Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - Comments

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
நல்ல தொடக்கம்.. முதல் பகுதியில் சில பிள்ளைகள் உள்ளன.. திரும்ப படித்து பார்க்கவும்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
கௌதமிராஜா

Active member
Vannangal Writer
Messages
70
Reaction score
36
Points
33
அத்தியாயம் 1

இருள் சூழ்ந்த அந்த இரவு வேளையில் தீப்பந்தத்தின் உதவியோடு சிலர் நடந்து சென்று கொண்டிருக்க அவர்களின் முன்னால் மீசை பெரிதாக வைத்துக் கொண்டு வெள்ளை வேட்டி , சட்டை அணிந்து கொண்டு கம்பீரமாக அனைவரையும் வழி நடத்தி சென்று கொண்டிருந்தார் கடம்பையன். .

அனைவரின் முன் சென்று கொண்டிருந்த கடம்பையனின் நடை சற்று தளர்ந்து காணப்பட்டது.

காரணம், அவர் தன் தலையில் பெட்டி ஒன்றை வைத்திருந்தார். அவர் பெட்டியை தன் தலையில் தாங்கிக் கொண்டு சற்று முன்னே செல்ல, பலர் அவர் பின்னால் பூ, பழம், மாலை , போன்ற தட்டுகளோடு சென்று கொண்டிருந்தனர்.

இப்படியாக படை சூழ சென்று கொண்டிருந்த கடம்பையன் ஒரு இடத்தில் நிற்க மற்றவரும் நின்றனர்.

கடம்பையன் நின்ற இடத்தின் எதிரே 6 அடி உயரத்தில் பெரிய அய்யனார் சிலை ஒன்று வீற்றிருக்க அதை தன் கண்களால் வணங்கியவர் , அந்த சிலையின் அருகே சென்று அதை தன் கைகளில் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

பின்பு தன் தலையில் உள்ள பெட்டியை அவர் இறக்க முயல , அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்தது கத்தி ஒன்று. அது சரியாக கடம்பையனின் நெஞ்சை குத்தி நின்றது. நெஞ்சில் கத்தி குத்தியதும் வேகமாக கீழ் நோக்கி சரிந்தார் கடம்பையன். அவரை தொடர்ந்து அந்த பெட்டியும் மண்ணில் விழுந்தது. அந்த பெட்டி மண்ணில் விழுந்ததை கண்ணுற்ற கடம்பையன் நெஞ்சில் தாங்கி நின்ற பெட்டியை கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் வழிந்த ரத்ததோடு அந்த பெட்டியின் அருகே சென்றார்.

அவர் அந்த பெட்டியின் அருகே செல்வதை பார்த்த அங்கிருந்த ஒருவன் அவரை அந்த பெட்டியின் அருகில் செல்ல விடாமல் தடுக்க முயல , அங்கிருந்த மற்றொருவன் , கடம்பையனின் ஆள் அவரை தடுத்தவனை அடிக்க ஆரம்பித்தான்.

கடம்பையனின் அடியாள் அவனை அடிக்க ஆரம்பித்ததும் அங்கு பல பேர் கடம்பபையனையும் அவனது ஆட்களையும் சூழ நின்றனர்.

அதில் ஒருவன் கடம்பையனை தாக்க முன் வர , கடம்பையனின் அடியாள் அவனை அடிக்க ஆரம்பித்தான். அதன்பின் மற்றவர்களும் தங்களை ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.

அந்த இடம் சற்றும் நேரத்திற்குள் போர்களமாகியது.

இங்கு அனைவரும் சண்டையிட்டு கொண்டிருக்க கடம்பையன் அந்த சிலையருகே சென்று ஏதோ செய்துவிட்டு வர, அவரை எதிர் கொண்டார் சிங்கமுத்து, கடம்பையனின் எதிரி.

சிங்கமுத்துவை பார்த்து கடம்பையன் ஏதோ சொல்ல வர , ஆனால் சிங்கமுத்துவோ அவரை பேசவிடாமல் அவரை கீழே தள்ளி அவரின் கழுத்தில் தன் காலை வைத்து மிதித்தார்.

சிங்கமுத்து தன் கழுத்தில் காலை வைத்து மிதித்ததும் அதை தட்டிவிட முயன்றார் கடம்பையன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. கடம்பையன் மூச்சுக்கு திணற ஆரம்பித்தார். கடம்பையன் படும் அவஸ்த்தையை பார்த்து ரசித்த சிங்கமுத்து கடம்பையனைப் பார்த்து கத்தினார்

“ என்ன கடம்பா ! உசிரு போக மாட்டிது போல ? நீ கவலைபடாத கடம்பா . நான் எதுக்கு இருக்கேன் ? இப்ப உன் உயிரை போக வச்சிடுறேன் பார் ! “ என்று சொல்லியபடி கடம்பையனின் கழுத்தை மேலும் நெறித்தார் சிங்கமுத்து. சிங்கமுத்துவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சுக்கு திணறிய கடம்பையன் தன் வலுவை ஒன்றாக திரட்டி அவரை கீழே தள்ளினார் .

கீழே விழுந்த சிங்கமுத்து சுதாரிப்பதற்குள் தன் நெஞ்சில் இருந்த கத்தி கொண்டு சிங்கமுத்துவின் நெஞ்சினை குத்தினார் கடம்பையன்.

இதை சற்றும் எதிர்பாராத சிங்கமுத்து அந்த கத்தியை எடுக்க முயல அவரை எடுக்க விடாமல் நெஞ்சில் கத்தி மேலும் இறக்கினார் கடம்பையன்.

கடம்பையனின் தாக்குதலை சமாளிக்க முடியாத சிங்கமுத்து கோபம் கொண்டு கர்ஜித்தார்

“ கடம்பா ! என்றைக்கு இருந்தாலும் அந்த பெட்டி எனக்கு தான் சொந்தம். அதை கண்டுபிடிச்சு என் பரம்பரைக்கு நான் அதை சொந்தமாக்கியே தீர்வேன்டா ! என்று அவர் சொல்ல , அதை கேட்ட கடம்பையனோ

“ சிங்கமுத்து ! என் சந்ததி இருக்கும்வரை அது நடக்காதுடா .என்றைக்கு இருந்தாலும் அந்த பெட்டி என் வம்சத்தை விட்டு போகாது. போகவும் விட மாட்டேன் ! “ என்று சொல்லியபடி கடம்பையன் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் . .

அவரை தொடர்ந்து சிங்கமுத்துவும் இறந்துவிட, அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருக்கொருவர் வீழ்த்திவிட்டு இறந்து கிடந்தனர்.

பல உயிர்களின் மூச்சுக்காற்றை காவு வாங்கி அந்த இடம் மயானமாக காட்சியளித்தது.

*****

அந்த கார் செட்டில் அங்காங்கே கார்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருக்க , அதன் அருகே உள்ள அறையிலிருந்து ஒருவனின் அலறல் சத்தம் கேட்டது. .

அந்த சின்ன அறையின் உள்ளே இருந்த குண்டு பல்பின் வெளிச்சத்தில் ஒருவனை இரண்டு பேர் அடித்துக் கொண்டிருந்தனர். .

இருவர் அவனை அடித்துக் கொண்டிருக்க வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தான் அவன்.

அப்போது செட்டின் சட்டரை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்., பிசினஸ் டைகூன் , லயன் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரித்விதன்.

கருமை நிற சட்டை அணிந்து கொண்டு கருமை நிற பேண்ட் போட்டு கம்பீரமாக வந்து நின்றான் அவன். அவன் உள்ளே நுழைந்ததும் இருவரும் விலகிக்கொள்ள அடி வாங்கிக் கொண்டிருந்தவன் அருகில் வந்தான் லயன்.

லயனைப் பார்த்ததும் அவன் கத்தினான்.

என்ன ? மிஸ்டர் லயன் என்னை அடிச்சு அந்த டெண்டரை கைப்பற்றலாம்னு நினைக்குறீயா? அது முடியாது ? நீ அடிச்சாலும் நாங்க கோட் பண்ண மதிப்பை நான் சொல்ல மாட்டேன் . எங்க மேத்தா சார் கிட்ட நான் விஸ்வாசியா தான்டா இருப்பேன் என்று அவன் சிலிர்த்துக் கொண்டு சொல்ல ,அவனை தன் ஷீ அணிந்திருந்த கால்களால் எட்டி மிதித்தான் லயன்.

லயன் மிதித்ததும் அருகில் இருந்த சுவரில் முட்டி மோதி விழுந்தான் அவன். அவன் தலையில் பலமாக அடிபட அவன் தலையில் இருந்து ரத்தம் சொட்டியது. அப்போது லயன் அருகில் இருந்த அடியாட்களை கண்காட்ட அவர்கள் அவனை தூக்கி ரித்விதன் முன் நிறுத்தினர்.

அவனை பார்த்த ரித்விதன் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.

அவனை பற்றி கண்ணத்தில் மாறி மாறி அறைந்த ரித்விதன்

“ டெண்டர்க்காக உன்னை கடத்திட்டு வந்தேன்னு நினைச்சீயாடா ? முட்டாள் ! பெண்டர் விசயம் எல்லாம் லயனுக்கு சர்வ சாதாரணம். என்று அவன் கூற , அவன் திகைத்தான்.

“ அப்ப ? எதற்கு இங்க என்னை கடத்திட்டு வந்திருக்க ? என்று அவன் கேட்ட லயன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்.

“ டெண்டர்க்காக நீ செய்ய இருந்த காரியத்திற்காக தான்டா நீ இங்க வந்து உட்கார்ந்து இருக்க ? என்று அவன் உரும அதை கேட்ட அவன் சிரித்தான்.

“ ஓ ! அதுவா விசயம் ? ஆமா அவள் மேல் உனக்கென அப்படி ஒரு கரிசனம் ? அவ அழகா ... “ என்று அவன் ஏதோ சொல்ல வர , மறு நிமிடம் அவன் வாயில் தொட்டா இறக்கப்பட்டது.

சுவர் எல்லாம் ரத்தம் தெறிக்கப்பட்டு தன் உயிரை விட்டிருந்தான் அவன்.

அதை பார்த்த லயன்

“ அவளை பற்றி பேச இங்கு எவனுக்கும் உரிமையில்லைடா ! “ என்று சொன்னவன் துப்பாக்கியை மேல் நோக்கி சுட , தோட்டாவின் சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரோலித்தது.

அவன் முகத்தில் பகை தாண்டவமாட அதையும் மீறி அவன் மனக்கண்ணில் மின்னி மறைந்ததும் பெண்ணவளின் முகம்.

*****

அதிகாலை நேரம் தன் பெட்டில் சுகமாய் துயில் கொண்டிருந்தாள் பெண்ணவள். அப்போது அவள் அருகில் இருந்த அலாரம் ஒலி எழுப்ப , அந்த சத்தத்தில் எழுந்தவள், தன் கண்களை திறவாமலேயே அந்த அலாரத்தை எடுத்து எதிரில் இருந்த புகைப்படத்தை நோக்கி வீசினாள். அந்த புகைபடத்தின் கண்ணாடி உடைந்து அதில் இருந்தவனின் படம் சற்று கசங்கியது.

பெட்டில் இருந்து மெதுவாக எழுந்தவள் மெதுவாக அந்த சுவரின் அருகே சென்று அங்கிருந்த ஒரு பெரியவரின் புகைபடத்தை வணங்கினாள்

குட் மார்னிங் டேட் ! என்று சொன்னவள் அதன் அருகே இருந்த மற்றொரு புகைபடத்தின் அருகே சென்று நின்று, கண்ணாடி உடைந்து அலங்கோலமாக காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த புகைபடத்தை திருப்தியுற கண்ணுற்றாள். பின் அதை தடவியபடியே பேச ஆரம்பித்தாள் நீரூபமா, லீடிங் பிசினஸ் மேக்னட் இன் லெதர் பேக் எக்ஸ்பர்ட்.

நீரூபமா தன் தந்தையின் தொழிலை கையில் எடுத்து அதை திறம்பட நடத்தி வருகிறாள்.

தன் தந்தையான நாதன் தோல் பதனிடும் ஆலையை கரூரில் ஆரம்பித்து அதை திறம்பட நடத்த ஆரம்பித்தார். பின்பு அவர் அதில் வளர்ச்சியடைந்து லெதர் பேக் தயாரித்திடும் ஆலையை நிறுவிடும் அளவிற்கு வளர்ச்சியடைந்தார்.

ஆனால் அவர் திடீரென்று எதிர்பாராத கார் விபத்தில் இறந்துவிட, அது நீரூபமாவிற்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.

கல்லூரி படிப்பின் இறுதியில் இருந்தவளுக்கு இது பேரதிர்ச்சி ஆக, தன்னை தானே தேற்றிக் கொண்டவள் தன் தந்தையின் தொழிலை தனதாக ஏற்றுக் கொண்டாள்.

தொழிலில் இறங்கிய நீரூபமா முதலில் சற்று திணறினாள். பின்பு நாளடைவில் தேறி தற்போது வெளிநாட்டுற்க்கு தோல்களை ஏற்றுமதி செய்திடும் அளவிற்கு முன்னேறிவிட்டாள்.

மேத்தாவின் துணையோடு அவள் தொழிலில் முன்னேறிக் கொண்டிருக்க, அதற்கு ஆப்பு வைக்கவென வந்து சேர்ந்துள்ளான் ரித்விதன்.

ரித்விதனின் புகைப்படத்தைப் பார்த்தபடி அனைத்தையும் நினைத்துப் பார்த்தவள் அவனது புகைபடத்தை பார்த்தபடியே பேச ஆரம்பித்தாள்.

“ குட் மார்னிங் ! யூ ராஸ்கல் ! ம்ம்ம் … நீயும் நானும் இப்ப வர சரி சமமாக இருக்கோம் . இன்னைக்கு நீ மட்டும் என்னை ஜெயிச்சுட்டா என்னைவிட லீடிங்கா ஆகிடுவ. . அதற்கு நான் நடக்க விட மாட்டேன். இன்னைக்கு நான் உன்னை ஜெயிச்சே ஆகணும் ! “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் வேகமாக போனை எடுத்து தன் செக்ரட்ரிக்கு அழைத்தாள். அவள் போனை எடுத்தது தான் தாமதம் நீரூபமா பேச ஆரம்பித்தாள்.

“ சாவி ! இன்னைக்கு அந்த இடத்திற்கு அவன் வரக்கூடாது .நான் சொன்னது புரிஞ்சுதா ? “ என்று நீரூபமா சொல்ல அதை கேட்ட சாவி என்ற சாவித்ரியோ

சரி மேம் ! என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

*****

காலையில் கிளம்பி வெளியே வந்த ரித்விதன் தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் . அது சற்று நேரம் தான். அதன்பின் அவன் கார் வேகமெடுத்து வெளியே வர , அவன் காரின் வரவிற்காக காத்துக் கொண்டு இருப்பது போல 4 கார்கள் அவனை பாலோ செய்தது. முன்னால். பின்னால், சைடு என்று அந்த கார்கள் பாலோ செய்ய அதை சற்றும் கண்டுகொள்ளாமல் ஓட்டினான் லயன்.

அப்போது ஒரு கார் அவனை இடிக்க, அதை மறித்து ஓட்டிய ரித்விதன் தன் காரின் வேகத்தை அதிகரித்து முன்னால் இருந்த காரை இடித்து தள்ள, அந்த கார் அருகில் இருந்த மரத்தில் இடித்து நின்றது.

இப்படியாக தன்னை பின் தொடர்ந்த கார்களை லாவகமாக திசை திருப்பி சென்றுவிட்டான் லயன்.

லயனின் செயல்களை தன் செல்போன் மூலம் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெரியவர் தன் போனில் ஓடிக் கொண்டிருந்த. வீடியோ நின்றதும்

சே! என்று போனை தூக்கிப் போட்டு உடைத்தார்.

அப்போது அந்த பெரியவரின் அருகில் வந்தாள் நீரூபமா

“ மேத்தா ! அங்கிள் ! இவனை ஆள் பலம் வச்சி தோற்கடிக்க முடியாது . இவனை தோற்கடிக்க அறிவு பலம் வேணும் . நீங்க கவலைப்படாதீங்க அங்கிள் அவனை என்கிட்ட விடுங்க. நான் பார்த்துக்குறேன் “ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள் நீரூபமா .

பகை வெல்லுமா ? உறவு நிலைக்குமா ?

விடை விரைவில்
இன்ட்ரஸ்டிங் மா... வாழ்த்துக்கள்... மருதாணி பூவே
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
எக்கோய் ட்ரைலரே சும்மா அள்ளுது. எப்போ எபி போடுவீங்க. பாரி-வான்நிலா, ரித்விதன்-நிரூபமா செம்ம பேரிங். பாரி, ரிது ரெண்டுபேரும் என்ன ரொம்ப கவருராங்க. சூப்பர் டியர். உங்க கதைக்கு வாழ்த்துக்கள் 💝💝💝.
😍😍😍😍நன்றிங்கோ
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வாவ் வாவ் ட்ரைலர் படிச்ச அப்போ சொன்னதுதான். அருமை அருமை அருமை அருமையை தவிர என் நா உதிர்க்க வார்த்தையே இல்லை.

அந்த பெட்டில அப்டி என்னதான் இருந்துச்சு டியர். கடம்பையன் பேர் ரொம்ப புதுசு. எங்கேயும் கேள்விப்படாத ஒன்னு. அந்த பெட்டி ரகசியம் தாங்கல.

லயன் ஐ லவ் தட் கேரக்டர். ரொம்ப புடிச்சுருந்துச்சு. நிரூ அவன தோக்க வைக்குறேன்னு நீ தோத்துடாத.

டியர் பாரி, நிலா எங்க? அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாமே? ஐ பீல் சேட்.

நா எதிர்பார்த்த மாதிரி தரமான ஆரம்பம். வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி டியர் 😘😘😘
Thanks ma for ur wonderful review.
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

Thanks ma 😍😍😍
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வென்றிடுவியோ? வீழ்ந்திடுவாயோ?

கதையில் இருந்து சிறு டீசர்

" கடம்பா ! என்றைக்கு இருந்தாலும் அந்த பெட்டி என் பரம்பரைக்கு தான்டா ! "என்று அவர் சொல்ல , அதை கேட்ட கடம்பையனோ

“ சிங்கமுத்து ! என் சந்ததி இருக்கும்வரை அது நடக்காதுடா ! "என்று சொல்லியபடி கடம்பையன் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் . .

அவரை தொடர்ந்து சிங்கமுத்துவும் இறந்துவிட, அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருக்கொருவர் வீழ்த்திவிட்டு இறந்து கிடந்தனர்.

#####$$$$$$$

பங்களா போன்ற வீட்டின் முன் காரை நிறுத்தினான் அவன்.

வீட்டின் உள்ளே சென்றவன் அந்த ரூமை நோக்கிச் செல்ல , அந்த ரூமின் வெளியே நின்று காவல் காத்துக் கொண்டிருந்தவன் அவனுக்கு தலையசைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

வெள்ளை நிற வேட்டியும் , சட்டையும் அணிந்து கொண்டு , காப்பினை தன் கைகளில் ஏற்றி விட்டபடி, தன் முகத்தில் இருக்கும் மீசையை முறுக்கிய வண்ணம் கம்பீரமாக நின்றிருந்த பாரி , பெண்ணவளின் பயத்தை ரசித்தபடியே அவள் அருகினில் சென்றான் . அவன் அருகில் வந்ததும் கூசிய கண்களை திறந்து மூடியபடியே அவனை பார்த்த பெண்ணவள் கோபத்தில் கத்தினாள்

“ தினமும் இருள் மட்டுமே எனக்கு தண்டனையா கொடுக்கும் உன் பழிவெறி இன்னும் உன்னை விட்டு போகலையா ? இப்ப என்ன சித்ரவதை செய்ய இங்க நீ வந்திருக்க ? "என்று கத்தினாள் வான்நிலா

வான்நிலா அப்படி கேட்டதும் அவளை அனு அனுவாக ரசித்தான் பாரி.
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
அத்தியாயம் 1

இருள் சூழ்ந்த அந்த இரவு வேளையில் தீப்பந்தத்தின் உதவியோடு சிலர் நடந்து சென்று கொண்டிருக்க ,அவர்களின் முன்னால் மீசை பெரிதாக வைத்துக் கொண்டு வெள்ளை வேட்டி , சட்டை அணிந்து கொண்டு கம்பீரமாக அனைவரையும் வழி நடத்தி சென்று கொண்டிருந்தார் கடம்பையன். .

அனைவரின் முன் சென்று கொண்டிருந்த கடம்பையனின் நடை சற்று தளர்ந்து காணப்பட்டது.

காரணம், அவர் தன் தலையில் பெட்டி ஒன்றை வைத்திருந்தார். அவர் பெட்டியை தன் தலையில் தாங்கிக் கொண்டு சற்று முன்னே செல்ல, பலர் அவர் பின்னால் பூ, பழம், மாலை , போன்ற தட்டுகளோடு அவர் பின்னால் சென்று கொண்டிருந்தனர்.

இப்படியாக படை சூழ சென்று கொண்டிருந்த கடம்பையன் ஒரு இடத்தில் நிற்க மற்றவரும் நின்றனர்.

கடம்பையன் நின்ற இடத்தின் எதிரே 6 அடி உயரத்தில் பெரிய அய்யனார் சிலை ஒன்று வீற்றிருக்க அதை தன் கண்களால் வணங்கியவர் , அந்த சிலையின் அருகே சென்று அந்த சிலையை தன் கைகளில் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

பின்பு தன் தலையில் உள்ள பெட்டியை அவர் இறக்க முயல , அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்தது கத்தி ஒன்று. அது சரியாக கடம்பையனின் நெஞ்சை குத்தி நின்றது. நெஞ்சில் கத்தி குத்தியதும் வேகமாக கீழ் நோக்கி சரிந்தார் கடம்பையன். அவரை தொடர்ந்து அந்த பெட்டியும் மண்ணில் விழுந்தது. அந்த பெட்டி மண்ணில் விழுந்ததை கண்ணுற்ற கடம்பையன் நெஞ்சில் தாங்கி நின்ற கத்தியை கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தோடு அந்த பெட்டியின் அருகே சென்றார்.

அவர் அந்த பெட்டியின் அருகே செல்வதை பார்த்து எங்கிருந்தோ வந்த ஒருவன், அவரை அந்த பெட்டியின் அருகில் செல்ல விடாமல் தடுக்க முயல , அப்போது கடம்பையனின் ஆள் அவனை தடுக்க அடிக்க ஆரம்பித்தான்.

கடம்பையனின் அடியாள் அவனை அடிக்க ஆரம்பித்ததும் வேகமாக அவனிடமிருந்து தப்பித்து சென்றவன் நிறைய் ஆட்களை கூட்டுக் கொண்டு வந்தான். சற்று நேரத்தில் அங்கு பல பேர் கடம்பையனையும் அவனது ஆட்களையும் சூழ நின்றனர்.

அதில் ஒருவன் கடம்பையனை தாக்க முன் வர , கடம்பையனின் அடியாள் அவனை மறுபடியும் தாக்க ஆரம்பித்தான். அதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் தங்களை ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.

இப்படியாக அந்த இடம் சற்றும் நேரத்திற்குள் போர்களமாகியது.

இங்கு அனைவரும் சண்டையிட்டு கொண்டிருக்க, கடம்பையன் மட்டும் அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு தனித்து அந்த சிலையின் அருகே சென்றார். சற்று நேரத்தில் பெட்டியில்லாமல் திரும்பி வந்தவரை எதிர் கொண்டார் சிங்கமுத்து, கடம்பையனின் எதிரி.

சிங்கமுத்துவை பார்த்து கடம்பையன் ஏதோ சொல்ல வர , ஆனால் சிங்கமுத்துவோ அவரை பேசவிடாமல் அவரை கீழே தள்ளி அவரின் கழுத்தில் தன் காலை வைத்து மிதித்தார்.

சிங்கமுத்து தன் கழுத்தில் காலை வைத்து மிதித்ததும் அதை தட்டிவிட முயன்றார் கடம்பையன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. சற்று நேரத்தில் கடம்பையன் மூச்சுக்கு திணற ஆரம்பித்தார். கடம்பையன் படும் அவஸ்த்தையை பார்த்து ரசித்த சிங்கமுத்து கடம்பையனைப் பார்த்து கத்தினார்

“ என்ன கடம்பா ! உசிரு போக மாட்டிங்கிது போல ? நீ கவலைபடாத கடம்பா . நான் எதுக்கு இருக்கேன் ? இப்ப உன் உயிரை போக வச்சிடுறேன் பார் ! “ என்று சொல்லியபடி கடம்பையனின் கழுத்தை மேலும் நெறித்தார் சிங்கமுத்து. சிங்கமுத்துவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சுக்கு திணறிய கடம்பையன் தன் வலுவை ஒன்றாக திரட்டி அவரை கீழே தள்ளினார் .

கீழே விழுந்த சிங்கமுத்து சுதாரிப்பதற்குள் தன் நெஞ்சில் இருந்த கத்தி கொண்டு சிங்கமுத்துவின் நெஞ்சினை குத்தினார் கடம்பையன்.

இதை சற்றும் எதிர்பாராத சிங்கமுத்து அந்த கத்தியை எடுக்க முயல அவரை எடுக்க விடாமல் அவரது நெஞ்சினில் கத்தியை மேலும் இறக்கினார் கடம்பையன்.

கடம்பையனின் தாக்குதலை சமாளிக்க முடியாத சிங்கமுத்து கோபம் கொண்டு கர்ஜித்தார்

“ கடம்பா ! என்றைக்கு இருந்தாலும் அந்த பெட்டி எனக்குத் தான் சொந்தம். அதை கண்டுபிடிச்சு என் பரம்பரைக்கு நான் அதை சொந்தமாக்கியே தீர்வேன்டா ! என்று அவர் சொல்ல , அதை கேட்ட கடம்பையனோ

“ சிங்கமுத்து ! என் சந்ததி இருக்கும்வரை அது நடக்காதுடா .என்றைக்கு இருந்தாலும் அந்த பெட்டி என் வம்சத்தை விட்டு போகாது. போகவும் விட மாட்டேன் ! “ என்று சொல்லியபடி கடம்பையன் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் . .

அவரை தொடர்ந்து சிங்கமுத்துவும் இறந்துவிட, அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருக்கொருவர் வீழ்த்திக் கொண்டு இறந்து கிடந்தனர்.

பல உயிர்களின் மூச்சுக்காற்றை காவு வாங்கி அந்த இடம் மயானமாக காட்சியளித்தது.

*****

அந்த கார் செட்டில் அங்காங்கே கார்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருக்க , அதன் அருகே உள்ள அறையிலிருந்து ஒருவனின் அலறல் சத்தம் கேட்டது. .

அந்த சின்ன அறையின் உள்ளே இருந்த குண்டு பல்பின் வெளிச்சத்தில் ஒருவனை இரண்டு பேர் அடித்துக் கொண்டிருந்தனர். .

இருவர் அவனை அடித்துக் கொண்டிருக்க வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தான் அவன்.

அப்போது செட்டின் சட்டரை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்., பிசினஸ் டைகூன் , லயன் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரித்விதன்.

கருமை நிற சட்டை, கருமை நிற பேண்ட் அணிந்து கொண்டு கம்பீரமாக வந்து நின்றான் அவன். அவன் உள்ளே நுழைந்ததும் இருவரும் விலகிக்கொள்ள அடி வாங்கிக் கொண்டிருந்தவன் அருகில் வந்தான் லயன்.

லயனைப் பார்த்ததும் அவன் கத்தினான்.

என்ன ? மிஸ்டர் லயன்? என்னை அடிச்சு அந்த டெண்டரை கைப்பற்றலாம்னு நினைக்குறீயா? அது உன்னால் முடியாது ? நீ அடிச்சாலும் நாங்க கோட் பண்ண மதிப்பை உன்கிட்ட நான் சொல்ல மாட்டேன்டா

. எங்க மேத்தா சார் கிட்ட தான் நான் விஸ்வாசியா இருப்பேன் என்று அவன் சிலிர்த்துக் கொண்டு சொல்ல ,அவனை தன் ஷீ அணிந்திருந்த கால்களால் எட்டி மிதித்தான் லயன்.

லயன் மிதித்ததும் அருகில் இருந்த சுவரில் மோதி விழுந்தான் அவன். மோதிய வேகத்தில் அவன் தலையில் பலமாக அடிபட்டு, அவன் தலையில் இருந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அப்போது லயன் அருகில் இருந்த அடியாட்களை கண்காட்ட அவர்கள் அவனை தூக்கி ரித்விதனின் முன் நிறுத்தினர்.

அவனை பார்த்த ரித்விதன் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.அவனை பற்றி கண்ணத்தில் மாறி மாறி அறைந்த ரித்விதன்

“ டெண்டர்க்காக உன்னை கடத்திட்டு வந்தேன்னு நினைச்சீயாடா ? முட்டாள் ! பெண்டர் விசயம் எல்லாம் லயனுக்கு சர்வ சாதாரணம். " என்று அவன் கூற , அதைக் கேட்டவனோ திகைத்தான்.

“ அப்ப ? எதற்கு என்னை கடத்திட்டு வந்திருக்க ? " என்று அவன் கேட்க லயன் சிலிர்த்துக் கொண்டே பதில் சொன்னான்.

“ டெண்டர்க்காக நீ செய்ய இருந்த காரியத்திற்காக தான்டா நீ இப்ப இங்க வந்து உட்கார்ந்து இருக்க "என்று லயன் உரும அதை கேட்ட அவன் சிரித்தான்.

“ ஓ ! அதுவா விசயம் ? ஆமா அவள் மேல் உனக்கென அப்படி ஒரு கரிசனம் ? அவ அழகா ... “ என்று அவன் ஏதோ சொல்ல வர , மறு நிமிடம் அவன் வாயில் தோட்டா இறக்கப்பட்டது.

சுவர் எல்லாம் ரத்தம் தெறிக்கப்பட்டு தன் உயிரை விட்டிருந்தான் அவன்.

அதை பார்த்த லயன்

“ அவளை பற்றி பேச இங்கு எவனுக்கும் உரிமையில்லைடா ! “ என்று சொன்னவன் துப்பாக்கியை மேல் நோக்கி சுட , தோட்டாவின் சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரோலித்தது.

அவன் முகத்தில் பகை தாண்டவமாட அதையும் மீறி அவன் மனக்கண்ணில் மின்னி மறைந்தது பெண்ணவளின் முகம்.

*****

அதிகாலை நேரம் தன் பெட்டில் சுகமாய் துயில் கொண்டிருந்தாள் பெண்ணவள். அப்போது அவள் அருகில் இருந்த அலாரம் ஒலி எழுப்ப , அந்த சத்தத்தில் எழுந்தவள், தன் கண்களை திறவாமலேயே அந்த அலாரத்தை எடுத்து எதிரில் இருந்த புகைப்படத்தை நோக்கி வீசினாள்.

அந்த புகைபடத்தின் கண்ணாடி உடைந்து அதில் இருந்தவனின் படம் சற்று கசங்கியது.

அதன்பின் பெட்டில் இருந்து மெதுவாக எழுந்தவள் அந்த சுவரின் அருகே சென்று அங்கிருந்த ஒரு பெரியவரின் புகைபடத்தை வணங்கினாள்

குட் மார்னிங் டேட் ! என்று சொன்னவள் அதன் அருகே இருந்த மற்றொரு புகைபடத்தின் அருகே சென்று நின்று, கண்ணாடி உடைந்து அலங்கோலமாக காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த புகைபடத்தை திருப்தியுற கண்ணுற்றாள். பின் அதை தடவியபடியே பேச ஆரம்பித்தாள் நீரூபமா, லீடிங் பிசினஸ் மேக்னட் இன் லெதர் பேக் எக்ஸ்பர்ட்.

நீரூபமா தன் தந்தையின் தொழிலை கையில் எடுத்து அதை திறம்பட நடத்தி வருகிறாள்.

தன் தந்தையான நாதன் தோல் பதனிடும் ஆலையை கரூரில் ஆரம்பித்து அதை திறம்பட நடத்த ஆரம்பித்தார். பின்பு அவர் அதில் வளர்ச்சியடைந்து லெதர் பேக் தயாரித்திடும் ஆலை ஒன்றை நிறுவிடும் அளவிற்கு வளர்ச்சியடைந்தார்.

ஆனால் அவர் திடீரென்று எதிர்பாராத கார் விபத்தில் இறந்துவிட, அது நீரூபமாவிற்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.

கல்லூரி படிப்பின் இறுதியில் இருந்தவளுக்கு இது பேரதிர்ச்சி ஆக, தன்னை தானே தேற்றிக் கொண்டவள் தன் தந்தையின் தொழிலை தனதாக ஏற்றுக் கொண்டாள்.

தொழிலில் இறங்கிய நீரூபமா முதலில் சற்று திணறினாள். பின்பு நாளடைவில் தேறி தற்போது வெளிநாட்டிற்கு தோல்களை ஏற்றுமதி செய்திடும் அளவிற்கு முன்னேறிவிட்டாள்.

மேத்தாவின் துணையோடு அவள் தொழிலில் முன்னேறிக் கொண்டிருக்க, அதற்கு ஆப்பு வைக்கவென வந்து சேர்ந்துள்ளான் ரித்விதன்.

ரித்விதனின் புகைப்படத்தைப் பார்த்தபடி அனைத்தையும் நினைத்துப் பார்த்தவள் அவனது புகைபடத்தை பார்த்தபடியே பேச ஆரம்பித்தாள்.

“ குட் மார்னிங் ! யூ ராஸ்கல் ! ம்ம்ம் … நீயும் நானும் இப்ப வர சரி சமமாக இருக்கோம் . இன்னைக்கு நீ மட்டும் என்னை ஜெயிச்சுட்டா என்னைவிட லீடிங்கா ஆகிடுவ. . அதற்கு நான் நடக்க விட மாட்டேன். இன்னைக்கு நான் உன்னை ஜெயிச்சே ஆகணும் ! “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் வேகமாக போனை எடுத்து தன் செக்ரட்ரிக்கு அழைத்தாள். அவள் போனை எடுத்தது தான் தாமதம் நீரூபமா பேச ஆரம்பித்தாள்.

“ சாவி ! இன்னைக்கு அந்த இடத்திற்கு அவன் வரக்கூடாது .நான் சொன்னது புரிஞ்சுதா ? “ என்று நீரூபமா சொல்ல அதை கேட்ட சாவி என்ற சாவித்ரியோ

சரி மேம் ! என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

*****

காலையில் கிளம்பி வெளியே வந்த ரித்விதன் தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் . அது சற்று நேரம் தான். அதன்பின் அவன் கார் வேகமெடுத்து வெளியே வர , அவன் காரின் வரவிற்காக காத்துக் கொண்டு இருப்பது போல 4 கார்கள் அவனை பாலோ செய்தது. முன்னால். பின்னால், சைடு என்று அந்த கார்கள் பாலோ செய்ய அதை சற்றும் கண்டுகொள்ளாமல் ஓட்டினான் லயன்.

அப்போது ஒரு கார் அவனை இடிக்க, அதை மறித்து ஓட்டிய ரித்விதன் தன் காரின் வேகத்தை அதிகரித்து முன்னால் இருந்த காரை இடித்து தள்ள, அந்த கார் அருகில் இருந்த மரத்தில் இடித்து நின்றது.

அதன்பின் இடப்பக்கம், வலப்பக்கம் சென்ற கார்களையும் இடித்தவன், தன்னை பின் தொடர்ந்த கார்களை லாவகமாக திசை திருப்பி, அந்த கார்கள் பின் தொடராத தூரத்திற்கு சென்றுவிட்டான் லயன்.

லயனின் செயல்களை தன் செல்போன் மூலம் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெரியவர் தன் போனில் ஓடிக் கொண்டிருந்த. அந்த வீடியோ நின்றதும்

Top Bottom