Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வரைமீறும் இவளின் ஆசை - Tamil novel

Messages
7
Reaction score
5
Points
1
இந்த தளத்தில் எனது முதல் கதை..



"வரைமீறும் இவளின் ஆசை" இதுவே தலைப்பு..



இந்த சமுதாயத்தில் தனக்கான அடையாளத்தை தேடும் ஒரு பெண்ணின் கதை, நிறைய அழுத்தம் இருக்கும். அதனோடு கூடிய காதலும் தடம் பதிக்கும் ..



எனது நதி பொங்கினாலும், தனது தன்னியல்பால் உங்களை மகிழ்விப்பாள் என்று நம்புகிறேன்..



எனக்கு இந்த தளத்தில் எழுதுவதற்கு வாய்பளித்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்..

நன்றியுடன், அன்பு ஜெயலட்சுமி.
 
Messages
7
Reaction score
5
Points
1
ஆசை - 1



ஒலிம்பியா , வாஷிங்டன் , அமெரிக்கா



மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கை பட வேண்டும்

என்ற பாரதியாரின் பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டிருந்தது..



பாடலுடன் சேர்ந்து தானும் பாடல்வரிகளை உருப்போட்டபடி, தனது மருத்துவ அறிக்கையை எடுத்து வைத்துக்கொண்டிருந்தால் தமிழ்நதி. இன்று மருத்துவமனை செல்ல வேண்டும். அதற்கான முன்பதிவும் செய்தாகிவிட்டது. அலுவலகத்திற்கு விடுப்பும் சொல்லியாகிவிட்டது. மருத்துவமனைக்கு சென்று விட்டு அவளால் அலுவலகத்திற்கு செல்ல முடியாது. அதனால் விடுப்பு சொல்லிவிட்டாள். அதும் அவள் வேலை செய்யும் அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் உரிமையாளர் அவளுக்கு மிகவும் நெருக்கமான எலிசபெத் நோலன். மிகவும் தன்மையான நல்ல பெண்மணி. இவளுடைய உடல்நிலை காரணமாக அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று தான் சொன்னார். இவள்தான், வீட்டில் எதும் வேலை இல்லை. இங்கு வருவது எனக்கு பிடிச்சிருக்கு, தடுக்காதிங்க என்று அவரிடம் கெஞ்சி அனுமதி வாங்கியிருக்கிறாள், அதுவும் மருத்துவமனை செல்லும் நாட்களில் கட்டாய விடுப்பு என்ற நிலையோடு.



கனகாம்மா, நான் மருத்துவமனைக்கு போயிட்டுவரேன், கொஞ்சம் ஓய்வு எடுங்க கூப்பிடுறேன் என்றாள் தமிழ்நதி, சமையலறையை நோக்கி. நதிம்மா இருடா நானும் வரேன் நீ மட்டும் எப்பவும் தனியாவே மருத்துவமனைக்கு போற என்றார் கனகா. இல்ல கனகம்மா, உங்களுக்கு ரொம்ப நேரம் உட்கார முடியாது. ஆனால் மருத்துவமனைல ரொம்ப நேரம் உட்கார வேண்டிவரும். உங்களுக்கு அப்பறம் இடுப்பு வலி ஆரம்பிச்சுடும். நான் என்ன நடந்தா போறேன், கார்ல தானே போறேன். நான் போயிட்டு சீக்கரம் வந்துடுறேன். அதுக்குள்ள நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு எனக்கும், குட்டிக்கும் பிடிச்ச பால் கொழுக்கட்டை செய்து வைங்க, என்று தனது ஏழு மாத மேடிட்ட வயிற்றை தடவிக்கொண்டே கூறினாள் நதி. சரிம்மா பார்த்து பத்திரமா போயிட்டு வா, நீயும் நம்ம குட்டியும் வரும்போது பால் கொழுக்கட்டை தயாரா இருக்கும் என்ற கனகா, நதியுடைய கைப்பையை எடுத்து வந்து நீட்டினார்.



அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவள், மெதுவாக வீட்டைவிட்டு வெளியே வரவும், மார்டின் வந்து காருடன் காத்திருந்தான். எப்பொழுது நதி எங்கு சென்றாலும், மறக்காமல் தனது ஓட்டுனரை வண்டியுடன் அனுப்பிவிடுவார் எலிசபெத். மார்டினுக்கு ஒரு புன்னகையை அளித்துவிட்டு, காரில் ஏறப்போனவளுக்கு பின் கதவை திறந்துவிட்டான் மார்ட்டின்.



அவள் ஏறியதும், வேகமாக வந்த கனகா, நதிம்மா இந்தா இதில் சுடுநீர் கொதிக்கவச்சு ஆற வச்சுருக்கேன், இதை மட்டும் தான் குடிக்கணும் என்ற கட்டளையோடு அவளிடம் தந்து சென்றார். அவரை எப்பொழுதும் போல அதிசயமாக பார்த்தவள், ஒரு தாய் என்பவள் தாய் தான், அது பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சரி, மற்றவரை பிள்ளையாக ஏற்றுக்கொண்டாலும் சரி, தாய் மனம் எப்பொழுதும் தன் பிள்ளைகளை சுற்றியே இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள். கார் கிளம்பியது. கைகளில் இருந்த அந்த தண்ணீர் பாட்டிலை பார்த்தவளுக்கு, முதன் முதலில் கனகாவை சந்தித்தது நினைவில் வந்தது.



நதிக்கு நான்காம் மாதம் நடந்துகொண்டிருந்த சமயம் ஒருநாள், அலுவலகத்தில் இருந்து வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது அவர்கள் வீடு இருக்கும் பகுதியில் திரும்பும்பொழுது, அங்கிருந்த ஓய்விருக்கையில், தன் தலையினை கைகளில் தாங்கியபடி அமர்ந்திருந்தார் கனகா. அவர் அணிந்திருந்த சேலையும், இட்டிருந்த கொண்டையும் அவர் இந்தியர் என்று சொல்லாமல் சொல்லியது. யாரும் அருகே இல்லை. உடல்நிலை ஏதும் சரியில்லையோ என்று நினைத்தவள், காரை நிறுத்தச்சொல்லி மார்டினுடன் சென்று, அவரின் தோளை தொட்டாள். அதில் சட்டென்று நிமிர்ந்தவர் முகம் அழுகையில் சிவந்திருந்தது. உடனே அவர் அருகில் அமர்ந்த நதி அவரின் கைகளை பிடித்தாள். அழுகையோடு திக்கி திணறி, தான் அங்கு வேலைக்கு வந்ததாகவும், கூட்டிவந்தவர், இங்கே விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் தமிழிலில் சொல்லியபடி அழுதார். அவரின் உடைமைகள் அவரின் அருகில் இருந்தன. அவரை சமாதானம் செய்தவள், அவரின் உடமைகளில் இருந்த, கடவுசீட்டை எடுத்து, உடனே எலிசபெத்துக்கு, தொலைபேசியில் அழைத்துக்கூறினாள். பின் அவரிடம், பயப்படவேணாம் என்று கூறிய நதி, அவரை தன்னுடன் வருமாறு அழைத்தாள். முதலில் தயங்கியவர், பின் சம்மதித்தார். அன்று முதல் நதியோடு தான் அவரின் வாசம். கனகாவை பற்றி விசாரித்த எலிசபெத், பயப்படும் படி எதுவுமில்லாததால், அவரை நதிக்கு உதவியாக பணித்தார். அதற்கான ஊதியமும், நதியால் அவருக்கு வழங்கபட்டது.



மருத்துவமனை வரவும், தன் நினைவுகளில் இருந்து கலைந்தவள், காரில் இருந்து இறங்கினாள். நோலன் மருத்துவமனை என்று அழகாக பொறிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று, தனது அனுமதி அட்டையை காட்டியவள், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில், அவளின் வயிற்றில் அசைவை உணரமுடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அசைவு அதிகமானது. தனது வயிற்றை நீவியவள் வர வர உன் ஆட்டம் அதிகமாகிடுச்சு குட்டி. உனக்கு இன்னிக்கு எதும் கிடையாது என்று தன் மேடிட்ட வயிற்றிடம் பேசிக்கொண்டிருந்தாள். அப்பொழுது டமில்நடி என்ற அவள் அழைக்கப்படவும், மெல்ல எழுந்து சென்றாள். டாக்டர் எட்வர்ட் நோலன் என்று பொறிக்கப்பட்டிருந்த அறையில் நுழைந்தாள் ...
 
Messages
7
Reaction score
5
Points
1
ஆசை 2:

சேலம், தமிழ்நாடு, இந்தியா, 1999
தமிழு பள்ளிக்கூடத்துக்கு நேரமாகுது இன்னும் என்ன செய்ற சீக்கிரம் வா என்று கத்திக்கொண்டிருந்தார் சாந்தி. இதோ வரேன் மா என்று ஓடி வந்தாள் ஒன்பது வயது தமிழ். சாந்தியிடமிருந்து சிறு டப்பாவையும் ஒரு தட்டையும் வாங்கியவள் தனது பையில் வைத்துவிட்டு தனது அம்மாவை பார்த்தபடி நின்றிருந்தாள். டப்பாவை வாங்கியவள் போகாமல் இருக்கவும், தமிழை பார்த்த சாந்தி, எதுக்கு இங்கயே நிக்குற என்று கேட்டார். அம்மா நாளைக்கு கடைசி நாள் மா, எல்லாரும் நோட்டு வாங்கிட்டு வந்துருக்கணும்னு சொல்லிட்டாங்க டீச்சர், எப்போ மா வாங்கித் தர என்று கேட்டாள்.​

தமிழை சற்று அழுத்தமாக பார்த்த சாந்தி, ஏன் போன வருசம் உனக்கு எல்லாமே பள்ளிக்கூடத்துல தானே தந்தாங்க இந்த வருசம் டீச்சர் கிட்ட சொல்லி தர சொல்ல வேண்டியது தானே என்று கேட்டார். இல்லம்மா மூணாவது வரைக்கும் பள்ளிக்கூடத்துல, கொஞ்சம் பேருக்கு எல்லாமே இலவசமா தந்தாங்க. இப்போ நான் நாலாவது போறேன்ல அதனால நாமளே தான் வாங்கணும்னு டீச்சர் சொல்லிட்டாங்க. வசந்தி டீச்சர் அவங்க பொண்ணோட புத்தகம்லாம் தரேன்னு சொல்லிட்டாங்க. புத்தகம் வாங்க காசு வேணாம். நோட்டு மட்டும் வேணும் மா. நாளைக்கு வாங்கிட்டு போகலேன்னா டீச்சர் திட்டுவாங்க மா என்று சொல்லும் போதே தமிழின் கண்களில் லேசாக நீர் நின்றது.​

தமிழின் கலங்கிய முகத்தை பார்த்த சாந்தி, சரி சரி நாளைக்கு வாங்கி தரேன் இப்போ கிளம்பு என்றவர், பாப்பாவுக்கும் வாங்கணுமா என்று கேட்டார். இல்லமா மதி மூணாவது தான எனக்கு போன வருசம் கொடுத்த மாதிரி அவளுக்கும் பள்ளி கூட்டத்துல கொடுத்துருவாங்கன்னு ரவி சார் சொன்னாரு. அவ பேர எழுதிக்கிட்டு போயிருக்காரு இலவச நோட்டு புத்தகத்துக்கு என்று சற்று தெளிந்த முகத்துடன் கூறினாள் தமிழ். சரி அப்போ கிளம்புங்க ரெண்டு பேரும் டப்பால இன்னைக்கு பருப்பு ஊத்திவச்சுருக்கேன். வழக்கம் போல சத்துணவுல சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கோங்க. இந்த ஐம்பது பைசா உங்களுக்கு வச்சுக்கோங்க என்று தனது முந்தானையிலிருந்து காசை எடுத்து நீட்டினார்.​

அதை வாங்கிய தமிழ், அம்மா மதி பாட்டி வீட்டுல இருக்கா, அங்க போய் கூப்பிடுக்கறேன் என்றுவிட்டு, தனது பையையும், தனது தங்கையான மதியின் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அடுத்து இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றவள், மதி அங்கு திண்ணையில் தங்களது பாட்டியுடன் அமர்ந்திருக்கவும், அவளிடம் அவளது பையை கொடுத்துவிட்டு, போயிட்டு வரோம் அன்னம்மா என்று பாட்டிக்கு கையசைத்துவிட்டு தங்கையுடன் கிளம்பினாள்.​

அவர்கள் செல்வதை வீட்டு வாசலில் இருந்து கவனித்த சாந்தி, தனது அம்மா வீட்டிற்கு வந்தார். அன்னத்திடம் அம்மா, பெரியவளுக்கு நாளைக்கு நோட்டெல்லாம் வாங்கணுமாம். காசு வேணும், எனக்கு சனிக்கிழமை தான் சம்பளம் தருவாங்க. கைல இருபது ரூபா தான் இருக்குது. உன்கிட்ட இருந்தா கொடும்மா நான் சனிக்கிழமை தரேன் என்று கேட்டார். என்கிட்டே இருந்த காச உங்கப்பன் காலைல திருச்சி போறேன்னு வாங்கிட்டு போய்ட்டான். இரு வாரேன் என்றவர் உள்ளே சென்றார்.​

அஞ்சறை பெட்டியில் தேடியவர் ஒரு மடங்கிய நூறு ரூபாய் தாள் இருந்தது. அதை எடுத்து வந்தவர் சாந்தியிடம் கொடுத்துவிட்டு, அப்பனுக்கும் மகளுக்கும் என்கிட்டே காசு இருந்தா பொறுக்காது. அந்தாளு ஊரு சுத்தியே சம்பாதிச்ச காச செலவளிக்கிறான். பெரியவளுக்கு நோட்டு வாங்கறதுக்காக தரேன், அப்பறம் இன்னிக்கு ரங்கமூட்டு காட்டுல களை எடுக்கற வேலை இருக்குது நான் போயிட்டு வரேன் என்று கதவை சாத்திக்கொண்டு அன்னமும் கிளம்பினார்.​

தனது வீட்டிற்கு வந்த சாந்தி கையில் இருந்த நூறு ரூபாய் தாளை பார்த்தார். பின்பு எதையும் யோசிக்க நேரமின்றி, நேற்று இரவு தண்ணீர் ஊற்றி வைத்த சாப்பாட்டை ஒரு சிறு தூக்கு வாளியில் ஊற்றி எடுத்துக்கொண்டு தானும் வேலைக்கு கிளம்பினார். சாந்தி வெளியே வரவும், பக்கத்து வீட்டு சரசுவும் வந்தார். இருவரும் இணைந்து பேசியபடி நடந்தனர்.​

மதியின் கையை பிடித்துக்கொண்டு பள்ளி வரையிலும் வந்த தமிழ், மதியை அவளுடைய வகுப்பறையில் அமர்த்திவிட்டு மத்தியானம் சாப்பாடு பெல் அடிக்கும் போது வரேன் மதி என்றுவிட்டு தனது வகுப்பறையை நோக்கி சென்றாள்.​

வகுப்பறையில் தமிழின் தோழி சித்ரா அப்பொழுது தான் தனது புது நோட்டுகளை, பக்கத்தில் இருந்த மற்ற மாணவிகளிடம் காட்டிக் கொண்டிருந்தாள். தமிழை பார்த்தவள், தமிழ் இங்க வாவேன், அப்பா நேத்து ராத்திரி தான் புது நோட்டெல்லாம் வாங்கி தந்து, அதுக்கு அட்டைலாம் போட்டு ஸ்டிக்கர் லேபிள்லாம் ஒட்டி பேர் எழுதி தந்துருக்காங்க பாரேன் என்று காட்டினாள். லேசான புன்னகையுடன் அந்த நோட்டுக்களை எல்லாம் எடுத்து பார்த்தவள் நல்லாருக்கு சித்ரா என்று கூறினாள். சித்ரா தமிழிடம் நீ எப்போ வாங்க போற தமிழ் என்று கேட்டாள். அம்மா நாளைக்கு வாங்கித்தரேன்னு சொல்லிருக்காங்க சித்ரா, வாங்கிட்டு காட்டுறேன் என்றாள் தமிழ்.​

பின் முதல் வகுப்பு அவர்களுடைய தமிழ் ஆசிரியர் வரவும் தொடங்கியது. அன்றைய பாதி நாள் முடிய, மதிய உணவுக்கான பெல் அடித்ததும், வேகமாக சென்ற தமிழ் தனது பையில் இருந்த தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றாள். சத்துணவு ஆயாவிடம் சாப்பாட்டை வாங்கியவள், நேரே மதியின் வகுப்பறை சென்று அவளை அழைத்துக்கொண்டு சாப்பிடச்சென்றாள். ஏற்கனவே இவளுக்காக இடம் பிடித்து வைத்திருந்த சித்ராவுடன் சேர்ந்து சாப்பிட்டவர்கள், சிறிது நேரம் விளையாடிவிட்டு, வகுப்பறை சென்றார்கள்.​

மாலை பள்ளி முடிந்ததும், மீண்டும் மதியை அழைத்துக்கொண்டு வீடு சென்றாள் தமிழ்....​
 
Messages
7
Reaction score
5
Points
1
ஆசை - 3


(கதைகளம் அமெரிக்காவாக இருப்பினும் , அனைவருக்கும் புரிவதற்காக பெரும்பான்மையான
உரையாடல்கள் தமிழில் இருக்கும், சிறிது ஆங்கிலம் கலந்து)



ஒலிம்பியா, வாஷிங்டன், அமெரிக்கா



நதி உள்ளே நுழைந்ததும், அங்கு மருத்துவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனை பார்த்து குட்மோர்னிங் டாக்டர் எட்வர்ட் என்று கூறினாள். அவளின் குரலில் நிமிர்ந்தான் டாக்டர் எட்வர்ட் நோலன். நோலன் மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் கைனோகொலோஜிஸ்ட். அமெரிக்க மண்ணுக்கே உரிய வெள்ளை நிறத்தையும் பழுப்பு நிற கண்களையும் கொண்டிருந்தான். பதிலுக்கு குட்மோர்னிங் நதி என்றான் தன் எதிரில் இருந்தவளை பார்த்து மலர்ந்த முகத்துடன். என் பெயரை இத்தனை அழகா இங்க கூப்பிடுறது நீங்களும், மேடமும் தான் டாக்டர் என்றாள் நதி ஒரு சிறு புன்னகையுடன். உங்கள் பெயர் மிகவும் அழகு, அதனால் தான் நாங்கள் கூப்பிடுவது அழகாக தெரிகிறது நதி என்றான் அவனும். அவன் கூறிய பதிலில் உங்களிடம் பேச்சில் வெல்ல முடியாது என்றாள் நதி மேலும் விரிந்த புன்னகையுடன்.


பேசியபடியே நதியிடம் இருந்து அவளின் மருத்துவ அறிக்கைகளை வாங்கியவன், அதை பார்த்துவிட்டு, அருகில் இருந்த செவிலியரை அழைத்து அவளை ஸ்கேனிற்கு அழைத்துச் செல்லும் படி கூறினான். தன்னுடன் வந்த நதியை ஸ்கேன் செய்வதற்கு ஏற்றபடி தயார் செய்தவர், எட்வர்டை அழைக்க சென்றார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் உள்ளே வந்த எட்வர்ட், ஸ்கேன் செய்யும் கருவியை அவளின் வயிற்றில் பசை போல தடவப்பட்டிருந்த திரவத்தின் மேல் வைத்து முன்னும் பின்னும் நகர்த்த ஆரம்பித்தான்.


அந்த நொடி மானிடரை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள் நதி, தனது குழந்தையை ரசித்தபடி, அதன் இதயத்துடிப்பை உணர்ந்தபடி. எட்வர்டும் மானிடரை பார்த்தபடி ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருக்க அங்கிருந்த செவிலியர் அதை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் ஸ்கேன் முடிந்துவிட, தான் கூறிய குறிப்புகளை வைத்து அறிக்கை தாயார் செய்ய சொல்லி அந்த செவிலியரிடம் சொல்லிவிட்டு, வெளியேறினான் எட்வர்ட். அவன் சென்றதும் தன்னை சீர் படுத்தியவள், மீண்டும் எட்வர்ட் அமர்ந்திருந்த அறைக்கு சென்றாள். பேபி இஸ் நார்மல் அண்ட் ஹெல்த்தி நதி, கொஞ்சம் எக்ஸ்சசைர்ஸ் மட்டும் செய்யுங்க என்றான் அவளுக்கான மருந்துகளை எழுதியபடி.


அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தவள், கிளம்பும்போது, டோன்ட் வெயிட், நா ரிப்போர்ட் வாங்கிட்டு வரேன் நீங்க வீட்டுக்கு போங்க என்றான். சரி என்று தலையசைத்தவள் அங்கிருந்து கிளம்பினாள். நதி அங்கிருந்து சென்றவுடன், எட்வர்டின் அறையை நோக்கி வேகமாக வந்தாள் ஒரு அமெரிக்கா பெண். அவள் வந்த வேகத்தில் ஒரு நிமிடம், அங்கிருந்த செவிலியர் பயந்தே விட்டார். எட்வர்டின் அறையில் நுழைந்தவள் பார்த்த பார்வையில் அந்த செவிலியர் உடனே வெளியில் சென்றுவிட்டார்.


எட்வர்டை நெருங்கியவள், நீ என்ன ரொம்ப தவிக்க வைக்குற எட்வர்ட், உன்கிட்ட நான் காதல் சொல்லிட்டேன், எனக்கு தெரியும் உனக்கும் என்னை பிடிக்கும், ஆனா ஏன் ஒத்துக்க மாட்டிங்குற என்று வேகமாக கத்தினாள். அவள் சொல்லி முடிக்கும் வரை அவளையே கூர்ந்து பார்த்தவன், பின் மெதுவாக அவளிடம், கேத்தரின் ஒரு வருடத்திற்கு முன்பு உன்னை எனக்கு பிடிச்சது, உண்மையை சொல்லப்போனால், உடல் ரீதியான ஒருவகையான கவர்ச்சி வேற ஏதுமில்லை. அதை நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். என்னால எப்படி உன் காதலை ஏத்துக்க முடியும், நான் அந்த காதலை உன்மேல உணரவேயில்லை என்றான்.


அவனுடைய பதிலில் மேலும் கோபமடைந்த கேத்தரின், உங்கள் வீட்டில் இருக்கிறாளே அந்த இந்தியப்பெண், அவள் மேல் உனக்கு இருப்பது என்ன எட்வர்ட், காதலா இல்லை கவர்ச்சியா என்றாள் ஒரு ஏளன புன்னகையுடன். அவள் சொல்லியதின் அர்த்தம் புரிந்தவனின் வெள்ளை நிற முகம் நன்றாக சிவந்தது கோவத்தில். தன் முன்னால் இருந்த மேஜையில் கைகளை ஊன்றி நின்றவன், மிகவும் அழுத்தமான குரலில், அவளிடம் உணர்ந்தது போல வேறு யாரிடமும் நான் உணரவில்லை. அது எந்த வகையான உணர்ச்சி என்று நான் உனக்கு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. உன்னுடன் எனக்கு தோன்றியது ஒரு சிறு ஈர்ப்பு, அவ்வளவுதான். உன்னிடம் எப்பொழுதும் நான் காதல் சொல்லவில்லை. உடளவிலும் நான் உன்னை தீண்டவில்லை. நீயாகவே வேறு அர்த்தம் புரிந்து கொண்டாய். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இனி எப்பொழுதும் என் முன்னால் நீ வரக்கூடாது என்றவன், அவளை செல்லும்படி கைகாட்டினான். அவன் பேசியதன் அர்த்தம் புரிந்தவள், நீ அங்கு நிற்பதில் அர்த்தம் இல்லை என்று புரிந்து வெளியேறினாள்.


கேத்தரின் சென்றதும் தன் இருக்கையில் அமர்ந்தவன் கண்களை மூடி சாய்ந்தான். மூடிய கண்களின் வழி வந்து நின்றாள் நதி. மை ஏஞ்செல் என்று மெல்ல முணுமுணுத்தது அவன் உதடுகள்....
 
Messages
7
Reaction score
5
Points
1
ஆசை 4 :


மதியுடன் பள்ளியிலிருந்து வீடு வந்து சேர்ந்தாள் தமிழ். அப்பொழுதுதான் அன்றைய இரவு உணவிற்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருந்தார் சாந்தி. வீட்டிற்கு வந்தவர்கள் உடை மாற்றிக்கொண்டு சாந்தியிடம் வந்தார்கள். அம்மா நாங்க விளையாட போகவா என்று அனுமதி கேட்டார்கள். அடுப்படியில் புகையில் வேலை செய்து கொண்டிருந்தவர், போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க என்று அவர்களை அனுப்பினார். தனது அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் சேர்ந்து நன்றாக விளையாடியவர்கள், இரவு உணவுக்கான நேரம் வந்ததும் பிரிந்தார்கள்.


தமிழும், மதியும் வீட்டிற்கு வரும் நேரம் வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டில்களை எடுத்து போட்டு கொண்டிருந்தார் சாந்தி. அவர்களின் கிராமத்தில் பெரும்பான்மையான வீடுகளில் மின்சாரம் என்பது கிடையாது. மண்ணெண்ணெய் விளக்குகள் தான் வீட்டில். இரவு உணவு என்பது அதிகம் நிலவொளியில் தான். அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் வீட்டின் வெளியில் தான் உண்பதும் உறங்குவதும். மழை மற்றும் பனி காலங்களில் மட்டுமே வீட்டினுள் உறங்குவார்கள். இயற்ககையான காற்று தான் அவர்களுக்கான மின்விசிறி.


தமிழும் மதியும் வரவும் அவர்களை கைகால்களை நன்றாக சுத்தம் செய்துவிட்டு வர சொன்ன சாந்தி, அவர்களுக்கான உணவை ஒரு தட்டில் இட்டு தந்தார். அறுசுவை உணவு இல்லை. ரேஷனில் கிடைக்கும் அரிசி சாப்பாடும், ரசமும் பருப்பு துவையலும் தான். ஆனால் உழைத்து களைத்து வருபவர்களுக்கு அதைவிட சிறந்த உணவு இருந்து விட முடியாது. அதும் தமிழுக்கு மிகவும் பிடிக்கும். தட்டில் பருப்பு துவையலை பார்த்தவள் முகம் புன்னகையில் விரிந்தது. அதே புன்னகையுடன் மதியிடம், பாப்பா இன்னைக்கு எனக்கு பிடிச்ச துவையல் என்று கூறிவிட்டு சாப்பிட தொடங்கினாள்.


இவர்கள் சாப்பிட தொடங்கவும், எதிர்வீட்டு செல்வி வந்தாள். சாந்தி அக்கா இன்னைக்கு என்ன செஞ்ச, கொஞ்சம் குழம்பு இருந்தா கொடேன். வேலைக்கு போயிட்டு இப்போ தான் வந்தேன். சோத்த வச்சிட்டேன், அவரு இப்போ வந்துடுவார். வந்தா சத்தம் போடுவார் என்று அவசரமாக கேட்டாள். குழம்பு எதும் வைக்கல செல்வி, ரசமும் துவையலும் தான் குண்டாவ கொடு என்றவர் கொஞ்சம் ரசத்தை அதில் ஊற்றிவிட்டு, அவர்கள் வீட்டில் இருந்த ஒரு சின்ன தட்டில் துவையலையும் வைத்து கொடுத்தார்.


அதை வாங்கிகொண்டு, தட்டு நாளைக்கு தரேன் கா என்றுவிட்டு சென்றாள் செல்வி. உணவை உண்டு அந்த பாத்திரத்தை, துலக்க சென்றார் சாந்தி. அவர் வருவதற்குள் தங்கள் பள்ளி பையை எடுத்து வந்தார்கள் தமிழும், மதியும். இப்பொழுது தான் பள்ளி தொடங்கியிருப்பதால் பெரிதாக வீட்டு பாடம் இல்லையென்றாலும் சிறிதளவேனும் தருவார்கள். அவர்கள் வீட்டின் அருகே தான் தெரு விளக்கு கம்பம் இருக்கும். அங்கு சென்று தான் பிள்ளைகள் படிப்பார்கள். பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ப அங்கு குடியிருந்தவர்கள், அந்த இடத்தை மாற்றி வைத்திருந்தார்கள். இவர்கள் செல்லவும், மேலும் சில பிள்ளைகள் வரவும் சரியாக இருந்தது.


மதியை அமர வைத்துவிட்டு, தானும் அமர்ந்த தமிழ், மதிக்கு உதவி செய்து கொண்டே தானும் தனது சிலேட்டில் எழுதினாள். சிறிது நேரத்தில் தங்கள் எழுத்து வேலைகளை முடித்தவர்கள், கிளம்பினார்கள். சாந்தியிடம் வந்த தமிழ், அம்மா எழுதிட்டோம் வீட்டு பாடம். காலைல பாருங்கம்மா என்றுவிட்டு, காலைல படிக்கிற வேலை இல்லைம்மா என்றாள். ஆம் எழுதும் வேலையை இரவிலும், படிப்பை அதிகாலையில் செய்யுமாறும் தமிழையும், மதியையும் பழக்கப்படுத்தியிருந்தார் சாந்தி. அதிகாலையில் படிப்பதே சிறந்தது என்பது அவரது நம்பிக்கை. சரி நாளைக்கு எழுதியதை பார்க்கிறேன் என்றவர். படுப்பதற்கு தேவையான வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.


அப்பொழுது அம்மா என்ற சத்தம் கேட்டது. ஐ தாத்தா வந்தாச்சு என்று ஓடினார்கள் பிள்ளைகள். ஓடி வந்த பிள்ளைகளை கால்களோடு சேர்ந்து அணைத்தார் பொன்னுசாமி. பின்னர் அவர்கள் இருவரையும் சிறிது நகர்த்தியவர், தனது மடித்து கட்டியிருந்த வேட்டியினை இறக்கிவிட்டு, அதிலிருந்த ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து பிரித்தார். முறுக்குகள் இருந்தன. அதை ஆளுக்கு ஒன்றாக கொடுத்தவர், மீதம் இருந்ததை, இந்தாம்மா சாந்தி வச்சிருந்து நாளைக்கு புள்ளைங்களுக்கு கொடு என்றார். அதை கையில் வாங்கிய சாந்தி, என்னப்பா இன்னிக்கு எங்க வேலை, நேரம் கழிச்சு வந்துருக்க என்றார். சாந்திக்கு பதில் சொல்ல அவர் வாயை திறக்கும் போதே வீட்டினுள் இருந்து வெளியே வந்தார் அன்னம்.


இவர்களை பார்த்து இவர்கள் அருகில் வந்தவர், நேரமா போய் படுங்க, காலைல பேசிக்கலாம், நீயும் வா சோத்த போட்டுட்டு நான் படுக்கணும் என்று கூறினார் பொன்னுசாமியிடம். அன்னத்தின் உடலின் அசதி அவர் பேச்சில் தெரிந்தது. அம்மா நீ போய் புள்ளைங்களோடு படு, நான் அப்பாவுக்கு சோறு போட்டுக்கறேன் என்று அன்னத்தையும், தமிழையும், மதியையும் அனுப்பி வைத்தார் சாந்தி.


அருகருகே வீட்டில் இருந்தாலும் தூங்கும் போது சாந்தி வீட்டிற்கு வெளியே தான் அனைவரும் தூங்குவார்கள். அவர்களுக்கு கட்டில் போடப்பட்டு இருக்கவும், அதில் படுத்த அன்னம் தமிழையும், மதியையும் தன்னருகில் படுக்க வைத்தார். அன்னம்மா எப்பவும் பாடுற பாட்டு பாடுங்க என்றாள் தமிழ். ஒருபக்கம் தமிழும், மறுபக்கம் மதியும் அவர் மேல் கால் போட்டபடி அவர் பக்கம் திரும்பி படுத்திருந்தார்கள்.


மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தார் அன்னம்,


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா


சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா


தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா


சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா


கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா


கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா


அப்போ… கலகலன்னு சிரிச்சுகிட்டு என்ன பாரம்மா


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு


நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு


கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு


நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு


கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது


ஹூஹூம் கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது


உனக்கு கொய்யா பழம் பறிச்சு தாரேன் அழுகக்கூடாது


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


அவர் பாடி முடிக்கவும் தமிழும் மதியும் உறங்கியிருந்தார்கள்.........
 
Messages
7
Reaction score
5
Points
1
ஆசை - 5



சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தவனின் அருகே நதியின் ரிப்போர்ட் வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த அவளின் பெயரை வருடியவன் மெல்ல பிரித்தான். உள்ளே அவளின் வயிற்றில் இருந்த சிசுவின் அழகான சிறிய புகைப்படங்கள் இருந்தது. அதனையே உற்று பார்த்தவனின் கண்கள் மெல்லக் கலங்கியது. தனது கைபேசியை எடுத்தவன் அந்தப் படங்களை எடுத்துக்கொண்டான். அன்றைய மற்ற வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான். நதியிடமே அதனைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம். ஆனால் இதன் மூலம் அவளுடன் சிறிது நேரம் செலவிட முடியும். அதனாலேயே பிறகு தருகிறேன் என்றும் கூறியிருந்தான். தங்கள் வீட்டின் முன் காரினை நிறுத்தியவன், தனது கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். பின் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு நதியின் வீட்டிற்கு சென்றான்.



இன்னும் கொஞ்சம் கொடுங்க கனகாம்மா பால் கொழுக்கட்டை ரொம்ப நல்ல இருக்குது. பாருங்க நான் ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் குட்டியும் என்ஜோய் பண்ணுது என்று கனகாவிடம் கூறியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் நதி. அந்த நேரத்தில் வீட்டின் மணி அடிக்கவும் நதிக்கு ஊட்டிக்கொண்டிருந்தவர், யாரு வந்துருப்பாங்க என்று கதவை திறக்கச்சென்றார்.



கதவை திறந்தவுடன் அங்கு நின்றிருந்த எட்வர்டை கண்டவர், இன் முகத்துடன் உள்ளே அழைத்துச் சென்றார். அவருக்கு ஒரு சிறிய புன்னகையை வழங்கியவன் அவர் பின் சென்றான். அங்கு சோபாவில் கால் நீட்டி அமர்ந்திருந்தவள், எட்வர்டை கண்டதும் சரியாக அமர முயன்றாள். நதி ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேணாம், என்று கூறிவிட்டு தனது கையில் இருந்த ரிப்போர்ட்டை அவளிடம் கொடுத்தான்.



அந்நேரம் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த கனகாம்மா, நதியிடம் இருந்த ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு, நதியின் உடல் நலனை பற்றி எட்வர்டிடம் கேட்டார். எட்வர்டுக்கு சிறிது தமிழ் புரியும், சிறிது காலமாக கற்க ஆரம்பித்திருந்தான். அதுவும் நதியின் உபயம். ஒருநாள் நதியிடம் வந்து தனக்கு தமிழ் சொல்லித்தருமாறு கேட்டான்.



அவனை ஆச்சர்யமாக பார்த்தவளிடம், தமிழ் ஒரு கிளாசிக்கல் லாங்குவேஜ்னு தெரியும். இப்போ இந்தியால நடக்குற எக்ஸ்கேவஷன்ல நிறைய கண்டுபிடிச்சிருக்காங்க. அதுனால எனக்கு தமிழ் படிக்க ஆர்வமா இருக்கு என்று கூறினான். அவனுக்குத் தெரியும் நதிக்கு தமிழ் என்றால் உயிரென்று. அவளிடம் நெருங்கவே இப்படி கூறியிருந்தான். முதலில் அவளுக்காக அவளின் மொழியை கற்க ஆரம்பித்தவன், சிறிது நாளில் அவனுக்கே மிகுந்த ஆர்வம் தோன்றிவிட்டது. தானும் நிறைய தேடி படிக்கத்தொடங்கியிருந்தான்.



கனகாம்மாவிடம் அவளுக்கு ஏதும் இல்லை, உடல் நன்றாக இருப்பதாக கூறியவன், நதியின் புறம் திரும்பினான். அவன் வருவதற்கு முன்பு தான் பால்கொழுக்கட்டை சாப்பிட்டிருந்ததால், அவள் உதடுகளின் மேல் சிறிது கோடு போல இருந்தது அது. அவளின் அருகில் டீபாய் மேல் இருந்த கிண்ணத்தையும் அப்போதுதான் பார்த்தான்.



நதியிடம் பேசியபடி, தன் கையில் இருந்த தண்ணீர் தம்ளரை அதன் அருகில் வைப்பவன் போல் சென்று, அந்த கிண்ணத்தில் இருந்த ஸ்பூனை லேசாக இடறிவிட்டான் யாரும் பார்க்காதபடி. உடனே அது அவன் மேல் கவிழ்ந்தது. அதில் இருந்த சிறிது பால் அவன் கையில் கொட்டியது. ஐயோ பார்த்து வைக்க கூடாதா உங்க கையில் எல்லாம் ஆகிடுச்சு என்று சற்று பதறினர் நதியும், கனகாம்மாவும். ஹேய் ஈசி ஈசி என்று சற்று கூறியவனின் கைகளை கழுவுவதற்காக சமையலறைக்கு போக சொன்னார் கனகா.



வேகமாக சென்றவன் தன் கடைக்கண்ணால் லேசாக பார்த்தான். யாரும் வரவில்லை என்றதும், தன் கையில் பட்டிருந்ததை அப்படியே வாய்க்கு எடுத்து சென்றான். ஒரு நொடி கண்களை மூடியவன் நினைவில் வந்தது நதியின் உதட்டின் மேல் இருந்த மெல்லிய கோடு. நினைவில் கரைந்தபடியே கையில் இருந்ததை உண்டு அந்தக் கணத்தை விரும்பி ரசித்தவன், விருப்பமே இல்லாமல் கண்களைத்திருந்தான்.



கைகளை கழுவி, வெளியே வரும்போது கனகா கொட்டியதை சுத்தப்படுத்திக்கொண்டு இருந்ததார். இருவரிடமும் விடைபெற்று அங்கிருந்து வெளியேறியவன், அழகிய முறுவல் ஒன்றை முகத்தில் தவளவிட்டபடி தன் வீட்டிற்கு சென்றான். குளித்து உடை மாற்றி தனது அறைக்கு உணவை அழைத்து உண்டவனுக்கு, இந்த உணவு சுவைக்கவே இல்லை.



தனது படுக்கையில் வந்து படுத்தவன், தனது கைபேசியை எடுத்து, இன்று எடுத்த குழந்தையின் படத்தையும், முன்னர் வைத்திருந்த நதியின் படத்தையும் இணைத்தான். குழந்தையின் படத்தையும் மிருதுவாக வருடியவன், மெல்லிய முத்தம் வைத்தான். பின்பு அந்த படத்தை பெரியதாக்கி நதியின் முகம் அந்த கைபேசியின் திரை முழுவதும் வருமாறு வைத்தவன், என்னை பைத்தியமாக்குற ஏஞ்சல். உன்கிட்ட நிறைய பேசணும். ஆனா இப்போ முடியாது, அதுக்கான காலம் சீக்கிரம் வரும். நீ என்கிட்டே வந்த அப்பறம் என்றவனின் பழுப்பு நிறக்கண்கள் பல மின்னல்களையும், இதயம் பல இடிகளையும் தோற்றுவித்தது.



அந்த உணர்வுகளுடன் தனது கைபேசியில் இருந்த ஒரு தமிழ்ப் பாடலை தேடினான். பக்கமாகத் தான் அந்த பாட்டை கேட்டிருந்தான். அதுவும் தமிழ் கற்கும் ஆவலில். பாடலை ஒலிக்கவிட்டான். தனக்கு பிடித்த வரிகள் வந்தவுடன், வார்த்தைகள் வராமல் போனாலும் அந்த வரிகள் புரிந்தவன், ஹம் செய்தபடியே உறங்கிப்போனான்.



" தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்"
 

Latest posts

New Threads

Top Bottom