Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வண்ணங்கள் - நிறைவடைந்தது

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
823
Points
93
வணக்கம் வாசக மற்றும் எழுத்தாள தோழமைகளே,
வண்ணங்கள் கதை போட்டிக்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு மனமார்ந்த நன்றி... போட்டியில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும்... ❤️❤️❤️❤️

கடுமையான சூழ்நிலைக்கு இடையில் பலர் உங்களுடைய கதைகளை தொடர முடியாமல் வருத்தம் தெரிவித்திருந்தீர்கள். சகாப்தத்தோடு இணைய விரும்பி, அதற்காக சிரத்தை எடுத்த உங்களுடைய முயற்சியே மேலானது. அதை மனமார பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்... (y)(y)(y)💐💐💐

எத்தனை தடைகள் வந்தாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்கிற வைராக்கியத்தோடு குறிப்பிட்ட தேதிக்குள் கதையை முடித்த அனைத்து எழுத்தாளருக்கும் பெரிய பெரிய பாராட்டுக்கள். இதுவே ஒரு சாதனை தான்... இருந்தாலும் வெற்றி கனி இன்னும் சிறப்பானது.. உங்கள் கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழமைகளே... 👏👏👏👏(y)(y)(y)💐💐💐

முடிவுற்ற கதைகள் அனைத்தையும் கீழே உள்ள இணைப்பில் லிஸ்ட் அவுட் செய்திருக்கிறேன். உங்களுடைய முடிவுற்ற கதை அதில் இல்லை என்றால் உடனே என்னை தொடர்புகொள்ளுங்கள். இந்த இணைப்பில் உள்ள கதைகள் மட்டுமே நடுவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பார்த்து லிஸ்டில் உங்கள் கதை இருப்பதை கன்ஃபார்ம் செய்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகள் யாரேனும் போட்டியில் கலந்துகொண்டிருந்தால் அவர்களுக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்துங்கள்.

கூடவே உங்களுடைய கதை doc ஃபைல் sahavannangal@gmail.com என்கிற ஈமெயில் ஐடிக்கு "கதையின் தலைப்பு", "word count" மற்றும் "வண்ணம்" ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

வண்ணங்கள் போட்டியில் கலந்துகொண்டு குறிப்பிட்ட தேதிக்குள் கதையை முடிக்க முடியாத எழுத்தாளர்கள், வாசகர்களுக்காகவோ அல்லது தன் திருப்திக்காகவோ தொடர்ந்து கதையை பதிவிட விரும்பினால் பதிவிடலாம். ஆனால் போட்டியில் உங்கள் கதை பங்கு பெற முடியாது. அதற்காக மன்னிக்கவும்... 🙏🙏🙏

வண்ணங்கள் போட்டியில் வாசகர்களின் பங்கு சிறப்பானது. கதைகளை வாசித்து கமெண்ட் கொடுத்து எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திய ஒவ்வொரு வாசகருக்கும் மனம் நிறைந்த நன்றி... 🙏🙏😍😍😍

ஆக்டிவ் ரீடருக்கு பரிசு வழங்குவது ஜூலை மூன்றாம் வாரம் வரை கொடுத்திருக்கிறோம். செப்டம்பர் இறுதி வரை வழங்க வேண்டும். அதை மொத்தமாக கணக்கிட்டு சிறந்த வண்ணங்கள் வாசகர்களை தேர்ந்தெடுத்து புத்தகங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். (y)(y)(y)

போட்டியின் முடிவுகள் புத்தாண்டு அல்லது பொங்கல் தினத்தில் அறிவிக்கப்படும்.

நன்றி தோழமைகளே... சந்தேகங்கள் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள்...

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

 

Meerajo

Member
Messages
33
Reaction score
6
Points
8
நன்றி!... முடிக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாலும் தொடர்ந்த எனக்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டதற்கு நன்றி!
 

New Threads

Top Bottom