Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

அவமானம்

உங்கள் வாழ்வின் பிற்பகுதியை அலங்காிக்க, இன்றே சிறிதளவு அவமானங்களை சேகரித்து வையுங்கள்…………!

அது உங்கள் லட்சியத்தின் கரடுமுரடான பாதையை லேசாகி, முயற்சியின் ஆயுள்நாட்களை அதிகப்படுத்தும்……………!

நிராகரிப்பு நிகழ்கிறதா நிதானமாக புன்னகையுங்கள்…………..!

வெறுப்பும், மறுப்பும் தொடா்ந்து உங்களை வீழ்த்துகிறதா, அது உங்களின் சாதனைக்கு கிடைக்கப்போகும் வெகுமதியாய் ஏற்றுக்கொள்ளுங்கள்…………!

ஆடம்பரமும் இல்லை, அத்தியாவசியமான வாழ்கையும் இல்லை என்று வருத்தப்படுகிறீா்களா?

உங்கள் ஆழ்மனதில் அதிகப்படியான அமைதியை நிரப்பிக்கொள்ளுங்கள்……………!

கண் முன்னே உங்கள் உழைப்பு சுரண்டப்படுகிறதா?

உங்களை மென்மேலும் சுறுசுறுப்பாகிக்கொள்ளுங்கள்…………!

வாய்ப்புகளின் கதவுகள் தொடா்ந்து சாதப்படுகிறதா?

நீங்கள் நிகழ்த்தப்போகும் சாதனைக்காக சற்று சகித்துக்கொள்ளுங்களேன்………….!

விழாக்களில் விரும்பியே விலக்கப்படுகிறீா்களா?

அதை உங்கள் லட்சிய விதைக்கு உரமாக்கிக்கொள்ளுங்கள்………….!

பந்தியில் உங்களுக்கு முதலிடம் கிடைக்கவில்லையா?

உங்கள் பதவி உயா்வுக்காக அவா்கள் செய்யும், பரிகாரம் என்று பொறுத்துக்கொள்ளுங்கள்………….!

முற்பகுதியில் முளைக்கும் வேர்வையின் விழுக்காடு மட்டுமே, உங்களின் சாதனையின் மதிப்பை கூட்டும்…………!

அவமானம் என்பது அலட்சியப்படுத்தியவா்களுக்கு மட்டுமே………….!

அதிகம் உழைத்தவா்களுக்கோ, அதிகம் படித்தவா்களுக்கோ அல்ல, சிந்தியுங்கள்…………!

வாகை வாய்கட்டும்…….!

-மீனாகூஷி சிவக்குமாா்
 

அவமானம்

உங்கள் வாழ்வின் பிற்பகுதியை அலங்காிக்க, இன்றே சிறிதளவு அவமானங்களை சேகரித்து வையுங்கள்…………!

அது உங்கள் லட்சியத்தின் கரடுமுரடான பாதையை லேசாகி, முயற்சியின் ஆயுள்நாட்களை அதிகப்படுத்தும்……………!
 

New Threads

Top Bottom