Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கதையை படித்துவிட்டு மனம் கணத்து நீண்டநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். மாணிக்கம் செய்த அநியாயத்துக்கு தகுந்த தண்டனைதான் என்றாலும் மனம் ஏனோ அவரது பிள்ளைகளை நினைத்து கஷ்ட படுகிறது!

'காலம் கடந்த ஞானம்'
யாருக்கென்ன லாபம்? என்று ஆசிரியர், கேள்வி கேட்பதன் மூலமாக சமூகத்துக்கு அறிவுரை கூறுவதை பாராட்ட வேண்டும். 'காலத்தே விழித்துக் கொள்க' என்று அற்புதமாய் அறிவுறுத்துகிறார்.

சமூகத்தின் அடித்தள மக்களின் உள்மன உணர்வுகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை, குப்புசாமியின் அழுகையும், பாரதிராஜாவின் உருவ பிரமையும் வெளிப்படுத்துவது போன்ற ஓர் புரட்சிகர செய்தியை கதாசிரியர் அற்புதமாக சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறார். வாழ்க அவரது சீரிய சமூகத் தொண்டு! -வாழ்த்துக்களுடன் தங்களது எழுத்தை மிகவும் விரும்பி படிக்கும் வாசகர் இரா. சந்திரசேகர், 20/09/2021.
மிக்க மிக்க நன்றி ...😍😍😍...தொடர்ந்து படித்து விமர்சனம் அளிப்பதற்கு நன்றி...😍😍
 
முதல் பாதில சுகுமாரன் பேசுனதெல்லாம் ரசிச்சு படிச்சேன்..செமையா கேலி பண்ணான் தயாவையும் உத்தமனையும்..உத்தமன்ட சுடரை கல்யாணம் செய்யச்சொல்லி பேசியதும் அருமை.....பாரதிராஜா காதல் செய்ததை தவிர எதுவும் செய்யவில்லையே..மாணிக்கம் செய்த பிழை இப்போ ஸ்ட்ரோக் வந்து கஷ்டப்படுறாங்க..சுகர்ணன் மூலமா அவருக்கு தண்டனை கிடைச்சிருக்கு..கவிதை வரிகள் அருமை சிஸ்
 
மிக்க நன்றி மா... உங்களின் தொடர் விமர்சனத்திற்கு..😍😍🌹🌹
 
மிக அற்புதமான வார்த்தைகளால் கதை கட்டமைக்கப் படுவது என்பது எளிதில் எல்லோருக்கும் வராது. இதன் ஆசிரியர் கிராமத்து வார்த்தைகளை பிசிரில்லாமல் கூறுவது கிராமத்து மன உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது! இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. உதாரணத்திற்கு சில வாசகங்கள் கீழே....

"உனக்கும்தான் வாய் வண்டலூர் வரை போகுது, உன்னை வைத்து தாத்தா குடும்பம் நடத்தல?..." என்று ஆசிரியர் எழுதுகிறார்.
இது கிராத்துக்கே உரிய மிகவும் ரசிக்கத் தக்க உரையாடல்!

"அந்த மொரட்டு உருவத்துக்குள்ளே கொழந்த மனசு இருக்கு தெரியுமா?" என்று இளம் பெண் தன்னம்பிக்கை கொள்வதும், அதே பெண், "நிம்மதியா இருக்குற இடத்துல போயி குடும்பம் நடத்துறது பெரிய விஷயம் இல்லை, சிதைந்து கடக்கும் குடும்பத்தை தூக்கி நிமித்துவதே பெரிது" என்று தன் தந்தை கூறியதை அந்த பெண் உள்வாங்கி அதை அந்த இளம் பெண் துணிவோடு ஏற்றுக் கொள்வதும் பாராட்டபட வேண்டியதாகும். இதன்மூலம் ஆசிரியர் தந்தைகளுக்கான மிகவும் அற்புதமான அறிவுரையையும் வழங்குகிறார்.

அதே தந்தை, பழைய சம்பவத்தில் தனக்கு உதவிய ஒரு நிகழ்வுக்காக பெண் குடுக்க முன்வருவது என்பது நன்றியறிதல் ஆகும். இது இன்றும் கிராமங்களில் மட்டும் உயிர்ப்போடு இருக்கும் கலாச்சாரம் ஆகும்!

மொத்தத்தில் இக்கதையின் மூலம் கிராம கலாச்சாரத்தை உலகறிய செய்யும் கால கண்ணாடியாக இந்த கதை இருந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 
மிக்க மிக்க நன்றி...தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கமாக அமைகிறது..நன்றி நன்றி 😍😍
 
New Threads

Top Bottom