Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வசீகரனின் யாழ் நீ!

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-28
"வெண்ணிலவு நீயெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீயெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!"

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வசீகரனின் பள்ளித்தோழன் அஷ்வின் திருமணத்திற்கு நண்பர்களுடன் காரில் பெங்களூர் சென்றுக்கொண்டு இருந்தான். ஆஷா-கோகுல் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் தான் ஆகி இருந்தது. அவர்களும் யஷ்வந், வசீகரனுடன் வந்தனர்.
"ஏண்டா வசீ, நீ எப்போ மேரேஜ் பண்ணிக்க போற?"என்றான் யஷ்வந்.
"என்னடா திடீர்னு இப்படி கேள்வி கேக்குற?" என்றான் வசீகரன்.
"இல்லடா நீ மட்டும் பிரீயா வெளியூர், வெளிநாடுனு சுத்துற.நா குடும்பஸ்தன் ஆகிட்டு, பிரென்ட் மேரேஜ்க்கு கூட ஒய்ப் கிட்ட கெஞ்சி பர்மிசன் வாங்கிட்டு வரேன். அதான் கொஞ்சம் பொறாமையா இருக்கு" என்றான் யஷ்வந்.
"இரு ஓவியாக்கு கால் பண்ணி சொல்றேன். மேரேஜால பொண்ணுங்களுக்கு தான்டா அதிகம் பொறுப்பு. நீ ஒன் இயர் பையனை விட்டுட்டு பிரென்ட் மேரேஜ்க்கு வர. பட் உன் ஒய்ப் அப்படி எங்கேயும் போக முடியுமா? அவங்களே மேரேஜ் பத்தி குறை சொல்லல. நீ ஏண்டா குதிக்கிற?"என்றான் வசீ.
"சூப்பர் வசீ. இவனுங்க எல்லாம் ஏதோ பார்வ்ர்ட் மெசேஜ் பாத்திட்டு காமடின்ற பேர்ல மேரேஜை கிண்டல் பண்றானுங்க. வீட்ல ஒய்ப் உதவி இல்லாம இவனுங்க ஒன்னும் செய்ய மாட்டானுங்க. இவன் ட்ரெஸ்ஸையே இவன் ஒய்ப் தான் எடுத்து தரணும்!" முறைத்தபடி சொன்னாள் ஆஷா.
"ஹே நா சும்மா சொன்னேன். உரிமைக்குரல் எல்லாம் கொடுக்காத. முக்கியமா இத ஓவியாகிட்ட சொல்லிடாத. ப்ளீஸ்" கெஞ்சினான் யஷ்வந்.
"பொழச்சி போ. நீ பேசின மேட்டர் எனக்கு பிடிச்சிருக்கு. சோ மன்னிச்சிட்டேன்" என்றாள் ஆஷா.
"ரொம்ப நன்றிமா. பட் நா அப்படி என்ன பேசிட்டேன்?" என்றான் ஆர்வத்துடன்.
"நம்ம வசீ மேரேஜ் பத்தி பேசினியே. எனக்கும் வசீ மேரேஜ் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. எப்போ வசீ எங்களுக்கு மிசஸ்.வசீய காட்டுவ?"என்றாள் உற்சாகமாக.
"இன்னும் நா பிசினஸ்ல அச்சீவ் பண்ண வேண்டியது நெறைய இருக்கு ஆஷ். இன்னும் 5 இயர்ஸ்க்கு எந்த பிளானும் இல்ல"என்றான் தீர்மானமாக.
கோகுலும்,"ஹே இவன் பிசினஸ காதல் பண்ணிட்டு இருக்கான்டா. எந்த பொண்ணையும் பார்க்கவும் மாட்டேங்குறான், ஏதாவது பொண்ணு இவனை பார்த்தாலும் மொறச்சி துரத்தி விட்டுடுறான். எனக்கு என்னவோ இவனுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இருக்க மாதிரி தெரியல. பேசாம பார்வதி அம்மா கிட்ட இதை பத்தி சொல்லி வைக்கலாம்னு தோணுது",என்றான்.
"கரெக்ட் டா. முன்னாடி ஸ்போர்ட்ஸ் காதல், இப்போ பிசினஸ் காதல். இப்படியே போனா, இவன் பேச்சிலராவே இருந்துடுவான். இவனுக்கு மேரேஜ் பண்ணா தான் இவன் அடங்குவான்"என்றான் யஷ்வந்.
"நீங்க வேற,சும்மா இருங்க. இப்படி இருக்குற ஆளுங்க தான் காதல்ல சட்டுனு விழுந்து ஒய்ப் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பாங்க. நீங்க வேணும்னா பாருங்க"என்றாள் ஆஷா.
அவர்களை பார்த்து கிண்டலாக சிரித்து விட்டு, காரை பெங்களூர் நோக்கி ஓட்டினான் வசீகரன்.
பெங்களூரில் அவர்களுக்காக அறைகள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டலில் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றனர். இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் காலை முகூர்த்தத்தில் திருமணத்தில் கலந்துக்கொள்ள முடிவு செய்து இருந்தனர்.
விடியற்காலையில் எழுந்து அவசரமாக கிளம்பி திருமண மண்டபம் சென்றனர்.
"என்னடா இவன் இவ்ளோ சீக்கிரம் முகூர்த்த நேரம் வச்சிருக்கான்? நீ உன் மேரேஜை கொஞ்சம் லேட் முகூர்த்தத்தில வைடா வசீ"என்றான் யஷ்வந்.
"ஓகேடா. உனக்காக 10 மணி முகூர்த்தத்தில வச்சிடுறேன்"என்றான் வசீகரன்.
பேசியபடியே உள்ளே சென்றவர்களை மணமகனின் பெற்றோர் ஓடிவந்து வரவேற்றனர். மணமகனின் அறைக்கு அழைத்து சென்றனர். அஷ்வின் அன்போடு இவர்களை அணைத்துக் கொண்டான். அஷ்வினை மணமேடைக்கு அனுப்பி விட்டு வந்திருந்த நண்பர்களுடன் தங்கள் பள்ளிக்கால நினைவுகளை பேசி மகிழ்ந்தனர்.
திருமணம் முடிந்து புகைப்படம் எடுத்துவிட்டு அனைவரும் சாப்பிட சென்றனர். வித விதமான உணவு வகைகளுடன் காலை உணவை முடித்துவிட்டு கை கழுவ உணவுகூடத்தின் பின்புறம் சென்ற போது வசீகரனுக்கு அவன் அம்மாவிடம் இருந்து போன் வந்தது.
மற்றவர்கள் மணமக்களிடம் விடைபெற சென்றுவிட அவன் மட்டும் போனில் பேசியபடி நின்றுவிட்டான். பேசிவிட்டு போனை அணைத்தபடி உணவு பரிமாறும் அறைப்பக்கமாய் வரும்போது முன்னாள் நின்றிருந்த இரண்டு இளைஞர்களின் பேச்சுக்குரல் கேட்டது.
"ரொம்ப ஓவர் ஸீன்டா அந்த பொண்ணு. எங்க அண்ணியோட பிரெண்டா இருக்கா, பார்க்கவும் அழகா இருக்காளேனு போன் நம்பர் கேட்டா, மொறச்சிட்டு போகுது. பெரிய பேரழகினு நெனப்பு" என்றான் அஷ்வினின் தம்பி ஆர்யன் அவர்களின் எதிர்திசையில் வாசலருகே நின்றிருந்த பெண்களின் கூட்டத்தைப் பார்த்தபடி.
"டேய் நீ வந்ததுல இருந்து அந்த பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருந்த, அவ ட்ரெஸ் கலரை வச்சி 'பச்சை நிறமே பச்சை நிறமே'னு பாடி கிட்டு இருந்த. அதிலிருந்தே உன் பிளான் என்னனு அவளுக்கு புரிஞ்சிருக்கும். அதான் உஷாரா மொறச்சிட்டா. நீ மட்டும் அமைதியா இருந்திருந்தா போன் நம்பர் வாங்கி இருக்கலாம்" என்றான் அவன் நண்பன்.
"இப்போ மட்டும் என்னடா? அவ கிளம்பறதுக்குள்ள நா போன் நம்பர் வாங்கி காட்டுறேன். எவ்ளோ பெட்?" என்றான் ஆர்யன்.
"அவ்ளோ அவசியமா அந்த பொண்ணு நம்பர்?" என்றபடி அவர்களின் தோள்களின் மேல் கை போட்டான் வசீகரன்.
பட்டென திரும்பிய ஆர்யன்,"வசீ அண்ணா, சும்மா ஜாலியா பேசிட்டு இருந்தோம் அண்ணா"என்றான் சமாளிப்பாக.
"ஆர்யா, இது உன் அண்ணன் மேரேஜ். நீ தான் பொறுப்பா எல்லாத்தையும் கவனிக்கணும். கெஸ்ட் எல்லாரையும் பாதுகாப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். நீயே ப்ராப்ளம் கிரியேட் பண்ண கூடாது"என்றான் அழுத்தமாக வசீகரன்.
"இல்லணா அது என் அண்ணி பிரென்ட். அதான் சும்மா பேசலாம்னு..." இழுத்தான் ஆர்யா.
"அந்த பொண்ணு உங்க அண்ணியோட பிரென்ட். நீ விளையாட்டா நினைச்சி
செய்றது அந்த பொண்ணுக்கு ஹர்ட் ஆகிட்டா என்ன பண்றது? பிரென்ட் மேரேஜ்க்கு ஆசையா வந்து இருப்பாங்க. அவங்க வருத்தத்தோடு போற மாதிரி செய்யலாமா? அதோட வேற ஏதும் பிரச்சனை ஆகிட்டா உன் அண்ணன் மேரேஜ் டென்ஷன்ல எல்லாருக்கும் தேவையில்லாத தொல்லை தான? ஒழுங்கா போய் அம்மா கிட்ட கேட்டு ஏதாவது ஹெல்ப் பண்ணு போ" என்று சிரித்தபடி அவர்கள் தோளை அழுத்தி அங்கிருந்து தள்ளினான் வசீ.
தன் தோளை தேய்த்துவிட்டபடி,"சாரிணா" என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து உணவு பரிமாற சென்றனர் இருவரும்.
அவர்களை பார்த்து சிரித்தவன், அங்கிருந்து திருமண மண்டப மணமேடைக்கு செல்ல வாயில்புறம் திரும்பினான். அந்த உணவுக்கூட நுழைவாயிலின் வரவேற்பு பொம்மையின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர் சில பெண்கள்.
அங்கே அவர்களின் நடுவில் பச்சையும் வெள்ளையும் கலந்த சின்ன கரையிட்ட பட்டுப்புடவையில் சிரித்தபடி போஸ் கொடுத்து கொண்டு இருந்தாள் அந்த அழகி.
ஆடம்பரமில்லாத அலங்காரம் , மனதை சாந்தப்படுத்தும் குழந்தை சிரிப்புடன் இருந்தாள் அவள். 'இவள் தான் ஆர்யா சொன்ன பச்சை நிறமா இருக்கும்'என்று நினைத்துக்கொண்டான். அவன் எண்ணம் உண்மை தான் என்பது போல அவன் போன் ஒலி கேட்டது.
கோகுல் தான் அழைத்தான்."வசீ நாங்க அஷ்வின் கிட்ட சொல்லிட்டோம்டா. நீ ஸ்ட்ரெயிட்டா கார் பார்க்கிங் வந்துடு" என்றான்.
அந்த பச்சை நிற சேலைக்காரியை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, உணவுக்கூடத்தின் இடதுபுறத்தில் இருந்த பார்க்கிங்க்கு செல்லும் மற்றோரு வாயிலின் வழியே வெளியே வந்தான்.
பார்க்கிங்கில் இருந்த மற்ற நண்பர்களிடம் விடைபெற்று காரின் அருகே வரும்போதே மெல்லிய புன்னகையுடன் வந்த வசீயை பார்த்த ஆஷா,"என்ன வசீ சிரிப்பு?"என்றாள் குறும்பாக.
"நத்திங்" என்றபடி காரை ஓட்டினான்.
கொஞ்சம் தூரம் வந்ததும்,"பங்க்சன்ஸ்க்கு வரும்போது கேர்ள்ஸ்க்கு அழகு அதிகமாயிடுது இல்லடா?"என்றான் வசீ.
மற்ற மூவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்."என்னடா பொண்ணுங்க அழகை பத்தியெல்லாம் பேசற? எனிதிங் ஸ்பெஷல்? காரை மறுபடியும் மேரேஜ் ஹாலுக்கு திருப்பலாமா?"என்றான் கோகுல்.
"ஹேய் நத்திங் டா. மேரேஜ்ல எல்லா கேர்ள்சும் நல்லா ட்ரெஸ் பண்ணி இருந்தாங்க. அத தான் சொன்னேன்" என்று சிரித்துவிட்டு பேச்சை மற்றினான்.அவர்களும் அவன் பேச்சில் இணைந்துக்கொண்டனர்.
அவன் மனக்கண்ணில் அந்த பச்சை நிற சேலை அழகி சிரித்தபடி தோன்றினாள்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-29
"கடுமையுடையதடீ - எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
அங்கு வருவதற்கில்லை;
கொடுமை பொறுக்கவில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்குதங்கே;
நடுமையரசியவள் - எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். "

அன்றே சென்னை திரும்பினார்கள் அந்த நண்பர் குழு. வசீகரன் அவன் வேளைகளில் மூழ்கினான். தொழில் தொடங்கி இந்த மூன்று ஆண்டுகளில் நல்ல பெயர் பெற்று இருந்ததால் சென்னையில் அதிகமாகவே கட்டிடங்கள் கட்ட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது.
சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த ஒரு பகுதியில் ஷாப்பிங் மால் கட்டிக்கொண்டு இருந்தனர் 'பாரு கன்ஸ்ட்ரக்ஸன்'. அதை மேற்பார்வையிட காரில் சென்று கொண்டிருந்தான் வசீகரன்.
பின்சீட்டில் அமர்ந்து காரின் வலப்பக்க கண்ணாடி வழியே ரோட்டின் எதிர்புறம் தெரிந்த கட்டிடங்களை மதிப்பிட்டு கொண்டு வந்தவன் கண்ணில் பட்டாள் அந்த பெண், அவன் பெங்களூரில் பார்த்த பச்சைசேலை அழகி. இன்று சிவப்பு சேலை உடுத்தி இருந்தாள். பைக்கில் யாரோ ஒருவனின் பின்னால் அமர்ந்திருந்தாள். வசீகரனின் கார் அந்த பைக்கை தாண்டி சென்றுவிட்டது. ஆனால் வசீகரனின் மனம் செல்லவில்லை.
'பெங்களூரில் பார்த்த பொண்ணு இங்க எப்படி?' என்று யோசித்தான். 'அஷ்வினின் ஒய்ப் சென்னைனு தானே சொன்னான். அப்போ அவங்க பிரெண்டும் சென்னைல தான் இருப்பாங்க' என்று எண்ணிக்கொண்டான்.
ஆறு மாதங்களுக்கு முன் ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்தவளை இப்போதும் நினைவு இருப்பதை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.
ஆனால் அவன் மனம் அவளை மீண்டும் பார்த்ததில் ரகசிய சந்தோஷத்தை பெற்று இருந்தது.
அன்று முதல் அந்த பக்கம் வரும் போதெல்லாம் அவளின் முகத்தை அந்த சாலையில் அவன் கண்கள் தேட தொடங்கியது. ஆனால் அவள் அவன் கண்களுக்கு தென்படவே இல்லை.
இப்படியே மூன்று மாதங்கள் ஓடிய பின் ஒரு நாள் மீண்டும் அவன் அவளை பார்த்தான். அன்று ஆஷா-கோகுல் முதல் திருமண நாள். ஆஷா வளைகாப்பு முடிந்து அவள் தாய் வீட்டில் இருந்தாள். கோகுல் அவளை பார்க்க தினமும் மாலையில் சென்று விடுவான். சைட் விசிட் முடித்துவிட்டு ஆறு மணிக்கு அவர்களுக்கு பரிசுடன் சர்ப்ரைஸ் கொடுக்க ஆஷா வீட்டுக்கு போனான் வசீகரன். ஆனால் அங்கு அவனுக்கு சர்ப்ரைஸ் காத்திருந்தது.
ஆஷாவும் கோகுலும் அருகிலிருந்த கோவிலுக்கு சென்று இருப்பதாக அவள் தாய் சொன்னார். அவர்களை கோவிலிலேயே சென்று பார்ப்பதாக சொல்லி விட்டு கோவில் வாசலில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தான்.
அப்போது இரு இளம்பெண்கள் கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அதில் ஒருத்தி அவனின் அழகி. பக்கத்தில் இருந்த பெண்ணிடம் ஏதோ பேசி சிரித்தபடி வந்தாள். இன்று பிங்க் மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த சுடிதார் அணிந்திருந்தாள். தன்னை மறந்து பார்த்திருந்தான் வசீகரன்.
அவனது காரைத்தாண்டி சாலையை கடந்தாள். திடீரென மறுபுறம் இருந்த கார் கதவு தட்டப்பட திரும்பி பார்த்தான். ஆஷாவும் கோகுலும் நின்றிருந்தனர்.
காரில் அவர்களை ஏற்றிக்கொண்டு
மீண்டும் ஆஷா வீட்டுக்கு சென்று அவர்களுக்கு பரிசு தந்துவிட்டு வீட்டிற்கு வந்தான். ஏனோ இப்போது அவள் நினைவு அவனுக்கு அதிமாக வந்தது.
'சே என்ன இது முட்டாள் தனம். ரெண்டு மூனு முறை தூரத்துல இருந்து மட்டும் பார்த்த பொண்ணை பத்தி நா யோசிக்கிறதா? எல்லாருக்கும் டீன் ஏஜ்ல வர பீலிங் எல்லாம் எனக்கு காலங்கடந்து வருது போல' தலையசைத்து அவள் நினைவிலிருந்து வெளிவந்தான். ஆனால் அவனால் அது முடியாது என்பதை பத்து நாட்களுக்குள் உணர்ந்தான்.
ஆஷாவுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. மருத்துவமனைக்கு தன் பெற்றோருடன் சென்றான் வசீகரன். குழந்தையை பார்த்து விட்டு தங்கசெயின் ஒன்றை போட்டுவிட்டு காரில் வரும் போது பார்வதி,"குழந்தை ரொம்ப அழகு. சிரிச்சா பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு" என்றார்.
சிரித்தபடி தாய்க்கு 'ஆமாம்' என்று தலையசைத்தவனின் மனதில் அவளின் சிரிப்பு தோன்றியது. 'அவ சிரிச்சாலும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்' என நினைத்தவன் அதிர்ச்சியானான்.
'அவ என் மனசுல இவ்ளோ பிக்ஸ் ஆகிட்டாளா? அவ யார்னு கூட தெரியாது. ஆனா அவ ஞாபகம் வந்துட்டே இருக்கு. இது என்ன மாதிரி பீலிங்?' குழம்பியபடி வீடு சென்றான்.
இரவெல்லாம் யோசித்தவனுக்கு ஒன்று புரிந்தது. அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது. இதுவரை அவனுக்கு தோன்றாத உணர்வுகளை அவள் உணர்த்தி இருக்கிறாள் என்பது.
'அவ யார்னே எனக்கு தெரியாது. இது செட் ஆகுமா?' என கேள்வி கேட்டுக்கொண்டவன், 'அது என்ன பெரிய விஷயமா? அவள் சென்னையில தான இருக்கா? நெக்ஸ்ட் டைம் பார்க்கும் போது பேசி தெரிஞ்சிக்க வேண்டியது தான்' தனக்கு தானே பதிலும் சொல்லிக்கொண்டான்.
அவளை மீண்டும் சந்திக்க திட்டமிட்டான்.
கோகுல் திருமணநாள் ஒரு வெள்ளிக்கிழமை வந்திருந்தது. அப்போது தான் அவள் கோவிலுக்கு வந்திருந்தாள். எனவே அடுத்து வந்த வெள்ளிக்கிழமை அவளைக் காண முடிவு செய்து மாலை அந்த கோவிலுக்கு சென்று காத்திருந்தான்.
அவனுக்கு அவ்வளவாக கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது. இதற்கு முன் அவன் அம்மாவுடன் கோவிலுக்கு வந்து இருக்கிறான் அவ்வளவு தான். இப்போது 'அவளை' தேடி வந்து இருக்கிறான். சரியாக 5.50 மணிக்கு கோவிலுக்குள் சென்றவன் வெளிப்பிரகாரத்தின் ஓரத்தில் இருந்த பூஜை பொருட்கள் விற்கும் கடைக்கு எதிரில் இருந்த பெரிய தூணில் சாய்ந்து அமர்ந்தான்.
அந்த இடம் கோவில் உள்பிரகாரத்திற்கு செல்லும் வழியை நன்றாக பார்க்கும் படி இருந்தது. அவள் கோவிலுக்குள் வந்தால் பார்க்க வசதியாக இருக்கும் என அவன் பொறியாளர் மூளை கணக்கிட்டது.
தூணில் சாய்ந்து அமர்ந்த நேரம் அந்த தூணின் மறுபுறம் இருந்து யாரோ பேசும் குரல் கேட்டது.
" கண்டிப்பா நா நல்லா படிப்பேன்க்கா" யாரோ ஒரு பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"நீ நல்லா படிப்பனு எனக்கு தெரியும். உன் மார்க் தான் உன் ஆர்வத்த சொல்லுதே. இருந்தாலும் இதுவரைக்கும் நீ படிச்சது கேர்ள்ஸ் ஸ்கூல். அங்க எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க. நீ நல்லா படிக்கிற பொண்ணு. டீச்சர்ஸ் எப்பவும் படிக்க மோடிவேட் பண்ணுவாங்க. படிக்குறத தவிர உனக்கு வேற வேலை இல்ல. இப்போ நீ காலேஜ் போற. அதுவும் கோஎட். எல்லாரும் வித்தியாசமான குடும்பத்துல இருந்து வந்து இருப்பாங்க. யாரையும் பார்த்து உன்னை நீயே தாழ்வா நெனச்சிட கூடாது. அதே நேரத்தில யாரையும் பார்த்து தேவையில்லாத ஆசைகளையும் வளர்த்துக்க கூடாது. தேவையில்லாம பயப்பட கூடாது. அங்க லெக்சரர்ஸ் இருப்பாங்க.படிப்புல உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேட்டுக்கோ. தைரியமா இரு. உனக்கு எப்போ எந்த ஹெல்ப் தேவைனாலும் எனக்கு கால் பண்ணு. சரியா?" நீண்ட உரையாற்றிக் கொண்டு இருந்தாள் மற்றவள்.
"கண்டிப்பாக்கா.நீங்க மட்டும் இல்லனா, என்னை ஜவுளிக்கடை வேலைக்கு தான் எங்க அம்மா அனுப்பி இருப்பாங்க. நீங்க எனக்கு பண்ண ஹெல்ப்பை நா மறக்கவே மாட்டேன்" குரலில் நன்றியை கலந்து சொன்னாள்.
"ஹேய் ஜீனியஸ்! நீ இப்படி பேசினா அக்காவுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அம்மா எங்க ஆபீஸ்ல ஆபீஸ் அசிஸ்டண்ட். அவங்க வாங்குற சம்பளத்துல மூனு பொண்ணுங்களை வளர்த்து, படிக்க வைக்கிறது கஷ்டம்டா. இப்போ தான் உங்க பெரிய அக்காவுக்கு கல்யாணம் பண்ணாங்க. உங்க அப்பா பொறுப்பா இருந்தாலும் பரவாயில்ல. அவர் கூட மல்லுக்கட்டிக்கிட்டு அவங்களால என்ன செய்ய முடியும்? அவங்களுக்கு உன்னை நெனச்சு எப்பவும் பெருமை தான். உன்னையாவது எப்படியும் மேல படிக்க வைக்கணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. பட் உன் அக்கா மேரேஜ் சூழ்நிலை காரணமா உன்னை வேலைக்கு அனுப்ப நெனச்சு இருக்காங்க.
என்கிட்ட சொல்லி எவ்ளோ அழுதாங்க தெரியுமா? நான் இந்த இயர் பீஸ் காட்டுறேன்னு சொன்னப்ப கூட வேணாம்னு தான் சொன்னாங்க. ஒரு வருஷம் வேலைக்கு போய் சேர்த்து வச்சி அடுத்த வருஷம் படிக்கட்டும்னு சொன்னாங்க. நா ஒரு வருஷம் வேஸ்ட் ஆக வேணாம்னு சொன்னதால ஒத்துக்கிட்டாங்க. அவங்க உன் படிப்பை நிறுத்த நினைக்கல. போஸ்ட்போண்ட் பண்ணாங்க அவ்ளோ தான். அவங்கள நீ எப்பவும் விட்டு குடுக்க கூடாது. நீ வேலைக்கு போய் உங்க அம்மாவுக்கு பெருமையை தேடி கொடுக்கணும், அவங்கள நல்லா பார்த்துக்கனும். புரியுதா?"
"புரியுதுக்கா"
"அப்புறம் உனக்கு நா பார்த்து வச்சிருக்க டைப்பிங் இன்ஸ்டிடியூட் பார்ட் டைம் ஜாப் சேலரி உனக்கு தேவையான திங்க்ஸ் வாங்க சரியா இருக்கும். அந்த வேலை பிடிக்கலைனா சொல்லு, வேற ஜாப் பார்க்குறேன். ஓகே? " என்றாள் அந்த 'அக்கா'.
"ஓகே அக்கா. நா சீக்கிரம் வேலைக்கு போய் உங்களுக்கு கல்யாணம் ஆகும் போது என் காசுல மோதிரம் வாங்கி போடுறேன்" என்றாள் தங்கை.
"அடடா இதுக்காகவே மூணு வருஷம் மாப்பிள்ளை பார்க்க வேணாம்னு எங்க அம்மா கிட்ட சொல்லனும்" சிரித்த குரலில் சொன்னாள்.
வசீகரனுக்கு அவர்களின் உரையாடல் பிடித்து இருந்தது. 'எவ்ளோ தெளிவா கைட் பண்றாங்க? இந்த மாதிரி கேர்ள்ஸ்க்கு இப்படிப்பட்ட சப்போர்ட் கண்டிப்பா வேணும்' என எண்ணியவன் அந்த 'அக்கா' என அழைக்கப்பட்டவளை பாராட்ட எண்ணி எழுந்தான்.
அந்நேரம் சரியாக,"அறிவிருக்கா உனக்கு?" என்ற ஆண் குரல் பக்கத்தில் இருந்த கடையில் இருந்து கேட்டது.
ஒரு பெரிய உருவம் கொண்ட ஆள் அவர் எதிரில் நின்றிருந்த பெண்ணிடம் கத்திக்கொண்டு இருந்தான்.
அந்த பெண் பயந்தபடி நின்றிருந்தாள். அந்த பெரிய உருவ மனிதனின் வெள்ளை சட்டையில் விளக்கு எண்ணெய் ஊற்றி இருந்தது.
அவரது காலுக்கு கீழே இரண்டு அகல்விளக்குகள்,சிறிய தட்டு, எண்ணெய்,விளக்கு திரி ஆகியவை விழுந்து கிடந்தன.
"உங்களுக்கு இருக்கா மிஸ்டர்?" நிதானமாக கேள்விக் கேட்டபடி தூணின் மறுபுறம் இருந்து வெளியே வந்தாள் அவள். வசீகரனின் மனதிற்கு இனிய அழகி.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-30

"காதலடி நீயெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீயெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! "
அவளை கண்டதும் வசீகரனின் உள்ளம் துள்ளியது.அவளை கூர்ந்து கவனித்தான். அழகிய வான நீல நிற சுடிதாரில் இளமஞ்சள் துப்பட்டாவுடன் இருந்தாள் அவள். நிதானமாக கேள்வி கேட்டபடி, முகத்தை சுருக்கியபடி எதிரில் நின்ற அந்த பெரிய உருவ மனிதனின் முன் நின்றாள்.
அவளின் கேள்வியில் அவளை திரும்பி பார்த்த அந்த மனிதன் கண்ணில் கோபம் வந்தது. "ஏய்! எவ்ளோ திமிர் உனக்கு? டு யு நோ ஹு அம் ஐ?" என்றார்.
"யாரா வேணும்னா இருங்க சார். எனக்கு என்ன வந்தது? பப்ளிக்ல இப்படி மோசமா நடந்துக்குற உங்களை மாதிரி ஆள கேள்வி கேட்டா எனக்கு திமிருனு சொல்விங்களா?" நக்கலாக சிரித்தாள் அவள்.
" என்ன நடந்ததுனு தெரியாம பேசாத. நா எவ்ளோ பெரிய விஷயத்துக்காக பூஜை பண்ண வந்து இருக்கேன் தெரியுமா? இந்த லேடி என்மேல இப்படி அபசகுணமா எண்ணையை கொட்டி வச்சிடுச்சி. ஆறு மணிக்கு மேல கண்ணு தெரியாதுனா,எதுக்கு வெளிய வரணும்? இந்த மாதிரி ஆள் எல்லாம் கோவிலுக்கு வரலனு யார் கேட்டா?" மிகுந்த கோபத்தில் அளவுக்கு அதிகமாக பேசினார் அவர். மிக கேவலமான ஒரு பார்வையை எண்ணெய் கொட்டிய பெண்மணி மீது வீசினார். அந்த பெண்மணி நடுத்தர வயதில் இருந்தார்.
"மைண்ட் யுவர் வோர்ட்ஸ் சார். ஆத்திரத்தில் அறிவை இழந்துடாதீங்க. நான் பார்த்துட்டே தான் இருந்தேன். அவங்க விளக்கை வாங்கிட்டு பொறுமையா தான் திரும்பினாங்க. நீங்க தான் அவசரமா ஓடிவந்து அவங்க மேல மோது0னீங்க. இப்போ அவங்க மேல பழி போடுறீங்க, அதுவும் இல்லாம அவங்கள மோசமா பேசுறீங்க" என்று சொல்லிவிட்டு முறைத்தாள் அவள்.
"அவங்க கோவிலுக்கு வரனுமா இல்லையானு நீங்க முடிவு பண்ண கூடாது சார். கடவுள் முன்னாடி எல்லாரும் சமம் தான். மத்த மனுஷங்கள மதிச்சா தான் கடவுள் கூட நம்ம மேல கருணை காட்டுவார், புரிஞ்சிக்கோங்க. அவங்ககிட்ட மன்னிப்பு கேளுங்க சார் " என்றாள் கண்ணில் கோபத்துடன்.
கோபமாக ஏதோ பதில் பேச வாய்திறந்த அந்த மனிதரின் பேச்சை தடை செய்தது பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு பெண்மணியின் குரல்," அந்த பொண்ணு சரியாதான் சொல்லுது. கோவில்ல சாமி முன்னாடி நின்னுக்கிட்டு இப்படி பேசுறது தப்பு. அதுவும் அவர்மேல தப்பு இருக்கும்போது, எவ்ளோ துணிச்சலா பேசுராரு. இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் கேட்க ஆளில்லனு நினைச்சிட்டு இருக்காங்க. இவர் அந்த அம்மா கிட்ட மன்னிப்பு கேட்கணும்"
அங்கிருந்த மற்றவர்களும் அவரின் பேச்சை ஒப்புக்கொள்ள அந்த மனிதருக்கு வேறு வழி இல்லாமல் போனது. "எனக்கு ஒரு புது ஆர்டர் கிடைக்கணும்னு பூஜை பண்ண வந்தேன். அந்த டென்ஷன்ல தெரியாம இடிச்சிட்டேன். ஏதோ கோபத்துல பேசிட்டேன். சாரிமா" என்றார் அவர் இறுக்கமான முகத்துடன். கீழே விழுந்த விளக்குகளுக்கு பதிலாக 100 ரூபாய் பணத்தை அந்த பெண்மணியிடம் நீட்டினார்.
இவ்வளவு நேரமும் பதற்றமாக நின்றுக்கொண்டு இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்த அந்த பெண்மணி பணம் கொடுத்ததும்,"வேணாம் சார். ஏதோ தெரியாம மோதிட்டீங்க. நா வேற விளக்கு வாங்கிக்கிறேன். உங்க வேல நல்ல விதமா முடியனும்னு நானும் வேண்டிக்கிறேன் சார்" என்றுவிட்டு நகர்ந்தாள்.
அந்த மனிதர் முகத்தில் ஈயாடவில்லை. கூடியிருந்த கூட்டம் தங்களுக்குள் பேசியபடி நகர்ந்தனர். தானும் அமைதியாக அங்கிருந்து கிளம்பினாள் அழகி.
அவளையே பார்த்துக்கொண்டு இருந்த வசீகரனும் அவள் பின்னாடியே நகர்ந்தவன் ஏதோ தோன்ற திரும்பி அந்த பெரிய மனிதனிடம் வந்தான்.
"ஹலோ சார்" என்று புன்னகைத்தான்.
அவரும் பதிலுக்கு சின்ன புன்னகையுடன் அவனை ஏறிட்டு பார்த்தவர் ஆச்சர்யமானார், " ஹலோ வசீகரன் சார்" என்றார் மரியாதையாக.
"உங்களுக்கு என்னை தெரியுமா?" புருவத்தை சுருக்கி வினவினான்.
"என்ன இப்படி கேட்டுட்டீங்க? நா 'ஸ்டெடி மார்பிள்ஸ்' ஓனர் மோகன் சார். உங்க கம்பனி ஆர்டர் கிடைக்க தான் பூஜை பண்ண வந்தேன். உங்களை நேரடியாவே பார்ப்பேன்னு நெனச்சிக்கூட பார்க்கல"என்றார் உற்சாகத்துடன்.
வசீகரன் மனதிற்குள்,'நானும் தான் உங்களை பார்க்கணும்னு நெனைக்கல' என்றான்.
ஆனால் சிரித்த முகத்துடன்,"அப்படியா? உங்களை பார்த்ததுல எனக்கும் சந்தோஷம். இப்போ நடந்ததை நான் பார்த்துட்டு தான் இருந்தேன். நீங்க ஸ்ரார்ட்டிங்ல பேசினது எனக்கும் பிடிக்கல. பட் உங்க தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டது பிடிச்சிருக்கு. அதான் உங்களை பாராட்டலாம்னு வந்தேன்" என்றான்.
அந்த மனிதரின் முகம் பிரகாசமானது. "டென்ஷன்ல பேசிட்டேன் சார். எல்லாருமே சேர்ந்து கார்னர் பண்ணதால தான் மன்னிப்பு கேட்டேன். பட் நா திட்டின அம்மா என்கிட்ட பேசினத கேட்டதும் எனக்கு மனசே சரி இல்லை சார். அந்த அம்மாவுக்கு தான் கோவிலுக்கு வர தகுதி இருக்கு. எனக்கு இல்லனு தோனிடுச்சி. உங்களை பார்க்கறதுக்கு தான் கடவுள் அவங்க மூலமா ஒரு வாய்ப்பு குடுத்து இருக்கார்னு நெனைக்கிறேன். அந்த அம்மாவுக்கும் சின்ன பொண்ணுக்கும் தான் நா நன்றி சொல்லணும்" என்றார்.
வசீ லேசாக சிரித்தான். "ஓகே சார். நமக்குள்ள பிசினஸ் இருக்கோ இல்லையோ பட் இனி நல்ல பிரெண்ட்ஷிப் இருக்கும். சீ யு லேட்டர்" என்றுவிட்டு கிளம்பினான். மோகன் சந்தோஷமாக தலையாட்டினார்.
வசீகரனின் தொழில் தொடர்பு கேட்டு கோவிலுக்கு வந்தவருக்கு நட்பே கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி. தான் மோதிய பெண்ணிடம் நன்றி சொல்ல சிரித்த முகத்துடன் அவரை தேடி கோவிலுக்குள் சென்றார்.
உண்மையில் அவர் நன்றி சொல்ல வேண்டியது அந்த பெண்ணுக்கு அல்ல. வசீகரனின் அழகிக்கு. அவள் மன்னிப்பு கேட்க வைத்ததால் இந்த மனிதர் அவள் மீது கோபம் கொண்டு அவளை கஷ்டப்படுத்தி விட கூடாது என எண்ணிதான் அவரிடம் பேச சென்றான் வசீகரன்.
எந்த விஷயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை யோசித்தே செயல்படுபவன் வசீகரன்.
மோகனின் மனம் புரிந்ததும் அவரால் அவளுக்கு எந்த ஆபத்தும் வராது என உணர்ந்து அவருக்கு நட்புக்கரம் நீட்டினான்.
அவரிடம் இருந்து விடைபெற்று வெளியில் வந்தவன் அவளை தேடினான். அவள் காணவில்லை.
'நீ அவள தான் பார்க்க வந்தனு அவளுக்கு தெரியுமா? நீ பேசிட்டு வர வரைக்கும் அவள் காத்திருப்பாளா?' என அவன் மனம் கேள்வி கேட்டது.
'தட்ஸ் ஓகே. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பார்க்கலாம்' என எண்ணியபடி காரில் ஏறினான்.
அவளின் குணம் அவனுக்கு பிடித்துவிட்டது. அவளின் அழகும் கனிவும் நியாயமான கோபமும் அவனை ஈர்த்தது. அவளை பற்றி நினைக்கும் போதே சின்ன சிரிப்பும் அவனுக்கு வந்தது.
அடுத்து வந்த வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்றான். ஆனால் அவள் வரவில்லை. அதற்கு பிறகு வந்த வாரம் அவனுக்கு வேலை அதிகமானது. அவனால் அவளை பார்க்க வர முடியவில்லை.
அதன்பிறகு வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் அவன் கோவிலுக்கு சென்று விட்டு அவளை காணாமல் வீட்டுக்கு போவது வழக்கமானது. அவள் மீது அவனுக்கு இருக்கும் அன்பின் அளவை புரிந்து கொள்ள இந்த தேடல் வாய்ப்பானது. வேலை பளுவுக்கு இடையிலும் அவள் முகம் கண்ணில் தோன்ற ஆரம்பித்தது. அவள் நினைவுகளை தவிர்க்க வேலையில் தன்னை அமிழ்த்திக் கொண்டான்.
நான்கு மாதங்கள் கழிந்த பிறகு ஒரு ஞாயிற்று கிழமை புதிதாக திறக்கப்பட்டிருந்த அந்த ஷாப்பிங் மாலின் மூன்றாவது தளத்தில் நின்று கொண்டு இருந்தான் வசீகரன். அவனது தொழில்முறை நண்பர் ஒருவரை சந்திக்க வந்திருந்தான். அவர் ஒரு ரியல் எஸ்டேட் முதலாளி. இருவருமாக சேர்ந்து இதுவரை சில வெற்றிகரமான கட்டிடங்கள் கட்டி இருக்கிறார்கள். இப்போது பெரிய அளவில் ஒரு கட்டிடம் கட்டுவது தொடர்பாக பேச வந்திருக்கிறான். ஏற்கனவே ஒப்பந்தம் போட்டு ஓரளவு பேசி முடித்துவிட்டனர். இப்போது அது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் அவர். அவர் தொழிலில் பெரிய மனிதர்,வயதில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர். 'தொழிலில் மட்டுமே மூழ்கிவிட கூடாது, வாழ்க்கையின் சின்ன சின்ன மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்' என கூறுபவர்.
அதனால் தான் பேச்சு வார்த்தையை காஃபீ ஷாப்பில் வைக்க அழைத்திருக்கிறார். இப்போது அவர் தொழில் குறித்து பெரிதாக பேச போவதில்லை. உலக நாடுகள் குறித்தும் அரசியல் குறித்தும் பேசுவார், அவனை சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு வாழ சொல்வார், அவ்வப்போது சின்ன குரலில் ரகசியம் இல்லாத தொழில் பேச்சும் பேசுவார். தெரிந்து இருந்தும் வசீகரன் அவரை சந்திக்க வந்திருக்கிறான். அவனுக்கு அவர் மீது மரியாதை அதிகம். அவரது குணநலம் சிறப்பானது.
அவருக்கும் வசீகரனை ரொம்ப பிடிக்கும். இருவரும் அதிக நெருக்கம் இல்லாவிட்டாலும் ஒருவர்மீது ஒருவர் மரியாதை செலுத்தினர்.
அந்த மரியாதைக்காக அவரை சந்திக்க காத்திருக்கிறான் வசீகரன். அதோடு அவனுக்கும் கொஞ்சம் வேலையிலிருந்து ஓய்வு தேவைபடுகிறது.
இப்போதெல்லாம்
அவனின் அழகியின் நினைவு அதிகம் வருகிறது. 'அவள் அருகில் இருந்தால், வாழ்க்கை இன்னும் இனிமையாக இருக்குமோ?' என தோன்றுகிறது.
சிந்தனையோடு கீழே பார்த்தவன் சிலையானான். அங்கே தரைத்தளத்தில் ஒரு தூணில் சாய்ந்து நின்றபடி இருந்தாள் அவள்.
அவளை பற்றியே நினைப்பதால் அவள் உருவம் போல் தெரிகிறதோ? என எண்ணி ஊன்றி பார்த்தான். அவளே தான். வெள்ளை நிற சில்க் ப்ரிண்டட் குர்தியும் சிவப்பு நிற பேண்டும் துப்பட்டாவும் அணிந்து இருந்தாள். அவள் முகத்திற்கு பொருத்தமாக சிகை அலங்காரமும் செய்து இருந்தாள். அங்கு நடந்துக்கொண்டு இருந்த டேபிள் டென்னிஸ் போட்டியை பார்த்துக் கொண்டு இருந்தாள். தூணில் சாய்ந்து நின்றிருந்த அவளின் தோற்றம் ஓவியம் போல அழகாக இருக்க, தனது செல்போனில் அவளை புகைப்படம் எடுத்தான் வசீகரன். உடனே அவளிடம் பேச எண்ணி எஸ்கலேடர் எனும் நகர்படியில் வேகமாக இறங்கினான்.
அவன் தரைத்தளத்தை நெருங்கும் நேரம் "அண்ணா" என அழைத்தபடி செல்போனை காதில் வைத்தபடி நின்றிருந்த ஒருவன் அருகில் சென்றாள் அவள். ஒரு நொடி வசீகரன் 'எப்படி அவளிடம் பேசுவது?' என யோசித்தான்.
அந்த நேரம் அவன் காத்திருந்த நண்பர் அங்கு வந்தார். அவளை மறைப்பது போல் நின்றபடி சிரிப்புடன்,"சாரி கண்ணா, வீட்டுல கொஞ்சம் லேட் ஆகிடுச்சி" என்று அவனின் கையைப் பிடித்து சொன்னார்.
"பரவால்ல சார். ஒன்னும் லேட் ஆகல" என்று அவரிடம் சொல்லியவனின் கண்கள் அவர் தலைக்கு மேல் அவள் தன் அண்ணனுடன் அங்கிருந்து புறப்பட்டு செல்வதை கண்டன.
இன்றும் அவளிடம் பேச முடியாது போனதில் வருத்தம் இருந்தாலும் அவளை புகைப்படம் எடுத்ததை எண்ணி ஆனந்தமானான்.
தன் நண்பருடன் பேசிவிட்டு உற்சாக மனநிலையுடன் வந்தவனை எதிர்கொண்டனர் அவன் அக்காவும் அன்னையும்.
அவன் அக்கா விடுமுறைக்கு வந்திருந்தாள்."வசீ கண்ணா, சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ண காலம் வந்துடுச்சி.அக்கா சொந்தத்தில் கூட பொண்ணுங்க இருக்காங்களாம். பாக்கலாமா? நீ பொண்ண மட்டும் செலெக்ட் பண்ணு போதும். அம்மா மேரேஜ் பண்ணி வச்சுடுறேன்" என கேட்டார் பார்வதி.
உடனே அவன் மனக்கண்ணில் தன் அழகியின் நினைவு வரவும் தன் தாயின் அருகில் வந்து அமர்ந்தவன்,"நா எந்த பொண்ணை செலெக்ட் பண்ணாலும் உங்க மருமகளா ஏத்துபிங்களாமா?" என்றான்.
உடனே அவன் அம்மா,"கண்டிப்பா நீ பெஸ்ட் பொண்ண தான் செலெக்ட் பண்ணுவ, பெண் யாரா இருந்தாலும் மனப்பூர்வமாக ஏத்துப்பேன் செல்லம்"என்றார். இதனை கேட்ட வசீகரன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அறைக்கு வந்துவிட்டான்.
தனது போனில் இருந்த அவளின் போட்டோவை பார்த்தவன்,"வெல்கம் டு மை ஹார்ட், டார்லிங்" என்று கூறி கண்ணடித்தான்.
தன் தாயிடம் பேசும்போதே அவன் உணர்ந்துவிட்டான் அவள் தன் மனதிற்குள் நுழைந்துவிட்டாள் என்பதை.
'ஒரு வேளை அவளுக்கு
திருமணம் ஆகி இருந்தால்?' கேள்வி கேட்ட மனதுக்கு, "சான்சே இல்ல. கோவிலில் தான் அவ பேச்சை கேட்டேனே! அவளுக்கு மேரேஜ் ஆகல, வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்க. சோ நா அவ யார்னு சீக்கிரம் கண்டுபிடிச்சி, அம்மா மூலமா மேரேஜ் பிக்ஸ் பண்ணுவேன்" என பதில் தந்துவிட்டு பால்கனியில் நிலவை ரசித்தபடி,"ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்" என்று பாடிக்கொண்டு இருந்தான்.
திடீரென அவன் பின்னாலிருந்து,"வசீ யாருடா உன் ஏஞ்சல்?" என்ற குரல் கேட்டு திரும்பினான். தன் அக்கா அங்கு நிற்பதைக்கண்டு அதிர்ந்தாலும் அவளுக்கு மட்டும் தான் காதலிப்பதை பற்றி கொஞ்சமாக சொன்னான். தனக்கே தன்னவளை பற்றி தெரியாத போது அவனால் எதுவும் தெளிவாக சொல்ல முடியாது போயிற்று. ஆனால் அவன் காதல் அவன் குடும்பத்தில் யாருக்காவது தெரிந்திருக்க வேண்டும் என எண்ணி ஓரளவு சொன்னான்.
அதன் பிறகு வந்த நாட்களில் அவனது வேலை அவனை கொஞ்ச நேரம் கூட விட்டு விலகவில்லை.
புதுவேலை பெரியது. எனவே ஆறு மாதங்கள் தன்னை தொழிலில் முழுதாக ஈடுபடுத்திக் கொண்டான்.
'அவளின்' புகைப்படத்தை பெரிதாக்கி வீட்டில் தனது அறையில் ஒட்டி வைத்தான். மனம் களைப்பாகும் போதெல்லாம் அவள் முகத்தை பார்த்து தன்னை உற்சாகப்படுத்திக்கொள்வான். தனது வேலைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அவளைத் தேடி ஓடவேண்டும் போல தோன்றும். தன் வேலையெல்லாம் முடிந்து அவளை மீண்டும் பார்க்கும் நாளுக்காக, அவள் யாரென அறியும் நாளுக்காக காத்திருந்தான். அவன் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்தது எதிர்பாராத அதிர்ச்சியுடன்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-31
"கூடிப் பிரியாமலே - ஓரிரவெலாம்
கொஞ்சிக் குலவியங்கே,
ஆடி விளையாடியே - உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களியெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி!"

தங்கள் நிறுவனம் சிறப்பாக கட்டி முடித்த புதுகட்டிடத்தை தனது ரியல் எஸ்டேட் நண்பரிடம் வெற்றிகரமாக ஒப்படைத்தான் வசீகரன். இந்த புதிய கட்டிடங்களின் வடிவமைப்பும் அலங்காரமும் நல்ல வரவேற்பை பெற்றது. வசீகரன் மகிழ்ச்சியில் இருந்தான்.தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்தான்.
பத்து நாட்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டவன், ஓய்வின்றி தன் அழகியின் நினைவில் மூழ்கினான். அவளை கண்டுபிடிக்கும் வரை தனக்கு நிம்மதியில்லை என தோன்றவும் முதல் முறையாக இதில் தன் நண்பர்களின் உதவியை நாட எண்ணினான்.
தன் போனை எடுத்து யஷ்வந்தை அழைத்தான். உடனே அழைப்பை ஏற்ற யஸ்வந்த்,"என்னடா நல்லவனே! சண்டே கூட பிஸியா இருக்குற ஆள் நீ, மண்டே கால் பண்ணி இருக்க. அதுவும் காலைல. என்ன மேட்டர்?" என்றான் உற்சாகமாக.
"என் ப்ராஜெக்ட் முடிஞ்சதால, ஒரு டென் டேஸ் ப்ரேக் எடுத்து இருக்கேன்டா. உன்கிட்ட பேசனும்னு தோணிச்சு. அதான் கால் பண்ணேன்.எங்க இருக்க?" என்றான்.
"என்னடா அதிசயம்? உனக்கு ரெஸ்ட் எடுக்க கூட தோணுமா? இட்ஸ் மெடிக்கல் மிராக்கில் மேன். நான் என் ஆபீஸ்ல தான் இருக்கேன் நீ நேர்ல வா. அப்போ தான் நீ ரெஸ்ட்ல இருக்கேன்னு நம்புவேன்" என்றான்.
சிறு தயக்கத்திற்கு பின்,"ஈவ்னிங் வரேன். இப்போ எனக்கு ஒரு டவுட் இருக்குடா! உன்கிட்ட கேட்டா கிளியர் ஆகும்னு தோணுச்சி. கேட்கவா?" என்றான் வசீ.
மறுமுனையில் யஷ்வந் சத்தமாக சிரித்தான். "என்னடா சொல்ற??? உனக்கு டவுட்டா? என்கிட்ட கேட்டு கிளியர் பண்ண போறியா? ஸ்கூல்ல இருந்து நா தானடா உன்கிட்ட டவுட் கேட்பேன். நீ ஏன் அந்த சம்பிரதாயத்தை மாத்துர? நீ பிரீயா இருக்கிறதால என்ன வச்சி டைம்பாஸ் பண்றியா?" என்றான் சிரிப்புடன்.
"இது படிப்பு, தொழில் பத்தின டவுட் இல்லடா. லைஃப் ரிலேட்டட் டவுட்" என்றான் உறுதியான குரலில்.
உடனே சுதாரித்த யஸ்வந்த்,"என்ன விஷயம்டா? கேளு" என்றான்.
"ஒரு பெர்சனோட டீடெயில்ஸ் வேணும். பட் அவங்க நேம், அட்ரஸ் எதும் தெரியாது,போட்டோ மட்டும் தான் இருக்கு. கண்டுபிடிக்க முடியுமா?" என்றான்.
"எனக்கு தெரிஞ்ச டிடக்டிவ் ஏஜென்சி இருக்கு. அவங்ககிட்ட போட்டோ குடுத்து கண்டுபிடிக்கலாம். ஆனா நீ யார கண்டுபிடிக்க போற?" குழப்பத்துடன் கேட்டான் யஷ்வந்.
சிறு அமைதிக்கு பின்,"என் லைஃப் பார்ட்னர" என்றான் ஆழ்ந்த குரலில்.
"என்ன??? என்னடா சொன்ன??? லைஃப் பார்ட்னரா? எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டியாடா?" என்றான் அதிர்ச்சியுடன்.
"டேய் யஷ்வந்! ஓவரா யோசிக்காத! எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு. நாலஞ்சு டைம் பார்த்திருக்கேன். பட் பேச முடியல. லாஸ்ட் டைம் போட்டோ எடுத்தேன். அதான் தேடலாம்னு நெனைக்கிறேன்."என்றான்.
"எவ்ளோ சாதாரணமா சொல்றடா? உன்ன லவ் பண்ண பொண்ணுங்களை எல்லாம் ஏதோ உன் தவத்தை கெடுக்க வந்த மாதிரி ட்ரீட் பண்ணுவ, இப்போ என்னன்னா யார்னே தெரியாத பொண்ணை லவ் பண்ற, கண்டுபிடிக்க என்னையும் கூட்டு சேர்க்குற! என்னால நம்பவே முடியல. கோகுலுக்கு இது தெரியுமாடா?" என்றான் ஆச்சர்யம் நிறைந்த குரலில்.
"இன்னும் அவன்கிட்ட சொல்லலடா. உன்கிட்ட தான் பார்ஸ்ட் சொல்றேன். இன்னிக்கு நீ பிரீயா இருந்தா நாம மூணு பேரும் வெளியே எங்கேயாவது லஞ்சுக்கு போவோமோ? கோகுல்கிட்டயும் மேட்டர சொல்லிடலாம்" என்றான் வசீ.
வசீகரனின் ஆர்வமும் பேச்சும் யஷ்வந்திற்கு ஆச்சர்யத்தை தூண்டியது.
"ஓகே டா. எங்கே லன்ச்க்கு போகலாம்னு பிக்ஸ் பண்ணிட்டு மெசேஜ் பண்ணு" என்றுவிட்டு போனை வைத்தான். அவனுக்கு நண்பனின் காதலை நினைத்து ஆனந்தமாக முடியவில்லை.
'வசீகரன் எதையும் யோசித்து செய்பவன். எதிலும் வெற்றி பெற்று பழகியவன். அவன் இப்படி யாரென்றே தெரியாத பெண் மீது காதல் கொண்டு இருப்பது ஆச்சர்யம். ஒருவேளை அந்த பெண் திருமணம் ஆனவளாக இருந்தாலோ, அவளுக்கு வேறு காதல் இருந்தாலோ அதை வசீகரனால் தாங்கிக்கொள்ளமுடியுமா?
அந்த பெண் இவனுக்கு ஏற்றவளாக இருப்பாளா? இவர்கள் குடும்பம் இதை ஏற்குமா? இந்த காதல் நிறைவேறுமா?' என்று குழம்பினான். என்னவானாலும் தன் நண்பனுக்கு உறுதுணையாக நிற்க முடிவு செய்தான். அப்போது வசீகரனிடமிருந்து மதிய உணவுக்கான ஹோட்டல் பெயர் குறுஞ்செய்தியாக வந்தது.
கோகுலுக்கு போன் செய்து மதிய உணவுக்கு வரச்சொன்னான். காரில் கிளம்பி சென்னையின் அந்த பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்தவன் தனக்கு முன்பு வந்து காத்திருந்த வசீகரனை கண்டதும் அதிர்ச்சியடைந்தான்.
'இவன் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்து உட்காந்து இருக்கான். நம்மள பார்க்கிற ஆர்வமா? அந்த பெண்ணை பத்தி பேசும் ஆர்வமா? பையன் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டானோ? பார்ஸ்ட் லவ், அதான் இப்படி இருக்கான்' என தன்னை தானே சமாதானப் படுத்தியபடி வசீகரனிடம் சென்றான்.
"ஹலோ சென்னையில் உருவாகி இருக்கும் புதுகாதலரே! எப்படி இருக்கீங்க?" என்றபடி நண்பனின் அருகில் சென்று அமர்ந்தான்.
லேசாக வெட்க சிரிப்பை சிந்தியபடி தன் தலைமுடியை கோதிவிட்டவன்,"ஹே சும்மா இருடா" என்றான்.
அவன் வெட்கத்தை ரசித்த யஷ்வந்,"டேய் அப்பப்பா... இவ்ளோ நாளா வசீகரன்னு ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஊர்ல சுத்திக்கிட்டு இருந்தான். அவனை பார்த்தியாடா?" என்றான் கிண்டலாக.
சிரித்தபடியே தன் காலால் யஷ்வந்தை லேசாக உதைத்தான் வசீ.
"இன்னும் கோகுல் வரலையாடா? எம்டி நீயே வந்துட்ட, அவன் என்ன பண்றான் ஆபீஸ்ல?" என்றான் யஷ்வந்.
"நா லீவ்ல இருக்கேன்டா. அவன் ஆபீஸ்ல இருந்து வரணும்ல? வருவான் இரு" என்றான் வசீ.
அந்நேரம்,"ஹாய் யஸ்வந்த்" என்று உரத்த குரலில் அழைத்தபடி அங்கே வந்தான் ஒரு இளைஞன். சட்டென அவனை திரும்பி பார்த்த வசீகரன் முகத்தில் கோபம் வந்தது.
வந்தது அவர்களின் கல்லூரியில் உடன் படித்த ஆகாஷ்."ஹாய் வசீகரன். எப்படி இருக்கீங்க?" என்றபடி அவர்களின் எதிரில் அமர்ந்தான்.அவன் குணம் பிடிக்காத வசீ அவனிடம் பதில் பேசாமல் போனை எடுத்து நோண்ட தொடங்கினான். ஆகாஷின் டார்கெட்டே வசீ தான்.ஆகாஷ் கம்பெனியில் இருந்து மீட்டங்கிற்காக 4 பேர் சேர்ந்து அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார்கள். மீட்டிங் முடிந்து விட்டு கிளம்பும் போது வசீகரன் அங்கு இருப்பதை பார்த்தான். கூடவே யஷ்வந்தும்.
டீம் நண்பர்கள் முன் தனக்கு தொழிலதிபர் வசீகரன் நண்பன் எனபது போல் பெருமை காட்டவே அவன் வசீகரன் பக்கம் ஓடி வந்தான். "என் பிரெண்ட்ஸ் அங்க இருக்காங்க 10 மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு இவர்கள் புறம் திரும்பி கத்திக்கொண்டே வந்து யஷ்வந்தின் எதிரில் அமர்ந்தவன் அவர்களை நலம் விசாரித்துவிட்டு தன்னை பற்றியும் தானே விளக்க தொடங்கினான்.
தனக்கு திருமணம் முடிவாகி இருப்பதாகவும், நிச்சயம் நடக்க இருப்பதாகவும் சொல்லிவிட்டு தன் போனை எடுத்து ஆராய்ந்தவன்," இது தான் எனக்கு பார்த்திருக்க பெண்" என்று ஒரு புகைப்படத்தை காண்பித்தான். அவர்களுக்கு எதிர்புறம் அமர்ந்து இருந்தவன் போனை இவர்கள் புறம் திருப்பி உணவு மேசை மீது வைத்தான். அவன் பேச்சில் ஆர்வம் இல்லாமல் இறுகிய முகத்துடன் தனது போனில் தனது அழகியின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு எதேச்சையாக ஆகாஷின் போனைப் பார்த்தவன் அதிர்ந்தான்.
அதில் சந்தன நிறத்தில் தங்க சரிகையிட்ட சேலை அணிந்து சாந்தமான சிரிப்பை சிந்தியபடி இருந்தாள் அவன் அழகி.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-32
"சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்
சிரித்துக் களித்திடுவான் - நல்ல
வன்ன மகளிர் வசப்படவே பல
மாயங்கள் சூழ்ந்திடுவான் - அவன்
சொன்னபடி நடவாவிடிலோ மிகத்
தொல்லையிழைத்திடுவான்- கண்ணன்
தன்னையிழந்து விடில், ஐயகோ! பின்
சகத்தினில் வாழ்வதிலேன்"
உள்ளுக்குள் ஏமாற்றமும் வலியும் தோன்றியது வசீகரனுக்கு. அவளை பற்றி அவன் தெரிந்து கொள்ள விரும்பிய அனைத்தையும் ஆகாஷ் சொல்லிக்கொண்டு இருந்தான். அவளின் படிப்பு,வேலை, குணம் எல்லாவற்றையும் சொன்னான்.
இறுகிய குரலில் ,"பேர் என்ன?" என்று கேட்டான். 'யாழினி' என்ற அவள் பெயரை கேட்ட நொடி அவளின் இனிய குரலும் அழகிய சிரிப்பும் கண்முன் வருவதை அவனால் தடுக்க முடியவில்லை. தனக்கு உரிமை இல்லாதவளை எண்ணி பார்ப்பது தவறென்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தான். ஆகாஷை திருமணம் செய்யப்போகும் பெண்ணின் நிலை குறித்து யோசனையில் இருந்த யஸ்வந்த் இவனை கவனிக்கவில்லை.
ஆகாஷின் குணத்தையும் அவன் தாயின் குணத்தையும் நினைவுப்படுத்தியவன் யோசனையுடன் அமர்ந்திருக்க, யஷ்வந்திற்கு மெசேஜ் வந்தது. தன் குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் தான் அவசரமாக வீட்டுக்கு செல்வதாக கோகுல் மெசேஜ் அனுப்பி இருந்தான். அதனை வசீகரனிடம் போனை பார்த்தபடியே சொல்லிவிட்டு ,"கிளம்பலாமா?" என்றபடி வசீகரன் புறம் திரும்பிய யஷ்வந் அவனின் நிலை கண்டு,"என்ன ஆச்சுடா?" என கேட்டதும் சுயநினைவிற்கு வந்த வசீ தனது போனில் இருந்த யாழினியின் புகைப்படத்தைக் காட்டினான் .
யஸ்வந்த் அதிர்வுடன்,"வசீ இந்த பொண்ணுணுணு..." என இழுத்தபடி ஆகாஷ் சென்ற திசையை காட்ட,'ஆம்' என்னும் விதமாய் தலையை ஆட்டினான்.
யஸ்வந்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. 'எது நடந்து விடுமோ?' என அவன் பயந்தானோ அது நடந்துவிட்டது. வசீகரனின் முதல் காதல் தோற்றுவிட்டது.
நண்பனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணி,"விடு வசீ, அந்த பொண்ணுக்கு உன் வொய்ப் ஆக அதிர்ஷ்டம் இல்ல. இவன்கிட்ட மாட்டணும்னு இருக்கு. விட்டு தள்ளு. உனக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? வா நம்ம வீட்டுக்கு போய் லன்ச் முடிச்சிட்டு, கோகுல்-ஆஷாவையும் பாப்பாவையும் போய் பார்க்கலாம்" என்றான்.
எதுவும் பதில் பேசாமல் இருவருக்கும் உணவு ஆர்டர் செய்தான் வசீகரன். உணவு உண்ணும் போதும் அமைதியாகவே இருந்தான். உண்டு முடித்ததும் ,"நா வீட்டுக்கு போறேன்டா. நீ கிளம்பு" என்றான் யஷ்வந்திடம்.
அதிர்ச்சியாக பார்த்த யஷ்வந் ஏதோ பேச தொடங்க, அவனை முறைத்தவன் காரில் ஏறி சென்றுவிட்டான்.
வீட்டுக்கு சென்றவன் நன்றாக யோசித்தான். தன் அழகிக்கும் தனக்கும் ஏற்ற முடிவை எடுத்தான். பிறகு கோகுலுக்கு போன் போட்டு குழந்தையின் நலத்தை பற்றி தெரிந்துக்கொண்டு நிம்மதியாக உறங்கினான்.
மறுநாள் காலையிலேயே யஷ்வந் வசீகரனை அழைத்தான். "என்னடா?" என்று சாதாரணமாக கேள்வி கேட்டான் வசீ. அவன் மனம் நொந்து இருப்பான் என எண்ணி அழைத்தவனோ குழம்பினான். "மச்சி, நல்லா இருக்கியா?" என்றான் மெதுவாக.
"டேய்! நேத்து தான மீட் பண்ணோம். மறந்துட்டியா? வசு பாப்பாவுக்கு தான்டா ஒடம்பு சரியில்ல. எனக்கு என்னடா?" என்றான் குரலில் சிரிப்புடன்.
வசீகரன் எப்போதும் தெளிவானவன் என்பது யஷ்வந்துக்கு தெரியும். இருந்தாலும் அவன் முதல் காதல் தோல்வியடைந்ததால் சோர்ந்து இருப்பான் என எண்ணினான். இப்போதும் அவன் சாதாரணமாக இருப்பது யஷ்வந்திற்கு நிம்மதியாக இருந்தது.
எனவே அசட்டு சிரிப்புடன்,"அதில்லை மச்சி, சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு கேட்டேன்.மார்னிங் கோகுல்கிட்ட பேசினேன். 11 மணிக்கு எங்கேயாவது மீட் பண்ணலாமா?னு கேக்க தான் கூப்பிட்டேன்" என்றான்.
"ஹ்ம்ம் ஓகே டா. நானே சொல்லணும்னு நெனச்சேன். நீ நம்ம ஆபீசுக்கு வந்துடு" என்றான்.
காலை 11 மணிக்கு ஆபீசுக்கு வந்தான் வசீ. அங்கு கோகுலின் அறையில் ஏற்கனவே காத்திருந்தான் யஸ்வந்த்.
கோகுலின் முகத்திலிருந்த வருத்தம் யஸ்வந்த் அவனிடம் யாழினியைப் பற்றி சொல்லிவிட்டான் என்பதை உணர்த்தியது. மாறாக வசீகரனோ சிரித்த முகமாக இருந்தான்.
அவனின் சிரித்த முகத்தை பார்த்த கோகுல் இயல்பான குரலில்,"வசீ, யஷ்வந்த் சொன்னான்டா. யாருடா அந்த பொண்ணு. எப்படி உனக்கு தெரியும்? உன்கூட தான நான் எப்பவும் இருக்கேன். எனக்கு எப்படி தெரியாம போச்சு?" என்றான். விரிந்த புன்னகையுடன் யாழினியை பார்த்த நிகழ்வுகளை சொன்னான்.
பின் , "நேத்து அவன் சொல்ற வரைக்கும் அவ பேர் கூட எனக்கு தெரியாது டா. பட் ஏதோ என் ஒய்ப் என்னை விட்டு விலகி போற மாதிரி பீல் ஆகுது டா" என்றான் இறுக்கமாக.
அவன் தோற்றத்தை பார்த்த நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கோகுல்,"ஹேய் என்ன டா இப்படி பேசற? இப்போ என்ன ஆகிடுச்சி? அவங்களுக்கு எங்கேஜ்மெண்ட் தான பிக்ஸ் பண்ணி இருக்காங்க. மேரேஜ் ஆகலயே. உனக்கு அந்த பொண்ணு தான் லைஃப்னு தோணிச்சினா, அந்த பொண்ணு வீட்டுல பேசி, எங்கெஜ்மெண்ட நிறுத்திட வேண்டியதுதான்." என்றான்.
யஷ்வந்,"அட, இத நான் யோசிக்கவே இல்ல பாரேன். அந்த ஆகாஷ் அம்மா காலேஜ் பங்ஷ்ன்ல,'நா சீக்கிரமா வந்தேன். பர்ஸ்ட் சீட்ல தான் உக்காருவேன்'னு இன்சார்ஜ் மேடம் கிட்டயே சண்டை போட்டுச்சிடா. பர்ஸ்ட் ரோ விஐபி சீட்னு மேம் கெஞ்சினாங்க. அப்பவும் தெருவுல சண்டை போடுற மாதிரி கத்துச்சி. அந்த சண்டக்காரி சவுண்டு சரோஜாவுக்கு இப்படி ஒரு நல்ல பொண்ணு எல்லாம் சரிப்பட்டு வராது. இதுக்காகவே அந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்தனும்" என்றான்.
வசீகரன் சிரித்த முகத்துடன் , "ஹ்ம்ம் நான் சொல்ல வந்ததும் அதே தான்டா. அவ என் யாழினிடா. அவளை விட்டு குடுக்கறது என்னால முடியாது. அவளுக்கு நல்ல லைஃப் அமைய போகுதுனா கூட நா ஒத்துக்குவேன். பட் இந்த ஆகாஷ் கேரக்டரும், அவ கேரக்டரும் செட்டே ஆகாது. ஒரு பொண்ணு படிக்க பீஸ் கட்டுறவ யாழினி. காலேஜ்க்கு வரதே பணக்கார பிரென்ட் பிடிக்கவும், பொண்ணுங்கள பார்க்கவும்னு இருக்குறவன் அவன். அந்த எங்கெஜ்மெண்ட கண்டிப்பா நிறுத்தனும். அதுக்கு தான் உங்க ஹெல்ப் கேக்க வந்தேன்" என்றான்.
கோகுல் கோபத்துடன் ,"நீ தான் எனக்கு மேரேஜ் பண்ணி வச்ச. ஞாபகம் இருக்கா? நீ மட்டும் எங்களுக்கு உரிமையா எல்லாம் செய்வ, எங்ககிட்ட ஹெல்ப் கேப்பியா? காதல் வந்ததும் பிரிச்சி பார்க்குரியாடா?" என்றான்.
வசீ சிரிப்புடன்,"ஹேய், தெரியாம சொல்லிட்டேன். எப்படி இந்த எங்கேஜ்மெண்ட நிறுத்தலாம்னு ரெண்டு பேரும் ஐடியா குடுங்கடா" என்றான்.
"சிம்பிள், என்கிட்ட இருக்க வீடியோவ சிஸ்டர் வீட்டுல காமிச்சா போதும்" என்றான் யஷ்வந்.
"இல்லடா,அவங்க நம்மள நம்பாம போய்ட்டா, நாம எல்லாம் அவன் மேல ஏதோ கோபத்துல ஃபேக் வீடியோ ரெடி பண்ணிட்டோம்னு நெனச்சிட்டா, இல்ல ஆகாஷ் இது டிராமா ரிஹர்சல்னு பொய் சொல்லிட்டா, பியூச்சர்ல வசீக்காக பொண்ணு கேக்க போகும் போது இதுக்காக தான் ஆகாஷ் பத்தி சொன்னோம்னு நம்ம பிரபோசல ரிஜக்ட் பண்ணிட்டா என்ன பண்றது?" என்றான் யஸ்வந்த்.
பின் அவனே,"ஒரு ஆக்சிடன்ட் செட் பண்ணி, அந்த ஆகாஷ் கை, காலை ஒடச்சி விட்டுடுவோம். ஒடஞ்ச கையோட எப்படி ரிங் போடுவான்?" என்றான்.
"எதுக்குடா? அப்புறம் சிஸ்டர் ராசி சரியில்லனு அவங்க மனச கஷ்ட படுத்திடுவாங்க எல்லாரும்"
சிறிது நேர யோசனைக்கு பின்,"பேசாம ஆகாஷை எங்கேஜ்மெண்ட் அன்னிக்கு கடத்திடுவோம்" என்றான் யஷ்வந்.
"போலீஸ் கேஸ் ஆகிடும். இன்னொரு நாள் எங்கேஜ்மெண்ட் வச்சிப்பாங்க" என்றான் கோகுல்.
"சிஸ்டரை கடத்திட்டா?" என்ற யஷ்வந்தை முறைத்தான் வசீகரன்.
"அவங்க பேர் கெட்டு போய்டும்டா கிறுக்கு பையா" என்றான் கோகுல்.
இருவரும் இப்படியே பேசிக்கொண்டு இருப்பதை சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான் வசீ.
"என்னடா? நாங்க கன்பியூஸ் ஆகிட்டு இருக்கோம். நீ சிரிக்கிற. உன் பிளான் என்ன?" என்றான் யஸ்வந்த் கோபமாக.
"ஈசி டா. எங்கேஜ்மெண்ட் நடக்குறதுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் நடந்துட்டா, அவங்க எங்கேஜ்மெண்ட் நின்னுடும்" என்றான் சீரியஸாக.
அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர் அவன் நண்பர்கள் .
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-33

"காதலடி நீயெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீயெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!"
அதிர்ந்த பார்வையுடன் வசீகரனை பார்த்தார்கள் இருவரும். "எப்படிடா? சிஸ்டர்க்கு நீ யார்னே தெரியாது. அப்புறம் எப்படி மேரேஜ் பண்ணுவ? கட்டாய கல்யாணமா?" என்றான் யஷ்வந்.
"நோ டா. கன்பியூஷன் கல்யாணம்." என்றான் நிதானமாக.
இருவரின் குழம்பிய முகங்களை கண்டவன், "ஆகாஷ் எங்கேஜ்மெண்ட்க்கு நாம போறோம். அங்கே எல்லோர் முன்னாடியும் அவளை நா மேரேஜ் பண்றேன்" என்று தன் பிளானை விளக்கினான்.
அவர்களுக்கு தயக்கமாக இருந்தாலும் நண்பனுக்காக ஒப்புக்கொண்டனர். பிறகு அனைத்தையும் திட்டமிட்டு வசீகரனின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.
அவர்கள் நல்ல நேரம் நிச்சயத்திற்கு முன் சாமி கும்பிட சொல்லி ஒரு பெரியவர் சொல்ல, அனைவரும் கண்மூடிய நேரம் வசீகரன் தன் காதலியை மனைவியாக்கி கொண்டான்.
............................................................................
"என்ன டார்லிங் முழிக்கிற?" தன் காதல் கதையை சொல்லி விட்டு யாழினியின் முகம் பார்த்த வசீகரன் அவளின் வியப்பான பார்வையை பார்த்து குழப்பமாக கேட்டான்.
"ஏங்க நீங்க என்னை லவ் பண்ணீங்களா? நீங்க இத்தனை டைம் என்னை பார்த்திருக்கீங்க. நா ஒரு டைம் கூட உங்களை பார்த்தது இல்லையே" என்றாள்.

"ஹேய்! என்னடி மறுபடியும் டவுட்டா? உண்மையா நா உன்னை லவ் பண்ணேன்டி. நம்ம மேரேஜ் லவ் மேரேஜ்" என்றான் பதட்டமாக.

"ஒன்சைடு லவ் மேரேஜ்னு சொல்லுங்க" என்றாள்.

"சோ வாட்? இப்போ டபுள் சைட் ஆகிடுச்சில்ல. சும்மா அதையே பேசாதனு சொல்லிட்டேன்" என்றான் எரிச்சலாக.

"சரி பேசல. இருந்தாலும் ரெண்டு பேரும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும்" என்றாள் குறும்பு சிரிப்புடன்.
"யாரு? நீ லவ் பண்ணி இருப்ப? கல்யாணம் பண்ணிட்டு உன் பின்னாடியே சுத்தினேன். அப்போ கூட கண்டுக்காம இருந்தவ நீ. உன்கிட்ட இன்ட்ரடியூஸ் ஆகி லவ் பண்ணி கல்யாணம் பண்ண ட்ரை பண்ணி இருந்தா, எனக்கு ஸ்ட்ரெய்ட்டா அறுபதாம் கல்யாணம் தான். அதுக்கு தான் உன்னை பத்தி தெரிஞ்சிக்கிட்டு அரேஞ்டு மேரேஜ் பண்ணலாம்னு ட்ரை பண்ணேன். அதுக்குள்ள எல்லாமே வேற மாதிரி ஆகிடுச்சி" என்று பெருமூச்சுவிட்டான்.
"எனக்கு தெரிஞ்சி அவன் கேரக்டர் சரியில்ல. அப்படி இருக்கும்போது உன்னை எப்படி விட்டு குடுப்பேன் சொல்லு! நா பன்னது தப்பு தான். ஆனா சரியானது நடக்கறதுக்காக தான் அந்த தப்பை பண்ணேன். நீ பொக்கிஷம் டி. உன் மதிப்பு தெரிஞ்ச எடத்துல தான் நீ இருக்கணும்" என்றான் உணர்வுபூர்வமாக.
அவன் கன்னங்களை பிடித்து இழுத்து, "ஹாஹான்... உங்களுக்கு என்னை விட்டுக்குடுக்க முடியல. அதான் கல்யாணம் பண்ணிட்டிங்க. அதை மட்டும் ஒத்துக்கோங்க, ஓவரா டயலாக் விடாதிங்க" என்றாள் யாழினி.
அவளை தன்னோடு இழுத்து அணைத்தபடி,"ஆமாடி, அதுக்கு இப்போ என்ன?" என்றான் கண்சிமிட்டி.
"எனக்கு இன்னொரு டவுட்டு. என் போட்டோ உங்க ரூம்ல இருக்குனு சொன்னிங்களே, நா பார்க்கலையே! மேரேஜ் ஆனதும் ரிமூவ் பண்ணிட்டிங்களா? " என்றாள் கோபமாக.
"நோ டார்லிங். இன்னும் ரூம்ல தான் இருக்கு, வா காமிக்கிறேன்" என்றபடி அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு மாடியிலிருந்து இறங்கினான்.
அவர்களின் அறையில் வரவேற்பு பகுதியில் அவளை இறக்கி விட்டு அவனது அலுவலக அறையின் சாவியை கொண்டு வந்து அதை திறந்தான். யாழினி முதலில் இங்கு வந்தபோதே இதை பார்த்து இருக்கிறாள். வசீகரன் ஆரம்பத்தில் விடுமுறைகளில் அங்கு வேலை செய்வான். ஆனால் அவன் மீது கோபத்தில் இருந்த யாழினி அந்த அறைக்குள் சென்றதில்லை. இப்போது அந்த அறைக்குள் அவனுடன் நுழைந்தாள்.

அங்கு நேர்சுவரில் பெரிய அளவில் இருந்தது அவளது புகைப்படம். தூணில் சாய்ந்தபடி இயல்பாக நிற்கும் நிலையில் தேர்ந்த போட்டோ ஷூட் போல அழகாக எடுக்கப்பட்டு இருந்தது. சிரித்தபடி பக்கவாட்டு சுவரை பார்த்தவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
அங்கு கண்கள் மூடி, கைகுவித்து யாழினி நின்றிருக்க அவளை காதலாய் பார்த்தபடி அவளின் கழுத்தில் தாலிக்கட்டி கொண்டிருக்கும் வசீகரனை சிறை செய்திருந்தது கேமரா. அவர்களின் பின்புறம் குழலூதும் கிருஷ்ணன் சிலை. கோவிலில் நடந்த அவர்களின் திருமண புகைப்படம்.
'இது எப்படி சாத்தியம்? சாமி கும்பிடும்போது புகைப்படம் எடுக்கவில்லையே' கேள்வியாய் அவள் வசீகரனை பார்க்க அவன் அவளையே பார்த்தபடி ," கல்யாணத்தை பத்தி யோசிச்சவன், போட்டோவை மிஸ் பண்ணுவேனா டார்லிங்? யஷ்வந்தை செக்யூரிட்டிக்கு நிறுத்திட்டு, கோகுலை கேமரா மேன் ஆக்கிட்டேன்.எப்படி மாமாவோட பிளான்? " என்றான் குறும்பு சிரிப்புடன். பின் அவள் கண்ணீரை ஒற்றை விரலால் துடைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
மெல்ல தலையை நிமிர்த்தி கணவனைக் கண்டவள்,"உங்கள பத்தி தெரியாம ரொம்ப சண்டை போட்டு இருக்கேன், ஆகாஷ் பேச்சை கேட்டுட்டு ஏதேதோ பேசி இருக்கேன், ஏன் என்னை மேரேஜ் பண்ணிங்கனு கேட்டு இருக்கேன். அப்போலாம் என்கிட்ட உண்மைய சொல்லி இருக்கலாமே" என்றாள்.

இதமான புன்னகையுடன்,"அப்போ நீ என்மேல ரொம்ப கோபமா இருந்த டார்லிங். அப்போ என் லவ் பத்தி சொல்லி இருந்தா நம்புவியானு பயமா இருந்துது, அதோட ஆகாஷ் பத்தி சொல்லவும் எனக்கு விருப்பம் இல்ல. சந்தேகமோ, வேற காரணமோ இல்லாம எனக்காகவே நீ என்னை லவ் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அதான் சொல்லல" என்றான்.

"நீங்க கோபப்பட்டு என்ன பார்க்காம இருந்தப்போ தான் நா என் லவ்வ பீல் பண்ணேன். அதுக்கு நாம ஆகாஷ்க்கு தான் நன்றி சொல்லணும். அவன் சொன்ன பொய்யால தான நமக்குள்ள அன்னிக்கு சண்டை வந்தது?" என்றாள் யாழினி.

வசீகரனின் முகம் கடுத்தது."அவனுக்கு அது ஒன்னு தான் கொறச்சல். உன் மனச குழப்பி நம்மள பிரிக்க பார்த்தான் ராஸ்கல்" என்றான்.

"விடுங்க. அவன் பண்ண தப்புக்கு தான் தெய்வமே அவனுக்கு தண்டனை குடுத்து கட்டுப்போட வச்சிருக்கார்." என்றவளை பார்த்து ,"கணவனே கண்கண்ட தெய்வம்னு டயலாக் கேட்டு இருக்கேன், அதை நீ அப்படியே ஒத்துக்குறியே டார்லிங். ஐ அம் ரியலி எ லக்கி ஹஸ்பண்ட்" என்றான்.

"நா எப்போ...." என சிந்தித்தவள், "அவன் காலை ஒடச்சது நீங்க தானா?" என்றாள் படபடப்புடன்.

"எஸ்... என் ஒய்ப்க்கு கால் பண்ணி அவளை குழப்புறவன நா சும்மா விடுவேனா? ஆஷா விஷயத்துலயே அவன் மேல செம்ம கோபத்துல இருந்தேன். அப்போ கோகுல் அவனை அடிச்சதால நா விட்டுட்டேன். இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து நல்லா நாலு மிதி மிதிச்சேன்" என்றான் சாதாரணமாக.

ஆகாஷ் அன்று அவளை கண்டதும் ஓடியதை எண்ணியவளுக்கு சிரிப்பு வந்தது.

வசீகரனின் கன்னங்களை பிடித்து இழுத்தவள்,"ரவுடி" என்றாள் செல்லமாக.
"யாரு நானா ரவுடி? நீதான்டி ரவுடி. அன்னிக்கு ஆபீஸ் புகுந்து என்னை இழுத்துட்டு வந்தியே!" என்றான் கொஞ்சல் குரலில்.

வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்த யாழினியின் கவனத்தை அங்கு போடப்பட்டிருந்த டாட்டூ ஈர்த்தது. உற்று பார்த்தாள். பழங்கால இசைக்கருவியான 'யாழ்' டாட்டுவாக வரையப்பட்டு இருந்தது.அதனுடன் இணைந்தபடி இருந்தது தமிழ் எழுத்து 'நீ'.

இன்ப அதிர்ச்சியும் ஆனந்த கண்ணீருமாக அதனை வருடியபடி இருந்தவளின் காதோரம்,"பிடிச்சிருக்கா?" என்றான் வசீகரன்.

ஒரு நொடி உடல் விதிர்க்க சிலையானாள் யாழினி.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-34
"எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன்கை
இட்டவிடத்தினிலே!
தண்ணென்றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணியெண்ணிப் பார்த்தேன் - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!"

அவளது கனவில் வந்த அதே காந்த குரல்... கண்கள் கலங்க நிமிர்ந்து தன் கணவனை பார்த்தாள். வசீகர புன்னகையுடன் கண்சிமிட்டினான் அவன். 'கனவில் வந்த ராஜகுமாரன் இவன் தானோ? இவன் ராஜகுமாரன் தான், என்னுடைய ராஜகுமாரன்' என எண்ணியவள் மன நிறைவுடன் டாட்டூ மீது முத்தமிட்டாள்.
"இது எப்போ போட்டீங்க?" என்றாள் உணர்ச்சிவசப்பட்ட குரலில்.
"நா உன்னை பத்தி தெரிஞ்சிக்கிட்ட அடுத்த நாள் போட்டேன்.நீ தான் என் மனைவினு முடிவு பண்ணதும் நா பண்ண முதல் வேலையே இதுதான். நானே கூகுள் பண்ணி யாழ் பிக்சர் எடுத்து வரைஞ்சி இதை டிசைன் பண்ணேன்" என்றான்.
அவன் வீட்டில் கூட டீசர்ட்டுடன் தான் இருப்பான். அதனால் அவள் கண்ணில் இதுவரை இந்த டாட்டூ படவில்லை.
சிறிது நேர அமைதிக்கு பின்
"நா தான் உங்கள லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன்ல? அப்புறமாவது உண்மைய சொல்லி இருக்கலாமே. கோகுல் அண்ணா சொல்ல வந்தப்போ கூட எழுந்து போய்ட்டிங்க" இப்போது வருத்தம் இருந்தது அவள் குரலில்.
"இல்ல டார்லிங். எனக்கு அப்போ தயக்கமா இருந்துது. உன்கிட்ட என் காதலை ஏதாவது ஒரு ஸ்பெஷல் பிளேஸ்ல சர்ப்ரைசா சொல்லணும், அப்போ நீயும் நானும் மட்டும் தனியா இருக்கணும், உன்னோட ரியாக்ஷன பார்க்கணும்னு நெனச்சேன்" என்றான்.
"இதை விட ஸ்பெஷல் சிக்சுவேஷன், ஸ்பெஷல் ப்ளேஸ், பிளான் பண்ணாலும் கிடைக்காதுங்க. நா ரொம்ப ஹேப்பியா இருக்கேன்"என்றாள்.
"நெஜமாவா டா? நீ நா பண்ண தப்பை, உன் பெர்மிஷன் இல்லாம மேரேஜ் பண்ணதை மன்னிச்சிட்டியா?" என்றான் ஏக்கமாக.
"இது நீங்க முடிவு பண்ண மேரேஜ் இல்லைங்க. கண்ணன் முடிவு பண்ணது" என்றாள் உற்சாகமாக.
புரியாமல் பார்த்தவனுக்கு தன் கனவை பற்றி விளக்கினாள். அதை கேட்டு சிரித்தவன் ,"அப்போ கண்ணன் என் கூட்டாளிங்கர?" என்றான் குறும்பாக.
பின் "எது எப்படி இருந்தாலும் என் மேல தப்பு இருக்கு. நீ கஷ்டப்பட்டு இருக்க. சாரிடா" என்றான்.
"மன்னிச்சிட்டேன்.இனி இதை பத்தி நீங்க பேசவே கூடாது"என்றாள் உத்தரவாக.
நிம்மதியுடன் அவளின் உச்சியில் முத்தமிட்டான் வசீ.
அந்த ஒற்றை முத்தம் அவனின் மொத்த அன்பையும் உணர்த்தும் விதம் இருந்தது. உடல்சிலிர்க்க கணவனை அணைத்துக் கொண்டு,"ஐ லவ் யூ வசீ மாமா" என்றாள்.
"ஹேய்....!!! என்ன சொன்ன யாழி?" ஆனந்தமாக கேட்டவனை இறுக்கி அணைத்து,"லவ் யூ வசீசீசீசீ.... மாஆஆஆமா" என்றாள் வெட்கத்துடன். சந்தோஷ சிரிப்புடன் அவளை தன் கைகளில் ஏந்தி மஞ்சத்தை நோக்கி நடந்தான் அவள் கணவன்.
தன் வசீகரமான கணவனின் கரங்களில் யாழானாள் யாழினி.
" வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீயெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணினொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!"

சுபம்!!!!!
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
lavanya sis unga first story padichen romba nalla irunthathu,arumayana love story, vasi oda love sema sis,yazhini character super,neenga niraiya kadhaikalai ezhthi men melum valara ennudaiya vazhthukkal sis💐💐💐 :love::love:
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
Ilakkiya Sissy, Thank u sooo much for your lovable comment. Really encouraging ❤️ Love u 😍
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
I liked this story very much sis .........title semma athuku match aaguramaari story end la vasigaranin yaazh neeyadi nu semma spr ra na ending ...........ithula fun kudumathoda kovil ku vanthu kalyaaname pannitu poiduva vasi so spr sis :love: :love: :love: :love: :love: 🤩 🤩 🤩 🤩semma story sis
 
Top Bottom