Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மண்ணோடு முத்தங்கள்

Mathu Mithra

New member
Messages
2
Reaction score
0
Points
1
மண்ணோடு முத்தங்கள்

சில்லென்ற குளிர் காற்று பட்டவுடன்
காதலன் பொங்கி எழுந்து விட்டான்
தன் காதலியைக் காண......

வெகு நாட்கள் கழித்து தன்னவளைக்
காணப்போகும் வேகத்தில் பெரிதாய்
விரைத்துக் கொண்டு வேகமெடுத்து
தன் காதலியை நோக்கி விரைந்தான்......

வரும்போது இருந்த வேகம் ஏனோ
தன் காதலியை நெருங்கும் போது குறைந்தது
தன் வேகமும் பருமனும் சேர்த்து காதலியை
காயப்படுத்திவிடுமோ என்று நினைத்தான் அந்த மழை காதலன்
அதனால் மெல்லியதாய் மாறி தன் காதலியின்
கன்னத்தில் புதைந்தான்............

அந்த மழை ஆசை கொண்ட மண் காதலியோ
வெகு நாட்கள் கழித்து சந்திக்கும் காதலனை

அவன் மழை முத்தங்களை தன்னுள் ஆழமாக
புதைத்துக் கொண்டாள்.......

மேலும் மேலும் தன் அன்புக் கணைகளை
அந்த மழைக் காதலன் வீச......

மேலும் மேலும் தன்னுள் புதைத்துக் கொண்டாள்
அந்த மண் காதலி..........

அந்த மழைக் கள்வன் தந்த முத்தத்தில் தன்
கன்னங்களும் இதழும் ஈரமாகி நின்றாள் மண் காதலி....

அந்தக் கள்வன் ஏப்போதும் போல் இப்போதும்
விட்டுப் பிரிந்தான்......

தன் காதலன் பிரிந்த சோகத்தில் காய்ந்து போனாள்
மண் காதலி.......

மீண்டும் தன் ஆசை மழைக் காதலனை சந்திக்கும்
நொடி தெரியாமல் நின்றாள் மண் காதலி......

மதுமித்ரா.....
 

New Threads

Top Bottom