மூணு நாள் என்னோட இந்த பயணம் அசமஞ்சனோட தான் கா🤗. படிக்கிற எனக்கும் சேர்த்து அவன் நரகத்தை காமிச்சுட்டான்😔 அவன் மத்தவங்களுக்கு காமிச்சது இல்ல, அவனோட வலி இனி வாழ போற நாட்களுக்கான வலி. அது நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு.
மர்மத்தாலே ஆரம்பிச்சு கதை களம் விறுவிறுன்னு போய் யார் அந்த கில்லர்ன்னு ஒவ்வொரு ஆளு மேலையும் சந்தேக பார்வை வீச வெச்சிடுச்சு.
ஆரம்பத்திலே காமிச்ச சில கதாபாத்திரங்கள் விறுவிறுன்னு போகும் போது அவங்களோட முகத்திரையும், அவங்க செஞ்சதுக்கான தண்டனைகள் தான் இப்போ அனுபவிக்கறதுன்னும் கதையோட நகர்விலே அழகா சொல்லிட்டீங்க.
ஷர்மி ஒரு தேவதை அவளோட அதீத அன்பு தான் இப்படி தலை கீழா ஆகிடுச்சு. நட்புன்னு உலகமா இருந்த பொண்ணை கடைசி வர அந்த நட்பு கை தாங்கலங்கிறது தான் வருத்தமான விஷயமே😔. தன்னோட காதலை கூட நட்புக்களோட அனுமதியோடு தான் தொடங்கனும்ன்னு இருந்த பொண்ணு இப்போ வானத்து நிலவா மாறா புன்னகையோட நடசத்திர்த்தோட சேர்ந்து இருக்கா💞.
யாஷ் பத்தி எண்ண சொல்ல, உண்மையான காதலன் அன்புக்கு ஏங்கிட்டு இருந்தவன். அது கிடைச்சும் அனுபவிக்க முடியாதால மாறின கொடூரன் அந்த கொடூரத்துக்குள்ளையும் ஒரு காதலன் ஊமையா அழுதுட்டு இருக்கான், நரகத்துக்கு பின்னான அவன் வாழ்க்கை இனிய நினைவுகளோடும், கொடிய வலிகளோடையும் வாழ துணிந்தவன் என்னை ரொம்ப கவர்ந்த கதாபாத்திரம்😘.
மிது, யாஷ்கடுத்து பிடிச்சது இவன தான் எல்லாருக்கும் உண்மையா தான் இருந்தான் ஆனா ஆறாத வலியே எல்லாரும் சேர்ந்து இவன்னுக்குள்ள புதைச்சுட்டு போய்ட்டாங்க.
ஆத்விகாவோட அறிமுகமும் அது அடுத்து அவங்க அம்மா இறப்பால அவ மீள நாளானதுன்னு அவள பத்தி சொன்ன போதே, இப்போ இருக்கிற ஆத்வியோட நிலமையே நாம புரிஞ்சுக்கலாம்.
ஏங்கிட்டு இருக்குற அன்பு, அரவணைப்பு இல்லாம இருந்தா மூர்க்க குணமும், சுயநலமும், தன்னிலை இழக்குறதுங்கிறதும் வந்திடும்ன்னு சொன்னா அது ஆத்வி விஷயத்திலே தெளிவா இருக்கு.
தேவ் இவனோட ஒரு கையெழுத்து தான் அவனோட மீதி வாழ்க்கையே குற்ற உணர்வால அழிய போகுது. நிதானத்தை தவர விட்டா என்ன நடக்கும்ன்னு தேவ் மூலமா தெளிவா தெரிய வருது.
ஆக மொத்தம் "அசமஞ்சன்" தன்னாலே உருவாகி நரகத்தை காமிக்கல அன்பின் பிடி, காதலின் வலி, நட்புகளோட சுயநலம், சில பணத் தின்னிகளோட நப்பாசையால உருவானவன்😒😒.
மித்ரன் சொன்ன இந்த வரி தான் என் கண்ணுல எழுத்துக்களை மறையுற அளவு கண்ணீர் சுரந்திடுச்சு "உலகத்திலே சுருக்கமான காதல் கதை யாஷ்❤ஷர்மியோடையது தான்" 🤧🤧🤧🤧🤧🤧.
இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் 🤗🤗🤗🤗.