dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
ஒருபுறம் ஒரே மகிழ்ச்சியாகவும் மறுபுறம் மிகுந்த சோகமாவும் இருந்தது வள்ளிக்கு.
காலை ஐந்து மணி,
முகம் கழுவி புத்தகத்துடன் அமர்ந்திருந்தாள்.
புத்தகம் என்னவோ விரித்து வைக்க பட்டிருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் வேறெங்கோ இருந்தது.
"ஏன்டா இன்னும் தூக்கமா இருக்கா? காபி போட்டு தரட்டுமா?" என்று தலைகோதிய அன்னையை பார்த்து புன்முறுவல் பூத்தாள் வள்ளி.
"அதெல்லாம் ஒன்னுமில்லை.மா?" என்றவள் மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.
"ஹம் இன்னைக்கு கடைசி எக்ஸாம். நல்லா எழுதணும் " என்று தனக்குள் பேசிக்கொண்டவள் எழுந்து கிளம்பினாள்.
பரிட்சையை ஒரு வழியாக எழுதி முடித்தவள் தன் தோழிகளுக்காக காத்திருந்தாள்.
ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர்.
"வள்ளி" என்று தன் குரல் கேட்கவும் 'யாருடா அது?' என்று திரும்பினாள்.
அங்கே தங்கள் வகுப்பு தோழிகள் தன்னோடு சேர்த்து கிண்டல் செய்யும் மனோ நின்றிருந்தான்.
அவனை கண்டதும் வள்ளிக்கு நா வரண்டது இது வரை இருவரும் அவ்வளவாக பேசியதில்லை. எப்பொழுதாவது ஒரு முறை விழிகளோடு விழிகள் கலக்கும் அவ்வளவே தான். ஆனால் மனோ தன்னை அடிக்கடி நோக்குவதாக தோழிகள் கூறியதை கேட்டிருக்கிறாள்.
'ஹே அங்க பாரூ உன் ரோமியோ. அதான் மனோ உன்னையே முழுங்குற மாதிரி பார்க்கிறான்டி' என்று வகுப்பில் தன் காதில் கிசுகிசுக்கும் தோழியை முறைப்பாள்.
'ஹே சும்மா இருங்கடி. தேவையில்லாம எதையாவது பேசிக்கிட்டு. நாங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் பிரெண்ட்சா கூட பேசியதில்லை. சம்மந்தமே இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்கடி' என்று நகர்ந்து விடுவாள்.
இதோ இன்று பள்ளியின் கடைசி நாள் என் பேரை சொல்லிக்கொண்டு வந்து நிற்கிறான்.
'என்னவாக இருக்கும்?' என்று யோசிப்பதிலேயே வியர்த்து கொட்டியது
'இந்த நேரம் பார்த்து இவளுங்களை இன்னும் காணமே?' என்று மனதுக்குள் தோழிகளை வசைபாட.
"எக்ஸாம் நல்லா எழுதினியா?" என்றான் மெதுவாக.
அவன் முகம் பாராமல் "ஹம் நல்லா எழுதிருக்கேன்" என்றாள் தடுமாறி.
"நானும் நல்லா எழுதிருக்கேன். ஹம்.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும். " என்று இழுத்தான்.
"என்ன?" என்றாள் படபடத்த மனதோடு.
"நாளைக்கு நாங்க பெங்களூரு போறோம்." என்றான் மனோ.
சட்டென தலையை நிமிர்த்தி பார்த்தவள்.
"ஏன்?" என்றாள் ஏனோ அவளுக்கே தெரியாமல் மனதின் பாரம் கூடியது போல் இருந்தது.
"இல்ல அப்பாக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிருக்கு. அதனால அங்க போறோம். காலேஜ் அங்க தான்னு நினைக்கிறேன். அதான் உன்கிட்ட சொல்லணும் தோணுச்சு" என்றான் தலையை சொரிந்து.
"ஒஹ் அப்படியா? காங்கிரட்ஸ்" என்றாள் மென்புன்னகையுடன் வள்ளி.
"ஹம். நான் பேச வந்ததே வேற..." சிறிது நேரம் தயங்கியவன். பின்,
"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் வள்ளி. நீ தமிழ் வாசிக்கும் அழகு, உன் கையெழுத்து, நீ செஸ் விளையாடறது கூட ரொம்ப பிடிக்கும். இன்பாக்ட் எனக்கு உன்கிட்ட செஸ் விளையாட கத்துகிடனும்னு ரொம்ப ஆசை. " என்று அடுக்கி கொண்டே போனான் மனோ.
"அப்படியா?" என்றாள் வியப்பாக வள்ளி
"இது எல்லாத்தையும்விட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்றான் நிறுத்தி நிதானமாக.
அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள் வள்ளி.
"எனக்கு எப்போ எதுக்காக உன்னை பிடிக்க ஆரம்பிச்சது எதுவும் தெரியாது. இதனை பொண்ணுங்களில் உன்னை ஏன் பிடிக்கும்னும் தெரியாது. ஒரு பிரெண்டா தானேன்னு கேட்டா? இல்ல. பிரெண்ட்ஷிப்பையும் தாண்டி உன்னை பிடிக்கும். ஆனா உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை. இன்னைக்கு கடைசி நாள். இப்பவும் சொல்லாம போறது சரியில்லனு தோணுச்சு. அதான் சொல்லிட்டேன். அதுக்காக நீயும் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை. " என்று சிரித்தான் மனோ.
சிறிதுநேரம் அவனை பார்த்தவள்.
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை மனோ! என்னால உன்னை நீ சொல்ற அர்த்தத்தில் பிடிச்சிருக்குன்னு எல்லாம் சொல்ல முடியாது. எங்கப்பா நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே இறந்துட்டாரு. அம்மா மட்டும் தான். என்னை படிக்க வைக்கணும்னு அவங்களும் ஒரு ஹோட்டல்ல சமையல் வேலையும் சாயந்திரம் ஜெராக்ஸ் கடைலையும் வேலை செய்றாங்க. இந்த கஷ்டம் போதாதுன்னு கடவுள் கொடுத்த அடுத்த சோதனை என்ன தெரியுமா? எங்கம்மாக்கு ஹார்ட் ல ஹோல் இருக்கு. ஆப்பரேஷன் பண்ணனும். வசதியில்லை. அதனாலயே என்னோட லட்சியம் டாக்டர் ஆகணும். ஹார்ட் சர்ஜெரிக்கு படிக்கணும். நடக்குமானு தெரியாது. ஆனா நிச்சயமா நான் ஜெய்ச்சிருவேன்னு நம்பிக்கை இருக்கு." என்றாள் விழிகளில் கண்ணீரோடு.
"அஞ்சு வருஷம் கழிச்சு பார்ப்போம் என்னவா இருக்கேன்னு" என்று சிரித்தாள்.
அவளின் பேச்சை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தவன் எதுவும் பேசாமல் விழிகளில் வலியோடு நின்றான்.
மெல்ல அவளின் வலது கரத்தை பிடித்து வருடினான்.
"இதுவரைக்கும் எனக்கு உன்னை பிடிக்கும் அது மட்டும் தான் தெரியும் வள்ளி. ஆனால் இப்போ உன் கண்ணீரை பார்த்து ஒரு நிமிஷம்கூட உன்னை பிரியக்கூடாதுன்னு தோணுது. ஒரு வேளை இது தான் காதல்னா அப்போ நான் உன்னை காதலிக்கிறேன்னு நினைக்கிறேன். நீ சொன்ன அதே அஞ்சு வருஷம் கழிச்சு பார்ப்போம். உனக்காக நானும் அதே டாக்டர் கு தான் படிக்க போறேன். உன்னை எப்பவும் மனசுல வச்சிருப்பேன். உன்னை திரும்ப பார்க்கணும்ன்றதுக்காகவே டாக்டராவே வருவேன். ஒண்ணே ஒன்னு மட்டும் எனக்காக செய். நம்ம பிரெண்ட்ஸகூட எப்பவும் டச்ல இரு. அது போதும். திரும்ப உனக்காகவே வருவேன். செய்வியா எனக்காக?" என்று கேட்டான் மனோ ஆர்வமாய்.
விழிகளில் ஆனந்தமா என்று சொல்லமுடியும் கண்ணீரோடு நின்றவள் லேசாய் புன்னகைத்து தலையாட்டினாள் வள்ளி.
"திரும்ப எப்போ பார்ப்போமா தெரியாது . அது வரைக்கும் எனக்காக காத்திரு. உன்னோட லட்சியத்தை அடையறதுல முழு முயற்சி செய் வள்ளி. வரேன்" என்று பிரியா விடை பெற்றான் மனோ.
இந்த ஐந்து வருடங்கள் அவளுக்கு நரகமே மேல் எனும் அளவிற்கு கஷ்டங்களையும் கிண்டல்களையும் கேலிகளையும் அனுபவித்து விட்டாள் வள்ளி.
இருந்தும் மனம் தளராமல் வாழ்க்கையே போராட்டமாக கொண்டு முன்னேறுவத்தில் குறியாய் இருந்தாள்.
தனக்கு தெரிந்த மருத்துவர்களின் உதவியோடு தனது தாய்க்கு ஒரு அறக்கட்டளையின் மூலம் இலவச ஆப்பரேஷன் செய்திருந்தாள்.
அன்னையின் நலத்தில் அவளின் உள்ளம் லேசானது. இருந்தும் படிப்பதில் தன் கவனம் சிதறாமல் பார்த்து கொண்டாள்.
தன் பள்ளி தோழர்களுடனும் தொடர்பில் இருந்தாள்.
எப்பொழுதாவது மனோவின் ஞாபகம் வந்தாலும் அவன் தனக்கு ஆறுதல் கூறுவதற்காக அந்த வார்த்தைகளை கூறியிருக்கலாம் என்று அதிக எதிர்ப்பார்பில்லாமல் படிப்பை முடிப்பதில் இருந்தாள்.
இதோ இன்று ஐந்து வருடங்கள் முடிந்திருந்தது அவளும் மருத்துவ படிப்பை முடித்திருந்தாள்.
மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்தாலும் அடுத்து ஹார்ட் சார்ஜெரிக்கு படிக்க தேவையான வற்றை செய்து கொண்டிருந்தாள்.