Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யார் நீ ??

Abitha Bn

New member
Messages
1
Reaction score
1
Points
1
எனது முதல் தமிழ் கதை . உங்கள் கருத்துகாக காத்து இருக்கேன் பிரண்ட்ஸ் .



யார் நீ ??



அத்தியாயம் 1

சிங்கப்பூரில் உள்ள வளைகுடா தோட்டங்களின் அழகில் தன்னை தொலைத்து நடந்து கொண்டு இருந்தான் அஜய் .



'சாரி அஜய் லேட்டா வந்துட்டேனா ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா' .




'இல்ல ரித்திகா இப்பதான் வந்தேன் இந்த அமைதியான சூழல் என்னை மிகவும் ஈர்த்தது. நீ என்ன சொல்ல அழைத்தாய் ?'



'அது வந்து அஜய் என்னை நீ தவறாக எடுத்துக்கொள்ள மாட்டாய் அல்லவா நான் உன்னை நேசிக்கிறேன் '.



அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை சில நிமிட அமைதிக்கு பின் , 'சாரி ரித்திகா நான் இந்தியாவில் இருந்து இங்கு வருவதற்கு முன்பே நிலா என்ற பெண்ணை விரும்ப தொடங்கினேன் . அவள் என்னுடைய உயிர் , உடல் முழுவதும் நிறைந்து விட்டாள். அவளை என்னால் மறக்க இயலாது'.



'இட்ஸ் ஓகே அஜய் . ஆனால் நீ இதுவரை அவளை பற்றி என்னிடம் கூறியது இல்லையே '.



'அதற்கான அவசியம் இதுவரை ஏற்பட்டதில்லையே ரித்திகா '.



'சரி இப்பொழுது கூறு அஜய் . நான் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் '.



'இல்ல வேண்டாம் ரித்திகா ப்ளீஸ் '.



'அஜய் உன் காதல் கதையை சொன்னாள் என்னால் உன்னை மறக்க உதவியா இருக்கும் ' .



சரி நான் சொல்றேன் . அவளை நான் மூன்று முறை தான் பார்த்தேன் ஆனால் என் இதயத்தின் ஆழத்தில் நிறைந்து விட்டாள்.



அவள் பேரழகி எல்லாம் இல்லை ஐந்தடி உயரம் , உயரத்துக்கு ஏற்றவாறு எடை , மாநிறம் . அவள் மிகவும் எளிமையான பெண் . மேக்கப்பில் அவளுக்கு விருப்பமில்லை , 'நான் இப்படிதான் பிறருக்காக என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் பிறர் என்னை பார்க்க வேண்டும் என்று நான் நினைக்க மாட்டேன் ' என்று தான் இருப்பாள்.




என் நண்பனின் திருமணத்தில் தான் நான் அவளை முதல் முதலாகப் பார்த்தேன் . அவள் மணப்பெண்ணின் தோழி போல் . அவள் நான்கைந்து தோழிகளோடு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள் . நான் அவளுக்கு மிக அருகில் அமர்ந்திருந்தேன். தோழிகளில் ஒருத்தி மாப்பிள்ளையைப் பற்றி மிகவும் பெருமையாக பேசினாள் , இன்னொருத்தி மாப்பிள்ளையின் செல்வ நிலையை பேசினாள் , மற்றொருத்தி மாப்பிள்ளையின் அழகை மிகைப் படுத்தினாள் .



ஆனால் நிலா , 'நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் மாப்பிள்ளை மிகவும் அழகானவர் , பண்பானவர் , உயர்ந்த செல்வநிலை கொண்டவர்.

ஆனால் மணப்பெண்ணின் கண்களில் மகிழ்ச்சி தெரியவில்லை அவளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை போல் இருக்கு. அவள் உதட்டில் உள்ள சிரிப்பு அவள் கண்களில் எட்டவில்லை அவளுக்கு இப்பொழுது இந்த திருமணம் பிடிக்கவில்லை . ஆனால் பின்பு மாப்பிள்ளையை பிடிக்கவேண்டும் ,காலம் எதையும் மாற்றும் . அவள் வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டும். திருமணத்தில் வெற்றிபெற இருவரும் அன்பும் , காதலும் கொண்டு இணைந்து வாழ்வதே முக்கியம் என்றாள் '.



அவள் பிறரின் உணர்வுகளை மிக அழகாக உணர்ந்தாள். திருமணத்தின் புரிதலையும் உணர்ந்திருந்தால் .



எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனாலும் எனக்கு கண்டதும் காதலில் நம்பிக்கை இல்லை . ஆனால் அவளின் முகம் என் மனதில் நிறைந்தது . அப்பொழுது எனக்கு அவள் பெயர் கூட தெரியாது.



நாம் வேலை பார்க்கும் கம்பெனியில் வருடம்தோறும் ஒவ்வொரு கல்லூரியிலும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ பயிற்சி வழங்குவோம் . இங்கு வருவதற்கு முன்பு என்னை ஒரு பெண்கள் கல்லூரிக்கு பயிற்சி அளிக்க அனுப்பினார்கள் .அங்கு நான் அவளை மீண்டும் சந்தித்தேன்.

அங்குள்ள பெண்கள் என்னை ஆர்வமாக பார்த்தார்கள் . ஆனால் , அவளோ மிக இயல்பாக இருந்தாள் அதுவும் என்னை கவர்ந்தது .




அந்தப் பயிற்சியின்போது கற்றுக்கொள்ளும் மாணவர்களின் விவரம் நமக்கு தரப்படும் . அதில் இருந்தே அவளுடைய பெயர் , முகவரி எல்லாம் அறிந்தேன் . அன்றே ஒரு நூறு முறை சொல்லி பார்த்திருப்பேன் நிலா அஜய் என்று . அவள் என் இதயத்தில் மீண்டும் ஆழமாக பதிந்தால்.



ஏனோ என்னுடைய காதலை அவளிடம் சொல்ல எதுவோ என்னை தடுத்தது இன்னொன்று நான் என் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நிலையை அடையவில்லை அதேசமயம் அவள் இன்னும் கல்லூரி மாணவியே ஆகையால் நான் என் காதலை அவளிடம் கூறவில்லை.



நான் என் வாழ்க்கையில் முன்னேற எனக்கு கிடைத்தது வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு . அதை நான் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன் . ஆகையால் இந்த சூழலில் அவளிடம் என் காதலை கூற நான் விரும்பவில்லை . அவளைப் பிரியும் தருணத்தில் காதலை உணர்த்தி அவளுக்கும் வலியை தர விரும்பவில்லை .



ஆகையால் அவளோடு நினைவுகளோடு நான் சிங்கப்பூர் வர ஏர்போர்ட் சென்றேன் . நானே எதிர்பார்க்காத தருணத்தில் அவளை மீண்டும் சந்தித்தேன் .



அன்று அவள் , அவளின் அண்ணனை வழியனுப்ப வந்திருந்தாள் . அவள் அண்ணனும் வெளிநாட்டில் வேலை செய்கிறார் போல் . அவர்களின் உரையாடலை நான் கேட்க நேர்ந்தது.



' அவந்திகா (நிலாவின் அக்கா ) நான் ஒரு வருடத்தில் வந்தவுடன் உனக்கு திருமணம் சரியா டா செல்லம் ' என்றான் அவர்களின் அண்ணன் கார்த்திக் . 'அதுக்கு அடுத்த வருடமே உனக்கு திருமணம் நிலா' .



'அதெல்லாம் முடியாது டா அண்ணா நான் ஒரு இரண்டு வருடமாவது வேலை செய்த பின்பு தான் திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பேன்' நிலா .



' சரிடா உன் விருப்பம் ' . அதன் பின்பு அவர்கள் சென்று விட்டார்கள் .



எனக்கும் ஒரு அமைதி கிடைத்தது . இந்த இரண்டு வருடத்திற்குள் நான் இந்தியா திரும்பி விடுவேன் . அதன் பின்பு என் காதலை அவளிடம் கூறலாம் என்று முடிவெடுத்தேன் . ஆகையால் எந்த சலனமுமின்றி நான் சிங்கப்பூர் வந்தேன் .



இன்னும் 2 வாரத்தில் நான் இந்தியா சென்று அவளைப் பார்க்கப் போகிறேன். அந்த தருணத்திற்காக இரண்டு வருடங்களாக காத்திருக்கிறேன் என்றான் அஜய்.



' உங்கள் காதலின் ஆழத்தை நான் காண்கிறேன் . ஆனாலும் இது ஒருதலை காதலாக உள்ளது . ஒருவேளை அவள் உங்கள் காதலை நிராகரித்தால் எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களா ' என்றால் ரித்திகா .



'இல்லை என்னுடைய வாழ்வில் ஒரே ஒரு காதல்தான் அது நிலாவோடு மட்டுமே '.



'அப்பொழுது அவள் உங்கள் காதலை நிராகரித்தால் , நீங்கள் திருமணமே செய்து கொள்ள மாட்டீர்களா ? '



' வேறொரு பெண்ணை நான் திருமணம் செய்து கொள்வேன் ஆனால் அவள் என் மனைவியாக வருவாள் எப்பொழுதும் என்னோட முதல் காதல் நிலாவோடு மட்டுமே' என்றான் அஜய்.

' சரி அட்லீஸ்ட் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்கிறீர்களா ' .



'இதற்கு நான் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. காலம் தான் முடிவு செய்ய வேண்டும் . இப்பொழுது எனக்காக என் காதல் வெற்றி பெற நீ வேண்டுவாய் அல்லவா ?'



'கண்டிப்பாக' என்றால் ரித்திகா. பின் அவர்கள் பூங்காவிலிருந்து வெளியேறினர்





அத்தியாயம் 2



அஜய் இந்தியா திரும்ப இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் . அவன் அன்று அலுவலகத்திலிருந்து திரும்பும் போது சாலையில் ஒரு விபத்து நிகழ்ந்தது.



இவன் சென்று அவர்களைப் பார்த்தான். அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் என்று பார்த்த உடனே புரிந்து கொண்டான் .எனவே அவர்களுக்கு உதவ முன்வந்தான் . தானே அகதி போல் வேறு ஒரு நாட்டில் வேலையில் இருக்கும்போது இதுபோன்று உதவ முன் வர மாட்டான் .



எனினும் வெளிநாடுகளில் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்னதான் நாம் இந்தியாவில் இருக்கும்போது மொழி , இனம் , சாதி என்று அடித்துக் கொண்டாலும். வெளிநாடுகளில் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதே அறிவாகும்.



அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தான் . பின் அவர்களின் பாஸ்போர்ட் , பணம் போன் போன்ற முக்கியமான பொருட்களை பத்திர படுத்தினான் . அவர்களுக்கு ஐசியூவில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது .



இவன் வெளியில் காத்திருந்தான் . அப்பொழுது, ஆணை பரிசோதித்த டாக்டர் வெளியே வந்தார் .

'டாக்டர் இப்பொழுது எப்படி இருக்கிறார்' என்று அஜய் கேட்டான் .



'பலத்த காயம் எதுவும் இல்லை வலது காலில் தசைப்பிடிப்பு மட்டுமே உள்ளது பத்து நாளாவது ஆகும் அவர் எழுந்து நடக்க' என்றார்.



' நான் அவரை பார்க்கலாமா டாக்டர்'.



' பார்க்கலாம் நார்மல் வார்டுக்கு மாற்றிய பிறகு' என்றார் மருத்துவர் .



'டாக்டர் இந்த லேடி எப்படி இருக்கிறார்கள் '



'அவர் கொஞ்சம் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் தான் சோதித்துப் பார்த்து டாக்டர் கூறுவார் சிறிது நேரம் காத்திருங்கள்' என்றார்.



அஜய்க்கு என்ன செய்வதென்றே புரியவில்லை . இறைவனிடம் வேண்டினான் இருவரையும் காப்பாற்று என்று .



பின் ஒன்றரை மணி நேரம் கழித்து ஆண் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார் . அஜய் அவரை பார்க்க சென்றான். அவர் மிகவும் சோர்ந்து இருந்தார் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது .



அவரிடம் போய் , 'நான் அஜய் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வேலை செய்ய வந்திருக்கிறேன் நீங்கள் யார் ? ' என்றான்.



' என்னோட பேரு விஜய் நானும் என் மனைவியும் தேனிலவுக்காக இங்கு வந்தோம் .நாங்கள் ஹோட்டலுக்கு செல்வதற்காக காரில் ஏறினோம் .கார் டிரைவர் போனில் யாரோடு சண்டையிட்டு வந்தார் . அதனால், விபத்து நேர்ந்தது . என் மனைவி எப்படி இருக்கிறாள் ? ' .

இதற்கு என்ன சொல்வது என்றே அஜய்க்கு புரியவில்லை .அவர்கள் இன்னும் ஐசியூவில் உள்ளார் ஆனால் மருத்துவர் பயமில்லை என்றார் . ஆகையால் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று பாதி பொய் பாதி மெய்யாக கூறினான் .



இருந்தும் விஜயின் முகத்தில் கவலை தெரிந்தது ஆகையால் அவருடன் உரையாட எண்ணினான் . விஜய் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் . உங்கள் இருவரின் பாஸ்போர்ட் , பணம் போன்ற அனைத்தும் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது .



உங்கள் இருவரின் உடல்நிலை சரியானதும் நானே இருவரையும் இந்தியா செல்ல உதவுகிறேன்.



' மிகவும் நன்றி அஜய் . நீங்கள் மிகப்பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் . என் மனைவி நலமாக இருந்தால் அதுவே போதும் இப்பொழுது எனக்கு '.



'நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் விஜய் . உங்கள் மனைவியை மிகவும் நேசிக்கிறீர்கள் போல் உங்கள் காதல் கல்யாணத்தை பற்றி கூறுகிறீர்களா ' என்றான் அஜய் .



'என்ன காதல் கல்யாணமா ? எங்களது அரேஞ்ச் மேரேஜ் ' .



'பார்த்தால் நம்ப முடியவில்லையே' என்றான் அஜய் .



' நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும் அதுவே உண்மை . என் கல்யாணத்துக்கு சம்மதிக்க மேடம் பல கட்டளைகள் விதித்தாள் '.



'வாவ் எனக்கு உங்கள் கல்யாண கதையை கூறுகிறீர்களா என்னை உங்கள் நண்பனாக நினைத்தால் ' .



'கண்டிப்பாக சொல்கிறேன் எங்களின் கல்யாணம் கதையை . அவள் என் நண்பனின் தங்கையே நான் அவளை காதலித்தேன் ஆனால் அவள் காதலிக்கவில்லை. நானும் நண்பனின் நம்பிக்கையை உடைக்க விரும்பவில்லை ஆகையால் என் காதலை அவளிடம் கூற வில்லை '.



'சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளை எனக்கு திருமணம் செய்து வைத்தான் என் நண்பன் . அவன் அப்பொழுது கலிபோர்னியாவில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனின் இன்னொரு தங்கை காதலனோடு சென்று விட்டால் . அவன் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் உடைந்து விட்டார்கள் . அவள் மேல் மிகவும் நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்தனர் . ஒருவேளை அவள் காதலை வீட்டில் கூறி இருந்தால் அவர்களே திருமணத்தை நடத்தி இருப்பார்கள். ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை '.



'அவள் செய்த தவறுக்காக அவனின் மற்றொரு தங்கைக்கு விரைவில் திருமணம் செய்ய முடிவு எடுத்தான் . அவன் வெளிநாட்டில் இருந்ததால் அவ்வளவு எளிதில் மாப்பிள்ளை அமையவில்லை மேலும் அவனின் பெரிய தங்கை செய்த காரியத்தால் வரன் எதுவும் அமையவில்லை' .



'ஆகையால் அவன் என்னிடம் கேட்டான் எனக்கு எந்த தீய பழக்கமும் இல்லை நான் நல்ல வேலையில் இருந்தேன் என் குடும்பத்தில் உள்ளவர்களும் மிகவும் அன்பானவர்கள் என்று அவனுக்கு தெரியும் . எனவே உண்மையைக் கூறி என்னிடம் என் விருப்பத்தை கேட்டான் . மகிழ்ச்சியில் நான் திக்குமுக்காடிப் போனேன் .நான் விரும்பிய பெண்ணையே எனக்கு திருமணம் பேச என் நண்பனே முன்வந்தான் . நான் சரி என்று ஒப்புக்கொண்டேன் . பின் நான் அவளை முறையாக பெண் பார்க்க சென்றேன்.'



' என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று என் பெற்றோர் மற்றும் அவள் பெற்றோர் முன்பு தைரியமாக கூறினாள் . எனக்கு அவளைப் பற்றி முன்பே தெரியும் ஆகையால் நான் பெரிதாக வியக்கவில்லை என் பெற்றோர்களுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது .'



'பின் நான் மாடியில் அவளுக்காக காத்திருந்தேன் .எந்த தயக்கமும் இன்றி என் அருகில் வந்து நின்றாள் . அவள் தானே பேச வேண்டுமென்றால் ஆகையால் நான் எதுவும் பேசவில்லை அவளே தொடங்கட்டும் என்று காத்திருந்தேன் . சில நிமிடங்களுக்குப் பிறகு அவளே பேசினாள்' .



' நீங்கள் என் அண்ணனின் நண்பன் என் அண்ணன் உங்களை எனக்கு கணவனாக தேர்ந்தெடுத்தான் எனில் நீங்கள் மிகவும் நல்லவர் என்று புரிகிறது . ஆனால் எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு உங்களுக்கு ஓகேன்னா நீங்க மேற்கொண்டு கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுங்கள் . என் திருமணம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.'

'எனக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஒரு வருடமாவது வேலை செய்யவேண்டும் அதற்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா மற்றும் கணவன் என்ற உரிமையை நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது முதலில் நமக்குள் நட்பு வேண்டும் புரிதல் வேண்டும் பின் அது காதலாக வேண்டும் பின்பே நீங்கள் கணவனாக உரிமை கொண்டாடலாம். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும் சம்மதம் என்றால் கல்யாணம் செய்து கொள்ளலாம் ' என்றாள் அவள் .



' நான் வாயடைத்து நின்றேன் அவளின் பேச்சில் எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது. அவள் என்ன சொன்னாளும் நான் அதற்கு சம்மதித்து இருந்திருப்பேன் . எனக்கு அவள் மேல் அவ்வளவு காதல் ஆனால் அவளோ காத்திருக்க சொன்னாள் . அது எனக்கு மிகவும் எளிமையான விஷயம் அவள் என் அருகில் இருந்தாலே போதும் நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பேன் 'என்று நான் நினைத்துக்கொண்டேன்.



' வெளியில் நான் வெறும் தலையை ஆட்டினேன் .என் கெத்து குறையாது போல். என் காதலை அவளுக்கு மெல்ல உணர்த்தலாம் என்று முடிவு செய்தேன் '.



பின் இரண்டு மாதத்தில் எங்கள் திருமணம் மிகவும் எளிமையாக கோவிலில் நிகழ்ந்தது . அவள் அண்ணனால் திருமணத்திற்கு கூட வர இயலவில்லை அவன் வேலை அப்படி .



முதலில் அவள் என் வீட்டில் பொருந்த உதவினேன் . அவளுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றினேன் .



தேவைகளுக்காக பேசினோம் பின்பு மற்றவரின் நலனில் அக்கறையாக பேசினோம் பின்பு அது நல்ல தோழமையை எங்களுக்குள் உருவாக்கியது பின் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டோம் கொஞ்சநாள் காதல் வெளிப்படுத்தாமல் திரிந்தோம் ஒருவழியாக அவள் காதலை கூறினாள் அப்பொழுதும் நான் எப்பொழுதிலிருந்து அவளை காதலித்தேன் என்று கூறவில்லை என் காதலை மட்டும் வெளிப்படுத்தினேன்.



இதற்கே அவள் கேட்ட ஒரு வருடம் வேலை செய்யும் ஆசை ஒன்றரை வருடம் ஆனது . இதற்குமேல் தாங்காதுடா சாமி என்று நான் அவளை தேனிலவுக்கு இழுத்து வந்தேன். எங்கள் போதாத நேரம் இங்கு விபத்து நேர்ந்தது என்றான் .



'ஒன்றும் கவலை படாதீர்கள் பாஸ் உங்கள் மனைவி விரைவில் நலம் அடைவார். நீங்கள் இருவரும் சந்தோஷமாக வாழப் போகிறீர்கள் 'என்றான் அஜய்.



' நிகழ்ந்தால் மகிழ்ச்சியே அஜய் ' என்றான்.



' சரி பாஸ் நீங்கள் ஓய்வெடுங்கள் நான் வெளியே இருக்கிறேன் 'என்றான் .



கதவு வரை சென்று திரும்பி விஜய்யை பார்த்து கேட்டான் ' உங்கள் மனைவியின் பெயர்'.



' அவள் பெயர் நிலா, நிலா விஜய் ' என்றான் .



ஏனோ அஜய்க்கு இதயம் நின்று துடித்தது இவள் என் நிலாவாக இருக்க மாட்டாள் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டே அறையைவிட்டு வெளியேறினான் அஜய்.

அத்தியாயம் 3



அறையிலிருந்து வந்தபின் , நடுங்கும் கைகளோடு அஜய் தன்னிடம் உள்ள அவர்களின் பொருட்களில் அவளின் பாஸ்போர்ட்டை தேடினான் . அவ்வளவு எளிதில் அது அவன் கைகளில் சிக்கவில்லை பின் பொறுமை இழந்து பையை கீழே கவிழ்த்தான் அதில் உள்ளதா என்று தேடினான் . ஒரு போராட்டத்திற்கு பின்பு அவன் கையில் கிடைத்தது அவளின் பாஸ்போர்ட்.



பல வேண்டுதல்கள் மனதில் ஓட அதை திறந்தான் . ஆனால் அவன் வேண்டுதல் பொய்த்துப்போனது அது அவளேதான் . அவன் உருகி உருகி காதலித்த நிலாவே .



அவன் உலகம் இருண்டது இனி என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் கீழே தரையில் விழுந்தான் . முதல் முறை உயிருடன் இறப்பது என்றால் என்ன என்று உணர்ந்தான் . யாரோ அவன் இதயத்தை கைகளால் பிடுங்குவது போல் உயிர் வலி வலித்தது அவனுக்கு.

அவன் கண்களிலிருந்து நீர் வந்தது , அதை அவன் உணர்ந்தான். ' நான் அழுகின்றேன் ',என்று வியந்தான். இதெல்லாம் அவன் வாழ்வில் புதிது . இதற்கு முன்பு அவன் எப்பொழுது அழுதான் என்று கேட்டால் . அவனுக்கே தெரியாது , ஏதோ சிறுவயதில் எதற்கோ அழுத ஞாபகம் . பின் இப்பொழுது அழுகிறான் . இரண்டு வருடமாக நெஞ்சில் சுமந்த காதல் ஒரு நொடியில் இல்லை என்றானது அந்த வலியை அவனால் தாங்க இயலவில்லை.

யாரோ வரும் சத்தம் கேட்டு எழுந்து பொருட்களையெல்லாம் பையில் வைத்து மேலே இருக்கையில் அமர்ந்தான். நிலாவை பரிசோதித்த டாக்டர் ஐசியூவில் இருந்து வெளிவந்தார் நான் அவரின் அருகில் சென்றேன்.



அவளின் நிலையை கேட்க இயலவில்லை அதை அறிந்தோ என்னவோ டாக்டரே கூறினார் , ' உயிர் என்னால் காப்பாற்ற முடிந்தது அவள் நினைவுகளை தொலைத்துவிட்டால் . விபத்தில் அவள் தலையில் பலமாக அடிபட்டு இருக்கிறது' .

'டாக்டர் அவளுக்கு நினைவு திரும்ப வாய்ப்பு உள்ளதா ' ,என்றான் அஜய் .



' 50 சதவீதம் , அவளை மீண்டும் அவள் முன்பு வாழ்ந்த சூழ்நிலையை அமைத்து தந்தால் நினைவுகள் திரும்ப வாய்ப்புள்ளது . அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சில சில நினைவுகள் திரும்பி ஒன்றன்பின் ஒன்றாக நினைவு வந்து பின் அவளுக்கு அனைத்தும் ஞாபகம் வர வாய்ப்புள்ளது . ஆனால் புதிய சூழலில் அவள் வாழ்ந்தால் எனில் நினைவுகள் திரும்ப வாய்ப்பு மிகவும் குறைவு, ' என்றார் மருத்துவர்.



அஜய் ஒரு முடிவோடு எழுந்தான் நிலாவை சென்று பார்த்தான் அவள் இன்னும் கண் திறக்கவில்லை ஆகையால் மீண்டும் வெளிவந்தான் .



அஜய் அவனுடைய நண்பனை போனில் அழைத்தான் . அவனும் இந்த மருத்துவமனையில் ஒரு பார்ட்னர் . எனவேதான் இவர்களின் விபரம் மற்றும் பணம் எதுவும் வாங்காமல் இவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.



' ஹலோ பிரகாஷ் எனக்கு சில உதவிகள் செய்கிறாய ' என்று கேட்டான்.



' என்னடா உதவி என்று பெரிய வார்த்தை பேசிக்கொண்டு இருக்கிறாய் சொல் என்ன வேண்டும் என்று , 'என்றான்.



' நான் இங்கு சேர்த்த நிலா என்ற பெண்ணை வேறொரு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். நான் இங்கு வருவதற்கு முன்பு இருந்து செல்லும்வரை உள்ள சிசிடிவி காட்சியை டேட்டாபேஸ்களிள்ருந்து நீக்க வேண்டும்'.



' சரிடா நான் பார்த்துக்கொள்கிறேன்', என்றான் பிரகாஷ்.



இதுவே பல நண்பர்கள் செய்யும் தவறு தன் நண்பன் ஏதோ தவறு செய்கிறான் என்பது தெரிந்தும் அவனை தடுக்காமல் உதவி செய்கின்றனர்.



அஜய் விஜய்யின் பாஸ்போர்ட்டை கிழித்தான் , அவனின் மொபைலை உடைத்தான் . விஜயின் பொருட்களை குப்பையில் போட்டான் . நிலா பாஸ்போர்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டான் .



சில மணி நேரத்தில் அவளை வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்தான் . அவளின் கண் விழிப்பிற்காக காத்திருந்தான் . சில நிமிடத்திற்கு பின்பு அவளிடம் அசைவு அவள் அருகில் சென்றான். அவள் அந்த அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்தாள் பின் அஜய்யை கேள்வியாக பார்த்தாள் நிலா.



' நான் அஜய் இங்கு சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் . நீயும் நானும் காதலர்கள். நான் இங்கு இரண்டு வருடமாக வேலை செய்கிறேன் . இன்னும் ஐந்து நாட்களில் என் பணி நிறைவடைகிறது அதற்குள் நீ என்னுடன் சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டாய் . ஆகையால் நீ இன்று சிங்கப்பூர் வந்தாய் . காரில் என்னுடைய இடத்திற்கு வரும்முன் ஒரு விபத்து நிகழ்ந்தது . அதில் நீ உன் நினைவுகளை இழந்து விட்டாய் '.



' நீ ஒன்றும் கவலை கொள்ளாதே . நான் இருக்கிறேன். உன் உடல்நிலை சரியானதும் . நாம் இந்தியா திரும்புகிறோம் பின் திருமணம் செய்து கொள்ளலாம் . உனக்கு பழைய நினைவு திரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை. நாம் மீண்டும் முதலில் இருந்து நம் காதலை தொடங்கலாம் ', என்று கூறினான்.



அவள் விழிகளில் குழப்பம் மட்டுமே . அஜய் அவள் அருகில் சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டான் .



' அஜய் ! மிஸ்டர் அஜய் !! பேஷன்ட் கண் விழித்து விட்டார்கள்', என்று அவனை சிஸ்டர் அழைத்தார் .

அஜய் அவனின் நினைவில் இருந்து எழுந்தான் அவர்களின் பொருட்கள் உள்ள பையை எடுத்துக்கொண்டு நிலாவை இரண்டு வருடத்திற்கு பின்பு வேறு ஒருவரின் மனைவியாக காண சென்றான் .



அவள் அருகில் சென்று நின்றான் மிகவும் சோர்ந்த நிலையில் மெல்ல அவளின் இதழை விரித்து, 'யார் நீ ? 'என்று கேட்டாள்.



' கடைசிவரை நீ என்னை தெரிந்துகொள்ள வேண்டாம் பெண்ணே . என் காதல் என்னோடு போகட்டும் ,' என்று மனதில் நினைத்துக் கொண்டான் .



' உங்கள் பெயர் நிலா விஜய். நீங்களும் உங்கள் கணவனும் இங்கு தேனிலவிற்கு வந்தீர்கள் . ஹோட்டலுக்கு காரில் செல்லும் போது விபத்து நிகழ்ந்தது . உங்கள் கணவனுக்கு சில காயங்கள் . அவர் மற்றொரு அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார் . நீங்கள் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் ஐ தாண்டி உயிர் பிழைதீர்கள் ஆனால் நினைவை இழந்து விட்டீர்கள். நீங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஓய்வெடுங்கள். நாளை உங்கள் கணவரை நீங்கள் சந்திக்கலாம்' என்றான் அஜய்.



அவள் வேறு எதுவும் கூறுவதற்கு முன்பு அறையை விட்டு வெளியேறினான்.



அஜயால் அவனின் எண்ணத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை.



அஜய் மருத்துவரை சந்தித்து இவர்களை எப்பொழுது டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று கேட்டுக்கொண்டு , ரிசப்ஷனில் பணம் செலுத்தி பின் விஜயை காண சென்றான் .



' விஜய் உங்கள் மனைவி விழித்து விட்டார்கள் . ஆனால் அவர்களுக்கு பழையது மறந்துவிட்டது . இந்த நிலையில் நீங்கள் இங்கு இருப்பது பாதுகாப்பு இல்லை ஆகையால் இந்தியா சென்று உங்கள் குடும்பத்தின் உதவியோடு உங்கள் மனைவிக்கு நினைவுகளை திருப்ப முயற்சி செய்யுங்கள்,' என்றான்.



' நன்றி அஜய் . நீங்கள் கூறுவது எனக்கும் சரி என்று தோன்றுகிறது. ஆனால் நான் அவளை ஒரு முறையாவது பார்க்க முடியுமா அஜய் ??'.



'இப்பொழுது உங்கள் இருவருக்கும் ஓய்வு தேவை . கண்டிப்பாக நீங்கள் நாளை உங்கள் மனைவியை சந்திக்கலாம். நாளை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று மருத்துவர் கூறினார் . நான் நீங்கள் இந்தியா செல்ல டிக்கெட் புக் செய்து நாளை சந்திக்கிறேன்', என்று கூறி அஜய் மருத்துவமனையில் இருந்து வெளியேறினான் .



அடுத்த நாள் காலையில், விஜயை சந்தித்தான் அவர்களின் பாஸ்போர்ட், மொபைல், பணம் அனைத்தையும் விஜயிடம் கொடுத்தான்.



' உங்கள் இருவருக்கும் பிளைட் ஒரு மணிக்கு', என்று கூறி டிக்கெட்டை விஜய் இடம் கொடுத்தான்.



' எனக்கு இன்று அலுவலகத்தில் முக்கியமான வேலை உள்ளது ஆகையால் நான் செல்கிறேன் . உங்களை ஏர்போர்ட்டிற்கு பிக்கப் செய்ய என் நண்பனை பதினோரு மணிக்கு அனுப்புகிறேன் ' , என்றான் அஜய் .



அவன் கிளம்ப எத்தனிக்கும் பொழுது , ' அஜய் நீங்கள் செய்தது பெரிய உதவி அதற்குமேல் பண உதவி தேவை இல்லை ப்ளீஸ் மறுக்காமல் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் ' என்றான் விஜய் .



அஜய் பணத்தை பெற்றுக்கொண்டான் பின் கிளம்பிவிட்டான்.



ஆனால் ஏர்போர்ட்டில் தூரத்திலிருந்து அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான் அஜய். நிலா எந்தத் தயக்கமும் இன்றி விஜய்யோடு சென்று கொண்டிருந்தால் . இந்த நிலையிலும் அவள் அவன்மேல் வைத்துள்ள நம்பிக்கை புரிந்தது . இதுபோல் அவள் என்னுடன் நிச்சயமாக வந்திருக்க மாட்டாள் என்று தோன்றியது .



தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காத வரை இவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே ஆனால் , தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாமல் நல்வழி செல்பவரே உண்மையில் உயர்ந்தவர். அந்த வகையில் அஜய் மிகவும் உயர்தவனாகி போனான்.



இந்தியா செல்லும் எண்ணத்தை தள்ளிப் போட்டன் .ஏனோ இந்தியா சென்று அவன் செய்ய நினைத்த காரியம் கானல் நீராய் முடிந்துபோனது , இருந்தாலும் அம்மாவை பார்க்க வேண்டும் போலிருந்தது விரைவில் சென்று அவர்களை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தான் அஜய்.



நன்றி .
 

Latest posts

New Threads

Top Bottom