Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 10
குகை முழுவதும் இருட்டில் மூழ்கி இருக்க நடுவில் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க ,நட்சத்திர அமைப்பு கொண்ட வடிவம் வரையப்பட்டு அதன் மத்தியில் உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டு அதன் அருகில் எழும்பு கூட்டின் தலை வைக்கப்பட்டிருந்தது . நட்சத்திர அமைப்பின் மத்தியில் யாகம் வளர்க்கப்பட்டு அதில் தீ எரிந்து கொண்டிருக்க , யாகத்தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான் ஒருவன் .. அவன் கருப்பு உடை அணிந்து மண்டை ஓட்டினால் செய்த மாலையை கழுத்தில் அணிந்து நெற்றியில் சிவப்பு நிற குங்குமம் பெரிதாக வைத்து மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தான் அவன் கலிங்கா .
ஓம் ! கிளிம் ! கிளிம் ! சாமுண்டாய நமக ! என்று கைகளில் ஒன்றினை வைத்து மந்திரத்தை உச்சரித்து தீக்குள் அவன் இட
கரும்புகை ஒன்று உருவாகி அவன் பக்கத்தில் சென்று பருந்து உருவம் பெற்று அமர்ந்தது .
கலிங்கா தன் கையை கிழித்து இரத்தத் துளிகளை பொம்மையின் நெற்றியில் இட்டவன் அருகில் 9 குடுவைகளில் வைக்கப்பட்ட இரத்ததினால் பொம்மையின் பாதங்களை கழுவி குடுவையை எடுத்து காளி ரூபத்தில் நின்று கொண்டிருந்த சிலையின் மத்தியில் வைத்தான். கலிங்கா
அவன் இங்கு ஒவ்வொன்றாக செய்ய பருந்து மனிதனாக உருமாறிக் கொண்டே வந்தது. முழு உருவம் பெறும் தருணத்தில் மீண்டும் தன் பழைய உருவத்தை அடைந்தது பருந்து .
“ கலிங்கா ! என்னை வெளியில் கொண்டு வா ! எனக்கு உருவம் கொடு ! என்று அது சொல்ல
“ குருவே ! நீங்க சொன்ன அனைத்தும் செஞ்சுட்டேன் . நவ கன்னிகளை பலி கொடுத்து அவங்க இரத்த துளிகளால் அபிஷேகமும் பண்ணியாச்சு ஆனாலும் வடிவம் கிடைக்கல வேற நான் என்ன செய்யனும் குருவே “ என்று அவன் பருந்திடம் கேட்க
இன்னும் ஒருவரின் இரத்த துளிகள் தேவைப்படுது கலிங்கா என்று அது கூற
அது யார் குரு ? –கலிங்கா
பருந்து அந்த பெயரை உச்சரித்துவிட்டுப் பறந்து சென்றது.
****************************************************************************************************************
கனிஷ்கா தன் தந்தையின் முன் நின்று கத்திக் கொண்டிருந்தாள்.
“ அப்பா! தீரனுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்குறீங்க .அதனால அவன் என்னை மதிக்கக் கூட மாட்டிங்கிறான் . என்று அவள் அவனை பத்தி புகார் வாசிக்க
“ விடுமா ! அந்த புள்ள பயப்படாம எதையும் நேருக்கு நேரா கேட்குற னால உனக்கு அப்படி மதிக்காத மாதிரி தெரியுதுமா , ரொம்ப தங்கமான புள்ளமா ! – குணசேகரன்
தங்கமான புள்ளயா ?யாரு அவனா ? அப்பா லேட்டா ஆபிஸ்க்கு வரது,ஏன்னு கேட்டா திமிரா பதில் சொல்றது , வேலை பெண்டிங் ,ஒரு வேலையும் ஒழுங்கா செய்றது இல்லை, நினைச்ச நேரம் டீ குடிக்குறது என்று அவள் அடுக்கிக் கொண்டே போக
“ அம்மா கனி ! போதுமா! இது எல்லாம் எனக்கு முன்னமே தெரியும் . அவன் என்கிட்ட சொல்லிட்டு தான்மா போனான் .வேலை பெண்டிங் பத்தியும் என்கிட்ட காரணம் சொல்லிட்டான் மா ! – குணசேகரன்
எல்லாத்தையும் உங்ககிட்டயே சொல்லிட்டா அப்புறம் நான் எதுக்கு இருக்கேன் – கனி
கனி !அவன் தன்மானம் அதிகமுள்ளவன் ! நீ எடுத்தெரிஞ்சு பேசுவ அதான் அவன் உன்கிட்ட பாய்றான். நீ கொஞ்சம் அன்பா சொல்லுமா? கேட்டுக்குவான் – குணசேகரன்
இப்டி வந்து உங்ககிட்ட புகார் சொன்னானா அவன்? – கனி
உன்னபத்தி அவன் சொல்லி தான் தெரியணும் இல்லைமா ? எனக்கு தெரியாதா என் பொண்ண பத்தி , அதுமட்டும் இல்லைமா !அவன் வேலை செஞ்சுதான் சாப்டணும்னு இல்லை . அவங்க வசதியான குடும்பம் . சொத்து நிறையா இருக்கு . அவன் அப்பா ஏதோ காரணமா அவனை இங்க அனுப்பி வச்சுருக்காரு ! கொஞ்ச நாள் தான்மா ! கொஞ்சம் பொறுத்துக்கோ என்று அவர் சொல்ல
என்னவோ பண்ணுங்க என்று அவரிடம் சொல்லிவிட்டு அவள் செல்ல முயல குணசேகரன் அவளை தடுத்து நிறுத்தினார் .
கனிம்மா ! ஒரு 2,3 நாள் நாம நம்ம கிராமத்திற்கு போயிட்டு வரலாம்மா !என்று அவர் கூற மறுத்து பேச வந்தவளை குணசேகரன் தடுத்தார்.
ஆபிஸ் பொறுப்பெல்லாம் என் பிரண்ட் கங்காதரன்கிட்ட ஒப்படைச்சுட்டேன் அவன் பார்த்துக்குவான் .நீ எதுவும் பேசாம என் கூட வந்தா மட்டும் போதும் என்று சொல்லிவிட்டு அவர் செல்ல கனி கடுப்புடன் நின்றாள்.
*******************************************************************************************************
வடுகப்பட்டி மக்களில் கிணற்றில் விழுந்து இறந்து போனவங்க பெயர் பட்டியலையும் , மரத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம் குழம்பி நின்றார்.
அவர் குழப்பமாக இருப்பதை பார்த்த இனியன் அவர் அருகில் வந்து
“ என்னாச்சு ஆறுமுகம் ? ஏன் குழப்பமா இருக்கீங்க” – இனியன்
“ சார் ! மரத்தில் இருந்த பெயர்கள் இறந்து போனவங்க பெயரோட பொருந்த மாட்டிங்கிது . இப்ப என்ன பண்ண ? – ஆறுமுகம்
ஏன் ?என்னாச்சு ? – இனியன்
சார் மரத்தில் உள்ள பெயர்கள் எல்லாம் ஏதோ புராணகால பெயர்களா இருக்கு . நாம வச்சிருக்குற பெயர் பட்டியலோட அது பொருந்தவில்லை சார் – ஆறுமுகம்
ஓ ! இங்க குடுங்க நான் பார்க்குறேன் என்று கூறியவன் அதை வாங்கி பார்த்து சற்று நேரம் யோசித்தவன் ஆறுமுகம் இதில் பாதி பெயரை மட்டும் எடுத்து ஒப்பிட்டு பாருங்க என்று இனியன் கூற
புரியலை சார்! என்று கூறி தலையை சொறிந்தார் அவர்
அவர் அப்படி கூறியதும் இனியன் அவருக்கு பொறுமையாக விளக்கினான்
இதில் யாழ்வதனினு இருந்தா ஒன்று யாழ் இல்லை வதனின்ற பெயர் இருக்கானு பாருங்க என்று அவன் கூற ஆறுமுகம் அதன்படி ஆராய்ந்து சற்று நேரத்தில் வந்தார்
சார் ! நீங்க சொன்னமாதிரி பார்த்தா எல்லாம் பெயரும் இருக்கு சார்! – ஆறுமுகம்
மரத்தில பொறிக்கப்பட்டிருந்த பெயர்கள்ல இருக்குறவங்க எல்லாரும் இறந்துட்டாங்களா? இல்லை யாரும் உயிரோடு இருக்காங்களா? – இனியன்
இல்லை சார் ! இன்னும் இரண்டு பேர் உயிரோடு இருக்காங்க - ஆறுமுகம்
யார் அவங்க ஆறுமுகம்? என்று இனியன் கேட்க
“தேன்குழலாள் , லவலிங்கேஷ்” என்று ஆறுமுகம் அந்த இரு பெயர்களை சொல்ல அதை கேட்டதும் இனியன் யோசனையில் ஆழ்ந்தான்.
“ எல்லாம் பொண்ணுங்க பெயரா இருக்கு. இதில் ஒன்று மட்டும் ஆணின் பெயர் வருது ? என்ன காரணமா இருக்கும் ? அவன் இப்போ எங்கே ? "என்று இனியன் பல கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டான்.

“ மறைத்து வைத்த பொருள் ஒன்று புதைந்து இங்கு கிடக்குதோ ! கொல்லும் தீயை அணைக்கும் யுக்தியை அது அடையப் பெற்றதோ!

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 11

அன்று கல்லூரி முடிந்து பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தார்கள் குழலும் ,ரூபாவும் .அப்போது யாரோ தன்னை அழைக்கவும் திரும்பி பார்த்தாள் குழல் . அங்கு தேவ இனியன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.




யார் ? இவன் ? நம்ம பின்னாடி சுத்துற ஆள்ஆ இருக்குமோ ? என்று அவள் சிந்தித்துக் கொண்டிருக்க ரூபா குழல் அருகில் வந்தாள்.



யாரடி இவர் ? பார்க்க ஹீரோ மாறி இருக்கார் . உன் பின்னாடி சுத்த அடுத்த ஆள் ரெடியாகிட்டார் போல .ஆள் வரத பார்த்தா இன்னைக்கு உன் கிட்ட லவ்வ புரோபோஸ் பண்ணாம போக மாட்டார் போல என்று ரூபா குழல் காதை கடிக்க



இனியனின் போதாத காலம் அவன் காக்கி உடையில் வராமல் போனது .



அவன் குழலிடம் நெருங்கி உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்று சொன்னதுதான் தாமதம் குழல் பொறிய ஆரம்பித்திவிட்டாள்.



“ என்ன லவ்வா ? இப்படி பின்னாடி சுத்துறதுக்கு பதில் உருப்படியான வேலை ஏதாவது பார்க்கலாம்ல .என்று குழல் பேசிக் கொண்டே போக

இனியன் இடையில் புகுந்து ஏதோ சொல்ல வர குழல் அவனை பேச விடவில்லை.




“ பார்த்தா பெரிய வீட்டுப் பிள்ளை மாறி இருக்க பொண்ணுங்க பின்னாடி இப்டி பொறுக்கி மாதிரி வர என்று அவள் கத்தத் தொடங்க



போதும் நிறுத்துறீயா ! என்று இனியன் கத்திய கத்தலில் அரண்டு போய் நின்றாள் குழல் .



'விட்டா பேசிட்டே போற .! நான் தேவ இனியன் உங்க ஊருக்கு புதுசா வந்து இருக்குற இண்ஸ்பெக்டர் . எனக்கு உன் பின்னாடி சுத்துற அளவுக்கு நேரமும் இல்லை அதைவிட முக்கியம் நான் உன் பின்னாடி வர அளவுக்கு நீ அழகியும் இல்லை .புரிந்ததா . சுமாரா இருந்திட்டு அழகி ரேஞ்சுக்கு பில்டப் பண்ற” என்று அவன் கூற



ஓ ! அழகி இல்லைனு தெரியுதுல , அப்புறம் ஏன் சார் என் பின்னாடி வரிங்க என்று கோபத்தில் கத்தினாள் குழல் .

‘ அவளை அழகி யில்லைனு சொன்னது கடுப்பு அம்மணிக்கு ‘




நான் உன் கிட்ட கேஸ் விசயமா பேச வந்திருக்கேன் மத்தபடி நீ நினைக்கிற மாதிரியேல்லாம் கிடையாது என்று அவன் கூற



என்ன கேஸ் ? என்கிட்ட எதுக்கு பேசனும்? என்று குழல் புரியாமல் கேட்டாள்

உங்களுக்கு மதுமிதா னு யாரையாவது தெரியுமா ? என்று கேள்வி கேட்டுக் கொண்டே அவளை ஆராய்ந்தான் இனியன்.




மதுமிதா ? என்று சற்று நேரம் யோசித்தவள்.

ஆங் ! தெரியும் அவங்க என் காலெஜ் சினியர் . ஏன் ? அவங்கள பத்தி என்கிட்ட கேட்குறிங்க ? அவங்களுக்கு என்னாச்சு ? – குழல்




அவங்க இப்ப உயிரோடு இல்லை என்று இனியன் கூற அதிர்ச்சியானாள் குழல் .

என்ன சொல்றீங்க ? – குழல்




ஆமா குழல்! அவங்க கிணத்துல விழுந்து இறந்து போயிட்டாங்க . அதுமட்டுமில்லை அவங்க சாகுறதுக்கு முன்னாடி உங்க கிட்டதான் பேசியிருக்காங்க . அவங்க உங்க கிட்ட என்ன சொன்னாங்கனு கொஞ்சம் சொல்ல முடியுமா ? இந்த கேஸ்க்கு நீங்க சொல்றது கொஞ்சம் உதவியா இருக்கும் – இனியன்



குழல் சற்று நேரம் யோசித்துவிட்டு “ உன் கிட்ட நான் தனியா பேசனும்னு சொல்லி ஒரு இடத்துக்கு வர சொன்னாங்க . – குழல்



நீங்க போனிங்களா ? – இனியன்



இல்லை சார் அன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லை அதனால நான் போகல – குழல்

ஓ ! ஒ கே குழல்! நான் சொல்ற வரை அவங்க சொன்ன இடத்துக்கு நீங்க போக வேண்டாம் என்று கூறியவன் திரும்பி பார்க்காமல் ஜீப்பை நோக்கிச் சென்றான்.




அவன் செல்லும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் குழல். குழல் அவனை பார்த்துக் கொண்டிருக்க அவள் அருகில் வந்தாள் ரூபா



என்னடி! வச்ச கண் வாங்காம அப்படி பார்த்திட்டு இருக்க? என்ன லவ்வா ? என்று ரூபா கேட்க குழல் கத்த ஆரம்பித்திவிட்டாள்.



சனியனே ! எல்லாம் உன்னால் தான்டி ! இனி பேசுன பாரு !வாய மூடு! நீ சொன்னத நம்பி அவரை கத்தி அசிங்கப்பட்டது தான் மிச்சம் என்று அவள் கூற ரூபா அமைதியாகிவிட்டாள்.



என்னடி அமைதியாகிட்ட ?- குழல்

நீ தான பேச வேண்டாம்னு சொன்ன என்று ரூபா பரிதாபமாக கூற

உன்னை! என்று அதற்கும் கத்தினாள் குழல்

இவர்கள் பேசிக் கொண்டே செல்ல கிளி ஒன்று மரத்தில் நின்று குழலைப் பார்த்து ரசித்து சிரித்தது.

*********************************************************************************************************************

சென்னையில் தன் ரூமில் தூங்கிக் கொண்டிருந்த லிங் துயிலில் இருக்கும் போது காட்சி ஒன்று படமாக அவன் கண் முன் விரிந்தது.




“ லிங்கா ! என்னை காப்பாத்துடா ! எனக்கு மூச்சு விட முடியலடா ! என்று கத்திக் கொண்டே ஒரு உருவம் நீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது.



ஒரு சிறுவன் அவரை காப்பாற்ற முயல்வதும் பின்பு அப்பா ! என்று கத்துவதும் அதனை தொடர்ந்து அந்த உருவம் நீருக்குள் மூழ்கியதும் லிங்

அப்பா! என்று அலறிக் கொண்டு எழுந்தான் லிங்

எழுந்தவன் திரும்பி மணியை பார்க்க அது 12 மணியை காட்டியது.




சிறு வயது முதல் தனக்கு தோன்றும் இது கனவா ? நனவா ? என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான் லிங்



நிஜத்தை கனவாக நினைக்கும் மானிடா !
உன்னால் மோட்சம் பெற காத்திருக்கிறாள் அவள் விரைந்து வா !
என்று குரல் கேட்க திரும்பிப் பார்த்தான் லிங் .

அங்கே ஒரு கிளி ஒன்று வீற்றிருந்தது.

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம்: 12

காலேஜ் முடிந்து வந்து கொண்டிருந்தனர் குழலும் ,ரூபாவும் . குழல் மட்டும் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் பார்ப்பதை உணர்ந்த ரூபா

“ என்ன குழல் யாரை தேடிட்டு இருக்க ? யாராவது வராங்களா என்ன ? '' என்று ரூபா அவள் பார்த்த திசையில் பார்த்துக் கொண்டே கேட்க

“ அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா பார்த்தேன் என்று ரூபாவிடம் பேசிக் கொண்டே சென்றவள் முன்னால் இருந்த கல்லை பார்க்காமல் நடந்து போய் அதில் இடித்துக் கொண்டாள் . இடித்ததும் அவள் காலில் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது.

“ அம்மா! ஆ! ''என்று காலை பிடித்துக் கொண்டே அங்கேயே ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட்டாள் குழல் .

“ ஹேய் பார்த்து வர மாட்டியா ? பாரு ரத்தம் வருது '' என்று ரூபா கூறிக் கொண்டே அதை பார்த்துக் கொண்டிருக்க அப்போது ஜீப்பின் ஓசை கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே இனியன் வந்து கொண்டிருந்தான் . இவர்களை பார்த்தவுடன் ஜீப்பை அருகில் நிறுத்தினான். நிறுத்துவிட்டு இறங்கியவன் ரூபாவிடம்

“ என்னாச்சு ? ஏன் இங்க நீக்குறீங்க ? “ என்று கேட்க

குழலுக்கு கோபமாக வந்தது. ஏன் என்கிட்ட கேட்க மாட்டாரோ துரை? என்று தனக்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.

“ சார் ! அவளுக்கு கால அடிபட்டு இருக்கு அதான் நிக்குறோம் '' என்று ரூபா கூற

இனியன் குழல் அருகில் வந்து அவள் காலை பிடிக்க வர குழல் தன் கால்களை எடுத்துக் கொண்டாள்

அடி எப்படி பட்டுருக்குனு பார்த்தா தான தெரியும் காலை காண்பிங்க – இனியன்

இல்லை பரவாயில்லை – குழல்

ரத்தம் அதிகமா போகுது அதுக்கு முதலுதவி பண்ணனும் கால காண்பிங்க – இனியன்

அதன்பின்னும் அவள் திமிராக நிற்க இனியன் அவள் கால்களை வலுக்கட்டாயமாக பிடித்துப் பார்த்தான்

அடி சிறுசா தான் இருக்கு ஆனா ஏன் இவ்வளவு ரத்தம் வருது ? என்று கூறியபடியே தன் கர்சிப்பை கொண்டு அவள் காலில் அடிப்பட்ட இடத்தில் கட்டிவிட்டு ரூபாவிடம் திரும்பினான்.

“ அடி லைட்டா தான் இருக்கு எதுக்கும் ஒரு டிடி போட்டுக்கோங்க . ஆமா வீடு எங்க இருக்கு ? '' என்று இனியன் ரூபாவை பார்த்து கேட்டாலும் பார்வை குழலிடம் இருந்தது.

இங்க பக்கத்தில் தான் சார் இருக்கு நடந்தே போயிருவோம் – ரூபா

எப்படி நடந்து போவீங்க ? இருங்க நான் காரில் டிராப் பண்றேன் என்று கூறியவன் ஆறுமுகத்தை அருகில் அழைத்தான் .

ஆறுமுகம் நீங்க ஆட்டோ பிடிச்சு ஸ்டேசனுக்கு போயிருங்க நான் இவங்கள வீட்ல டிராப் பண்ணிட்டு வந்துடுறேன் என்று கூறிவிட்டு ரூபாவிடம் திரும்பினான்.

ரூபா பேசுவதற்குள் குழல் பேசினாள்.

“யாருடைய கரிசனமும், தயவும் எங்களுக்கு தேவையில்லை , இங்க தான் எங்க வீடு நாங்களே போயிருவோம் " – குழல்

அவள் அப்படி கூறியதும் இனியன் அவளை ஒரு பார்வை பார்க்க அதில் குழலுக்கு பயம் பிடித்துக் கொண்டது.

ரூபாவிடம் திரும்பியவன்

அவங்கள கை பிடிச்சு கூட்டிட்டு வாங்க நான் முன்னாடி போறேன் என்று இனியன் கூற

வாடி போகலாம்! தனியா நின்னுகிட்டு இருக்கோம் அவரு உதவிய ஏத்துக்கலாம் டி என்று ரூபா கூற

அதெல்லாம் முடியாது நான் வர மாட்டேன் – குழல்

அவள் அப்படி கூறியதும் ரூபா என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.

அவள் அப்படி கூறியதும் இனியன் குழலை நோக்கி வந்து கொண்டிருந்தான்.அவன் அருகில் வர வர குழலுக்கு பயம் பிடித்துக் கொண்டது . பயத்தில் கல்லில் உட்கார்ந்திருந்தவள் வேகமாக எழுந்து நின்றாள்.

அவள் வேகமாக எழுந்ததில் அவள் தடுமாற இனியன் அவளை பிடித்து நிறுத்தினான்.

அவளை நிறுத்தியவன் அவள் கண்களை பார்த்துக் கொண்டே பேசினான்.

இப்ப நீயா வந்து ஜீப்பில் ஏறி உட்காரியா? இல்ல நான் தூக்கி உட்கார வைக்கவா ? என்று அவன் கேட்க

இனியனின் மூச்சுக்காற்று தன் கழுத்தில் பட குழலுக்கு படபடப்பு அதிகமானது. வேகமாக பேசினாள் குழல்.

“ இல்லை ! நானே வரேன்! “ என்று குழல் சொல்லிவிட்டு விந்தி நடந்தபடியே ரூபா அருகில் சென்று அவள் தோள் பட்டையை பிடித்துக் நின்று கொண்டாள்

இதை பார்த்த இனியன் சிரித்துக் கொண்டே சென்று ஜீப்பில் ஏறி அமர , ரூபாவின் உதவியோடு ஜீப்பில் அமர்ந்தாள் குழல்

வண்டியில் போகும் போது ரூபாவிடம் பேசிக் கொண்டே வந்தவன் இவள் புறம் திரும்பவே இல்லை

இவர்கள் பேச பேச இங்கு குழல் எரிச்சலில் அமர்ந்து இருந்தாள்.

ரூபா வீடு முதலில் வர அவள் இறங்கி சென்றதும் தனித்து விடப் பட்டனர் இருவரும் .

குழல் அவன் புறம் திரும்பிப் பார்க்க அவன் சாலையில் கவனத்தில் இருந்தான். அவன் பக்கவாட்டுத் தோற்றத்தை அளவிட்டபடியே குழல் வர சட்டென்று திரும்பிப் பார்த்தான் இனியன்.

அவன் குழலைப் பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கி என்ன ? என்று கேட்க அவளுக்கு மனம் அடித்துக் கொண்டது .

ஒண்ணுமில்லை என்று தலையசைத்துவிட்டு வேகமாக அவள் சாலையின் பக்கம் தன் தலையை திருப்பிக் கொண்டாள் .

இனியன் இதை கண்டு சிரித்தபடியே வண்டியை ஒட்டினான்.

என்னாச்சு உனக்கு ? எதுக்கு அவனை அப்படி பார்த்த! இனி அவன் பக்கம் திரும்பாத குழல் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் குழலை அழைத்து அவன் ஏதோ கூற குழல் அவன் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள்

இனியன் அவள் முன் கைகளை ஆட்டிக் காண்பிக்க

என்னாச்சு ? என்று ஏதோ கனவில் இருந்து விழிப்பவள் போல் விழித்தாள் குழல்

“ சரியா போச்சு போங்க ! உங்க வீடு வந்துருச்சு இறங்கலையா நீங்க ! என்று அவன் கேட்ட பிறகுதான் , தான் தன் வீட்டின் வாசலின் முன் நின்று கொண்டிருப்பதை திரும்பிப் பார்த்தாள் குழல்

சிரித்துக் கொண்டே காரில் இருந்து இறங்கி காலை விந்தியபடியே வேகமாக தன் இல்லம் நோக்கிச் குழல் செல்ல

அவள் செல்வதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த இனியன் குழல் வீட்டின் உள்ளே சென்றதும் பக்கத்தில் இருந்த டீ கடை நோக்கிச் சென்றான்..

அங்கு சென்றவன் “நாயர் ஒரு டீ” என்று கூறிவிட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் மெதுவாக பேச்சுக் கொடுத்தான்.

நாயர் ! உங்களுக்கு லிங்கேஷ் னு யாரையாவது தெரியுமா ? என்று கேட்க

டீயை அவனிடம் கொடுத்தவர்

“ எந்தே சாரே ! யார் அது ! யான் இவ்விட கடை வச்சு பல வருஷம் ஆச்சு ! இந்த பெயரை கேள்விபடலையே என்று அவர் கூற

இனியன் அதன் பின் ஒரு பெயரை கூறி தெரியுமா ? என்று கேட்க

டீ ஆத்திக் கொண்டிருந்தவர் கை சற்று நேரம் வேலை நிறுத்தம் செய்து பின்பு தொடர்ந்தது.

அவர் கூறுவதற்குள் அருகில் இருந்தவர் பேசினார்.

சார் ! ரூத்ரமூர்த்தி இங்க தான் இருந்தார் . அவருக்கு திருமணம் ஆகி கொஞ்ச நாள் நல்லா தான் இருந்தார் . அப்புறம் ஆள் எங்கேயோ போயிட்டார் .

அவர் என்ன ஆனார்னு எங்களுக்கு தெரியல . அவரை பத்தி தெரியணும்னா காந்தர்வன் சார் கிட்ட கேளுங்க, அவருக்கு நல்லா தெரியும் .

இதோ எதுத்தாப்ல இருக்கு பாருங்க அது தான் அவர் வீடு என்று அவர் குழல் வீட்டினை கைகாட்ட

ஓ ! ரொம்ப நன்றி சார் ! என்று அவர்க்கு நன்றி தெரிவித்துவிட்டு

நாயரிடம் குடித்த டீக்கு பணத்தை கொடுத்துவிட்டு இனியன் குழல் வீட்டினை நோக்கிச் சென்றான்.

*********************************************************************************

குழல் காலில் இருந்து விழுந்த இரத்தத் துளிகள் கல்லில் படிந்திருந்தது. அது சற்று நேரத்தில் கல்லால் உள்ளிழுக்கப்பட்டு மறைந்தது


ரத்த துளிகள் மாயமாக மறையும் மாயம் என்ன?
அரக்கன் அவன் ஆட்டிவிக்கும் ஆட்டம் என்ன?
எம்மான் சூத்திரவாதி என்று அவன் அறியாமல் போன மடமை என்ன?
வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம்: 13

சென்னையில் தன் ரூமில் ஆபிசிற்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் தீரன்.

குளிப்பதற்காக பாத்ரூம் சென்றவன் தண்ணீரை திறந்துவிட தண்ணீர் துளிகள் ஒன்று சேர்ந்து வாக்கியத்தை அமைத்தது.

“ தீரா உன் இல்லம் விரைந்து செல் . உன் கேள்விக்கான விடை கிடைக்கும்’’ என்று எழுதி மறைந்தது. இதை நினைத்துக் கொண்டே ஆபிசிற்கு தயாரானான் தீரன்.

************************************************************************************************************

காந்தர்வன் அன்று வீட்டில் ஓய்வாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க இனியன் உள்ளே நுழைந்தான்.

அவனை பார்த்த குழலுக்கு மகிழ்ச்சி பெருகியது

அவனை காந்தர்வன் புதிராக பார்த்துக் கொண்டிருக்க இனியன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

சார்! நான் தேவ இனியன் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கும் போலிஸ் ஆபிசர் . உங்க கிட்ட கேஸ் விசயமா பேச வந்திருக்கேன். என்று அவன் கூற

ஓ! வாங்க தம்பி உட்காருங்க ! தம்பி என்ன சாப்டுறீங்க ? காபியா ? டீயா? – காந்தர்வன்

எதுவும் வேண்டாம் சார் ! – இனியன்

முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க எதாவது சாப்பிட்டு தான் போகணும் . அம்மா குழல் சார்க்கு டீ போட்டு கொண்டு வாமா ! என்று அவர் கூற

இதோ பா ! என்று கூறிவிட்டு சமையறைக்குள் நுழைந்தாள் குழல்.

அப்புறம் தம்பி ஏதோ கேஸ்னு சொன்னீங்க ? என்ன கேஸ் ? என்று காந்தர்வன் கேட்க

உங்க ஊரில் இருக்கும் கிணற்றில் பல பேர் விழுந்து இறந்து போயிருக்காங்க அது விசயமா பேச வந்துருக்கேன் சார் – இனியன்

கிணறு என்றதும் அவர் முகம் மாறியது.

அவர் முக மாறுதலை கவனித்துக் கொண்டிருந்தான் இனியன்.

காந்தர்வன் தன் முகத்தை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தார்

ஓ! அப்படியா தம்பி ! அதுக்கு எதுக்கு என்னை பார்க்க வந்து இருக்கீங்க – காந்தர்வன்

உங்க தம்பி ரூத்ரமூர்த்தி பற்றி தெரியணும் . அவர் என்ன ஆனார்?எங்கே இருக்காருனு சொல்ல முடியுமா ? – இனியன்

ரூத்ரமூர்த்தி என்றதும் அமைதியாக இருந்தார் அவர்.

அவர்க்கும் இந்த கேஸ்க்கும் ஏதோ லிங்க் இருக்கும்னு சந்தேகப்படுறேன். கொஞ்சம் அவரை பற்றி சொல்ல முடியுமா சார் ? - இனியன்

காந்தர்வன் சற்று நேரம் மொனம் சாதித்தார் .பின்பு தன்னை திடப்படுத்திக் கொண்டே பேச ஆரம்பித்தார்..

என் தம்பி ரூத்ரமூர்த்தி நல்ல படிப்பான் சார் ! அதனால அவன சென்னையில் இருக்குற காலேஜில் சேர்த்து படிக்க வச்சேன் . ரொம்ப அடக்கம் , அமைதி சார் . தானுண்டு தன் வேலையுண்டுனு இருப்பான் சார் ..லீவுக்கு வீட்டிற்கு வரும் போது எனக்கு ஒத்தாசையா கணக்கு வழக்குகளை பார்த்துக்குவான் . நல்லாத் தான் போயிட்டு இருந்தது .

தீடீர்னு பார்த்தா அவன் போக்குல சில மாற்றம் தெரிஞ்சுச்சு . அவன் யார்கிட்டையும் பேசாம விட்டத்தை பார்த்து உட்கார்ந்தே இருந்தான்.நானும் கொஞ்ச நாள் விட்டுப் பிடிக்கலாம்னு பேசாமல் இருந்தேன் .

கொஞ்ச நாள் சென்று பார்த்தா அவனாகவே சரியாகி எல்லார்கிட்டயும் பேச ஆரம்பிச்சுட்டான் . சரி தம்பி நல்லாகிட்டானு அவனுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் முடிச்சு வச்சேன் .

செல்வி கூட நல்லா தான் இருந்தான் . அவள் திருமணம் ஆன அடுத்த மாதமே கர்ப்பம் ஆனாள். அவள் உண்டா இருக்கானு சந்தோசமா தான் சார் இருந்தான். அவனுக்கு மகன் கூட பிறந்தான் .இப்படி நாட்கள் நல்லா போயிட்டு இருக்கும் போது மகனுக்கு ஒரு வயசு ஆகும் போது திடீர்னு யார்கிட்டையும் சொல்லாமல் எங்கேயோ போயிட்டான் . அவனை தேடி அலைஞ்சு கிடைக்காம நானும் வீட்டுக்கு வந்துட்டேன்.

செல்வியும் கொஞ்ச நாள் ஒரு மாதிரி இருந்தா அப்புறம் அவளும் தன் மனச தேற்றிகிட்டு மகனுக்கு என்று வாழ்ந்துகிட்டு இருக்கும் போது அவளும் ஒரு நாள் காணாமப் போயிட்டா .அவள் எங்கே போனா ?உயிறோட இருக்காளா? அவளுக்கு என்ன ஆச்சுனு? எனக்கு தெரியல தம்பி

அப்புறம் நான் தான் லிங்கேஷமூர்த்திய பார்த்துட்டு இருந்தேன் என்று அவர் கூற இனியன் அவர் பேச்சில் இடையிட்டான்.

“ என்ன பேர் சொன்னீங்க சார் ! ‘’என்று அவன் கேட்க அவர் லிங்கேஷமூர்த்தி என்று கூறியதும் இனியன் யோசனை ஆனான்.

அப்புறம் ரூத்ரன் சார் வரவேயில்லையா ? இப்ப அந்த லிங்கேஷமூர்த்தி எங்க இருக்கார் சார் ? – இனியன்

ரூத்ரன் வந்தான் சார்! ஆனா ஏதோ துறவி போல . வந்தவன் என் பையன கூட்டிட்டு போறேன்னு கூட்டிட்டு போயிட்டான் . அடுத்து அவங்களுக்கு என்னாச்சுனு தெரியல சார் என்று கூறி முடித்த காந்தர்வன் வருத்தமாக அமர்ந்து இருக்க

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்த இனியன் அவர் வருத்தப்படுவதைப் பார்த்து

சாரி சார் ! நான் வரேன் என்று கூறிவிட்டு அவன் செல்ல முற்பட

வளைகரம் ஒன்று அவன் முன் டீயை நீட்டியது.

இனியன் சிரித்துக் கொண்டே அதை வாங்கி குடித்திவிட்டு குழலிடம் கப்பை கொடுத்துவிட்டு தலையசைக்க

குழல் அவளை அறியாமல் தலையசைத்து அவனுக்கு விடை கொடுத்தாள்.

அவன் செல்லும் வரை பார்த்திருந்து விட்டு அவள் உள்ளுக்குள் வர காந்தர்வன் தன் ரூமை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

தன் ரூமிற்குள் சென்றவர் மேலிருந்து ஒரு பெட்டியை எடுத்து அதை திறந்தவர் உள்ளிருந்து ஒரு படத்தை எடுத்தார்.

லிங்கேஷ் எங்கடா இருக்க ? என்ன செய்றீயோ ? உன்னை அவன் கூட அனுப்பி வச்சு தப்பி பண்ணிட்டேன்டா நான் ! என்று அதை வருடிக் கொண்டே பேசினார்

*******************************************************************************************************

கல்லில் படிந்த ரத்ததுளிகள் கல்லால் உள்ளிழுக்கப்பட்டு , வானத்தில் பறந்து போய் ஒரு குகைக்குள் சென்று நின்றது. அங்கே கலிங்கா தன் கைகளை காட்ட அவன் கைகளில் விழுந்தது கல். கலிங்கா அதில் உள்ள ரத்த துளிகளை உருவ பொம்மையின் நெற்றியில் இட சற்று நேரத்தில் யாக குண்டத்தில் இருந்து கரும்புகை ஒன்று உருவாகி வானளவிற்கு உயர்ந்து மனித உருவம் பெற்று நின்றது

அரக்கன் அவன் எழுந்துவிட்டான்.


இருளை வெளிச்சம் அகற்றுமா ?
தீமையை நன்மை நீக்குமா?
நடக்கவிருக்கும் கோரத்தை தடுப்பானா தீரன்?????
விடை விரைவில்

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம்: 14

ஆபிசில் தன் கேபினில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தீரன் முன் வந்து நின்றான் லிங் . அவனை நிமிர்ந்து பார்த்த தீரன் சற்று நேரம் பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான் . இதனை கண்ட லிங்

“மச்சான் உன் கூட பேசனும் .கொஞ்சம் உன் வேலைய நிப்பாட்டிட்டு என்னை கொஞ்சம் பார்க்குறீயா '' - லிங்.

பேசுறதுக்கு காது ஓபன்ல இருந்தா பத்தாது , பாக்கலாம் முடியாது. நான் பிசியா வேலை பார்க்குறேன்ல வந்த மேட்டரை சொல்லிட்டு சீக்கிரம் போடா- தீரன்

நல்ல மரியாதைடா ! என்னை சொல்லனும் !உன்ன பத்தி தெரிஞ்சே உன் கிட்ட வாய குடுக்குறேன் பாரு . சரி விசயத்திற்கு வரேன் – லிங்

நீ இன்னும் விசயத்திற்கே வரலையா ! சரியா போச்சு ! உன் முகவுரையை முடிச்சுட்டு எப்ப நீ விசயத்திற்கு வர ? நான் எப்ப அதை கேட்டு முடிக்க! நீ பேசிட்டே இரு மச்சான் ! அதுக்குள்ள நான் போய் ஒரு டீ குடிச்சுட்டு வந்துடறேன். அப்ப தான் நீ மேட்டர் சொல்லும் போது நான் வந்து கேட்க வசதியா இருக்கும் – தீரன்

டேய் ! என்ன லந்தா ?ஏன்டா நீ இப்படி இருக்க! இருடா நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்- லிங்

அப்படி வா வழிக்கு ! நீ சொல்ல வந்ததை சிறுசா சீக்கிரம் சொல்லிமுடி பார்க்கலாம் . - தீரன்

அவன் அப்படி கூறியதும் லிங் அவனை முறைத்துக் கொண்டே கேட்டான்

“ மச்சான் ஊருக்கு போறீயா?என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?”- லிங்

உன்கிட்ட இல்ல யார்கிட்டயும் சொல்லல மச்சி .ஏன் என் அப்பாக்கு கூட தெரியாது நான் ஊருக்கு வரது – தீரன்

ஓ அப்படியா ! சரி மச்சான் என்று கூறிய லிங் சற்று நேரம் கழித்து

டேய் ! தீரா – லிங்

சொல்லுடா – தீரன்

தீரா ! – லிங்

அடச்சீ சொல்லு – தீரன்

நானும் ஊருக்கு வரேன்டா – லிங்

அவன் அப்படி கூறியதும் தீரன் அவனை நிமிர்ந்து ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

என்னாச்சு தீடிர்னு ? இங்க இருக்குற உன் பிகர்களை விட்டு வர மாட்டியே நீ?

என்ன புதுசா என் கூட வரேன்னு சொல்ற . நீ அங்க வர வேண்டாம் செல்லம் . அங்க வந்தா உன் லட்சியம் எப்படி நிறைவேறும் . இங்க இருந்து உன் லட்சியத்தை நிறைவேற்றுங்க தோழரே! – தீரன்

மச்சி லட்சியத்தை அங்க வந்தும் நிறைவேற்றலாம்டா- லிங்

ஏன்டா? இங்க எவளும் உனக்கு கிடைக்கவில்லையா? .

வேண்டாம் மச்சி என் ஊருல இருக்குறது கிராமத்துப் பொண்ணுங்க. உன் ஜொள்ளு அங்க எடுபடாது .வீணா அடிபட்டு சாகாதே ! – தீரன்

“ விடு மச்சான் ! அது என் கவலை நான் பார்த்துக்குறேன் . ஜீன்ஸ் , டீ சர்ட் னு பார்த்து போரடிக்குதுடா , தாவணி பொண்ணுங்கள பார்த்து ஜொள்ளுவிட ஆசையா இருக்கு ''என்று லிங் அவன் பிடியில் உறுதியாக நிற்க

“ நீ எங்க ஊரு பொண்ணுங்க கிட்ட அடி வாங்க வேண்டும்னு விதி !அத யார் மாற்ற முடியும் ? வந்து சேரு என்று அலுத்துக் கொண்டே தன் சம்மதத்தை தெரிவித்தான் தீரன்.

அவன் அப்படி கூறியதும் லிங் அவனை கட்டிக் கொண்டான்.

“ தேங்க்ஸ் டா நண்பா ! ''என்று மகிழ்ச்சியில் லிங் கூற

“ டேய் விட்றா என்னை ! வேலைய பார்க்கணும் அப்புறம் அந்த பூலான் தேவி வந்து கத்துவா “ – தீரன்.

“ ஆமா நீ அப்படியே அவ பேச்சுக்கு பயந்து வேலை செஞ்சுடப் போற என்று லிங் அவனிடம் கூறியபடியே தன் கேபினை நோக்கிச் சென்றான்.

லிங் சென்றதும் தன் வேலையில் கவனத்தை திருப்பிய தீரன் ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தான் . அங்கு சுவரில் ஒரு படம் மாட்டப்பட்டு இருந்தது. அந்த படத்தை பார்த்த தீரன் உள் உணர்வு தோன்ற அருகில் சென்று பார்த்தான். அங்கு படத்தில் பல காட்சிகள் படமாக ஓடிக் கொண்டிருந்தது.

அவற்றை கண்டு திடுக்கிட்ட தீரன் உன்னிப்பாய் கவனிக்க அதில் ஒருவன் பின்பக்கம் திரும்பியபடியே கைகளில் வைத்திருந்த பொருள் ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டிருந்தான் .மறைத்து வைத்தவன் தன் வேலை முடிந்ததும் திரும்பிப் பார்க்க அவன் உருவத்தை பார்த்த தீரன் அதிர்ந்தான்.

அந்த உருவம் தீரனை ஒத்த உருவமாக நடை, உடை, ஆடைகளில் சில மாற்றம் பெற்று இருந்தது. அந்த உருவம் தீரனை நோக்கி வா! என்று கை காண்பிக்க வேகமாக பின்னால் நகர்ந்தான் தீரன்.

அவன் பின்னால் நகர்வதற்கும் கனி வருவதற்கும் சரியாக இருந்தது. அவளை இடித்துக் கொண்டு நின்றான் தீரன்

அவன் இடித்ததும் கனி அருகில் உள்ள சுவரில் போய் மோதினாள். அவள் நெற்றி சுவற்றில் இடித்து வலியில் அம்மா! என்று கத்திக் கொண்டே தன் நெற்றியை நீவினாள் கனி. நீவி விட்டபடியே அவனை பார்த்து கத்தினாள்.

இடியட் ! பார்த்து வரமாட்டியா ! இடிக்குறதுக்கே அலையுறான் தடிமாடு– கனி

ஹலோ ! இவ பெரிய ரதிதேவி உன்ன இடிக்குறதுக்கு அலையுறாங்க ! வாய மூடுடி குள்ளச்சி! – தீரன்

ஹேய் ! யார பார்த்து குள்ளச்சினு சொல்ற மேன்? – கனி

இங்க உன்னை தவிர வேறு யாரும் இருக்காங்களா என்ன ? உன்னை தான்டி சொன்னேன் . கண்ண முன்னாடி வச்சுட்டு வாங்க மேடம் ஜீ- தீரன்

ஏய் ! என்ன மேடம்னு கூப்பிட்டு நக்கலா பண்ற ! நீ தான்டா முன்னாடி பார்த்து வராம என் மேல மோதி நின்ன. நீ தான் பார்த்து வரனும் . இடியட்! – கனி

ஏய் ! என்ன வாய் நீளுது !நான் தான் முன்ன பார்த்து வரேன்னு தெரியுதுல, நீ ஒழுங்கா பார்த்து வர வேண்டியது தானடி என்று அவன் கத்த

யூ பிளடி ! தப்ப நீ பண்ணிட்டு என்னைய சொல்வியா என்று இவர்கள் இங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க சத்தம் கேட்டு லிங் வேகமாக இவர்கள் அருகில் வந்தான்.

என்னடா ! என்ன பிரச்சனை இரண்டு பேர்க்கும் ? ஏன்டா எப்ப பாரு அடிச்சுக்குறீங்க என்று லிங் பிரச்சனை தீர்க்க முயல

டேய் ! பார்த்து வராம என் மேல் மோதிட்டு சவுண்ட் விட்றா மச்சி – தீரன்

ஹேய் ! நீ தான் வந்து மோதின தப்பு உன் மேல தான். ஒழுங்கா ஸாரி சொல்லு மேன் – கனி

ஸாரிலாம் சொல்ல முடியாது ? என்னடி பண்ணுவ- தீரன்

கனி பேசுவதற்குள் லிங் பேசினான். சாரி மேம் ! அவனுக்கு பதில் நான் கேட்குறேன் என்று லிங் கூற

நீயா என்னை இடிச்ச !அவன் தான இடிச்சான் ,அவனை சொல்லச் சொல்லு மேன் என்று இவள் கூற

இவர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு முழித்தான் லிங்

இவங்க சண்டை இப்போதைக்கு ஓயாது. வாங்க நாம் போய் கலிங்கா என்ன செய்றான்னு பார்ப்போம்




_________________________________________________________________________________

கலிங்கா செய்த பூஜையினால் உருவம் பெற்று எழுந்து நின்றான் மாயவன். அந்த இடமே அதிர சிரித்தான்.

வந்துவிட்டேன் தீரா ! உன்னை வெல்ல மறுபடியும் உருவம் பெற்று வந்து விட்டேன் என்று அவன் கத்த அந்த ஓசை குகை முழுவதும் எதிரொலித்தது.


மூவர் கூடும் கூடம்
அதில் ராட்சஸன் அவன் ஆட்டம் தொடங்க நினைக்க வெற்றி யவர்க்கு ?
வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம்: 15

தீரனும் , லிங்கும் சேர்ந்து ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தீரன் லிங்கிடம் ஊருக்கு போறத பூலான்தேவி கிட்ட சொல்லிட்டியா மச்சான் ? அவ எப்படி உன்னை போகவிட்டா ? என்று கேள்வி கேட்க லிங் வேகமாக கூறினான்.

அதெல்லாம் அனுமதி வாங்கிட்டேன் மச்சான் என்று லிங் கூற தீரன் அவனை நம்பாத பார்வை பார்த்தான்

“ இல்லையே உன் திருட்டு முழி பார்த்தா வேறு ஏதோ எனக்கு சொல்லுதே . சொல்லுடா எப்படி லீவ் வாங்கின ''என்று தீரன் கேட்க

அது வந்து மச்சான் என்று இழுத்தான் லிங்

இப்ப சொல்றீயா இல்லை அவளுக்கே போன் பண்ணி கேட்கவா ? என்று தீரன் கேட்டுக் கொண்டே போனை தன் கையில் எடுக்க

டேய் ! டேய் ! வேண்டாம் மச்சான்! என்று அலறினான் லிங்

அப்ப ஏதோ திருட்டு வேலை பார்த்திருக்க என்று தீரன் கூற அவன் முன் மருத்துவ சான்றிதழை நீட்டினான் லிங். அதை வாங்கி பார்த்த தீரன்

அட நாயே !நீ இன்னும் பள்ளி பருவத்தில் இருந்து வெளியே வரலையா ? எனக்கு உடம்பு சரியில்லை காய்ச்சல்னு மெடிக்கல் சர்டிபிகேட் குடுத்திருக்க என்று கத்திய தீரனை எதிர் கொண்டான் லிங்

என் அறிவுக்கு தகுந்த மாதிரி தானடா நான் யோசிக்க முடியும் . எப்படியோ லீவ் கிடைச்சதா இல்லையா ? அதற்காகவாவது இந்த ஐயாவை நீ பாராட்டனும் என்று தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டே லிங் கூற கொலை வெறியானான் தீரன்

உனக்கு அறிவே இல்லைடா என்று தீரன் கத்தத் தொடங்க

என்னை கத்துறது இருக்கட்டும் நீ அவகிட்ட சொல்லிட்டியா ஊருக்கு போறத என்று லிங் கேட்க

அதெல்லாம் மெயில் பண்ணிட்டேன்டா . குணசேகரன் சார்கிட்ட சொல்லிட்டேன் அவர் பார்த்துக்குவார் . அவகிட்டலாம் சொல்ல முடியாது என்று தீரன் கூற

. நீயேல்லாம் திருந்தவே மாட்ட என்று கத்திவிட்டு சென்றுவிட்டான் லிங்.

இவர்கள் கிளம்பி வடுகப்பட்டி வந்து இறங்க கிணற்று நீரில் ஓர் ஆர்ப்பரிப்பு .

வந்துவிட்டீரா மன்னவரே ! எனக்கு மோட்சம் தர ! என்று நீர் பெண் உருவம் பெற்று பேசியது.




********************************************************************************************************

இனியன் தனக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட போலிஸ் குவாட்டர்சில் நுழைந்தான் . அங்கு சுமார் 55 வயது வயதுடைய கனிகா அவனை வரவேற்றார். அவரை பார்த்த இனியன்

“ அம்மா ! மணி என்னாச்சு ? ஏன் எனக்காக தூங்காம காத்துட்டு இருக்கீங்க” என்று இனியன் அவரை கோபித்துக் கொள்ள

என் மகனுக்காக நான் காத்துட்டு இருக்கேன் உனக்கு என்னடா ? என்று கூறிவிட்டு சாப்பாட்டு மேஜை நோக்கி விரைந்தார் அவர்.

இனியன் தன்னை சுத்தப்படுத்தி விட்டு வந்து சாப்பிட அமர சாப்பிட்டுக் கொண்டே பேசினான் இனியன்.

அம்மா ! சக்கரை அளவு அதிகமாக வச்சுட்டு கரெக்ட் டைம்க்கு சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்காம ஏன்மா ? இப்படி பண்றீங்க ? என்று இனியன் வருத்ததோடு கூற,

ஹ்ம்ம்ம் வேண்டுதல் ! அவ்வளவு அக்கரை வச்சிருக்கிறவன் சீக்கிரம் வீட்டுக்கு வந்து இருக்கனும்டா என்று கனிகா நொடித்துக் கொண்டார்.

அம்மா! என் வேலை அப்படி நான் என்ன பண்ண ? நேரத்த முடிவு பண்ண முடியாதும்மா என்று இனியன் சலிப்புடன் கூற

அதுக்குத்தான் சொல்றேன் , காலாகாலத்தில் ஒரு கல்யாணம் பண்ணிக்கனு, வரவ கிட்ட உன்னை ஒப்படைச்சிட்டு நான் நிம்மதியா இருப்பேன். – கனிகா

ஆரம்பிச்சுட்டீங்களா ? எங்கே போனாலும் கடைசியில் இந்த பேச்சில் வந்து நிக்கறீங்கமா . – இனியன்

ஏன்டா ? உன் வயசு பசங்களாம் குழந்தையோட சந்தோசமா இருக்காங்க. நீ மட்டும் ஏன்டா இப்படியிருக்க ?ஏதாவது காதல் பண்ணிட்டு ஒரு பெண்ணோட வந்தா எனக்கு பெண் பார்க்கிற வேலை மிச்சம்னு பார்த்தா ? எங்கே ? நீ இப்படி முறைச்சுக்கிட்டு இருந்தா எவ உன்னை லவ் பண்ணுவா?

ஹம்ம் நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட என்று கனிகா கூற

அம்மா! என்று கத்தினான் இனியன்




அட போடா ! உன் கத்தலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று தன் காதில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டே கனிகா அவனை கண்டுகொள்ளாமல் பேசினார்.

அம்மா! நான் என்ன திருமணம் பண்ணிக்க மாட்டேனா சொல்றேன் .என் மனசுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு அமைய வேண்டாமா ? என்று அவரை பார்த்து இனியன் கூற

நீ எப்ப பொண்ண பார்த்து ! மனசுக்கு பிடிச்சு ! நீ எப்ப கல்யாணம் பண்ணி ! நான் எப்ப பாட்டி ஆக ! என்று பெருமூச்சுவிட்டபடியே கூறினார் கனிகா

இனியன் அதற்கு பதில் சொல்லாமல் உண்பதில் கவனம் செலுத்தத் தொடங்க

இதுக்கு பதில் சொல்லமாட்டியே நீ ! விடாக் கண்டா ! என்று கூறிவிட்டு அவர் அருகில் அமர்ந்தபடியே மேலும் தொடர்ந்தார்.

“ஏன்டா இனியா? உனக்கு இருக்குற திறமைக்கு சவாலா பல கேஸ்கள் இருக்க எதுக்குடா இங்க வந்து கஷ்டப்படற? “என்று அவர் ஆதங்கத்துடன் கூற

சற்று நேரம் அமைதியா இருந்த இனியன்

அம்மா ! இங்க தான் கடைசியா லட்சுமி அத்தை வாழ்ந்து இருக்காங்க என்று அவன் கூற கனிகா அதிர்ச்சியானார்.

என்னடா சொல்ற நீ ? நம்ம லட்சுமி இங்கேயா இருந்துருக்கா ?அவளை நீ பார்த்து பேசினியா ? எப்படி இருக்கா அவ ?என்று அவர் பல கேள்விகளை தொடுக்க

இல்லைமா ! இன்னும் அவங்கள பார்த்து பேசல அவங்கள பத்தி விசாரிச்சுட்டு இருக்கேன் . கூடிய விரைவில் அவங்கள பத்தி கண்டுபிடிச்சுடுவேன் என்று இனியன் கூற

கனிகா வேகமாக ஹாலில் மாட்டியிருந்த தன் கணவன் புகைப்படம் நோக்கிச் சென்றார் .

அதில் இருக்கும் மனிதனின் முகத்தை தடவியபடியே பேசினார்.

என்னங்க கேட்டீங்களா ? நம்ம லட்சுமி இங்க தான் இருந்திருக்கா. எவ்வளவு ஆசையா பாசமா வளர்த்தேன்னு என்கிட்ட சொல்வீங்க. கடைசியில் அவள் இங்க வந்து கஷ்டப்படுவதற்கா நம்மளை எதிர்த்து வந்து கல்யாணம் பண்ணிகிட்டா என்று அவர் அழுது கொண்டே தன் இறந்து போன கணவர் புகைபடத்தின் முன் நின்று பேசிக் கொண்டிருந்தார் கனிகா.

லட்சுமி என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்படும் செல்வி தன் அண்ணன் கங்காதரனால்( இனியன் தந்தை) சீராட்டி வளர்க்கப்பட்டாள்.

அவளுக்கு விவரம் தெரியும் முன்னரே தந்தை , தாய் இறந்து விட, செல்விக்கு எல்லாமுமாகிப் போனார் கங்காதரன்.. கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒருவரை காதலித்த செல்வி வீட்டை எதிர்த்து மணமுடித்தவர் அதன்பின் வீட்டிற்கு வரவேயில்லை. செல்லத் தங்கையின் பிரிவை ஏற்க முடியாத கங்காதரன் தனக்குள் தவிக்க , கனிகா அவரை சமாதானப்படுத்தினார்.

இனியனுக்கு அப்போது வயது 7 . தன் பின்னே சுற்றித் திரிந்த அத்தையை காணாமல் தன் அன்னையிடம் கேட்டு அவரை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தான்.

கனிகா இருவரையும் சமாளித்து கொண்டிருக்க ஒரு காலை வேளையில் கங்காதரன் இதயம் தன் வேலையை முடித்துக் கொண்டது..

கனிகாவினால் அவரின் இறப்பை தாங்க முடியவில்லை தனக்குள் அழுது ,ஆற்றுவார் , தேற்றுவார் இன்றி தவித்தார். அதன்பின் தன்னை தேற்றிக் கொண்டவர் இனியனுக்காக வாழ ஆரம்பித்தார்.

கங்காதரன் அவரின் வேலை இவர்க்கு தரப்பட வேலைக்கு செல்ல ஆரம்பித்தார் கனிகா . வீட்டிற்கு வந்து கைவினைப் பொருட்கள் செய்யும் வேலையும் செய்தார். அவரின் உழைப்பை நேரில் பார்த்த இனியன் நன்றாக படிக்க ஆரம்பிக்க, இப்போது இருவரும் நல்ல நிலைமையில் இருக்கின்றனர் . இதை நினைத்துப் பார்த்து கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த கனிகாவை தேற்றினான் இனியன் .

அழாதீங்கம்மா ! லட்சுமி அத்தைக்காக தான்மா நான் இங்க வந்ததே .அவங்கள நான் கண்டுபிடிச்சே தீர்வேன் என்று இனியன் கோபமாக கூற,

கனிகா முந்தானையில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டே

என் பிள்ளை பத்தி எனக்கு தெரியாதா கண்டிப்பா நீ அவளை கண்டுபிடிப்படா இனியா என்று பெருமை பொங்க பேசியவர்

சரிப்பா! நான் தூங்கப் போறேன் ! நீ சாப்பிட்டு போய் படு என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட

இனியன் யோசனை ஆனான். அத்தை இங்க வந்ததா ஆதாரம் சொல்லுது அவர் ரூத்ரமூர்த்தியை மணம் புரிந்து இங்க தான் வாழ்ந்து இருக்காங்க அப்படி பார்த்தா இப்ப அவங்க இங்க இல்லை ?

அவங்க எங்க போனாங்க ? அவங்க பையனுக்கு என்ன ஆச்சு? ரூத்ரமுர்த்தி திருமணம் காதல் திருமணம் தான் என்பதை காந்தர்வன் சார் ஏன் மறைக்கிறார் ? இப்படி பல கேள்விகள் அவன் மூளையை குடைந்தது.

********************************************************************************************************

தீரன் மற்றும் லிங்கேஷ் வீட்டிற்குள் நுழைய கங்காதரன் அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார். கங்காதரன் தீரனை பார்த்து கத்தினார்.

தீரா! என்னடா இங்க வந்திருக்க ? உன்னை வீட்டிற்கு வரக் கூடாதுனு சொல்லி இருக்கிறேனா ? இல்லையா ? என்று தீரனை பார்த்து கத்தியவர் அப்போது தான் கவனித்தார் லிங்கேஷை . அவனை பார்த்ததும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

தீரா! இது என்று அவர் இழுக்க

அவர் லிங்கேஷைப் பார்ப்பதை உணர்ந்த தீரன்

அப்பா ! இது லிங்கேஷ் என் பிரண்ட்! என்று தீரன் லிங்கேஷை அறிமுகப்படுத்த

லிங்கா அப்படியே ரூத்ரன் எங்கேனு இருக்கடா! என்று அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

******************************************************************************************************************

இங்கு குகைக்குள் யாகம் வளர்க்கப்பட்டிருக்க அதன் முன் அமர்ந்து மாயவன் ஏதோ செய்து கொண்டிருக்க , அங்கு ஒரு மூலையில் ஒரு குடுவைக்குள் ஒரு இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அது மாயவனிடம்

“ யாராவது என்னை காப்பாற்றுங்கள் ! கடோத்கஜா என் உருவத்தை கொடுடா ! “ என்று அது கூற

மாயவனே ! என் வேலை முடிந்ததும் உன் உருவம் உன்னிடம் தரப்படும் என்று கூறி மாயவன் உருவத்தில் இருந்த கடோத்கஜன் அட்டகாசமாக சிரித்தான்

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 16

லிங்கேஷை பார்த்தபடியே காந்தர்வன் நிற்க ,தீரன் அதை பயன்படுத்திக் கொண்டு உள்ளே சென்று மறைந்தான்.




எங்கே நின்றால் அப்படியே ஊருக்கு அனுப்பிவிடுவாரோ ?என்று பயந்து வேகமாக உள்ளே சென்றவன் தன் தாயை அழைத்தான்.



தீரனின் குரல் கேட்டு வேகமாக கிட்சனில் இருந்து வந்தார் மீனாட்சி .



“ டேய் தீரா ! என் தங்கம் ! வந்துட்டியா ? என்னடா இப்படி இளைச்சுட்ட ? நல்லா சாப்பிடாம பாரு அங்கங்க எலும்பா தெரியுது ?’’ என்று மகனை வருடியபடியே அவர் பேச



அம்மா ! அங்க சாப்பாடு நல்லாவே இல்லம்மா ! அங்க உன் அளவுக்கு பக்குவமா சமைக்க யாருக்கும் தெரியலம்மா !



எப்பப் பாரு காஞ்சு போன ரொட்டியும் , சப்பாத்தியும் தான்மா தராங்க .அதான் உன்கிட்டயே வந்துட்டேன்மா என்று தீரன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூற



என்னது ரொட்டியும், சப்பாத்தியுமா சாப்பிடுற கண்ணு ! கவலைபடாத அம்மா உனக்கு பிடிச்ச கறி குழம்பு , மீன் வறுவல் எல்லாம் பண்ணித் தரேன் – மீனாட்சி



சோ ஸ்வீட்! மம்மி ! என்று தீரன் தன் தாயை கொஞ்சிக் கொண்டிருக்க



இவர்கள் கொஞ்சல் கேட்டு உள்ளே வந்தார் காந்தர்வன்

.

என்ன அம்மாவும் , மகனும் கொஞ்சி முடிச்சாச்சா ? சரி எப்ப ஊருக்கு கிளம்புற? என்று அவர் தீரனை கேட்க மீனாட்சி பேசினார்.




இப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சுருக்கு பிள்ளை ! அவனை எப்படி இருக்கனு கூட விசாரிக்காம ஊருக்கு எப்ப போறேன்னு கேட்குறீங்க ? அவன் கிளம்பினாலும் நான் அவனை அனுப்ப மாட்டேன். போய் பிள்ளைக்கு வாய்க்கு ருசியா செஞ்சு சாப்பாடு போட நண்டு , மீன் னு எடுத்துட்டு வாங்க – மீனாட்சி



உன் பிள்ளை வந்தவுடனே வீட்டையே ரெண்டாக்குற . ஏன் ?உன் பையன் வீட்டுல இருக்குறத சாப்பிட மாட்டானா ? – காந்தர்வன்



நீங்க சும்மா இருங்க ! பிள்ளை காஞ்சு போன ரொட்டியும் , சப்பாத்தியுமா சாப்பிட்டு எப்படியோ வந்து நிக்குது. அவனையே எதாவது சொல்லிகிட்டு ? – மீனாட்சி



என்ன காஞ்சு போன ரொட்டியும் , சப்பாத்தியுமா ? ஏன்டா? என் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுட்டு, இப்ப என்னவோ ஒன்னுமே சாப்பிடாதவன் மாதிரி பேசுற என்று லிங் கூற



தீரன் பேசுவதற்குள் மீனாட்சி பேசினார்.



என் பிள்ளை சாப்பிடுறத கண்ணு வைக்காத தம்பி! ஆமா தம்பி யாரு? என்று லிங்கை பார்த்து அவர் தீரனிடம் கேட்க



அம்மா! இது லிங்கேஷ்! என் கூட வேலை பார்க்குறான். ரூமில் தனியா இருந்தான் அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று தீரன் கூற



ஓ ! அப்படியா ! சரிடா ! நீ வருவேன்னு உனக்கு பிடிச்ச ரவ உப்புமா பண்ணி வச்சுருக்கேன் . என்று மீனாட்சி கூற



காந்தர்வன் அவர்கள் பேச்சில் இடைபுகுந்தார்.



ஹேய் அவன் வரது உனக்கு முன்னாடியே தெரியுமா? என்கிட்ட ஏன் சொல்லலை? – காந்தர்வன்





ஹ்ஹ்ம்ம் சொன்னா மட்டும் என்ன செய்வீங்க அவன் இறங்கியதும் திரும்பவும் பஸ் பிடிச்சு அவனை சென்னைக்கே அனுப்பி இருப்பீங்க .அதான் சொல்லலை – மீனாட்சி



அவர் அப்படி கூறியதும் அவர் கோபம் தீரனிடம் திரும்பியது



டேய் ! அவ தான் சொல்லல நீயாவது சொல்லி இருக்கனுமா இல்லையா ?வர வர இந்த வீட்டுல எனக்கு மரியாதையே இல்லாம போச்சு – காந்தர்வன்



தீரனை முகத்தை பாவமாக வைத்து கொண்டு நிற்க



இப்ப எதுக்கு அவன தீட்டுறீங்க ?அவன சொல்ல வேண்டாம்னு நான் தான் சொன்னேன். எதுவா இருந்தாலும் என்னை சொல்லுங்க – மீனாட்சி



நீ தான்டி அவனை செல்லம் கொடுத்து கெடுக்குற –காந்தர்வன்



நீங்க மட்டும் உங்க பொண்ணுக்கு செல்லம் கொடுக்கலயோ ? – மீனாட்சி



இவர்கள் இங்கு கத்திக் கொண்டிருக்க தீரன் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். லிங் தீரனிடம் சென்று அவன் காதில் முணுமுணு.த்தான் .



உனக்காக இரண்டு பேரும் கத்தி சண்டை போட்டுட்டு இருக்காங்க. நீ அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க மச்சான். இது சரியில்லை ! போய் அவங்க சண்டைய நிப்பாட்டுடா என்று லிங் கூற



டேய் ! மச்சி ! புருசன், பொண்டாட்டி சண்டையெல்லாம் வேடிக்கை தான் பார்க்கணும் . ஏனா! இப்ப அடிச்சுக்குவாங்க மறுநாளே கொஞ்சி குழாவவும் செஞ்சுக்குவாங்க. அதனால பேசாம நடக்குறத வேடிக்கை பாருடா – தீரன்



அய்யோ இது வேறயாடா? – லிங்



இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தாள் குழல் .



இவர்கள் சண்டையிடுவதை பார்த்தவள் அப்பா , அம்மா உங்க சண்டைய கொஞ்சம் நிறுத்துங்கறீங்களா என்று குழல் கத்த இருவரும் அவளை திரும்பிப் பார்த்தனர். தன் தந்தையிடம் சென்றாள்.



அப்பா ! என்னாச்சு ? என்ன பிரச்சனை ? ஏன் இரண்டு பேரும் கத்திட்டு இருக்கீங்க ! ஆமா இவன் எப்ப வந்தான் என்று தீரனை பார்த்தபடி அவள் கேட்க



அவன் தான்மா பிரச்சனை! அவன் இருந்தா உங்க அம்மாவுக்கு நம்மளை கண்ணுக்கு தெரியாதே !அதுக்குத்தான் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் என்று அவர் கூற



மீனாட்சி இடையில் பேசினார்.



அவன் இவன்னு சொல்லாதடி ! கழுதை !என்று மீனாட்சி குழலை திட்டியவர்



தீரனிடம் திரும்பி, நீ சாப்பிடவா கண்ணு ! இவர் பேசினா பேசிட்டே இருப்பார் . நீயும் சாப்பிட வா தம்பி !என்று லிங்கையும் அழைத்துவிட்டு தீரனை கையோடு கூட்டிச் சென்றார் மீனாட்சி



தீரன் பின் செல்ல இருந்த லிங்கை அழைத்தார் காந்தர்வன் .



அப்பா லிங்கேஷா ! உன் ஊர் எது ? உன் அப்பா – அம்மா என்ன செய்றாங்க? என்று அவர் கேட்க



சார்! எனக்குனு யாருமில்லை ! அனாதை சார் நான் ! ஆசரமத்தில் தான் படிச்சேன் , வள்ர்ந்தேன் என்று அவன் வருத்ததோடு கூற ,



அவன் வருத்தப்படுவதை பார்த்த குழல்



அப்படி சொல்லாதீங்க அண்ணா! நாங்களாம் உங்களுக்கு இருக்கோம்! நீங்க ஒன்றும் அனாதையில்லை என்று அவள் கூற லிங் மகிழ்ச்சி அடைந்தான்.



ரொம்ப நன்றிமா ! என்று கூறிய லிங்கை சாப்பிட குழல் அழைத்து சென்றுவிட



அவன் சொல்லிச் சென்ற விசயத்தில் காந்தர்வன் திகைத்து நின்றார் .



என்னது அனாதையா ? அப்ப ரூத்ரன் எங்கே ? அவனுக்கு என்னாச்சு ? என்று தனக்குள் குழம்பியபடியே அமர்ந்தார் காந்தர்வன்

_____________________________________________________________________________________

கடோத்கஜா ! என் உருவத்தை வைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? யாருக்கு தீங்கு விளைவிக்கப் போகிறாய் ? என்று இதயம் பேசிக் கொண்டே போக கடோத்கஜன் ஏதோ மந்திரத்தை ஜெபிக்க இதயம் பேசுவதை நிறுத்திக் கொண்டது. அது பேச முடியாமல் தவிப்பதை வேடிக்கை பார்த்த கடோத்கஜன் சிரித்தபடியே பேசினான்..




மாயவனே ! அமைதி ! நீ பொறுமையாக இருந்தால் உன் உருவத்தை நீ திரும்ப அடையப் பெறுவாய் ! இல்லையெனில் என்றும் உன் உருவம் உனக்கு கிடைக்காதபடி செய்துவிடுவேன் ! ஜாக்கிரதை !என்று எச்சரித்து விட்டு யாகத்தின் முன் அமர்ந்து மந்திரங்களை இவன் சொல்லிக் கொண்டிருக்க அதன் அருகில் இருந்த மண்டை ஓடு பேசியது.



கடோத்கஜா ! எதற்காக என்னை அழைத்தாய் ? என்று அது கேட்க



தேவனே ! நீங்கள் சொல்படி 25 பேர்களை பலிகொடுத்துவிட்டேன் ஆயினும் ஏன்? என்னால் என் உருவத்தை பெற முடியவில்லை . அது மட்டும் இல்லை என் சாகா வரத்தையும் நான் அடைய முடியவில்லை.மாயவன் உருவம் கொண்டு நம் இலக்கை அடைய முடியுமா? – கடோத்கஜன்.



ஈசனின் வழித்தோன்றல்களை நீ நேர்கொண்டு பார்க்க முயலாதே ! அப்படி செய்தால் உன் சக்தி மற்றும் உருவத்தையும் இழந்துவிடுவாய் என்று உன்னை நான் எச்சரித்தேன் . அதை நீ செய்தாயா?



அவனை எதிர்கொண்டாய் விளைவு ! உருவத்தை இழந்து நிற்கின்றாய் . நான் மட்டும் உதவி செய்யவில்லை என்றால் மாயவன் தோற்றம் இன்றி, உருவமின்றி காற்றாக உலாவிக் கொண்டிருப்பாய். என்று அது கூற



அப்போ என் உருவத்தை நான் அடைய முடியாதா தேவனே !- கடோத்கஜா



முடியாது கடோத்கஜா! அது மிகவும் கடினம் – தேவன்



அப்போ என் சாகா வரம் ? – கடோத்கஜா



அதற்கு ஒரு மார்க்கம் உண்டு அது அவ்வளவு எளிதல்ல கடோத்கஜா! – தேவன்



இல்லை தேவனே ! நான் அதை செய்துவிடுவேன்! நீங்கள் கூறுங்கள் பிரபு ! – கடோத்கஜா



நீ இன்னொரு பலி கொடுக்க வேண்டும் மிருகசீருஷத்தில் பிறந்த, ஈசனின் அருள் பெற்ற கன்னியவளை ,மரணயோக நேரத்தில் பலியிட்டால் உன் வரத்தை நீ அடைவது சுலபம்.



அதுமட்டுமில்லை கடோத்கஜா ! இதை நீ செய்வது அவ்வளவு சுலபமல்ல. முக்கண் படைத்த அந்த ஈசன் அவர்களை காத்துக் கொண்டிருக்கிறான்.அவனை வெல்வது உன்னால் இயலாத ஒன்று .



மேலே கூறியவற்றை விட மிக முக்கியமான ஒன்று “மந்திர வியூகத்தை “ நீ கைப்பற்ற வேண்டும். அதை நீ கைப்பற்றி விட்டால் நம் இருள்! உலகத்தை ஆட்சி புரியும் . உலகத்தை மட்டுமின்றி ,தேவர் முதல் அந்த ஈசனை வரை நாம ஆட்டிவிக்க முடியும் .



விரைவாக நான் சொன்னதை செய்து முடி என்று மண்டை ஒடு பேசிவிட்டு மறைந்தது.



இதனை கேட்ட கடோத்கஜா ! கலிங்காவை அழைத்து சில விசயங்களை சொல்ல அவன் அதை செய்ய வேகமாக விரைந்தான்.



வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 17

மதிய வேளையில் ரூபா குழலைப் பார்க்க வீட்டிற்குள் நுழைய, அங்கு காந்தர்வனும் , குழலும் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். அவர்களை பார்த்த ரூபா பதட்டத்தோடு குழல் அருகில் அமர்ந்தாள் .

ஏய் ! குழல் ! என்னாச்சுடி ? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க ? என்று ரூபா கேட்க , குழல் தன் தந்தையை பார்த்தாள்.

அவர் குழலை பார்க்க

அப்பா ! என்னாச்சு ! நீங்களாவது சொல்லுங்க ? - ரூபா

அம்மா! ரூபா !உள்ளே போய் பாரு! அங்க நடக்கிற கூத்த என்று கூறிக் கொண்டே எழுந்தவர் குழலிடம்

“ அம்மா ! குழல் ! நான் வெளியே போயிருக்கேன்னு உன் அம்மாகிட்ட சொல்லிடுமா’’ – காந்தர்வன்

அப்பா ! சாப்ப்பிட்டு போங்கப்பா – குழல்

சாப்பாடா ! இப்போதைக்கு உங்க அம்மா நம்ம இரண்டு பேருக்கும் சாப்பாடு போட மாட்டா ! நான் வெளியே போய் எதாவது பார்த்துக்குறேன்மா.. உனக்காவது எதாவது கிடைக்குதானு பாரு என்று கடுப்புடன் சொல்லிச் சென்றார் காந்தர்வன்.

அவர் அப்படி கூறிச் சென்றதும் ரூபா குழலிடம்

என்னாச்சுடி ? ஏன் அப்பா இப்படி சொல்லிட்டு போறார். ஆமா ! யாராவது வந்து இருக்காங்களா என்ன? – ரூபா

ஆமாம்டி! அந்த தடியன் ஊர்ல இருந்து வந்து இருக்கான். - குழல்

யாரைச் சொல்ற நீ! இங்க என்ன நடக்குது - ரூபா

ம்ம்ம் --- சொல்றது என்ன காமிக்கவே செய்றேன் வா என்று ரூபாவை அழைத்துக் கொண்டு கிட்சனுக்குள் குழல் விரைய அங்கு தீரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் சாப்பிடுவதைப் பார்த்த ரூபா திகைத்தாள்.

பெரிய வாழை இலையில் பறப்பது, நடப்பது, நீந்துவது என்று அனைத்து உயிரினங்களும் அங்கு அவனுக்கு விருந்தாக இருந்தது.

அவன் அருகில் அமர்ந்து இருந்த லிங் அவனை பார்த்துக் கொண்டே இருந்தான்

அவன் பார்ப்பதை உணர்ந்த தீரன்

என்னடா ! என்னை எதுக்கு இப்படி பார்க்குற? – தீரன்

இல்லை மச்சான் ! நீ சாப்பிடுற அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கேன்- லிங்

ஏன்டா ! அவ்வளவு அழகாவா நான் சாப்பிடுறேன்- தீரன்

இல்லை! நீ சாப்பிடுறத பார்த்தா பல நாள் சாப்பிடாதவன் சாப்பிட்டா எப்படி இருக்கும் அப்படி இருக்குடா – லிங்

ஏய் ! நீ ரொம்ப அசிங்கப்படுத்துற! இரு உன்னை என் அம்மாகிட்ட சொல்றேன்- தீரன்

டேய் ! இது என்னடா அம்மாகிட்ட சொல்வேன்னு சின்ன பிள்ளைதனமா சொல்லிட்டு திரியுற – லிங்

ம்ம்ம் நீ அடங்கமாட்டா இரு ! என்ற தீரன்

அம்மா ! என்று அழைக்க

லிங் வேகமாக டேய் ! டேய் ! நீ எப்படி வேணாலும் தின்னுத் தொலை அவங்கள கூப்பிடாதடா !அப்புறம் கிடைக்கிற இந்த சாப்பாடு கூட கிடைக்காம போகப் போகுது-லிங்

அது! என்று கூறிவிட்டு தீரன் சாப்பிடத் தொடங்க

தீரன் சாப்பிடுவதை பார்த்த ரூபாவும்

ஏன்டி ! என்ன இவ்வளவு ஐட்டம் இருக்கு ! என்று குழலின் காதில் சொல்ல

இதுக்கே அதிர்ச்சியானா எப்படி ? அங்க பாரு என்று குழல் காண்பிக்க

அங்கு மீனாட்சி ஒரு தட்டில் இனிப்பு , வடை என்று பல பலகாரம் எடுத்துக் கொண்டு வந்தார் .




வந்தவர் தீரன் அருகில் அமர்ந்து இருந்த லிங்கிற்கு ஒரு வடையை வைக்க

அய்யோ ! அம்மா ! போதும் ! என்று அலறினான் லிங்

என்ன தம்பி ? ஒரு வடை தான சாப்பிடுங்க ! சரியா சாப்பிடாம பாருங்க ! எவ்வளவு ஒல்லியா இருக்கீங்க ? என்று அவர் கூற

சற்றே பூசினார் போன்று இருந்த தன் உடம்பை பார்த்த லிங்

என்னது நான் ஒல்லியா ! என்னம்மா ! என்னை பார்த்து இப்படி சொல்றீங்க? – லிங்

பின்ன ! அந்த காலத்தில் எல்லாம் சாப்பிட்டு உடம்ப அப்படி வச்சுருப்பாங்க ஆம்பளைங்க ! அதனால வேலையும் நல்லா செய்வாங்க

.ஆனா !இந்த காலத்து பிள்ளைங்க என்ன சாப்பிடுறீங்க. அதான் கொஞ்சம் வேலை அதிகமா செஞ்சா போய் படுத்துக்குறீங்க என்று லிங்கிடம் கூறிய மீனாட்சி

அப்போது தான் கவனித்தார் ரூபாவையும் , குழலையும் .

அட டே ! வாமா ! ரூபா ! வா நீயும் சாப்பிட உட்கார் என்று ரூபாவிடம் சொன்னவர் குழலிடம்

உனக்கு வேற சொல்லனுமாடி வந்து உட்கார்டி ! ஆமா எங்கடி உங்கப்பா ? – மீனாட்சி

பரவாயில்லம்மா ! என்னை ரொம்ப சீக்கிரம் சாப்பிட கூப்பிட்டுட்டே ! அப்பா நீ சாப்பிட கூப்பிடவேனு பொறுத்துப் பார்த்துட்டு வெளியில சாப்பிட்டுக்குறேன்னு போயிட்டார் .

பாவம் ! அவராவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் . இங்க இருந்தா அவர் ரசம் சாதம் தான் சாப்பிடனும் . அதையும் இந்த தடியன் மிச்சம் வைக்கிறானானு தெரியல – குழல்

ஏய் ! என்று தீரன் கத்த

சாப்பிடும் போது பேசக் கூடாது பா . பேசாம நீ சாப்பிடு

ஏண்டி ! அவனை வம்பிழுக்குற அப்புறம் அவன் எதாவது அடிச்சுட்டான், திட்டுறான்னு கண்ண கசக்க வேண்டியது . பேசாம இருடி. உனக்கு வாய் கொஞ்சம் நீளம் தான் . எவன் வந்து மாட்டப் போறானோ – மீனாட்சி

தீரனை காட்டி இவன் மட்டும் பெரிய ஒழுங்கா – குழல்

இவர்கள் இங்கு வாக்குவாதம் நடத்திக் கொண்டிருக்க லிங் ரூபாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை உணர்ந்த ரூபா மனதிற்குள்

என்ன இவன் ! நம்மள இப்படி பார்க்குறான் என்று ரூபா நினைத்துக் கொண்டிருக்க

ரூபாவை பார்த்துக் கொண்டிருந்த லிங் மனதிற்குள் ரூபாவை ஒத்த உருவமுடைய ஒரு பெண் உருவம் வந்து போய் கொண்டிருந்தது. அதை உணர்ந்து லிங் திடுக்கிட்டான்.

தீரன் வடையை சாப்பிடாமல் எடுத்து வைக்க அதை பார்த்த மீனாட்சி குழலிடம் பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு தீரன் அருகில் வந்தார்

டேய் ! என்னடா ! அதை சாப்பிடாமல் எழுந்திருச்சுட்ட ! சாப்பிடுடா என்று மீனாட்சி கூற

அம்மா ஒரு வடை சாப்பிடலைனா அவன் ஒன்னும் கொறைஞ்சு போயிட மாட்டான்மா - குழல்

அவன் இவன்னு கூப்பிடாதடி ! கொன்றுவேன் – மீனாட்சி

அவனை யெல்லாம் அப்படி கூப்பிட முடியாதுமா – குழல்

அம்மா ! விடுங்க ! அவள் எப்படி வேணாலும் கூப்பிடட்டும் என்ற தீரன்

ரூபாவை அப்போது தான் பார்த்தான் .

யார்டி ! பூசணி இது ! உன் பிரண்ட்டா ! – தீரன்

டேய் ! பூசணினு சொல்லாதடா – குழல்

அப்படித்தான்டி சொல்வேன் பூசணி ! பூசணி என்று தீரன் சொல்ல கோபத்தில் அவனை துரத்திக் கொண்டே ஓடினாள் குழல்.

ஒடி வந்து கொண்டிருந்த தீரன் எதிரில் வந்த உருவத்தை பார்க்காமல் மோத அந்த உருவம் கீழே விழப் பார்க்க , தாங்கிப் பிடித்தான் தீரன்.

தாங்கிப் பிடித்த அந்த உருவத்தின் முகத்தை தீரன் நிமிர்ந்து பார்க்க அங்கு கனிஷ்கா நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்த தீரன் அதிர்ச்சியில் நின்றான்.

அங்கு தீரனைக் கண்ட கனிஷ்காவும் அதிர்ச்சியில் நிற்க குணசேகரன் கனியிடம்

வாம்மா ! உள்ளே ! அங்கேயே ஏன் நின்னுட்ட? என்று அவர் கூப்பிட

கனி தீரனை பார்த்துக் கொண்டே

அப்பா ! இவன் இங்க என்ன பண்றான் . அவன் இருந்தா நான் இங்க இருக்க மாட்டேன்– கனி

ஏய் ! என் வீட்டிற்கு வந்து என்னையே சவுண்ட் விடுற – தீரன்

அப்பா! உங்க பிரண்ட் வீட்டில் தங்கத்தான என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க ? இவன் எப்படி இங்க ? – கனி

கனிம்மா ! என் பிரண்ட் காந்தர்வன்னு சொல்லி இருக்கேன்ல அவன் வீடுதா மா இது ! தீரன் அவன் பையன்ம்மா ! என்று அவர் கூற

அப்பா! இவன் வீட்டில எல்லாம் என்னால் தங்க முடியாது.வாங்கப்பா போகலாம் – கனி

உன்னை யாரும் இங்க தங்க சொல்லி கெஞ்சலடி ! நீ போயிட்டே இருக்கலாம் – தீரன்

அப்பா! பார்த்தீங்களா ! எப்படி பேசுறான்னு ! வாங்கப்பா போகலாம் - கனி

அம்மா ! கனி ! தம்பி விளையாட்டா பேசுது ! அதப் போய் பெரிசா எடுத்துகிட்டு – குணசேகரன்.

அங்கிள் என்று தீரன் ஏதோ சொல்ல முயல

வெளியில் சென்றுவிட்டு உள்ளே வந்த காந்தர்வன் குணசேகரனை பார்த்துவிட்டு வேகமாக அருகில் வந்தார்.

என்ன குணசேகரா ! எப்படி இருக்க ! வா ! வா ! உள்ளே போய் பேசிக்கலாம் . இப்ப தான் என் வீட்டிற்கு வர வழி தெரிஞ்சதா உனக்கு ?

என்று காந்தர்வனும் , குணசேகரனும் பேசியபடியே உள்ளே செல்ல தீரன் செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தான்.

உள்ளே சென்ற காந்தர்வன் தீரனிடம்

என்ன தீரா ! பேசாமல் நின்னுட்டு இருக்க ! போய் வேல்முருகனை இளநீர் வெட்டச் சொல்லு என்று தீரனிடம் கூறியவர்

கனியிடம் திரும்பினார்.

என்னம்மா ! கனி அங்கேயே நின்னுட்ட உள்ளே வா ! என்று அவளை அழைத்தவர்

தீரன் இன்னும் அதே இடத்தில் நிற்பதை பார்த்துவிட்டு

என்ன தீரா ! நீ இன்னும் போகலையா ? என்று அவர் குரலை உயர்த்த

இதோ பா ! என்று தீரன் வாயிலை நோக்கிச் சென்றான்.

அவன் செல்வதை பார்த்த கனிக்கு கண்கள் பளிச்சிட்டது.

'சார் ! அப்பாக்கு ! ரொம்ப பயப்படுவார் போல ! இது போதுமே உன்னை என்ன பண்றேன் பாருடா ! என்று தனக்குள் சொல்லிக் கொண்ட கனி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு காந்தர்வனிடம் பேசினாள்.

“ சார் ! நாங்க இங்க தங்குறது உங்க பையனுக்கு பிடிக்கல போல , நாங்க வேணா வேற இடம் பார்த்து தங்கிக்கறோம் அங்கிள்!'' என்று அவள் கூற

. கனி அப்படி கூறியதும் வெளியில் சென்றவன் நின்று அவளை முறைக்க வேகமாக பேசினார் காந்தர்வன்

அதெல்லாம் இல்லம்மா! தீரன் அப்படியெல்லாம் நினைக்க மாட்டான் .என்னடா ! அப்படித்தான என்று அவர் கூற

வேகமாக ஆமாம் பா !என்று தலையசைத்திவிட்டு , கனியையும் முறைத்துவிட்டு தீரன் செல்ல கனி சிரித்துக் கொண்டாள்.

கனியை திட்டிக் கொண்டே கடுப்பில் வெளி வந்த தீரன் சுவரில் மாட்டி இருந்த படத்தில் இடித்துக் கொண்டு நிற்க, திரும்பிப் பார்த்தவன் முன் காட்சிகள் விரிந்தது.

அதில் தன்னை ஒத்த உருவமுடைய ஒருவனை கத்தியால் நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். ஒருவன். அதை ஒரு திடுக்கிடலுடன் தீரன் பார்த்துக் கொண்டிருக்க

என்னடா ! அங்க என்ன பார்த்துட்டு இருக்க ! என்று காந்தர்வன் உள்ளே இருந்து குரல் கொடுக்க சிட்டாக பறந்துவிட்டான் தீரன்.

“ குழப்பம் ஆட்கொள்ள தவிக்கும் மன்னவன்

தெளிந்து தேடலை கைப்பற்றுவது எப்போது ? “

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 18
தீரன் சென்றவுடன் காந்தர்வனும் , குணசேகரனும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்த வண்ணம் பேசிக் கொண்டிருக்க ,சத்தம் கேட்டு வெளியே வந்தார் மீனாட்சியும் , குழலும். குழல் குணசேகரனை பார்த்துச் சிரித்துவிட்டு காந்தர்வன் அருகில் அமர்ந்தாள்.


காந்தர்வன் குணசேகரனிடம் திரும்பினார்.

“குணசேகரா ! என்னப்பா ! சொல்லாம இப்டி திடீர்னு வந்துட்ட! வரத முன்னாடியே சொல்லியிருந்தா நான் ரயில்வே ஸ்டேசனுக்கு வந்து உன்னை கூப்பிட வந்துருப்பேன் “ என்று அவர் அலுத்துக் கொள்ள

உன்கிட்ட சொல்லிட்டு தான் உன் வீட்டுக்கு நான் வர வேண்டுமாடா ? – குணசேகரன்

அப்படிலாம் இல்லைடா ! ஒரு பேச்சுக்கு சொன்னேன். உடனே அத பிடிச்சுக்குவியே – காந்தர்வன்

அதைக் கேட்ட குணசேகரன் சிரித்துக் கொண்டே திரும்பியவர் குழலைப் பார்த்து

டேய் ! நம்ம குழலா இது ! ஆள் எப்படி மாறிட்டா ! நல்லா வளர்ந்துட்டா ! அப்படியே உன்னை மாதிரி இருக்காடா – குணசேகரன்
அதை கேட்டு குழல் சிரித்தாள்


உன் பொண்ணு மட்டும் என்னவாம் ! ஆளே மாறிட்டா ! அடையாளம் கண்டுபிடிக்க முடியலடா ! என்று காந்தர்வன் கூறியபடியே
தன் குடும்ப உறுப்பினர்களை குணசேகரனுக்கு அறிமுகப்படுத்தினார்.
இது மீனாட்சி, என் மனைவி. அப்புறம் அது குழலினி என் பொண்ணு , அப்புறம் தீரன், என் பையன். அவன பத்திதான் உனக்கு தெரியுமே என்று காந்தர்வன் கூறவும்


குணசேகரன் குழலையும், மீனாட்சியையும் பார்த்து சிரித்தவர் கனியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இது கனிஷ்கா என் ஒரே பொண்ணு என்று அவர் மீனாட்சியிடம் கூற
அதை கேட்டு வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த கனி அவர்கள் இருவரையும் பார்த்து சிநேகமாக சிரித்தாள்.


“ வாம்மா ! இங்க வந்து உட்கார் !” என்று குணசேகரன் அருகில் இருந்த இடத்தை காண்பிக்க கனி அவர் அருகில் அமர்ந்தாள்.

கம்பெனியெல்லாம் எப்படிப் போகுதுமா? – காந்தர்வன்

ஹ்ம்ம் குட் அங்கிள் – கனி

அட என்னம்மா! அங்கிள்னு கூப்பிடுற ! அழகா ! மாமானு சொல்லுமா என்று அவர் கூற

அதற்கு சிரித்துக் கொண்டே சரிங்க மாமா என்று கனி கூற

குழல் கனியை பார்த்து புன்னகைத்தாள்.

அம்மா! கனிய உன் ரூமில் தங்க வச்சுக்கமா என்று குழலிடம் சொல்லிய காந்தர்வன் பின்நால் திரும்ப அப்போது அங்கே வந்து கொண்டிருந்த லிங்கைப் பார்த்து

தம்பி ! இது உங்க வீடு மாதிரி நினைச்சுக்கிட்டு ஜாலியா இருங்க என்று கூறிவிட்டு குணசேகரோடு வெளியில் சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் லிங்கிடம் திரும்பிய குழல்
அண்ணா ! சாப்டீங்களா ! என்று கேட்க கண்கலங்கி நின்றான் லிங்


அவனை அப்படி பார்த்ததும் குழல் பதட்டமானாள்.

அண்ணா! என்னாச்சு ! ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க - குழல்

இல்லைமா ! என்னை யாரும் இப்டி பாசமா சாப்டீயானு கேட்டது இல்லை அதான் என்று லிங் உணர்ச்சிவசப்பட

இதை கேட்டுக் கொண்டே இளநீரோடு உள்ளே வந்த தீரன் லிங்கிடம் ஒன்றை நீட்டியவன் மற்றதை குழலிடம் கொடுத்து எல்லாருக்கும் கொடுத்துடு என்று கனியைப் பார்த்துக் கொண்டே கூறினான்.

லிங்கின் கவலை முகம் ரூபாவையும் ஏதோ செய்ய அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்
தீரன் லிங்கின் கவலை நிறைந்த முகத்தை பார்த்தவன் அவனை மாற்றும் விதமாக


“ உனக்கு சென்டிமெண்ட் எல்லாம் செட் ஆகல மச்சான் . உனக்கு காமெடி தான் செட் ஆகுது . நீ ஏன் உனக்கு வராததை செய்ற ‘’என்று அவனிடம் கூறியவன் கனியை பார்த்துக் கொண்டே லிங்கிடம்

அப்புறம் மச்சான் ! உனக்கு காய்ச்சல்னு சொல்லி தான ஆபிசில் லீவ் சொல்லிட்டு வந்த! ஆனா உன்னை பார்த்தா ! அப்படி தெரியலயே மச்சான் ! என்று கூறியவன் குழலிடம் திரும்பி

வாம்மா ! குழல் ! உனக்காக சென்னையில் இருந்து நிறைய வாங்கிட்டு வந்துருக்கேன். அத உனக்கு காண்பிக்குறேன் என்று அவளை அழைத்துச் சென்றவன் திரும்பி வந்து லிங்கிடம்

அப்புறம் மச்சான்! வாங்குறத வாங்கிட்டு சீக்கிரம் வந்து சேரு ! நான் வெயிட் பண்றேன் என்று சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்றுவிட கனியும் , லிங்கும் தனித்து நின்றனர்,

அய்யோ ! பயபுள்ள கோர்த்துவிட்டு போகுதே ! அவளே மறந்துட்டா ! இந்த பக்கி ஞாபகப்படுத்திட்டு போகுது என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டவன் அவனை நிமிர்ந்து பார்க்க காளி ரூபத்தில் நின்று இருந்தாள் கனி. அதை பார்த்தவன்

அய்யோ ! முறைக்குறாளே ! இப்ப காது கிழிய கத்துவாளே ! அய்யோ என் காது என்று உள்ளுக்குள் அலறியவன்

வெளியில் அவள் முன் பாவமாக முகத்தை வைத்து நின்றான்.
கனி கோபமாக அவளைப் பார்த்து கத்த ஆரம்பித்தாள்


யூ இடியட் ! இது தான் காய்ச்சல் வந்து நீ படுத்து இருக்குற லட்சணமா ! ஆபிஸ் வேலையெல்லாம் பெண்டிங் ! இங்க இரண்டு பேரும் கூத்தா அடிச்சுட்டு இருக்கீங்க ! இதுல உன் பிரண்ட் மெயில் பண்ணிட்டு போயிருக்கான். என்கிட்ட சொல்லனும்னு அவனுக்கு தெரியுமா ? தெரியாதா ? என்று கனி இங்கு கத்திக் கொண்டிருக்க

சொன்னா இப்டி நீ கத்துவனு தெரிஞ்சுதான் ஆள் எஸ் ஆகிட்டான். அவன விட்டுட்டு என்னைய கத்து. அவன்கிட்ட உன் பப்பு வேகாது அதான் என்னை பிடிச்சு கத்துற ! நான் தான இங்க பாவபட்ட ஜென்மம் . எல்லாரும் ஈஸியா என்னை திட்டிபுடுறீங்க என்று லிங் சொல்ல

யேய் ! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா ! என்கிட்டயே இப்டி பேசுவ ! என்று கனி திட்ட ஆரம்பித்ததும் தான் லிங்கிற்கு புரிந்தது

தான் மனதுக்குள் பேசுவதாக நினைத்துக் கொண்டு வெளியில் பேசிவிட்டோம் என்று
வேகமாக பதட்டத்தோடு மேம் அது வந்து என்று லிங் ஏதோ கூறத் தொடங்க


யூ just shut up ! and get last ! man ! என்று கத்திவிட்டு இவள் செல்ல மீனாட்சி லிங் அருகில் வந்தார்.

என்னடா ! இவ! இப்படி கத்திட்டு போறா , நீ பேசாம பார்த்துட்டு இருக்க ! ஒரு அறை அறைஞ்சுருக்க வேண்டாம் ! பொண்ணா அடக்கமா இல்லாமா இந்த கத்து கத்திட்டு போறா ! அவளும் , அவ உடையும்.

ஆமா !அது என்னடா! , அழுக்கான முழுக்கால் பேண்ட் போட்டு , முட்டியில் போட்டு இருக்குற டிரஸ் கிழிஞ்சு இருக்கு . பாவம் ! குணசேகரன் அண்ணா அவளுக்கு ஒரு நல்ல டிரஸ் வாங்கி கொடுத்து இருக்கலாம் – மீனாட்சி

அம்மா! அது ஜீன்ஸ்மா ! அப்படி தான் இருக்கும். - லிங்

என்ன பேசனோ ! வேசனோ ! அரையும் , குறையுமா திரியுதுங்க ! காலம் கெட்டுக் கிடக்குது என்று மீனாட்சி புலம்பிக் கொண்டே போக

அவர் சென்றதும் திரும்பிய லிங் முன் கோபத்தில் நின்று கொண்டிருந்தாள் கனி

அதை பார்த்த லிங்
அய்யோ ! மேம் ! நான் இல்ல ! என்று பயத்தில் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான் லிங்


அவன் சென்றதும் கனி கோபத்தில் நகத்தை கடித்துத் துப்பினாள்.
______________________________________________________________________________


தீரன் குழலுக்கு தான் வாங்கிக் கொண்டு வந்திருந்த உடைகளை எடுத்து காண்பிக்க குழல் அவனை சந்தேகமாய் பார்த்தாள்.

டேய் அண்ணா ! உண்மையிலேயே நீ தான் இதெல்லாம் வாங்கினியாடா ?-குழல்

ஆமாம்டி ! ஏன் நீ சந்தேகமா கேட்குற என்னை நம்பமாட்டியா ? – தீரன்

இல்லை இங்க இருக்கும் போது எனக்காக ஒத்த பைசா கூட உன் பர்சில் இருந்து எடுக்க மாட்ட! இப்ப என்னடானா இவ்வளவு டிரஸ் வாங்கிட்டு வந்திருக்க. அதான் சந்தேகமா இருக்கு ! பொய் சொல்லாம சொல்லு இத நீ தான் வாங்கினியா ?- குழல்

என்ன நீ ! நீ கேட்குறத பார்த்தா என்னமோ என் பிரண்ட் வாங்கிட்டு வந்ததை நான் வாங்கி கொடுத்ததா சொன்ன மாதிரி நினைக்கிற ! ஆண்டவா ! நல்லதற்கு காலம் இல்லைனு இததான் சொல்வாங்க போல – தீரன்

அப்பாடா ! இப்ப தெளிவாகிருச்சு ! லிங் அண்ணா தான இத வாங்குனாங்க- குழல்

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க ரூபாவைப் பார்த்தபடி உள்ளே வந்தான் லிங்

ரூபா தன்னை லிங் பார்ப்பதை உணர்ந்து அவன் பிக்கம் திரும்பாமல் உடைகளை பார்த்துக் கொண்டிருக்க

வா மச்சி ! என்ன அவகிட்ட நல்லா வாங்குன போல – தீரன்

ஏன்டா சொல்லமாட்ட என்னை நல்லா கோர்த்துவிட்டு நீ பாட்டுக்க வந்துட்ட ! இப்ப உனக்கு சந்தோசமா ? – லிங்

விட்றா ! விட்றா – தீரன்

“என்ன மச்சான் ! நான் வாங்கிட்டு வந்ததை தங்கச்சிகிட்ட கொடுத்துட்ட போல “ – லிங்

அவன் அப்படி கூறியதும் கோபத்தோடு தீரன் பக்கம் திரும்பினாள் குழல்

அதான பார்த்தேன் ! எங்க துரைக்கு பாசம் பொங்கி வழியுதேனு நினைச்சேன் என்று குழல் கத்த
தீரன் அதற்கு சிரித்துக் கொண்டிருந்தான்.


இங்கு நடப்பதை புரியாமல் லிங் தீரனை பார்க்க

“ அது ஒண்ணுமில்லை மச்சான் நீ வாங்கிட்டு வந்ததை நான் வாங்கிட்டு வந்ததா சொன்னேன். அதான் இப்டி கத்துறா “ – தீரன்

ஏன்டா ! உனக்கு இந்த தேவையில்லாத வேலை ! தங்கச்சி ! அவனும் உனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கான். எடுத்து கொடுடா அதை என்று லிங் கூற தன் கையில் மறைத்து வைத்திருந்த கைக்கடிகாரத்தை குழலிடம் தீட்டினான் தீரன்.

அதை வாங்கியவள் சந்தோசத்தோடு அதை பார்த்தபடி
இதையாவது நீ வாங்கினியா ? இல்லை ரெண்டுபேரும் சேர்ந்து என்னை
ஏமாத்துறீங்களா ? – குழல்


இல்லம்மா ! அவன் தான் வாங்கினான்- லிங்

ஏன்டா ! அண்ணா! இதை முதலிலேயே கொடுத்து இருக்க வேண்டியதுதான அண்ணா- குழல்

அதை முதலில் கொடுத்திருந்தா நீ அதை வைத்து ஒரு பாசமலர் படம் ஓட்டி இருப்ப ! அதான்டி இப்படி விளையாடினேன். என்று சொல்லிய தீரன் திரும்பிப் பார்க்க லிங் ரூபாவை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன்

அப்புறம் மச்சான்! எப்ப கலாகிட்ட உன் காதலை சொல்லப் போற என்று தீரன் கேட்க லிங் புரியாமல் தீரனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே

ரூபா குழலிடம்
நான் வரேன்டி ! வீட்டுக்கு போகணும் ! டைம் வேற ஆச்சு என்று ரூபா சொல்லிச் சென்றதும் தீரனை கொலைவெறியோடு பார்த்தான் லிங்


ஏன்டா இப்படி பண்ற ? இப்பத்தான் ஒரு பொண்ண பிடிச்சு அவளை பார்த்தேன். அது உனக்கு பொறுக்காதாடா ! இப்டி பண்ணிட்டடா ? நல்லா வருவடா நீ ! என்று அவனை திட்டிவிட்டு ரூபா பின்னால் சென்றான் லிங்.

அதை பார்த்து தீரன் சிரிக்க குழல் குழப்பமாக

டேய் ! அண்ணா ! இங்க என்ன நடக்குது ? மரியாதையா இப்ப சொல்றீயா இல்லையா ? என்று குழல் மிரட்ட

இது ஆம்பளைங்க சமாச்சாரம்! இதெல்லாம் உனக்கு புரியாது பேசாம போடி அங்குட்டு என்று கூறிவிட்டு அவள் தலையில் அவன் கொட்ட

டேய் ! என்னை அடிச்சா!அவ்வளவுதான் சொல்லிட்டேன்- குழல்
என்னடி ! பண்ணுவ !அடிப்பியா ? எங்க அடி ? என்று தீரன் சொல்லிவிட்டு திரும்பவும் அவளை கொட்டிவிட்டு ஓட


அவனை அடிக்க பின்னால் ஓடினாள் குழல்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த கனி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
ரூபா பின்னால் சென்ற லிங்


ஏங்க கொஞ்சம் நில்லுங்க ! அவன் சும்மா விளையாடுறாங்க ! எனக்கு கலானு யாரையும் தெரியாது . என்னை தப்பா நினைக்காதீங்க – லிங்
அதை கேட்ட ரூபா அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு
நீங்க யாரை பார்த்தா ! பேசினா எனக்கு என்ன சார் ! எதுக்கு இந்த தேவையில்லாத விளக்கம் என்று அவள் சொல்லிவிட்டுச் செல்ல
‘எனக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கு வதனி.
ஜென்மங்கள் மாறினாலும் யார் வந்தாலும் நான் உனக்குதான்டி. நீயும் எனக்கு மட்டும் தான்டி என்று அவன் தன்னை மறந்து கூற
__________________________________________________________________________________
இங்கு கிணற்றில் உள்ள தண்ணீர் ஆர்ப்பரித்து ஒரு பெண் உருவம் எடுத்தது.


“ஜென்மங்கள் பல கடந்து நான் காத்திருந்தாலும் உங்கள் மனதிற்கினியவளாக நான் மாற முடியாதா பிரபு. மனதிற்கினியவளாக ஆக முடியவில்லை என்றாலும் பரவாயில்லை .இந்த நிலையில் இருந்தாவது எனக்கு முக்தி கொடுங்கள் பிரபு ” என்று அந்த உருவம் குமுறியது.
வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 19

குணசேகரனும் காந்தரவனும் தோப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்

“ என்னப்பா ! குணசேகரா! உன் முகம் சரியேயில்லை ? எதாவது பிரச்சனையா என்ன?” – காந்தர்வன்

“ இல்லப்பா ! கனிக்கு 3 கண்டம் இருக்குறதா ஜோசியர் சொல்றார். அதற்கு பரிகாரம் செய்யச் சொன்னார் . அதான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்.. ஜோசியர் அப்படி சொன்னதுல இருந்து எனக்கு மனசு கிடந்து அடிச்சுக்குது .அவள நினைச்சா பயமா இருக்கு'' – குணசேகரன்

கவலைப்படாதடா ! அவளுக்கு ஒன்றும் ஆகாது ! அவர் சொல்ற பரிகாரத்தை செஞ்சு முடிச்சுட்டா எல்லாம் சரியாகிடும் என்று குணசேகரனை சமாதனப்படுத்திக் கொண்டு இருந்தவர் காதுகளில் அந்த ஒலி கேட்க காந்தர்வன் வேகமாக குணசேகரன் பக்கம் திரும்பியவர்

நீ முன்னாடி போப்பா! இதோ நான் வந்துடுறேன் என்று திரும்பிப் பார்க்காமல் அவர் சென்று விட

என்னாச்சு இவனுக்கு! திடீர்னு ஏதோ ஆக்கிட்டான் . என்று அவரிடம் கண்ட திடீர் மாற்றத்தில் குழப்பத்தோடு நின்று இருந்தார் குணசேகரன்




காந்தர்வன் கிணற்றை நோக்கிச் செல்வதைப் பார்த்த இனியன் அவர் பின்னால் சென்றான்.

கிணற்றின் அருகில் சென்றவர் கிணற்றில் குதிக்க முற்பட கடைசி நொடியில் அவரை காப்பாற்றினான் இனியன்.

சார் ! சார் ! என்று அவரை இவன் உலுக்க ஏதோ கனவில் இருந்து விழிப்பவள் போல் விழித்தார் காந்தர்வன்.

அவர் குழப்பமாக அவனை பார்க்க

என்னாச்சு சார் ! நான் மட்டும் உங்களை தொடந்து வரலேனா ,இந்நேரம் இதில் விழுந்து இருப்பீங்க சார் ! என்று இனியன் சொல்ல

காந்தர்வன் குழப்பமாக பேச ஆரம்பித்தார்

எனக்கு என்னாச்சுனு தெரியல தம்பி ! இப்டித்தான் கொஞ்ச நாளா நடக்குது. .ஏதோ ஒலி கேட்குது அதன் பிறகு நான் என்ன செய்றேன்! எங்கப் போறேன்னு தெரியல தம்பி . கண்ண முழிச்சு பார்த்தா வீட்டுல இருக்கேன்

இப்படித்தான் என் தம்பி மனைவி செல்வி இந்த கிணற்றுப் பக்கம் வரதைப் பார்த்து நானும் பின்னாடி வந்தேன். அடுத்து என்ன ஆச்சு? அவ என்ன ஆனானு யோசித்துப் பார்த்தா ? எதுவுமே எனக்கு ஞாபகமில்லை என்று அவர் சொல்லிவிட்டு செல்ல இதை கேட்ட இனியன் குழப்பத்தில் நின்றான்.

சற்று நேரம் யோசித்து பார்த்த இனியன்.

தான் மரத்தில் பார்த்த பெயரை நினைவு படுத்திப் பார்க்க அதிர்ந்தான்

அப்ப வேம்புடையாள் செல்வின்றது அத்தையா ? என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்த மரக்கிளையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது பருந்து .




__________________________________________________________________________________



லிங் தீரனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். வாடா! ஊரை சுத்திப் பார்த்துட்டு வரலாம் என்று லிங் கூற

ஆமா! இருக்குறது 4, 5 தெரு இதை நீ சுற்றி வேற பார்க்கப் போறியாக்கும் . வெளியில் போய் நின்று ஒரு சுத்து சுத்துனா எல்லாத் தெருவும் தெரியும் என்று தீரன் கூறிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள் குழல்

அவனை போய் எதுக்கு கெஞ்சிட்டு இருக்கீங்க அண்ணா . இப்ப என்ன ஊரைத் தான பார்க்கனும் வாங்க நான் உங்களைக் கூட்டிட்டு போறேன் என்று அவனை இழுத்துக் கொண்டு வெளியே குழல் செல்ல, தீரன் சிரித்துக் கொண்டே திரும்பினான். அப்போது கனி வீட்டின் பின்பக்கம் செல்வதைப் பார்த்தவன்

அட பூலான்தேவி தனியா போறா ! அப்பா வேற வீட்டுல இல்லை . இவளை இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன் . இதோ வரேன்டி! என்று சத்தம் போடாமல் அவள் பின்னால் சென்றான் தீரன்.

அவள் அருகில் சென்றவன் அவள் காதில் பின்பக்கத்தில் இருந்து கத்த கனி அசராமல் அவனைத் திரும்பிப்ப பார்த்தாள்.

அவள் அப்படி பார்த்ததும் கடுப்பான தீரன்

பொண்ணுனா பயப்படுவாங்க ! நீ என்னடி பயப்படாம திரும்பிப் பார்க்குற என்று அலுத்துக் கொண்டே அவன் கேட்க

ஆமா! நீ பயமுறுத்திட்டாளும் ! கீழே பாருடா கருவாயா ! – கனி

அப்போது தான் கவனித்தான் உச்சி வெயிலில் தன் நிழல் அவள் முன் விழுந்திருப்பதை . அதை பார்த்தவன்

ச்சே ! என்று தன் தலையில் அடித்துக் கொண்டே . இத எப்படி பார்க்காம போனேன் !என்று தன்னையே திட்டிக் கொண்டவன் அப்போது தான் கவனித்தான்

என்னது கருவாயாவா ? என்ன ! ரொம்ப பேசுற நீ ! என்னைவிட கொஞ்சம் கலரா இருக்க , அதுக்கு கருவாயன்னு சொல்லுவியாடி – தீரன்

வெயிலில் நின்று இருந்ததால் அவள் வெள்ளை நிற முகம் ரத்த நிறமாக காட்சியளிக்க கோதுமை நிற கலரில் இருந்தவள் , அவன் அப்படிச் சொன்னதும் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

அதை பார்த்தவன்

சரி ! சரி ! நீ கலர் தான் அதுவும் கோதுமை கலர் போதுமா ! ஒத்துக்குறேன் . அதுக்காக நீ அப்படி என்னை கூப்பிட்டு இருக்கக் கூடாதுடி – தீரன்

அதை கேட்ட கனி சிரித்துக் கொண்டே நகர

என்னடி சிரிக்குற ? என்று . தீரன் அவளை பிடித்து நிறுத்திக் கேட்டுக் கொண்டிருக்க , தீரனை குறி வைத்து கொத்த வந்த பாம்பு அவன் கனியை இழுத்து நிறுத்தவும் அவளை தீண்டியது.

அது தீண்டிவிட்டு சென்றுவிட அம்மா! என்று அலறியபடியே மயங்கிச் சரிந்தாள் கனி.

அவள் அப்படி விழுந்ததும் பதறியபடியே அவள் அருகில் சென்றவன் என்ன ஆனது என்று புரியாமல் திரும்பிப் பார்க்க அவள் அருகில் பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதை பார்த்தவன் பயந்து அவளைப் பார்க்க அவள் உடல் நீலநிறமாக மாறிக் கொண்டே வந்தது.அதைப் பார்த்தவன்

“ தேவிம்மா ! எழுந்துரும்மா ! ஏய் எழுந்துருடி! “ என்று தீரன் பதட்டத்தோடு கனியை எழுப்பிக் கொண்டிருக்க

சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்தார் மீனாட்சி

அவள் நிலையைப் பார்த்தவர்

டேய் ! என்னாச்சுடா ? ஏன்டா ! இவ இப்டி இருக்க என்று அவர் பதற

அம்மா ! பாம்பு தீண்டிருச்சும்மா ! என்று கூறியவன் அவளை தூக்கிக் கொண்டு வந்து உள்ளே வந்து கட்டிலில் படுக்க வைத்துவிட்டு

அம்மா! இவளை பார்த்துக்கோங்க ! நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன் என்று இவன் வாசலுக்கி விரைந்தான்

இவன் வெளியே வர ,எதிரில் வந்தார் ஒருவர்

“ தம்பி என்னாச்சு ? ஏன் பதட்டமா இருக்கீங்க” என்று அவர் கேட்க

தேவிய பாம்பு தீண்டிருச்சு பெரியவரே ! என்று அவன் கூறவும் வேகமாக உள்ளே வந்தார் பெரியவர்.

உள்ளே வந்தவர் தன் பையின் உள்ளே இருந்த மூலிகைகளை எடுத்து அதை கைகளில் வைத்து, கசக்கி அவள் வாயினில் ஊத்தியவர்,காலில் பாம்பு தீண்டிய இடத்தில் மருந்தை தடவிவிட்டு தீரனிடம் திரும்பினார்,

தம்பி இந்த மருந்து விசத்தை முறிக்கும் . 24 மணி நேரத்தில் அவங்க கண் முழிச்சிடுவாங்க . பயப்பட் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு அவள் கையின் மணிக்கட்டில் மந்திரம் ஓதி கயர் ஒன்றை கட்டினார்.

கட்டியவர் அவள் நெற்றியில் விபூதியை பூசிவிட்டு வெளியில் செல்ல அவர் பின்னால் சென்றான் தீரன்.

ரொம்ப நன்றி பெரியவரே! கரெக்ட் டைம்க்கு வந்து அவளை காப்பாத்துனிங்க. என்று கூறியவன் ஏதோ தோன்ற

ஆமா ! நீங்க மருத்துவம் பண்ணியது எல்லாம் பார்த்தா இப்படி நடக்கும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியும் போல இருக்கே ! அது எப்படி சாத்தியம் ! நீங்க யார் ? என்று தீரன் கேட்க

அவன் கேள்விக்கு சிரித்துக் கொண்டே

எல்லாம் அவன் செயல் என்று கூறியவர் வாசலின் அருகே சென்று மறைந்துவிட , அருகே சென்று அவன் பார்க்க அங்கு கல் இருந்தது.

இங்கு நடந்ததை குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். தீரன்

__________________________________________________________________________________குகைக்குள் கலிங்காவும், கடோத்கஜாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

குரு ! என்னாச்சு ! ஏன் கோபமா இருக்கீங்க “ – கலிங்கா

லிங்காவை மறுஜென்மம் எடுக்கவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தேன். எப்படி அவன் பிறந்தான்.நாம் எங்கு தவறி செய்தோம் – கடோத்கஜா

பிரபு ! நீங்கள் சொன்னது போல் ரூத்ரனையும், செல்வியையும் கொன்றுவிட்டேன். பின்பு இது எப்படி சாத்தியம்- கலிங்கா

“ முட்டாள் ! இருவரையும் சேரவிடாமல் நான் தடை செய்து கொண்டிருக்க சித்தன் ஏதோ சூழ்ச்சி செய்து காந்தர்வன் உதவி கொண்டு அவர்களை சேர்த்து வைத்துவிட்டான்.செல்வியை கட்டுக்குள் கொண்டு வந்த என்னால் ரூத்ரனை கட்டுப்படுத்த முடியவில்லை சித்தன் முந்திக் கொண்டான்.அவனை கொண்டு லிங்காவை பத்திரப்படுத்திவிட்டான்.- கடோத்கஜா

குருவே ! நமக்கு தீரன் தானே முக்கியம் ,லிங்கா நமக்கு எதற்கு ?- கலிங்கா

“மூடா ! லிங்கா அருகில் இருக்கும் வரை தீரனை நாம் நெருங்க முடியாது. தீரனை காக்க வேண்டுமென்றே படைக்கப்பட்டவன் அவன். அதுமட்டுமில்லை தேவி, லிங்கா மற்றும் இனியா அவனை சூழ்ந்து இருக்க , அவன் தேடலை கைப்பற்ற உறுதுணையாக இருக்க மறுஜென்மம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்” – கடோத்கஜா

ஓ ! அப்படியென்றால் அவனாலும் , தீரனாலும் உங்களுக்கு எதாவது ஆபத்து வந்துவிடுமா ? – கலிங்கா

மூடனே ! அவர்கள் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. தேவனுக்கு பலிகள் கொடுத்து அவர் சக்தி பெற்று திரும்பவும் வந்து இருக்கின்றேன். முன் ஜென்மத்தில் அவனால் உருவத்தை இழந்த நான். இந்த ஜென்மத்தில் அவனை அழிக்காமல் விடப்போவதில்லை . அதற்கு “ மந்திர வியூகம் நமக்கு அவசியம். அதை கைப்பற்றும் மார்க்கத்தை பார் – கடோத்கஜன்.

அப்படியே செய்கிறேன் குருவே ! என்று கூறிய கலிங்கா அவர்களை நோக்கி விரைந்தான்.

சித்தா ! உன் விளையாட்டு என்னிடம் பலிக்காது. உன் ஈசனையும் நான் அடிமையாக்குவேன்டா என்று கடோத்கஜன் சிரிக்க

_________________________________________________________________________

இதை தன் ஞான திருஷ்டி மூலம் பார்த்துக் கொண்டிருந்த அடியார்

சிவ ! சிவ ! என்று கூறி தன் தாடியை தடவியபடியே சிரித்தார்.



வியூகம் தொடரும்
 

New Threads

Top Bottom