Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


kadhal thee - Meenakshi Sivakumar

Meenakshi sivakumar

Saha Writer
Messages
21
Reaction score
4
Points
3
காதல் தீ

சுமை என்று நினைத்தால், உயிர் கூட சுமைதான்...
இருப்பினும், உன்னை சுகமாய் சுமக்கிறேன் என் சுவாசத்தில்,
சுமக்கும் போது, உன் நினைவு கணபத்திற்கு பதிலாக, என்னை மிதக்கவைக்கிறது வளியில்..........

சரி, வளியின் வழியே காதலில் கரைந்து உன் நுரையீரலை தொட்டுவிடும் முன்பே,
என் கண்ணீரால் எழுந்த காதல் கடலில் உன் பரிசுத்தமான பாதத்தை சேவிக்க வேண்டுகிறேன்......
நம் காதலை சேகரித்தபடியே, செலவழித்துக்கொண்டு...........!

தயங்காமல் தாக்குகிறது உன் அன்பின் தாக்கம்,

சிரிப்பு சிந்தும் இதழ் வழியே ஒரு முத்திரையை இட்டுவிடு
அதையும் முத்தமாய் இட்டுவிடு,
அணைத்தபடியே எரியட்டும் நம் காதல் தீ.........!

-மீனாக்ஷி சிவக்குமார்
 

Meenakshi sivakumar

Saha Writer
Messages
21
Reaction score
4
Points
3
ஒரு மலரின் தற்கொலை

குமரி என உடன் இருந்தாள்
குழந்தையென கூச்சலிடுத்திருந்தேன்....
உச்சித்தனை அவள் முகர்ந்தாள்
உடல் எங்கும் சிலிர்த்துஇருத்தேன்......
அவள் கை வளையல் தான் குலுங்க
பல கதைகளை தாங்கி என் செவி வழியே இறங்க
கிறங்கிபோனேன் நான்......
படக்கென்று என் கை பற்றினாள், அவள் கைக்குள் சரணடைத்தேன் நான்.....
மொழியறியா வார்தையில்...
செவி அறியா செய்தியாய்.....
காவியம் காணா காதலில் கரைந்து இருந்தேன் நான்.....
சரணடைந்த நான் சிறைபிடிக்கப்பட்டேன் அவள் கணவனின் கழுத்தில்......
வாழட்டும் அவள் காதல்.....
வாதங்கட்டும் அவள் பாதத்திலே என் காதல்.....
விரக்தில் எடுத்த முடிவு அல்ல, விரும்பி எடுத்த முடிவு.......
ஏனெனில், இது மனித இனம் கண்ட காதல் தற்கொலை அல்ல
ஒரு மலரின் தற்கொலை...........!


- மீனாக்ஷி சிவகுமார்
 

New Threads

Top Bottom