கதையை படித்துவிட்டு மனம் கணத்து நீண்டநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். மாணிக்கம் செய்த அநியாயத்துக்கு தகுந்த தண்டனைதான் என்றாலும் மனம் ஏனோ அவரது பிள்ளைகளை நினைத்து கஷ்ட படுகிறது!
'காலம் கடந்த ஞானம்'
யாருக்கென்ன லாபம்? என்று ஆசிரியர், கேள்வி கேட்பதன் மூலமாக சமூகத்துக்கு அறிவுரை கூறுவதை பாராட்ட வேண்டும். 'காலத்தே விழித்துக் கொள்க' என்று அற்புதமாய் அறிவுறுத்துகிறார்.
சமூகத்தின் அடித்தள மக்களின் உள்மன உணர்வுகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை, குப்புசாமியின் அழுகையும், பாரதிராஜாவின் உருவ பிரமையும் வெளிப்படுத்துவது போன்ற ஓர் புரட்சிகர செய்தியை கதாசிரியர் அற்புதமாக சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறார். வாழ்க அவரது சீரிய சமூகத் தொண்டு! -வாழ்த்துக்களுடன் தங்களது எழுத்தை மிகவும் விரும்பி படிக்கும் வாசகர் இரா. சந்திரசேகர், 20/09/2021.