Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed வேங்கியின் மோகினி

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 11



மறுநாள் காலை வழக்கம் போல் அனுபூதியிடம் அஸ்வ சாஸ்திரம் கற்றனர் சகோதரர்கள் இருவரும்.ஆதித்தன் மோகினியை மெல்ல பழக்கப்படுத்த கற்றிருந்தான்.ஓய்ந்த நேரத்தில் வண்ண பூச்சு தயாரிக்கிறேன் பேர்வழி என்று விதவிதமான வண்ணங்களை உருவாக்கி கோட்டை சுவர்களை வண்ண மயமாக்கி கொண்டிருந்தான்.தினமும் ஆதித்தன் தரும் ஒரு குவளை மது அனுபூதியின் மொத்த நம்பிக்கையையும் பெற்று தந்திருந்தது.லாயத்தின் உள்ளேயும் வெளியேயும் எந்த தடங்கலும் சோதனையும் இன்றி சகோதரர்கள் இருவரும் புரவியில் வந்து போய் கொண்டிருந்தனர்.அன்று மாலை அரிஞ்சயன் அனுபூதிக்கான மது குவளையை வாங்கி வர கிளம்பினான்.



கிளம்பிக் கொண்டிருந்த அரிஞ்சயனின் அருகில் வந்த ஆதித்தன் “அண்ணா! இன்று நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! “என்றான்.



“ஆபத்து எதாவது நெருங்கும் என்கிறாயா? “என்ற அரிஞ்சயனின் கைகள் வாளை தடவின.



“ஆம்! ஆனால் வேறு விதமான ஆபத்து நெருங்கலாம்! “



“எந்த மாதிரியான ஆபத்து என்று யூகித்தாயா? “



“ஒரளவுக்கு யூகித்திருக்கிறேன்.நீ வாங்கி வரும் ஒரு குவளை மது தண்டநாயக்கனின் மூளையை பிறாண்டியிருக்கும்.அதில் எதாவது சதி உள்ளதோ என்று அவன் சந்தேகிக்கலாம்! “



“அதற்கான பதில் என்னிடம் உண்டு! அனுபூதி மதுவை இருப்பு வைத்தால் நேரம் கெட்ட நேரத்தில் குடித்து விட்டு மட்டையாகி விட்டால் நம் பாடம் பாதிக்கப்படும் என்பதால் தினமும் இரவில் மட்டும் ஒரு குவளை வாங்கி தருவதாக கூறுவேன்! “



“பொருத்தமான காரணம்தான்.தண்ட நாயக்கன் இதை நம்ப வாய்ப்பிருக்கிறது.ஆனாலும் சந்தேகம் தீர சோதிப்பான்! “



“எப்படி? “



“ஒரு குவளை மதுவை கூடுதலாக்கி சோதிப்பான்!”



“அப்படி செய்தால் அவனுக்கு பாடம் கற்பிப்பேன்! இதை எல்லாம் எப்படி ஊகிக்கிறாய் ஆதித்தா? “



“நான் தண்ட நாயக்கனின் மூளையிலிருந்து யோசிக்கிறேன்.அதனால் அவனை சமாளிக்க முடிகிறது! “



“சரி! நான் இதை சமாளிக்கிறேன்! “என்ற அரிஞ்சயன் மதுவிடுதியை நோக்கி நடை போட்டான்.



மதுவிடுதியின் உரிமையாளனுக்கு தண்டநாய்க்கனின் கட்டளை தெரிவிக்கப்பட்டிருந்ததால் அவன் அரிஞ்சயனின் வருகைக்கு காத்திருந்தான்.இரண்டு நாட்களாக அரிஞ்சயன் மதுவிடுதிக்கு வந்து போய் கொண்டிருந்ததால் உரிமையாளனுக்கு ஓரளவு பரிச்சையமாகி நட்பாகியிருந்தான்.



“வாரும் வேங்கியின் விருந்தினரே! இன்றும் வழக்கம் போல் ஒரு குவளைதானா? “



“இன்றும் அதே! “



“நிறைய வாங்கி இருப்பு வைத்தால் நடை மிச்சமாகுமே? “



“குரு நினைத்த நேரத்தில் குடித்துவிட்டு மட்டையாகி விடுவாரே! வித்தை கற்பது சிரமமாகுமே? அதனால்தான் மாலை வருகிறேன்.காற்றாட உலாவியது போலவும் இருக்கும்! “



“நல்லது! இன்று உமக்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகை! இரண்டு பணத்திற்கு மூன்று குவளைகள் தருகிறேன்! “



“நட்டத்திற்கு வியாபாரம் செய்ய போகிறீரா? “



“இல்லை! தண்ட நாயக்கர் நட்டத்தை ஈடு கட்டுவார்.!”



“ஓ! அவரின் உத்தரவா இது? “



“ஆம்! “



“மற்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.அப்படித்தானே? “



“கண்டிப்பாக! “



நெருக்கியடித்த கூட்டத்தை பார்த்த அரிஞ்சயன் “உமது கோரிக்கை ஏற்கப்படுகிறது.இதற்காக நீர் வருந்துவீர்! “என்றான் விசம சிரிப்புடன்.



அதே நேரம் தண்டநாயக்கனின் மாளிகையில் “அவர்களை சாதாரணமாக எண்ணி விடாதே வீர சிம்மா! அபாயமானவர்கள்! “என்றான் தண்ட நாயக்கன்.எதிரே நின்றிருந்த தளபதி வீரசிம்மன் “நீங்கள் மிகையாக பயப்படுகிறீர்கள்! நான் இருக்கும்வரை அவர்களின் எண்ணம் ஈடேறாது! “



“எனக்கே இப்போது குழப்பமாக இருக்கிறது.அவர்களின் குறி குதிரையா இல்லை வேறு எதாவதா என்று.ஓவியம் கற்க போனவன் பாதை மாறி வர்ணகலவை என்று போகிறான்.இன்னொருவன் ஒரு குவளை மது வாங்கி குழப்புகிறான்.”



“அந்த குழப்பம் தீரத்தான் வழி செய்து விட்டீர்களே? “என்று வீர சிம்மன் கூறிய போது கதவு தட்டப்பட்டது.



தண்ட நாயக்கன் கதவை திறந்த போது மதுவிடுதியின் உரிமையாளன் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான்.



“என்னாயிற்று? ஏன் இந்த அழுகை? “என்றான் தண்டநாயக்கன்.



“என் மதுபான விடுதியில் ஒரு சொட்டு மதுகூட இல்லை மந்திரியாரே! அந்த அரிஞ்சயன் தெருவில் போவோருக்கெல்லாம் இரண்டு காசுக்களை வாங்கி கொண்டு மூன்று குவளை மதுவை கொடுத்து கடையை காலி செய்து விட்டான்.!”



“அந்த சலுகையில் அவனுக்கு மட்டும்தானே தர சொன்னேன்? “



“அவன் வாங்கி அதை மற்றவர்களுக்கு விற்று விட்டான்! “



“வேறு தகவல் எதாவது? “



“அனுபூதி அளவிற்கு மீறி குடித்துவிட்டு மட்டையாகி விட கூடாது என்பதற்காகவே தினமும் ஒரு குவளை வாங்கினானாம் “



“புரிகிறது.நல்ல சமாளிப்பு! சரி நீ கிளம்பு! “



“அந்த நஷ்ட ஈடு? “



“விளக்கு வைத்த பின் நான் பணம் தர மாட்டேன்.காலையில் வா! எவ்வளவு பணம் தர வேண்டும்? “



“நூறு பொற்காசுகள்! “



“சரி! காலையில் வா! “



வியாபாரி கிளம்பிய பின் வீர சிம்மனிடம் திரும்பிய தண்டநாயக்கன் “தண்ணீரிலும் தடம் பார்த்து நடக்கக் கூடிய திறமை சாலிகள்! எனக்கு நூறு பொற்காசுகளை நஷ்டமாக்கி விட்டார்கள்! “என்றான் வெறுப்புடன்.!



“இருவரும் அபாயமானவர்கள்! “என்றான் வீர சிம்மன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி12



காலையில் அஸ்வ சாஸ்திரம் கற்று விட்டு கடைவீதியில் உலாவி கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும்.



“நேற்றைய சம்பவத்தில் தண்ட நாயக்கன் நொந்து போயிருப்பான்.கூடுதல் பான சலுகைக்கு தண்டநாயக்கனின் மணநாள் விருந்து இது என்றல்லவா சொல்லியிருக்கிறேன்.இந்நேரம் அதிகாரத்தால் பலனடைந்தவர்களின் கூட்டம் நாயக்கரின் வீட்டு கதவை தட்ட தொடங்கி இருக்கும்.வாழ்த்துகளை ஏற்று நெளிந்து கொண்டிருப்பார் தண்டநாயக்கர்.!”



“அவருக்கு தேவையான பதிலடிதான் அண்ணா! “



“ஆதித்தா! கடைவீதியில் இவ்வளவு தூரம் எதை தேடி நாம் பயணிக்கிறோம்? “



“அஞ்சல் புறா வியாபாரியை தேடுகிறேன் அண்ணா! மார்த்தாண்ட வர்மர் ஒரு லட்சம் காசுகளை நம் கிராம தலைவரிடம் கையளித்தாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.!”



“எதிர் வரும் யாரிடமாவது கேட்போம்? “



எதிர்பட்டவனை நிறுத்தி “ஐயா! அஞ்சல் ஒன்றை அனுப்ப வேண்டும்.அதற்கான புறாக்கள் எங்கே கிடைக்கும்? “



“காளிங்கனின் தூது புறாக்கள் இலக்கு தவறி பறக்காத சிறப்பு பெற்றவை.வலது புற தெருவில் இரண்டாவது வீடு அவனுடையது.வெளியே புறாக்கள் நிறைய அமர்ந்திருக்கும் என்பதே அவன் வீட்டின் அடையாளம்! “



“நன்றி ஐயா! “



அவர்கள் அந்த வீட்டை அடையாளம் கண்டு நுழைந்த போது காளிங்கன் அவர்களை வரவேற்றான்.



“வாருங்கள்! வேங்கியின் விருந்தாளிகளே! கடக நாட்டிற்கு சேதி அனுப்ப என்னை தேடி நிச்சயம் வருவீர்கள் என்று நம்பினேன்.என் நம்பிக்கை பொய்க்கவில்லை! “



“வந்தனம் ஐயா! இந்த புறாக்கள் நெடும் தூரம் பயணம் செய்து இலக்கினை தவறாது அடையுமா? “



“நிச்சயமாக! இதுவரை ஒரு புறாவும் இலக்கினை தவற விட்டதில்லை.சாமானியர்களின் விருப்பமான அஞ்சல் என்னுடையது.ஒரு புறாவிற்கான மொத்த விலையை கொடுங்கள்.கடிதத்தை கொண்டு செல்லும் புறா பதில் கடிதத்தை கொண்டு வந்த பின் என் ஊதியத்தை கழித்து கொண்டு மீதியை தருவேன்.!”



“எல்லா நாடுகளுக்கும் தூது புறாக்கள் உண்டோ? “



“அதை வைத்துதானே என் பிழைப்பு ஓடுகிறது.!”



“நல்லது! எனக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும்! “



“கடக நாட்டின் அரண்மனைக்கா? “



“இல்லை! கள்வர் புரத்திற்கு! “



“களவிற்கு பெயர்போன ஊராயிற்றே? சற்று தொலைவு வேறு! “



“இயலாதெனில் நான் வேறு இடம் பார்க்கிறேன்.!”



“வேண்டாம்.இதோ இந்த கூண்டிலுள்ள புறா நான்கு முறை கள்வர் புறத்திற்கு போய் வந்துள்ளது.எழுதிய கடிதத்தை சுருட்டி அதன் காலில் பொருத்தப்பட்டுள்ள தாயத்து போன்ற அமைப்பினுள் போட்டு மூடி பிறகு பறக்க விடுங்கள்.கவனம் அப்போது வானத்தில் ராஜாளிகளின் நடமாட்டம் இருக்க கூடாது.!”



“ஏன் ஐயா? “



“புறாக்களை ராஜாளிகள் வேட்டையாடக்கூடும்.இதோ இந்த கூட்டிலுள்ள ராஜாளிகள தூது் புறாக்களை பிடித்து வர பழக்கப்படுத்தப்பட்டவை! “



“நல்லது ஐயா! “



இருவரும் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு புறாவோடு வெளியேறினர்.அவர்களை பின் தொடர்ந்த வேங்கியின் ஒற்றன் காளிங்கனின் வீட்டிற்குள் நுழைந்தான்.



விபரீதம் தெரியாமல் சகோதரர்கள் இருவரும் பேசிய படி நடக்க ஆரம்பித்தனர்.



“இப்போது என் முறை! தண்ட நாயக்கரின் சொற்ப முடிகளை சொட்டையாக்க போகிறேன்.!”என்றான் ஆதித்தன்.



“இந்த புறாவை நாயக்கன் கண்டிப்பாக வழி மறித்துபிடிப்பான்.அதை மீறிஎப்படி தகவலை அனுப்புவது? “

சாலையோர கிழவியிடமிருந்து அவள் பார்க்காத நேரத்தில் ஒரு எழுமிச்சங்கனியை எடுத்த ஆதித்தன் “கண்ணில் மண் தூவ கனி இருக்கிறதண்ணா! அவன் கவனத்தை முற்றிலும் திசை திருப்ப போகிறேன்!! “



“அப்படியானால் இந்த முறை படிகாரமோ, சவுகாரமோ இல்லை! “



“இவனுக்கு கனி போதும்! தலையில் எலுமிச்சையை வைத்து தேய்க்கும் அளவிற்கு அவனை குழப்ப போகிறேன்.!”



அன்று மாலை ஆதித்தன் பறக்க விட்ட தூது புறா விண்ணில் பறக்க ஆரம்பித்த போது அதை தொலைவிலிருந்து தொலை நோக்கி மூலம் கண்காணித்து கொண்டிருந்த தண்ட நாயக்கன் உபரிகையில் கூண்டிலிருந்த கண் கட்டப்பட்ட நிலையிலிருந்த ராஜாளியை பார்த்தான்.திரைச்சீலையை கையில் சுற்றி கொண்டு நகக்கீறல் படாமல் அதனை கையில் எடுத்தவன் அதன் வாயில் எச்சிலை துப்பினான்.கண் கட்டை அவிழ்த்து விட்டவன் “உசோ! “என்ற படி பறந்து கொண்டிருந்த ஆதித்தனின் புறாவை நோக்கி கையை காட்டினான்.இலக்கை பார்த்த ராஜாளி ஜிவ்வென இறக்கையை விரித்து வேட்டைக்கு தயாரானது
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி13



வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக கிளம்பிய ராஜாளி விண்ணில் பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி பறந்தது.போக்கு காட்ட முயன்று தோற்ற புறாவை கால்களில் பிடித்து வந்து திரைச்சீலை சுற்றிய தண்டநாயக்கனின் கைகளில் வந்து அமர்ந்தது.புறாவை லாவகமாக பிடித்த நாயக்கன் இன்னொரு கையால் ராஜாளியை கூண்டில் அடைத்தான்.கையிலிருந்த புறாவின் கால்களில் இணைக்கப்பட்டிருந்த தாயத்து போன்ற அமைப்பை திருகி திறந்து ஓலை சுருளை வெளியே எடுத்த போது வெளியே குதிரையின் குளம்படி சத்தம் கேட்டது.உபரிகையிலிருந்து நாயக்கன் எட்டி பார்த்த போது வீர சிம்மன் குதிரையிலிருந்து இறங்கி கொண்டிருந்தான் நாயக்கனை பார்த்து முகமன் கூறியவனை சைகையாலேயே மேலே வரும்படி சாடை காட்டினன் தண்ட நாயக்கன்.

மேலே வந்த வீர சிம்மன் கையிலிருந்த புறாவை பார்த்து புருவம் உயர்த்தினான்.



“ஆதித்தன் கள்வர் புரத்திற்கு ஓலை அனுப்பியுள்ளான் தளபதி! “



“கள்வர் புரம்? திருட்டுக்கு பேர் போன ஊராயிற்றே? என்ன எழுதியிருக்கிறான் அமைச்சரே? “



“தெரியவில்லை! இனிதான் படிக்க வேண்டும்! “



நாயக்கன் ஓலை சுருளை விரித்து பார்த்தான்.அதில் எதுவும் எழுதப்படாததால் அவன் முகம் கருத்தது.ஓலையை முன்னும் பின்னுமாக பார்த்தவன் “வெற்று ஓலையை அனுப்பியிருக்கிறான்! “என்றான்.



ஓலை சுருளை வாங்கி பார்த்த வீர சிம்மன் “ஆம்! இதில் எதுவும் எழுதப்படவில்லை.முட்டாள்தனமாக உள்ளது! “



“இல்லை! கள்வர் புரத்தில் உள்ள யாருக்கோ இதில் உள்ளவற்றை படித்தறிய முடியும்.!”



“அப்படியானால் ஓலையை அழித்து விடலாம்! “



“அது இயலாது.நாளை மறுநாள் இந்த ஓலைக்கு மறுமொழி வந்தாக வேண்டும்.இல்லையேல் ஆதித்தன் உசாராகி விடுவான்.!”



“அவர்கள் உசாராகத்தான் இருக்கிறார்கள்.நாம்தான் தொடர்ந்து ஏமாந்து வருகிறோம்.!”



“உண்மைதான்.இவர்கள் கடகத்திற்கு ஓலை அனுப்பாமல் கள்வர்புரத்திற்கு ஓலை அனுப்பியதன் மூலம் தாங்கள் கள்வர்கள் என்று உறுதி செய்து விட்டார்கள்! “



“வேறோன்றிலும் அதே சந்தேகம் எனக்கும் ஊர்ஜிதமாகியுள்ளது.!”



“அது என்ன? “



“இருவரும் கோட்டைக்குள் வரும்போது அவர்களிடம் அதிக பணம் இல்லை.ஆனால் இப்போதெல்லாம் தடபுடலாக நிறைய பணத்தை செலவு செய்கிறார்கள்.காவல் வீரர்களுக்கு நிறைய பணத்தை செலவு செய்கிறார்கள்.பணம் காணோம் என்று வரும் புகார்களில் சரிபாதி மதுபான விடுதியிலிருந்தே வருகிறது.அதுவும் அரிஞ்சயன் அங்கே செல்ல ஆரம்பித்த பின்பே புகார்கள் வர தொடங்கின! “



“மதுவருந்தி சுய நினைவற்றவர்களிடமிருந்து பணத்தை களவாடுவானோ? “



“இருக்கலாம்.மீதி புகார்கள் ஆதித்தன் நகர் உலா செல்லும் போது கடைவீதியிலிருந்து வருகின்றன.இன்று கூட ஒரு எலுமிச்சையை திருடியிருக்கிறான்.!”



“அவர்கள்தான் என்று தெரிந்தாலும் கை வைக்க இயலாத சூழல்! விருந்தாளிகளாக வந்து விட்டார்கள்.அவ மரியாதை செய்தால் இருநாட்டின் நல்லுறவு பாதிக்கப்படும்.!”



“ஆம்! கையறு நிலையாக இருக்கிறது.!”



புறாவின் காலில் மீண்டும் ஓலை சுருளை போட்டு மூடிய நாயக்கன் அதை வானில் பறக்க விட்டான்.



“வீர சிம்மா! மதுபான விடுதிக்கு நூறு காசுகளை நான் தர வேண்டியதிருக்கிறது.இதோ அந்த காசுகள்.உரிமையாளரிடம் ஒப்படைத்து விடு.!”



“தராமலேயே இருந்து விடலாமே அமைச்சரே? “



“அதிகார துஷ்பிரயோகம் என்று கடைக்கு வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லி கொண்டிருப்பான்.தேவையா இது? “



“அரிஞ்சயனால் நூறு காசுகள் நஷ்டம்! “



“இல்லை! ஐம்பது காசுகள் லாபம் வர போகிறது! “



“எப்படி அமைச்சரே? “



“மதுபான விடுதி அரசாங்க அனுமதி பெறாத இடத்தில் இருப்பதாக மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக புகார் கூறி 150 காசுகளை அபராதமாக இன்று மாலை விதிக்க போகிறேன்! “

“உங்களின் பழி வாங்கும் வெறிக்கு ஆதித்தன் பலியாகப் போவதை நினைத்தால்? “



“அவன் மரணம் மிக கொடூரமாக இருக்கும் தளபதியாரே! “என்ற தண்டநாயக்கன் முகத்தில் கொடூர புன்னகை ஓன்று தோன்றியது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 14



மறுநாள் வர்ணகலவை ஆராய்ச்சியில் ஆதித்தன் ஈடுபட்டிருந்தான்.அரிஞ்சயனும், அனுபூதியும் ஆடு புலி ஆட்டத்தில் தங்களை மறந்திருந்தனர்.திடிரென லாயத்தை சுற்றியிருந்த காவல் வீரர்கள் நடமாட்டம் சுறுசுறுப்பை அடைந்தது.கட்டியக்காரனின் ராஜ முழுக்கம் உரத்த குரலில் முழங்கி மன்னரின் வருகையை அறிவித்தது.மகி பாலன் தன் பரிவாரங்களுடனும், தண்ட நாயக்கனுடனும் ரதத்தில் நுழைந்தார்.வீரர்களின் வரவேற்பை ஏற்று ஆதித்தனை நெருங்கினார்.



“மன்னரே! தாங்கள் ஏன் இங்கே வர வேண்டும்? சொல்லியிருந்தால் நாங்களே வந்திருப்போமே? “என்றான் ஆதித்தன்.



“விருந்தாளிகளை திருவிழாவிற்கு அழைக்க மன்னர் நேரில் வருவதுதானே முறை! “



“புரியவில்லை மன்னரே! “



“அடுத்த வாரம் இந்திரவிழா கொண்டாடப்படுகிறது.அதில் நீங்கள் இருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளவே நேரில் வந்தோம்! “



“ஆஹா! தூதர்களுக்கு மன்னர் தரும் மரியாதை மனதை மகிழ செய்கிறது! “



“எதிரிகளுக்கு மன்னரும் நானும் நிரம்ப கடுமையாகவே இருப்போம்.!”



“ஆகா! தண்ட நாயக்கரே! நேற்று உமக்கு திருமண நாள் என்று நாட்டிற்கே மது விருந்து வைத்தீராமே? என்னால் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்! “



“நாயக்கரே! நேற்று உமக்கு திருமண நாள் என்று சொல்லவேயில்லையே? “என்றார் மன்னர் வியப்புடன்.



“இரண்டு, மூன்று மனைவிகள் இருப்பதால் மந்திரியாருக்கு குழப்பம் நேரிட்டிருக்கலாம்! “என்றான் ஆதித்தன்.

நாயக்கனின் முகம் சிறுப்பதை கண்ட மன்னர் பேச்சை திசை மாற்றும் பொருட்டு “வர்ண கலவை ரகசியம் முடிவுக்கு வந்து விட்டதா ஆதித்தா?”என்றார்.



“கிட்டத்தட்ட நெருங்கி விட்டேன் மன்னரே.ஐந்து ஆண்டுகளுக்கு மங்காத வர்ணகலவை ரகசியத்தை அறிந்து விட்டேன்.மேலும் மெருகூட்டினால் கூடுதல் வருடங்களுக்கு ஆயுளை நீட்டித்து விட முடியும்! “



“இந்திரவிழாவிற்குள் ரகசியத்தை பூர்த்தி செய்து விடுங்கள்.காலத்தால் அழியாத ஓவியங்கள் வேங்கியின் புகழ் பாட வேண்டும்! “



“அன்றுதான் அஸ்வ சாஸ்திர வித்தை முடிவுக்கு வருகிறது.”என்றான் அனுபூதி.



“அப்படியானால் அதற்கு மறுநாள் நாம் கடகத்திற்கு பயணமாக வேண்டும்.அதற்குள்ளாக வர்ண கலவையின் ரகசியத்தை அறிந்தாக வேண்டும்! “என்றான் அரிஞ்சயன்.



மன்னரின் பரிவாரங்கள் கிளம்பிய பின் சகோதரர்கள் இருவரும் தனியிடத்தில் ஒதுங்கினர்.



“இந்திரவிழாதான் இறுதி நாள்.!அன்று நம் வேலையை முடித்தாக வேண்டும்! “



“ஆம்! அதற்கான திட்டம் தயாராக உள்ளது.உனக்கான திட்டத்தை நான் சொன்னபடி செய்ய வேண்டும்.!”



“பிசிறு தட்டாமல் செய்து முடிப்பேன்.”



“நம் வேலையில் இன்னொருவரும் உதவப் போகிறார்! “



“யார் அவர்? “



“சமயம் வரும்போது தெரியும்! “



இருவரும் பேசி கொண்டிருந்த போது காவலர்களில் ஒருவன் இருவரையும் அணுகினான்.



“காளிங்கனிடமிருந்து ஓலை கொண்டு வந்திருக்கிறான் ஒருவன். கள்வர்புரத்திலிருந்து பதில் ஓலை வந்திருக்கிறதாம்!அவனை உள்ளே அனுமதிக்கவா? “



“அனுமதியுங்கள்! “என்ற ஆதித்தன் காவலன் அகன்ற பின்”நாயக்கரின் பார்வைக்கு போன பின்தான் அந்த ஓலை நம்மிடம் வருகிறது! “என்றான்.



உள்ளே நுழைந்து வணக்கம் சொன்னவன் ஓலையை கொடுத்து விட்டு வெளியேறினான்.

கதவை தாளிட்ட ஆதித்தன் அகல் விளக்கை எடுத்தான்.காலியான ஓலை சுவடியின் பக்கங்களை அகல் விளக்கின் அனலில் காட்டினான்.சில நாழிகை நேரத்தில் ஓலை சுவடியில் எழுத்துகள் தோன்ற ஆரம்பித்தன.

“பொருள் வந்து சேர்ந்தது.பத்திரமாக வெற்றியுடன் திரும்பவும்! “

புன்னகைத்த ஆதித்தன் ஓலையை எரித்தான்.

“என்ன நுட்பம் இது ஆதித்தா? “என்றான் அரிஞ்சயன்.



“எலுமிச்சங் கனியின் சாற்றில் எழுதி காய வைத்தால் எழுத்து கண்ணுக்கு புலப்படாமல் காய்ந்து விடும்! அனல் பட்டால் எழுத்துகள் தோன்றும்.ரகசிய செய்திகளை அனுப்ப உகந்த முறை இது! “



“வெற்று ஓலையை பார்த்து தண்ட நாயக்கன் நொந்து போயிருப்பான்! “



“அந்த தாண்டவன் தடுத்தாலும், படைத்த ஆண்டவன் தடுத்தாலும் நான் மோகினியை தூக்குவதை தடுக்க முடியாது! “ஆதித்தன் உறுதியான குரலில் கூறினான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி15



மாலை சகோதரர்கள் இருவரும் கடைவீதியில் நடை பயின்று கொண்டிருந்தனர்.



“ஆதித்தா! நேற்று மதுபான விடுதியில் ஒரு தகவல் கிடைத்தது.உனக்கு பயன்படுமா என்று பார்!”என்றான் அரிஞ்சயன்.



“சொல்லுங்கள்! அது பற்றி ஆலோசிப்போம்! “



“யவன வணிகன் ஒருவன் நேற்று வேங்கிக்கு வருகை புரிந்திருக்கிறான்.அவனுடன் 80 புரவிகளும் வந்துள்ளன.மகிபாலன் அவற்றில் நாற்பது குதிரைகளை விலைக்கு வாங்கியுள்ளான்.வலுவான புரவிகளை தவிர மீதமுள்ளவற்றை வாங்காமல் கழித்து விட்டான்.மீந்த 40 புரவிகளுடன் அந்த யவன வணிகன் இந்திரவிழா முடிந்த மறுதினம் கடகத்தை நோக்கி பயணமாகிறான்! இப்போது நம்மை போலவே அரண்மனையின் விருந்தாளியாக தங்கியுள்ளான்! “



“நல்ல சேதி சொன்னாய் அண்ணா! நாம் செல்லும் இலக்கும் அவன் செல்லும் இலக்கும் ஒன்றுதான் என்றால் காரியம் எளிதாக முடிந்து விடும்! “



“அந்த நாற்பது புரவிகளுடன் மோகினியை கலந்து கொண்டு சென்று விடலாம் என்கிறாயா? “



“நல்ல யோசனைதான்! அப்படியும் செய்யலாம்.ஆனால் பாதுகாப்பு சூழ்ந்த லாயத்தை விட்டு மோகினியை எப்படி வெளியே கொண்டு வருவது? “



“இயலாத காரியம்தான்! உன் திட்டம்தான் என்ன? நம் காரியத்தில் துணை நிற்கப் போகும் அந்த முகமறியாத மூன்றாம் மனிதர் யார்? “



“இரண்டாவது கேள்விக்கு இப்போது பதில் சொல்ல இயலாது.முதல் கேள்விக்கு பதில் சொல்கிறேன்! “



“சொல் கேட்போம்! “



“நேற்று அனுபூதி மதுவருந்தி விட்டு சோகமாக எதை பேசிக் கொண்டிருந்தார் என்று நினைவிருக்கிறதா? “



“இந்திரவிழாவை சிறப்பிக்க யாரோ ஒரு விரலி வருவதாக பிதற்றிகொண்டிருந்தார்.!”



“அவள் பெயர் நித்ரா தேவி.ஆடலுடன் பாடலை பாடும் விரலிகளில் புகழ் மிக்கவள்.அழகு மிக்கவள்.விரலி வித்தைகளுடன் சதிராடவும் கற்றவள்! “



“அவளுக்கென்ன இப்போது? “



“அனுபூதிக்கு அவள் மீது ஒரு மயக்கம்.மோகம்.அவள் நடனத்தை கண்டு ரசிப்பதில் மையல் கொண்டவன்.நித்ராதேவி என்னும் சிறு மீன் அனுபூதி என்னும் திமிங்கிலத்தை சாய்க்க போகிறது.!”



“எப்படி என்று விளக்கமாக சொல்! “



“அவள் நடனத்தை பாராமல் அனுபூதியால் இருக்க முடியாது.மோகினியை விட்டு விட்டு போகவும் அவனால் இயலாது.அந்த தருணத்தை நான் பயன்படுத்தி கொள்ள போகிறேன்.!”



“புரியவில்லை ஆதித்தா? “



“அனுபூதியும், நீயும் இந்திரவிழாவை காண செல்லுங்கள்.இங்கு நான் வர்ண ரகசியத்தில் ஈடுபட்டிருப்பேன்.பலத்த காவலும் நானும் இருப்பதால் மோகினியை என்னை நம்பி விட்டு செல்வான்.!”



“சரிதான்! அனுபூதியை அழைத்து சென்று நான் நடனம் பார்க்கவா? “



“இல்லை.அனுபூதியை நடனத்தை பார்க்க வை.இடையிடையே மதுவை ஊற்றி கொடுத்து அவனை மயக்கத்தில் ஆழ்த்து.அவன் மயங்கியதும் நீ தனியாக கிளம்பி வா! “

“நாயக்கனின் ஆட்கள் என்னை கண்காணிப்பார்களே ஆதித்தா? “



“அவர்களை ஏமாற்ற வழியிருக்கிறது.”என்ற ஆதித்தன் சிறுகடை ஒன்றின் முன்பாக தொங்க விடப்பட்ட சிவப்பு நிற துணியை விலைக்கு வாங்கினான்.



“இதை வித்தியாசமான தலைப்பாகையாக மாற்றி உன் தலையில் கட்டி கொள்.!”



“பளிச்சிடும் இந்த வண்ணம் என்னை கூட்டத்தின் நடுவே தனித்து காட்டுமே? கவனத்தை ஈர்க்காத வண்ணத்தை தேர்ந்தெடுத்திருக்கலாமே? “



“எல்லாம் காரணமாகத்தான்.ஈர்க்காத வண்ணத்தை பயன்படுத்தினால் உன்னை தேடி உற்று உற்று கவனிப்பார்கள்.இந்த வண்ணம் கவனத்தை ஈர்ப்பதால் கவனத்தை செலுத்த மாட்டார்கள்.சிவப்பு வண்ணத்தை மட்டுமே கவனித்து கொண்டிருப்பார்கள்.அதை அணியும் ஆளை கவனிக்க மாட்டார்கள்! “



“புரிகிறது! விழாவின் நடுவே நான் யாராவது ஒரு குடிகாரனின் தலையில் என் தலைப்பாகையை மாற்றி வைத்து விட்டு நழுவ வேண்டும்.!”



“ஆம்! அவனை நீ என்று ஒற்றர்கள் நினைத்து கொண்டிருப்பார்கள்.!”



“நழுவி வரும் நான் என்ன செய்ய வேண்டும்? “



“அமைதியாக இருக்கும் மகாதேவியின் ஆலயத்திற்கு வரும் நீ அங்கே எரியும் அகல் விளக்கின் உதவியோடு ஆழித்தேருக்கு தீ வைக்க வேண்டும்.!”



“என்ன சொல்கிறாய் ஆதித்தா? “என்றான் அரிஞ்சயன் அதிர்ச்சியோடு!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி16



"நம் கடமையை நிறைவேற்ற ஆழித்தேரை கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை.!”என்றான் ஆதித்தன்.



“புரிகிறது.!ஆழித்தேரை காப்பாற்ற பாதுகாப்பு வீரர்கள் நீரை தேடி போராடிக் கொண்டிருப்பார்கள்.லாயத்தில் காவல் குறைந்து போகும்.அந்த நேரத்தில் நீ? “



“உறங்கி கொண்டிருப்பேன் மோகினியின் அருகில்! நீ தீ வைத்ததன் அடையாளமாக சீழ்க்கை ஓலியை அனுப்பு.அதை கேட்டே நான் காரியத்தில் இறங்குவேன்.!”



“காவல் குறைந்த நேரத்தில் நீ மோகினியை வெளியே கொண்டு வந்தாலும் படகு காலையில்தானே கிளம்பும்? “



“கவலை வேண்டாம்.என்னுடைய மற்றோரு நண்பர் எனக்கு உதவுவார்.ஆழித்தேரில் தீ வைத்ததும் நீ திரும்பவும் அனுபூதியிடமே சென்று விடு.மறுநாள் காலையில் நாம் படகுத்துறை நோக்கி செல்வோம்.!”



“அப்போது மோகினி? “



“படகில் இருக்கும்! “



“இங்கே மோகினி இல்லாவிட்டால் தேட துவங்குவார்கள்.!”



“தேட மாட்டார்கள்.ஏனென்றால் மோகினி இங்கேயும் இருக்கும்! “



“குழப்புகிறாய் நீ! “



“அப்போதுதானே மீனை மன்னிக்கவும் குதிரையை பிடிக்க முடியும்! “



ஆதித்தன் புன்னகைத்து கொண்டிருந்த அதே நேரத்தில் தண்டநாயக்கன் வீர சிம்மனுடன் ஆலோசனையில் இருந்தான்.



“இந்திரவிழா முடியும்வரை இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! “என்றான் நாயக்கன்.



“அவர்கள் இருவரும் தனிமையில் கூடி கூடி பேசுவதாக தகவல் வந்திருக்கிறது.பெரிதாக எதாவது திட்டம் இருக்கலாம்! “



“வீர சிம்மா! படகுதுறையில் ஒரு சிறு படையை நிறுத்து.ஆபத்தென்றால் அவர்களை மடக்க உத்தரவிடு! “



“நிறுத்துகிறேன் அமைச்சரே! கோட்டை மணி மூன்று முறை ஒலித்தால் அந்த படை படகில் யாரையும் ஏற விடாது.!”



“அவ்வளவு தூரம் மணி ஓசை கேட்குமா?



“காண்டாமணி அமைச்சரே! ஐந்து காதத்திற்கு ஒலி கேட்பது நிச்சயம்.!”



“சற்று முன்பு சிவப்பு நிற துணி ஒன்றை கடை வீதியில் வாங்கியுள்ளனர்.அதன் ரகசியம் புரிபடவில்லை.”



“விலங்குகள் எதையாவது வெருட்டி விட திட்டம் போடுகிறார்களோ என்னவோ? “



“அந்த துணிக்கும் யவன வணிகனின் 40 புரவிகளுக்கும் எதாவது தொடர்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது.!”



“யவன வணிகன் குதிரைகளோடு திரும்புவது அவர்களுக்கு சாதகமான அம்சம்.!”



“அவற்றில் ஒன்றாக மோகினியை கலந்து விட்டால் முடிந்தது கதை! “



“அனுபூதியின் அனுபவம் நமக்கு உதவும்! “



“குளம்படியில் குலம் காணும் வித்தகன்.!”



“ஆனால் பெண்மோகமும், குடிவெறியும் உள்ள பலவீனன்! “



“அவர்களுக்கும் நமக்குமான போட்டியில் இந்திரவிழா இறுதிவிழா! “



“ஆயினும் தூதர்களின் உயிரை பறிக்க இயலாதே? “என்ற வீர சிம்மனை யோசனையுடன் பார்த்த தண்ட நாயக்கன் “விபத்தில் இறப்பது தூதர்களுக்கும் நடக்கும்தானே? “



“நாயக்கரே? என்ன விசமம் இது? “



“ஆம்! விசமம்தான்.கள்வர்கள் மோகினியுடன் பிடிபட்டால் அவர்களை கொல்வோம்.அதை விபத்தாக மாற்றி உலகிற்கு சொல்வோம்! “



“எப்படி மாற்றுவீர்கள்? “



“இன்று வாங்கிய அந்த சிவப்புநிற துணி அவர்களின் குதிரையை வெருட்டி விட்டு மலைச்சரிவில் உருட்டி விட்டு விட்டதாகவும், விபத்தில் இருவரும் இறந்ததாகவும் கதை புனைவோம்.அந்த கதையே கடகத்திற்கும் சொல்லப்படும்! “



“கொலை வெறியய்யா உமக்கு! “



“கடகத்தின் எல்லையில் வசிக்கும் கொள்ளையர்களிடம் சிக்கி அவர்கள் இறந்தாலும் கடகஅரசன் அதை ஏற்பானல்லவா? “



“உண்மைதான்.ஏற்ககூடும்.வேறு யாராவதாக இருந்தால்.இவர்கள் எமனையே ஏமாற்றும் எத்தர்களாயிற்றே? அரசன் நம்புவானா? “



நாயக்கனின் புருவங்கள் முடிச்சிட்டு கொள்ள யோசிக்க துவங்கினான்.ஒரே ஒரு சூரிய உதயம் இந்திரவிழாவிற்காக காத்திருந்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 17



மறுநாள் நடக்க போகும் விபரீதங்களை அறியாமல் ஆதவன் கிழக்கே உதித்தான்.வேங்கி இந்திரவிழாவை கொண்டாட தயாராக இருந்தது.அரசரின் சார்பாக அனுப்பப்பட்ட புதிய உடைகளை அணிந்த சகோதரர்கள் காலை உணவை உண்டு விட்டு மன்னரை பார்க்க கிளம்பினர்.



அவர்களை வரவேற்ற மகிபாலன் “வாருங்கள் விருந்தினர்களே! இன்று இரவு கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள்.ஏராளமான பொழுது போக்கு நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன! “



“மன்னிக்க வேண்டும் மன்னரே! அவற்றை பார்க்க இந்த ஆதித்தனின் கண்கள் புண்ணியம் செய்திருக்கவில்லை.!”



“ஏன் அப்படி கூறுகிறீர்கள்? “



“வர்ண ரகசியத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டேன்.அதை முடிக்காமல் வேங்கியை விட்டு கிளம்பினால் கடகநாட்டான் பாதியில் வேலையை விட்டு விட்டான் என்ற அவப்பெயர் வந்து சேரும்! அதனால் என்னால் கலந்து கொள்ள இயலாது.என் அண்ணன் கலந்து கொள்வார்.!”



“நல்லது! வர்ண ரகசியம் மிகவும் முக்கியம்! உம் கவனத்தை அதில் செலுத்துங்கள்! “



“மன்னரிடம் மற்றொரு விண்ணப்பம்! “



“என்ன அது? கேளுங்கள்! நிறைவேற்றுவோம்.!”



“என் குரு அனுபூதி நித்ராதேவியின் சதிராட்டத்தை பார்க்க விரும்புகிறார்.அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்.!”



“அப்படியானால் மோகினியின் பாதுகாப்பு? “



“அதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.!”



“நல்லது! “



“நாளை விடியற்காலையில் நாங்கள் கடகம் நோக்கி பயணப்படுகிறோம்.தாங்கள் விடையளிக்க வேண்டும்! “



“போய் வாருங்கள்.பயணம் இனிதாகட்டும்.ஆமாம் வர்ண ரகசியத்தை யாரிடம் கொடுத்து செல்வீர்கள்? “



“கோட்டை காவலரிடம் அந்த ரகசியத்தை கையளிப்போம் மன்னரே! “



“மகிழ்ச்சி! உங்களுக்கு என் அன்பு பரிசு! “மகிபாலன் தன் கழுத்திலிருந்த முத்துமாலைகளை கழற்றி இருவருக்கும் பரிசளித்தான்.மகிபாலனிடம் விடை பெற்று சகோதரர்கள் இருவரும் கிளம்பினர்.அன்று இரவு!



லாயம் பலத்த காவலுடன் இருந்தது.அனுபூதியும் அரிஞ்சயனும் நித்ராதேவியின் சதிராட்டத்தை பார்க்க கிளம்பியிருந்தனர்.அரிஞ்சயனின் தலையில் வினோத அலங்காரம் கொண்ட சிவப்பு நிற தலைப்பாகை உட்கார்ந்திருந்தது.லாயத்திலிருந்து மூன்று வாளிகளில் தண்ணீரை பிடித்து வந்த ஆதித்தன் தன் பழைய உடைகளை வாளால் துண்டு துண்டாக வெட்டினான்.பிறகு யாருக்காகவோ காத்திருக்க தொடங்கினான்.



அரிஞ்சயன் போகும் வழியில் அனுபூதிக்கு கொடுத்த மதுபானம் செயல்பட துவங்கியிருந்தது.சதிராட்ட அரங்கினுள் நுழையும் போது வர்ண பொடிகளை நீட்டிய ஒருவன் “உள்ளே நுழைபவர்கள் இதை உடலில் தூவிக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் அனுமதிப்போம்! “என்றான்.வர்ண பொடிகளை வாங்கி தன் முகத்திலும் அனுபூதியின் முகத்திலும் பூசினான் அரிஞ்சயன்.திறந்த வெளி அரங்கினுள் இருவரும் நுழைந்ததை பார்த்த தண்ட நாயக்கன் “அந்த சிகப்புதுணி தலைப்பாகையாக உருமாறியிருக்கிறது! “என்றான் அருகிலிருந்த வீர சிம்மனிடம்.



“ஆம்! அந்த தலைப்பாகையும் வினோதமாக இருக்கிறது.எங்கே அந்த இன்னொருவன்? “



“விரியனில் ஒன்று இங்கிருக்கிறது.விசம் மிகுந்த மற்றொன்று லாயத்தில் இருக்கிறது.!”



“வீர சிம்மா! அந்த விரியனை கண்காணிக்க நீ போகிறாயா? “



“இல்லை அமைச்சரே! அங்கே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளேன்.அதை மீறி அங்கே ஈ எறும்பு கூட நுழைய முடியாது! “



நித்ரா தேவியின் வருகை சூழ்நிலையை மாற்றியது.அனுபூதி நடனத்தை பார்த்தபடி மயக்கத்திற்கு போய் கொண்டிருந்தான்.அரிஞ்சயனுக்கு பின்னால் இருந்தவன் “நடனத்தை பார்க்க விடாமல் உமது தலைப்பாகை மறைக்கிறதய்யா! “என்றான்.



“இடத்தை மாற்றி கொள்வோம் நண்பனே! “



“நித்ராதேவியை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்புக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம்! “



“ஒன்றும் செய்ய வேண்டாம்.என் தலைப்பாகையை அணிந்து கொண்டு இந்த வர்ண பொடிகளை முகத்தில் பூசிக் கொண்டால் போதும்.!”



“உமது நண்பர்? “



“அவர் போதையில் தொண தொணப்பதாலேயே இடத்தை மாற்றி கொள்ள உத்தேசித்தேன்! “



“உமக்கு மறைக்காதா? “



“நான் ஆளை ரசிப்பவனல்ல.!பாடலை ரசிப்பவன்.!”யாரும் பார்க்காத கண நேரத்தில் தலைப்பாகையை மாற்றினான் அரிஞ்சயன்.

நடனம் உச்சத்திற்கு போய் கொண்டிருந்த உன்மத்த நிலையில் அரிஞ்சயன் இரவின் இருளில் நழுவி வெளியேறினான்
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி18



ஆதித்தன் உறங்கி கொண்டிருந்தான்.அல்ல உறங்குவது போல் நடித்து கொண்டிருந்தான்.லாயத்தின் காவலர்களில் ஒருவன் குறிப்பிட்ட இடைவெளியில் லாயத்தின் உள்ளே வந்து மோகினியின் இருப்பையும், ஆதித்தன் உறங்குவதையும் உறுதி செய்தபடி வந்து போய் கொண்டிருந்தான்.ஆதித்தனின் காதுகள் ஒற்றை சீழ்க்கை ஒலிக்காக காத்திருந்தன.!இரண்டாம் சாமம் ஆரம்பித்த சற்று நேரத்தில் மகாதேவி ஆலய திசையிலிருந்து ஒரு ஒற்றை சீழ்க்கை ஒலி வலுவாக எழுந்தது.சற்று நேரத்தில் கலவரமான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.”தேர் தீப்பிடித்து விட்டது.அணைக்க ஏற்பாடு செய்யுங்கள்! “என்ற கோட்டை காவலனின் குரல் உரத்து ஒலித்தது.ஆழித்தேரை காப்பாற்ற பாதி வீரர்கள் பரபரப்புடன் அகன்றனர்.அப்போதும் ஆதித்தனுக்கான கண்காணிப்பு அகற்றப்படவில்லை.காவல் வீரன் ஆதித்தன் உறங்குவதை பார்த்து விட்டு வெளியேறியதும் ஆதித்தன் துள்ளி எழுந்தான்.



மூன்றாம் சாமம் ஆரம்பிக்கும் நேரத்தில் ஆழித்தேரின் தீ அணைக்கப்பட்டிருந்தது.இரவு அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்தது.நான்காம் சாமத்தின் ஆரம்பத்தில் அனுபூதியும், அரிஞ்சயனும் வந்து சேர்ந்தனர்.அனுபூதி போதையில் மயக்கமாகியிருந்தான்.

அவனை படுக்க வைத்த ஆதித்தன் “அண்ணா! வேலை முடிந்தது.விடியும் முன் நாம் கிளம்பலாம்! “என்றான்.



“மோகினி!? “



“போகும் வழியில் சொல்கிறேன்! “

என்ற ஆதித்தன் பயண ஏற்பாடுகளை கவனித்தான்.மோகினியின் அருகே நின்ற தன் குதிரையை அவிழ்த்த ஆதித்தன் “போய் வருகிறேன் நண்பனே! “என்று அதன் முதுகில் தட்டி கொடுத்தான்.



இருவரும் லாயத்தின் நுழைவாயிலுக்கு வந்த போது வழியை மறித்த காவலன் “சற்று நில்லுங்கள்! “என்றான்.



இருவரும் நின்றதும் அருகே இருந்தவனை பார்த்த காவலன் “மோகினி இருக்கிறதாவென பார்த்து வா! “என்றான்.



“எங்களை மிகவும் அவமதிக்கிறாய் நண்பா! மனம் வலிக்கிறது! “என்றான் ஆதித்தன்.



“அவர்களின் பாதுகாப்பு மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை போலும்! “என்றான் அரிஞ்சயன்.



“மோகினி இருக்கிறது ஐயா! “என்ற மறுமொழி கிடைத்தவுடன் காவலன் “மன்னியுங்கள்! பொருட்களை சரி பார்ப்பது என் கடமை! “என்றான்.



“இன்னா செய்தாரை ஒறுத்தல் கடகநாட்டவனின் கடமை.இதோ வர்ண ரகசியம் எழுதிய ஓலைசுவடி.ரவி தாசரிடம் கொடுத்து விடுங்கள்! “



“நல்லது ஐயா! “



சகோதரர்கள் இருவரும் புயல் வேகத்தில் வெளியேறினார்கள்.அதே நேரத்தில் ஆழித்தேர் தீப்பிடித்த செய்தியறிந்த தண்ட நாயக்கனும், வீர சிம்மனும் சிறு படையுடன்

லாயத்திற்கு விரைந்தனர்.



“விருந்தாளிகள் போய் விட்டார்களா? “என்று வினவினான் நாயக்கன்.



“ஆம்! தாசருக்கான ரகசியத்தை கொடுத்து விட்டுத்தான் சென்றார்கள்! “



“மோகினி! “



“பத்திரமாக உள்ளது.!”



“நான் பார்க்க வேண்டும்! “என்று உள்ளே நுழைந்த தண்ட நாயக்கன் லாயத்தை பார்வையிட்டான்.மோகினி நின்றிருந்த மணற்பரப்பை கூர்ந்து கவனித்த அவனது கழுகு கண்கள் சில விசயங்களை கவனித்தன.ஒரு மூலையில் கிடந்த பழைய துணிகளையும், மூன்று வாளிகளையும் பார்த்து சிந்தித்தவன் ஒரு ஓரமாக உறங்கி கொண்டிருந்த அனுபூதியை தட்டி எழுப்பினான்.



“இங்கே இருக்கும் வெண்புரவி மோகினியா? “என்றான்.



“அதிலென்ன சந்தேகம் அமைச்சரே! “என்றான் மயக்கத்தில் அனுபூதி.



“எழுந்து வந்து பார்த்து விட்டு சொல்! “



குதிரையை ஒரு முறை சலிப்புடன் சுற்றி வந்து பார்த்தவன் அதன் குளம்படி அச்சை கண்டவுடன் “அமைச்சரே! இது மோகினி அல்ல! “என்று அலறினான்.



“நினைத்தேன்.!வீரர்களே அனுபூதியை கைது செய்து கைகளை கட்டி அறையினுள் பூட்டுங்கள்.வீரசிம்மா! காண்டா மணியை ஒலித்து படகுத்துறையில் உள்ள உன் படையை எச்சரிக்கை செய்.நாம் அவர்களை பின் தொடர்வோம்.முன்னும் பின்னும் நம்படை! நடுவில் அவர்கள்.நசுக்கி விடுவோம்.மோகினி அவர்களிடம்தான் இருக்க வேண்டும்! “



வீரசிம்மன் தலைமையிலான படை தண்டநாயக்கனுடன் புயல் வேகத்தில் விரைந்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி19



காண்டாமணியின் சத்தத்தை சகோதரர்கள் இருவருமே கேட்டனர்.



“ஆதித்தா! அதென்ன மணியோசை! அதுவும் அகால வேளையில்! “என்றான் அரிஞ்சயன்.



“இதை நான் எதிர்பார்க்கவில்லை.எதிர்பாராத ஏதோ ஒரு இடையூறு நம் திட்டத்திற்கு முட்டு கட்டை போட இருக்கிறது.இந்த காண்டாமணி சத்தத்திற்கு பின்னால் நாயக்கனின் மூளை ஒளிந்திருக்கிறது.சமாளிப்போம்! “



“என்ன இடையூறாக இருக்கலாம்? “



“வேறென்ன? படகுத்துறையில் ஒரு படையை நிறுத்தி வைத்திருப்பான்.நாம் வெளியேற இருக்கும் ஒரே வழி இதுதான்.!”



“அப்படியானால் பலப்பிரயோகம் தவிர வேறு வழியில்லை.!”



“ஆம்! அதோ படகுத்துறை வந்து விட்டது.!”



படகுத்துறையில் நின்ற பெரிய படகில் யவன வணிகனின் குதிரைகள் சறுக்கு பலகை வழியாக ஏற்றப்பட்டு கொண்டிருந்தன.அருகே 25 பேர் கொண்ட சிறு படை இவர்களுக்காக காத்திருந்தது.



“இவர்களை ஏமாற்றி படகை அடைவது பிரம்ம பிரயத்தனம்தான்.!”



“இல்லை! எளிதுதான்.நாயின் மனநிலைக்கு அவர்களைகொண்டு செல்வோம்! “



“எப்படி? “



“நாயின் கழுத்தில் கயிறை கட்டினால் அது எதிராக இழுக்கவே செய்யும்.கயிற்றுக்கு இணையாக செயல்படாது.அதே நிலையை நாம் உருவாக்குவோம்.!”



“நம்மை தாக்க அவர்கள் தயாராகி விட்டார்கள்! “



“ஆம்! கவனித்தேன்.இப்போது நாம் இருவரும் நேர் எதிராக பிரிய போகிறோம்.அவர்கள் இரு பிரிவாக பிரிவார்கள்.நம்மை தொடர்வார்கள்.அரை வட்டமடித்து கிடைக்கும் இடைவெளிக்குள் புகுந்து படகை அடைவோம்.!”



ஆதித்தனின் திட்டம் செயலானது.இருவரும் இருவேறு திசைகளில் பிரிந்து புரவிகளை விரட்டினர்.படை இரண்டாக பிரிந்து பின் தொடர்வதை தூரத்திலிருந்து பார்த்த நாயக்கன் தலையில் அடித்து கொண்டான்.



“அவர்களின் இலக்கு படகில் ஏறுவதுதானே.?அதை தடுக்காமல் ஏன் விரட்டி கொண்டிருக்கிறார்கள் முட்டாள்கள்.படகை கைப்பற்றியிருந்தாலே போதுமே? “



“இவர்கள் இரண்டாக பிரிந்து தப்பி செல்வது போன்ற தோற்றத்தை உண்டாக்கி விட்டார்கள் நாயக்கரே! “



அதே நேரம் பிரிந்த படைகளின் இடைவெளிகளில் இணைந்த சகோதரர்கள் மின்னல் வேகத்தில் படகின் சறுக்கு பலகை வழியாக புரவிகளை விரட்டினர்.படகில் ஏறிய புரவியிலிருந்து குதித்த அரிஞ்சயன் “இந்த கப்பலின் தலைவன் யார்? “என்றான்.



“நான்தான் தலைவன்! என்ன கலவரம் இது? “என்று கத்தியபடி வந்த தலைவனின் கழுத்தில் வாளை வைத்த அரிஞ்சயன் “மறுகரை சேரும்வரை நான்தான் கப்பலின் தலைவன்.உன் ஆட்களுக்கு நங்கூரத்தை எடுக்க உத்தரவிடு! “என்றான்.அதை பார்த்து கொண்டிருந்த வீர சிம்மன்

“அவர்கள் தப்பி விடுவார்கள் போலிருக்கிறது நாயக்கரே? “என்றான்.



“வாய்ப்பேயில்லை! “என்ற நாயக்கனின் கைகள் படகுத்துறையின் கரையிலிருந்த சில பொருட்களை சுட்டி காட்டின.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 20



தண்டநாயக்கன் சுட்டிகாட்டிய திசையிலிருந்தவை எண்ணை பீப்பாய்கள்.வீரசிம்மன் புரியாமல் பார்த்தான்.



“அவற்றை வைத்து கொண்டு என்ன செய்வது? “



“முட்டாள்! நாம் சொன்ன விபத்தை படகின் மூலம் ஏற்படுத்துவோம்.எண்ணையை துணியில் நனைத்து அக்னி அம்புகளை தயார் செய்.பற்றிஎறிய படகின் பாய் மரம் தயாராக இருக்கிறது.படகினை கொளுத்துவோம். படகில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டார்கள் என்று கடகத்திற்கு சேதியனுப்புவோம்! “



“அப்படியானால் மோகினி! “



“அதை ஒப்படைத்தால் அவர்களை உயிருடன் விட்டு விடுவதாக பேரம் பேசுவோம்.இயலாதெனின் விபத்தை உண்டாக்குவோம்.!”



“அப்படியே செய்வோம் அமைச்சரே! “



வீரசிம்மனின் ஆட்கள் துணிகளை கிழித்து எண்ணெய் பீப்பாய்களை உடைத்து கொண்டிருப்பதை கண்ட அரிஞ்சயன் “என்ன செய்கிறார்கள் இவர்கள்? “என்றான்.



“படகை கொளுத்த திட்டமிடுகிறார்கள்.எரி அம்புகளுக்கு வாகானது பாய் மரம்.அதை இறக்க உத்தரவிடு அண்ணா.!”



அரிஞ்சயனின் மிரட்டலால் கப்பலின் ஊழியர்கள் பாய் மரத்தை இறக்கினார்கள்.படகு நகர துவங்கியது.

“நாயக்கரே! திட்டம் நாசமாகி விட்டது! “என்றான் வீர சிம்மன்.நகரும் படகிலிருந்து ஆதித்தன் நாயக்கனை நோக்கி கத்தினான்.



“விருந்தாளிகளை விரட்டி வருவது நியாயமா? நாயக்கரே? “என்றான் ஆதித்தன்.



“விருந்தாளிகள் ஏன் வேகமாக ஓட வேண்டும்? “



“உமது படை ஏன் எம்மை விரட்டுகிறது? விரட்டினால் ஓடத்தான் செய்வார்கள்.!மோகினியை களவாடியதாக வீண்பழி சுமத்த போகிறீர் அப்படித்தானே? “



“உண்மை அதுதான் ஆதித்தா! நீ பயணித்து வந்த கருப்பு நிற குதிரைதான் வெண்ணிற மோகினி.அதன் வர்ணத்தை கறுப்பு வண்ணமாக்கி விட்டாய்.உன் குதிரையை வெள்ளையாக்கி மோகினியாக ஆள் மாறாட்டம் செய்திருக்கிறாய்! “



“புத்திசாலிதான் நீர்! எப்படி கண்டறிந்தீர்? “



“மோகினியும், உன் குதிரையும் நின்ற இடத்தில் சிதறிக்கிடந்த வர்ணகலவைகளின் மீதி உண்மையை சொல்லி விட்டது.!”



“அவற்றை மணல் மூடி மறைத்தேனே? “



“அவை என் கண்களுக்கு தப்பவில்லையே? ஆனாலும் திறமையான முயற்சி தண்ணீரில் வர்ணத்தை கலந்து குதிரைகளை குளிப்பாட்டி நிமிட நேரத்தில் தோற்றத்தை மாற்றியிருக்கிறாய்.ஆனால் பிடறி மயிரில் சற்று கோட்டை விட்டு விட்டாய்.!”



“அந்த தவறை நான் மோகினிக்கு செய்யவில்லை.இப்போதே யவன வணிகனின் குதிரைகளோடு மோகினியை கலந்து விட்டால் அதை தனித்துஅடையாளம் காண இயலாது.அது அஸ்வ சாஸ்திரம் கற்ற என்னாலும், அனுபூதியாலும் மட்டுமே முடியும்.முட்டாள்தனமாக நீங்கள் அனுபூதியை கூட்டிவர மறந்து விட்டீர்கள்! “



நாயக்கன் அனுபூதியை அழைத்து வராததற்காக வருந்தினான்.அரிஞ்சயன் “இதுவா மோகினி? என்னையே ஏமாற்றி விட்டாயே? “என்றான்.



“ஆதித்தா! புத்திசிலித்தனமாக நீ பாய் மரத்தை சுருட்டியிருக்கலாம்.ஆனால் எரி அம்புகளிடமிருந்து தப்ப முடியாது! குதிரையை ஒப்படைத்து விட்டு உயிர் தப்பி ஓடு! “

“குதிரையை ஒப்படைத்தாலும் பலனில்லை நாயக்கரே! வர்ண கலவையில் குளிப்பாட்டி உள்ளதால் அதன் வெள்ளை வர்ணம் திரும்ப சில பல வருடங்களாகலாம்! “



“இந்த கதையை வேறு யாரிடமாவது சொல் அப்பனே! காலத்தால் அழியாத வர்ண பூச்சிற்கு உன் கைகள் விதி விலக்கா? அவற்றில் நேற்றுகுதிரைகளுக்கு பூசிய வர்ணங்களின் சுவடே இல்லையே? “



“மேதாவிதான் நீர்! உம் கண்களிலிருந்து எதுவும் தப்புவதில்லை! “



“போதும் புகழுரை! நிறுத்து படகை! மோகினியை ஒப்படைத்து விட்டு ஓடு.இல்லையேல் எரி அம்புகள் படகை குறி வைத்து பாயும்.படகு விபத்தில் இருவரும் இறந்ததாக கடகத்திற்கு செய்தி அனுப்புவேன்! “



“உமது மோகினியும் என்னோடு மாண்டு போகும் நாயக்கரே? “



“கவலையில்லை! லாயத்தில் உள்ள நகலை உண்மையான மோகினியாக மாற்றுவேன்.அதற்கு உம் வர்ண கலவை ரகசியமே உதவும்.சிறிது நாட்களில் உடல் நலிவுற்று தானாகவே இறக்கும்படி செய்வேன்! “



“குதிரைக்கு நஞ்சிடும் கொடியவரே! “

“நாட்டின் மானம் காக்க எதையும் செய்வேன்! “



“ஓ! நீர்தான் அந்த தேஷ் பக்தரோ? சரி! ஆயுதம் பொருந்திய உமது படைக்கு முன்னால் நாங்கள் இருவர் என்ன சாதிக்க முடியும்? “



“அப்படியானால் சரணடைகிறாயா? “



“சரணடைகிறேன்.அதற்கு முன் ஒரு சிறு பிள்ளை விளையாட்டை விளையாடுகிறேனே? “



“என்ன அது? “



“உண்டி வில்தான்! சிறு வயதில் விளையாடியது.இக் கடைசி தருணத்தில் விளையாட விரும்புகிறேன்.!”



“உன் உண்டி வில்லின் இலக்கு எது? “

“எதுவுமேயில்லை! ஆகாயம் நோக்கியே கல்லை எரிவேன்.!”



“இதில் சதி எதுவும் இல்லையே? “



“ஆகாயத்தை நோக்கி கல் எரிவதில் என்ன சதி இருக்க முடியும்? “



“அப்படியானால் சரி! அம்பு பாயும் இலக்கை உன் படகு தாண்டவில்லை! நினைவிருக்கட்டும்! “



குதிரையின் சேணத்திலிருந்த உண்டி வில்லை எடுத்த ஆதித்தன் தன் சிறு பிள்ளை விளையாட்டை துவக்கினான்.
 

Latest posts

New Threads

Top Bottom