தீங்க ன்னு காட்டு என்று சலிப்போடு சொன்னாள்.

உடனே அந்த குடிகாரன் டவுசர் பாக்கெட்டில் கையை விட்டு சாட்டையடி சாமியாரின் செல்போனை எடுத்து தனது மனைவியிடம் கொடுத்தான்.

என்னையா இது செல்போன் மாதிரி இருக்கு இதை எதுக்குயா வாங்கிட்டு வந்தே. யோ இது நம்ம ஊர்ல யாரிடமும் கிடையாது நம்ம யாருக்கு போன் செய்ய போறோம்னு இதை வாங்கிட்டு வந்த .. இதை பார்த்தா நம்ம சாட்டையடி சாமியார் போன் மாதிரி இருக்கு அவர்தான் இதை வச்சுக்கிட்டு இருப்பாரு
மற்றபடி இந்த ஊர்ல யார்கிட்ட மே செல்போன் கிடையாது உண்மையை சொல் ....இதை அவரிடம் இருந்து தானே நீ திருடிக்கொண்டு வந்து விட்ட என்று கோபத்தோடு கேட்டால்.

அய்யய்யோ.... என்ன மன்னிச்சிடு இந்த செல்போனை நான் சத்தியமா திருடலடி.

அப்படின்னா இந்த போன் உனக்கு எப்படி கிடைச்சது.

நம்ம வீட்டு பின்னாடி தாண்டியிருந்தது ..காக்கா குருவி ஏதாவது எடுத்துவந்து போட்டு இருக்கும் என்று நினைச்சேன்
சரி நான் வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொன்னால் நீ சந்தோசப்படுவே அதனால் தான் நான் பொய் சொன்னேன் டி என்று அலறியபடி சொன்னான்.

மொதல்ல பொழுது விடிந்ததும் இந்த போனை சாட்டையடி சாமியாரிடம் கொடுத்துவிட்டு வரணும். இல்லன்னா நம்ம மீது தேவையில்லாமல் திருட்டு பழி வரும் அதனால காலையில மொத வேலை இந்த செல்போனை எடுத்துக்கொண்டு சாட்டையடி சாமியாரிடம் கொடுத்துவிடலாம் என்று சொன்னால் அந்த குடிகாரன் மனைவி.


பூஜையறையில் சாட்டையடி சாமியார் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார் சற்று தள்ளி இரண்டு சிஷ்யர்களும் படுத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது சாட்டையடி சாமியாருக்கு தெரியாமல் அவருடைய இன்னொரு செல்போனை எடுத்துக்கொண்டு இருவரும் ரகசியமாக தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருந்தார்கள்.

அண்ணே ....இன் நேரம் அந்த குடிகாரனும் அவன் மனைவியையும் தூங்கிக்கொண்டு இருப்பாங்க.

ஆமாம் தம்பி என்னும் கொஞ்ச நேரம் இருக்கு 12 மணி ஆவதற்கு 12 மணி ஆனதும் நம்ம குடிகாரன் வீட்டில் பூச்செடியில் ஒளிச்சிவச்ச செல்போனுக்கு போன் செய்யலாம் நம்ம போன் பேய் சிரிப்பது போல சத்தமாக ரிங்டோன் அடிக்கும்
பாவம் அந்த குடிகாரனும் அவன் மனைவியும பயந்து பிதியில் நடுங்குவார்கள் என்று சொல்லி இருவரும் மெதுவாக பேசிக்கொண்டார்கள்.


......குடிகாரன் வீடு....🛖
.


அடியே இன்னைக்கு என்னமோ போல இருக்குதுடி கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் திரும்பி பாடுடி என்று உளறிக்கொண்டே தன் மனைவியை பாசமாக கொஞ்சினான் அந்தக் குடிகாரன்.

யோவ் உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும் தேவையில்லாம என்னை தொந்தரவு பண்ணாம படுத்து தூங்கு தினமும் இதே வேலையா போச்சு உனக்கு.


...சாமியாரின் பூஜை அறை....⛺

அண்ணே நம்ம குரு நல்ல தூங்கிட்டாரு இது தன் சரியான சந்தர்ப்பம் நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா.

அவசரப்படாதே தம்பி
நடு ராத்திரியில் தான் நம்ம போன் பண்ணனும் அப்பாதான் அந்த குடிகாரனுக்கு போதை லேசா தெலிந்திருக்கும் அப்பாதன் பேய்சிரிக்கும் சத்தம் அவனுக்கு கேட்கும் இல்லன்னா போதையில நல்லா தூங்கிடுவன் அதனால இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையா இரு என்று முதல் சிஷ்யன் சொன்னான்.


......குடிகாரன் வீடு....🛖

அடியே எனக்கு என்னமோ போல இருக்குதுடி கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பி படுடி என்று மறுபடியும் தன் மனைவியிடம் கொஞ்சிநான் அந்தக் குடிகாரன்.

யோவ் இன்னும்மா. நீ தூங்கலை உனக்கு இதே பொழப்பா போச்சு நீயும் தூங்க மாட்டே என்னையும் தூங்க விட மாட்டே. மரியாதையா தூங்கு என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு மறுபடியும் உறங்கினாள்.

...சாமியாரின் பூஜை அறை....⛺

தம்பி இப்போ போன் பண்ணுடா இதுதான் சரியான நேரம்.

ஏதோ போன் அடிக்கிறேன் பாருங்க என்று சொல்லி விட்டு இரண்டாவது சிஷ்யன் குடிகாரன் வீட்டின் அருகில் இருக்கும் பூச்செடியில் ஒளித்து வைத்து இருக்கும் செல்போனுக்கு போன் செய்தான் .. போனும் ரிங் போனது..

அண்ணே புல்ரிங் போச்சு அண்ணே இந்நேரம் அந்த குடிகாரனும் அவன் மனைவியும் பயந்து தூக்கத்திலிருந்து முழிச்சு இருப்பாங்க என்று மெதுவாக சொன்னான்.

......குடிகாரன் வீடு....🛖

அந்தக் குடிகாரன் டவுசர் பாக்கெட்டில் இருக்கும் செல்போன் வைப்ரஷன் மூடில் இருந்ததால் . அவன் தொடை மீது அதிர்வை ஏற்படுத்தியது அப்போது குடிகாரன் தூங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் கொண்டான் ...மறுபடியும் அவன் மனைவியிடம்... ஏண்டி இன்னைக்கு என்னமோ போல இருக்குதுடி கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பி பாடு என்று மறுப்படியும் சொன்னான்.

யோவ் ..இன்னுமா நீ தூங்கல உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா ஒரு முறை சொன்னா உனக்கு புரியாதா இவ்வளவு நாளா இப்படி நீ தொந்தரவு பண்ணவே மாட்டியே ஏதோ இரண்டு முறை சொல்லுவ அதுக்கப்புறம் நீயே தூங்கிடுவே இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு மரியாதையா தூங்கு
என்று சொல்லி விட்டு மறுபடியும் குடிகாரன் மனைவி குடிகாரனும் தூங்க ஆரம்பித்தார்கள்.

......சாமியாரின் பூஜை அறை....⛺

அண்ணே நேரம் எப்போ இரண்டு மணி இதுவரைக்கும் மூணு முறை போன் செஞ்சுட்டோம் அவங்க நல்லாவே பயந்து இருப்பாங்க.

ஆமாம் தம்பி.. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் போன் செய் அப்பதான் அவங்க பயத்துல ராத்திரி முழுக்க தூங்காமல் இருப்பாங்க என்று முதல் விஷ்யன் சொன்னான்.

......குடிகாரன் வீடு......🛖

மறுபடியும் செல்போன் குடிகாரன் தொடைமீது வைப்ரேஷன் அதிர்வுகளை ஏற்படுத்தியது..
மறுபடியும் எழுந்து கொண்டு அடியே இன்னிக்கு என்னமோ போல இருக்குதுடி கொஞ்சம் திரும்பி படு என்று மறுபடியும் ஒலறியபடியே தன் மனைவியிடம் கொஞ்சினன்.

எப்பவமே இவ்வளவு நேரம் கெஞ்ச மாட்டாரே ...
இன்னைக்கு என்ன ஆச்சு
பாவம் அவருக்கு உண்மையாகவே ஆசை இருக்கு என்று நினைத்துக்கொண்டு தனது ஆடைகளை எல்லாம் கழட்டிவிட்டு தனது கணவனுக்கு சந்தோசத்தை கொடுப்பதற்கு தயாரானாள்.

அந்தக் குடிகாரன் வழக்கம்போல் தனது மனைவியிடம் சிறிது நேரத்திலே ஊமை பட்டாசாய் வெடித்துவிட்டான் ..உடனே தூங்க ஆரம்பித்தன்.

உன்னை பத்தி எனக்கு தெரியாதா ...நீ இப்படித்தான் பண்ணுவேன்னு அதனாலதான் உன் மேல நான் இரக்கமே படமாட்டேன் ஏதோ இவ்வளவு நேரம் கெஞ்சுற என்று வந்தா உன் வேலையை கட்டிடல
என்று கோபத்தோடு சொல்லிவிட்டு தனது உடைகளை மறுபடியும் உடுத்திக்கொண்டு இருவரும் தூங்குவதற்கு தயாரானார்கள்.


.....சாமியாரின் பூஜை அறை.....⛺

அண்ணே ..மணி 4. ஆக போகுது கடைசியா ஒரே ஒரு முறை போன் பண்ணிட்டு விட்டுடலாம் அண்ணே.

ஆமாண்டா பாவம் அந்த குடிகாரனும் அவன் மனைவியும் இன்நேரம் கை காள் உதறிக்கொண்டு உட்கார்ந்து இருப்பாங்க பொழுது விடிந்ததும் நம்ம குருவை தேடிக்கிட்டு ஓடி வருவாங்க அவங்கள நம்ம திட்டப்படி பாதி வழியிலேயே மடக்கி நம்ம நெனச்சத முடிக்கணும்.

ஆமாம் அண்ணே ...

இப்போ கடைசியா போன் பண்ணு..


....குடிகாரன் வீடு...🛖

மறுபடியும் அந்த குடிகாரன் தொடைமிது செல்போன் வைப்ரேஷன் அதிர்வுகளை ஏற்படுத்தியது உடனே குடிகாரனும் எழுந்து கொண்டான் மறுபடியும் ...அடியே இன்னைக்கு என்னமோ போல இருக்குதுடி கொஞ்சம் திரும்பி படுடி என்று தனது மனைவியிடம் கொஞ்சினான்.

யோ ..உனக்கு இவ்வளவு தான் மரியாதை இன்னைக்கு ராத்திரி முழுக்க என்னை நீ தூங்க விடல நீயும் தூங்கல இன்னிக்கு உனக்கு என்ன ஆச்சு
இப்படி என்னை சித்திரவதை சேய்ர இப்பதானே வந்து வீணா போன அதுக்குள்ள மறுபடியுமா போயா என்று அருவருப்போடு சொல்லிவிட்டு உறங்குவதற்கு தயாரானாள் . அப்போது கோழி கூவுற சத்தம் கேட்டது அவளுக்கு உடனே அவள் மனம் நொந்து போனது இப்படி இன்னைக்கு நம்மளை தூங்கவிடாமல் தொந்தரவு பண்ணியே நம்ம தூக்கத்தை கெடுத்துட்டனே இந்த ஆளு என்று புலம்பிக்கொண்டே எழுந்து வாசலை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.


அண்ணே பொழுது விடிஞ்சிடுச்சி இந்நேரம் அந்த குடிகாரனும் அவன் மனைவியும் நம்ம குருவைத் தேடி வந்து கிட்டு இருப்பாங்க நாம உடனே இங்கிருந்து கிளம்பி அவங்கள பாதிவழியில் மடக்கி விடலாம் என்று இருவரும் முடிவு செய்துகொண்டு சாட்டையடி சாமியாருக்கு தெரியாமல் புறப்பட்டார்கள்.

....குடிகாரன் வீடு...🛖

யோவ் நீ எல்லாம் மனுசனா நீ ராத்திரி முழுக்க என்ன தூங்க விடாம இப்படி பண்ணிட்டியே
சரி சரி முதல்ல அந்த செல்போனை சாமியாரிடம் கொடுத்துட்டு வந்துடலாம் வாயா என்று தனது கணவனை அழைத்துக்கொண்டு சாட்டையடி சாமியாரை பார்ப்பதற்கு இருவரும் கிளம்பினார்கள்.

திட்டமிட்டபடி இரண்டு சிஷ்யர்களும் அந்த குடிகாரன் எப்படியும் இந்த வழியாகத்தான் வருவார்கள் என்று நினைத்து காத்திருந்தார்கள் ...
அவர்கள் நினைத்ததைப் போலவே குடிகாரனும் அவன் மனைவியும் வேகமாக நடந்து வருவதை பார்த்தார்கள்.

அண்ணே ..நம்ம நினைச்ச படியே அந்த குடிகாரனும் அவன் மனைவியும் வேகமா வாரங்க அண்ணே நமக்கு இனிமேல் நல்ல காலம் பொறந்திருச்சு அண்ணே என்று உற்சாகத்தோடு சொன்னான் இரண்டாவது சிஷ்யன்.

ஆமாம் தம்பி இனிமேல் நமக்கு நல்ல காலம்தான்
அவங்க வந்ததும் நம்ம சரியா பேசணும் டா அப்பதான் அவங்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வரும் என்று முதல் சிஷ்யன் சொன்னான்.

யோவ் ..அதோ அங்கே நிற்கிறது சாமியாரின் சிஷ்யர்கள் தானே என்றாள் குடிகாரன் மனைவி.

ஆமான்டி ..அவங்க கிட்டயே இந்த செல்போனை கொடுத்துட்டு நம்ம இப்படியே பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போய் விடலாம் என்று குடிகாரனும் சொன்னான்.

ஆமாய்யா ...அவங்க கிட்டயே செல்போனை கொடுத்து விடலாம் என்று நினைத்து இருவரும் சாட்டையடி சாமியாரின் சிஷ்யர்களை பார்த்தபடி வந்தார்கள்.

அண்ணே ..அவங்க கிட்ட வந்துட்டாங்க நம்ம குரு போலவே எப்படி பேசணும்னு தெரியுமா..

அது என்ன பெரிய விஷயமா.. நம்ம குரு முதல்ல என்ன கேப்பாரு ... ராத்திரி முழுக்க தூங்கியிருக்க மாட்டீங்களே என்று சொல்லுவாரு.... பதிலுக்கு அவங்களும் ஆமாம் சாமி என்று சொல்லுவாங்க ....அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாமே எனக்கு தெரியும் என்று சொல்லுவார் ...அதுக்கு அப்புறம் அவங்களும் நம்ம குருவின் சக்தியை பார்த்து உடனே நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் சாமி என்று சொல்லுவாங்க .... இதுதானே... எனக்கு தெரியாதா இப்போ பாரு என்னோட நடிப்பை அவங்க வரட்டும் என்று சொல்லிக்கொண்டு இரண்டு சிஷ்யர்களும் தயாராக நின்றார்கள்.

வணக்கம் ஐயா.. என்று குடிகாரனும் அவன் மனைவியும் சிஷ்யர்களை பார்த்து கும்பிட்டார்கள்.

பதிலுக்கு சிஷ்யர்களும் வணக்கம் வணக்கம் என்று சொல்லிவிட்டு முதல் சிஷ்யன் அவர்களை நன்றாக உற்றுப் பார்த்தபடி சொன்னான்.

இரண்டு பேரும் ராத்திரி முழுக்க தூங்கி இருக்க மாட்டீங்களே என்று கம்பீரமாக சொன்னான் முதல் சிஷ்யன்.

குடிகாரனுக்கும் அவன் மனைவிக்கும் அதிர்ச்சியாக இருந்தது ... நம்ம தூங்காம இருந்தது எப்படி இவர்களுக்கு தெரியும் என்று ஆச்சரியத்தோடு சிஷ்யர்களை பார்த்து கேட்டார்கள்..

ஐயா ..நீங்க சொல்றது எங்களுக்கு ஒன்னும் புரியல என்று தயங்கியபடி சொன்னாள் குடிகாரனின் மனைவி.

புரியும் படி சொல்கிறேன் கேளுங்கள்.. நீங்கள் இருவரும் இன்று இரவு தூங்கவே இல்லை இது எங்களுக்கு நன்றாகவே தெரியும் உன்னுடைய பிரச்சனையும் எனக்கு நன்றாகவே தெரியும் அதனால் நீ எங்களுக்கு 2000 ரூபாய் கொடுத்தாள் இன்று இரவு நான் மட்டும் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களுடைய பிரச்சனையை நான் தீர்த்து வைப்பேன்
அதன் பிறகு நீ சந்தோஷமாக இருக்கலாம் என்று கம்பீரமாகவும் தெனாவட்டாகவும் சொன்னான் முதல் சிஷ்யன்.

உடனே குடிகாரன் மனைவிக்கு வந்தது கோபம் ....
நம்ம கணவனோடு இருந்ததை இவர்கள் ஒளிந்திருந்து பார்த்து இருக்கிறார்கள் நம்முடைய கணவனின் பலவீனத்தை புரிந்துகொண்டு . பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று இவர்கள் நம் கணவனின் முன்பாகவே கேட்கிறார்களே இவர்களை சும்மா விடக்கூடாது என்று நினைத்து உடனே இரண்டு சிஷ்யர்களின் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

ஏண்டா... எனக்கும் என் கணவனுக்கும் ஆயிரம் இருக்கும் உனக்கென்ன வந்தது ..
இந்தப் பிரச்சனையை பற்றி நானே கவலைப்படவில்லை உனக்கு என்னடா ...
நீ வந்து தீர்த்து வைக்கப் போறியா .. உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் இதை எங்களிடம் நேருக்கு நேராக கேட்ப நான் இனி உங்களை சும்மா விடமாட்டேன் என்று ஆவேசத்தோடு சொல்லிக்கொண்டே சிஷ்யர்களின் கன்னத்தில் மாறி மாறி அடித்தாள் குடிகாரனின் மனைவி.

ஏமா எங்கள அடிக்கிறீங்க நாங்க என்ன அப்படி தப்பா கேட்டுடோம் என்று இரண்டாவது சிஷ்யன் சொல்லிக்கொண்டே அழுதான்.

இது தப்பு இல்லையாடா... உங்களுக்கு இதெல்லாம் சாதாரணமா என்று சொல்லிக் கொண்டு மறுபடியும் அடித்தால்.

இத பாரும்மா தேவையில்லாமல் எங்களை அடிக்காதீங்க ..
நீங்க ராத்திரி முழுக்க தூங்காம இருந்தது உண்மைதானே என்று முதல் சிஷ்யன் சற்று கோபத்தோடு சொன்னான்.

ஆமாண்டா நாங்கள் தூங்குவோம் தூங்காமலும் இருப்போம் உனக்கென்னடா வந்தது என்று ஆவேசத்தோடு சொன்னால் குடிகாரனின் மனைவி.

மறுபடியும் சொல்றேன்... உங்களுடைய பிரச்சனையை எங்களால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும் தேவையில்லாமல் கோபப்பட்டு எங்களை அடிக்காதே மா என்று மறுபடியும் சொன்னான் அந்த சிஷ்யன்.

அய்யய்யோ ..நான் என்ன பண்ணுவேன் ...இப்படி என் மானத்தை வாங்கரானே
ராத்திரி நானும் என் வீட்டுக்காரரும் ஒன்று சேர்ந்ததை இப்படி ஒளிஞ்சிருந்து பார்த்துட்டு எங்களை அவமானப்படுத்துரனே என்று சொல்லி கத்தி அழுதாள்

அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து என்ன ஆச்சு என்று கேட்டார்கள்.

பிறகு அனைவரும் ஒன்று கூடி தர்ம அடி அடித்தார்கள் அப்போது ஒருவர் சொன்னார்.

இவர்களை இப்படியே விடக்கூடாது ..உடனே சாட்டையடி சாமியாரிடம் அவர்களை கூட்டிச் செல்ல வேண்டும் என்று சொன்னார்.

ஆமாம் இவர்களை சும்மா விடக்கூடாது அவரிடம் சொன்னாதான் இவர்களுக்கு சரியான தண்டனை கொடுப்பார் என்று சொல்லிவிட்டு இரண்டு சிஷ்யர்களையும் இழுத்துக்கொண்டு சாட்டையடி சாமியாரிடம் சென்றார்கள்.


...சாமியாரின் பூஜை அறை...

வர வர நம்ம சிஷ்யர்கள் நம்மகிட்ட எதையுமே சொல்றது கிடையாது .. காலையில ரெண்டு பேரும் எங்கேயோ போனானுங்க இதுவரைக்கும் வரல என்று புலம்பியபடி சாட்டையடி சாமியார் வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்தார் ..

அப்போது ஊர் மக்கள் சிஷ்யர்களை அடித்து இழுத்து வருவதை பார்த்தார் சாட்டையடி சாமியார்.

ஐயையோ .... நம்ம பித்தலாட்டத்தை எல்லாம் கண்டுபிடித்து விட்டார்களா ஊர்மக்கள் ...நம்ம சிஷ்யர்களை இப்படி அடித்து இழுத்து வருகிறார்களே அடுத்தது நம்மைத்தான் அடிக்கப் போகிறார்கள் என்று நினைத்து சாட்டையடி சாமியார் பீதியில் கை காள் நடுங்கியது.

அய்யா ..உங்கள் சிஷ்யர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா என்று கூட்டத்தில் ஒருவர் ஆவேசமாக சொன்னார்.

யாரும் கோபப்படாமல் பொறுமையாக சொல்லுங்க அப்பாதான் என்ன நடந்ததுன்னு எனக்கு புரியும் என்று சற்று பயத்தோடு சொன்னார் சாட்டையடி சாமியார்.

உங்க இரண்டு சிஷ்யர்களும் இதோ இந்த அம்மாவும் அவருடைய கணவனும் ஒன்றக இருந்ததை மறைந்திருந்து பார்த்திருக்காங்க.
இது எவ்வளவு பெரிய அவமானத்தை அவங்களுக்கு ஏற்படுத்தி இருக்கு தெரியுமா அவங்கலை பார்த்ததும் இல்லாமல் இதைப்பற்றி இவர்களிடமே கேட்கிறாங்க இவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தா எப்படி செய்வாங்க என்று ஆவேசமாக சொன்னார்.

அப்படியா செய்தார்கள் என் சிஷ்யர்கள் .. என்னால் நம்பவே முடிய வில்லையே.

ஐயா ..என் கணவருக்கு உங்களுடைய செல்போன் கீழே கிடைத்தது அதை நாங்கள் உங்களிடம் கொடுக்கலாம் என்று காலையில் வந்தோம் .. அப்போது உங்கள் சிஷ்யர்கள் எங்களிடம் வந்து நீங்கள் இரவு முழுக்க தூங்காமல் இருந்தது எங்களுக்கு தெரியும் ..
இந்த பிரச்சினையை நான் சரி செய்கிறேன் என்று எங்களை அவமானம் படுத்துகிறான் ஐயா இதற்கு நீங்கள் தான் ஒரு சரியான முடிவு சொல்ல வேண்டும் என்று வருத்தத்தோடு குடிகாரன் மனைவி சாட்டையாடி சாமியாரிடம் சொன்னாள்.

நடந்ததை பார்த்தாள் நம்ம சிஷ்யர்கள் .. நமக்கு எதிரா ஏதோ திட்டம் போட்டு மாட்டிகிட்டான் போல் தெரிகிறது . இருந்தாலும் இவர்களை தனியாக விசாரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு சாட்டையடி சாமியார் ஊர் மக்களிடம் சொன்னார்.

நான் ஏன் சிஷ்யர்களிடம் சிறிது நேரம் தனியாக பேச வேண்டும் பிறகு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நான் சொல்கிறேன் என்று சாட்டையடி சாமியார் சொன்னார்.

உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் சாமி என்று ஊர் மக்களும் சொன்னார்கள்
பிறகு சாட்டையடி சாமியார் சிஷ்யர்களை அழைத்து சிறிது தூரம் தனியாக பேசினார்.

நம்ம செல்போன் எப்படிடா அந்த குடிகாரன் வீட்டுக்கு போச்சு உண்மையை சொல்லுங்கடா இல்லன்னா உங்க ரெண்டு பேரையும் உயிரோடு விடமாட்டேன் என்று மிரட்டலாய் கேட்டார்.

குருவே எங்களை மன்னிச்சிடுங்க நாங்கள் உங்களுக்குத் தெரியாமல் செல்போனை ஒளிக்க வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து அந்த குடிகாரன் வீட்டில் ஒலிக்க வைத்தோம் . ராத்திரி முழுக்க அந்த செல்போனுக்கு போன் செய்தோம் உங்களுக்கு தெரியாமலே ஆனால் என்ன நடந்தது என்று தெரியல நாங்களும் . நீங்கள் கேட்பது போலவே ராத்திரி முழுக்க நீங்கள் தூங்கவில்லை என்று சொன்னேன் அதற்கு அந்த பொம்பள எங்களை அடிச்சுட்டாங்க குருவே இது தன் நடந்தது எங்களை நீங்கள் தான் காப்பாத்தணும் குருவே எங்களுக்கு உங்களை விட்டால் வேறு யாரும் கிடையாது குருவே என்று இருவரும் கெஞ்சினார்கள்.

நம்முடைய எல்லாம் ரகசியமும் நம்ம சிஷ்யர்களுக்கு தெரியும் இவர்களை காட்டிக் கொடுத்தால் நம்மையும் இவர்கள் காட்டிக் கொடுத்து விடுவார்கள் .. அதனால் இவர்களை நாம தான் காப்பாற்ற வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சாட்டையடி சாமியார் பிறகு ஊர் மக்கள் முன்பாக வந்து நின்று சொன்னார்.

நேற்று இரவு என் சிஷ்யர்களை ஊரை சுற்றி வரும்படி சொன்னேன் ஏதாவது பேய் பிசாசு நடமாட்டம் இருந்தால் எனக்கு வந்து சொல்லுங்கள் என்று இருவரையும் அனுப்பி வைத்தேன் இவர்களும் அப்படி சுற்றி வரும்போது உங்கள் வீட்டின் அருகில் வந்ததும் நீங்கள் உல்லாசமாக இருக்கிறீர்கள் ஏதோ வாலிப கோலாரில் அவர்கள் உங்களை ஒளிந்திருந்து பார்த்திருக்கிறார்கள் ...அப்போது செல்போனும் தவற விட்டுவிட்டார்கள் இதுதான் நடந்தது இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது இவர்களுக்கு ஏன் சாட்டையால் 10 அடி அடிக்கிறேன் நீங்களும் ஆளுக்கு 10 அடி ஏன் சாட்டையால் இவர்களை அடிக்கலாம்
இதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை என்று சாட்டையடி சாமியார் சொன்னார்.

பிறகு சாட்டையடி சாமியார் ஆவேசமாக தனது சிஷ்யர்களை சாட்டையால் வெளுத்து வாங்கினார் ....
எனக்கு தெரியாமலே இப்படி ஒரு காரியத்தை செய்தீர்களே என்று மனதில் நினைத்துக்கொண்டு சாட்டையால் வெளுத்து வாங்கினார்
பிறகு ஊர்மக்களும் சாட்டையால் ஒரு சிலர் சிஷ்யர்களை அடித்தார்கள்
பிறகு குடிகாரனும் அவன் மனைவியும் சாட்டையடி சாமியாரிடம் செல்போனை கொடுத்துவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றார்கள் .. அப்போது சாட்டையடி சாமியார் செல் போனை வாங்கி பார்த்தார் அப்போது வைப்ரேஷன் மோடில் இருந்ததை பார்த்து புரிந்து கொண்டார் சாட்டையடி சாமியார்.

நல்லவேளை நீங்கள் செல்போனை நார்மல் மூடு மாற்றாமல் மறந்துவிட்டு வந்துட்டீங்க இல்லன்னா நீங்கள் இருவரும் எனக்குத் தெரியாமலே இப்படி திட்டம் போட்டு என்னை ஏமாத்தி இருப்பீங்க கடவுள் என் பக்கம் இருந்ததால் உங்களை என்னிடமே கொண்டுவந்து நிறுத்திவிட்டார் இனிமேலாவது ஒழுங்கா இருங்க இல்லனா இந்த ஊருக்கே உங்க இரண்டு பேரால்தான் சோதனை காலம் வந்தது என்று சொல்லி விடுவேன் பிறகு இந்த ஊர் மக்கள் உங்களை அடித்தேன் சாகடித்து விடுவார்கள் இனிமேலாவது ஒழுங்கா இருங்க என்று மிரட்டிய படி சாட்டையடி சாமியார் தன் சிஷ்யர்களிடம் சொன்னார்.

சிஷ்யர்களும் செய்த தவறுக்கு சாட்டையால் அடி வாங்கிக்கொண்டு தலை குனிந்து தனது குருவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.



தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்...28👇


...நாட்கள் நகர்ந்தது...


பரந்தாமனின் உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேறியது.
தீப்புண் காயமும் ஓரளவுக்கு சரியானது ஆனால் பரந்தாமனின் மனம் மட்டும் எப்போதும் போலவே கவலையோடு இருந்தான் அவன் முகத்தில் எந்த ஒரு சிரிப்பும் மலர்ச்சியும் எதுவுமே தெரியவில்லை . யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்தான்.

சங்கர் நம் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விட்டான் என்று நினைத்து
அவனை பெருமையாக நினைத்தோம். ஆனால் நம்முடைய லட்சியத்திற்கு இவன் இப்போது எதிரியாக மாறி விட்டானே
இவனை என்ன செய்து நாம் தப்பிக்க முடியும் என்று நினைத்து பரந்தாமன் பெரும் சோகத்தில் இருந்தான். அவன் கையிலிருந்த தீப் தீப்புண் வலி ஆறினாலும் அவன் மனவலி தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது அப்போது அவனுக்கு பம்பு செட்டுக்கு சென்று வரவேண்டும் என்று அவன் மனம் துடித்தது.. காரணம் ..தனது தாய் படத்தின் பின்னால் கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது அதனால் இன்று பம்பு செட்டுக்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தான் பரந்தாமன்.

பரந்தாமனின் உடல்நிலை சரியானதாள். சாந்திக்கு முகம் சந்தோஷமாக இருந்தது
இனிமேல் நமக்கு கவலை இல்லை என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமனிடம் பாசமாக சந்தோஷமாக பேசினாள்.

என்னங்க ...இன்னைக்கு உங்களுக்கு பிடித்தமான குரவை மீன் குழம்பு வச்சு இருக்கேன் வாங்க சாப்பிடுங்க என்று பாசமாக அழைத்தான்.

அதை காதில் வாங்காமல் பரந்தாமன்...சரி அது இருக்கட்டும் நம்ம சங்கர் காணாமல் போனவர்களை தேடப் போய் இருந்தனே அந்த சமாசாரம் என்ன ஆச்சு மா என்று பொறுமையாக கேட்டான் பரந்தாமன்.

இப்பத்தான் உடம்பு மெல்ல மெல்ல தேறி வந்து இருக்கு
அதுக்குள்ள உங்க தம்பி திருமணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிச்சிடடீங்களா. முதல்ல எதைப்பற்றியும் யோசிக்காமல் நல்லா சாப்பிடுங்க சந்தோஷமா இருங்க. அதுக்கப்புறம் உங்க தம்பியின் திருமணத்தை நல்ல நீங்க நினைச்சபடி திருவிழா போல செய்யலாம் இப்ப மொதல்ல வந்து சாப்பிடுங்க என்று பரந்தாமனை கட்டாயப்படுத்தி சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்றாள் சாந்தி.

பரந்தாமனுக்கு உணவை பரிமாறி கொண்டிருந்தாள் அப்போது மீண்டும் பரந்தாமன் சங்கரை பற்றி கேட்டான்.

காணாமல் போனவர்கள் இன்னும் கொஞ்ச நாளில் கண்டுபிடித்துவிடுவானா சங்கர் என்று கேட்டான் .

இதுவரைக்கும் எந்த தகவலும் வந்து சொல்லிங்க இப்போதெல்லாம் காலையிலேயே கிளம்பி போகிறார் காணாமல்போனவர்களை முடிந்தவரை சீக்கிரமாக கண்டுபிடிக்க வேண்டுமென்று ஆனால் அவர் கண்களுக்கு இதுவரை யாரும் சிக்கவில்லை பாவம் சங்கர் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற முடிவில் சுற்றித் திரிகிறார்.

சாந்தியின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு மேலும் கவலையாக இருந்தது அப்படி என்றால் சங்கர் காலையிலேயே காணாமல்போனவர்களை தேட போகிறானா அப்படி என்றால் இன்னும் கொஞ்ச நாட்களில் கண்டுபிடித்துவிடுவான் நம்முடைய வேஷமும் கலைந்து போகும் அதோடு நம் உயிர் வாழ்வதே வேஸ்ட் என்று மனதில் நினைத்தான். சுவையாக இருக்கும் மீன் குழம்பும் கசப்பான உணர்வை ஏற்படுத்தியது அவனுக்கு உடனே சாப்பிடுவதை பாதியில் நிறுத்திக் கொண்டு எழுந்து கொண்டான் பரந்தாமன்.

என்னங்க.. குறவை மீன் குழம்பு நீங்க நல்லா சாப்பிடுவீங்க என்றுதனே வச்சேன்.
இப்போ பாதியிலேயே எந்திரிச்சு டிங்க சாப்பிடுங்க என்றாள் சாந்தி.

குழம்பு நல்லா தான் இருக்கு இதை நைட்டுக்கு சாப்பிடலாம் அப்படியே எடுத்து வை. நான் தோட்டத்துக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன் என்று சொன்னான்.

தோட்டத்துக்கு. இவ்வளவு சீக்கிரம் போக வேணாங்க அங்க என்ன நீங்க போயிட்டு செய்யப் போறீங்க எல்லா வேலையும் ரேகா
பார்த்துக்கிறாள் அதனால நீங்க கொஞ்ச நாள் ஓய்வு எடுங்க.

இல்லை நான் இன்று தோட்டத்துக்கு சென்று வரலாம் என்று நினைக்கிறேன் அப்போது பண்ணையார் பரந்தாமனின் பேச்சை கேட்டு கொண்டிருந்தார்..

இப்பதான் கொஞ்சநளா எழுந்து நடக்க ஆரம்பிச்ச அதுக்குள்ள எதுக்குப்பா வெளியில போகணும் என்று பண்ணையார் கேட்டார்.

இருக்கட்டும் அப்பா. தோட்டத்துக்கு போயிட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு நான் போயிட்டு வருகிறேன் தம்பிங்க எங்கே என்று சொல்லிக்கொண்டே சந்திரனையும் தீணாவையும் அழத்தபடி சென்றான் பரந்தாமன்.

பிறகு மூவரும் வழக்கம்போல பைக்கில் அமர்ந்தார்கள் தோட்டத்திற்கு செல்ல
அப்போது பண்ணையார் பரந்தாம இனிமேல் நீ உன் அம்மா படத்தின் முன்பு நின்று. இதுபோல விபரீதமாக வேண்டிக் கொள்ள கூடாது.. இது என்னோட வாக்குறுதி இதை நீ இனிமேல் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும் இன்னொருமுறை நீ உன் அம்மா படத்தின் முன்பு கற்பூர தீபத்தை ஏற்றி உடம்பை புண்ணாக்கி கொண்டால் எனக்கு கோபம் வந்து விடும். இனிமேல் இதுபோன்ற காரியத்தை எல்லாம் நீ செய்யக் கூடாது என்று கண்டிப்போடு சொன்னார்.

சரிப்பா நான் இனிமேல் இதுபோல நடந்து கொள்ள மாட்டேன் என்றான் பரந்தாமன்.

நானும் இனிமேல் சந்திரன் திருமணத்தை. எந்த தடை வந்தாலும் நிறுத்தப்போவதில்லை காணாமல் போனவர்கள் கிடைக்கவில்லை என்றால் கூட சந்திரன் திருமணத்தை நடத்த போகிறேன் ஏனென்றால் எனக்கு உன்னுடைய சந்தோசம் தான் முக்கியம் நீ தம்பி திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற விபரீதமான வேண்டுதலை எப்போது வேண்டிக்கொண்டாயோ அப்போதே என் மனம் மாறிவிட்டது நீ உன் தம்பிகள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் போது
நான் அதற்கு தடையாக எந்த விவகாரமும் செய்யப்போவதில்லை என்று முடிவுக்கு வந்து விட்டேன் இனிமேல் காணாமல் போனவர்கள் கிடைக்கவில்லை என்றாலும் சந்திரன் திருமணத்தை. நீ ஆசைப்பட்டபடி. நடத்தலாம் என்று சிரித்துக்கொண்டே பண்ணையார் சந்தோஷமாக சொன்னார்.

பண்ணையாரின் பேச்சு சாந்திக்கு மேலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது..

தனது தந்தையின் பேச்சை கேட்டதும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் சந்தோஷம் முகத்தில் பொங்கியது அதேசமயம் பரந்தாமனுக்கு மேலும் கவலை அதிகமானது நம்ம எந்தக் ஒரு பொய் சொன்னாலும் அது கொஞ்ச நாளிலே நமக்கு எதிராகவே மாறிவிடுகிறது இப்படித்தான் சங்கரும் நமக்கு நல்லது செய்வதைப்போல இருந்தான் பிறகு அவனும் நம் லட்சத்திற்கு எதிராக இப்போது செயல்படுகிறான்.
நம்ம அம்மாவிடம் இந்தப் பிரச்சினையிலிருந்து என்னைக் காப்பாற்று தாயே தம்பியின் திருமணத்தையும் நிறுத்திவிட வேண்டும் தாயே என்று கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டோம் ஆனால் எல்லோரும் கேட்டபோது தம்பியின் திருமணம் நன்றாக நடக்க வேண்டும் அதனால்தான் கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டேன் என்று பொய் சொன்னோம்.
அப்போது எல்லோரிடமும் நம்முடைய மதிப்பு மேலும் அதிகமானது ஆனால் நாம் சொன்ன வார்த்தையை நம்பி இப்போது நம்முடைய அப்பா இனிமேல் தம்பியின் திருமணத்தை எந்த ஒரு தடங்கல் வந்தாலும் நிறுத்தக் கூடாது என்று முடிவு செய்து விட்டாரே. நாம் சொன்ன பொய் இப்போது நமக்கே எதிராக மாறிவிட்டதே நமக்கு கெட்ட நேரம் நெருங்கிக் கொண்டு வருகிறது அதனால் தான் இப்படி எல்லாம் விஷயங்களும் நமக்கு எதிராகவே மாறுகிறது என்று யோசித்தபடி சிலைபோல அப்படியே நின்று இருந்தான் பரந்தாமன்.


பரந்தாமன் அசையாமல் நின்றிருப்பதை சாந்தி கவனித்தால் அப்போது. என்னங்க... என்ன ஆச்சு உங்களுக்கு இப்பவே கனவு காண ஆரம்பிச்சிட்டீங்களா
தம்பியின் திருமணத்தை எப்படி நடத்துவது என்று சிரித்துக்கொண்டே கிண்டல் அடித்தால் அப்போது சந்திரன் தீனா பண்ணையார் எல்லோரும் சந்தோஷமாக சிரித்தார்கள் அப்போது பரந்தாமனும் முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு இலேசாக சிரிப்பது போல நடித்தான் பிறகு மூவரும் தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.


மாமா இப்பதன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா
உங்க பிள்ளைகளும் இப்பதான் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க நீங்களும் சரியான முடிவைத்தான் எடுத்து இரக்கீங்க சந்திரன் திருமணத்தை தள்ளிப் போடக்கூடாது என்று.

சங்கர் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வில்லை என்றாலும் நம்முடைய சந்திரன் திருமணத்தை இந்த முறை சிறப்பாக நடத்த வேண்டும் மாமா..

ஆமாமா... இந்தமுறை சந்திரன் திருமணத்தை பரந்தாமன் நினைத்தபடி சந்தோசமாக நடத்தட்டும் இனிமேல் திருமணத்திற்கு எந்த மறுப்பும் நான் தெரிவிக்க போவதில்லை ஏனென்றால் என் மகன்களின் சந்தோஷத்தையும் நான் கவனிக்க வேண்டும் அதனால் எனக்கு என் மகன்கள் சந்தோஷமும் நிம்மதியும் தான் எனக்கு முக்கியம்.
அதேபோல காணாமல்போனவர்களை தேடுவதற்கு வேறு ஒரு திட்டமும் வச்சிருக்கேன் திருமணம் முடிந்ததும் காணாமல் போனவர்களை தேடுவதற்கு சங்கரோட நம்ம ஊர் மக்களையும் சிலபேரை தேடுவதற்கு அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் அவர்களை இரண்டு பிரிவாக பிரித்து ஆளுக்கு ஒரு திசையில் தேடுவதற்கு முடிவு செய்திருக்கிறேன் என்று அவர் சொன்னார்...

நான் நினைக்கிறேன் காணாமல்போனவர்களை திருமணத்துக்கு முன்பாகவே சங்கர் கண்டிப்பா கண்டுபிடித்து விடுவார் ஏனென்றால் அவர் ஒரே குறிக்கோளோடு அவர்களை தேடிக் கொண்டிருக்கிறார் கண்டிப்பா அவர் கண்டுபிடித்து விடுகிறார் என்று சாந்தி சொன்னேன்.

எனக்கும் அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு நிச்சயம் திருமணத்திற்கு முன்னாடியே காணாமல் போனவர்கள் கிடைத்து விடுவார்கள் சந்திரன் திருமணத்திற்கு அவர்களும் வந்து ஆசீர்வாதம் செய்வார்கள் இது நடக்கத்தான் போகுது பாரு என்று நம்பிக்கையோடு பண்ணையாரும் சாந்தியும் பேசிக்கொண்டார்கள்.

வழக்கம் போல மூவரும் பம்புசெட்டின் அருகில் நின்றார்கள்.அப்போது பம்புசெட்டின் கதவு சாத்தியிருந்ததை கவனித்தார்கள் ... ரேகா ஊருக்குள்ளே சென்றிருப்பாள் என்று நினைத்து மூவரும் கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தாரகள் அப்போது தீனா பரந்தாமனிடம் சற்று சந்தோஷமாக சொன்னான்.

அண்ணே நீங்க அம்மாவிடம் கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டது வீணகவில்லை அண்ணே ... நீங்க நெனச்சபடி சந்திரன் அண்ணனின் திருமணம் சிறப்பாக நடத்தலாம் அண்ணே என்று சொன்னான் தீனா.

நான் அம்மாவிடம் வேண்டிக் கொண்டது சந்திரனின் திருமணம் நடக்கக்கூடாது என்றுதான் . என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் சற்று முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு பொறுமையாக சொன்னான்... நீ சொல்வதெல்லாம் சரிதான் தம்பி ஆனால் இந்த சங்கர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துவிட்டால் எல்லா உண்மையும் ஊர் மக்களுக்கும் நம் குடும்பத்திற்கும் தெரியவரும் அப்போது சந்திரன் திருமணத்தையும் கண்டிப்பா அப்பா நிறுத்தி விடுவார் ..
அவர் திருமணத்தை நிறுத்தவில்லை என்றாலும் சந்திரனின் மாமனார் மாமியார் கண்டிப்பாக திருமணத்தை நிறுத்திவிடுவார்கள் ..
இப்படிப்பட்டவனுக்கு என் மகளை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று சொல்வார்கள்.
இப்படி இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்குது தம்பி அதுக்குள்ள நம்ம சந்தோஷமா திருமண வேலையை பார்க்க முடியுமா என்று பரந்தாமன் சொன்னான்.

அண்ணனின் பேச்சைக் கேட்டதும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் பெரும் கவலையாக இருந்தது..
அண்ணன் சொல்வது உண்மைதானே என்று நினைத்து இருவரும் அமைதியாக சோகத்தில் நின்றார்கள் அப்போது சந்திரன் பரந்தாமனிடம் கேட்டான்.

அப்படின்னா நம்மா தப்பிக்கவே முடியாது அண்ணா ....நமக்கு விடிவு காலமே பிறக்காதா ஏதோ குடிபோதையில் நாங்கள் தவறு செய்து விட்டோம் அதனால் நமக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்றான் சந்திரன்.

என்ன தம்பி இவ்வளவு சாதரணமா சொல்றீங்க இரண்டு குடும்பங்களை கெடுத்துருக்கும் அவங்களுடைய வாழ்க்கை பாழாகி விட்டது .. இது உனக்கு சாதாரண தவறா.. நீ சொல்வது ரொம்ப தப்பு தம்பி. நம்ம மூணு பேரும் இரண்டு குடும்பங்களை கெடுத்துவிட்டோம் இதற்கு நிச்சயம் சங்கர் நமக்கு தண்டனை வாங்கித் தருவான். இதுவரைக்கும் அவன் கண்களுக்கு காணாமல் போனவர்கள் சிக்க வில்லை ஆனால் நிச்சயம் நாளைக்கு அல்லது அடுத்த வாரம்
அல்லது அடுத்த மாதத்தில் இப்படி என்றாவது ஒருநாள் நிச்சயம் நம்முடைய வேஷத்தை கலைத்து விடுவான் சங்கர் ... இந்த நிலைமையில் நாம் எப்படி திருமண வேலையை பார்ப்பது எனக்கு ஒன்றுமே புரியவில்லை தம்பி எனக்கு மனசு கஷ்டமா இருக்கு அதனாலதான் நான் தோட்டத்திற்கு சென்று வரலாம் என்று உங்களை அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன் இனி இதைப் பற்றி பேசி எந்த பலனும் இல்லை..
சரி நீங்கள் இருவரும் தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வாங்க
நான் சிறிது நேரம் இங்கே கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் அமைதியாக இருந்தான்.

சந்திரனும் தீனாவும் தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள் அப்போது பரந்தாமன் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் சேர்த்து வைத்திருந்த பணப்பெட்டியை திறந்து பார்த்தான் அதில் நிரம்பியிருந்த பணக்கட்டுகள் அவன் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தியது அப்போது அவன் முகம் அந்தப் பணத்தை பார்த்ததும் பூவாய் மலர்ந்தது.... அப்போது அவன் மனம் சொன்னது ..
இந்த பணத்தை நாம் எப்படியாவது அனுபவிக்க வேண்டும் இதை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது எத்தனையோ சூழ்ச்சிகளை செய்து இவ்வளவு பணத்தை சேர்த்து வைத்திருக்கிறோம்
இதை வேறு எவரும் அனுபவிக்க கூடாது ..நான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று அவன் மனம் சொன்னது பிறகு பரந்தாமன் பணப் பெட்டியை மூடிவிட்டு மெதுவாக இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் இல்லை பிறகு வழக்கம்போல தனது தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டினான் மௌனமாக.

அம்மா நான் உன்னிடம் கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக்கொண்டேன் ஆனால் நீ என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு குறைந்துகொண்டே வருகிறது... காரணம் ....அப்பாவும் தம்பியின் திருமணத்தை இனிமேல் எந்த தடை வந்தாலும் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார் அதேசமயம் இந்த சங்கரும் என்றாவது ஒருநாள் நிச்சயம் காணாமல்போனவர்களை கண்டுபிடித்துவிடுவான் அதனால் இப்படி இக்கட்டான நிலைமையில் நான் மாட்டிக்கொண்டேன் உன்னாலும் என்னை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம் தாயே அதனால் தான் நான் எப்போதுமே வருத்தமாகவே இருக்கிறேன்.. என்னுடைய நிலைமை உனக்கு மட்டும் தான் தெரியும் அதனால்தான் எந்த ஒரு கஷ்டம் என்றாலும் நான் எந்த தெய்வத்திடமும் போக மாட்டேன் எனக்கு எல்லா தெய்வமும் நீதான் தாயே ...எனக்கு உன்னை விட்டால் வேறு யாரும் கிடையாது அம்மா என்னுடைய தவறு எல்லோரும் கண்டுபிடித்துவிட்டால் நிச்சயம் நான் உயிரோடு இருக்க மாட்டேன் அதனால் என்னை நீ இந்த பூமியில் வாழ வைப்பதும் இல்லை உன்னோடு அழைத்து கொள்வதும் உன் கையில் தான் இருக்கிறது அம்மா ..என்று வேண்டிக்கொண்டு பூஜை அறையில் இருந்து வேலியே வந்து மறுபடியும் கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் சந்திரனும் தீனாவும் தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு வருவதை கவனித்தான்பரந்தாமன்.... அதேசமயம் மற்றொரு திசையில் காணாமல் போனவர்களை தேடிவிட்டு சங்கர் திரும்பிக்கொண்டு வந்திருப்பதையும் கவனித்தான் பரந்தாமன்... பிறகு சந்திரன் தீனா பரந்தாமன் சங்கர் அனைவரும் பம்பு செட்டின் அருகில் ஒன்று சேர்ந்தார்கள்.

என்ன சங்கர் காணாமல்
போனவங்கள பத்தி ஏதாவது தகவல் தெரிந்ததா என்று சந்தோசமாக கேட்பதைப் போல கேட்டான் பரந்தாமன்.

நானும் முடிந்தவரை ஒவ்வொரு இடமா அவங்கள நல்ல கவனிச்சு தான் தேடுகிறேன் ஐயா.. ஆனால் அவர்கள் என் கண்களுக்கு சிக்கவே இல்லை என்று சற்று வருத்தமாக சொன்னான் சங்கர்.

இதற்கெல்லாம் கவலைப்படாதே சங்கர் நீ காணாமல் போனவர்களை சாதாரணமாக தேடு அவர்கள் கிடைக்கும்போது கிடைக்கட்டும் அதற்காக நீ அதிகாலையிலே போவது. பிறகு பொழுது சாய்ந்ததும் வருவது. இப்படி தினமும் சென்று வந்தால் உன் உடம்பு என்னத்துக்கு ஆகும் அதனால் நீ பழையபடி பொறுமையாகவே தேடு சங்கர் ஏனென்றால் காணாமல் போனவர்கள் கிடைக்கவில்லை என்றாலும். சந்திரனின் திருமணத்தை அப்பா நடத்தத்தான் போகிறார் அதனால் நீ அவசரப்படாமல் நிதானமாகவே தேடு .. தேவைப்பட்டால் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு நிதானமாக தேடு சங்கர்
இனிமேல் தேடுவதில் நீ அவசரப்படவேண்டாம் என்று சங்கரின் உற்சாகத்தை திசை திரும்பும் படி பரந்தாமன் பேசினான்.

பரவாயில்லை ஐயா ...நான் எப்படியாவது சின்னய்யா திருமணத்துக்குள் அவர்களை கண்டுபிடித்து விடுவேன்
அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஐயா.. என்று சம்மட்டி அடி அடித்ததுபோல பரந்தாமனிடம் சங்கர் சொன்னான்.

ஷங்கரின் பேச்சைக் கேட்டதும் மூவருக்கும் வருத்தமாக இருந்தது

உடனே பரந்தாமன் நாங்கள் கிளம்புகிறோம் சங்கர்
பம்பு செட்டின் கதவு சாத்தி இருந்தது நாங்கள் வரும்போது ..உன் மனைவி ஊருக்குள்ளே போயிருப்பாள் என்று தெரிகிறது அதனால் நீ அவளை எங்கும் தேட வேண்டாம் என்று சொன்னான் பரந்தாமன்.

ஆமாம் அய்யா அவள் தினமும் ஊருக்குள்ளே சென்று வருவது வழக்கம்தான் நான் பார்த்துக்கொள்கிறேன் உங்களுக்கு வலது கையில் ஏதோ காயம் இருப்பதாக என் மனைவி சொன்னாள் இப்போது காயம் சரியாகி விட்டதா ஐயா என்று சொல்லிக்கொண்டே பரந்தாமனின் வலதுகயை கவனித்தான் சங்கர் .


அது ஒன்றும் இல்லை சாதாரண காயம் தான் ... நான் கிளம்புகிறேன் என்று அவசரமாக மூவரும் கிளம்பினார்கள்.

சரி நீங்கள் கிளம்புங்கள் ஐயா என்று சங்கர் சொன்னான்.

மூவரும் வருத்தத்தோடு வீட்டுக்கு கிளம்பினார்கள்.


சிறிது நேரத்தில் வழக்கம் போல ரேகா ஒரு தூக்கு டிபினில் குழம்பு எடுத்துக்கொண்டு வயல்வெளியில் பளிச்சென்று புடவை கட்டிக்கொண்டு தலையில் பூ வைத்துக் கொண்டு அழகாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்
இதை சங்கர் அவள் வரும் அழகைப் பார்த்து ரசித்தபடி நின்றிருந்தான்.

என்ன மாமா ..இன்னைக்கு எனக்கு முன்னாடியே வந்துட்டீங்க.

ஆமா புள்ள ரொம்ப களைப்பா இருந்தது அதனால திரும்பி வந்துவிட்டேன்.

சரி எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க.

நீ என்னிடம் எதுவுமே சொல்லல ஏதாவது வாங்கிட்டு வா என்று சொன்னால் தானே தெரியும் அதனால நான் வந்துட்டேன்.

இதெல்லாம் சொல்லி தான் வாங்கிட்டு வரணுமா .. நீங்களா வாங்கிட்டு வர மாட்டீங்களா
ஒரு பொண்டாட்டிக்கு புருசங்காரன் வெளியிலிருந்து வரும் போது பூ வாங்கிட்டு வரணும் ஆனால் நீங்களும் தினமும் போயிட்டு வர்றீங்க ஆனால் ஒரு நாள் கூட பூ வாங்கிட்டு வந்தது கிடையாது.

ஆமாம் புள்ள நானும் இதை யோசிக்கவே இல்ல புள்ள இனிமேல் கண்டிப்பா பூ வாங்கி வரேன்.

உங்களுக்கு எப்பவுமே காணாமல் போனவர்களை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் உங்க மனசுல ஓடிக்கிட்டு இருக்கு அதனாலதான் பூ வாங்கிட்டு போகணும் என்ற எண்ணம் உங்களுக்கு தோணவே இல்லை மாமா என்று கிண்டலாய் சொன்னாள் ரேகா.

நீ சொல்றது உண்மைதான் புள்ள சந்திரன் திருமணத்துக்கு குள்ள எப்படியாவது கண்டு பிடிக்கணும்னு நினைக்கிறேன் ஆனால் முடியுமா என்று தான் தெரியல புள்ள .

நீங்க இப்படி தேடினால் அவங்க கிடைக்க மாட்டாங்க மாமா அவங்கள பண்ணையார் சொன்னபடி திட்டம் போட்டு தான் தேடணும் அப்பதான் அவங்க கிடைப்பாங்க.

உண்மைதான் புள்ள ஏதாச்சும் திட்டம் போட்டு தான் அவங்கள தேடணும் இல்லன்னா தினமும் இப்படி சும்மா தன் திரும்பி வரணும்.

அதுக்கு நான் ஒரு யோசனை சொல்றேன் இப்ப நீங்க குளிச்சுட்டு வாங்க முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடலாம் என்று புன்னகையோடு சொன்னாள் ரேகா.

பம்பு செட்டின் தண்ணீர் தொட்டியில் சங்கரை ரேகா ஆசையோடு குளிப்பாட்டினாள் சங்கரும் ரேகாவின் அழகில் மயங்கி அவளை தண்ணீர் தொட்டியில் இழுத்துப்போட்டு இருவரும் விளையாடியபடி குளித்தார்கள்

இரவு நேரம் ஆனதும்... இருவரும் உணவு அருந்தி விட்டு வழக்கம்போல வெளியில் கட்டில் போட்டு இருவரும் படுத்துக்கொண்டு பேசினார்கள்.

நீ சொன்னபடி ...பரந்தாமன். அவர் வலது கையில் பெரிய தீப்புண் காயத்தை நான் கவனித்தேன் புள்ள ...அவங்க இன்னைக்கு சாயங்காலம் வந்திருந்தாங்க நானும் அவரிடம் காயத்தை பற்றி விசாரித்தேன் ஆனால் மூன்று பேருமே அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அவசரமாய் கிளம்பிட்டாங்க புள்ள என்று சங்கர் சொன்னான்.

ஆமா மாமா ..எனக்கு என்னமோ இந்த மூன்று பேரையும் பார்த்தாலே பயமா இருக்கு என்னைக்கு தான் இந்த பயம் எல்லாம் போகுமோ என்று தெரியவில்லை
நீங்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தால் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு தெரியும் மாமா.

நானும் அதனால் தான் இப்போதெல்லாம் காலையிலேயே கிளம்பி விடுகிறேன் . அப்படியும் அவங்க கிடைக்க மாட்டேங்கிறாங்க நீ ஏதாவது ஒரு ஐடியா சொல்லேன்.

முதல்ல காணாமல் போன குடும்பத்தை பண்ணையார் மகன்கள் தேடிக் கொண்டிருப்பது எல்லோருக்குமே தெரியும் அப்போது கனகாவுக்கும் இந்த விஷயம் தெரியும் ஏற்கனவே காணாமல் போனவர்களை பண்ணையார் மகன்கள் தேடிக்கொண்டு இருப்பது கனகாவுக்கு நன்றாகவே தெரியும் அதே போல நம்மையும் பண்ணையார் மகன்கள் தேடுவார்கள் என்று நினைத்து கனகா ரொம்ப வெகுதூரத்தில் போயிருப்பாள் என்று நான் நினைக்கிறேன் மாமா..

நீ சொல்றதும் உண்மைதான் புள்ள ஏற்கனவே காணாமல்போனவர்களை பண்ணையார் மகன்கள் தேடிக்கொண்டு இருப்பது கனகாவுக்கு தெரியும் ... அப்படின்னா கனகா நம்மையும் இவர்கள் தேடுவார்கள் என்று நினைத்து நீ சொல்வதைப் போல யாரும் போக முடியாத ஊருக்கு அவள் நிச்சயம் போயிருப்பாள் ஏனென்றால் அப்போது தான் பண்ணையார் மகன்களால் நம்மை கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்து அதனால் நிச்சயம் நீ சொல்வதைப் போல தான் கனகா எங்கேயோ வெகு தூரத்தில் போயிருப்பாள் என்று சங்கரும் சொன்னான்.

அதேபோல கனகாவின் மகன் நம்ம பள்ளிக்கூடத்தில் நன்றாக படிப்பது எல்லோருக்குமே தெரியும் கனகாவுக்கும் தனது மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று எல்லோரிடமும் சொல்லி இருக்காள். அதனால நிச்சயம் அவள் பள்ளிக்கூடம் இருக்கும் ஊரில் தான் அவள் இருப்பாள்
இந்த இரண்டு விஷயமும் ஒரே ஊரில் இருந்தால் நிச்சயம் அவள் அங்கு இருப்பாள் என்று ரேகா சொன்னாள்.

அட பரவாயில்லையே என்னோட மனைவி நல்லாவே யோசிக்கிறாலே என்று கிண்டலாய் சொன்னான் சங்கர்.

நீ சொல்றது உண்மைதான் புள்ள மொதல்ல யாரும் போக முடியாத ஊருக்கு கனகா போயிருப்பாள் அந்த ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நிச்சயமா அந்த ஊரில் தான் அவள் இருப்பாள் ..
இதை வச்சு கனகாவை நாளை முதல் நான் தேடப் போகிறேன் என்று உற்சாகமாக சொன்னான் சங்கர்.

அப்படினா நாளைக்கு எனக்கு வரும் போது பூ வாங்கிக்கொண்டு வருவீங்க என்று கிண்டலாய் சொன்னாள் ரேகா..

நாளைக்கு பூ மட்டும் வாங்கிட்டு வர மாட்டேன். கூடவே அல்வாவும் வாங்கிட்டு வரேன் புள்ள ..என்று சிரித்துக்கொண்டே ரேகாவை கட்டியணைத்தபடி கன்னத்தை செல்லமாக கடித்தான் சங்கர்..



சின்னத் துப்பு கிடைத்தாலே விடமாட்டான் சங்கர்..
இப்போது ரேகா சொன்ன யோசனை அவனுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது
இனி பொழுது விடிந்ததும் சங்கர் தனது தேடுதல் வேட்டையை தீவிர படுத்துவான் என்பதில் சந்தேகமில்லை...



தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்....29👇


பொழுது விடிந்தது..🌄


மாமா.. நான் சொன்னபடி நீங்க ஒரு சரியான ஆள் இடம் விசாரிச்சுட்டு . அதுக்கப்புறம் தேடுங்க என்று சங்கரிடம் பொறுப்போடு சொன்னாள் ரேகா.

சரி புள்ளா. நான் கிளம்புகிறேன் அதோடு நீ சொன்ன யோசனைப்படி அவங்களை தேடுகிறேன்..

சரி மாமா... இன்னைக்கு நீங்க எனக்கு பூ வாங்கிட்டு வரணும் அதை மொதல்ல ஞாபகத்துல வெச்சுக்கோங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் ரேகா.

அதெல்லாம் மறக்கமட்டேன் புள்ளா.. அப்புறம் நீ இங்க தனியா இருக்காதே. நீயும் கொஞ்சம் வேலையை பார்த்துட்டு உடனே ஊருக்குள்ள போய்விடு நான் வரும்போது வா புள்ள..

ரேகாவும் சிறிது நேரம் விவசாய வேலையை பார்த்துவிட்டு அவளும் ஊருக்குள்ளே சென்று
விட்டாள்...🛖🏠⛺🏡

தாத்தா.. காணாமல் போனவர்களை எப்படியாவது இருக்கும் இடத்தை இன்னைக்கு கண்டுபிடித்து விடுவேன் என்ற நம்பிக்கையில் கிளம்பி போயிருக்காரு தாத்தா உங்க புள்ளா..

அப்படியா மா... நீ சொன்னபடி அவர்களை என் மகன் கண்டுபிடித்துவிட்டால் எனக்கு பெருமை தானம்மா அதைவிட உனக்குத்தான் பெருமை என்று முத்தையா சிரித்துக்கொண்டே
தன் மருமகளிடம் சொன்னார்..

அப்போது ரேகாவின் அம்மாவும் அங்கு வந்தார்..

என்னம்மா தோட்டத்துல வேலை எல்லாம் முடிச்சிட்டியா..

ஆமாம்மா.... வேலையெல்லாம் முழச்சிட்டுதான் வந்தேன் இன்னைக்கு உங்க மருமகன் காலையிலேயே காணாமல் போனவர்களை தேட போயிட்டாரு அதனால நானும் வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்துட்டேன்..

இந்த மாசமும் தலைக்கு ஊற்றிக் கொண்டாயா என்று ஜாடைமடையாக கேட்டால் லட்சுமி அம்மாள்..

ஆமாம் ...அதெல்லாம் நேரம் வரும்போது எல்லாம் நடக்கும் என்று ரேகாவும் ஜாடைமாடையாக சொன்னாள் ..

உனக்கென்ன நீ எப்போதுமே இப்படி தான் சொல்ற ஆனால் எனக்கும் உங்க தாத்தாவுக்கும் ஒரு பேரனோ பேத்தியோ பார்க்க வேணாமா எங்களுக்கு அந்த ஆசை இப்போ ரொம்ப அதிகமாகவே வந்துருச்சு அதனாலதான் உன்னை மாச மாசம் விசாரிக்கிறேன் என்று சொன்னால் லட்சுமி அம்மாள்..

பேரனும் . பேத்தியும் எங்களிடம் கொடுத்துவிட்டு நீங்கள் இரண்டு பேரும் பம்புசெட்டில் இருந்துக்குங்க என்று முத்தையா சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்போது அந்த வழியாக முத்தையாவின் நண்பர் வந்தார்..

என்ன எல்லோரும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க என்று முத்தையாவைப் பார்த்து கேட்டார்..

அது ஒன்னும் இல்லட .. எனக்கு முதல்ல பேத்தி வேணும்முன்னு என் மருமகளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன் அதுதான் எல்லோரும் சிரித்தோம் என்று முத்தையா சொன்னார்.

அம்மாடி ...உங்க மாமனார் சொன்னபடி அவருக்கு பேத்தியை பெற்றுக் கொடுத்து விடுமா என்று அவரும் கிண்டலடித்த படி சொல்லி சிரித்தார்.


அப்போது அந்தப் பெரியவர் ரேகாவிடம் கேட்டார்......

அம்மாடி ... உங்களுக்கு பண்ணையார் தோட்டத்தில தங்கி வேலை செய்வதில் எந்த சிரமமும் இல்லையே என்று கேட்டார்..

எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை தாத்தா... நாங்கள் அங்கு சந்தோஷமாக தான் வேலை பார்க்கிறோம் தாத்தா..

உங்களைப் போலவேதான் ஏற்கனவே வேலை செய்த இரண்டு குடும்பங்களும் நான் விசாரித்த போது . உன்னை போலவே தான் அவர்களும் பதில் சொன்னார்கள் ஆனால் அவர்கள் திடீரென்று இரண்டு குடும்பமே காணாமல் போய்விட்டார்கள் அதனால் நீங்களும் அவர்களைப் போல சாதாரணமாக அங்கே இருக்க வேண்டாம். கொஞ்சம் உஷாராகவே வேலை செய்யணும் என்று அந்தப் பெரியவர் ரேகாவிடம் சொன்னார்..

அப்போது லட்சுமி அம்மாள் முகமும் முத்தையாவின் முகமும் சிறிது கவலையில் மாறியது..

நான் சொன்னதை நீங்க தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது மனசுல பட்டதை சொன்னேன்.

அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லை.... நானும் என் மகனிடம் அடிக்கடி சொல்வது எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதே .
ரொம்ப கவனமா நடந்துகொள் என்று தான் சொல்லி இருக்கிறேன் அவன் எந்த ஒரு பிரச்சனையையும் சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கையில் தான்
அவனை நான் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் .
நிச்சயம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று முத்தையா சொன்னார்..

இருந்தாலும் அந்த பெரியவர் சொன்ன வார்த்தை ரேகாவுக்கு சிறிது பயத்தை ஏற்படுத்தியது...



சாமியாரின் பூஜை அறை...⛺

சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் பேசாமல் இருந்தார் இதனால் சிஷ்யர்களுக்கு பெரும் கவலையாக இருந்தது..

குருவே ..நீங்கள் எங்களிடம் சரியாக பேசாமல் இருப்பது எங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது குருவே என்று முதல் சிஷ்யன சொன்னான்..

நீங்கள் இருவரும் எனக்கு எதிராக எப்போது ஊரை ஏமாற்றுவதற்கு துணிந்து விட்டீர்களோ அப்போதே உங்கள் மீது இருந்த நம்பிக்கை எனக்கு போய்விட்டது...
இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே மூன்று பேரும் ஒன்றாக இருந்தோம் அந்த விசுவாசத்தினால்தான் நான் உங்களோடு இருக்கிறேன்...

நாங்கள் செய்தது பெரிய தவறு தான் அது எங்களுக்கு இப்போது தான் புரிந்தது குருவே என்று இரண்டாவது சிஷ்யனும் சொன்னான்..

நீங்கள் செய்த தவறு மன்னிக்க முடியாத தவறு ..
இந்நேரம் நம்முடைய பித்தலாட்டம் இந்த ஊருக்கே தெரிந்திருக்கும் நீங்கள் செய்த
முட்டாள்தனத்தினால்
ஏதோ நல்லகாலம் அந்த குடிகாரன் கையில் நம்முடைய செல்போன் மாட்டிக்கொண்டது. இது வேறு யாரிடமாவது இந்த செல்போன் கிடைத்திருந்தால் நம்முடைய ரகசியம் எல்லாமே தெரிந்து இருக்கும்.. என்னோட நல்ல நேரம் நீங்கள் அந்த செல்போனை ஒளித்து வைக்கும் போது சைலன்ட் மூடி லேயே விட்டுவிட்டு வந்துட்டீங்க இல்லன்னா நீங்களும் மாட்டிக்கிட்டு இருப்பிங்க நானும் சேர்ந்து மாட்டிக்கொண்டு இந்த ஊர் மக்களிடம் தர்ம அடி வாங்கிக்கொண்டு இந்நேரம் ஊரைவிட்டு ஓடிப் போயிருப்போம் இப்படிப்பட்ட பெரிய தப்பு செய்துவிட்டு சாதாரணமா மன்னிச்சிடுங்க குருவே என்று சொல்றீங்க என்று உருக்கமாக சொன்னார் சாட்டையடி சாமியார்..

இந்த ஒருமுறை மன்னிச்சிடுங்க குருவே எங்களை..

சரி சரி... நான் உங்களை அன்னைக்கே மன்னித்து விட்டேன் இன்னொரு முறை இதுபோன்ற தவறை செஞ்சீங்களான உங்கள் இருவரின் நாக்கை அறுத்தால் ஊருக்கு நல்ல காலம் பிறக்கும் என்று ஊர் மக்களிடம் சொல்லி விடுகிறேன்...

சிஷ்யர்கள் இருவரும் ஊர் மக்கள் ஒன்று கூடி கோவிலில் நாக்கை அறுப்பதை நினைத்துப் பார்த்தார்கள்... அப்போது அவர்களுக்கு பயம் தலைக்கேறியது

நீங்கள் சொல்வதைப் போலவே இனிமேல் நாங்கள் எந்த தவறையும் செய்ய மாட்டேன் குருவே ..
உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யார் இருக்காங்க குருவே நீங்கள் தான் எங்களை மன்னிக்கவேண்டும் குருவே என்று இரண்டு பேரும் தாழ்மையோடு கேட்டார்..

வார்த்தைக்கு வார்த்தை.... குருவே குருவே ....என்று சொல்கிறீர்களே குரு என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..
நான் உங்களுக்கு ஒரு சின்ன கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் அப்போதுதான் உங்களுக்கு குரு என்றால் என்னவென்று தெரியும் என்று சிஷ்யர்களிடம் சொல்லிவிட்டு..
சாட்டையடி சாமியார் அந்த சிறு கதையை சொல்ல ஆரம்பித்தார்..

ஒரு காட்டில் குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள்.. அந்தக் காட்டில் தண்ணீர் கிடைப்பது ரொம்ப கஷ்டம் வெகுதுரத்தில் தண்ணீர் இருப்பதால் தினமும் தனது சிஷ்யனிடம் ஒரு பானையைக் கொடுத்து
தண்ணீரை எடுத்து வரும்படி சொல்வார் குரு...
அந்த சிஷ்யனும் சலிப்போடு குருவிடமிருந்து பானையை வாங்கிக்கொண்டு தண்ணீர் எடுப்பதற்காக வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வருவான் ..அப்போது அவன் அந்தத் தண்ணீரை பொறுப்பில்லாமல் கீழும் மேலும் கூறிய படி எடுத்து வருவான் .
குருவிடம் கொடுக்கும்போது அந்தப் பானையில் பாதி தண்ணீர்தான் இருக்கும் அதையும் பாதி அவனே குடித்து விடுவான் மீதி இருக்கும் தண்ணியை குரு குடித்து வந்தார் இப்படி அந்த குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள் அந்தக் காட்டில்..

ஒரு நாள் சிஷ்யன் தனிமையில் உட்கார்ந்து கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.... நாமளும் குருவாக மாறி விட்டால் நம்முடைய சிஷ்யனை தினமும் இப்படி தண்ணீர் கொண்டு வரச் சொல்லலாம். அதனால் நம் குருவிடம் கேட்போம் எனக்கு எப்போது குருவாக மாறும் வாய்ப்பு கிடைக்கும் என்று.
அப்போது நம்முடைய கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்று அந்த சிஷ்யன் யோசித்துக்கொண்டே தனது குருவிடம் சென்று கேட்டான்..

குருவே ..நான் எப்போது உங்களைப்போலவே குருவாக மாறுவேன்..

எதற்கு சிஷ்யா இப்படி ஒரு யோசனை உனக்கு வந்தது..

அது ஒன்றும் இல்லை குருவே... நீங்கள் என்னை தினமும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்படி சொல்வதைப் போலவே நானும் என் சிஷ்யனிடம் சொல்லுவேன் அதற்காகத் தான் கேட்டேன் குருவே என்று வெகுளித்தனமாக சொன்னான் அந்த சிஷ்யன்..

குருவுக்கு பணிவிடை செய்வதை கஷ்டமாக நினைக்கிறானோ இவன்..
இவனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் சிறிது நேரம் யோசிக்க ஆரம்பித்தார்..

சிஷ்யா .. நாளை முதல் நான் தண்ணீர் கொண்டு வருகிறேன். நீ இங்கேயே ஓய்வெடு பிறகு நீ எப்போது குருவாக மாறுவே என்பதைப்பற்றி இன்னொரு நாள் நான் சொல்கிறேன்.
முதலில் அவனை ஓய்வு எடுக்கும்படி சொன்னார் குரு..

சிஷ்யனுக்கு.. குரு சொன்ன வார்த்தை மேலும் சந்தோஷமாக இருந்தது. இனிமேல் நாம் தண்ணிர் எடுக்க கஷ்டப்பட தேவையில்லை அதையும் நம்ம குருவே செய்துவிடுகிறார் என்று நினைத்து ...குரு சொன்ன வார்த்தைக்கு பலமாக தலையை அசைத்தபடி அமர்ந்துகொண்டான்.

பிறகு தினமும் குருவே வெகு தூரத்தில் சென்று பானை நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து இருவரும் குடித்தார்கள்..
அப்போது அந்த பானையில் சிறிது தண்ணீர் மிச்சம் மகவே இருந்தது.. அப்போது அந்த சிஷ்யன் குருவே நான் கேட்டதற்கு நீங்கள் இன்னைக்கு பதில் சொல்கிறேன் என்று சொன்னீர்கள்..
நான் எப்போது உங்களைப்போலவே குருவாக மாறுவேன் என்று மறுபடியும் கேட்டான் அந்த சிஷ்யன்..

இந்த பூமியில் நாம் எந்த அளவுக்கு பரிசுத்தமாக நடந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு சீக்கிரமாகவே குருவாக மாறி விடலாம் என்று சொன்னார்..

நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை குருவே..

புரியும்படி சொல்கிறேன் கேள்... இந்த பூமியில் எந்த அளவுக்கு புண்ணியத்தை சேர்க்கிறோம். அந்த அளவுக்கு நமக்கு கடவுள் அருள் கொடுப்பார்
அதன் மூலமாக சீக்கிரமாகவே நாம் நினைத்ததை அடைந்துவிடலாம் என்று சொன்னார் குரு..

சரி குருவே நான் புண்ணியத்தை எப்படி செய்வது. இங்கு தான் யாருமே இல்லையே என்றான் சிஷ்யன்.

ஏன் இங்கு புண்ணியத்தை செய்ய முடியாதா.. இதோ எவ்வளவு மரம் செடி கொடி மற்றும் விலங்குகள் எவ்வளவோ உயிரினங்கள் இங்கு வாழ்கின்றது அவைகளுக்கெல்லாம் உன்னால் முடிந்த உதவியை நீ செய்து புண்ணியத்தை கடவுளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் மனிதர்களுக்கு உதவி செய்தால் மட்டும்தன் புண்ணியம் கிடைக்கும் என்பது பொருள் அல்ல என்று அந்த குரு சொன்னார்..

சரி குருவே... நான் எப்படியாவது நீங்கள் சொன்னபடி புண்ணியத்தை செய்து சீக்கிரமாகவே குருவாக மாறுகிறேன் என்று உற்சாகத்தோடு சொன்னான் அந்த சிஷ்யன்

அப்போது குருவுக்கு அவனுடைய உற்சாகம் அவருக்கு பிடித்திருந்தது இவனை மெல்ல மெல்ல இவனுக்கு அறிவுரையை எடுத்துச் சொல்லலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

வழக்கம்போல குரு தண்ணீர் கொண்டு வந்தார் அதை அன்று முழுவதும் இருவரும் குடித்து வந்தார்கள் பிறகு அந்தப் பானையில் சிறிது தண்ணீர் மிச்சமிருந்தது அதை சிஷ்யன் கீழே கொட்டி விடலாம் என்று நினைத்து அந்த தண்ணீரை எடுத்துச் சென்றான்.
அப்போது குரு கேட்டார்..

சிஷ்யா அந்தத் தண்ணீரை எங்கு கொண்டு செல்கிறாய்..

கீழே கொட்டி விடலாம் என்று எடுத்துச் செல்கிறேன் குருவே..

இந்தக் காட்டில் தண்ணீர் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று நமக்கு தெரியும் ...அதனால் அதை வீணாக்காமல் நீ பயன்படுத்த வேண்டும்.

இந்த சிறிது தண்ணீரை வைத்து என்ன செய்யமுடியும் குருவே.

நீ நினைத்தால் இந்த சிறிது தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்தி இங்கு உள்ள ஜீவன்களுக்கு கொடுத்து புண்ணியத்தை சேர்க்கலாம்.

நீங்கள் சொல்வதும் உண்மை தன் குருவே நிச்சயம் நீங்கள் சொன்னபடியே நடந்து கொள்கிறேன் குருவே..

கவனமாக கேள்... நான் தினமும் கொண்டு வரும் தண்ணீரில் நம்ம குடித்து மிச்சம் இருக்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே. நீ எவ்வளவு சீக்கிரத்தில் குருவாக மாறுவாய் என்பதை நான் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் குரு.

குரு சொன்னபடி சிஷ்யனும் தினமும் மிச்சமாகும் தண்ணீரை என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்தான்.
அப்போது அவனுக்கு ஒரு சிறிய கொடி ஒன்று தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்ததை பார்த்தான் அந்தக் காட்டில்.

அப்போது அந்தக் கொடிக்கு இந்த தண்ணீரை ஊற்றலாம் என்று நினைத்து அதன் அருகில் சென்றான் சிஷ்யன் ..
அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது..
இந்த தண்ணீரை இந்தச் சிறிய கொடிக்கு ஊற்றினாள்.
இது வளர்ந்தால் நமக்கு சிறிய அளவு புண்ணியம் சேரும்.
அதனால் வேறு ஏதாவது ஒரு பெரிய செடிக்கு ஊற்றினால் அது வளர்ந்தாள் நமக்கும் நிறைய புண்ணியம் கிடைக்கும் என்று அவன் யோசித்துப் பார்த்தான் பிறகு அந்த சிறிய கொடிக்கு தண்ணீரை ஊற்றாமல்
அங்கு சுற்றும்.. முற்றும் ..பார்த்தான் அப்போது அவன் கண்களுக்கு ஒரு பெரிய ஆலமரம் ஒன்று இலைகள் உதிர்ந்து வாடிக்கொண்டிருந்ததை பார்த்தான் ... உடனே அவனுக்கு சந்தோஷம்... இந்த தண்ணீரை அந்த ஆலமரத்துக்கு ஊற்றி அதனை நாம் காப்பாற்றினால் நிறைய புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்து . அந்த சிறிது தண்ணீரை எடுத்துக்கொண்டு அந்த பெரிய ஆலமரத்திற்கு ஊற்றி வந்தான்...

இப்படி தினமும் மிச்சமாகும் தண்ணீரை அந்த சிஷ்யன் அந்த ஆலமரத்திற்கு ஊற்றினான் சிறிது காலம் சென்றது..

சிஷ்யா தினமும் மிச்சமாகும் தண்ணீரை நீ சரியான முறையில் பயன்படுத்தி புண்ணியத்தை பார்த்தாயா என்று குரு கேட்டார்.

நானும் நீங்கள் சொன்னபடி ஒரு ஜீவனுக்கு தான் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகிறேன்
ஆனால் அந்த ஜீவன் அதை குடிக்காமல் வாடிக் கொண்டே போகிறது குருவே என்று சொன்னான்.

வா நீ எப்படி தண்ணீரை பயன்படுத்தினால் என்று பார்ப்போம்... என்று இருவரும் சென்றார்கள்..

குருவே நீங்கள் கொடுத்த மீதி தண்ணீரை தினமும் இந்த ஆலமரத்துக்குதான் நான் ஊற்றி வந்தேன் ஆனால் இந்த மரம் அப்படியேதான் இருக்கிறது எந்த முன்னேற்றமும் இல்லை குருவே.

எதனால் இந்த மரத்தை. நீ. தேர்வு செய்தால் சிஷ்யா..

சிறிய செடிக்கு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினால் சிறிய அளவே புண்ணியம் கிடைக்கும்..
அதனால் பெரிய மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் பெரிய அளவிற்கு புண்ணியம் கிடைக்கும் என்பதற்காகத்தான் நான் இந்த மரத்தை தேர்வு செய்தேன் குருவே..

உன்னிடம் இருப்பதோ சிறிதளவு தண்ணீர் அதை நீ ஒரு
கொடிக்கோ அல்லது சிறிய செடிக்கு உற்றினால் அந்த நீர் அதன் வேர்களுக்கு சென்றிருக்கும் செடியும் செழிப்பாக
வளர்ந்துருக்கும். ஆனால் நீ இந்த சிறிய அளவு தண்ணீரை இவ்வளவு பெரிய மரத்திற்கு ஊற்றினால் அதன் வேர்கள் ரொம்ப ஆழத்தில் இருக்கும் நீ ஊற்றின தண்ணீர் அதன் வேர்களுக்கு போகாது அதனால் தண்ணீரும் வீணாக போச்சே..

இப்படி ஒரு சின்ன வேலையைக் கூட உன்னால் யோசித்து செய்ய முடியவில்லை. ஆனால் நீ எப்போது குருவாக மாற வேண்டும் என்ற எண்ணத்திலேயே நீ இருக்கிறாய் கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் திறமையை வைத்துதான் முன்னேற வேண்டும் அதை விட்டுவிட்டு வேறொரு வேலைக்கு ஆசைப்பட்டு முயற்சி செய்தாள் நேரமும் வீணாகிவிடும் நம்முடைய முயற்சியும் வீணாகிவிடும் சிஷ்யா..
இந்த சின்ன வேலை கூட உன்னால் சரியாக செய்ய முடியவில்லை காரணம் உன் மனதில் நிரம்பி இருப்பது .. எப்போது குருவாக மாறவேண்டும் என்பதுதான் அதனால்தான் உன்னால் சரியாக முடிவு செய்ய முடியவில்லை என்று அந்த சிஷ்யனுக்கு புரியும்படி சொன்னார் அந்த குரு...

என்னை மன்னித்துவிடு குருவே நீங்க சொல்வது தான் உண்மை நான் உங்களுக்கு பணிவிடை செய்வதற்கு சிரமப்பட்டேனே தவிர அதை ஒரு புண்ணியமாக நினைத்திருந்தாள் எனக்கு கடவுள் அருள் கொடுத்திருப்பார் ..
ஆனால் நான் செய்த தவறை.. நீங்கள் எனக்கு தண்டனை கொடுக்காமல் இப்படி நீங்கள் தண்ணீர் கொண்டுவந்து எனக்கு சேவை செய்து என் புத்திக்கு நல்ல ஒரு பாடத்தை புகட்டிவிட்டீர்கள் குருவே ...என்னை மன்னித்து விடுங்கள் இனிமேல் நான் ஒரு குருவுக்கு நல்ல சிஷ்யனாக இருக்கிறேன்..
நாளை முதல் நான் தண்ணீர் கொண்டு வருகிறேன் குருவே என்னை மன்னித்துவிடு குருவே என்று சொல்லி அந்த சிஷ்யன் குருவிடம் மன்னிப்பு கேட்டான்..

இப்படி அந்த குரு.. சிஷ்யனுக்கு பணிவிடை செய்து அவன் செய்த தவறை சுட்டிக் காட்டினார்
அதே போலதான் நானும் நீங்கள் செய்த தவறை அன்றே மன்னித்துவிட்டேன்..

எந்த ஒரு விஷயமானாலும் புத்திசாலித்தனத்தை முன்வைக்க வேண்டும் அப்படி செய்தால்தன் அந்த விஷயத்தில் நாம் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் உங்களைப்போல மாட்டிக்கொண்டு தலை குனிந்து நிற்க வேண்டியதுதான் ...இனிமேலாவது குருவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க தெரிஞ்சுக்குங்க. என்று சொல்லி சிஷ்யர்களை மன்னித்து விட்டார் சாட்டையடி சாமியார்..


சங்கர் காணாமல் போனவர்களை பற்றி விசாரிக்க ஒரு கடைக்காரரிடம் கேட்டான்.

ஐயா இங்கு யாருமே போக முடியாத ஊர் ஏதாவது பக்கத்துல இருக்குதா என்று சங்கர் அந்தக் கடைக்காரரிடம் விசாரித்தான்.

யாரும் போக முடியாத ஊரைப்பற்றி எதுக்குப்பா கேட்கிற.

என்னுடைய தங்கச்சி காணாமல் போய்விட்டாள். அவளை இங்கு நிறைய இடத்தில் தேடிப்பர்த்தேன் ஒருவேளை அவள் யாரும் போகாத ஊருக்கு போய் இருப்பாளா என்ற சந்தேகத்தில்தான் கேட்டேன் அண்ணா என்று சங்கர் சொன்னான்.

எனக்குத் தெரிந்து இந்த மாதரி ஊர் கிடையாது நீ வேணா இன்னும் கொஞ்சம் தூரம் சென்று அங்கு ஒரு வயதான பெரியவர் தேன் வியாபாரம் செய்து கொண்டிருப்பார் எனக்குத் தெரிந்து. அவர்தான் இந்த ஊரில் ரொம்ப அனுபவசாலி அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என்று அந்த கடைக்காரர் சொன்னார்.

சரி ஐயா நான் அந்த பெரியவரிடம் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு சங்கர் நடந்து சென்றான
அப்போது சிறிது தூரம் சென்றதும் கடைக்காரர் சொன்னபடி ஒரு பெரியவர் தேன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

ஐயா இங்கு பக்கத்துல யாரும் போக முடியாத ஊர் ஏதாவது இருக்குதா ஐயா என்று சங்கர் அந்த பெரியவரிடம் கேட்டான்.

எதுக்குப்பா கேக்குற...

என் தங்கச்சி குடும்பம் கொஞ்ச நாள் முன்னாடி காணாமல் போயிட்டாங்க ஐயா அவங்களை நான் நிறைய இடத்தில் தேடிப்பார்த்தேன் ஆனால் அவங்க கிடைக்கவே இல்லை ..
ஒருவேளை நான் தேடுவேன் என்று நினைத்து அவள் யாறும் போக முடியாத ஊருக்கு சென்று இருப்பாளா என்ற சந்தேகத்தில் தான் நான் கேட்கிறேன் ஐயா என்று சங்கர் சொன்னான்.

தங்கச்சி குடும்பத்தை இப்படி தினமும் தேடிக் கொண்டிருப்பது உன்னுடைய பாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது தம்பி நீ கவலைப்படாதே உன்னுடைய தங்கச்சி குடும்பம் உனக்கு சீக்கிரமாகவே கிடைத்து விடுவார்கள் யாரும் போக முடியாத ஊர் என்னுடைய ஊர்தான் தம்பி அதோ தெரிகிறதே பெரிய மலை அந்த மலை உச்சியில் ஒரு சின்ன கிராமம் உள்ளது அதில் மொத்தத்தில் 50 குடும்பம் தான் இருக்கிறோம் அங்கு செல்வதற்கு ஒரு நாள் ஆகும்
திரும்பி வருவதற்கு ஒரு நாள் ஆகும் நான் இன்று தான் அங்கிருந்து தேன் எடுத்துக்கொண்டு வந்தேன்
இந்த டவுனில் வியாபாரம் செய்து வருகிறேன். இந்த வியாபாரம் நான் சிறுவயதில் இருந்தே செய்து வருகிறேன் அதனால் இங்கு நடக்கும் எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும் நீ என்னிடம் வந்தது நல்லதாகவே போனது இல்லையென்றால் நீ தேவையில்லாமல் இந்த ஊரை சுற்றி திரிந்து கொண்டிருப்பாய்... உன்னுடைய தங்கச்சியின் விவரத்தை சொல் என்று அந்தத் தேன் வியாபாரி பாசத்தோடு சங்கரிடம் சொன்னார்..

அந்தப் பெரியவரின் பேச்சைக் கேட்டதும் சங்கருக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது ..
நிச்சயம் நாம் காணாமல் போன கனகா குடும்பத்தை கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது பிறகு அந்த பெரியவரிடம் சொன்னான்.

ஐயா நான் பண்ணையார் புறத்திலிருந்து வருகிறேன் என்னுடைய தங்கச்சி சில மாதங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு குடும்பத்தோடு காணாமல் போய்விட்டாள் நான் அவளை சில நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன் அவளுடைய பெயர் கனகா நீங்கள் அவளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா
இல்லை இந்த பெயரை எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஐயா என்று பணிவாக சொன்னான் சங்கர்.

அப்போது அந்த பெரியவர் சிரித்துக்கொண்டே ....
உன் தங்கச்சியின் கணவன் ஒரு ஊமைதானே என்று சொன்னார்...

சங்கரின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது .. உடனே அந்த பெரியவரின் கையை பிடித்துக்கொண்டு ஆமாம் அய்யா என் தங்கச்சியின் கணவர் வாய் பேச முடியாதவர்தான் உங்களுக்கு தெரியுமா ஐயா என்று உற்சாகத்தோடு கேட்டான் சங்கர்.

கடவுள் உன் நம்பிக்கையை வீணாக்க வல்லை . அதனால்தான் உன்னை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார் நீ ஒன்றும் கவலைப்படாதே உன் தங்கச்சி இடம் உன்னை நான் நாளை கூட்டி செல்கிறேன் அதனால் நீ கவலைப்படாமல் உன் வீட்டுக்குப் போ தம்பி என்று அந்தப் பெரியவர் சொன்னார்.

ஐயா இன்னைக்கே என்னை அங்கு கூட்டிச் செல்லுங்கள் ஐயா..

அவசரப்படாதே தம்பி நான் இந்த தேன் வியபாரம் முடித்துவிட்டுதன் அதன் பிறகு என் ஊருக்கு செல்வேன் இதுதான் வழக்கம் அதுமட்டும்மல்ல உன்னை பற்றி உன் தங்கச்சியிடம் நான் சொல்கிறேன் அவள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே உன்னை என் ஊருக்கு அழைத்துச் செல்வேன் இல்லையென்றால் என்னை மன்னித்து விடு தம்பி... நீ நாளைக்கு வா நான் உன்னை கூட்டி செல்கிறேன் என்று அந்தப் பெரியவர் நம்பிக்கையோடு சொன்னார்.


ஐயா என் மீது உங்களுக்கு ஏதாவது சந்தேகம் உள்ளதா..


நான் உன்னைப்பற்றி தவறாக நினைக்கவில்லை ..ஆனால் உன் தங்கச்சி கனகா எங்கள் ஊருக்கு வந்தநாள் முதல் எதனால் அங்கிருந்து வந்து விட்டோம் என்ற காரணத்தை இதுவரைக்கும் சொல்ல மறுக்கிறாள் ..
அவளுக்கு வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மனக்கஷ்டம் ஏற்பட்டிருக்கும் போல் தெரிகிறது அதனால் தான் அவள் இதுவரைக்கும் அதைப்பற்றி சொன்னதே கிடையாது ...
அதைப் பற்றி பேசினால் அவள் பெரும் சோகத்தில் தலையை குனிந்து கொள்கிறாள்
அதனால்தான் நான் உன்னைப்பற்றி சொல்லிவிட்டு அவளின் சம்மதத்தையும் வாங்கிக்கொண்டு. உன்னை அழைத்து செல்கிறேன் என்று அந்தப் பெரியவர் சொன்னார்.

ஐயா நீங்கள் உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் என் தங்கச்சியிடம் சொல்லிவிட்டு பிறகு என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள் நான் நாளைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சங்கர் புறப்படும்போது அந்தப் பெரியவர் மறுபடியும் சங்கரை பார்த்து கேட்டார்.

உன் தங்கச்சி குடும்பத்தைப் பற்றி மட்டும் விசாரிக்கிறாய்.
உன் ஊரிலிருந்து இன்னொரு குடும்பமும் அங்கு தான் இருக்கிறார்கள் அவர்களை பற்றி நீ கேட்கவே இல்லையே தம்பி என்று அந்த பெரியவர் சொன்னார்.

மேலும் சங்கருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது ...
அப்படி என்றால் முதலில் காணாமல் போன அந்த பெரியவரின் மகனும் மருமகளும் அங்குதான் இருக்கிறார்களா என்று நினைத்து சந்தோசத்தில் பூரித்துப் போனார் சங்கர்.

ஐயா உண்மைதான் நீங்கள் சொல்வது. இன்னொரு குடும்பமும் காணாமல் போயிருக்கிறார்கள் அப்படியென்றால் இரண்டு குடும்பமும் உங்கள் ஊரில் தான் இருக்கிறார்களா. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஐயா நாளைக்கு நான் உங்களிடம் வந்து அந்த இரண்டு குடும்பத்தையும் என் ஊருக்கு அழைத்துச் செல்கிறேன் ஐயா என் ஊர் மக்கள் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் காணாமல் போன நாள் முதல் எங்கள் அனைவருக்கும் பெரிய மனம் வருத்தமாக இருந்தது ஐயா இனி உங்கள் மூலமாக அந்த வருத்தம் நீங்க போகிறது ஐயா என்று சொல்லிக்கொண்டே பாசமாக அந்த பெரியவரை கட்டி அணைத்துக்கொண்டான் சங்கர்...


சந்தோசத்தில் சங்கர் துள்ளி குதித்துக் கொண்டு ..ரேகாவுக்கு மல்லிகைப் பூவும்
சிறிது அல்வாவும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினான்...


இனி பண்ணையார் புரத்தில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படப்போகிறது என்பது தெளிவாக புரிகிறது ஆனால் அது என்ன மாற்றம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்....


தொடரும்......
 

New Threads

Top Bottom