மந்திரம் 2
தீரன் , லிங்கேஷ் ஆபிஸிற்கு உள்ளே வந்ததும் பியூன் வேகமாக இவர்களை நோக்கி வந்தான்.
"சார் சார் இன்னைக்குமா லேட்! அம்மா வந்துட்டாங்க !"என்று பதட்டத்தோடு அவன் கூற தீரன் அதை கண்டு கொள்ளாமல் தன் கேபினை நோக்கி செல்ல லிங்கேஷ் பதறினான்.
"டேய் தீரா அப்பவே சொன்னேன் கேட்டீயா? பாரு இப்ப நல்லா மாட்டிகிட்டோம் பூலான் தேவி வந்துட்டா ,என்ன சொல்லப்போறாளோ?" என்று லிங்கேஷ் கூறியபடியே தீரன் பின் சென்றான்.
"மச்சி இன்னைக்கு10 மணிக்குள்ள ஆபிஸ் வந்தாச்சு அவ முன்னாடி வந்து உட்கார்ந்துட்டா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது என்று தீரன் கத்திக் கொண்டே கூற லிங்கேஷ் அலறினான்.
"டேய் சவுண்ட குறை டா அவ காதுல கேட்க போகுது" என்று லிங்கேஷ் கூற
"அவ காதுல கேட்டா எனக்கு என்ன ? அவளுக்கு கேட்கணும் தான்டா கத்தி பேசுறேன் , ராங்கி என்ன செய்றானு நானும் பார்க்கிறேன் "என்று கூறிய தீரா பின்னால் திரும்பி பார்த்த படி மேலே தொடர்ந்தான் .
அப்புறம் மச்சான் காளையில் கிளம்பும் போது பூலான் தேவினு யாரையோ சொன்னியே, யார்டா அது ? என்று தீரன் கேட்க லிங்கேஷ் அவனை புரியாமல் பார்த்தபடியே கூறினான் . நம்ம மேடத்த தான் சொன்னேன். எதுக்குடா ? இப்ப அதை கேட்குற என்று லிங்கேஷ் கேட்க
தீரன் திரும்பிப் பார்த்தபடியே “ மச்சான் வாங்குறத வாங்கிட்டு சீக்கிரம் வாடா” என்று கூறி விட்டு செல்ல
" என்னாச்சு இவனுக்கு ! எதுக்கு இப்படி பேசிட்டு போகுது இந்த பயபுள்ள !ஏதோ சரியில்லையே ! "என்று நினைத்த வண்ணம் திரும்பிய லிங்கேஷ் எதிரில் இவர்களால் அர்ச்சனை செய்யப்பட்ட கனிஷ்கா காளி ரூபத்தில் நின்று கொண்டிருந்தாள். அவளை கண்டதும் லிங்கேஷ் அரண்டு பயத்தில் அவன் தந்தியடித்தபடியே தொடர்ந்தான்.
மேம் அது வந்து என்று லிங்கேஷ் ஏதோ சொல்ல வர,
“ you idiot வந்தது லேட் இதுல அரட்டை வேறயா எங்க அவன் என்று கூறியபடியே தீரனிடம் சென்றாள் கனிஷ்கா. இவ நம்ம ஹீரோகிட்ட போறதுக்குள்ள இவளை பத்தி பார்த்துட்டு வந்துரலாம்
கனிஷ்கா :
குணசேகரன் – லட்சுமி தம்பதியரின் ஒரே மகள். அவளின் தாய் அவளின் சிறு வயதில் இறந்துவிட தந்தையினால் தனியாக வளர்க்கப்பட்டாள் . தனியாக வளர்ந்ததால் ஆளுமையோடு , கோபம், திமிர் ,கர்வம் போன்றவை அதிகம் இருக்கும் இவளிடம் . கர்வம், அறிவு , தன்னம்பிக்கை மூன்றின் மொத்த உருவமானவள் கனிஷ்கா.
(இனி லிங்கேஷ் – லிங் எனவும் , கனிஷ்கா – கனி எனவும் சுருக்கமாக அழைக்கப்படுவர் வேற ஒண்ணும் இல்லை மக்காஸ் type பண்ண முடியல )
கனி தீரனை நோக்கி செல்ல லிங் பின் தொடர்ந்தான்.
தீரா தன் கேபினில் அமர அவன் எதிரில் நின்றாள் கனி .
“டைம் என்னாச்சு மேன்” என்று கனி கேட்க
“ஹம்ம்ம் நேத்து இந்நேரம்” என்று இடக்காக பதில் சொன்னான் தீரன்.
You idiot ஆபிஸ் க்கு லேட்டா வந்துட்டு திமிரா வேற பதில் சொல்றியா?
ஆபிஸ் க்கு வர நேரமா மேன் இது ? என்று கனி கேட்க
“ஏன் 10 மணி நல்ல நேரம் தான. நான் என்ன பொண்ணா பார்க்க வந்துருக்கேன் நேரம் பார்த்து வரதுக்கு . வேளை பார்த்துட்டு இருக்கேன் disturb பண்ணாம போறியா” என்று தீரன் பதில் சொல்ல
"Just Shut up man! இங்க நான் எம் . டி யா இல்ல நீ எம் .டி யா திமிரா பதில் சொல்ற என்று அவள் தீரனை கேட்க அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை.
நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் பதில் சொல்லு மேன் " .
"ம்ச்ச் நீ தான் எம். டி !நானா எம் டி னு சொன்னேன்.அதான் லேட் ஆகிருச்சுல்ல விடேன் .சும்மா நொய்யு நொய்யுனு மனுசனை வேளை செய்ய விடாம torture பண்ணிகிட்டு" என்று தீரன் கடுப்புடன் கூற
கனிக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.
என்ன திமிரா ? என்னை எதுத்தா பேசுற இனி உன்னை வேளையில் வச்சுக்க முடியாது என் ருமிற்கு வந்து உன் resignation letter வாங்கிக்கோ மேன் என்று கோபமாக அவள் கூற ,
என்னை வேளையில் சேர்த்தது குணசேகரன் சார்.அவர் வந்து சொல்லட்டும் நான் கிளம்புறேன் . நான் ஒண்ணும் உன் புருசன் இல்லை நீ கூப்பிட்டவுடன் உன் பின்னாடி வரதுக்கு . பைக் ஒட்டிட்டு வந்தது களைப்பா இருக்கு அதனால எனக்கு பதில் என் செல்லம் வரும்.
போடா லிங் மேம் கிட்ட வாங்குறத வாங்கிட்டு வந்து சேரு என்று தீரன் சொல்ல கனி லிங்கை முறைத்தாள் . லிங் இவர்களிடம் மாட்டிக்கொண்டு விழித்தான். அவளை சமாதனப் படுத்தும் நோக்கில் லிங் பேசினான்.
மேம் நான் வேணா உங்க ருமிற்க்கு வரவா என்று அவன் கேட்க
“You Just shut up and get last man” என்று கோபத்தில் கத்திவிட்டு அவள் செல்ல லிங் தீரனிடம் வந்தான் .
ஏன் மச்சான் இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கத்திட்டு போறா உனக்கு பதில் நான் வந்து லெட்டரை வாங்கிறேன்னு தானடா சொன்னேன் அதுக்கு எதுக்கு கத்திட்டு போறா .
இவ என்ன ஒண்ணு shutup னு சொல்றா இல்லை get last னு சொல்றா .வேற வார்த்தை இவளுக்கு தெரியாதோ என்று அதி முக்கியமான சந்தேகத்தை லிங் தீரனிடம் கேட்டான்.
மச்சி நீ இவ்வளவு தெளிவா அப்ப நீ சொல்லலடா அவ ருமிற்கு நீ வரென்னு சொன்னா தீட்டாம கொஞ்சுவாங்களா என்று தீரன் விவரிக்க லிங் பதறினான். அய்யோ சொதப்பிட்டேனா.
அய்யோ கடவுளே இவங்க ரெண்டு பேர்க்கு நடுவுல மாட்டிக்கிட்டு நான் முழிக்கிறேன்.என்னை காப்பாத்து ஆண்டவா என்று கடவுளுக்கு அவசரமாக ஒரு கோரிக்கை வைத்தான் லிங்.
கோபமாக ரூமிற்குள் சென்ற கனி மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். “ராஸ்கல் என்ன பேச்சு பேசுறான் , எல்லாம் அப்பா கொடுக்கிற இடம், அவர் வரட்டும் இவனை ஒரு வழி பண்றேன்” என்று கனி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஏன் தீரனுக்கு குணசேகரன் சார் இவ்வளவு support பண்றார் ?ஏன் பையன் இவ்வளவு துள்ளுறான் ? வாங்க பார்க்கலாம்.
குணசேகரன் – காந்தர்வன் சிறு வயது தோழர்கள் . குணசேகரன் சென்னையில் வந்து தொழில் தொடங்கியதில் இருந்து அவரின் வளர்ச்சிக்கு , அவரின் இந்த செல்வ நிலைக்கு காந்தர்வன் பங்கு மிகவும் பெரிது. ஆகையால் குணசேகரன் அவரின் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளார். தன் மகனை சென்னைக்கு அனுப்பி வைத்து தீரனை பார்த்துக்கொள்ளுமாறு காந்தர்வன் கேட்டுக் கொண்டதன்படி குணசேகரன் அவனை வேளைக்கு அமர்த்தியுள்ளார்.
குணசேகரனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை தன் மகனை எந்த காரணம் கொண்டும் கிராமத்திற்கு அனுப்பக்கூடாது எனவும் , கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் காந்தர்வன் அவரிடம் கேட்டுக் கொண்டது மட்டும் ஏன் என்று அவர்க்கு புரியவில்லை ஆயினும் தன் நண்பன் காரணமின்றி எதுவும் செய்ய மாட்டான் என்று கருதி இன்று வரை அவர் சொல்லியபடி தீரனை பார்த்து வருகிறார் குணசேகரன்.
காலத்தின் கணக்குதனை மனிதன் மாற்ற முயல்கிறான்.
விதியை மனிதனின் மதி வெல்லுமா ?
இருள் தன் சதியை தொடருமா ?
பதில் பின் வரும் அத்தியாயத்தில் .......
வியூகம் தொடரும்