Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
அன்புக்கு சொந்தம் கொண்ட சகாப்தம் வாசகர்களே வணக்கம்.🙏

நான் உங்கள்
கார்த்திகேயன் ஜெயராமன்..
நான் இதுவரை எழுதிவந்த பண்ணையார் தோட்டம் கதை முறைப்படி வரிசையாக இல்லாத காரணத்தாலும். கதையின் முதல் அத்தியாயங்கள் சரியாக பதிவிடவில்லை .ஆகையால் அந்தக் கதையை
பண்ணையார் தோட்டம் மர்மம் என்ற தலைப்பில் முறைப்படி வரிசையாக பதிவு செய்ய உள்ளேன் வாசகர்களாகிய நீங்கள் எப்போதும் போல அளித்து வந்த ஆதரவை தனக்கு குறைவில்லாமல் உங்களுடைய ஆதரவையும் கருத்துக்களையும் எனக்கு தவறாமல் பதிவிட வேண்டும் நன்றி....
 
Last edited by a moderator:

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
அத்தியாயம்..1

அந்த சிறிய கிராமம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமையாக காணப்படும். அந்த ஊர் மக்களுக்கு தொழில் என்று எடுத்துக்கொண்டால் .விவசாய வேலை மட்டும் தான் .வேறு எந்தத் தொழிலும் அந்த ஊரில் கிடையாது அனைவரும் ஒற்றுமையாக விவசாய வேலையை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் சொந்தக்காரர் பண்ணையார்.

பண்ணையாருக்கு இந்த அனைத்து நிலமும் பூர்வீக சொத்தாகும் பார்க்கும் இடமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அந்த அளவுக்கு செழிப்பாக வளர்ந்திருக்கும் பண்ணையாரின் தோட்டம் .

பண்ணையாரின் தோட்டம் பச்சை பசுமையாக காணப்படுவது போல அவருடைய மனமும் அப்படித்தான் இரக்க குணம் படைத்தவர்.
மக்கள் மீது அதிகம் பாசம் கொண்டவர் .தன்னுடைய நிலத்தில் கிடைக்கும் வருமானத்தை பெரியதாக எடுத்துக் கொள்ளமாட்டார் .மக்களுக்கு வேலை கொடுத்து அவர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் ஏற்படுத்தாமல் அவர்களை சந்தோசமாக பார்த்து கொள்வதுதான் அவருடைய லட்சியம் . மற்றபடி பணம் சேர்ப்பதில் அவருக்கு ஆர்வம் கிடையாது.

பண்ணையாருக்கு ஒரு நெருங்கிய நண்பர் உண்டு. அவர் வேறு யாருமில்லை பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி தான் பண்ணையாருக்கு உயிருக்குயிரான நெருங்கிய நண்பர் .
அவர் பெயர் . முத்தையா ஆரம்பக்காலத்தில் பண்ணையாரின் அப்பா .அம்மா இறந்து விட்டா சமயத்தில் பண்ணையார் இந்த அனைத்து நிலங்களையும் என்ன செய்வது . எப்படி பராமரிப்பது. நம்மால் இவ்வளவு நிலத்தை பாதுகாக்க முடியுமா என்ற குழப்பத்தில் இருந்த போது . அவருக்கு உறுதுணையாக முத்தையா கூடவே இருந்து அவருக்கு நல்ல யோசனைகளை சொல்லி இந்த கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் பச்சை பசுமையாக மாற்றிய பெருமை முத்தையாவுக்கு சேரும் .
அந்த அளவுக்கு பண்ணையாருக்கு உதவியாக இருந்தார் முத்தையா

பண்ணையார் முத்தையாவுக்கு பண உதவியும் பொருள் உதவியும் செய்ய துடிப்பார் .. ஆனால் முத்தையா எந்த உதவியும் பண்ணையாரிடம் இருந்து எதிர்பார்க்க மாட்டார் .
எது கொடுத்தாலும் மறுத்துவிடுவார் அவர் அன்பை மட்டும் எதிர்பார்ப்பார் முத்தையா ஏனென்றால் ஊரில் உள்ள சக தொழிலாளிகளுடன் தொழிலாளியாக வாழ்வதுதான் முத்தையாவுக்கு மகிழ்ச்சி.
அதனால் பண்ணையாரின் உதவியை பெற்று நம் மட்டும் வசதியாக வாழ வேண்டுமா என்று நினைத்து அவர் பண்ணையாரிடம் எந்த உதவியும் ஏற்கமாட்டார் அவரின் நேர்மையை பார்த்து அந்த ஊர் மக்கள் .பண்ணையாருக்கு கொடுக்கும் மரியாதையை முத்தையாவுக்கும் கொடுப்பார்கள்

பண்ணையார் தோட்டமும் அந்த ஊர் மக்களும் செழிப்பாக வளர்ந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார்கள்.

பண்ணையாருக்கு மூன்று மகன்கள் உண்டு.
முதல் மகன் பெயர் . பரந்தாமன்
இரண்டாவது மகன் பெயர் .சந்திரன்
மூன்றாவது மகன் பெயர். தீனா.

முதல் மகன் பரந்தாமனுக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான் .பரந்தாமனின் மனைவியின் பெயர் சாந்தி
மகன் பெயர் சுரேஷ் .
சந்திரனுக்கும் தீனாவுக்கும் திருமணம் ஆகவில்லை . இதுதான் பண்ணையாரின் குடும்பம்.

முத்தையாவுக்கு ஒரே ஒரு மகன் அவன் பெயர் . சங்கர்
சங்கருக்கு இரண்டு வயது இருக்கும்பொழுது அவன் அம்மா இறந்து விட்டார் .முத்தையா சங்கருக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் பணிவிடை செய்து தனது மகனை வளர்த்து வந்தார் .. இதுதான் முத்தையாவின் குடும்பம்.

பண்ணையாருக்கும் முத்தையாவுக்கும் வயதாகி விட்டதால் . இருவரும் அவரவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டார்கள் . விவசாய நிலங்களை பண்ணையாரின் மூன்று மகன்களும் கவனித்துக் கொண்டார்கள் . அதேபோல முத்தையாவின் மகன் சங்கர் பண்ணையாரின் தோட்டத்தில் கூலி வேலை செய்து . தனது தந்தை முத்தையாவை சந்தோஷமாக பார்த்து வந்தான் .

பண்ணையாரும் முத்தையாவும் நண்பர்களாக இருப்பது போல பண்ணையாரின் மகன்களும் முத்தையாவின் மகன் சங்கரும் நண்பர்கள் கிடையாது .
அவரவர் வேலையை பார்ப்பார்கள்.

பண்ணையாரின் கடைசி மகன் தீனாவின் பிறந்தநளை மட்டும் பண்ணையார் சிறப்பாக கொண்டாடுவார் . ஊரில் உள்ள அனைவரையும் தனது விவசாய தோட்டத்திற்கு வர வைத்து தீணாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவர் . ஏனென்றால்
தினா பிறந்தவுடன் பண்ணையாரின் மனைவி இறந்துவிட்டார் . அதனால் தீனாவின் பிறந்தநாளை நினைத்து சந்தோசப் படுவதா .இல்லை அதே நாளில் பண்ணையாரின் மனைவி இறந்து விட்டார் என்று வேதனைப் படுவதா என்று ஊர் மக்கள் குழப்பத்தில் இருந்தார்கள் அப்போது பண்ணையார் தீணாவின் பிறந்தநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் தனது மனைவி இறந்ததை எண்ணி யாரும் வருத்தப்பட கூடாது என்பதற்காக பண்ணையார் தீனாவின் பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடுவது வழக்கம்.

பண்ணையார் குடும்பத்தில் அனைவரும் பரபரப்பாக காணப்பட்டார்கள் .
காரணம் தீனாவின் பிறந்தநாள் ... ஊரில் உள்ள அனைவருக்கும் புது துணியை எடுத்துக் கொண்டு இனிப்புகளையும் எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்பினார்கள் பண்ணையாரின் குடும்பம்.

ஊர் மக்களும் சந்தோஷமாக தீனாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பண்ணையார் தோட்டத்திற்கு சென்றார்கள் முத்தையாவின் மகன் சங்கர் உட்பட அனைவரும் பண்ணையாரின் தோட்டத்தில் இருக்கும் பம்புசெட்டு அருகில் ஒன்று கூடி இருந்தார்கள்

அப்போது அங்கு இருந்தவர்கள் பம்புசெட்டின் அருகில் இருக்கும் பெரிய கிணற்றை ரசித்தபடி இருந்தார்கள் .
எல்லாம் காலங்களிலும் தண்ணீர் நிரம்பி இருக்கும் அந்தக் கிணற்றை நினைத்து பெருமை பட்டார்கள் இந்த ஒரு கிணற்று நீர்தான் இந்த ஊரையே காப்பாற்றுகிறது
இந்தப் பண்ணையார் தோட்டத்தை செழிப்பாக மாற்றி வருகிறது என்று அந்த கிணற்றை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு சிலர் பம்புசெட்டின் அழகை பார்த்து ரசித்தபடி இருந்தார்கள் இரண்டு அறைகள் கொண்ட பம்புசெட்டு 🏠🏡.முதல் அறையில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யும் குடும்பம் இருக்கும் . இரண்டாவது அறையில் ஒரு சிறிய மேடை போல உருவாக்கி அதன் மேல் பண்ணையாரின் மனைவி படம் வைத்து பூஜை அறை போல் அலங்கரித்து இருக்கும் இவைகளைப் பார்த்து சில பேர் ரசித்தபடி நின்று கொண்டிருந்தார்கள் .
ஒரு சிலர் பம்புசெட்டை சுற்றி இருக்கும் தென்னை மரம் பலா மரம் மாமரம் போன்ற மரத்தின் குளிர்ச்சியான காற்றை ரசித்தபடி பண்ணையாரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் ஊர்மக்கள்.

பச்சை நிற வயல்வெளியில் வெள்ளைக் நிறகொக்குகள் போல பண்ணையாரும் பண்ணையாரின் மகன்களும் வெள்ளை நிற வேட்டி சட்டையை அணிந்து . கம்பீரமாக பளிச்சென்று குடும்பத்தோடு நடந்து வருவதை பார்த்து ஊர் மக்கள் ரசித்தார்கள்.

பிறகு வழக்கம்போல பண்ணையாரின் மனைவி படத்தின் கீழே படையலை போட்டு அனைவரும் கும்பிட்டார்கள்

அப்போது பண்ணையார் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யும் கூலித்தொழிலாளி ஊமையானை அவனது மனைவி கனகாவை அழைத்து பூஜை செய்ய சொன்னார்.

இதேபோல இனி வரும் காலங்களில் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தாயே என்று சொல்லியபடி கனகா பூஜை செய்தால் .அவனது கணவன் ஒரு ஊமை வாய் பேச முடியாதவன் அதனால் அவன் பெயர் ஊமையன் என்று பெயர்.

பூஜை முடிந்ததும் . தீணாவின் பிறந்தநாள் என்பதால் அனைவருக்கும் புது துணி இனிப்பு கொடுக்கும்படி பண்ணையார் தனது மருமகளை அழைத்து அனைவருக்கும் இனிப்பும் புது துணியும் கொடுக்கும்படி சொன்னார்.

சிரித்த முகத்தோடு புன்னகையோடு வந்து நின்றால் சாந்தி அனைவருக்கும் இனிப்பும் துணியும் கொடுத்துக்கொண்டிருந்தாள் அப்போது வரிசையாக ஊர்மக்கள் நின்று ஆர்வமாக புதுத்துணி யும் இனிப்பையும் வாங்கிச் செல்வதை ரசித்தபடி நின்றிருந்தார் பண்ணையார் . அப்போது அவர் முகம் திடீரென்று புன்னகையோடு மலர்ந்தது காரணம் . அந்த வரிசையில் முத்தையாவின் மகன் சங்கரை பார்த்து விட்டார் பண்ணையார் . உடனே அவன் அருகில் சென்று அவனை கட்டியணைத்துக் கொண்டார் பண்ணையார்.

என்னப்பா நல்லா இருக்கியா..

எனக்கு எந்த குறையும் இல்லை ஐயா . நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்றான் சங்கர்.

லேசாக சிரித்துக் கொண்டே என்னுடைய நண்பன் முத்தையா எப்படி இருக்கான் அவனை நல்ல பாத்துகீரையா என்றார் பண்ணையார்.

அவருக்கு ஒரு குறையும் இல்லை அவர் நல்லபடியா இருக்கிறார் உங்களை பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார் என்றான் சங்கர்.

உடனே பண்ணையார் இரண்டு செட் புது துணியும் 2 செட் இனிப்பையும் சங்கருக்கு தனது கையால் கொடுத்தார் .
சங்கரும் வாங்குவதற்கு தயங்கினான் .ஐயா எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு செட்தானே கொடுக்கிறீர்கள் எனக்கு மட்டும் இரண்டு செட் வேண்டாம் என்று சொன்னான் சங்கர் .

அப்போது பண்ணையார் சிரித்துக்கொண்டே
உன் அப்பனைப் போலவே நீயும் இருக்கிறாய் . எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லுவான் உன் அப்பன்
அதே போல நீயும் சொல்ற ஒரு செட் உனக்கும் ஒரு செட் என் நண்பன் முத்தையாவுக்கும்தான் நான் கொடுக்கிறேன் இதை நீ எனக்காக வாங்கிக்கொள் என்று பணிவாக கேட்டார் பண்ணையார் .

அவரின் பாசத்தில் நெகிழ்ந்து போன சங்கருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு செட்டையும் வாங்கிக் கொண்டு சென்றன் .

பிறகு பண்ணையார் சங்கரை உற்றுப் பார்த்தபடியே அவனை ரசித்துக் கொண்டிருந்தார் அவன் போகும் வரை.

எல்லோருக்கும் புது துணியும் இனிப்பையும் கொடுத்து முடிந்தது ஊர்மக்களும அனைவரும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார்கள் .
அப்போது பண்ணையார் மீதியிருக்கும் இனிப்பையும் துணியும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யும் கனகா குடும்பத்திற்கு கொடுத்து விட்டார்

பிறகு அனைவரும் சந்தோசமாக வீட்டுக்கு கிளம்பும் சமயத்தில்
ஒரு வயதான பெரியவரும் அவர் மனைவியும் பண்ணையாரின் எதிரே நின்றார்கள் .
அவர்களை பார்த்ததும் பண்ணையாருக்கு அதிர்ச்சியாக இருந்தது .முகம் சோகத்தில் மாறியது . அதேசமயம் சாந்தி பரந்தாமன் சந்திரன் தீனா இவர்களும் சோகத்தில் தலைகுனிந்தார் அந்த பெரியவரை பார்த்து.

சட்டை இல்லாமல் வேட்டி மட்டும் அணிந்து கொண்டு தோளில் ஒரு துண்டை போட்டுக்கொண்டு அந்த வயதான பெரியவரும் .
அவர் மனைவியும் பண்ணையாரை பார்த்து சோகத்தில் குலுங்கி குலுங்கி அழுதார்கள்.



பண்ணையார் தோட்டம் மர்மம் ஆரம்பமாகிவிட்டது...
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் அழுவதை பார்த்து பண்ணையார் சோகத்தில் தலைகுனிந்தார் .
சாந்தியும் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் நின்றிருந்தாள் .
தீனாவின் பிறந்தநளை சந்தோசமாக கொண்டாடி வந்த பண்ணையார் குடும்பம் இவர்களைப் பார்த்ததும் சோகத்தில் இருந்தார்கள் .

பிறகு பண்ணையார் மெதுவாக அந்த வயதான பெரியவரிடம் சென்று.

ஐயா நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் உங்களுடைய நிலைமை எனக்கு புரிகிறது .உங்கள் மகனும் மருமகளும் ஏன் தோட்டத்தில் உள்ள இந்த .
பம்புசெட்டில் வேலை செய்து வந்தார்கள் . திடீரென்று சில மாதங்களுக்கு முன்னாள் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
இந்த விஷயம் ஊருக்கே தெரிந்ததுதான் .
என் தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன் .நானும் என்னோட பங்குக்கு டவுனுக்கு சென்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துவிட்டு வந்திருக்கேன் ஆனால் என்ன துரதிர்ஷ்டம் என்று தெரியவில்லை .
அவர்கள் காணாமல் போய் இதுவரை பத்து மாதங்கள் கடந்துவிட்டது . ஆனால் இதுவரைக்கும் அவர்களைப் பற்றி விபரம் தெரியவில்லை
நானும் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்து வருகிறேன் அவர்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள் .
நமது ஊரில் உள்ள அனைவரையும் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன் .அவர்களும் உங்கள் மகனை பற்றின விவரம் தெரியவில்லை என்று சொல்கிறார்கள்.

இப்படி நானும் என்னோட பங்குக்கு விசாரிச்சுகிட்டு தான் இருக்கேன் நீங்கள் ஒன்றும் கவலை படாதீங்க இதற்கு வேறொரு யோசனை செஞ்சி வச்சிருக்கேன் அதை நாளையிலிருந்து .
நான் செயல்படுத்தி உங்கள் மகனையும் மருமகளையும் கூடிய சீக்கிரத்துல அவங்கள கண்டுபிடிச்சு உங்ககிட்ட நான் ஒப்படைக்கிறேன் என்று பொறுமையாக எடுத்துச் சொன்னார் அந்த பெரியவரிடம் பண்ணையார்.

நீங்கள் இன்று உங்கள் மனைவியின் இறந்தநாள் அதோடு உங்கள் கடைசி மகனின் பிறந்த நாளும் கூட .
இப்படிப்பட்ட நல்ல நாளில் நாங்கள் இங்கு வந்தது மனசுக்கு சங்கடமாகத்தான் இருக்கிறது ஐயா இருந்தாலும் இன்று நீங்கள் குடும்பத்தோடு பம்பு செட்டுக்கு வருவது வழக்கம் .
அதனால் தான் உங்களை பார்த்து இதைப்பற்றி சொல்லி விட்டு போகலாம் என்று வந்தேன் ஐயா எங்களுக்கு என்ன செய்வது என்று புரியாமல் நாங்கள் தவிக்கிறோம் ஐயா .
என் மகனும் மருமகளும் காணாமல் போய் இவ்வளவு நாளாகியும் அவர்கள் கிடைக்காமல் இருப்பது எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது ஐயா என்று சொல்லும்போது அவரின் வார்த்தை தொண்டையில் சிக்கியது...மறுபடியும் கண்கலங்கினார் அந்த பெரியவர்.

என் மகனும் மருமகளும் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை ஐயா .
ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது நடந்து இருந்தால் என் மகனுக்கு செய்யவேண்டிய . ஈமைகாரியங்களைக் கூட நாங்கள் செய்யாமல் இருக்கிறோமோ என்ற வருத்தம் எங்களுக்கு மேலும் மனக் கஷ்டத்தை ஏற்படுகிறது ஐயா இப்படி என்ன செய்வது என்ற குழப்பத்தில் நாங்கள் தவிக்கிறோம் ஐயா .
அதனால் தான் உங்கள் குடும்பத்தை பார்த்து சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தோம் . நாங்கள் வந்தது தவறு தான் . இருந்தாலும உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யாரும் இல்லை ஐயா என்று அழுதுகொண்டே சொன்னார் அந்தப் பெரியவரின் மனைவி.

அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் சொன்ன வார்த்தைகள் பண்ணையாரை வெகுவாக பாதித்தது .தனது மகனுக்கு ஈமக் காரியங்களை செய்வதா இல்லையா என்ற குழப்பத்தோடு நாங்கள் இருக்கிறோம் என்று சொன்ன வார்த்தை பண்ணையாருக்கு மேலும் சோகத்தில் ஆழ்ந்தார் .

நீங்கள் இன்று வந்ததில் எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது . நீங்கள் வந்ததில் எனக்கு சந்தோசம் தான் அதேபோல இப்போதே நான் சொல்கிறேன் கேளுங்கள் . நாளையிலிருந்து என் மகன்கள் மூன்று பேரும் வாரத்தில் இரண்டு நாள் உங்கள் மகனையும் மருமகளையும் தேடுவதற்காக செல்வார்கள் இவர்கள் ஒருபக்கம் தேடட்டும் போலீஸும் ஒருபக்கம் தேடுவார்கள் இப்படி இரண்டு விதமாக தேடுவதால் சீக்கிரமாகவே உங்கள் மகனும் மருமகளும் கிடைத்து விடுவார்கள். என்று பண்ணையார் அவர்களுக்கு தைரியம் சொன்னார்

பிறகு சாந்தியும் அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள் ...
ஐய்யா நிச்சயம் உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் எதுவும் நடந்திருக்காது .
நம்முடைய கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருமே எல்லோரும் ஒரே குடும்பம் போல வாழ்ந்து வருகிறோம்
இதில் நிச்சயம் தவறு நடக்க வாய்ப்பில்லை .
ஏதோ ஒரு காரணத்தினால் தான் அவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் . விரைவில் நமக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் .அப்படி உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருந்தால் எங்களுக்கு நீங்கள் தயங்காமல் சொல்லலாம் .
அதேசமயம் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மீதும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் . அதையும் நீங்கள் என்னிடம் தயங்காமல் சொல்லலாம் என்று சாந்தி சொன்னாள் .

அம்மா எங்களுக்கு யார் மீதும் சந்தேகம் கிடையாது .அதே போல இந்த ஊரே உங்க குடும்பத்தை தான் தெய்வமாக பார்க்கிறோம் நீங்கள் சந்தேகப்படும்படி இதுவரைக்கும் ஒரு செயல் கூட செஞ்சது கிடையாது .
அதனால் எங்களுக்கு உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் எள்ளளவு கூட சந்தேகமில்லை . என் மகனும் மருமகளும் காணாமல் போய்விட்டார்கள் அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என்று உதவி கேட்டு தான் நான் உங்களிடம் வந்திருக்கிறேன் . மற்றபடி எனக்கு உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை . அதே போல பண்ணையாருக்கும் ஊரில் ஒரு பிரச்சனை என்றால் அது அவருடைய குடும்ப பிரச்சனை போல நினைத்து நடவடிக்கை எடுப்பார் என்பது எல்லோருக்குமே தெரியும்.
இப்படிப்பட்ட நல்லவர்கள் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை தாயே என்று அந்தப் பெரியவர் சொன்னார் .

நீங்கள் வந்ததில் எங்களுக்கு சந்தோஷம் .இதோ புது செட் வேட்டி சேலை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு கொடுத்தார் ..

அவர்கள் தயக்கத்தோடு நின்றார்கள் .

பரவாயில்லை வாங்கிக்கொள்ளுங்கள் . கசப்பான வாழ்க்கை வாழ்ந்து இருக்கும் உங்களுக்கு .
இனிப்பு கொடுப்பது எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது இருந்தாலும் உங்களை வெறும் கையோடு அனுப்ப எனக்கு மனம் இல்லை. என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு இனிப்பும் வேட்டி சேலையும் கொடுத்தார் பண்ணையார்.

பண்ணையார் கொடுத்ததை மறுக்காமல் வாங்கிக் கொண்டு அவர் சொன்ன வார்த்தையில் சற்று ஆறுதலோடு அங்கிருந்து அந்த பெரியவரும் அவருடைய மனைவியும். ஒரு நம்பிக்கையோடு வீட்டுக்குச் சென்றார்கள் .

பிறகு பண்ணையார் குடும்பம் சோகமாக இருந்தார்கள் .

அங்கு நடந்ததை எல்லாத்தையும் வேடிக்கை பார்த்து இருந்த கனகாவும் அவள் கணவன் ஊமையனும் . இப்படிப்பட்ட நல்லவர்களுக்கு கடவுள் சோதனையை கொடுக்கிறாரே என்று நினைத்தார்கள் .
நிச்சயம் காணாமல் போனவர்கள் கிடைப்பார்கள் .அந்த அளவுக்கு பண்ணையாரின் புண்ணியம் அவருக்கு உதவியாக இருக்கும் என்று இருவரும் மனதில் நினைத்துக் கொண்டார்கள்.

பிறகு கனகா சொன்னாள்...
ஐயா நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் நிச்சயம் ஏதோ ஒரு காரணத்தால் தான். அவர்கள் காணாமல் போயிருப்பார்கள் மற்றபடி அவர்கள் இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று எண்ணத்தில் நிச்சயம் போயிருக்க மாட்டார்கள் . ஏனென்றால் உங்கள் குடும்பம் காட்டும் பாசத்தில் இங்கு வேலை செய்பவர்கள் மட்டுமல்ல இந்த ஊரில் உள்ளவர்களுக்கும் பெரும் சந்தோஷம் ஐயா .
அதனால் நீங்கள் கவலைப்படாமல் எப்படி சந்தோஷமாக தோட்டத்திற்கு வந்தீர்களோ அதேபோல சிரித்த முகத்தோடு வீட்டுக்குச் செல்லுங்கள் ஐயா என்று கனகா சொன்னாள் .

பண்ணையாருக்கு ..கனகா சொன்ன வார்த்தை சற்று ஆறுதலாக இருந்தாலும் . அனைவரும் சோகத்தோடு வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள் .


பொழுதும் விடிந்தது...🌄

பண்ணையார் மகன்கள் மூன்று பேரும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள் பண்ணையாரும் அவருடைய மருமகள் சாந்தியும் பூஜை அறையில் சாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்தார்கள் .
இப்படி பரபரப்பாக பண்ணையார் குடும்பம் காணப்பட்டது .

சிறிது நேரத்தில் பூஜை முடிந்ததும் சாந்தி வெளியே வந்து பரந்தாமன் நெற்றியில் திருநீறு பூசினாள் .பிறகு சந்திரனுக்கும் தீனாவுக்கும் திருநீறு பூசி விட்டால் நெற்றியில்

அப்போது பண்ணையார் பரந்தாமனிடம் சொன்னார் ..

நீங்கள் இனிமேல் வாரத்தில் இரண்டு நாள் காணாமல் போன அந்த பெரியவரின் மகனையும் மருமகளையும் தேட செல்ல வேண்டும் . அதே சமயம் இந்த பிரச்சனை நமது குடும்ப பிரச்சனை போல நினைத்து நீங்கள் தேட வேண்டும் .
எனக்கு போலீஸ் மீது நம்பிக்கை இருந்தாலும் .அதை விட நிறைய நம்பிக்கை உங்கள் மீது எனக்கு உள்ளது .நீங்கள் கூடிய சீக்கிரத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் . நான் உங்களை இந்த வேலைக்கு அனுப்புகிறேன் .இதற்கு வேறு யாரையாவது அனுப்பினால் அவர்கள் சரிவர தேட மாட்டார்கள் அதனால் தான் இந்த பிரச்சனை உங்கள் சொந்த பிரச்சனை போல நினைத்து நீங்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விட வேண்டும் . அப்போதுதான் எனக்கும் நிம்மதி என்று பண்ணையார் உருக்கமாக பரந்தாமன் இடமும் சந்திரன் தீனாவிடமும் சொன்னார் பண்ணையார்.

நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் அப்பா . கூடிய சீக்கிரத்தில் நாங்கள் அவர்களை கண்டுபிடித்து உங்களுடைய
மனக் கஷ்டத்தை நிச்சயம் போக்குவேன் . என்று பரந்தாமன் சொல்லிவிட்டு அங்கிருந்து மூவரும் புல்லட்பைக்கில் கிளம்பினார்கள்.

பண்ணையாருக்கு இருக்கும் வசதிக்கு ஆளுக்கொரு பைக்கில் கூட செல்லலாம்.
இல்லை ஆளுக்கொரு காரில் கூட செல்லலாம் அந்த அளவுக்கு பண்ணையாருக்கு வசதி இருந்தாலும் . பண்ணையாரின் மகன்கள் மூவரும் ஒற்றுமையாக ஒரே பைக்கில் செல்வது தான் பழக்கம் எங்கு சென்றாலும் இவர்கள் மூவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள் . அதுவும் ஒரே பைக்கில் மூவரும் செல்வார்கள் இது ஊரறிந்த விஷயம் .
இப்படி மூவரும் ஒரே பைக்கில் காணாமல் போனவர்களை தேடுவதற்காக கிளம்பிச் சென்றார்கள்.

பரந்தாமன் சற்று வெகுதூரம் சென்று விட்டான் .அப்போது அவன் கண்ணுக்கு மதுக்கடை தெரிந்தது உடனே பைக்கை கடைக்கு எதிரே நிறுத்தி விட்டு அமைதியாக நின்றிருந்தான். சந்திரனும் தீனாவும் பைக்கில் இருந்து இறங்கி மூவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
காணாமல் போனவர்களை தேடவில்லை .

அப்போது தீனாவின் கண்களுக்கு அந்த மதுக்கடை தெரிந்தது .
உடனே சந்திரனுக்கு சிக்னல் கொடுத்தான்.
அவனும் புரிந்துகொண்டு அவன் அண்ணனிடம் கேட்டான் .

அண்ணா மது குடித்து ரொம்ப நாளாச்சு என்று லேசாக சிரித்துக் கொண்டே கேட்டான்

நீங்கள் மது கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் பைக்கை நான் ஓரம் கட்டினேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு . பரந்தாமன்
வேண்டாம் விருப்பம்போல சரி சரி வாங்கிக்கொள்ளுங்கள் என்று சலிப்புடன் தம்பிகளுக்கு பணம் கொடுத்தான்.

சந்திரனும் தீனாவும் சந்தோஷமாக மதுக் கடைக்குச் சென்று நிறைய முதுகலை வாங்கிக்கொண்டார்கள்

பிறகு மூவரும் காணாமல்போனவர்களை தேடாமல் திரும்பிவிட்டார்கள் அப்போது பரந்தாமன் சொன்னான்.

நேரம் நிறைய இருப்பதால் நம் தோட்டத்திற்கு சென்று விடலாம் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பிறகு வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று பரந்தாமன் சொன்னான்.

அப்படியே செய்யலாம் என்று சந்திரனும் தீனாவும் சொன்னார்கள் பிறகு மூவரும் தோட்டத்திற்கு வந்து விட்டார்கள் வழக்கம்போல களத்துமேட்டில் பைக்கை நிறுத்திவிட்டு. மூவரும் வரப்பு மேட்டில் நடந்து சென்றார்கள்

அப்போது அந்த பச்சை பசுமையான வயல்வெளியில் நமது கனகா மண்வெட்டியுடன் மிளகாய் செடிக்கு தண்ணீர் பாய்ச்சி இருந்தாள் அப்போது அவள் சேலை முட்டிக்கு மேல் தூக்கி கட்டி இருந்தாள் அவளின் அழகை பார்த்து சந்திரனுக்கு லேசான போதை ஏறியது . இவ்வளவு அழகாக இருக்கிறாளே இந்த கனகா என்று ஓரக்கண்ணால் பார்த்தும்
பார்க்காத படி பரந்தாமன் பின்னால் நடந்து சென்று இருந்தான்.

அதே போல தீனாவும் கனகாவை பார்த்து ரசிக்க ஆரம்பித்தான் .என்ன அழகு இவள் பார்க்கும் போதே இப்படி போதை ஏறுகிறதே என்று அவனும் கனகாவை ரசித்தபடி சென்றுகொண்டிருந்தான்

பரந்தாமன் தம்பிகளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே சென்றிருந்தான் .
அப்போது சந்திரனும் தினாவும் கனகாவை ரசித்து ரசித்து பார்ப்பதை பரந்தாமன் கவனித்து விட்டான் . இருந்தாலும் எதுவும் தெரியாதவன் போல அவன் பேசிக்கொண்டே நடந்து சென்றான்

யாரும் இல்லாத இடத்தில் .
மேடை போல அமைந்திருக்கும் ஒரு தண்ணீர்த் தொட்டியின் மீது அமர்ந்தார்கள். அப்போது அவர்களை சுற்றி அந்த இயற்கைக்காட்சிகள் சூழ்ந்திருந்தன . இவர்கள் மூவரும் அந்த இயற்கையின் மத்தியில் அமர்ந்து கொண்டு மது அருந்துவதற்கு தயாரானார்கள்

அப்போது பரந்தாமன் 3 காகித டம்ளரில் மதுவை ஊற்றினான் ...

நீங்கள் அந்த பெரியவரின் மருமகளை உற்று உற்று பார்த்து அவள் மேல் நிறைய ஆசையை வளர்த்துக் கொண்டீர்கள் .
நானும் சரி ஏதோ பார்க்கத்தானே செய்கிறார்களே என்று நினைத்து அமைதியாக இருந்தேன்.
நீங்கள் ஒரு நாள் எல்லையை மீறி அந்தப் பெரியவரின் மருமகள் பம்புசெட்டின் தண்ணீர் தொட்டியில் குளித்து இருக்கும்போது ஒளிந்திருந்து பார்த்தீர்கள்.
சரி வயசுக்கோளாறு என்று நினைத்து அதையும் நான் கண்டுகொள்ளவில்லை .

பிறகு நீங்கள் அவளை காம வெறியோடு நேருக்கு நேராகவே பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள் இப்படி நீங்கள் அந்த பெண்ணின் மீது அளவு கடந்த ஆசையை வளர்த்துக் கொண்டீர்கள்.
சரி நானும் தம்பிகள் ஆசைப்படுகிறார்கள் என்று உங்கள் மீது உள்ள பாசத்தில் அந்தப் பெண்ணை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடம் சொன்னேன் . நீங்களும் அந்தப் பெண்ணை இருவரும் கற்பழித்து விட்டீர்கள் .
சரி அவள் என்னிடம் வந்து உங்களைப் பற்றி எடுத்துச் சொல்வாள் அவளை சமாதானம் செய்து விடலாம் என்று நினைத்தேன் .ஆனால் அவள் கணவனுடன் அன்று எங்கேயும் ஓடிவிட்டாள்.

இப்போ இந்த பிரச்சனை நம்ம அப்பா பெரியதாக எடுத்துக் கொண்டார் .இனிமேல் அவர் நம்மை தொந்தரவு செய்து கொண்டுதான் இருப்பார் அவர்களை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று நம்மிடமே சொல்கிறார் . அவளை நம்ம எப்படி கண்டுபிடிக்க முடியும் அவளை கண்டு பிடித்து விட்டால் நம்முடைய தவறை எல்லாம் அந்தப் பெண் அப்பாவிடம் சொல்லிவிடுவாள்.அதுக்கப்புறம் ஊருக்குள்ளே நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் .அது மட்டுமா நடக்கும் நம் மூன்று பேரையும் அப்பா உயிரோடு விடுவாரா என்பதும் சந்தேகம் தான் இப்படி பெரிய பிரச்சனையில் நம்ம மாட்டிக்கிட்டு இருக்கும்.

அதனால் அவளை தேடாமல் தேடுவதை போல நடித்து விட்டு வரவேண்டும் .

இப்படி பிரச்சனை போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் மறுபடியும் நீங்கள் இதுபோன்ற தவறை இனி மேல் செய்யக்கூடாது என்று பரந்தாமன் தம்பிகளிடம் சொன்னான்...


பரந்தாமன் தம்பிகளுக்கு மதுவும் வாங்கிக் கொடுத்து .கெடுக்கிறான் பிறகு செய்த தவறையும் திருத்திக் கொள்ளுங்கள் என்று நல்லதையும் சொல்கிறான் . அவனுடைய திட்டம் என்னவாக இருக்கும் பொருத்திருந்து பார்க்கலாம்....


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
🔝👆மேலே இருக்கும் பகுதி 👆அத்தியாயம்-....2 👆




⬇️அத்தியாயம்.... 3👇

இனிமேல் நமக்கு பொறுப்புக்கள் அதிகமாக உள்ளது இந்த எல்லா நிலங்களையும் செழிப்பாக விவசாயம் செய்ய வேண்டும் அதனால் நீங்கள் ஏற்கனவே அந்த பெரியவரின் மருமகளை கற்பழித்தது போல மறுபடியும் அதுபோன்ற தவறுகளை இனிமேல் நீங்கள் செய்யக்கூடாது .

ஏதோ உங்கள் மீது உள்ள பாசத்தினால் இவ்வளவு நாள் நீங்கள் செய்த தவறான செயலுக்கு நானும் உடந்தையாக இருந்து விட்டேன் .
இனிமேல் அப்படி இருக்க மாட்டேன் அதனால் உங்கள் வாழ்க்கையும் பாழாகிவிடும் இதுபோன்ற இந்த குடிப்பழக்கத்தை கூட மெல்ல மெல்ல நீங்கள் விட்டுவிட வேண்டும் .
இல்லையென்றால் அப்பா என் மீதும் கோபப்படுவார். என்று சொல்லிக்கொண்டே மதுக்கலை டம்ளரில் ஊற்றினான் பரந்தாமன் .

சந்திரன் தினாவும் சற்று வருத்தத்தோடு மக்களை குடிக்க ஆரம்பித்தார்கள்.

பரந்தாமன் மட்டும் குடிப்பது போல நடித்து . தம்பிகளுக்கு தெரியாமல் டம்ளரில் இருந்த மதுவை கீழே கொட்டி விட்டான் அனைத்து மக்களையும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் நன்றாக ஊத்திக் கொடுத்து விட்டான்.

சந்திரனுக்கும் தீனாவுக்கும் மெல்ல மெல்ல போதை தலைக்கு ஏறியது .இருவரும் தள்ளாடினார் அப்போது சந்திரனின் பேச்சும் தீணாவின் பேச்சும் உளர ஆரம்பித்தது .

அப்போது சந்திரன் கேட்டேன் .... அண்ணே ஏதோ தெரியாம அந்தப் பெண்ணை நாங்க கெடுத்துவிட்டோம் இனிமே நாங்க எந்த தவறையும் செய்ய மாட்டேன் அண்ணா .
நீங்கள் ஒன்றும் கவலை படாதீங்க என்று உலறியபடி சொன்னான் சந்திரன் .

அண்ணா நாங்கள் அவளை பார்த்து ரசித்தோமே தவிர அவளை அனுபவிப்பதற்கு எங்களுக்கு பயமாக தான் இருந்தது .பார்ப்பதோடு நாங்கள் நிறுத்திக் கொண்டோம்
நீங்கள் எங்களுக்கு தைரியம் சொன்னதால்தான் நாங்கள் அந்தப் பெண்ணை கெடுத்து விட்டோம் .இல்லை என்றால் எங்க ரெண்டு பேருக்குமே அந்த துணிச்சல் கிடையாது . இனிமேல் உங்கள் பேச்சை நாங்கள் மீற மாட்டோம் அண்ணா இந்த ஒருமுறை எங்களை மன்னித்துவிடு அண்ணா இனிமேல் நீங்கள் சொன்னது போல மெல்ல மெல்ல குடி பழக்கத்தை யும் நிறுத்தி விடுகிறோம் அண்ணா என்று தீனா சொன்னான்.

சரி சரி நீங்கள் என் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும் நீங்கள் இப்போது இங்கேயே படுத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள் .
நான் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து வருகிறேன் .பொழுது சாய்ந்ததும் வீட்டுக்கு போகலாம் என்றான் பரந்தாமன் .

அண்ணா வீட்டுக்கு போனால் அப்பா காணாமல் போனவர்களை பற்றி விசாரித்தால் என்ன சொல்வது . என்றான் தீனா.

என்ன சொல்லணும் ...முடிய தேடிப் பார்த்தோம் அப்பா ..எங்கும் கிடைக்கவில்லை அடுத்தமுறை போகும்போது வேறு ஒரு இடத்தில் தேடிப் பார்க்கிறோம் என்று பொய் சொல்லலாம் என்றான் பரந்தாமன்

இப்படியே எத்தனை நாள் பொய் சொல்ல முடியும் அண்ணா என்றான் தீனா .

என்ன செய்வது மூன்று பேரும் சேர்ந்து தவறு செய்து விட்டோம் அந்த பெண்ணை கண்டுபிடித்து கொடுத்தாலும் ஆபத்து நமக்குத்தான் . அதனால் முடிந்தவரை பொய் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்
அப்பாவிடம் நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க பரந்தாமன் கிளம்பினான்.

பார்க்குமிடமெல்லாம் பச்சை பசுமையாக 🌴🌿🌱🌾🌷 தோட்டம் செழிப்பாக வளர்ந்திருப்பதை பார்த்து பரந்தாமனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .

அப்போது பரந்தாமன் நினைத்தான்

இப்படிப்பட்ட நிலங்களை நாமே அனுப்பி வைக்க வேண்டும் இதிலிருந்து ஒரு பிடி மண் கூட தம்பிகளுக்கு பாகம் என்ற பெயரில் கொடுக்கக் கூடாது .
எல்லாம் நிலங்களிலும் நாமதான் விவசாயம் செய்ய வேண்டும்
நாமதான் ஆள வேண்டும்
எல்லா நிலங்களும் நமக்குத்தான் சொந்தமாக மாற்றிக்கொள்ள வேண்டும் .
தம்பிகளுக்கு திருமணம் நடந்த அவர்களின் மனைவிகள் நம்மிடம் கணக்கு கேட்பாள்
நிலத்தை பிரித்துக் கொடுக்கும்படி சொல்வாள் அதனால் தம்பிகளுக்கு திருமணமே நடத்தி வைக்கக் கூடாது . அதேசமயம் தம்பிகளை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கி விட வேண்டும் . அடுத்ததாக காமபோதைக்கு ஆளாகி விட வேண்டும் .

அதனால் தான் பம்புசெட்டில் வேலைசய்த அந்த பெரியவரின் மருமகளை கற்பழிப்பதற்கு தம்பிகளை தூண்டி விட்டோம் தம்பிகளும் அண்ணன் நம்மீது உள்ள பாசத்தினால் இது போன்ற தவறுகளுக்கு அண்ணன் சம்மதிக்கிறார் என்று நினைக்கிறார்கள் .நம்முடைய எண்ணம் அவங்களுக்கு தெரியாது இவர்களை இப்படியே குடிப்பழக்கத்திற்கும் பெண் முகத்திற்கும் அடிமையாக்கி விட வேண்டும் . அப்போதுதான் அவர்களுக்கு திருமண ஆசை வராது .

அத்தோடு அவர்கள் மீது நம் பாசம் காட்டுவது போலவே நடிக்க வேண்டும் . அப்போதுதான் நம் பேச்சுக்கு இருவரும் மதிப்பு கொடுப்பார்கள் என்று பரந்தாமன் திட்டம் போட்டான்.

தோட்டத்தை எல்லாம் சுற்றி விட்டு வந்ததில் நேரம் கடந்தது பிறகு தம்பிகளை எழுப்பி பரந்தாமன் வீட்டுக்கு போகலாம் என்று அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான் வீட்டுக்கு .மூவரும்.

மிகுந்த எதிர்பார்ப்போடு சாந்தி பரந்தாமனின் வருகைக்காக காத்திருந்தாள்.
காணாமல் போனவர்களை பற்றி ஏதாச்சும் தகவல் கிடைத்து இருக்குமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தால் சாந்தி

அப்போது பரந்தாமனும் சந்திரன் தீனாவும் பைக்கில் வருவதை பார்த்து ஆவலோடு ஓடி வந்து எதிரே நின்றாள் . பரந்தாமனும் சாந்தி முகத்தை கூட சரியாகப் பார்க்காமல் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு மூவரும் அவரவர் அறைக்கு சென்றார்கள் .

பிறகு சாந்தியும் பரந்தாமனின் பின்னாலேயே சென்றாள்.

என்னங்க காணாமல்போனவர்களை பத்தி ஏதாச்சும் தகவல் கிடைத்ததா என்றால் சாந்தி.

இவ்வளவு நாளா போலீசே தேடிக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கே இதுவரைக்கும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை இன்னைக்கு தான் நாங்க போணோம் அதுக்குள்ள தகவல் கிடைத்து விடுமா .என்று சற்று எரிச்சலாக சொன்னால் பரந்தாமன்.

என்னங்க போலீஸ் தொடர்வதற்கும் நீங்க தேடுவதற்கும் வித்தியாசம் இருக்குங்க .அவங்க ஒருத்தரை மட்டும் தேட மாட்டாங்க .இதோட ஏற்கனவே காணாமல் போனவர்களையும் தேடுவாங்க அதனால அவங்களுக்கு கிடைக்க கொஞ்சம் லேட்டா தான் ஆகும் ஆனா நீங்க அப்படி இல்லையே நீங்க மூணு பேரு விசாரிச்சா கொஞ்சம் சீக்கிரம் கிடைத்து விடுவார்களே என்று நினைத்தேன் பரவாயில்லை அடுத்தமுறை போகும்போது வேறு ஒரு இடத்தில நல்லா தேடுங்கள் என்று சிரித்தபடி சொன்னாள் சாந்தி.

இப்பதானே ஆரம்பிச்சு இருக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல தகவல் கிடைச்சுடும் என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குச் சென்று விட்டான் பரந்தாமன் .

பிறகு சாந்தி பண்ணையாரிடம் சென்று விவரத்தைச் சொன்னாள்

கண்டிப்பா என்னுடைய பிள்ளைங்க கண்டுபிடிச்சுடுவாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு மா அதுக்கப்புறம் எனக்கு என் இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்ய வேண்டும் .
அதுக்கப்புறம் என்னோட எல்லா நிலங்களையும் நான்கு பாகமாக பிரித்து அதில் மூன்று பாகங்கள் என் மூன்று பிள்ளைகளுக்கும் ஒருபாகம் இந்த ஊர் மக்களுக்கு எல்லோருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கணம் இதுதான் என்னோட லட்சியம் .நான் மண்ணுக்குள்ள போவதற்குள் இந்த இரண்டு விஷயத்தை செஞ்சு முடிக்கணும். என்று ஒரு லட்சியமாக தனது மருமகளிடம் .தனது குறிக்கோளை பண்ணையார் சொன்னார்.

இதில் ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை மாமா ...
உங்க பிள்ளைகளுக்கு நீங்க திருமணம் செய்யப் போறீங்க
உங்க நிலத்துல ஒரு பங்கை இந்த ஊர் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப் போறீங்க .
இதுல ஒரு கஷ்டமும் இல்லை இதையே ஏன் ஒரு பெரிய விவகாரமாக நினைத்து கவலைப் படாதீங்க மாமா என்றாள் சாந்தி.

அப்படி ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது திருமணம் செய்வது
நம் குடும்பத்திற்கும் அவங்க குடும்பத்திற்கும் ஒத்துப் போகணும் இப்படித்தான் சந்திரனுக்கு போனமுறை ஒரு நல்ல இடம் கிடைத்தது .பெண்ணும் நன்றாக தான் இருந்தாள் ஆனால் யாரோ வந்து அவள் படிக்கும் இடத்தில் யாரையோ விரும்புகிறாள் என்று உன் கணவன் பரந்தாமனிடம் யாரோ ஒருவர் சொல்லியிருக்காங்க .
பரந்தாமன் என்னிடம் ரகசியமாக இந்த விஷயத்தை சொன்னான் என்ன செய்ய முடியும் இது வெளியில் தெரிந்தால் சந்திரனுக்கும் நம் குடும்பத்துக்கும் தான் அசிங்கம் . அதனால் நானே அந்த வரனை வேறு ஏதோ காரணம் சொல்லி நிறுத்திவிட்டேன் .
இப்படி திருமணம் செய்வதற்கு நேரம் கூடி வர வேண்டும் அப்போதுதான் திருமணமும் மற்ற விவகாரம் எல்லாம் நம்மால் நிம்மதியாக செய்ய முடியும் என்றார் பண்ணையார்.

அப்படியா விஷயம்... எனக்கும் நீங்கள் அந்த வரனை வேண்டாம் என்று சொல்லும் போது சந்தேகமாகவே இருந்தது பார்ப்பதற்கு பெண் அழகாக இருக்கிறாளே. ஏன் மாமா இந்த வரனை வேண்டாம் என்று சொல்கிறாரே என்று நினைத்து வருத்தப்பட்டேன் .
இப்போதுதான் புரிகிறது என்று சாந்தி சொன்னாள் .
உண்மைதான் மாமா அந்தக் காலத்திலே வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்வார்களே நிஜம்தான் என்று சாந்தி சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.


பம்புசெட்டில் தங்கி குடும்பத்தோடு வேலை செய்யும் கனகா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள் .அவள் கணவன் ஊமையன் கனகா மீது பாசமாக இருப்பான் இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் . இரண்டு வயதில் ஒரு கைக் குழந்தையும் உண்டு .👪
இப்படி குடும்பத்தோடு சந்தோஷமாக பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

வழக்கம் போல நமது ஹீரோ சங்கர் பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு .
வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் 🚲 அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் எல்லாமே சின்ன சின்னதாக தான் இருக்கும் பார்ப்பதற்கு அழகாக வரிசையாக அனைவரும் ஒரு வட்டத்துக்குள் இருப்பதுபோல ஒரே இடத்தில் இருப்பார்கள் 🛖🏠⛺🏡மொத்தத்தில் அந்த கிராமம் அழகு மிகுந்த கிராமம் .

அப்போது சங்கர் வீட்டின் அருகில் சென்றபோது நமது ஹீரோயினி ரேகா . வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் .

இதை கவனித்த சங்கர் ஓரக்கண்ணால் ரேகாவை பார்த்தா படி வீட்டின் அருகில் சென்றான் அப்போது முத்தையா வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற சங்கர் பண்ணையார் கொடுத்த இனிப்புகளை எடுத்துவந்து வெளியில் வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கும் ரேகாவிடம் நீட்டினான்.

இந்த புள்ள .ஸ்வீட் சாப்பிடு உங்க அம்மாவுக்கும் கோடு என்று சொன்னான் .

ரேகாவும் சங்கர் முகத்தை பார்க்காமல் தரையைப் பார்த்துக் கொண்டே ஸ்வீட்டை வாங்கிக்கொண்டாள் .
மீண்டும் வாசனை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் .
அப்போது சங்கர் ரேகாவின் இயல்பான அழகை பார்த்து ரசித்தான் சாதாரண பாவாடை சட்டையை அணிந்திருந்தாள் ரேகா ஒல்லியான தேகம் சிவப்பான நிறம் சுறுசுறுப்பாக வேலை செய்வாள் இப்படி ரேகாவின் எல்லாம் நடவடிக்கையும் சங்கருக்கு பிடிக்கும்.

ரேகா சங்கர் முகத்தை பார்க்காவிட்டாலும் அவள் மனம் முழுக்க சர்க்கரையே பார்த்துக்கொண்டிருந்தது .அவள் ஓரக்கண்ணால் பார்த்தும் பார்க்காத படி சங்கரை ரசிப்பாள்
இப்படி இருவருமே ஓரக் கண்களால் பார்த்துக் கொள்வார்கள் .
இருவரும் அதிகமாக பேச மாட்டார்கள் ஆனால் சங்கரின் மனதில் ரேகா நிரம்பி இருப்பாள் ரேகாவின் மனதில் சங்கர் நிரம்பி இருப்பான்

ரேகாவின் வீடு சங்கரின் எதிர்வீடு . ரேகாவுக்கு அப்பா இறந்துவிட்டார் அம்மா மட்டும்

பெண்கள் இல்லாத வீடு என்பதால் ரேகா அடிக்கடி வந்து சங்கர் வீட்டையும் வாசலையும் சுத்தம் செய்வது வழக்கம் .

அதேபோல சங்கரும் ரேகாவை பாசமாக பார்ப்பான் அப்பா இல்லாததால் ரேகாவுக்கு பொருளுதவியும் செய்வான்
இப்படி இருவரும் மனதுக்குள் காதல் செய்தாலும் வெளியில் காட்டிக் கொல்லா மாட்டார்கள் இப்படி ஓரக்கண்ணால் இருவரும் காதல் செய்தார்கள் .

அப்போது முத்தையா சங்கரிடம் சொன்னார் ...ஐயா இன்னிக்கி தண்ணி காய வெச்சு எனக்கு கொஞ்சம் உடம்புக்கு ஊத்தி விடுடா என்றார்.

நாலு நாள் முன்னாடி தானே உனக்கு உடம்புக்கு ஊத்தினேன் அதுக்குள்ள மறுபடியும் உடம்புக்கு ஓதனுமா.

உடம்பெல்லாம் ஒரே கச கசன்னு இருக்குடா . இன்னைக்கு ஒரு நாளைக்கு ஊத்தி விடண்டா என்றார் முத்தையா.


இன்னைக்கு எனக்கு முக்கியமான கபடி மேட்ச் இருக்கு .அதுக்கு நான் இப்ப கிளம்புறேன் அதனால நாளைக்கு பார்க்கலாம்.
உனக்கு உடம்புக்கு ஒத்துராதா இல்லயான்னு. பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டு ரேகாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே கபடி உடையை அணிந்திருந்தான் சங்கர்.

அப்போது சங்கரின் நண்பன் ஒருவன் சைக்கிளில் வந்து வாசலில் நின்று பெல் அடித்தான் சீக்கிரம் வாடா நேரமாச்சு என்று கத்தினான். உடனே சங்கரும் கபடி உடையனிந்து கொண்டு வெளியே வந்து தனது சைக்கிளை எடுத்தான்.

சீக்கிரமா வந்து எனக்கு உடம்புக்கு ஊத்தி விடு டா என்றார் முத்தையா.

பாக்கலாம் என்று சொல்லிவிட்டு தனது நண்பனோடு கபடி விளையாட சென்றுவிட்டான் சங்கர்.

அந்த கிராமத்தில். சேற்றுகபடி விளையாடுவது வழக்கம்.
பண்ணையார் தோட்டத்தில் இருக்கும் நிலங்களில் சிறிதளவு கபடி விளையாடுவது என்று தனியாக இடம் ஒதுக்கி இருக்கும் அந்த நிலத்தில் எப்போதுமே சேர் இருந்துகொண்டே இருக்கும்
அதில் இளைஞர்கள் கபடி விளையாடுவது வழக்கம் .
அந்த சேற்றில். இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு கபடி விளையாடும் போது பார்ப்பதற்கு அந்தக் காட்சி அழகாக இருக்கும் அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து . சிரித்து மகிழ்வார்கள் இளைஞர்கள் சேற்றில் விழுந்து விழுந்து கபடி ஆடுவதற்கு அவர்களுக்கு அதிகமான ஆர்வம் உண்டு.
இப்படி சங்கர் அணியினரும் எதிரணியினர் விளையாடி ஒரு வழியாக சங்கர் அணியினர் வெற்றி பெற்று . வழக்கமான உற்சாகத்தோடு பம்புசட்டில் குளித்தார்கள் அனைவரும்

அப்போது. சங்கருக்கு அவனது அப்பா குளிப்பாட்டி விடு என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
உடனே சங்கர் கிளம்பிவிட்டான்

அப்போது அவன் வீட்டின் அருகில் சென்று கொண்டிருக்கும்போது ரேகா முத்தையாவை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.
இதை பார்த்ததும் சங்கருக்கு ரேகாவின் செயல் அவன் மனதை மேலும் உறுக செய்தது .
பிறகு சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு ரேகாவை பார்த்தான் வாசலில் முத்தையா அமரவைத்து சுடசுட வெந்நீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் ரேகா .
அப்போது அவள் முத்தையாவின் முதுகிற்கு. சோப்பு போட்டு அழகை தேய்த்து குளிப்பாட்டினாள் இதைப்பார்த்த சங்கருக்கு
ரேகா தனது குடும்பத்தின் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாலே என்று நினைத்து பெருமைப் பட்டான் சங்கர்.


சங்கரின் மனதில் காதலியாக நிரம்பி இருந்த ரேகா .
இப்போது தாய் பாசத்திலும் நிரம்பி விட்டால்.



தொடரும்.......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்..... 4 👇


முத்தையா குளித்து முடித்தவுடன் வழக்கம்போல மெதுவாக தடிக்கொம்புடன் திண்ணை மீது அமர்ந்துகொண்டார் .
அப்போது சங்கரை பார்த்து கேட்டார்.

நேத்து தோட்டத்துக்கு பண்ணையார் வந்து இருந்தாரா என்றார் முத்தையா.

ஆம் வந்திருந்தார் அப்பா ...
வந்ததும் என்னைப்பர்த்து ஆசையோடு கட்டிப்பிடிச்சுக்கொண்டு விசாரிச்சார் உங்கள பத்தியும் என்றார் சங்கர்.

அவன் நல்லபடியா இருக்கிறானா உடம்புக்கு ஒண்ணும் இல்லையே என்று சங்கரிடம் கேட்டார் முத்தையா.


அவருக்கு ஒன்றும் இல்லை நன்றாகத்தான் இருக்கிறார் அப்பா அவர்தான் உங்களைப்பற்றி ரொம்ப நேரம் விசாரிச்சார் .
அத்தோடு உங்களுக்கும் புது துணி கொடுத்தாரு. எல்லோருமே சந்தோஷமா சாமி கும்பிட்டுட்டு அவர் கடைசி பையனோட பிறந்தநாள் கொண்டாடி முடிச்சிட்டு சந்தோஷமா எல்லோரும் நல்லபடியா வந்தோம் அப்பா.

எனக்கு புத்தி தெரிந்தவரை ஒருமுறைகூட . தீனாவின் பிறந்தநாளுக்கு வந்ததே இல்லை இப்போது வயதாகிவிட்டது வரமுடியவில்லை .ஆனால் நான் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது கூட பிறந்த நாளன்று நீங்கள் பம்புசெட் பக்கமே போகாமல் வீட்டிலேயே இருப்பீங்க சோகமாக. எதுக்கு அப்பா
என்றான் சங்கர்.

இந்த ஊரே சந்தோஷமா இருக்கனும் என்பதற்காகத்தான் பண்ணையார் தீணாவின் பிறந்தநாளை அதிக செலவு செய்து கொண்டாடுகிறார். ஆனால் அவர் மனைவி அன்று இறந்த நாள் அந்த வருத்தம் பண்ணையாருக்கும் எனக்கு மட்டும்தான் இருக்குது

ஏன்னா ...அந்த அம்மா ரொம்ப கவலையோடு உயிரை விட்டாங்க அவங்க உயிரை விடும்போது பண்ணையார் அவங்க கூட இல்லை நான் தான் இருந்தேன் .

அப்போது தினா பிறந்தவுடன் பண்ணையார் சந்தோசத்துல இனிப்பு கொடுக்கலாம் என்று நினைத்து கடைக்கி போய்ட்டான் அப்போ நான் வெளியில நின்னு இருந்தேன் .உடனே நர்ஸ் அம்மா வந்து அந்த அம்மா வலியால் துடிக்கிறாங்க அவர் எங்க னு கேட்டாங்க .
இதோ கடைக்கு போய் இருக்கார் என்று சொல்லிட்டு நான் உள்ளே போய் பார்த்தேன் .அப்போ அந்தம்மா உடம்பெல்லாம் ஒரே ரத்தம் தீனா பிறந்தவுடன் இரத்தம் நிற்கவே இல்லை .
பாவம் குழந்தை கத்திக்கொண்டே இருந்தான் பாலுக்காக
அந்த அம்மாவால பால் கொடுக்க முடியாமல் தவித்தாங்க.

அவங்க நம் உயிர் போகப் போகுதுஎன்று மனசுல நினைச்சுட்டாங்க போல தெரிகிறது அவங்க கண்களில் கண்ணீர் கொட்டுதே தவிர அவங்களால் எதுவுமே பேச முடியல .

அந்த அம்மா குழந்தை முகத்தை பாக்குறதுக்கு எவ்வளவோ முயற்சி செய்தாங்க. நான் அவங்களோட என்னத்தை புரிஞ்சுகிட்டு தீணவை தூக்கி முகத்தை காட்டினேன் அப்போது அந்த அம்மா தொட்டுப் பாக்குறதுக்கு முயற்சி செய்தாங்க அவங்களால முடியவில்லை .
பாவம் எனக்கு அங்கே நிக்கிறதுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது .
அந்த அளவுக்கு அவங்க அலங்கோலமாய் இருந்தாங்க அப்போ குழந்தைக்கு பால் கூடுமா என்று சொல்லிட்டு நான் உடனே வெளியே வந்து. பண்ணையார் வருகிறானா என்று எதிர்பார்த்திருந்தேன் .சிறிது நேரம் கழித்து பண்ணையார் வரவில்லை

சரி உடனே குழந்தை என்ன பண்றான் என்று உள்ளே போய் பார்த்தா குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அந்தம்மா இறந்துவிட்டு இருந்தாங்க .தீனா இறந்த தாய் மடியில் பால் குடித்தது என் மனம் கேட்கவில்லை உடனே குழந்தையை தூக்கிக்கொண்டேன் .

அன்னிக்கு ஏன் மனம் புண்பட்டது தான் அது இன்னும் என் மனசு ஆறலை . இப்படிப்பட்ட நிலைமை எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. அந்த கசப்பான அனுபவம் என் மனச ரொம்ப கஷ்டப்படுத்திரிச்சி

உடனே நான் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே வந்து பார்த்தேன். சாக்லேட் வாங்கிட்டு வரச் சென்ற பண்ணையார் திரும்பி வந்தான் . ஆசையோடு சாக்லேட்டை வாரிக் கொடுத்தான் எனக்கு. என் கண்களில் வந்த கண்ணீரை பார்த்து அவன் அதிர்ச்சியோடு நின்றான் .

என்னடா ஆச்சு .....

உன் மனைவி நம்மை அனாதையாக விட்டுட்டு
போயிட்டாங்க என்று அவனை கட்டி அணைத்துக்கொண்டு அழுதேன் மற்றபடி அவனுக்கு நான் எதுவும் கூற முடியவில்லை.
அவன் அதிர்ச்சியில் வாங்கிக்கொண்டு வந்த மிட்டாய் எல்லாம் கீழே கொட்டி விட்டு புரண்டு புரண்டு அழுதான்.

அதன் பிறகு தீனாவை காப்பாற்ற பண்ணையார் ரொம்ப கஷ்டத்தை எல்லாம் அனுபவிச்சான் குழந்தைக்கு பால் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தான் நான் தான் குழந்தையை தூக்கி வந்து நம்மூரில் இருக்கும் குழந்தை பெற்ற பெண்கள் இடம் சிறிது பால் ஊட்ட சொல்வேன் .
இப்படி எவ்வளோ கஷ்டப்பட்டு அவனை வளர்த்தோம் ஆறு மாதம் கழித்து தான் அவன் பசும்பாலை குடிக்க ஆரம்பித்தான்.

இப்படி பண்ணையார் கஷ்டப்படுவதை பார்த்து ஊர் மக்கள் பெரும் கவலையில் இருந்தார்கள். தீனா பிறந்ததை நினைத்து யாரும் சந்தோசப் படவில்லை . அதனால் பண்ணையாருக்கு சிறிது வருத்தம் பிறகு இந்தக் கவலையைப் போக்க வேண்டுமென்று இதுவரைக்கும் பரந்தாமனின் பிறந்த நாளும் கொண்டாடியது இல்லை சந்திரனின் பிறந்த நாளும் கொண்டாடியது இல்லை .தீனாவின் பிறந்தநாளை மட்டும் இப்படி கோலாகலமாக கொண்டாடுவதற்கு காரணம் .ஊர் மக்கள் நம் மனைவியின் நினைவு நாளை நினைத்து கவலைப்படுவதை விட நம் மகன் பிறந்தநளை நினைத்து சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பண்ணையார் இப்படி செலவு செய்து ஊர் மக்களை சந்தோசப்படுத்துவன்

ஆனால் தீனா பிறந்தபோது ஏற்பட்ட அந்த கசப்பான அனுபவம் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை அதனால்தான் நான் இந்த ஒரு விசேஷத்துக்கு மட்டும் நான் போக மாட்டேன் என்று . வருத்தத்தோடு சொன்னார் முத்தையா .

இதைப்பற்றி நீ யாரிடமும் சொல்லாதே நான் ஏன் இப்போது உன்னிடம் சொன்னேன் தெரியுமா எனக்குப் பிறகு அந்த குடும்பத்தை நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இந்த விஷயத்தை உனக்கு நான் எடுத்துச் சொன்னேன் என்றார் முத்தையா.

தீனாவின் பிறந்த நாளில் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா என்று நினைத்துக் கொண்டான் சங்கர் பிறகு அவனும் சற்று சோகத்தில் ஆழ்ந்தான் . பாவம் தீனா பிறந்த உடன் தாய் மடியில் பால் குடிக்க கூட அவனுக்கு கொடுப்பனை இல்லை என்று நினைத்து சங்கர் வருத்தப்பட்டான்.

அப்போது ரேகாவின் அம்மா லட்சுமி அம்மாள் கோவிலுக்கு போயிட்டு வந்து திருநீரை முத்தையாவுக்கு ம் சங்கருக்கும் நெற்றியில் இட்டாள்.

உங்க அம்மா அப்பாவை போய் பாத்துட்டு வந்தைய அம்மா என்று லட்சுமியிடம் முத்தையா கேட்டார்.

நான் இருக்கிற நிலைமைக்கு எப்படி போய் நான் பார்த்துவிட்டு வரமுடியும் . அவங்கதான் என்னை வந்து பார்க்கணும் இப்படி பொன்னை வச்சுக்கிட்டு கஷ்டப்படுறாள் என்று நினைத்து அவங்கதான் என்னை வந்து பார்க்கணும் என்றால் லட்சுமி.

உன் தம்பி என்ன பண்றான் அவனும் வரவில்லையா.

ரேகா பெரிய மனுஷியானதும் குடும்பத்தோடு வந்து போனாங்க அதிலிருந்து இன்னும் வரவில்லை அஞ்சு வருஷம் ஆகுது இன்னும் யாரும் வந்து எட்டிப் பாக்கல அக்காவை பத்தின கவலையும் இல்லை என் தம்பிக்கு .
பேத்தியை பத்தின கவலையும் இல்லை என்னோட அம்மா அப்பாவுக்கு. என்ன செய்றது அப்பா விசேஷமான வராங்க இல்லனா கிடையாது என்று சலிப்போடு சொன்னால் லட்சுமி.


சரி அவங்களுக்கு என்ன வேலையோ . அதுக்காக அப்பா அம்மா தம்பி பாசம் இல்லாமல் போகுமா என்னைக்கு இருந்தாலும் நம்ம உறவு தான் நமக்கு தங்குவாங்க என்று லட்சுமிக்கு சற்று ஆறுதல் சொன்னார் முத்தையா.

இப்போதைக்கு அப்பா நீங்க இருக்கீங்க .இந்த சொந்தமே எனக்கு போதும் அப்பா என்று சொல்லிக்கொண்டு இலட்சுமி கிளம்பினாள்.

.....ஒரு நாள்...

பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யும் கனகா தனது பத்து வயது மகனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தாள் .
அவள் கணவன் ஊமையன் தனது இரண்டு வயது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தான் மடியில் களத்திக்கொண்டு.
கனகா தன் மகனுக்கு தலை சீவிக்கொண்டு கேட்டாள்.

நீ படித்ததும் பெரியாளாகி என்ன வேலை செய்யப் போறே என்று.

நான் நல்லா படிச்சு இந்த ஊருக்கே பண்ணையாராக போறேன் என்றான் அந்த சிறுவன்.

கனகாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உடனே சிரித்து விட்டாள் . ஊமையனும் மகன் பேச்சு புரிந்துகொண்டு அவனும் சிரித்தான்.

எல்லாப் பிள்ளைகளும் நல்லா படிச்சு போலீஸ். வக்கீல் .டாக்டர் கலெக்டர் .ஆகப் போறேன்னு சொல்லுவாங்க நீ என்னடா பண்ணையாராக போறேன்னு சொல்ற என்று கேட்டால். தன் மகனிடம்.


போலீஸ் டாக்டரு வக்கீல் இவங்களெல்லாம் காசு கொடுத்தா தன் நமக்கு உதவி செய்யறாங்க ஆனா பண்ணையார் நமக்கு எல்லாம் உதவியும் செய்யறாரு டாக்டர் விட போலீசை விட.பண்ணையார் நல்லவரு அதனாலதான் நான் படிச்சு முடிச்சதும் பண்ணையார்ராகி இந்த ஊருக்கே நிறையக் காசு கொடுக்க போறேன் .உங்களையும் நல்லா பாத்துக்குவே என்று வெகுளித்தனமாக அந்த சிறுவன் சொன்னான்.

சிரித்துக் கொண்டிருந்த கனகா. தன் மகனின் எண்ணம் அப்போது தான் அவளுக்கு புரிந்தது பண்ணையாரின் பெருந்தன்மையை இவன் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான் அதனால்தான் அவரைப்போலவே நாமும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான் .அவருக்கு இந்த ஊர் மக்கள் மரியாதை கொடுப்பதை பார்த்து இவனும் இவரைப்போல ஆக வேண்டுமென்று நினைக்கிறான் என்று புரிந்துகொண்டால் கனகா பிறகு சிறுவனிடம் சொன்னாள்.

உன் விருப்பப்படியே நல்லா படித்து பண்ணையார் ஆகிவிடு அதுக்கப்புறம் எங்களையும் நல்லா பாத்துக்கணும் என்ன புரிஞ்சதா என்றாள் கனகா.

சிறுவன் நல்ல பலமாக தல ஆட்டினான். அப்போது பண்ணையார் மகன்கள் வருவதை பார்த்த கனகா உடனே அவசரமாக சிறுவனை பள்ளிக்கு அனுப்பிவைத்து தோட்ட வேலைக்கு தயாரானாள்.

கனகாவின் மகன் பள்ளிக்கு செல்லும்போது பண்ணையாரின் மகன்களை நன்றாக பார்த்தபடியே சென்றான் .அவன் மனதில் நாமும் இவர்களைப் போலவே நல்லவர்களாக ஆக வேண்டுமென்று அவன் மனதில் பதிந்தது.


வழக்கம்போல பண்ணையார் மகன்கள் பம்பு செட்டின் மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார்கள் காற்றோட்டமாக .
பிறகு தீனா ஒரு பக்கம் .சந்திரன் ஒரு பக்கம் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்று விட்டார்கள்

அப்போது பரந்தாமன் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்பாக நின்று கும்பிடுவதற்கு தயாரானான். 🏠🏡.

அம்மா எனக்கு சிறுவயதில் நான் தம்பிகளை விட அடம் பிடிப்பதில் அதிகமாக இருந்தேன் .
எந்தப் பொருளாக இருந்தாலும் மூவருக்கும் சமமாக பிரித்துக் கொடுப்பாய் . ஆனால் நான் தம்பி களை விட எனக்கு அதிகம்மாக வேண்டும் என்று உன்னிடம் அடம் பிடிப்பேன் . நீயும் தம்பி களிடமிருந்து எதையாவது சமாதானம் சொல்லி . பிடிங்கி எனக்கு கொடுத்து விடுவாய் .
இது போல என்னை நீ ஆரம்பத்தில் என் ஆசைகளை நிறைவேற்றி வைத்தாய் அது மெல்ல மெல்ல வளர்ந்து . இப்போது அந்த ஆசை என் மனதில் நீக்க முடியாத ஒன்றாக பதிந்துவிட்டது தாயே .


இப்போது இந்த எல்லாம் சொத்துக்களையும் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பா நினைக்கிறார் ஆனால் என் மனம் ஏற்க மாட்டேங்குது அம்மா . சிறுவயதில் இருந்தது போலவே என் மனம் அடம்பிடிக்கிறது .
எனக்கு சிறுவயதில் எப்படி தம்பி களிடமிருந்து எனக்கு பிடிங்கி கொடுப்பாய் அதேபோல இந்த எல்லா சொத்துக்களையும் எனக்கு மட்டும் தரவேண்டும் . நான் மட்டும் இதில் ஆள வேண்டும் . இதற்கு நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும் .உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை .

நான் இதுவரைக்கும் கோவிலுக்கு சென்றதில்லை .ஏனென்றால் நான் கேட்கும் வரத்தை எந்த சாமியும் கொடுக்காது நீ மட்டும் தான் எனக்கு எதைக் கேட்டாலும் கொடுப்பாய் தம்பிகளிடம் எல்லா சோத்துக்களும் எனக்கு வேண்டும் என்று கேட்டாள் கொடுத்துவிடுவார்கள் .
ஆனால் அப்பாவுக்கும் ஊர் மக்களுக்கும் மன கஷ்டம் ஏற்படும் என்னை பேராசைக்காரன் என்று பேசுவார்கள் . அதனால் இந்த ஊருக்கும் நம் குடும்பத்துக்கும் தம்பிகளுக்கும் நான் நல்லவனாக இருக்க வேண்டும் எல்லாம் சொத்துக்களும் எனக்கே கிடைக்கவேண்டும் .அதனால் நான் என்ன செய்தாவது இந்த சொத்துக்களையெல்லாம் அடைந்தே தீருவேன் தாயே .இதற்கு நீதான் எனக்கு கூடவே இருந்து உதவி செய்ய வேண்டும் தாயே என்று மனமுருக வேண்டிக்கொண்டான் பரந்தாமன்.


பிறகு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் நம்மை கவனிக்கவில்லை என்று தெரிந்ததும் பரந்தாமன் தனது தாய் படத்தின் அருகில் சென்று ஒரு படி மேலே ஏறி படத்தின் பின்னால் இரண்டு பூட்டுகள்ளால் பூட்டியிருக்கும் அந்தப் பெரிய பெட்டியை பார்த்தான் அப்போது அவன் இடுப்பில் இருந்த சாவியை எடுத்து பூட்டை திறந்து பார்த்தான் . அந்த பெட்டியில் கட்டுக்கட்டாக நிறைய பணம் இருந்தது . அதை பார்த்துவிட்டு மறுபடியும் தனது இடுப்பில் சுற்றி இருக்கும் பணக்கட்டுகளை எடுத்து அந்த பெட்டியில் போட்டு விட்டு மறுபடியும் மூடிவிட்டான் அந்தப் பெட்டியை. மறுபடியும் யாராவது நம்மை கவனித்தார்களா என்று பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டான் பரந்தாமன்.

அப்போது கனகா பம்புசட்டில் இருந்து மண்வெட்டியுடன் வேலைக்கு கிளம்பினாள் .அப்போது பரந்தாமன் கனகாவிடம் கேட்டான்..

என்னம்மா உன் பையனோட ரொம்ப நேரமா சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த போல தெரிஞ்சது என்றான் பரந்தாமன்.

சிரித்துக்கொண்டே ...ஆமாம் அய்யா .என் மகன் படித்து முடித்ததும் பண்ணையாராக போறேன் என்று சொன்னான் அதனால் நான் சிரிச்சேன் ஐயா என்று சொன்னால் கனகா.

என்னது ....பண்ணையாராக போறாராம ஏன் அவருக்கு இந்த ஆசை என்று பரந்தாமன் லேசாக சிரித்துக் கொண்டே கேட்டான்.

ஊருக்குள்ள எல்லோரும் உங்க குடும்பத்துக்கு கொடுக்கிற மரியாதை பார்த்து . நீங்க எல்லோருக்கும் உதவி செய்வதை பார்த்து .அவனுக்கு இந்த யோசனை வந்து இருக்குது . அதனால தான் அப்படி சொன்னேன் என்று சொல்றான் ஐயா என்றாள் கனகா.

பரவாயில்லையே இந்த வயசிலேயே உன் மகன் மனசுல ஒரு லட்சியம் வளருது . நல்லது என்று சந்தோசமாக சொன்னான் பரந்தாமன் .

பிறகு கனகாவிடம் பரந்தாமன் சற்று நிதானமாக சொன்னான்.... ஏற்கனவே இந்தப் பம்புசெட்டில் தங்கி வேலை செஞ்ச அவங்க எதனால காணாம போயிட்டாங்க என்று எனக்கு தெரியாது .
அவங்கள நாங்க தேடிக்கிட்டு இருக்கிறோம். இதை ஏன் உங்க கிட்ட சொல்றேன் என்று தெரியுமா உனக்கு இந்த இடத்தில ஏதாவது தொந்தரவு இருந்தால் . என்கிட்ட நீ தயங்காம சொல்லணும் அப்பதான் நான் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பேன் . ஏனென்றால் நீயும் சின்ன சின்ன பிரச்சனைக்கு பயந்துகொண்டு எங்கேயாவது
ஓடி விடக்கூடாது .
அதனால் தான் உனக்கு நான் முன்கூட்டியே சொல்கிறேன் யார் தவறு செய்தாலும் தயங்காமல் என்னிடம் நீ சொல்லலாம் .
அது என் தம்பிகளாக இருந்தாலும் நீ பயப்படக்கூடாது எங்கள் குடும்பத்தில் இருந்து எந்த பிரச்சனையும் உனக்கு ஏற்படாது அதனால் நீ இங்கு நல்ல முறையில் வேலை செய்து .
இந்தத் தோட்டத்தை இன்னும் மேலும் செழிப்பாக வளர வைக்க வேண்டும் என்று பரந்தாமன் கனகாவிடம் அன்பாக சொன்னான்.


ஐயா இதுவரைக்கும் நான் இங்கு வந்து வேலை செய்ததில் எந்த ஒரு தொந்தரவும் எனக்கு இல்லை அப்படி தொந்தரவு செய்யும் அளவுக்கு இந்த ஊரில் யாரும் கிடையாது . எனக்குத் தெரிந்தவரை அவர்கள் என்ன காரணத்தினால் இங்கிருந்து ஓடி விட்டார்களோ என்று எனக்கு தெரியாது . ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் .அப்படிப்பட்ட கெட்டவர்களும் நம்ம ஊரில் இல்லை . நீங்கள் கவலைப்படா வேண்டாம். ஐயா .
கூடிய சீக்கிரத்தில் அவர்கள் கிடைத்து விடுவார்கள் என்று கனகா பரந்தாமனிடம் சொன்னாள்.

சரி உன் வாய்சொல் பலிக்கட்டும் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் அங்கிருந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பினான்.



திருடனிடம் சாவி கொடுத்து காவலுக்கு விட்டதை போல .
காணாமல் போனவர்களை நம் மகன்கள் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவார் என்ற நம்பிக்கையில் பண்ணையார் இருக்கிறார்.

நல்லபடியாக வேலை செய்து
தன் மகனை படிக்க வைத்து பெரிய ஆளாகி விட வேண்டும் என்ற நம்பிக்கையில் கனகா இருக்கிறாள்.

ஊரில் உள்ளவர்களுக்கும் தனது குடும்பத்திற்கும் நல்லவனாக இருக்க வேண்டும். அதேசமயம் எல்லாம் சொத்துக்களையும் திட்டம் போட்டு நாமே அனுபவிக்க வேண்டும் என்று .பரந்தாமன் தனது திட்டத்தின் வடிவத்தை துவங்கிவிட்டான். என் தாய் எனக்கு உதவியாக இருப்பாள் என்ற நம்பிக்கையில்.


இப்படி அந்தக் கிராமத்தில் எல்லோரும் ஒரு நம்பிக்கையில் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வருகிறார்கள்.



தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...5 👇


சில வருடங்களாக சாட்டையடி சாமியார் என்பவர் தனது இரண்டு சிஷ்யர்களுடன் சேர்ந்து .
ஒரு கிராமத்தை ஏமாற்றி பொழப்பு நடத்திவந்தனர் .

இறந்து போவார்கள் அவர்களுடைய மகன். மகள். வயிற்றில் மீண்டும் பிறக்க செய்வேன் என்பது தான் இந்த சாட்டையடி சாமியாரின் தந்திர வேலை .
அந்த ஊரில் இருப்பவர்கள் தனது அம்மா .அப்பா. சகோதரர்கள் யாரேனும் இறந்து போனாள் இரண்டு வாரம் கழித்து .
இந்த சாட்டையடி சாமியாரை அழைத்து வந்து .வீட்டில் பூஜை செய்வார்கள் . சாட்டையடி சாமியார் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு உன்னுடைய அம்மா உனக்கு மகளாக பிறந்து உன் கஷ்டங்களை போக்குவார் என்று பொய் சொல்லி .
பூஜை நடத்துவது போல நடத்தி பொய் சொல்லி அவர்களிடமிருந்து பணம் பொருளை எமாற்றிக்கொள்வார்கள் .
இதுதான் சாட்டையடி சாமியாரின் ஏமாற்று வேலை .
இவருக்கு உறுதுணையாக இரண்டு சிஷ்யர்களும் எப்போதுமே கூடவே இருப்பார்கள்.


குருவே போனமுறை ஒரு வீட்டுக்கு பூஜை செய்ய போனோமே .அப்போ எல்லோரும் பூஜையை கவனித்து இருந்தாங்க அந்த நேரத்தில் நான் அவங்க வீட்டுல ரெண்டு செல்போன் எடுத்துகிட்டு வந்துட்டேன் . அந்த செல்போனை பத்தி இதுவரைக்கும் அவங்க விசாரித்ததாக எனக்கு தெரியல குருவே . இப்ப நம்ம அந்த செல்போனை வச்சுக்கிட்டு என்ன செய்யறது குருவே என்றான் ஒரு சிஷ்யன்.

எனக்கும் ஒன்னும் புரியல செல்போனுக்கு பதிலாக வேற ஏதாவது எடுத்து வந்திருக்கலாம் என்ன செய்யறது உன் கையில் எது கிடைக்கிறதோ அதைதான் நீ எடுத்துக்கிட்டு வந்துட்டே பரவாயில்லை . அதுவும் ஒரு நேரத்தில் நமக்கு உதவியாக இருக்கும் வச்சுக்கலாம் நமே
போன் பண்றதுக்கு நமக்கு தெரிஞ்ச வங்களுக்கு போன் கிடையாது இந்த போன் எல்லாம் இப்பதான் வரத்தொடங்கி இருக்கு . ஏதோ ஒரு சிலர் வச்சுக்கிட்டு இருக்காங்க . பாக்கலாம் என்னைக்காச்சும் ஒரு நாளைக்கு இந்த போன் நமக்கு கைகொடுக்கும் . என்றார் சாட்டையடி சாமியார்.

அப்போது ஒருவர் வேகமாக இவர்களை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தார்கள் மூவரும் .

சாமி என்ன காரியம் செஞ்சீங்க நீங்க இப்படிப்பட்ட காரியத்தை செய்யறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு சாமி என்றான் ஓடி வந்தவன்.

சாட்டையாடி சாமியாருக்கும் சிஷ்யர்களுக்கு .சற்று அதிர்ச்சியாக இருந்தது . ஒருவேளை நம் செல்போனை எடுத்து வந்தது கண்டுபிடித்து விட்டார்களோ என்று நினைத்து பயந்தார்கள் .
பிறகு நிதானமாக சாட்டையடி சாமியார் கேட்டார் .. என்ன விஷயம் புரியும்படி சொல்லுப்பா என்றார் சாட்டையடி சாமியார்.

சாமி ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு வீட்டில நீங்க பூஜை நடத்த வந்தீங்க .

ஆமாம்.... ஒரு அம்மா இறந்து போய் இருந்தாங்க. அவங்கள அவங்க பிள்ளையோட வயித்துல மீண்டும் பிறந்து வரும்படி நான் பூஜை செய்துவிட்டு வந்தேன் .
அதுக்கு என்ன இப்போ என்றார் சாட்டையடி சாமியா.

நீங்க பூஜை முடிச்சிட்டு வந்ததிலிருந்து அந்த வீட்ல ஒரே சண்டை சாமி . உங்களை உடனே கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க சாமி என்றான் ஓடி வந்தவன்.

குருவே கண்டிப்பா செல்போனுக்காக தான் நம்மள கூப்புடுறாங்க குருவே என்றான் ஒரு சிஷ்யன்.

நீ எதையும் அவசரப்பட்டு உளறி விடாதே கொஞ்சம் பொறுமையாக இரு நான் விசாரிக்கிறேன் .
அவனிடம் என்றார் சாட்டையடி சாமியார் .பிறகு ஓடி வந்தவனிடம் எதற்காக பா என்ன கூப்பிடுறாங்க.

சாமி நீங்க அந்த அம்மாவை இரண்டாவது மகனோட வழுத்துல பிறக்கும் படி பூஜை செஞ்சுட்டு வந்துட்டீங்க . ஆனா முதல் மகன் என் வயித்துல தானே என் அம்மா பிறக்கணும் என்று சண்டை போடுகிறார் .இதை நீங்கள் தான் வந்து இரண்டு பேரையும் சமாதானம் செய்யணும் உங்களை உடனே கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க சாமி என்றான் ஓடி வந்தவன்.

சரி நீ போ நான் உடனே அங்கு வந்து பிரச்சனையை சரி செய்கிறேன் என்றார் சாட்டையடி சாமியா.

முட்டாள் பசங்க இறந்துபோன வாங்க எப்படிடா வந்து பிறப்பாங்க கொஞ்சம் கூட புத்தி இல்ல இந்தப் பிரச்சனைக்கு நம்மள வேற கூப்பிடறாங்க என்றார் சாட்டையடி சாமியார்.

அவங்க முட்டாளாக இருந்தால்தான் நம்ம பிழக்க முடியும் குருவே இல்லன்னா நம்மள போல ஆளுங்க எப்படி போழகிறது .நம்ம எப்படியோ பொய் சொல்லி ஏமாற்றி கொள்கிறோம் .ஏமாற்றுவதற்க்கு இப்படிப்பட்ட முட்டாள்களும் தேவைதானே குருவே .
அவங்கள திட்டாதிங்க குருவே என்றான் ஒரு சிஷ்யன்.

இதுகூட பரவாயில்லடா போனமுறை ஒரு வீட்டில் ஒரு பெரியவர் செத்துட்டாரு ன்னு பூஜை செஞ்சு அவரோட கடைசி மகன் வயித்தில போரக்கும் படிபூஜை செஞ்சோம் .ஆனா அவரோட மகள் வயிற்றில் ஒரு மகன் பிறந்தான் அவன் ஜாடையில் இந்த ஆள் மாதிரியே இருந்தான்.
உடனே அந்த கடைசி மகன் சண்டைக்கு வந்தான் . நீ என் தங்கச்சி இடம் காசு வாங்கிகிட்டு எங்கப்பா அவள் வயித்துல பிறக்கும்படி பூஜை செஞ்சு இருக்க என்று நம்ம மீது சண்டைக்கு வந்துவிட்டான். இவனை என்ன செய்யறது நம்ம குத்துமதிப்பாக ஏதோ சொல்லிக்கிட்டு பொழப்பு நடத்திவரோம். பிரச்சனை இப்படி நம்ம பக்கம் திரும்பி வருது.
இப்பா என்ன பிரச்சனைக்கு கூப்புடுறாங்க ன்னு தெரியல வாங்க போவோம் என்று சாட்டையடி சாமியார் சிஷ்யர்களுடன் கிளம்பிச் சென்றார்..

சாமியாரை பார்த்ததும் அந்த குடும்பத்தில் அனைவரும் கைகூப்பி வணங்கி உள்ளே அழைத்தார்கள்.

என்ன பிரச்சனைக்காக என்னை வரச் சொன்னீங்க.

சாமி நீங்க பூஜை செய்தது என்னோட அம்மா என் வயிற்றில் பிறப்பார்கள் என்று சொல்லி பூஜை செஞ்சீங்க . நானும் உங்களுக்கு கொடுக்கவேண்டிய 2000 ரூபாய் கொடுத்து விட்டேன்
இப்போ என்னோட அண்ணன் அம்மா என் வயத்தில் தானே பிறக்கவேண்டும் அதுதானே நியாயம் என்று சொல்கிறார் இதற்கு நீங்கள் தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்றான்.

அடப்பாவிங்களா உங்க முட்டாள் தனத்துக்கு ஒரு அளவே இல்லையா உங்ககிட்ட 2000 ரூபாய் புடுங்குவது குள்ள எத்தனை பிரச்சனைகளை சந்திப்பது . செத்துப் போனவங்க ஆவியா தாண்டா வருவாங்க உங்க வயித்தல எப்படிடா பிறப்பார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு. இவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது பெரிய மகன் சாமி என்று குரல் கொடுத்தான்.

சொல்லுப்பா என்றார் சாட்டையடி சாமியார்.

தலைப்பிள்ளை தாய்க்கே இளைய பிள்ளை தந்தைக்கு இதுதானே நம்முடைய பண்பாடு சாமி என்றான் பெரிய மகன்.

ஆமாம் இதுதான் நம் தமிழனோட பண்பாடு கலாச்சாரம் என்றார் சாட்டையடி சாமியார்.

நீங்க அப்படி பார்த்தா என் அம்மா என் வயிற்றில் தானே பிறக்கவேண்டும் என் தம்பி வயிற்றில் பிறப்பதற்கு நீங்கள் பூஜை செய்து விட்டீர்களே என்றான் அந்த பெரிய மகன்.

சாமி என் வயிற்றில் தான் என் அம்மா பிறக்கவேண்டும் ஏனென்றால் நான் தான் என் அம்மாவை நல்லபடியாக கவனித்துக் கொண்டேன் அதனால் தான் நான் உங்களுக்கு பணம் கொடுத்து பூஜை செய்யச் சொன்னேன் என்றான் இளைய மகன்.

நானும் தான் என் அம்மாவை நன்றாக கவனித்தேன் என்றான் பெரிய மகன்.

சரி சரி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள் நான் ஒன்று கேட்கிறேன் அதற்கு நீ பதில் சொல் என்று சிறிய மகனிடம் சொன்னார் சாட்டையடி சாமியார்.

சொல்லுங்க சாமி....

உன் வயிற்றில் உன்னுடைய அப்பா பிறப்பதற்கு மறுபடியும் நான் பூஜை செய்கிறேன் .உன்னுடைய அண்ணன் வயிற்றில் உன் அம்மா பிறப்பதற்கு மறுபடியும் ஒரு பூஜை செய்கிறேன் . இதற்கு உனக்கு சம்மதமா என்றார் சாட்டையடி சாமியா.

ஏன் அப்பா எனக்கு வேண்டாம் சாமி அவர் ஒரு குடிகாரன் முட்டாள் அவர் மீண்டும் எனக்கு மகனாகப் பிறந்து என்னை ரொம்ப கஷ்டப் படுத்துவார் அதனால்தான் என் அம்மா பிறக்க வேண்டும் என்று நான் பூஜை செய்தேன் சாமி என்றான் இளைய மகன்.

நீ என்னபா சொல்கிறாய் உனக்கும் உன் அப்பா வேண்டாமா என்று பெரிய மகனிடம் கேட்டார்.

எனக்கும் அப்பா வேண்டாம் சாமி ஏற்கனவே அவர் வாங்கி வச்ச கடனை எல்லாம் தீர்க்க முடியாமல் நான் அவஸ்தைப்பட்டு கிட்டு இருக்கேன் மறுபடியும் என் வயித்துல பொறந்த என்ன பாடு படுத்துவாரோ என்றார் பெரிய மகன்.

சாட்டையடி சாமியார் ஒரே குழப்பத்தில் இருந்தார் என்ன இவன்னுங்ககிட்ட 2000 ரூபா ஏமாத்தி வாங்குறதுக்குள்ள நம்மளோட மூளையே வெடிச்சிடும் போல இருக்குதே.
என்ன பண்றது இப்படி எல்லாம் பொழப்பு நடத்த வேண்டியது இருக்கே என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டு யார் பக்கம் தீர்ப்பு சொல்லலாம் என்று யோசித்தார் அப்போது பெரிய மகனும் இளைய மகனும் மாறி மாறி வாக்குவாதம் செய்தார்கள் . அப்போது அவர்கள் பேச்சை கவனித்தார் சாட்டையடி சாமியார்.

அம்மாவுக்கு நான் தான் அடிக்கடி கரீ மின் செஞ்சு போடுவேன் என்றான் இளைய மகன்.

அம்மாவுக்கு நான் தான் வெள்ளி கம்பல் எடுத்து போட்டு இருக்கேன் தெரியுமா என்றால் பெரிய மகன்.

நீ அந்த கம்பளை அம்மா இறந்ததும் கட்டிக்கிட்ட . ஆனால் அம்மாவுக்கு நான் ஒரு பவுன் செயின் போட்டு இருக்கேன் கையித்துல அம்மா இறந்து போனதும் அந்த செயினை நான் கழட்டவில்லை ஏனென்றால் அந்த அளவுக்கு அம்மா மீது எனக்குத்தான் பாசம் என்றான் இளைய மகன்.

இப்படி மாறி மாறி அம்மாவை நான் கவனித்தேன் .நான் கவனித்தேன் என்று சண்டை போட்டுக்கொண்டார்கள் அண்ணனும் தம்பியும்.

பொழப்புக்காக இப்படி பொய் சொல்லி ஏமாற்றி வருகிறோம் ஆனால் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று நினைத்துக்கொண்டு இவர்களுடைய அப்பாவை கவனிக்காமல் விட்டுவிட்டு இருக்கிறார்கள் . என்ன செய்வது என்று குழப்பத்தோடு சாட்டையடி சாமியா ஒரு முடிவுக்கு வந்தார்.

நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள் . நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் உங்கள் அம்மா உங்கள் இரண்டு பேரின் வயிற்றில் பிறப்பார் ஏனென்றால் அந்த அளவுக்கு நீங்கள் இருவரும் பாசமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அதனால் உங்கள் இருவருக்கும் நிச்சயம் பெண் குழந்தை தன் உங்கள் அம்மா ரூபத்தில் பிறக்கும் நான் சொல்வதை நம்புங்கள் என்றார் சாட்டையடி சாமியார்.

பிறகு அண்ணன் தம்பிகளும் சமாதானமாக போனார்கள்.

சாட்டையடி சாமியாருக்கு சற்று நிம்மதியாக இருந்தது .
இப்படி முட்டாள் பசங்களிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நினைத்துக்கொண்டு .அங்கிருந்து கிளம்புவதற்கு தயாரானார்கள் அப்போது 5 பேர் கொண்ட கும்பல் இவரை நோக்கி வேகமாக நடந்து வருவதை பார்த்தார் சாட்டையடி சாமியாரும் அவர்களது சிஷ்யர்களும்.

சாமி உங்கள பாக்கதான் உங்க பூஜை அறைக்கு போயிருந்தோம் ஆனா நீங்க இங்க வந்து இருக்கிறதா ஒருத்தர் சொன்னார் என்றார் ஒருவன்.

சொல்லுப்பா எதுவாக இருந்தாலும் நிதானமா சொல்லு என்றார் சாட்டையடி சாமியா.

நாங்க அண்ணன் தம்பிங்க நாலு பேரு எங்க அப்பா இறந்து போனதும் நீங்க வந்து பூஜை செஞ்சீங்க . என்னோட அப்பா என் இரண்டு அண்ணன் வயித்துல பொறந்து வருவார் என்று .
ஆனா இப்ப என்ன நடந்தது தெரியுமா சாமி என்றான்.

என்னப்பா நடந்தது...

அதை நான் சொல்றேன் சாமி என்று மூத்த மகன் சொன்னான்..

சரி யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்கப்பா என்றார் சாட்டையடி சாமியார்.

எனக்கும் என் தம்பிக்கும் திருமணமாகி மூண வருஷம் ஆகுது எனக்கும் பொம்பள பிள்ளை அவனுக்கும் பொம்பள பிள்ளை
சரி அடுத்தமுறை அப்பா மகனாக பிறப்பார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் பக்கத்து வீட்டுக் காரனுக்கு நேத்துதான் ஆம்பளை பிள்ளை பிறந்தது . அவன் அசல் என் அப்பா போலவே இருக்கிறான் சாமி
இது என்ன அநியாயம் சாமி நீங்க என்னதான் பூஜை செஞ்சீங்க உங்களுக்கு நாங்க எவ்வளவு பணம் கொடுத்தும் எவ்வளவு பொருள் கொடுத்தும் எப்படி சாமி எங்க அப்பா பக்கத்துவீட்டுக்காரன்னுக்கு போறான்தார். இதுக்கு ஒரு முடிவு நீங்கதான் சொல்லணும் சாமி இல்லன்னா என்னுடைய கோபத்துக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும் என்று ஆவேசமாக சொன்னான் அந்த மூத்த மகன்.

அடப்பாவிங்களா ஏதோ தெரியாத்தனமா இந்த பிளான் போட்டு உங்ககிட்ட பணத்தை புடுங்கலாம் என்று நினைச்சுத்தான் இப்படி ஒரு ஐடியாவை போட்டு பொழப்பு நடத்துறோம் .இதுக்குள்ள இவ்வளவு பிரச்சனை இருக்குமுன்னு எனக்கு தெரியாதாடா . அடப்பாவிங்களா உங்க கிட்ட 2000 ரூபா ஏமாத்துறதும் போதும் . உங்க முட்டாள்தனமான கேள்விக்கு பதில் சொல்வதும் போதும்டா சாமி. இப்பத்தான் ஒரு பிரச்சினையே சமாளிச்சுட்டு வந்தேன் அதுக்குள்ள இந்த பிரச்சினையே நான் எப்படிடா சமாளிப்பேன் என்று சாட்டையடி சாமியார் நினைத்து பெரும் மூச்சு வாங்கியது .

நம்ம வகையா மாட்டிக்கொண்டோம் இந்த ஊருல இனிமேல் பொழப்பு நடத்துவதற்கு ரொம்ப கஷ்டம் என்று மனதில் நினைத்துக் கொண்டு மௌனமாக இருந்தார்கள் சிஷ்யர்கள். குரு இவர்களை எப்படி சமாளிக்கப் போறாரோ என்று நினைத்துக்கொண்டு.

நான் பூஜை செய்ததில் எந்த தவறும் இல்லை உங்களுக்கு நான் நாளைக்கு சரியான முடிவை சொல்கிறேன் அதுவரைக்கும் நீங்கள் பொறுமையாக இருக்கணும் என்றார் சாட்டையடி சாமியார்.

சாமி பேச்சு மாத்த மாட்டீங்களே நாளைக்கு வந்து ஏன் அப்பா எப்படி பக்கத்துவீட்டுக்காரன் வயித்துல பொறந்த அதற்கான காரணத்தை நீங்க சொல்லணும் . இல்லன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது . எனக்கும் பக்கத்து வீட்டுக் காரனுக்கும் பத்து வருஷ பகை அவன் வயிற்றில் என் அப்பா பொறந்தது எனக்கு அவமானமா இருக்கு . இதுக்கு நீங்க தான் நாளைக்கு வந்து சரியான முடிவு சொல்லணும் இல்லன்னா அவன் என்னை எளக்காரமா பார்ப்பான் என்றால் அந்தப் பெரிய மகன்.

உடனே சாட்டையடி சாமியார் நடுங்கிக்கொண்டு தனது சிஷ்யர்களை அழைத்துக்கொண்டு உடனே கிளம்பி விட்டார் பூஜை அறைக்கு.

இனிமேல் இந்த ஊருல பொழப்பு நடத்த ரொம்ப கஷ்டம் குருவே வேறு எந்த ஊருகாச்சும் போயிடலாம் குருவே என்றான் ஒரு சிஷ்யன்.

ஆமாண்டா.... இவனுங்க கிட்ட 2000 ரூபா சம்பாதிக்கிறதும் போதும் இவனுங்க கேள்விக்கு பதில் சொல்வதும் போதும் .
நாளைக்கு காலையில இந்த ஊரை விட்டு எங்கயவது ஓடி வடலாம். மூட்டை முடிச்சு எல்லாம் தயார் செய்யுங்கள் என்றார் சாட்டையடி சாமியார்

குருவே ராத்திரிக்கு நம்ம எந்த ஊருக்கு போகலாம் குருவே

போற வழியில பாத்துக்கலாம்.

ஆனா ஒரு முக்கியமான விஷயம் கவனிச்சீங்களா குருவே என்றான் ஒரு சிஷ்யன்.

என்ன விஷயம்டா....

அந்த அண்ணன் தம்பிங்க சண்டை போட்டுருகும்போது அந்த இளைய மகன் சொல்லும்போது .
அம்மாவின் கழுத்தில் ஒரு பவுன் செயின் போட்டு இருக்கேன் அதை நான் கழட்டகூட இல்லை என்று சொன்னாரே கவனித்தீரா. குருவே

ஆமாம் கவனித்தேன்... அவன் அம்மா கழுத்துல ஒரு பவுன் செயின் போட்டு கையிடாமல் விட்டுட்டேன்னு சொன்னா அதுக்கு என்ன இப்போ.

இன்னைக்கு ராத்திரி நம்ம ஊரை விட்டு போக போறோம். அப்படியே அந்த அம்மா புதைத்த இடத்தை பார்த்து மண்ணைத் தோண்டி அந்த அம்மா கழுத்துல இருக்கற செயினை கட்டிக்கிட்டு ஊரை விட்டு போய்விடலாம் குருவே நமக்கும் ஒரு பவுன் கிடைக்கும் என்றான் சிஷ்யன்.

ஐடியா நல்லாத்தான் இருக்கு
ஆனா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போயிட்டு அந்த கிழவியை புதைத்த இடத்தை பார்த்து தோண்டி எடுத்து செயினை கழட்டுவது சாதாரண விஷயமா டா என்றார் சாட்டையடி சாமியா.

அந்த அம்மா வயசானவங்க தானே குருவே அவங்க என்ன நம்மள செய்யப் போறாங்க.

சரி சரி ஒரு பவுன் ஆச்சே நல்ல விலை போகும் நீ சொன்ன மாதிரி அந்த கிழவி நம்மளை ஒன்னும் பண்ண மாட்டாங்கன்னு நெனைக்கிறேன் பார்க்கலாம் ராத்திரிக்கி அந்த கிழவியின் செயினை எடுத்துக்கிட்டு போய்விடலாம் என்று மூவரும் திட்டம் போட்டார்கள்.

நள்ளிரவு ஆனது...

சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் மூவரும் துணிமணி எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு.சுடுகாட்டுக்கு சென்றார்கள்.

ஒரு அமைதியான சூழல் எங்கு பார்த்தாலும் ஏதோ மறைவது போல கண்ணுக்குத் தெரிகிறது மூவரும் நடுங்கிக்கொண்டே சுடுகாட்டில் அந்த வயதான கிழவியின் புதைத்த இடத்தை தேடினார்கள்

அப்போது ஒரு புதிதாக புதைத்த இடம் தென்பட்டது கிழவி இறந்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது இந்த இடம்தான் என்று முடிவு செய்து மூவரும் கைகளால் மண்ணை தோண்டினார்கள்.

👽☠️💀🦴

பயந்துகொண்டே அப்போது மூவரின் மனதிலும் பயம் இருந்தாலும் ஒரு பவுன் செயின் கிடைக்கப்போகிறது என்ற ஆசை அவர்களுக்கு சற்று தைரியத்தை கொடுத்தது .

பாதி வறை தோண்டி விட்டார்கள் மண்ணை . அப்போது ஒரு அழுகை சத்தம் கேட்டது மூவரும் பதறிப் போனார்கள் . இந்த நேரத்தில் யார் அழுவது என்று

அப்போது சாட்டையடி சாமியார்
யார் அழுவது .யாரப்பா அழுவது என்று குரல் கொடுத்தார் .அப்போது நான்தான் பூச்சி மருந்து குடித்து இறந்து விட்டேனே மாயாண்டி என்று சொன்னது .எதுக்குப்பா அழுவுற நாங்க ஒன்னை ஒண்ணுமே பண்ணலையே என்ற சாட்டையடி சாமியார் .

என்னை தோண்டி எடுத்து என் மனைவி பக்கத்தில் புதைத்து விடுங்கள் இல்லையென்றால் நீங்கள் இங்கிருந்து உயிரோடு போக முடியாது என்றாது அந்த உருவம் .

நாங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ஊரை விட்டே போகப்போறோம் .
உன்னை இங்க எங்க பொதச்சங்கலோ எங்களுக்கு எப்படி பா தெரியும் என்றார் சாட்டையடி சாமியார் .

இதோ மண்ணை தோண்டிக் கொண்டு இருக்கிறீர்களே அது நான்தான் இதோ என் கை பிடித்து என்னை தூக்குங்கள் என்று அந்தப் பள்ளத்தில் இருந்து இரண்டு கை வெளியே வந்தது .

இதை பார்த்த சாட்டையடி சாமியாருக்கும் இரண்டு சிஷ்யர்களுக்கும் பயத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள் அப்படி என்றால் இது அந்த கிழவி புதைத்த இடம் இல்லையா என்று நினைத்து பிதியில் நடுங்கினார்கள் உடனே துணிமணிகளை தூக்கிக் கொண்டு அங்கிருந்த அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள் எங்களை விட்டுவிடுங்க விட்டுவிடு விட்டுவிடு என்று பயத்தில் ஓடினார்கள் .

இப்படி மூவரும் வெகுதூரம் அந்த ஊரை விட்டு ஓடினார்கள் அப்போது அவர்கள் ஓட்டும் சிறிது தோய்வு அடைந்தது .அப்போதும் அவர்களின் ஓட்டம் நிற்கவில்லை . அந்த பின குழியில் இருந்து 2 கைகள் வெளியே வந்ததை நினைத்து மூவரும் பயத்தில் பித்துப் பிடித்தவர்கள் போல ஓடிக்கொண்டே இருந்தார்கள் வெகுதூரம் ஓடிவிட்டார்கள்


பொழுதும் விடிந்தது...🌄


அப்போதும் அவர்களின் ஓட்டம் நிற்கவில்லை பயத்தில் .
அப்போது ஒரு இடத்தில் குளிர்ச்சியான இயற்கை காத்து அவர்கள் முகத்தில் பட்டது அப்போதுதான் அவர்களின் பயம் தெளிந்தது . பிறகு மூவரும் நிதானமாக ஒரு இடத்தில் அமர்ந்து கலைப் பாறினார்கள் .

பிறகு மூவரும் எங்கே செல்லலாம் என்று யோசித்தார்கள் அப்போது அவர்களுக்கு அந்த குளிர்ச்சியான காற்று அவர்களுக்கு பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியது அப்போது சாட்டையடி சாமியார் சொன்னார் .

சிஷ்யர்களே நம்முடைய பயத்தை இந்த ஊர் குளிர்ச்சியான காற்று பட்டவுடன் நம் பயம் தெளிந்து விட்டது . அதனால் நாம் அடுத்த புதிய பிளானுடன் இந்த ஊரிலே நம் பிழைப்பு நடத்தலாம் என்று சொன்னார். ...

சிஷ்யர்களும் ...ஆமாம் குருவே இந்த ஊர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கும் இந்த ஊரோட அழகு ரொம்ப பிடித்து இருக்கு அதனால இந்த ஊரிலியே புதுசா ஒரு திட்டம் போட்டு நம்முடைய வேலையை ஆரம்பிக்கலாமா குருவே என்று பேசிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒருவர் வந்தார்.

ஐயா இங்கே வாங்கள்.

பார்ப்பதற்கு சாமியார் போல இருக்கிறார்களே எதற்கு நம்மளை கூப்பிடுறங்க என்று குழப்பத்தோடு அவர்களின் அருகில் சென்றார்.

இந்த ஊரோட பேர் என்னப்பா என்றார் சாட்டையடி சாமியார்.

இந்த ஊரோட பேர் உங்களுக்கு தெரியாதா .இந்த சுத்து வட்டாரத்துல இந்த ஊர பத்தி பெருமை எல்லோருக்குமே தெரியுமே .இதுதான் பண்ணையார் புறம் இந்த ஊர்ல யாரைப் பார்க்கப் போறீங்க சாமி என்றார் அந்த நண்பர்.

சாமி என்று சொன்ன வார்த்தை அவர்களுக்கு பிடித்துப்போனது ஒன்றுமில்லை நண்பா நாங்கள் இந்த ஊர் நலனுக்காக இந்த ஊரியே தங்க போகிறோம்
ஊர் ஒதுக்குப்புறமாக நாங்கள் ஒரு குடிசை போட்டு பூஜை செய்யப் போகிறோம் .உங்கள் ஊரில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் என்னிடம் வந்து நீங்கள் ஆசி பெற்றார் அந்த பிரச்சனையை நாம் சுலபமாக தீர்த்து வைப்பேன் இதுதான் என்னுடைய இயல்பான குணம் . நீ ஊரில் சென்று என்னைப் பற்றி சொல்லிவிடு நாங்கள் புதியதாக ஒரு குடும்பம் வந்திருக்கிறோம் என்று.

நீங்க வந்தது எங்க ஊருக்கு பெருமைதான் சாமி .
எங்க ஊர்ல எல்லாமே பண்ணையார்தான் அதற்கடுத்தபடியாக நீங்கதான் சாமி . இப்போது ஊருக்குள்ள உங்க நல்ல குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன் என்று உடனே அந்த நண்பர் அங்கிருந்து சந்தோஷமாக கிளம்பிவிட்டார்.

நடந்ததையெல்லாம் மறந்து விடுவோம். ஒரு புதிய முயற்சியோடு இந்த உரை நம் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் . முதலில் இந்த ஊரைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பண்ணையார் என்றால் அவர் யார் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொண்டு பிறகு வேலையை ஆரம்பிக்கலாம் என்று சாட்டையடி சாமியார் புது முயற்சியோடு பண்ணையார் புறத்தில் வந்து சேர்ந்துவிட்டான்.

அந்த அழகிய கிராமத்தில் எல்லோரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார்கள் .ஆனால் பரந்தாமன் எல்லாம் சொத்துக்களையும் அடைய வேண்டுமென்ற முயற்சியில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான் .இதனால் யாருக்கு பாதகம் ஏற்படும் என்ற நிலைமை அந்த ஊருக்கு இருக்கையில் . இப்போது புதிதாக சாட்டையடி சாமியார் ஏற்கனவே ஏமாற்றி வந்த ஊரை விட்டுவிட்டு இந்த அழகான அமைதியான பண்ணையார் புறத்தில் வந்து சேர்ந்துவிட்டான். சாட்டையடி சாமியாரின் வலையில் யார்யார் சிக்குவார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


தொடரும்...
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்... 6 👇


அழகான சின்ன சின்ன வீடுகள் வரிசையாக இருப்பது மேலும் பண்ணையார் புறம் கிராமத்துக்கு மேலும் அழகை சேர்க்கும் .🛖🏠⛺🏡

மாலை பொழுது ...🌕

அனைவரும் தனது வீட்டு வாசலில் இருக்கும் மண் அடுப்பில் சமையல் செய்வதற்கு தயாரானார்கள் அப்போது ரேகா நீல நிற தாவணி பாவாடையில் .பளிச்சென்று இருந்தாள் தனது வீட்டு வாசலில் அழகாக அமர்ந்தபடி வெங்காயத்தை அருவாமனையில் அறிந்து கொண்டிருந்தாள் .

சங்கர் ரேகாவை பார்த்ததும் அவனும் சமையல் செய்வதற்கு தயாரானான் . அப்போது சங்கர் எப்போதும்போல ஸ்டைலாக சமையல் செய்வதற்கு ஆரம்பித்தான்.

அப்பா நேத்து வச்ச குழம்பு எப்படிப்பா இருந்தது . என்று சங்கர் ரேகாவுக்கு கேட்கும்படி .
தன் அப்பாவிடம் குரல் உசத்தி கேட்டான்.

திண்ணை மீது அமர்ந்தபடியே ரொம்பவே நல்லா இருந்தது பா என்றார் முத்தையா.

காரம் .புளிப்பு .உப்பு எல்லாம் கரெக்டா இருந்தாத அப்பா என்று ரேகாவை பார்த்தபடியே கேட்டான் சங்கர்.

ஆமாமா ..எல்லாமே கரெக்டா இருந்தது என்று முத்தையா சொன்னார்.

அப்போது ரேகா வெங்காயத்தை அறிந்து விட்டு .சங்கரை பார்த்தபடியே ஒரு பாத்திரத்தில் ஊர வைத்திருந்த புலியை நன்றாக கரைத்தால்.

என்னத்த கரைக்கிற. அப்படி மாங்கு மாங்குன்னு என்று ஓரக்கண்ணால் பார்த்தான் சங்கர்.

அப்பா குழம்புல எதைஎதையோ கரைச்சி ஊத்துனா ருசி போய்விடும். என்னப்பா என்றான் சங்கர்.

ஆமாம்பா எதுவுமே உத்த கூடாது என்று சலிப்போடு சொன்னார் முத்தையா.

உடனே ரேகா... தாத்தா நேத்து உங்க வீட்டு குழம்பு ரொம்ப கமகமன்னு வாசனையாய் இருந்தது என்று சொன்னாள்.

ஆமாமா ..ரொம்ப வாசனையா தான் இருந்தது என்று சலிப்போடு சொன்னார் முத்தையா.

சங்கருக்கு ரேகா சொன்ன வார்த்தை சற்று பெருமையாக இருந்தது.

உடனே ....அப்பா என்ன போல குழம்பு வைக்கிறதுக்கெல்லாம் இந்த ஊருல யாரும் கிடையாது அப்படி வெப்பேன். நான் என்று நக்கலாக சொன்னான் சங்கர்.

உடனே ரேகா கேட்டாள்... தாத்தா நேத்து வச்சா குழம்பு ரொம்ப மனமாய் இருந்தது என்ன குழம்பு தாத்தா.

நேத்து என்ன குழம்பு ... மறந்துட்டேனே ...அ...சாம்பார் அம்மா என்றார் முத்தையா.

அப்பா ...நேத்து வெச்சது காரக்குழம்பு என்று சற்று கோபமாய் சொன்னான் சங்கர்.

ஒரே தண்ணியா இருந்ததால சாம்பாருன்னு நினைச்சுட்டே டா என்றார் முத்தையா.

அப்போது ரேகா சத்தமாக சிரித்தாள் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சங்கருக்கு சற்று முகம் வாடியது நம்முடைய குழம்பு தண்ணியாக இருந்தது என்று சொல்லிவிட்டாரே அப்பா என்று .
ஆனால் ரேகா விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்த்த சங்கருக்கு மீண்டும் முகம் மலர்ந்தது .
அவள் அழகில் அப்படியே நின்றுவிட்டான் . ஆனால் ரேகா சிரிப்பை நிறுத்தவில்லை முத்தையாவின் வார்த்தையை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தாள்

பிறகு சங்கர் மறுபடியும் தனது கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல் சொன்னான் ...அப்பா இன்னிக்கி ரசம் வைக்க போறேன் அக்கம்பக்கத்தினர் எல்லாம் நம்ம வீட்டு ரச வாசனையை மோப்பம் பிடிக்க போறாங்க பாரு அந்த அளவுக்கு கமகமன்னு ரசம் வைக்க போறேன் . என்று சொல்லிவிட்டு சங்கர் அடுப்பில் வெறுக்கை பற்றவைத்து சாப்பாடு செய்ய தயாரானான்.

அப்போது சிறிது நேரத்தில் ரேகா கமகமவென மீன் குழம்பை கொதிக்க விட்டால் . அந்த வாசம் முத்தையாவின் மூக்குக்கு எட்டியது.

என்னப்பா ரசம் வைக்கிறேன்னு சொல்லிட்டு மீன் குழம்பு வச்சிருக்க போல் தெரிகிறது என்றார் முத்தையா.

அப்போது சங்கர். அடுப்பு ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்க வாசலில் மல்லாக்காக படுத்துக் கொண்டு கால் மீது கால் போட்டுக்கொண்டு ஒரு கையால் வீரகை அடுப்பில் தள்ளி விட்டுக் கொண்டு வானத்தைப் பார்த்தபடி சொன்னான் சங்கர் ...அப்பா அது மீன் குழம்பு இல்ல கருவாட்டு குழம்பு நல்லா முகர்ந்து பாருங்க என்று நக்கலாக சொன்னான்.

தாத்தா நான் மீன்குழம்பு வச்சலும் கருவாட்டு குழம்பு வச்சாலும் .
அந்த வாசம் உங்க வீட்டு வரைக்கும் வரும் . ஆனா நீங்க வக்கிர குழம்புதன் எங்க வீட்டுப் பக்கமே வாசனை வர மாட்டேங்குது .
அப்படி என்னதான் குழம்பு வைக்கிறீங்க என்று சங்கரை ஓரக்கண்ணால் பார்த்தபடி ஜாடைமாடையாக சொன்னாள் ரேகா.

அப்பா இன்னைக்கு வக்கிர ரசம் இந்த தெருவையே கமகமக்க போது பாரு என்று ரேகாவை பார்த்துக்கொண்டே படுத்தபடி சங்கர் சொன்னான்.

முந்தாநேத்து தான் ரசம் வச்ச மறுபடியும் ரசமா என்றார் முத்தையா.

ஐயோ அப்பா அதுதான் சாம்பார் ரசம் போன வாரம் தான் வெச்சேன் என்று மறுபடியும் எரிச்சலாய் சொன்னான் சங்கர.

நீ வைக்கிறது எல்லாமே தண்ணியா இருக்கிறதுனால ரசம் என்று நினைச்சுடம்பா என்றார் முத்தையா.

மறுபடியும் ரேகா சிரிக்க ஆரம்பித்து விட்டாள் . சங்கருக்கு மறுபடியும் கோபமாக இருந்தாலும் ரேகாவின் சிரிப்பைப் பார்த்து அவன் மனம் சந்தோஷப்பட்டது உள்ளுக்குள்ளே .

ரேகா சிரித்து முடித்தவுடன் .... தாத்தா தினமும் ரசம் சாப்பிட்டது போதும் .இன்னைக்கு நான் மீன் குழம்பு வச்சு இருக்கேன் அதுல சாப்பிடுங்க என்று சங்கரை பார்த்தபடி ரேகா சொன்னாள்.

ஏ ..புள்ள நான் வைக்கிற குழம்பு தண்ணியா இருந்தாலும் சாப்பாட்டை இறுக்கிப் பிடிக்கும் அப்படி இருக்கும் என்குழம்பு என்று நக்கலா ரேகா விடும் வாசலில் படுத்துக் கொண்டேன் சொன்னான் சங்கர்.

தாத்தா சாப்பாடு இன்நேரம் வெந்துட்டு இருக்கும் .
ரொம்ப பேசாம இறக்கி கீழே வைக்க சொல்லுங்க என்றாள் ரேகா.

சாப்பாடு ரொம்ப வெந்துட்டாலும் அதை பொங்கல்லாக மாற்றி விடுவான் என் மகன் .
அப்படி ஒரு வித்தை தெரியும் என் மகனுக்கு என்றார் முத்தையா.

மறுபடியும் ரேகா சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

பிறகு ரேகா சங்கர் வீட்டுக்கு வந்து சாதத்தை இறக்கி வடித்து விட்டு மீன் குழம்பு எடுத்துவந்து வீட்டுக்குள்ளே வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்தல் .
அப்போது சங்கருக்கு மனதில் லேசான வருத்தம் ஏற்பட்டது இப்படிப்பட்ட நல்ல குணம் படைத்த ரேகாவை நம்மால் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று ஏக்கத்தோடு பார்த்தான் ரேகாவை.


அப்போது பண்ணையார் தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு லட்சுமி அம்மாள் முந்தானையில் சிறிது நாவல் பழத்தை எடுத்துக்கொண்டு முத்தையாவின் அருகில் திண்ணை மீது அமர்ந்தாள்.

என்னம்மா இன்னைக்கு இவ்வளவு நேரமா வேலை செஞ்சீங்க என்றார் முத்தையா.

ஆமாம் அப்பா இன்னைக்கு நடவு அதனால வேலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று சொல்லிக்கொண்டே மாடியில் இரந்த நாவல் பழத்தை அல்லி முத்தையாவின் கையில் கொட்டினால் லட்சுமி அம்மாள் அப்போது நாவல்பழத்தை பார்த்ததும் முத்தையாவின் முகம் மலர்ந்தது உடனே இரண்டு பழத்தை எடுத்து வாயில் போட்டு ருசித்தார் அப்போது அவருக்கு இளம் வயதில் பண்ணையார் நாவல் பழம் மரத்தின் மீது ஏறி ஒழுகுவர் கீழே முத்தையா நாவல் பழத்தை பொறுக்கி நன்றாக சாப்பிடுவார் நாவல் பழம் என்றால் முத்தையாவுக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி சந்தோஷமாக நாவல் பழத்தை ரசித்துச் சாப்பிட்டார் முத்தையா அப்போது லட்சுமி அம்மாள் கேட்டார் உங்களுக்கு நாவல் பழம் பிடிக்கும் என்று எனக்கு தெரியும் நீங்களும் பண்ணையாரும் எப்ப பார்த்தாலும் இந்த பழத்தை தான் சாப்பிடுவீங்க அதனாலதான் இந்த படத்தை பார்த்ததும் உங்க ஞாபகம் வந்துடுச்சு அப்பா என்று பாசமாய் சொன்னால் லட்சுமி அப்போது சங்கர் ரேகா லட்சுமி இப்படி அனைவரும் அந்த வீடு நிரம்பி இருந்தது முத்தையாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது இதே போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் நினைத்தார் சங்கருக்கு ரேகா பொருத்தமானவள் தான் ஆனால் லட்சுமியின் மனதில் என்ன இருக்கிறதோ என்று நினைத்து சற்று வருத்தப்பட்டார் முத்தையா ஒருவேளை தனது ஒரே மகளை அவள் தம்பிக்கு கொடுப்பதற்காக இருக்கிறாரோ என்று நினைத்து லட்சுமியை பாசத்தோடு பார்த்தார் முத்தையா அப்போது முத்தையாவின் ஏதோ கேட்கவண்டும் என்ற பார்வை லட்சுமிக்கு புரிந்தது என்னப்பா அப்படி பாக்குறீங்க ஏதோ கேட்கணும் போல தோணுதா சொல்லுங்கப்பா என்று அன்போடு கேட்டால் லட்சுமி அப்போது முத்தையா ஒன்றுமில்லை மா நான் உன்னிடத்தில் என்ன கேட்கப் போகிறேன் அப்படி கேட்கும் நேரம் வந்தால் நிச்சயம் கேட்பேன் என்று மெதுவாக சிரித்தாள் பிறகு லட்சுமி அம்மாள் ரேகாவை அழைத்தாள் தாத்தாவுக்கு பொழுதோட சாப்பாடு போடணும்னு தெரியும் இல்ல இவ்வளவு நேரம் ஆகியும் தாத்தாவுக்கு ஏன் சாப்பாடு போடல போ தாத்தாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு வா என்று உரிமையோடு சொன்னால் லட்சுமி ரேகாவும் சங்கரை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டு லேசாக சிரித்தபடி சென்றாள்.

💒என்னங்க ..என்னங்க என்று குரல் கொடுத்துக்கொண்டே சாந்தி பரந்தாமனிடம் சென்றாள்.

கண்ணாடி முன் நின்று கொண்டு தலை சீவிக் கொண்டிருந்த பரந்தாமன்.. என்னடி என்றான்.

இன்னைக்கு தோட்டத்துக்கு போகும்போது . உங்க மகனையும் கூட்டிகிட்டு போங்க என்றால் சாந்தி.

அவனை எதுக்கு கூட்டிட்டு போனும்.

அவன் காலையில் எழுந்ததுமே இன்னிக்கி நான் அப்பாவோட சித்தப்பா கூட தோட்டத்துக்கு போகப்போறேன் என்று சொல்லிக்கொண்டு .அவனும் கிளம்பிவிட்டான் என்றாள் சாந்தி.

நாங்க என்ன ஊரை சுத்தி பாக்குறதுக்க போறோம் தோட்டத்தை கவனிக்க போறோம் அங்கு இவன் வந்து என்ன பண்ண போறான்.

இப்படி சொன்னா எப்படிங்க அவனை நீங்க கவனிக்கிறதே இல்ல . தோட்டத்துக்கு போறதும் திரும்ப வீட்டுக்கு வந்து சாப்பிடுவதும் . மறுபடியும் தோட்டத்துக்கு போறதும் என்னமோ இப்படியே தான் இருக்கீங்க .
அவன் கூட என்னைக்காச்சும் விளையாடி இருக்கிங்களா .இல்லை எங்கேயாச்சும் கூட்டிட்டு போறீங்களா அதுவும் கிடையாது உங்க தம்பிங்க மட்டும்தான் அவன் கிட்ட விளையாடுறாங்க
நீங்க அவனை கண்டு கொள்வதே இல்லை என்று சாந்தி சொன்னால்.

நாங்களே மூணு பேரும் ஒரே பைக்கில் போறோம் .
இவனை எப்படி நான் கூட்டிக்கிட்டுப் போக முடியும். அவனிடம் எதையாவது சொல்லி நிறுத்தி விடு.

அவன் எது சொன்னாலும் கேட்க மாட்டான் . வேணும்னா நீங்களே வந்து சொல்லுங்க.

அவனுக்கு செல்லம் கொடுத்து ரொம்ப கெடுத்து வச்சிருக்கே
என்று சற்று எரிச்சலாக சொன்னான் பரந்தாமன்.

நீங்க மட்டும் சின்ன வயசுல உங்க தம்பிகலை முதுகில் சுமந்து கொண்டு . குதிரை ஆட்டம் ஆடு விங்கலாம் .. மாமா சொன்னார் எப்ப பாத்தாலும் உங்க தம்பிகலை உங்கள முதுகிள் சுமந்தபடியே விளையாட காட்டுவீங்களா .
உங்க பிள்ளைய மட்டும் விளையாட காட்ட மாட்டீர்கள் என்று சாந்தி சொன்னாள்.

அது... நாங்க மூணு பேரும் .அப்போ விளையாடனும் .ஆனா இவனுக்கு தான் அண்ணன் தம்பி யாருமே இல்லையே . இவன் மட்டும் போதும் என்று நிறுத்திக் கொண்டோம் .அப்புறம் எப்படி அவன் விளையாடுவான். இன்னைக்கு தோட்டத்தில ஒரு முக்கியமான வேலை எல்லாம் இருக்கு . இன்னொரு நாளைக்கு கூட்டிகிட்டு போறேன்னு சொல்லு என்று சொல்லிவிட்டு பரந்தாமன் அங்கிருந்து நகர்ந்தான்.

என் தம்பிகள் இடமிருக்கும் பொருளை ஏமாற்றி வாங்குவதற்காக அவர்களை நான் முதுகில் சுமந்து கொண்டு விளையாடி காட்டிவிட்டு .
பிறகு அந்தப் பொருளை ஏமாற்றி வாங்கிக் கொள்வேன் .
அவங்களும் நான் விளையாடி காட்டியதில் மகிழ்ச்சியில் அந்த பொருளை எனக்கு கொடுத்து விடுவார்கள் . அதனால்தான் நான் அவன்களை முதுகில் சுமந்து கொண்டு விளையாடினேன் ஆனால் பார்ப்பவர்களுக்கு .
தம்பிகளிடம் பாசமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள் என் அப்பா உட்பட .ஆனால் எனக்கும் இறந்துபோன என் அம்மாவுக்கும் தான் தெரியும் தம்பிகளை ஏமாற்றுவதற்காக முதுகில் சுமந்து கொண்டு விளையாட காட்டுகிறான் என்று . இப்படி பரந்தாமன் மனதில் நினைத்துக் கொண்டான்.


பிறகு வழக்கம்போல பரந்தாமனும் அவனது தம்பிகளும் மூவரும் பைக்கில் தோட்டத்திற்கு கிளம்பிச் சென்றார்கள்.

வழக்கம்போல பைக்கை களத்துமேட்டில் நிறுத்திவிட்டு மூவரும் நடந்து சென்றார்கள் பம்புசெட்டை நோக்கி .

அப்போது கனகாவும் ஊமையனும் இவர்களைப் பார்த்து ஐயா .ஐயா என்று குரல் கொடுத்தபடி ஓடி வந்தார்கள்.

அவர்கள் பதட்டத்தோடு ஓடி வருவதைப் பார்த்து பரந்தாமனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது என்னவாக இருக்கும் ஒருவேளை பம்புசெட்டில் அம்மா படத்தின் பின்னால் இருக்கும் பணப்பெட்டியை பார்த்து விட்டார்களோ என்ற சந்தேகத்தில்.

ஐயா நமது சவுக்குத் தோப்பில் பத்திரங்களையும் துணிமணிகளையும் யாரோ புதைத்து வைத்திருக்கிறார்கள் என்று பதற்றத்தோடு சொன்னாள் கனகா .



பரந்தாமனுக்கு ம் சந்திரன் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது . அந்த பாத்திரங்களும் துணிமணிகளும் ஏற்கனவே பம்புசெட்டில் வேலை செய்த அந்த பெரியவரின் மகனும் மருமகள் உடையது என்று நினைத்து .

அந்த பெரியவரின் மருமகளை கற்பழித்ததை .சந்திரனும் தீனாவும் அப்போது நினைத்துப் பார்த்தார்கள்

அவர்கள் ஓடி விட்ட மறுநாள் மிச்சமிருந்த துணிமணிகளையும் பாத்திரங்களையும் ஒரு மூட்டையாகக் கட்டி . சவுக்குத் தோப்பில் புதைத்தது நினைத்துப் பார்த்தான் .இப்போது அதை கண்டுபிடித்து விட்டார்களே என்று நினைத்து சற்று பதட்டமாய் காணப்பட்டான் பரந்தாமன்.

நீங்க ஒன்னும் பயப்படாதீங்க இது ஏற்கனவே இங்க வேலை செஞ்ச அந்த பெரியவர் ஓட மகன் மருமகள் துணியாக தான் இருக்கும் அவர்களுக்குள் என்ன சண்டையோ தெரியவில்லை இவற்றையெல்லாம் நமது தோட்டத்திலேயே புதைத்துவிட்டு ஓடி இருக்கிறார்கள் .

அவங்களுக்கு இங்கு இருப்பதில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன் என்று கனகாவை சமாளித்தான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சில் கனகாவுக்கு ஏற்பட்ட சந்தேகம் முழுமையாக தீரவில்லை . என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் துணிகளையும் பாத்திரங்களையும் எதுக்கு குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற சந்தேகம் கனகா மனதில் ஏற்பட்டது .
பிறகு அவளுக்கு இதில் ஏதோ எங்கேயோ தவறு நடந்து இருக்கும் என்ற எண்ணம் அவள் மனதில் உறுதியாய் இருந்தது .
ஆனால் என்ன காரணம் என்று அவளுக்கு தெரியாமல் குழம்பினாள் . பிறகு அவலும் அதைப் பற்றி பேசாமல் தோட்டத்தில் வேலை செய்ய கிளம்பினால் .

ஆனால் பரந்தாமனுக்கு சற்று பயம் ஏற்பட்டது இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்தால் நிச்சயம் சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படும் . இங்கு ஏதோ பிரச்சனை இருந்ததால்தான் துணியையும் பாத்திரங்களையும் புதைத்து இருக்கவேண்டும் என்று ஊர் மக்கள் நினைப்பார்கள் என்று நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தான் பரந்தாமன்

பரப்பின் மீது நடந்து போய்க்கொண்டிருக்கும் கனகாவின் பின்னழகை சந்திரனும் தீனாவும் கனகாவின் ரசித்தபடி நின்றிருந்தார்கள் . இதை கவனித்த பரந்தாமனுக்கு கோபம் அதிகமானது . உடனே தம்பிகளிடம் சொன்னான் ...

நீங்கள் செய்த தவறினால் இப்போது பிரச்சனை மெல்ல மெல்ல வெளியே வரப் போகுது என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டான் . அப்போது சந்திரனும் தீனாவும் மௌனமாக இருந்தார்கள்

இனிமேல் இதுபோன்ற தவறுகளை நீங்கள் செய்யக்கூடாது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்று கோபத்தோடு சொன்னான் பரந்தாமன்.

பிறகு சந்திரனும் தீனாவும் ஆளுக்கொரு திசையில் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க சற்று வருத்தத்தோடு சென்றார்கள்

பரந்தாமன் மட்டும் பம்புசெட்டில் அருகில் நின்றபடி யோசித்தான் இன்னும் சிறிது ஆழமாக தோண்டி புதைத்து இரந்தாள் இவர்களின் கண்களுக்கு தென்பட்டு இருக்காதே என்று நினைத்து வருத்தப் பட்டான்

இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான் .
பரந்தாமன் மனம் குழம்பியது

பிறகு சிறிது நேரத்தில் சந்திரனும் தீனாவும் திரும்பி வந்து விட்டார்கள் அப்போது பரந்தாமன் கனகாவை அழைத்து ....அம்மாடி இதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றான் பரந்தாமன்.

எதுக்கு ஐயா..

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் ஒருவேளை யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் உஷார் ஆகிவடுவார்கள் அதனால்தான் சொல்கிறேன்
நான் எந்த பாத்திரங்களையும் துணிமணிகளையும் புதைத்து இருப்பதை பற்றி போலீஸ் ஸ்டேஷனில் சென்று விவரத்தை சொல்லி விட்டு வருகிறேன் அவர்கள் இதை வைத்து விசாரணை செய்வார்கள் அதனால் இந்த விஷயத்தை நீ யாரிடமும் சொல்ல வேண்டாம் . அப்பதான் தவறு செய்தவர்களை பிடிக்க முடியும் .
காணாமல் போனவர்களையும் தேடுவதற்கு உதவியாக இருக்கும் என்று பரந்தாமன் கனகாவிடம் சொன்னான்.

கனகாவுக்கு பரந்தாமனின் பேச்சு சரியாக பட்டது . இவர் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது என்று கனகாவுக்கும் ஊமையனக்கும் சரியாக புரிந்தது.

சரிங்க ஐயா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்

பரந்தாமனும் அவனது தம்பிகளும் உடனே வீட்டுக்கு திரும்பி விட்டார்கள் .

வீட்டுக்கு வந்தவுடன் உள்ளே நுழைந்த பரந்தாமன் அங்கு கல்யாண புரோக்கர் இடம் சாந்தியும் அவனது அப்பா பண்ணையாரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தான் .

இன்னைக்கு நமக்கு நேரம் சரியாக இல்லை எங்கு போனாலும் பிரச்சனையாகவே இருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டான் பரந்தாமன்

அப்போது பண்ணையார் பரந்தாமனை அழித்து கல்யாண புரோக்கர் இடம் அறிமுகம் செய்தார்

இன்னும் கொஞ்ச நாள்ல என் இரண்டாவது மகன் சந்திரனுக்கு திருமணம் முடிக்க வேண்டும் .
நீங்க நல்ல குடும்பமா பார்த்து ஒரு நல்ல வரன் எங்களுக்கு சொல்லுங்க என்று பண்ணையார் உறுதியாய் சொன்னார் கல்யாண புரோக்கர் இடம்.

நிச்சயமாக உங்கள் குடும்பத்திற்கு நிகர நல்ல குடும்பப் பெண்ணை உங்கள் மகனுக்கு வருவாள் என்று கல்யாண புரோக்கர் சொன்னதும் சாந்திக்கு முகத்தில் சந்தோசம் பொங்கியது.

பொண்ணு கொஞ்சம் ஒசரமா இருக்கணும் அண்ணே .
சந்திரன் ஒசரமாக இருக்குது அதனால் பெண்ணும் ஒசரமாக இருக்கணும் . என்று சிரித்தாள் அப்போது சந்திரனுக்கும் தீனாவுக்கும் சந்தோசம் பொங்கியது .

இப்படி எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள் ... ஆனால் பரந்தாமனுக்கு மட்டும் கோபம் தலைக்கேறியது . இனிமேல் நமக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது என்று நினைத்து பரந்தாமன் கவலைப்பட்டான்.


சந்திரனின் திருமணம் நடக்கப் போகிறதா .
இல்லை பரந்தாமனின் தந்திரம் ஜெயிக்கப் போகிறதா
என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...7 👇


ஒரு நாள் . பண்ணையார் புறம் கிராமத்தில் எல்லாம் வேலைகளையும் முடித்துவிட்டு இரவு உணவையும் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டு வாசலில் கட்டிலை போட்டு அமர்ந்தார் ஒரு கூலி தொழிலாளி .

அதேபோல எதிர்வீட்டில் இருப்பவரும் தனது வீட்டு வாசலில் கட்டிலை போட்டு அமர்ந்தார்கள் அப்போது பண்ணையார் தோட்டத்தில் செய்த வேலையைப் பற்றி இருவரும் சிறிது நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டார்கள் அந்த இரண்டு கூலித் தொழிலாளிகளும் பிறகு இருவரும் தூங்குவதற்கு தயாரானார்கள் தனது வீட்டு வாசலிலே காற்றோட்டமாக கட்டில் மீது படத்து உறங்கினார்கள்

நள்ளிரவு ...நேரம் சரியாக 12 மணி

அப்போது திடீரென்று ஒரு பெண் சிரிக்கும் குரல் கேட்டது அந்த கூலித்தொழிலாளி காதில் விழுந்தது சிரிக்கும் சத்தம்
உடனே அவர் எழுந்து கொள்ளாமல் கண்களை மட்டும் திறந்து பார்த்தார் இந்த நேரத்தில் யார் சிரிக்கிறார்கள் என்று சிரிது பலத்தோடு

எதிரே படுத்துக் கொண்டிருக்கும் மற்றொரு கூலித்தழிலாளியும் கண்களைத் திறக்காமலே . யாரோ இந்த நேரத்தில் சிரிக்கிறார்கள் என்று உணர்ந்தார் .

பிறகு இருவரும் மன அமைதி படித்திக்கொண்டு . மீண்டும் உறங்கினார்கள் . சிறிது நேரம் கழித்து மறுபடியும் சத்தமாக ஒரு பெண் சிரிக்கும் குரல் கேட்டது அப்போது அந்தக் கூலி தொழிலாளிக்கு திக்கென்று ஆனது மறுபடியும் ஏதோ ஒரு பெண் சிரிக்கிறாளே இந்த நேரத்தில் என்று பயந்து எழுந்து உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்த்தார் யாருமே இல்லை . எதிரே படுத்துக் கொண்டிருக்கும் நண்பரை அழைத்தார் .

யோ காசி யாரோ சிரிக்கிற போல சத்தம் கேட்குது யா என்றார்

பதிலுக்கு அவரும் படுத்துக்கொண்டே . எனக்கும் கேட்டது . சரி சரி நீ எதுவும் கண்டு கொள்ளாதே படுத்துக்கொள் என்று அவர் சொன்னார் .

மறுபடியும் இருவரும் படுத்து கொண்டார்கள் சிறிது நேரம் ஆனதும் மறுபடியும் ஒய்யாரமாக அந்தப் பெண் சிரித்தாள் .
அவளின் சிரிப்பு மிரட்டுவது போல இருந்தது . இருவரும் பயத்தில் எழுந்து ஒக்காந்து கொண்டார்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள் அவர்களின் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை .
பிறகு என்ன செய்வது என்று இருவரும் பயத்தில் தவித்தார்கள் அப்போது மீண்டும் அந்தப் பெண் சிரித்தாள் . இவர்கள் இருவரும் பயத்தில் கை கால் நடுங்கியது இருவரும் எழுந்து நின்று கொண்டார்கள் . என்ன செய்வது என்று தெரியாமல் அப்போது இருவரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள் . இந்த சிரிப்பு எங்கிருந்து வருகிறது என்று அப்போது மறுபடியும் அந்தப் பெண் மிரட்டுவது போல சத்தமாக சிரித்தாள் . அப்போது அந்த இரண்டு கூலித் தொழிலாளிகளும் நமது வீட்டு 🌴தென்னை மரத்தின் உச்சியில் தான் இந்த சிரிப்பு வருகிறது என்று உணர்ந்தார்கள் இருவரும் .

என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்குள்ளே ஓடி விடலாம் என்று முடிவு செய்து அவரவர் வீட்டுக்குள்ளே ஓடி கதவை சாத்திக் கொண்டார்கள் பயத்தில் .
அப்போது வீட்டிலுள்ளவர்கள் எழுந்து கொண்டார்கள் .

என்னங்க இந்த நேரத்துல இப்படி வீட்டுக்குள்ள ஓடி வர்றீங்க என்று மனைவி கேட்டாள் .

அடியே ..நம்ம வீட்டு தென்னை மரத்து உச்சியில் ஒரு பேய் சிரிக்குதடி அந்த பயத்துல தான் நான் உள்ளே ஓடி வந்துட்டேன் .என்று அந்த கூலித்தொழிலாளி தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கும்பதே 👻அந்த பெண் பேய் மறுபடியும் சிரித்தது .

அப்போது கணவன் மனைவியும் பயந்தார்கள் அதே போல எதிர் வீட்டில் இருப்பவர்களும் அந்த சத்தத்தை கேட்டு பயந்து போனார்கள் .

இப்படி இந்த இரண்டு குடும்பமே அந்த பேய் சிரிப்பில் பயந்துகொண்டு ஜன்னல் வழியாக தென்னை மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் .ஆனால் விடாமல் அந்த தென்னை மரத்தில் பேய் சிரித்துக் கொண்டே இருந்தது இவர்களும் பிதியில் நடுங்கிக் கொண்டே இருந்தார்கள் .
இந்த இரண்டு குடும்பமும்

பிறகு அதிகாலை நான்கு மணி அதுவரைக்கும் இந்த இரண்டு குடும்பங்களும் தூங்காமல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள் .

பிறகு அந்தப் பேய் சிரிக்கவில்லை போதும் விடிந்தது . இந்த இரண்டு குடும்பமும் பயந்துகொண்டு தனது வீட்டின் கதவை திறந்து கொண்டு ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள் .

பிறகு இரண்டு குடும்பத்தாரும் கூடி பேசினார்கள் . இதுவரைக்கும் இதுபோன்ற சிரிப்பு சத்தம் வந்தது கிடையாது நமது தென்னை மரத்தில் ஏதோ ஒரு பேய் வந்து தங்கிவிட்டது இனிமேல் அது நம்மை நிம்மதியாக தூங்க விடாது இனிமேல் எப்படி நம்ம இங்கு இருப்பது என்று தெரியவில்லையே என்று குழம்பினார்கள் .

அப்போது பக்கத்து வீட்டுக்காரர் இவர்களின் பேச்சை கவனித்திருந்தார் அப்போது அவர் வந்து சொன்னார் ...நீங்க ஒன்றும் கவலைப்படாதீங்க இதுககெல்லாம் ஒரே வழி ..நமது ஊரில் உள்ள சாட்டையடி சாமியாரிடம் சென்று உங்களுடைய பிரச்சனையை சொல்லுங்க அவர் இந்த பேய் பிசாசு எல்லாம் விரட்டி விடுவார் என்று சொன்னார் .

அந்தப் பக்கத்து வீட்டு கூலித்தொழிலாளி அவர் சொன்ன வார்த்தை இந்த இரண்டு குடும்பங்களுக்கும் சற்று ஆறுதலாக இருந்தது . உடனே இப்பவே சாட்டையடி சாமியாரை நாம் பார்த்து நம்முடைய பிரச்சனையை சொல்லலாம் என்று இரண்டு குடும்பமும் கிளம்பினார்கள் .

🛖ஒரு சிறிய குடிசையில் சில சாமி படங்களை வைத்துவிட்டு சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் மூவரும் மொட்டை அடித்துக்கொண்டு . சற்று வித்தியாசமாக இருந்தார்கள்

அப்போது சாட்டையடி சாமியார் கண்களை மூடிக்கொண்டு மந்திரம் சொல்வது போல நடித்திருந்தார் இடதுபுறம் ஒரு சிஷ்யனும் வலதுபுறம் ஒரு சிஷ்யனும் அமர்ந்திருந்தார்கள் .

அப்போது அந்த கூலித் தொழிலாளியின் இரண்டு குடும்பமும் சாமி என்று குரல் கொடுத்தபடி வாசலில் நின்றார்கள் உடனே சிஷ்யர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார்கள் பிறகு அந்த இரண்டு கூலித்தழிலாளிகளும் உள்ளே சென்று . சாமி எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று இரண்டு கைகளையும் கும்பிட்டுக் கொண்டு சாட்டையடி சாமியாரிடம் சொன்னார்கள்

ஆனால் சாட்டையடி சாமியாரும் இவர்களை கண் திறந்து பார்க்காமலே சொன்னார் .உங்களை 👻அந்த பேய் நேற்று இரவு தூங்க விடவில்லையா என்று சொன்னார் ..இதைக்கேட்டதும் அவர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது . இந்த அளவுக்கு இந்த சாமியாருக்கு இவ்வளவு சக்தியா நம் எதுவும் சொல்லாமலே இவருக்கு எப்படித் தெரியும் என்று விழுந்து போனார்கள் .

பிறகு ஆமாம் சாமி எங்களை நீங்கள் தான் காப்பாற்றவேண்டும் சாமி . எங்கள் வீட்டு 🌴தென்னை மரத்தின் உச்சியில் ஏதோ ஒரு பேய் வந்து தங்கி விட்டது சாமி .
நாங்கள் நேற்று இரவு முழுக்க தூங்கவில்லை அந்த பேய் சிரித்து எங்களை மிரட்டியது சாமி .
என்று பணிவோடு சொன்னார்கள்

பிறகு சாட்டையடி சாமியார் அவர்களை கண்திறந்து முறைத்து கம்பீரமாக பார்த்தார் . அவர் பார்வையில் இந்த இரண்டு கூலித் தொழிலாளிகளும் மிரண்டு போனார்கள் . பார்ப்பதற்கு மிகவும் சக்திவாய்ந்த சாமியாராக இருப்பார் போல் தெரிகிறதே என்று .

அப்போது சாட்டையடி சாமியார் சொன்னார் .... நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் அந்தப் பேயை ஏன் சாட்டையால் அடித்து இந்த ஊரை விட்டு துரத்தி விடுகிறேன் . அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என்றார் சாட்டையடி சாமியார்.

எவ்வளவு சாமி செலவாகும் என்றார் கூலித்தழிலாளி ...

என் சாட்டைக்கு பூஜை செய்வதற்கு ஒன்று செலவாகும் பிறகு எங்களுக்கு ஒன்று செலவாகும் மொத்தத்தில் இரண்டு சிலவாகும் என்றார் சாட்டையடி சாமியார்

உடனே அந்த கூலித் தொழிலாளி தனது வேட்டியில் இடுப்பில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை எடுத்து சாட்டையடி சாமியாரிடம் கொடுத்தார் ...ஐயா இப்போதைக்கு ஒன்று இருக்கிறது நீங்கள் அந்த பேயை விரட்டிய துடன் ஒன்று தருகிறோம் என்று சொன்னார்கள்

அதற்கு சாட்டையடி சாமியார் சற்று சந்தோஷமாக சொன்னார் ...
நீங்கள் ஒன்றும் பயப்படாமல் செல்லுங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்பதற்கு தான் . நான் இங்கு வந்திருக்கிறேன் என்னுடைய சக்தியை நீங்கள் இன்று இரவு பார்ப்பீர்கள் என்று ஆவேசமாக சொன்னார் .

அப்போது வலதுபுறம் இருக்கும் சிஷ்யன் சொன்னான் ..நானும் என் குருவும் இன்று இரவு 11 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறோம் தென்னை மரத்தில் இருக்கும்
பேய்யை எங்கள் குரு அடித்து விரட்டி விடுவார் நீங்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான் .

கூலித் தொழிலாளிகளும் சாமியார் சொன்ன வார்த்தையில் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது . நிச்சயம் இவர் இன்று இரவு தென்னை மரத்தில் இருக்கும் பேய் அடித்து விரட்டி விடுவார் என்ற நம்பிக்கையோடு வீட்டுக்குச் சென்றார்கள்.

இரவு நேரம் ஆனது...🌘

சாமியாரின் வருகைக்காக அந்த இரண்டு கூலித்தொழிலாளி குடும்பமும் பயத்தோடு எதிர்பார்த்திருந்தார்கள்.

அப்போது தென்னை மரம் லேசாக ஆடியது காற்றில் . அந்த தென்னை மரம் காற்றில் சாய்ந்து சாய்ந்து ஆடுவதில் 🌴இந்த இரண்டு குடும்பமும் பயணத்தில் நடுங்கினார்கள் . இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த பேய் நம்மை மிரட்ட போகிறது என்று நினைத்து ...

அப்போது சாட்டையடி சாமியாரும் அவனது ஒரு சிஷ்யனும் அங்கு வந்தார்கள் சின்ன ஸ்கூட்டரில் அவரைப் பார்த்ததும் அந்த இரண்டு குடும்பத்திற்கும் சற்று சந்தோஷமாக இருந்தது .
உடனே அவரை இரு கைகளால் கும்பிட்டு வரவேற்றார்கள் .
அந்த தென்னை மரத்தை சாட்டையடி சாமியாரிடம் காட்டினார்கள் .

உடனே அவர் தனது பைக்கில் மாட்டி வைத்திருந்த சாட்டையை ஆவேசமாக எடுத்துவந்து ஒரு அடி அடிப்பதுபோல சாட்டையை உதறினார் ..

அப்போது நேரம் 12 ...

உங்களுக்கு பயமில்லை என்றால் வெளியே நின்று பாருங்கள்
நான் எப்படி அந்த பேயை விரட்டுகிறேன் என்று .
ஒருவேளை உங்களுக்கு பயமாக இருந்தால் நீங்கள் வீட்டுக்குள்ளே போய் விடுங்கள் என்றார் சாட்டையடி சாமியார்..

அப்போது அந்த கூலித் தொழிலாளியின் மனைவி சொன்னார் ...சாமி எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்குது அந்த பேய் சிரிப்பதில் ஏதோ எங்களை கொன்று விடுவேன் என்று மிரட்டுவது போல இருக்கிறது சாமி அதனால் நாங்கள் வீட்டுக்குள்ளே இருக்கிறோம் . நீங்கள் அந்த பேயை விரட்டி விடுங்கள் என்று சொன்னார் ..

சரி சரி உங்களுக்கு பயம் என்று நினைக்கிறேன் நீங்கள் வீட்டுக்குள்ளே இருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது அந்த தென்னை மரத்தின் உச்சியில் ஒய்யாரமாக அந்தப் பெண் பேய் சிரித்தது .

உடனே அந்த இரண்டு குடும்பமும் அலறியடித்துக் கொண்டு தனது வீட்டுக்குள்ளே ஓடி கதவை சாத்திக் கொண்டார்கள் .
அந்த இரண்டு குடும்பமும் அவரவர் வீட்டு ஜன்னல் வழியாக தென்னை மரத்தை பார்த்துக்கொண்டும் சாமியாரைப் பார்த்தும் .
என்ன நடக்கப் போகிறதோ என்ற பீதியில் ஜன்னல்வழியாக பார்த்தார்கள் .

அப்போது சாட்டையடி சாமியார் ஆவேசமாக சொன்னார்.. ஏ பிசாசு இன்றோடு உன் கதையை முடிக்கிறேன் என்று சொல்லும்போது மறுபடியும் அந்த பேய் சிரித்தது 💀என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல உய்யரமாக சிரித்தது .

உடனே சாட்டையடி சாமியார் தனது இடுப்பில் மடித்து வைத்திருந்த சிறிது திருநீரை எடுத்து தென்னை மரத்தின் மீது அடித்தார் .பிறகு சாட்டையால் தென்னை மரத்தை ஓங்கி ஓங்கி அடித்தார் அப்போது அவனது சிஷ்யன் சிறிது திருநீறை கையில் வைத்துக்கொண்டு சாமியார் பின்னாடியே தூவிகொண்டே சுற்றி சுற்றி வந்து இருந்தான் .

இதை ஜன்னல் வழியாக பார்த்து இருந்த அந்த இரண்டு கூலித்தொழிலாளி குடும்பமும் பீதியில் நடுங்கினார்கள் .
இன்று இரவு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது இந்த சாமியார் உயிரோடு விடுமா அந்தப் பேய் என்று நினைத்து பயத்தால் நடுங்கினார்கள் .அப்போதும் அந்தப் பேய் சிரிப்பதை நிறுத்தவில்லை

உடனே சாட்டையடி சாமியார் ஆவேசமாக சொன்னார் ...நான் என் சாட்டையால் இத்தனை அடி அடித்தும் நீ அடங்க வில்லையா இதோ மேலே வருகிறேன் உன்னை அங்கே வந்து அடித்து இழுத்து வருகிறேன் என்று ஆவேசமாக சொல்லிக்கொண்டு தென்னைமரத்தின் மீது ஏறத் தொடங்கினார் சாட்டையடி சாமியார் .

இதை பார்த்த அந்த குடும்பத்தார் அவர்களுக்கு மேலும் பயம் அதிகமானது . ஒருபுறம் சாமியாரின் துணிச்சலை பார்த்து விழுந்து போனார்கள் இவ்வளவு சக்தி கொண்டவரா இந்த சாமியார் என்று நினைத்து ஆச்சரியப்பட்டார்கள் .

அப்போது கீழே அவருடைய சிஷ்யன் தென்னை மரத்தை சுற்றி கொண்டு சிறிது திருநீரை தெளித்துக் கொண்டே இருந்தான்

தென்னை மரத்து உச்சியில் சென்றுவிட்டார் சாட்டையடி சாமியார் அந்த பேய் சிரித்துக் கொண்டே இருந்தது . உடனே தனது சாட்டையால் அடித்துக் கொண்டே இருந்தார் .அப்போது மேலே இருக்கும் சாட்டையடி சாமியார் கீழே நம்மை அந்த கூலித் தொழிலாளிகள் கவனிக்கிறார்கள என்று பார்த்தார் .

அவர்கள் பயத்தில் தனது கைகளால் கண்களை மூடிக் கொண்டிருந்தார்கள் .

உடனே சாட்டையடி சாமியார் சற்று சிரித்துக்கொண்டே ...உன்னை விடமாட்டேன்... உன்னை இன்றோடு உன் கதையை முடித்து விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே தென்னை மரத்தின் உச்சியில் இருக்கும் தனது 📱செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு வேட்டியில் மடித்து வைத்துக்கொண்டு கீழே இறங்கி வந்து . இடது கையில் அந்தப் பெண் பேய் தலைமுடியை பிடித்து இருப்பது போல கை நீட்டிக் கொண்டு . வலது கையில் சாட்டையால் அந்த பேயை அடிப்பது போல அடித்துக் கொண்டு நடந்து சென்றார் .இதை அந்த கூலித் தொழிலாளிகள் ஜன்னல்வழியாக பார்த்தார்கள் .

சிறிது தூரம் சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யரும் .நடந்துசென்று பேய் விரட்டி விட்டு வருவது போல திரும்பி வந்தார்கள் .வந்தவுடன் சாட்டையடி சாமியார் களைப்போடு பெருமூச்சு விட்டார் ..அந்த இரண்டு குடும்பத்தார் பயந்து கொண்டே வெளியே வந்து சாட்டையடி சாமியாரை மறுபடியும் கும்பிட்டார்கள் .

ஒருவழியாக அந்த பேயை நான் அடித்து விரட்டி விட்டேன் . இனிமேல் அந்த பேய் உங்களை தொந்தரவு செய்யாது நீங்கள் இனிமேல் நிம்மதியாக தூங்கலாம் என்று சொன்னார் .

அப்போது அந்த கூலித் தொழிலாளிகள் தென்னை மரத்தை மறுபடியும் பார்த்தார்கள் எந்த சிரிப்பும் வரவில்லை பிறகு அவர்களுக்கும் பயம் குறைந்தது அப்போது சாட்டையடி சாமியாருக்கு கொடுக்கவேண்டிய ஆயிரம் ரூபாயை கொடுத்தார்கள் .
அதை வாங்கிக் கொண்டு சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் அங்கிருந்து கிளம்பினார்கள் .
இவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு பிறகு இந்த கூலித்தொழிலாளி யும் சிறிது பழத்தோடு தனது வீட்டுக்குள் உறங்கினார்கள் .

பொழுதும் விடிந்தது ..🌄

இரண்டு குடும்பத்தாரும் சாட்டையடி சாமியாரின் சக்தியை ஊரில் உள்ள அனைவருக்கும் சொன்னார்கள் . இப்படிப்பட்ட சாமியார் நமது ஊரில் இருப்பது நமக்குத் தான் பெருமை என்று பெருமையாக அந்த ஊரே சாட்டையடி சாமியாரை பற்றி பேசத் தொடங்கி விட்டார்கள் .

பிறகு சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் சந்தோஷமாக தனது பூஜை அறையில் இருந்தார்கள் .

அப்போது மூவரும் கூடி பேசினார்கள் ....குருவே இந்த ஊரு மக்கள் பாக்குறதுக்கு ரொம்ப நல்லவர்களக இருக்கங்க குருவே இந்த ஊரிலேயே நம்ம தங்கி எல்லார்கிட்டயும் பணத்தை பிடுங்கி விடலாம் குருவே என்றான் ஒரு சிஷ்யன் ..

ஆமாம் குருவே நீங்க இந்த முறை போட்டிருக்கும் பிளான் நல்லாவே ஒர்க்கட்டாவது குருவே . நம்மளை யாருமே கேள்வி கேட்க மாட்டாங்க குருவே .
எப்படி குருவே இந்த யோசனை உங்களுக்கு வந்தது என்று மற்றொரு சிஷ்யன் கேட்டான்

நான்தான் அன்னைக்கே சொன்னேனே இந்த செல்போன் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் என்று இனிமேல் இந்த செல்போனை வைத்து தான் இந்த ஊரை மிரட்டி பணம் பிடுங்க வேண்டும் என்று மூவரும் பேசிக்கொண்டார்கள்.

செல்போனில் பேசி சிரிப்பது போல ரிங்டோன் செட் பண்ணிக் கொண்டு அதை யாருக்கும் தெரியாமல் தென்னை மரத்தின் மீது .அல்லது முள் புதரில் . அல்லது யாரும் போகாத இடத்தில் மறைத்து வைத்துவிட்டு அந்த செல்போனுக்கு நள்ளிரவில் போன் செய்வார்கள் அது பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் . அப்போது அருகில் இருப்பவர்கள் பேய் வந்துவிட்டது என்று நினைத்து சாட்டையடி சாமியாரிடம் வந்து சொல்வார்கள் பூஜை அறையில் ஒரு சிஷ்யனை 12 மணிக்கு அந்த செல்போனுக்கு போன் செய்யும்படி சொல்லிவிட்டு மற்றொரு சிஷ்யனை அழைத்துக்கொண்டு வருவார் சாட்டையடி சாமியார்.பிறகு அந்தப் பேயை விரட்டி அடிப்பது போல சாட்டையடி சாமியார் நாடகமாடி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொள்வார் பிறகு சிரிக்கும் சத்தம் கேட்காது இப்படி இந்த பண்ணையார் புறத்தை பயத்தால் ஏமாற்றுவதற்கு யார் ஆகிவிட்டார்கள் இந்த சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும்.



தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...8 👇


பரந்தாமன் தனது தம்பிகளுடன் வழக்கம்போல் தோட்டத்தை சுற்றிப்பார்க்க ஆளுக்கு ஒரு திசையில் சென்றார்கள் .
அப்போது பரந்தாமன் . நிலத்தில் இருக்கும் சிறிய மண் கட்டியைக் எடுத்து வாயில் போட்டு ருசித்தான் அப்போது அவனுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி . அவன் நிலத்தின் மண்ணை ருசிப்பதில்

பரந்தாமனை பொருத்தவரை யாருக்கும் எந்த தீங்கும் செய்யமாட்டான் ஆனால் அவனுடைய லட்சியம் யாருக்கும் இந்த நிலங்களை கொடுக்கக் கூடாது என்ற இலட்சியத்தால் ஒரு சில நேரங்களில் தனது தம்பிகளுக்கு . மது வாங்கி கொடுத்து அவர்களை சுயசிந்தனை செய்யாமல் தடுப்பான்.
பிறகு பெண்கள் மீதான ஆசையை தூண்டி விடுவான் .
இப்படி மதுவுக்கும் பெண்களுக்கும் அடிமையாக்கி விடவேண்டும் தம்பிகளை அப்போதுதான் இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் அப்போதுதான் எல்லா நிலமும் நாமே ஆளலாம் என்று நினைத்து தம்பிகளுக்கு சில நேரங்களில் இதுபோன்ற தீய செயல்களில் தூண்டிவிடுவான் பரந்தாமன் மற்றபடி அவன் யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்யமட்டான்.

அமைதியாக தன்னுடைய பணம் சேர்க்கும் வேலையை பொறுப்பாக கவனிப்பான் . இப்படி பரந்தாமன் தனது விவசாயப் பணியை மும்முரமாக கவனித்து வந்தான்.

பிறகு மூவரும் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள் ஒற்றுமையாக ஒரே பைக்கில்.

இவர்கள் மூவரைப் பற்றி ஊர்மக்கள் பெருமையாக பேசுவார்கள் . அண்ணன் தம்பி என்றால் இவர்களைப் போல இருக்க வேண்டும் என்று .
எங்கு சென்றாலும் மூவரும் ஒற்றுமையாக ஒரே பைக்கில் செல்வார்கள் அதேபோல தனது தாய்மேல் பரந்தாமனுக்கு அதிக பாசம் . அதனால் தான் தோட்டத்தில் தாய்க்கு என்று ஒரு பூஜை அறை அமைத்து அதில் பரந்தாமன் தினமும் கும்பிட்டு வருகிறார் . இப்படிப்பட்ட நல்ல குணம் படைத்தவர்கள்
பண்ணையாருடைய மகன்கள் என்று ஊர் மக்கள் பெருமையாக இவர்களைப்பற்றி பேசுவார்கள் ஆனால் தனது தாய் படத்தின் பின்னால் நிறைய பணத்தை சேர்த்து வைத்திருப்பது யாருக்குமே தெரியாது இப்படி எல்லோருக்கும் நல்லவனாகவும் பரந்தாமன் இருக்கிறான்.

மூவரும் வீட்டுக்குள் சென்றதும் அப்போது பண்ணையாரும் பரந்தாமன் மனைவி சாந்தியும் ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு சந்தோஷமாக சிரித்தபடி பேசிக்கொண்டிருப்பதை மூவரும் கவனித்தார்கள்.

வாங்கப்பா உங்களுக்காகத்தான் நாங்கள் காத்துகிட்டு இருக்கோம் என்று சந்தோஷமாக சிரித்துக்கொண்டே பண்ணையார் சொன்னார்.

என்னப்பா எங்களுக்காக எதுக்கு காத்துக்கிட்டு இருந்தீங்க என்று சொல்லிக்கொண்டே பரந்தாமன் அவர்களின் அருகில் சென்றான்.

சாந்தி ...சிரித்தபடி இந்த போட்டோவை பார்த்து பெண் நன்றாக இருக்கிறாளா பார்த்து சொல்லுங்க என்று அந்த போட்டோவை பரந்தாமனிடம் கொடுத்தாள்.

பரந்தாமன் போட்டோவை வாங்கிப் பார்த்ததும் அந்த படத்தில் இருந்த பெண் அழகாக லட்சணமாக இருந்தாள் . உடனே பரந்தாமன் புரிந்துகொண்டான் இவள் நிச்சயம் தம்பிக்கு பார்த்திருக்கும் பெண்ணாகத்தான் இருப்பாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்
பிறகு என்ன சொல்வது என்று குழம்பினான் . பெண்ணும் பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பதால் அவனால் ஒன்றும் எதிர்ப்பு சொல்லமுடியாமல் முகத்தை சிரிப்பது போல மாற்றிக்கொண்டு . நன்றாக இருக்கிறாள் பெண் என்று சொல்லி விட்டு போட்டோவை சாந்தியிடம் கொடுத்துவிட்டான்.

உங்க தம்பிக்கு பார்த்து இருக்கும் பெண் இவள்தான் ரொம்ப அழகா இருக்கா எனக்கும் மாமாவுக்கும் இவளை ரொம்ப பிடிச்சுப் போச்சு உங்களுக்கும் இவளை பிடித்துவிட்டது . அடுத்தது சந்திரனுக்கு தீனாவுக்கும் பிடித்துவிட்டால் உடனே கல்யாண வேலையை ஆரம்பித்து விடலாம் என்று சொல்லிக்கொண்டு சந்திரனிடம் போட்டோவை கொடுத்தால் சாந்தி.

இந்தாங்க பெண்ணே நல்லா பார்த்து பிடிச்சிரக்கான்னு சொல்லுங்க . என்று போட்டோவை சந்திரனிடம் கொடுத்தால் சாந்தி.

சந்திரன் போட்டோவை பார்த்தவுடன் பெண் அவன் எதிர்பார்த்ததை விட அழகாக இருந்தாள் . அவன் அந்த போட்டோவை பார்த்ததும் சந்திரன் முகம் மலர்ந்தது . கூடவே வெட்கமும் வந்தது உடனே தனது தம்பியிடம் கொடுத்துவிட்டான் போட்டோவை.

என்ன பொண்ணு நல்லா இருக்காளா என்றாள் சாந்தி.

உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு சம்மதம் என்றால் சந்திரன்.

எங்களுக்கு பிடிக்குது பிடிக்கலை அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கா என்று சாந்தி .சந்திரன் அருகில் சென்று அவன் முகத்தை பார்த்து கேட்டாள்.

சந்திரன் வெட்கத்தால் நெளிந்தான்

அப்போது தீனா பெண்ணோட போட்டோவை பார்த்துவிட்டு .
அவன் சொன்னான் ... அண்ணனுக்கு இந்தப் பெண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அதனால தான் வெட்கப்படுகிறார் இல்லனா அவரு இங்கிருந்து கிளம்பி இருப்பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.

பிறகு அனைவரும் சந்தோஷமாக சிரித்தார்கள் .

இன்னும் ஒரே ஒரு ஆள் தான் பாக்கி அவர் சொல்லிவிட்டாள் உடனே கல்யாண வேலையை ஆரம்பித்து விடலாம் என்று சொன்னார் பண்ணையார்.

நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லோருக்கும் பெண்ணை பிடிச்சுப் போச்சு வேறு யாருக்கு பிடிக்கணும் மாமா என்று சாந்தி கேட்டாள்.

முக்கியமான ஆளு அவர் வந்து புடிச்சிருக்குன்னு சொன்னாதான் மற்ற வேலைகளையெல்லாம் பார்க்கணும் என்றார் பண்ணையார்.

வேறு யாரு அப்பா சம்மதம் சொல்லணும் என்று தீனா கேட்டான்.

வேறு யாருமில்லை என் பேரன் தான் .
அவன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் அவனுக்கு . அவன் சித்தி பிடிச்சு இருக்கணும் அப்போதுதான் திருமண வேலை பார்க்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பண்ணையார்.

அப்போது எல்லோரும் நன்றாக சிரித்தார்கள் சந்தோஷமாக ஆனால் பரந்தாமன் மட்டும் அவன் மனதில் தீ ஏறிய தொடங்கியது முகத்தில் மட்டும் சந்தோஷமாக இருப்பதை போல காட்டிக்கொண்டு மனதில் தீப்பற்றி எரிந்தது .

இப்படி குடும்பமே ஒன்று சேர்ந்து திருமண வேலையை நடத்த போறாங்க என்று நினைத்து சோகத்தில் நின்றான் பரந்தாமன்.

சென்ற முறை சந்திரனுக்கு பார்த்த பெண்ணை . படிக்கும் இடத்தில் அவளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருக்கிறது என்று ஒருவர் சொன்னார் என்று நாமே அப்பாவிடம் பொய் சொல்லி அந்த வரனை நிறுத்தி விட்டோம் இப்போது என்ன சொல்லி திருமணத்தை நிறுத்துவது என்று பரந்தாமன் குழப்பத்தில் நின்றான்.

அப்போது சாந்தி சந்திரனிடம் அப்பாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள் என்று சொன்னாள்.


சந்திரனும் ஆசீர்வாதம் வாங்குவதற்கு பண்ணையாரின் அருகில் சென்றான்.

என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதுமே இருக்கும் . அதனால் நீ உன் அண்ணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள் .
தீனா நீயும் உன் அண்ணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள் . ஏனென்றால் உங்களுக்கு அம்மா அப்பா எல்லாமே உன் அண்ணன்தான் உங்களை உங்க அம்மா சுமந்ததை விட . உன் அண்ணன்தான் எப்போதுமே உங்களை முதுகில் சுமந்து கொண்டு இருப்பான் உங்கள் அண்ணன் .

தீனா பிறந்தவுடன் உங்க அம்மா இறந்து விட்டாள் ஆனால் பரந்தாமன்தான் எப்போதுமே சந்திரனையும் தீனாவையும் முதுகிலும் தோல் மீதும் சுமந்துகொண்டு அவர்களை சந்தோசமாக பார்த்திருப்பான் இப்போது உங்களை அவன் மனதில் சுமந்து கொண்டு இருக்கிறான் இப்படி என்னேரமும் உங்களை சுமந்து கொண்டிருக்கும்
உங்கள் அண்ணன்தான் உங்களுக்கு எல்லாமே
அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது தான் முறை என்று லேசாக கண் கலங்கியபடி பண்ணையார் சொன்னார்

சந்திரனும் தீனாவும் பரந்தாமனை பார்த்து இருவரும் அவன் காலில் விழுந்து கும்பிட்டார்கள் .

அப்போது பரந்தாமன் என்ன சொல்வது என்று தெரியாமல் நல்லா இருங்கள் ..நல்லா இருங்கள் என்று சொல்லிக் கொண்டே சந்திரனையும் தீனாவையும் தூக்கிவிட்டான் .

அப்போது சந்திரன் கண்களிலும் தீனாவின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .எங்களுக்கு எல்லாமே நீங்கள் தான் அண்ணா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்கள் சந்திரனும் தீனாவும் .

அப்போது சாந்தி இவர்களை பார்த்து பெருமைப் பட்டாள்
பிறகு யாரும் அழ வேண்டாம் இன்று முதல் நம் குடும்பத்தில் கல்யாண கலை ஆரம்பமாகிவிட்டது என்று சொல்லி அனைவரின் கவனத்தை திசை திருப்பினாள்


அதிகாலை நேரம்....🌄


ரேகாவின் அம்மா லட்சுமி அம்மாள் தனது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுவிட்டு எதிரே இருக்கும் முத்தையாவின் வீட்டு வாசலையும் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் .

அப்போது முத்தையா திண்ணை மீது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார் . உடனே லட்சுமி அம்மாள் வாசலை சுத்தம் செய்துவிட்டு சூடாக டீ போட்டுக்கொண்டு வந்து முத்தையா வை எழுப்பினாள்

அப்பா எழுந்திரிங்க டீ குடிச்சுட்டு படுத்துக்குங்க என்றால் லட்சுமி அம்மாள்.

முத்தையாவும் தினமும் காலையில் எழுந்தவுடன் லட்சுமி அம்மாள் பார்த்துவிட்டு தான் மற்றவர்களிடம் பேசுவார் இது வழக்கம் .
முத்தையா எழுந்தவுடன் லட்சுமியை நன்றாக பார்த்துவிட்டு அவள் கையில் இருந்த சூடான டீ வாங்கி குடிக்க ஆரம்பித்தார் . பிறகு லட்சுமி அம்மாள் முத்தையா வின் வேட்டி சட்டையை துவைப்பதற்காக தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றாள்.

முத்தையாவுக்கு ....அன்று மனம் சந்தோசமாக அமைதியாக இருந்தது .

அப்போது முத்தையா யோசித்தார் இன்று லட்சுமியிடம் தனது மகனுக்கு உன் மகள் ரேகாவை கொடுக்கிறியா என்று கேட்டு விடலாமா என்று யோசித்தார்.

அப்போது அவர் மனம் மற்றொரு கேள்வியை கேட்டது ...
ஒருவேளை தனது மகளை அவள் தம்பிக்காக வைத்திருக்கிறாலோ என்று நினைத்து தயக்கம் கொண்டார்.

ஆனால் லட்சுமியும் ரேகாவும் நம் குடும்பத்தின் மீது காட்டும் பாசத்திற்கு நம்ம என்ன கைமாறு செய்வது . அவர்கள் நம் மீதும் நம் மகன் மீதும் காட்டும் பாசத்திற்கு என்ன உதவி செய்தாலும் ஈடாகாது என்று நினைத்து சற்று மனக் குழப்பத்தோடு இருந்தார் முத்தையா

அந்த அழகான காலை பொழுதில் ஒரு பெண் கூடை நிறைய பூ கொண்டு வந்து ..ஐயா பூ வேண்டுமா என்று முத்தையா விடும் மலர்ந்த முகத்தோடு கேட்டாள்.

அந்த பூக்கார பெண் முகத்தை பார்த்ததும் முத்தையாவுக்கு அம்மனே நேரில் வந்து பூ வாங்கிக் கொள் என்று சொல்வது போல அவர் மனசுக்கு பட்டது .
உடனே முத்தையா மலர்ந்த முகத்தோடு ஐந்து மூழம் பூ கொடு தாயே சென்று இரண்டு கைகளை நீட்டினார் .
அந்த பூக்கார பெண்ணும் ஐந்து முழம் பூவை கொடுத்தாள் பிறகு முத்தையா தனது இடுப்பு வேட்டியல் மடித்து வைத்திருந்த பணத்தை எடுத்து பூக்கார பெண்ணிடம் கொடுத்தார் .

அந்த பூக்கார பெண் சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.

முத்தையாவுக்கு இன்று சரியான நேரம் என்று மனதில் பட்டது லட்சுமியிடம் திருமணத்தைப் பற்றி கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்தார் முத்தையா.

அழுக்குத் துணியை ஊற வைத்துவிட்டு லட்சுமி வீட்டு வாசலில் இருக்கும் அடுப்பில் டீ யை மீண்டும் சூடுபடுத்தினால் சங்கருக்கும் ரேகாவுக்கும் கொடுப்பதற்கு.

அப்போது முத்தையா லட்சுமியை அழைத்தார்.

என்னப்பா இன்னும் கொஞ்சம் டீ வேணுமா என்று முத்தையாவின் அருகில் அமர்ந்தபடி கேட்டால் லட்சுமி.

டி எல்லாம் வேண்டாமா இதுவே போதும் . ஒரு விஷயம் உன்னிடம் கேட்கணும் அதனால் தான் கூப்பிட்டேன் என்றார் முத்தையா.

என்னப்பா விஷயம் தயங்காம கேளுங்க உங்ககிட்ட நான் எதையுமே மறைக்க மாட்டேன் என்று பாசமாக சொன்னால் லட்சுமி.

நான் சொல்வதைக் கேட்டு நீ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது நான் கேட்கும் இடத்தில் இருக்கிறேன் ஆதலால் நீ வருத்தப்படக்கூடாது என்றார் முத்தையா.

லட்சுமிக்கு ஒன்றும் புரியவில்லை சற்று குழப்பத்தோடு சொன்னாள் என்னப்பா கேக்க போறீங்க கேளுங்கப்பா என்றாள் லட்சுமி.

என் மகன் சங்கருக்கு உன் மகள் ரேகாவை கொடுக்கிறியா என்று முத்தையா பளிச்சென்று கேட்டார்.

முத்தையா சொன்ன வார்த்தை லட்சுமிக்கு பெரும் சந்தோசத்தை கொடுத்தது . ஒருகணம் அவள் சந்தோஷத்தில் அப்படியே முத்தையாவின் முகத்தை பார்த்தபடி அசையாமல் இருந்தாள்.

லட்சுமி எந்த பதிலும் சொல்லாமல் முத்தையாவின் கண்களை பார்த்தபடி இருந்தாது முத்தையாவுக்கு குழப்பமாக இருந்தது . சம்மதம் மா இல்லை தயக்கமா என்று யோசித்தார் முத்தையா.

அப்போது லட்சுமி உடனே முத்தையாவின் இரண்டு கைகளை பிடித்து தனது கன்னத்தில் வைத்துக்கொண்டு அழுதாள்.

காலையில அழுவாத மா என்று முத்தையா சொன்னார்.

என் மகளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை அப்பா . என் மகளை தம்பிக்கு கொடுப்பதில் நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று முத்தையாவின் கைகளை கன்னத்தில் வைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீரோடு சொன்னால் லட்சுமி.

அப்போது முத்தையாவின் முகம் மீண்டும் மலர்ந்தது . அவருக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி

நான் இந்த விஷயத்தை பற்றி உன்னிடம் ரொம்ப நாளா பேசலாம் என்று இருந்தேன் . ஆனால் உனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று எனக்குத் தெரியும் அவனுக்காகத் தான் நீ ரேகாவை வச்சிருக்க என்று நினைத்து என் மனம் தயங்கியது . ஆனால் இன்னைக்கு என் மனசு இதை பற்றி உன்னிடம் கேட்க வேண்டும் என்று எழுந்தவுடனே சொன்னது .
அதனால் தான் இன்று உன்னிடம் நான் கேட்டேன் என்று சந்தோஷமாக சொன்னார் முத்தையா.

எனக்கும் என் மகளுக்கும் எப்போதுமே ஆதரவாக இருப்பது நீங்களும் தம்பியும் தான் .
எனக்கு சொந்த தம்பி இருந்தாலும் ஆதரவு என்று சொன்னாள் அது உங்கள் குடும்பம் தான்.
எனக்கு அம்மா அப்பா உயிரோடு இருந்தாலும் .என்னைக்காவது ஒருநள் தான் வந்து நலம் விசாரிப்பார்கள் .ஆனால் தினம் தினம் எங்களுக்கு ஆதரவாக நீயும் தம்பியும் தான் இருக்கீங்க இப்படிப்பட்ட நல்ல குடும்பத்தில் என் பெண்ணை கொடுப்பதில் எனக்கு மனப்பூர்வ சம்மதம் அப்பா .
எனக்கு என் தம்பிக்கு கொடுப்பதைவிட தினம் தினம் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் உங்கள் குடும்பத்தில் என் பெண்ணை கொடுப்பதில் தான் எனக்கு விருப்பம் என்று ஆனந்தக் கண்ணீரோடு சொன்னாள் லட்சுமி.

முத்தையா அருகிலிருந்த பூவை எடுத்து லட்சுமியிடம் கொடுத்து என் மருமகளுக்கு வச்சுவிடு என்று மனம் நிரம்பி சொன்னார்.

தூங்கிக்கொண்டிருந்த ரேகா எழுந்ததும் வீட்டு வாசலில் வந்து நின்று சங்கரை கவனித்தாள். சங்கர் தென்படவில்லை .
இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே சென்றுவிட்டாள்.

அப்போது லட்சுமி ஒரு டம்ளரில் டீ கொடுத்து ரேகா விடும் சங்கருக்கு கொடுக்கும்படி சொன்னாள்.

ரேகாவுக்கு சந்தோஷமாக இருந்தாது ...டீ கொடுக்கும் சாக்கில் சங்கரை பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டாள்.


அப்படியே மாமாவோட அழுக்குத் துணி எல்லாம் எடுத்துக்கிட்டு வந்து துவைச்சு போடு என்று லட்சுமி சொன்னாள்.

ரேகாவுக்கு சற்று குழப்பமாக இருந்தது ..மாமா என்று அம்மா யாரை சொல்றாங்க என்று திருதிருவென முழித்தாள்.

என்னடி இங்கேயே நிக்கற போய் மாமாவை எழுப்பி டீ கொடு என்று லட்சுமி மறுபடியும் சொன்னாள்.

உடனே ரேகா தயக்கத்தோடு சென்றால் . என்ன அம்மா இன்னிக்கி மாமானு கூப்பிட சொல்றாங்களே அவரை இதுவரைக்கும் அப்படி சொன்னதே இல்லையே என்று யோசித்துக்கொண்டே சங்கரின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
அப்போது சங்கர் நன்றாக தூங்கிக்கொண்டிரந்தான்.

ரேகா அவனருகில் சென்று நின்றபடி மாமா என்று குரல் கொடுத்தாள். கூச்சத்தோடு

மாமா என்ற குரல் கேட்டதும் எழுந்து ரேகாவை பார்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான் சங்கர்.
யார் நம்மை மாமா என்று கூப்பிட்டாங்க என்று.

இந்த டீ குடிங்க மாமா என்று சொல்லிக்கொண்டு டம்பளரை நீட்டினாள் ரேகா.

ரேகா மாமா என்று கூப்பிட்டது சங்கருக்கு சந்தோஷமாக இருந்தாலும் . சற்று பயமாக இருந்தது இந்த வார்த்தை அப்பா காதில் விழுந்தால் என்ன நினைப்பார் என்று நினைத்து பயந்தால் சங்கர்.

ஏ புள்ள ..என்ன புதுசா மாமா என்று முறை வச்சு கூப்பிடுற என்றான் சங்கர்.

ரேகாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை .அம்மா தான் அப்படி கூப்பிட சொன்னாங்க என்று சொல்லலாமா என்று நினைத்தாள் பிறகு அவளுக்கு பயமாக இருந்தது இதில் நம்மை தவறாக புரிந்து கொள்வாரா என்று நினைத்து பயந்தால் ரேகா .
முதல்ல டீ குடிங்க என்று சொல்லிவிட்டு குழப்பத்தோடு சங்கரை பார்த்தபடியே கூச்சத்தோடு வெளியே வந்தாள் ரேகா

அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த முத்தையா ரேகாவை பார்த்து ...மாமாவுக்கு டீ கொடுத்துட்டியமா என்று கேட்டார்

அப்போதுதான் ரேகாவுக்கு முகம் மலர்ந்தது உடனே சந்தோஷமாக கொடுத்துவிட்டேன் தாத்தா மாமாவுக்கு என்று சொல்லிவிட்டு வேகமாக தனது வீட்டுக்கு சந்தோசமாக துள்ளி குதித்தபடி ஓடினாள்.


டீ யில் இருந்த இனிப்பை விட முத்தையா சொன்ன வார்த்தை சங்கருக்கு இனிப்பாய் இனித்தது.

என்ன இன்னைக்கு காலையிலேயே நமக்கு இவ்வளவு சந்தோஷம் .
நம்ம ஆளு ரேகாவும் நம்மை மாமான்னு கூப்பிடுறா அப்பாவும் அவளிடம் மாமான்னு கூப்பிட சொல்றாரு . இதில் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது போல தெரிகிறதே . என்று சங்கர் எதுவுமே தெரியாதவன் போல எழுந்து வெளியே வந்தான்.


அந்த சின்ன வீட்டில் ரேகா ..இங்கும் அங்குமாக நடந்து கொண்டே இருந்தால் சந்தோசத்தில் உரிமையோடு மாமா என்று கூப்பிட சொல்கிறாரே தாத்தா என்று நினைத்து சந்தோசத்தில் அவளால் ஒரே இடத்தில் நிற்க முடியாமல் நடந்து கொண்டே இருந்தாள்
இதை கவனித்த லட்சுமி அம்மாள் புரிந்துகொண்டால்.

பிறகு ரேகா குளித்து முடித்தவுடன் வழக்கம்போல பாவாடை தாவணியை தேடினால் . அப்போது லட்சுமி புது புடவையை எடுத்துக் கொடுத்து கட்டிக்க சொன்னாள் ரேகாவும் புடவையைக் கட்டிக்கொண்டு தேவதை போல் இருந்தாள் . முத்தையா கொடுத்த பூவை ரேகாவின் தலையில் வைத்து லட்சுமி ரேகாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.

இனிமேல் பாவாடை தாவணி எல்லாம் கட்டாதே புடவைதான் நீ கட்ட வேண்டும் என்றால் லட்சுமி.

எதுக்குமா புடவை மட்டும் கட்டணம்.

ஆமாம் ..இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு கல்யாணம் ஆகப்போகுது அதனாலதான் சொல்றேன் என்று சந்தோஷமாக சொன்னால் லட்சுமி.

என்னம்மா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என்று சற்று பதட்டத்தோடு கேட்டாள் ரேகா.

ஆமாம் உனக்கும் என் தம்பி சங்கருக்கும் நாங்கள் திருமணம் செய்யறதா முடிவு செஞ்சு இருக்கும் நானும் தாத்தாவும் இதைப்பற்றி தான் காலையில முடிவு செஞ்சோம் என்று புன்னகையோடு சொன்னால் லட்சுமி.

இதைக்கேட்ட ரேகாவுக்கு சந்தோஷததில் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் அம்மாவை கட்டி அணத்துக் கொண்டாள்.

சங்கர் வாசலில் நின்றுகொண்டு ரேகா வருவாளா என்று வழக்கமான எதிர்பார்ப்போடு நின்றிருந்தான் இதை முத்தையா கவனித்திருந்தார்.

மெதுவாக சங்கரை முத்தையா அழைத்தார் ....சங்கரும் முத்தையாவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ரேகாவின் வீட்டையே பார்த்தபடி சொல்லுங்கப்பா என்று சொன்னான்.

என்னும் கொஞ்ச நாள்ல உனக்கு திருமணம் செய்யறதா நான் முடிவு பண்ணிட்டேன் என்று முத்தையா சொன்னார்.

சங்கர் உடனே தனது பார்வையை முத்தையா பக்கம் திருப்பினான் என்னப்பா சொல்றீங்க எதுக்கு இப்போ உங்களுக்கு என்னோட கல்யாணத்துல இந்த அவசரம் என்றான் சங்கர்.

எனக்கும் வயசாகிவிட்டது . இன்னும் எவ்வளவு நாள் தான் உனக்கு திருமணம் செய்யாமல் இருப்பது . அதனால்தான் உடனே இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேன் என்று முத்தையா சொன்னார்.

சங்கருக்கு சற்று வருத்தமாக இருந்தது இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தாள் அப்பாவிடம் ரேகாவை பற்றி சொல்லி இருக்கலமே என்று நினைத்து வருத்தப் பட்டான். இப்போது எப்படி அப்பாவுக்கு புரியவைப்பது என்று தயங்கினான் சங்கர்.


உனக்கும் நம்ம ரேகாவுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று நானும் லடசுமியும் இன்று முடிவு செய்து விட்டோம் . அதனால நீ இனிமேல் ஒரு குடும்பஸ்தான நடந்துக்க . இதுக்கு முன்னாடி பொறுப்பில்லாமல் இருந்ததுபோல இனிமேல் இருக்காத .
இந்த கல்யாணத்துக்கு உனக்கு சம்மதம் தானே என்று கேட்டார் முத்தையா.

அப்போது சங்கருக்கு எல்லை இல்லா ஆனந்தம் ஏற்பட்டது அப்போது முத்தையாவின் பாதத்தை இரண்டு கையால் பிடித்து இதமாக அழுத்தினான்.

நம்ம குடும்பத்து மேல ரொம்ப பாசமா இருக்காங்க இந்த லட்சுமியும் ரேகாவும் அதுக்கு கைமாறு நீ ரேகாவை திருமணம் செய்துகொண்டு . இந்த இரண்டு குடும்பத்தையும் ஒரே குடும்பமாக மாற்ற வேண்டும் அப்போதுதான் அவர்கள் நம்மிது காட்டிய பாசத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கும் அதனால் தான் உன்னிடம் சம்மதம் கேட்காமலே நான் இந்த முடிவை செய்துவிட்டேன் இதில் உனக்கு எந்த வருத்தமும் இல்லையே என்றார் முத்தையா.

இதைப்பற்றி நானே உங்களிடம் பேசலாம் என்று இருந்தேன் அப்பா ஆனால் நீங்களே இந்த முடிவு செய்தது எனக்கு சந்தோஷம்தான் என்று ஒரே வார்த்தையில் சொன்னான் சங்கர்.

அப்போது ரேகா புடவை கட்டிக்கொண்டு தலைநறைய பூ வைத்துக்கொண்டு வாசலில் வந்து நின்றாள் . அவளை சங்கரும் முத்தையாவும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் . இவ்வளவு நாளாக பாவாடை தாவணியில் இருந்தவள் . இப்போது புடவையில் தேவதை போல இருப்பதை பார்த்து அசந்து போனார்கள் முத்தையாவும் சங்கரும்.


பண்ணையார் வீட்டிலும் .
முத்தையா வீட்டிலும் திருமணக்களை ஆரம்பமாகிவிட்டது .இனி அந்த ஊர் திருவிழா போல காணப்படும் என்பதில் ஆச்சரியமில்லை.


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...9 👇


பண்ணையார் தோட்டத்தில் கனகாவும் ஊமையன் குடும்பம் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தார்கள் .
அந்த அழகு மிகுந்த விவசாய நிலங்களில் மத்தியில் அமைந்திருக்கும் பம்புசெட்டில் பறவைகள் போல இயற்கையோடு இயற்கையாக தனிமையில் கனகாவின் குடும்பம் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்

பண்ணையாரை போலவே நானும் இந்த ஊரில் பெரிய ஆளாக மாறப் போகிறேன் என்ற லட்சியத்தோடு கனகாவின் பத்து வயது மகன் படிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினான் .
காலையில் எழுந்ததும் படிப்பதற்கு முனைப்பு காட்டுவான்
இதை கவனித்த கனகாவுக்கும் ஊமையனுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது .
நிச்சயம் நம்முடைய மகன் நன்றாகப் படித்து நம்மை நல்லபடி பார்த்துக்கொள்வான் என்று கனகா நினைத்து சந்தோஷப்பட்டாள்

நம்மால் வாய்பேச முடியவில்லை என்றாலும் நமக்கு பிறந்த மகன் நன்றாக படித்து இந்த ஊரில் ஒரு பெரிய ஆளாக வருவான் என்ற நம்பிக்கை ஊமையனுக்கு ஏற்பட்டது .

இப்படி கனகா குடும்பம் ஒரு பெரிய லட்சியத்தை எதிர்நேக்கி பம்புசெட்டில் சந்தோசமாக இயற்கையோடு இயற்கையாக தனிமையில் வாழ்ந்து வருகிறார்கள்.


பண்ணையார் வீட்டில் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள் சந்திரனின் திருமணத்தை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று பண்ணையார் தனது மருமகள் சாந்தியிடம் சொன்னார்.

திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும்போது எனது நண்பன் முத்தையா வை நமது வீட்டுக்கு அழைத்து ஊர் மக்களுக்கு எப்படியெல்லாம் விருந்து உபசரிக்க வேண்டும் என்று அவனின் யோசனையைக் கேட்டு அவன் சொல்வதைப் போலவே ஊர் மக்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்று பண்ணையாரும் சாந்தியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பரந்தாமன் தனது வீட்டு 💒மொட்டை மாடியில் தனியாக நின்றுகொண்டு தம்பியின் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் .

தம்பிகளை என்ன பிரச்சனையில் சிக்க வைப்பது என்று யோசித்துப் பார்த்ததில் .அவனுக்கு எந்த ஒரு திட்டமும் எடுபடவில்லை அதனால் மிகவும் சோர்வடைந்து என்ன செய்வது என்று தலையை சொரிந்து கொண்டே இருந்தான் .

தம்பிகளை எப்படியாவது ஒரு பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும் தம்பிகள் பிரச்சனையில் சிக்கிக் கொண்டாள் திருமணம் தள்ளிப்போகும் .

இல்லையென்றால் இன்னும் சிறிது நாட்களில் தம்பிக்கு திருமணம் நடந்துவிடும் பிறகு மெல்ல மெல்ல நமது லட்சியத்திற்கு இடஞ்சலாக அவள் மனைவி இருப்பாள் என்று நினைத்து பரந்தாமன் வருத்தத்தில் இருந்தான். அப்போது என்னங்க என்று சாந்தி குரல் கொடுத்தாள் உடனே பரந்தாமன் சற்று முகத்தை சந்தோஷமாக இருப்பது போல மாற்றிக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான்.

சாந்தி பரந்தாமனிடம் புன்னகையோடு கேட்டால் ... என்னங்க கல்யாண வேலை ஆரம்பிச்சுட்டோம் இனிமேல் நிறைய வேலை உங்களுக்கு இருக்குது . இப்படி தனியா மொட்டை மாடியில என்ன பண்ணிட்டு வரீங்க என்று கேட்டாள்.

தம்பி திருமணத்தை பற்றி தான் யோசித்துக்கொண்டு இருந்தேன் இந்த முறை அவன் திருமணம் நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று சந்தோஷமாக சொல்வதைப் போல நடித்துக்கொண்டே சாந்தியை கட்டியனைத்தான் பரந்தாமன்.

சாரு ..ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல் தெரிகிறது திருமணம் உங்க தம்பிக்கு உங்களுக்கு இல்லை புதுமாப்பிள்ளை போல வந்து கட்டிப் பிடிக்கிறீங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னால் சாந்தி.

பரந்தாமன் சாந்தியின் கையில் ஒரு பெரிய நோட்டுப்புத்தகம் கையில் இருப்பதை கவனித்தான்.

என்ன காலையிலேயே நோட்டுப் புத்தகத்துடன் எங்கம்மா போற என்றான் பரந்தாமன்.

இந்த நோட்டு எங்கேயும் கொண்டு போகல உங்களுக்காகத்தான் கொண்டு வந்தேன் என்றாள் சாந்தி.

எனக்கு எதுக்கு மா நோட்டு புத்தகம்.

உடனே சாந்தி பரந்தாமனின் பிடியிலிருந்து விலகி நோட்டில் உள்ள கணக்கு வழக்குகளை காண்பித்தாள்.

உங்க அப்பா விவசாயத்தை கவனிக்கும்போது .விவசாயத்தில் வரும் லாபம் நஷ்டம் எல்லாத்தையும் இந்த நோட்டில் எழுதி வச்சி இருக்காரு .
இதை என்னிடம் காட்டி சரிபார்க்க சொல்வாரு .
ஆனால் நீங்கள் விவசாய பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரைக்கும் கணக்கு வழக்குகளை என்னிடம் சொன்னதே கிடையாது . விவசாயத்தில் லாபம் வருகிறதா அது எவ்வளவு லாபம் என்று இதுவரைக்கும் நம் குடும்பத்தில் நீங்கள் யாரிடமும் சொன்னது கிடையாது .
ஆனால் இனிமேல் அப்படி இருக்கக் கூடாது . ஏனென்றால் இன்னும் கொஞ்ச நாள்ல உங்க தம்பிக்கு திருமணம் நடக்கப் போகுது அப்போது வரவு செலவு கணக்கு உங்கள் தம்பியோட மனைவி கண்டிப்பா கேப்பா .

ஏனென்றால் நம் குடும்பத்திற்கு நிறைய நிலங்கள் இருப்பதால் அதனுடைய விவரத்தையும் கேட்பாள். அதனால் நீங்கள் இனிமேல் வரும் லாபத்தையும் நஷ்டத்தையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வச்சுக்கங்க அதுக்கப்புறம் உங்க தம்பியின் திருமணத்திற்கு . எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையும் எழுதி வச்சுக்கங்க அப்பத்தான் உங்க தம்பி மனைவி . கணக்கு கேட்கும் போது சொல்வதற்கு எளிதாக இருக்கும் . இவ்வளவு நாளா நீங்கள் எந்த கணக்கு வழக்கையும் எழுதவில்லை . ஆனால் இனிமேல் அப்படி இருக்க முடியாது .
அதுபோல இருக்கவும் கூடாது ... உங்க அப்பா எப்படி கணக்கு வழக்குகளை எழுதி வைத்துக் கொண்டு நமக்கு பதில் சொல்கிறார் . அதேபோல நீங்களும் இனிமேல் விவசாய கணக்கு வழக்குகளை எழுதி வைத்துக்கொண்டு . உங்க அப்பா போல கம்பீரமாக இருக்க வேண்டும் யார் கேள்விக்கும் பதில் தெரியாமல் முழிக்க கூடாது என்று சாந்தி பொறுமையாக பொறுப்போடு பரந்தாமனிடம் சொன்னாள் .

சாந்தியின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு லேசாக முகம் மாறியது . இவள் சொல்வதைப் போல தம்பியின் மனைவி நிச்சயம் நம்மை கேள்வி கேட்பாள் இன்று நினைத்து பரந்தாமன் வருத்தப்பட்டான்.

நீ சொல்வதைப் போலவே இனிமேல் நானும் கணக்கு வழக்குகளை நோட்டு புத்தகத்தில் எழுதி வைக்கிறேன் போதுமா என்று சாந்தியிடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றான் பரந்தாமன்

அப்போது பரந்தாமனுக்கு கோபமும் எரிச்சலும் மேலும் அதிகரித்தது என்ன செய்தாவது அடிமட்டத்தில் கூட இறங்கி கேவலமான வேலையை செய்து கூட இந்த திருமணத்தை ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து நிறுத்தி விட வேண்டும் என்று முடிவோடு இருந்தான் பரந்தாமன்.


முத்தையா சங்கரை பாசமாக அழைத்து தன்னருகில் உட்காரச் சொன்னார்.

சங்கரும் பாசமாக முத்தையாவின் பக்கத்தில் அமர்ந்து என்ன விஷயம் சொல்லுங்க அப்பா என்றான் .

உனக்கு அம்மா இல்லை என்ற குறையைத் தவிர மற்றபடி உன்னை நான் ஒரு குறை இல்லாமல் நல்லபடியாக வளர்ந்து வந்தேன் நீயும் இந்த ஊரில் என் மதிப்புக்கு ஏற்றபடி நல்லபடியாக இருக்கிறாய் ஆனால் இப்போது நான் சொல்லப் போகும் விஷயம் கடைசி வரைக்கும் மறக்காமல் நான் சொன்னதை நீ நிறைவேற்று வேண்டும் அப்போதுதான் நான் நிம்மதியாக கண்ணை மூடுவேன் என்று முத்தையா பெரிய எதிர்பார்ப்போடு சங்கரிடம் சொன்னார்.

எந்த விஷயமாக இருந்தாலும் கண்டிப்பாக உங்களுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன் அப்பா தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள் என்றான் சங்கர்.

இதுநாள் வரைக்கும் நீ உன் விருப்பப்படி விளையாடிக்கொண்டு இருந்தாய் . ஆனால் இன்னும் சில நாட்களில் உனக்கும் ரேகாவுக்கு திருமணம் நடக்கப் போகுது அதனால் நீ இனிமேல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் .

ரொம்ப கஷ்டப்பட்டு லட்சுமி ரேகாவை வளர்த்தாள் .
அவள் தம்பிக்கு பெண்ணே கொடுப்பதைவிட உனக்கு கொடுப்பதில் அவளுக்கு பெரும் சந்தோசம் என்று அவள் என்னிடம் சொன்னால் .இப்படி லட்சுமியும் ரேகாவும் நம் குடும்பத்தை நம்புகிறார்கள் . நீயும் ரேகாவை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் இந்த ஊரே பொறாமைப்படும் அளவிற்கு அவளை நீ ராணி போல பார்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் .லட்சுமியின் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பலன் இருக்கும் அதனால் இனிமேல் நீ நன்றாக உழைக்க வேண்டும் மேலும் நம் குடும்பத்தை முன்னேறுவதற்கு நீ கடுமையாக உழைக்க வேண்டும் அப்போதுதான் நீ ரேகாவை சந்தோசமாக பார்த்துக்கொள்ள முடியும் .

உனக்கு இப்போது இரண்டு குடும்பம் இருக்கிறது .
இதை மனதில் வைத்துக்கொள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று முத்தையா சொன்னார்.

ரேகா அப்பா இல்லாத பெண் அவளுடைய கஷ்டத்தை நானும் பார்த்து இருக்கேன் .
அவளை நீங்கள் சொல்வது போல ராணி போல பார்த்துக் கொள்வேன் அப்பா .
நீங்கள் என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை என்றாலும் ரேகாவை ராணி போல தான் பார்த்துக்கொள்வேன் ஏனென்றால் லட்சுமி அக்காவும் ரேகாவும் ரொம்ப கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்கள் இனிமேல் அவர்களை எந்த ஒரு கஷ்டமில்லாமல் நான் பார்த்துக் கொள்வேன் என்று சங்கர் உறுதியோடு சொன்னான் முத்தையா விடம்.


சங்கரின் பேச்சைக் கேட்டதும் முத்தையாவுக்கு சந்தோசமாக இருந்தது . நம் மகன் நம்முடைய எண்ணப்படியே இருக்கிறான் என்று நினைத்து பெருமைப்பட்டார்.


இப்படி பண்ணையார் வீட்டிலும் முத்தையா வீட்டிலும் கல்யாண வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்

தம்பியின் திருமணத்தை ஏதாவது சூழ்ச்சி செய்து நிறுத்திவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறான் பரந்தாமன்.

தந்தை சொல்லே மந்திரம் என்று நினைத்துக்கொண்டு சங்கர் பொறுப்புள்ள மனிதனாய் திருமணத்துக்காக காத்திருந்தான்


தன் மகனை நன்றாக படிக்க வைத்து பெரியாளாகி விட வேண்டும் என்ற திட்டத்தோடு காத்திருக்கிறாள் கனகா.


இந்த ஊரில் உள்ளவர்களை பயமுறுத்தி பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றுவதில் .சாட்டையடி சாமியார் அவனது சிஷ்யர்களும் முனைப்போடு இருக்கிறார்கள்.


இப்படி நான்கு விதமான திட்டங்கள் அந்த கிராமத்தில் உருவாகியுள்ளது....


தொடரும்.....
 

New Threads

Top Bottom