Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யட்சகன் ராட்சனாக

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்:11
நிதா வினய்யை அடிக்கடி பார்த்துக் கொண்டே டிசைன் வரைந்து கொண்டிருந்தாள் . அவனது பக்கவாட்டுத் தோற்றம் மட்டுமே அவளுக்கு தெரிந்தது. அவன் கையை பார்க்க நிதாவிற்கு பெரும்பாடாக இருந்தது.அவன் கையை எக்கி பார்க்க முயன்றவள் ஒரு கட்டத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்து எக்க சீட் வழுக்கி தரையில் கவிழ்ந்தாள் நிதா. விழுந்தவள்
“அம்மா ! “ என்று கத்தியபடியே எழுந்து கொள்ள முயல அவள் எதிரில் வந்து நின்றான் வினய்.
“என்ன இதெல்லாம் ?” – வினய்
“அது வந்து சார் கொஞ்சம் சிலிப் ஆகிடுச்சு ?” – நிதா
“ஹ்ம்ம் சீட் சிலிப்பாகி விழ நீ என்ன குழந்தையா ? என்ன? என்னை கவர ஏதும் டிரை பண்றீயா என்ன? இந்த மாதிரி குரங்கு வித்தையெல்லாம் செய்யாம கொஞ்சம் வேளையும் பாருங்க மிஸ் நிதா!” – வினய்
வினய் அன்று முழுகை சட்டை போட்டு ஒரு கையை தன் பேண்டில் விட்டுவிட்டு அவன் பேசிக் கொண்டிருக்க நிதாவின் பார்வை அவன் கைகளிலேயே நிலைத்திருந்தது.
“ஹலோ !” என்று அவன் சொடக்கு போட்டு அழைத்தபின் தான் நிதாவின் கவனம் அவனிடம் சென்றது.
“சார் ? என்ன சார் சொன்னீங்க” என்று நிதா கேட்டதுதான் தாமதம் வினய் பொறிய ஆரம்பித்துவிட்டான்.
“ஆர் யூ கிரேஸி ! இவ்ளோ நேரம் உன்கிட்ட தான கத்திகிட்டு இருந்தேன். என்ன கனவு லோகத்தில இருந்தீயா ? “ – வினய்
“ஆமா சார் ! அய்யோ அது வந்து .... இல்லை சார்” என்று நிதா தடுமாறியபடியே கூற
“ம்ப்ச்….” என்று சலித்துக் கொண்டே
“டிசைன் ரெடியா மிஸ் நிதா ?” – வினய்
இல்லை அவள் தலையசைக்க
“ஷி** ! கொஞ்சம் வாங்குற சம்பளத்திற்கு வேலையும் செய்ங்க நிதா” என்று கூறியவன் “இரிடேட்டிங் இடியட்” என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் வெளியே செல்ல இங்கு நிதா வருத்தத்தோடு நின்றாள்.
*******************************
அந்த வீட்டின் பிரமாண்டமும் , அழகும் அங்கு வசிப்பவரின் செல்வ நிலையை எடுத்துக் காட்டியது. மாளிகை போன்ற தோற்றம் கொண்ட அந்த வீட்டின் உள்ளே 65 “ இன்ச் கொண்ட அந்த பெரிய தொலைகாட்சி பெட்டியின் முன் நடுநாயகமாக அமர்ந்து இருந்தார் தேவ்.
அவர் கண்கள் எதிரே இருந்த டிவியை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தது.
அதில் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது . அதில் ஒரு அறை தெரிந்தது. அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருக்க சற்று தொலைவில் மெழுகுவர்த்திகள் எரியூட்டப்பட்டு, அந்த மெழுகுவர்த்தியின் நடுவில் வைக்கப்பட்டிருந்தது சவப்பெட்டி ஒன்று. அந்த சவப்பெட்டியில் ஒருவன் முகம் சிதைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அவன் முன் கருப்பு ஆடை அணிந்திருந்த ஒருவன் சென்று நின்று ஏதோ செய்ய சற்று நேரத்தில் கண் விழித்தான் அவன் வினய் பிரகாஷ் , விக்ன பிரசாத்தின் மகன்.
அழிவின் ஆரம்பமாக , அரக்க குணத்தின் ஆர்ப்பாட்டமாக எழுந்து நின்றான் வினய் பிரசாத்
யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்:11
நிதா வினய்யை அடிக்கடி பார்த்துக் கொண்டே டிசைன் வரைந்து கொண்டிருந்தாள் . அவனது பக்கவாட்டுத் தோற்றம் மட்டுமே அவளுக்கு தெரிந்தது. அவன் கையை பார்க்க நிதாவிற்கு பெரும்பாடாக இருந்தது.அவன் கையை எக்கி பார்க்க முயன்றவள் ஒரு கட்டத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்து எக்க சீட் வழுக்கி தரையில் கவிழ்ந்தாள் நிதா. விழுந்தவள்
“அம்மா ! “ என்று கத்தியபடியே எழுந்து கொள்ள முயல அவள் எதிரில் வந்து நின்றான் வினய்.
“என்ன இதெல்லாம் ?” – வினய்
“அது வந்து சார் கொஞ்சம் சிலிப் ஆகிடுச்சு ?” – நிதா
“ஹ்ம்ம் சீட் சிலிப்பாகி விழ நீ என்ன குழந்தையா ? என்ன? என்னை கவர ஏதும் டிரை பண்றீயா என்ன? இந்த மாதிரி குரங்கு வித்தையெல்லாம் செய்யாம கொஞ்சம் வேளையும் பாருங்க மிஸ் நிதா!” – வினய்
வினய் அன்று முழுகை சட்டை போட்டு ஒரு கையை தன் பேண்டில் விட்டுவிட்டு அவன் பேசிக் கொண்டிருக்க நிதாவின் பார்வை அவன் கைகளிலேயே நிலைத்திருந்தது.
“ஹலோ !” என்று அவன் சொடக்கு போட்டு அழைத்தபின் தான் நிதாவின் கவனம் அவனிடம் சென்றது.
“சார் ? என்ன சார் சொன்னீங்க” என்று நிதா கேட்டதுதான் தாமதம் வினய் பொறிய ஆரம்பித்துவிட்டான்.
“ஆர் யூ கிரேஸி ! இவ்ளோ நேரம் உன்கிட்ட தான கத்திகிட்டு இருந்தேன். என்ன கனவு லோகத்தில இருந்தீயா ? “ – வினய்
“ஆமா சார் ! அய்யோ அது வந்து .... இல்லை சார்” என்று நிதா தடுமாறியபடியே கூற
“ம்ப்ச்….” என்று சலித்துக் கொண்டே
“டிசைன் ரெடியா மிஸ் நிதா ?” – வினய்
இல்லை அவள் தலையசைக்க
“ஷி** ! கொஞ்சம் வாங்குற சம்பளத்திற்கு வேலையும் செய்ங்க நிதா” என்று கூறியவன் “இரிடேட்டிங் இடியட்” என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் வெளியே செல்ல இங்கு நிதா வருத்தத்தோடு நின்றாள்.
*******************************
அந்த வீட்டின் பிரமாண்டமும் , அழகும் அங்கு வசிப்பவரின் செல்வ நிலையை எடுத்துக் காட்டியது. மாளிகை போன்ற தோற்றம் கொண்ட அந்த வீட்டின் உள்ளே 65 “ இன்ச் கொண்ட அந்த பெரிய தொலைகாட்சி பெட்டியின் முன் நடுநாயகமாக அமர்ந்து இருந்தார் தேவ்.
அவர் கண்கள் எதிரே இருந்த டிவியை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தது.
அதில் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது . அதில் ஒரு அறை தெரிந்தது. அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருக்க சற்று தொலைவில் மெழுகுவர்த்திகள் எரியூட்டப்பட்டு, அந்த மெழுகுவர்த்தியின் நடுவில் வைக்கப்பட்டிருந்தது சவப்பெட்டி ஒன்று. அந்த சவப்பெட்டியில் ஒருவன் முகம் சிதைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அவன் முன் கருப்பு ஆடை அணிந்திருந்த ஒருவன் சென்று நின்று ஏதோ செய்ய சற்று நேரத்தில் கண் விழித்தான் அவன் வினய் பிரகாஷ் , விக்ன பிரசாத்தின் மகன்.
அழிவின் ஆரம்பமாக , அரக்க குணத்தின் ஆர்ப்பாட்டமாக எழுந்து நின்றான் வினய் பிரசாத்
யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன் 12
வினய் கண் விழித்து எழுந்ததும் அவன் முகத்தில் ஒரு முகமுடியை அணிவிக்க அந்த முகமூடிக்கு ஏற்ப அசுரனாக நின்றான் வினய்.
இந்த காட்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த தேவ் திரும்பிப் பார்க்க அருகில் அமர்ந்திருந்தான் வினய் பிரசாத் வினய் பிரசாத்தை பார்த்தவர் அவனிடம் ஒரு போட்டாவை காண்பிக்க அதை பார்த்தவன் தன் கைகள் கொண்டு அதனை குத்தினான். அதில் யட்சன் ( இனி வினய் கிடையாது யட்சன் மட்டும் தான் குழப்பத்தை தவிர்க்க ) பிரசாத்தோடு பார்ட்டியில் நின்றிருந்த போட்டோ இருந்தது .
யட்சனும் பிரசாத்தும் சேர்ந்து நின்ற போட்டாவை தேவ் காண்பிக்க அதை பார்த்த வினய்
“நான் இருக்க வேண்டிய இடத்துல இப்ப அவன் இருக்கான் ! எனக்கு சொந்தமான இடத்தை நான் யாருக்கும் விட்டுத் தரமாட்டேன். அவன் என் இடத்தை பறிச்சதுக்கு அவனை எதாவது செய்தே ஆகனும் . நான் அவனை விட மாட்டேன்” என்று கோபத்தில் கத்திய வினய் அந்த போட்டோவை கையில் இருந்த கத்தியைக் கொண்டு குத்தினான். அது நேராக யட்சனின் முகத்தை துளையிட்டது. .
“உன்னை நேரில் மீட் பண்ண இதோ வந்துட்டு இருக்கேன்டா என் அப்பன் உருவாக்கின சிங்கமே !” என்று கூறிவிட்டு அந்த அறை அதிர சிரித்தான் வினய்.
****************************
யட்சன் திட்டியதை நினைத்துக் கொண்டே நிதா டிசைன் வரைந்து கொண்டிருக்க அப்போது அவள் அலைபேசிக்கு கால் வந்தது. சுற்றி முற்றி பார்த்தவள் வினய் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு பேசினாள்.
“ சொல்லு சாம் ! நான் கேட்டது கிடைச்சதா?’’ – நிதா
எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ ! நிதா தொடர்ந்து பேசினாள்
“சரி ! நான் ஒத்துக்குறேன் . ரிஸ்க் எடுத்து தான் எனக்கு இதை நீ செய்றேன்னு தெரியும். ஆனா எனக்காக இந்த ரிஸ்க் கூட நீ எடுக்க மாட்டியா சாம்” –நிதா
அடுத்து என்ன சொல்லப்பட்டதோ அதற்கு நிதா
“யா ஐ நோ ! இத வெற்றிகரமா சால்வ் பண்ணிட்டா நமக்கு தான பெருமை . பிரண்ட்டுக்காக இத கூட பண்ணமாட்டியா ! ஓ ! வாவ் ! இதோ உடனே பாக்குறேன் “ என்று நிதா போனில் பேசிக் கொண்டிருக்க அருகில் திடீரென்று சொடக்கு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்த நிதா வேகமாக எழுந்து நின்றாள்.
அங்கே மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வினய்
வினய்யை பார்த்ததும் பயத்தில் நா வரண்டது நிதாவிற்கு. அவள் பயத்தில் நின்று கொண்டிருக்க அவள் முன் தன் ஒரு கையை நீட்டினான் அவன்.
அவள் விழித்துக் கொண்டே தன் மொபலை நீட்ட அதை வாங்க மறுத்தவன் கண்களால் அருகில் இருந்த பைலை காட்ட வேகமாக அதை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
பைலை பெற்றவன்
“டிசைன் ரெடியாகி இன்னும் 10 நிமிஷத்தில் என் டேபிளுக்கு வரணும் மிஸ் . நிதா” என்று கூறிவிட்டு திரும்பிச் செல்ல யட்சன் முயல
“எப்படி கடுகடுன்னு சொல்றான் பாரு ! கொஞ்சம் சிரிச்சிட்டு சொல்லுடா ராட்சஸா!” என்று நிதா உதடுகளை மட்டும் அசைத்தபடி பேச
சராலென திரும்பினான் வினய்
“சேய் அகைன்... ஸ்பீக் அவுட் யூ டாமிட்!” – வினய்
“நத்திங் சார் !” - நிதா
“நத்திங் ! யூ சேய்ட் நத்திங் ? ம்ம்ம்... ராட்சஸனா நான் ! இந்த மாதிரி போன்ல கடல போடுறது , ரூட் விடுறதலாம் விட்டுட்டு ஆபிஸ்ல கொஞ்சம் வேலையும் பார்க்கணும். நான் சொல்றது புரியுதா ?... யூ காட் இட் “என்று அவன் சொல்ல,
நிதா தலை வேகமாக ஆடியது.
அவள் தலையசைத்ததும் வெளியே அவன் செல்ல , இங்கு நிதா வேக மூச்சு வாங்கி தன்னை சமன் செய்தாள். அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
“எப்படி திட்டிட்டு போறான் பாரு ! கடலயாம், ரூட் விட்றேனாம். எனக்கு மட்டும் ஒரு சான்ஸ் கிடைக்கட்டும் அப்ப இருக்குடா உனக்கு !” என்று அவனை திட்டித் தீர்த்து தன்னை நிலைபடுத்தியவள் அப்போது தான் ஒன்றை யோசித்தாள் .
“ஆமா நான் வாய அசைக்க தான செஞ்சென் அது எப்படி திரும்பி பார்க்காம இவனுக்கு தெரிஞ்சது. சம்திங் ராங் வித் ஹிம் நிதா கண்டுபிடி” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்.
அப்போது தான் ஞாபகம் வர பெற்றவளாய் வேகமாக அவனை கவனிக்க அதே நேரம் அவனும் தன் முழுகை சட்டையை மடக்கி விட்டுக் கொண்டே உள்ளே வந்து கொண்டிருந்தான். அவன் கையை நிதா பார்க்க அது வெறுமையாக இருந்தது. அதைப் பார்த்தவளுக்கு குழப்பம் அதிகரித்தது.
வேகமாக தன் செல்லில் சாம் அனுப்பிய வீடியோவை ஓட்டிப் பார்த்தாள் .
அது அன்று பார்ட்டி நடைபெற்ற வீடியோ. அதில் பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருக்க அதில் வினய் காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதும் , அரைமணி நேரம் சென்று திரும்பி வருவதுமான பதிவு பதியப்பட்டிருந்தது. ஏதோ தோன்ற நிதா வேகமாக அதை விரிவு படுத்தி பார்த்தாள். அதில் போகும் போது அவன் கையில் இருந்த வி.பி என்ற எழுத்தை தாங்கிய பிரேஸ்லட் வரும்போது இல்லாமல் இருந்தது.. அதை பார்த்து சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் சாம்மின் அலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்ப போனை கையில் எடுக்க அதே நேரம் வினய் அவள் பக்கம் திரும்புவதை பார்த்த நிதா வேகமாக போனை கீழே வைத்துவிட்டு பைலை கையில் எடுத்துக் கொண்டாள்
*************************
முகமூடி அணிந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த வினய், வி.பி என்ற பெயரை தாங்கிய கட்டிடத்தின் உள்ளே நுழைந்தான் . அவன் உள்ளே செல்ல அவனை வித்தியாசமாக பார்த்தனர் அனைவரும்.
வினய் பிரசாத் என்ற பெயர் பலகையை தாங்கி இருந்த ரூமின் வாசல் முன் நின்றவன் சிரித்துக் கொண்டே கதவை திறந்து உள்ளே நுழைய நடுநாயகமாக வீற்றிருந்தான் யட்சன்.
வந்தவனை நெற்றி சுருங்கியபடியே யட்சன் பார்த்துக் கொண்டிருக்க
வினய் அவன் எதிரில் இருந்த சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான்.
அதை பார்த்த யட்சன் பொறுக்க முடியாமல் தன் இருக்கையில் சாய்ந்தமர்ந்து கால் மேல் கால் போட்டபடி நாடியில் தன் ஒரு கையை மடக்கி வைத்தும் , மற்றொரு கையை மேஜைமேல் வைத்து விரல்களை மேஜைமேல் அசைத்தபடி
“யார் மேன் நீ ! உள்ளே பர்மிசன் இல்லாமல் வந்ததும் இல்லாம திமிரா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்க”- யட்சன்
அவன் அப்படி கூறியதும் வினய் சிரித்துக் கொண்டே
“பர்மிசன் ! குட் ஜோக் மேன் ! என் இடத்தில் உட்கார்ந்து என்னையே யார்னு கேட்குற ! வெரி ஃபன்னி யட்சன்” – வினய்
யட்சன் என்று வினய் அழைத்ததும் அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே
“வாட் ஆர் யூ சேயிங் மேன்”– யட்சன்
அதை கேட்டதும் தன் கரத்தை அவன் முன் நீட்டிய வினய்
“ஐ அம் வினய் பிரசாத் ! சன் ஆப் விக்ன பிரசாத்” என்று அறிமுகப்படுத்த அதை கேட்டவன் அதிர்ச்சியாக பார்க்க
அவன் அதிர்ச்சியைப் பார்த்து சிரித்தவன்
“என்னப்பா ! என் அப்பா உன்கிட்ட எதுவும் சொல்லலையா ? ஆச்சரியமா இருக்கு ! எப்படி சொல்லாம இருப்பாரு ? “
“ம்ம்ம்.. ஒரு வேலை மிஸ்டர் பிரசாத் உன்கிட்ட சொல்ல மறந்திருப்பாரோ? “
“நோ ! நோ ! வெயிட்! மறந்திருக்க மாட்டாரு ! மறைக்கணும்னு நினைச்சு பண்ணி இருப்பாரு ? இவ்ளோ அப்பாவியா நீ இருக்கக் கூடாது யட்சா பேபி! “
“ம்ம்ம் யட்சன் ! நைஸ் நேம் ! நல்லா தான் என் டேட் பேர் வச்சிருக்காரு ! இருளின் தலைவன். தலைமகன் ! காவலன் ! “
“ஐ லைக் இட் யட்சா ! என்ன யட்சா பேர்க்கு தகுந்தமாதிரி நீ தலைவனா இருந்து எல்லாரையும் என்கிட்ட இருந்து காப்பாற்றிடு “ என்று வினய் கூற
யட்சனுக்கு கோபம் தலைகேறியது.
அவன் கோபத்தை ரசித்த வினய்
“என்னப்பா ! இதுக்கே இவ்ளோ கோபப்பட்டா எப்படி ? இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டியது , பார்க்க வேண்டியது எல்லாம் நிறைய இருக்கே ! “
“என் இடத்தில் இருக்கிறது ! எனக்கு பதிலா இருக்கிறது அவ்ளோ ஈஸியா என்ன யட்சா பேபி ? விளைவுகளை சந்திக்க மீ ரெடி மேன் !” - என்று வினய் கூறிவிட்டுச் செல்ல
அவன் சொல்லிச் சென்ற விசயத்தை ஜீரணிக்க முடியாமல் ஆக்ரோசமாக நின்ற யட்சன்
கோபத்தில் கண்ணாடி மேஜையை குத்த அது சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.
அப்போது உள்ளே வந்த நிதா கண்ணாடி துகள்கள் அந்த அறை முழுவதும் சிதறிக் கிடக்க அதன் நடுவில் கைகளில் ரத்தம் சொட்டச் சொட்ட நின்று இருந்தவன் நிலையை கண்டதும் பதறி அடித்துக் கொண்டு அவன் அருகில் ஓடி வந்தாள்.
அவள் அருகில் வந்த நிதா பதறியபடியே
“அய்யோ ரத்தம் சார் ! “என்று அவன் கைகளைப் பார்த்தவள் தன் கர்சிப் கொண்டு அவன் கைகளை கட்ட முனைய
எதோ ஞாபகத்தில் இருந்தவன் அவள் தொடுகையால் சுயநினைவிற்கு வந்தான்.
அவள் அவன் அருகில் பதறிக் கொண்டு நிற்பதை விழியெடுக்காமல் பார்த்தவன் முன் பல நினைவுகள் நிழலாட அவன் முகம் பாறை போல் இறுகியது.
அவன் கைகளில் தன் கர்ச்சிப் கொண்டு கட்டிய நிதா
“சார் ! ரத்தம் அதிகமா போகுது ! நான் போய் டாக்டர்க்கு போன் பண்ணிட்டு வரேன் “ என்று கூறிவிட்டு அவள் சென்று விட
அவள் சென்றதும் தன் கையில் கட்டி இருந்த கர்சிப்பை எடுத்தவன்
தன் மற்றொரு கையால் அந்த இடத்தை தடவ ரத்தம் நின்று அந்த இடம் பழைய மாதிரி மாறியது.
*************************
பிரசாத் தன் வீட்டின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருக்க அவர்முன் வந்து நின்றான் யட்சன்.
பிரசாத் அவனை கேள்வியாக பார்க்க
“வினய் பத்தி ஏன் என்கிட்ட சொல்லல ?” – யட்சன்
யட்சன் வினய்யை பற்றி கேட்டதும் பிரசாத் தடுமாறினார். அவனின் தடுமாற்றத்தை நெற்றி சுருங்க பார்த்துக் கொண்டிருந்தான் யட்சன்.
“ அது வந்து யட்சா ! எனக்கே இப்பதான் தெரியும் ? இதை பத்தி உன்கிட்ட நான் சொல்ல வரதுக்குள்ளே அவன் முந்திக்கிட்டான் யட்சா!” – பிரசாத்
“ம்ம்ம். இஸிட் பிரசாத் ! வாவ் ! சூப்பர் ஃபெர்ஃபார்மென்ஸ் ! ஆனா பாருங்க என்னால தான் இதை நம்ப முடியல ? சோ ஃஃபார்ம் ஹவுஸில் நடந்த எல்லாமும் உங்களுக்கு தெரியும் ? . ஐம் ஐ ரைட் மிஸ்டர் பிரசாத் ?” – யட்சன்
“நோ ! யட்சா ! எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது . எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ! என்னை நம்புடா !” – பிரசாத்
“ஓ ! இஸிட் ! இன்னைக்கு ஆபிஸிற்கு வந்து அவன் என்னையே மிரட்டிட்டு போறான். உங்கள கேட்டா தெரியாதுனு சொல்றீங்க ம்ம்ம் ?” என்று சொல்லியவன் பிரசாத் அருகில் வர அவர்க்கு வியர்க்க ஆரம்பித்தது.
அவர் பதட்டதை அருகில் இருந்து ரசித்தவன் “நான் வெஜ் பிரியனா இருக்கேன் ! நான் வெஜ் பிரியனா மாத்திடாதீங்க பிரசாத் ! யூ காட் இட் !” என்று அவரை மிரட்டிய யட்சன் மாடிப்படிகளில் ஏறியபடியே
“அவன் கிட்ட சொல்லி வைங்க பிரசாத் இந்த யட்சன் கிட்ட மோதின யாரையும் அவன் அழிக்காம விட மாட்டான்னு” என்று கூறியவன் தன் ரூமிற்குள் செல்ல இங்கு பிரசாத் கவலையாக நின்றார். அவர் நினைவுகள் அன்று தேவ்வின் வீட்டில் வினய்யை சந்தித்த நாளிற்குச் சென்றது.
அன்று தேவ் வீட்டில் வினய்யை பார்த்தவர் அவனிடம்
“வினய் ! நீ ஏன்டா இங்க இருக்க ! வா நாம் போகலாம் நம் வீட்டுக்கு !” என்று பிரசாத் வினய்யை அழைக்க
“ஜஸ்ட் லீவ் மை ஹேன்ட்ஸ் டேட்! யூ சீட்டட் மீ! ஐ க்நோ வாட் ஐம் டூயிங்?” – வினய்

“ஓ ! நோ ! வினய் ! தேவ்வ நம்பாதே ! அவன் தான் உன்னுடைய இந்த நிலைக்கு காரணம் ! ஜஸ்ட் கம் வித் மீ... ஐ ல் சேவ் யூ மை சன்” – பிரசாத்
“நீங்க என்னை காப்பாத்த போறீங்களா ? உங்க யட்சனை என்கிட்ட இருந்து காப்பாத்துங்க டேட் !” – வினய்
“வேண்டாம் வினய் ! அவன் கிட்ட நீ மோதவும் வேண்டாம் ! உனக்கு இந்த நரக வாழ்க்கையும் வேண்டாம். தேவ் உன்னை வச்சு கேம் விளையாட்டிட்டு இருக்கான் வீணா இதுல நீ மாட்டிக்காத மை சன் ! “
“கம் வித் மீ... அண்ட் ஐ ல் கிவ் யூ ரெஸ்ட் இன் பீஸ் மை சன் “– பிரசாத்
“நோ ! டாட் ! எனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சு இருக்கு ! இவ்ளோ நடந்தும் உங்கள நான் நம்ப தயாரா இல்லை டேட். என் இடத்தில் அவனை எப்படி உங்களால வைக்க முடிஞ்சது டேட் ! இதற்கு உங்களுக்கு மன்னிப்பே கிடையாது – வினய்
நோ ! மை சன்! அன்று நடந்தது எனக்கே தெரியாம நடந்தது. நீன்னு நினைச்சு அவனை மாற்றி அழைச்சுட்டு வந்துட்டேன். இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தனால இந்த மாற்றாட்டம் நடந்துச்சு !
“ட்ரஸ்ட் மீ மை சன்! ஐ ல் சேன்ஞ் எவிரிதிங்க்… ப்ளீஸ் நான் சொல்றத கேட்டு என் கூட வா வினய் !” – பிரசாத்
“நோ ! டேட் ! அவனை அழிச்சா தான் நான் அழிவேன் . அதற்கு தடையா நீங்க இருந்தாலும் நான் உங்களையும் விடமாட்டேன் டேட் ! என்று வினய் கூறியதை நினைத்துப் பார்த்த பிரசாத் ஏதோ நினைத்தபடி போனை எடுத்து ஒருவனுக்கு கால் செய்தார் .
அங்கு என்ன சொல்லப்பட்டதோ !
“எஸ் ! நான் ஆரம்பிச்சு வைச்சதை நானே முடிவுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறேன் மைக்கேல்சன் . அதுக்கு நீ தான் உதவி பண்ணனும்” என்று கூறி போனை வைத்தார் பிரசாத்.
****************************
பிரசாத்திடம் போனில் பேசிய மைக்கேல்சன் தன் முன்னே அமர்ந்து இருந்த அந்த உருவத்தை விழியால் கட்டி போட்டு வாயில் மந்திரத்தை ஜபித்தபடி தன் கைகளில் இருந்த நீரை எடுத்து அந்த உருவத்தின் மேல் தெளிக்க சற்று நேரத்தில் அந்த உருவம் சாம்பலாக மாறியது.
யட்சனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன் 13
பிரசாத் தன் வீட்டின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருக்க அவர்முன் வந்து நின்றான் யட்சன்.
பிரசாத் அவனை கேள்வியாக பார்க்க
"வினய் பத்தி ஏன் என்கிட்ட சொல்லல ?" – யட்சன்
யட்சன் வினய்யை பற்றி கேட்டதும் பிரசாத் தடுமாறினார். அவனின் தடுமாற்றத்தை நெற்றி சுருங்க பார்த்துக் கொண்டிருந்தான் யட்சன்.
"அது வந்து யட்சா ! எனக்கே இப்பதான் தெரியும் ? இதை பத்தி உன்கிட்ட நான் சொல்ல வரதுக்குள்ளே அவன் முந்திக்கிட்டான் யட்சா!" – பிரசாத்
"ம்ம்ம்... இஸ் இட் பிரசாத் ! வாவ் ! நடிப்பு அருமை ! ஆனா பாருங்க என்னால தான் இதை நம்ப முடியல ? சோ ! பார்ம் ஹவுஸில் நடந்த எல்லாமும் உங்களுக்கு தெரியும் ? ஐம் ஐ ரைட் மிஸ்டர் பிரசாத் ? "– யட்சன்
"நோ ! யட்சா ! எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ! என்னை நம்புடா !" – பிரசாத்
"ஓ ! இஸிட் ! உங்களை நம்பனுமா நான்! இன்னைக்கு ஆபிஸிற்கு வந்து அவன் என்னையே மிரட்டிட்டு போறான். உங்கள கேட்டா தெரியாதுனு சொல்றீங்க? என்னை பார்த்தா மடையன் மாதிரி இருக்கா பிரசாத் ம்ம்ம் ? " என்று சொல்லியவன் பிரசாத் அருகில் வர அவர்க்கு வியர்க்க ஆரம்பித்தது.
அவர் பதட்டத்தை அருகில் இருந்து ரசித்தவன் "நான் வெஜ் பிரியனா இருக்கேன் ! என்னை வெஜ் பிரியனா மாத்திடாதீங்க பிரசாத் ! உங்களுக்கு தான் கஷ்டம் ! யூ காட் இட் "! என்று அவரை மிரட்டிய யட்சன் மாடிப்படிகளில் ஏறியபடியே "அவன் கிட்ட சொல்லி வைங்க பிரசாத் ! இந்த யட்சன் கிட்ட மோதினா யாரையும் அவன் அழிக்காம விட மாட்டான்னு" என்று கூறியவன் தன் ரூமிற்குள் செல்ல இங்கு பிரசாத் கவலையாக நின்றார்.
அவர் நினைவுகள் அன்று தேவ்வின் வீட்டில் வினய்யை சந்தித்த நாளிற்குச் சென்றது.
அன்று தேவ் வீட்டில் வினய்யை பார்த்தவர் அவனிடம் "வினய் ! நீ ஏன்டா இங்க இருக்க ! வா நாம் போகலாம்?" என்று பிரசாத் அழைக்க
"எங்க ?" – வினய்
"நம் வீட்டுக்குடா ? வா போகலாம்" என்று கூறியபடியே – பிரசாத் வினய் கைப்பற்றி அழைக்க
"என் கையை விடுங்க டேட் ! நான் உங்ககூட வர மாட்டேன் ! நான் உங்க கூட வர மாட்டேன்" - வினய்
"ஓ ! நோ ! வினய் ! தேவ்வை நம்பாதே ! அவன் தான் உன்னுடைய இந்த நிலைக்கு காரணம் ! என் கூட வாடா ! நான் உனக்கு அமைதிய தர ஏற்பாடு செய்றேன் மை சன்" – பிரசாத்
"நீங்க எனக்கு அமைதி தர போறீங்களா ?குட் ஜோக் டேட் ! என் அமைதி அவன் முடிவுல இருக்கு ! உங்களால் அதை தர முடியுமா ?" – வினய்
"நோ ! மை சன் ! அவனை எதுக்கு நீ தேவையில்லாம டார்கெட் பண்ற ! நான் சொல்றத கொஞ்சம் கேளுடா" – பிரசாத்
"நோ ! டேட் ! நான் கேட்டு நடந்தது போதும் ! நான் சொல்றத நீங்க கேளுங்க டேட் ! முடிஞ்சா உங்களையும் , யட்சனையும் என்கிட்ட இருந்து காப்பாத்திக்கோங்க டேட் !" – வினய்
"வேண்டாம் வினய் ! அவன்கிட்ட நீ மோதவும் வேண்டாம் ! உனக்கு இந்த நரக வாழ்க்கையும் வேண்டாம். தேவ் உன்னை வச்சு கேம் விளையாட்டிட்டு இருக்கான் வீணா இதுல நீ மாட்டிக்காத மை சன் ! என் கூடவா டா" – பிரசாத்
"நோ ! டாட் ! எனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சு இருக்கு ! இவ்ளோ நடந்தும் உங்கள நான் நம்ப தயாரா இல்லை டேட். என் இடத்தில் அவனை எப்படி உங்களால வைக்க முடிஞ்சது டாட் ! இதற்கு உங்களுக்கு மன்னிப்பே கிடையாது" – வினய்
"நோ ! மை சன் ! அன்று நடந்தது எனக்கே தெரியாம நடந்த ஒன்று.. நீன்னு நினைச்சு அவனை மாற்றி அழைச்சுட்டு வந்துட்டேன். இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்ததனால இந்த மாற்றம் நடந்திரிச்சு ! ப்ளீஸ் நான் சொல்றத கேட்டு என் கூட வா வினய் !" – பிரசாத்
"நோ ! டாட் ! அவனை அழிச்சா தான் நான் அழிவேன் . அதற்கு தடையா நீங்க இருந்தாலும் நான் உங்களையும் விடமாட்டேன் டேட் !" என்று வினய் கூறியதை நினைத்துப் பார்த்த பிரசாத் ஏதோ நினைத்தபடி போனை எடுத்து ஒருவனுக்கு கால் செய்தார் .
அங்கு என்ன சொல்லப்பட்டதோ !
"எஸ் ! நான் ஆரம்பிச்சு வைச்சதை நானே முடிவுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறேன் மைக்கில்சன். அதுக்கு நீ தான் உதவி பண்ணனும்" என்று கூறி போனை வைத்தார் பிரசாத்._
பிரசாத்திடம் போனில் பேசிய மைக்கில்சன் தன் முன்னே அமர்ந்து இருந்த அந்த உருவத்தை விழியால் கட்டி போட்டு வாயில் மந்திரத்தை ஜபித்தபடி தன் கைகளில் இருந்த நீரை எடுத்து அந்த உருவத்தின் மேல் தெளிக்க சற்று நேரத்தில் அந்த உருவம் சாம்பலாக மாறியது.
****************
அன்று காலையில் வழக்கம் போல் நிதா ஆபிசிற்குள் நுழைய அங்கு யட்சனின் முன் போலீஸ் நின்று கொண்டிருந்தனர். போலீஸை பார்த்ததும் நிதா மறைவாக நின்று அவர்கள் பேச்சை கவனிக்கத் தொடங்கினாள்.
போலீஸ் யட்சனிடம் "மிஸ்டர் வினய் பிரசாத் ! 14 ஆம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு நீங்க எதற்கு அந்த பார்ம் ஹவுஸிற்கு போனீங்க . நீங்க அங்க போய் என்ன பண்ணிங்க ? ஏன் அந்த மாடுகள் எல்லாம் இறந்து கிடந்தது ?" – போலீஸ்
"ஓ ! வாவ் !? பார்ம் ஹவுஸ் ? மாடுகள் ? சார் ! நல்லா கதை சொல்றீங்க நான் அந்நேரம் பார்ட்டியில் இருந்தேன். நான் எதற்கு அங்க போகணும்" என்று யட்சன் கேட்க
"ஓ ! நீங்க அந்த இடத்திற்கு போகல சரி ! அப்ப இந்த பிரேஸ்லட் உங்களுடையது தான? இந்த பிரேஸ்லட்டில் இருக்கும் V.P நீங்க தானே ? இதற்கு உங்ககிட்ட பதில் இருக்கா மிஸ்டர் வினய் பிரசாத் ?" – போலீஸ்
"அதை கேட்டு சிரித்த யட்சன் என்ன சார் ! நீங்க ? உலகத்திலேயே நான் மட்டும் தான் V.P ன்னு எழுதப்பட்ட இந்த பிரேஸ்லட்ட போட்டிருக்கேனா என்ன ? குட் ஜோக்" – யட்சன்
"புத்திசாலிதனமா பேசுறோம்னு நினைப்பா மிஸ்டர் வினய் ? உங்க பிரேஸ்லட் காணாமப் போய் இருக்கு ! அதுக்கு சாட்சி உங்க கை ? இப்ப உங்க கையில அந்த பிரேஸ்லட் இல்லை ? அது எங்கனு கொஞ்சம் சொல்ல முடியுமா மிஸ்டர்.வினய் ?"- போலீஸ்
"சொல்றது என்ன ? காண்பிக்கிறேன் சார் ! இதோ என் பிரேஸ்லட்!" என்று யட்சன் தன் டேபிளின் டிராயரின் உள்ளே இருந்து பிரேஸ்லட்டை எடுத்துக் காண்பிக்க
அதை வாங்கிப் பார்த்த போலீஸ் “ ஏன் பிரேஸ்லட்டை கையில் போடல மிஸ்டர் வினய் ?" –போலீஸ்
"கையில் காயம் ஏற்பட்டு இருந்தது அதனால அதை போடாம இருந்தேன் . மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்றுமில்லை சார்" என்று யட்சன் கூற
"ஓ ! நீங்க ஏன் உங்க பிரேஸ்லட் தொலைந்து போய் வேற வாங்கியிருக்கக் கூடாது ! வினய் ?" – போலீஸ்
"ம்ம்ம் ! அப்படியும் இருக்கலாம் ! இல்லைனா என்னை மாட்டிவிட என் பிரேஸ்லட்ட யாராவது யூஸ் பண்ணியும் இருக்கலாம்ல சார்" என்று யட்சன் கூற
போலீஸ் ஆபிசரின் போன் அடித்தது. அதை எடுத்து பேசியவர்
"ஓ ! இதோ வரேன் !" என்று பேசி வைத்தவர் யட்சனிடம் திரும்பினார்.
"ஒகே மிஸ்டர் வினய் ! வேறு எதும் தகவல்கள் தேவைப்பட்டா வரோம் என்று கூறி அவர் சென்றுவிட , அவர் சென்றதும் யட்சன் வினய்க்கு கால் செய்தான்.
"Be ready buddy? நீ விட்ட அம்பு இப்ப உன்னை நோக்கி வருது" என்று யட்சன் கூற
அதை கேட்ட வினய் கோபத்தில் போனை வைக்க அவர் எதிரில் வந்து நின்றார் தேவ்.
*************
இரவு மணி 9 யையும் தாண்டிச் சென்று கொண்டிருக்க நிதா சாம்மிடம் வரச் சொன்னதன்படி ஆபிசில் இருந்து கிளம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அன்று பார்த்து யட்சன் அவளுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருந்தான். அவனிடம் சொல்லிச் செல்லவும் பயந்து முழித்துக் கொண்டிருந்தாள் நிதா .
“ ஹேய் யூ லேடி வாட் இஸ் திஸ் ! டிசைன் வரைய சொன்னா என்னமோ சின்ன பிள்ளைங்க வரையுற மாதிரி வரைஞ்சு வச்சுருக்க
பு... ஷி.... ! வாட்ஸ் ராங் வித் யூ “என்று யட்சன் கத்தத் தொடங்க நிதாவிற்கு கண்கள் கலங்கி விட்டது.
அவள் கண் கலங்கியதை பார்த்த யட்சன் "ஓ பிளடி சென்டிமெண்ட் ! கண்ணீர் ! பெண்ணின் ஆயுதம் ! நீ இப்ப இருக்கிற நிலையில் உன்னை வரையச் சொன்னா டிசைன் வராது ! வேறு எதாவது தான் வரும் ! உன்னால என் மூட் ஆப் ! ஷி.... ! ஜஸ்ட் கெட் வுட்" என்று அவன் கத்த வேகமாக அங்கிருந்து நிதா கிளம்பினாள் .
நிதா கிளம்பி வெளியே வந்ததும் தான் அவளுக்கு தன் வண்டிச் சாவியை தன் இருக்கையில் விட்டுவிட்டு வந்தது ஞாபகம் வந்தது.
அதை எடுக்க தன் ரூமிற்குச் திரும்பிச் சென்ற நிதா, கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கே கண்ட காட்சியில் அப்படியே சாக் அடித்தது போல் நின்றாள்.
அங்கே யட்சன் கை , கால்கள் இழுத்துக் கொண்டு வாயில் நுரை தள்ள தரையில் துடித்துக் கொண்டிருந்தான்.
அதை பார்த்த நிதா வேகமாக அவன் அருகில் சென்று அவன் கைகளை பிடித்துக் கொள்ள யட்சன் இவள் கைகளை நன்றாக பிடித்துக் கொண்டான்.
தன் துப்பட்டாவை வைத்து அவன் வாயில் வழிந்த நுரையை துடைத்தவள். அவன் சட்டையின் மேலிருந்த இரண்டு பட்டனை அவிழ்த்துவிட்டு வேகமாக தன் அருகில் உள்ள ரிமோட்டை கொண்டு குளிர்சாதனத்தின் வேகத்தை கூட்டினாள். யட்சன் குளிர் காற்று முகத்தில் பட சற்று ஆசுவாசம் அடைந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் தெளிய ஆரம்பிக்க இவள் பிரசாத்திற்கு போன் செய்தாள் .
இந்த செய்தியை கேட்ட பிரசாத் " இதோ வந்துட்டேன்மா ! நான் வர வரைக்கும் அவனை பார்த்துக்கோ" என்று கூறியபடி காரில் ஏறி அமர்ந்தார் .
இங்கு நிதா அவன் கஷ்டப்படுவதை பார்த்து பொறுக்க முடியாமல் வேகமாக தன் பேக்கை திறந்து அவன் நெற்றியில் தீருநீற்றை பூசியபடியே
'முருகா சரணம் ! உன் திருவடி சரணம் !' என்று அவள் சொல்லிவிட்டு தன் துப்பட்டாவை கொண்டு அவன் மூக்கில் விழுந்த தீருநீற்றை அழிக்க
யட்சன் சட்டென்று கண் விழித்தான் .
அவன் கண்முன் பல காட்சிகள் வந்து போக அவன் உதடுகள் அவனை அறியாமல் ஒரு பெயரை முணுமுணுத்தது.
நிதா ஏதோ அவன் சொல்லவும் கவனிக்கும் பொருட்டு அவன் வாயை பார்க்க முயல கதவை திறந்து கொண்டு வந்து கொண்டிருந்தார் பிரசாத்.
அவரை பார்த்ததும் நிதா "சார் ! டாக்டருக்கு போன் பண்ணுங்க ! அவரு ரொம்ப கஷ்டப்படறார்" என்று கூற
பிரசாத் இடையிட்டார், "நிதா ! அதான் நான் வந்துட்டேன்ல! இனி பிரச்சனையில்லை ! நான் அவனை பார்த்துக்குறேன் . ஏற்கனவே லேட் ஆகிருச்சு அதனால நீ கிளம்புமா நிதா!" என்று பிரசாத் கூற
நிதா யட்சனை திரும்பிப் திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.
யட்சன் கண்கள் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவள் சென்றதும் பிரசாத் யட்சனிடம் விரைந்தார் .
"சாரி யட்சா ! இன்னைக்கு பெளர்ணமின்றதை மறந்துட்டேன்டா . ஒரு பிசினஸ் மீட்டிங்கிற்காக வெளியே போனதுல நேரத்தை கவனிக்கல" –பிரசாத்
அவர் பேசிக் கொண்டே போக கஷ்டப்பட்டு எழுந்தவன் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு வாசலை நோக்கி யட்சன் திரும்ப அருகில் இருந்த கண்ணாடியில் அவன் பிம்பம் தெரிந்தது. அப்போது தான் கவனித்தான் அவன் முகத்தை நெற்றியில் சிறு காயம் ஏற்பட்டு இருந்தது, . அவன் யோசித்துப் பார்க்க திருநீறு இட்ட இடம் எரிந்து இருந்தது.யட்சன் வேகமாக தன் கைகள் கொண்டு அந்த இடத்தில் வைக்க அந்த காயம் மறைந்து பழைய மாதிரியாக நெற்றி மாறியது


ராட்சஸன்:14
ஆபிசை விட்டு வெளியே வந்த நிதாவை எதிர்கொண்டான் சாமா.
"ஹாய் பேப்ஸ் என்னை காபி ஷாப்பிற்கு வர சொல்லிட்டு இங்க என்ன பண்ற நீ ?" - சாமா
"சாரி சாம்! ஆபிஸில் வேலை இருந்ததால என்னால வர முடியல ! நாம நாளைக்கு காபி ஷாப் போகலாமா buddy ? ஆல்ரெடி ஐ அம் டையர்ட்" - நிதா
"ஓ நோ பிராப்ளம் பேப்ஸ் ! ஐ ட்ராப் யூ இன் ஹோம் ! நீ ரெஸ்ட் எடு !" – சாமா
"ஒ வாவ் !சாம் ! சோ கைண்ட் ஆஃப் யூ ! தேங்க்ஸ் buddy" - நிதா
"பேப்ஸ் ! நான் டிராப் பண்ணா உன் டேடி ஹிட்லர் என்னை ஒண்ணும் பண்ண மாட்டாரே ?" என்று சாம் சிரித்துக் கொண்டே கேட்க
"நோ வே சாம் ! அவரு பிசினஸ் டிரிப்பா டென்மார்க் போயிருக்கார். அவர் வரதுக்கு 2 டேஸ்க்கு மேலாகும் . அதனால நோ பிராப்ளம் . அன்ட் ஒன் மோர் திங்க் வாட்எவெர் இட் இஸ்! ஹி இஸ் மை டேட்... சோ... எங்க அப்பாவை ஹிட்லர்னு சொல்லாத சாம் எனக்கு கோபம் வரும் !" – நிதா
"ஒகே... ஒகே... கூல் பேப்ஸ் ! சாரி ! இனி சொல்ல மாட்டேன்" என்று சாம் கூறியபடி தன் காதில் கை வைத்து மன்னிப்பு வேண்ட
அதைப் பார்த்து நிதா சிரித்தாள்.
இருவரும் சிரித்துக் கொண்டு பேசியபடியே காரில் ஏறி அமர இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் யட்சன் .
**************
காரில் சென்றவர்கள் நிதா வீட்டில் சென்று இறங்க அங்கு இவர்களை எதிர்கொண்டார் வெங்கி.
"நிதாம்மா! என்னாச்சு ! ஏன் இவ்ளோ லேட் !" என்று அவர் பதட்டத்தோடு கேட்க
"ஆபிசில் வேலை தாத்தா!" – நிதா
நிதாவிடம் பேசிவிட்டு திரும்பிய வெங்கி அப்போது தான் கவனித்தார் சாமை.
"அடடே ! சாமா தம்பியா ! என்ன இரண்டு பேரும் நண்பர்கள் ஆகிட்டீங்க போல ! ஆனா தம்பி நீங்க என்ன தான் பிரண்ட்ஸ் ஆனாலும் லட்சுமி உங்களை இன்னும் மன்னிக்கவே இல்லை. அங்க பாருங்க அவ உங்களை எப்படி ஆசையா பார்த்துட்டு வரான்னு" என்று வெங்கி கை காண்பிக்க அங்கு சாமை முறைத்தபடியே லமி வந்து கொண்டிருந்தார்.
"அவ இன்னும் உங்க மேல கோபமாகத் தான் இருக்கா தம்பி" என்று கூறியபடி சாம்மை வெங்கி உள்ளே அழைத்துச் செல்ல லமி அவனை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டார்.
அவர் அப்படி செய்ததும் சாம் வருத்தப்பட அதை பொறுக்க முடியாத நிதா லமியிடம் சென்றாள்.
"லமி ! எல்லா தப்பும் நான் தான் செஞ்சேன். காரில் இருந்த அவர்க்கு இதலாம் தெரியாது. அவர் ரொம்ப பாவம் . அவரை மன்னிச்சுடு லமி" என்று நிதா கெஞ்ச
"ம்ம்ம்... முடியாது" என்று லமி முறுக்கிக் கொண்டார் .
நிதா விடாமல் "ப்ளீஸ் லமி.. ப்ளீஸ் லமி.. " என்று பல தடவை கெஞ்சியதும் லமி வேறு வழியில்லாமல்
"சரி ! சரி ! உனக்காக அந்த வெங்கல சாமான மன்னிக்குறேன். அவன சாப்பிட வரச் சொல்" என்று லமி கூறியபடியே சாப்பாட்டை எடுத்து வைக்க உள்ளே விரைந்தார்.
சாம் நிதாவை பார்த்து முறைத்தான்.. நிதா கண்களால் சாமிடம் கெஞ்ச சாம் நிதாவோடு சாப்பிட அமர்ந்தான்.
அங்கு லமி சமைத்து வைத்த உணவை பார்த்த சாம் "ஓ! வாவ்! லமி ! எல்லாம் தமிழ்நாட்டு டிஸ் . ஐ லவ் இட்" என்று கூறியவன் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அவன் பார்வை நிதாவிடம் சென்றது.
அவள் தன் கையில் இருந்த உணவை எடுத்து தன் விரல்கள் அனைத்தையும் வாய்க்குள் வைத்து சாப்பாட்டை விழுங்க அதை பார்த்த சாம் வேகமாக
"யேய் பேப்ஸ் ! இதே மாதிரி தான் என் அத்தையும் சாப்பிடுவாங்க!" என்று சாம் கூற
நிதா அருகில் இருந்த வெங்கியும் , சமையல் அறையில் இருந்து வெளிவந்த லமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்களுக்குள் சில எண்ணங்கள் ஊர்வலம் போனது. அதை நிறுத்திவிட்டு கிட்சனில் இருந்து வெளிவந்த லமி ரவா லட்டை எடுத்து நிதா தட்டில் வைக்க அதை வேகமாக எடுத்து ரசித்து உண்ண ஆரம்பித்தாள் நிதா.
அதை பார்த்தவன் நிதாவிடம் "ஏய் ! உனக்கும் இது பிடிக்குமா ! என் அத்தைக்கும் இது ரொம்ப பிடிக்கும்."என்று அவன் கூற
வெங்கி வேகமாக சாமிடம் "அத்தையா ? யாரு அவங்க?"
"அவங்க என் அப்பாவோட தங்கை தாத்தா. அப்பாக்கு அவங்கனா உயிர் . ஆனா பாவம் அவங்க யார் கூடவும் பேசாம தனியா இருக்காங்க . அப்பாவிடம் காரணம் கேட்டா இதுவரைக்கும் பதில் சொன்னதில்லை. நான் என்றால் அவங்களுக்கு அவ்ளோ இஷ்டம். என் கிட்ட மட்டும் தான் பேசுவாங்க" என்று அவன் கூறிக் கொண்டே போக
லமி அவனை இடையிட்டார், "ஏய் மளிகை சாமான் ! அவங்க பேர் ?" என்று லமி கேட்க
சாம் லமியிடம் "என் பெயர் சாம் ! என்னை அப்படி கூப்பிடாதீங்க ! அப்புறம் நான் லட்சு பாட்டினு கூப்பிடுவேன்"
"ஏய் ! பாட்டின அவ்ளோ தான்" என்று லமி சண்டைக்கு தயாராக இடையில் நிதா புகுந்து அவர்களை சரி செய்ய முற்பட்டாள்.
"சாம் ! லமி ! இரண்டு பேரும் அமைதியா உட்காருங்க ! எப்ப பாரு சண்டை ! உங்க சண்டை தீர்த்து வைக்கிறதே ! என் வேலையா இருக்கு" – நிதா
"பாட்டினு கூப்பிட்டா ! நீ ஏன்டி காண்டாகுற ! ஆனாலும் இந்த வயசுல உனக்கு இவ்ளோ கோபம் ஆகாது லட்சுமி !" – வெங்கி
வெங்கி கூறியதை கேட்டு லமி திட்ட வாய் எடுக்க நிதா வேகமாக பேசினாள்.
"தாத்தா இப்ப நீங்க ஆரம்பிக்காதீங்க ! ஆல்ரெடி ஐ ம் டையர்ட் ! ஜஸ்ட் ஸ்டாப் இட் ! "என்று நிதா கத்த ஆரம்பித்ததும்
அனைவரும் அமைதியாகினர்.
சாம் மட்டும் நிதாவிடம் “ என்னாச்சு பேப்ஸ் ! ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற ! என்ன பிரச்சனை உனக்கு ! எதுக்கு இப்படி ஓவரா ரியாக்ட் பண்ற ? நீ ஆபிஸில் இருந்து வந்ததுல இருந்து சரியில்லை" என்று சாம் கவலையோடு கேட்க
"நத்திங் சாம் ! ஜஸ்ட் டயர்ட் ! "என்று சாமிடம் கூறிய நிதா மனதிற்குள்
"யார்டா ! நீ ! உன்னை பத்தி தெரிஞ்சுக்கலேனா எனக்கு மண்டையே வெடிச்சிரும் போல இருக்கு ! போலீஸ் கிட்ட நீ சொன்னது பொய்னு புத்தி சொல்லுது ! ஆனா மனசு நீ எதையும் செஞ்சிருக்கக் கூடாதுனு பதறுது ! ஏன்னு தெரியலடா ! விரைவில் இதற்கான விடையை நான் கண்டுபிடிக்கிறேன் !" என்று நிதா மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க
இங்கு சாம் அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
இவர்களின் மோன நிலையை வெங்கி தான் கலைத்தார்.
இங்க நடந்த கலவரத்தில் ஒன்றை மறந்திட்டேன் பாருங்க !
"ஆமாம் ! தம்பி உங்க அத்தை பேர் என்ன சொன்னீங்க" என்று வெங்கி கேட்க
"எங்க தாத்தா நீங்க சொல்லவிட்டீங்க ! நான் இன்னும் சொல்லவே இல்லை . அவங்க பெயர் பவ்யா !" என்று சாம் சொல்ல , அதை கேட்ட வெங்கியும், லமியும் யோசனையில் நின்றனர்.
*******************
நிதா காலையில் ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டே ஏதோ யோசனையில் இருக்க அவளை கலைத்தது செல்போன் சத்தம். எடுத்துப் பார்க்க அதில் சாம் என்று திரையில் தெரிந்தது.
அதை எடுத்தவள் சுருதியில்லாமல் "ஹலோ" சொல்ல அதை உணர்ந்த சாம்
"யேய் என்னாச்சு ! ஆர் யூ ஓகே பேப்ஸ் ? நீ இன்னும் சரியாகலயா பேப்ஸ் ?" – சாம்
"நோ மேன் ஐ அம் பைன் ! எதுக்கு கால் பண்ண சாம் ? " – நிதா
"ஹேய் ! ஏதோ பேசனும்னு என்கிட்ட நேற்றே சொன்னியே மறந்துட்டீயா ? ஐ அம் வெயிட்டிங் பேப்ஸ் ! கம் குய்க்! வீட்டிற்கு வெளியில் வெயிட் பண்றேன் ஹீட்லருக்கு பயந்துகிட்டு" என்று சாம் சொன்னது தான் தாமதம் வேகமாக சன்னல் வழியாக கீழே பார்த்த நிதா வேகமாக கீழே சென்று சாமின் முன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள்.
"கிவ் மி அ ஃப்யூ மினிட்ஸ் buddy ! இதோ வந்துடறேன்" என்று நிதா கூற
"யா ! பேப்ஸ் !" என்று சாம் சொன்னது தான் தாமதம் வேகமாக உள்ளே சென்று கிளம்பி வெளியே வந்த நிதாவை லமி மறித்தார்
"நிதா பேபி ! சாப்பிடாம எங்க போற !" – லமி
"லமி ! நான் சாமோட சாப்பிட்டுகிறேன் பை !" என்று கூறியவள் திரும்பி வந்து "அப்புறம் லமி சாம் வீட்டில் இன்னைக்கு பார்ட்டி இருக்கு அதுக்கு போறேன். அதனால் வரதுக்கு லேட்டாகும் . பை! எனக்காக காத்துட்டு இருக்க வேண்டாம் ப்யூட்டி !" என்று கூறிவிட்டு நிதா சிட்டாக பறந்து விட
வெங்கி லமியின் அருகில் விரைந்தார்.
“ என்ன தான் உன் பையன் நிதாவை பவ்யாவிடமிருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்தாலும் விதி நிதாவை பவ்யாயிடமே கூட்டிட்டு போகுது பார் ! இனியாவது நிதாவையும் பவ்யாவையும் கடவுள் பிரிக்காம இருக்கணும் “ – வெங்கி
"ஆரம்பிச்சிட்டீங்களா அவ புராணத்தை! அவளை பாராட்டித்தான் ஆகணுமா?" – லமி
"ம்ம் ஆமாம் ! அப்புறம் உன் பையன் கூட 3 வருஷம் பொறுமையா குடும்பம் நடத்தி இருக்காள அவளை பாராட்டித்தான் ஆகணும்டி கிழவி !" – வெங்கி
"என் பையன் ஒண்ணும் அவ்ளோ மோசம் இல்லை வெங்கி" – லமி
"நீ எப்ப அவனை விட்டு கொடுத்திருக்கடி ! உன் பையன் பணம் சம்பாதிப்பதில் காட்டின அக்கறைய வீட்டில் இருக்குறவங்க கிட்டயும் காட்டி இருக்கணும் ! எதுக்கு சம்பாதிக்கணும்? யாருக்காக சம்பாதிக்கணும்னு தெரியாமலேயே ஓடிட்டு இருக்கான். எதையும் தீர விசாரிக்காம முடிவு பண்ணி அந்த பெண்ணோட மனச நோக அடிச்சிட்டான்" என்று வெங்கி வருத்தத்தோடு கூற
"இப்ப எதுக்கு பழச கிளறிக்கிட்டு இருக்கீங்க ? போய் வேலைய பாருங்க ! வைத்தி எப்பனாலும் வருவான்" என்று லமி கூறியபடியே டீ எடுத்து வைக்க
வெங்கி பெருமூச்சுவிட்டபடியே டீயை குடிக்க ஆரம்பித்தார்.
அதே நேரம் தன் செல்ப்பில் சேலைகளின் அடியில் மறைத்து வைத்த போட்டாவை எடுத்துச் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தார் பவ்யா.
"டாலிமா எப்படிடா இருக்க ? நீ இப்ப வளர்ந்து பெரிய ஆளாகி இருப்ப ? பார்க்குறதுக்கு யாரு மாதிரி இருப்ப டா நீ ! உன்னை பார்க்கனும் போல இருக்கு! ஆனா உன் அப்பா பேசின பேச்சுக்கு அவர் மூஞ்சியில் முழிக்க நான் தயாரா இல்லை. உன்னையாவது அவர் நல்லா பார்த்துக்குவார்னு நான் நம்பிட்டு இருக்கேன்மா" என்று கண்ணீர்விட்டபடியே பேசிக் கொண்டிருந்தார் பவ்யா
அவர் வைத்திருந்த போட்டோவில் சிறு வயது நிதா சிரித்துக் கொண்டிருந்தாள்.

யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்:15
நிதா வந்ததும் காரை எடுத்த சாம் அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு
"என்னாச்சுபா? என்கிட்ட சொன்னா! நான் எதாவது உதவி செய்வேன்ல பேப்ஸ். வாட்ஸ் ஈட்டிங் யூ" – சாம்
அவன் அப்படி கேட்டதும் ஒரு முடிவோடு அவன் பக்கம் திரும்பினாள் நிதா.
"சாம்! என் பாஸ்ஸுக்கும் அந்த செய்திக்கும் ஏதோ தொடர்பு இருக்கும்னு நான் சந்தேகப்படுறேன்." – நிதா
"என்ன செய்தி? என்ன தொடர்பு? நீ என்ன சொல்றனு எனக்கு புரியல பேப்ஸ்?" – சாம்
"சாம்! டிவியில் போன வாரம் பார்ம் ஹவுஸில் ஆடுகள், மாடுகள் இறந்து கிடந்தனு ஒரு செய்தி வெளியானதுல? அது உனக்கு ஞாபகம் இருக்கா?" – நிதா
"ஆமாம்! ஞாபகம் இருக்கு!! இதுல உங்க பாஸ் வினய் எங்க இருந்து வந்தார்?" – சாம்
"சாம் அவர் தான் அங்க நடந்ததுக்கு காரணம்! சம் திங் ராங் வித் ஹிம்" – நிதா
"வாட்? ஆர் யூ கிரேஸி! விளையாடுறீயா நீ! ஓ! அதுக்குத்தான் பார்ட்டியில் நடந்த வீடியோ கேட்டியா? இதனால் அவர்க்கு என்ன லாபம்?" – சாம்
"நோ சாம்! ஐ அம் சிரீயஸ்! அவர் ஏதோ செஞ்சிருக்கார் அந்த ஆடுகளையும் , மாடுகளையும் அதான் அது இறந்து போயிருச்சு? அவர் ஏன் செஞ்சார்? எதற்காக செஞ்சார்னு? என்ன செஞ்சார்னு இனி தான் கண்டுபிடிக்கணும் சாம்" – நிதா
அதற்கு சாம் சிரித்தான். அவன் சிரித்ததை கண்டு எரிச்சலடைந்தவள்
"ஐ அம் நாட் ஜோக்கிங் சாம்! எனக்கு அவர் வித்தியாசமா தெரியுறார்!" – நிதா
"ஒகே! நீ சொல்றத சரின்னே நம்புறேன்! எதை வச்சு சொல்ற இதை அவர் தான் செஞ்சிருக்கார்ன்னு" – சாம்
"பார்ட்டி வீடியோ பார்த்தேன் சாம்! அவர் அரைமணி நேரம் பார்ட்டியில் இல்ல சாம்! அதுமட்டுமில்லை நேற்று வரை பிரேஸ்லட் அவர் கையில் இல்ல! ஆனால் போலிஸ் வந்ததும் அவர் எடுத்து காண்பிக்கிறார்." – நிதா
"அது கூட உண்மையா இருக்கலாம் ல பேப்ஸ். அவர் அரைமணி நேரம் இல்லைனே வச்சிக்கலாம் பேபி! பார்ட்டி ஹால் எங்க இருக்கு? பார்ம் ஹவுஸ் எங்க இருக்கு?அரைமணி நேரத்தில் போயிட்டு வரதெல்லாம் முடியாத ஒன்னு பேப்ஸ்! தேவையில்லாம நீ குழப்பிக்கிறடா" – சாம்
"நோ! சாம்! அப்படியே வேறு யார் செய்தாலும் அந்த மாடுகள், ஆடுகள் லாம் எப்படி செத்தது..? பார்ம் ஹவுஸில் இருந்தவங்க சொன்ன மாதிரி அந்த உருவம் வினய் சார் இல்லைனா வேறு யாராக இருக்கும்? இப்படி பல கேள்வி என் மண்டைய குடையுது. இதற்கான பதில் வினய் சார் கிட்டதான் இருக்கும்னு தோணுது. சாம்!" – நிதா
"அவர்கிட்ட ஏதோ தப்பா இருக்கு!. இப்டித்தான் ஒரு நாள் ரத்தம் வழிய நின்னார்! நான் போய் டாக்டருக்கு இன்பார்ம் பண்ணிட்டு வந்துபார்த்தா அவர் நார்மலா இருக்கார். கைகளில் கூட எந்த காயமும் இல்லை. இது எப்படி சாத்தியம்? நான் பார்க்குறது கனவா? நினைவா? ரொம்ப குழப்பமா இருக்கு சாம்" – நிதா
அதை கேட்டு சிரித்தான் சாம்.
"என்ன? என்னை இடியட் ஆக்க அடுத்த டிராமாவா! நான் நம்பிட்டேன் பேப்ஸ்"-சாம்
"நோ!சாம்! அவரைப் பற்றிய உண்மைய நான் கண்டுபிடிச்சே ஆகணும்! விரைவில் அவர் யார்னு கண்டிபிடிக்கிறேன்?" – நிதா
"ஓகே நிதா! கண்டுபிடிச்சு நீ பெரிய ரிப்போட்டர் ஆக என் வாழ்த்துகள்! இப்ப நாம இறங்க வேண்டிய இடம் வந்திருச்சு! வா காபி சாப்பிட்டே பேசலாம் பேபி!" என்று சாம் சொல்ல நிதாவும் இறங்கினாள்.
உள்ளே சென்றவர்கள் காபி ஷாப்பில் அமர்ந்து காபி சாப்பிட்டபடியே வினய் பற்றிய வாதத்தை நிதா எடுத்துரைக்க ஒரு கட்டத்தில் சாம்
"ஓகே! பேப்ஸ்! நீ சொல்றத சரினே வச்சுக்கலாம்.. எப்படி இதை நீ கண்டுபிடிக்க போற? நீ கண்டுபிடிக்க உனக்கு நான் என்ன பண்ணனும் பேப்ஸ்" என்று சாம் கேட்க
"அதுக்கு ஒரு வழி இருக்கு சாம்" என்று கூறியபடியே தன் திட்டத்தை விவரித்தாள் நிதா.
"ஐ காட் இட்!" – சாம்
" நான் சொன்ன மாதிரி செய்றியா? ஐடியா ஓகே தானே சாம்" என்று நிதா கூற
"ஐ காட் இட்! ஓ கே தான்! ஆனால் ஏன் இப்டி பண்ணனும்? இப்பவும் என்னால் நீ சொன்னதை ஏத்துக்க முடியல? நீ அவர தப்பா புரிஞ்சிட்டு இருக்க பேப்ஸ்?" – சாம்
"நோ! டேமிட்! நீயும் அவரை பத்தி கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்குவ" என்று நிதா ஒரு முடிவோடு கூற சாமும் அதற்கு சம்மதமாக தலையசைத்தான்.
****************
அந்த கட்டிடத்தின் முன் நின்றது அந்த மூன்று உருவமும். அந்த மூன்று உருவங்களும் பதுங்கி பதுங்கி அந்த வீட்டின் சுவர் அருகே நின்று அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஒரு கார் வந்து நின்றது, அதில் இருந்து விக்ன பிரசாத் இறங்கி சுற்றி முற்றிப் பார்க்க வேகமாக அந்த உருவங்கள் குனிந்து கொண்டன.
அவர் உள்ளே சென்றதும் அந்த உருவங்கள் எட்டிப் பார்க்க, எதிரில் இருந்த சன்னல் வழியாக யட்சனும், அவரும் வாக்குவாதம் செய்வது தெளிவாகக் தெரிந்தது. சற்று நேரம் கழித்து வெளியே வந்த விக்னபிரசாத் கோபத்தோடு சென்றுவிட
மூவரில் ஒரு உருவம் தன் தொலைகருவிக் கொண்டு அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த உருவம்
"ஏய்! அங்க பாரு!" என்று அருகில் இருந்த உருவத்திடம் ஒன்றை காண்பிக்க
தன் தொலைகருவியை தன் கண்ணில் இருந்து எடுத்த நிதா சாம் காட்டிய திசையைப் பார்த்தாள்.
அங்கு தூரத்தில் இலக்கற்று ஓடிக் கொண்டிருந்தான் யட்சன்.
அதை பார்த்த நிதா சற்று எக்கிப் பார்த்த நொடியில் கால் தடுமாற வேகமாக அருகில் இருந்த கல் உருண்டது. அந்த சத்தம் கேட்டு வேகமாக
யட்சன் திரும்ப
"ஏய்! போ! போ! அவனுக்கு தெரிஞ்சுருச்சு!" என்று ஓடிய மூவரும் அந்த மரத்தில் பின்னால் ஒளிந்து கொண்டு சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எட்டிப் பார்க்க அங்கு ஒருவனை அடித்துக் கொண்டிருந்தான் யட்சன்.
'உப்ஸ்ஸ்ஸ் நாம எஸ்கேப்' என்று மரத்தில் ஒளிந்து கொண்டிருந்த நிதா மூச்சுவிட அவள் அருகில் நின்று இருந்த சாம்.
"ஆமா பேப்ஸ்! யார் அவன்? ஒரு வேளை அவனும் நம்மள மாதிரியே அவரை பாலோ பண்ண வந்து இருப்பானோ?" - சாம்
"தெரியல! ஆனா! இன்னும் நாம இங்க நின்னா ! மாட்டிக்குவோம் வா.. போகலாம் சாம்" - நிதா
"ச"ரி என்று கூறியவன் அப்போது தான் ஞாபகம் வந்தவனாய்
"ஓ! நோ! பேப்ஸ்! லமியை காணோம்! போச்சு லமி அவன் கையில் மாட்டிட்டாங்க போல பேபி! இதுக்குத்தான் நான் சொன்னேன் லமி வேணாம்னு நீ கேட்டியா?" – சாம்
"ஓவ்ஃபோ சாம்! அங்க பாரு! "என்று நிதா காண்பிக்க அங்கு மரத்தில் மேல் கிளையில் பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தது சாட்சாத் லமி தான்.
அதை பார்த்த சாம் 'ஆ...' என்று வாயை பிளந்தபடி நின்றான்.
அவரிடம் சீக்கிரம் குதி லமி அவன் பார்த்துடப் போறான் என்று நிதா கூறியதும் லமி மேலிருந்து கீழே குதித்தார்.
அதைப் பார்த்த சாம் மயக்கம் போடாத குறையாக நின்றான்.
மூவரும் வேகமாக ஓடி அருகில் நின்று இருந்த அவர்கள் காரில் சென்று அமர்ந்து கொண்டனர். சாம் காரை எடுக்க ஏதோ தோன்ற நிதா திரும்பிப் பார்த்தாள். அங்கு யட்சன் பிடிபட்டவனை அடித்துக் கொண்டு இருந்தான். அதை பார்த்தபடியே சென்றாள் நிதா.
****************
அவனை பிடித்த யட்சன் அவன் கையில் இருந்த போனை பறித்து அதிலிருந்த புகைபடங்களை அழித்தான்.
அழித்தவன் "யார்! உன்னை அனுப்பினதுடா?" என்று அடித்துக் கேட்டுக் கொண்டிருக்க. யட்சன் அடித்ததும் அவன் ஒருவன் பெயரைச் சொன்னான். அதை கேட்ட யட்சன்
"வினய்! என் உண்மையான முகத்தை எல்லாருக்கும் காட்ட முயற்சி செய்றீயா! அதற்கு நான் விட மாட்டேன்டா" என்று கோபத்தில் முணுமுணுத்தான். யட்சன்
******************
இங்கு தேவ் வினய்யிடம் கோபமாக பேசிக் கொண்டிருந்தார்
"வினய் நாம் நினைச்சது நடக்குல? அந்த பிரஸ்லட் நாம தான் வாங்கி அவனை மாட்டிவிட்ட மாதிரி யட்சன் ஆதாரத்தை மாத்திட்டான்." - தேவ்
"ஓ! நோ! அங்கிள்! யட்சன அந்த கேஸ்ல மாட்டிவிட ஆதாரத்தை விட்டுட்டு வந்தேன். ஆனால் அவன் வேறு யாரோ பண்ணியிருக்கிற மாதிரி போலீஸ நம்ப வச்சி தப்பிச்சிட்டான். நம்ம நினைச்சதைவிட அவன் ரொம்ப பலமா இருக்கான். அதனால் அவனை அவன் பலவீனம் கொண்டு தான் அடிக்க முடியும் அங்கிள்." – வினய்
"யா! மைபாய்! போலீஸ் கிட்ட எப்படியோ பேசி சமாளிச்சேன். கொஞ்ச நாள் உன்னை அடக்கி வை. எதாவது செஞ்சு பிரச்சனையில் மாட்டிக்காத. அதுமட்டுமில்லை அவன்கிட்ட கொஞ்சம் கவனமா இரு வினய்! கொஞ்ச நாள் அவனுக்கு எதிரா எதுவும் செய்யாமல் இரு! அதற்குள் அவனின் பலவீனத்தை நான் கண்டுபிடிக்கிறேன்" என்று தேவ் சொல்லியபடியே அவன் தோள்ளை தட்டிவிட்டுச் சென்றார்.

யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்:16
இங்கு நிதா யட்சனை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். பார்ட்டியில் யட்சன் தன்னை பிடித்ததும் அப்போது அவன் கையில் இருந்த பிரேஸ்லட் தன் முன் நிழலாடுவதுமாக யட்சன் பற்றிய சிந்தனையில் இருந்தவள் முன் தோன்றினான் யட்சன்
யட்சன் அவள் அருகில் வந்து அவள் தோளில் முகம் புதைத்து கொண்டிருக்க அதை அவள் உணர்ந்து அவனோடு லயித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் சட்டென்று அவன் வாயில் இருந்து பற்கள் நீண்டு வெளியே வந்து அவளை அவன் கடிக்க அலறிக் கொண்டு எழுந்தாள் நிதா. எழுந்தவள் அருகில் பார்க்க தான் சாமின் அருகில் அமர்ந்து இருக்க, சாம் வண்டியை ஓட்டியபடியே நிதாவை திரும்பிப் பார்த்தான் .
அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்த சாம் "என்னாச்சுமா! ஏன் இப்படி வேர்த்து இருக்குது! என்ன கனவா பேப்ஸ்? என்ன பேபி டையர்ட்டா! இப்படி காரில் போகும் போதே தூங்குற!" – சாம்
"ஆமா சாம்" – நிதா
"என்ன கனவு பேப்ஸ்?" – சாம்
"நத்திங் சாம்" – நிதா
"பார்த்து பேபி! பகல கண்ட கனவு பலிக்கப் போகுதுனு சொல்வாங்க . கனவு ஏதும் பலிக்கப் போகுது" என்று சாம் சிரித்துக் கொண்டே கூற
நிதா சாமை பயத்தோடு பார்த்தாள் .
"என்ன பேபி! பயந்துட்டியா! நான் ஜோக் பண்ணேன்மா! ஜோக் சொன்னா சிரிக்கனும் இப்படி பயப்பார்வை பார்க்கக் கூடாது. ஒரு ரிப்போட்டர் ஆகப் போறவ இப்படி பயப்படலாமா! கமான் பேப்ஸ்! சில் யா" என்று சாம் கிண்டலடிக்க
நிதா கனவின் தாக்கத்தில் சிலையாக அமர்ந்து இருந்தாள்.
நிதா வீடு வரும்வரை பேசவே இல்லை. வீடு வரவும் இறங்கி உள்ளே செல்ல சாமும் நிதாவின் பின்னால் சென்றான்.
உள்ளே சென்ற நிதா சோபாவில் அமர அவள் முகத்தை பார்த்துக் கொண்டே வந்தார் லமி
"ஏய்! செப்பு சாமான்... ஏன்? நிதா முகம் சரியில்லை! என்னடா பண்ண அவள! பார்ட்டில என்னாச்சு?" என்று பின்னால் வந்த சாமை லமி முறைத்துக் கொண்டே கேட்டார்
"கிராணி! நாட் அகேன்! அவ எதுக்கு இப்படி இருக்கான்னு எனக்கு எப்படி தெரியும்! பார்ட்டியில் அவள் நல்லாத்தான் இருந்தா. பார்ட்டியில் என் அத்தைய இன்ட்ரோ தான் பண்ணேன். அப்ப என் அத்தை கூட பேச ஆரம்பிச்சவ பேசிக்கிட்டே இருந்தா என்னையெல்லாம் கண்டுக்கவேயில்லை. இதுல நான் என்னத்த அவள பண்ணேன். அவளுக்கு என்னாச்சுனு அவளையே கேளுங்க கிராணி!" – சாம்
"என் அத்தைக்கு என்னைவிட இப்ப இவள தான் பிடிச்சிருக்கு! மனுமா! மனுமா னு ஒரே கொஞ்சல் தான். அதனால் என்னை திட்டாதீங்க பிளீஸ்" என்று கூறிய சாம் நிதா அருகில் சென்று அமர்ந்தான்.
"லமி சாமை திட்டாத அவன் என்னை ஒண்ணும் பண்ணல" – நிதா
"ஒஹோ! அப்புறம் ! ஏன் நீ இப்படி இருக்க?" – லமி
"அது வந்து லமி.... நான் கனவு கண்டேன்! கனவ நினைச்சு பயந்து போய் இருக்கேன். அந்த கனவு பலிச்சிடுமோனு பயமா இருக்கு லமி" – நிதா
"கண்ட கனவுலா பழிக்கணும்னா இந்நேரம் நான் ஒரு அழகிய கரெக்ட் பண்ணி கல்யாணம் முடிச்சிருக்கணும்! கிழவி மாதிரி இருக்கிற உன் பாட்டிய முடிச்சிருக்க மாட்டேன்" என்று வெங்கி லமியை பார்த்து பேசியபடியே சாம் எதிரில் வந்து அமர்ந்தார்.
"ம்ம்ம்... நான் கூடத்தான் அமிதாப்பச்சன், தர்மேந்திரா னு கனவு கண்டேன் கடைசியில் சொட்ட தலை உங்ககிட்ட வந்து மாட்டிகிட்டேன். கனவுலா பழிச்சதா என்ன?" - லமி
"ஓகோ! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல! போய் அவங்கள வேணா கல்யாணம் பண்ணு உன்னை யாரு வேணானு சொன்னா! ஆனா என்ன? உன்னை பார்த்து அவங்க ஓடாம இருந்தா சரி!" – வெங்கி
"ஓ! நோ! தாத்தா! இது தான் சாக்குனு லமிய நீங்க ரொம்ப டீஸ் பண்றீங்க . லமி பேபி! நீ கவலைபடாதே நான் உன்னை கட்டிக்கிறேன். ஐ லவ் யூ பேபி!" என்று சாம் லமி முன் முட்டியிட்டபடி தன் ஒரு கையை லமி முன் நீட்டி
"வில்.. யூ.. மேரி.. மீ.. பேபி.." என்று சாம் லமியைப் பார்த்து ராகம் போட்டுக் கேட்க
"சாரி! ஐ அம் என்கேஜ்டு..." என்று லமி முறுக்கிக் கொண்டு சொன்னார்.
"சாம் உனக்கு பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா. உன் வாழ்க்கைய பாழாக்கிக்காதடா..." என்று வெங்கி ஒரு பக்கம் கவுண்டர் கொடுத்தார்.
இவர்களின் அட்டூழியத்தை கண்ட நிதாவின் முகத்தில் புன்சிரிப்பு மலர்ந்தது..
"சாம் உனக்கு லமி தான் பொண்ணா கிடைச்சாங்களா? இதுலா உனக்கு ஓவரா தெரியல!" – நிதா
"ஆமா பேப்ஸ்! வேற என்ன பண்ண? கிடைச்சத வச்சி அஜெஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்"- சாம்
"நானே உனக்கு நல்ல பொண்ணா பார்த்து சொல்றேன் சாம். உனக்கு லமி வேண்டாம்." - நிதா
"ஏன் பேப்ஸ்" – சாம்
"ம்ம்ம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு என் லமியின் தரம் ஒன்னும் இறங்கல சாம்" என்று நிதா கூறிவிட்டு ஓடினாள்.
"யூ...யூ...யூ! நில்லுடி! போனா போகுதேன்னு கிழவிக்கு வாழ்க்கை குடுக்கலாம்னு ஒரு விளையாட்டுக்கு சொன்னா ஓவரா பேசுறடி! என் ரேஞ்ச் தெரியாம பேசுறீங்கடி" என்று சாம் துரத்தி நிதாவை பிடிக்க முயன்றான்.
"ஏய்! என்ன சொன்ன கிழவியா! உன் ரேஞ்ச் என்னனு நேத்து பார்த்தேனே தொடை நடுங்கி !நான் மட்டும் வரலேன்னா என் நிதா பேபிய அங்கேயே விட்டுட்டு போய் இருப்ப" என்று லமியும் சேர்ந்து சாமை துரத்தினார்.
"நல்லா கேளு லமி" – நிதா
"என்னது நான் விட்டுட்டு போனேனா! குரங்கு மாதிரி மரத்துல ஏறி எங்கள விட்டு எஸ்கேப் ஆகிட்டு நீ பேசாத கிழவி!" – சாம்
"ஓய்! சாம் என் லமிய கிழவினா சொல்ற? உன்னை! இன்னைக்கு என்ன பண்றேன் பாருடா! லமி அவன பிடி!" என்று நிதா கூற இருவரும் சாமை பிடித்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர் .
அடியை பொறுக்க மாட்டாத சாம் "இது என்னடா வம்பா போச்சு கிழவிய கிழவினு சொல்லாம குமரினா சொல்வாங்க. அதுக்கு இப்படி அடிக்கிறீங்க ரெண்டு பேரும்... தாத்தா காப்பாத்துங்க என்ன"- சாம்
"நோ! மை சன்! எதாவது பேசி வாங்கி கட்டிக்கிற அளவு எனக்கு தெம்பு இல்லை. சீக்கிரம் வாங்குறத வாங்கிட்டு வந்து சேரு மை சன்" என்று தாத்தாவும் கலாய்க்க
"தாத்தா! யூ டூ" - என்று அடி பொறுக்க முடியாமல் கெஞ்ச ஆரம்பித்தான் சாம்.
"சாரி! பேப்ஸ்! லீவ் மீ" என்று சாம் கூறியவுடன் தான் இருவரும் அவனைவிட்டு அருகில் அமர்ந்தனர் .
அனைவரும் மூச்சு வாங்கியபடியே அமர சாம் தான் ஆரம்பித்தான் "பேப்ஸ்! எனக்கு நல்லா தமிழ்நாட்டு பொண்ணா! பட்டிக்காட்டு பொண்ணா வேணும் நிதா" என்று விட்டு பின் வெங்கியிடம் திரும்பி... "ஓய் தாத்தா! அப்பிடியே கேப் ல மை சன் னு சொல்லி வயச குறைக்க பாக்குறிங்க போல... வெரி பேட்... நீங்களும் லமி மாறி கிழவன் தா!நியாபகம் இருக்கட்டும்.."
வெங்கி, லமி அவனை கொடூரமாக முறைக்க
அதை பார்த்து நிதா சிரித்துக் கொண்டே "அப்ப நீ இந்தியா தான் போகணும் சாம்!" – நிதா
"இந்தியா தான போயிரலாம் பேப்ஸ்" – சாம்
"ஓ! ரியலி சாம்! என்னையும் கூட்டிட்டு போ! சாம்! எங்க அம்மா அங்க இருக்கிறதா லமி அடிக்கடி சொல்வாங்க" என்று நிதா ஏக்கத்தோடு கூற
அதை கேட்டு வெங்கியும் , லமியும் வருத்தத்தோடு நின்றனர்.
"ஓகே! பேப்ஸ்! என் அத்தை வருசத்திற்கு ஒரு தடவை அங்க போவாங்க! இந்த தடவை நாமும் அவங்களோடு சேர்ந்து போகலாம்" என்று சாம் கூற
"வாவ்! ஆன்டி கூட இந்தியா! சூப்பர் சாம் "என்று நிதா சந்தோசத்தில் குதித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது இவர்கள் பேச்சில் இடையிட்டார் லமி!
"சாமா! உன் அத்தை இப்ப எங்க இருக்காங்க? எப்ப இந்தியாவில் இருந்து வந்தாங்க"- லமி
"ஏன் இதெல்லாம் கேட்குற லமி?" - சாம்
"சும்மா தான் பா நம்மலாம் தமிழ் நாடுல அதான் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்"- லமி
"அப்படியா லமி! எனக்கு ஒரு 7 வயசு இருக்கும் போதே அவங்க இங்க வந்ததா டேட் சொல்லியிருக்காங்க லமி!" – சாம்
" உங்க அத்தைக்கு கல்யாணம் ஆகிடுச்சா! அவங்களுக்கு எத்தனை குழந்தைகள், வீட்டுக்காரர் என்ன பண்றார்?" – வெங்கி
"தெரியல தாத்தா! அத்தை கிட்ட! அத பத்தி கேட்டா அத்தை அழுவாங்க! அதனால நானும் கேட்க மாட்டேன்" என்று கூறிய சாம்
"ஓ..கே.. கைஸ்! ஐ அம் அல்ரெடி லேட்! ஸீ யூ லேட்டர்" என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட நிதாவும் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
வெங்கி லமி அருகில் வந்தார்.
"என்னாச்சு பவ்யா பத்தி ஓவரா விசாரிக்குற! அவ இருக்கும் போது அவள திட்டி தீர்த்துடீங்க அம்மாவும் , மகனும். இப்ப என்ன அவ மேல பாசம் பொங்குது உனக்கு" – வெங்கி
அவர் அப்படி கூறியதும் அவரை முறைத்த லமி
"நான் எனக்காக ஒன்றும் விசாரிக்கல நிதாக்காக விசாரிச்சேன் அவ பவ்யாவை தேடுறா! அவளுக்கு அம்மாவோட ஏக்கம் இருக்கு. அத நம்மாள குடுக்க முடியாது. அவள் கலங்குறத என்னால் பார்க்க முடியலங்க" - லமி
"நிதாக்காகவாவது அவன் பவ்யாவை மறுபடியும் ஏத்துக்கலாம்மா" என்று வெங்கி லமியிடம் கூறிக் கொண்டிருக்க
"அதற்கு சான்ஸே இல்ல! நான் இருக்கும் வரை அவளை நான் மன்னிக்க மாட்டேன்." என்று கூறியபடியே வந்து நின்றார் வைத்தியநாதன்.
**********
இங்கு பவ்யா பார்ட்டியில் நிதாவை சந்தித்த நிகழ்வை நினைத்துக் கொண்டிருந்தார் .
"டாலிமா! நான் உன்னை பார்த்துட்டேன்டா! அப்படியே உங்க அப்பா எங்கணு வந்து இருக்க. உன் கூட பேசி.. உன் கூட சாப்பிட்டு.. உன் அருகில் இருப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல. உன்னை பத்தி சாம் சொல்லி உன் போட்டோ காண்பிச்சதும் நான் பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை மனு. இந்த பார்ட்டியே உன்னை வெல்கம் பண்ணத்தான். உன் அம்மா நான் தான்னு சொல்ல முடியாத நிலையில் உட்கார்ந்து இருக்கேன்மா நான்" என்று பவ்யா அழுது கரைய அவரை ஒரு கரம் தொட்டது..
திரும்பி பார்க்க அங்கு நின்று இருந்தார் அவர். சாமின் தந்தையும் , பவ்யாவின் அண்ணனுமான மனோகரன்.

யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 17
அந்த ரூமின் உள்ளே ஒருவன் முன் நின்று இருந்தனர் வினய்யும் , தேவ்வும்.
"சார்! நான் கேர்புல்லாதான் இருந்தேன்! ஆனால் அவன் என்னை கண்டுபிடிச்சிட்டான். எனக்கு இன்னோரு சான்ஸ் குடுங்க சார்! என் உயிரை கொடுத்தாவது அவனின் உண்மையான முகத்தை ஆதாரத்தோட நிரூபிக்கிறேன் சார்! ப்ளீஸ்! சார்!" என்று யட்சனிடம் மாட்டி தப்பித்து வந்தவன் தேவ்விடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
தேவ் சிரித்தபடியே "உன் உயிரை கொடுத்து நீ நிரூபிக்கத்தான் போற.... ஆதாரத்தை இல்லை!." என்று கூறியவர் வினய்யிடம் திரும்பி,
"உன் டின்னர் ரெடி மை சன்! முடிச்சிடு அவனை! " என்று சொல்லிவிட்டு வெளியேறினார் தேவ்.
சற்று நேரத்தில் "நோஓஓஓஓஓ....!" என்ற அலறல் சத்தத்துடன் அவன் தரையில் கிடக்க அவனை நோக்கி குனிந்தான் வினய்.
*******
ஆபிசில் நிதா வேலை செய்துக் கொண்டிருக்க யட்சன் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே இருந்தான்.
வேலையில் கவனமாக இருந்த நிதா அதை கவனிக்கவில்லை. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஏதோ தோன்ற
நிதாவிடம் திரும்பி "ஹேய் யூ! உன் காலுக்கு அடியில் ஏதோ ஓடுது பார்!" என்று யட்சன் கூற
" அம்மாச்சி! அம்மாச்சி!" என்று நிதா அலறியடித்தபடியே அங்கும் இங்கும் ஓட இதைப் பார்த்த யட்சனின் முகம் மாறியது.
கீழே பார்த்தபடியே அங்கும் இங்கும் ஓடியவள் சற்று நிதானித்து “ நோ!.. நிதா கூல் பயப்படக்கூடாது! காம் டவுன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு கீழே பார்த்தாள்.
கீழே பார்த்தவள் அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு யட்சனிடம் திரும்பினாள்.
"சார்! இங்கு ஏதும் இல்லையே..." – நிதா
"ஓ! சாரி! நத்திங்! யூ கோ வித் யுவர் வொர்க்" என்று கூறி அவன் வெளியே சென்றான்.
அவன் செயலில் குழம்பிய நிதா அவனை பார்த்துக் கொண்டே, தன் பேக்கை நகர்த்த அவள் பேக்கில் வைத்து இருந்த டாலர் செயின் உருண்டது. அது அருகில் உள்ள கேபினில் புகுந்து கொள்ள அதை எடுப்பதற்காக நிதா வெளியே சென்றாள்.
அவள் வெளியே செல்வதைப் பார்த்த யட்சன்.
வேகமாக உள்ளே வந்து அவள் பேக்கை தேட அவன் தேடிய பொருள் கிட்டாமல் யோசனையோடு சேரில் சென்று அமர்ந்தான்.
இங்கு நிதா அந்த டாலரை கையில் எடுத்து "அப்பாடா! நல்ல வேளை கிடைச்சுருச்சு! டோலு நீ சொன்ன மாதிரி நான் இன்னும் இதை பத்திரமா வைச்சிருக்கேன். ஆனா நீ தான் இன்னும் என்னைத் தேடி வரல!" என்று வருத்ததோடு தனக்குள் சொல்லிக் கொண்டாள் நிதா.
****
இரவில் வேலை முடிந்து நிதா தன் வண்டியில் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்க , ஒரு கார் அவளை கடந்து சென்றது. அதில் யட்சன் அமர்ந்து இருக்க அருகில் ஒரு பெரியவர் அமர்ந்து இருந்தார்..
'இவர் யாரா இருக்கும்? இந்த நேரத்தில் சார் அவரை எங்க கூட்டிட்டு போறாரு?' என்று தனக்குள் யோசித்தபடியே நிதா தன் வீட்டிற்குச் சென்றாள்.
****
மறுநாள் காலையில் ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டிருந்தவள் முன் டிவியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
அங்கு முகத்தை தவிர மற்ற பாகங்கள் சுருங்கிப் போய் அழுகிய நிலையில் ஒருவன் காண்பிக்கப்பட்டான். அருகில் அவன் போட்டோ காட்டப்பட்டிருந்தது.
இங்கு காணப்படும் நபர் மிகவும் கொடுரமான முறையில் செத்துக் கிடந்ததாகவும். இந்த கொலையை யார் செய்தார் என்பதை போலீஸ் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டது.
அந்த செய்தியை முதலில் சாதாரணமாக பார்த்தவள் படத்தில் உள்ள நபரை பார்த்ததும் அதிர்ந்தாள்.
அவன்... அந்த படத்தில் உள்ளவன்.... அன்று யட்சனால் பின்தொடரப்பட்டு அடிக்கப்பட்டவன்.
***************
ராட்சஷன் 18
அன்று ஆபிசிற்கு வந்த நிதா காலையில் பார்த்த செய்தியின் தாக்கத்தினால் பயத்தோடு அவள் அறைக்குச் செல்ல அங்கு யட்சன் தீவிரமாக யாருக்கோ போன் செய்து கொண்டு இருந்தான்.
அவன் நிலையைப் பார்த்ததும் நிதாவிற்கு புரிந்து போனது அவன் நைட் முழுவதும் இங்கு தான் இருந்திருக்கிறான், வீட்டிற்குச் செல்லவில்லையென தெரிந்தது. அருகில் நியூஸ் பேப்பர் எதுவும் திறக்கப் படாமல் இருக்க அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது.
அதைப் பார்த்தவள் அவனைப் பார்க்க பயந்து கொண்டே வேகமாக தன் கேபினுக்குள் சென்று அமர்ந்தாள்.
முதலில் அவளை கவனிக்காத யட்சன் அவள் அமரும் சத்தம் கேட்டு அவளை திரும்பிப் பார்த்தான். அவன் தன்னைப் பார்ப்பதை திரும்பாமல் உணர்ந்த நிதா அவனை பார்க்க பயந்து கொண்டு அவன் பக்கம் திரும்பாமல் தன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தாள்.
சற்று நேரம் கழித்து,
"நிதா!..." என்று யட்சன் அழைத்தது தான் தாமதம் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தாள் நிதா.
அவள் பயத்தை பார்த்தவன் "என்னாச்சு? ஆர் யூ ஓ.கே.?" – யட்சன்
"நத்திங் சார்! ஐ ம் ஓ.கே.!" – நிதா
"ஓ.கே. தென்" என்று கூறிய யட்சன் அவள் அருகில் வந்து அவளிடம் பைல் ஒன்றை நீட்ட அதை கைகள் நடுங்க வாங்கினாள் நிதா.
அவள் வாங்கியதும் "செக் திஸ்..." என்று கூறியவன் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்து செய்தியை வாசிக்க ஆரம்பித்தான்.
செய்தியை படித்தவன் சற்று நேரத்தில்,
"டேமிட்...!" என்று கோபத்தில் மேஜையை குத்த பொருட்கள் சிதறியது. பொருட்கள் சிதறிய சத்தம் கேட்டு வேகமாக தன் இருக்கையில் இருந்து எழுந்து யட்சனின் அருகில் வந்தாள் நிதா. அவன் கோபத்தின் உச்சியில் நின்று இருந்தான்.
யட்சனைப் பார்க்க பயமாக இருக்க நிதா வேகமாக சிதறிய பொருட்களை எடுத்து வைத்தாள். எடுத்து வைத்தபடியே நிதா திரும்பிப் பார்க்க அங்கு யட்சன் இருப்பதாக தெரியவில்லை. சற்றே எக்கி பார்க்க அங்கு எதிரில் இருந்த கண்ணாடி ரூமில் யட்சன் போனில் யாரிடமோ காரசாரமாக பேசிக் கொண்டு இருந்தான்.
யட்சனை பார்த்தபடியே பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிதா அருகில் ஒரு வித்தியாசமான நெடி வீச சுற்றி முற்றி பார்த்தவள் பார்வையில் விழுந்தது யட்சன் ஏதோ குடித்துவிட்டு டேபிள் மேலே வைக்கப் பட்டிருந்த கப்.. அந்த கப்பை கையில் எடுத்துப் பார்த்தாள் நிதா. அதில் சிவப்பு நிறத்தில் ஏதோ எஞ்சி இருக்க, அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டு இருந்தது. ஏதோ தோன்ற வேகமாக அதை எடுத்து மோர்ந்து பார்த்த நிதா அதிர்ந்தாள்.
மோர்ந்து பார்த்தவள் சற்று நேரம் யோசித்துவிட்டு ஒரு முடிவோடு தன் கேபினிற்குச் சென்று அங்கே இருந்த லேப்டாப்பில் எதையோ அடித்துப் பார்க்க அது கூறிய செய்தியில் பயத்தில் அவளுக்கு வேர்த்துக் கொட்டியது.
திக்பிரம்மை பிடித்தவள் போல் லேப்டாப்பையே வெறித்துக் கொண்டு நின்ற நிதா அருகில் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள் . அங்கு யட்சன் போனில் பேசியபடியே வந்து கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் வேகமாக தன் பையை எடுத்துக் கொண்டு அவள் வெளியேற முற்பட சட்டென்று அவளின் வழியை மறித்து நின்றான் யட்சன்.
போனை கட் செய்தவன் “ யூ லேடி எங்க கிளம்பிட்ட? நான் கொடுத்த வேலை முடிச்சுட்டியா? “என்று யட்சன் கேட்க
இல்...ல்ல சார்! அது.... அது.... வந்து...... " என்று திணறினாள் நிதா
அவள் திணறுவதைப் பார்த்தவன் "ஏன் இப்படி வேர்க்குது உனக்கு?" என்று கூறியபடியே அவள் அருகில் யட்சன் வர பயத்தில் பின் வாங்கினாள் நிதா.
அவளிடம் ஏற்பட்ட திடீர் மாற்றங்களை அளவிட்டபடியே அவளின் அருகில் நடந்து வந்தவன் ஒரு கட்டத்தில் நின்று "ஹேய் என்னாச்சு உனக்கு? வேலை முடிக்கல அதுக்குள்ள வீட்டுக்கு கிளம்பிட்ட? இன்னைக்கு இந்த டிசைன் முடிக்கணும் ன்னு உனக்கு தெரியுமா? தெரியாதா?" என்று யட்சன் அதட்ட
அவன் அதட்டலில் பயந்து தன் கையில் இருந்த பையை நழுவவிட்டாள் நிதா.
அவள் கையில் இருந்து நழுவிய பை திறந்து அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறியது. அதில் இருந்த டாலர் உருண்டு யட்சனின் காலின் கீழ் வந்து விழுந்தது. அதை தன் கையில் எடுத்துப் பார்த்தவன் முகம் ரத்தம் நிறம் பூண்டது.
பொருட்களை எடுத்து வைத்தவள் அவனிடம் தோன்றிய மாறுதல்களை கவனிக்காமல் கையில் கிடைத்த பொருட்களை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு வேகமாக அவனைத் தாண்டிச் செல்ல முற்பட அவளைப் பிடித்து நிறுத்தினான் யட்சன்.
அவன் தன்னை பிடிப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காத நிதா பயத்தில் தன் கண்களை மூடியபடியே கத்தினாள்.
"லீவ் மீ! யூ டெவில்!" என்று நிதா கத்த வேகமாக அவள் வாயைப் பொத்தினான் யட்சன்.
"கீப் கொயட்!" என்று யட்சன் அதட்ட
அவன் கத்தலில் அவன் அருகாமையில் பயத்தில் வாயை மூடிக் கொண்டு கண்களில் பயத்தோடு நின்றாள் நிதா.
அவள் வாயை மூடியதும் அவளிடம் டாலரை காட்டி "இந்த டாலர் எப்படி உன்கிட்ட வந்தது?" என்று யட்சன் அவளை ஆராய்ந்து கொண்டே கேட்டான்.
"இது எனக்கு என் பிரண்ட் டோலு கொடுத்தது" என்று நிதா கூறியது தான் தாமதம் அவன் முகத்தில் பல மாற்றங்கள் வந்து போயின.
அதைப் பார்த்தவள்
"ப்ளீஸ்!!!... லீவ் மீ! நான் போகணும்....எனக்குஉங்கள பார்க்க பயமா இருக்கு.... என்னை எதுவும் பண்ணிடாதா... ப்ளீஸ்.... ப்ளீஸ்...." என்று நிதா கெஞ்சியபடியே கூற அவளது பதட்டத்தை, தடுமாற்றத்தை யோசனையோடு பார்த்தவன் அப்போது தான் நிதாவின் டேபிளைப் பார்த்தான். அங்கு லேப்டாப் திறந்து இருக்க அதில் நிதா கடைசியாக பார்த்ததைப் உணர்ந்தவன் அவளை சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
அவன் பார்த்ததும் நிதா ஓட முயற்சிக்க, அவளின் செயலை கண்டு கொண்டவன் வேகமாக அவளை பிடித்து தர தரவென்று இழுத்துச் சென்று சேரில் தள்ளி அவளின் 'ஸ்டோல்' ஐ கொண்டு அவள் கைகளை கட்டியவன் தன் கர்ச்சீப்பால் வாயையும் அடைத்து விட்டு, அருகில் இருந்த போனை எடுத்து
"ஒரு அரைமணி நேரம் யாரையும் என் ரூமிற்கு அனுப்ப வேண்டாம் அபேய்!" என்று கூறிவிட்டு போனை வைத்தவன் நிதா பக்கம் திரும்பினான்.
நிதா கைகளை விடுவிக்க திணறிக் கொண்டிருக்க யட்சன் அவளின் அருகில் குனிந்து“ நான் 'வாம்பையர்' ன்னு உனக்கு தெரிஞ்சுருச்சு! அம் ஐ ரைட்“ என்று அவன் ஆளுமையோடு கேட்க
எச்சில் விழுங்கியபடியே அதற்கு 'ஆம்' என்று தலையசைத்தாள் நிதா.
"ஓ...!" என்று கூறியபடியே எதிரில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன் நாடியில் கைவைத்து அதை தேய்த்தபடியே "அதனால் தான் இந்த பதட்டம், நடுக்கம், ஓட்டம் எல்லாம் ரைட்! இப்ப நீ கிளம்பினதுக்கும் இது தான் காரணமா?" என்று யட்சன் ஒருவித தீவிரத்தோடு கேட்க
அதற்கு தலையை 'ஆம்' என்று ஆட்டினாள் நிதா.
"ஓ! இப்ப உன்னை வெளிய விட்டா என்னைப் பத்தி எல்லார்க்கும் சொல்லிடுவ! ரைட்?" – யட்சன்
அதற்கு அவள் தலையை 'ஆம்' என்பதாக ஆட்டியவள் வேகமாக 'இல்லை' என்பதாக மறுத்து ஆட்டவும் யட்சன் தன் இருக்கையில் இருந்து எழுந்தான்.
அவன் எழுந்த வேகத்தில் இருக்கை அருகில் சென்று விழுந்தது. அதை கண்டவள் முகத்தில் பயம் தாண்டவமாடியது.
ஏதோ யோசிப்பவன் போல் தாடையை தடவிய படியே "சோ! உன்னை வெளியே விட்டா... எனக்கு தான் ஆபத்து! அப்படி நடக்கலாமா! நடக்கத்தான் விடலாமா!" என்று தனக்குத்தானே கூறியபடி மேஜைமேல் கைவைத்து நிதா முகம் நோக்கி குனிய , அவன் முகத்தை அருகில் பார்த்த நிதா கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
"யூ.. யூ... ஜஸ்ட் ஒபன் யுவர் ஐஸ்! யூ பிளடி!" என்று அவன் கத்த நிதா வேகமாக கண்களை திறந்தாள். திறந்தவள் கண்களில் கண்ணீர் அருவி மாதிரி கொட்டியது.
"குட்! ம்ம்ம் சொல்லுங்க மிஸ் மனுநிதா! உங்களை என்ன பண்ணலாம்?" என்று அவளிம் நக்கலாய் கேட்டபடியே அவள் அருகில் வந்தான் யட்சன். அவள் அருகில் வந்தவன் அவள் கைகளை பிடித்து அவன் மூக்கின் அருகில் கொண்டு சென்று மோந்து பார்க்க
"ம்ம்ம்! நல்ல வாசனை! மனு! ரொம்ப பசிக்குது! உன்னை கொஞ்சம் ருசி பார்க்கலாம்னு நினைக்கிறேன்! நீ என்ன நினைக்கிற மனு டார்லிங்?" என்று யட்சன் கூறியபடியே தன் வாயை திறக்க அதை பார்த்த நிதா மயங்கிச் சரிந்தாள்.
*******
ஒரு ரூமில் மயக்கத்தோடு கட்டப்பட்டிருந்தார் பூங்குன்றன். மயக்கம் தெளிந்து எழுந்த அவர் அந்த இடத்தை சுற்றிப் பார்க்க , அப்போது கதவு திறந்தது. கதவு திறந்த திசை நோக்கி திரும்பிப் பார்த்த பூங்குன்றன். அங்கு வந்தவரை கண்டு கத்த ஆரம்பித்துவிட்டார்.
"உனக்கு என்ன தான் வேண்டும்?! ஏன் எங்களை பாடாபடுத்துற. உன் இஷ்டம் போல் தான யட்சன் நடக்குறான். இன்னும் உனக்கு என்ன தான் வேண்டும்?" – பூங்குன்றன்.
"எனக்கு நீ தான் வேண்டும். உன் உயிர் என்கிட்ட பத்திரமா இருக்கிற வரை தான் எனக்கு பாதுகாப்பு" என்று அந்த உருவம் கூற
சற்று நேரத்தில் பூங்குன்றன் கத்தினார், "வேண்டாம்! வேண்டாம்! அவனை ஒன்றும் செய்திடாத நான் அமைதியா இருக்கேன்" என்று அவர் கூற
அதை கேட்டு சிரித்தபடியே அந்த உருவம் அவரை அந்த ரூமில் வைத்து பூட்டியபடியே வெளியில் வந்தது
"என்ன அவர் கிடைக்கலயா? சீக்கிரம் தேடு! அவரை எதாவது பண்ணாதான் அவன் அடங்குவான் தேவ்!" என்று வெறி பிடித்தவன் போல் கத்திக் கொண்டிருந்தான் வினய்.
யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 19
கண்களை திறந்துப் பார்த்த நிதா தான் ஒரு பெட்டில் படுத்து இருப்பதை பார்த்து வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
எழுந்தவள் பயத்தில் வேக மூச்சுகள் எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அருகில் பார்க்க, அவள் எதிரில் யட்சன் ரத்தம் ஊற்றப்பட்ட கோப்பையை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்தவள் வேகமாக தன்னைப் பார்க்க அவள் கைகளில் கட்டுப்போடப்பட்டிருந்தது. கட்டையும் மீறி ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
அவள் பார்வையின் பொருளை கண்டு கொண்டவன் வேண்டுமென்றே ”ஹ்ம்ம்... ருசியா தான் இருக்கு, இன்னும் சாப்பிடணும்னு ஆசையா இருக்கு!" என்று சொல்லிக் கொண்டே யட்சன் அவள் அருகில் வர அலறிக் கொண்டே எழுந்து நின்றாள் நிதா.
“வேண்டாம் சார்! என்னை விட்டுங்க உங்களைப் பத்தி யார் கிட்டையும் சொல்ல மாட்டேன் “ என்று நிதா கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.
அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த யட்சன் "நீ இப்ப போகலாம்.. ஆனா... எனக்கு எதிரா எதாவது வாய் திறந்தேன்னு தெரிஞ்சது!.." என்று அவன் மிரட்ட,.
"பிலீவ் மீ சார்! நீங்க சொன்னபடி செய்றேன்" என்று அவனிடம் கூறிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள் நிதா.
அவள் சென்றதும் ‘டோலு இனி உன் வாழ்க்கை என் கையில் தான்டி. உன்ன பார்த்துட்டேன். இனி நான் உனக்கு யட்சனா இல்லை! ராட்சஷனா தெரியப் போறேன்' என்று தனக்குள் கூறியபடியே யட்சன் கண்களை மூட சில காட்சிகள் ஓடியது. சற்று நேரம் கழித்து கண்களை திறந்தவன் கண்கள் பழிவெறியோடு ஜொலித்தது.
*******
தேவ் வினய்யை தட்டிப் பேசிக் கொண்டிருந்தார்.
"வெல்டன் மை பாய்! நீ இப்ப செஞ்சுட்டு வந்த காரியத்தால நமக்கு தேவையானதை யட்சன் ஈஸியா செஞ்சு கொடுத்திடுவான். வாவ்! 'டிவைட் அன்ட் ரூல்'
குட் ஐடியா. ஆனா நீ உன் அப்பாவுக்காக கொஞ்சம் கருணையாவது காட்டிருக்கலாம் வினய்" என்று தேவ் சொல்லிச் சிரிக்க
"ஹி இஸ் நாட் மை டேட்! என் டேட் டா இருந்தா எனக்கு இந்த முகத்தை கொடுத்து இருக்கமாட்டார்!" என்று கூறியவன் தன் முகமூடியை கழட்டி சிதைந்து இருந்த தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தபடியே தொடர்ந்தான்.
"என் டாட்டை பார்க்க அவ்வளவு ஆசையா இங்க வந்தேன். ஆனா அவரு என்னை பார்க்க விரும்பல! என்னை அனுப்புறதுலயே குறியா இருந்தார்.
என்னை மட்டும் நீங்க திரும்ப வர வைக்கலேன்னா நான் எங்க அப்பாவோட சுயரூபத்தை பார்க்க முடியாமலே போயிருக்கும்" என்று கூறியவன் வெறிபிடித்தவன் போல் கண்ணாடியை உடைத்தான்.
தேவ் அவனை சமாதானப்படுத்தி ரூமிற்கு அனுப்பி வைத்தார்.
வினய் சென்றதும் “உனக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன் வினய்! பாவம் உன் அப்பா என்கிட்ட பயந்து உன்னை பாதுகாத்து வந்தார். ஆனா இப்ப அவரால கூட உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்த முடியல” என்று கூறி சிரித்தவர், போனை எடுத்து விக்னபிரசாத்திற்கு வீடியோ அனுப்பி வைத்தார்.
வீடியோவை அனுப்பி வைத்தவர் தனக்குள் சொல்லிக் கொண்டார் "VP! என் தொழில் எதிரிகளை நான் சும்மா விட மாட்டேன்னு தெரிஞ்சே என் கிட்ட மோதி உன் மகனை இழந்த... இப்ப பாரு அவனை வைத்தே உன்னையும் உன் தொழிலையும் என்ன பண்ணப் போறேன் பாருடா!" என்று கூறிச் சிரித்தார் தேவ்.
****
சற்று நேரம் முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் யட்சன்.
நிதா மயங்கி விழ அவளது கை அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் பட அதில் இருந்த கூர்மையான ஒன்று அவள் கைகளை பதம் பார்த்தது. ரத்தம் அவள் கைகளில் வழிய ஆரம்பிக்க, அதைப் பார்த்தவன் வேகமாக அவளை அருகில் இருந்த தன் ரூமில் படுக்க வைத்து, அவள் கைகளில் வழிந்த ரத்ததை துடைத்தவன் மருந்திட முனைய ரத்தத்தை பார்த்ததும் மிருகமாக மாறத் தொடங்கினான் யட்சன். தன்னை அடக்கிக் கொள்ள பெரும்பாடுபட்டவன், தான் இருந்தால் அவளை எதாவது செய்துவிடுவோம் என பயந்து வேகமாக சென்று விட்டான்.
நிதாவைப் பயமுறுத்த, தான் செய்ததை நினைத்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்த யட்சனின் போன் சத்தமிட அதை எடுத்து பார்த்தான். அதில் வீடியோ அனுப்பப்பட்டிருக்க.. அந்த வீடியோவைப் பார்த்தவன் காரை எடுத்துக் கொண்டு விக்னபிரசாத்திடம் விரைந்தான்.
****
தேவ் அனுப்பிய வீடியோவைப் திறந்து பார்த்தார் விக்னபிரசாத்.
அதில் விக்னபிரசாத் பூங்குன்றனை மிரட்டிக் கொண்டு இருந்த காட்சிகள் படமாக ஓடியது. அதை பார்த்தவர் தன் தலையில் கை வைத்து அமர்ந்தார்.
"வினய் மை சன் என்ன பண்ணி வச்சுருக்க நீ! தேவ் கூட சேர்ந்து நீ செய்த இந்த காரியத்தினால நாம தப்பிக்க இருந்த ஒரு வழியும் நீ அடச்சிட்ட.
தேவ் பத்தி தெரியாம இப்படி பண்ணிட்டு இருக்கியேடா! ஆனா தேவ் தான் உன் இந்த நிலைமைக்கு காரணம். தேவ்னால தான் நீ இறந்து போயிட்ட... அவன் கிட்ட இருந்து உன்னை பாதுகாக்கத் தான் நான் உன்னை தள்ளி இருந்தேன்னு புரிஞ்சிக்காம, நீ தேவ் கூடவே சேர்ந்துகிட்டு உன்னோட அவசரத்தால இப்ப யட்சனை நீ தூண்டிவிட்டுட்டு இருக்க" என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர் நினைவுகள் அந்த கருப்பு தினத்திற்கு சென்றது.
****
அங்கு காரில் சென்று கொண்டிருந்த யட்சன் போனில் ஒரு நம்பருக்கு தொடர்ந்து டயல் செய்து கொண்டே இருந்தான். போன் எடுக்கப்பட்டதும்
"எங்கடா அவரை வச்சி இருக்கீங்க சொல்லுங்கடா?" – யட்சன்
அதற்கு என்ன சொல்லப்பட்டதோ
"அவர்க்கு மட்டும் எதாவது ஆச்சு? உன் பாஸ்ஸ நான் சும்மா விடமாட்டேன்டா" என்று கத்திவிட்டு போனை வைத்தான் யட்சன்.
போனை வைத்ததும் காரை நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கில் படுத்துக் கொண்டவன் மனம் அரற்றியது.
"அய்யா! நீங்க எங்க இருக்கீங்க? என்னை காப்பாற்றி, படிக்க வைச்ச நீங்க இப்ப பாதுகாப்பா இருக்கீங்க தான? உயிரோடு இருக்கீங்க தானே?" என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவன் நினைவுகள் பூங்குன்றனை சந்தித்த நாளிற்குச் சென்றது.
யட்சன், விக்னபிரசாத்தின் நினைவுகள் அந்த கருப்பு தினத்திற்குச் சென்றது.
ராட்சஷன் 20
சருகுகள் மிதிக்கப் பட ஓடி வந்து கொண்டிருந்தாள் ஒரு பெண். அவள் கைகளை பிடித்துக் கொண்டே ஒரு சிறுவன் மூச்சு வாங்க அவளுடன் ஓடி வந்து கொண்டிருந்தான்.
அவர்கள் எவ்வளவு வேகமாக ஓடி வந்தாளும் அவர்களை பிடித்து விட்டான் அவன். அவன் அவளை பிடித்து கழுத்தை அழுத்த
“வேண்டாம் யஸ்! என்னை விட்டுடு’’ என்று அவள் வலியில் கத்த அந்த சிறுவன் யஸ்சை பின்னால் இருந்து அடித்தான்.
இப்போது யஸ்சின் கவனம் சிறுவனிடம் திரும்ப அந்த பெண் கத்தினாள் “ ஓடு யவன்! நிக்காத" என்று அவள் கத்த,
யஸ் அவள் கழுத்தை பிடித்து திரும்பவும் நெறிக்க ஆரம்பிக்க சற்று நேரத்தில் அவள் தரையில் வீழ்ந்தாள் பேச்சு மூச்சின்றி.
இதனை ஒரு மரத்தில் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான் யவன். பயத்தில் அவனுக்கு வாயில் நுரை தள்ள கைகள் இழுக்கப்பட துடித்தான் யவன்.
யவன் கீழே விழவும் ஒரு கை அவனைத் தூக்கிச் சென்றது.
கண்விழித்த யவன் முன் இருந்தார் ஒரு பெரியவர்.
அவரைப் பார்த்ததும் பயத்தில் யவன் எழ முயற்சிக்க
"பயப்படாத தம்பி! நீ பாதுகாப்பாதான் இருக்க" என்று அவர் கூற சற்று ஆசுவாசம் அடைந்தான்.
அவன் எதிரில் வந்து அமர்ந்தார் பூங்குன்றன்.
"இப்ப பரவாயில்லையா தம்பி!" – பூங்குன்றன்.
"நான் போகணும் என் அக்காக்கு என்ன ஆச்சு? நான் போய் அவங்க காப்பாற்றனும் என்னை விடுங்க" என்று யவன் கத்த ஆரம்பித்துவிட்டான்.
"கத்தாத தம்பி! டாக்டர் டென்சன் ஆகக் கூடாது ன்னு சொல்லி இருக்கார்! அப்படி டென்சன் ஆனா மறுபடியும் பிக்ஸ் வந்துடுமாம்" – பூங்குன்றன்.
"அப்ப என் அக்காக்கு என்ன ஆச்சு?" – யவன்
"உன்ன தான் தம்பி என்னால காப்பாத்த முடிஞ்சிச்சு. உன் அக்காவை என்னால காப்பாத்த முடியல... என்னை மன்னிச்சுரு" – பூங்குன்றன்
அவர் அப்படி கூறியதும் "அக்கா! அக்கா" என்று கத்தியவன் திரும்பவும் மயங்கினான்.
அடுத்து வந்த நாளில் இருவரும் வேறு ஊருக்கு பயணிக்க யவன் அதன்பின் அமைதியாகவே இருந்தான். அவனை பேச வைக்க பூங்குன்றன் எவ்வளவோ முயன்றும் அவனை மாற்ற முடியவில்லை.
யவன் எப்பொழுதும் தனிமையில் அமர்ந்து கைகளில் எதையோ வைத்துப் பேசிக் கொண்டிருப்பான் இல்லாவிட்டால் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பான்... கீழே கிடக்கும் ஒரு சிறுதுண்டு சீட்டை கூட விடுவதில்லை.
யவனுக்கு படிப்பில் இருந்த ஆர்வத்தை பார்த்த பூங்குன்றன் தான் பணிபுரிந்து கொண்டிருந்த கல்லூரியில் தன் துறையிலேயே சேர்த்து அவனை படிக்க வைத்தார். கல்லூரி நேரம் போக மற்ற நேரத்தில் தனக்கென்று ஒரு கூடம் அமைத்து பால் பவுடர் தயாரிப்பை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் பூங்குன்றன்.
அவர் ஆராய்ந்ததை கட்டுரையாக எழுதி நாளிதழில் வெளியிட அவர் கட்டுரையை படித்த விக்னபிரசாத் தன் பால் பவுடர் தயாரிப்பில் அவரை சேர்த்துக் கொண்டார்.
அன்றிலிருந்து அவர்களது வாழ்க்கை லண்டன் நோக்கிப் பயணப்பட்டது.
அங்கு படித்துக் கொண்டே, பார்ட் டைம் வேலை செய்து கொண்டிருந்த யவன் தனிமையான நேரத்தில் கைகளில் எதையோ வைத்துப் பேசிக் கொண்டிருப்பதை மட்டும் விடவில்லை.
இப்படியாக சென்று கொண்டிந்தது யவன் வாழ்க்கை.
அன்று ஒருநாள் யவன் வைத்தியை தற்செயலாக லண்டனில் பார்த்ததும் அவன் முன் பல ஞாபகங்கள் வந்து போக நிதானம் தவறி வந்த காரை கவனிக்காமல் அதன் மேல் மோதினான்.
****
அன்று பூங்குன்றன் விக்னபிரசாத்திடம் தான் ஆராய்ந்ததை கொடுக்க அவருக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிரில் எதர்ச்சையாக அவர் பார்க்க அங்கு விக்னபிரசாத் ஒரு இளைஞனிடம் காரசாரமாக எதோ பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் கத்திவிட்டு அந்த இளைஞன் வெளியில் சென்று விட, பூங்குன்றன் உள்ளே சென்றார்.
பூங்குன்றன் தன் பைலை நீட்ட அதை வாங்கிய விக்னபிரசாத் பார்த்துக் கொண்டிருக்கும் போதே போன் கால் வந்தது. அதை எடுத்து காதில் வைத்தவர் அதிர்ச்சியில் நின்றுவிட்டார்.
"இதோ உடனே வரேன்" என்று கூறிவிட்டு, அவர் வேகமாக சென்றுவிட இங்கு பூங்குன்றன் தனித்து நின்றார்.
வேறு வழியில்லாமல் பூங்குன்றனும் வெளியே வர அவர்க்கு போன் கால் வந்தது. அதை உயிர்பித்தவர் அங்கு கூறப்பட்ட செய்தியில் யவன் என்று கத்தியபடியே அதில் சொல்லப்பட்ட இடம் நோக்கி விரைந்தார்.
*******
தேவ் முன் ஒருவன் நிற்க, அவனிடம் பணக்கட்டுகளை எடுத்து நீட்டினார் தேவ்.
"நல்ல வேலை செஞ்சுருக்க!" என்று தேவ் பாராட்ட எதிரில் நின்றவன் சிரித்தான்.
"எதுவும் பிரச்சனை வராதுல?" - தேவ்
"சார்! நம்ம வேலை பக்காவா இருக்கும். வினய்க்கு தெரியாமயே போதை மருந்து கொடுத்து காரில் ஏற்றி, ஆக்ஸிடண்ட் பண்ண வச்சு. பக்காவா ப்ளான் பண்ணி முடிச்சிட்டேன் சார். அதனால நம்ம மேலே யாருக்கும் சந்தேகம் வராது." என்று அவன் கூற
"குட்! இது போதுமே! விக்னபிரசாத்! யூ ஆர் அவுட்" என்று தேவ் பழிவெறியோடு சிரித்தார்.
யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 21
காரில் ஏறிச் சென்ற விக்ன பிரசாத் ஒரு மருத்துவமனை முன் காரை நிறுத்தி இறங்கினார். வேகமாக உள்ளே சென்றவர் ஒரு அறையின் முன் நிற்க, கதவை திறந்து கொண்டு சடலமாக வினய்யை கொண்டு வந்தனர்.
அதைப் பார்த்து "இல்லை... என் பையன் சாகல! நான் சாக விடமாட்டேன் அவனை!" என்று கூறி ப்ரசாத் கதற,
அவரின் அருகில் வந்த அபேய் "சார்! நம்ம வினய் ஒருவன் மீது கார் ஏற்றி அந்த பையன் இப்ப ரொம்ப சீரியஸா இருக்கான்!" என்று கூற,
தன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தார் பிரசாத்.
"வினய் இறந்தது யாருக்கும் தெரிய வேண்டாம்! நான் சொன்ன மாதிரி செய்!" என்று கூறிய பிரசாத் அவனிடம் சில பல விஷயங்களை சொன்னார்.
அபேய் சென்றதும் பிரசாத் வினயின் காரில் அடிபட்டவனை பார்க்கச் சென்றார்.
அங்கு யவன் முகம் சிதைந்த நிலையில் கை, கால்களில் அடியோடு மூச்சுவிட மிக சிரமப்பட்டு படுத்துக் கிடக்க, அவன் அருகில் பூங்குன்றன் அழுது கொண்டு இருந்தார்.
பூங்குன்றனை பார்த்ததும் அதிர்ந்த ப்ரசாத் அவர் அருகில் சென்றார்.
"பூங்குன்றன் நீங்களா? நீங்க எப்படி இங்கே?" – பிரசாத்.
"சார்! இது என் பையன்" – என்றார் பூங்குன்றன் அழுதவாறே .
"ஓ! நோ! சாரி பூங்குன்றன்! கவலைப்படாதீங்க! உங்க மகனை நல்லபடியா பிழைக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு" - பிரசாத்
பிரசாத் பூங்குன்றனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே போலீஸ் வருவதைப் பார்த்த பிரசாத் தன் குரலை தனித்து பூங்குன்றனிடம் பேசினார்.
"பூங்குன்றன் கவலைப்படாதீங்க! எல்லாம் சரியாகிடும் நான் அவனை பிழைக்க வைச்சிடுவேன்.. எவ்வளவு செலவானாலும் நா பாத்துக்கிறேன்" என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே போலீஸ் அவர்கள் அருகில் வந்து விட்டார்கள். உடனே "ப்ளீஸ்... பூங்குன்றன் என் மகனைப் பத்தி எதுவும் சொல்லிடாதீங்க! நான் என் பையன் செய்த தவறை சரி செஞ்சுடுறேன். வேறு எதாவது என்னை மீறி செஞ்சா உங்க மகனும் இருக்க மாட்டான்" என்று அடிக்குரலில் மிரட்டிவிட்டு, போலீஸிடம் "இங்க முடிச்சிட்டு வாங்க.. நா என் பையன் ரூம் ல வெய்ட் பண்றேன்"பிரசாத் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.
போலீஸும் "ஓகே சார்... நீங்க கவல படாதீங்க... எல்லாம் நாங்க பாத்துக்கிறோம்" என்றனர்.
பூங்குன்றன் போலீஸில் பிரசாத்தின் செல்வாக்கை பார்த்து பயந்து போலீஸ் விசாரித்ததற்கு பயத்தில் வினய்யைப் பற்றி எதுவும் சொல்லாமல் மழுப்பினார் பூங்குன்றன்.
அங்கு யவன் துடித்துக் கொண்டிருந்தான். தலையில் அடிப்பட்டதால் அதிக ரத்தப் போக்கு காரணமாக அவன் தன் இறுதி நொடியை எண்ணிக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் "நான் வாழணும்! என்னை யாரையாவது காப்பாற்றுங்க! நான் அழிக்கணும் அவனை. நான் செத்தாலும் அவனை விட மாட்டேன்" என்று சொல்லி புலம்ப,
மருத்துவர்களின் போராட்டம் வீணாக தன் இறுதி நொடிவரை "அவனை விட மாட்டேன்" என்று புலம்பியபடியே தன் இறுதி மூச்சைவிட்டான் யவன்.
*******
பிரசாத் சற்று நேரம் யோசனையில் நின்றுவிட்டு போலீஸ் சென்றதும் பூங்குன்றனை நோக்கிச் சென்றார்.
"பூங்குன்றன் சார்! சாரி உங்க பையன் இழப்பு பெரிதுதான்! ஆனா என் பையன் சுயநினைவில்லாம நடந்தது இது. சோ இத பெரிதுபடுத்தாமல் பையன புதைச்சிட்டு உங்கள பார்த்துக்கோங்க சார்! இந்த விசயம் போலீஸிற்கு போச்சு உங்க பையனுக்கு துணையா நீங்களும் போகனும்" என்று அவரை எச்சரித்துவிட்டு பிரசாத் சென்று விட்டார்.
பூங்குன்றன் சில நொடிகள் பிரசாத்தின் வார்த்தையில் அதிர்ந்து நின்று விட்டார். பின் தானாக தெளிந்து அழுது கொண்டே யவனின் சடலத்தை வாங்கச் சென்றார்.
****
அபேய் பிரசாத்திடம் வந்தான்.
"சார்! அவர் நம்பர் கிடைச்சிருச்சு! அவர் இப்ப லைவ் ஸோ பண்ணிட்டு இருக்கார்! அது முடிஞ்சதும் அவரை நாம பார்க்கலாம்.... அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன்" என்று அபேய் கூற பிரசாத் கத்தினார்.
"நோ! அபேய்! உனக்கு புரியல.... இப்ப அவ்ளோ டைம் நம்ம கிட்ட இல்ல! அவர் வர வரைக்கும் என்னால பொறுமையா இருக்க முடியாது.... ஐ வான்ட் டூ மீட் ஹிம் ரைட் நௌ! தேவ் வினய் இறந்ததை ஸ்மெல் பண்ணுறதுக்குள்ளே வினய் எழுந்தாகனும்" என்று பிரசாத் சொல்லியபடியே காரில் ஏறி அமர்ந்தார்.
அபேய் ஃபோனில் யார்யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்... எதுவும் பிரசாத் கவனத்தில் விழவில்லை.
கார் அடுத்து அரைமணி நேரத்தில் ஒரு வீட்டின் முன் நின்றது. ப்ரசாத்தை வாயிலில் வந்து வரவேற்றார் மைக்கேல்சன்.
பிரசாத்தை உள்ளே அழைத்துச் சென்ற மைக்கேல்சன் பிரசாத்தை அமர வைத்துவிட்டு அவர் எதிரில் அமர்ந்தார்.
"என்ன பிரசாத்! பிசினஸ் டைகூன்! இன்னேரத்தில் ஒரு சாதாரண மனிதன் என்னை தேடி வந்து இருக்கீங்க!" – மைக்கேல்சன்.
"நீ சாதாரண மனிதன் கிடையாது மைக்கேல்! லண்டனில் பல ரீசர்ச் செய்து பல சாதனைகள் படைத்தவன்னு தெரியும்!" – பிரசாத்.
"ஓ! சோ என் பேக்ரவுண்ட் தெரிஞ்சிட்டு தான் வந்து இருக்கீங்க! ஐ அம் இம்பிரஸ்ட்! டெல் மீ வாட் கென் ஐ டூ ஃபார் யூ!" – மைக்கேல்சன்.
"நேற்று தான் உன் ஒரு இன்டர்வியூ பார்த்தேன் டிவியில்... ஆத்மா! ஆவிகள்! பேய்! பிசாசு! வெம்பயர்! இறந்தவங்க உயிரோட வரது! இது மாதிரிலாம் பேசிட்டு இருந்த! அதான் உன்னை தேடி வந்தேன்! உன்னால தான் இப்ப எனக்கு உதவி செய்ய முடியும்" என்று பிரசாத் கூற மைக்கேல்சன் புரியாமல் பார்த்தான்.
"நீங்க என்ன சொல்ல வர்றீங்க பிரசாத்!" – மைக்கேல்சன்.
"எனக்கு தெரியும் நீ புரோபசரா காலேஜ்ல வேலை பார்த்தாலும் பேய் ஓட்டுறது! இறந்தவங்களை திரும்ப உயிர்ப்பிக்குறது, இது மாதிரி விசயங்களில் நீ ரீசர்ச் பண்றேன்னு தெரியும்! அதுவும் இல்லீகலா!" – பிரசாத்.
"ம்ம்ம்! நாட் பேட் பிரசாத்! என்னை பத்திய ஜாதகமே உங்ககிட்ட இருக்கு போல! ம்ம் குட்! லெட் மீ கம் டூ த பாய்ண்ட்! நான் இப்ப என்ன பண்ணனும்!" – மைக்கேல்சன்.
"ஐ வாண்ட் மை சன் பேக்!" என்று பிரசாத் கூற மைக்கேல்சன் வாய்விட்டுச் சிரித்தார்.
"ம்ம்ம் குட் ஜோக்! பிரசாத் அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?" – மைக்கேல்சன்.
"உன்னால முடியும்... அது எனக்கு தெரியும்... அதான் உன்னத்தேடி வந்துருக்கேன்... எப்படினாலும் எனக்கு என் பையன் வேணும்! ஐ நீட் ஹிம் அலைவ்!நோட்... 'எப்படியானாலும்'...." என்று பிரசாத் அந்த வார்த்தையை அழுத்தி சொல்ல
மைக்கேல்சன் தன் சிரிப்பை அடக்கிவிட்டு அவர் முன் குனிந்தார் "ஓகே... ஜோக்ஸ் அப்பார்ட்.... பட் அதுக்கு நெறய செலவு ஆகுமே மிஸ்டர் பிரசாத்! – மைக்கேல்சன்
"எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை... நான் பாத்துக்குறேன்... நீ வேலையை ஸ்டார்ட் பண்ணு" என்று பிரசாத் சொல்ல
மைக்கேல்சன் வேகமாக "டன் பிரசாத்!" என்று எழ இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.
*******
இங்கு தேவ்விடம் அவர் போனில் வினய்யின் சடலம் காண்பிக்கப்பட்டது.
அதை பார்த்த தேவ் கண்களில் கண்ணீர் வடிந்தது.
வினய்யின் சடலத்தைப் பார்த்த தேவ் அந்த அறை அதிர கண்களில் கண்ணீருடன் சிரித்தார்.
"விபி! உன் சாவுக்கு பலி தீர்த்துட்டேன்டா!" என்று அவர் கூறியபடி ஒரு சிறு பையனின் போட்டாவை வைத்து கண்ணீருடன் பேசினார்.
மாறுகிறான்.... யட்சனாக வருவான்...
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 22
திரவங்கள் பல சூழ்ந்து இருக்க, குடுவைகள் பல அடுக்கி வைக்கப்பட்டிருக்க மேலே வெள்ளை கோட் மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அந்த மனிதர் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அவரை தேடி ஒருவன் வந்தான்.
வந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அவர் முடியாது என்று மறுத்துக் கொண்டிருக்க அதன்பின் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தேறியது இறுதியில் அவன் சொன்னதற்கு அவர் அரைமனத்துடன் சம்மதித்து ஒரு அறைக்குள் சென்று மறைந்தார்.
அறையில் இருந்து வெளிவந்த அந்த மனிதரின் கைகளில் அந்த சிறு பெட்டி இருக்க, அதை அவர் பெரும் தயக்கத்துடன் தன் கைகளில் இருந்து எதிரில் இருந்த மனிதனை பார்த்துக் கொடுத்தார்.
அவர் தயக்கத்தை அளவிட்ட அந்த மனிதன் "ஓ! நோ! பார்ட்னர்! நாம செய்யறது வியாபாரம்! தொழில் செய்றதில் எல்லாம் பாவம்! புண்ணியம் பார்க்ககூடாது" என்று பார்ட்னர் என்று அழைக்கப்பட்ட நபரிடம் பேசிக் கொண்டிருந்தான் மைக்கேல்சன்.
"வேண்டாம்! மைக்கேல்! இது விபரீதத்தை விளைவிக்கும்! ஒரு இறந்த மனிதனை வெம்பையரா மாத்துறது உலக நியதிக்கு புறம்பானது! அவனால் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டாகும்!" என்று மைக்கேல்சன் பார்ட்னர் என்று அழைத்த அந்த மனிதர் விஜயன் கூற அதை மறுத்து பேசினான் மைக்கேல்சன்.
"நோ! விஜயன்! நம்ம ரிசர்ச்க்கு அங்கீகாரம் கிடைச்சா நாம ஏன் இப்படி மறைமுகமா காசுக்கு பண்ணணும்! நேர் வழியில் போனா எதுக்கும் மதிப்பு கிடையாது விஜயன். நீங்க எனக்கு காலேஜ் சீனியரா இருந்துட்டு நான் அட்வைஸ் பண்ற நிலையை உருவாக்காதீங்க விஜயன். நம்ம ரீசர்ச் அங்கீகரிக்க வேண்டியவங்களுக்கு உண்மையா இருந்துட்டு போயிருவோம் சீனியர்! அதுமில்லாம நாம இப்ப ரிசர்ச் செய்து உயிரோட வர வைக்க போறது ஒரு வெஜீட்டேரியன் வெம்பையர். அவனால எந்த ஆபத்தும் வராது! அவன் பசி ஆடு , மாட்டோட ரத்ததோட நின்று போயிடும்! அவன் மனிதனை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்! நீங்க வீணா கவலைபடுறீங்க!" – மைக்கேல்சன்.
"உனக்கு நான் சொல்ல வரது புரியலை மைக்கேல்! இயற்கை மாற்றங்கள் மனிதனுக்குள்ளேயே பல மாறுதல்களை உண்டாக்குது! வைரஸ் , பேக்டீரியா னு புது புது நோய்களை உருவாக்குது! சாதாரண மனிதனுக்கே அப்படினா! வெம்பையர்க்கு? யூ ஜஸ்ட் இமாஜின்! அவன் மனித ரத்தத்தை குடிக்கும் சாத்தானா கூட மாறலாம்! தேவையில்லாம பணத்துக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்காதடா! இது உலக அழிவுக்கு வழிவகுக்கும்.." என்று விஜயன் எச்சரிக்க அதை கேட்ட மைக்கேல்சன் கோபமானான்.
"உங்க அறிவுரைக்கு ரொம்ப தேங்க்ஸ்... நா உங்க அறிவுரையை கேட் க இங்க வரலை! நமக்கு இப்ப நேரம் குறைவா இருக்கு! வாங்க.... இல்ல.. இல்ல... நீங்க வந்தே ஆகனும்... கமான்.... போகலாம் விஜயன்! பிரசாத் நமக்காக அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பார் என்று மைக்கேல்சன் கூற அறை மனதுடன் விஜயன் அவனை பின் தொடர்ந்து சென்றார் .
*******
தேவ் வினய்யின் சடலத்தை போட்டோவில் பார்த்தபடியே தன் மகன் விபி பற்றிய நினைவுக்குச் சென்றார்.
ஆகாஷ் மல்கோத்ரா லண்டனின் இந்திய வம்சாவளி முன்னணி பணக்காரர்களில் அவரும் ஒருவர். அவர்க்கு தேவ் ஆனந்த் மற்றும் விக்ன பிரசாத் என்று இரு மகன்கள். தேவ் மற்றும் பிரசாத் இருவரும் தொழிலில் வல்லவர்களாக விளங்கினர். முதுமை காரணமாக தன் தொழிலை மகன்களிடம் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்ற ஆகாஷ் ஒரு காலை வேளையில், எழாமல் தூக்கத்திலேயே இறைவனடி சேர்ந்திருந்தார்..
ஆகாஷ் இறப்பதற்கு முன்பு, அவர் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் தேவ் தன் தந்தையை சூழ்ச்சி செய்து ஏமாற்றி மல்கோத்ராவிற்கு தெரியாமல் அவர் கையெழுத்து வாங்கி உயிலை தனக்கு சாதகமாக தன் வக்கீல் மூலமாக மாற்றி எழுதி வாங்கி இருந்தார் தேவ் ஆனந்த்.
மல்கோத்ரா இறந்ததும் உயில் படிக்கப்பட சொத்துகள் அதிக அளவில் தேவ்வின் பெயரில் இருப்பதை கேள்விப்பட்ட பிரசாத் கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டார்.
இதை அடுத்து பிரசாத் தேவ்விடம் அதை சொல்லி சண்டையிட... பிரசாத் இறுதியாக ஒரு கட்டத்தில் "உன்னை சொத்துக்களை அனுபவிக்க விடமாட்டேன் தேவ்! உன்னையும் விடமாட்டேன் உன் பையனையும் விடமாட்டேன்" என்று தன் கோபத்தில் தேவையில்லாமல் வார்த்தையை விட்டு கத்திவிட்டுச் சென்றார்.
அச்சமயத்தில் எந்த தேவதை 'ததாஸ்து' சொன்னதோ...
அதனை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டே எதிரும் புதிருமாக பேசாமல் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலை சுமார் 1 மாத காலம் நீடிக்க,
அன்று ஒரு நாள் தேவ் வெளியே சென்று இருக்க , தேவ்வின் 11 வயது மகன் விபி மற்றும் 10 வயது வினய் நீச்சல் குளத்தின் அருகில் பந்து விளையாட்டிக் கொண்டு இருந்தனர் .
அவர்கள் பந்து விளையாட்டிக் கொண்டிருக்க திடீரென்று பந்து தண்ணீரில் விழுந்தது. அதை எடுத்து வர விபி செல்ல முனைய வினய் அவனை தடுத்தான்.
"இரு! விபி! நான் போய் டேட் ஐ கூடிட்டு வரேன்... அவங்க இல்லாம பூல் பக்கம் போக கூடாதுனு சொல்லிருக்காங்கல்ல...
பந்தை அவர் வந்து எடுத்து தருவார் ! யூ ஆர் சோ ஸ்மால்! உன்னால முடியாது விபி! விழுந்துடுவ! உனக்கு நீச்சல் வேற தெரியாது! ரிஸ்க் எடுக்காத!" – வினய்
"நோ! ஐ அம் நாட் ஸ்மால்! உனக்கு நீச்சல் கொஞ்சம் தெரியும்னு ரொம்ப பண்ணாத வினய்! நான் அந்த ஸ்டிக் வச்சு பந்த பக்கத்தில் கொண்டு வந்து எடுத்துடுவேன்! "என்று விபி சொல்ல
வினய் எவ்வளவு தடுத்தும் அதை கேட்காத விபி ஸ்டிக்கை வைத்து பந்தை அருகில் இழுக்க முயல, பந்து தள்ளிச் கொண்டே சென்றது .
அதை எடுக்க விபி முயன்று கொண்டிருக்க ஒரு கட்டத்தில் எக்கி எடுக்க முயன்று ஸ்லிப் ஆகி தண்ணீரில் விழுந்தான் விபி.. தண்ணீரில் விழுந்த விபி மூச்சு வாங்க நீரில் போராட அவனை காப்பாற்ற அவன் கைகளை பற்ற வினய் முயன்று முடியாமல் போக
வினய் வேகமாக "டேட்!..." என்று கத்திக் கொண்டே பிரசாத்தை அழைக்க உள்ளே ஓடினான்.
அவன் கத்துவதை கேட்டு பதட்டத்தில் ஓடி வந்த பிரசாத் "வினய்! என்னாச்சு! ஏன் இப்படி கத்திக்கிட்டே ஓடி வர... உனக்கு ஒன்றுமில்லையே! ஆர் யூ ஆல்ரைட்" – பிரசாத்
"ஐ அம் ஆல்ரைட் டேட்! பட்.. விபி.. விபிக்கு என்று அவன் மூச்சுவாங்க வினய் சொல்ல பிரசாத்திற்கு பதட்டம் பிடித்துக் கொண்டது.
"விபி?... விபிக்கு என்னாச்சு! வா! என் கூட" என்று கூறிய பிரசாத் வினய்யை அழைத்து கொண்டு நீச்சல் குளத்திற்கு விரைய அங்கு விபி மிதந்து கொண்டிருந்தான்.
நீச்சல் தெரியாத விபி மூச்சு திணறி இறந்து போயிருந்தான்.
அது தெரியாமல் பிரசாத் "ஓ! காட்!..." என்று அலறியபடியே ஸ்விமிங் பூலில் இறங்கி விபியை வெளியே இழுத்து, விபியின் கன்னத்தில் தட்டி, வயிற்றில் அமுக்கி, வாயோடு வாய் வைத்து ஊதி, அவனை எழுப்ப போராடிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்தார் தேவ்.
இந்த காட்சியை பார்த்த தேவ் பிரசாத் தன் மகனை கொன்றதாக நினைத்து கொண்டு அவனை குற்றவாளியாக்கி அவனிடம் கத்த ஆரம்பித்துவிட்டார்!
சந்தர்ப்பங்களும் , சூழ்நிலைகளும் பிரசாத் விபியை கொன்றதாக அமைந்தது.
"நீ சொன்ன மாதிரி செஞ்சிட்டேல பிரசாத்! என் பையனை கொன்னுட்டேல!" – தேவ்
"நோ! தேவ் நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க! நான் ஒன்றும் பண்ணல! பசங்க விளையாடும் போது பந்தை எடுக்க தெரியாம விபி தண்ணில விழுந்துட்டான்... நான் அவனை காப்பாற்ற தான் முயற்சி பண்ணேன்!" – பிரசாத்
"கதை ரொம்ப நல்லாவே சொல்ற... உன் கதைய நம்ப நா தயரா இல்ல... உன் பையனை வைத்து என் பையனை கொன்னுட்டேல! அவனுக்கு நீச்சல் தெரியாத விசயத்தை நீங்க பயன்படுத்திக்கிட்டீங்கள்ல"- தேவ்
"நோ! தேவ்பா! நான் எவ்வளவு தடுத்தும் கேட்காம அவன் பந்த எடுக்குறேன்னு உள்ளே விழுந்துட்டான்! டேட் ஒன்றும் பண்ணல" – வினய்
வினய் சொன்னதை காது கொடுத்து கூட கேட்காத தேவ் இறுதியில் பிரசாத்திடம் திரும்பினார்.
"உன்னை நான் சும்மா விட மாட்டேன் பிரசாத்! எனக்கு மாதிரி உனக்கும் உன் பையன் இருக்க மாட்டான்! அவனும் சாகனும்! சாகடிப்பேன்! ஆனால் இப்ப இல்லை... அவன் நல்லா வளர்ந்ததும் சாகடிப்பேன்! உன் பையன் எப்ப என் கையால சாகப் போறானு நீ தினம் தினம் அவன் சாவ நினைச்சு நீ பயப்படனும் ! நீ செத்து பிழைக்கனும்! அதான் நான் உனக்கு தர பனிஷ்மெண்ட்" என்று தேவ் சொல்லிவிட்டு விபியை எடுத்துச் செல்ல பிரசாத் திகைப்பில் நின்றார்
அன்று முதல் பிரசாத் வினய்யை பாதுகாக்க ஆரம்பித்தார். அவனை தேவ்வை விட்டு தொலைதூரம் நிறுத்த வேறு நாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தார். லண்டனுக்கு வர அனுமதிப்பதே இல்லை.
அது தெரிந்தும் தேவ் அமைதியாக இருந்தார். வினய் படிப்பு முடிந்து லண்டன் வந்ததும் தேவ் வினய்யை கொல்ல முடிவு செய்தார்.
அதன்படி வினய்யும் வந்தான் பிரசாத்தை தேடி. தன் தந்தையின் மேல் அதிக அன்பு கொண்ட வினய் அவர் லண்டன் வரக்கூடாது என்று சொல்லியும் அவர் சொல்லை மீறி லண்டன் வந்தான் பிரசாத்தின் காவல்களையும் மீறி .
ஆனால் வினய் தந்தைக்கு இன்ப அதிர்ச்சி தருவதாக நினைத்து பிரசாத்தை தேடி வந்து தன் மரணத்தை தானே தேடிக் கொண்டான்.
****
விபி பற்றிய நினைப்பில் இருந்து வெளிவந்த தேவ் போனை எடுத்து தன் ஆட்களுக்கு அழைத்தார்
"அஜய்! பிரசாத்தோட இப்போதைய நிலை என்ன?" – தேவ்
அதற்கு அவர்கள் என்ன சொன்னார்களோ?
இங்கு "வாட்! என்ன சொல்றீங்க!" என்று சற்று நேரம் யோசித்த தேவ் திரும்பவும் பேசினார் "அஜய்.. பிரசாத்திற்கு வினய்யின் பாடி கிடைக்க கூடாது! வினய் பாடி இப்ப இங்க வந்தாகனும்! அதுக்கு பதில் நான் சொன்ன மாதிரி செய்!" என்று சொல்ல அதை கேட்டுவிட்டு போனை வைத்தான் தேவ்வின் செக்ரடரி அஜய்.
போனை வைத்ததும் தேவ் "ஓ! நோ! பிரசாத்! பாவம் நீ! பையன் இறந்ததை தாங்க முடியாம என்னவோ! பண்ற! ஆனா நீ நினைச்சது இந்த தேவ் இருக்குற வரை நடக்காது! இப்ப என்னோட கேம் ஆரம்பிக்க போகுது! யூ வெய்ட் அண்ட் வாட்ச்! பிரசாத்!" என்று கூறி வெற்றி களிப்பில் சிரித்தார் தேவ் ஆனந்த்.
*******
அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது. அங்கு சிலர் மெழுகுவர்த்திகளை எரியூட்டிக் கொண்டிருந்தனர். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அறையின் நடுவில் தெரிந்தது அந்த சவப்பெட்டி.
சவப்பெட்டியை சுற்றி மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்க அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வந்தார் பிரசாத். அவரை பின்பற்றி மைக்கேல்சன் மற்றும் விஜயன் வந்தனர்.
பிரசாத் அறையின் உள்ளே வந்ததும் அங்கிருப்பவர்களை கண் ஜாடையால் வெளியே போகச் சொல்ல அவர்களும் சென்றனர்.
அவர்கள் சென்றதும் பிரசாத் மைக்கேல்சன்னிடம் திரும்பினார்.
"ஓகே! மைக்கேல்.. நீங்க உங்க வேலையை ஆரம்பிங்க! மணி 12 ஆகிடுச்சு!" என்று பிரசாத் கூற அவர் கூறியதை அடுத்து மைக்கேல் அந்த பெட்டியை திறந்து அந்த சிறு பாட்டிலை எடுத்தார்.
அதை பார்த்த பிரசாத் வேகமாக "மைக்கேல்! என் பையனுக்கு எதுவும் பிரச்சனை வராது ல! அவன் திரும்ப வந்துடுவான்ல" என்று கேட்க மைக்கேல் தன் கைகளில் உள்ள பாட்டிலை அவரிடம் காட்டினான்.
"பிரசாத்! இந்த பாட்டிலில் இருக்குறத அவன் உடம்பில் செலுத்துனா போதும்! அவன் ஒரு மாத காலத்தில் திரும்ப எழுந்திடுவான்!" – மைக்கேல்சன்.
"ஓ! இது என்ன மைக்கேல்! இந்த மருந்துனால என் பையனுக்கு பின்னாடி எந்த பின் விளைவுகளும் வராதுல?" - பிரசாத்.
"இது வெம்பையரின் ரத்தம் பிரசாத். இது உங்க மகன் உடம்பில் செலுத்தினா போதும் அவன் 1 மாத காலத்தில் எழுந்திருப்பான்"- மைக்கேல்சன்.
"வெம்பையரா! ஓ! நோ! மைக்கேல்! நான் என் மகனை உயிரோட தான் வரச் சொன்னேன். நீ என்னமோ வெம்பையர் அது இதுனு சொல்ற! நாம வேற வழி எதாவது கண்டுபிடிக்கலாம் மைக்கேல்" – பிரசாத்.
"நீங்க பயப்படுற அளவுக்கு இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை பிரசாத்! இவன் மனிதர்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்" – மைக்கேல்சன்.
"எனக்குப் புரியல மைக்கேல்! வெம்பையர் னா மனிதனின் ரத்தத்தை தான குடிக்கும்!" – பிரசாத்
"நோ! பிரசாத்! வெம்பையரில் வெஜிடேரியன் நாண்–வெஜீடேரியன் இரண்டு இருக்கு! நாம இப்ப வெஜீடேரியன் வெம்பையரை தான் கொண்டு வரப் போறோம்! அவன் நார்மல் மனிதர்கள் போல் தான் வாழ்வான்! ஆனா இரவு மட்டும் அவன் வெம்பையரா மாறி தன் இரையை தேடி அலைவான்! அவன் மனிதனில் இருந்து உருமாறது அந்த நேரத்தில் தான். அவனுக்கு தேவையானதை நாம கொடுத்துட்டு இருந்தா அவன் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டான் பிரசாத். அவனுக்கு தேவை விலங்குகள் ரத்தம்! அவ்வளவு தான்! அவனால் யாருக்கும் எந்த தீங்கும் வராது" - மைக்கேல்சன்
"ஓ! அப்படியா! இருந்தாலும்...." என்று பிரசாத் இழுக்க மைக்கேல்சன் அவரை இடை மறித்தார்.
"உங்களுக்கு உங்க மகன் திரும்ப வேணுமா? வேண்டாமா? பிரசாத்" – மைக்கேல்சன்.
மைக்கேல் அப்படி கேட்டதும் சற்று நேரம் யோசித்த பிரசாத் தன்னை தேற்றிக் கொண்டு அவனுக்கு சம்மதமாக தலையாட்டினார்.
அதனை அடுத்து அவன் அந்த பாட்டிலில் இருந்த ரத்தத்தை ஊசியில் ஏற்ற பிரசாத் அவனை இடை மறித்தார்.
"இந்த ரத்தம் உனக்கு எப்படி கிடைச்சது மைக்கேல்!" – பிரசாத்.
"மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெம்பையர் வாழ்ந்து வந்ததாக நாங்க புக்கில் படிச்சோம் பிரசாத். அதனை அடுத்து நாங்க அங்கு சென்று வெம்பையர் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது வெம்பையர் பற்றி எங்களுக்கு பல அரிய தகவல்களும், மனிதனை வெம்பையராய் மாற்றும் முறைகளும் ஓலைச் சுவடியில் கிடைத்தது. அதை மூலாதாரமா வைத்து நாங்க மேலும் பல ஆராய்ச்சி செய்து, இறந்தவர்களை வெம்பையரா மாற்ற நிறைய முறைகளை சோதனை செய்து மனிதனை வெஜிடேரியன் வெம்பையரா மாற்றும் யுக்திகளை கண்டுபிடிச்சோம். அதில் ஒரு முறை தான், நாம இப்போ வினய்க்கு பண்ணப் போறோம். அதாவது இறந்து போன மனிதர்களை அங்கு மட்டுமாய் (மேற்கு ஐரோப்பிய காடு) வளரும் ஒருசில மூலிகை சாறை தடவி வெள்ளை துணி போர்த்தி புதைக்கப்பட இறந்து போனவர்கள் கொஞ்ச நாளில் மூலிகையின் பலனாய் புது ரத்தம் ஊறி, வெம்பையராக அதாவது அதீத பலம் கொண்டு ரத்தத்தை மட்டும் உணவாக ஏற்கும் மனிதனாக உருமாறுவார்கள். அவர்கள் மேல போர்த்தி இருந்த துணியில் அவர்களது புது ரத்தம், அவர்கள் வாயில் இருந்து வழிந்து அந்த துணியில் படியும். அந்த படிந்த ரத்த துளிகள் சராசரி மனிதர்களுக்குள் செலுத்தப்படும் போது அவர்களும் வெம்பையராக உருமாறுவார்கள். நாங்கள் அங்கு சென்று இதை பற்றி ஆராய்ச்சி செய்யும் பொழுது எங்களுக்கு இந்த ரத்தத்துளிகள் கிடைச்சது. இது மனிதனை ப்யூர் வெஜிடேரியனா மாத்தும் சக்தி பெற்றது. எல்லா விதமான பரிசோதனைகளையும் நாங்க வெற்றிகரமாக முடித்திவிட்டோம் பிரசாத்! . ஆனால் ... இதுவரை இந்த சோதனைகளை மனிதனுக்குள் செலுத்தி நாங்க பார்க்கவில்லை." என்று மைக்கேல் கூற அவன் சொல்லச் சொல்ல இங்கு பிரசாத்திற்கு பயத்தில் வேர்த்தது.
"என்ன இன்னும் மனிதனுக்கு பரி சோதனை செய்யவில்லையா? ஓ ! காட்?" - பிரசாத்.
"ஒன்றும் பயப்பட தேவையில்லை பிரசாத்... எல்லா விலங்குகள் மேலையும் சோதனை பண்ணிப்பார்த்துட்டோம் நாங்க!" - விஜயன்.
"ஆமா பிரசாத்!.. நீங்க கவலை படத் தேவையில்லை !. உங்க பையன் உங்க கிட்ட பத்திரமா வருவான்.." - மைக்கேல்சன்.
"இதனால் பின்னாடி எந்த பிரச்சனையும் வராதே மைக்கேல்?" - பிரசாத்.
"என்ன பிரச்சனை?" - மைக்கேல்சன்.
"இல்ல அவன் திடீர்னு நாண்-வெஜிடேரியனா மாறிட்டா" - பிரசாத்.
"நாங்க அந்த ரத்தத்தை அப்படியே செலுத்தவில்லை பிரசாத் !... நாங்க நிறைய மூலிகைகள் இதில் கலந்து மாத்திருக்கோம்" - மைக்கேல்சன்.
"அதனால இவன் நாண்-வெஜிடேரியனா மாற சான்ஸ் கம்மி" - விஜயன்.
"அப்போ சான்ஸ் இருக்கு அப்படித்தானே" - பிரசாத்.
"எங்களை நம்பிதான் ஆகணும் . பிரசாத்! உங்களுக்கு வேற வழியில்லை!" - விஜயன்.
"உங்க பையன் உங்க கிட்ட நல்லபடியா திரும்பி வருவான் .! கவ லைபடாதீங்க பிரசாத்"- மைக்கேல்சன்.
"அவனை கவனமாக பார்த்துக்கிட்டாள் போதும் ! பிரச்சனையே இல்லை.. கவலைபடாதீங்க" - விஜயன்.
"ஆனாலும்..."- பிரசாத்.
"பிரசாத்...." - மைக்கேல்சன்.
"சரி எத்தனை நாள் ஆகும் மைக்கேல் என் பையன் எழுந்திருக்க?" – பிரசாத்
மைக்கேல்சன் விஜயனிடம் கண் ஜாடை செய்ய அவர் பிரசாத்திற்கு விளக்கம் கொடுத்தார்.
"உங்க பையன் மாற சுமார் 1 மாத காலம் ஆகும்! இந்த ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா அவன் உடம்பில் மாற்றத்தை உண்டாக்கும்! அவன் மாற்றம் அடைவது அவன் போர்த்திய துணியில் தெரியும். அந்த துணியின் மேல் அவன் வாயில் வழிந்த ரத்தத் துளிகள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டு அந்த துணியின் நிறத்தையே மாற்றும். அந்த துணி முழுவதுமாக சிவப்பு நிறமாக மாறும் போது அவன் எழுவான் பிரசாத்!" - விஜயன்.
"இன்னொரு முக்கியமான விசயம் அவன் மாற்றம் அடையும் இந்த ஒரு மாத காலமும் மனிதனின் வாடை அவனுக்கு அடிக்கக் கூடாது. குறிப்பாக அவன் சடலத்தின் மேல் எந்த சந்துக்களும் ( பூனையோ , நாயோ) அவன் மேல் ஏறக் கூடாது!" – என்று விஜயன் கூற பிரசாத் மைக்கேலிடம் திரும்பினார்.
"ஏன்? மைக்கேல் அப்படி எதாவது அவன் சடலத்தின் மீது ஏறினால் என்னாகும்?" – பிரசாத்
"அப்படி எதாவது அவன் சடலத்தில் ஏறும் பட்சத்தில் அவன் முழுவதுமாக மனிதரத்தத்தை குடிக்கும் வெம்பையரா அவன் மாறிடுவான் பிரசாத்! அவனால் மனிதர்கள் அழிந்து போவார்கள்!" என்று மைக்கேல் கூற பிரசாத் பயத்தின் உச்சத்திற்குச் சென்றார்.
ஆயினும் தன் மகன் மேல் அவர் வைத்து இருக்கும் அன்பு அவரை மெளனம் காக்க வைத்தது.
மைக்கேல்சன் அந்த சடலத்தின் அருகில் சென்று அந்த வெம்பையர் ரத்தத்தை ஊசியினால் ஏற்றிவிட்டு பிரசாத் அருகினில் வந்தார்.
"வேலை முடிஞ்சது பிரசாத்! நீங்க என்ன பண்றீங்க... 1 மணி நேரம் கழிச்சு அவன் மேல் இந்த வெள்ளை துணியை போர்த்துவிட்டுட்டு வந்துடுங்க! அதை அடுத்து 1 மாத காலம் கழிச்சு நீங்க இந்த கதவை திறந்தா போதும்.." என்று மைக்கேல்சன் சொல்லிவிட்டு வெளியே செல்ல பிரசாத் அவரை பின் தொடர்ந்தார்.
வெளியே வந்த மைக்கேலிடம் பிரசாத் பணத்தை நீட்ட அதை வாங்கிய மைக்கேல்சன் அவரை கேள்வியாக பார்த்தான்.
"என் பையன் எனக்கு முழுவதுமா கிடைச்ச உடனே உன் பணமும் உனக்கு முழுசா வந்து சேரும் மைக்கேல்!" – பிரசாத்
"ம்.ம்.ம்.. பிசினஸ்மேன்ங்குறதை கடைசியில் நிரூபிச்சிட்டீங்கள பிரசாத்? நான் நினைச்சா உங்களையும் மாற்ற முடியும்" என்று மைக்கேல்சன் கூற பிரசாத் சிரித்தார்.
"எனக்கு தெரியும் மைக்கேல்... நீ எனக்கு தலைக்கு மேல சுற்றும் கத்தி மாதிரி எப்பனாலும் எனக்கு நீ ஆபத்தா முடிவனு தெரியும். அதனால் நீ ஆதாரம் இல்லாம செஞ்ச எல்லா இல்லீகல் வேலைக்கும் ஆதாரம் ரெடி பண்ணிட்டேன்!" என்று கூறி அவன் வினய்யை மாற்ற முயற்சி செய்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்ததை காண்பித்தார் பிரசாத்.
அதை பார்த்த மைக்கேல்சன் பல்லை கடித்தபடி கோபத்தோடு அவர் குடுத்த பணத்தை வாங்கியபடியே "என்னை பகைச்சிக்காதீங்க பிரசாத்! பின்னாடி என் உதவி உங்களுக்கு தேவைபடலாம்!" – மைக்கேல்சன்.
"நான் உன்னை பகைச்சிக்க மாட்டேன்! நீ என்னை பகைச்சா என்னாகும்னு சொன்னேன் மைக்கேல்.. அவ்ளோ தான்!" என்று பிரசாத் சிரித்தபடியே மிரட்ட மைக்கேல்சன் வேகமாக அந்த அறையைவிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் விஜயன் மைக்கேல்சனை பின்பற்றி செல்ல முயல பிரசாத் அவரை தடுத்தார்.
"மிஸ்டர் விஜயன்! நீங்க என் கூட கொஞ்ச நேரம் இருங்க! எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு" என்று பிரசாத் கூற அதற்கு விஜயன் சம்மதித்தார்.
1 மணி நேரம் கழித்து பிரசாத் சென்று வினய்யின் சடலத்தின் மேல் துணியை போர்த்த முயல அதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் விஜயன்.
"பிரசாத் அவனை தொடாமல் அவன் மேல் இந்த துணியை போர்த்துங்க!" என்று விஜயன் கூற
பிரசாத் எச்சில் விழுங்கியபடி கவனமாக துணியை போர்த்த முயல வினய்யின் வலதுகையை அப்போது தான் கவனித்தார். அதில் டாலு என்று பச்சை குத்தப்பட்டிருக்க அதை பார்த்த பிரசாத் பதற்றம் அடைந்தார்.
"ஓ! நோ! விஜயன்! இது வினய் பாடி கிடையாது! இந்த பாடி வேறு ஒருவனோடது" என்று பிரசாத் கூற அதிர்ச்சியில் நின்றார் விஜயன்.
யட்சகனாக மாறுவான்...
 

New Threads

Top Bottom