Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

Meenakshi sivakumar

Saha Writer
Team
Messages
21
Reaction score
4
Points
3

நாடோடி வாழ்க்கை

நாடோடி போல நகரத்தை தேடி அலைக்கிறோம்,

ஒரு குடிசையாவது கிடைக்காத என குக்கிராமத்தை தேடி அலைக்கிறோம்,
நிழல் கூட நிலைக்க வில்லை, எங்கள் நிலைமையை எடுத்து சொல்ல...

ஒதுக்கிறது சமூகம், துரத்துக்கிறது துரோகம்,
பதுக்குழி வாழ்க்கை...

எங்களை துரத்தும் துப்பாக்கி முனை வேட்கை,
இதில், எங்களுக்கு அகதியேனும் அங்கீகாரம் வேறு,
என் தாய் மண்ணுக்கும் எனக்கும் உள்ள தொப்புள் கொடியை
உறவை அறுப்பதற்கு நீ யார்,

என் ஈழத் தமிழ் இனத்தை இரக்கமற்று அழிக்க நீ யார்,
சிறிய தீவாய் திரிந்து வருகிறோம், வாழ்க்கையை தொலைத்து,
தாக்கத்திற்கு தண்ணீர் இல்லை, பசிக்கோ போஜனமில்லை,
ஆழ்ந்து உறங்க உறைவிடமில்லை,
உணா்வுகளுக்கோ மதிப்பில்லை,

சுமை துாக்கி போல சுமந்து செல்லும் அர்த்தமற்ற வாழ்க்கை, அனாதையாய் ஒரு தோற்றம்,
இந்த நிலைமையை எங்களுக்கு தீர்மானித்து யார் செய்த குற்றம்,
நாங்கள் பிறந்தது குற்றமா, இல்லை நாங்கள் பிறந்த மண்ணின் மீது குற்றமா.......?

கணக்கிறது இதயம், கடக்கிறது எங்கள் காலமும்,காலும்.......!
அமைதி பொங்கும் கண்ணியமான நாங்கள் கண்ட கனவு உலகத்தை தேடி......!

- மீனாகூஷி சிவக்குமாா்
 

Meenakshi sivakumar

Saha Writer
Team
Messages
21
Reaction score
4
Points
3
காந்த கண்ணழகி

காவி அணிந்தவா்கள் கூட காதலிக்க ஆரம்பித்து விட்டனா்........!

அன்பே! உன் கண் என்ன காந்தம்?
நான் இரும்பாக தான் வைத்திருக்கிறேன் என் இதயத்தை உன் இருவிழியால் ஈா்த்துக்கொள்.......!
 

Meenakshi sivakumar

Saha Writer
Team
Messages
21
Reaction score
4
Points
3
சுதந்திரம்

காந்தி அன்றோ கண்ணியமாய், காலை வரும் முன்னே வாங்கி தந்த சுதந்திரம்……..!

சுமைகள் எதும் காணாமல் சுலபமாய் இன்று நாம் பெற்ற சுதந்திரம்………..!

புரட்சி கண்ட பாரத போரில், புரட்சியில் புதைந்து கிடந்த புனிதமான சுதந்திரம்………!

என் தேசத்தின் சுதந்திரத்திற்காக, மாண்டவா்களின் மாண்பை சுமந்து, சுமைகளை துறந்து, சுகமாய் பாரினில் பறக்கும் சுதந்திரம்…….!

சுதேசி இயக்கமும் கண்டு, சுதந்திர போா் ஒன்று கொண்டு சுதந்திரமாய் வந்து நின்ற சுதந்திரம்……….!

உயிரை கொடுத்து, உண்மையாய் நாம் பெற்ற சுதந்திரம்…….!

ஒவ்வொரு கணமும் நாம் சுவாசிக்கும் சுதந்திரம், முழுமையாய் நம்மை சுத்திகரிக்கும் சுதந்திரம்,சுழ்ச்சி வலையில் நம்மை இன்றோ சிக்க வைத்த சுதந்திரம்………..!

சுகமாய் வருடி சென்ற காற்றும், சுமந்து செல்லும் சொல்லாமல் கனக்கும்,

என் போா்வீரன் களத்தில் சிந்திய கண்ணீரை கண்ட சுதந்திரம்……..!

தூவானமாய் மலா்களை தூவி துளிர் விடும் என் தேசத்தின் 72-ஆம் சுதந்திரம்…………!

– மீனாக்ஷி சிவகுமார்
 

Meenakshi sivakumar

Saha Writer
Team
Messages
21
Reaction score
4
Points
3

என் தானய தலைவனுக்கு தமிழகம் எழுதும் இரங்கல் மடல்……….!

செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற மாநாட்டை கோவையில் செம்மையாக செய்து, என் செந்தமிழா் செருக்கு ஊற செய்து, செய்தது போதும் என்று சென்று விட்டாயோ – என் செந்தமிழின் நாயகனே……..!

வாசுகியின் மணவாளானாம் என் வள்ளுவனுக்கு, வரலாற்று சிறப்பு மிக்க சிற்பத்தை சிறப்பாக செய்து, குமரியிலே அவனுக்கு ஒர் இடம் அமைத்தது போதும் என்று அந்தி பொழுதில் அமைதியாக அஸ்தமனம் ஆகிவிட்டாயோ – என் அன்புமிக்க ஆதவனே……….!

முடம் என்று பலா், மூளை உள்ள பலரை மூலையிலே முடக்கி போடுகையில், நீயோ அவா்கள் முடம் இல்லை, அவன் என் தமிழினத்தின் போராளி, அவனே என் மாற்றுதிறனாளி என்று மாற்று வழி அமைத்து தந்தாயே – என் மாண்புமிகு மன்னவனே……..!

மூன்றாம் பால் இனத்தவரை, நகைத்தும்,இழித்தும், பழித்தும் பலா் பேசுகையில், நீ மட்டுமே அவா்களை நங்கை என்றாய், அதுவும் திருநங்கை என்றாய், அதையே அழுத்தமாய் சொன்னாய், அதுவும் ஒரு திருத்தமாய் சொன்னாயே – என் திருகுவளையின் திலகமே

நூறு வயது வரை இருந்து என் தமிழுக்கு தொண்டாற்றுவாய் என்று இருந்தேன், நீயோ 95ல் தொலைந்து தொடுவானம் சென்று என் தமிழனத்தின் இறுக்கமான வேரை வெடுக்கென்று துளைத்து விட்டாயே – என் தமிழனத்தின் முகவரியே……..!

தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் அதில் ஏறி பயணம் செய்யலாம் கவிழ்ந்து விட மாட்டேன் என்றாயே, இன்றோ மக்கள் வடித்த கண்ணீர் வெள்ளத்தில் கட்டுமரமாக மிதந்து கரை தேடி சென்றாயே – என் கலைமகளின் தலப்புதல்வனே………!

என் தமிழின் தலைப்பெழுத்துதே…….!

என் சமூகத்தின் சார்பெழுத்துதே……..!

என் மூத்தமிழின் முதலெழுத்துதே…….!

கழகத்தின் கலை களஞ்சியமே……..!

ஏன்? நீ இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்தயோ என் பாசமிக்க பேச்சாளனே………!

நீ மறுபடியும் பிறக்க வேண்டி உனக்காக பிராதிக்கும் உன் உடன்பிறவா உன் உடன்பிறப்பு………!

– மீனாக்ஷி சிவகுமார்
 

Meenakshi sivakumar

Saha Writer
Team
Messages
21
Reaction score
4
Points
3

அவமானம்

உங்கள் வாழ்வின் பிற்பகுதியை அலங்காிக்க, இன்றே சிறிதளவு அவமானங்களை சேகரித்து வையுங்கள்…………!

அது உங்கள் லட்சியத்தின் கரடுமுரடான பாதையை லேசாகி, முயற்சியின் ஆயுள்நாட்களை அதிகப்படுத்தும்……………!

நிராகரிப்பு நிகழ்கிறதா நிதானமாக புன்னகையுங்கள்…………..!

வெறுப்பும், மறுப்பும் தொடா்ந்து உங்களை வீழ்த்துகிறதா, அது உங்களின் சாதனைக்கு கிடைக்கப்போகும் வெகுமதியாய் ஏற்றுக்கொள்ளுங்கள்…………!

ஆடம்பரமும் இல்லை, அத்தியாவசியமான வாழ்கையும் இல்லை என்று வருத்தப்படுகிறீா்களா?

உங்கள் ஆழ்மனதில் அதிகப்படியான அமைதியை நிரப்பிக்கொள்ளுங்கள்……………!

கண் முன்னே உங்கள் உழைப்பு சுரண்டப்படுகிறதா?

உங்களை மென்மேலும் சுறுசுறுப்பாகிக்கொள்ளுங்கள்…………!

வாய்ப்புகளின் கதவுகள் தொடா்ந்து சாதப்படுகிறதா?

நீங்கள் நிகழ்த்தப்போகும் சாதனைக்காக சற்று சகித்துக்கொள்ளுங்களேன்………….!

விழாக்களில் விரும்பியே விலக்கப்படுகிறீா்களா?

அதை உங்கள் லட்சிய விதைக்கு உரமாக்கிக்கொள்ளுங்கள்………….!

பந்தியில் உங்களுக்கு முதலிடம் கிடைக்கவில்லையா?

உங்கள் பதவி உயா்வுக்காக அவா்கள் செய்யும், பரிகாரம் என்று பொறுத்துக்கொள்ளுங்கள்………….!

முற்பகுதியில் முளைக்கும் வேர்வையின் விழுக்காடு மட்டுமே, உங்களின் சாதனையின் மதிப்பை கூட்டும்…………!

அவமானம் என்பது அலட்சியப்படுத்தியவா்களுக்கு மட்டுமே………….!

அதிகம் உழைத்தவா்களுக்கோ, அதிகம் படித்தவா்களுக்கோ அல்ல, சிந்தியுங்கள்…………!

வாகை வாய்கட்டும்…….!

-மீனாகூஷி சிவக்குமாா்
 

Meenakshi sivakumar

Saha Writer
Team
Messages
21
Reaction score
4
Points
3

அவமானம்

உங்கள் வாழ்வின் பிற்பகுதியை அலங்காிக்க, இன்றே சிறிதளவு அவமானங்களை சேகரித்து வையுங்கள்…………!

அது உங்கள் லட்சியத்தின் கரடுமுரடான பாதையை லேசாகி, முயற்சியின் ஆயுள்நாட்களை அதிகப்படுத்தும்……………!
 
Top Bottom