Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பைந்தமிழின் தீந்தமிழ்

அதன் பிறகு இரண்டு நாள் அவள் கண்ணிலே படாமல் இருக்க அவனை காணாது தவிக்க தொடங்கினாள் பைந்தமிழ்.

"அத்தை. பாலா எங்க?" என்று கேட்டாள்.

"அவனா என்னனு தெரியலைம்மா ரெண்டு நாளா ரூம்குள்ளயே அடைஞ்சிருக்கான். யார்கிட்டயும் பேசல" என்றார் கவலையாக.

நெருடலாக அவனின் அரைநோக்கி நடந்தவள் உள்ளே செல்ல தயங்கி வெளியில் நின்றாள்

கதவை தட்டியபின் எந்த பதிலும் வராததால் மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

அங்கே மெத்தையில் விழிமூடி படுத்திருந்தான் தீந்தமிழின்.

அருகில் சென்று, "பாலா" என்று மெதுவாய் அழைக்க விழிகள் திறந்து அவளை பார்த்தவன் எழுந்து அமர்ந்தான்.

"என்னாச்சி பாலா? உடம்பு சரியில்லையா?" என்று அவன் நெற்றியை தொட போக வேகமாக விலகினான்.

விலகியது அவள் வருந்த அல்ல.. அவளின் தீண்டலில் தான் கரை தான்ட கூடாது என்ற தவிப்பில். இது அறியாத பதுமை, "ஏன் பாலா நான் இங்கே இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? நான் இங்கிருந்து போகட்டுமா?" என்றது தான் தாமதம்.

"என்னை விட்டுட்டு போக போறியா? ஏற்கனவே நீ போனப்ப நடைப்பிணமா இருந்தவன் இந்த முறை பிணமாதான் போவேன்" என்று அவளின் பிடித்து வேகமாக தோளை உலுக்க.

அதிர்ச்சியாக பார்த்தாள்.

"என்ன பார்க்கிற?" என்று வேகமாக சென்று ஒரு ஆல்பத்தை மெத்தையின் மேல் வேகமாக வீசினான்.

அதில் இருந்து புகைப்படங்கள் சிதற அந்த புகைப்படங்களை கண்டவள் விழிகள் விரிந்தது.

"கேட்டல்ல என்ன என்னன்னு? பாரு. நான் யாருன்னு தெரியுதா?" என்றான் காட்டமான குரலில்.

"என்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீ ஒத்த கால்ல நின்னு அடம் பிடிச்சியே? இதோ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. சின்ன வயசுலயே? நான் பேசலைன்னு ரெண்டு நாள் சாப்பிடாம இருந்தியே... இப்போ ஞாபகம் வருதா? நீ இறந்துட்டன்னு எல்லோரும் மாத்தி மாத்தி சொல்லும் போது. இல்ல.. நான் இன்னும் இருக்கேன்னு எனக்குள்ள இருந்த நீ தான் சொன்ன. உன்னை தேடியும் வந்தேன். உன் கழுத்துல இருக்க இந்த லாக்கெட்ல இருக்க இனிஷியல் யாருது? டீ... அதாவது நான் தீந்தமிழ் பாலன்.. பி.. நீ பைந்தமிழ்... இப்பவும் புரியலையா? இது தான் நான் உனக்கு கட்டின தாலி. நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ... நீயில்லன்னா நான் இல்லை தமிழ். நீ இவ்ளோ பக்கத்துல இருந்தும் உன்னை என் மனைவின்னு சொல்ல முடியாம எவ்ளோ நரகமா இருந்துச்சுன்னு உனக்கு தெரியுமா? ஒவ்வொரு நிடோய்யும் நெருப்பு மேல நின்னுக்கிட்டு இருந்தேன்." என்று தன் காதல் கலந்த உரிமையான கோபம் முழுவதையின் இவளின் இதழினில் தன் இதழ் வழியாக கூற ஒரு நொடி திகைத்தவள் பின் மயங்கி சரிந்தாள்.

"தமிழ்" என்று பதறியவன் மெல்ல அவளை மெத்தையில் கிடத்திவிட்டு முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

கண் விழித்தவள் மெல்ல எழுந்து அமர, தான் செய்தது தவறு என்று. உணர்ந்து தலைகவிழ்ந்தான் பாலன்.

"பாலா! நீ எந்த தப்பும் பண்ணலை தலைகுனியாத. இந்த ஏழு வருஷமும் எனக்காக துடிச்சிட்டு இருந்த உயிர் நீ மட்டும் தான். நான் எப்பவுமே உன் மனைவி தான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் டைம் வேணும் எனக்கு" என்றாள் பைந்தமித்.

அவளின் முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தியவன்.

"இங்க பாரு தமிழ் நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னது தான் என்னால தாங்க முடியலை. மத்தபடி நீ எப்பவும் போலவே இரு. கொஞ்சகொஞ்சமா நம்ம காதல் வளரட்டும். சரியா?" என்றான் தீந்தமிழன்.

"சரி" என்று தலையாட்டினாள்.

அன்றிலிருந்து வார்த்தைகள் இல்லாமல் இருவர் விழிகளும் பேச ஆரம்பித்தன.

தீண்டாத தீண்டல்களும் அங்கங்கே நடைபெறும் நேரமும் உண்டு.

இரு வாரங்கள் கழிய, ஒரு காலை வேலை பைந்தமிழ் சமயலறையில் இருந்தாள். அவளின் வாசம் கொண்டு உள்நுழைந்தான் அவளின் மனம் கொண்ட கள்வன்.

"என்ன பண்ற?" என்றான் மேடையில் சாய்ந்தபடி.

"உளுந்துகளி " என்றாள் திரும்பாமல்.

சேலையை இழுத்து சொருகிக்கொண்டு நெற்றியில் இருந்து. வழியும் வியர்வையை சட்டை செய்யாமல் மத்தை கொண்டு அவள் களி கிண்டும் அழகை மனம் குளிர ரசித்தான்.

"இதை எப்படி செய்றது? எதுக்கு இது?" என்றான் தீந்தமிழின்.

"இது நம்ம முன்னோர்கள் சாப்பிட ஒரு உணவு வகை. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுப்பாங்க. ரொம்ப நல்லது. இடுப்பெலும்பு வலுப்பெரும். பிரசவ நேரத்துல உடல்வலிமை வேணும்னு பெண் குழந்தைகளுக்கும், உடல் அமைப்பு அழகா இருக்க பருவபெண்களுக்கும் கொடுப்பாங்க" என்றாள்.

"உனக்கு எப்படி தெரியும்?" என்றான்.

"எங்க இல்லத்துல மாதம் இரு முறை செஞ்சு கொடுப்பாங்க" என்றாள்.

"இப்போ எதுக்கு செய்ற?" என்றான்.

"அத்தைக்கு மூட்டு வலிக்குதுன்னு சொன்னாங்க. அதான் செய்றேன்" என்றாள்.

" உளுந்துகளி எப்படி செய்யணும்னா..

கருப்பு உளுந்து, பச்சரிசி மெஷின்ல கொடுத்து அரைச்சு வச்சுக்கனும்.

பனைவெல்லம் தேவையான அளவு எடுத்து நாலு க்ளாஸ் தண்ணி ஊத்தி ஒரு பாத்திரத்தில் சூடு பண்ணனும். வெல்லம் சேர்த்து கரைந்ததும் வடிகட்டனும்.

அடிகனமான பாத்திரத்தில் அந்த வெல்ல கரைசலை ஊற்றி கொதிக்கவிடனும். ஏலக்காய் பொடி சேர்க்கனும்.

ஐந்து கரண்டி மாவ அதில போட்டு மத்துல நல்லா இது மாதிரி கிளறனும். இடையிடையே நல்லெண்ணெய் ஊற்றி கிளறனும் மாவு நல்லா வெந்ததும் இறக்கி உருண்டை பிடித்து. நடுவில் சிறு குழி செஞ்சு ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணை ஊத்தி உருண்டை பிடிச்சு சாப்பிடனும். அவ்ளோ தான்" என்றாள் சிரித்து.

"எப்படி கிளறனும்? இப்படியா?" என்று அவளின் இடையின் வழியாக கரங்களை கொண்டு சென்று அவள் கரங்களின்மேல் தன் கரங்களை வைத்தான். அவன் தேக. தீண்டலில் அவளின் பெண்மையின் நாடி முழுவதும் நடுங்க தொடங்கியது. தன் கணவனின் மூச்சின் வெப்பகாற்று அவள் செங்கழுத்தினில் பட மேனியில் ஒரு சிலிர்ப்பு உண்டாகி அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம்.

"இப்படி செஞ்சா எல்லாம் வேஸ்ட். நீ முதல்ல வெளிய போ." என்று அவனை துரத்தினாள்.

"எத்தனை நாள் தான் தப்பிக்கிறேன்னு பார்க்கிறேன் என் பொண்டாட்டி? இனி என்னோட ரூம்ல தான் நீ தங்கபோற. அதாவது இனி நம்ம ரூம் அது. புரியுதா?" என்று தீந்தமிழ் கண்ணடித்தான்.

அவனின் வார்த்தைகளில் வெட்கம் கொண்டவள்.

"பாலா! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ இந்த, "பைந்தமிழின் தீந்தமிழ்" தான். சரியா?" என்றாள் அவன் நெற்றியோடு நெற்றி மோதி.

இதோ இவர்களின் வாழ்க்கையில் இங்கிருந்து படிப்படியாக காதல் எனும் கடலில் மூழ்கி அன்பெனும் முத்தெடுக்க முயல்கின்றனர்.

இங்கிருந்து நாமும் விடைபெறுவோம்.

உங்கள்.
தர்ஷினிசிம்பா.
 

New Threads

Top Bottom