Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கதை ஒரு வழியாக முடிந்துவிட்டது. மிகவும் உணர்வு பூர்வமான கதை. அதுமட்டுமல்ல, கிராம கலாச்சாரத்தை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் சிறப்புக்கு உரிய கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

உத்தமன் சுடருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உணர்வு பூர்வமாக காட்சியமைக்கப் பட்டிருப்பது மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

ஆனால் இருவரையும் ஜோடி சேர்ப்பதில் ஆசிரியருக்கு என்ன தயக்கம்? கலாச்சாரத்தில் கை வைக்கக்கூடாது என்ற தயக்கம் எதுவும் ஆசிரியருக்கு இருக்குமோ என்று தெரியவில்லை!

பொது புத்தியை, தேவைப்பட்டால், மீறும் அளவுக்கு ஒரு ஆசிரியருக்கு நேர்மறையிலான துணிவு இருக்க வேண்டும்! அதிலும் பெண் படைப்பாளிக்கு அவசியம் இருக்க வேணடும்.
மிக்க நன்றி விமர்சனத்திற்கு....😍😍... உத்தமன் சுடரை சேர்ப்பதில் கலாச்சார பிரச்சினை எதுவும் இல்லை..முதல் திருமணம் தோல்வியுற்று சில மாதங்களே கடந்த நிலையில் அடுத்த ஒருவனை ஏற்றுக்கொள்ள சிலகாலமாவது பிடிக்கும் என்பதே உண்மை. அவன் அவளின் மனம் கவர்ந்தவனாகவே இருந்தாலும்..மேலும் உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
 
உண்மைதான். ஆனால், அந்த இணைப்பை காலம் நிகழ்த்த வேண்டும் என்று விடுவது ஏன்? தவிர்க்க முடியாத ஒரு துரதிஷ்ட நிகழ்வுக்கு பரிகாரத்தை நாம்தான் தேட வேண்டும். காலம் செய்யும் வரை காத்திருப்பது ஞாயமல்ல!
காலம் நிகழ்த்த காத்திருப்பது என்பது அல்ல..பெண்ணவளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தே இடைவெளி. நன்றி 😍
 
அக்கா எனக்கு தெரிந்து உத்தமன் சுடர் இருவரையும் இணைத்து விட்டதாக தான் படுகிறது... இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளை பெற்று இருக்க வேண்டும் அப்படி காட்சி அமைக்க வேண்டும் என்பது இல்லை... உத்தமன் அவளை விரும்புகிறான் அவளும் அவனை வெகு முன்பே காதலித்து வந்தாள் அதனால் அவளுக்கு சிறிய இடைவெளியை அளித்து உள்ளதாகவே தான் படுகிறது...
உண்மைதான்டா மா...ஜோடி சேரும்...காயம்பட்ட மனது காயம் மாறும் வரை இடைவெளி..அவ்வளவே..😍😍😍😍
 

New Threads

Top Bottom