Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வசீகரனின் யாழ் நீ!

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ்-9
"உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ! "
போனின் ஒலியை கேட்டதும் "ஓகே அண்ணா. போன் வருது யார்னு பொய் பாரு" என்று அண்ணனிடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு செல்ல ஓரடி எடுத்து வைத்தாள் யாழினி. திடீரென திரும்பியவள், "அண்ணா, அந்த பையன் பேர் என்ன?" என கேட்டாள். அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் மாதவன்."வசீகரன்" என்றான். அவனை பார்த்து விரக்தியாக சிரித்தவள், "எனக்கு பிடிச்ச பெயர்" என்றாள். "அவரையும் கூடிய சீக்கிரத்தில் உனக்கு பிடிக்கும் " நம்பிக்கையாக சொன்னான் மாதவன். அமைதியாக அவள் அறைக்கு சென்றாள் யாழினி.
தனது மொபைலை எடுத்து பார்த்த மாதவன் முகத்தில் சிரிப்பு வந்தது. வசீகரன் தான் அழைத்து இருந்தான். மறுபடியும் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.ஆன் செய்து ஹலோ சொல்வதற்குள் மறுமுனையில் "ஹாய் மாதவன். ஹவ் ஆர் யூ?"என்று உற்சாக குரலில் பேசினான் வசீகரன். "நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. நீங்க எப்படி இருக்கீங்க?"
"இதுவரை படபடப்பா இருந்தேன். நீங்க 'மாபிள்ளை'னு கூப்பிட்டதும் ஹாப்பி ஆகிட்டேன்.உங்க வீட்டுல எல்லாரும் ஓகே சொல்லிட்டங்களா?முக்கியமா உங்க தங்கைக்கு சம்மதமா?" தயக்கமாக கேட்டான் .
"எல்லாருக்கும் ஓகே தாங்க. நீங்க எப்போ வரிங்க எங்க வீட்டுக்கு?"
"எப்போனாலும் நா ரெடி மாதவன்"
"இன்னிக்கி சாயங்காலம் வரீங்களா? யாழிக்கும் லீவ் தான்"
"சூப்பர் மாதவன். அம்மா அப்பாகிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். ஈவ்னிங் பாக்கலாம்" என்று போனில் சொல்லியபடி அவனது அறை சுவற்றில் ஒருபுறம் முழுக்க ஒட்டப்பட்டு இருந்த யாழினியின் புகைப்படத்தை பார்த்து கண் சிமிட்டினான் அந்த கள்வன்.
போனை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டவன் தன் பெற்றோர் அறைக்கு சென்றான். காலிங் பெல்லை அழுத்தியதும் அவனது அப்பா பரந்தாமன் கதவை திறந்தார்.இவனை கண்டு புருவத்தை உயர்த்தியவர், "வா வசீகரா " என்று அழைத்தார். அவன் உள்ளே நுழைகையில் அவன் தாய் பார்வதி சத்துமாவு கஞ்சி கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். பரந்தாமனின் காலை உணவு அது. வசீகரனை கண்டதும் கையில் இருக்கும் கிண்ணத்தை மேசைமேல் வைத்துவிட்டு இறுகிய முகத்துடன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
மெதுவாக தாயிடம் சென்றவன் அவர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான். "அம்மா" என அழைத்தபடி அவரது கைகளை பற்றினான். சிங்கமென கம்பீரமாக நிற்கும் தன் செல்லமகன் தன் முன் மண்டியிட்டு அமர்ந்து, மெதுவான குரலில் 'அம்மா'என்றதும் அவரின் தாய்மை உணர்வு பொங்கியது. இருப்பினும் மௌனமாக அமர்ந்திருந்தார்.கண்கள் கலங்கியது. வசீகரனின் இந்த திடீர் திருமணம் அவருக்கு அதிர்ச்சி. தன்னிடம் கூட சொல்லவில்லையே என்ற தாயின் ஏக்கம் வலியைத் தந்தது. கோவிலில் இருந்து வந்ததில் இருந்து இப்படி தான் இருக்கிறார். மகனிடம் ஏன் என்று ஒரு கேள்வி கேட்கவில்லை, பேசவில்லை. அவனாக பேசப்போனாலும் அறை கதவை மூடி கொண்டு சென்றுவிடுகிறார்.தந்தையிடம் மட்டும் தன் நிலையை விளக்கிவிட்டான். அவரும் அவனை உணர்ந்துக்கொண்டார்.அவனை மன்னிக்கும்படி பார்வதியிடம் பேச முயன்றார். பார்வதி அவரை ஒரு முறைப்பில் தள்ளி நிறுத்திவிட்டார். மகன் பேசினால் தான் மனைவியை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்து இருந்தவர், மகன் தங்கள் அறைக்கு வரவும் உள்ளே அழைத்துவிட்டார்.
வசீகரன் தன் தாயின் முகத்தை நோக்கி,"அம்மா நா பண்ணது தப்புதான்.பட் டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மை சிச்சுவேஷன், எனக்கு எதை பத்தியும் யோசிக்க கூட டைம் இல்ல மா. உங்க கிட்ட பேசி உங்க மூலமா இந்த மேரேஜ் நடக்கனும்னு தான் நா ஆசைப்பட்டேன். ஒன்னு ஞாபகம் இருக்கா மா? ஒரு நாள் உங்க கிட்ட நான் எந்த பொண்ண மேரேஜ் பண்ண ஆசைப்பட்டாலும் ஓகே சொல்லுவிங்களானு கேட்டேன்.நீங்களும் ஆமானு சொன்னிங்க.நான் யாழனியை நெனச்சிதான் அப்போ கேட்டேன் மா.உங்களை யாழினி வீட்டுல பேசவச்சி தான் கல்யாணம் பண்ணனும் னு ஆசைப்பட்டேன். பட் அதுக்கு எனக்கு லக் இல்ல.என் மேரேஜ் முடிஞ்சிதான் உங்க மருமகளை உங்களுக்கு அறிமுகம் பண்ற நிலைமை வந்துடுச்சு.யாழினி நா சூஸ் பண்ண பொண்ணுமா . என் முடிவு தப்பா இருக்குமா?உங்க பையன் மேல நம்பிக்கை வச்சி என் மேரேஜ அக்சப்ட் பண்ணுங்க மா" என்று அவர் மடியில் தலைவைத்தான்.அந்த தாயின் உள்ளம் உருகிவிட்டது.கண்களில் கண்ணீருடன் அவன் தலையை வருடியவரை நிமிர்ந்து பார்த்தவன் அவரின் கண்ணீரைத் துடைத்தான்."மன்னிச்சிட்டீங்களாமா?" ஏக்கமாக கேட்டவனின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவர்,"மன்னிக்கும் அளவுக்கு நீ எந்த தப்பும் பண்ணல கண்ணா.அம்மாவுக்கு உன் மேல கோபம் இல்ல,வருத்தம் தான். என்கிட்ட சொல்லலையேனு வருத்தம் . மத்தபடி உன் முடிவில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.நீ விரும்பும் வாழ்க்கை உனக்கு அமையனும்னு தான் நானும் ஆசைப்படுறேன்.என் மகன் எப்பவும் எதுலயும் தோற்றுப்போக கூடாது"என்றார். தாயின் இருகரங்களையும் பிடித்து முத்தமிட்டு,"யூ ஆர் மை ஸ்ட்ரென்த் மா" என்றான். மனதில் கர்வமாக உணர்ந்தாள் அந்த தாய்.
அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்த பரந்தாமன்,"எப்படியோ தாயும் மகனும் ஒன்னு சேர்ந்தாச்சா?"என்று அவர்களை பாசப்பிணைப்பில் இருந்து வெளிக்கொண்டுவர முயன்றார்."நானும் என் பிள்ளையும் ஒண்ணானதுல உங்களுக்கு தான் வருத்தமில்ல?என் மகனை விட்டுட்டு உங்களுக்கு ரெண்டுநாளா சேவகம் பண்ணேன். நீங்க மட்டும் என் மகன்கிட்ட பேசுனிங்க.இனி அதெல்லாம் நடக்காதுனு பொறாமையா இருக்குமே" என்றார். இரண்டு நாட்களாக இறுக்கமாக இருந்த மனைவி சிரித்தமுகமாய் கிண்டலடிப்பதை பார்த்து பாசமாக சிரித்தார் பரந்தாமன்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ்-10
"உன்னை கனவில் கண்டதும்
உன் பெயரை மட்டும் உளறுகிறேன்
உன் இதழ் பட்ட சுகத்தில் உளரும் குழலினை போல!!"
கணவரை கிண்டலடித்தபடியே மகனை பார்த்த பார்வதி, "வசி கண்ணா , எப்போ மருமகளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவோம்?"என கேட்டார். "அதை கேட்க தான் வந்தேன் மா.ஈவ்னிங் போய் பேசி கூட்டிட்டு வரலாம். மாதவன் வீட்ல எல்லாருக்கும் ஓகே தானாம்"என்று ஆர்வமாக பேசியவனைத் தடுத்த அவன் தந்தை ,"ஈவினிங் போய் பேசிட்டு வரலாம். கிராண்டா ஒரு மேரேஜ் வச்சி அப்புறம் கூட்டிட்டு வரலாம்" என்றார்.
"ஒய் பா? எப்படி நடந்திருந்தாலும் மேரேஜ் தானே? இன்னும் எதுக்கு கிராண்டா?" ,என்றான் மகன்.
"நம்ம சைடில் யாருக்கும் உன் மேரேஜ் பற்றி தெரியாது. உன் மேல எல்லாருக்கும் பொறாமை நிறையவே இருக்கு. உன்னை பற்றி தப்பா பேச சான்ஸ் கிடைக்குமானு காத்திட்டு இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு குடுக்க நா விரும்பல. இப்பவும் பொண்ணு மிடில் கிளாஸ் னு பேச்சு வரும் தான். பையன் ஆசைப்பட்ட பொண்ணுனு சொல்ல போறோம்" , என்றவரை முகம் சுருங்க பார்த்தான். அவனுக்கு அதில் விருப்பம் இல்லை என்பது பார்வையில் தெரிந்தது. எனவே பார்வதி,"அதோட உன் மேரேஜ பெருசா நடக்கணும் னு எனக்கு ஆசையா இருக்கு கண்ணா ",என்றார்.
அவன் மீது தவறு இருப்பினும் அவனுக்காக மற்றவர்களிடம் பேசி, பெண்ணின் குடும்பத்தை பற்றி விசாரித்து, தங்களை விட வசதி குறைந்தவர்கள் எனினும் தயக்கம் எதுவும் இல்லாமல் சிறப்பாக திருமணம் செய்துவைக்க ஆசைப்படும் தந்தைக்காக, குழந்தையாய் இன்னும் தன்னை கொஞ்சும் தாய்க்காக, இன்னும் ஒருமுறை யாழனியை திருமணம் செய்ய சம்மதித்தான்.மேலும் தானே முடிவெடுத்து தாலிக்கட்டியும், தன்னை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கும் யாழினியை மகாராணி போல் வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று அவனுக்கும் ஆசை வந்தது.
மாலை யாழினி வீட்டில் பெண்பார்க்கும் படலம் போல் தடபுடலாக ஏற்பாடு நடந்தது.யாழினிக்கு தான் கோபம்.கனத்த பட்டுசேலையை அவளிடம் தந்து அணியுமாறு சொன்ன தாயை முறைத்தாள்,"இப்போ எதுக்கு இதெல்லாம்?அவங்களுக்கு என்னை தெரியாதா?கோவிலில் பார்த்தவங்க தான?இப்போ இந்த கொலு பொம்மை அலங்காரம் எதுக்கு?"என கத்தினாள்.
"முதல் முறையாக மாப்பிள்ளை குடும்பம் நம்ம வீட்டுக்கு வராங்க. நீ இப்படி தான் இருக்கணும்" என்ற தாயை பார்த்து கும்பிட்டவள்,"நானே கிளம்பி வரேன் தாயே!நீங்க போய் கேசரி கிண்டுற வேலையை பாருங்க ",என்று சொல்லிவிட்டாள்.
மகளை ஒருவழியாக சமாளித்து வெளியே வந்த பூரணியிடம்,"அம்மா மாப்பிள்ளை வந்துட்டே இருக்காராம்,10 நிமிஷத்தில் வந்துடுவார்,நா போய் கூட்டிட்டு வரேன்" என நேரலை வாசித்தான் மாதவன். பரபரவென இனிப்புகள் தட்டுகளில் பரிமாறப்பட்டது. கேட் திறக்கும் ஓசைக்கேட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட தனிவீடு அது. கோடீஸ்வர குடும்பம் வருகிறது என்று பரபரப்பில் இருந்த பூரணி அதை தன்னால் முடிந்த அளவு அலங்காரம் செய்திருந்தார்.வசீகரனின் குடும்பம் வந்ததும் கைக்கூப்பி வரவேற்றார்.சிரித்தமுகமாக வந்த பார்வதி, கூப்பி இருந்த பூரணியின் கைகளை பிடித்துக்கொண்டு உள்ளே வந்தார். ஆறுதலாக உணர்ந்தார் பூரணி.
ஹாலில் இருந்த யாழினியின் தந்தை மேகநாதன் ,"உட்காருங்க" என்று உபசரித்தார்.யாழனியை கூப்பிட சொன்ன மாதவனிடம் தானே உள்ளே சென்று பார்ப்பதாக சொன்ன பார்வதி யாழினியின் அறையை கேட்டு கதவை தட்டி விட்டு சென்றார். அவரை கண்டதும் மரியாதை நிமித்தம் எழுந்தாள் யாழினி.தாயின் அறிவுரையை கேட்காமல் சிம்பிளாக சில்க் காட்டன் சேலை கட்டி,எப்போதும் போடும் நகைகள், தாலிக்கயிறுடன் இருந்தாள் யாழினி.அந்த எளிமை பார்வதிக்கு பிடித்திருந்தது. மகனின் தாலி அவள் கழுத்தில் இருப்பதை பார்த்ததும் ஏதோ ஒரு பந்தம் தோன்றியது. சோகமாக இருந்த அவள் முகம் அவளின் நிலையை அவருக்கு சொன்னது. எந்த பெண்ணாலும் இப்படி ஒரு அதிரடி திருமணத்தை எளிதில் ஏற்க முடியாது என உணர்ந்தவர் அவர்.
"மருமகளே, எப்படியிருக்கமா?",என்றார் அன்போடு. அவரின் அழைப்பு சிலிர்ப்பை உண்டாக்க, விலுக்கென நிமிர்ந்தவள்,"நல்லா இருக்கேன் அம்மா",என்றாள்.'அம்மா என்ற அழைப்பு அவருக்கு ஆனந்தம் தந்தது. இருகரம் கொண்டு யாழினியின் கன்னத்தை பற்றி அவள் உச்சியில் முத்தமிட்டார்.அவரது அன்பு யாழினிக்கு தைரியம் அளித்தது."வா டா",என கைப்பிடித்து ஹாலுக்கு அழைத்துச்சென்று சோஃபாவில் அமரவைத்தார். வசீகரனின் பார்வை தன் மனைவியை தழுவியது. கண்களை அவள்புறமிருந்து திருப்பவில்லை. அறையிலிருந்து வெளிவரும் போதே ஓரவிழியில் வசீகரனின் இருப்பிடத்தை கவனித்த யாழினியோ அவன்புறம் திரும்பவில்லை.
பரந்தாமன் மேகநாதனிடம் பேசினார்,"ரெண்டு நாளில் எங்களை பற்றி விசாரித்து இருப்பிங்க. நானும் உங்கள பற்றி விசாரிச்சேன்.எல்லாம் திருப்திகரமா இருக்கு.என்னதான் கல்யாணம் கோவிலில் நடந்திருந்தாலும் கிராண்டா ஒரு மேரேஜ் பண்ணலாம்னு நினைக்கிறேன்",என்கிறார். மேகநாதனும் 'சரி' என தலையாட்டினார். 'இவர் மகன் முடிவெடுத்து ஒரு கல்யாணம் பண்ணுவான், இவர் முடிவெடுத்து ஒரு கல்யாணம் நடத்திவைப்பாரு. சரியான தான்தோன்றித் தனமாக முடிவெடுக்கும் ஆணாதிக்க பணத்திமிர் பிடிச்சவங்க', என மனதுக்குள் புலம்பினாள் யாழினி.
அவர்கள் வரும்போதே திருமணத்திற்கு மூன்று நல்ல முகூர்த்த நாட்கள் பார்த்து வந்திருந்தனர். யாழினியின் மாதக்கணக்கை விசாரித்து அதன்படி பொருந்தி வரும் நாளை பார்வதி தேர்வு செய்தார். அந்த நாள் இருபது நாட்கள் கழித்து வரும் நாளாக இருந்ததால், திருமணத்திற்கான வேலைகளை உடனே துவங்கவேண்டும் என முடிவெடுத்து விட்டு, இனிப்புடன் சிற்றுண்டி உண்டுவிட்டு கிளம்பினர் வசீகரனின் குடும்பம்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ்-11


"சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்
சிரித்துக் களித்திடுவான் - நல்ல
வன்ன மகளிர் வசப்படவே பல
மாயங்கள் சூழ்ந்திடுவான் - அவன்
சொன்னபடி நடவாவிடிலோ மிகத்
தொல்லையிழைத்திடுவான் - கண்ணன்
தன்னையிழந்துவிடில், ஐயகோ! பின்
சகத்தினில் வாழ்வதிலேன்"
வசீகரனுக்கு ஆனந்தமாக இருந்தது. தொழிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டுவிட்டு வரும் போதும் தோன்றாத உற்சாகம் அவனை தொற்றிக்கொண்டது. யாழினியின் சம்மதத்தை பெற்றதை விட பெரிய வெற்றி வேறெதுவும் இல்லை என எண்ணினான். உடனே வசீகரனின் திருமண செய்தி அவனது அக்கா வந்தனாவிற்கு தெரிவிக்கப்பட்டது.
பரந்தாமன்-பார்வதி தம்பதிக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் வந்தனா, திருமணம் முடிந்து கணவர் வெங்கட் மற்றும் மகன் ஆதித்யாவுடன் பெங்களூரில் வசிக்கிறாள். இளையவன் தான் வசீகரன். தொழிலில் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக இருந்தாலும் தாயிடமும் அக்காவிடமும் அதிக அன்பு கொண்டவன். நேரடியாக அன்பை சொல்லாவிட்டாலும் அவன் செய்யும் எல்லா செயலிலும் அது வெளிப்படும். அக்காவின் பிறந்தநாள்,திருமண நாள்,பண்டிகைகள் வந்தால் வசீகரன் எங்கு இருந்தாலும் அவன் பரிசுகள் பெங்களூர் பறக்கும்.
நான்கு வயது தன்னை விட சிறியவன் ஆனாலும் படிப்பு, விளையாட்டு,தொழில் என அனைத்திலும் முதன்மை பெற்று விளங்கும் தம்பியை கண்டு எப்போதும் பெருமை உண்டு.சிறுவயது முதல் அமைதியான ஆளுமை குணம் கொண்டவன் வசீகரன். உறவினர்கள் அனைவரும் அவனிடம் மரியாதையாக இருப்பர்.எப்போதும் எந்த தீயப்பழக்கமும் இல்லாமல், பெண்களை ஓரடி தள்ளி நிறுத்தியே பழக்கப்பட்டவன்.
கணவனிடம் கூட தம்பியின் புகழ் தான் பாடுவாள் வந்தனா. வெங்கட்டிற்கு மனைவி மீது நிறைய அன்பு உண்டு. வசீகரனின் ஆளுமையை ரசிப்பான். வந்தனா தனது மகனுக்கு தம்பியை தான் உதாரணமாக சொல்லுவாள். அத்தகையவள் தம்பியின் திருமணம் நடந்தது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தாள். கணவனிடம் மட்டும் உண்மையை சொல்லிவிட்டு, இரு தெருக்கள் தள்ளியிருந்த மாமியாருக்கு, "தம்பிக்கு பொண்ணு பார்த்து இருக்காங்க. போய் பார்த்திட்டு வரேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு மகனுடன் சென்னை கிளம்பிவிட்டாள்.
ஏர்போர்ட்டில் இருந்து வந்ததும் அம்மாவிடம் மகனை கொடுத்துவிட்டு நேரே தம்பி அறைக்கு சென்றாள். அங்கு ஆபிஸ் பைலில் ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவனின் பின்னால் நின்று,"டேய் உன் ஏஞ்சலை கடத்திட்டு வர முழு பிளான் நான்தானே போட்டு தருவேன்னு சொன்னேன்.நீயே தாலி வரைக்கும் கட்டிடியா பிராடு? " என்றாள்.
வசீகரனின் மனதில் காதல் இருப்பது வந்தனாவிற்கு தெரியும். ஆறுமாதம் முன்பு கோடை விடுமுறையில் சென்னை வந்திருந்தாள் வந்தனா. அப்போது வந்தனாவும் பார்வதியும் வசீகரனின் திருமணம் பற்றி பேசினார்கள். அந்நேரம் வீட்டுக்குள் வந்த வசீகரனிடம், "வசீ கண்ணா, சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ண காலம் வந்துடுச்சி.அக்கா சொந்தத்தில் கூட பொண்ணுங்க இருக்காங்களாம். பாக்கலாமா? நீ பொண்ண மட்டும் செலெக்ட் பண்ணு போதும். அம்மா மேரேஜ் பண்ணி வச்சுடுறேன்" என கேட்டார் பார்வதி.
உடனே தாயின் அருகில் வந்து அமர்ந்தவன்,"நா எந்த பொண்ணை செலெக்ட் பண்ணாலும் உங்க மருமகளா ஏத்துபிங்களா மா?"என்றான். திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே ஓடும் மகன் இதனை கேட்டதும் மகிழ்ச்சியடைந்த பார்வதி,"கண்டிப்பா நீ பெஸ்ட் பொண்ண தான் செலெக்ட் பண்ணுவ, பெண் யாரா இருந்தாலும் மனப்பூர்வமாக எத்துப்பேன் செல்லம்"என்றார். இதனை கேட்ட வசீகரன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.
பார்வதி அவனைப் பார்த்து ஆனந்தமாக புன்னகைத்தபடி அவனுக்கு டிபன் எடுத்து வைக்க சமையலறைக்கு சென்றார். வந்தனாவிற்கு ,'தம்பி ஏதோ லவ்ல மாட்டிட்டான்' என்று தோன்றியது. அவனை தேடி அவன் அறைக்கு சென்றாள். அவன் பால்கனியில் நின்று கொண்டு நிலவை ரசித்தபடி,"ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்" என்று பாடிக்கொண்டு இருந்தான்.இன்று போல் அன்றும் அவன் பின்னால் போய் நின்று,"வசீ யாருடா உன் ஏஞ்சல்?"என்றாள். அவளது குரலை கேட்டு திரும்பியவன் மெல்லிய புன்னகை செய்தான்."உன்னையே காதல் பாட்டு பாட வச்ச உன் காதல் தேவதையை நா பார்க்கணும்டா" என்றாள். "கண்டிப்பா காட்டுறேன்.நீ தான் அவளை நம்ம வீட்டுக்கு கடத்திட்டு வர பிளான்ல ஹெல்ப் பண்ணனும்" என்றான்.
அவனது வெளிப்படையான பதிலில் இன்ப அதிர்ச்சியுடன்,"அப்போ நிஜமாவே ஏஞ்சல் ரெடியா?" என்றாள். "ஹ்ம்ம் பட் யார்கிட்டயும் சொல்லாத. நேரம் வரும்போது பாத்துக்கலாம்" என்றுவிட்டு வேறு ஏதோ பேசினான். தம்பியின் தேர்வு சோடை போகாது என்ற நம்பிக்கையில் இத்தனை நாள் யாரிடமும் சொல்லாமல் காத்திருந்தாள். ஆனால் அவன் இப்படி கல்யாணமே செய்துவிடுவான் என எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவன் மீது கொண்ட நம்பிக்கையில் இப்படி அவனிடம் கேள்வி கேட்கிறாள்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ்-12
"சோலை மலரொளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது
நெஞ்சிலலைகளடீ!
கோலக் குயிலோசை - உனது
குரலினிமையடீ!
வாலைக்குமரியடீ - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்"
சகோதரியின் கேள்வியில் திரும்பி பார்த்தவன் ,"உன் ஹெல்ப் கேக்க டைம் இல்ல.உனக்கு பதிலா உன் தம்பிகள் யஷ்வந், கோகுல் ஹெல்ப் பண்ணாங்க.மாமா வரலையா?"என்றான். "மாமா மேரேஜ்கு ஒன் வீக் முன்னாடி வருவார்.என் தம்பி பொண்டாட்டியை நா பார்க்கணும் கூட்டிட்டு போ" என்றாள்.யாழனியை பார்க்க சான்ஸ் கிடைத்ததும் ,"போய் ரெஸ்ட் எடுத்துக்கோ ,சாயங்காலம் கூட்டிட்டு போறேன்" என்று அக்காவை அனுப்பினான்.
போன் போட்டு மாதவனிடம் சொல்லிவிட்டு மாலை யாழினியின் வீட்டுக்கு போனார்கள்.
பூரணியின் உபசரிப்பை ஏற்று கொண்டு யாழனியை வந்தனா தேட, கடுப்பான மனநிலையில் ஹாலுக்குவந்தாள் யாழினி. யாழனியை தனக்கும் வசீகரனுக்கும் இடையில் அமர்த்திய வந்தனா அவளுடன் நன்றாக பேசினாள். வந்தனாவின் குணம் யாழினிக்கு பிடித்துப்போனது. தாயைப் போல மகள் என எண்ணினாள். யாழனியை மொட்டைமாடிக்கு தனியாக அழைத்து சென்று சிறிது நேரம் பேசிகொண்டு இருந்தபோது, அங்கு வசீகரனும் வந்தனாவின் மகன் ஆதியும் வந்தனர். யாழினியின் இனிமையான மனநிலை மாறிவிட்டது. மொட்டைமாடி சுவரைப் பிடித்தபடி கீழே பார்த்தாள்.அவளுக்கு வசீகரனின் வருகை பிடிக்கவில்லை. சில நிமிட அமைதிக்கு பின் ,"யாழி" என்று வசீகரனின் குரல் கேட்டு திரும்பியவள் வந்தனாவையும் ஆதியையும் காணாமல் திகைத்தாள். வசீகரன் ஆழ்ந்த பார்வையுடன் ஏதோ பேச தொடங்க, சட்டென்று கீழே வந்துவிட்டாள்.
வசீகரன் கொதிநிலைக்கு போய்விட்டான். அவனுக்கு இது போன்ற உதாசீனங்கள் பழக்கமில்லை. எல்லோரும் அவன் பேசுவானா?என காத்திருக்க, 'இவளுக்கு எவ்வளவு திமிர்? நான் இவளை என்ன செய்தேன்? இப்படி மரியாதை இல்லாமல் ஓடுகிறாள்? இவள் கையை பிடித்தா இழுத்தேன்?' என்று எண்ணிய நொடி அவனுக்கு ஒரு ஐடியா வந்தது.சின்ன சிரிப்புடன் 'இருடி உன்னை வச்சிக்கிறேன்'என்று சொல்லிக்கொண்டவன் அக்காவுடன் வீடு திரும்பினான்.
வரும் வழியில் யாழனியை பற்றியே பேசிக்கொண்டு வந்தாள் வந்தனா. தனக்கும் அக்காவுக்கும் ஒரே மாதிரி எண்ணம் என எண்ணிக்கொண்டான். பின் தான் வாங்கிவந்த யாழினியின் மொபைல் எண்ணை வசீகரனிடம் தந்தாள். உடனே தனது அறைக்கு சென்றவன் அவளது எண்ணை 'மிசஸ். வசீகரன்' என சேமித்தான். பின் அவளுக்கு 'யாழ் டார்லிங், ஐ லவ் யூ டி' என வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினான்.
ஓய்வாக அமர்ந்திருந்த யாழினி மெசேஜ் ஒலியை கேட்டதும் போனை எடுத்து பார்த்தவள் அதிர்ச்சியுடன் டிபி போட்டோவை பார்க்க அதில் வசீகரனின் முகம் தெரிந்தது. உடனே அவன் எண்ணை பிளாக் செய்தாள்.
அவள் மெசேஜ் படித்ததை நீல நிற டிக் சைன் காட்ட சிரித்துக்கொண்டு உணவருந்த போனான். இரவு தூங்குவதற்கு முன் ஹாலில் அமர்ந்து ஆதியுடன் விளையாடிக்கொண்டு இருந்த வசீகரன், வந்தனா போனில் ஏதோ சாட் செய்வதைப் பார்த்து,"என்னக்கா மாமாவா?' என சிரிப்புடன் கேட்டான். வந்தனா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள். வசீகரன் இப்படி பேசுபவன் அல்ல. எப்போதும் வேலையே கதி என இருப்பவன். அவன் மாற்றத்தை ரசித்தபடி ,"இல்ல டா, உன் ஆள் கூட பேசறேன் "என கண்ணடித்தாள்.
அதை கேட்டதும் சிரித்தவன் போனை எடுத்து யாழினிக்கு,"என் பேபி சாப்டாச்சா?" என மெசேஜ் அனுப்பினான். ஆனால் மெசேஜ் ரிசீவ் குறிக்கும் டபுள் டிக் வரவில்லை. அவள் ஆன்லனிலும் இல்லை. ஒருவேளை தூங்க போய் விட்டாலோ என எண்ணி வந்தனாவை பார்க்க அவள் இன்னும் சாட்டிங்கில் இருந்தாள். அவளின் அருகில் போய் அமர்ந்து கொண்டு பார்க்க, அவள் யாழினியிடம் தான் பேசிக்கொண்டு இருந்தாள். யாழினியின் புகைப்படம் தெரிந்தது. அவனுக்கு அவள் தன்னை பிளாக் செய்திருக்கிறாள் என்பது புரிந்தது. பல்லை கடித்தான். 'எவ்ளோ கொழுப்புடீ உனக்கு! நான் என்ன ரோட் சைடு ரோமியோவா? எப்படி என்னை பிளாக் பண்ணலாம்' என்று எண்ணியவன்,அடுத்த நாள் அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தான்.
மறுநாள் காலை வேகமாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த யாழினி, மாதவன் யாரையோ வரவேற்கும் ஒலிகேட்டு எட்டிப்பார்த்தாள். அங்கு வந்தனாவும் வசீகரனும் அமர்ந்திருந்தனர். அதிர்ச்சியுடன் வெளியே வந்தவள்,"வாங்க அண்ணி" என வந்தனாவை மட்டும் வரவேற்க, வசீகரன் முறைத்தான். அவனை யாழினி கண்டுக்கொள்ளவேயில்லை.வந்தனா பூரணியிடம்,"அத்த கெளம்பலாமா?" என கேட்க பூரணியும் "போகலாம்" என்றபடி வந்தார். 'எங்கே எல்லாரும் கெளம்பறாங்க?'என யோசிக்க ,"உனக்கு நகை,புடவை,எல்லாருக்கும் ட்ரெஸ் எடுக்கணும். சீக்கிரம் கிளம்பு" என்றார் பூரணி. "மா எனக்கு ஆபிஸ்ல நெறைய வேலை இருக்கு. நீங்க போய் வாங்கிட்டு வாங்க "என்றாள். "நீ இல்லாம உனக்கு எப்படி நகை வாங்குறது?"என்ற வந்தனா அவளையும் அழைத்துக்கொண்டு போனாள்.
காரில் இருந்து இறங்கி வந்தனாவும் பூரணியும் கடைக்குள் போய்விட, மாதவன் போனில் பேசியபடி நின்று விட, தனியாக படிக்கட்டில் ஏற காலடி வைத்தவளின் கால் வழுக்கிவிட, கீழே விழப்போனவளின் கையை இறுக்கி பிடித்து நிலையாக நிற்க வைத்தது வசீகரன் கை.தடுமாறி விழ இருந்தவள் மாதவன் காப்பாற்றியதாக எண்ணி "தேங்க்ஸ்" என்றபடி நிமிர்ந்து பார்த்தாள். வசீகரனின் முகத்தை பார்த்ததும் பட்டென அவனிடமிருந்து விலக முயன்றவளை தோளோடு சேர்த்து அணைத்தவன், "என் நம்பரை ஏன்டி பிளாக் பண்ண? "என்று கேட்டான். அவனை முறைத்தவள்,"டி போட்டு பேசற உரிமையை உங்களுக்கு நான் குடுக்கல" என்றாள். "நீ என்னடி குடுக்கறது. என் உரிமை. நானே எடுத்துப்பேன்."என்றான். நக்கலாக "சரிடா" என்றாள் யாழி.
கோபத்திற்கு பதில் அவன் கண்ணில் சந்தோஷம் வந்தது,"ஹேய்!!! சூப்பர்டி . நான் இதை எதிர்பார்க்கவே இல்ல. நீ "டா" சொல்லும்போது ரொம்ப நல்லா இருக்குடி. இனிமே இப்படியே கூப்பிடு டார்லிங்" என்று கூறி கண்ணாடித்தான்.
அவன் கண்சிமிட்டலில் தன்னை மறந்து அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தவளைப் பார்த்து மீண்டும் கண்சிமிட்டியவன்,"என்ன டார்லிங், இதுதான் அழகுல மயங்குறதா?" என்றான். பட்டென தலையை திரும்பியவள் ,'சே என்ன நான் இப்படி பண்ணிட்டேன். இவன்கிட்ட போய் மயங்கி நின்னுட்டேன். இவ்ளோ பலவீனமானவளா நான்?'என குழம்பியபடி கடைக்குள் சென்றாள்.அனைத்தும் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து, பூரணி சமைத்து தந்த உணவை சாப்பிட்டுவிட்டு வசீ குடும்பம் கிளம்பினர்.
களைப்பாய் படுத்திருந்த யாழிக்கு சிறிது நேரத்தில் புது எண்ணிலிருந்து போன் வந்தது. எடுத்து "ஹலோ"என்றாள். "யாழி டார்லிங்" வசீகரனின் குரல் கேட்டது. பட்டென போனை அணைக்க போனவளை அவன் குரல் தடுத்தது. "போனை கட் பண்ண, என்னை நீ நேரடியாக பார்க்க ஆசைப்படுறனு முடிவு பண்ணி, உன் ஆசைய நிறைவேத்த உங்க வீட்டுக்கு வந்துடுவேன். எப்படி வசதி?"என்றான். பல்லைக் கடித்தவள்,
"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றாள்.
"என் வொய்ப் கிட்ட பேசணும்"என்றவனிடம்
"அவங்க எங்க இருக்காங்க?" என்று குதர்க்கமாக கேட்க , அவனும்
"அதை எங்க பூரணி அத்தை கிட்ட கேக்க தான் உனக்கு கால் பண்ணேன், கொஞ்சம் போனை அவங்க கிட்ட குடுக்கிரியா?" என்றான். வேறே வினையே வேணாம். பூரணி மாப்பிள்ளை மேல் பெரிய மரியாதை வைத்திருக்கிறாள்.
யாழினி அவனிடம் இப்படி எடுத்தெரிந்து பேசுவது தெரிந்தால் பேசியே கொன்றுவிடுவார். எனவே அவள் அமைதியாக இருக்க,"என்ன டார்லிங், பேச்சையே காணும்?" என நக்கலாக கேட்டான் அவன்.
பின் அவனே,
"ஒழுங்கா என் நம்பரை அன்பிளாக் பண்ற, அப்புறம் 'ஹாய் செல்லம்' னு ஒரு மெசேஜ் போடு. ஓகே?" என்றான். "மெசேஜ் எல்லாம் பண்ண முடியாது"என்றாள் வெடுக்கென.
"ஓகே நீ வெட்கப்படுற, அன்பிளாக் மட்டும் பண்ணு. மத்ததெல்லாம் நா பார்த்துக்கிறேன்.பை டார்லிங்" என்று போனை அணைத்தான் அவன். "ஆமா பெரிய வள்ளல், பெருந்தன்மையா விட்டு குடுக்குறான். என்ன டார்ச்சர் பண்ண எங்க இருந்து தான் வந்தானோ? சரியான கோட்டான்"என்று திட்டிக்கொண்டே அவன் எண்ணை அன்பிளாக் செயதாள்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ்-13
"சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று! "
வசீகரனுக்கு அலுவலகத்தில் இருந்து போன் வர, சிறிது நேரம் பேசியவன் பேசி முடித்ததும் போனில் வாட்ஸ்அப் திறந்து யாழினி அன்பிளாக் செய்து இருப்பதை அவளின் "லாஸ்ட் ஸீன்" இவனுக்கு காண்பிப்பதிலிருந்து அறிந்தவன் ,"நம்ம டார்லிங் நம்ம பேச்சை கேட்டுட்டா போல இருக்கே"என்று எண்ணி, சிரித்தபடியே "வெரி குட் செல்லம்"என ஒரு மெஸேஜ் அனுப்பினான்.
யாழினி அப்போது போனில் பாட்டுக்கேட்டுகொண்டு இருந்தாள். மெசேஜ் வந்ததை பார்த்தவள் வசீகரனின் பெயரைப் பார்த்ததும் கடுப்பாகி போனாள்.வசீகரனோ விடாமல் காதல் கணையை மெசேஜ் வழியே அனுப்பிக்கொண்டே இருந்தான்.யாழினிக்கு அவனை வெறுப்பேற்ற வேண்டும் என தோன்ற வாட்ஸ் அப்பை திறந்து தன் தோழிக்கு மெசேஜ் அனுப்ப தொடங்கினாள்.
யாழினி ஆன்லைன் வந்ததில் இருந்து அவள் தனக்கு ஏதேனும் பதில் கொடுப்பாள் என எதிர்பார்த்தவன் அவள் தனது மெசேஜை பார்க்கக்கூட செய்யாமல் இருப்பதை கண்டதும் எப்போதும் போல பல்லைக் கடித்தான்.
உடனே அவளுக்கு போன் போட்டான்.அவளோ இவன் எண்ணை கண்டதும் எடுக்கவேயில்லை. சிறிதுநேரத்தில் யாழினியின் அறைக்கதவு தட்டபட, யாழினி வந்து கதவை திறந்தாள். வெளியே மாதவன் தான் நின்றுகொண்டு இருந்தான் கையில் போனுடன். "மாப்பிள்ளை லைன்ல இருக்கார். உன் கிட்ட பேசனுமாம்"என்று போனை தந்துவிட்டு போனான்.
யாழினி கோபத்துடன் ,"ஹலோ"என்றாள்."ஏன்டி நான் போன் போட்டா எடுக்க மாட்ற?" அவளை விட கோபமாக கேட்டான் அவன்."ஒழுங்கா என் மெசேஜ் படிச்சி, எனக்கு ரிப்ளை பண்ற.இல்லனா, அடுத்த முறை என் மாமியாருக்கு கால் பண்ணி உன்கிட்ட குடுக்க சொல்வேன்"என்றான் மிரட்டலாக.
எதுவும் பேசாமல் போனை அணைத்து மாதவனிடம் கொடுத்துவிட்டு வந்தாள். அவளது போனை எடுத்து வசீகரனின் மெஸேஜைப் படித்தாள். அவன் கொஞ்சல்களை கொண்ட மெசேஜைப் பார்த்தவள்,"இதற்கு என்ன பதில் அனுப்ப முடியும்? போடா மெண்டல்னு அனுப்புவோமா?"என எண்ணியவள், உடனே "அச்சோ இவன் என் மெஸேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அண்ணனுக்கு அனுப்பி வச்சிடுவான். எதுக்கு வம்பு?" என யோசித்துகொண்டு இருக்க,இவள் மெசேஜ் படித்ததை அறிந்தவன்"ஹாய் டார்லிங், இப்படியே நா சொல்றதெல்லாம் கேட்டு நடந்துக்கோ, அதுதான் எனக்கு பிடிக்கும்"என அடுத்த மெசேஜ் போட்டான்.
இதில் கோபமான யாழினி,"மத்தவங்களுக்கு பிடிச்சதெல்லாம் நா செய்ய முடியாது"என ரிப்ளை செய்தாள்.அவள் பதிலை படித்த வசீகரன் உற்சாகமானான்."மத்தவங்க சொல்றதெல்லாம் கேக்காத செல்லம். உன் ஹஸ்பண்ட் நா சொல்றத மட்டும் கேளு போதும்"என்றான்
"நீங்க சொல்லிட்டு தான் எல்லாம் செய்றீங்களா? நா கேட்டுக்க. கண்ணை மூடிக்கொண்டு இருக்கும்போது சொல்லாம கொள்ளாம தாலிக்கட்டின ஹீரோவாச்சே நீங்க" என்று நக்கலாக பதில் தந்தாள் யாழினி. அந்த மெஸேஜை படித்தவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது. உடனே வாட்ஸ் அப்பிலிருந்து வெளியேறினான். யாழினி சிரித்துக் கொண்டாள். "என்னையே டார்ச்சர் பண்றியா நீ? கோட்டான். அப்டியே ஓடி போய்டு" என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
இரவு சீக்கிரம் தூங்கி காலை சீக்கிரமே எழுந்த யாழினி அவள் போனில் வசீகரன் மெசேஜ் உள்ளதா? என பரர்த்தாள். எதுவும் இல்லை. அவன் அதற்கு பிறகு வாட்ஸ் அப் வந்த அடையாளமே இல்லை. தனக்கு தானே இடது கையால் 'ஹைபை' கொடுத்துக்கொண்டாள். "இனி அவன் யாருக்குமே மெசேஜ் பண்ண மாட்டான்" என்று எண்ணி சிரித்தபடியே அலுவலகம் கிளம்பினாள்.
காலை உணவை உண்டுகொண்டு இருக்கும்போது வெளியே கார் சத்தம் கேட்டது. யாரென பூரணி எட்டிப்பார்க்க வசீகரன் உள்ளே வந்துகொண்டு இருந்தான். பூரணி பரபரப்புடன்,"மாதவா, மாப்பிள்ளை வந்திருக்கார்டா" என குரல் கொடுத்துவிட்டு ,"வாங்க தம்பி"என வரவேற்றாள்.
யாழினிக்கு உணவு உண்ணவே முடியவில்லை. அவன் உள்ளே வந்ததும் எழுந்தவள்,அவனை முறைப்பாக பார்க்க,அவன் ஆழ்ந்த பார்வையுடன் அவளை பார்த்தபடி வந்தான்.வசீகரனின் பின்னால் வந்துகொண்டு இருந்த பூரணி,'வாங்க னு சொல்லு' என்று அபிநயம் பிடித்துக்காட்டி கொண்டிருந்தார். அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ,"வாங்க"என்று தலைகுனிந்தபடி வரவேற்றாள் யாழினி.
அவளின் அருகில் வந்தவன் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து,"நா தான் வந்துட்டேனே.உக்காந்து சாப்பிடு"என்றான். "நா என்ன இவனை வரவேற்கவா எழுந்தேன்? என எரிச்சல்பட்டவள் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள். பூரணி,"மாது குளிக்கிறான்.இப்போ வந்துடுவான். டிபன் சாப்பிடுங்க"என உபசரிக்க,"இப்போ தான் சாப்பிட்டு வந்தேன் அத்தை, காபி மட்டும் குடுங்க" என்றான். அவனது தயக்கமில்லாத அணுகுமுறையில் ஆனந்தமாக காபி போட போனார்.
அவன் முன்பு சாப்பிட தயங்கியபடி இட்லியை பிட்டு சாம்பாரில் தொட்டுக்கொண்டு இருந்தவள் கையைப் பிடித்து தன் புறம் இழுத்தவன் அவள் கையில் இருந்த இட்லியை சாப்பிட்டான். அவன் சட்டென செய்த செயலில் கண்கள் விரிய அவனை பாரத்தவளை பார்த்து கண்சிமிட்டி,"சாப்பிடு"என்றான்.
அப்போது அங்கே காபியுடன் வந்த பூரணியிடம்,"அத்தை டிபன் சூப்பர்" என்று வேறு சொல்லிவைத்தான். வசீகரனின் கையையும் அவனை முறைத்த மகளையும் பார்த்தவர் ஏதோ புரிந்தவராய் சிரித்தபடி காபியை அவனிடம் கொடுத்தார்."நீ ஏண்டி வேடிக்கை பாக்குற? சீக்கிரம் சாப்பிடு"என்றவரிடம் "போதும் மா டைம் ஆச்சு" என்று எழுந்துவிட்டாள் யாழி. வசீகரன் சிரித்தபடி,"யாழினியை நானே ஆபிஸ்ல டிராப் பண்ணிடுறேன் அத்தை "என கூறி அவளை மேலும் கோபமாக்கினான்.மாதவன் பூரணியிடம் பேசிவிட்டு யாழினியின் மறுப்பையும்,முறைப்பையும் கண்டுக்கொள்ளாமல் அவளை அழைத்துக்கொண்டு போனான்.
காரில் கிளம்பியதும் அருகில் அமர்ந்திருந்தவளிடம்,"ஜாப் எப்போ ரிசைன் பண்ண போற?"என்றான். "ரெசிக்னேஷன் குடுத்தாச்சு, நெக்ஸ்ட் வீக் ரிலீவ் ஆகிடுவேன்"என்றாள். "அதெப்படி இவ்ளோ சீக்கிரம் ரிலீவ் பண்றாங்க? நோட்டீஸ் பீரியட் இருக்குமே" என்றான். "எனக்கு எங்கேஜ்மெண்ட் பிக்ஸ் பண்ணதுமே, பேப்பர் போட்டுட்டேன்.எங்கேஜ்மெண்ட் முடிஞ்சு 2 மன்த்ல மேரேஜ், மேரேஜ் முடிஞ்சதும் ஆகாஷ் ஆபீஸ்லயே ஜாப் ட்ரை பண்ணலாம்னு அவங்க வீட்ல சொல்லி இருந்தாங்க" என்று ரோட்டை பார்த்தபடியே சொன்னவள், வசீகரனிடம் பதில் வராமல் போகவே திரும்பி பார்க்க பயந்தே போனாள். கண்ணில் கொலைவெறியுடன் வண்டியை ஒட்டிக்கொண்டு இருந்தான் அவன்.
'இவனுக்கு என்ன ஆகி தொலைத்தது? முனி பார்ட் 3 ஆ? இப்படி வண்டியை ஓட்டி எங்காவது கொண்டு போய் இடித்துவிட்டால் என்ன செய்வது ' என எண்ணியவள் சக்தியெல்லாம் ஒன்று சேர்த்து,"என்ன ஆச்சி?" என்று மெதுவாக கேட்டாள். பட்டென காரை ஓரமாக நிறுத்தியவன், அவள்புறம் கோபமாக திரும்பினான்.அவள் பயந்த முகத்தை பார்த்ததும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ,"சாரி யாழி,ஆகாஷ் கூட உனக்கு நடக்க இருந்த மேரேஜ் பற்றி பேசினதும் கொஞ்சம் கோபம் வந்துடுச்சி" என்றான். "நீங்க தான கேள்வி கேட்டிங்க, நா அதுக்கு தான் பதில் சொன்னேன். அதோட ஆகாஷ் பற்றி பேசினா உங்களுக்கு ஏன் கோபம் வருது? நீங்க குறுக்க வராம இருந்திருந்தா அவங்க பேமிலி பிளான் பண்ணபடி தான் நடந்து இருக்கும்,எல்லாத்தையும் மாத்தினது நீங்க. அவங்களுக்கு தான் உங்க மேல கோபம் வரணும் , நீங்க ஏன் கோபப்படுறீங்க? " என்றாள்.
"ஸ்டாப் இட் யாழினி"கத்தினான் அவன். "முடிஞ்சத பற்றியெல்லாம் பேசாத. இப்போ நா உன் ஹஸ்பண்ட், நீ என் வொய்ப். அதை மட்டும் பேசு. இனி ஒரு டைம் பழைய கதை பேசின, அவ்ளோ தான்"என்று கர்ஜித்தவன் காரை ஸ்டார்ட் செய்தான். தன் அலுவலகம் வரும் வரை அமைதியாக வந்தாள் யாழினி.எப்போதுமே அவள் அமைதியானவள்.கத்திபேசினால் கூட பிடிக்காது. இப்படி ஒரு கர்ஜிப்பை அவள் எங்கும் கேட்டதும் இல்லை.அதனால் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அலுவலக வாசலில் கார் நின்றதும் சுயஉணர்வு பெற்றவள் காரில் இருந்து இறங்க கார் கதவில் கை வைக்க,வசீகரன் அவள் கரத்தைப் பற்றினான். அவள் மிரண்டு போய் அவனைப் பார்க்க,அவன் ஆழ்ந்த பார்வையுடன்,"யாழி! நீ என்னை ஒரு வில்லன் மாதிரி பாக்காதடி.நீ என் மனைவி. எனக்கு மட்டும் தான் சொந்தம். உன்னை என்னால விட்டுக்கொடுக்க முடியாது. யாரோடவோ உனக்கு கல்யாணம் நடந்து இருக்கும்னு சொல்றத என்னால ஏத்துக்க முடியல.ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்"என்றான் கனிவாக. அவன் கோபம் இல்லாமல் இருப்பதே நிம்மதியாக இருக்க அமைதியாக இருந்தாள் யாழினி.
ஒரு நிமிட அமைதிக்கு பின்,"என்ன டார்லிங்? என்னை பிரியவே உனக்கு மனசு இல்ல போல!ஆபிஸ்கு கட் அடிச்சிட்டு வெளியே போலாமா?"என்றான் பழைய குறும்புடன். சட்டென அவன் தனது நிலையை மாற்றிக்கொண்டதை கண்டவள், ஆச்சரியமாக அவனைப் பார்க்க,அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.உடனே அவனை அவள் முறைக்க,அவள் முறைப்பை ரசித்தபடி இருந்தவன்,சட்டென குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.அதிர்ச்சியில் உறந்தே போனாள் யாழினி.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ்-14
"நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்''.
அதிர்ச்சியில் உறைந்து இருந்தவளை அவர்கள் இருந்த காரை கடந்து சென்ற காரின் ஹாரன் ஒலி சுயவுணர்வு பெறவைத்தது. அருகில் அமர்ந்து அவளை ரசித்து கொண்டு இருந்தவனை கண்டதும் கோபம் கொண்டவள் காரில் இருந்து இறங்க எண்ணி திரும்ப, "என்ன டார்லிங்? ஏதாவது குடுத்தா திருப்பி கொடுக்கணும்னு தெரியாதா?"என்று குறும்பாக கேட்டான்.மௌனமாக கார் கதவை திறந்தவள், அவன் புறம் திரும்பி தனது கைப்பையால் அவன் தோளில் ஒரு அடி போட்டுவிட்டு காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டாள்."ஹேய்",என்று சிரித்தபடி அவள் ஓடுவதை ஆனந்தமாக பார்த்துக்கொண்டு இருந்தான் வசீகரன்.
அலுவலகத்தில் நுழைந்தவளை லக்ஷா முகத்தில் சிரிப்போடு வரவேற்றாள். "என்னடி கார்ல வந்து இறங்குற? யாரது உன்னை கொண்டு வந்துவிட்டது? " என்றாள் குறும்பாக. யாழினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்கடி. அவர் கூட்டிட்டு வந்தார்"என்றாள் மெதுவாக. "ஓஹோ"என்று சத்தம் போட்ட லக்ஷாவை டீம் மக்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டு விசாரிக்க, அரை மணி நேரத்தில் அவள் திருமண செய்தி அலுவலகத்தில் பரப்பப்பட்டது. வசீகரன் மாப்பிள்ளை என்பது கூடுதல் தகவலானது. இடைவேளையில் கூட அனைவரும் இணைந்து இவளை கிண்டலடிக்க, ஏதோ இதமான மனநிலையில் இருந்தாள் யாழினி.
வேலை முடிந்து மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பி,லாக்கர் ரூமில் தனது போனை வாங்கிய யாழினி அதை ஆன்செய்தாள். வசீகரனின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
"ஹலோ"என்றதும், "எங்க இருக்க டார்லிங்?"என்றது வசீகரனின் குரல்.
"ஆபீஸ்ல இருக்கேன்"என்றாள்.
"இன்னும் ஒர்க் முடியலையா?எப்ப கிளம்புவ?"கேள்வி கேட்டு கடுப்பேற்றினான் அவன்.
"கிளம்பிட்டேன்" பல்லை கடித்தபடி பதில் சொன்னாள்.
" நா வெளிய தான் வெயிட் பன்றேன் வா" சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
வெளியே வந்தவளை வசீகரனின் கார் வரவேற்றது.காரின் அருகில் சென்றதும் கதவை திறந்தவன் "ஹாய் டார்லிங்"என்றான். வெளியில் நின்றபடியே "ஏதாவது முக்கியமா சொல்லனுமா? ஆபிஸ்கு வந்து இருக்கீங்க" என்றாள். "ஹோய் பேபி, உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக தான் வந்தேன். இனிமே நா தான் உன்னை டெய்லி ஆபீஸ் கூட்டிட்டு வருவேன், வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்" என்றான். "ஏனோ? உங்களுக்கு வேற வேலை இல்லையா?எனக்கு டிரைவர் வேலை பாக்க வந்து இருக்கீங்க"என்றாள் நக்கலாக.
"நிக்க கூட டைம் இல்லாத அளவுக்கு ஒர்க் இருக்கு டார்லிங், பட் மேரேஜ் முன்னாடி இருக்க எண்ஜாய்மெண்ட் மிஸ் பண்ண கூடாதுனு நானே லீவ் எடுத்துட்டேன். நீ வா நாம கிளம்பலாம், அத்தை எனக்காக ஸ்பெஷல் டிபன் பண்ணி இருக்காங்க"என்றான்.
'இவன் என்ன நாம இவனை கிண்டல் பண்ணத பற்றி கண்டுக்காம இவ்ளோ கூலா இருக்கான்? இவனை கடுப்பேத்தணுமே' என யோசித்தவள்,"எனக்கு எந்த என்ஜாய்மெண்ட்டும் தேவை இல்லை. நா பஸ்ல வீட்டுக்கு போய்க்கிறேன், நீங்க போய் உங்க அத்தை பண்ண ஸ்பெஷல் டிபனை சாப்பிடுங்க"என்றாள். அவன் பல்லை கடித்தான்.
"ஒழுங்கா நீயே கார்ல ஏறு. இல்லனா, நான் உன்னை தூக்கி கொண்டு வந்து கார்ல உக்கார வைக்கணும்னு நீ ஆசைபடுறனு முடிவு பண்ணி உன் ஆசையை நிறைவேத்துவேன்"என்று கண்சிமிட்டினான். பக்கென இருந்தது யாழினிக்கு,'இவன் செஞ்சாலும் செய்வான். கோட்டான்'என எண்ணியபடி நல்ல பிள்ளையாக தானே காரில் அமர்ந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் ஆள் அதிகமில்லாத ஓர் சாலையில் காரை ஓரமாக நிறுத்தினான். யாழினிக்கு பதட்டம் வந்தது. காலையில் அவன் செய்த செயல் நினைவுக்கு வந்து தொலைத்தது. அவனும் அவள்புறம் திரும்ப, அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்.
ஆனால் அவன் அவளை கண்டுகொள்ளாமல் பின்சீட்டில் இருந்து ஒரு பையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.'என்ன' என்பது போல் அவனை பார்க்க ,"எடுத்து பாரு"என்றான். பையின் உள்ளே இரண்டு கவரில் அவர்களின் திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. கண்ணன் ராதா படம் போட்ட பெரிய அழைப்பிதழும், அன்றில் பறவை போட்ட சிறிய அழைப்பிதழும் இருந்தது. "உங்க வீட்டுக்கு குடுக்க இந்த இன்விடேஷன் அம்மா குடுத்துவிட்டாங்க. மத்தவங்க கிட்ட காட்டுறதுக்கு முன்னாடி உன்கிட்ட காட்டனும்னு நெனச்சேன்.உனக்கு பிடிச்சிருக்கா?" என்றான்.
அமைதியாக அழைப்பிதழை பார்த்தவள்,"எனக்கு பிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. இந்த மேரேஜ்ல எல்லாமே உங்க இஷ்டப்படி தான் நடக்குது.உங்களுக்கு பிடிச்சிருக்கானு மட்டும் பாருங்க போதும்", என்றாள் மெதுவான ஆனால் உறுதியான குரலில்.
அவளை கூர்மையாக பார்த்தவன்,"யாழி, எனக்கு நீ வேணும். அதுக்காக தான் நா உன்னை கேக்காம தாலி கட்டினேன், அதுக்காக தான் உன்னை எல்லாத்துக்கும் போர்ஸ் பன்றேன்.அது மட்டும் தான் என் விருப்பம்" என்றவன்,அமைதியாக காரை கிளம்பினான்.
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ் 15
"கண்கள் உறங்கவொரு காரணமுண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல்லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப்புறத்திலெனைக் காணமுடியென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரியமுண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்டலின்றியே?"
வீடுவந்து சேரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. பூரணியிடம் அழைப்பிதழை தந்து விட்டு கிளம்பும்போது அவன் யாழனியை திரும்பியும் பார்க்கவில்லை. யாழினிக்கு அவன் செயலால் கோபம் வந்தது. "அவன் மேல தான் எல்லா தப்பும் இருக்கு. சொன்னா மட்டும் கோபம் வருது. துரை போகும் போது சொல்லிட்டு கூட போக மாட்டாரோ?மூஞ்சியை பாரு,கோட்டான்",என்று திட்டித்தீர்த்தாள்.
வசீகரனோ அவன் அறையில் அவள் புகைப்படத்தின் முன் நின்று புலம்பிக்கொண்டு இருந்தான். "ஏன்டி இப்படி என்னை பாடுப்படுத்துற? நான் என்னை பண்ணாலும் என் மேல இருக்க கோபம் உனக்கு போகாதா?"என்று கேட்டுக்கொண்டு இருந்தான்.
"இந்த வசீகரன் எப்பவும் எதுலயும் தோற்க மாட்டான். உன் மனசையும் நா ஜெயிப்பேன் மை டார்லிங்" என்று கூறி அந்த போட்டோக்கு ஒரு முத்தம் வைத்தான். உடனே தன் போனை எடுத்து யாழினிக்கு அழைத்தான்.செல்போனில் வசீகரனின் அழைப்பை பார்த்ததும் யாழினிக்கு கோபம் வந்தது. "சொல்லாமல் போனவன் இப்போ மட்டும் எதுக்கு கூப்பிடனும்? போடா டேய்! உன் இஷ்டத்துக்கு நா ஆள் இல்லை" என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.
ஒருமுறை முழுதாக ஒலியெழுப்பி முடித்தபின் அமைதியானது அவளது போன். யாழினி கலவரமானாள். 'அச்சச்சோ நா போன் எடுக்கலனா, இவன் அம்மாக்கு கால் பண்ணுவானே!யாழினி இன்னிக்கு உனக்கு அம்மாகிட்ட நல்ல பாராட்டு கிடைக்க போகுது' என எண்ணினாள். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் அவளை மறுபடியும் அழைத்தான் வசீ.'அப்பாடா, பிழைச்சேன்' என எண்ணியவள் உடனே போனை எடுத்து,"ஹலோ"என்றாள்.
"என்ன டார்லிங்,என் மேல கோபமா?" இதமான குரலில் கேட்டான் வசீ. அவனது இந்த அன்பான குரல் அவளுக்கு ஏதோ ஓர் உணர்வலையை எழுப்பியது. "சாரி யாழி. நா ஏதோ டென்சன்ல வந்துட்டேன்"என்றான். இது அவளுக்கு பிடித்து இருந்தது. "எனக்கு எதுக்கு கோபம் வருது?எதையாவது உளராம சொல்ல வந்ததை சொல்லுங்க"என்றாள்.
"ஓ அப்போ என் டார்லிங்க்கு என் மேல கோபம் இல்லையா? சோ ஸ்வீட். இப்படி ஒரு ஒய்ப் கிடைக்க நா குடுத்து வச்சிருக்கேன்"என்று அதற்கும் கொஞ்சினான். 'இவனை' என்று பல்லை கடித்தவள் "எனக்கு தூக்கம் வருது" என்றாள். "ஓகே செல்லம். நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. அப்போ தான் மேரேஜ் அன்னிக்கு பிரஷ்ஷா இருக்க முடியும். குட் நைட் டார்லிங்" என்று போனை அணைத்தான்.
அதற்கு பின் நாட்கள் வேகமாக நகரத்தொடங்கியது. திருமண வேலைகள் பரபரப்பாக நகர்ந்தது.யாழினி தனது அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு அழைப்பிதழ் தந்தாள்.
அமைதியான பெண்ணாக இருந்தாலும் அவளின் மரியாதையான நடத்தையாலும்,திறமையான வேலையாலும்,உதவும் குணத்தாலும் யாழினிக்கு அலுவலகத்தில் நல்ல பெயர். அவள் அலுவலகத்தில் இருந்து செல்வதை எண்ணி வருந்தினாலும் அவளின் வளமான திருமண வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியுடன் விடைத்தந்தனர்.
வேலையை விட்டு நின்றதும் யாழினிக்கு நேரம் வேகமாக ஓட தொடங்கியது.நண்பர்களுக்கு அழைப்பிதழ் தருவது, போனில் அனைவரையும் அழைப்பது,தைத்த உடைகளை சரிப்பார்ப்பது, பொருத்தமான நகைகளை தேர்வு செய்வது, அழகுநிலையத்திற்கு செல்வது என நாட்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடியது.
தினமும் வசீகரனுடன் மெசேஜில் சண்டைப் போட்டுக்கொண்டே இருந்தாலும் நாளை பெண் அழைப்பு என்ற நிலையில் தான் அவளுக்கு ஒன்று நினைவு வந்தது. வசீகரன் ஏன் அவளை திருமணம் செய்தான்? என்ற கேள்வியை அவனிடம் அவள் கேட்கவே இல்லையே. உடனே அவனுக்கு அழைத்தாள்.
உடனே எடுத்தவன்,"என்ன டார்லிங்? நீயாவே கால் பண்ணி இருக்க. என் ஞாபகம் வந்துடுச்சா?" உற்சாகமாக கேட்டான்."அதெல்லாம் ஒன்னும் இல்ல. உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்" என்றாள்.
"கேளுடா செல்லம். ஒன்னு என்ன நூறு கூட கேளு"என்றான் கொஞ்சலாக.
"அது வந்து.... நீங்க ஏன் என்ன மேரேஜ் பண்ணிங்க?"தயக்கத்தோடு கேட்டாள். சிறிதுநேரம் எதிர்முனையில் அமைதி. இவள் மீண்டும் "ஹலோ"என்றதும், "ஹ்ம்ம் சொல்லு"என்றான். இப்போது அவன் குரலில் உற்சாகம் இல்லை.
"நா சொல்லனுமா? நீங்க தான் சொல்லணும். தூங்கிட்டீங்களா?"கோபமாக அதட்டினாள்.அவன் லேசாக சிரித்தான். "என்னை இந்த மாதிரி மிரட்டுறதுக்கு ஆளே இல்ல.அதான் உன்னை மேரேஜ் பண்ணேன்.ஓகேவா டார்லிங்?" என்றவனிடம் மீண்டும் உற்சாகம் வந்து இருந்தது.யாழினி பல்லை கடித்தாள்.
"ஓகே மை டார்லிங். உன் ஹஸ்பண்ட் இப்போ மேரேஜ் ஒர்க்ல பிஸியா இருக்கான்.நைட் பேசலாம்"என்று வைத்துவிட்டான். அவளுக்கு இப்போது இன்னும் குழப்பமாக இருந்தது. 'ஏன் இவன் இப்படி பதில் சொல்றான். ஏதோ என்கிட்ட மறைக்கிறான். இல்ல இல்ல எல்லாமே மறைக்கிறான்.நா சீக்கிரத்தில் கண்டு பிடிக்கிறேன்' என்று உறுதி எடுத்தாள்.
பிறகு அதை பற்றி நினைக்கவே நேரம் இல்லை. காலை மாலை நலங்கு,உறவு கூட்டம் வருதல் என்று அவள் நேரம் ஓடியது. அதோடு மணப்பெண்களுக்கே உரிய பயம்,கவலை வேறு.
என்னதான் திட்டிக்கொண்டே இருந்தாலும் பூரணி மகளை கண்ணுக்குள் வைத்து தான் வளர்த்தார். உறவுகள் வீட்டில் கூட மகளை தங்கவிட்டதில்லை,இயல்பிலேயே அமைதியான யாழினி யாரிடமும் கலந்து பேசியது இல்லை.தாயை ஒட்டிக்கொண்டே இருப்பாள்.
இப்போது இதுவரை பார்த்திராத ஒரு வீட்டுக்கு போய்,அதை தன் வீடாக ஏற்க வேண்டும். என்ன தான் பார்வதியும்,வந்தனாவும் போனில் தினமும் பேசினாலும் அவர்கள் அவளின் பெற்றோரோ,அண்ணனோ இல்லையே. மனதில் இனம் புரியாத கவலையும் தடுமாற்றமும் வந்தது.
இன்று பெண் அழைப்பு, மாலை அவள் இந்த வீட்டை விட்டு கிளம்பவேண்டும்.தன் சிந்தனையில் மூழ்கி இருந்தவளை மாதவனின் குரல் அழைத்தது."யாழிமா ஈவினிங் மாப்பிள்ளை கார் அனுப்புகிறாராம்.உனக்கு வேண்டிய திங்க்ஸ் எல்லாம் சரியா இருக்கானு பாத்துக்கோ.அப்புறம் அவசரத்தில் எதுவும் மிஸ் ஆகிட கூடாது",என்று படபடவென கூறிக்கொண்டு இருந்தவனை,"அண்ணா"என்று அழைத்தபடி அணைத்துக்கொண்டாள் யாழினி. அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.அவளது உணர்வை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
தங்கையின் முகத்தை நிமிர்த்திய மாதவன்,"யாழி,அழக்கூடாது செல்லம்.நீ எங்க போக போற? இங்க இருந்து 30 மினிட்ஸ் டிராவல் அவ்ளோதான்,அங்க உனக்கு எந்த கஷ்டமும் இருக்காதுடா.அத்தையும், மாப்பிள்ளையும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க" என்றான். "ஆனா அங்க நீ இருக்க மாட்டியே அண்ணா!",என்று கதறியவளை அணைத்து கொண்டு தானும் கண்ணீர் விட்டான் அந்த அன்பு அண்ணன்.
சிறிது நேரத்திற்கு பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்ட மாதவன்,"ஹேய் வாலு! இவ்ளோ நாள் மிசஸ்.பூரணியை உனக்கு மட்டும் சேவை பண்ண வச்சிட்டு இருந்த, அது நடக்காதுனு அழுகையா? இனியாவது எனக்கும் என் தாய் ஏதாவது செய்யட்டும்.நீ போய் உன் மாமியாரையும் புருஷனையும் இனி டார்ச்சர் பண்ணு"என்று தங்கையை கிண்டலடித்தான்.
"யாரு? அம்மா எனக்கு சேவை பண்ணாங்களா? மாது மாது னு உன்னை தான் கொஞ்சினாங்க. 'யாழி அண்ணனுக்கு காபி குடு,கீ எடுத்து குடு,ட்ரெஸ் அயர்ன் பண்ணி குடு' னு என்னையும் சேர்த்து உனக்கு வேலை செய்ய வச்சாங்க. நீ என்னை சொல்றியா?"என செல்ல சண்டையிட்டாள் .
அண்ணனும் தங்கையும் தங்களை தாங்களே தேற்றிக்கொண்டு திருமணத்திற்கு யாழினிக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தனர்.
மாலை அழகு நிலைய பெண்கள் வந்தனர்.அழகிய டொமேட்டோ நிற டிசைனர் சேலையில் யாழனியை அலங்கரித்தனர். யாழினியின் தோழி லக்ஷாவும் வீட்டுக்கே வந்துவிட்டாள். பூஜை அறையில் சாமி கும்பிட்டு பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வீட்டிலிருந்து காரில் கிளம்பினாள் யாழினி.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ் 16
"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக்
கனாக் கண்டேன் தோழீ நான்"

திருமண மண்டபத்திற்கு வரும் வழியெல்லாம் லக்ஷா தொணத்தொணத்துக் கொண்டே வந்தாள். யாழினியின் மனம் அவள் பேச்சில் லயிக்கவில்லை.ஏதோ ஒரு அலைப்புறுதல் அவளிடம். திருமண மண்டபத்தில் கார் நின்றதும் மனம் படபடவென அடித்துக் கொண்டது. அனைவரின் பார்வையும் அவள் மீதே இருந்தது வேறு அவளுக்கு அசவுகரியமாக இருந்தது.
கேமராக்களின் ஒளி வெள்ளத்தில் வந்தவளை ஆரத்தி எடுத்து அழைத்து சென்றனர். உறவினர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். பின் திருமண வரவேற்பு நடந்தது.ரோஸ்கோல்டு நிற லெஹங்காவில் யாழினிமேடைக்கு வந்தாள். அதே நிற ஷெர்வாணியில் வசீகரனும் வசீகரமாக அங்கே நின்றிருந்தான்.
அவனை பார்த்த யாழினி ஒரு நிமிடம் தன்னை மறந்து நின்றிருந்தாள். ஆனால் அந்த வசீகரமானவனோ தன் மனைவி மீது இருந்து கண்களை விலக்காமல் மயங்கி போய் நின்று இருந்தான். அழகான பார்பி பொம்மை போல் ஜொலிக்கும் பெண்ணவளை கண்களில் காதலை நிரப்பி பார்த்தான்.
"சைட்டடிச்சி முடிச்சிட்டீங்கனா, ஸ்டேஜ்க்கு போய் சென்டர்ல நிக்குறியாடி?" என்ற லக்ஷாவின் குரலில் மயக்கத்தில் இருந்து வெளிவந்தவள், மேடையில் வசீகரனுக்கு அருகில் சென்று நின்றாள். அருகில் நின்ற யாழினியின் கையைப் பிடித்தவன், அவள் அவனை பார்த்ததும் கண்சிமிட்டினான். மேடையில் நின்றுக்கொண்டு அவன் செய்த செயலைக் கண்டு யாழினி முறைத்தாள். அவன் எப்போதும் போல கண்டுக்கொள்ளாமல் போட்டோகிராபரின் சொல்படி போஸ் கொடுக்க தொடங்கினான்.
யாழினிக்கு என்னவோ அந்த போட்டோ கிராபருக்கு வசீ அதிக பணம் கொடுத்து இருப்பானோ? என்று தோன்றியது. ஏனெனில் வசீகரனின் மனதிற்கு ஏற்ப, "சார கொஞ்சம் ரொமேன்டிக்கா பாருங்க மேம்,மேல கை போட்டு நில்லுங்க,சார் இன்னும் கொஞ்சம் க்ளோசா வாங்க,இந்த பூங்கொத்தை மேம்கு குடுங்க" என்று யாழினியைக் கடுப்பேத்திக் கொண்டே இருந்தார்.
விருந்தினர்கள் மேடைக்கு வர தொடங்கவும் யாழினி விடுதலை பெற்று அவர்களை வரவேற்றாள். வசீகரன் அவன் உறவுகளையும் தொழில்முறை நட்புகளையும் ஆசையாக யாழினிக்கு அறிமுகம் செய்தான். யாழினியின் உறவுகளை ஆர்வமாக தெரிந்துக்கொண்டான். இது யாழினிக்கு பிடித்து இருந்தது.
அதோடு யாழினி ஒன்றை கவனித்தாள். அது இத்தனை நேரம் அவளுக்கு இருந்த பதற்றம் அவனருகில் இல்லை. ஏதோ ஒரு தைரியம் மனதில் வந்து இருந்தது.
உறவுகள் போன பிறகு நட்புகள் மேடை ஏறினார்கள். யாழினியை விட வசீகரனுக்கு தான் அதிமாக நட்புகள் இருந்தது. யாழினியின் தோழி,"ஹேய் யாழி, வசீ சார் இவ்ளோ ஹேண்ட்சமா இருப்பார்னு நா எக்ஸ்பெக்ட் பண்ணலடி. அண்ணானு கூப்பிட மனசே வரல",என்று யாழினியின் முறைப்பை வாங்கினாள். இருப்பினும் வசீகரனிடம் கைக்கொடுக்கும் போது,"சார் நீங்க ரொம்ப ஹேண்ட்சமா இருக்கீங்க." என்று சொல்லியும் வைத்தாள். அதற்கு லேசாக சிரித்த வசீகரன்,"அதை உன் அண்ணிகிட்ட சொல்லுமா.என்னை கண்டுக்கவே மாட்றா பாரு" என யாழனியை பார்த்து கொண்டே லக்ஷாவிடம் சொன்னான். லக்ஷா அதிர்ச்சி பார்வை பார்க்க, யாழினி அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள். அவளது சிரிப்பை பார்த்த வசீகரன் உறைந்து நின்றிருந்தான்.
வசீயின் நட்புகள் வந்து அவனை தன்னிலைக்கு கொண்டு வந்தனர்.கோகுலும் யஷ்வந்தும் மேடை ஏறியதும் போலீசிடம் மாட்டிய திருடர்களாக விழித்துக்கொண்டு நின்றனர்.வசீ அவர்களை பாசமாக அணைத்துக் கொண்டான். "யாழினி இவங்க யஷ்வந்,கோகுல். நம்ம மேரேஜ் நடக்க எனக்கு ஹெல்ப் பண்ணவங்க" என்று சொன்னதும் யாழினி அவர்கள் இருவரையும் முறைத்தாள். யஷ்வந்தை அவளுக்கு நியாயம் வந்தது. கோவிலில் மாதவன் வசீகரனை அடிக்க பாய்ந்தபோது தடுத்தவன் என்று தெரிந்தது.'நீங்க தான் அந்த கூட்டு களவாணிகளா?'என்று எண்ணியபடி அவள் நிற்க, திருதிருவென விழித்தபடி,"வணக்கம் சிஸ்டர்"என்றனர் இருவரும்.
விருந்தோம்பல் நிமித்தம் லேசாக சிரித்தவள் கைகூப்பினாள். போட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு உடனே மேடையில் இருந்து ஓடிவிட்டனர் இருவரும். ஆனால் மாதவனுக்கு இணையாக அங்கிருந்த அனைவரையும் அவர்கள் இருவரும் தான் கவனித்துக் கொண்டனர்.இந்த திருமண ஏற்பாட்டில் மாதவனின் நண்பர்களாகவும் மாறி இருந்தனர்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்தபோது நிறைவாக இருந்தது யாழினிக்கு. வரவேற்பு முடிந்து சாப்பிட்டுவிட்டு,அனைவரும் பேசிவிட்டு தூங்க வெகுநேரம் ஆனது.அன்னையை கட்டிப்பிடித்து கொண்டு உறங்கினாள் யாழினி.
விடியற்காலையில் யாழினியை பூரணி எழுப்ப,"மா ஒரு 10 மினிட்ஸ் தூங்கிக்கிறேன் பிளீஸ்" என்று கொஞ்சினாள். "அம்மா யாழினி, இன்னும் 10 நிமிஷத்துல கூரைப்புடவை வாங்க மேடைக்கு போகணும். நாளைக்கு உன் மாமியார் வீட்டுல போய் தூங்கிக்கோ. இப்போ எழுந்துவா புண்ணியவதி" என்ற தாயின் குரலில் எழுந்தவளுக்கு நிகழ்காலம் புரிந்தது. யாழினிக்கு வெட்கமாகிப் போனது. சிரித்தபடியே எழுந்தாள்.
சாதாரணமாக ஒரு சேலை அணிந்து,மேடைக்கு சென்று நலங்கு முடிந்ததும் கூரைப்பட்டு பெற்று வந்தாள்.மஞ்சள் பூசி அளவான ஒப்பனையில் மெரூன் வண்ண கூரைப்பட்டு உடுத்தி தயாரானவளை மணமேடைக்கு அழைத்து செல்ல வந்தனா வந்தாள். தலைகுனிந்தபடி மேடை ஏறியவளை,"கொஞ்சம் ஸ்டேஜையும் பாரேன் மா. நீ பாக்குற தரையை என் தம்பி பொறாமையா பாத்துட்டு இருக்கான்"என்ற வந்தனாவின் வற்புறுத்தலில் லேசாக நிமிர்ந்து பார்க்க,வெண்பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தவனை கண்டவளுக்கு சுற்றமே மறந்து போனது. அவன் விழிகள் பிரகாசித்தது. அவன் அருகில் அமர்ந்த போது ஒரு படபடப்பு வந்தது. ஆனால் ஏனென்று காரணம் தெரியாமல் அதை அவள் ரசித்தாள்.
ஏதேதோ மந்திரங்கள் சொல்லப்பட்டன. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.'இதெல்லாம் திருமணம் சம்மந்தப்பட்ட சத்தியங்கள் தானே.அரைகுறையாக புரியாமல் உளறுகிறோமே, வேதம் படத்தில் சொல்வது போல் தமிழில் சொல்லலாம்.'என எண்ணிக்கொண்டவள், தன் இஷ்ட தெய்வம் கண்ணனிடம் தனது வேண்டுதல்களை வைத்தாள்.
தாலியை பெரியோர் ஆசீர்வாதம் செய்த பின், இரு தாய்மார்களும் தங்கள் கரங்களால் தாலியை எடுத்துதர அதனை வாங்கிய வசீகரன் யாழினியின் புறம் சாய்ந்து,"டார்லிங் , என் ஒய்ப் ஆகுறதுக்கு உனக்கு சம்மதமா?" என்றான். 'எப்போ வந்து இந்த கேள்வியை கேக்குறான் பாரு.இல்லைனு சொல்ல மாட்டேன்னு தைரியம்' என பல்லைக் கடித்தவள்,அவன் இன்னும் தாலியை கையில் வைத்தபடி காத்திருப்பதை உணர்ந்து,"இனிமே தான் ஆகப்போறேனா?"என்றாள். கண்ணில் ஓர் மின்னலுடன் பரவசமாக தாலியை தன் மனம் கவர்ந்தவளுக்கு கட்டினான்.
இன்று அவன் கரங்கள் அவளை உரிமையாக உரசின. தனக்கு தாலி அணிவிக்கப்படுவதைபார்த்தபடி கைகூப்பியபடி அதனை மனப்பூர்வமாக ஏற்றாள் யாழினி.
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ்-17
"மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால் -
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்"

யாழினியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மங்கல்யத்தை அணிவித்த வசீகரன் தன் அழகு மனைவியின் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் காதலோடு முத்தமிட்டான். விழியுயர்த்தி கணவனை கண்ட யாழினியின் கண்கள் வியப்பில் விரிந்தன. அவனது விழிகளும் கலங்கி இருந்தது. எதையோ சாதித்த திருப்தி அவன் முகத்தில்.
அய்யர் சொல்படி யாழினியை வலக்கையால் பின்புறமிருந்து அணைத்தபடி மாங்கல்யத்தில், நெற்றியில், வகிட்டில் குங்குமமிட்டான் வசீகரன். இருவரும் மாலை மாற்றியதும், வசீயின் மேல்துண்டில் யாழியின் சேலை நுனியை முடிச்சிட, இருவரும் கரங்களை பற்றியபடி அக்னியை வலம் வந்தனர், ஏழடி எடுத்து வைத்து யாழினியின் காலை பற்றி அம்மியில் வைத்து மெட்டி அணிவித்த வசீ யாழினியின் காலை வருடினான். அவள் அவனை முறைக்க, அவனோ கண்சிமிட்டினான்.
மாதவன் வசீகரனுக்கு மோதிரம் போட்டான்.யாழினியின் சித்தப்பா மகன் வசீகரனுக்கு வலதுகால் விரலில் மெட்டி அணிவித்தான். பின் குடத்தில் மஞ்சள் நீரில் போடப்பட்ட மோதிரத்தை மணமக்களை எடுக்க சொல்ல, வசீகரன் குடத்திற்குள் மோதிரத்தை தேடாமல் யாழினியின் விரல்களை தேடினான். அதை உணர்ந்த யாழி, அவனை நறுக்கென கிள்ளிவிட்டு மூன்று முறையும் மோதிரத்தைக் கைப்பற்றினாள்.
"நீயெல்லாம் ஸ்போர்ட்ஸ் மேனா டா? சிஸ்டர் 3 முறை வின் பண்ணிட்டாங்க பாரு,லைப் முழுக்க அவங்க டாமிநேஷன் தான்" என யஸ்வந் கிண்டலடிக்க,"அதான்டா எனக்கும் வேணும்",என பதில் சொல்லி அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தினான்.
அருந்ததி நட்சத்திரத்தைப் பார்த்து விட்டு வந்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினர். விருந்தினர்கள் மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றதும், மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப்பட்டது. பின் உணவு பரிமாறப்பட்டது. இருவரையும் ஒருவருக்கு ஒருவர் ஊட்ட சொல்ல, வசீகரன் இனிப்பை கொஞ்சமாக யாழிக்கு ஊட்டினான். யாழினியோ ஒரு முழு லட்டையும் அவனது வாய்க்குள் திணித்தாள். லட்டை கஷ்டப்பட்டு விழுங்கியவனை சுற்றி இருந்து பார்த்தவர்கள் சிரித்தனர்.
உணவு முடிந்ததும் வசீகரன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.ஏதோ தயக்கமும் தவிப்புமாக யாழினியும், உற்சாகமாக வசீகரனும் காரில் பயணப்பட்டனர். வீட்டை நெருங்கியதும்,"நம்ம வீட்டுக்கு வந்தாச்சு யாழினி", என்றான் வசீகரன். நிமிர்ந்து பார்த்த யாழினி விழி விரித்தாள். பிரம்மாண்டமான அந்த வீடு அவளை மிரட்டியது. படங்களின் பார்த்த திரில்லர் கதைகள் நினைவுக்கு வந்தது. பணக்கார வீட்டிற்கு மருமகளாக போகும் பெண்களை வீட்டுக்குள் வைத்து கொடுமை படுத்துவதும் வேலை வாங்குவதும் கண்ணுக்கு முன் தோன்றியது.
உடனே பார்வதியின் முகம் தோன்றி அந்த நினைவுகளை அழித்தது. இப்போது அந்த வீட்டின் அழகை அவள் ரசித்தாள். வசீகரனின் தாய் ஆரத்தி எடுத்தார். அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் தளும்பியது. ஆரத்தி தட்டை யாரோ வாங்கி செல்ல , மருமகளின் நெற்றியில் முத்தமிட்டு உள்ளே வரவேற்றார்.
அனிச்சையாக வலது காலை வைத்து உள்ளே சென்றாள் யாழினி. பூஜை அறையில் இருந்த கிருஷ்ணர் சிலையைப் பார்த்தவளுக்கு உடல் சிலிர்த்தது.விளக்கு ஏற்றி,"உங்கள் விருப்பத்திற்கு கட்டுப்பட்டு நான் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை இது.எனக்கு சரியான வழி காட்டுங்கள்"என பிரார்த்தனை செய்தாள். அன்றே சாந்திமுகூர்த்தம் குறித்து இருந்ததால்,யாழியின் வீட்டுக்கு சென்று தாய்வீட்டு மண் மிதித்து கிளம்பினர்.
மாதவன் கண்கலங்கினான்.இனி தன் மகள் விருந்தாளியாக தான் இங்கு வருவாள் என நினைத்த பூரணி கண்ணீர் விட்டார். யாழினி தாயிடம்,"அம்மா, அழாதீங்க. உங்க கண்ணீர் பாத்தா,எனக்கு அங்கே போகவே மனசு வராது. நா இங்கேயே இருந்து விடவா?" என அவரை இயல்பாக்க கேட்க,அவரோ "லூசு மாதிரி பேசாத.உளராம கிளம்பு.நாங்க சாயங்காலம் அங்க வருவோம்" என்று அவளை அனுப்பி வைத்தார்.
வசீகரன் அருகில் இருந்த ஆதவற்றோர் இல்லத்தில் அன்று உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தான். அங்கு சென்று எல்லாரிடமும் ஆசீர்வாதம் பெற்று பின் வசீ வீட்டுக்கு சென்றனர். நிறைவான மனதுடன் வீடு வந்தனர்.
சிறிது நேர ஓய்வுக்கு பின் மாலையில் யாழனியை உணவு மேஜைக்கு அழைத்துப் போன வந்தனா அவளை சாப்பிட சொன்னாள். வசீகரனையும் அங்கு சாப்பிட அழைத்து இருந்தனர். தட்டில் பரிமாறப்பட்ட உணவை கண்டதும்,தாயின் நினைவு வந்தது யாழினிக்கு. கண்கள் கலங்க,"எனக்கு பசிக்கல அண்ணி"என்றாள். வசீகரன்,"நானும் இவளும் ஒண்ணா தான் சாப்பிட்டோம். பட் எனக்கு பசிக்குது. இவளுக்கு பசிக்கல. ஆச்சர்யமா இருக்குல்ல?"என்று வந்தனாவை பார்த்து கேட்டான். பல்லை கடித்தாள் யாழினி.மீண்டும் " எனிஹவ், என் வொய்ப் சாப்பிடாம நா சாப்பிட மாட்டேன். சோ இதையும் எடுத்து வச்சிடுக்கா"என்றான். எல்லாரும் யாழனியை பார்க்க ,அவள் தனக்கு பரிமாறப்பட்ட தட்டை தன்னை நோக்கி இழுத்தாள். வசீகரனின் தட்டை பார்த்துவிட்டு, அவனை பார்த்தாள். 'இப்போ தின்ன போறியா? இல்லையா?' என்ற கேள்வி அதில் இருக்க,சின்ன சிரிப்புடன் தனது உணவை உண்ண தொடங்கினான் வசீ.
சாப்பிட்டு உணவின் சுவையை பாராட்டிவிட்டு எழுந்த யாழனியை அழைத்து சென்று அலங்காரம் செய்ய தொடங்கினர். யாழினியின் தாயும் உறவு பெண்களும் வந்திருந்தனர்.
வெங்கட்டும் வசீகரனின் நண்பர்களும் முதலிரவு அறையை அலங்கரித்தனர். வெங்கட் ஒருவாரம் முன்பு தான் சென்னை வந்தான். தனது மனைவி வந்தனா உபயத்தில் அனைத்தையும் அறிந்து இருந்தவன் யாழினியிடம் அன்புடன் பேசினான். வசீகரனை அவன் அறைக்கு அழைத்து சென்றவன்,"மச்சான்,என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.நீ தான் பத்திரமா பார்த்துக்கனும்"என்று கிண்டலடித்தான்.'அவள் என் உயிர்',என எண்ணிக்கொண்டவன்,"கொஞ்சம் சீக்கிரமா ஒப்படைங்க மாமா, ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்று அவனையே மிரள வைத்தான்.
அவன் தோளை பற்றி அணைத்து,"ஆல் தி பெஸ்ட் மச்சான்"என்று விட்டு சிரித்தபடி சென்றான் வெங்கட். யாழினியின் வரவுக்காக கண்ணில் ஆவலுடன் காத்திருந்தான் வசீ.
அலங்காரம் முடிந்த பின் தன் மகளிடம் பேசிய பூரணி,"மாப்பிள்ளை கிட்ட ஏதும் வம்பு வளர்க்காத, அவரை டென்சன் பண்ணாத"என்றார். அவரை நிமிர்ந்து பார்த்த யாழினி,"என் மேல என்ன ஒரு நம்பிக்கை!" என்று கிண்டலாக உதட்டை பிதுக்கினாள். சிரித்தபடி மகளின் நெற்றியில் முத்தமிட்டார். பார்வதியும் ஆசீர்வதித்து அனுப்பினார். பாலுடன் அவளை வந்தனா மாடியில் இருந்த வசீகரன் அறை வாசல் வரை அழைத்து போனாள்."உன் ரூமுக்கு முதல் முறை போற. வசீ உன் மேல செம்ம லவ்வோட இருக்கான் . அதை மனசுல வச்சிக்கிட்டு உள்ளே போ.எல்லாம் பெஸ்டா இருக்கும்" என கூறி அனுப்பினாள்.
அறைக்கதவை திறந்து உள்ளே போன யாழினி மிரண்டாள். அது ஒரு சிறிய அறை. அங்கு யாருமே இல்லை.அந்த அறையின் முடிவில் இருந்த மற்றொரு கதவை திறந்து உள்ளே போனாள். அது ஒரு பெரிய அறை,கட்டிலின் அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த வசீ எழுந்து வேகமாக யாழினியின் அருகில் வந்தான். விளக்கொளியில் தேவதையாக நின்றிருந்த மனைவியை ஆர்வமாக பார்த்தவன்,அவள் முன் மண்டியிட்டு இரு கரங்களையும் விரித்து,"வெல்கம் டு அவர் ரூம் டார்லிங்"என்றான். யாழினி பல்லை கடித்தாள். அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்று பாலை டீப்பாய் மீது வைத்துவிட்டு, சோபாவில் அமர்ந்தவள் தனது நகைகளை கழற்ற தொடங்கினாள். வசீகரனுக்கு இந்த உதாசீனத்தால் கோபம் வந்தது. எழுந்து அவள் முன் வந்து நின்றவன், அவள் கையைப் பற்றி எழுப்பினான்.அவள் கன்னத்தை அழுந்த பற்றியவன்,"என்னடி திமிரா? ஆசையா வெல்கம் பண்றேன்,அவ்ளோ அலட்சியமா வர? ஒரு ஸ்மைல் பண்ண கூட மாட்டியா?" என்று கேட்டான்.
அவன் கண்கள் சிவந்து இருந்தது.ஏக்கமா, ஏமாற்றமா , அவமானமா, கோபமா என இனம் பிரிக்க முடியாத உணர்வு அவனிடம். அவன் கையின் அழுத்தத்தால் கண் கலங்கியது யாழினிக்கு. அவள் கண்களை பார்த்தவன் கையை எடுத்தான். " ஏண்டி நீ என்னை புரிஞ்சிக்கவே மாட்ற?"ஆதங்கமாக கேட்டான்.அவனை நிமிர்ந்து பார்த்த யாழினி, "நீங்க என்னை புரிஞ்சிக்கிட்டிங்களா?"என்றாள். வசீகரன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
"இங்க பாருங்க மிஸ்டர்.வசீகரன், எனக்கு இது 'வேற வழி இல்லாம' நடந்த கல்யாணம். நா முழு நம்பிக்கையோட இந்த மேரேஜ்கு ஒத்துக்கல. அது உங்களுக்கும் தெரிஞ்சி இருக்கும்.என்னால உங்களோட ஹாப்பியா லைப் ஸ்டார்ட் பண்ண முடியாது.எல்லாரோட மேரேஜ் மாதிரியும் நார்மலா நம்ம மேரேஜ் நடக்கல. சோ நார்மல் லைப்பை நீங்க எதிர்பார்க்க முடியாது" என்றாள் நிமிர்வாக.
அவளை பார்த்துக்கொண்டே இருந்தவன் லேசாக சிரித்தான்."என் வொய்ப் இவ்ளோ நெறய பேசுவாளா? வாவ்! எவ்ளோ அழகா பேசுரடி? நீ ரொம்ப கொய்ட்னு மச்சான் சொன்னான். பட் பரவால்ல, நல்ல தெளிவா பேசுற"
"பாருங்க மிசஸ்.வசீகரன், உங்க ஹஸ்பண்ட் நார்மல் மேன் கிடையாது. ரொம்ப ஸ்பெஷல்.சோ நம்ம மேரேஜ் கூட டிபரெண்ட்டா நடந்துச்சு. இன்னிக்கே நம்ம மேரேஜ் லைப் ஸ்டார்ட் பண்ணனும்னு நா சொல்லல. பட் லவ் லைப் ஸ்டார்ட் பண்ணலாமே. உனக்கு பிடுச்சி நடந்தாலும், பிடிக்காம நடந்தாலும் நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் தான். அதை யாராலயும் மாத்த முடியாது . சோ ஓவரா யோசிக்காம லவ் பண்ண ரெடியா இரு டார்லிங்." என்றான்.
"நீ சின்ன பொண்ணு லவ்ல உனக்கு தெரியாததெல்லாம் என்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம், இல்லாட்டி நானே சொல்லி தரேன்.டோன்ட் ஒரி"என்றான் கூலாக.
யாழினி அவனை முறைத்தாள்.'இவன் அடங்கவே மாட்டான் போலயே, இவனை வெறுப்பேத்தணுமே' என எண்ணியவள்,"எனக்கு தூக்கம் வருது, நீங்க அப்படி தனியா போய் பேசுறீங்களா?"என்றாள் அப்பாவி பாவத்துடன். அவள் நினைத்தது போல் அவன் முறைத்தான். கோபத்தோடு தலையை அழுந்த கோதியவன் அங்கிருந்து நகர்ந்து ஜன்னலோரம் போய் நின்றான்.
'அது!! யாருக்கிட்ட?பெரிய இவன் மாதிரி டைலாக் பேசறான்.இவன் நெனச்சா கல்யாணம் பண்ணுவான், ரொமேன்ஸ் பண்ணுவான்,லவ் பண்ணலாம்னு சொல்லுவான். அதையெல்லாம் நா கேட்டுக்கணுமா? போடா டேய்!அதுக்கு யாழினி ஆள் இல்லை' என எண்ணிக்கொண்டவள், 'என் அண்ணன் உனக்கு பனிஷ்மெண்ட் தர முடியாதுனு சொன்னாரே,இனிமே நா தரேன் டா உனக்கு பனிஷ்மெண்ட்.' என்று நினைத்துகொண்டாள்.
"மிஸ்டர்.வசீகரன் எனக்கு ஒரு டவுட்" என்றாள் சத்தமாக. திரும்பி பார்க்காமல் "என்ன?" என்றான். "என்னை ஏன் நீங்க மேரேஜ் பண்ணிங்க?" என்றாள் மிடுக்காக.
வேதனையோடு அவளை திரும்பி பார்த்தவன்,அவளைநோக்கி வந்து,"என் ரூம்லயே நின்னுகிட்டு என்னையே நக்கலடிக்க ஆள் இல்ல. அதான் உன்னை மேரேஜ் பண்ணேன்" என்று சொல்லிவிட்டு,அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட்டு, ஒரு பெருமூச்சோடு பால்கனி நோக்கிப்போனான்.
திடீர் ஷாக்கில் உறைந்து போன யாழினி,"என்ன கேள்விக்கு என்ன பதில் சொல்லிட்டு போறான் பாரு.கோட்டான்." என்று முணுமுணுத்தபடி அங்கிருந்த நீளமான சோபாவில் படுத்து உறங்கிவிட்டாள்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
யாழ்-17
"கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்
கன்றிச் சிவக்க முத்தமிட்டதில்லையோ!
அன்னிய மகா நம்முள் எண்ணுவதில்லை - இரண்டாவிவயு மொன்றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்
பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ?"
காலையில் உறக்கத்தில் இருந்து விழித்த யாழினியின் கண்களுக்கு வசீகரனின் தரிசனமே முதலில் கிடைத்தது. யாழினிக்கு அருகில் இருந்த ஒற்றை சோபாவில் சாய்ந்து அமர்ந்து,முன்னாள் இருந்த டீப்பாய் மீது கால்களை நீட்டி உறங்கி கொண்டிருந்தான்.ஒரு நொடியில் தான் இருக்கும் இடத்தை உணர்ந்து எழுந்தாள் அவள். அவள் மீது பெட் ஷீட் போர்த்தி இருந்தது.

வசீகரன் வேட்டி சட்டையில் உறங்கி இருந்தான்." ஏன் இவன் இங்க தூங்குறான்?" என்று எண்ணி எரிச்சல் வந்தது. இரவு அவன் வருத்தத்தோடு பால்கனி சென்றதும் நினைவுக்கு வந்தது. பெட்ஷீட்டை மடித்து சோபாவின் ஓரத்தில் வைத்தவள் திரும்பி அவனை பார்க்க அவன் வைத்த கண் வாங்காமல் யாழினியை ரசித்தபடி அமர்ந்திருந்தான். 'இவன் எப்போ எழுந்தான்?' என இவள் யோசித்தாள்.

அவனோ வசீகர புன்னகையுடன் "குட் மார்னிங் டார்லிங்" என்றான். 'என்ன இவன் இளிக்கிறான்? நேற்று தானே இவனை கோபமாக பேசினேன், புறக்கணித்தேன். இவன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!' என்று குழம்பியபடியே அவனையே பார்த்தாள். வலப்புறம் இருந்த கதவை காட்டி,"அதுதான் பாத்ரூம் ,பக்கத்தில் இருக்கும் அறை டிரெஸ்ஸிங் ரூம். உன் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ, உன் சூட்கேஸ் அந்த ரூம்ல இருக்கு "என்றான். பின் எழுந்து படுக்கையின் மலர் அலங்காரத்துடன் ஒரு புகைப்படம் எடுத்து விட்டு பெட்ஷீட்டை உதறினான். படுக்கையில் பூக்களால் வரைந்திருந்த இதயங்கள் பூக்குவியலாக கீழே கொட்டியது.ஏதோ ஒரு ஏமாற்றத்துடன் அவன் முகமும் இறுகியது.

யாழினி வேகமாக பாத்ரூம் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். அவளுக்கு அவன் முகத்தை பார்க்க ஏனோ அப்போது பயமாக இருந்தது. வேகமாக குளித்துவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்தாள். அவளது உடையிலிருந்து ஒரு சந்தன நிற சுடிதார் எடுத்து, போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.

பால்கனியில் நின்று இருந்த வசீகரன் திரும்பி பார்த்துவிட்டு அறைக்குள் வந்தான். அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன்," என்னை மன்னிக்கவே மாட்டாயாடி?"என்று மிக மெதுவாக கேட்டான்.யாழினி எதுவும் பேசவில்லை. ஏமாற்றத்துடன் குளியலறைக்குள் புகுந்தான்.

அப்போது அவர்களது அறைக்கதவு தட்டப்பட அதை திறந்தாள்.அங்கே பூரணி நின்றிருந்தார். மகளின் முகம் பார்த்தவர், அதிருப்தியுடன் "மாப்பிள்ளை எங்கே?" என்றார். "குளிக்கிறார்" என்ற யாழினி "உள்ளே வாங்க மா"என்று அழைக்க, "நாங்க கிளம்பறோம், சொல்லிட்டுப் போகலாம்னு வெயிட் பண்றோம். அவர் வந்ததும் கீழே வா" என்று விட்டு போனார். "சோ நான் தனியா கீழே வரக்கூடாது. நம்ம கோட்டானை கூப்பிட்டு கொண்டே போவோம்" என்று முணுமுணுத்துக் கொண்டே அவனுக்காக காத்திருந்தாள்.

அதிக நேரம் காக்க வைக்காமல் சில நிமிடங்களில் அவள் உடைக்கு பொருத்தமான சந்தன நிற சட்டை,கருப்பு பேண்ட் போட்டு வெளியே வந்தான் வசீகரன். மனைவி அங்கே நின்றிருப்பதை பார்த்தவன் மகிழ்ச்சியோடு,"கீழே போய் இருக்கலாமே" என்றான்.

"நீங்க இல்லாம வரக்கூடாதுன்னு உங்க மாமியார் ஆர்டர். சோ வாங்க போலாம்" என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்.கீழே வரும்போது அவளது தோளில் கை போட்டுக்கொண்டு இறங்கினான் வசீகரன். உறவினர்கள் இருந்ததால் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. பல்லை கடித்தாள். 'இவங்க எல்லாம் கிளம்பட்டும், மகனே! உன் கைய உடைக்கிறேன்டா'என்று எண்ணியபடி இறங்கினாள்.காலை உணவு சாப்பிட்டு விட்டு அனைவரும் கிளம்பினர்.

யாழினியும் வசீகரனும் யாழினியின் வீட்டுக்கு மறுவீடு சென்றனர். மேகநாதன் பரபரப்பாக வரவேற்றார், அங்கும் இங்கும் ஓடினார். வசீகரன் அவரது மருமகன் என்பதில் அவருக்கு எக்கச்சக்க பெருமிதம்." உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னபோது பொறுப்பில்லாமல் திரிந்தவர், இப்போது 'மாப்பிள்ளை மாப்பிள்ளை' என்று உருகுவதைப் பார்" என்று பூரணி நொடித்து கொண்டார்.

வசீகரன் எந்த அலப்பறையும் இல்லாமல் குடும்பத்தில் அனைவரிடமும் இயல்பாக இருந்தான்.அது யாழினிக்கு பிடித்தது. 'இவனை எல்லாருக்கும் பிடித்துவிடுகிறது, அதான் திமிராக திரிகிறான்' என்று அதற்கும் பல்லை கடித்தாள்.

இரவு அங்கேயே தங்கினார்கள் யாழினியின் அறை மிகவும் சிறியது, எனவே அங்கு அவனுடன் இருப்பது யாழினிக்கு ஏதோ தயக்கமாக இருந்தது.எனவே தன் தாயிடம் சென்றவள், "அம்மா இன்னிக்கு உங்க கூட தூங்கவா?"என கேட்டாள்.அவளை முறைத்த பூரணி,"ஹே என்ன உளர்ற?"என்றார்.

"இல்லமா இனி எப்போ இங்க வருவேனோ? அதான் உங்க கூட தூங்க...லா...முனு"என மழுப்பினாள். "நாம இத்தனை நாளா ஒண்ணா தான் தூங்கினோமா? நீ உன் ரூம்ல தான தூங்குவ?இப்போ என்ன புதுசா? மாப்பிள்ளைக்கு நம்ம வீடு புதுசு.அதனால நீ அவர் பக்கத்துல இரு.நீ என்ன அமெரிக்காவுக்கா போற? உனக்கு எப்போ தோணுதோ அப்போ கிளம்பி வர போற, அதுக்கு இவ்ளோ செண்டிமெண்ட் ஆகாது . போய் தூங்கு"என விரட்டினார்.

பிளான் சொதப்பியதால் திரும்பி அறைக்குள் நுழைந்தவள்,அதிர்ந்தாள். அங்கு கதவுக்கு அருகில் சுவற்றில் சாய்ந்து இவளை பார்த்து கிண்டலாக சிரித்தபடி நின்றிருந்தான் வசீ. யாழினிக்கு கோபம் வந்தது."என்ன டார்லிங், என் கூட உன் ரூம்ல இருக்கவே உனக்கு பயமா இருக்கா? நேத்து நம்ம ரூம்ல இந்த பயம் இல்லையே" என்றான் நக்கலாக.

"பயமா? எனக்கா? எங்க அம்மா நீங்க தனியாயிருந்தா பயந்துடுவீங்கனு என்னை அனுப்பி வச்சாங்க.சோ ஒழுங்கா படுத்து தூங்குங்க."என்றாள்.
அவன் லேசாக சிரித்தபடி,"ஆமா டார்லிங் எனக்கு பயம், உன்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்கினா பயமா இருக்காது.ப்ளீஸ் என்ன காப்பாத்து" என்றபடி ஓரடி முன்னால் வர, அவள் பதறி போய் பின்னால் நகர்ந்தாள்.
அவன் சிரித்துக்கொண்டே, "சீக்கிரம் தூங்கலாம்டி செல்லம். நேத்து சோபாலயே தூங்கினது முதுகெல்லாம் வலியா இருக்கு." என்றான்.
"உங்களை யாரு சோபால தூங்க சொன்னது?"
"ஹே நீ ஏன் சோபாவில் தூங்குன? என் ஒய்ப் பெட்ல தூங்காம நா மட்டும் எப்படி தூங்க முடியும்?அதான்"
"இப்போ நா தரையில தூங்க போறேன்.நீங்க என்ன பண்ணுவீங்க?"என்றாள் நக்கலாக.
"வாவ் செம்ம ஐடியா பேபி.ரெண்டு பேரும் ஜாலியா தரையில் படுத்து தூங்கலாம். குட்டி ப்லேஸ்,ரொமென்டிக்கா இருக்கும்" என்றான் அசராமல்.
'எந்த பால் போட்டாலும்,சிக்ஸ் அடிக்கிறானே. எதுக்கு வம்பு? பெட்லயே படுத்து தொலைப்போம்' என எண்ணியவள், அமைதியாக சென்று கட்டிலில் ஒருபுறம் ஓரமாக படுத்துக்கொண்டாள். ஒற்றை புருவத்தை ஏற்றி அவளை காதல் பார்வை பார்த்தவன் அவளுக்கு மிக அருகில் சென்று படுத்துக்கொண்டான். இதற்கு மேல் நகர இடமில்லாததால்,"கொஞ்சம் தள்ளி படுங்க" என்றாள். "இன்னும் தள்ளி படுத்தால் நீ கீழ விழுந்துடுவடி" என்று விட்டு அமைதியாக கண்மூடி உறங்கினான்.

மறுநாள் அவர்கள் பலகாரங்களுடன் வசீகரன் வீட்டிற்கு சென்றனர் . வசீகரன் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை லேப்டாப்பில் செய்து கொண்டு இருந்தான். யாழினிக்கு ரொம்ப போரடித்தது.வந்தனாவுடன் பேசலாம் என முடிவெடுத்தவள், உடனே கீழே வந்தாள். ஆனால் கீழே அவளது அறையில் வந்தனா இல்லை. உடனே பார்வதியின் அறைக்கு சென்றாள் யாழினி. அவர்களின் பேச்சு குரல் யாழினிக்கு தெளிவாக கேட்டது. பார்வதியின் குரல் கோபமாக ஒலித்தது. எனவே யாழினி அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றாள்.

பார்வதி வந்தனாவிடம் "எப்பவுமே இப்படிதான் ஏதாவது பேசுறாங்க. தேவை இல்லாம மத்தவங்க விஷயத்திலே தலை இடுறாங்க. நம்மள பத்தி பேசினாலும் பரவால்ல நாம அட்ஜஸ்ட் பண்ணிப்போம்,ஆனால் வசீகரன் கல்யாணத்தை பத்தி பேசுறது அவங்களுக்கு தான் ஆபத்து. உனக்கே வசியோட குணம் தெரியும், அவன் ஒரு முடிவு எடுத்துட்டா யாராலயும் மாத்த முடியாது.அவனுக்கு யாழினி தான் பிடிச்சிருக்கு, அப்படி இருக்கும்போது அவளோட குடும்ப வசதியை பத்தி பேசுவது தப்பு இல்லையா? உன்னோட மாமியார் என்கிறதால தான் நான் எதுவும் பேசல.பார்த்து இருந்துக்கோ. வசி விருந்துக்கு பெங்களூர் வரணும், அங்க இவங்க இந்த மாதிரி பேசினா அப்புறம் அவன் கோபத்தை என்னால ஒன்னும் செய்ய முடியாது" என்றார்.
வந்தனாவின் குரல் மெலிந்து ஒலித்தது. "எனக்கு புரியுது மா. அவங்க என்கிட்டயே ரொம்ப கோவமா தான் பேசினாங்க. 'வசி ஆசைப்பட்டா நீங்க எதுவும் யோசிக்காம கல்யாணம் பண்ணிடுவீங்களா? ஏதாவது செட்டில்மென்ட் பண்ணி அந்த பொண்ண அனுப்பிட்டு, நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு பார்க்க வேண்டியதுதானே' அப்படின்னு கூட சொன்னாங்கமா. நான்தான் 'இது எங்க தம்பி முடிவு, அத யாராலயும் மாற்ற முடியாது. எங்க எல்லாருக்கும் யாழினியை பிடிச்சிருக்குனு சொல்லிட்டேன். அந்த கோபத்தில் தான் அவங்க தங்கை குடும்பம் கூட வசி கல்யாணத்துக்கு வரலை"என்றாள்.

இதை கேட்டுக் கொண்டிருந்த யாழினிக்கு கோபம் தலைக்கு ஏறியது.வந்தனாவின் மாமியார் நினைவுக்கு வந்தார். 'அதான் அந்தம்மா என்னை முறச்சிகிட்டே இருந்துச்சா? நான் என்ன அதோட லவ்வரையா மேரேஜ் பண்ணிக்கிட்டேன்,அதுக்கு என்ன அப்படி ஒரு காண்டு என் மேல?' என கொதித்தாள்.
அவள் மனதில் கேட்ட கேள்விக்கு வந்தனா பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்."அது ஒன்னும் இல்லம்மா, அவங்க தங்கச்சி மகளை நம்ம வசிக்கு மேரேஜ் பண்ணிவைக்க நினைச்சாங்க. அது நடக்கலல? அந்த கோபத்துல இப்படி எல்லாம் பேசுறாங்க. அவங்களுக்கு வசீ மேல ரொம்ப பயம். அதனால கண்டிப்பா அவன் முன்னாடி எதுவும் பேச மாட்டாங்க. நீங்க கவலைப்படாதீங்க" என்றாள் வந்தனா.

"ஹோ! இந்த கோட்டானுக்கு இவ்வளவு டிமேண்டா? இப்படி எல்லாரும் பொண்ணு குடுக்க ரெடியா இருக்கும்போது, இவன் ஏன் என்ன தேடி வந்தான்? இவனால தானே எனக்கு இந்த அவமானமெல்லாம்? யார்யாரோ என்ன பத்தி பேசுறாங்க, எல்லாத்துக்கும் காரணம் அவன். அவனை சும்மாவே விடமாட்டேன்' என உறுதி எடுத்தவள், வேகமாக மேலே சென்றாள்.

வேகமாக கதவை தள்ளியபடி உள்ளே வந்தவளை,திரும்பி பார்த்த வசீகரன் கண் சிமிட்டினான். அவளுக்கு கோபம் இன்னும் அதிகமானது.வேகமாக அவன் அருகில் வந்தவள்,அவன் முன் இருந்த லேப்டாப்பை மூடினாள். அவன் கண்களில் மின்னலடித்தது. "ஹே டார்லிங், என்னடா? உன்னை கவனிக்காம வேலை பாக்குறேன்னு கோபமா? சாரி செல்லம்.மேரேஜ் டைம்ல செய்யாத வேலையெல்லாம் இப்போ மொத்தமா இருக்கு. டெய்லி கொஞ்சம் ஒர்க் பண்ணா முடிச்சிடலாம் னு நெனச்சேன். சாரி டியர்" என்றான். யாழினி கொதிநிலைக்கு போனாள்.

"ஹேய் கொஞ்சிரத நிறுத்துடா! வெறுப்பா இருக்கு.உனக்கு என்ன காதல் மன்னன்னு நெனப்பா?" என்றாள் கோபமாக. வசீகரன் பட்டென எழுந்தான்,"என்னடி ஓவரா பேசுற? என் பொண்டாட்டி, நா கொஞ்சுவேன். என்னை கண்ட்ரோல் பண்ண யாராலயும் முடியாது"என்று கத்தினான்.
"உன்னை கண்ட்ரோல் பண்ண ஆள் இல்லாத திமிர்ல தான் நீ ஆடுற! நீ பண்றதுக்கு எல்லாம் நா தலையாட்டிட்டு இருக்க மாட்டேன்" என்றாள்.
"ஹே இப்போ எதுக்கு நீ குதிக்குற? காலைல இருந்து ஒழுங்கா தான இருந்த, இப்போ என்ன ஆச்சு?"
"என்ன சொன்ன?காலைல இருந்து ஒழுங்கா இருந்தனா?இப்போ மட்டும் ஒழுங்கு இல்லாம என்ன பண்ணிட்டேன். உன்னை கேள்வி கேட்டா, நா ஒழுங்கு இல்லாதவளா?"
வசீகரன் அதிர்ந்தான்."நா எப்போ டி அப்படி சொன்னேன். திடீர்னு கேள்வி கேக்குறியேனு கேட்டேன்.இப்போ அதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்ற?" என்றான் . இப்போது அவன் குரலில் கோபம் இல்லை.
'அந்த பயம் இருக்கட்டும்' என உள்ளுக்குள் மகிழ்ந்த யாழினி,அதை வெளிக்காட்டி கொள்ளாமல்,"நா கேள்வி கேட்டா நீங்க பதில் சொல்ல மாட்டீங்களா?" என்றாள்.
"கண்டிப்பா சொல்வேன். நீ கேளு" என சரண்டர் ஆனான்.
"என்னை ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்க?" என்றாள் நிதானமாக.
அருகில் வந்து அவள் தலையை வருடியவன்,"இந்த மாதிரி என் கிட்ட சண்டை போட ஆள் இல்லை. அதனால தான்" என்றான் இதமாக.
கோபம் உச்சிக்கு ஏற,"உங்களை !!" என்றபடி கையை உயர்த்தியவளின் கையை பற்றியவன், அவளின் இரண்டு கைகளையும் அவனது இடது கையால் பற்றி தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு வலதுக்கையால் அவளின் முகத்தை நிமிர்த்தி முத்தம் பதித்தான்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Latest posts

New Threads

Top Bottom